அத்தியாயம் – 22
பலி மகாராஜன் தமது வாழ்வை
அர்ப்பணித்தல்
பதம் 8.22.1 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, பரமபுருஷ பகவான் பலி மகாராஜனின் விஷயத்தில் தீங்கிழைப்பது போல் வெளிப்படையாக நடந்து கொண்ட போதிலும், பலி மகாராஜன் தமது தீர்மானத்தில் உறுதியாக இருந்தார். தமது வாக்குறுதியை தாம் நிறைவேற்றத் தவறிவிட்டதாகக் கருதிய அவர், பின்வருமாறு பேசலானார்.
பதம் 8.22.2 : பலி மகாராஜன் கூறினார்: அனைத்து தேவர்களின் மிகச்சிறந்த வழிபாட்டுக்குரியவரான பரமபுருஷரே, என்னுடைய வாக்குறுதி பொய்யாகிவிட்டதென்று தாங்கள் கருதினால், விஷயங்களை சரிப்படுத்தி வாக்குறுதியை உண்மையானதாக மாற்றிவிட உறுதியாக நான் விரும்புகிறேன். எனது வாக்குறுதி பொய்யாவதை என்னால் அனுமதிக்க முடியாது. எனவே தங்களது மூன்றாவது அடியை தயவு செய்து என் தலைமீது வைத்து அருள் புரியுங்கள்.
பதம் 8.22.3 : என் உடைமைகள் அனைத்தையும் இழப்பதற்கோ, நரக வாழ்வில் வசிப்பதற்கோ, ஏழ்மையின் காரணத்தால் நாக-பாசத்தால் பந்திக்கப்படுவதற்கோ அல்லது தங்களால் தண்டிக்கப்படுவதற்கோ நான் அஞ்சவில்லை. ஆனால் பழிச்சொல்லுக்கு நான் மிகவும் அஞ்சுகிறேன்.
பதம் 8.22.4 : ஒரு தந்தையோ, தாயோ, சகோதரனோ அல்லது நண்பரோ, பிறர் நலத்தில் அக்கறை கொண்டவர் என்ற முறையில், சிலசமயங்களில் ஒருவரை தண்டிக்கக்கூடும் என்றாலும், அவர்களுக்குக் கீழ்ப்பட்டவர்களை அவர்கள் ஒருபோதும் இவ்வாறு தண்டிப்பது கிடையாது. ஆனால் தாங்கள் மிகச்சிறந்த வழிபாட்டுக்குரியவர் என்பதால், தாங்கள் எனக்களித்த தண்டனையை நான் மிகவும் உயர்வானதாகக் கருதுகிறேன்.
பதம் 8.22.5 : மறைமுகமாக, பெருமானாகிய தாங்கள்தான் அசுரர்களாகிய எங்களுடைய மிகச்சிறந்த நண்பராவீர், எங்களுடைய எதிரியைப் போல், நடித்து, எங்களது மிகச்சிறந்த நன்மைக்காக தாங்கள் செயற்படுகிறீர்கள். எங்களைப் போன்ற அசுரர்கள் எப்பொழுதும் பொய்யான கெளரவத்தை அடைய விரும்புவதால், எங்களைத் தண்டிப்பதன் வாயிலாக, சரியான பாதையைக் காண்பதற்குரிய கண்களை நீங்கள் எங்களுக்கு அளிக்கிறீர்கள்.
பதங்கள் 8.22.6 – 8.22.7 : தங்களிடம் தொடர்ந்து விரோதம் கொண்டிருந்த பல அசுரர்கள் இறுதியில் மிகச்சிறந்த அஷ்டாங்க யோகிகளுக்குரிய பூரணத்துவத்தைப் பெற்றனர். ஒரே காரியத்தால் பல நோக்கங்களை தங்களால் நிறைவேற்றிவிட முடியும். ஆகவே, தாங்கள் என்னைப் பல வழிகளில் தண்டித்த போதிலும், நாக பாசத்தால் கட்டப்பட்ட நான் வெட்கப்படவோ அல்லது துன்பப்படவோ இல்லை.
பதம் 8.22.8 : உங்களுடைய பக்தர்கள் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்டதால், எனது பாட்டனாராகிய பிரகலாத மகாராஜன் புகழ் பெற்றவரானார். தமது தந்தையான இரண்யகசிபுவால் அவர் பல வழிகளில் துன்புறுத்தப்பட்ட போதிலும், அவர் தங்களது தாமரைப் பாதங்களில் புகலிடம் கொண்டு, விசுவாசத்தை இழந்துவிடாமலேயே இருந்தார்.
பதம் 8.22.9 : வாழ்வின் முடிவில் தானாகவே உரிமையாளரை விட்டுப் பிரியும் பௌதிக உடலால் என்ன பயன்? உண்மையில் தெய்வீகமான ஐசுவரியத்துடன் பகவானுக்குத் தொண்டு புரிய பயன்படும் பணத்தைக் கொள்ளையடிப்பவர்களான குடும்ப அங்கத்தினர்களால் என்ன பயன்? ஒரு மனைவியால் என்ன பயன்? அவள் பெளதிக சூழ்நிலையின் பெருக்கத்திற்கு மட்டுமே காரணமாக இருக்கிறாள். மேலும் குடும்பம், வீடு, தேசம் மற்றும் பொது ஜனங்கள் ஆகியவற்றால் என்ன பயன்? அவற்றிடம் கொள்ளும் பற்று ஒருவரது ஆயுளின் மதிப்புமிக்க சக்தியை வீணாக்குவதற்குத்தான் பயன்படுகிறது.
பதம் 8.22.10 : அனைவரிலும் மிகச்சிறந்தவரும், எல்லையற்ற அறிவைப் பெற்றவரும், அனைவராலும் வழிபடத் தக்கவருமான என் பாட்டனார், இவ்வுலகிலுள்ள சாதாரண மக்களுக்கு அஞ்சினார். தங்களது தாமரைப் பாதங்களின் புகலிடத்தினால் அளிக்கப்படும் நன்மையில் முழு நம்பிக்கை கொண்ட அவர், தங்களால் கொல்லப்பட்ட அவரது தந்தை மற்றும் அசுர நண்பர்களின் விருப்பத்திற்கெதிராக, தங்களுடைய தாமரைப் பாதங்களில் சரணடைந்தார்.
பதம் 8.22.11 : கடவுளருளால்தான் என்னுடைய செல்வங்களை எல்லாம் இழந்து, தங்களது தாமரைப் பாதங்களின் கீழ் நான் பலாத்காரமாக கொண்டு வரப்பட்டுள்ளேன். ஒவ்வொரு வினாடியும் மரணத்தை எதிர்நோக்கியவாறு பௌதிக சூழ்நிலைகளின் கீழ் வாழும் பொது மக்கள், தற்காலிகமான செல்வத்தினால் ஏற்படுத்தப்பட்ட மாயையின் காரணத்தால், இவ்வாழ்வு தற்காலிகமானது என்பதைப் புரிந்து கொள்வதில்லை. இறையருளால்தான் அந்நிலையிலிருந்து நான் காப்பாற்றப்பட்டிருக்கிறேன்.
பதம் 8.22.12 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: குருக்களில் சிறந்தவரே, இவ்விதமாக தமது அதிர்ஷ்டவசமான நிலையை பலி மகாராஜன் விவரிக்கும் போது, பகவானின் மிகப் பிரியமுள்ள பக்தரான பிரகலாத மகாராஜன், இரவு நேரத்தில் உதிக்கும் சந்திரனைப் போல் அங்கு தோன்றினார்.
பதம் 8.22.13 : பிறகு பலி மகாராஜன், பெரும் பாக்கியசாலியும், கண் மையை ஒத்த கருநிற உடலைக் கொண்டவரும், தமது பாட்டனாருமாகிய பிரகலாத மகாராஜனைக் கண்டார். அவரது கம்பீரமான உயர்ந்த உருவம் மஞ்சள் நிற ஆடைகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவர் நீண்ட கரங்களைப் பெற்றிருந்தார். அவரது அழகிய கண்கள் தாமரையின் இதழ்களைப் போல் இருந்தன. அவர் அனைவருக்கும் பிரியமானவராகவும், இன்பமளிப்பவராகவும் இருந்தார்.
பதம் 8.22.14 : பலி மகாராஜன் நாக பாசத்தால் கட்டப்பட்டு இருந்ததால், பிரகலாத மகாராஜனுக்கு முன்பு அளித்ததைப் போன்ற பொருத்தமான மரியாதையை இப்போது அவரால் அளிக்க முடியவில்லை. மாறாக, கண்ணீர் ததும்பும் கண்களுடனும், வெட்கத்தால் தாழ்த்தப்பட்ட முகத்துடனும் இருந்த அவர் தமது தலையாலேயே பணிவான வணக்கங்களை அவருக்குச் செலுத்தினார்.
பதம் 8.22.15 : பரமபுருஷர், சுனந்தரைப் போன்ற அவரது நெருங்கிய சகாக்களால் வழிபடப்பட்டவாறும், சூழப்பட்டவாறும் அங்கு அமர்ந்திருப்பதை மகா புருஷராகிய பிரகலாத மகாராஜன் கண்டபோது, அவர் ஆனந்தக் கண்ணீரில் மூழ்கினார். பகவானை அணுகி, தரையில் விழுந்து, தலையால் தமது வணக்கங்களை பகவானுக்குச் சமர்ப்பித்தார்.
பதம் 8.22.16 : பிரகலாத மகாராஜன் கூறினார்: எம்பெருமானே, சுவர்க்க ராஜப் பதவியெனும் மிகப் பெரிய ஐசுவரியத்தை இந்த பலிக்கு வழங்கியவர் தாங்கள்தான். மேலும் இன்று, இப்போது, அவையனைத்தையும் பறித்துக் கொண்டவரும் தாங்கள்தான். இருவழிகளிலும் தாங்கள் சமமான அழகுடன் செயலாற்றியிருக்கிறீர்கள் என்று நான் நினைக்கிறேன். சுவர்க்க ராஜனெனும் மிகவுயர்ந்த பதவியானது பலியை அறியாமையெனும் இருளில் வைத்திருந்ததால், பலியின் செல்வங்களை எல்லாம் பறித்துக் கொள்வதன் மூலமாக, மிகவும் கருணைமிக்க அனுக்கிரகத்தை தாங்கள் பலிக்குச் செய்திருக்கிறீர்கள்.
பதம் 8.22.17 : பௌதிக செல்வம் ஒருவனை பெருங் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியதாகும். ஏனெனில், கற்றறிந்த, சுய கட்டுப்பாடுள்ள மனிதனையும் கூட அது தன்னையறியும் வழியைத் தேடுவதை மறந்துவிடச் செய்கிறது. ஆனால் முழுமுதற் கடவுளும், பிரபஞ்சத்தின் நாயகருமான நாராயணரால் அவரது விருப்பப்படி அனைத்தையும் காண முடியும். எனவே அவருக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.22.18 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, கூப்பிய கரங்களுடன் அருகில் நின்றிருந்த பிரகலாத மகாராஜனுக்குக் கேட்கும் வகையில், பிரம்மதேவர் பிறகு பரமபுருஷரிடம் பேசத் துவங்கினார்.
பதம் 8.22.19 : ஆனால் தனது கணவன் கைது செய்யப்பட்டதைக் கண்டு பயமும், வருத்தமும் அடைந்த பலி மகாராஜனின் தூய மனைவி, உடனடியாக பகவான் வாமனதேவருக்கு (உபேந்திரருக்கு) வந்தனம் செய்தாள். அவள் தன் கரங்களைக் கூப்பியவாறு பின்வருமாறு பேசலானாள்.
பதம் 8.22.20 : ஸ்ரீமதி விந்யாவளி கூறினாள்: எம்பெருமானே, தங்களது சொந்த திருவிளையாடல்களை அனுபவிப்பதற்காகவே முழு பிரபஞ்சத்தையும் தாங்கள் படைத்திருக்கிறீர்கள். ஆனால் மூடர்களான, புத்தியற்ற மனிதர்கள், பெளதிக இன்பம் தங்களுக்கே என்று உரிமை கொண்டாடுகின்றனர். அவர்கள் வெட்கமற்ற நாஸ்திகர்கள் என்பதில் சந்தேகமில்லை. பொய்யாக உரிமை கொண்டாடும் அவர்கள் தானம் கொடுக்கவும், அனுபவிக்கவும் முடியும் என்று நினைக்கின்றனர். இந்நிலையில், இப்பிரபஞ்சத்தைச் சுதந்திரமாக படைத்து, காத்து, அழிப்பவரான தங்களுக்கு அவர்களால் என்ன நன்மையைச் செய்ய முடியும்?
பதம் 8.22.21 : பிரம்மதேவர் கூறினார்: அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பரே, எஜமானரே, தேவர்களின் வழிபாட்டுக்குரியவரே, சர்வ வியாபகமுள்ள முழுமுதற் கடவுளே, இப்பொழுது இம்மனிதர் போதுமான அளவிற்கு தண்டிக்கப்பட்டுவிட்டதால் தாங்கள் அவரை விடுவித்துவிடலாம். இன்னும் அதிகமான தண்டனைக்கு இவர் தகுதியுடையவர் அல்ல.
பதம் 8.22.22 : பலி மகாராஜன் ஏற்கனவே பெருமானாகிய தங்களிடம் அனைத்தையும் அர்ப்பணித்துவிட்டார். தயக்கமின்றி அவர் தமது சொந்த உடல் உட்பட, அவரது நிலம், கிரகங்கள் மற்றும் அவரது புண்ணியச் செயல்களால் அவர் சம்பாதித்த அனைத்தையும் அளித்துவிட்டார்.
பதம் 8.22.23 : மனதில் இரண்டெண்ணம் கொள்ளாமல், நீரையோ, புதிதாக வளர்ந்த புல்லையோ, அல்லது மலர் மொட்டுகளையோ தங்களது தாமரைப் பாதங்களில் அர்ப்பணம் செய்வதால் கூட, ஆன்மீக உலகில் மிகவுயர்ந்த நிலையை அடைய முடியும். இந்த பலி மகாராஜனோ, இரு மனமின்றி, மூவுலகிலுள்ள அனைத்தையும் இப்பொழுது அர்ப்பணித்துள்ளார். அப்படியிருக்கும்போது, கைது செய்வதால் வரும் துன்பத்திற்கு அவர் எப்படி தகுதியுள்ளவராவார்?
பதம் 8.22.24 : பரமபுருஷ பகவான் கூறினார்: எனதன்புள்ள பிரம்மா, பெளதிக செல்வத்தினால் ஒரு முட்டாள் மந்த புத்தியுள்ளவனாகவும், வெறி பிடித்தவனாகவும் மாறுகிறான். இவ்வாறாக, மூவுலகங்களிலுள்ள ஒருவரையும் அவன் மதிப்பதில்லை. என்னுடைய அதிகாரத்தைக் கூட அவன் எதிர்க்கிறான். அத்தகைய ஒருவனின் உடைமைகளை எல்லாம் முதலில் பறித்துக் கொள்வதன் மூலமாக என்னுடைய விசேஷ கருணையை அவனுக்கு நான் காட்டுகிறேன்.
பதம் 8.22.25 : தனது சொந்த பலன்நோக்குக் கருமங்களால், வெவ்வேறு உயிரினங்களில், திரும்பத் திரும்ப பிறப்பு, இறப்பெனும் சக்கரத்தில் சுழலும், சுதந்திரமற்ற ஜீவராசிக்கு நல்லதிர்ஷ்டத்தினால், ஒரு மனிதப் பிறவி கிடைக்கக்கூடும். இம்மனிதப் பிறவி அடைவதற்கு மிகவும் அரிதானதாகும்.
பதம் 8.22.26 : ஒரு மனிதன் கௌரவமான குடும்பத்தில் அல்லது வாழ்வின் உயர்ந்த அந்தஸ்தில் பிறந்திருந்தால், அற்புதச் செயல்களை அவன் செய்தால். அவன் இளமையாக இருந்தால், அவனுக்கு உடல் அழகு, நல்ல கல்வி மற்றும் தனம் ஆகியவை இருந்தால், மேலும் இவ்வளவும் இருந்தும் தனது செல்வத்தில் அவன் கர்வம் இல்லாதவனாக இருந்தால், அத்தகைய ஒருவன் பரமபுருஷ பகவானின் பிரத்தியேக அனுக்கிரகத்தைப் பெற்றிருக்கிறான் என்று அறியப்பட வேண்டும்.
பதம் 8.22.27 : செல்வச் செழிப்புள்ள பிறப்பும், இதைப் போன்ற மற்ற செல்வங்களும் கௌரவத்திற்கும் அகங்காரத்திற்கும் ஆகியவற்றிற்குமான காரணங்கள் என்பதால் அவை பக்தித்தொண்டில் முன்னேறுவதற்குத் தடையாக உள்ளன. ஆயினும் இச்செல்வங்கள் பரமபுருஷ பகவானின் தூய பக்தர்களை ஒருபோதும் தொல்லைப்படுத்துவதில்லை.
பதம் 8.22.28 : பலி மகாராஜன் எல்லா பௌதிக செல்வங்களையும் இழந்துவிட்ட போதிலும், அவரது பக்தித் தொண்டில் அவர் நிலையாக இருந்தார். இதனால் அவர் அசுரர்களுக்கும் நாஸ்திகர்களுக்கும் இடையில் மிகவும் புகழ்பெற்று விளங்குகிறார்.
பதங்கள் 8.22.29 – 8.22.30 : பலி மகாராஜன் செல்வங்களை இழந்ததால், சுயநிலையிலிருந்து இழிவடைந்த போதிலும், அவர் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்ட போதிலும், அவரது உறவினர்களாலும், நண்பர்களாலும் கடிந்து கொள்ளப்பட்டு, கைவிடப்பட்ட போதிலும், கட்டப்பட்டதால் விளைந்த துன்பத்தை அனுபவித்த போதிலும், அவரது ஆன்மீக குருவினால் திட்டப்பட்டு, சபிக்கப்பட்ட போதிலும், அவர் தனது விரதத்தில் உறுதியாக இருந்ததால், சத்தியத்தை அவர் கைவிடவில்லை. நான் நிச்சயமாக போலியான முறையில்தான் மதக் கொள்கைகளைப் பற்றி பேசினேன். ஆனால் இவரோ, உண்மையே பேசுபவர் என்பதால், மதக் கொள்கைகளை ஒருபோதும் கைவிடவில்லை.
பதம் 8.22.31 : பகவான் தொடர்ந்து கூறினார்: இவருடைய அளவிட முடியாத பொறுமையால், தேவர்களாலும் அடைய முடியாத ஓரிடத்தை இவருக்கு நான் அளித்துள்ளேன். இவர் ஸாவர்ணி எனப்படும் மனுவின் ஆட்சிக்காலத்தில் சுவர்க்க லோகங்களின் அரசனாக இருப்பார்.
பதம் 8.22.32 : பலி மகாராஜன் இந்திர பதவியை அடையும் வரை, என் கட்டளைப்படி விஸ்வகர்மாவால் உருவாக்கப்பட்ட சுதள லோகத்தில் வாழ்ந்து வரட்டும். அது முக்கியமாக என்னுடைய பாதுகாப்பில் இருப்பதால், அது மனதையும், உடலையும் சார்ந்த துன்பங்கள், சோர்வு, சோம்பல் மற்றும் தோல்வி முதலான மற்றெல்லா தொல்லைகளிலிருந்தும் விடுபட்டிருக்கும். பலி மகாராஜனே, இப்பொழுது நீர் அங்கு சென்று அமைதியுடன் வாழ்வீராக.
பதம் 8.22.33 : பலி மகாராஜனே (இந்ரஸேனர்), தேவர்களாலும் விரும்பப்படும் சுதள லோகத்திற்கு இப்பொழுது நீர் செல்லலாம். அங்கு உமது நண்பர்களாலும், உறவினர்களாலும் சூழப்பட்டு அமைதியாக வாழ்வீராக. உமக்கு சர்வ மங்களம் உண்டாகட்டும்.
பதம் 8.22.34 : சுதள லோகத்தில் வாழும்போது, மற்ற கிரகங்களைச் சேர்ந்த அதிபதிகளால் கூட உம்மை வெல்ல முடியாது, சாதாரண மக்களைப் பற்றி என்னவென்று சொல்வது. அசுரர்களைப் பொறுத்த வரை, உமது ஆட்சியை அவர்கள் மீறினால், என் சக்கரம் அவர்களைக் கொன்றுவிடும்.
பதம் 8.22.35 : மாவீரனே, எல்லா விஷயங்களிலும் உம்மையும், உமது சகாக்களையும், உபகரணங்களையும் காப்பாற்ற எப்பொழும் நான் உங்களுடனேயே இருப்பேன். மேலும் உம்மால் எப்பொழுதும் என்னை அங்கு காணமுடியும்.
பதம் 8.22.36 : எனது தெய்வீக சக்தியை உம்மால் அங்கு காண முடியும் என்பதால், அசுரர்களுடனும், தானவர்களுடனும் நீர் கொண்ட சகவாசத்தினால் எழுந்துள்ள உமது பௌதிக எண்ணங்களும், கவலைகளும் உடனடியாக அழிக்கப்பட்டுவிடும்.