அத்தியாயம் – 4
கஜேந்திரன் ஆன்மீக உலகிற்கு
திரும்பிச் செல்லுதல்
பதம் 8.4.1
ஸ்ரீ-சுக உவாச
ததா தேவர்ஷி-கந்தர்வா ப்ரஹ்மேசான-புரோகமா:
முமுக: குஸுமாஸாரம் சம்ஸந்த கர்ம தத் தரே:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ததா—அச்சமயம் (கஜேந்திரன் விடுவிக்கப்பட்டபோது); தேவ-ரிஷி-கந்தர்வா:—தேவர்கள், முனிவர்கள் மற்றும் கந்தர்வர்கள்; ப்ரஹ்ம-ஈசான-புரோகமா:—பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் முதலான; முமு:க—தூவினர்; குஸும-ஆஸராம்—ஒரு மலர்த்திரையை; சம்ஸந்த:—போற்றும் பொழுது; கர்ம—தெய்வீகமான செயலை; தத்—அந்த (கஜேந்ர-மோக்ஷணம்); ஹரே:—முழுமுதற் கடவுளின்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: யானைகளின் அரசனான கஜேந்திரனை பகவான் விடுவித்தபோது, பிரம்மா மற்றும் சிவன் முதலான தேவர்கள், முனிவர்கள், கந்தர்வர்கள் ஆகிய அனைவரும், முழுமுதற் கடவுளின் இச்செயலைத் துதித்து, பகவான் மீதும், கஜேந்திரன் மீதும் மலர்களைப் பொழிந்தனர்.
பதம் 8.4.2
நேதுர் துந்துபயோ திவ்யா கந்தர்வா நன்ருதுர் ஜகு:
சாரணா: ஸித்தாஸ் துஷ்டுவு: புருஷோத்தமம்
நேது:—அடிக்கப்பட்டன; துந்துபய:—மத்தளங்கள்; திவ்யா:—உயர்கிரக அமைப்பின் ஆகாயத்தில்; கந்தர்வா:—கந்தர்வ லோகவாசிகள்; நன்ருது:—ஆடினர்; ஜகு:—மேலும் பாடினர்; ரிஷய:—முனிவர்கள் அனைவரும்; சாரணா:—சாரண லோகவாசிகள்; சித்தா:—சித்த லோகவாசிகள்; துஷ்டுவு:—பிரார்த்தனைகள் செய்தனர்; புருஷ-உத்தமம்—ஆண்களில் மிகச்சிறந்தவரும், புருஷோத்தமருமாகிய முழுமுதற் கடவுளிடம்.
சுவர்க்க லோகங்களில் மத்தளங்கள் அடிக்கப்பட்டன. கந்தர்வ லோகவாசிகள் ஆடிப்பாடத் துவங்கினர். அதே சமயத்தில் பெரும் முனிவர்களும், சாரண மற்றும் சித்த லோகவாசிகளும், புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளிடம் பிரார்த்தனைகள் செய்தனர்.
பதங்கள் 8.4.3 – 8.4.4
யோ ‘ஸௌ க்ராஹ: ஸ வை ஸத்ய: பரமஸ்சர்ய-ரூப-த்ருக்
முக்தோ தேவல-சாபேன ஹூஹூர் கந்தர்வ-ஸத்தம:
ப்ரணம்ய சிரஸாதீசம் உத்தம-ஸ்லோகம் அவ்யயம்
அகாயத யசோ-தாம கீர்த்தன்ய-குண-ஸத்-கதம்
ய:—அவர்; அஸௌ—அந்த; க்ராஹ:—ஒரு முதலையானார்; ஸ—அவர்; வை—நிச்சயம்; ஸத்ய:—உடனே; பரம—மிகவும் அழகிய; ஆஸ்சர்ய—அற்புதமான; ரூப-த்ருக்—(அவரது மூல கந்தர்வ பதவியின்) உருவத்தைப் பெற்று; முக்த:—விடுவிக்கப்பட்டார்; தேவல-சாபேன—தேவல ரிஷியின் சாபத்தால்; ஹூஹூ—முன்பு ஹூஹூ எனும் பெயரைக் கொண்டிருந்த; கந்தர்வ-ஸத்-தம:—கந்தர்வ லோகத்திலேயே மிகச் சிறந்த; ப்ரணம்ய—அவரது வணக்கங்களைச் சமர்ப்பித்து; சிரஸா—தலையால்; அதீசம்—பரம அதிகாரிக்கு; உத்தம-ஸ்லோகம்—உத்தமமான சுலோகங்களால் வழிபாடு செய்யப்படுபவர்; அவ்யயம்—நித்திய புருஷர்களில் பரமமானவர்; அகாயத—அவர் பாடத் துவங்கினார்; யச:-தாம—பகவானின் பெருமைகள்; கீர்தன்ய-குண-ஸத்-கதம்— போற்றத்தக்க உன்னதமான திருவிளையாடல்களையும், குணங்களையும் கொண்டவர்.
கந்தர்வர்களில் சிறந்தவரான ஹூஹூ எனப்படும் அரசர், தேவல முனிவரால் சபிக்கப்பட்டு, ஒரு முதலையாக மாறினார். இப்பொழுது முழுமுதற் கடவுளால் விடுவிக்கப்பட்டு, மிகவும் அழகிய ஒரு கந்தர்வரின் ரூபத்தை அவர் ஏற்றார். யாருடைய கருணையால் இது நிகழ்ந்துள்ளது என்பதை அறிந்ததும், உடனே அவர் சிரம் தாழ்த்தி தமது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பித்ததுடன், உத்தமமான சுலோகங்களால் போற்றப்படுபவரும், நித்திய புருஷர்களில் பரமனுமாகிய, பகவானுக்குச் சற்றே பொருத்தமான ஸ்தோத்திரங்களால் அவரை போற்றத் துவங்கினார்.
பதம் 8.4.5
ஸோ ‘நுகம்பித ஈசேன பரிக்ரம்ய ப்ரணம்ய தம்
லோகஸ்ய பஸ்யதோ லோகம் ஸ்வம் அகான் முக்த-கில்பிஷ:
ஸ:—அவர் (ஹூஹூ ராஜன்); அனுகம்பித:—அனுக்கிரகிக்கப்பட்டு; ஈசேன—பரமபுருஷரால்; பரிக்ரம்ய—வலம் வந்து; ப்ரணம்ய—அவரது வணக்கத்தைச் செலுத்தி; தம்—அவருக்கு; லோகஸ்ய—அனைத்து தேவர்களும், மனிதர்களும்; பஸ்யத:—பார்த்துக் கொண்டு இருக்கும்பொழுது; லோகம்—லோகத்திற்கு; ஸ்வம்—அவரது சொந்த; அகாத்—திரும்பிச் சென்றார்; முக்த—முக்தியடைந்து; கில்பிஷ:—அவரது பாவ விளைவுகளில் இருந்து.
முழுமுதற் கடவுளின் அகாரணமான கருணையால் அனுக்கிரகிக்கப்பட்ட ஹூஹூ ராஜன், தனது சுயரூபத்தை மீண்டும் பெற்றதும், பகவானை வலம்வந்து அவரது வணக்கத்தைச் செலுத்தினார். பிறகு, பிரம்மா முதலான எல்லா தேவர்களுக்கும் முன்னிலையில், அவர் கந்தர்வ லோகத்திற்குத் திரும்பினார். எல்லாப் பாவ விளைவுகளிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.
பதம் 8.4.6
கஜேந்ரோ பகவத்-ஸ்பர்சாத் விமுக்தோ ‘ஞ்ஞான-பந்தனாத்
ப்ராப்தோ பகவதோ ரூபம் பீத-வாஸாஸ் சதுர்-புஜ:
கஜேந்ர:—யானைகளின் அரசனான கஜேந்திரன்; பகவத்-ஸ்பர்சாத்—முழுமுதற் கடவுளின் கரத்தால் தொடப்பட்டதால்; விமுக்த—உடனே விடுவிக்கப்பட்டது; அஞ்ஞான-பந்தனாத்—குறிப்பாக தேகாபிமானம் உட்பட, எல்லா வகையான அறியாமையில் இருந்தும்; பிராப்த:—அடைந்தது; பகவத:—முழுமுதற் கடவுளின்; ரூபம்—அதே தேக அம்சங்களை; பீத-வாஸா:—மஞ்சள் நிற ஆடை அணிந்து; சது:புஜ:—மேலும் சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றைக் கொண்ட நான்கு கரங்களுடன்.
யானைகளின் அரசனான கஜேந்திரன் முழுமுதற் கடவுளின் கரங்களால் நேரடியாக தொடப்பட்டதால், அது உடனே பெளதிக அறியாமை மற்றும் பந்தம் ஆகிய அனைத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டது. இவ்வாறாக அது ஸாரூப்ய-முக்தியை அடையப்பெற்றது. இந்நிலையில் அது மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து, நான்கு கரங்களுடன் கூடிய, பகவானுடையதைப் போன்ற அதே தேக அம்சங்களைப் பெற்றது.
பதம் 8.4.7
ஸ வை பூர்வம் அபூத் ராஜா பாண்டியோ த்ரவிட-ஸத்தம:
இந்ரத்யும்ன இதி க்யாதோ விஷ்ணு-வ்ரத-பராயண:
ஸ:—இந்த யானை (கஜேந்திரன்); வை—உண்மையில்; பூர்வம்—பூர்வீகத்தில்; அபூத்—இருந்தது; ராஜா—ஓர் அரசனாக; பாண்டிய:—பாண்டிய தேசத்தின்; த்ரவிட-ஸத்-தம:—திராவிட தேசத்தில் அல்லது தென்னிந்தியாவில் பிறந்தவர்களில் மிகச் சிறந்த; இந்ரத்யும்ன:—இந்ரத்யும்ன மகாராஜன் எனும் பெயருடைய; இதி—இவ்வாறாக; க்யாத:—புகழ்பெற்ற; விஷ்ணு-வ்ரத-பராயண:—எப்பொழுதும் பகவத் தொண்டில் ஈடுபட்டிருந்த, முதல்தர வைஷ்ணவராகிய.
இந்த கஜேந்திரன் பூர்வீகத்தில் ஒரு வைஷ்ணவராகவும், பாண்டிய நாட்டு அரசராகவும் இருந்தது. இந்நாடு திராவிட தேசத்தில் (தென்னிந்தியா) உள்ளது. அதன் பூர்வீக வாழ்வில், இந்ரத்யும்ன மகாராஜன் என்று அது அழைக்கப்பட்டது.
பதம் 8.4.8
ஸ ஏகதாராதன-கால ஆத்மவான்
க்ருஹீத்-மௌன-வ்ரத ஈஸ்வரம் ஹரிம்
ஜடா-தரஸ் தபஸ ஆப்லுதோ ‘ச்யுதம்
ஸமர்சயாம் ஆஸ குலாசலாஸ்ரம:
ஸ:—அந்த இந்ரத்யும்ன மகாராஜன்; ஏகதா—முன்னொரு காலத்தில்; ஆராதன-காலே—விக்கிரக வழிபாட்டின் போது; ஆத்மவான்—ஆழ்ந்த கவனத்துடன் கூடிய தியானத்தில், பக்தித் தொண்டில் ஈடுபட்டிருந்தார்; க்ருஹீத்—ஏற்று; மெளன-வ்ரத:—மௌனவிரதம்; ஈஸ்வரம்—பரம ஆளுனர்; ஹரிம்—முழுமுதற் கடவுள்; ஜடா-தர:—ஜடா முடிகளுடன்; தபஸ:—எப்பொழுதும் தவத்தில் ஈடுபட்டிருந்தார்; ஆப்லுத:—முழுமுதற் கடவுளின் அன்பில் எப்பொழுதும் ஐக்கியப்பட்டிருந்தார்; அச்யுதம்—இழிவற்ற பகவான்; ஸமர்சயாம் ஆஸ—வழிபாடு செய்து வந்தார்; குலாசல-ஆஸ்ரம:—தமது ஆசிரமத்தை அவர் குலாசலத்தில் (மலய குன்றுகளில்) அமைத்தார்.
இந்த்ரத்யும்ன மகாராஜன் குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்று, மலய மலைகளுக்குச் சென்றார். அங்கு ஒரு சிறிய குடிசையை தமது ஆசிரமமாகக் கொண்டிருந்தார். அவர் தமது தலையில் ஜடா முடி தரித்தவராய், எப்பொழுதும் தவத்தில் ஈடுபட்டிருந்தார். ஒருமுறை அவர் மெளன விரதத்தை மேற்கொண்டிருக்கும்பொழுது, அவர் பகவானின் வழிபாட்டில் முழுமையாக ஈடுபட்டு, பகவத் பிரேமையின் பரவசத்தில் ஆழ்ந்திருந்தார்.
பதம் 8.4.9
யத்ருச்சயா த்தர மஹா-யசா முனி:
ஸமாகமச் சிஷ்ய-கணை: பரிஸ்ரித:
தம் வீக்ஷ்ய தூஷ்ணீம் அக்ருதார்ஹணாதிகம்
ரஹஸி உபாஸீனம் ரிஷிஸ் ககோப ஹ
யத்ருச்சயா—அவரது சொந்த விருப்பத்தால் (அழைக்கப்படாமல்); தத்ர—அங்கு; மஹா-யசா:—மிகவும் புகழ்பெற்ற; முனி:—அகஸ்திய முனிவர்; ஸமாகமத்—வந்து சேர்ந்தார்; சிஷ்ய-கணை:—அவரது சீடர்களால்; பரிஸ்ரித:—சூழப்பட்டவராய்; தம்—அவரை; வீக்ஷ்ய—கண்டு; தூஷ்ணீம்—மௌனம் சாதிப்பதை; அக்ருத-அர்ஹண-ஆதிகம்—மரியாதையான ஒரு வரவேற்பை அளிக்காமல்; ரஹஸி—தனிமையான ஓரிடத்தில்; உபாஸீனம்—தியானத்தில் அமர்ந்திருந்தார்; ரிஷி:—மகா முனிவர்; ககோப—கடுங்கோபமடைய; ஹ—நேர்ந்தது.
இந்ரத்யும்ன மகாராஜன் முழுமுதற் கடவுளின் வழிபாட்டில் ஈடுபட்டு, பரவசமான தியானத்தில் ஆழ்ந்திருக்கும் பொழுது, அகஸ்திய மகாமுனிவர் தமது சீடர்களால் சூழப்பட்டவராய் அங்கு வந்து சேர்ந்தார். இந்ரத்யும்ன மகாராஜன், மரியாதையுடன் தம்மை வரவேற்கும் ஆசாரத்தைப் பின்பற்றாமல், தனிமையான ஓரிடத்தில் மௌனமாக அமர்ந்திருப்பதைக் கண்ட முனிவர் கடுங்கோபமடைந்தார்.
பதம் 8.4.10
தஸ்மா இமம் சாபம் அதாத் அஸாதுர்
அயம் துராத்மாக்ருத-புத்திர் அத்ய
விப்ராவமந்தா விசதாம் தமிஸ்ரம்
யதா கஜ: ஸ்தப்த மதி: ஸ ஏவ
தஸ்மை—இந்ரத்யும்ன மகாராஜனுக்கு; இமம்—இந்த; சாபம்—சாபத்தை; அதாத்—அவர் கொடுத்தார்; அஸாது:—சிறிதும் மரியாதையற்ற; அயம்—இந்த; துராத்மா—இழிந்த ஆத்மா; அக்ருத—கல்வியற்ற; புத்தி:—இவனது புத்தி; அத்ய—இப்பொழுது; விப்ர—ஒரு பிராமணரின்; அவமாந்தா—அவமரியாதை செய்த; விசதாம்—நுழையட்டும்; தமிஸ்ரம்—இருள்; யதா—போன்று; கஜ:—ஒரு யானை; ஸ்தப்தமதி:—மந்த புத்தியுள்ள; ஸ:—இவன்; ஏவ—உண்மையில்.
அகஸ்திய முனிவர் பிறகு அரசனுக்கெதிராக பின்வரும் சாபத்தைக் கொடுத்தார்: இந்த இந்ரத்யும்ன மகாராஜன் சிறிதும் மரியாதையற்றவன். தாழ்ந்தவனும், கல்வியறிவு இல்லாதவனுமான இவன் ஒரு பிராமணரை அவமதித்துவிட்டான். ஆகவே இவன் இருளடர்ந்த பிரதேசத்தினுள் நுழைந்து, பேச முடியாத, மந்தபுத்தி கொண்ட ஒரு யானையின் உடலைப் பெறுவானாக.
பதங்கள் 8.4.11 – 8.4.12
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் சப்த்வா கதோ ‘கஸ்த்யோ பகவான் ந்ருப ஸானுக:
இந்ரத்யும்னோ ‘பி ராஜர்ஷிர் திஷ்டம் தத் உபதாரயன்
ஆபன்ன: கௌஞ்சரீம் யோனிம் ஆத்ம-ஸ்ம்ருதி-வினாசினீம்
ஹரி-அர்சனானுபாவேன யத்-கஜத்வே ‘பி அனுஸ்ம்ருதி:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு: சப்த்வா—சபித்த பின்; கத:—அந்த இடத்தைவிட்டு அகன்றார்; அகஸ்த்ய:—அகஸ்திய முனிவர்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; ந்ருப—ராஜனே; ஸ-அனுக:—அவரது சகாக்களுடன்; இந்ரத்யும்ன:—இந்ரத்யும்ன மகாராஜன்; அபி—கூட; ராஜர்ஷி:—அவர் ஒரு ராஜரிஷி என்ற போதிலும்; திஷ்டம்—கடந்த கால கருமங்களின் காரணத்தால்; தத்—அச்சாபம்; உபதாரயன்—என்றெண்ணி; ஆபன்ன:—பெற்றார்; கௌஞ்சரீம்—ஒரு யானையின்; யோனிம்—உயிரினத்தை; ஆத்ம-ஸ்ம்ருதி—ஒருவரது சொரூபத்தின் ஞாபகத்தை; வினாசினீம்—அழித்துவிடும்; ஹரி—முழுமுதற் கடவுள்; அர்சன-அனுபாவேன—வழிபட்ட காரணத்தால்; யத்—அந்த; கஜத்வே—ஒரு யானையின் உடலில்; அபி—இருப்பினும்; அனுஸ்ம்ருதி:—அவரது கடந்தகால பக்தித்தொண்டை நினைவுபடுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பை.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: எனதருமை ராஜனே, இவ்வாறாக அகஸ்திய முனிவர் இந்ரத்யும்ன மகாராஜனை சபித்தபின், அவர் தமது சீடர்களுடன் அவ்விடத்தைவிட்டு அகன்றார். ராஜன் ஒரு பக்தராக இருந்ததனால், அகஸ்திய முனிவரின் சாபத்தை அவர் மனப்பூர்வமாக வரவேற்றார். ஏனெனில், அது முழுமுதற் கடவுளின் விருப்பமாகும். ஆகவே, அவரது அடுத்த பிறவியில் யானையின் ஒருடலை அவர் பெற்றாலும், பக்தித் தொண்டின் காரணத்தால், பகவானை வழிபடும் முறையையும், அவரைப் பிரார்த்திக்கும் முறையையும் அவர் நினைவில் வைத்திருந்தார்.
பதம் 8.4.13
ஏவம் விமோக்ஷ்ய கஜ-யூத-பம் அப்ஜ-நாபஸ்
தேனாபி பார்ஷத-கதிம் கமிதேன யுக்த:
கந்தர்வ-ஸித்த-விபுதைர் உபகீயமான-
கர்மாத்புதம் ஸ்வ-பவனம் கருடாஸனோ ‘காத்
ஏவம்—இவ்வாறாக; விமோக்ஷ்ய—மோட்சமளித்து; கஜ-யூத-பம்—யானைகளின் அரசனான கஜேந்திரனுக்கு; அப்ஜ-நாப:—யாருடைய நாபியிலிருந்து ஒரு தாமரைப் பூ மலர்கின்றதோ அந்த முழுமுதற் கடவுள்; தேன—அதனால் (கஜேந்திரன்); அபி—கூட; பார்ஷத-கதிம்—பகவானுடைய சகவாசியின் நிலையை; கமிதேன—ஏற்கனவே பெற்றுவிட்ட; யுக்த:—உடன் சென்றார்; கந்தர்வ—கந்தர்வ லோகவாசிகளால்; ஸித்த—சித்த லோகவாசிகள்; விபுதை:—மேலும் கற்றறிந்த சிறந்த முனிவர்கள் அனைவராலும்; உபகீயமான—புகழப்பட்டபடி; கர்ம—யாருடைய உன்னதமான செயல்கள்; அத்புதம்—அதியற்புதமான; ஸ்வ-பவனம்—அவரது சொந்த வசிப்பிடத்திற்கு; கருட-ஆஸன:—கருடனின் மீதமர்ந்து; அகாத்—திரும்பிச் சென்றார்.
முதலையின் பிடியிலிருந்தும், முதலைக்கு ஒப்பான பெளதிக வாழ்விலிருந்தும் யானைகளின் அரசனை விடுவித்தபின், பகவான் அதற்கு ஸாரூப்ய-முக்தியை அளித்தார். கந்தர்வர்கள், சித்தர்கள் மற்றும் பிற தேவர்கள் ஆகியோர், பகவானின் அற்புதமான உன்னதச் செயல்களை போற்றித் துதித்தனர். அவர்களின் முன்னிலையில், தமது கருட வாகனத்தின் மேல் அமர்ந்தவாறு, பகவான், கஜேந்திரனை உடன் அழைத்துக் கொண்டு, அதியற்புதம் வாய்ந்ததான தமது வசிப்பிடத்திற்கு திரும்பிச் சென்றார்.
பதம் 8.4.14
ஏதன் மஹா-ராஜ தவேரிதோ மயா
க்ருஷ்ணானுபாவோ கஜ-ராஜ-மேக்ஷணம்
ஸ்வர்க்யம் யசஸ்யம் கலி-கல்மஷாபஹம்
துஹ்ஸ்வப்ன-நாசம் குரு-வர்ய ஸ்ருண்வதாம்
ஏதத்—இந்த; மஹா-ராஜ—பரீட்சித்து மகாராஜனே; தவ—உமக்கு; ஈரித:—விளக்கப்பட்டது; மயா—என்னால்; க்ருஷ்ண-அனுபாவ:—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் எல்லையற்ற சக்தி (ஒரு பக்தருக்கு அவரால் முக்தியளிக்க கூடிய சக்தி); கஜ-ராஜ-மோக்ஷணம்—யானைகளின் அரசனுக்கு மோட்சமளித்து; ஸ்வர்க்யம்—உயர் கிரக அமைப்புகளுக்கு ஏற்றமளித்து; யசஸ்யம்—பக்தரெனும் ஒருவரின் நற்பெயரை அதிகரித்து; கலி-கல்மஷ-அபஹம்—கலியுகத்தின் கெடுதலைக் குறைத்து; துஹ்ஸ்வப்ன-நாசம்—கெட்ட கனவுகளுக்குரிய காரணங்களை நிஷ்பலமாக்கி; குரு-வர்ய—குரு வம்சத்தில் சிறந்தவரே; ஸ்ருண்வதாம்—இக்கதையைக் கேட்பவர்களின்
எனது அன்பிற்குரிய பரீட்சித்து மகாராஜனே, யானைகளின் அரசனை கிருஷ்ணர் காப்பாற்றியபோது அவரால் வெளிப்படுத்தப்பட்ட அற்புத சக்தியை இப்போது நான் விளக்கினேன். குரு வம்சத்தில் சிறந்தவரே, இக்கதையைக் கேட்பவர்கள் உயர்ந்த கிரக அமைப்புக்களுக்கு உயர்த்தப்படும் தகுதியைப் பெறுவர். இக்கதையைக் கேட்பதால் மட்டுமே, பக்தர்களெனும் நற்பெயரை அவர்கள் பெறுவதுடன், கலியுகத்தின் கெடுதல்களால் பாதிப்படையாமலும், கெட்ட கனவுகளைக் காணாமலும் இருப்பர்.
பதம் 8.4.15
யதானுகீர்த்தயந்தி ஏதச் ச்ரேயஸ்-காமா த்விஜாதய:
சுசய: ப்ராதர் உத்தாய துஹ்ஸ்வப்னாதி-உபசாந்தயே
யதா—வழிபிறழாமல்; அனுகீர்த்தயந்தி—அவர்கள் படிக்க வேண்டும்; ஏதத்—கஜேந்திர மோட்சத்தைப் பற்றிய இக்கதையை; ஸ்ரேய:-காமா:—தங்களின் சொந்த நன்மையை விரும்புபவர்கள்; த்வி-ஜாதய:—இருபிறப்பெய்தியவர்கள் (பிராமணர்கள், க்ஷத்ரியர்கள் மற்றும் வைசியர்கள்); சுசய:—குறிப்பாக எப்பொழுதும் சுத்தமாக இருக்கும் பிராமணர்கள்; ப்ராத:—காலையில்; உத்தாய—உறக்கத்திலிருந்து எழுந்த பின்; துஹ்ஸ்வப்ன-ஆதி—இரவில் கெட்ட உறக்கத்துடன் துவங்கும்; உபசாந்தயே—எல்லாக் கெடுதிகளையும் நிஷ்பலமாக்குவதற்கு.
ஆகவே, காலையில் படுக்கையிலிருந்து எழுந்த பிறகு, தங்களது சொந்த நன்மையை விரும்புகின்றவர்கள், குறிப்பாக பிராமணர்கள், க்ஷத்ரியர்கள், வைசியர்கள் மற்றும் முக்கியமாக பிராமண வைஷ்ணவர்கள் ஆகியோர் இக்கதையை வழிபிறழாமல் உள்ளபடி படிக்க வேண்டும். இதனால் கெட்ட கனவுகளின் தொல்லைகளை நிஷ்பலமாக்கி விட முடியும்.
பதம் 8.4.16
இதம் ஆஹ ஹரி ப்ரீதோ கஜேந்ரம் குரு-ஸத்தம
ஸ்ருண்வதாம் ஸர்வ-பூதானாம் ஸர்வ பூத-மயோ விபு:
இதம்—இதை; ஆஹ—கூறினார்: ஹரி:—பரமபுருஷ பகவான்; ப்ரீத:—திருப்தியடைந்து; கஜேந்ரம்—கஜேந்திரனுக்கு; குரு-ஸத்தம—குரு வம்சத்தில் சிறந்தவரே; ஸ்ருண்வதாம்—கேட்டு; ஸர்வ-பூதானாம்—அனைவரின் முன்னிலையிலும்; ஸர்வ-பூத-மய:—சர்வ வியாபகமுடைய முழுமுதற் கடவுள்; விபு—மிகச் சிறந்த.
குரு வம்சத்தில் சிறந்தவரே, அனைவருக்கும் பரமாத்மாவாக இருக்கும் பரமபுருஷ பகவான் இவ்வாறு திருப்தியடைந்து, அங்குள்ள அனைவரின் முன்னிலையிலும் கஜேந்திரனுக்குப் பின்வருமாறு ஆசி வழங்கினார்.
பதங்கள் 8.4.17 – 8.4.24
ஸ்ரீ பகவான் உவாச
யே மாம் த்வாம் ச ஸரஸ் சேதம் கிரி-கந்தர-கானனம்
வேத்ர-கீசக-வேணூனாம் குல்மானி ஸுர-பாதபான்
ஸ்ருங்கணீமானி திஷ்ண்யானி ப்ரஹ்மணோ மே சிவஸ்ய ச
க்ஷீரோதம் மே ப்ரியம் தாம ஸ்வேத-த்வீபம் ச பாஸ்வரம்
ஸ்ரீவத்ஸம் கெளஸ்துபம் மாலாம் கதாம் கௌமோதகீம் மம
ஸுதர்சனம் பாஞ்சஜன்யம் ஸுபர்ணம் பதகேஸ்வரம்
சேஷம் ச மத்-கலாம் ஸூக்ஷ்மாம் ஸ்ரியம் தேவீம் மத்-ஆஸ்ரயாம்
ப்ரஹ்மாணம் நாரதம் ருஷிம் பாவம் ப்ரஹ்ராதம் ஏவ ச
மத்ஸ்ய-கூர்ம-வராஹாத்யைர் அவதாரை: க்ருதானி மே
கர்மாணி அனந்த-புண்யானி ஸூர்யம் ஸோமம் ஹுதாசனம்
ப்ரணவம் ஸத்யம் அவ்யக்தம் கோ-விப்ரான் தர்மம் அவ்யயம்
தாக்ஷாயணீர் தர்ம-பத்னீ: ஸோம-கஸ்யபயோர் அபி
கங்காம் ஸரஸ்வதீம் நந்தாம் காலிந்தீம் ஸித-வாரணம்
த்ருவம் ப்ரஹ்ம-ரிஷீன் ஸப்த புண்ய-ஸ்லோகாம்ஸ் ச மாணவான்
உத்தாயாபர-ராத்ராந்தே ப்ரயதா: ஸுஸமாஹிதா:
ஸ்மரந்தி மம ரூபாணி முச்யந்தே தே ‘ம்ஹஸோ ‘கிலாத்
ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினர்; யே—எவர்கள்; மாம்—என்னை; த்வாம்—உன்னை; ச—கூட; ஸர:—ஏரியை; ச—மேலும்; இதம்—இந்த; கிரி—மலை (திரிகூட மலை); கந்தர—குகைகள்; கானனம்—தோட்டங்கள்; வேத்ர—பிரம்பின்; கீசக—உட்புறத்தில் காலியான மூங்கில்; வேணூனாம்—மற்றொரு வகையான மூங்கிலின்; குல்மானி—கூட்டங்கள்; ஸுர-பாதபான்—சுவர்க்கலோக மரங்கள்; ஸ்ருங்காணி—சிகரங்கள்; இமானி—இவைகளை; திஷ்ண்யானி—வசிப்பிடங்கள்; ப்ரஹ்மண:—பிரம்மதேவரின்; மே—என்னுடைய; சிவஸ்ய—சிவபெருமானின்; ச—கூட; க்ஷீர-உதம்—பாற்கடல்; மே—எனது; ப்ரியம்—மிகவும் பிரியமான; தாம—இடம்; ஸ்வேத-த்வீபம்—வெள்ளைத் தீவு எனப்படும்; ச—கூட; பாஸ்வரம்—தெய்வீகமான கதிர்களுடன் எப்பொழுதும் பிரகாசமாக இருக்கும்; ஸ்ரீவத்ஸம்—ஸ்ரீவத்ஸம் எனும் பெயர் கொண்ட குறி; கௌஸ்துபம்—கௌஸ்துப மணி; மாலாம்—மாலை; கதாம்—கதை; கௌமோதகீம்—கௌமோதகீ எனப்படும்; மம—என்னுடைய; ஸுதர்சனம்—சுதர்சன சக்கரம்; பாஞ்சஜன்யம்—பாஞ்சஜன்யம் எனப்படும் சங்கு; ஸுபர்ணம்—கருடன்; பதக-ஈஸ்வரம்—பறவைகளுக்கெல்லாம் அரசன்; சேஷம்—ஓய்வெடுக்கும் இடமாகிய சேஷ நாகம்; ச—மேலும்; மத்-கலாம்—எனது விரிவங்கம்; ஸூக்ஷ்மாம்—மிகவும் சூட்சுமமான; ஸ்ரியம் தேவீம்—ஸ்ரீ தேவி; மத்-ஆஸ்ரயாம்—அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன; ப்ரஹ்மாணம்—பிரம்ம தேவர்; நாரதம் ரிஷிம்—மகாமுனிவரான நாரதர்; பவம்—சிவபெருமான்; ப்ரஹ்ராதம் ஏவ ச—மற்றும் பிரகலாதன்; மத்ஸ்ய—மச்சாவதாரம்; கூர்ம—கூர்மாவதாரம்; வராஹ—வராஹ அவதாரம்; ஆத்யை:—முதலிய; அவதாரை:—வெவ்வேறு அவதாரங்களால்; க்ருதானி—செய்யப்பட்ட; மே—எனது; கர்மாணி—செயல்கள்; ஆனந்த—அளவற்ற; புண்யானி—மங்களம், புண்ணியம்; ஸூர்யம்—சூரிய தேவன்; ஸோமம்—சந்திர தேவன்; ஹுதாசனம்—அக்னி தேவன்; ப்ரணவம்—ஓம்கார மந்திரம்; ஸத்யம்—பரம சத்தியம்; அவ்யக்தம்—மொத்த ஜட சக்தி; கோ-விப்ரான்—பசுக்களும், பிராமணர்களும்; தர்மம்—பக்தித் தொண்டு; அவ்யயம்—முடிவேயில்லாத; தாக்ஷாயணீ:—தட்சனின் புதல்விகள்; தர்ம-பத்னீ:—தர்ம பத்தினிகள்; ஸோம—சந்திர தேவனின்; கஸ்யபயோ:—மேலும் மகரிஷியான கஸ்யபரின்; அபி—கூட; கங்காம்—கங்கை நதி; ஸரஸ்வதீம்—சரஸ்வதி நதி; நந்தாம்—நந்தா நதி; காலிந்தீம்—யமுனா நதி; ஸித-வாரணம்—ஐராவத யானை; த்ருவம்—துருவ மகாராஜன்; ப்ரஹ்ம ரிஷீன்—மகாரிஷிகள்; ஸப்த—ஏழு; புண்ய-ஸ்லோகான்—மிக மிக புண்ணியம் வாய்ந்த; ச—மேலும்; மானவான்—மனிதர்கள்; உத்தாய—எழுந்து; அபர-ராத்ர-அந்தே—இரவு முடியும் நேரத்தில்; ப்ரயதா:—மிகவும் கவனமாக இருந்து; ஸு-ஸமாஹிதா:—மன ஒருமையுடன்; ஸ்மரந்தி—நினைவிற் கொள்பவர்கள்; மம—எனது; ரூபாணி—ரூபங்கள்; முச்யந்தே—விடுவிக்கப்படுகின்றனர்; தே—அத்தகையவர்கள்; அம்ஹஸ:—பாவ விளைவுகளிலிருந்தும்; அகிலாத்—எல்லா வகையான.
பரமபுருஷ பகவான் கூறினார்: இரவு முடிவுறும் நேரமாகிய அதிகாலையில் துயிலெழுந்து, எனது உருவம்; உனது உருவம்; இந்த ஏரி; இந்த மலை; குகைகள்; தோட்டங்கள்; பிரம்புச் செடிகள்; மூங்கில் செடிகள்; சுவர்க்கலோக மரங்கள் ஆகியவற்றின் மீதும், எனது, பிரம்மதேவர் மற்றும் சிவபெருமான் ஆகியோருடைய வசிப்பிடங்களின் மீதும், தங்கம், வெள்ளி மற்றும் இரும்பு ஆகியவற்றாலான திரிகூட மலையின் மூன்று சிகரங்களின் மீதும், என்னுடைய மிகவும் பிரியமான வசிப்பிடம் (பாற்கடல்); ஆன்மீக கதிர்களுடன் எப்பொழுதும் பிரகாசமாக ஜொலிக்கும் ஸ்வேதத்வீபம் எனப்படும் வெள்ளை தீவு; எனது ஸ்ரீவத்ஸ குறி; கெளஸ்துப மணி; எனது வைஜயந்தி மாலை; கௌமோதகீ எனப்படும் எனது கதை; எனது சுதர்சன சக்கரம் மற்றும் பாஞ்சஜன்யம் எனும் சங்கு; பறவைகளின் அரசனான எனது கருட வாகனம்; எனது படுக்கையான சேஷ நாகம்; எனது சக்தியின் விரிவாகிய ஸ்ரீதேவி; பிரம்ம தேவர்; நாரத முனி; சிவபெருமான்; பிரகலாதர்; மச்சம், கூர்மம் மற்றும் வராஹம் முதலான எனது அவதாரங்கள்; எல்லையற்றவையும், கேட்பவர்களுக்கு தெய்வ பக்தியையும் ஏற்படுத்துபவையுமான எனது மங்களகரமான செயல்கள்; சூரியன்; சந்திரன்; அக்னி; ஒம்கார மந்திரம்; பரம சத்தியம்; மொத்த ஜட சக்தி; பசுக்கள் மற்றும் பிராமணர்கள்; பக்தித் தொண்டு; தட்ச ராஜனின் புதல்விகளாக, சோம மற்றும் கஸ்யபரின் மனைவிகள்; கங்கை, சரஸ்வதி, நந்தா மற்றும் யமுனை (காலிந்தீ) ஆகிய நதிகள்; ஐராவத யானை; துருவ மகாராஜன்; ஏழு ரிஷிகள்; மற்றும் தெய்வ பக்தியுள்ள மனிதர்கள் ஆகிய இவையனைத்தின் மீதும் மிகுந்த கவனத்துடன் மனதை தியானத்தில் நிறுத்துபவர்கள் எல்லாப் பாவவிளைவுகளிலிருந்தும் விடுபட்டவர்களாவர்.
பதம் 8.4.25
யே மாம் ஸ்துவந்தி அனேனாங்க ப்ரதிபுத்ய நிசாத்யயே
தேஷாம் ப்ராணாத்யயே சாஹம் ததாமி விபுலாம் கதிம்
யே—யார்; மாம்—என்னிடம்; ஸ்துவந்தி—பிரார்த்தனைகள் செய்யும்; அனேன—இவ்விதத்தில்; அங்க—ராஜனே; ப்ரதிபுத்ய—துயிலெழுந்து; நிச அத்யயே—இரவின் முடிவில்; தேஷாம்—அவர்களுக்கு; ப்ராண-அத்யயே—மரணத்தின் போது; ச—கூட; அஹம்—நான்; ததாமி—கொடுக்கிறேன்; விபுலாம்—நித்தியமானதும், எல்லையற்றதுமான; கதிம்—ஆன்மீக உலகிற்கு மாற்றத்தை.
எனக்குப் பிரியமான பக்தனே, படுக்கையிலிருந்து அதிகாலையில் துயிலெழுந்து, நீ செய்த பிரார்த்தனைகளை எனக்குச் செய்பவனுக்கு, மரணத்தின் போது, ஆன்மீக உலகில் ஒரு நித்தியமான வசிப்பிடத்தை நான் அளிக்கிறேன்.
பதம் 8.4.26
ஸ்ரீ-சுக உவாச
இதி ஆதிஸ்ய ஹ்ருஷீகேச: ப்ராத்மாய ஜலஜோத்தமம்
ஹர்ஷயன் விபுதானீகம் ஆருரோஹ ககாதிபம்
ஸ்ரீ-சுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; ஆதிஸ்ய—உபதேசித்து; ஹ்ருஷீகேச—ஹரிஷிகேச எனப்படுபவரான பரமபுருஷ பகவான்; ப்ராத்மாய—ஊதி; ஜல-ஜ-உத்தமம்—நீரினங்களில் சிறந்ததான சங்கை; ஹர்ஷயன்—மகிழச்செய்த; விபுத-அனீகம்—பிரம்ம தேவரையும்; சிவ பெருமானையும் தலைமையாகக் கொண்ட, பெருந்திரளான தேவர்கள்; ஆருரோஹ—எழுந்தார்; கக-அதிபம்—கருடனின் மீது.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இந்த உபதேசத்தை அளித்தபிறகு, ரிஷிகேசர் எனப்படுபவரான பகவான், அவரது பாஞ்சஜன்ய சங்கை முழங்கி பிரம்ம தேவர் முதலான எல்லா தேவர்களையும் அவர் மகிழ்வித்தார். பிறகு அவர் தமது கருட வாகனத்தின் மேல் அமர்ந்தார்.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “கஜேந்திரன் ஆன்மீக உலகிற்கு திரும்பிச்செல்லுதல்” எனும் தலைப்பை கொண்ட நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.