அத்தியாயம் – 22
பலி மகாராஜன் தமது வாழ்வை
அர்ப்பணித்தல்
பதம் 8.22.1
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் விப்ரக்ருதோ ராஜன் பலிர் பகவதாஸுர:
பித்யமானோ ‘பி அபின்னாத்மா ப்ரத்யாஹாவிக்லவம் வச:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக, முன் சொல்லப்பட்டது போல்; விப்ரக்ருத:—கஷ்டத்தில் வைக்கப்பட்ட; ராஜன்—ராஜனே; பலி:—பலி மகாராஜன்; பகவதா—பரமபுருஷராகிய வாமனதேவரால்; அஸுர:—அசுரர்களின் ராஜனான; பித்யமான: அபி—அசௌகரியமான இந்நிலையில் இருந்த போதிலும்; அபின்ன-ஆத்மா—உடலாலோ அல்லது மனதாலோ தொல்லைக்குள்ளாகாமல்; ப்ரத்யாஹ—பதில் கூறினார்; அவிக்லவம்—குழப்பமடையாமல்; வச:—பின்வரும் சொற்களில்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, பரமபுருஷ பகவான் பலி மகாராஜனின் விஷயத்தில் தீங்கிழைப்பது போல் வெளிப்படையாக நடந்து கொண்ட போதிலும், பலி மகாராஜன் தமது தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். தமது வாக்குறுதியை தாம் நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கருதிய அவர், பின்வருமாறு பேசலானார்.
பதம் 8.22.2
ஸ்ரீ-பலிர் உவாச
யதி உத்தமஸ்லோக பவான் மமேரிதம்
வசோ வ்யலீகம் ஸுர-வர்ய மன்யதே
கரோமி ருதம் தன் ந பவேத் ப்ரலம்பனம்
பதம் த்ருதீயம் குரு சீர்ஷ்ணி மே நிஜம்
ஸ்ரீ-பலி: உவாச—பலி மகாராஜன் கூறினார்; யதி—என்றால்; உத்தமஸ்லோக—பரமபுருஷரே; பவான்—தாங்கள்; மம—எனது; ஈரிதம்—வாக்களிக்கப்பட்ட; வச:—வார்த்தைகள்; வ்யலீகம்—பொய்; ஸுர-வர்ய—சுரர்களுக்கெல்லாம் (தேவர்களுக்கெல்லாம்); மன்யதே—என்று தாங்கள் நினைக்கிறீர்கள்; கரோமி—நான் அதைச் செய்துவிடுவேன்; ருதம்—உண்மையாக; தத்—அதை (வாக்குறுதியை); ந—இல்லை; பவேத்—ஆகிவிடும்; ப்ரலம்பனம்—ஏமாற்றும்; பதம்—அடியை; த்ருதீயம்—மூன்றாவது; குரு—அப்படியே செய்துவிடுங்கள்; சீர்ஷ்ணி—தலைமீது; மே—என்; நிஜம்—தங்களது தாமரைப் பாதத்தை.
பலி மகாராஜன் கூறினார்: அனைத்து தேவர்களின் மிகச்சிறந்த வழிபாட்டுக்குரியவரான பரமபுருஷரே, என்னுடைய வாக்குறுதி பொய்யாகிவிட்டதென்று தாங்கள் கருதினால், விஷயங்களை சரிப்படுத்தி வாக்குறுதியை உண்மையானதாக மாற்றிவிட உறுதியாக நான் விரும்புகிறேன். எனது வாக்குறுதி பொய்யாவதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே தங்களது மூன்றாவது அடியை தயவு செய்து என் தலைமீது வைத்து அருள் புரியுங்கள்.
பதம் 8.22.3
பிபேமி நாஹம் நிரயாத் பத-ச்யுதோ
ந பாச-பந்தாத் வ்யஸனாத் துரத்யயாத்
நைவார்த-க்ருச்ராத் பவதோ வினிக்ரஹாத்
அஸாது-வாதாத் ப்ருசம் உத்விஜே யதா
பிபேமி—நான் அஞ்சுகிறேன்; ந—இல்லை; அஹம்—நான்; நிரயாத்—நரக சூழ்நிலைக்கு; பத-ச்யுத:—அல்லது என் அந்தஸ்தை இழப்பதைக் குறிக்கும் நான் அஞ்சவில்லை; ந—அல்லது; பாச-பந்தாத்—நாக பாசத்தால் பந்திக்கப்படுவதற்கோ; வ்யஸனாத்—அல்லது துன்பத்திற்கோ; துரத்யயாத்—என்னால் பொறுக்க முடியாததான; ந—அல்லது; ஏவ—நிச்சயமாக; அர்த-க்ருச்ராத்—ஏழ்மையின் காரணத்தால்; பவத:—பெருமானாகிய தங்களின்; வினிக்ரஹாத்—இப்போது நான் அனுபவிக்கும் தண்டனைக்கோ; அஸாது-வாதாத்—அவதூறுக்கு; ப்ருசம்—மிகவும்; உத்விஜே—நான் கவலைப்படுகிறேன்; யதா—போல்.
என் உடைமைகள் அனைத்தையும் இழப்பதற்கோ, நரக வாழ்வில் வசிப்பதற்கோ, ஏழ்மையின் காரணத்தால் நாக-பாசத்தால் பந்திக்கப்படுவதற்கோ அல்லது தங்களால் தண்டிக்கப்படுவதற்கோ நான் அஞ்சவில்லை. ஆனால் பழிச்சொல்லுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன்.
பதம் 8.22.4
பும்ஸாம் ஸ்லாக்யதமம் மன்யே தண்டம் அர்ஹத்தமார்பிதம்
யம் ந மாதா பிதா ப்ராதா ஸுஹ்ருதஸ் சாதிசந்தி ஹி
பும்ஸாம்—மனிதரில்; ஸ்லாக்ய-தமம்—மிகவும் மேன்மையானதாக; மன்யே—நான் கருதுகிறேன்; தண்டம்—தண்டனையை; அர்ஹத்தம-அர்பிதம்—வழிபாட்டுக்குரிய பரமபுருஷரான தங்களால் அளிக்கப்பட்ட; யம்—எது; ந—அல்லது; மாதா—தாய்; பிதா—தந்தை; ப்ராதா—சகோதரன்; ஸுஹ்ருத:—நண்பர்கள்; ச—கூட: ஆதிசந்தி—அளிப்பது; ஹி—உண்மையில்.
ஒரு தந்தையோ, தாயோ, சகோதரனோ அல்லது நண்பரோ, பிறர் நலத்தில் அக்கறை கொண்டவர் என்ற முறையில், சிலசமயங்களில் ஒருவரை தண்டிக்கக்கூடும் என்றாலும், அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களை அவர்கள் ஒருபோதும் இவ்வாறு தண்டிப்பது கிடையாது. ஆனால் தாங்கள் மிகச்சிறந்த வழிபாட்டுக்குரியவர் என்பதால், தாங்கள் எனக்களித்த தண்டனையை நான் மிகவும் உயர்வானதாகக் கருதுகிறேன்.
பதம் 8.22.5
த்வம் நூனம் அஸுராணாம் ந: பரேக்ஷ: பரமோ குரு:
யோ நோ ‘னேக-மதாந்தானாம் விப்ரம்சம் சக்ஷுர் ஆதிசத்
த்வம்—பெருமானாகிய தாங்கள்; நூனம்—உண்மையில்; அஸுராணாம்—அசுரர்களான; ந:—எங்களின்; பரோக்ஷ:—மறைமுகம்; பரம:—பரம; குரு:—ஆன்மீக குரு; ய:—பெருமானாகிய தாங்கள்; ந—எங்களின்; அனேக—பல; மத-அந்தானாம்—பெளதிக செல்வத்தால் குருடர்களான; விப்ரம்சம்—எங்களுடைய பொய்யான கௌரவத்தை அழித்து; சக்ஷு:—அறிவுக்கண்ணை; ஆதிசத்—அளித்தீர்கள்.
மறைமுகமாக, பெருமானாகிய தாங்கள்தான் அசுரர்களாகிய எங்களுடைய மிகச்சிறந்த நண்பராவீர், எங்களுடைய எதிரியைப் போல், நடித்து, எங்களது மிகச்சிறந்த நன்மைக்காக தாங்கள் செயற்படுகிறீர்கள். எங்களைப் போன்ற அசுரர்கள் எப்பொழுதும் பொய்யான கெளரவத்தை அடைய விரும்புவதால், எங்களைத் தண்டிப்பதன் வாயிலாக, சரியான பாதையைக் காண்பதற்குரிய கண்களை நீங்கள் எங்களுக்கு அளிக்கிறீர்கள்.
பதங்கள் 8.22.6 – 8.22.7
யஸ்மின் வைரானுபந்தேன வ்யூடேன விபுதேதரா:
பஹவோ லேபிரே ஸித்திம் யாம் உ ஹைகாந்த யோகின:
தேனாஹம் நிக்ருஹீதோ ‘ஸ்மி பவதா பூரி-கர்மணா
பத்தஸ்ச வாருணை: பாசைர் நாதிவ்ரீடே ந ச வ்யதே
யஸ்மின்—தங்களை; வைர-அனுபந்தேன—தொடர்ந்து ஓர் எதிரியாகவே பாவிப்பதன் மூலமாக; வ்யூடேன—அத்தகைய புத்தியில் உறுதியாக நிலைத்து; விபுத-இதரா:—அசுரர்கள் (தேவர்களைத் தவிர்த்த மற்றவர்கள்); பஹவ:—அவர்களில் பலர்; லேபிரே—அடைந்தனர்; ஸித்திம்—பூரணத்துவம்; யாம்—எது; உ ஹ—அது பலரும் அறிந்ததே; ஏகாந்த-யோகின:—இது மிகப்பெரிய வெற்றி பெற்ற அஷ்டாங்க யோகிகளின் சாதனைகளுக்குச் சமமானது; தேன—ஆகவே; அஹம்—நான்; நிக்ருஹீத:-அஸ்மி—நான் தண்டிக்கப்பட்ட போதிலும்; பவதா—பெருமானாகிய தங்களால்; பூரி-கர்மணா—பல அற்புதங்களை செய்யக்கூடியவரான; பத்த:ச—நான் கைது செய்யப்பட்டு, கட்டப்பட்டு; வாருணை: பாசை:—நாக பாசத்தால்; ந அதி-வ்ரீடே—இதனால் நான் சிறிதும் வெட்கப்படவில்லை; ந ச வ்யதே—அல்லது நான் அதிகமாகத் துன்புறவும் இல்லை
தங்களிடம் தொடர்ந்து விரோதம் கொண்டிருந்த பல அசுரர்கள் இறுதியில் மிகச்சிறந்த அஷ்டாங்க யோகிகளுக்குரிய பூரணத்துவத்தைப் பெற்றனர். ஒரே காரியத்தால் பல நோக்கங்களை தங்களால் நிறைவேற்றிவிட முடியும். ஆகவே, தாங்கள் என்னைப் பல வழிகளில் தண்டித்த போதிலும், நாக பாசத்தால் கட்டப்பட்ட நான் வெட்கப்படவோ அல்லது துன்பப்படவோ இல்லை.
பதம் 8.22.8
பிதாமஹோ மே பவதீய-ஸம்மத:
ப்ரஹ்ராத ஆவிஷ்க்ருத-ஸாது-வாத:
பவத் விபக்ஷேண விசித்ர-வைசஸம்
ஸம்ப்ராபிதஸ் த்வம் பரம: ஸ்வ-பித்ரா
பிதாமஹ:—பாட்டனார்; மே—எனது; பவதீய-ஸம்மத:-தங்களது பக்தர்களால் அங்கீகரிக்கப்பட்ட; ப்ரஹ்ராத:—பிரகலாத மகாராஜன்; ஆவிஷ்க்ருத-ஸாது-வாத:—எல்லா இடங்களிலும் பக்தரென்று போற்றப்படுவதால் புகழ்பெற்ற; பவத்-விபக்ஷேண—தங்களை எதிர்ப்பதால் மட்டுமே; விசித்ர-வைசஸம்-பலவகையான தொல்லைகளை உண்டாக்கி; ஸம்ப்ராபித:—துன்பப்பட்டார்; த்வம்—தாங்கள்; பரம:—பரம புகலிடமான; ஸ்வ-பித்ரா—அவரது சொந்த தந்தையால்.
உங்களுடைய பக்தர்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டதால், எனது பாட்டனாராகிய பிரகலாத மகாராஜன் புகழ் பெற்றவரானார். தமது தந்தையான இரண்யகசிபுவால் அவர் பல வழிகளில் துன்புறுத்தப்பட்ட போதிலும், அவர் தங்களது தாமரைப் பாதங்களில் புகலிடம் கொண்டு, விசுவாசத்தை இழந்துவிடாமலேயே இருந்தார்.
பதம் 8.22.9
கிம் ஆத்மனானேன ஜஹாதி யோ ‘ன்தத:
கிம் ரிக்த-ஹாரை: ஸ்வஜனாக்ய தஸ்யுபி:
கிம் ஜாயயா ஸம்ஸ்ருதி-ஹேது-பூதயா
மர்த்யஸ்ய கேஹை: கிம் இஹாயுஷோ வ்யய:
கிம்—என்ன பயன்; ஆத்மனா அனேன—இவ்வுடலால்; ஜஹாதி—கைவிடும்; ய:—எது (உடல்); அந்தத:—வாழ்வின் முடிவில்; கிம்—என்ன பயன்; ரிக்த-ஹாரை:—செல்வத்தைக் கொள்ளையடிப்பவர்களால்; ஸ்வஜன-ஆக்ய-தஸ்யுபி:—உண்மையில் உறவினர்கள் எனும் பெயரைத் தாங்கியுள்ள கொள்ளைக்காரர்களான அவர்களால்; கிம்—என்ன பயன்; ஜாயயா—ஒரு மனைவியால்; ஸம்ஸ்ருதி-ஹேது-பூதயா—அதிகரிக்கும் பௌதிக சூழ்நிலைகளுக்குப் பிறப்பிடமான; மர்த்யஸ்ய—நிச்சயமாக இறக்கப் போகும் ஒருவனின்; கேஹை:—வீடுகள், குடும்பம் மற்றும் பொது ஜனங்களால்; கிம்—என்ன பயன்; இஹ—எந்த வீட்டில்; ஆயுஷ:—ஆயுளால்; வ்யய:—வெறுமே வீணாகும்.
வாழ்வின் முடிவில் தானாகவே உரிமையாளரை விட்டுப் பிரியும் பௌதிக உடலால் என்ன பயன்? உண்மையில் தெய்வீகமான ஐசுவரியத்துடன் பகவானுக்குத் தொண்டு புரிய பயன்படும் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களான குடும்ப அங்கத்தினர்களால் என்ன பயன்? ஒரு மனைவியால் என்ன பயன்? அவள் பெளதிக சூழ்நிலையின் பெருக்கத்திற்கு மட்டுமே காரணமாக இருக்கிறாள். மேலும் குடும்பம், வீடு, தேசம் மற்றும் பொது ஜனங்கள் ஆகியவற்றால் என்ன பயன்? அவற்றிடம் கொள்ளும் பற்று ஒருவரது ஆயுளின் மதிப்புமிக்க சக்தியை வீணாக்குவதற்குத்தான் பயன்படுகிறது.
பதம் 8.22.10
இத்தம் ஸ நிஸ்சித்ய பிதாமஹோ மஹான்
அகாத-போதோ பவத: பாத-பத்மம்
த்ருவம் ப்ரபேதே ஹி அகுதோபயம் ஜனாத்
பித: ஸ்வபக்ஷ-க்ஷபணாஸ்ய ஸத்தம
இத்தம்—இதனால் (மேலே குறிப்பிட்டது போல்); ஸ:—அவர் பிரகலாத மகாராஜன்; நிஸ்சித்ய—இவ்விஷயத்தில் தீர்க்கமான முடிவெடுத்து; பிதாமஹ:—என் பாட்டனாரான; மஹான்—மிகச் சிறந்த பக்தரான; அகாத-போத:—அவரது பக்தித் தொண்டினால் எல்லையற்ற அறிவைப் பெற்றவரான, எனது பாட்டனார்; பவத:—பெருமானாகிய தங்களது; பாத-பத்மம்—பாத கமலங்களை; த்ருவம்—குறையற்ற, நித்தியமான புகலிடத்தை; ப்ரபேதே—சரணடைந்தார்; ஹி—உண்மையில்; அகுத:-பயம்—பயத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு; ஜனாத்—சாதாரண பொது மக்களிடமிருந்து; பீத:—அஞ்சி; ஸ்வபக்ஷ-க்ஷபணஸ்ய—எங்களுடைய பக்கத்திலிருந்த அசுரர்களைக் கொன்றவரான தங்களின்; ஸத்-தம—சிறந்தவர்களிலும் மிகச்சிறந்தவரே.
அனைவரிலும் மிகச்சிறந்தவரும், எல்லையற்ற அறிவைப் பெற்றவரும், அனைவராலும் வழிபடத் தக்கவருமான என் பாட்டனார், இவ்வுலகிலுள்ள சாதாரண மக்களுக்கு அஞ்சினார். தங்களது தாமரைப் பாதங்களின் புகலிடத்தினால் அளிக்கப்படும் நன்மையில் முழு நம்பிக்கை கொண்ட அவர், தங்களால் கொல்லப்பட்ட அவரது தந்தை மற்றும் அசுர நண்பர்களின் விருப்பத்திற்கெதிராக, தங்களுடைய தாமரைப் பாதங்களில் சரணடைந்தார்.
பதம் 8.22.11
அதாஹம் அபி ஆத்ம-ரிபோஸ் தவாந்திகம்
தைவேன நீத: ப்ரஸபம் த்யாஜித-ஸ்ரீ:
இதம் க்ருதாந்தாந்திக-வர்தி ஜீவிதம்
யயாத்ருவம் ஸ்தப்த-மதிர் ந புத்யதே
அத—ஆகவே; அஹம்—நான்; அபி—கூட; ஆத்ம-ரிபோ:—குடும்பத்தின் பரம்பரை விரோதியான; தவ—மேன்மை மிகுந்த தங்களின்; அந்திகம்—புகலிடத்திற்கு; தைவேன—கடவுளருளால்; நீத:—கொண்டு வரப்பட்டேன்; ப்ரஸபம்—பலாத்காரமாக; த்யாஜித—இழந்து; ஸ்ரீ:—எல்லாச் செல்வங்களையும்; இதம்—வாழ்வின் இத்தத்துவம்; க்ருத-அந்த-அந்திக-வர்தி—மரணத்திற்கான வசதி எப்பொழுதும் அளிக்கப்பட்டுள்ளது; ஜீவிதம்—ஆயுட்காலம்; யயா—அத்தகைய பெளதிக செல்வத்தால்; அத்ருவம்—நிலையற்றதாக; ஸ்தப்த-மதி:—அத்தகைய அறிவற்ற ஒருவனால்; ந-புத்யதே—புரிந்து கொள்ள முடியாது.
கடவுளருளால்தான் என்னுடைய செல்வங்களை எல்லாம் இழந்து, தங்களது தாமரைப் பாதங்களின் கீழ் நான் பலாத்காரமாக கொண்டு வரப்பட்டுள்ளேன். ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எதிர்நோக்கியவாறு பௌதிக சூழ்நிலைகளின் கீழ் வாழும் பொது மக்கள், தற்காலிகமான செல்வத்தினால் ஏற்படுத்தப்பட்ட மாயையின் காரணத்தால், இவ்வாழ்வு தற்காலிகமானது என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இறையருளால்தான் அந்நிலையிலிருந்து நான் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்.
பதம் 8.22.12
ஸ்ரீ-சுக உவாச
தஸ்யேத்தம் பாஷமாணஸ்ய ப்ரஹ்ராதோ பகவத்-ப்ரிய:
அஜாகாம குரு-ஸ்ரேஷ்ட ராகா-பதிர் இவோத்தித:
ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தஸ்ய—பலி மகாராஜன்; இத்தம்—இவ்வாறாக; பாஷமாணஸ்ய—அதிர்ஷ்டமான அவரது நிலையை விவரிக்கும் போது; ப்ரஹ்ராத:—அவரது பாட்டனாரான பிரகலாத மகாராஜன்; பகவத்-ப்ரிய:—பகவானுக்கு மிகப் பிரியமான பக்தரான; ஆஜகாம—அங்கு தோன்றினார்; குரு-ஸ்ரேஷ்ட—குருக்களில் மிகச் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே; ராகா-பதி:—நிலவு; இவ—போல்; உத்தித:—எழுந்த.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குருக்களில் சிறந்தவரே, இவ்விதமாக தமது அதிர்ஷ்டவசமான நிலையை பலி மகாராஜன் விவரிக்கும் போது, பகவானின் மிகப் பிரியமுள்ள பக்தரான பிரகலாத மகாராஜன், இரவு நேரத்தில் உதிக்கும் சந்திரனைப் போல் அங்கு தோன்றினார்.
பதம் 8.22.13
தம் இந்ர-ஸேன: ஸ்வ-பிதாமஹம் ஸ்ரியா
விராஜமானம் நலினாயதேக்ஷணம்
ப்ராம்சும் பிசங்காம்பரம் அஞ்சன-த்விஷம்
ப்ரலம்ப-பாஹும் கபகர்ஷபம் ஐக்ஷத
தம்—அந்த பிரகலாத மகாராஜன்; இந்ர-ஸேன:—இந்திரனின் எல்லா படைபலத்தையும் இப்போது பெற்றிருந்த பலி மகாராஜன்; ஸ்வ-பிதாமஹம்—அவரது பாட்டனாரை; ஸ்ரீயா—எல்லா அழகிய அம்சங்களுடனும் வந்திருக்கும்; விராஜமானம்—அங்கு நின்று கொண்டிருக்கும்; நலின-ஆயத-ஈக்ஷணம்—தாமரை இதழ்களைப் போல் அகலமான கண்களுடன்; ப்ராம்சும்—மிகவும் அழகான ஒருடல்; பிசங்க-அம்பரம்—மஞ்சள் நிற ஆடை அணிந்து; அஞ்சன-த்விஷம்—கண்களுக்குரிய கருநிற மையை ஒத்த அவரது உடலுடன்; ப்ரலம்ப-பாஹும்—மிகவும் நீண்ட கரங்கள்; சுபக ரிஷபம்—மங்களகரமானவர்களுக்கு எல்லாம் மிகச் சிறந்தவர்; ஐக்ஷத—அவர் கண்டார்.
பிறகு பலி மகாராஜன், பெரும் பாக்கியசாலியும், கண் மையை ஒத்த கருநிற உடலைக் கொண்டவரும், தமது பாட்டனாருமாகிய பிரகலாத மகாராஜனைக் கண்டார். அவரது கம்பீரமான உயர்ந்த உருவம் மஞ்சள் நிற ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர் நீண்ட கரங்களைப் பெற்றிருந்தார். அவரது அழகிய கண்கள் தாமரையின் இதழ்களைப் போல் இருந்தன. அவர் அனைவருக்கும் பிரியமானவராகவும், இன்பமளிப்பவராகவும் இருந்தார்.
பதம் 8.22.14
தஸ்மை பலிர் வாருண-பாச-யந்த்ரித:
ஸமர்ஹணம் நோபஜஹார பூர்வவத்
நனாம மூர்த்னாஸ்ரு-விலோல-லோசன:
ஸ-வ்ரீட-நீசீன-முகோ பபூவ ஹ
தஸ்மை—பிரகலாத மகாராஜனுக்கு; பலி:—பலி மகாராஜனால்; வாருண-பாச-யந்த்ரித:—நாக-பாசத்தால் கட்டப்பட்டிருந்ததால்; ஸமர்ஹணம்—தகுந்த மரியாதையை; ந—இல்லை; உபஜஹார—அளித்தார்; பூர்வ-வத்—முன்புபோல்; நனாம—அவர் வணங்கினார்; மூர்த்னா—தலையால்; அஸ்ரு-விலோல-லோசன:—கண்ணீர் ததும்பும் கண்கள்; ஸ-வ்ரீட—வெட்கத்துடன்; நீசீன—கீழ்நோக்கிய; முக:—முகத்துடன்; பபூவ-ஹ—அவர் அந்நிலைக்கு உள்ளானார்.
பலி மகாராஜன் நாக பாசத்தால் கட்டப்பட்டு இருந்ததால், பிரகலாத மகாராஜனுக்கு முன்பு அளித்ததைப் போன்ற பொருத்தமான மரியாதையை இப்போது அவரால் அளிக்க முடியவில்லை. மாறாக, கண்ணீர் ததும்பும் கண்களுடனும், வெட்கத்தால் தாழ்த்தப்பட்ட முகத்துடனும் இருந்த அவர் தமது தலையாலேயே பணிவான வணக்கங்களை அவருக்குச் செலுத்தினார்.
பதம் 8.22.15
ஸ தத்ர ஹாஸீனம் உதீக்ஷ்ய ஸத்-பதிம்
ஹரிம் ஸுனந்தாதி-அனுகைர் உபாஸிதம்
உபேத்ய பூமௌ சிரஸா மஹா-மனா
நனாம மூர்த்னா புலகாஸ்ரு-விக்லவ:
ஸ:—பிரகலாத மகாராஜன்; தத்ர—அங்கு; ஹ ஆஸீனம்—அமர்ந்திருப்பதை; உதீக்ஷ்ய—கண்டபின்; ஸத்-பதிம்—முக்தி பெற்ற ஆத்மாக்களின் தலைவரான பரமபுருஷ பகவான்; ஹரிம்—பகவான் ஹரி; ஸுனந்த-ஆதி-அனுகை:—சுனந்தரைப் போன்ற அவரது ஆதரவாளர்களால்; உபாஸிதம்—வழிபடப்படுவதை; உபேத்ய—அருகில் சென்று; பூமௌ—தரைமீது; சிரஸா—அவரது தலையால் (வணங்கினார்); மஹா-மனா:—மிகச்சிறந்த பக்தரான; நனாம—வணக்கம் செலுத்தினார்; மூர்த்னா—அவரது தலையால்; புலக-அஸ்ரு-விக்லவ:—ஆனந்தக் கண்ணீரால் மனங்குழைந்தவரான.
பரமபுருஷர், சுனந்தரைப் போன்ற அவரது நெருங்கிய சகாக்களால் வழிபடப்பட்டவாறும், சூழப்பட்டவாறும் அங்கு அமர்ந்திருப்பதை மகா புருஷராகிய பிரகலாத மகாராஜன் கண்டபோது, அவர் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார். பகவானை அணுகி, தரையில் விழுந்து, தலையால் தமது வணக்கங்களை பகவானுக்குச் சமர்ப்பித்தார்.
பதம் 8.22.16
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
த்வயைவ தத்தம் பதம் ஐந்ரம் ஊர்ஜிதம்
ஹ்ருதம் தத் ஏவாத்ய ததைவ சோபனம்
மன்யே மஹான் அஸ்ய க்ருதோ ஹி அனுக்ரஹோ
விப்ரம்சிதோ யச் ச்ரிய ஆத்ம-மோஹனாத்
ஸ்ரீ-ப்ரஹ்ராத: உவாச—பிரகலாத மகாராஜன் கூறினார்; த்வயா—பெருமானாகிய தங்களால்; ஏவ—உண்மையில்; தத்தம்—கொடுக்கப்பட்டதான; பதம்—இப்பதவி; ஐந்ரம்—சுவர்க்க ராஜனின்; ஊர்ஜிதம்—மிகமிகச்சிறந்ததான; ஹ்ருதம்—பறித்துக் கொள்ளப்பட்டது; தத்—அது; ஏவ—உண்மையில்; அத்ய—இன்று; ததா—போலவே; ஏவ—உண்மையில்; சோபனம்—அழகானதென்று; மன்யே—நான் கருதுகிறேன்; மஹான்—மிகச் சிறந்த; அஸ்ய—அவரின் (பலி மகாராஜனின்); க்ருத:—தங்களால் செய்யப்பட்டது; ஹி—உண்மையில்; அனுக்ரஹ:—கருணை; விப்ரம்சித:—இழந்ததால்; யத்—என்பதால்; ஸ்ரிய:—அந்த ஐசுவரியத்திலிருந்து; ஆத்ம-மோஹனாத்—தன்னை அறியும் முறையை மறைத்திருந்த.
பிரகலாத மகாராஜன் கூறினார்: எம்பெருமானே, சுவர்க்க ராஜப் பதவியெனும் மிகப் பெரிய ஐசுவரியத்தை இந்த பலிக்கு வழங்கியவர் தாங்கள்தான். மேலும் இன்று, இப்போது, அவையனைத்தையும் பறித்துக் கொண்டவரும் தாங்கள்தான். இருவழிகளிலும் தாங்கள் சமமான அழகுடன் செயலாற்றியிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். சுவர்க்க ராஜனெனும் மிகவுயர்ந்த பதவியானது பலியை அறியாமையெனும் இருளில் வைத்திருந்ததால், பலியின் செல்வங்களை எல்லாம் பறித்துக் கொள்வதன் மூலமாக, மிகவும் கருணைமிக்க அனுக்கிரகத்தை தாங்கள் பலிக்குச் செய்திருக்கிறீர்கள்.
பதம் 8.22.17
யயா ஹி வித்வான் அபி முஹ்யதே யதஸ்
தத் கோ விசஷ்டே கதிம் ஆத்மனோ யதா
தஸ்மை நமஸ்தே ஜகத்-ஈஸ்வராய வை
நாராயணயாகில-லோக-ஸாக்ஷிணே
யயா—எந்த பெளதிக செல்வத்தால்; ஹி—உண்மையில்; வித்வான் அபி—அதிர்ஷ்டவசமாக கல்வியில் முன்னேறிய ஒருவன் கூட; முஹ்யதே—குழப்பமடைகிறான்; யத:—சுய கட்டுப்பாடுள்ளவன்; தத்—அந்த: க:—யார்; விசஷ்டே—அதைத் தேடமுடியும்; கதிம்—முன்னேற்றத்தை; ஆத்மன:—ஆத்மாவின்; யதா—சரியாக; தஸ்மை—அவருக்கு; நம:—எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்; தே—தங்களுக்கு; ஜகத்-ஈஸ்வராய—பிரபஞ்சத்தின் இறைவனுக்கு; வை—உண்மையில்; நாராயணாய—பெருமானாகிய நாராயணருக்கு; அகில-லோக-ஸாக்ஷிணே—எல்லாப் படைப்புக்கும் சாட்சியாக உள்ள.
பௌதிக செல்வம் ஒருவனை பெருங் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியதாகும். ஏனெனில், கற்றறிந்த, சுய கட்டுப்பாடுள்ள மனிதனையும் கூட அது தன்னையறியும் வழியைத் தேடுவதை மறந்துவிடச் செய்கிறது. ஆனால் முழுமுதற் கடவுளும், பிரபஞ்சத்தின் நாயகருமான நாராயணரால் அவரது விருப்பப்படி அனைத்தையும் காண முடியும். எனவே அவருக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.22.18
ஸ்ரீ-சுக உவாச
தஸ்யானுஸ்ருண்வதோ ராஜன் ப்ரஹ்ராதஸ்ய க்ருதாஞ்ஜலே:
ஹிரண்யகர்போ பகவான் உவாச மதுஸூதனம்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தஸ்ய—பிரகலாத மகாராஜனின்; அனுஸ்ருண்வத:—அவரால் கேட்க இயலும் என்பதற்காக; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ப்ரஹ்ராதஸ்ய—பிரகலாத மகாராஜனின்; க்ருத-அஞ்ஜலே:—கூப்பிய கரங்களுடன் நின்றிருந்த; ஹிரண்யகர்ப:—பிரம்மதேவர்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; உவாச—கூறினார்; மதுஸூதனம்—பரமபுருஷரான மதுசூதனருக்கு.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, கூப்பிய கரங்களுடன் அருகில் நின்றிருந்த பிரகலாத மகாராஜனுக்குக் கேட்கும் வகையில், பிரம்மதேவர் பிறகு பரமபுருஷரிடம் பேசத் துவங்கினார்.
பதம் 8.22.19
பத்தம் வீக்ஷ்ய பதிம் ஸாத்வீ தத்-பத்னீ பய-விஹ்வலா
ப்ராஞ்ஜலி: ப்ரணதோபேந்ரம் பபாஷே ‘வான்-முகீ ந்ருப
பத்தம்—கைது செய்யப்பட்டதை; வீக்ஷ்ய—கண்டு; பதிம்—அவளது கணவன்; ஸாத்வீ—தூய்மையானவளான; தத்-ப்தனீ—பலி மகாராஜனின் மனைவி; பய-விஹ்வலா—பயத்தால் பெருந்தொல்லைக்கு உள்ளாகி; ப்ராஞ்ஜலி:—கூப்பிய கரங்களுடன்; ப்ரணதா—வணக்கங்களைச் சமர்ப்பித்த பின்; உபேந்ரம்—வாமன தேவருக்கு; பபாஷே—கூறினாள்; அவாக்-முகீ—கீழ்நோக்கிய முகத்துடன்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே.
ஆனால் தனது கணவன் கைது செய்யப்பட்டதைக் கண்டு பயமும், வருத்தமும் அடைந்த பலி மகாராஜனின் தூய மனைவி, உடனடியாக பகவான் வாமனதேவருக்கு (உபேந்திரருக்கு) வந்தனம் செய்தாள். அவள் தன் கரங்களைக் கூப்பியவாறு பின்வருமாறு பேசலானாள்.
பதம் 8.22.20
ஸ்ரீ-விந்யாவளிர் உவாச
க்ரீடார்தம் ஆத்மன இதம் த்ரி-ஜகத் க்ருதம் தே
ஸ்வாம்யம் து தத்ர குதியோ ‘பர ஈச குர்யு:
கர்து: ப்ரபோஸ் தவ கிம் அஸ்யத ஆவஹந்தி
த்யக்த-ஹ்ரியஸ் த்வத்-அவரோபித-கர்த்ரு-வாதா:
ஸ்ரீ-விந்தியாவளி: உவாச—பலி மகாராஜனின் மனைவியான விந்தியாவளி கூறினாள்; க்ரீடா-அர்தம்—திருவிளையாடல்களுக்காகவே; ஆத்மன:—தங்களின்; இதம்—இந்த; த்ரி-ஜகத்—மூவுலகங்களும் (இப்பிரபஞ்சம்); க்ருதம்—படைக்கப்பட்டது; தே—தங்களால்; ஸ்வாம்யம்—முதலாளித்துவம்; து—ஆனால்; தத்ர—அதன் காரணமாக; குதிய:—மூடர்களான அயோக்கியர்கள்; அபரே—மற்றவர்கள்; ஈச—எம்பெருமானே; குர்யு:—ஸ்தாபித்திருக்கிறீர்கள்; கர்து:—பரம சிருஷ்டிக்கர்தாவுக்கு; ப்ரபோ:—பரம பாதுகாவலருக்கு; தவ—மேன்மை தாங்கிய தங்களுக்கு; கிம்—என்ன; அஸ்யத:—பரம நாசம் செய்பவருக்கு; ஆவஹந்தி—அவர்களால் அளிக்க முடியும்; த்யக்த-ஹ்ரிய:—வெட்கமற்ற, புத்தியற்ற; த்வத்—உங்களால்; அவரோ பித—அறிவு பற்றாக் குறையினால் பொய்யான உரிமை பாராட்டும்; கர்த்ரு-வாதா:—இத்தகைய மூடர்களின் முதலாளித்துவம்.
ஸ்ரீமதி விந்யாவளி கூறினாள்: எம்பெருமானே, தங்களது சொந்த திருவிளையாடல்களை அனுபவிப்பதற்காகவே முழு பிரபஞ்சத்தையும் தாங்கள் படைத்திருக்கிறீர்கள். ஆனால் மூடர்களான, புத்தியற்ற மனிதர்கள், பெளதிக இன்பம் தங்களுக்கே என்று உரிமை கொண்டாடுகின்றனர். அவர்கள் வெட்கமற்ற நாஸ்திகர்கள் என்பதில் சந்தேகமில்லை. பொய்யாக உரிமை கொண்டாடும் அவர்கள் தானம் கொடுக்கவும், அனுபவிக்கவும் முடியும் என்று நினைக்கின்றனர். இந்நிலையில், இப்பிரபஞ்சத்தைச் சுதந்திரமாக படைத்து, காத்து, அழிப்பவரான தங்களுக்கு அவர்களால் என்ன நன்மையைச் செய்ய முடியும்?
பதம் 8.22.21
ஸ்ரீ-ப்ரஹ்மோவாச
பூத-பாவன பூதேச தேவ-தேவ ஜகன்மய
முஞ்சைனம் ஹ்ருத-ஸர்வஸ்வம் நாயம் அர்ஹதி நிக்ரஹம்
ஸ்ரீ-ப்ரஹ்மா உவாச—பிரம்ம தேவர் கூறினார்; பூத-பாவன—அனைவருக்கும் நண்பரும், ஒருவரை செழிப்படையச் செய்யக் கூடியவருமான பரமபுருஷரே; பூத-ஈச—அனைவருக்கும் எஜமானரே; தேவ-தேவ—தேவர்களின் வழிபாட்டுக்குரியவரே; ஜகத்-மய—சர்வ வியாபகம் உடையவரே; முஞ்ச—தயவுசெய்து விடுவித்து விடுங்கள்; ஏனம்—இரங்கத்தக்க நிலையிலுள்ள இந்த பலி மகாராஜனை; ஹ்ருத-ஸர்வஸ்வம்—இப்போது அனைத்தையும் இழந்துவிட்ட; ந—இல்லை; அயம்—இத்தகைய நிராதரவான ஒருவர்; அர்ஹதி—தகுதியுள்ளவர்; நிக்ரஹம்—தண்டனைக்கு.
பிரம்மதேவர் கூறினார்: அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பரே, எஜமானரே, தேவர்களின் வழிபாட்டுக்குரியவரே, சர்வ வியாபகமுள்ள முழுமுதற் கடவுளே, இப்பொழுது இம்மனிதர் போதுமான அளவிற்கு தண்டிக்கப்பட்டுவிட்டதால் தாங்கள் அவரை விடுவித்துவிடலாம். இன்னும் அதிகமான தண்டனைக்கு இவர் தகுதியுடையவர் அல்ல.
பதம் 8.22.22
க்ருத்ஸ்னா தே ‘னேன தத்தா பூர் லோகா: கர்மார்ஜிதாஸ் ச யே
நிவேதிதும் ச ஸர்வஸ்வம் ஆத்மாவிக்லவயா தியா
க்ருத்ஸ்னா:—எல்லாம்; தே—தங்களுக்கு; அனேன—பலி மகாராஜனால்; தத்தா:—கொடுக்கப்பட்டது அல்லது திருப்பித்தரப்பட்டது; பூ: லோகா:—எல்லா நிலமும், எல்லா கிரகங்களும்; கர்ம-அர்ஜிதா: ச—அவரது புண்ணியச் செயல்களால் அவர் அடைந்ததெல்லாம்; யே—அதையெல்லாம்; நிவேதிதம் ச—தங்களிடம் அளிக்கப்பட்டுள்ளது; ஸர்வஸ்வம்—அவரது உடைமைகள் அனைத்தும்; ஆத்மா—அவரது உடலும் கூட; அவிக்லவயா—தயக்கமின்றி; தியா—அத்தகைய புத்தியால்
பலி மகாராஜன் ஏற்கனவே பெருமானாகிய தங்களிடம் அனைத்தையும் அர்ப்பணித்துவிட்டார். தயக்கமின்றி அவர் தமது சொந்த உடல் உட்பட, அவரது நிலம், கிரகங்கள் மற்றும் அவரது புண்ணியச் செயல்களால் அவர் சம்பாதித்த அனைத்தையும் அளித்துவிட்டார்.
பதம் 8.22.23
யத் பாதயோர் அசட-தீ: ஸலிலம் ப்ரதாய
தூர்வாங்குரைர் அபி விதாய ஸதீம் ஸபர்யாம்
அபி உத்தமாம் கதிம் அஸௌ பஜதே த்ரி-லோகீம்
தாஸ்வான் அவிக்லவ-மனா: கதம் ஆர்திம் ருச்சேத்
யத்-பாதயோ:—பெருமானே தங்களது தாமரைப் பாதங்களில்; அசட-தீ:—இரு மனமற்ற உயர்ந்த மனமுடைய ஒருவர்; ஸலிலம்—நீர்; ப்ரதாய—அர்ப்பணம்; தூர்வா—முழு வளர்ச்சியடைந்த புல்லுடன்; அங்குரை:—மற்றும் பூக்களின் மொட்டுக்களுடன்; அபி—இருந்தாலும்; விதாய—அர்ப்பணித்து; ஸதீம்—மேன்மைமிக்க; ஸபர்யாம்—வழிபாட்டுடன்; அபி—என்ற போதிலும்; உத்தமாம்—மிகவும் முன்னேற்றமடைந்த; கதிம்—நிலையை; அஸௌ—அத்தகைய ஒரு உபாசகர்; பஜதே—தகுதி பெறுகிறார்; த்ரி-லோகீம்—மூவுலகங்களையும்; தாஸ்வான்—தங்களிடம் அளிக்கும்; அவிக்லவ-மனா:—மனதில் இரு எண்ணம் இல்லாமல்; கதம்—எப்படி; ஆர்திம்—கைது செய்யப்படும் துன்ப நிலைக்கு; ருச்சேத்—அவர் தகுதியுடையவராவார்.
மனதில் இரண்டெண்ணம் கொள்ளாமல், நீரையோ, புதிதாக வளர்ந்த புல்லையோ, அல்லது மலர் மொட்டுகளையோ தங்களது தாமரைப் பாதங்களில் அர்ப்பணம் செய்வதால் கூட, ஆன்மீக உலகில் மிகவுயர்ந்த நிலையை அடைய முடியும். இந்த பலி மகாராஜனோ, இரு மனமின்றி, மூவுலகிலுள்ள அனைத்தையும் இப்பொழுது அர்ப்பணித்துள்ளார். அப்படியிருக்கும்போது, கைது செய்வதால் வரும் துன்பத்திற்கு அவர் எப்படி தகுதியுள்ளவராவார்?
பதம் 8.22.24
ஸ்ரீ-பகவான் உவாச
ப்ரஹ்மன் யம் அனுக்ருஹ்ணாமி தத்-விசோ விதுனோமி அஹம்
யன்-மத: புருஷ: ஸ்தப்தோ லோகம் மாம் சாவமன்யதே
ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; ப்ரஹ்மன்—பிரம்ம தேவரே; யம்—அத்தகையவர் யாராக இருந்தாலும்; அனுக்ருஹ்ணாமி—என் கருணையை நான் காட்டுகிறேன்; தத்—அவனுடைய; விச:—பெளதிக செல்வங்களை; விதுனோமி—பறித்து விடுகிறேன்; அஹம்—நான்; யத்-மத:—இச்செல்வத்தினால் பொய்யான கௌரவம் கொண்டுள்ள; புருஷ:—அத்தகைய ஒருவன்; ஸ்தப்த:—மந்த புத்தி கொண்டவனாக இருப்பதால்; லோகம்—மூவுலகங்கள்; மாம் ச—என்னையும் கூட; அவமன்யதே—ஏளனம் செய்கிறான்.
பரமபுருஷ பகவான் கூறினார்: எனதன்புள்ள பிரம்மா, பெளதிக செல்வத்தினால் ஒரு முட்டாள் மந்த புத்தியுள்ளவனாகவும், வெறி பிடித்தவனாகவும் மாறுகிறான். இவ்வாறாக, மூவுலகங்களிலுள்ள ஒருவரையும் அவன் மதிப்பதில்லை. என்னுடைய அதிகாரத்தைக் கூட அவன் எதிர்க்கிறான். அத்தகைய ஒருவனின் உடைமைகளை எல்லாம் முதலில் பறித்துக் கொள்வதன் மூலமாக என்னுடைய விசேஷ கருணையை அவனுக்கு நான் காட்டுகிறேன்.
பதம் 8.22.25
யதா கதாசித் ஜீவாத்மா ஸம்ஸரன் நிஜ-கர்மபி:
நானா-யோனிஷு அனீசோ ‘யம் பெளருஷீம் கதிம் ஆவ்ரஜேத்
யதா—அப்போது; கதாசித்—சிலசமயங்களில்; ஜீவ-ஆத்மா—ஜீவராசி; ஸம்ஸரன்—பிறப்பு, இறப்பெனும் சக்கரத்தில் சுழலும்; நிஜ-கர்மபி:—அவனது சொந்த பலன்நோக்குக் கருமங்களால்; நானா-யோனிஷு—வெவ்வேறு உயிரினங்களில்; அனீச:—சுதந்திரமற்ற (பௌதிக இயற்கையின் முழு கட்டுப்பாட்டின் கீழ்); அயம்—ஜீவராசி; பௌருஷீம் கதிம்—மனிதனின் நிலையை; அவ்ரஜேத்—அடைய விரும்புகிறான்.
தனது சொந்த பலன்நோக்குக் கருமங்களால், வெவ்வேறு உயிரினங்களில், திரும்பத் திரும்ப பிறப்பு, இறப்பெனும் சக்கரத்தில் சுழலும், சுதந்திரமற்ற ஜீவராசிக்கு நல்லதிர்ஷ்டத்தினால், ஒரு மனிதப் பிறவி கிடைக்கக்கூடும். இம்மனிதப் பிறவி அடைவதற்கு மிகவும் அரிதானதாகும்.
பதம் 8.22.26
ஜன்ம-கர்ம-வயோ-ரூப-வித்யைஸ்வர்ய-தனாதிபி:
யதி அஸ்ய ந பவேத் ஸ்தம்பஸ் தத்ராயம் மத்-அனுக்ரஹ:
ஜன்ம—ஒரு கௌரவமான குடும்பத்தில் பிறப்பதால்; கர்ம—அற்புதமான, புண்ணியச் செயல்களால்; வய:—குறிப்பாக பலவற்றைச் செய்யும் திறமை மிகுந்த இளம் வயதால்; ரூப—அனைவரையும் கவரக்கூடிய உடல் அழகினால்; வித்யா—கல்வியால்; ஐஸ்வர்ய—ஐசுவரியத்தால்; தன—தனத்தால்; ஆதிபி:—மற்ற செல்வங்களால்; யதி—என்றால்; அஸ்ய—உரிமையாளரின்; ந—இல்லை; பவேத்—இருக்கிறது; ஸ்தம்ப:—தற்பெருமை; தத்ர—அத்தகைய ஒரு சூழ்நிலையில்; அயம்—ஒருவன்; மத்-அனுக்ரஹ:—எனது விசேஷ கருணையைப் பெற்றவன் என்று கருதப்பட வேண்டும்.
ஒரு மனிதன் கௌரவமான குடும்பத்தில் அல்லது வாழ்வின் உயர்ந்த அந்தஸ்தில் பிறந்திருந்தால், அற்புதச் செயல்களை அவன் செய்தால். அவன் இளமையாக இருந்தால், அவனுக்கு உடல் அழகு, நல்ல கல்வி மற்றும் தனம் ஆகியவை இருந்தால், மேலும் இவ்வளவும் இருந்தும் தனது செல்வத்தில் அவன் கர்வம் இல்லாதவனாக இருந்தால், அத்தகைய ஒருவன் பரமபுருஷ பகவானின் பிரத்தியேக அனுக்கிரகத்தைப் பெற்றிருக்கிறான் என்று அறியப்பட வேண்டும்.
பதம் 8.22.27
மான-ஸ்தம்ப-நிமித்தானாம் ஜன்மாதீனாம் ஸமந்தத:
ஸர்வ-ஸ்ரேய:-ப்ரதீபானாம் ஹந்த முஹ்யேன் ந மத்-பர:
மான—பொய் அகங்காரத்தின்; ஸ்தம்ப—இந்த அகம்பாவத்தினால்; நிமித்தானாம்—காரணங்களான; ஜன்ம-ஆதீனாம்—உயர் குடும்பத்தில் பிறப்பதைப் போன்ற; ஸமந்தத:—ஒன்றாக சேர்ந்து; ஸர்வ-ஸ்ரேய:—வாழ்வின் உயர்ந்த நன்மைக்காக; ப்ரதீபானாம்—தடைகளாக இருக்கும்; ஹந்த—கூட; முஹ்யேத்—குழப்பமடைகிறான்; ந—இல்லை; மத்-பர:—எனது தூய பக்தன்.
செல்வச் செழிப்புள்ள பிறப்பும், இதைப் போன்ற மற்ற செல்வங்களும் கௌரவத்திற்கும் அகங்காரத்திற்கும் ஆகியவற்றிற்குமான காரணங்கள் என்பதால் அவை பக்தித்தொண்டில் முன்னேறுவதற்குத் தடையாக உள்ளன. ஆயினும் இச்செல்வங்கள் பரமபுருஷ பகவானின் தூய பக்தர்களை ஒருபோதும் தொல்லைப்படுத்துவதில்லை.
பதம் 8.22.28
ஏஷ தானவ-தைத்யானாம் அக்ரனீ: கீர்த்தி-வர்தன:
அஜைஷீத் அஜயாம் மாயாம் ஸீதன் அபி ந முஹ்யதி
ஏஷ:—இந்த பலி மகாராஜன்; தானவ-தைத்யானாம்—அசுரர்களுக்கும், நாஸ்திகர்களுக்கும் இடையில்; அக்ரனீ:—மிகச் சிறந்த பக்தராவார்; கீர்த்தி-வர்தன:—மிகவும் புகழ்பெற்றவர்; அஜைஷீத்—கடந்து விட்டவர்; அஜயாம்—கடக்க முடியாத; மாயாம்—ஜட சக்தியை; ஸீதன்—(எல்லா பெளதிகச் செல்வங்களையும்) இழந்த; அபி—போதிலும்; ந—இல்லை; முஹ்யதி—தடுமாற்றம் அடைந்தார்.
பலி மகாராஜன் எல்லா பௌதிக செல்வங்களையும் இழந்துவிட்ட போதிலும், அவரது பக்தித் தொண்டில் அவர் நிலையாக இருந்தார். இதனால் அவர் அசுரர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் இடையில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறார்.
பதங்கள் 8.22.29 – 8.22.30
க்ஷீண-ரிக்தஸ் ச்யுத: ஸ்தானாத் க்ஷிப்தோ பத்தஸ் ச சத்ருபி:
ஞாதிபிஸ் ச பரித்யக்தோ யாதனாம் அனுயாபித:
குருணா பர்த்ஸித: சப்தோ ஜஹெள ஸத்யம் ந ஸுவ்ரத:
சலைர் உக்தோ மயா தர்மோ நாயம் த்யஜதி ஸத்ய-வாக்
க்ஷீண-ரிக்த:—எல்லாச் செல்வங்களையும் இழந்துவிட்ட போதிலும்; ச்யுத:—வீழ்ந்து; ஸ்தானாத்—அவரது உயர்ந்த நிலையிலிருந்து; க்ஷிப்த:—பலவந்தமாக வெளியேற்றப்பட்டார்; பத்த: ச—மேலும் பலவந்தமாக கட்டப்பட்டு; சத்ருபி:—அவரது எதிரிகளால்; ஞாதிபி: ச—மேலும் அவரது குடும்ப அங்கத்தினர்களால் அல்லது உறவினர்களால்; பரித்யக்த:—கைவிடப்பட்டார்; யாதனாம்—எல்லா வகையான துன்பங்களையும்; அனுயாபித:—வழக்கத்திற்கு மாறாக கடுமையாக துன்புற்றார்; குருணா—அவரது குருவினால்; பர்த்ஷித:—கடிந்து கொள்ளப்பட்டு; சப்த:—சபிக்கப்பட்டார்; ஜஹௌ—கைவிட்டார்; ஸத்யம்—சத்தியத்தை; ந—இல்லை; ஸு-வ்ரத:—அவரது விரதத்தில் நிலையாக இருந்ததால்; சலை:—போலித்தனமாக; உக்த:—பேசப்பட்டது; மயா—என்னால்; தர்ம:—மதக் கொள்கைகள்; ந—இல்லை; அயம்—இந்த பலி—மகாராஜன்; த்யஜதி—கைவிட்டார்; ஸத்ய-வாக்—சத்திய வாக்கை.
பலி மகாராஜன் செல்வங்களை இழந்ததால், சுயநிலையிலிருந்து இழிவடைந்த போதிலும், அவர் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட போதிலும், அவரது உறவினர்களாலும், நண்பர்களாலும் கடிந்து கொள்ளப்பட்டு, கைவிடப்பட்ட போதிலும், கட்டப்பட்டதால் விளைந்த துன்பத்தை அனுபவித்த போதிலும், அவரது ஆன்மீக குருவினால் திட்டப்பட்டு, சபிக்கப்பட்ட போதிலும், அவர் தனது விரதத்தில் உறுதியாக இருந்ததால், சத்தியத்தை அவர் கைவிடவில்லை. நான் நிச்சயமாக போலியான முறையில்தான் மதக் கொள்கைகளைப் பற்றி பேசினேன். ஆனால் இவரோ, உண்மையே பேசுபவர் என்பதால், மதக் கொள்கைகளை ஒருபோதும் கைவிடவில்லை.
பதம் 8.22.31
ஏஷ மே ப்ராபித: ஸ்தானம் துஷ்ப்ராபம் அமரைர் அபி
ஸாவர்ணேர் அந்தரஸ்யாயம் பவிதேந்ரோ மத்-ஆஸ்ரய:
ஏஷ:—பலி மகாராஜன்; மே—என்னால்; ப்ராபித:—அடைந்துள்ளார்; ஸ்தானம்—ஓரிடத்தை; துஷ்ப்ராபம்—அடைவதற்கு மிகவும் கஷ்டமான; அமரை: அபி—தேவர்களால் கூட; ஸாவர்ணே: அந்தரஸ்ய—ஸாவர்ணி எனப்படும் மனுவின் ஆட்சிக் காலத்தில்; அயம்—இந்த பலி மகாராஜன்; பவிதா—ஆவார்; இந்ர:—சுவர்க்க ராஜனான; மத்-ஆஸ்ரய:—முற்றிலும் எனது பாதுகாப்பின் கீழ்.
பகவான் தொடர்ந்து கூறினார்: இவருடைய அளவிட முடியாத பொறுமையால், தேவர்களாலும் அடைய முடியாத ஓரிடத்தை இவருக்கு நான் அளித்துள்ளேன். இவர் ஸாவர்ணி எனப்படும் மனுவின் ஆட்சிக்காலத்தில் சுவர்க்க லோகங்களின் அரசனாக இருப்பார்.
பதம் 8.22.32
தாவத் ஸுதளம் அத்யாஸ்தாம் விஸ்வகர்ம-வினிர்மிதம்
யத் ஆதயோ வ்யாதயஸ் ச க்லமஸ் தந்ரா பராபவ:
நோபஸர்கா நிவஸதாம் ஸம்பவந்தி மமேக்ஷயா
தாவத்—தேவேந்திரனின் பதவியில் நீர் இல்லாத வரை; ஸுதளம்—சுதளம் எனப்படும் கிரகத்தில்; அத்யாஷ்டாம்—அங்கு சென்று அந்த இடத்தை ஆக்கிரமித்து, அங்கேயே வாழ்வீராக; விஸ்வகர்ம-வினிர்மிதம்—விஸ்வகர்மாவால் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட; யத்—எங்கு; ஆதய:—மனதைச் சார்ந்த துன்பங்கள்; வ்யாதய:—உடலைச் சார்ந்த துன்பங்கள்; ச—மேலும்; க்லம:—சோர்வு; தந்ரா—மயக்கம் அல்லது சோம்பல்; பராபவ:—வெற்றி கொள்ளப்பட்டும்; ந—இல்லை; உபஸர்கா:—மற்ற தொல்லைகளுக்கான அறிகுறிகள்; நிவஸதாம்—அங்கு வாழ்பவர்களின்; ஸம்பவந்தி—சாத்தியமாகும்; மம—எனது; ஈக்ஷயா—விசேஷ கண்காணிப்பால்.
பலி மகாராஜன் இந்திர பதவியை அடையும் வரை, என் கட்டளைப்படி விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட சுதள லோகத்தில் வாழ்ந்து வரட்டும். அது முக்கியமாக என்னுடைய பாதுகாப்பில் இருப்பதால், அது மனதையும், உடலையும் சார்ந்த துன்பங்கள், சோர்வு, சோம்பல் மற்றும் தோல்வி முதலான மற்றெல்லா தொல்லைகளிலிருந்தும் விடுபட்டிருக்கும். பலி மகாராஜனே, இப்பொழுது நீர் அங்கு சென்று அமைதியுடன் வாழ்வீராக.
பதம் 8.22.33
இந்ரஸேன மஹாராஜ யாஹி போ பத்ரம் அஸ்து தே
ஸுதளம் ஸ்வர்கிபி: ப்ரார்த்யம் ஞாதிபி: பரிவாரித:
இந்ரஸேன—பலி மகாராஜனே; மஹாராஜ—அரசே; யாஹி—செல்வீராக; போ:—ராஜனே; பத்ரம்—சர்வ மங்களம்; அஸ்து—உண்டாகட்டும்; தே—உமக்கு; ஸுதளம்—சுதள லோகத்தில்; ஸ்வர்கிபி:—தேவர்களால்; ப்ரார்த்யம்—விரும்பப்படும்; ஞாதிபி:—உமது குடும்ப அங்கத்தினர்களால்; பரிவாரித:—சூழப்பட்டு.
பலி மகாராஜனே (இந்ரஸேனர்), தேவர்களாலும் விரும்பப்படும் சுதள லோகத்திற்கு இப்பொழுது நீர் செல்லலாம். அங்கு உமது நண்பர்களாலும், உறவினர்களாலும் சூழப்பட்டு அமைதியாக வாழ்வீராக. உமக்கு சர்வ மங்களம் உண்டாகட்டும்.
பதம் 8.22.34
ந த்வாம் அபிபவிஷ்யந்தி லோகசா: கிம் உதாபரே
த்வச்-சாஸனாதிகான் தைத்யாம்ஸ் சக்ரம் மே ஸூதயிஷ்யதி
ந—இல்லை; த்வாம்—உமக்கு; அபிபவிஷ்யந்தி—வெல்ல முடியும்; லோக-ஈசா:—பல்வேறு கிரகங்களின் அதிபதிகளால்; கிம் உத அபரே—சாதாரண மக்களைப் பற்றி என்னவென்று சொல்வது; த்வத்-சாஸன-அதிகான்—உமது ஆட்சியை மீறும்; தைத்யான்—அத்தகைய அசுரர்களை; சக்ரம்—சக்கரம்; மே—எனது; ஸூதயிஷ்யதி—கொன்றுவிடும்.
சுதள லோகத்தில் வாழும்போது, மற்ற கிரகங்களைச் சேர்ந்த அதிபதிகளால் கூட உம்மை வெல்ல முடியாது, சாதாரண மக்களைப் பற்றி என்னவென்று சொல்வது. அசுரர்களைப் பொறுத்த வரை, உமது ஆட்சியை அவர்கள் மீறினால், என் சக்கரம் அவர்களைக் கொன்றுவிடும்.
பதம் 8.22.35
ரக்ஷிஷ்யே ஸர்வதோ ‘ஹம் த்வாம் ஸானுகம் ஸபரிச்சதம்
ஸதா ஸன்னிஹிதம் வீர தத்ர மாம் த்ரக்ஷ்யதே பவான்
ரக்ஷிஷ்யே—பாதுகாப்பேன்; ஸர்வத:—எல்லா விஷயத்திலும்; அஹம்—நான்; த்வாம்—உம்மை; ஸ-அனுகம்—உமது சகாக்களுடன்; ஸ-பரிச்சதம்—உமது உபகரணங்களுடன்; ஸதா—எப்பொழுதும்; ஸன்னிஹிதம்—அருகிலுள்ள; வீர—மாவீரனே; தத்ர—அங்கு, உமது இடத்தில்; மாம்—என்னை; த்ரக்ஷ்யதே—காண முடியும்; பவான்—நீர்.
மாவீரனே, எல்லா விஷயங்களிலும் உம்மையும், உமது சகாக்களையும், உபகரணங்களையும் காப்பாற்ற எப்பொழும் நான் உங்களுடனேயே இருப்பேன். மேலும் உம்மால் எப்பொழுதும் என்னை அங்கு காணமுடியும்.
பதம் 8.22.36
தத்ர தானவ-தைத்யானாம் ஸங்காத் தே பாவ ஆஸுர:
த்ருஷ்ட்வா மத்-அனுபாவம் வை ஸத்ய: குண்டோ வினங்க்ஷ்யதி
தத்ர—அந்த இடத்தில்; தானவ-தைத்யானாம்—அசுரர்கள் மற்றும் தானவர்களின்; ஸங்காத்—சகவாசத்தினால்; தே—உமது; பாவ:—மனோபாவம்; ஆஸுர:—அசுர; த்ருஷ்ட்வா—காண்பதன் மூலம்; மத்-அனுபாவம்—எனது தலைசிறந்த சக்தியை; வை—உண்மையில்; ஸத்ய:—உடனடியாக; குண்ட:—கவலை; வினங்க்ஷ்யதி—அழிக்கப்பட்டுவிடும்.
எனது தெய்வீக சக்தியை உம்மால் அங்கு காண முடியும் என்பதால், அசுரர்களுடனும், தானவர்களுடனும் நீர் கொண்ட சகவாசத்தினால் எழுந்துள்ள உமது பௌதிக எண்ணங்களும், கவலைகளும் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும்.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பலி மகாராஜன் தமது வாழ்வை அர்ப்பணித்தல்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.