அத்தியாயம் – 24
பகவானின் மச்ச அவதாரம்
பதம் 8.24.1 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: பரமபுருஷ பகவானாகிய ஹரி எப்பொழுதும் தெய்வீக நிலையிலேயே இருப்பவராவார். இருப்பினும் அவர் இந்த ஜட உலகிற்கு வந்து, தம்மை பல்வேறு அவதாரங்களில் வெளிப்படுத்துகின்றார். மாபெரும் மீனாகத் தோன்றியது அவரது முதல் அவதாரமாகும். பெரும் சக்தி படைத்தவரான சுகதேவ கோஸ்வாமியே, அந்த மீன் அவதாரத்தின் லீலைகளைப் பற்றி தங்களிடம் இருந்து நான் கேட்க விரும்புகிறேன்.
பதங்கள் 8.24.2 – 8.24.3 : கர்ம விதிகளுக்கு உட்பட்ட சாதாரண ஜீவராசி வெவ்வேறு உருவங்களை ஏற்பதைப் போலவே, எதற்காக பரமபுருஷ பகவானும் வெறுக்கத்தக்கதான ஒரு மீனின் வடிவத்தை ஏற்றார்? ஒரு மீனின் வடிவம் நிச்சயமாக உபயோகமற்றதும், பயங்கரமான துன்பங்கள் நிறைந்ததுமாகும். கணம் பொருந்தியவரே, இந்த அவதாரத்தின் நோக்கமென்ன? பகவானுடைய லீலைகளைப் பற்றி கேட்பதானது அனைவருக்கும் மங்களம் அளிப்பதாகும். எனவே அன்புடன் இதை எங்களுக்கு விவரிப்பீராக.
பதம் 8.24.4 : சூத கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜன் இவ்வாறு சுகதேவ கோஸ்வாமியிடம் விசாரித்தபோது, சக்திவாய்ந்தவரான அம்முனிவர், ஒரு மீனாக அவதரித்த பகவானின் லீலைகளை விவரிக்கத் துவங்கினார்.
பதம் 8.24.5 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, பசுக்களையும், பிராமணர்களையும், தேவர்களையும், பக்தர்களையும், வேத நூல்களையும், மதக் கொள்கைகளையும் மற்றும் வாழ்வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்குரிய கொள்கைகளையும் பாதுகாப்பதற்காக பரமபுருஷ பகவான் அவதார ரூபங்களை ஏற்கிறார்.
பதம் 8.24.6 : காற்று வெவ்வேறு வகையான சூழ்நிலைகளுக்குள் புகுந்து செல்கிறது. அதைப்போலவே, பரமபுருஷ பகவான் சில சமயங்களில் ஒரு மனிதராகவும் சில சமயங்களில் ஒரு தாழ்ந்த மிருகமாகவும் தோன்றினாலும், அவர் எப்பொழுதும் தெய்விக நிலையிலேயே இருக்கிறார். அவர் ஜட இயற்கைக் குணங்களுக்கு மேற்பட்டவராக இருப்பதால், உயர்ந்ததும் தாழ்ந்ததுமான உருவங்களால் அவர் பாதிப்படைவதில்லை.
பதம் 8.24.7 : பரீட்சித்து மகாராஜனே, கடந்த யுகத்தின் முடிவில், பிரம்ம தேவருடைய பகலின் முடிவான இரவு நேரத்தில், அவர் உறக்கத்தில் ஆழ்ந்து விடுவதால், பிரளயம் ஏற்பட்டு, மூவுலகங்களும் சமூத்திர நீரால் மூழ்கடிக்கப்பட்டன.
பதம் 8.24.8 : பிரம்மாவினுடைய மனுவின் முடிவில், உறக்கம் வருவது போல் இருப்பதை உணர்ந்த பிரம்மா கீழே படுத்துறங்க விரும்பினார். அப்போது அவரது வாயிலிருந்து வெளியே வந்துகொண்டிருந்த வேதத்தை (வேத அறிவை) ஹயக்ரீவன் எனும் பெரும் அசுரன் திருடிச் சென்றான்.
பதம் 8.24.9 : சர்வ ஐசுவரியங்கள் நிறைந்த முழுமுதற் கடவுளாகிய ஹரி, பெரிய அசுரனான ஹயக்ரீவனின் செயல்களை அறிந்து, ஒரு மீனின் வடிவத்தை ஏற்று, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார்.
பதம் 8.24.10 : சாக்ஷுஷ—மன்வந்தரத்தின் போது, பரமபுருஷ பகவானின் மிகச் சிறந்த பக்தரான, சத்தியவிரதன் எனும் பெயர் கொண்ட ஒரு சிறந்த அரசர் இருந்தார். சத்தியவிரதன் நீரை மட்டுமே பருகி தவமியற்றினார்.
பதம் 8.24.11 : இந்த (தற்போதைய) யுகத்தில் சத்தியவிரத மகாராஜன் பிறகு சூரிய கிரகத்தின் அரசனான விவஸ்வானின் மகனாகப் பிறந்து, ஸ்ராத்ததேவர் என்று அழைக்கப்பட்டார். பரம புருஷரின் கருணையால் அவருக்கு மனுவின் பதவி அளிக்கப்பட்டது.
பதம் 8.24.12 : ஒரு நாள் சத்தியவிரத மகாராஜன் கிருதமாலா நதிக்கரையில் நீர்த்தர்ப்பணம் செய்து தவமியற்றிக் கொண்டிருந்த போது, அவரது உள்ளங்கைகளில் இருந்த நீரில் ஒரு சிறிய மீன் தோன்றியது.
பதம் 8.24.13 : பரத வம்சத்தவரான பரீட்சித்து மகாராஜனே, திராவிட தேசத்தின் ராஜனான சத்தியவிரதன், அவரது உள்ளங்கையில் இருந்த நீருடன் அந்த மீனையும் நதியில் எறிந்துவிட்டார்.
பதம் 8.24.14 : நிராதரவான நிலையிலிருந்த அம்மீன் மனத்தை உருக்கும் குரலில் கருணை மிக்கவரான மகாராஜனைப் பார்த்து கூறியது: எனதன்புள்ள அரசே, ஆதரவற்றவர்களைக் காப்பவரான நீங்கள் ஏன் என்னை நதியில் வீசுகிறீர்கள்? அதில் என்னைக் கொன்றுவிடக் கூடிய பிற நீர் வாழ் பிராணிகள் உள்ளனவே. அவைகளிடம் எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது.
பதம் 8.24.15 : அந்த மீன் பரமபுருஷ பகவான் தான் என்பதை அறியாத சத்தியவிரத மகாராஜன், தனது திருப்திக்காக பெரு மகிழ்ச்சியுடன் அந்த மீனுக்கு பாதுகாப்பு அளிக்க முடிவு செய்தார்.
பதம் 8.24.16 : மீனின் இரங்கத்தக்க வார்த்தைகளால் ஆட்கொள்ளப்பட்ட கருணாமூர்த்தியான அரசர், ஒரு நீர் ஜாடிக்குள் மீனை விட்டு, தனது சொந்த வசிப்பிடத்திற்கு அதை எடுத்து வந்தார்.
பதம் 8.24.17 : ஆனால் ஓர் இரவுக்குள், நீர் ஜாடிக்குள் செளகரியமான முறையில் அதன் உடலை அசைக்க முடியாத அளவிற்கு அந்த மீன் பெரியதாக வளர்ந்து விட்டது. பிறகு அது அரசரைப் பார்த்து பின்வருமாறு கூறியது.
பதம் 8.24.18 : எனதன்புள்ள ராஜனே, இவ்வளவு பெரிய கஷ்டத்துடன் இந்த ஜாடிக்குள் வாழ நான் விரும்பவில்லை. ஆகவே, நான் செளகரியமாக வாழத்தகுந்தச் சிறந்ததொரு நீர்த் தேக்கத்தை தயவுசெய்து கொடுத்து உதவவேண்டும்.
பதம் 8.24.19 : பிறகு, நீர் ஜாடியிலிருந்து மீனை வெளியே எடுத்த அரசர், அதை ஒரு பெரிய கிணற்றுக்குள் விட்டார். ஆனால் ஒரு நொடிக்குள் அந்த மீன் மூன்று முழம் நீளத்திற்கு வளர்ந்து விட்டது.
பதம் 8.24.20 : அந்த மீன் பிறகு கூறியது: எனதன்புள்ள ராஜனே, நான் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு இந்த நீர்த்தேக்கம் பொருத்தமாக இல்லை. உங்களிடம் நான் சரணடைந்திருப்பதால், தயவுசெய்து இன்னும் பெரியதொரு நீர்த்தேக்கத்தைக் கொடுத்து உதவவேண்டும்.
பதம் 8.24.21 : பரீட்சித்து மகாராஜனே, அரசர் கிணற்றிலிருந்த மீனை எடுத்து ஓர் ஏரிக்குள் விட்டார். ஆனால் அந்த மீன் உடனே நீர்ப்பரப்பை விட மிகவும் பெரியதொரு உருவத்தை ஏற்றது.
பதம் 8.24.22 : பிறகு அந்த மீன் கூறியது: ராஜனே, நான் ஒரு மிகப்பெரிய மீனாக இருக்கிறேன், அதனால் இந்நீர் எனக்குச் சிறிதும் ஏற்றதாக இல்லை. இப்போது என்னைக் காப்பாற்ற அன்புடன் ஏதேனும் வழியைக் கண்டுபிடியுங்கள். ஒருபோதும் குறைந்து விடாத ஒரு ஏரிக்குள் என்னை விட்டுவிடுவது நல்லதாக இருக்கும்.
பதம் 8.24.23 : இவ்வாறு வேண்டிக்கொள்ளப்பட்டதும், சத்தியவிரதன் மீனை மிகப்பெரிய நீர்த்தேக்கத்திற்கு எடுத்துச் சென்றார். ஆனால் அதுவும் கூட போதவில்லை என்று நிரூபிக்கப்பட்டபோது, இறுதியாக அரசர் பிரம்மாண்டமான அம்மீனை சமுத்திரத்தில் விட்டுவிட்டார்.
பதம் 8.24.24 : சமுத்திரத்தில் வீசப்படும்போது, அந்த மீன் சத்தியவிரத மகாராஜனிடம் கூறியது: வீரமுள்ளவரே, இந்நீரில் என்னைத் தின்று விடக்கூடிய மிகவும் சக்திவாய்ந்த அபாயகரமான சுறா மீன்கள் உள்ளன. ஆகவே இவ்விடத்தில் என்னை நீங்கள் எறிந்து விடக்கூடாது.
பதம் 8.24.25 : ஒரு மீனின் வடிவிலுள்ள பரம புருஷரிடமிருந்து இனிமையான இச்சொற்களைக் கேட்ட பின், குழம்பிப்போன அரசர், அவரிடம் வினவினார். ஐயா நீங்கள் யார்? எங்களை நீங்கள் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டீர்களே!
பதம் 8.24.26 : எம்பெருமானே, ஒரே நாளில் தாங்கள் நதி நீரையும், சமுத்திர நீரையும் நிரப்பிவிடும் வகையில், தங்களை நூற்றுக்கணக்கான மைல்களுக்கு விரிவடையச் செய்திருக்கிறீர்கள். இதற்கு முன் இத்தகைய ஒரு நீர்வாழ்ப் பிராணிகளை நாங்கள் கண்டதோ அல்லது கேள்விப்பட்டதோ இல்லை.
பதம் 8.24.27 : எம்பெருமானே, தாங்கள் வற்றாதவரும், முழுமுதற் கடவுளுமாகிய நாராயணர், ஸ்ரீ ஹரி என்பதில் சந்தேகமில்லை. ஜீவராசிகளிடம் தங்களுடைய கருணையைக் காட்டுவதற்காகத்தான் தாங்கள் இப்போது நீர் வாழ்ப் பிராணியின் ஓர் உருவத்தை ஏற்றிருக்கிறீர்கள்.
பதம் 8.24.28 : எம்பெருமானே, படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் ஆகியவற்றின் எஜமானரே, மிகச்சிறந்த அனுபவிப்பாளரான பகவான் விஷ்ணுவே, எங்களைப் போன்ற சரணடைந்துள்ள பக்தர்களுக்குத் தாங்கள் தான் தலைவராவீர். நாங்கள் சென்றடைய வேண்டிய இலக்கும் தாங்கள்தான். எனவே எனது பணிவான வணக்கங்களை தங்களுக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.24.29 : தங்களுடைய லீலைகளும், அவதாரங்களும் அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவே தோன்றுகின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆகவே எம்பெருமானே, இந்த மீன் வடிவத்தை தாங்கள் ஏற்றிருப்பதன் நோக்கத்தை அறிய நான் விரும்புகிறேன்.
பதம் 8.24.30 : தாமரை இதழ்களைப் போன்ற கண்களைப் பெற்றுள்ள எம்பெருமானே, தேகாபிமானத்தில் உள்ளவர்களான தேவர்களின் வழிபாடு எல்லா விதத்திலும் பலனற்றதாகும். ஆனால் அனைவருக்கும் பரம நண்பராகவும், மிகப்பிரியமான பரமாத்மாவாகவும் இருப்பவர் தாங்கள்தான் என்பதால், தங்களுடைய தாமரைப் பாதங்களை வழிபடுவதென்பது ஒருபோதும் பலனளிக்காமற் போகாது. ஆகவேதான் தாங்கள் ஒரு மீனாக தங்களுடைய உருவத்தை தோன்றச் செய்திருக்கிறீர்கள்.
பதம் 8.24.31 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சத்தியவிரத மகாராஜன் இவ்வாறு பேசியதும், தமது பக்தருக்கு நன்மை செய்வதற்காகவும், வெள்ளப் பெருக்கில் தமது லீலைகளை நடத்தி அனுபவிப்பதற்காகவும், யுகத்தின் முடிவில் ஒரு மீனின் வடிவத்தை ஏற்றவரான பரமபுருஷ பகவான் பின்வருமாறு பதிலளித்தார்.
பதம் 8.24.32 : பரமபுருஷ பகவான் கூறினார்: எதிரிகளை வெல்லக்கூடியவரான ராஜனே, இன்றிலிருந்து ஏழாவது நாளில், பூ:, புவ மற்றும் ஸ்வ: ஆகிய மூவுலகங்களும் பிரளய நீரில் மூழ்கிவிடும்.
பதம் 8.24.33 : மூவுலகங்களும் நீரில் மூழ்கிவிடும்போது, என்னால் அனுப்பப்பட்ட கப்பல் ஒன்று உமக்கு முன் தோன்றும்.
பதங்கள் 8.24.34 – 8.24.35 : அதன்பிறகு, ராஜனே, எல்லா வகையான மூலிகைகளையும், விதைகளையும் சேகரித்து அவற்றை நீர் அக்கப்பலில் ஏற்றிவிட வேண்டும். பிறகு, ஏழு ரிஷிகள் பின்தொடர, எல்லா வகையான ஜீவராசிகளாலும் சூழப்பட்டவாறு, நீரும் அக்கப்பலில் ஏறிக்கொள்ள வேண்டும். மேலும் பெரும் ரிஷிகளிடமிருந்து வெளிப்பட்டு பிரகாசத்தை மட்டுமே ஒளியாகக் கொண்டு, உம்மால் வருத்தமின்றி உமது சகாக்களுடன் பிரளய நீரில் சுலபமாக பிரயாணம் செய்ய முடியும்.
பதம் 8.24.36 : பிறகு, சக்திவாய்ந்த காற்றுகளால் கப்பல் அலைக்கழிக்கப்படும் போது, நான் உமக்கு அருகிலேயே இருப்பேன் என்பதால், மிகப்பெரிய பாம்பான வாசுகியை கயிறாகக் கொண்டு கப்பலை எனது கொம்புடன் பிணைத்துவிட வேண்டும்.
பதம் 8.24.37 : ராஜனே, உம்முடன் எல்லா ரிஷிகளையும் கொண்ட கப்பலை இழுத்துக் கொண்டு, பிரம்ம தேவரின் நித்திரைக் காலமான இரவுநேரம் முடியும்வரை பிரளய நீரில் நான் பிரயாணம் செய்வேன்.
பதம் 8.24.38 : உமக்கு என்னால் பூரணமாக அறிவுறுத்தப்பட்டு, ஆதரவு அளிக்கப்படும். உமது விசாரணைகளின் காரணத்தால், பரப்பிரம்மன் எனப்படும் எனது பெருமைகளைப் பற்றிய அனைத்தும் உமது இதயத்தினுள் வெளிப்படுத்தப்படும். இவ்வாறாக என்னைப் பற்றிய அனைத்தையும் நீர் அறிவீர்.
பதம் 8.24.39 : அரசருக்கு அவ்வாறு உபதேசித்த பின், பரமபுருஷ பகவான் உடனே மறைந்து விட்டார். அதன்பிறகு சத்தியவிரத மகாராஜன் பகவான் அறிவித்திருந்த அந்த நேரத்தை எதிர்பார்த்திருந்தார்.
பதம் 8.24.40 : தர்ப்பைப் புற்களின் முனைகளை கிழக்கு நோக்கியவாறு பரப்பிய பின், ராஜ ரிஷியான அரசர் வடகிழக்குத் திசையை நோக்கியவாறு அதன்மேல் அமர்ந்து, ஒரு மீனின் உருவை ஏற்றுள்ள முழுமுதற் கடவுளான விஷ்ணுவை தியானிக்க ஆரம்பித்தார்.
பதம் 8.24.41 : அதன்பிறகு, பிரம்மாண்டமான மேகங்கள் இடைவிடாத மழையைப் பொழிந்து சமுத்திரத்தை இன்னும் அதிகமாக பெருகச் செய்தன. இவ்வாறாக சமுத்திரம் நிலத்தில் பொங்கி வழியத் துவங்கி, முழு உலகையும் வெள்ளத்தால் மூழ்கடித்தது.
பதம் 8.24.42 : முழுமுதற் கடவுளின் கட்டளையை சத்தியவிரதன் நினைவுக்கூர்ந்த சமயத்தில், ஒரு கப்பல் தமக்கருகில் வருவதை அவர் கண்டார். இவ்வாறாக மூலிகைகளையும், கொடிகளையும் சேகரித்த பின், புனிதர்களான பிராமணர்களுடன் அவர் கப்பலில் ஏறிக்கொண்டார்.
பதம் 8.24.43 : அரசரிடம் திருப்தியடைந்த புனிதர்களான அந்த பிராமணர்கள் அவரிடம் கூறினர்: ராஜனே, முழுமுதற் கடவுளாகிய கேசவனை தயவுசெய்து தியானியுங்கள். அவர் நம்மை நெருங்கியுள்ள இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றி, நம்முடைய நலனுக்கான ஏற்பாட்டைச் செய்வார்.
பதம் 8.24.44 : பிறகு, அரசர் முழுமுதற் கடவுளை இடைவிடாமல் தியானித்துக் கொண்டிருக்கும்போது, மிகப்பெரிய தங்க மீன் ஒன்று பிரளய வெள்ளத்தில் தோன்றியது. என்பது லட்சம் மைல்கள் நீளமுள்ள அந்த மீனுக்கு ஒரே கொம்பு இருந்தது.
பதம் 8.24.45 : பரமபுருஷரால் முன்பு அளிக்கப்பட்ட உபதேசங்களைப் பின்பற்றிய அரசர் வாசுகி எனும் பாம்பை கயிறாகப் பாவித்து, கப்பலை மீனின் கொம்புடன் பிணைத்துக் கட்டினார். இவ்வாறு திருப்தியடைந்த அரசர், பகவானை துதிக்கத் துவங்கினார்.
பதம் 8.24.46 : அரசர் கூறினார்: நினைவிற்கெட்டாத காலத்திலிருந்து தங்கள் சுய அறிவை இழந்து, இந்த அறியாமையினால் துன்பம் நிறைந்த, பெளதிகமான பந்தப்பட்ட வாழ்வில் சிக்கிக் கொண்டவர்கள், பகவானின் கருணையால் அவரது பக்தர்களைச் சந்திக்கும் வாய்ப்பைப் பெறுகின்றனர். அப்பரமபுருஷரை நான் பரம ஆன்மீக குருவாக ஏற்றுக்கொள்கிறேன்.
பதம் 8.24.47 : முட்டாளான பந்தப்பட்ட ஆத்மா ஜட உலகில் மகிழ்ச்சியாக இருக்கும் நம்பிக்கையில், துன்பத்தை மட்டுமே அளிக்கக்கூடிய பலன்நோக்குக் கருமங்களைச் செய்கிறான். ஆனால் பரமபுருஷ பகவானுக்குத் தொண்டு செய்வதன் மூலமாக, ஒருவன் இன்புற்றிருக்க வேண்டும் என்ற இத்தகைய பொய்யான ஆசைகளிலிருந்து விடுபடுகிறான். எனது பரம ஆன்மீக குரு என் இதயத்திலுள்ள பொய்யான ஆசைகளின் முடிச்சை வெட்டி வீழ்த்துவாராக.
பதம் 8.24.48 : ஜட சிக்கலிலிருந்து விடுபட விரும்பும் ஒருவன் பரமபுருஷரின் தொண்டை மேற்கொண்டு, பாவ, புண்ணியச் செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ள, அறியாமை எனும் களங்கத்தைக் கைவிடவேண்டும். இவ்வாறாக, தங்கம் அல்லது வெள்ளிக்கட்டி நெருப்பால் பதனிடப்படும் போது, அதிலுள்ள அழுக்குகள் அனைத்தும் உதிர்ந்து அது தூய்மையடைவதைப் போலவே, ஒருவன் தனது ஆதியான சொரூபத்தை திரும்ப பெறுகிறான். பரமபுருஷ பகவான் மற்றெல்லா ஆன்மீக குருமார்களுக்கும் மூல குருவாக இருப்பதால், முடிவற்றவரான அந்த பகவான் நமது ஆன்மீக குரு ஆவாராக.
பதம் 8.24.49 : தேவர்களாலோ, அல்லது பெயரளவேயான குருமார்களாலோ அல்லது மக்களாலோ, தனிப்பட்ட முறையிலோ அல்லது மொத்தமாகவோ, உங்களால் வழங்கப்படும் கருணையில் பத்தாயிரத்தில் ஒரு பாகத்திற்கு ஈடான கருணையைக் கூட வழங்க முடியாது. ஆகவே உங்களுடைய தாமரைப் பாதங்களில் நான் சரணடைய விரும்புகிறேன்.
பதம் 8.24.50 : குருடனொருவன், காண இயலாதிருப்பதால், மற்றொரு குருடனைத் தனது தலைவனாக ஏற்றுக் கொள்கிறான். வாழ்வின் இலட்சியத்தை அறியாத மக்கள், மூடனும், அயோக்கியனுமான ஒருவனை குருவாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் நாங்களோ தன்னுணர்வில் ஆர்வம் கொண்டுள்ளோம். ஆகவே, தாங்கள் எல்லாத் திசைகளிலும் காணக் கூடியவராகவும், சூரியனைப் போல் எல்லாம் அறிந்தவராகவும் இருப்பதால், பரம புருஷராகிய தங்களையே எங்களுடைய ஆன்மீக குருவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
பதம் 8.24.51 : பெயரளவாக மட்டுமே உள்ள பெளதிகவாதியான ஒரு குரு தனது சீடர்களுக்குப் பொருளாதார முன்னேற்றத்தையும், புலன் நுகர்வையும் பற்றி உபதேசிக்கிறார். இத்தகைய உபதேசங்களினால், மூடர்களான சீடர்கள் அறியாமை மிகுந்த பெளதிக வாழ்வையே தொடர்ந்து பின்பற்றுகின்றனர். ஆனால் பெருமானாகிய தாங்கள் நித்தியமான அறிவை வழங்குகிறீர்கள். மேலும் இத்தகைய அறிவைப் பெறும் புத்திசாலி விரைவாக தனது இயற்கையான மூல நிலையில் நிலைபெறுகிறான்.
பதம் 8.24.52 : எம்பெருமானே, தாங்கள் எல்லோருடைய நலத்திலும் அக்கறை கொண்ட மிகச்சிறந்த நண்பரும், பரம ஆளுனரும், பரமாத்மாவும், பரம போதகரும், உன்னத அறிவை வழங்குபவரும் மற்றும் எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றுபவரும் ஆவீர். ஆனால் மூடர்களின் இதயங்களிலும் தாங்கள் இருந்த போதிலும், அவர்களுடைய இதயத்திலுள்ள சிற்றின்ப ஆசைகளின் காரணத்தால், தங்களை அவர்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பதம் 8.24.53 : பரமபுருஷரே, தேவர்கள் உங்களை அனைத்திற்கும் பரம ஆளுனராக வழிபடுகின்றனர். தன்னுணர்வைப் பெறுவதற்காக தங்களிடம் நான் சரணடைகிறேன். வாழ்வின் இலட்சியத்தை வெளிப்படுத்தும் தங்களது உபதேசங்களால் என்னுடைய இதயத்திலுள்ள முடிச்சை வெட்டி வீழ்த்த வேண்டும். என்னுடைய வாழ்வின் இலட்சியத்தை நான் அறியும்படி செய்ய வேண்டும்.
பதம் 8.24.54 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: சத்தியவிரதன் பகவானிடம் விண்ணப்பித்ததும், ஒரு மீனின் வடிவத்தை ஏற்றிருந்த பரமபுருஷர், பிரளய நீரில் நீந்திச் செல்லும்போதே அவருக்கு பரம சத்தியத்தைப் பற்றி விளக்கினார்.
பதம் 8.24.55 : இவ்வாறாக, பரமபுருஷ பகவான், ஸாங்க்ய-யோகம் எனப்படும் ஆன்மீக விஞ்ஞானத்தை சத்தியவிரத மகாராஜனுக்கு விளக்கினார். இது ஜடத்துக்கும், ஆன்மீகத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் பகுத்தறியும் விஞ்ஞானமாகும் (அதாவது, பக்தி-யோகம்). இவ்விஞ்ஞானத்துடன் புராணங்களில் (பழைய சரித்திரங்களில்) அடங்கியுள்ள உபதேசங்களையும் மற்றும் சம்ஹிதைகளையும் கூட விளக்கினார். இவ்வெல்லா இலக்கியங்களிலும் பகவான் தம்மைப்பற்றி விளக்கிக் கூறினார்.
பதம் 8.24.56 : கப்பலில் அமர்ந்திருக்கும் பொழுது, சத்தியவிரத மகாராஜனும், அவருடனிருந்த சிறந்த ரிஷிகளும், தன்னுணர்வைப் பற்றிய பரம புருஷரின் உபதேசங்களைக் கேட்டனர். இவ்வுபதேசங்கள் நித்தியமான வேத இலக்கியத்திலிருந்து (ப்ரஹ்ம) கூறப்பட்டவை ஆகும். இவ்வாறாக அரசருக்கும், ரிஷிகளுக்கும் பரம சத்தியத்தைப் பற்றி எவ்வித சந்தேகமும் இருக்கவில்லை.
பதம் 8.24.57 : கடந்த பிரளய வெள்ளத்தின் முடிவில் (சுயம்புவ மனுவின் ஆட்சிக் காலத்தில்), பரமபுருஷர், ஹயக்ரீவன் எனும் அசுரனைக் கொன்று, எல்லா வேத இலக்கியங்களையும், பிரம்ம தேவர் உறக்கத்திலிருந்து எழுந்ததும் அவரிடம் ஒப்படைத்தார்.
பதம் 8.24.58 : சத்தியவிரத மகாராஜன் பகவான் விஷ்ணுவின் கருணையால் அனைத்து வேத அறிவிலும் அறிவூட்டப்பட்டார். மேலும் இந்த ஆட்சிக் காலத்தில் சூரிய தேவனின் மகனான வைவஸ்வத மனுவாக இப்போது அவர் பிறவி எடுத்திருக்கிறார்.
பதம் 8.24.59 : மிகச் சிறந்தவரான சத்தியவிரத மகாராஜனைப் பற்றியதும், பரமபுருஷரான விஷ்ணுவின் மீன் அவதாரத்தைப் பற்றியதுமான இக்கதை மிகச் சிறந்ததொரு தெய்வீகமான வர்ணணையாகும். இதைக் கேட்பவர் யாராக இருப்பினும் அவர் பாவ வாழ்வின் விளைவுகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.
பதம் 8.24.60 : மச்ச அவதாரத்தையும், சத்திய விரத மகாராஜனையும் பற்றிய இந்த வர்ணனையை விவரிப்பவர், அவரது எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வது நிச்சயம். மேலும் அவர் பரமபுருஷ பகவானின் திருநாட்டிற்கு திரும்பிச் செல்வார் என்பதிலும் சந்தேகமில்லை.
பதம் 8.24.61 : ஒரு பெரிய மீனாகத் தோன்றியவரும், உறக்கத்திலிருந்து விழிதெழுந்த பிரம்ம தேவருக்கு வேத இலக்கியத்தை திரும்பக் கொடுத்தவரும், சத்தியவிரத மகாராஜனுக்கும், பெரும் ரிஷிகளுக்கும் வேத இலக்கியத்தின் சாரத்தை விளக்கியவருமான பரமபுருஷ பகவானுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.