அத்தியாயம் – 1
பிரபஞ்ச நிர்வாகிகனான மனுக்கள்
பதம் 8.1.1
ஸ்ரீ-ராஜோவாச
ஸ்வாயம்புவஸ்யேஹ குரோ வம்சோ ‘யம் விஸ்தராச் ச்ருத:
யத்ர விஸ்வ-ஸ்ருஜாம் ஸர்கோ மனூன் அன்யான் வதஸ்வ ந:
ஸ்ரீ-ராஜா உவாச—அரசர் (பரீட்சித்து மகாராஜன்) கூறினார்; ஸ்வாயம்புவஸ்ய—மகாபுருஷராகிய சுயம்புவ மனுவின்; இஹ—விஷயமாக; குரோ—எனது ஆன்மீக குருவே; வம்ச:—வம்சம்; அயம்—இந்த; விஸ்தராத்—விரிவாக; ஸ்ருத:—நான் கேட்டிருக்கிறேன் (உம்மிடமிருந்து); யத்ர—எங்கு; விஸ்வ-ஸ்ருஜாம்—மரீசியைப் போன்ற, பிரஜாபதிகள் எனப்படும் மகா புருஷர்களின்; ஸர்க:—மனுவின் புதல்விகளில் இருந்து பிறந்த பல புதல்வர்களையும், பேரன்களையும் உள்ளடக்கிய சிருஷ்டி; மனூன்—மனுக்கள்; அன்யான்—மற்ற; வதஸ்வ—தயவுசெய்து விளக்குவீராக; ந:—எங்களுக்கு.
பரீட்சித்து மகாராஜன் கூறினார்: என் எஜமானரே, ஆன்மீக குருவே, இப்போது நான் சுயம்புவ மனுவின் வம்சத்தைப் பற்றி உம்மிடமிருந்து பூரணமாகக் கேட்டறிந்தேன். ஆனால் மற்ற மனுக்களும் கூட உள்ளனர். அவர்களுடைய வம்சத்தைப் பற்றியும் நான் கேட்க விரும்புகிறேன். அன்புடன் அவற்றை எங்களுக்குக் கூறுவீராக.
பதம் 8.1.2
மன்வந்தரே ஹரர் ஜன்ம கர்மாணி ச மஹீயஸ:
க்ருணந்தி கவயோ ப்ரஹ்மம்ஸ் தானி நோ வத ஸ்ருண்வதாம்
மன்வந்தரே—மன்வந்தரங்கள் (ஒருவன் பின் ஒருவராக வரும் மனுக்கள்) மற்றும் காலத்தில்; ஹரே:—பரமபுருஷ பகவானின்; ஜன்ம—தோற்றம்; கர்மாணி—மேலும் செயல்கள்; ச—கூட; மஹீயஸ:—உன்னதமாக போற்றப்படுபவரின்; க்ருணந்தி—விவரிக்கின்றனர்; கவய:—பூரண அறிவுடைய மகா கல்விமான்கள்; ப்ரஹ்மன்—புலமை வாய்ந்த பிராமணரே (சுகதேவ கோஸ்வாமி); தானி—அவர்களனைவரும்; ந:—எங்களுக்கு; வத—தயவு செய்து; விவரிக்கவேண்டும்; ஸ்ருண்வதாம்—செவியுற மிகவும் ஆவலாய் இருக்கும்.
புலமை வாய்ந்த பிராமணராகிய சுகதேவ கோஸ்வாமியே, பூரண அறிவு படைத்த பெருங்கல்விமான்கள், பல்வேறு மன்வந்தரங்களில், பரம்புருஷ பகவானின் செயல்களையும், தோற்றத்தையும் பற்றி விவரிக்கின்றனர். இந்த வரலாறுகளைப் பற்றி செவிசாய்க்க நாங்கள் மிகவும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம். அன்புடன் அவற்றை விவரிப்பீராக.
பதம் 8.1.3
யத் யஸ்மின் அந்தரே ப்ரஹ்மன் பகவான் விஸ்வ-பாவன:
க்ருதவான் குருதே கர்தா ஹி அதீதே ‘நாகதே ‘த்ய வா
யத்—என்னென்ன செயல்களை; யஸ்மின்—ஒரு குறிப்பிட்ட யுகத்தில்; அந்தரே—மன்வந்தரம்; ப்ரஹ்மன்—ஓ பிராமண சிரேஷ்டரே; பகவான்—பரமபுருஷர்; விஸ்வ-பாவன:—இந்த பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்திருப்பவர்; க்ருதவான்—செய்திருப்பது; குருதே—செய்து கொண்டு இருப்பது; கர்தா—இனி செய்யப் போவது; ஹி—உண்மையில்; அதீதே—கடந்த காலத்தில்; அனாகதே—எதிர்காலத்தில்; அத்ய—நிகழ்காலத்தில்; வா—இரண்டிலொன்று.
ஓ பிராமண சிரேஷ்டரே, இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்தவரான பரமபுருஷ பகவான் கடந்த மன்வந்தரங்களில் எத்தகைய செயல்களையெல்லாம் செய்தார், இப்போது என்ன செய்கிறார், மேலும் எதிர்கால மன்வந்தரங்களில் என்ன செய்வார் என்பதை தயவுசெய்து எங்களிடம் விளக்குவீராக.
பதம் 8.1.4
ஸ்ரீ-ருஷிர் உவாச
மனவோ ‘ஸ்மின் வ்யதீதா: ஷட் கல்பே ஸ்வாயம்புவாதய:
ஆத்யஸ் தே கதிதோ யத்ர தேவாதீனாம் ச ஸம்பவ:
ஸ்ரீ-ரிஷி: உவாச—மாமுனிவரான சுகதேவ கோஸ்வாமி கூறினார்; மனவ:—மனுக்கள்; அஸ்மின்—இக்குறிப்பிட்ட காலத்தில் (பிரம்மாவின் ஒருபகல்); வ்யதீதா:—கடந்துவிட்ட; ஷட்—ஆறு; கல்பே—பிரம்மாவின் பகற் பொழுதான இக்காலத்தில்; ஸ்வாயம்புவ—சுயம்புவ மனு; ஆதய:—மேலும் மற்றவர்களும்; ஆத்ய:—முதலானவர் (சுயம்புவமனு); தே—உம்மிடம்; கதித:—நான் ஏற்கனவே விளக்கி இருக்கிறேன்; யத்ர—எங்கு; தேவ-ஆதீனாம்—அனைத்து தேவர்களின்; ச—கூட; ஸம்வ—தோற்றத்தை.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இப்பொழுதுள்ள கல்பத்தில் ஏற்கனவே ஆறு மனுக்கள் வந்து சென்றுவிட்டனர். சுயம்புவ மனுவைப்பற்றியும், பல தேவர்களின் தோற்றத்தைப் பற்றியும் உங்களிடம் நான் விளக்கியிருக்கிறேன். பிரம்மாவின் இக்கல்பத்தில் முதல் மனு சுயம்புவ மனுவாவார்.
பதம் 8.1.5
ஆகூத்யாம் தேவஹூத்யாம் ச துஹித்ரோஸ் தஸ்ய வை மனோ:
தர்ம-ஞானோபதேசார்த்தம் பகவான் புத்ரதாம் கத:
ஆகூத்யாம்—ஆகூதியின் கருவிலிருந்து; தேவஹூத்யாம் ச—மேலும் தேவஹூதியின் கருவிலிருந்து; துஹித்ரோ:—இரு புதல்விகளின்; தஸ்ய—அவரது; வை—உண்மையில்; மனோ:—சுயம்புவ மனுவின்; தர்ம—தர்மம்; ஞான—மற்றும் அறிவு; உபதேச-அர்த்தம்—உபதேசம் செய்வதற்காக; பகவான்—பரமபுருஷர்; புத்ரதாம்—ஆகூதிக்கும், தேவஹூதிக்கும் புதல்வராய் இருத்தல்; கத:—ஏற்றுக் கொண்ட.
சுயம்புவ மனுவிற்கு ஆகூதி மற்றும் தேவஹூதி எனும் இரு புதல்விகள் இருந்தனர். அவர்களின் கருக்களிலிருந்து முறையே யக்ஞமூர்த்தி மற்றும் கபிலர் எனும் இரு புதல்வர்களாக பரமபுருஷ பகவான் தோன்றினார். இப்புதல்வர்களிடம் மதம், அறிவு ஆகியவற்றைப் பற்றிய பிரச்சாரம் ஒப்படைக்கப்பட்டது.
பதம் 8.1.6
க்ருதம் புரா பகவத: கபிலஸ்யானுவர்ணிதம்
ஆக்யாஸ்யே பகவான் யக்ஞோ யச் சகார குரூத்வஹ
க்ருதம்—ஏற்கனவே செய்யப்பட்டு விட்டது; புரா—முன்பு; பகவத:—பரமபுருஷ பகவானின்; கபிலஸ்ய—தேவஹூதியின் புதல்வராகிய கபிலர்; அனுவர்ணிதம்—முழுமையாக விளக்கினேன்; ஆக்யாஸ்யே—இப்போது நான் விவரிப்பேனாக; பகவான்—பரமபுருஷ பகவான்; யக்ஞ:—யக்ஞபதி அல்லது யக்ஞமூர்த்தி எனும் பெயரின்; யத்—என்னவெல்லாம்; சகார—நிறைவேற்றினேன்; குரு-உத்வஹ—குருக்களில் சிறந்தவரே.
குரு சிரேஷ்டரே, நான் ஏற்கனவே (மூன்றாம் காண்டத்தில்) தேவஹூதியின் புதல்வரான கபிலரின் செயல்களை விவரித்துவிட்டேன். இப்போது நான் ஆகூதியின் புதல்வராகிய யக்ஞபதியின் செயல்களை விவரிக்கிறேன்.
பதம் 8.1.7
விரக்த: காம-போகேஷு சதரூபா-பதி: ப்ரபு:
விஸ்ருஜ்ய ராஜ்யம் தபஸே ஸபார்யோ வனம் ஆவிசத்
விரக்த:—பற்றில்லாமல்; காம—போகேஷு—(கிருஹஸ்த வாழ்விலுள்ள) புலன்நுகர்வில்; சதரூபா-பதி:—சதரூபாவின் கணவரான சுயம்புவ மனு; ப்ரபு:—உலகின் எஜமானராக அல்லது அரசனாக இருந்த; விஸ்ருஜ்ய—முற்றிலும் துறந்த பின்; ராஜ்யம்—அவரது இராஜ்யத்தை; தபஸே—தவங்களைப் பயில்வதற்காக; ஸ-பார்ய:—அவரது மனைவியுடன்; வனம்—காடு; ஆவிசத்—பிரவேசித்தார்.
சதரூபாவின் கணவரான சுயம்புவ மனு, இயல்பாகவே புலனின் பத்தில் சிறிதும் பற்றற்றவராக இருந்தார். இவ்வாறாக அவர் புலனின்பம் நிறைந்த தமது இராஜ்யத்தைத் துறந்து, தவங்களைப் பயில்வதற்காக தமது மனைவியுடன் வனம் புகுந்தார்.
பதம் 8.1.8
ஸுனந்தாயாம் வர்ஷ-சதம் பதைகேன புவம் ஸ்ப்ருசன் தப்யமானஸ் தபோ கோரம் இதம் அன்வாஹ பாரத
ஸுனந்தாயாம்—சுனந்தா நதிக் கரையில்; வர்ஷ-சதம்—நூறு ஆண்டு காலம்; பத-ஏகேன—ஒரு காலால்; புவம்—பூமியை; ஸ்ப்ருசன்—தொட்டவாறு; தப்யமான:—அவர் தவமியற்றினார்; தப:—தவங்கள்; கோரம்—மிகவும் கடுமையான; இதம்—இதை; அன்வாஹ—பேசினார்; பாரத—பரத வம்சத்தில் தோன்றியவரே.
பரதவம்சத் தோன்றலே, இவ்வாறாக சுயம்புவ மனு தமது மனைவியுடன் வனம் புகுந்தார். அதன்பின் சுனந்தா நதிக்கரையில் அவர் ஒரு காலில் நின்று கொண்டு நூறு ஆண்டுகள் கடுந்தவங்களைப் புரிந்தார். இத்தவங்களை நிறைவேற்றும் வேளையில், பின்வருமாறு அவர் பேசினார்.
பதம் 8.1.9
ஸ்ரீ-மனுர் உவாச
யேன சேதயதே விஸ்வம் விஸ்வம் சேதயதே ந யம்
யோ ஜாகர்தி சயானே ‘ஸ்மின் நாயம் தம் வேத வேத ஸ:
ஸ்ரீ-மனு: உவாச—சுயம்புவ மனு கூறினார்; யேன—எவரால் (முழுமுதற் கடவுள்); சேதயதே—உயிர்ப்பிக்கப்படுகிறதோ; விஸ்வம்—பிரபஞ்சம் முழுவதும்; விஸ்வம்—பிரபஞ்சம் முழுவதும் (ஜட உலகம்); சேதயதே—உயிர்ப்பிக்கிறார்; ந—இல்லை; யம்—யாரை; ய:—யார்; ஜாகர்தி—எப்பொழுதும் விழித்திருக்கிறார் (எல்லாச் செயல்களையும் கவனித்தவாறு); சயானே—உறங்கும் போது; அஸ்மின்—இவ்வுடலில்; ந—இல்லை; அயம்—இந்த ஜீவராசி; தம்—அவரை; வேத—அறிய; வேத—அறிகிறார்; ஸ:—அவர்.
மனு பெருமான் கூறினார்: உயிர்ப்புள்ள இந்த ஜட உலகை பரம புருஷர் படைத்துள்ளார்; அவர் இந்த ஜட உலகத்தால் படைக்கப்பட்டவரல்ல. அனைத்தும் நிசப்தமாக இருக்கும் பொழுது, பரம ஜீவன் சாட்சியாக விழித்திருக்கிறார். அவரை ஜீவராசி அறியவில்லை, ஆனால் அனைத்தையும் அவர் அறிந்திருக்கின்றார்.
பதம் 8.1.10
ஆத்மாவாஸ்யம் இதம் விஸ்வம் யத் கிஞ்சிஜ் ஜகத்யாம் ஜகத்
தேன த்யக்தேன புஞ்ஜீதா மா க்ருத: கஸ்ய ஸ்வித் தனம்
ஆத்ம—பரமாத்மா; ஆவாஸ்யம்—எல்லா இடங்களிலும் வாழ்கிறார்; இதம்—இப்பிரபஞ்சம்; விஸ்வம்—அனைத்தும் பிரபஞ்சங்களிலும், அனைத்து இடங்களிலும்; யத்—எதுவாகிலும்; கிஞ்சித்—இருக்கும் எல்லாப் பொருட்களும்; ஜகத்யாம்—இவ்வுலகில், எல்லா இடங்களிலும்; ஜகத்—உயிருள்ள மற்றும் உயிரற்ற அனைத்தும்; தேன—அவரால்; த்யக்தேன—பகிர்ந்தளிக்கப்பட்ட; புஞ்ஜீதா:—நீ அனுபவிக்கலாம்; மா—கூடாது; க்ருத:—ஏற்க; கஸ்ய ஸவித்—வேறொருவரின்; தனம்—சொத்தை.
இப்பிரபஞ்சத்தில், பரமபுருஷ பகவான் தமது பரமாத்ம சொரூபத்தில், எங்கெல்லாம் உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்கள் உள்ளனவோ அங்கெல்லாம் இருக்கிறார். எனவே, தனக்கென பகிர்ந்தளிக்கப்பட்டதை மட்டும் ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்; மற்றவர்களின் சொத்தை ஆக்கரமிக்க ஒருவன் ஆசைப்படக் கூடாது.
பதம் 8.1.11
யம் பஸ்யதி ந பஸ்யந்தம் சக்ஷுர் யஸ்ய ந ரிஷ்யதி
தம் பூத நிலயம் தேவம் ஸுபர்ணம் உபதாவத
யம்—யாரொருவர்; பஸ்யதி—ஜீவராசி காண்கிறான்; ந—இல்லை; பஸ்யந்தம்—எப்பொழுதும் பார்த்துக் கொண்டு இருப்பினும்; சக்ஷு:—கண்; யஸ்ய—யாருடைய; ந—ஒருபோதுமில்லை; ரிஷ்யதி—குறைந்துவிடுகிறது; தம்—அவரை; பூத-நிலயம்—அனைத்து ஜீவராசிகளுக்கும் மூல பிறப்பிடம்; தேவம்—பரமபுருஷ பகவான்; ஸுபர்ணம்—ஜீவராசியின் ஒரு நண்பராக உடனிருப்பவர்; உபதாவத—அனைவரும் வழிபட வேண்டும்.
பரமபுருஷர் இடைவிடாமல் உலகின் இயக்கங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், ஒருவரும் அவரைக் காண்பதில்லை. ஒருவரும் அவரைக் காண்பதில்லை என்பதால், அவரும் எவரையும் காண்பதில்லை என்று ஒருவன் நினைக்கக்கூடாது. ஏனெனில், அவரது காணும் சக்தி ஒருபோதும் குறைந்துவிடுவதில்லை. எனவே, தனிப்பட்ட ஆத்மாவுடன் எப்பொழுதும் ஒரு நண்பராக இருக்கும் பரமாத்மாவை அனைவரும் வழிபட வேண்டும்.
பதம் 8.1.12
ந யஸ்யாதி-அந்தௌ மத்யம் ச ஸ்வ: பரோ நாந்தரம் பஹி:
விஸ்வஸ்யாமூனி யத் யஸ்மாத் விஸ்வம் ச தத் ருதம் மஹத்
ந—இல்லை; யஸ்ய—எவருடைய (பரமபுருஷ பகவான்; ஆதி—ஓர் ஆரம்பம்; அந்தெள—முடிவு; மத்யம்—நடுநிலை; ச—மேலும்; ஸ்வ:—சொந்த; பர:—பிறர்; ந—அல்லது; அந்தரம்—உள்ளே; பஹி:—புறம்; விஸ்வஸ்ய—முழு பிரபஞ்ச தோற்றத்தின்; அமூனி—இத்தகைய கருத்துக்கள் அனைத்தும்; யத்—யாருடைய உருவம்; யஸ்மாத்—அனைத்திற்கும் காரணமான அவரிடமிருந்து; விஸ்வம்—முழு பிரபஞ்சமும்; ச—மேலும்; தத்—அவையனைத்தும்; ருதம்—உண்மை; மஹத்—மிகமிகப் பெரிய.
பரமபுருஷ பகவானுக்கு ஆரம்பமோ, முடிவோ, நடு நிலையோ இல்லை. ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது தேசத்திற்கோ அவர் சொந்தமானவரும் அல்லர். அவருக்கு உள்ளுமில்லை, புறமுமில்லை. ஆரம்பம் மற்றும் முடிவு, என்னுடைய மற்றும் அவர்களுடையது என்பன போன்ற இந்த ஜட உலகினுள் காணப்படும் இரட்டைகள் அனைத்தும் பரமபுருஷரின் சொரூபத்தில் காணப்படுவதில்லை. பகவானிடமிருந்து தோன்றும் பிரபஞ்சம், அவருடைய மற்றுமொரு அம்சமாகும். ஆகவே பரமபுருஷரே முடிவான உண்மையும், பூரண மகிமையுடையவரும் ஆவார்.
பதம் 8.1.13
ஸ விஸ்வ-காய: புரு-ஹூதை ஈச:
ஸத்ய: ஸ்வயம்-ஜ்யோதிர் அஜ: புராண:
தத்தே ‘ஸ்ய ஜன்மாதி-அஜயாத்ம சக்த்யா
தாம் வித்யயோதஸ்ய நிரீஹ ஆஸ்தே
ஸ:—அந்த பரமபுருஷ பகவான்; விஸ்வ-காய:—பிரபஞ்சத்தின் மொத்த உருவம் (முழு பிரபஞ்சமும் பரமபுருஷ பகவானின் புறஉடலாகும்); புரு-ஹூத—அநேக நாமங்களால் அறியப்படுகிறார்; ஈச:—(முழு சக்தியுடன் கூடிய) பரம ஆளுனர்; ஸத்ய:—முடிவான உண்மை; ஸ்வயம்—சுயமாக; ஜ்யோதி:—சுய பிரகாசமான; அஜ:—பிறப்பற்ற, ஆரம்பமற்ற; புராண:—மிகப் பழமைவாய்ந்த; தத்தே—அவர் நிறைவேற்றுகிறார்; அஸ்ய—இப்பிரபஞ்சத்தின்; ஜன்ம-ஆதி—படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல்; அஜயா—அவரது பகிரங்க சக்தியால்; ஆத்ம-சக்த்யா—அவரது சுய சக்தியால்; தாம்—பகிரங்கமான அந்த ஜட சக்தி; வித்யயா—அவரது ஆன்மீக சக்தியால்; உதஸ்ய—கைவிட்டு; நிரீஹ:—எவ்விதமான ஆசையும், செயலும் இல்லாமல்; ஆஸ்தே—(ஜட சக்தியால் பாதிப்படையாமல்), அவர் இருக்கிறார்.
பிரபஞ்ச தோற்றம் முழுவதும் பரம சத்தியமான முழுமுதற் கடவுளின் உடலாகும். அவருக்கு எண்ணிலடங்காத நாமங்களும், எல்லையற்ற சக்திகளும் உள்ளன. அவர் சுயப்பிரகாசம் கொண்டவரும், பிறப்பற்றவரும், மாற்றமற்றவரும் ஆவார். அனைத்திற்கும் அவரே ஆரம்பம்; ஆனால் அவருக்கு ஆரம்பமே இல்லை. இப்பிரபஞ்ச தோற்றத்தை அவர் தமது பகிரங்க சக்தியின் மூலமாக படைத்திருப்பதால், பிரபஞ்சம் அவரால் படைத்து, காத்து, அழிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. ஆயினும், அவர் தமது ஆன்மீக சக்தியில் சுறுசுறுப்பற்றவராகவும், ஜட சக்தியின் செயல்களால் பாதிக்கப்படாதவராகவும் இருக்கிறார்.
பதம் 8.1.14
அதாக்ரே ரிஷய: கர்மான்-ஈஹந்தே ‘கர்ம-ஹேதவே ஈஹமானோ ஹி புருஷ: ப்ராயோ ‘நீஹாம் ப்ரபத்யதே
அத—எனவே: அக்ரே—ஆரம்பத்தில்; ரிஷய:—கற்றறிந்த ரிஷிகள், புண்ணிய புருஷர்கள் அனைவரும்; கர்மாணி—பலன் நோக்குக் கருமங்கள்; ஈஹந்தே—நிறைவேற்ற; அகர்ம—பிரதிபலன்களில் இருந்து விடுதலை; ஹேதவே—எனும் நோக்கத்திற்காக; ஈஹமான:—அத்தகைய செயல்களில் ஈடுபட்டு; ஹி—உண்மையில்; புருஷ:—ஒருவன்; ப்ராய:—ஏறக்குறைய எப்பொழுதும்; அனீஹாம்—கருமத்திலிருந்து விடுதலை; ப்ரபத்யதே—அடைகிறான்.
ஆகவே, பிரதிபலன்களால் களங்கப்படாத செயல்களின் நிலையை மக்கள் அடைவதை சாத்தியமானதாகச் செய்வதற்காக, சிறந்த முனிவர்கள் முதலில் மக்களை பலன் நோக்குக் கருமங்களில் ஈடுபடுத்துகின்றனர். ஏனெனில், சாஸ்திர விதிகளுக்கேற்ப ஒருவன் செயற்படத் துவங்கினாலன்றி, முக்தி நிலையை, அல்லது பிரதி பலன்களை ஏற்படுத்தாத செயல்களின் நிலையை அவனால் அடைய முடியாது.
பதம் 8.1.15
ஈஹதே பகவான் ஈசோ ந ஹி தத்ர விஸஜ்ஜதே
ஆத்ம-லாபேன பூர்ணார்த்தோ நாவஸீதந்தியே ‘நு தம்
ஈஹதே—படைக்கும், காக்கும் மற்றும் அழிக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்; பகவான்—பரமபுருஷ பகவானாகிய, கிருஷ்ணர்; ஈச:—பரம ஆளுனர்; ந—இல்லை; ஹி—உண்மையில்; தத்ர—அத்தகைய செயல்களில்; விஸஜ்ஜதே—அவர் சிக்கிக் கொள்கிறார்; ஆத்ம-லாபேன—அவரது சொந்த இலாபத்திற்காக; பூர்ண-அர்த்த:—சுயதிருப்தி கொண்டவர்; ந—இல்லை; அவஸீதந்தி—அதைரியம் அடைகின்றனர்; யே—அவர்கள்; அனு—பின்பற்றும்; தம்—பரமபுருஷ பகவானை.
பரமபுருஷ பகவான் சுயமாகவே ஐசுவரியங்களை பூரணமாகக் கொண்டு இருப்பவராவார். இருப்பினும் அவர் இந்த ஜட உலகை படைப்பவராகவும், காப்பவராகவும், அழிப்பவராகவும் செயற்படுகின்றார். இவ்வாறு செயற்பட்டாலும், அவர் ஒருபோதும் பந்தப்படுவதில்லை. ஆகையால் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றும் பக்தர்களும் ஒருபோதும் பந்தப்படுவதில்லை.
பதம் 8.1.16
தம் ஈஹமானம் நிரஹங்க்ருதம் புதம்
நிராசிஷம் பூர்ணம் அனன்ய-சோதிதம்
நிரூன் சிக்ஷயந்தம் நிஜ-வர்த்ம-ஸம்ஸ்திதம்
ப்ரபும் ப்ரபத்யே ‘கில-தர்ம-பாவனம்
தம்—அதே முழுமுதற் கடவுளிடம்; ஈஹமானம்—நம்முடைய நன்மைக்காக செயற்படும்; நிரஹங்க்ருதம்—பந்தங்கள் அற்றவர் அல்லது இலாபத்தை அடையும் ஆசையற்றவர்; புதம்—முழுமையான அறிவுடன் இருப்பவர்; நிராசிஷம்—தமது செயல்களின் பலன்களை அனுபவிக்கும் ஆசைகள் அற்றவர்; பூர்ணம்—பூரணமானவர், இதனால் ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ளும் அவசியம் அவருக்கில்லை; அனன்ய—பிறரால்; சோதிதம்—தூண்டிய அல்லது ஊக்கமளித்த; ந்ரூன்—மனித சமூகம் முழுவதற்கும்; சிக்ஷயந்தம்—வாழ்வின் நிஜமான மார்க்கத்தை போதிப்பதற்காக; நிஜ-வர்தம்—அவருக்குச் சொந்தமான வாழ்வு முறையை; ஸம்ஸ்திதம்—நிலைநாட்டுவதற்கு (வழி பிறழாமல்); ப்ரபும்—பரமபுருஷரிடம்; ப்ரபத்யே—அனைவரும் சரணடைய வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்; அகில-தர்ம-பாவனம்—மதக் கோட்பாடுகள் அல்லது ஒரு மனிதனுக்குரிய வர்ணாஸ்ரம கடமைகள் அனைத்திற்கும் எஜமானரான.
முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணர், ஒரு சாதாரண மனிதனைப் போலவே செயலாற்றுகிறார் என்றாலும், செயலின் பலன்களை அனுபவிக்க அவர் விரும்புவதில்லை. அவர் பூரண அறிவுடையவரும், பெளதிக ஆசைகள் மற்றும் வழிபிறத்தல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவரும், முற்றிலும் சுதந்திரமானவரும் ஆவார். மனித சமூகத்தின் பரம போதகர் எனும் முறையில், அவரது சொந்த செயல்முறையை அவர் போதிக்கிறார். இவ்வாறாக, மதத்தின் உண்மையான மார்கத்தை அவர் ஆரம்பித்துவைக்கிறார். அனைவரும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறான்.
பதம் 8.1.17
ஸ்ரீ-சுக உவாச
இதி மந்த்ரோபனிஷதம் வ்யாஹரந்தம் ஸமாஹிதம் த்ருஷ்ட்வாஸுரா யாதுதானா ஜக்தும் அப்யத்ரவன் க்ஷுதா
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; மந்த்ர-உபநிஷதம்—வேத மந்திரம் (சுயம்புவ மனுவால் உச்சரிக்கப்பட்டது); வ்யாஹரந்தம்—கற்பிக்கப்பட்ட அல்லது பேசப்பட்ட; ஸமாஹிதம்—(ஜட சூழ்நிலைகளால் கிளர்ச்சி அடையாமல்) மனத்தை ஒருமுனைப்படுத்தினார்; த்ருஷ்ட்வா—(அவரை) கண்டதும்; அஸுரா:—அசுரர்கள்; யாதுதானா:—இராட்சஸர்கள்; ஜக்தும்—விரைவாக விழுங்கிவிட விரும்பினர்; அப்யத்ரவன்—மிகவும் வேகமாக ஓடி; க்ஷுதா—அவர்களின் பசியைப் போக்குவதற்காக.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக உபநிஷதங்கள் எனப்படும் வேதத்தின் உபதேச மந்திரங்களை உச்சரித்தவாறு சுயம்புவ மனு சமாதியில் ஆழ்ந்திருந்தார். அவரைக் கண்டதும் இராட்சஸர்களும், அசுரர்களும், மிகவும் பசியோடு இருந்ததால், அவரை உடனே விழுங்கிவிட விரும்பி அவரை நோக்கி மிகவும் வேகமாக ஓடினர்.
பதம் 8.1.18
தாம்ஸ் ததாவஸிதான் வீக்ஷ்ய யக்ஞ ஸர்வ-கதோ ஹரி:
யாமை: பரிவ்ருதோ தேவைர் ஹத்வாசாஸத் த்ரி-விஷ்டபம்
தான்—அசுரர்களும், இராட்சஸர்களும்; ததா—இவ்வாறாக; அவஸிதான்—சுயம்புவ மனுவை விழுங்கி விடுவதில் உறுதி கொண்டிருந்த; வீக்ஷ்ய—கண்டதும்; யக்ஞ:—யக்ஞ எனப்படும் பகவான் விஷ்ணு; ஸர்வ-கத:—அனைவருடைய இதயங்களிலும் வீற்றிருப்பவர்; ஹரி:—முழுமுதற் கடவுள்; யாமை:—யாமர்கள் எனப்படும் அவரது புதல்வர்களுடன்; பரிவ்ருத:—சூழப்பட்டவராய்; தேவை:—தேவர்களால்; ஹத்வா—(அசுரர்களை) கொன்றபின்; அசாஸத்—(இந்திர பதவியை ஏற்று) ஆண்டார்; த்ரி-விஷ்டபம்—சுவர்க்க லோக கிரகங்களை.
ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருப்பவரும், பரமபுருஷருமான விஷ்ணு, யக்ஞபதியாகத் தோன்றி, இராட்சஸர்களும், அசுரர்களும் சுயம்புவ மனுவை விழுங்கப் போவதைக் கண்டார். இவ்வாறாக யாமர்கள் எனப்படும் அவரது புதல்வர்களாலும், மற்றெல்லா தேவர்களாலும் சூழப்பட்டவராய், பகவான் அசுரர்களையும், இராட்சஸர்களையும், கொன்று வீழ்த்தினார். பிறகு இந்திர பதவியை ஏற்று, சுவர்க்கலோக இராஜ்யத்தை ஆளத்துவங்கினார்.
பதம் 8.1.19
ஸ்வாரோசிஷோ த்விதீயஸ் து மனுர் அக்னே: ஸுதோ ‘பவத்
த்யுமத்-ஸுஷேண ரோசிஷ்மத் ப்ரமுகாஸ் தஸ்ய சாத்மஜா:
ஸ்வாரோசிஷ:—ஸ்வாரோசிஷர்; த்விதீய:—இரண்டாவது; து—உண்மையில்; மனு:—மனு; அக்னே:—அக்னியின், ஸுத:—புதல்வன்; அபவத்—ஆனார்; த்யுமத்—தியுமத்; ஸுஷேண—சுஷேணர்; ரோசிஷ்மத்—ரோசிஷ்மத்; ப்ரமுகா:—அவர்கள் முதற்கொண்டு; தஸ்ய—அவரது (ஸ்வாரோசிஷர்); ச—மேலும்; ஆத்ம-ஜா:—புதல்வர்கள்.
ஸ்வரோசிஷர் எனப்படும் அக்னியின் புதல்வர் இரண்டாவது மனுவானார். அவருக்கு தியுமத், சுஷேணர் மற்றும் ரோசிஷ்மத் ஆகியோரைத் தலைமையாகக் கொண்ட அநேக புதல்வர்கள் இருந்தனர்.
பதம் 8.1.20
தத்ரேந்ரோ ரோசனஸ் த்வ் ஆஸீத் தேவாஸ் ச துஷிதாதய:
ஊர்ஜ-ஸ்தம்பாதய: ஸப்த ரிஷயோ ப்ரஹ்ம-வாதின:
தத்ர—இந்த ‘மன்வந்தரத்தில்’; இந்ர:—இந்திரன்; ரோசன:—யக்ஞரின் புதல்வரான ரோசனர்; து—ஆனால்; ஆஸீத்—ஆனார்; தேவா:—தேவர்கள்; ச—மேலும்; துஷித-ஆதய:—துஷிதரும் பிறரும்; ஊர்ஜ—ஊர்ஜர்; ஸ்தம்ப—ஸ்தம்பர்; ஆதய:—மற்றும் பிறர்; ஸப்த—ஏழு; ரிஷய:—மகரிஷிகள்; ப்ரஹ்ம-வாதின:—விசுவாசமுள்ள பக்தரனைவரும்.
ஸ்வாரோசிஷரின் ஆட்சிக் காலத்தில், இந்திர பதவி, யக்ஞரின் புத்திரரான ரோசனரால் மேற்கொள்ளப்பட்டது. துஷிதரும், மற்றவர்களும் முக்கிய தேவர்களாயினர். மேலும் ஊர்ஜர், ஸ்தம்பர் மற்றும் பிறரும் ஏழு ரிஷிகளாயினர். அவர்களனைவரும் பகவானின் விசுவாசமுள்ள பக்தர்களாவர்.
பதம் 8.1.21
ரிஷேஸ் து வேதசிரஸஸ் துஷிதா நாம பத்னி ஆபூத்
தஸ்யாம் ஜக்ஞே ததோ தேவோ விபுர் இதி அபிவிஸ்ருத:
ருஷே:—புண்ணிய புருஷர்களின்; து—உண்மையில்; வேதசிரஸ: —வேதசிரா; துஷிதா—துஷிதா; நாம—எனும் பெயர் கொண்ட; பத்னீ—மனைவி; ஆபூத்—ஈன்றாள்; தஸ்யாம்—அவளது (கருவில்); ஜக்ஞே—பிறந்தனர்; தத:—அதன்பின்; தேவ:—பகவான்; விபு:—விபு; இதி—இவ்வாறாக; அபிவிஸ்ருத:—என்று புகழப்பட்ட.
வேதசிரா எனும் ரிஷி மிகவும் புகழ் பெற்றவராவார். அவரது மனைவியான துஷிதாவின் கர்பத்திலிருந்து விபு எனும் பெயர் கொண்ட அவதாரம் தோன்றினார்.
பதம் 8.1.22
அஷ்டாசீதி-ஸஹஸ்ராணி முனயோ யே த்ருத-வ்ரதா:
அன்வசிக்ஷன் வ்ரதம் தஸ்ய கொமார-ப்ரஹ்மசாரிண:
அஷ்டசீதி—எண்பத்தெட்டு; ஸஹஸ்ராணி—ஆயிரம்; முனய:—மகா புண்ணிய புருஷர்கள்; யே—அவர்கள்; த்ருத-வ்ரதா:—விரதங்களில் நிலைபெற்ற; அன்வசிக்ஷன்—உபதேசங்களைப் பெற்றனர்; வ்ரதம்—விரதங்கள்; தஸ்ய—அவரிடமிருந்து (விபு); கௌமார—திருமணமாகாமல் இருந்த; ப்ரஹ்மசாரிண:—பிரம்மச்சரியத்தில் நிலைபெற்றிருந்தார்.
விபு ஒரு பிரம்மச்சாரியாகவே எஞ்சியிருந்தார். அவரது வாழ்வில் அவர் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. அவரிடமிருந்து எண்பத்தெட்டாயிரம் பிற புண்ணிய புருஷர்கள் புலனடக்கம், தவம் முதலிய ஒழுக்கங்களில் பாடம் கற்றனர்.
பதம் 8.1.23
த்ருதீய உத்தம நாம ப்ரியவ்ரத-ஸுதோ மனு:
பவன: ஸ்ருஞ்சயோ யக்ஞ-ஹோத்ராத்யாஸ் தத்-ஸுதா ந்ருப்
த்ருதீய:—மூன்றாவது; உத்தம:—உத்தமன்; நாம—எனும் பெயர் கொண்ட; ப்ரியவ்ரத—பிரியவிரத மகாராஜனின்; ஸுத:—புதல்வர்; மனு:—அவர் மனுவானார்; பவன:—பவனர்; ஸ்ருஞ்சய:—ஸ்ருஞ்சயர்; யக்ஞஹோத்ர-ஆத்யா:—யக்ஞஹோத்ரரும், மற்றவர்களும்; தத்-ஸுதா:—உத்தமரின் புத்திரர்கள், ந்ருப—அரசே.
அரசே, பிரியாவிரத மகாராஜனின் புதல்வராகிய உத்தமன், மூன்றாவது மனுவானார். இம்மனுவின் புதல்வர்களுள் பவனர், ஸ்ருஞ்சயர் மற்றும் யக்ஞஹோத்ரர் ஆகியோரும் அடங்குவர்.
பதம் 8.1.24
வஸிஷ்ட-தனயா: ஸப்த ரிஷய: ப்ரமதாதய:
ஸத்யா வேதஸ்ருதா பத்ரா தேவா இந்ரஸ் து ஸத்யஜித்
வஸிஷ்ட-தனயா:—வசிஷ்டரின் புத்திரர்கள்; ஸப்த—ஏழு; ரிஷய:—ரிஷிகள்; ப்ரமத-ஆதய:—பிரதமரை தலைமையாகக் கொண்ட; ஸத்யா:—ஸத்யர்கள்; வேதஸ்ருதா:—வேதசுருதர்கள்; பத்ரா:—பத்ரர்கள்; தேவா:—தேவர்கள்; இந்ர:—சுவர்க்க ராஜன்; து—ஆனால்; ஸத்யஜித்—ஸத்யஜித்.
மூன்றாவது மனுவின் ஆட்சிக் காலத்தில், பிரமதரும், வசிஷ்டரின் மற்ற புத்திரர்களும் சப்த ரிஷிகளாயினர். ஸத்யர்களும், வேதசுருதர்களும் பத்ரர்களும் தேவர்களாயினர். மேலும் இந்திர பதவிக்கு ஸத்யஜித் தேர்வு செய்யப்பட்டார்.
பதம் 8.1.25
தர்மஸ்ய ஸுன்ருதாயாம் து பகவான் புருஷோத்தம:
ஸத்யஸேன இதி க்யாதோ ஜாத: ஸத்யவ்ரதை: ஸஹ
தர்மஸ்ய—தர்மத்துக்கு பொறுப்பாக உள்ள தேவரின்; ஸுன்ருதாயாம்—சூன்ருதா எனும் தன் மனைவியின் கருவில்; து—உண்மையில்; பகவான்—பரமபுருஷ பகவான்; புருஷ-உத்தம:—புருஷோத்தமரான; ஸத்யஸேன:—ஸத்யசேனர்; இதி—இவ்வாறாக; க்யாத:—புகழ்பெற்ற; ஜாத:—பிறந்தார்; ஸத்யவ்ரதை:—ஸத்யவிரதர்கள்; ஸஹ—உடன்.
இந்த மன்வந்தரத்தில், பரமபுருஷ பகவான் சூன்ருதாவின் கருவிலிருந்து தோன்றினார். இவர் தர்மத்திற்குப் பொறுப்பாக உள்ள தேவரான தர்மரின் மனைவியாவார். பெருமான் ஸத்யசேனரென்று புகழப்பட்டார். அவர் ஸத்யவிரதர்கள் எனப்படும் மற்ற தேவர்களுடன் தோன்றினார்.
பதம் 8.1.26
ஸோ ‘ன்ருத வ்ரத துஹ்சீலான் அஸதோ யக்ஷ- ராக்ஷஸான்
பூத-த்ருஹோ பூத-கணாம்ஸ் சாவதீத் ஸத்யஜித்-ஸக:
ஸ:—அவர்(ஸத்யசேனர்); அன்ருத-வ்ரத—பொய் பேசுவதில் விருப்பமுள்ளவர்களை; துஹ்சீலான்—அக்கிரமமாய் நடந்து கொண்ட; அஸத:—துஷ்டன்; யக்ஷி-ராக்ஷஸான்—யக்ஷர்களும், இராட்சஸர்களும்; பூத-த்ருஹ:—மற்ற ஜீவராசிகளின் முன்னேற்றத்தில் எப்பொழுதும் இடைஞ்சலாக இருக்கும்; பூத-கணான்—பூதகணங்கள்; மேலும்; அவதீத்—கொன்றார்; ஸத்யஜித்-ஸக:—அவரது நண்பர் ஸத்யஜித்துடன்.
ஸத்யசேனர், தமது நண்பரும், சுவர்க்க ராஜன் இந்திரனுமாகிய ஸத்யஜித்துடன், மற்ற ஜீவராசிகளுக்கு துன்பமிழைத்த யக்ஷர்களையும், இராட்சஸர்களையும் மற்றும் பூதகணங்களையும் கொன்றார். இவர்களனைவரும் பொய் பேசுபவர்களும், பாவிகளும் மற்றும் துஷ்டர்களுமாவர்.
பதம் 8.1.27
சதுர்த உத்தம-ப்ராதா மனுர் நாம்னா ச தாமஸ:
ப்ருது: க்யாதிர் நர: கேதுர் இதி ஆத்யா தச தத்-ஸுதா:
சதுர்த—நான்காவது மனு; உத்தம-ப்ராதா—உத்தமரின் சகோதரர்; மனு:—மனுவானார்; நாம்னா—எனும் நாமத்தால் புகழப்பட்டார்; ச—மேலும்; தாமஸ:—தாமஸர்; ப்ருது:—பிருது; க்யாதி—கியாதி: நர:—நரர்; கேது:—கேது; இதி—இவ்வாறாக; ஆத்யா:—தலைமையாகக் கொண்ட; தச—பத்து; தத்-ஸுதா:—தாமஸ மனுவின் புத்திரர்கள்.
மூன்றாவது மனுவின் சகோதரரான உத்தமர், தாமஸர் எனும் பெயரால் போற்றப்பட்டார். மேலும் அவர் நான்காவது மனுவானார். பிருது, கியாதி, நரர் மற்றும் கேது ஆகியோரை தலைமையாகக் கொண்ட பத்து புதல்வர்கள் தாமஸருக்கு இருந்தனர்.
பதம் 8.1.28
ஸத்யகா ஹரயோ வீரா தேவாஸ் த்ரிசிக ஈஸ்வர:
ஜ்யோதிர்தாமாதய: ஸப்த ரிஷயஸ் தாமஸே ‘ந்தரேஹ
ஸத்யகா:—ஸத்யகர்கள்; ஹரய:—ஹரிகள்; வீரா:—வீரர்கள்; தேவா:—தேவர்கள்; த்ரிசிக:—திரிசிகர்: ஈஸ்வர:—சுவர்க்க ராஜன்; ஜ்யோதிர்தாம-ஆதய:—புகழ் பெற்ற ஜோதிர்தாமரை தலைமையாகக் கொண்ட; ஸப்த—ஏழு; ரிஷய:—ரிஷிகள்; தாமஸே—தாமஸ மனுவின் ஆட்சிக் காலத்தில்; அந்தரே—உள்ளே.
தாமஸ மனுவின் ஆட்சிக் காலத்தில், ஸத்யர்கள், ஹரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோர் தேவர்களாக இருந்தனர். சுவர்க்க ராஜன் அல்லது இந்திரனாக திரிசிகர் இருந்தார். சப்தரிஷி-தாமத்தில் இருந்த ரிஷிகள் ஜோதிர்தாமரை தலைமையாகக் கொண்டிருந்தனர்.
பதம் 8.1.29
தேவா வைத்ருதயோ நாம வித்ருதேஸ் தனயா ந்ருப
நஷ்டா: காலேன யைர் வேதா வித்ருதா: ஸ்வேன தேஜஸா
தேவா:—தேவர்கள்; வைத்ருதய:—வைத்ருதிகள்; நாம—என்னும் பெயர் கொண்ட; வித்ருதே:—வித்ருதியின்; தனயா:—புத்திரர்களாய் இருந்தவர்கள்; ந்ருப—ராஜனே; நஷ்டா:—மறைந்துவிட்டன; காலேன—காலத்தின் ஆதிக்கத்தால்; யை:—எவரால்; வேதா:—வேதங்கள்; வித்ருதா:—பாதுகாக்கப்பட்டன; ஸ்வேன—அவர்களின் சொந்த; தேஜஸா—சக்தியால்.
ராஜனே, தாமஸ மன்வந்தரத்தில், வைத்ருதிகள் என்று அறியப்பட்ட வித்ருதியின் புத்திரர்களும் கூட தேவர்களாயினர். காலப்போக்கில் வேத பிரமாணம் மறைந்துவிட்டதால், இத்தேவர்கள், தங்களின் சுய சக்திகளால், வேத பிரமாணத்தைப் பாதுகாத்தனர்.
பதம் 8.1.30
தத்ராபி ஜக்ஞே பகவான் ஹரிண்யாம் ஹரிமேதஸ:
ஹரிர் இதி ஆஹருதோ யேன கஜேந்ரோ மோசிதோ க்ரஹாத்
தத்ராபி—அச்சமயத்தில்; ஜக்ஞே—தோன்றினார்; பகவான்—பரமபுருஷ பகவான்; ஹரிண்யாம்—ஹரிணீயின் கர்ப்பத்தில்; ஹரிமேதஸ:—ஹரிமேதாவினால் ஈனப்பட்ட; ஹரி:—ஹரி; இதி—இவ்வாறாக; ஆஹ்ருத:—என்று அழைக்கப்படும்; யேன—எவரால்; கஜ-இந்ர:—யானைகளின் அரசன்; மோசித:—விடுவிக்கப்பட்டது; க்ரஹாத்—ஒரு முதலையின் வாயிலிருந்து.
தவிரவும், இந்த மனவந்தரத்தில், பரமபுருஷராகிய விஷ்ணு, ஹரிமேதாவின் மனைவியான ஹரிணீயின் கருவிலிருந்து பிறந்தார். அவர் ஹரி என்று அறியப்பட்டார். கஜேந்திரன் யானைகளின் அரசனாகும். ஹரி, தமது பக்தனான கஜேந்திரனை, ஒரு முதலையின் வாயிலிருந்து காப்பாற்றினார்
பதம் 8.1.31
ஸ்ரீ-ராஜோவாச
பாதராயண ஏதத் தே ஸ்ரோதும் இச்சாமஹே வயம்
ஹரிர் யதா கஜ-பதிம் க்ராஹ க்ரஸ்தம் அமூமுசத்
ஸ்ரீ-ராஜா உவாச—பரீட்சித்து மகாராஜன் கூறினார்; பாதராயணே—பாதராயணரின் (வியாசதேவர்) புதல்வரே; ஏதத்—இதை; தே—உம்மிடமிருந்து; ஸ்ரோதும் இச்சாமஹே—செவியுற விரும்புகிறோம்; வயம்—நாங்கள்; ஹரி:—பகவான் ஹரி; யதா—எந்த விதத்தில்; கஜ-பதிம்—யானைகளின் அரசன் (கஜேந்திரன்); க்ராஹ-க்ரஸ்தம்—முதலையால் தாக்கப்பட்ட சமயத்தில்; அமூமுசத்—காப்பாற்றப்பட்டது.
பரீட்சித்து மகாராஜன் கூறினார்: எம்பெருமானே, பாதராயணி கஜேந்திரன் ஒரு முதலையால் தாக்கப்பட்டபோது, ஹரி எப்படி அதைக் காப்பாற்றினார் என்பதை விவரமாக அறிய நாங்கள் ஆசைப்படுகிறோம்.
பதம் 8.1.32
தத்-கதாஸு மஹத் புண்யம் தன்யம் ஸ்வஸ்த்யயனம் சுபம்
யத்ர யத்ரோத்தமஸ்லோகோ பகவான் கீயதே ஹரி:
தத்-கதாஸு—அக்கதைகளில்; மஹத்—உயர்ந்தது; புண்யம்—புண்ணியம் தருவது; தன்யம்—புகழத்தக்கது; ஸவஸ்த்யயனம்—மங்களகரமானது; சுபம்—நன்மையளிப்பது; யத்ர—எப்போதெல்லாம்; யத்ர—எங்கெல்லாம்; உத்தமஸ்லோக:—உத்தமசுலோகர் எனப்படும் பகவான் (உன்னத இலக்கியத்தால் விவரிக்கப்படுபவர்); பகவான்—பரமபுருஷ பகவான்; கீயதே—போற்றப்படுகிறது; ஹரி:—பரமபுருஷ பகவான்.
எந்த ஒரு இலக்கியத்தில் அல்லது கதையில், உத்தமசுலோகராகிய பரமபுருஷ பகவான் விவரிக்கப்பட்டு, புகழப்படுகின்றாரோ, அது நிச்சயமாக உயர்வானதும், தூயதும், புகழுக்குரியதும், மங்களம் அளிப்பதும் மற்றும் சர்வ நன்மையளிப்பதும் ஆகும்.
பதம் 8.1.33
ஸ்ரீ-ஸூத உவாச
பரீக்ஷிதைவம் ஸ து பாதராயணி:
ப்ராயோபவிஷ்டேன கதாஸு சோதித:
உவாச விப்ரா: ப்ரதினந்ய பார்த்திவ
முதா முனீனாம் ஸதஸி ஸ்ம ஸ்ருண்வதாம்
ஸ்ரீ-ஸுத: உவாச—ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்; பரீக்ஷிதா—பரீட்சித்து மகாராஜனால்; ஏவம்—இவ்வாறு; ஸ:—அவர்; து—உண்மையில்; பாதரயாணி:—சுகதேவ கோஸ்வாமி; ப்ராய-உபவிஷ்டேன—விரைவில் நேரிடவிருக்கும் மரணத்திற்காக காத்திருக்கும் பரீட்சித்து மகாராஜன்; கதாஸு—வார்த்தைகளால்; சோதித:—உற்சாகம் ஊட்டப்பட்டு; உவாச:—பேசினார்; விப்ரா:—பிராமணர்களே; ப்ரதினந்ய—பாராட்டிய பிறகு; பார்திவம்—பரீட்சித்து மகாராஜன்; முதா—பெரு மகிழ்ச்சியுடன்; முனீனாம்—மகா முனிவர்களின்; ஸதஸி—சபையில்; ஸ்ம—உண்மையில், ஸ்ருண்வதாம்—செவிசாய்க்க விரும்பிய.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பிராமணர்களே, இவ்வாறு விரைவில் நேரிடப் போகும் மரணத்தை எதிர்நோக்கியிருந்த பரீட்சித்து மகாராஜன், சுகதேவ கோஸ்வாமியைப் பேசுமாறு வேண்டினார். அப்போது மன்னரின் வார்த்தைகளால் உற்சாகப்படுத்தப்பட்ட சுகதேவ கோஸ்வாமி, மன்னருக்கு மரியாதை செலுத்தியப்பின், தாம் பேசுவதை செவியுற விரும்பிய முனிவர்களின் சபையில் பெருமகிழ்ச்சியுடன் பேசினார்.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பிரபஞ்ச நிர்வாகிகளான மனுக்கள்” எனும் தலைப்பை கொண்ட ஒன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.