அத்தியாயம் – 20
பலி மகாராஜன் பிரபஞ்சத்தை
ஒப்படைத்தல்
பதம் 8.20.1
ஸ்ரீ-சுக உவாச
பலிர் ஏவம் க்ருஹ-பதி: குலாசர்யேண பாஷித:
தூஷ்ணீம் பூத்வா க்ஷணம் ராஜன் உவாசாவஹிதோ குரும்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பலி:—பலி மகாராஜன்; ஏவம்—இவ்வாறாக; க்ருஹ-பதி:—புரோகிதர்களால் வழிகாட்டப்பட்ட போதிலும், இல்லற விவகாரங்களுக்குத் தலைவராக உள்ள; குல-ஆசார்யேண—குடும்ப ஆசார்யரால் அல்லது வழிகாட்டியால்; பாஷித:—இவ்வாறு கூறப்பட்டு; தூஷ்ணீம்—மௌனமாக; பூத்வா—ஆகி; க்ஷணம்—நொடிப்பொழுது; ராஜன்—ராஜனே (பரீட்சித்து மகாராஜன்); உவாச—கூறினார்; அவஹித:—நிதானமான ஆழ்ந்த யோசனைக்குப் பிறகு; குரும்—அவரது ஆன்மீக குருவிடம்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, தமது ஆன்மீக குருவும், குடும்பப் புரோகிதருமான சுக்ராசார்யரால் இவ்வாறு அறிவுறுத்தப்பட்ட போது, பலி மகாராஜன் சிறிது நேரம் மௌனமாக இருந்தார். அதன்பிறகு, நிதானமான ஆழ்ந்த யோசனைக்குப் பின், தமது ஆன்மீக குருவிடம் அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
பதம் 8.20.2
ஸ்ரீ-பலிர் உவாச
ஸத்யம் பகவதா ப்ரோக்தம் தர்மோ ‘யம் க்ருஹமேதினாம்
அர்த்தம் காமம் யசோ வ்ருத்திம் யோ ந பாதேத கர்ஹிசித்
ஸ்ரீ-பலி: உவாச—பலி மகாராஜன் கூறினார்; ஸத்யம்—அது உண்மையான; பகவதா—மேன்மை தாங்கிய உம்மால்; ப்ரோக்தம்—ஏற்கனவே கூறப்பட்டது; தர்ம:—ஒரு மதக் கொள்கையான; அயம்—அது இருக்கிறது; க்ருஹ-மேதினாம்—குறிப்பாக குடும்பஸ்தர்களுக்கு; அர்தம்—பொருளாதார முன்னேற்றம்; காமம்—புலன் நுகர்வு; யச: வ்ருத்திம்—கீர்த்தியும், வாழ்க்கைத் தேவையும்; ய:—அந்த சமயக் கொள்கை; ந—இல்லை; பாதேத—தடுப்பது; கர்ஹிசித்—எச்சமயத்திலும்.
பலி மகாராஜன் கூறினார்: தாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டது போல், ஒருவரது பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு, புகழ் மற்றும் வாழ்க்கைத் தேவை ஆகியவற்றிற்கு இடையூறு செய்யாத மதக் கொள்கையே குடும்பஸ்தனின் உண்மையான உத்தியோகக் கடமையாகும். நானும் இந்த மதக் கொள்கைகள் சரியானவைதான் என்று நினைக்கிறேன்.
பதம் 8.20.3
ஸ சாஹம் வித்த-லோபேன ப்ரத்யாசக்ஷே கதம் த்விஜம்
ப்ரதிஸ்ருத்ய ததாமீதி ப்ராஹ்ராதி: கிதவோ யதா
ஸ:—என்னைப் போன்ற ஒருவன்; ச—மேலும்; அஹம்—நான்; வித்த-லோபேன—பணத்தின் மீதுள்ள பேராசையினால் மயக்கப்படுவதற்கு; ப்ரத்யாசக்ஷே—நான் கொடுப்பதாகக் கூறிய பின் மறுத்துவிடுவது அல்லது ஏமாற்றிவிடுவது; கதம்—எப்படி; த்விஜம்—குறிப்பாக ஒரு பிராமணரிடம்; ப்ரதிஸ்ருத்ய—ஏற்கனவே வாக்களித்துவிட்ட பின்; ததாமி—நான் கொடுப்பேன் என்று; இதி—இவ்வாறு; ப்ராஹ்ராதி:—பிரகலாத மகாராஜனின் பேரன் எனும் புகழ்பெற்ற நான்; கிதவ:—ஒரு சாதாரண வஞ்சகன்; யதா—போல்.
பிரகலாத மகாராஜனின் பேரன் நான். நிலத்தைக் கொடுப்பதாக ஏற்கனவே நான் வாக்களித்து விட்டேன். பணத்தின் மீதுள்ள பேராசையால், அளித்த வாக்குறுதியிலிருந்து நான் எப்படி பின் வாங்க முடியும்? குறிப்பாக ஒரு பிராமணரிடம், ஒரு சாதாரண வஞ்சகனைப் போல் என்னால் எப்படி நடந்துகொள்ள முடியும்?
பதம் 8.20.4
ந ஹி அஸத்யாத் பரோ ‘தர்ம இதி ஹோவாச பூர் இயம்
ஸர்வம் ஸோடும் அலம் மன்யே ருதே ‘லிக-பரம் நரம்
ந—இல்லை; ஹி—உண்மையில்; அஸத்யாத்—உண்மைக்கு விரோதமாக நடப்பதை விட; பர:—அதிக; அதர்ம:—அதர்மம்; இதி—இவ்வாறாக; ஹ உவாச—உண்மையில் பேசினாள்; பூ:—பூமித்தாய்; இயம்—இந்த; ஸர்வம்—அனைத்தையும்; ஸோடும்—தாங்கிக் கொள்ள; அலம்—என்னால் முடியும்; மன்யே—நான் நினைத்த போதிலும்; ருதே—தவிர; அலீக-பரம்—மிகவும் வெறுக்கத்தக்க பொய்யான; நரம்—ஒரு மனிதனை.
பொய்யை விட அதிக பாவமுள்ளது வேறொன்றுமில்லை. இதனால் பூமித்தாய் ஒருமுறை கூறினாள், “பொய் பேசும் ஒருவனைத் தவிர வேறெந்த சுமையையும் என்னால் தாங்கிக் கொள்ள முடியும்.”
பதம் 8.20.5
நாஹம் பிபேமி நிரயான் நாதன்யாத் அஸுகார்னவாத்
ந ஸ்தான-ச்யவனான் ம்ருத்யோர் யதா விப்ர-ப்ரலம்பனாத்
ந—இல்லை; அஹம்—நான்; பிபேமி—அஞ்சுகிறேன்; நிரயாத்—நரகம் போன்ற ஒரு வாழ்விற்கு; ந—அல்லது; அதன்யாத்—மிகவும் ஏழ்மையான ஒரு சூழ்நிலைக்கு; அஸுக-அர்ண வாத்—அல்லது கடலளவு துன்பத்திற்கு; ந—அல்லது; ஸ்தான-ச்யவனாத்—ஒரு பதவியிலிருந்து விழுவதிற்கு; ம்ருத்யோ:—அல்லது மரணத்திற்கு; யதா—போல்; விப்ர-ப்ரலம்பனாத்—ஒரு பிராமணரை ஏமாற்றுவதற்கு.
நான் நரகத்திற்கோ, ஏழ்மைக்கோ, கடலளவு துன்பத்திற்கோ, என் நிலையிலிருந்து சரிவதற்கோ அல்லது மரணத்திற்கோ கூட அஞ்சவில்லை. ஆனால் ஒரு பிராமணரை ஏமாற்றுவதற்கு நான் மிகவும் அஞ்சுகிறேன்.
பதம் 8.20.6
யத் யத் தாஸ்யதி லோகே ‘ஸ்மின் ஸம்பரேதம் தனாதிகம்
தஸ்ய த்யாகே நிமித்தம் கிம் விப்ரஸ் துஷ்யேன் நதேன சேத்
யத் யத்—எதையெல்லாம்; ஹாஸ்யதி—பிரிந்துவிடும்; லோகே—உலகில்; அஸ்மின்—இந்த; ஸம்பரேதம்—இறந்து விட்டவன்; தன-ஆதிகம்—அவனது தனமும், ஆஸ்தியும்; தஸ்ய—அத்தகைய செல்வத்தை; த்யாகே—துறந்து விடுவதில்; நிமித்தம்—நோக்கம்; கிம்—என்ன இருக்கிறது; விப்ர:—பிராமணர் வடிவிலுள்ள பகவான் விஷ்ணு; துஷ்யேத்—திருப்திப்படுத்த வேண்டும்; ந—இல்லை; தேன—அதனால் (செல்வத்தினால்); சேத்—சாத்தியம் இருக்குமானால்.
என் தலைவரே, மரணத்தின்போது, இவ்வுலகிலுள்ள எல்லா பெளதிகச் செல்வங்களும், அவற்றை வைத்திருப்பவரிடமிருந்து நிச்சயமாக பிரிக்கப்பட்டு விடுகின்றன என்பதைத் தங்களாலும் காண முடியும். ஆகவே, ஒருவர் அளித்துள்ள வெகுமானங்களால் பிராமணரான வாமன தேவர் திருப்தியடையவில்லை என்றால், எப்படியும் மரணத்தின் போது ஒருவன் இழந்துவிடப் போகும் செல்வங்களால் அவரை ஏன் திருப்திப்படுத்தக்கூடாது?
பதம் 8.20.7
ஸ்ரேய: குர்வந்தி பூதானாம் ஸாதவோ துஸ்த்யஜாஸுபி:
தத்யன்-சிபி-ப்ரப்ருதய: கோ விகல்போ தராதிஷு
ஸ்ரேய:—மிகவும் முக்கியமான செயல்கள்; குர்வந்தி—நிறைவேற்று; பூதானாம்—பொதுமக்களின்; ஸாதவ:—புனிதர்கள்; துஸ்த்யஜ—கைவிடுவதற்கு மிகவும் கடினமானவையான; அஸுபி:—அவர்களது வாழ்வினால்; தத்யன்—ததீசி மகாராஜன்; சிபி—சிபி மகாராஜன்; ப்ரப்ருதய:—மற்றும் அவர்களுக்கு நிகரான சிறப்புடையவர்கள்; க:—என்ன; விகல்ப:—சிந்தனை; தரா-ஆதிஷு—பிராமணரிடம் நிலத்தைக் கொடுப்பதில்.
ததீசி, சிபி மற்றும் பல்வேறு பெருமைக்குரிய நபர்கள் பொது மக்களின் நலனுக்காக தங்களது வாழ்வையும் தியாகம் செய்யத் தயாராக இருந்தனர். இது சரித்திர ஆதாரமாகும். எனவே அற்பமான இந்த நிலத்தை ஏன் கைவிடக் கூடாது? இதைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்கு என்ன இருக்கிறது?
பதம் 8.20.8
யைர் இயம் புபுஜே ப்ரஹ்மன் தைத்யேந்ரைர் அனிவர்திபி:
தேஷாம் காலோ ‘க்ரஸீல் லோகான் ந யசோ ‘திகதம் புவி
யை:—எவரால்; இயம்—இவ்வுலகம்; புபுஜே—அனுபவிக்கப்பட்டது; ப்ரஹ்மன்—பிராமணர்களில் சிறந்தவரே; தைத்ய-இந்ரை:—அசுர குடும்பங்களில் பிறந்த பெரும் வீரர்களாலும், அரசர்களாலும்; அனிவர்திபி:—உயிரை விடவோ அல்லது வெற்றி பெறவோ சண்டை செய்ய உறுதிபூண்டவர்களால்; தேஷாம்—அத்தகைய நபர்களின்; கால:—காலம்; அக்ரஸீத்—பறித்துக் கொண்டது; லோகான்—எல்லா உடைமைகளையும், புலன் நுகர்வுப் பொருட்களையும்; ந—இல்லை; யச:—புகழ்; அதிகதம்—அடைந்தனர்; புவி—இவ்வுலகில்.
பிராமணர்களில் சிறந்தவரே, போரிடத் தயங்காதவர்களான பெரும் அசுர மன்னர்கள் இவ்வுலகை நிச்சயமாக அனுபவிக்கத்தான் செய்தனர். ஆனால் காலப்போக்கில் அவர்களுடைய புகழைத் தவிர மற்ற அனைத்தும் பறிக்கப்பட்டன. இப்புகழால் அவர்கள் தொடர்ந்து வாழ்கின்றனர். அதாவது, மற்ற விஷயங்களுக்குப் பதிலாக நற்புகழை ஒருவன் அடைய முயலவேண்டும்.
பதம் 8.20.9
ஸுலபா யுதி விப்ரர்ஷே ஹி அனிவ்ருத்தாஸ் தனு-த்யஜ:
ந ததா தீர்த்த ஆயாதே ஸ்ரத்தயா யே தன-த்யஜ:
ஸூ-லபா:—மிகவும் சுலபமாக அடையப்பட்டது; யுதி—போர்க்களத்தில்; விப்ர-ரிஷே—பிராமணர்களில் சிறந்தவரே; ஹி—உண்மையில்; அனிவ்ருத்தா:—போரிட அஞ்சாமல்; தனு-த்யஜ:—இவ்வாறு உயிரை விட்டனர்; ந—இல்லை; ததா—போல்; தீர்தே ஆயாதே—புனித தீர்த்தங்களை உண்டாக்குபவரான ஒரு புண்ணிய புருஷரின் வருகையின் போது; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடனும் பக்தியுடனும்; யோ—அவர்கள்; தன-த்யஜ:—திரட்டப்பட்ட அவர்களது செல்வத்தைக் கைவிட முடியும்.
பிராமணர்களில் சிறந்தவரே, போரில் அச்சம் கொள்ளாமல், பல பேர் போர்க்களத்தில் தங்களது உயிரைத் துறந்துள்ளனர். ஆனால் புனித தீர்த்தங்களை உண்டாக்குபவரான புண்ணிய புருஷர் ஒருவருக்கு, தனது திரட்டப்பட்ட செல்வத்தை விசுவாசத்துடன் கொடுக்கும் வாய்ப்பு அவர்களில் ஒருவருக்குக் கூட கிடைக்கவில்லை.
பதம் 8.20.10
மனஸ்வின: காருணிகஸ்ய சோபனம்
யத் அர்த்தி காமோபநயேன துர்கதி:
குத: புனர் ப்ரஹ்ம-விதாம் பவாத்ருசாம்
ததோ வடோர் அஸ்ய ததாமி வாஞ்சிதம்
மனஸ்வின:—சிறந்த உதாரகுணம் உள்ளவர்களின்; காருணிகஸ்ய—கருணை மிக்கவர்கள் என்று போற்றப்படுபவர்களின்; சோபனம்—மிகவும் மங்களகரமான; யத்—அந்த; அர்தி—பணம் தேவைப்படுபவர்களின்; காம-உபனயேன—திருப்திபடுத்துவதன் மூலமாக; துர்கதி:—ஏழ்மை அடைந்து; குத:—எதை; புன:—மீண்டும் (சொல்வது); ப்ரஹ்ம-விதாம்—ஆன்மீக விஞ்ஞானத்தில் (ப்ரஹ்ம-வித்யா) கை தேர்ந்தவர்களின்; பவாத்ருசாம்—தங்களைப் போன்ற நல்லவர்; தத:—ஆகவே; வடோ:—பிரம்மச்சாரிக்கு; அஸ்ய—இந்த வாமன தேவருக்கு; ததாமி—நான் அளிப்பேன்; வாஞ்சிதம்—அவருக்கு வேண்டியதை எல்லாம்.
உதார குணமும், கருணையும் கொண்ட ஒருவர், தானம் அளிப்பதன் வாயிலாக, குறிப்பாக தங்களைப் போன்ற நல்லவர் ஒருவருக்குத் தானம் கொடுப்பதன் வாயிலாக, சந்தேகமின்றி இன்னும் அதிக மங்களம் வாய்ந்தவராக ஆகிறார். இத்தகைய சூழ்நிலைகளின் கீழ், இச்சிறிய பிரம்மச்சாரி எதை விரும்பினாலும் அதை நான் கொடுக்கத் தான் வேண்டும்.
பதம் 8.20.11
யஜந்தி யக்ஞாம் க்ரதுபிர் யம் ஆத்ருதா
பவந்த ஆம்னாய-விதான-கோவிதா:
ஸ ஏவ விஷ்ணுர் வரதோ ‘ஸ்து வா பரோ
தாஸ்யாமி அமுஷ்மை க்ஷிதிம் ஈப்ஸிதாம் முனே
யஜந்தி—வழிபாடு; யக்ஞாம்—யாகத்தை அனுபவிப்பவர்: க்ரதுபி:—யாகத்திற்குரிய வெவ்வேறு பொருட்களால்; யம்—பரமபுருஷரை; ஆத்ருதா:—மிகவும் மரியாதையுடன்; பவந்த:—நீங்கள் அனைவரும்; ஆம்னாய-விதான-கோவிதா:—யாகமியற்றும் வேதக் கொள்கைகளைப் பற்றி நன்கு அறிந்துள்ள சிறந்த புண்ணிய புருஷர்கள்; ஸ:—அந்த; ஏவ—உண்மையில்; விஷ்ணு:—முழுமுதற் கடவுளாகிய பகவான் விஷ்ணுவேயாவார்; வரத:—அவர் வரமளிக்கத் தயாராக இருந்தாலோ; அஸ்து—அவர் ஆகிறார்; வா—அல்லது; பர:—எதிரியாக வந்தாலோ; தாஸ்யாமி—நான் அளிப்பேன்; அமுஷ்மை—அவருக்கு (பகவான் விஷ்ணுவாகிய வாமனதேவருக்கு); க்ஷிதிம்—நிலப்பரப்பை; ஈப்ஷிதாம்—அவர் விரும்பிய எதையும்; முனே—மாமுனிவரே.
மாமுனிவரே, தங்களைப் போன்ற சிறந்த புண்ணிய புருஷர்கள், சமயச் சடங்குகளையும், யக்ஞங்களையும் இயற்றுவதற்குரிய வேதக் கொள்கைகளை நன்கு அறிந்திருப்பதால், எல்லாச் சூழ்நிலைகளிலும் பகவான் விஷ்ணுவை வழிபடுகின்றனர். ஆகவே, அதே பகவான் விஷ்ணு வரமளிப்பதற்காகவோ, அல்லது எதிரியாகக் கருதி என்னைத் தண்டிப்பதற்காகவோ இங்கு வந்திருந்தாலும், அவர் கேட்ட நிலப்பரப்பை தயக்கமின்றி அளித்து, அவரது கட்டளையை நான் நிறைவேற்ற வேண்டும்.
பதம் 8.20.12
யத்யபி அஸாவ் அதர்மேண மாம் பத்னீயாத் அனாகஸம்
ததாபி ஏனம் ந ஹிம்ஸிஷ்யே பீதம் ப்ரஹ்ம-தனும் ரிபும்
யத்யபி—என்றாலும்; அஸௌ—பகவான் விஷ்ணு; அதர்மேண—நேரான வழியைத் துறந்து குறுக்கு வழியில்; மாம்—என்னை; பத்னீயாத்—கொன்றாலும்; அனாகஸம்—நான் பாவியல்ல என்ற போதிலும்; ததாபி—இருந்தாலும்; ஏனம்—அவருக்கெதிராக; ந—இல்லை (மாட்டேன்); ஹிம்ஸிஷ்யே—பழிவாங்க; பீதம்—அவர் அஞ்சுவதால்; ப்ரஹ்ம-தனும்—ஒரு பிராமண பிரம்மச்சாரியின் உருவை ஏற்றதால்; ரிபும்—அவர் எனது எதிரியாக இருந்தாலும்.
அவர் விஷ்ணுதான் என்றாலும், என்னிடம் வந்து யாசிப்பதற்கு பயந்து, ஒரு பிராமணரின் உருவில் தம்மை அவர் மறைத்துக் கொண்டுள்ளார். அவர் ஒரு பிராமணரின் உருவை ஏற்றிருப்பதால், தர்மத்திற்கு விரோதமாக அவர் என்னைக் கைது செய்தாலோ அல்லது கொலை செய்தாலோ கூட, அவர் எனது விரோதி என்ற போதிலும், அவரை நான் பழி வாங்கமாட்டேன்.
பதம் 8.20.13
ஏஷ வா உத்தமஸ்லோகோ ந ஜிஹாஸதி யத் யச:
ஹத்வா மைனாம் ஹரேத் யுத்தே சயீத நிஹதோ மயா
ஏஷ:—இந்த (பிரம்மச்சாரி); வா—அல்லது; உத்தம-ஸ்லோக:—வேத மந்திரங்களால் வணங்கப்படுபவரான பகவான் விஷ்ணு; ந—இல்லை; ஜிஹாஸதி—கைவிட விரும்புகிறார்; யத்—ஏனெனில்; யச:—நிரந்தரமான புகழ்; ஹத்வா—கொன்றபின்; மா—என்னை; ஏனாம்—இந்த நிலம் முழுவதையும்; ஹரேத்—பறித்துக் கொள்வார்; யுத்தே—யுத்தத்தில்; சயீத—விழுந்து கிடப்பார்; நிஹத:—கொல்லப்பட்டு; மயா—என்னால்.
இந்த பிராமணர், வேத மந்திரங்களால் வணங்கப்படுபவரான பகவான் விஷ்ணுதான் என்றால், அவர் என்னால் கொல்லப்பட்டுக் கீழே விழுந்து கிடந்தாலோ, அல்லது போரில் அவர் என்னைக் கொன்றாலோ, விஸ்தாரமாகப் பரவியுள்ள அவரது புகழை அவர் ஒருபோதும் இழக்கமாட்டார்.
பதம் 8.20.14
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் அஸ்ரத்திதம் சிஷ்யம் அனாதேசகரம் குரு:
சசாப தைவ-ப்ரஹித: ஸத்ய-ஸந்தம் மனஸ்வினம்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக; அஸ்ரத்திதம்—ஆன்மீக குருவின் கட்டளைக்கு அதிக மரியாதை கொடுக்காத; சிஷ்யம்—அத்தகைய ஒரு சீடனை; அனாதேச-கரம்—தமது ஆன்மீக குருவின் கட்டளையை நிறைவேற்றத் தயங்கிய; குரு:—ஆன்மீக குரு (சுக்ராசார்யர்); சசாப—சபித்தார்; தைவ-ப்ராஹித:—பரமபுருஷரால் தூண்டப்பட்டு; ஸத்ய-ஸந்தம்—தமது சத்தியத்தில் உறுதியாக இருந்த; மனஸ்வினம்—மிகவும் உயரிய குணத்தைக் கொண்டவர்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அதன்பிறகு, பரமபுருஷரால் தூண்டப்பட்ட சுக்ராசார்யர் அவரது மேன்மைமிக்க சீடரான பலி மகாராஜனை சபித்தார். மிகவும் பெருந்தன்மை கொண்டவரும், சத்தியத்தில் உறுதியாக இருந்தவருமான பலி மகாராஜன், அவருடைய ஆன்மீக குருவின் கட்டளைகளை மதிப்பதற்கு பதிலாக, அவற்றை மீற விரும்பினார்.
பதம் 8.20.15
த்ருடம் பண்டித-மானி அக்ஞ:
ஸ்தப்தோ ‘ஸி அஸ்மத்-உபேக்ஷயா
மச்-சாஸனாதிகோ யஸ்த்வம்
அசிராத் ப்ரஸ்யஸே ஸ்ரிய:
த்ருடம்—உனது முடிவில் நிலையான உறுதியுடன் இருக்கிறாய்; பண்டித-மானீ—உன்னை சிறந்த பண்டிதனாக எண்ணிக் கொண்டு; அக்ஞ:—அதே சமயத்தில் மூடனாகவும்; ஸ்தப்த:—திமிர் பிடித்தவனாகவும்; அஸி—நீ ஆகிவிட்டாய்; அஸ்மத்—எங்களை; உபேக்ஷயா—அவமதித்ததன் மூலம்; மத்-சாஸன-அதிக:—என்னுடைய அதிகாரத்தனி எல்லையைக் கடந்து; ய:—(உன்னைப் போன்ற) ஒருவன்; த்வம்—நீதான்; அசிராத்—மிகவிரைவில்; ப்ரஸ்யஸே—விழுந்து விடுவாய்; ஸ்ரிய:—எல்லா ஐசுவரியங்களிலிருந்தும்.
நீ அறிவற்றவனாக இருப்பினும், பெயரளவேயான ஒரு பண்டிதனைப் போல் ஆகிவிட்டாய். ஆகவே என்னுடைய கட்டளையை மீறும் அளவுக்குத் திமிராக வீரம் பேசுகிறாய். என்னுடைய உத்தரவை மீறியதால், மிக விரைவில் உன்னுடைய ஐசுவரியங்கள் அனைத்தையும் நீ இழந்துவிடுவாய்.
பதம் 8.20.16
ஏவம் சப்த: ஸ்வ-குருணா ஸத்யான் ந சலிதோ மஹான்
வாமனாய ததாவ் ஏனாம் அர்சித்வோதக-பூர்வகம்
ஏவம்—இவ்வாறாக; சப்த:—சபிக்கப்பட்டு; ஸ்வ-குருணா—அவரது சொந்த ஆன்மீக குருவால்; ஸத்யாத்—சத்தியத்திலிருந்து; ந—இல்லை; சலித:—அசைய; மஹான்—மகா புருஷர்; வாமனாய—பகவான் வாமனதேவருக்கு; ததெள—தானம் கொடுத்தார்; ஏனம்—எல்லா நிலத்தையும்; அர்சித்வா—வணங்கிய பின்; உதக-பூர்வகம்—முதலில் நீரை அளித்து.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தமது சொந்த ஆன்மீக குருவால் இவ்வாறு சபிக்கப்பட்ட பிறகும் கூட, பலி மகாராஜன் தமது தீர்மானத்திலிருந்து ஒருபோதும் விலகவில்லை. ஆகவே, வழக்கப்படி, வாமனதேவருக்கு நீர் வழங்கியபின் அவர் வாக்களித்திருந்த நிலத்தை அவருக்கு தானமாகக் கொடுத்தார்.
பதம் 8.20.17
விந்யாவளிஸ் ததாகத்ய பத்னீ ஜலக-மாலினீ
ஆனின்யே கலசம் ஹைமம் அவனேஜனி-அபாம் ப்ருதம்
விந்யாவளி:—விந்யாவளி; ததா—அப்போது; ஆகத்ய—அங்கு வந்து; பத்னீ—பலி மகாராஜனின் மனைவி; ஜாலக-மாலினீ—ஒரு முத்து மாலையால் அலங்கரிக்கப்பட்ட; ஆனின்யே—கொண்டு வரச் செய்தாள்; கலசம்—தண்ணீர் கலசத்தை; ஹைமம்—தங்கத்தாலான; அவனேஜனி-அபாம்—பகவானுடைய பாதங்களை கழுவுவதற்குரிய நீரால்; ப்ருதம்—நிரப்பப்பட்ட.
ஒரு முத்து மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த, விந்யாவளி எனப்படும் பலி மகாராஜனின் மனைவி உடனே அங்கு வந்து, தங்கத்தாலான ஒரு பெரிய நீர்க்கலசத்தை அங்கு கொண்டு வரச் செய்தாள். அது பகவானது பாதங்களைக் கழுவி அவரை வழிபடுவதற்குரிய நீரால் நிரப்பப்பட்டிருந்தது.
பதம் 8.20.18
யஜமான: ஸ்வயம் தஸ்ய ஸ்ரீமத் பாத-யுகம் முதா
அவனிஜ்யாவஹன் மூர்த்னி தத் அபோ விஸ்வ-பாவனி:
யஜமான:—வழிபடுபவர் (பலி மகாராஜன்); ஸ்வயம்—தாமாகவே; தஸ்ய—பகவான் வாமனதேவரின்; ஸ்ரீமத் பாத-யுகம்—மிகவும் மங்களகரமானவையும், அழகியவையுமான இரு தாமரைப் பாதங்களை; முதா—மிகவும் சந்தோஷத்துடன்; அவனிஜ்ய—முறையாகக் கழுவி; அவஹத்—தரித்தார்; மூர்த்னி—அவரது தலைமீது; தத்—அந்த; அப:—நீரை; விஸ்வ-பாவனீ:—முழு பிரபஞ்சத்திற்கும் முக்தி அளிக்கக் கூடியதானது.
பகவான் வாமனதேவரை வழிபடுபவரான பலி மகாராஜன், பகவானின் தாமரைப் பாதங்களை சந்தோஷத்துடன் கழுவினார். அந்நீர் முழு பிரபஞ்சத்திற்கும் முக்தியை அளிக்கக்கூடியது என்பதால், அதை அவர் தமது தலைமீது தரித்துக் கொண்டார்.
பதம் 8.20.19
ததாஸுரேந்ரம் திவி தேவதா-கணா
கந்தர்வ-வித்யாதர-ஸித்த-சாரணா:
தத் கர்ம ஸர்வே ‘பி க்ருணந்த ஆர்ஜவம்
ப்ரஸூன-வர்ஷைர் வவ்ருஷுர் முதான்விதா:
ததா—அப்போது; அஸுர-இந்ரம்—அசுர ராஜனான பலி மகாராஜன்; திவி—உயர்கிரக அமைப்பிலுள்ள; தேவதா-கணா:—தேவர்கள் எனப்படும் வாசிகள்; கந்தர்வ—கந்தர்வர்கள்; வித்யாதர—வித்யாதரர்கள்; ஸித்த—சித்த லோக வாசிகள்; சாரணா:—சாரண லோக வாசிகள்; தத்—அந்த; கர்ம—செயலை; ஸர்வே அபி—அவர்கள் அனைவரும்; க்ருணந்த:—அறிவித்து; ஆர்ஜவம்—எளிமையான; ப்ரஸூன-வர்ஷை—மலர் மழையால்; வவ்ருஷு—பொழிந்தனர்; முதா-அன்விதா:—அவரிடம் மிகவும் திருப்தியடைந்து.
அப்போது, உயர் கிரக அமைப்பின் வாசிகளான தேவர்கள், கந்தர்வர்கள், வித்யாதரர்கள், சித்தர்கள் மற்றும் சாரணர்கள் ஆகியோர் பலி மகாராஜனின் எளிமையான, வஞ்சனையற்ற செயலில் மிகவும் திருப்தியடைந்து, அவரது குணங்களைப் போற்றி, கோடிக்கணக்கான மலர்களை அவர் மீது பொழிந்தனர்.
பதம் 8.20.20
நேதுர் முஹுர் துந்துபய: ஸஹஸ்ரசோ
கந்தர்வ-கிம்பூருஷ-கின்னரா ஜகு:
மனஸ்வினானேன க்ருதம் ஸுதுஷ்கரம்
வித்வான் அதாத் யத் ரிபவே ஜகத்-த்ரயம்
நேது:—அடிக்கத் துவங்கினர்; முஹு:—மீண்டும் மீண்டும்; துந்துபய:—கொம்புகளையும், பேரிகைகளையும்; ஸஹஸ்ரச:—ஆயிரமாயிரம்; கந்தர்வ—கந்தர்வலோக வாசிகள்; கிம்புருஷ—கிம்புருஷ லோக வாசிகள்; கின்னரா:—கின்னரலோக வாசிகள்; ஜகு:—பாடிக் கொண்டு அறிவிக்கத் துவங்கினர்; மனஸ்வினா—மிகவுயர்ந்த புருஷரால்; அனேன—பலி மகாராஜனால்; க்ருதம்—செய்யப்பட்டது; ஸு-துஷ்கரம்—மிகக் கடினமான செயலை; வித்வான்—அவர் மிகவும் கற்றறிந்தவராக இருந்ததால்; அதாத்—அவருக்கு தானம் அளித்தார்; யத்—அந்த; ரிபவே—பலி மகாராஜனின் எதிரிகளான தேவர்களின் பக்கம் இருப்பவரும், எதிரியுமான பகவான் விஷ்ணுவிடம்; ஜகத்-த்ரயம்—மூவுலகங்களையும்.
கந்தர்வர்கள், கிம்புருஷர்கள் மற்றும் கின்னரர்கள் ஆகியோர் ஆயிரமாயிரம் கொம்புகளையும், பேரிகைகளையும் மீண்டும் மீண்டும் ஒலித்தனர். அவர்கள் மிகவும் சந்தோஷமாக பாடிக்கொண்டு, “பலி மகாராஜன் எவ்வளவு உயர்ந்த மனிதர், எவ்வளவு கடினமான காரியத்தை அவர் செய்திருக்கிறார்! பகவான் விஷ்ணு எதிரிகளின் பக்கம் இருக்கிறார் என்பதை அவர் அறிந்திருந்த போதிலும், மூவுலகங்களையும் முழுமையாக அவர் பகவானுக்கு தானமாகக் கொடுத்து விட்டார்” என்று அறிவித்தனர்.
பதம் 8.20.21
தத் வாமனம் ரூபம் அவர்ததாத்புதம்
ஹரேர் அனந்தஸ்ய குண-த்ரயாத்மகம்
பூ: கம் திசோ த்யெளர் விவரா: பயோதயஸ்
திர்யன்-ந்ரு-தேவா ரிஷயோ யத்-ஆஸத
தத்—அந்த; வாமனம்—வாமன அவதாரத்தின்; ரூபம்—உருவம்; அவர்தத—சிறிது சிறிதாக வளர ஆரம்பித்தது; அத்புதம்—உண்மையிலேயே மிகவும் அற்புதமாக; ஹரே:—முழுமுதற் கடவுளின்; அனந்தஸ்ய—எல்லையற்றவரின்; குண-த்ரய-ஆத்மகம்—(நற்குணம், தீவிரகுணம் மற்றும் அறியாமைக் குணம் ஆகிய) முக்குணங்களைக் கொண்ட பௌதிக சக்தியால் அவரது உருவம் விரிவடைந்தது; பூ:—நிலம்; கம்—ஆகாயம்; திச:—எல்லாத் திசைகள்; த்யௌ:—கிரக அமைப்புக்கள்; விவரா:—பிரபஞ்சத்தின் வெவ்வேறு துவாரங்கள்; பயோதய:—பெருங்கடல்களும், சமுத்திரங்களும்; திர்யக்—கீழான ஜீவன்கள், பறவைகள் மற்றும் மிருகங்கள்; ந்ரு—மனிதர்கள்; தேவா—தேவர்கள்; ரிஷய:—சிறந்த புண்ணிய புருஷர்கள்; யத்—எங்கு; ஆஸத—வாழ்ந்த.
வாமன ரூபத்தை ஏற்றுள்ள, வரம்பற்றவரான பரமபுருஷ பகவான், பிறகு பெளதிக சக்தியின் அடிப்படையில் செயற்பட்டு தமது உருவத்தை வளரச் செய்தார். பூமி, கிரக அமைப்புக்கள், ஆகாயம, திசைகள், அநேக பிரபஞ்சத் துவாரங்கள், கடல்கள், சமுத்திரங்கள், பறவைகள், மிருகங்கள், மனிதர்கள், தேவர்கள் மற்றும் சிறந்த புண்ணிய புருஷர்கள் ஆகியவை உட்பட, பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் அவரது உடலுக்குள் அடங்கும்வரை அவர் வளர்ந்து கொண்டே போனார்.
பதம் 8.20.22
காயே பலிஸ் தஸ்ய மஹா-விபூதே:
ஸஹர்த்விக்-ஆசார்ய-ஸதஸ்ய ஏதத்
ததர்ச விஸ்வம் த்ரி-குணம் குணாத்மகே
பூதேந்ரியார்தாசய-ஜீவ-யுக்தம்
காயே—உடலில்; பலி:—பலி மகாராஜன்; தஸ்ய—முழுமுதற் கடவுளின்; மஹா-விபூதே:—அற்புதமான எல்லா ஐசுவரியங்களையும் கொண்டிருப்பவரின்; ஸஹ-ரித்விக்-ஆசார்ய-ஸதஸ்ய:—புரோகிதர்கள், ஆசார்யர்கள் மற்றும் புனித சபையின் உறுப்பினர்களுடன்; ஏதத்—இந்த; ததர்ச—கண்டனர்; விஸ்வம்—முழு பிரபஞ்சத்தையும்; த்ரிகுணம்—ஜட இயற்கையின் முக்குணங்களாலான; குண-ஆத்மகே—அத்தகைய குணங்கள் அனைத்திற்கும் மூலமாகிய அதில்; பூத—ஸ்தூலமான பெளதிக மூலப் பொருட்கள் அனைத்துடன்; இந்ரிய—புலன்களுடன்; அர்த—புலன் பொருட்களுடன்; ஆசய—மனம், புத்தி மற்றும் பொய் அகங்காரத்துடன்; ஜீவ-யுக்தம்—எல்லா ஜீவராசிகளுடனும்.
ஆறு ஐசுவரியங்களால் நிரம்பப்பெற்றதான பரமபுருஷ பகவானின் விஸ்வரூபத்தை, புரோகிதர்கள், ஆசார்யர்கள் மற்றும் சபையினர் ஆகியோருடன் பலி மகாராஜனும் கண்டார். பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் அவ்வுடல் கொண்டிருந்தது, அவற்றுள் ஸ்தூலமான பௌதிக மூலப்பொருட்கள், புலன்கள், புலன் பொருட்கள், மனம், புத்தி மற்றும் பொய் அகங்காரம், பல்வேறு வகையான ஜீவராசிகள், மற்றும் மூன்று ஜட இயற்கைக் குணங்களில் செயல்கள் மற்றும் பிரதிபலன்கள் ஆகியவையும் அடங்கும்.
பதம் 8.20.23
ரஸாம் அசஷ்டாங்க்ரி-தலே ‘த பாதயோர்
மஹீம் மஹீத்ரான் புருஷஸ்ய ஜங்கயோ:
பதத்ரிணோ ஜானுனி விஸ்வ-மூர்த்தேர்
ஊர்வோர் கணம் மாருதம் இந்ரஸேன:
ரஸாம்—கீழ் கிரக அமைப்பை; அசஷ்ட—கண்டார்; அங்ரி-தலே—உள்ளங்கால்களில்; அத—அதன்பிறகு; பாதயோ:—பாதங்களில்; மஹிம்—நிலப்பரப்பை; மஹீத்ரான்—மலைகளை; புருஷஸ்ய—பகவானுடைய விஸ்வரூபத்தின்; ஜங்கயோ:—கெண்டைக்கால்களில்; பதத்ரிண:—பறக்கும் ஜீவராசிகளை; ஜானுனி—முழங்கால்களில்; விஸ்வ-மூர்தே:—பகவானுடைய விஸ்வரூபத்தின்; ஊர்வோ:—தொடைகளில்; கணம் மாருதம்—பலவகையான காற்றுகளை; இந்ர-ஸேன:—தேவேந்திரனின் வீரர்களைப் பெற்றிருப்பவரும், இந்திர பதவியில் இருப்பவருமான பலி மகாராஜன்.
அதன்பிறகு, தேவேந்திரனின் ஆசனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்த பலி மகாராஜனால், பகவானுடைய விஸ்வரூபத்தின் உள்ளங்கால்களில் இருக்கும் ரஸாதளம் போன்ற கீழ் கிரக அமைப்புக்களைக் காண முடிந்தது. பகவானுடைய பாதங்களில் பூமியின் மேற்பரப்பையும், அவரது கெண்டைக்கால்களின் வெளிப்பரப்பில் எல்லா மலைகளையும், அவரது முழங்கால்களில் பல்வேறு பறவைகளையும், அவரது தொடைகளில் பலவகைப்பட்ட காற்றுகளையும் அவர் கண்டார்.
பதம் 8.20.24
ஸந்யாம் விபோர் வாஸஸி குஹ்ய ஐக்ஷத்
ப்ரஜாபதீன் ஜகனே ஆத்ம-முக்யான்
நாப்யாம் நப: குக்ஷிஷு ஸப்த-ஸிந்தூன்
உருக்ரமஸ்யோரஸி சர்க்ஷ-மாலாம்
ஸந்யாம்—மாலை சந்திவேளையை; விபோ:—பகவானின்; வாஸஸி—ஆடையில்; குஹ்யே—அந்தரங்க உறுப்புகளில்; ஐக்ஷத்—அவர் கண்டார்; ப்ரஜாபதீன்—எல்லா ஜீவராசிகளுக்கும் பிறவியளித்துள்ள பற்பல பிரஜாபதிகளை; ஜகனே—இடுப்புகளில்; ஆத்ம-முக்யான்—பலி மகாராஜனின் நம்பகமான மந்திரிகளை; நாப்யாம்—நாபியில்; நப:—முழு ஆகாயத்தை; குக்ஷிஷு—இடையில்; ஸப்த—ஏழு; ஸிந்தூன்—சமுத்திரங்களை; உருக்ரமஸ்ய—அற்புதமாக இயங்கிக் கொண்டிருக்கும் முழுமுதற் கடவுளின்; உரஸி—மார்பில்; ச—மேலும்; ரிக்ஷ-மாலாம்—நட்சத்திரக் கூட்டங்களை.
அற்புதமாக செயற்படும் பகவானுடைய ஆடைகளுக்கடியில், பலி மகாராஜன் மாலை சந்தி வேளையைக் கண்டார். பகவானுடைய அந்தரங்க உறுப்புகளில் பிரஜாபதிகளையும், இடையின் வட்டப் பகுதியில் தாம் தமது அந்தரங்க சகாக்களுடன் இருப்பதையும் அவர் கண்டார். பகவானுடைய நாபியில் ஆகாயமும், அவரது இடையில் ஏழு சமுத்திரங்களும், அவரது மார்பில் அனைத்து நட்சத்திரக் கூட்டங்களும் இருப்பதை அவர் கண்டார்.
பதங்கள் 8.20.25 – 8.20.29
ஹ்ருதி அங்க தர்மம் ஸ்தனயோர் முராரேர்
ரிதம் ச ஸத்யம் ச மனஸி அதேந்தும்
ஸ்ரியம் ச வக்ஷஸி அரவிந்த-ஹஸ்தாம்
கண்டே ச ஸாமானி ஸமஸ்த-ரேபான்
இந்ர-ப்ரதானான் அமரான் புஜேஷு
தத்-கர்ணயோ: ககுபோ த்யெளஸ் ச மூர்த்னி
கேசேஷு மேகான் ச்வஸனம் நாஸிகாயாம்
அக்ஷ்ணோஸ் ச ஸூர்யம் வதனே ச வஹ்னிம்
வாண்யாம் ச சந்தாம்ஸி ரஜே ஜலேசம்
ப்ருவோர் நிஷேதம் ச விதிம் ச பக்ஷ்மஸு
அஹஸ் ச ராத்ரிம் ச பரஸ்ய பும்ஸோ
மன்யும் லலாடே ‘தர ஏவ லோபம்
ஸ்பர்சே ச காமம் ந்ருப ரேதஸாம்ப:
ப்ருஷ்டே து அதர்மம் கர்மணேஷு யக்ஞம்
சாயேஸு ம்ருத்யும் ஹஸிதே ச மாயாம்
தனூ-ருஹேஷு ஓஷதி-ஜாதயஸ் ச
நதீஸ் ச நாடீஷு சிலா நகேஷு
புத்தாவ் அஜம் தேவ-கணான் ரிஷும்ஸ் ச
ப்ராணேஷு காத்ரே ஸ்திர-ஜங்கமானி
ஸர்வாணி பூதானி ததர்ச வீர:
ஹ்ருதி—இதயத்தினுள்; அங்க—எனதன்புள்ள பரீட்சித்து மகாராஜனே; தர்மம்—மதத்தை; ஸ்தனயோ:—மார்பில்; முராரே:—முழுமுதற் கடவுளாகிய முராரியின்; ரிதம்—மிகவும் இனிமையான வார்த்தைகளை; ச—மேலும்; ஸத்யம்—சத்தியத்தை; ச—மேலும்; மனஸி—மனதில்; அத—அதன்பிறகு; இந்தும்—சந்திரனை; ஸ்ரீயம்—ஸ்ரீதேவியை; ச—மேலும்; வக்ஷஸி—நெஞ்சில்; அரவிந்த-ஹஸ்தாம்—எப்பொழுதும் ஒரு தாமரைப் பூவை கையில் வைத்திருப்பவளான; கண்டே—கழுத்தில்; ச—மேலும்; ஸாமானி—எல்லா வேதங்களையும் (ஸாம, யஜுர், ரிக் மற்றும் அதர்வ); ஸமஸ்த-ரேபான்—எல்லா ஒலி அலைகளையும்; இந்ர-ப்ரதானான்—தேவேந்திரனை தலைமையாகக் கொண்ட; அமரான்—எல்லா தேவர்களையும்; புஜேஷு—கரங்களில்; மகாதத்-கர்ணயோ:—செவிகளில்; ககுப:—எல்லாத் திசைகளையும்; த்யௌ: ச—ஒளியுடைய கிரகங்கள்; மூர்த்னி—தலையின் மேலே; கேசேஷு—கேசத்தினுள்; மேகான்—மேகங்களையும்; ஸ்வஸனம்—சுவாசக் காற்றை; நாஸிகாயாம்—நாசித் துவாரங்களில்; அக்ஷ்ணோ: ச—கண்களில்; ஸூர்யம்—சூரியனையும்; வதனே—வாயில்; ச—மேலும்; வஹ்னிம்—நெருப்பை; வாண்யம்—அவரது பேச்சில்; ச—மேலும்; சந்தாம்ஸி—வேத மந்திரங்களை; ரஸே—நாவில்; ஜல-ஈசம்—வருண தேவனை; ப்ருவோ:—புருவங்களில்; நிஷேதம்—எச்சரிக்கைகள்; ச—மேலும்; விதிம்—கட்டுப்பாட்டு விதிகளை; ச—மேலும்; பக்ஷ்மஸு—கண் இமைகளில்; அஹ: ச—பகல் நேரத்தை; ராத்ரிம்—இரவை; ச—மேலும்; பரஸ்ய—பகவானின்; பும்ஸ:—நபரின்; மன்யும்—கோபம்; லலாதே—நெற்றியில்; அதரே—உதடுகளில்; ஏவ—உண்மையில்; லோபம்—பேராசை; ஸ்பர்சே—அவரது ஸ்பரிசத்தில்; ச—மேலும்; காமம்—காம இச்சைகள்; ந்ருப—ராஜனே; ரேதஸா—ஆண் விந்துவினால்; அம்ப:—நீர்; ப்ருஷ்டே—முதுகில்; து—ஆனால்; அதர்மம்—அதர்மம்; க்ரமணேஷு—அற்புதச் செயல்களில்; யக்ஞம்—யாகம்; சாயாஸு—நிழலில்; ம்ருத்யும்—மரணம்; ஹஸிதே—அவரது புன்னகையில்; ச—மேலும்; மாயாம்—மாயா சக்தி; தனூ-ருஹேஷு—உடலிலுள் உரோமங்களில்; ஓஷதி-ஜாதய:—எல்லா வகையான மூலிகைகளும், தாவரங்களும்; ச—மேலும்; நதீ:—நதிகள்; ச—மேலும்; நாடீஷு—நாடிகளில்; சிலா:—கற்கள்; நகேக்ஷு—நகங்களில்; புத்தெள—புத்தியில்; அஜம்—பிரம்ம தேவர்; தேவ-கணான்—தேவர்கள்; ரிஷீன் ச—மேலும் மகாரிஷிகளும்; ப்ராணேக்ஷு—புலன்களில்; காத்ரே—உடலில்; ஸ்திர-ஜங்கமானி—அசைவன, அசையாதன; ஸர்வாணி—ஆகிய அனைத்து; பூதானி—ஜீவராசிகள்; ததர்ச—கண்டார்; வீர:—பலி மகாராஜன்.
எனதருமை ராஜனே, பகவான் முராரியின் இதயத்தில் அவர் மதத்தைக் கண்டார்; நெஞ்சில் இனிய சொற்கள் மற்றும் சத்தியம் ஆகியவற்றையும்; மனதில் சந்திரனையும்; மார்பில் தாமரை மலரைக் கையில் பிடித்த வண்ணமுள்ள ஸ்ரீதேவியையும்; கழுத்தில் அனைத்து வேதங்களையும், ஒலி அலைகளையும்; கரங்களில் தேவேந்திரனை தலைமையாகக் கொண்ட எல்லா தேவர்களையும்; இரு செவிகளில் எல்லாத் திசைகளையும்; தலையில் உயர் கிரக அமைப்புக்களையும்; கூந்தலில் மேகங்களையும்; நாசித்துவாரங்களில் காற்றையும்; கண்களில் சூரியனையும்; வாயில் நெருப்பையும் அவர் கண்டார். அவரது வார்த்தைகளிலிருந்து எல்லா வேத மந்திரங்களும் வந்தன. அவரது நாவில் நீர்க் கடவுளான வருணதேவனையும், அவரது புருவங்களில் கட்டுப்பாட்டு விதிகளையும், அவரது கண் இமைகளில் பகலையும், இரவையும் அவர் கண்டார். (அவரது கண்கள் திறந்திருந்த வேளையில் பகல் நேரமாகவும், கண்கள் மூடியிருந்த வேளையில் இரவு நேரமாகவும் இருந்தன.) அவரது நெற்றியில் கோபமும், அவரது உதடுகளில் பேராசையும் இருந்தன. ராஜனே, அவரது ஸ்பரிசத்தில் காம இச்சைகளும், அவரது விந்துவில் எல்லா நீர்நிலைகளும், அவரது முதுகில் அதர்மமும், அவரது அற்புதச் செயல்களில் அல்லது அடிகளில் யாகத்தீயும் இருந்தன. அவரது நிழலில் மரணமும், அவரது புன்னகையில் மாயா சக்தியும், அவரது உடலின் மீதுள்ள உரோமங்களில் மருந்து சாமான்களும், மூலிகைகளும் இருந்தன. அவரது நாடிகளில் எல்லா நதிகளும், அவரது நகங்களில் எல்லாவித கற்களும், அவரது புத்தியில் பிரம்ம தேவர். தேவர்கள் மற்றும் சிறந்த புண்ணிய புருஷர்கள் ஆகியோரும், மேலும் அவரது புலன்கள் மற்றும் முழு உடல் ஆகியவற்றில் அசையும், அசையாத ஜீவராசிகளும் இருந்தன. இவ்வாறாக, பகவானின் பிரம்மாண்டமான உடலில் பலி மகாராஜன் அனைத்தையும் கண்டார்.
பதம் 8.20.30
ஸர்வாத்மனீதம் புவனம் நிரீக்ஷ்ய
ஸர்வே ‘ஸுரா: கஸ்மலம் ஆபுர் அங்க
ஸுதர்சனம் சக்ரம் அஸஹ்ய-தேஜோ
தனுஸ் ச சார்ங்கம் ஸ்தனயித்னு-கோஷம்
ஸர்வ-ஆத்மனி—பரம பூரணமாகிய முழுமுதற் கடவுளுக்குள்; இதம்—இப்பிரபஞ்சத்தையும்; புவனம்—மூவுலகங்களையும்; நிரீக்ஷ்ய—கண்டதால்; ஸர்வே—எல்லா; அஸுரா:—பலி மகாராஜனின் சகாக்களாகிய அசுரர்களும்; கஸ்மலம்—வருத்தம்; ஆபு:—பெற்றனர்; அங்க—ராஜனே; ஸுதர்சனம்—சுதர்சனம் எனப்படும்; சக்ரம்—சக்கரம்; அஸஹ்ய—பொறுக்க முடியாத; தேஜ:—எதனுடைய உஷ்ணம்; தனு: ச—மற்றும் வில்; ஸார்ங்கம்—சாரங்கம் எனப்படும்; ஸ்தனயித்னு—கூடியுள்ள மேகங்களின் முழக்கம்; கோஷம்—போல் ஒலித்ததை.
அனைத்தையும் தமது உடலுக்குள் அடக்கிக் கொண்டிருந்த முழுமுதற் கடவுளின் விஸ்வ-ரூபத்தை பலி மகாராஜனின் ஆதரவாளர்களான அசுரர்கள் அனைவரும் கண்டனர். பொறுக்க முடியாத உஷ்ணத்தை உற்பத்தி செய்யும் சுதர்சன சக்கரம் பகவானின் கையிலிருப்பதையும் அவர்கள் கண்டனர். மேலும் அவரது வில்லின் பேரோசையையும் அவர்கள் கேட்டனர். இவையனைத்தும் அவர்களது இதயங்களில் வருத்தத்தை விளைவித்தன.
பதம் 8.20.31
பர்ஜன்ய-கோஷோ ஜலஜ: பாஞ்சஜன்ய:
கௌமோதகீ விஷ்ணு-கதா தரஸ்வினீ
வித்யாதரோ ‘ஸி: சத-சந்ர-யுக்தஸ்
தூணோத்தமாவ் அக்ஷயஸாயகெள ச
பர்ஜன்ய-கோஷ:—மேகங்களின் முழக்கத்தைப் போன்றதொரு ஓசையைக் கொண்ட; ஜலஜ:—பகவானின் சங்கு; பாஞ்சஜன்ய:—பாஞ்சஜன்யம் எனப்படும்; கௌமோதகீ—கௌமோதகீ எனப்படும்; விஷ்ணு-கதா—பகவான் விஷ்ணுவின் கதை; தரஸ்வினீ—பெரும் வலிமையுடன்; வித்யாதர:—வித்யாதரம் எனும் பெயர்கொண்ட; அஸி:—உடைவாள்; சத-சந்ர-யுக்த:—நூற்றுக்கணக்கான சந்திரன்களால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்துடன்; தூண-த்தமெள—அம்பறாத் தூணிகளில் மிகச்சிறந்த; அக்ஷயஸாயகௌ—அக்ஷயசாயகம் எனப்படும்; ச—கூட.
மேகத்தைப் போன்ற ஓசையெழுப்பிய, பாஞ்சஜன்யம் எனப்படும் பகவானின் சங்கு; கௌமோதகீ எனப்படும் மிகவும் சக்தி வாய்ந்த கதாயுதம்; நூற்றுக்கணக்கான சந்திரன்களைப் போன்ற புள்ளிகளால் அலங்கரிக்கப்பட்ட ஒரு கேடயத்துடன் கூடிய, வித்யாதரம் எனப்படும் உடைவாள்; மற்றும் அம்பறாத்தூணிகளில் மிகச்சிறந்ததாகிய அக்ஷயஸாயகம் ஆகிய இவையனைத்தும் பகவானைத் துதிப்பதற்காக ஒன்றாகத் தோன்றின.
பதங்கள் 8.20.32 – 8.20.33
ஸுனந்த-முக்யா உபதஸ்துர் ஈசம்
பார்ஷத-முக்யா: ஸஹ-லோக-பாலா:
ஸ்புரத்-கிரீடாங்கத-மீன-குண்டல:
ஸ்ரீவத்ஸ-ரத்னோத்தம-மேகலாம்பரை:
மதுவ்ரத-ஸ்ரக்-வனமாலயாவ்ருதோ
ரராஜ ராஜன் பகவான் உருக்ரம:
க்ஷிதிம் பதைகேன பலேர் விசக்ரமே
நப: சரீரேண திசஸ் ச பாஹுபி:
ஸுனந்த-முக்யா:—சுனந்தரின் முதலான பகவானின் சகாக்கள்; உபதஸ்து:—ஸ்தோத்திரம் செய்யத் துவங்கினர்; ஈசம்—பரமபுருஷ பகவானிடம்; பார்ஷத-முக்யா:—சகாக்களுக்கிடையிலுள்ள மற்ற முக்கியஸ்தர்கள்; ஸஹ-லோக-பாலா:—எல்லாக் கிரகங்களுக்கும் உரிய அதிபதிகளுடன்; ஸ்புரத்-கிரீட—ஒரு பிரகாசமான கிரீடத்துடன்; அங்கத—காப்புகள்; மீன-குண்டல:—மற்றும் மீன் வடிவிலுள்ள குண்டலங்கள்; ஸ்ரீவத்ஸ—அவரது மார்பின் மீதுள்ள ஸ்ரீவத்ஸம் எனப்படும் முடி; ரத்ன-உத்தம—மணிகளிலேயே மிகச் சிறந்தது (கௌஸ்துப மணி); மேகலா—இடைக் கச்சை; அம்பரை:—மஞ்சள் நிற ஆடைகளுடன்; மது-வ்ரத—தேனீக்களின்; ஸ்ரக்—அதில் ஒரு மாலை இருந்தது; வனமாலயா—ஒரு மலர் மாலையால்; ஆவ்ருத:—மூடப்பட்டிருந்தார்; ரராஜ—ஆதிக்கம் செலுத்துவது போல் தோன்றினார்; ராஜன்—ராஜனே; பகவான்—பரமபுருஷ பகவான்; உருக்ரம:—அவரது அற்புதச் செயல்களால் பிரசித்தி பெற்றவரான; க்ஷிதிம்—உலகின் மேற்பரப்பு முழுவதையும்; பதா ஏகேன—ஓரடியால்; பலே:—பலி மகாராஜனின்; விசக்ரமே—அளந்தார்; நப:—ஆகாயத்தை; சரீரேண—அவரது உடலால்; திச: ச—மற்றும் எல்லாத் திசைகளையும்; பாஹுபி:—அவரது கரங்களால்.
பகவான் ஒரு பிரகாசமான கிரீடத்தையும், காப்புகளையும், மற்றும் மீனைப் போலிருந்த மின்னும் குண்டலங்களையும் அணிந்திருந்தார். பகவானுடைய மார்பின் மீது ஸ்ரீவத்ஸம் எனப்படும் மயிர்க் குஞ்சமும், தெய்வீகமான கௌஸ்துப மணியும் இருந்தன. ஓர் இடைக் கச்சையால் கட்டப்பட்ட மஞ்சள் நிற ஆடையை அவர் அணிந்திருந்தார். மேலும் தேனீக்களால் சூழப்பட்டிருந்த ஒரு மலர் மாலையால் அவர் அலங்கரிக்கப்பட்டிருந்தார். ராஜனே, அற்புதச் செயல்களைக் கொண்டவரான பரமபுருஷ பகவான் தம்மை இவ்வாறு தோன்றச் செய்து, ஓரடியால் பூமியின் மேற்பரப்பு முழுவதையும் அளந்துவிட்டார். பிறகு தமது உடலால் ஆகாயத்தையும், தமது கரங்களால் எல்லாத் திசைகளையும் ஆக்கிரமித்துக் கொண்டார்.
பதம் 8.20.34
பதம் த்விதீயம் க்ரமதஸ் த்ரிவிஷ்டபம்
ந வை த்ருதீயாய ததீயம் அணு அபி
உருக்ரமஸ்யாங்ரிர் உபரி உபரி அதோ
மஹர்-ஜனாப்யாம் தபஸ: பரம் கத:
பதம்—அடி; த்விதீயம்—இரண்டாவது; க்ரமத:—முன்னேறும்; த்ரி-விஷ்டபம்—சுவர்க்க லோகங்களை அனைத்தையும்; ந—இல்லை; வை—உண்மையில்; த்ருதீயாய—மூன்றாவது அடிக்கு; ததீயம்—பகவானின்; அணு அபி—அணு அளவு நிலம் கூட மீதம்; உருக்ரமஸ்ய—அசாதாரணமான செயல்களைச் செய்பவரான முழுமுதற் கடவுளின்; அங்ரி:—மேற்புறத்தையும், கீழ்ப்புறத்தையும் ஆக்கிரமிக்கும் அடிகள்; உபரி உபரி—உயர, உயர; அதோ—இப்போது; மஹ-ஜனாப்யா—மஹர்லோகத்தையும், ஜனலோகத்தையும் விட; தபஸ:—அந்த தபோலோகம்; பரம்—அதற்கும் அப்பால்; கத:—சென்றது.
பகவான் தமது இரண்டாவது அடியை வைத்து சுவர்க்க லோகங்களையும் அளந்து விட்டார். பகவானுடைய பாதம் உயர உயர விரிவடைந்து மஹர்லோகம், ஜனலோகம், தபோலோகம் மற்றும் சத்தியலோகம் ஆகிய உலகங்களுக்கு அப்பாலும் சென்றுவிட்டதால், அவருடைய மூன்றாவது அடிக்கு அணுவளவு நிலம் கூட மீதமிருக்கவில்லை.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பலி மகாராஜன் பிரபஞ்சத்தை ஒப்படைத்தல்” எனும் தலைப்பை கொண்ட இருபதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.