அத்தியாயம் – 17
பரமபுருஷர் புதல்வராகத் தோன்ற
சம்மதித்தல்
பதம் 8.17.1
ஸ்ரீ-சுக உவாச
இதி உக்தா ஸாதிதீ ராஜன் ஸ்வ-பர்த்ரா கஸ்யபேன வை
அனு அதிஷ்டத் வ்ரதம் இதம் த்வாதசாஹம் அதந்ரிதா
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறாக; உக்தா—அறிவுறுத்தப்பட்டு; ஸா—அப்பெண்மணி; அதிதி:—அதிதி; ராஜன்—ராஜனே; ஸ்வ-பர்த்ரா—அவளது கணவரான; கஸ்யபேன—கஸ்யப முனிவரால்; வை—உண்மையில்; அனு—அதைப்போலவே; அதிஷ்டத்—நிறைவேற்றினாள்; வ்ரதம் இதம்—இந்த பயோ-விரத சடங்கை; த்வாதச-அஹம்—பன்னிரண்டு நாட்களுக்கு; அதந்ரிதா—எவ்வித சோம்பலும் இல்லாமல்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, இவ்வாறாக அதிதி தன் கணவரான கஸ்யப முனிவரால் அறிவுறுத்தப்பட்ட பின், அவரது உபதேசங்களை சோம்பலின்றி உறுதியாகப் பின்பற்றி, பயோ-விரத சடங்கை நிறைவேற்றினாள்.
பதங்கள் 8.17.2 – 8.17.3
சிந்தயந்தி ஏகயா புத்யா மஹா-புருஷம் ஈஸ்வரம்
ப்ரக்ருஹ்யேந்ரிய-துஷ்டாஸ்வான் மனஸா புத்தி-ஸாரதி:
மனஸ் சைகாக்ரயா புத்யா பகவதி அகிலாத்மனி
வாஸுதேவே ஸமாதாய சசார ஹ பயோ வ்ரதம்
சிந்தயந்தி—இடைவிடால் சிந்தித்து; ஏகயா—ஒரே கவனத்துடன்; புத்யா—மற்றும் புத்தியுடனும்; மஹா-புருஷம்—முழுமுதற் கடவுளின் மீது; ஈஸ்வரம்—பரம ஆளுனராகிய பகவான் விஷ்ணுவை; ப்ரக்ருஹ்ய—முழுமையாக கட்டுப்படுத்தி; இந்ரிய—புலன்களை; துஷ்ட—அடக்க முடியாத, சக்தி வாய்ந்த; அஸ்வான்—குதிரைகள்; மனஸா—மனதால்; புத்தி-ஸாரதி:—இரதத்தின் சாரதியான புத்தியின் உதவியுடன்; மன:—மனதை; ச—கூட; ஏக-அக்ரயா—முழு கவனத்துடன்; புத்தியா—புத்தியால்; பகவதி—பரமபுருஷ பகவானிடம்; அகில-ஆத்மனி—அனைத்து ஜீவராசிகளிலும் உள்ள பரமாத்மாவாகிய; வாஸுதேவே—பகவான் வாசுதேவன் மீது; ஸமாதாய—முழு கவனத்தைப் பதித்து; சசார—நிறைவேற்றினாள்; ஹ—இவ்வாறாக; பய-வ்ரதம்—பயோ-விரதம் எனப்படும் சடங்கை.
கலையாத முழு கவனத்துடன் அதிதி முழுமுதற் கடவுளைப் பற்றி எண்ணினாள். இவ்வாறாக சக்தி வாய்ந்த குதிரைகளுக்கொப்பான அவளது மனதையும், புலன்களையும் அவள் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாள். தன் மனதை அவள் பரமபுருஷராகிய வாசுதேவன் மீது பதித்தாள். இவ்வாறாக பயோ-விரதம் எனப்படும் சடங்கை அவள் நிறைவேற்றினாள்.
பதம் 8.17.4
தஸ்யா: ப்ராதுரபூத் தாத பகவான் ஆதி-புருஷ:
பீத-வாஸாஸ் சதுர்-பஹு: சங்க-சக்ர-கதா-தர:
தஸ்யா:—அவள் முன்; ப்ராதுரபூத்—தோன்றினார்; தாத—எனதருமை ராஜனே; பகவான்—பரமபுருஷ பகவான்; ஆதி-புருஷ:—ஆதி புருஷரான; பீத-வாஸா:—மஞ்சள் நிற ஆடை அணிந்தவராய்; சது:-பாஹு:—நான்கு கரங்களுடன்; சங்க-சக்ர-கதா-தர:—சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தியவராய்.
எனதருமை ராஜனே, பிறகு ஆதிபுருஷராகிய முழுமுதற் கடவுள், மஞ்சள் நிற ஆடைகளை அணிந்தவராய், ஒரு சங்கு, சக்கரம், கதை மற்றும் தாமரை ஆகியவற்றை ஏந்தியவாறு நான்கு கரங்களுடன் அதிதியின் முன் தோன்றினார்.
பதம் 8.17.5
தம் நேத்ர-கோசரம் வீக்ஷ்ய ஸஹஸோத்தாய ஸாதரம்
நனாம புவி காயேன தண்டவத்-ப்ரீதி-விஹ்வலா
தம்—அவரை (முழுமுதற் கடவுளை); நேத்ர-கோசரம்—அவளது கண்களுக்குப் புலப்பட்டதை; வீக்ஷ்ய—கண்டதும்; ஸஹஸா—திடீரென்று; உத்தாய—எழுந்து; ஸ-ஆதரம்—பெரும் மரியாதையுடன்; நனாம—மரியாதைக்குரிய வணக்கங்களை சமர்ப்பித்தாள்; புவி—பூமி மீது; காயேன—முழு உடலாலும்; தண்ட-வத்—ஒரு தடியைப் போல் சாஷ்டாங்கமாக விழுந்து; ப்ரீதி-விஹ்வலா—தெய்வீக ஆனந்தத்தால் பதற்றமடைந்து.
முழுமுதற் கடவுள் அதிதியின் கண்களுக்குக் காட்சியளித்த போது, அதிதி தெய்வீக ஆனந்தத்தினால் பெரிதும் ஆட்கொள்ளப்பட்டவளாய், திடீரென்று எழுந்து நின்று, பகவானுக்கு வணக்கம் செலுத்துவதற்காக, ஒரு தடியைப்போல் தரைமீது வீழ்ந்தாள்.
பதம் 8.17.6
ஸோத்தாய பத்தாஞ்ஜலிர் ஈடிதும் ஸ்திதா
நோத்ஸேஹ ஆனந்த-ஜலாகுலேக்ஷணா
பபூவ தூஷ்ணீம் புலகாகுலக்ருதிஸ்
தத்-தர்சனாத்யுத்ஸவ-காத்ர வேபது:
ஸா—அவள்; உத்தாய—எழுந்து நின்றவாறு; பத்த-அஞ்ஜலி:—கூப்பிய கரங்களுடன்; ஈடிதும்—பகவானை வழிபடுவதற்கு; ஸ்திதா—இருந்தாள்; ந உத்ஸேஹே—முயற்சி செய்ய முடியாமல்; ஆனந்த—உன்னத ஆனந்தத்தினால்; ஜல—நீரால்; ஆகுல-ஈக்ஷணா—அவளது கண்கள் நிரம்பியிருந்தன; பபூவ—இருந்தாள்; தூஷ்ணீம்—மௌனமாக; புலக—மெய் சிலிர்க்க; ஆகுல—பூரிப்படைந்து; ஆக்ருதி:—அவளது உருவம்; தத்-தர்சன—பகவானை தரிசித்ததால்; அதி-உத்ஸவ—பேரானந்தத்தால்; காத்ர—அவளது உடல்; வேபது:—நடுங்க ஆரம்பித்தது.
பகவானைத் துதிக்க இயலாமல், அதிதி கூப்பிய கரங்களுடன் மௌனமாக நின்றிருந்தாள். தெய்வீக ஆனந்தத்தினால் அவளது கண்களில் கண்ணீர் ததும்பியது, உடலில் புளகாங்கிதம் ஏற்பட்டது. முழுமுதற் கடவுளை அவளால் நேருக்கு நேராகக் காண முடிந்ததால், அவள் பரவசமடைந்தாள். அவளது உடலும் நடுங்கியது.
பதம் 8.17.7
ப்ரீத்யா சனைர் கத்கதயா கிரா ஹரிம்
துஷ்டாவ ஸா தேவி அதிதி: குரூத்வஹ
உத்வீக்ஷதீ ஸா பிபதீவ சக்ஷுவா
ரமா பதிம் யக்ஞ-பதிம் ஜகத்-பதிம்
ப்ரித்யா—அன்பினால்; சனை:—மீண்டும் மீண்டும்; கத்கதயா—தழுதழுத்த; கிரா—குரலுடன்; ஹரிம்—பரமபுருஷ பகவானிடம்; துஷ்டாவ—திருப்தியடைந்து; ஸா—அவள்; தேவீ—தேவ மங்கையான; அதிதி—அதிதி; குரு-உத்வஹ—பரீட்சித்து மகாராஜனே; உத்வீக்ஷதீ—உற்றுப் பார்க்கும்போது; ஸா—அவள்; பிபதீ இவ—அவள் பருகிவிடுவது போல் காணப்பட்டாள்; சக்ஷுஷா—கண்களால்; ரமா-பதிம்—திருமகளின் (ரமா) கணவராகிய, பகவானை; யக்ஞ-பதிம்—யாகங்களை எல்லாம் அனுபவிப்பவரான பகவானை; ஜகத்-பதிம்—அகில லோகங்களுக்கும் எஜமானரும், இறைவனுமான.
பரீட்சித்து மகாராஜனே, தேவ மங்கையான அதிதி பிறகு, பேரன்புடனும், தழுதழுத்த குரலுடனும் பரமபுருஷ பகவானிடம் பிரார்த்தனைகள் செய்யத் துவங்கினாள். திருமகளின் கணவரும், அனைத்து யாகச் சடங்குகளையும் அனுபவிப்பவரும், அகில லோக நாயகனும், இறைவனுமாகிய பரமபுருஷரைக் கண்களால் பருகி விடுவது போல் காணப்பட்டாள்.
பதம் 8.17.8
ஸ்ரீ-அதிதிர் உவாச
யக்ஞேச யக்ஞ-புருஷாச்யுத தீர்த்த-பாத
தீர்த்த-ஸ்ரவ: ஸ்ரவண-மங்கள-நாமதேய
ஆபன்ன-லோக-வ்ருஜினோபசமோதயாத்ய
சம் ந: க்ருதீச பகவன் அஸி தீன-நாத:
ஸ்ரீ-அதிதி: உவாச—தேவ மங்கையான அதிதி கூறினாள்; யக்ஞ-ஈச—யாகங்களின் ஈஸ்வரனே; யக்ஞ-புருஷ—அனைத்து யாகங்களின் நன்மைகளையும் அனுபவிப்பவர்; அச்யுத—களங்கமற்றவர்; தீர்த-பாத—எல்லாப் புண்ணிய யாத்திரை ஸ்தலங்களும் தமது தாமரைப் பாதங்களில் இருக்கப் பெற்றவர்; தீர்த்த-ஸ்ரவ:—எல்லா புண்ணியவான்களுக்கும் இறுதியான புகலிடம் என்று போற்றப்படுபவர்; ஸ்ரவண—யாரைப்பற்றி கேட்பது; மங்கள—மங்களகரமானதோ; நாமதேய—அவரது நாமத்தைப் பாடுவதும் மங்களகரமானதே; ஆபன்ன—சரணடைந்த; லோக—மக்களின்; வ்ருஜின—அபாயகரமான பெளதிக நிலையை; உபசம—தனித்து; உதய—தோன்றியுள்ளவர்; ஆத்ய—ஆதிபுருஷர்; சம்—மங்களத்தை; ந:—எங்கள்; க்ருதி—தயவுகூர்ந்து எங்களுக்கு அளிப்பீராக; ஈச—பரம ஆளுனரே; பகவன்—பகவானே; அஸி—நீர்; தீன-நாத:—நசுக்கப்பட்டவர்களின் ஒரே புகலிடமாவீர்.
தேவமங்கையான அதிதி கூறினாள்: எல்லா யாகச் சடங்குகளுக்கும் எஜமானரே, அவற்றை அனுபவிப்பவரே, களங்கமற்றவரே, பெரும் கீர்த்தி வாய்ந்தவரே உமது நாமத்தைப் பாடினால் எல்லா நல்லதிர்ஷ்டங்களும் உண்டாகும்! மூல முழுமுதற் கடவுளே, பரம் ஆளுனரே, எல்லாப் புண்ணிய ஸ்தலங்களுக்கும் புகலிடமே, எளிமையும், துன்பமும் கொண்ட ஜீவராசிகளுக்குப் புகலிடம் நீரே. அவர்களது துன்பத்தைக் குறைப்பதற்காகவே நீர் தோன்றியிருக்கிறீர். தயவுகூர்ந்து எங்களிடம் அன்பு கொண்டு, எங்களது நல்லதிர்ஷ்டத்தை பரவச் செய்வீராக.
பதம் 8.17.9
விஸ்வாய விஸ்வ-பவன-ஸ்திதி-ஸம்யமாய
ஸ்வைரம் க்ருஹீத-புரு-சக்தி-குணாய பூம்னே
ஸ்வ ஸ்தாய சஸ்வத்-உபப்ரும்ஹித-பூர்ண-போத
வ்யாபாதிதாத்ம-தமஸே ஹரயே நமஸ் தே
விஸ்வாய—உண்மையாகவே முழு பிரபஞ்சமாக இருப்பவரான பரமபுருஷ பகவானுக்கு; விஸ்வ—பிரபஞ்சத்தின்; பவன—படைத்தல்; ஸ்திதி—காத்தல்; ஸம்யமாய—மற்றும் அழித்தல்; ஸ்வைரம்—பூரண சுதந்திரமுள்ள; க்ருஹீத—கையிலெடுத்து; புரு—முற்றிலும்; சக்தி-குணாய—ஜட இயற்கையின் முக்குணங்களை ஆளும்; பூம்னே—பரம மகத்துவம் வாய்ந்தவர்; ஸ்வ-ஸ்தாய—எப்பொழுதும் தமது சுய ரூபத்திலேயே இருப்பவர்; சஸ்வத்—நித்தியமாக; உபப்ரும்ஹித—அடைந்தவர்; பூர்ண—பூரணமான; போத—ஞானம்; வ்யாபாதித—முற்றிலும் அழிக்கப்படுகிறது; ஆத்ம-தமஸே—பெருமானாகிய உமது மாயச் சக்தி; ஹரயே—பரமபுருஷருக்கு; நம தே—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
எம்பெருமானே, நீரே எங்கும் பரவியுள்ள விஸ்வரூபமாவீர். இப்பிரபஞ்சத்தைப் படைத்து, காத்து, அழிப்பதற்குப் பூரண சுதந்திரம் உள்ளவரும் நீரே. உமது அறிவு பிழைபடாததும், எப்பொழுதும் எச்சூழ்நிலைக்கும் பொருந்துவதாகவும் இருக்கிறது. இதனால் உமது சக்தியை நீர் பெளதிகத்தில் ஈடுபடுத்திய போதிலும், நீர் எப்பொழுதும் உமது ஆதி வடிவத்திலேயே இருக்கின்றீர். அந்நிலையிலிருந்து நீர் தாழ்வதேயில்லை. நீர் மாயையால் ஒருபோதும் குழப்பமடைவதில்லை. பெருமானே எனது பணிவான வணக்கங்களை உமக்கு நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.17.10
ஆயு: பரம் வபுர் அபீஷ்டம் அதுல்ய-லக்ஷ்மீர்
த்யோ-பூ-ரஸா: ஸகல-யோக-குணாஸ் த்ரி-வர்க:
ஞானம் ச கேவலம் அனந்த பவந்தி துஷ்டாத்
த்வத்தோ ந்ருணாம் கிம் உ ஸபத்ன-ஜயாதிர் ஆஸீ:
ஆயு:—ஆயுள்; பரம்—பிரம்மதேவருடையதைப் போன்ற நீண்ட; வபு:—ஒரு குறிப்பிட்ட வகையான உடல்; அபீஷ்டம்—வாழ்வின் இலட்சியம்; அதுல்ய-லக்ஷ்மீ:—பெளதிக வாழ்வில் இணையற்ற செல்வம்; த்யோ—உயர்கிரக அமைப்பு; பூ—பூலோகம்; ரஸா:—கீழ்க்கிரக அமைப்பு; ஸகல—எல்லா வகையான; யோக-குணா:—எட்டு யோக சித்திகள்; த்ரி-வர்க:—மதம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலனின்பம்; ஞானம்—தெய்வீக அறிவு; ச—மேலும்; கேவலம்—பூரணமான; அனந்த—வரம்பற்றவரே; பவந்தி—அனைத்தும் சாத்தியமாகின்றன; துஷ்டாத்—உமது திருப்தியால்; த்வத்த:—உம்மிடமிருந்து; ந்ருணாம்—அனைத்து ஜீவராசிகளின்; கிம்உ—அவைகளைப் பற்றி என்ன சொல்வது; ஸபத்ன—எதிரிகளை; ஜய—வெல்லும்; ஆதி:—மற்றும் பிறரை; ஆசீ:—அத்தகைய வரங்கள்.
வரம்பற்றவரே, பெருமானாகிய உம்மை திருப்திபடுத்துவதால், பிரம்ம தேவருடையதைப் போன்ற நீண்ட ஆயுள்; உயர்ந்த, தாழ்ந்த அல்லது மத்திய கிரக அமைப்புக்கள் ஒன்றில் ஒருடலைப் பெறுதல், எல்லையற்ற பௌதிகச் செல்வம், மதம், பொருளாதார முன்னேற்றம், புலன் திருப்தி, முழுமையான தெய்விக அறிவு, மற்றும் எட்டு யோக சித்திகள் ஆகிய அனைத்தையும் ஒருவரால் மிகச் சுலபமாகப் பெற்றுவிட முடியும், எதிரிகளை ஜெயிப்பதெனும் அற்ப விஷயங்களைப் பற்றி என்னவென்று சொல்வது!
பதம் 8.17.11
ஸ்ரீ-சுக உவாச
அதித்யைவம் ஸ்துதோ ராஜன் பகவான் புஷ்கரேக்ஷண:
க்ஷேத்ர-க்ஞ: ஸர்வ-பூதானாம் இதி ஹோவாச பாரத
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அதித்யா—அதிதியால்; ஏவம்—இவ்வாறு; ஸ்துத:—வழிபடப்பட்ட; ராஜன்—ராஜனே (பரீட்சித்து மகாராஜன்); பகவான்—பரமபுருஷ பகவான்; புஷ்கர-ஈக்ஷண:—தாமரை போன்ற கண்களுடைய; க்ஷேத்ர-க்ஞ:—பரமாத்மாவான; ஸர்வ-பூதானாம்—அனைத்து ஜீவராசிகளின்; இதி—இவ்வாறாக; ஹ—உண்மையில்; உவாச—பதிலளித்தார்; பாரத—பரத வம்சத்தில் சிறந்தவரே.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரத வம்சத்தில் மிகச் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மாவாகிய, தாமரைக் கண்களையுடைய பகவானை இவ்வாறு அதிதி வணங்கியபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
பதம் 8.17.12
ஸ்ரீ-பகவான் உவாச
தேவ-மாதர் பவத்யா மே விஞ்ஞாதம் சிர-காங்கக்ஷிதம்
யத் ஸபத்னைர் ஹ்ருத-ஸ்ரீணாம் ச்யாவிதானாம் ஸ்வ-தாமத:
ஸ்ரீ பகவான்உவாச—பரமபுருஷ பகவான் கூறினார்; தேவ-மாதா—தேவர்களின் தாயே; பவத்யா—உனது; மே—என்னால்; விஞ்ஞாதம்—புரிந்துகொள்ளப்பட்டது; சிர-காங்க்ஷிதம்—நீண்ட காலமாக நீ விரும்பி வந்ததை; யத்—ஏனெனில்; ஸபத்னை—எதிரிகளால்; ஹ்ருத-ஸ்ரீணாம்—செல்வங்களை எல்லாம் இழந்து விட்ட உனது புத்திரர்களின்; ச்யாவிதானாம்—முறியடிக்கப்பட்டது; ஸ்வ-தாமத:—அவர்களது சொந்த வசிப்பிடங்களிலிருந்து.
பரமபுருஷ பகவான் கூறினார்: தேவர்களின் தாயே, உனது புத்திரர்களின் செல்வங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, எதிரிகளால் அவர்கள் தங்களின் வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். உன்னுடைய இப்புத்திரர்களின் நன்மையைக் குறித்த உனது நெடுங்கால ஆசைகளை நான் அறிவேன்.
பதம் 8.17.13
தான் வினிர்ஜித்ய ஸமரே துர்மதான் அஸுரர்ஷபான்
ப்ரதிலப்த-ஜய-ஸ்ரீபி: புத்ரைர் இச்சஸி உபாஸிதும்
தான்—அவர்களை; வினிர்ஜித்ய—வென்று; ஸமரே—போரில்; துர்மதான்—பலத்தால் திமிர் பிடித்த; அஸுர-ரிஷபான்—அசுரர்களின் தலைவர்களை; ப்ரதிலப்த—திரும்பப் பெற்று; ஜய—வெற்றி; ஸ்ரீபி:—அத்துடன் செல்வத்தையும்; புத்ரை:—உனது புத்திரர்களுடன்; இச்சஸி—நீ ஆசைப்படுகிறாய்; உபாஸிதும்—ஒன்றாகச் சேர்ந்து என்னை வழிபடுவதற்கு.
தேவ மங்கையே, போரில் எதிரிகளை வென்று, உங்களுடைய வசிப்பிடத்தையும், செல்வங்களையும், உனது புத்திரர்களையும் மீண்டும் பெற்று, அவர்களோடு சேர்ந்து நீ என்னை வழிபட விரும்புகிறாய் என்பதை நானறிவேன்.
பதம் 8.17.14
இந்ர-ஜ்யேஷ்டை: ஸ்வ-தனயைர் ஹதானாம் யுதி வித்விஷாம்
ஸ்த்ரியோ ருதந்தீர் ஆஸாத்ய த்ரஷ்டும் இச்சஸி துஹ்கிதா:
இந்ர—ஜ்யேஷ்டை:—யாருக்கிடையில் இந்திரன் மூத்தவராக இருக்கிறாரோ அந்த; ஸ்வ-தனயை:—உனது சொந்த புத்திரர்களால்; ஹதானாம்—சொல்லப்பட்டு; யுதி—போரில்; வித்விஷாம்—எதிரிகளின்; ஸ்த்ரிய:—மனைவிகள்; ருதந்தீ:—துக்கப்படுவதை; ஆஸாத்ய—அவர்களது கணவன்மார்களின் சவங்களுக்கு அருகில் வந்து; த்ரஷ்டும் இச்சஸி—நீ காண விரும்புகிறாய்; துஹ்கிதா:—மிகவும் துக்கத்தில் ஆழ்ந்திருப்பதை.
இந்திரனை தலைமையாகக் கொண்ட தேவர்களாகிய உனது புத்திர்களால், அசுரர்கள் போரில் கொல்லப்படும்போது, அவர்களது மரணத்தினால், அவர்களுடைய மனைவிகள் துக்கப்படுவதை நீ காண விரும்புகிறாய்.
பதம் 8.17.15
ஆத்மஜான் ஸூஸம்ருத்தாம்ஸ் த்வம் ப்ரத்யாஹ்ருத-யச:-ஸ்ரிய:
நாக-ப்ருஷ்டம் அதிஷ்டாய க்ரீடதோ த்ரஷ்டும் இச்சஸி
ஆத்ம-ஜான்—உனது சொந்த புத்திரர்கள்; ஸு-ஸம்ருத்தான்—பூரண செல்வச் செழிப்புடன்; த்வம்—நீ; ப்ரத்யாஹ்ருத—திரும்பவும் பெற்று; யச:—கீர்த்தியை; ஸ்ரீய:—செல்வங்களை; நாக-ப்ருஷ்டம்—சுவர்க்க லோகத்தில்; அதிஷ்டாய—அமைந்துள்ள; க்ரீடத:—வாழ்வை அவர்கள் அனுபவிப்பதை; த்ரஷ்டும்—காண; இச்சஸி—நீ விரும்புகிறாய்.
உனது புத்திரர்கள், இழந்த கீர்த்தியையும், செல்வங்களையும் திரும்பப் பெற்று, அவர்களுடைய சுவர்க்க லோகத்தில் வழக்கம் போல் மீண்டும் வாழவேண்டும் என்று நீ விரும்புகிறாய்.
பதம் 8.17.16
ப்ராயோ ‘துனா தே ‘ஸுர-யூத-நாதா
அபாரணீயா இதி தேவி மே மதி:
யத் தே ‘நுகூலேஸ்வர-விப்ர-குப்தா
ந விக்ரமஸ் தத்ர ஸுகம் ததாதி
ப்ராய:—கிட்டத்தட்ட; அதுனா—தற்சமயம்; தே—அவர்கள் அனைவரும்; அஸுர-யூத-நாதா:—அசுரர்களின் தலைவர்கள்; அபாரணியா:—வெல்ல முடியாதவர்களாக உள்ளனர்; இதி—இவ்வாறாக; தேவி—அதிதி தேவியே; மே—எனது; மதி:—அபிப்பிராயம்; யத்—ஏனெனில்; தே—அசுரர்கள் அனைவரும்; அநுகூல-ஈஸ்வர-விப்ர-குப்தா:—யாரிடம் பரமபுருஷர் எப்பொழுதும் ஆதரவு காட்டுகின்றாரோ; அந்த பிராமணர்களால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்; ந—இல்லை; விக்ரம:—சக்தியின் பிரயோகம்; தத்ர—அங்கு; ஸுகம்—மகிழ்ச்சியை; ததாதி—அளிக்க முடியும்.
தேவ மாதாவே, கிட்டத்தட்ட அசுரத் தலைவர்கள் அனைவருமே, பரமபுருஷரின் ஆதரவை எப்பொழுதும் பெற்றிருப்பவர்களான பிராமணர்களால் பாதுகாக்கப்பட்டிருப்பதால், அவர்களை இப்போது வெல்லுவது சாத்தியமல்ல என்பது எனது அபிப்பிராயமாகும். இதனால் இச்சமயத்தில் அவர்களுக்கெதிரான சக்தியைப் பிரயோகிப்பதென்பது சிறிதும் மகிழ்ச்சியை விளைவிக்காது.
பதம் 8.17.17
அதாபி உபாயோ மம தேவி சிந்த்ய:
ஸ்ந்தோஷிதஸ்ய வ்ரத-சர்யயா தே
மமார்சனம் நார்ஹதி கந்தும் அன்யதா
ஸ்ரத்தானுரூபம் ஃபல-ஹேதுகத்வாத்
அத—ஆகவே; அபி—இத்தகையதொரு சூழ்நிலை ஏற்பட்டிருப்பினும்; உபாய:—ஏதேனும் உபாயத்தை; மம—என்னால்; தேவி—தாயே: சிந்த்ய:—யோசிக்க வேண்டும்; ஸந்தோஷிதஸ்ய—மிகவும் சந்தோஷம் அடைந்ததால்; வ்ரத-சார்யயா—விரதத்தை மேற்கொண்ட; தே—உன்னால்; மம அர்சனம்—என்னை வழிபட்டது; ந—ஒருபோதும் இல்லை; அர்ஹதி—தகுதிக்கேற்ப; கந்தும்-அன்யதா—இல்லையெனில் அப்படியாவதற்கு; ஸ்ரத்தா-அனுரூபம்—ஒருவரது நம்பிக்கைக்கும், பக்திக்கும் ஏற்ப; ஃபல—பலனின்; ஹேதுகத்வாத்—காரணமாக இருப்பதிலிருந்து.
ஆயினும், உனது விரதத்தினால் நான் திருப்தி அடைந்திருப்பதால், அதிதி தேவியே, உனக்கு ஆதரவளிக்கக்கூடிய ஏதேனும் உபாயத்தை நான் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. ஏனெனில் என்னை வழிபடுவதானது ஒருபோதும் வீணாவதில்லை. மாறாக அது ஒருவரது தகுதிக்கேற்ப அவர் விரும்பிய பலனை நிச்சயமாக அளிக்கிறது.
பதம் 8.17.18
த்வயார்சிதஸ் சாஹம் அபத்ய-குப்தயே
பயோ-வ்ரதேனானுகுணம் ஸமீடித:
ஸ்வாம்சேன புத்ரத்வம் உபேத்ய தே ஸுதான்
கோப்தாஸ்மி மாரீச-தபஸி அதிஷ்டித:
த்வயா—உன்னால்; அர்சித:—வழிபடப்பட்ட; ச—கூட; அஹம்—நான்; அபத்ய-குப்தயே—உனது புத்திரர்களுக்கு பாதுகாப்புக் கொடுத்து; பய:-வ்ரதேன—பயோ-விரதத்தினால்; அனுகுணம்—இயன்றளவு; ஸமீடித:—முறையாக வழிபட்டாய்; ஸ்வ-அம்சேன—எனது அம்சத்தினால்; புத்ரத்வம்—உனது புதல்வனாகி; உபேத்ய—இச்சந்தர்ப்பத்தை ஏற்று; தே ஸுதான்—உன்னுடைய மற்ற புதல்வர்களுக்கு; கோப்தா அஸ்மி—நான் பாதுகாப்பு அளிப்பேன்; மாரீச—கஸ்யப முனிவரின்; தபஸி—தவத்தில்; அதிஷ்டித:—இருக்கும்.
உன் புதல்வர்களைக் காப்பாற்றுவதற்காக, மிகச்சிறந்த பயோ-விரதத்தை நிறைவேற்றியதன் மூலமாக, என்னிடம் பிரார்த்தனை செய்து, முறையாக என்னை நீ வழிபட்டதாலும், கஸ்யப முனிவரின் தவத்தின் காரணத்தாலும், நான் உனது புத்திரனாகத் தோன்றி, உன்னுடைய மற்ற புதல்வர்களைக் காப்பாற்ற ஒப்புக் கொள்கிறேன்
பதம் 8.17.19
உபதாவ பதிம் பத்ரே ப்ரஜாபதிம் அகல்மஷம்
மாம் ச பாவயதீ பத்யாவ் ஏவம் ரூபம் அவஸ்திதம்
உபதாவ—சென்று வழிபடு; பதிம்—உன் கணவரை; பத்ரே—நற்பண்புடைய பெண்ணே; ப்ரஜாபதிம்—ஒரு பிரஜாபதியாக உள்ள; அகல்மஷம்—அவரது தவத்தினால் மிகவும் தூய்மை அடைந்துள்ள; மாம்—என்னை; ச—கூட; பாவயதி—பற்றி சிந்தித்து; பத்யைள—உனது கணவருக்குள்; ஏவம்—இவ்வாறாக; ரூபம்—உருவம்; அவஸ்திதம்—அங்குள்ள.
உனது கணவராகிய கஸ்யபர், அவரது தவத்தினால் தூய்மை பெற்றுள்ளார். ஆகவே அவரது உடலுக்குள் நான் எப்பொழுதும் இருப்பதாக எண்ணி, அவரிடம் சென்று அவரை வழிபடு.
பதம் 8.17.20
நைதத் பரஸ்மா ஆக்யேயம் ப்ருஷ்டயாபி கதஞ்சன
ஸர்வம் ஸம்பத்யதே தேவி தேவ-குஹ்யம் ஸுஸம்வ்ருதம்
ந—கூடாது; ஏதத்—இதை; பரஸ்மை—மற்றவர்களுக்கு; ஆக்யேயம்—வெளிப்படுத்த; ப்ருஷ்டயா அபி—விசாரிக்கப்பட்டாலும்; கதஞ்சன—யாராலும்; ஸர்வம்—அனைத்தும்; ஸம்பத்யதே—வெற்றியளிக்கும்; தேவி—பெண்ணே; தேவ-குஹ்யம்—தேவர்களுக்கும் கூட மிகவும் இரகசியமானது; ஸு-ஸம்வ்ருதம்—இரகசியத்தை மிகவும் கவனமாக காப்பாற்றி.
பெண்ணே, யாரேனும் உன்னிடம் விசாரித்தாலும், இவ்வுண்மையை நீ யாருக்கும் வெளிப்படுத்தக் கூடாது. மிகவும் இரகசியமாக வைத்திருக்க வேண்டியதை இரகசியமாக வைத்திருந்தால் அது வெற்றியளிக்கும்.
பதம் 8.17.21
ஸ்ரீ-சுக உவாச
ஏதாவத் உக்த்வா பகவாம்ஸ் தத்ரைவாந்தரதீயத
அதிதிர் துர்லபம் லப்த்வா ஹரேர் ஜன்மாத்மனி ப்ரபோ:
உபாதாவத் பதிம் பக்த்யா பரயா க்ருத-க்ருத்யவத்
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏதாவத்—இவ்விதமாக; உக்த்வா—கூறி (அவளிடம்); பகவான்—பரமபுருஷ பகவான்; தத்ர ஏவா—அந்த இடத்திலிருந்து; அந்த:-அதீயத—மறைந்துவிட்டார்; அதிதி:—அதிதி; துர்லபம்—கிடைத்தற்கரிய பேறு; லப்த்வா—பெற்று; ஹரே:—பரமபுருஷ பகவானின்; ஜன்ம—பிறப்பை; ஆத்மனி—அவளுக்குள்; பிரபோ:—பிரபுவின்; உபாதாவத்—உடனே சென்றாள்; பதிம்—தன் கணவரிடம்; பக்த்யா—பக்தியுடன்; பரயா—பெரும்; க்ருத-க்ருத்ய-வத்—தான் மிகவும் வெற்றி அடைந்ததாக எண்ணி.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறு பேசியபின் பரமபுருஷ பகவான் அவ்விடத்திலிருந்து மறைந்து போனார். பகவானைத் தமது புதல்வராக பெறப்போகும் கிடைத்தற்கரிய வரத்தைப் பெற்ற அதிதி, தான் வெற்றியடைந்ததாகக் கருதி பெரும் பக்தியுடன் அவள் தனது கணவரிடம் சென்றாள்.
பதம் 8.17.22
ஸ வை ஸமாதி-யோகேன கஸ்யபஸ் தத் அபுத்யத
ப்ரவிஷ்டம் ஆத்மனி ஹரேர் அம்சம் ஹி அவிததேக்ஷண:
ஸ:—கஸ்யப முனிவர்; வை—உண்மையாக; ஸமாதி-யோகேன—யோக தியானத்தினால்; கஸ்யப:—கஸ்யப முனிவரால்; தத்—பிறகு; அபுத்யத—புரிந்துகொள்ள முடிந்தது; ப்ரவிஷ்டம்—புகுந்திருப்பதை; ஆத்மனி—தமக்குள்; ஹரே:—பரமபுருஷரின்; அம்சம்—ஒரு அம்சம்; ஹி—உண்மையாக; அவிதத-ஈக்ஷண:—என்றும் தவறாத திருஷ்டியைப் பெற்றவர்.
என்றும் தவறாத திருஷ்டியுடையவரான கஸ்யப முனிவர், தியான சமாதியில் இருந்ததால், பரமபுருஷ பகவானுடைய ஓர் அம்சம் தனக்குள்ளே புகுந்திருப்பதை அவரால் காண முடிந்தது.
பதம் 8.17.23
ஸோ ‘தித்யாம் வீர்யம் தத்த தபஸா சிர-ஸம்ப்ருதம்
ஸமாஹித-மனா ராஜன் தாருணி அக்னிம் யதானில:
ஸ:—கஸ்யபர்; அதித்யாம்—அதிதிக்குள்; வீர்யம்—வீரியத்தை; ஆதத்த—வைத்தார்; தபஸா—தவத்தினால்; சிர-ஸம்ப்ருதம்—பல ஆண்டுகளாக காப்பாற்றி வைத்திருந்த; ஸமாஹித-மனா:—பரமபுருஷ பகவானுடைய சமாதியில் முழுமையாக ஆழ்ந்து; ராஜன்—ராஜனே; தாருணி—விறகில் உள்ள; அக்னிம்—நெருப்பு போல்; யதா—போல்; அனில:—காற்று.
ராஜனே, காற்று, இரு மரங்களுக்கிடையில் உராய்வை ஏற்படுத்தி நெருப்பை உண்டாக்குகின்றது. அதைப்போலவே, பரமபுருஷ பகவானில் தமது உன்னதமான நிலையை முற்றிலும் ஆழ்த்திவிட்டவரான கஸ்யப முனிவர், தமது வீரியத்தை அதிதியின் கருவிற்கு மாற்றினார்.
பதம் 8.17.24
அதிதேர் திஷ்டிதம் கர்பம் பகவந்தம் ஸனாதனம்
ஹிரண்யகர்போ விஜ்ஞாய ஸமீடே குஹ்ய-நாமபி:
அதிதே:—அதிதியின் கருவில்; திஷ்டிதம்—ஸ்தாபிக்கப்பட்டுள்ள; கர்பம்—கருவுற்ற நிலையை; பகவந்தம்—முழுமுதற் கடவுளை; ஸனாதனம்—நித்தியமானவரான; ஹிரண்யகர்ப:—பிரம்மதேவர்; விஜ்ஞாய—இதை அறிந்த; ஸமீடே—துதி செய்தார்; குஹ்ய-நாமபி:—தெய்வீக நாமங்களால்.
முழுமுதற் கடவுள் இப்போது அதிதியின் கருவினுள் இருப்பதை அறிந்த பிரம்மதேவர், தெய்வீக நாமங்களை உச்சரித்து, பகவானை அவர் துதிக்கத் துவங்கினார்.
பதம் 8.17.25
ஸ்ரீ-ப்ரஹ்மோவாச
ஐயோருகாய பகவன் உருக்ரம நமோ ‘ஸ்து தே
நமோ ப்ரஹ்மண்ய-தேவாய த்ரி-குணாய நமோ நம:
ஸ்ரீ-ப்ரஹ்மா உவாச—பிரம்மதேவர் ஸ்தோத்திரம் செய்தார்; ஜய—போற்றி; உருகாய—எப்பொழுதும் போற்றப்படுபவரான இறைவனுக்கு; பகவன்—எம்பெருமானே; உருக்ரம—பெரும் புகழுக்குரிய செயல்களையுடைய; நம: அஸ்து தே—உமக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்; நம:—எனது பணிவான வணக்கங்கள்; ப்ரஹ்மண்ய-தேவாய—ஆன்மீகிகளின் இறைவனுக்கு; த்ரி-குணாய—இயற்கையின் முக்குணங்களை ஆள்பவரான; நம: நம:—மீண்டும் மீண்டும் எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பிரம்ம தேவர் கூறினார்: எல்லோராலும் போற்றப்படுபவரும், அசாதாரணமான செயல்களைக் கொண்டவருமான முழுமுதற் கடவுளே, போற்றி உமக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். ஆன்மீகிகளின் இறைவனே, மூன்று ஜட இயற்கைக் குணங்களின் ஆளுனரே, திரும்பத் திரும்ப எனது பணிவான வணக்கங்களை உமக்கு சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.17.26
நமஸ் தே ப்ருஷ்ணி-கர்பாய வேத-கர்பாய வேதஸே
த்ரி-நாபாய த்ரி-ப்ருஷ்டாய சிபி-விஷ்டாய விஷ்ணவே
நம: தே—எனது பணிவான வணக்கங்களை நான் உமக்கு சமர்ப்பிக்கிறேன்; ப்ருஷ்ணி-கர்பாய—முன்பு பிருஷ்ணியின் (அதிதி, அவளது முற்பிறவியில்) கருவினுள் வாழ்ந்தவர்; வேத-கர்பாய—எப்பொழுதும் வேத அறிவினுள் இருப்பவர்; வேதஸே—பூரண அறிவுள்ளவர்; த்ரி-நாபாய—தமது நாபியில் இருந்து வளரும் தண்டில் மூவுலகங்களையும் அடக்கியிருப்பவர்; த்ரி-ப்ருஷ்டாய—மூவுலகங்களுக்கும் மேற்பட்டவர்; சிபி-விஷ்டாய—எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் இருப்பவர்; விஷ்ணுவே—எங்கும் பரவியுள்ள பரமபுருஷ பகவானுக்கு.
எங்கும் பரவியுள்ளவரும், எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் புகுந்திருப்பவருமான பகவான் விஷ்ணுவிற்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். மூவுலகங்களும் உமது நாபியினுள் அடங்கியுள்ளன என்ற போதிலும், நீர் அவற்றுக்கு மேற்பட்டவராக இருக்கிறீர். முன்பு நீர் பிருஷ்னியின் புதல்வராகத் தோன்றினீர். பரம சிருஷ்டிக் கர்த்தாவும், வேத ஞானத்தால் மட்டுமே அறியப்படுபவருமான உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
பதம் 8.17.27
த்வம் ஆதிர் அந்தோ புவனஸ்ய மத்யம்
அனந்த-சக்திம் புருஷம் யம் ஆஹு:
காலோ பவான் ஆக்ஷிபதீச விஸ்வம்
ஸ்ரோதோ யதாந்த: பதிதம் கபீரம்
த்வம்—தாங்கள்; ஆதி:—மூலகாரணமான; அந்த—அழிவின் காரணம்; புவனஸ்ய—பிரபஞ்சத்தின்; மத்யம்—தற்போதுள்ள தோற்றத்தின் பராமரிப்பு; அனந்த-சக்திம்—எண்ணற்ற சக்திகளின் இருப்பிடம்; புருஷம்—பரமபுருஷர்; யம்—யாரை; ஆஹு:—அவர்கள் கூறுகின்றனர்; கால:—நித்திய காலம்; பவான்—தாங்கள்; ஆக்ஷிபதி—கவர்ந்திழுக்கிறீர்; ஈச—பரமபுருஷர்; விஸ்வம்—பிரபஞ்சம் முழுவதையும்; ஸ்ரோத:—அலைகள்; யதா—போல; அந்த: பதிதம்—நீரினுள் விழுந்துள்ள; கபீரம்—மிகவும் ஆழமான.
எம்பெருமானே, நீரே துவக்கமும், மூவுலகங்களின் தோற்றமும், அவற்றின் இறுதி அழிவுமாக இருக்கின்றீர். வேதங்களில் நீர், எல்லையற்ற சக்திகளின் இருப்பிடம் என்று போற்றப்படுகிறீர், நீரே பரமபுருஷர். பெருமானே ஆழமான நீரினுள் விழுந்த கிளைகளையும், இலைகளையும் அலைகள் கவர்ந்திழுப்பது போல், நித்திய கால ரூபமாகிய நீர் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தையும் கவர்ந்திழுக்கிறீர்.
பதம் 8.17.28
த்வம் வை ப்ரஜானாம் ஸ்திர-ஜங்கமானாம்
ப்ரஜாபதீனாம் அஸி ஸம்பவிஷ்ணு:
திவௌகஸாம் தேவ திவஸ் ச்யுதானாம்
பராயணம் நெளர் இவ மஜ்ஜதோ ‘ப்ஸு
த்வம்—தாங்கள்; வை—உண்மையில்; ப்ரஜானாம்—அனைத்து ஜீவராசிகளின்; ஸ்திர-ஜங்கமானாம்—அசைவன அல்லது அசையாதன எதுவாயினும்; ப்ரஜாபதீனாம்—அனைத்து பிரஜாபதிகளின்; அஸி—நீரே; ஸம்பவிஷ்ணு:—அனைவரையும் உற்பத்தி செய்பவர்; திவ-ஓகஸாம்—உயர் கிரகவாசிகளின்; தேவ—பரம புருஷரே; திவ: ச்யுதானாம்—தங்களது வசிப்பிடங்களிலிருந்து இப்போது விழுந்துவிட்டவர்களான தேவர்களின்; பராயணம்—உயர்ந்த புகலிடம்; நௌ:—படகு; இவ—போல்; மஜ்ஜத:—மூழ்கும் ஒருவரின்; அப்ஸு—நீரில்.
எம்பெருமானே. அசையும், அசையாத ஜீவராசிகள் அனைவரையும் ஆதியில் உற்பத்தி செய்தவர் நீரே. பிரஜாபதிகளை உற்பத்தி செய்தவரும் நீரே. பெருமானே, நீரில் மூழ்கும் ஒருவனுக்கு நம்பிக்கை அளிப்பது படகு ஒன்றுதான் என்பது போல, தங்களது சுவர்க்க லோக இராஜ்யத்தை இப்போது இழந்துள்ள தேவர்களுக்குப் புகலிடமாக இருப்பவர் நீர் ஒருவரே.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பரமபுருஷர் அதிதியின் புதல்வராகத் தோன்ற சம்மதித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.