அத்தியாயம் – 16
பயோ:விரத வழிபாட்டு முறையை
நிறைவேற்றுதல்
பதம் 8.16.1
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் புத்ரேஷு நஷ்டேஷு தேவ-மாதாதிதிஸ் ததா
ஹ்ருதே த்ரி-விஷ்டபே தைத்யை: பர்யதப்யத் அனாதவத்

ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக; புத்ரேஷு—அவளது புத்திரர்கள்; நஷ்டேஷு—அவர்களின் பதவிகளிலிருந்து மறைந்துவிட்ட போது; தேவ-மாதா—தேவர்களின் தாயாரான; அதிதி:—அதிதி; ததா—அப்போது; ஹ்ருதே—காணாமற் போய்விட்டதால்; த்ரி-விஷ்டபே— சுவர்க்கலோக இராஜ்யம்; தைத்யை:—அசுரர்களின் ஆதிக்கத்தால்; பர்யதப்யத்—வருந்தத் துவங்கினாள்; அனாத-வத்—அவளைப் பாதுகாப்பவர் இல்லாத்தைப் போல்.

சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, அதிதியின் புத்திரர்களான தேவர்கள் சுவர்க்கத்திலிருந்து மறைந்துவிட்டபோது, அவர்களின் பதவிகளை அசுரர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதைக் கண்ட அதிதி, தம்மை இனி காப்பாற்றுபவர் இல்லாததைப் போல் துக்கப்பட ஆரம்பித்தாள்.

பதம் 8.16.2
ஏகதா கஸ்யபஸ் தஸ்யா ஆஸ்ரமம் பகவான் அகாத்
நிருத்ஸவம் நிரானந்தம் ஸமாதேர் விரதஸ் சிராத்

ஏகதா—ஒரு நாள்; கஸ்யப:—பெரும் முனிவரான கஸ்யபர்; தஸ்யா:—அதிதியின்; ஆஸ்ரமம்—ஆசிரமத்திற்கு; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்தவரான; அகாத்—சென்றார்; நிருத்ஸவம்—உற்சாகம் இல்லாமலும்; நிரானந்தம்—மகிழ்ச்சி இல்லாமலும்; ஸமாதே:—அவரது சமாதி நிலையை; விரத:—நிறுத்தி; சிராத்—நீண்ட காலத்திற்குப் பிறகு.

பற்பல நாட்களுக்குப் பிறகு, மிகவும் சக்திவாய்ந்தவரான கஸ்யப முனிவர், தமது சமாதி நிலையிலிருந்து எழுந்தார். அதிதியின் ஆசிரமத்திற்குத் திரும்பிச் சென்ற அவர், அது மகிழ்ச்சிகரமான நிலையில் இல்லாததைக் கண்டார்.

பதம் 8.16.3
ஸ பத்னிம் தீன-வதனாம் க்ருதாஸன-பரிக்ரஹ:
ஸபாஜிதோ யதா-ன்யாயம் இதம் ஆஹ குரூத்வஹ

ஸ:—கஸ்யப முனி; பத்னீம்—அவரது மனைவியிடம்; தீன-வதனாம்—வாடிய முகத்தைக் கொண்ட; க்ருத-ஆஸன-பரிக்ரஹ:—ஓர் ஆசனத்தை ஏற்றுக் கொண்ட பின்; ஸபாஜித:—அதிதியால் கௌரவிக்கப்பட்டு; யதா-ன்யாயம்—காலத்திற்கும், இடத்திற்கும் ஏற்ப; இதம் ஆஹ—பின்வருமாறு பேசினார்; குரு-உத்வஹ—குருக்களில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே.

குருக்களில் சிறந்தவரே, கஸ்யப முனிவர் நன்கு வரவேற்று உபசரிக்கப்பட்டு, தமது ஆசனத்தில் அமர்ந்த பின், மிகவும் கவலையுடன் இருந்த தமது மனைவியான அதிதியிடம் பின்வருமாறு பேசினார்.

பதம் 8.16.4
அபி அபத்ரம் ந விப்ராணாம் பத்ரே லோகே ‘துனாகதம்
ந தர்மஸ்ய ந லோகஸ்ய ம்ருத்யோஸ் சந்தானுவர்தின:

அபி—ஏதேனும்; அபத்ரம்—துரதிர்ஷ்டம்; ந—இல்லை; விப்ராணாம்—பிராமணர்களின்; பத்ரே—பேரன்பு மிக்க அதிதியே; லோகே—இவ்வுலகில்; அதுனா—தற்போது; ஆகதம்—வந்துள்ளது; ந—இல்லை; தர்மஸ்ய—மதக்கொள்கைகளின்; ந—இல்லை; லோகஸ்ய—பொதுமக்களின்; ம்ருத்யோ:—மரணம்; சந்த-அனுவர்தின:—மரணத்தில் வழிகளைப் பின்பற்றுபவர்கள்.

பேரன்பு மிக்கவனே, மதக் கொள்கைகள், பிராமணர்கள் அல்லது மரணத்தின் பாதைக்கு உட்பட்டவர்களான பொதுமக்கள் ஆகியவற்றின் சம்பந்தமாக, இப்போது அமங்களமான சம்பவம் ஏதேனும் நிகழ்ந்திருக்கக் கூடுமோ என்பதை அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.

பதம் 8.16.5
அபி வாகுசலம் சிஞ்சித் க்ருஹேஷு க்ருஹ-மேதினி
தர்மஸ்யார்தஸ்ய காமஸ்ய யத்ர யோகோ ஹி அயோகினாம்

அபி—நான் அறிய விரும்புகிறேன்; வா—ஏதேனும்; அகுசலம்—அமங்களம்; இஞ்சித்—சில; கிருஹேஷு—வீட்டில்; கிருஹ-மேதினி—இல்லற வாழ்வில் பற்றுக் கொண்டவனான எனது மனைவியே; தர்மஸ்ய—மதக்கொள்கையின்; அர்தஸ்ய—பொருளாதார நிலையின்; காமஸ்ய—விருப்பங்களுடைய திருப்தியின்; யத்ர—வீட்டில்; யோக:—தியானத்தின் பலன்; ஹி—உண்மையில்; அயோகிணாம்—ஆன்மீகிகளாக இல்லராதவர்களாலும் கூட.

இல்லற வாழ்வில் மிகவும் பற்றுக் கொண்டுள்ள எனது மனைவியே, மதக் கொள்கைகள், பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலன்களின் திருப்தி ஆகியவை இல்லற வாழ்வில் முறையாக பின்பற்றப்படுமானால், ஒருவரது செயல்கள், ஓர் ஆன்மீகியின் செயல்களுக்கு ஒப்பானவையாக இருக்கும். இக் கொள்கைகளைப் பின்பற்றுவதில் ஏதேனும் முரண்பாடு நிகழ்ந்திருக்கக் கூடுமோ என்பதை அறிய நான் விரும்புகிறேன்.

பதம் 8.16.6
அபி வாதிதயோ ‘ப்யேத்ய குடும்பாஸக்தயா த்வயா
க்ருஹாத் அபூஜிதா யாதா: ப்ரத்யுத்தானேன வா க்வசித்

அபி—எதுவாயினும்; வா—ஏதேனும்; அதிதய:—அழைப்பின்றி வரும் விருந்தினர்கள்; அப்யேத்ய—வீட்டிற்கு வரும்; குடும்ப-ஆஸக்தயா—குடும்ப அங்கத்தினரிடம் அளவுக்கதிகமாக பற்று வைத்திருப்பவர்கள்; த்வயா—உன்னால்; க்ருஹாத்—வீட்டிலிருந்து; அபூஜிதா:—நன்கு வரவேற்கப்படாமல்; யாதா:—சென்று விட்டனரோ; ப்ரத்யுத்தானேன—எழுந்து நின்று; வா—அல்லது; க்வசித்—சில சமயங்களில்.

குடும்ப அங்கத்தினரிடம் நீ கொண்ட அளவுக்கதிகமான பற்றின் காரணத்தால், அழையா விருந்தாளிகளை நீ வரவேற்கத் தவறி, அதனால் நமக்கு வரவேற்பு இல்லை என்றெண்ணி அவர்கள் சென்றுவிட்டனரோ என்று நான் சந்தேகிக்கிறேன்.

பதம் 8.16.7
க்ருஹேஷு யேஷு அதிதயோ நார்சிதா: ஸலிலைர் அபி
யதி நிர்யாந்தி தே நூனம் பேருராஜ-க்ருஹோபமா:

க்ருஹேஷு—வீட்டில்; யேஷு—எது; அதிதய:—அழையா விருந்தாளிகள்; ந—இல்லை; அர்சிதா:—வரவேற்க; ஸலிலை: அபி—சிறிது தண்ணீரை கொடுப்பதாலும்; யதி—எனின்; நிர்யாந்தி—அவர்கள் சென்றுவிடுவார்கள்; தே—இத்தகைய இல்லற வாழ்வு; நூனம்—உண்மையில்; பேரு-ராஜ—குள்ள நரிகளின்; க்ருஹ—வீடுகள்; ஊபமா:—போன்றவை.

எந்த வீடுகளிலிருந்து சிறிதளவு நீர்கூட அளிக்கப்படாமல் விருந்தாளிகள் சென்று விடுகிறார்களோ, அத்தகைய வீடுகள் பூமியிலுள்ள குள்ள நரிகளின் வசிப்பிடத்தைப் போன்றவையாகும்.

பதம் 8.16.8
அபி அக்னயஸ் து வேலாயாம் ந ஹுதா ஹவிஷா ஸதி
த்வயோத்விக்ன-தியா பத்ரே ப்ரோஷிதே மயி கர்ஹிசித்

அபி—அல்லது; அக்னய:—நெருப்புகள்; து—உண்மையில்; வேலாயாம்—யாகத்தீயில்; ந—இல்லை; ஹுதா:—ஊற்றப்பட்டது; ஹவிஷா—நெய்; சதி—கற்புக்கரசியே; த்வயா—உன்னால்; உத்விக்ன-தியா—சில கவலைகளின் காரணத்தினால்; பத்ரே—மங்களம் உடையவளே; ப்ரோஷிதே-மயி—வீட்டிலிருந்து நான் வெளியே சென்றிருந்த போது; கர்ஹிசித்—சிலசமயங்களில்.

கற்பும், மங்களமும் உடையவளே, வேறு இடங்களுக்குச் செல்வதற்காக நான் வீட்டைவிட்டு வெளியேறியிருந்தபோது, யாகத்தீயில் நெய் ஊற்றாத அளவிற்கு அவ்வளவு பெரிய கவலைக்கு நீ உட்பட்டிருந்தாயா?

பதம் 8.16.9
யத்-பூஜயா காம-துக்ஹான்
யாதி லோகான் க்ருஹான்வித:
ப்ராஹ்மணோ ‘க்னிஸ் ச வை விஷ்ணோ:
ஸர்வ-தேவாத்மனோ முகம்

யத்-பூஜையா:—நெருப்பையும், பிராமணர்களையும் வழிபடுவதன் மூலமாக காம்-துகான்—ஒருவரின் விருப்பங்களை நிறைவேற்றுவது; யாதி—ஒருவர் செல்கிறார்; லோகான்—உயர் கிரக அமைப்பை நோக்கி; கிருஹ-அன்வித:—இல்லற வாழ்வில் பற்றுக் கொண்டுள்ள ஒருவர்; ப்ராஹ்மண:—பிராமணர்களும்; அக்னி: ச—மற்றும் நெருப்பும்; வை—உண்மையில்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ஸர்வ-தேவ-ஆத்மன:—அனைத்து தேவர்களுக்கும்; ஆத்மாவான; முகம்—வாய்.

நெருப்பையும், பிராமணர்களையும் வழிபடுவதன் மூலமாக, குடும்பஸ்தரொருவர் உயர் கிரகங்களில் வாழ்வதெனும் அவர் விரும்பிய இலக்கை அடைய முடியும். ஏனென்றால், யாகத்தீயும், பிராமணர்களும், எல்லாத் தேவர்களுக்கும் பரமாத்மாவாக இருக்கும் பகவான் விஷ்ணுவின் வாயாக கருதப்படுகின்றன.

பதம் 8.16.10
அபி ஸர்வே குசலினஸ் தவ புத்ரா மனஸ்வினி
லக்ஷயே ‘ஸ்வஸ்தம் ஆத்மானம் பவத்யா லக்ஷணைர் அஹம்

அபி—எதுவாகிலும்; ஸர்வே—எல்லா; குசலின:—பூரண மங்களத்தில்; தவ—உனது; புத்ரா—புத்திரர்கள்: மனஸ்வினி—உதார மனம் கொண்ட பெண்ணே; லக்ஷயே—நான் காண்கிறேன்; அஸ்வஸ்தம்—சாந்தமற்ற நிலையில்; ஆத்மானம்—மனம்; பவத்யா:—எனது; லக்ஷணை:—அறிகுறிகளால்; அஹம்—நான்.

உதார குணமுள்ள பெண்ணே, உன்னுடைய புத்திரர்கள் அனைவரும் நலமுடன் வாழ்கிறார்களா? உனது வாடிய முகத்தைக் கண்டு, உனது மனம் அமைதியிழந்து கிடப்பதை என்னால் அறிய முடிகிறது. இது எப்படி?

பதம் 8.16.11
ஸ்ரீ-அதிதிர் உவாச
பத்ரம் த்விஜ-கவாம் ப்ரஹ்மன் தர்மஸ்யாஸ்ய ஜனஸ்ய ச
த்ரி-வர்கஸ்ய பரம் க்ஷேத்ரம் க்ருஹமேதின் க்ருஹா இமே

ஸ்ரீ-அதிதி: உவாச—ஸ்ரீமதி அதிதி கூறினாள்; பத்ரம்—ஸர்வ மங்களகரமான; த்விஜ-கவாம்—பிராமணர்களின் மற்றும் பசுக்களின்; ப்ரஹ்மன்—பிராமணரே; தர்மஸ்ய அஸ்ய—சாஸ்திரத்தில் குறிப்பிட்டுள்ள மதக்கொள்கைகளின்; ஜனஸ்ய—பொது ஜனங்களின்; ச—மேலும்; த்ரி-வர்கஸ்ய—ஏற்றம் பெறுவதற்கான மூன்று வழிகளின் (தர்மம், அர்த்தம் மற்றும் காமம்); பரம்—பரமன்; க்ஷேத்ரம்—களம்; க்ருஹமேதின்—இல்லறவாழ்வில் பற்றுக் கொண்டவரான எனது கணவரே; க்ருஹா:—உமது வீடு; இமே—இவை அனைத்தும்.

அதிதி கூறினாள்: மரியாதைக்குரிய எனது பிராமண கணவரே, பிராமணர்கள், பசுக்கள், மதம் மற்றும் பிற மக்களின் நலம் ஆகிய அனைத்தும் நன்றாகவே இருக்கின்றன. வீட்டின் எஜமானரே, தர்மம், அர்த்தம் மற்றும் காமம் ஆகிய மூன்று கொள்கைகளும் இல்லற வாழ்வில் செழிப்புடனேயே இருக்கின்றன. இதன் விளைவாக இல்லற வாழ்வு பூரண நல்லதிர்ஷ்டம் உள்ளதாக இருக்கிறது.

பதம் 8.16.12
அக்னயோ ‘திதயோ ப்ருத்யா பிக்ஷவோ யே ச லிப்ஸவ:
ஸர்வம் பகவதோ ப்ரஹ்மன் அனுத்யானான் ந ரிஷ்யதி

அக்னய:—அக்னியை வழிபடுதல்; அதிதய:—விருந்தாளிகளை வரவேற்றல்; ப்ருத்யா:—பணியாட்களை திருப்தி செய்தல்; பிக்ஷவ:—பிச்சைக்காரர்களை திருப்தி செய்தல்; யே—அவர்கள் எல்லோரும்; ச—மேலும்; லிப்ஸவ:—அவர்கள் விரும்பியவாறு (கவனித்துக் கொள்ளப்படுகின்றனர்); ஸர்வம்—அவர்கள் அனைவரும்; பகவத:—என் தலைவராகிய உம்மை; ப்ரஹ்மன்—பிராமணரே; அனுத்யானாத்—எப்பொழுதும் நினைத்துக் கொண்டு இருப்பதிலிருந்து; ந ரிஷ்யதி—எதுவும் தவறவில்லை (அனைத்தும் நன்கு செய்யப்படுகின்றன).

அன்புள்ள கணவரே, அக்னிகள், விருந்தாளிகள், பணியாட்கள் பிச்சைக்காரர்கள் ஆகிய அனைவரும் என்னால் நன்கு கவனித்துக் கொள்ளப்படுகின்றனர். நான் எப்பொழுதும் உம்மைப் பற்றி நினைத்துக் கொண்டிருப்பதால், எந்த மதக் கொள்கையையும் நான் செய்யத் தவறுவது சாத்தியமல்ல.

பதம் 8.16.13
கோ து மே பகவன் காமோ ந ஸம்பத்யேத மானஸ:
யஸ்யா பவான் ப்ராஜாத்யக்ஷ ஏவம் தர்மான் பிரபாஷதே

க:—என்ன; து—உண்மையில்; மே—எனது; பகவான்—என் தலைவா; காம:—ஆசை; ந—இல்லை; ஸம்பத்யேத—நிறைவேற்றிக் கொள்ள முடியும்; மானஸ:—என் மனதிற்குள்; யஸ்யா—என்னுடைய; பவான்—தாங்கள்; ப்ரஜா-அத்யக்ஷ:—பிரஜாபதி; ஏவம்—இவ்வாறாக; தர்மான்—மதக்கொள்கைகள்; பிரபாஷதே—பேசுகிறீர்.

என் தலைவா, தாங்கள் ஒரு பிரஜாபதியாக இருப்பதுடன் மதக் கொள்கைகளின் விஷயத்தில் எனக்கு உபதேசம் செய்பவராகவும் இருப்பதால், எனது ஆசைகளனைத்தும் எப்படி நிறைவேறாமல் போகும்?

பதம் 8.16.14
தவைவ மாரீச மன:-சரீரஜா:
ப்ரஜா இமா: ஸத்வ-ரஜஸ்-தமோ-ஜுஷ:
ஸமோ பவாம்ஸ் தாஸ்வ் அஸுராதிஷு ப்ரபோ
ததாபி பக்தம் பஜதே மஹேஸ்வர:

தவ—உமது; ஏவ—உண்மையில்; மாரீச—மரிசியின் புதல்வரே; மன:-ஸரீர-ஜா:—உமது உடலிலிருந்து அல்லது உமது மனதிலிருந்து பிறந்தவர்கள் (அசுரர்கள், மற்றும் தேவர்கள் அனைவரும்); ப்ரஜா:—உமக்குப் பிறந்த; இமா:—அவர்களனைவரும்; ஸத்வ-ரஜ:-தம:-ஜுஷ:—சத்வகுணம், ரஜோகுணம் அல்லது தமோகுணம் ஆகியவற்றால் களங்கப்படுத்தப்பட்ட; ஸம:—சமமானவர்; பவான்—தாங்கள்; தாஸு—அவர்கள் ஒவ்வொருவரிடமும்; அஸுர-ஆதிஷு—அசுரர்களிலிருந்து ஆரம்பமாகும்; ப்ரபோ—என் தலைவா; ததா அபி—இருப்பினும்; பக்தம்—பக்தர்களை; பஜதே—கவனித்துக் கொள்கிறார்; மஹா-ஈஸ்வர:—பரம ஆளுனராகிய முழுமுதற் கடவுள்.

மரீசியின் புதல்வரே, தாங்கள் ஒரு சிறந்தபுருஷராக இருப்பதால், எல்லா அசுரர்களிடமும், தேவர்களிடமும் சமநோக்குக் கொண்டவராக இருக்கிறீர். உமது உடலிலிருந்து அல்லது மனதிலிருந்து பிறந்தவர்களாகிய இந்த தேவர்கள் சத்வம், ரஜஸ் அல்லது தமஸ் ஆகிய முக்குணங்களில் ஏதேனும் ஒன்றைப் பெற்றுள்ளனர். ஆனால் பரம ஆளுனராகிய பரமபுருஷ பகவான் அனைத்து ஜீவராசிகளிடமும் சமமாக இருக்கிறார். அவர் குறிப்பாக பக்தர்களுக்கு ஆதரவு காட்டுபவராக இருக்கிறார்.

பதம் 8.16.15
தஸ்மாத் ஈச பஜந்த்யா மே ஸ்ரேயஸ் சிந்தய ஸுவ்ரத
ஹ்ருத-ஸ்ரியோ ஹ்ருத-ஸ்தானான் ஸபத்னை: பாஹி ந: ப்ரபோ

தஸ்மாத்—ஆகவே: ஈச—சக்தி வாய்ந்த ஆளுநரே; பஜந்த்யா:—உமது சேவகியான; மே—எனது; ஸ்ரேய:—மங்களத்தை; சிந்தய—கருத்திற் கொள்வீராக; ஸுவ்ரத—நற்பண்புகள் கொண்டவரே; ஹ்ருத-ஸ்ரிய:—எல்லா செல்வங்களையும் இழந்துள்ள; ஹ்ருத-ஸ்தானான்—வசிப்பிடத்தையும் இழந்துள்ள; ஸபத்னை:—எதிரிகளால்; பாஹி—தயவு செய்து காப்பாற்றுங்கள்; ந:—எங்களை; ப்ரபோ—என் தலைவா.

ஆகவே, நற்பண்புகள் கொண்ட எஜமானரே, அன்புடன் உமது பணிப்பெண்ணுக்கு ஆதரவு காட்டுங்கள், எங்களது எதிரிகளானஅசுரர்களால் எங்களுடைய செல்வத்தையும், வசிப்பிடத்தையும் இப்போது நாங்கள் இழந்து தவிக்கிறோம். அன்புடன் எங்களை ஆதரிப்பீராக.

பதம் 8.16.16
பரைர் விவாஸிதா ஸாஹம் மக்னா வ்யஸன-ஸாகரே
ஐஸ்வர்யம் ஸ்ரீர் யச: ஸ்தானம் ஹ்ருதானி ப்ரபலைர் மம

பரை:—எங்களுடைய எதிரிகளால்; விவாஸிதா—எங்களது வசிப்பிடத்திலிருந்து பறித்துக் கொள்ளப்பட்டன; ஸா—அதே; அஹம்—நான்; மக்னா—மூழ்கிவிட்டோம்; வ்யஸன-ஸாகரே—துன்பக்கடலில்; ஐஸ்வர்யம்—செல்வம்; ஸ்ரீ:—அழகு; யச:—புகழ்; ஸ்தானம்—இடம்: ஹ்ருதானி—அனைத்தும் பறித்துக் கொள்ளப்பட்டன; ப்ரபலை:—மிகவும் சக்தி வாய்ந்த; மம:—எனது.

எங்களுடைய வெல்லுவதற்கறிய, சக்திவாய்ந்த எதிரிகளான அசுரர்கள், எங்களது செல்வம், அழகு, புகழ் மட்டுமின்றி எங்களது வசிப்பிடத்தையும் கூட பறித்துக் கொண்டனர். உண்மையில் நாங்கள் இப்போது தலைமறைவாக வாழ்வதுடன் பெரும் துன்பக்கடலில் மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.

பதம் 8.16.17
யதா தானி புன: ஸாதோ ப்ரபத்யேரன் மமாத்மஜா:
ததா விதேஹி கல்யாணம் தியா கல்யாண க்ருத்தம

யதா—அவ்வாறு; தானி—நாங்கள் இழந்த பொருட்கள் அனைத்தையும்; புன:—மீண்டும்; ஸாதோ—சிறந்த முனிவரே; ப்ரபத்யேரன்—திரும்பப்பெற முடியும்; மம—எனது; ஆத்ம-ஜா:—குழந்தைகள் (புத்திரர்கள்); ததா—அவ்வாறு; விதேஹி—அன்புடன் செய்வீராக; கல்யாணம்—மங்களத்தை; தியா—கருத்திற்கொண்டு; கல்யாண-க்ருத்-தம—எங்களது நன்மைக்காக செயற்படுபவர்களுள் மிகச்சிறந்தவரே.

முனிவர்களில் சிறந்தவரே, மங்களகரமான வரங்களை அளிப்பவர்களுள் மிகச்சிறந்தவரே, தயவுசெய்து எங்களுடைய நிலையை கருத்தில்கொண்டு, எனது புத்திர்கள் இழந்துவிட்டதை அவர்கள் திரும்பப் பெறுவதற்குரிய வரங்களை அவர்களுக்கு அளிப்பீராக.

பதம் 8.16.18
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் அப்யர்திதோ ‘தித்யா கஸ் தாம் ஆஹ ஸமயன் இவ
அஹோ மாயா-பலம் விஷ்ணோ: ஸ்நேஹ-பத்தம் இதம் ஜகத்

ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; அப்யர்தித:—வேண்டிக் கொள்ளப்பட்டு; அதித்யா—அதிதியால்; க:—கஸ்யப முனி; தாம்—அவளிடம்; ஆஹ—கூறினார்; ஸ்மயன்—புன்னகை செய்து; இவ—அவ்வாறு; அஹோ—ஐயோ பாவம்; மாயா-பலம்—மாயா சக்தியின் பலம்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ஸ்னேஹ-பத்தம்—இந்த அன்பினால் வசீகரிக்கப்பட்டு; இதம்—இந்த; ஜகத்—உலகம் முழுவதும்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறு கஸ்யப முனிவரை அதிதி வேண்டிக் கொண்டபோது, அவர் இலேசாக புன்னகை செய்து, பின்வருமாறு கூறினார், “ஐயோ பாவம்! விஷ்ணுவின் மாயச்சக்தி எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. இச்சக்தியின் மூலமாக உலகம் முழுவதுமே குழந்தைப் பாசத்தால் கட்டுப்பட்டுள்ளது.

பதம் 8.16.19
க்வ தேஹோ பெளதிகோ ‘நாத்மா க்வ சாத்மா ப்ரக்ருதே: பர:
கஸ்ய கே பதி-புத்ராத்யா மோஹ ஏவ ஹி காரணம்

க்வ—எத்தகையது; தேஹ:—இந்த ஜட உடல்; பௌதிக:—ஐந்து மூலப் பொருட்களாலானது; அனாத்மா—ஜீவாத்மா அல்ல; க்வ—எத்தகையது; ச—தவிரவும்; ஆத்மா—ஜீவாத்மா; ப்ரக்ருதே:—ஜட உலகிற்கு; பர—மேலான; கஸ்ய—எவரின்; கே—யார்; பதி—கணவன்; புத்ர-ஆதயா:—அல்லது புத்திரன் முதலிய; மோஹ:—மாயை; ஏவ—உண்மையில்; ஹி—நிச்சயமாக; காரணம்—காரணம்.

கஸ்யப முனி தொடர்ந்து கூறினார்: பஞ்ச பூதங்களாலான இந்த ஜட உடல் என்பது என்ன? இது ஆத்மாவிலிருந்து வேறுபட்டுள்ளது. உண்மையில், பெளதிக மூலப் பொருட்களாலான உடலிலிருந்து ஆத்மா முற்றிலும் வேறானதாகும். ஆனால் தேகப் பற்றின் காரணத்தால், ஒருவர் கணவராகவோ அல்லது மகனாகவோ கருதப்படுகிறார். பொய்யான இவ்வுறவு முறைகள் தவறான எண்ணத்தினால் விளைந்தவையாகும்.

பதம் 8.16.20
உபதிஷ்டஸ்வ புருஷம் பகவந்தம் ஜனார்தனம்
ஸர்வ-பூத-குஹா-வாஸம் வாஸுதேவம் ஜகத்-குரும்

உபதிஷ்டஸ்வ—வழிபட முயற்சி செய்; புருஷம்—பரம புருஷரான; பகவந்தம்—முழுமுதற் கடவுளை; ஐநார்தனம்—எதிரிகளை கொன்று விடக் கூடியவரான: ஸர்வ-பூத-குஹா-வாஸம்—எல்லோருடைய இதயத்திலும் வசிப்பவரான; வாஸுதேவம்—எங்கும் பரவியிருப்பவரும், வசுதேவரின் புத்திரருமான வாசுதேவன் அல்லது கிருஷ்ணர்; ஜகத்-குரும்—முழு உலகிற்கும் ஆன்மீக குருவும், போதகருமான.

எனது அன்புள்ள அதிதி, பரமபுருஷ பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவாயாக. அவரே அனைத்திற்கும் எஜமானர். அவரால் எல்லோருடைய எதிரிகளையும் அடக்கிவிட முடியும். மேலும் அவர் எல்லோருடைய இதயத்திலும் அமர்ந்திருக்கிறார். கிருஷ்ணர், அல்லது வாசுதேவன் எனப்படும் அப்பரம புருஷரே பிரபஞ்சத்தின் ஆன்மீக குரு என்பதால், அவரால் மட்டுமே அனைவருக்கும் சர்வ மங்களகரமான வரங்களை அளிக்க முடியும்.

பதம் 8.16.21
ஸ விதாஸ்யதி தே காமான் ஹரிர் தீனானுகம்பன:
அமோகா பகவத்-பக்திர் நேதரேதி மதிர் மம

ஸ:—அவர் (வாசுதேவன்); விதாஸ்யதி—சந்தேகமின்றி நிறைவேற்றுவார்; தே—உனது; காமான்—ஆசைகளை; ஹரி:—பரமபுருஷ பகவான்; தீன—ஏழைகளிடம்; அனுகம்பன:—மிகவும் கருணை கொண்டவர்; அமோகா—தவறாதவர்; பகவத்-பக்தி:—பரமபுருஷ பகவானுக்கு செய்யப்படும் பக்தித் தொண்டு; ந—இல்லை; இதரா—பகவத் பக்தியைத் தவிர மற்றனைத்தும்; இதி—இவ்வாறாக; மதி:—அபிப்ராயம்; மம—எனது.

ஏழைகளிடம் மிகவும் கருணை கொண்டவரான பரமபுருஷ பகவான் உனது ஆசைகளையெல்லாம் நிறைவேற்றுவார். ஏனெனில் அவருக்குச் செய்யப்படும் பக்தித்தொண்டு நிலையானதாகும். இதுவே எனது அபிப்ராயம்.

பதம் 8.16.22
ஸ்ரீ-அதிதிர் உவாச
கேனாஹம் விதினா ப்ரஹ்மன் உபஸ்தாஸ்யே ஜகத்-பதிம்
யதா மே ஸத்ய-ஸங்கல்போ விதத்யாத் ஸ மனோரதம்

ஸ்ரீ-அதிதி உவாச—ஸ்ரீமதி அதிதி கூறினாள்; கேன—எதனால்; அஹம்—நான்; விதினா—கட்டுப்பாட்டு விதிகளால்; ப்ரஹ்மன்—பிராமணரே; உபஸ்தாஸ்யே—திருப்திப்படுத்த முடியுமோ; ஜகத்-பதிம்—பிரபஞ்சத்தின் நாயகரான; ஜகந்நாதரை; யதா—எதனால்; மே—எனது; ஸத்ய-ஸங்கல்ப:—ஆசை உண்மையில் நிறைவேற்றப்படக் கூடும்; விதத்யாத்—நிறைவேறுமோ; ஸ:—அவர் (பரமபுருஷர்); மனோரதம்—இலட்சியங்கள் அல்லது ஆசைகள்.

ஸ்ரீமதி அதிதி கூறினாள்: பிராமணரே, உலகின் பரம எஜமானரை வழிபடுவதற்கான கட்டுப்பாட்டு விதிகளை எனக்குக் கூறுங்கள். இதன் மூலமாக பகவான் என்னிடம் திருப்தியடைந்து, எனது ஆசைகளைப் பூர்த்தி செய்யட்டும்.

பதம் 8.16.23
ஆதிச த்வம் த்விஜ-ஸ்ரேஷ்ட விதிம் தத்-உபதாவனம்
ஆசு துஷ்யதி மே தேவ: ஸீதந்த்யா: ஸஹ புத்ரகை:

ஆதிச—எனக்கு உபதேசம் செய்யுங்கள்; த்வம்—என் கணவா; த்விஜ-ஸ்ரேஷ்ட—பிராமணர்களில் சிறந்தவரே; விதிம்—கட்டுப்பாட்டு விதிகளை; தத்—பகவானை; உபதாவனம்—வழிபடும் முறையை; ஆசு—மிக விரைவில்; துஷ்யதி—திருப்தியடைவார்; மே—என்னிடம்; தேவ:—பகவான்; ஸீதந்த்யா:—இப்போது துக்கப்படும்; ஸஹ—உடன்; புத்ரகை:—எனது புத்திரர்களான தேவர்கள் அனைவரும்.

பிராமணர்களில் சிறந்தவரே, முழுமுதற் கடவுள் வெகு விரைவில் என்னிடம் திருப்தியடைந்து என்னையும், எனது புத்திரர்களையும், மிகவும் அபாயமான இச் சூழ்நிலையிலிருந்து காப்பாற்றுவதற்குரிய மிகச் சிறந்த வழிபாட்டு முறையை, அன்புடன் எனக்குக் கூறுவீராக.

பதம் 8.16.24
ஸ்ரீ-கஸ்யப உவாச
ஏதன் மே பகவான் ப்ருஷ்ட: ப்ரஜா-காமஸ்ய பத்மஜ:
யத் ஆஹ தே ப்ரவக்ஷ்யாமி வ்ரதம் கேசவ-தோஷணம்

ஸ்ரீ-கஸ்யப: உவாச—கஸ்யப முனி கூறினார்; ஏதத்—இது; மே—என்னால்; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; ப்ருஷ்ட:—அவர் வேண்டிக் கொள்ளப்பட்ட போது; ப்ரஜா-காமஸ்ய—குழந்தைகளுக்காக ஆசைப்பட்டு; பத்ம-ஜ:—ஒரு தாமரைப் பூவிலிருந்து பிறந்தவரான பிரம்ம தேவர்; யத்—என்னவெல்லாம்; ஆஹ—அவர் கூறினார்; தே—உனக்கு; ப்ரவக்ஷ்யாமி—நான் விவரிப்பேன்; வ்ரதம்—வழிபாட்டின் வடிவில்; கேசவ-தோஷணம்—பரமபுருஷ பகவானாகிய கேசவன் திருப்தி அடையக்கூடிய அம்முறையால்.

ஸ்ரீ கஸ்யப முனி கூறினார்: குழந்தைகளைப் பெற நான் விரும்பிய போது, தாமரைப் பூவிலிருந்து பிறந்தவரான பிரம்ம தேவரிடம் நான் கேள்விகள் கேட்டேன். பிரம்ம தேவர் எனக்கு உபதேசித்த அதே வழிமுறையை இப்போது நான் உனக்கு விவரிக்கப் போகிறேன். இம்முறையால் பரமபுருஷ பகவானாகிய கேசவன் திருப்தியடைவார்.

பதம் 8.16.25
ஃபால்குனஸ்யாமலே பக்ஷே த்வாதசாஹம் பயோ-வ்ரதம்
அர்சயேத் அரவிந்தாக்ஷம் பக்த்யா பரமயான்வித:

ஃபால்குனஸ்ய—ஃபால்குன மாதத்தின் (பிப்ரவரி மற்றும் மார்ச்); அமலே—வளர்பிறைக் காலத்தில்; பக்ஷே—பதினான்கு நாட்கள் (பட்சம்); த்வாதச-அஹம்—ஏகாதசிக்கு மறுநாளான துவாதசியுடன் முடிவுறும் பன்னிரண்டு நாட்களுக்கு; பய:-வ்ரதம்—பாலை மட்டும் அருந்தும் விரதத்தை ஏற்று; அர்சயேத்—ஒருவர் வழிபட வேண்டும்; அரவிந்த-அக்ஷம்—தாமரைக் கண்களையுடைய பரமபுருஷ பகவானை; பக்த்யா—பக்தியுடன்; பரமயா—கலப்பற்ற; அன்வித:—பூரணமான.

ஃபால்குண மாதத்தின் (பிப்ரவரி மற்றும் மார்ச்) வளர்பிறையில், துவாதசியுடன் முடிவுறும் பன்னிரண்டு நாட்களுக்கு ஒருவர், பாலை மட்டும் அருந்தும் விரதத்தை மேற்கொண்டு, தாமரைக் கண்களையுடைய பரமபுருஷ பகவானைப் பூரணமான பக்தியுடன் வழிபட வேண்டும்.

பதம் 8.16.26
ஸினீவால்யாம் ம்ருதாலிப்ய ஸ்னாயாத் க்ரோட- விதீர்ணயா
யதி லப்யேத வை ஸ்ரோதஸி ஏதம் மந்த்ரம் உதீரயேத்

ஸினீவால்யாம்—அமாவாசையன்று; ம்ருதா—மண்ணை; ஆலிப்ய—உடலின் மேல் பூசி; ஸ்னாயாத்—ஒருவர் குளிக்க வேண்டும்; க்ரோட-விதீர்ணயா—ஒரு காட்டுப் பன்றியின் கோரைப் பற்களால் தோண்டி எடுக்கப்பட்ட; யதி—என்றால்; லப்யேத—அது கிடைக்கக் கூடியதென்றால்; வை—உண்மையில்; ஸ்ரோதஸி—ஓடும் நதியொன்றில்; ஏதம் மந்த்ரம்—இம் மந்திரத்தை; உதீரயேத்—ஒருவர் ஓத வேண்டும்.

ஒரு காட்டுப் பன்றியினால் தோண்டி எடுக்கப்பட்ட மண் கிடைக்குமானால், அம்மண்ணை ஒருவர் அமாவாசையன்று தன் உடல் மீது பூசிக் கொண்ட பின், ஓடும் நதியொன்றில் குளிக்க வேண்டும். குளிக்கும் போது பின்வரும் மந்திரத்தை ஓத வேண்டும்.

பதம் 8.16.27
த்வம் தேவி ஆதி-வராஹேண ரஸாயா: ஸ்தானம் இச்சதா
உத்ருதாஸி நமஸ் துப்யம் பாப்மானம் மே ப்ரணாசய

தவம்—நீ; தேவி—பூமித்தாயே; ஆதி-வராஹேண—காட்டுப் பன்றியின் உருவிலிருந்து முழுமுதற் கடவுளால்; ரஸாயா:—பிரபஞ்சத்திற்கு அடியிலிருந்து; ஸ்தானம்—ஓரிடத்தை; இச்சதா—விரும்பி; உத்ருதா அஸி—நீ தூக்கப்பட்டாய்; நம: துப்யம்—உனக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; பாப்மானம்—எல்லா பாவச் செயல்களும் அவற்றின் விளைவுகளும்; மே—எனது; ப்ரணாசய—தயவு செய்து அழித்துவிடு.

பூமி தேவியே, வசிப்பிடம் வேண்டுமென்று நீ விரும்பியதால், காட்டுப் பன்றியின் ரூபத்திலிருந்த முழுமுதற் கடவுளால் நீ மேலே தூக்கப்பட்டாய். என்னுடைய பாவ வாழ்வின் எல்லா விளைவுகளையும் அன்புடன் நீ அழித்துவிட வேண்டும் என்று வேண்டுகிறேன். உனக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.16.28
நிர்வர்திதாத்ம-நியமோ தேவம் அர்சேத் ஸமாஹித:
அர்ச்சாயாம் ஸ்தண்டிலே ஸூர்யே ஜலே வஹ்னௌ குராவ் அபி

நிர்வர்தித—முடிந்ததும்; ஆத்ம-நியம:—ஒருவரது தொழில் நிலைக்கேற்ப, நீராடுதல் மற்றும் பிற மந்திரங்களை ஒதுதல் முதலிய தினசரி கடமைகள்; தேவம்—பரமபுருஷ பகவானை; அர்சேத்—ஒருவர் வழிபட வேண்டும்; ஸமாஹித:—முழு கவனத்துடன்; அர்ச்சாயாம்—விக்கிரகங்களை; ஸ்தண்டிலே—பலிபீடத்தை; ஸூர்யே—சூரியனை; ஜலே—நீரை; வஹ்னௌ—அக்னியை; குரௌ—ஆன்மீக குருவை; அபி—உண்மையில்.

அதன்பிறகு, தினசரி ஆன்மீகக் கடமைகளை ஒருவர் செய்ய வேண்டும். பிறகு, மிகவும் கவனத்துடன், முழுமுதற் கடவுளின் விக்கிரகத்தையும், மற்றும் பலிபீடம், ஆன்மீக குரு, சூரியன், சந்திரன் மற்றும் அக்னி ஆகியவற்றையும் கூட ஒருவர் வழிபட வேண்டும்.

பதம் 8.16.29
நமஸ் துப்யம் பகவதே புருஷாய மஹீயஸே
ஸர்வ-பூத-நிவாஸாய வாஸுதேவாய ஸாக்ஷிணே

நம: துப்யம்—உமக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்; பகவதே—பரமபுருஷ பகவானுக்கு; புருஷாய—பரம புருஷரை; மஹீயஸே—எல்லாப் புருஷர்களிலும் மிகச்சிறந்தவரான; ஸர்வ-பூத-நிவாஸாய—எல்லோருடைய இதயத்திலும் வாழ்பவரும்; வாஸுதேவாய—எல்லா இடங்களிலும் வாழ்பவருமான பகவான்; ஸாக்ஷிணே—அனைத்திற்கும் சாட்சியாக இருப்பவருமான.

பரமபுருஷ பகவானே, அனைவரிலும் மிகச் சிறந்தவரே, எல்லோருடைய இதயத்திலும் வசிப்பவரே, அனைவரும் உம்முள் வாழ்கின்றனர். அனைத்திற்கும் சாட்சியாக இருப்பவரே, பரமனும், எங்கும் பரவியுள்ளவருமான வாசுதேவனே உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.16.30
நமோ ‘வ்யக்தாய ஸூக்ஷ்மாய ப்ரதான-புருஷாய ச
சதுர்-விம்சத்-குண-ஞாய குண-ஸங்க்யான ஹேதவே

நம—உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; அவ்யக்தாய—பெளதிக கண்களால் காணப்பட முடியாதவரான; ஸூக்ஷ்மாய—தெய்வீகமான; ப்ரதான-புருஷாய—பரமபுருஷர்; ச—மேலும்; சது:-விம்சத்—இருபத்து நான்கு; குண-ஞாய—மூலப் பொருட்களை அறிபவர்; குண-ஸங்க்யான—ஸாங்க்யயோக முறையின்; ஹேதவே—மூலகாரணமுமான

பரமபுருஷராகிய தங்களுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். மிகவும் சூட்சுமமானவராக இருப்பதால், ஜடக் கண்களுக்கு தாங்கள் ஒருபோதும் காட்சியளிப்பதில்லை. இருபத்து நான்கு மூலப் பொருட்களை அறிந்தவரும், ஸாங்க்ய யோக முறையைத் தொடக்கி வைத்தவரும் நீரே.

பதம் 8.16.31
நமோ த்வி-சீர்ஷ்ணே த்ரி-பதே சது:-ஸ்ருங்காய தந்தவே
ஸப்த-ஹஸ்தாய யக்ஞாய த்ரயீ-வித்யாத்மனே நம:

நம:—உமக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்; த்வி-சீர்ஷ்ணே—இரு தலைகளையுடையவரும்; த்ரி—பதே மூன்று கால்களை உடையவரும்; சது:-ஸ்ருங்காய—நான்கு கொம்புகளைக் கொண்டவரும்; தந்தவே—விரிவடைபவர்; ஸப்த-ஹஸ்தாய—ஏழு கரங்களை உடையவரும்; யக்ஞாய—பரம அனுபவிப்பாளருமான ‘யக்ஞ புருஷருக்கு‘; த்ரயீ—வேதச் சடங்குகளின் முப்பிரிவுகள்; வித்யா-ஆத்மனே—பூரண அறிவு சொரூபமாகிய முழுமுதற் கடவுளுக்கு; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் தங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

உமக்கு இரு தலைகளும் (ப்ராயணீய மற்றும் உதாயணீய), மூன்று கால்களும் (ஸவன-த்ரய), நான்கு கொம்புகளும் (நான்கு வேதங்கள்), மற்றும் ஏழு கரங்களும் (காயத்ரீ போன்ற ஏழு சந்தங்கள்) உள்ளன. பரமபுருஷ பகவானாகிய உமக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன். உமது இதயமும், ஆத்மாவுமாக இருப்பவை மூன்று வேதச் சடங்குகளாகும் (கர்ம-காண்டம், ஞான-காண்டம் மற்றும் உபாஸனா-காண்டம்). மேலும் யாகங்களின் வடிவில் இச் சடங்குகளை விரிவடையச் செய்பவரும் நீரே. உமக்கு எனது வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.16.32
நம: சிவாய ருத்ராய நம: சக்தி-தராய ச
ஸர்வ-வித்யாதிபதயே பூதாணம் பதயே நம:

நம:—எனது பணிவான வணக்கங்களை உமக்கு நான் சமர்ப்பிக்கிறேன்; சிவாய—சிவபெருமான் என்ற பெயர் கொண்ட அவதாரமான; ருத்ராய—ருத்திரன் எனும் பெயர் கொண்ட விரிவங்கமான; நம:—வணக்கங்கள்; சக்தி-தராய—அனைத்து சக்திகளின் ஊற்றான; ச—மேலும்; ஸர்வ-வித்யா-அதிபதயே—அனைத்து அறிவிற்கும் பிறப்பிடமான; பூதானாம்—ஜீவராசிகளின்; பதயே—உயர்ந்த எஜமானருக்கு; நம:—எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்.

சிவபெருமான், அல்லது ருத்திரனாகிய தாங்கள் அனைத்து சக்திகளுக்கும் ஊற்றாவீர். நீரே அனைத்து அறிவிற்கும் பிறப்பிடமும், அனைவருக்கும் எஜமானருமாவீர். உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.16.33
நமோ ஹிரண்யகர்பாய ப்ராணாய ஜகத்-ஆத்மனே
யோகைஸ்வர்ய-சரீராய நமஸ் தே யோக-ஹேதவே

நம:—எனது பணிவான வணக்கங்களை உமக்கு நான் சமர்ப்பிக்கிறேன்; ஹிரண்யகர்பாய—நான்கு தலை ஹிரண்யகர்பராக, அல்லது பிரம்மாவாக அமைந்துள்ள; ப்ராணயா—அனைவரது வாழ்வுக்கும் மூலமும்; ஜகத்-ஆத்மனே—முழு பிரபஞ்சத்தின் பரமாத்மாவும்; யோக-ஐஸ்வர்ய-சரீராய—உமது சரீரம் ஐசுவர்யங்களும், யோக சக்திகளும் நிறைந்ததாகும்; நம: தே—உமக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்; யோக-ஹேதவே—எல்லா யோக சக்திகளுக்கும் மூல எஜமானராகிய.

ஹிரண்யகர்பராக இப்பவரும், உயிரின் பிறப்பிடமும், அனைத்து ஜீவராசிகளின் பரமாத்மாவுமான உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். உமது தேகம் யோக சக்திகளெனும் அனைத்து ஐசுவரியங்களுக்கும் பிறப்பிடமாகும். உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.16.34
நமஸ் த ஆதி-தேவாய ஸாக்ஷி-பூதாய தே நம:
நாராயணாய ரிஷயே நராய ஹரயே நம:

நம: தே—உமக்கு எனது பணிவான வணக்கங்களை சமர்ப்பிக்கிறேன்; ஆதி-தேவாய—நீரே மூலமுழுமுதற் கடவுளாவீர்; ஸாக்ஷி-பூதாய—எல்லோருடைய இதயத்திலும் உள்ள அனைத்திற்கும் சாட்சியான; தே—உமக்கு; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; நாராயணாய—நாராயண அவதாரத்தை மேற்கொண்ட; ரிஷயே—ரிஷியான; நராய—ஒரு மானிட அவதாரமான; ஹரயே—பரமபுருஷ பகவானுக்கு; நம:—எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்;

நீரே மூலமுழுமுதற் கடவுளாவீர். அனைவரது இதயத்திலும் உள்ள சாட்சியும், மனித ரூபத்தில் தோன்றிய நர-நாராயண ரிஷியின் அவதாரமும் நீரே. உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். முழுமுதற் கடவுளே எனது பணிவான வணக்கங்களை நான் மீண்டும் உமக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.16.35
நமோ மரகத-ஸ்யாம-வபுஷே ‘திகத-ஸ்ரியே
கேசவாய நமஸ் துப்யம் நமஸ் தே பீத வாஸஸே

நம:—எனது பணிவான வணக்கங்களை உமக்கு நான் சமர்ப்பிக்கிறேன்; மரகத-ஸ்யாம-வபுஷே—தேக வர்ணம் மரகத மணியைப் போல் கருநிறமாக உள்ளவரும்; அதிகத-ஸ்ரியே—திருமகளாகிய லக்ஷ்மி தேவியை தங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும்; கேசவாய—கேசி எனும் அசுரனைக் கொன்றவரான பகவான் கேசவராகிய; நம: துப்யம்—உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்; நம: தே—உமக்கு மீண்டும் எனது பணிவான வணக்கங்களை நான் உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்; பீத-வாஸஸே—மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ள.

எம்பெருமானே, மஞ்சள் நிற ஆடை அணிந்துள்ள உமக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். உமது தேக வர்ணம் மரகத மணியை ஒத்ததாக இருக்கிறது. மேலும் திருமகள் உமது பூரண கட்டுப்பாட்டின் கீழ் இருக்கிறாள். எம்பெருமானே, கேசவா, எனது பணிவான வணக்கங்களை நான் உமக்கு சமர்ப்பிக்கிறேன்.

பதம் 8.16.36
த்வம் ஸர்வ-வரத: பும்ஸாம் வரேன்ய வரதர்ஷப
அதஸ் தே ஸ்ரேயஸே தீரா: பாத-ரேணும் உபாஸதே

த்வம்—நீர்; ஸர்வவர-த:—எல்லா வகையான வரங்களையும் அளிக்கக் கூடியவர்; பும்ஸாம்—எல்லா ஜீவராசிகளுக்கும்; வரேண்ய—மிகச்சிறந்த வழிபாட்டுக்குரியவரே; வர-தர்ஷப—வரம் அளிப்பவர்களுக்கெல்லாம் மிகவும் சக்தி வாய்த்தவரே; அத:—இக்காரணத்திற்காக; தே—உமது; ஸ்ரேயஸே—ஸர்வ மங்களத்திற்குரிய பிறப்பிடமான; தீரா:—மிகவும் நிதானமுள்ள; பாத-ரேணும் உபாஸதே—தாமரைப் பாதத்தின் புழுதியை வழிபடுகின்றனர்.

மிகமிக உயர்ந்தவரும், வழிபாட்டுக்குரியவருமான பெருமானே, வரம் அளிப்பவர்களுள் நீர் மிகச் சிறந்தவராவீர். அனைவரது ஆசைகளையும் உம்மால் நிறைவேற்ற முடியும். ஆகவே நிதான புத்தியுள்ளவர்கள், அவர்களின் சொந்த நன்மைக்காக, உமது தாமரைப் பாதங்களின் புழுதியை வழிபடுகின்றனர்.

பதம் 8.16.37
அன்வவர்தந்த யம் தேவா: ஸ்ரீஸ் ச தத்-பாத-பத்மயோ:
ஸ்ப்ருஹயந்த இவாமோதம் பகவான் மே ப்ரஸீததாம்

அன்வவர்தந்த—பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளனரோ; யம்—யாருடைய; தேவா:—எல்லா தேவர்களும்; ஸ்ரீ: ச—மற்றும் லக்ஷ்மியும் (திருமகள்); தத்-பாத-பத்மயோ:—பெருமானாகிய அவரது தாமரைப் பாதங்களின்; ஸ்ப்ருஹயந்த:—விரும்பும்; இவ—அதே போன்று; ஆமோதம்—சுவர்க்கலோக ஆனந்தம்; பகவான்—பரமபுருஷ பகவான்; மே—என்னிடம்; ப்ரஸீததாம்—திருப்தியடைவாராக.

அனைத்து தேவர்கள் மட்டுமல்லாமல், லக்ஷ்மி தேவியும் கூட, அவரது திருவடித் தொண்டில் ஈடுபட்டுள்ளாள். உண்மையில், அத்திருவடிகளின் நறுமணத்தையும் அவர்கள் மதிக்கின்றனர். அப்பரமபுருஷ பகவான் என்னிடம் திருப்தி அடைவாராக.

பதம் 8.16.38
ஏதைர் மந்ரைர் ஹ்ருஷீகேசம் ஆவாஹன-புரஸ்க்ருதம்
அச்சயேச் ச்ராத்தயா யுக்த: பாத்யோபஸ்பர்சனாதிபி:

ஏதை: மந்ரைர்:—இவ்வெல்லா மந்திரங்களையும் ஓதுவதன் மூலமாக; ஹ்ருஷீகேசம்—புலன்களுக்கெல்லாம் எஜமானரான பரம புருஷ பகவானிடம்; ஆவாஹன—அழைத்து; புரஸ்க்ருதம்—எல்லா விதத்திலும் அவரைக் கெளரவித்து; அச்சயேத்—ஒருவர் வழிபட வேண்டும்; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடனும், பக்தியுடனும்; யுக்த:—ஈடுபட்டு; பாத்ய-உபஸ்பர்சன-ஆதிபி:—(பாத்யம், அர்க்யம் முதலான) வழிபாட்டுப் பொருட்களால்.

கஸ்யப முனி தொடர்ந்து கூறினார்: இவ்வெல்லா மந்திரங்களையும் ஒதுவதாலும், பரமபுருஷ பகவானை நம்பிக்கையுடனும், பக்தியுடனும் வரவேற்பதாலும், (பாத்யம், அர்க்யம்) முதலான வழிபாட்டுப் பொருட்களை அவருக்கு அர்ப்பணிப்பதாலும், ஒருவர் கேசவனான அல்லது ஹ்ரிஷீகேசனான முழுமுதற் கடவுளை, ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட வேண்டும்.

பதம் 8.16.39
அர்சித்வா கந்த-மால்யாத்யை: பயஸா ஸ்னபயேத் விபும்
வஸ்த்ரோபவீதாபரண-பாத்யோபஸ்பர்சனைஸ் தத:
கந்த-தூபாதிபிஸ் சார்சேத் த்வாதசாக்ஷர-வித்யயா

அர்சித்வா—இவ்வாறு வழிபட்டு; கந்த-மால்ய-ஆத்யை:—தூபம், மலர்மாலை முதலியவைகளால்; பயஸா—பாலால்; ஸ்னபயேத்—அபிஷேகம் செய்ய வேண்டும்; விபும்—பகவானை; வஸ்த்ர—உடை: உபவீத—பூனூல்; ஆபரண—ஆபரணங்கள்; பாத்ய—தாமரைப் பாதங்களை அபிஷேகம் செய்வதற்கான நீர்; உபஸ்பர்சனை:—தொட்டு; தத:—அதன்பிறகு; கந்த—நறுமணம்; தூப—தூபம்; ஆதிபி:—இவை அனைத்தினாலும்; ச—மேலும்; அர்சேத்—வழிபட வேண்டும்; த்வாதச-அக்ஷர-வித்யயா—பன்னிரண்டு அட்சரங்களைக் கொண்ட மந்திரத்தால்.

ஆரம்பத்தில், பக்தன் துவாதசாக்ஷர-மந்திரத்தை ஓதி, மலர்மாலைகள், தூபம் முதலானவற்றை அர்ப்பணம் செய்ய வேண்டும். இவ்வாறு பகவானை வழிபட்டபின், பகவானைப் பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும். பிறகு தகுதியான ஆடைகள், ஒரு பூனூல் மற்றும் ஆபரணங்கள் ஆகியவற்றால் அவரை அலங்கரிக்க வேண்டும். பகவானுடைய பாதங்களைக் கழுவுவதற்காக நீரைக் கொடுத்த பின், ஒருவர் மீண்டும் பகவானை நறுமணமுள்ள மலர்களாலும், தூபத்தாலும், மற்ற பொருட்களாலும் வழிபட வேண்டும்.

பதம் 8.16.40
ஸ்ருதம் பயஸி நைவேத்யம் சாலி-அன்னம் விபவே ஸதி
ஸஸர்பி: ஸகுடம் தத்வா ஜுஹுயான் மூல-வித்யயா

ஸ்ருதம்—சமைத்த; பயஸி—பாலில்; நைவேத்யம்—விக்கிரக நைவேத்யம்; சாலி-அன்னம்—உயர்தர சாதத்தை; விபவே—கிடைக்குமானால்; ஸதி—இவ்வாறாக; ஸஸர்பி:—நெய்யுடன்; ஸ-குடம்—வெல்லப்பாகுடன்; தத்வா—அவருக்கு அர்ப்பணம் செய்து; ஜுஹுயாத்—யாகத்தீயில் நிவேதனம் செய்யவேண்டும்; மூல-வித்யயா—அதே தூவாதசாக்ஷர-மந்திரத்தை ஓதிக்கொண்டு.

ஒருவரால் முடியுமென்றால், பாலில் வேகவைத்த உயர்தர சாதத்தை நெய்யுடனும், வெல்லப்பாகுடனும் சேர்த்து விக்கிரகத்திற்கு நைவேத்யம் செய்ய வேண்டும். அதே மூல மந்திரத்தை ஓதும் வேளையில் இவை அனைத்தையும் ஒருவர் தீயில் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

பதம் 8.16.41
நிவேதிதம் தத்-பக்தாய தத்யாத் புஞ்ஜீத வா ஸ்வயம்
தத்வாசமனம் அர்ச்சித்வா தாம்பூலம் ச நிவேதயேத்

நிவேதிதம்—இப்பிரசாத நைவேத்தியத்தை; தத்-பக்தாய—அவரது பக்தருக்கு; தத்யாத்—அளிக்கப்பட வேண்டும்; புஞ்ஜீத—ஒருவர் உண்ணவேண்டும்; வா—அல்லது; ஸ்வயம்—சுயமாக; தத்வா ஆசமனம்—கரங்களையும், வாயையும் கழுவிக் கொள்ள நீர் கொடுத்து; அர்ச்சித்வா—இவ்வாறு விக்கிரக ஆராதனை செய்து; தாம்பூலம்—தாம்பூலத்தை; ச—கூட; நிவேதயேத்—ஒருவர் நிவேதனம் செய்ய வேண்டும்.

எல்லாப் பிரசாதத்தையும் ஒருவர் ஒரு வைஷ்ணவருக்கு அளித்து விட வேண்டும். அல்லது பிரசாதத்தின் ஒரு பாகத்தை அவருக்கு அளித்து, மீதத்தைத் தானே உட்கொள்ளலாம். இதன்பிறகு, விக்கிரகத்திற்கு ஒருவர் ஆச்சமன நிவேதனம் செய்து பிறகு வெற்றிலைப் பாக்கை நிவேதனம் செய்து, அதன்பிறகு பகவானை மீண்டும் வழிபட வேண்டும்.

பதம் 8.16.42
ஐபேத் அஷ்டோத்தர-சதம் ஸ்துவீத ஸ்துதிபி: ப்ரபும்
க்ருத்வா ப்ரதக்ஷிணம் பூமௌ ப்ரணமேத் தண்டவன் முதா

ஜபேத்—மௌனமாக உச்சரிக்கவேண்டும்; அஷ்டோத்தர-சதம்—108 முறைகள்; ஸ்துவீத—ஸ்தோத்திரம் செய்ய வேண்டும்; ஸ்துதிபி:—பல்வேறு துதிப்பாடல்களால்; ப்ரபும்—பகவானுக்கு; க்ருத்வா—அதைச் செய்தபின்; ப்ரதக்ஷிணம்—வலம் வந்து; பூமௌ—பூமியின்மீது; ப்ரணமேத்—வணக்கம் செலுத்த வேண்டும்; தண்டவத்—சாஷ்டாங்க; முதா—பெரும் திருப்தியுடன்.

அதன்பிறகு ஒருவர் அம்மந்திரத்தை 108 முறைகள் மௌனமாக உச்சரித்து, பகவானை போற்றிப் புகழ்வதற்கான ஸ்தோத்திரங்களைச் செய்ய வேண்டும். பிறகு பகவானை வலம் வரவேண்டும். இறுதியாக பெரும் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்க வேண்டும் (தண்டவத்).

பதம் 8.16.43
க்ருத்வா சிரஸி தச்-சேஷாம் தேவம் உத்வாஸயேத் தத:
த்வி-அவரான் போஜயேத் விப்ரான் பாயஸேன யதோசிதம்

க்ருத்வா—தொட்டு; சிரஸி—தலைமீது; தத்-சேஷாம்—மீதமுள்ள அனைத்தையும் (விக்ரகத்திற்குப் படைக்கப்பட்ட நீரும், மலர்களும்) தேவம்—விக்ரகத்திற்கு; உத்வாஸயேத்—புனிதமான ஓர் இடத்தில் எறிந்துவிட வேண்டும்; தத:—அதன்பிறகு; த்வி-அவரான்—குறைந்தது இரண்டு; போஜயேத்—உணவளிக்கவேண்டும்; விப்ரான்—பிராமணர்களுக்கு; பாயஸேன—பாயசத்துடன்; யதா-உசிதம்—அவரவர் தகுதிக் கேற்ப.

விக்கிரகத்திற்கு அர்ப்பணம் செய்த எல்லா மலர்களையும், நீரையும் தலையால் தொட்டபின், புனிதமான ஓர் இடத்தில் அவற்றை எறிந்துவிட வேண்டும். பிறகு குறைந்தது இரு பிராமணர்களுக்கு பாயசத்துடன் உணவளிக்க வேண்டும்.

பதங்கள் 8.16.44 – 8.16.45
புஞ்ஜீத தைர் அனுக்ஞாத: ஸேஷ்ட: சேஷம் ஸபாஜிதை:
ப்ரஹ்மசாரி அத தத்-ராத்ரியாம் ஸ்வோ பூதே ப்ரதமே ‘ஹனி

ஸ்நாத: சுசிர் யதோக்தேன விதினா ஸுஸமாஹித:
பயஸா ஸ்நாபயித்வார்சேத் யாவத் வ்ரத-ஸமாபனம்

புஞ்ஜீத—பிரசாதத்தை உட்கொள்ள வேண்டும்; தை:—பிராமணர்களால்; அனுக்ஞாத:—அனுமதிக்கப்பட்டதும்; ஸ-இஷ்ட:—நண்பர்களுடனும், உறவினர்களுடனும்; சேஷம்—மீதத்தை; ஸ்பாஜிதை:—சரியாக கெளரவிக்கப்பட்ட; ப்ரஹ்மசாரி—பிரம்மசரியத்தை கடைபிடித்தல்; அத—நிச்சயமாக; தத்-ராத்ரியாம்—இரவில்; ஸ்வ:-பூதே—இரவின் முடிவில், காலை நேரம் வரும் போது; ப்ரதமே அஹனி—முதல் நாளன்று; ஸ்நாத:—குளித்து; சுசி:—தூய்மை அடைந்து; யதா-உக்தேன—முன்பே குறிப்பிட்டதைப் போல்; விதனா—கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவதன் மூலமாக; ஸு-ஸமாஹித:—மிகவும் கவனத்துடன்; பயஸா—பாலால்; ஸ்நாபயித்வா—விக்ரகத்திற்கு அபிஷேகம் செய்து; அர்சே—அர்ச்சனை செய்ய வேண்டும்; யாவத்—இருக்கும் வரை; வ்ரத-ஸமாபனம்—வழிபாட்டு நேரம் நிறைவுபெறாமல்.

தான் உணவளித்த மரியாதைக்குரிய பிராமணர்களை ஒருவர் முறையாக கௌரவிக்க வேண்டும். அதன்பிறகு அவர்களுடைய அனுமதியைப் பெற்று அவர் தனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பிரசாதத்தை உண்ண வேண்டும். அன்றிரவு, உறுதியான பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து, மறுநாள் காலையில் மீண்டும் குளித்த பின் தூய்மையாகவும், கவனத்துடனும், விஷ்ணுவின் விக்கிரகத்தை பாலால் அபிஷேகம் செய்து, ஏற்கனவே தெளிவாகக் குறிப்பிட்டுள்ள முறைகளுக்கேற்ப அவரை வழிபட வேண்டும்.

பதம் 8.16.46
பயோ-பக்ஷோ வ்ரதம் இதம் சரேத் விஷ்ணு-அர்சனாத்ருத:
பூர்வவஜ் ஜுஹுயாத் அக்னிம் ப்ராஹ்மனாம்ஸ் சாபி போஜயேத்

பய:-பக்ஷ:—பாலை மட்டுமே பருகுபவர்; வ்ரதம் இதம்—இவ்வழிபாட்டு முறையுடன் கூடிய ஒரு விரதத்தை; சரேத்—ஒருவர் நிறைவேற்ற வேண்டும்; விஷ்ணு-அர்சன-ஆத்ருத:—பெரும் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பகவான் விஷ்ணுவை வழிபட்டு; பூர்வ-வத்—ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது போல்; ஜுஹுயாத்—ஒருவர் அர்ப்பணம் செய்ய வேண்டும்; அக்னிம்—யாகத்தீயில்; ப்ராஹ்மணான்—பிராமணர்களுக்கு; ச அபி பி—அத்துடன்; போஜயேத்—உணவளிக்க வேண்டும்.

ஒருவர் பெரும் நம்பிக்கையுடனும், பக்தியுடனும் பகவான் விஷ்ணுவை ஆராதனை செய்து, பாலை மட்டுமே உட்கொண்டு இவ்விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். யாகத்தீயிலும் ஒருவர் அர்ப்பணங்களைச் செய்து, ஏற்கனவே குறிப்பிட்டது போல் பிராமணர்களுக்கு உணவளிக்க வேண்டும்.

பதம் 8.16.47
ஏவம் து அஹர் அஹ: குர்யாத் த்வாதசாஹம் பயோ-வ்ரதம்
ஹரேர் ஆராதனம் ஹோமம் அர்ஹணம் த்விஜ-தர்பணம்

ஏவம்—இவ்விதமாக; து—உண்மையில்; அஹ: அஹ:—ஒவ்வொரு நாளும்; குர்யாத்—நிறைவேற்ற வேண்டும்; த்வாதச-அஹம்—பன்னிரண்டு நாட்களுக்கு; பய:-வ்ரதம்—பயோ விரதம் எனப்படும் விரத அனுஷ்டானத்தை; ஹரே: ஆராதனம்—பரம்புருஷ பகவானை வழிபட்டு; ஹோமம்—ஒரு யாகத்தைச் செய்வதன் மூலமாக; அர்ஹணம்—விக்கிரகத்தை வழிபட்டு; த்விஜ-தர்பணம்—மேலும் பிராமணர்களுக்கு உணவளிப்பதன் மூலமாக அவர்களை
திருப்திப்படுத்தி.

இவ்விதமாக, பன்னிரண்டு நாட்கள் கடக்கும் வரை, ஒருவர் தினந்தோறும் பகவானை வழிபட்டு, அன்றாட கடமைகளை நிறைவேற்றி, யாகங்களை இயற்றி, மற்றும் பிராமணர்களுக்கு உணவளித்து இப் பயோ-விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும்.

பதம் 8.16.48
ப்ரதிபத்-தினம் ஆரப்ய யாவச் சுக்ல-த்ரயோதசீம்
ப்ரஹ்மசர்யம் அத:-ஸ்வப்னம் ஸ்நானம் த்ரி-ஷவணம் சரேத்

ப்ரதிபத்-தினம்—பிரதிபத் தினத்தன்று; ஆரப்ய—ஆரம்பித்து; யாவத்—வரை; சுக்ல—பெளர்ணமியின்; த்ரயோதசீம்—சந்திரனின் பதின்மூன்றாம் நாள் (ஏகாதசியின் இரண்டாவது நாள்); ப்ரஹ்மசர்யம்—முழு பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து; அத:-ஸ்வப்னம்—தரை மீது சயனித்து; ஸ்தானம்—குளித்து; த்ரி-ஸவனம்—மூன்று தடவைகள் காலையில், மாலையில் மற்றும் நடுப்பகலில்); சரேத்—ஒருவர் நிறைவேற்ற வேண்டும்.

பிரதிபத் தினத்திலிருந்து அடுத்த பௌர்ணமியின் பதின்மூன்றாம் நாள் வரையுள்ள (சுக்ல-த்ரயோதசீ) காலத்தில் ஒருவர் முழு பிரம்மச்சரியத்தை அனுஷ்டித்து, தரைமீது படுத்துறங்கி, ஒரு நாளுக்கு மும்முறை குளித்து, இவ்விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.

பதம் 8.16.49
வர்ஜயேத் அஸத்-ஆலாபம் போகான் உச்சாவசாம்ஸ் ததா
அஹிம்ஸ்ர: ஸர்வ-பூதானாம் வாஸுதேவ-பராயண:

வர்ஜயேத்—ஒருவர் கைவிட வேண்டும்; அஸத்-ஆலாபம்—பௌதிக விஷயங்களைப் பற்றிய தேவையற்ற பேச்சு; போகான்—புலன் நுகர்வு; உச்ச-அவசான்—உயர்ந்த அல்லது தாழ்ந்த; ததா—அத்துடன்; அஹிம்ஸ்ர:—பொறாமை கொள்ளாமல்; ஸர்வ-பூதானாம்—அனைத்து ஜீவராசிகளிடமும்; வாஸுதேவ-பராயண:—பகவான் வாசுதேவனின் ஒரு பக்தராக இருப்பதாலேயே.

இச்சமயத்தில், ஒருவர் தேவையில்லாமல் பௌதிக விஷயங்களைப் பற்றியோ அல்லது புலன் நுகர்வைப் பற்றியோ பேசக் கூடாது. அனைத்து ஜீவராசிகளிடமும் கொண்டுள்ள பொறாமையிலிருந்து ஒருவர் முற்றிலும் விடுபட்டு பகவான் வாசுதேவனின் ஒரு தூய, எளிமையான பக்தராக இருக்க வேண்டும்.

பதம் 8.16.50
த்ரயோதஸ்யாம் அதோ விஷ்ணோ: ஸ்னபனம் பஞ்சகைர் விபோ:
காரயேச் சாஸ்த்ர-த்ருஷ்டேன விதினா விதி-கோவிதை:

த்ரயோதஸ்யாம்—சந்திரனின் பதின்மூன்றாம் நாளன்று (திரயோதசியன்று); அதோ—அதன்பிறகு; விஷ்ணோ:—பகவான் விஷ்ணுவின்; ஸ்னபனம்—அபிஷேகம் செய்து; பஞ்சகை:—பஞ்சாமிருதத்தால்; விபோ:—பகவானை; காரயேத்—ஒருவர் நிறைவேற்ற வேண்டும்; சாஸ்த்ர-த்ருஷ்டேன—சாஸ்திரத்தில் விதிக்கப்பட்ட; விதினா—கட்டுப்பாட்டு விதிகளின் கீழ்; விதி-கோவிதை:—கட்டுப்பாட்டு விதிகளை அறிந்த பிராமணர்களின் உதவியுடன்.

அதன்பிறகு, சாஸ்திரங்களை அறிந்தவர்களான பிராமணர்களின் உதவியுடன் சாஸ்திர விதிகளைப் பின்பற்றி, சந்திரனின் பதின்மூன்றாம் தினத்தன்று (திரயோதசி) ஒருவர் பஞ்சாமிர்தங்களால் (பால், தயிர், நெய், சர்க்கரை மற்றும் தேன்) பகவான் விஷ்ணுவிற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.

பதங்கள் 8.16.51 – 8.16.52
பூஜாம் ச மஹதீம் குர்யாத் வித்த-சாட்ய-விவர்ஜித:
சரும் நிரூப்ய பயஸி சிபிவிஷ்டாய விஷ்ணவே

ஸூக்தேன தேன புருஷம் யஜேத ஸுஸமாஹித:
நைவேத்யம் சாதிகுணவத் தத்யாத் புருஷ-துஷ்டிதம்

பூஜாம்—வழிபாடு; ச—மேலும்; மஹதீம்—மிகவும் சிறப்பாக; குர்யாத்—செய்ய வேண்டும்; வித்த-சாட்ய—கருமி மனோபாவத்தை (போதுமான பணத்தைச் செலவு செய்யாத); விவர்ஜித:—கைவிட்டு; சரும்—யாகத்தில் அர்ப்பணம் செய்யப்படும் தானியங்கள்; நிரூப்ய—நன்கு கவனித்து; பயஸி—பாலுடன்; சிபிவிஷ்டாய—எல்லா ஜீவராசிகளின் இதயத்திலும் வீற்றிருக்கும் பரமாத்மாவுக்கு; விஷ்ணவே—பகவான் விஷ்ணுவிற்கு; ஸூக்தேன—புருஷ-சூக்தம் எனப்படும் வேத மந்திரத்தை; தேன—அதன் மூலமாக; புருஷம்—பரமபுருஷ பகவானை; யஜேத—ஒருவர் வழிபட வேண்டும்; ஸு-ஸமாஹித:—மிகவும் கவனத்துடன்; நைவேத்யம்—நிவேதனத்தை; ச—மேலும்; அதி-குண-வத்—எல்லா வகையான சுவைகளுடனும் மிகவும் ஆடம்பரமாக தயாரிக்கப்பட்ட; தத்யாத்—படைக்க வேண்டும்; புருஷ-துஷ்டி-தம்—பரமபுருஷ பகவானை மிகவும் திருப்திப்படுத்தும் அனைத்தையும்.

பணத்தை செலவழிக்காத கருமித்தனத்தைக் கைவிட்டு, அனைத்து ஜீவராசிகளின் இதயத்திலும் இருக்கும் பரமபுருஷ பகவானாகிய விஷ்ணுவின் ஆடம்பரமான வழிபாட்டிற்கு ஒருவர் ஏற்பாடு செய்ய வேண்டும். நெய் மற்றும் பால் ஆகியவற்றில் வேகவைத்த தானியங்களை மிகவும் கவனத்துடன் தயாரித்து அதை நிவேதனம் செய்வதுடன், புருஷ-சூக்த மந்திரத்தையும் பாராயணம் செய்ய வேண்டும். நிவேதனத்திற்கான உணவு பலவகையான சுவைகளைக் கொண்டதாக இருக்க வேண்டும். இவ்விதமாக, பரமபுருஷ பகவானை ஒருவர் வழிபட வேண்டும்.

பதம் 8.16.53
ஆசார்யம் ஞான-ஸம்பன்னம் வஸ்த்ராபரண-தேனுபி:
தோஷயேத் ரித்விஜஸ் சைவ தத் வித்தி ஆராதனம் ஹரே:

ஆசார்யம்—ஆன்மீக குருவை; ஞான-ஸம்பன்னம்—ஆன்மீக அறிவில் மிகவும் முன்னேறிய; வஸ்த்ர-ஆரபண-தேனுபி:—வஸ்திரம், ஆபரணங்கள் மற்றும் பல பசுக்கள் ஆகியவற்றால்; தோஷயேத்—திருப்திப்படுத்த வேண்டும்; ரித்விஜ:—ஆன்மீக குருவால் சிபாரிசு செய்யப்பட்ட வேதியர்களையும்; ச ஏவ—கூட; தத் வித்தி—அதைப் புரிந்து கொள்ள முயல வேண்டும்; ஆராதனம்—ஆராதனை; ஹரே:—பரமபுருஷ பகவானின்.

வேத இலக்கியங்களைக் கற்றுணர்ந்தவரான ஆன்மீக குருவை (ஆசார்யரை) ஒருவர் திருப்திப்படுத்த வேண்டும். மேலும் (ஹோதா, உத்காதா, அத்வர்யு மற்றும் ப்ரஹ்ம எனப்படும்) அவரது உதவியாளர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். அவர்களுக்கு வஸ்திரங்கள், ஆபரணங்கள் மற்றும் பசுக்கள் ஆகியவற்றை அளித்து திருப்திப்படுத்த வேண்டும். இதுவே விஷ்ணு ஆராதனை எனப்படும் சடங்காகும்.

பதம் 8.16.54
போஜயேத் தான் குணவதா ஸத்-அன்னேன சுசி-ஸ்மிதே
அன்யாம்ஸ் ச ப்ராஹ்மனாஞ் சக்த்யா யே ச தத்ர ஸமாகதா:

போஜயேத்—பிரசாதத்தை விநியோகிக்க வேண்டும்; தான்—அவர்கள் அனைவருக்கும்; குண-வதா—சிறந்த உணவுகளால்; ஸத்-அன்னேன—நெய்யுடனும், பாலுடனும் தயாரிக்கப்பட்ட, மிகவும் தூய உணவால்; சுசி-ஸ்மிதே—மிகவும் பயபக்தியுடைய பெண்ணே; அன்யான் ச— மற்றவர்களும் கூட; ப்ராஹ்மணான்—பிராமணர்கள்; சக்த்யா—இயன்றவரை; யே—அவர்கள் அனைவருக்கும்; ச—கூட; தத்ர—அங்கு (சடங்குகளில்); ஸமாகதா:—கூடியுள்ள.

மிகவும் பய பக்தியுடைய பெண்ணே, ஒருவர் எல்லாச் சடங்குகளையும், கற்றுணர்ந்த ஆச்சார்யர்களுடைய வழிகாட்டலின் கீழ் நிறைவேற்றி, அவர்களையும், அவர்களது வேதியர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். பிரசாத விநியோகத்தின் மூலமாக பிராமணர்களையும், கூடியுள்ள மற்றவர்களையும் திருப்திப்படுத்த வேண்டும்.

பதம் 8.16.55
தக்ஷிணாம் குரவே தத்யாத் ரித்விக்ப்யஸ் ச யதார்ஹத: அன்னாத்யேனாஸ்வ-பாகாம்ஸ் ச ப்ரீணயேத் ஸமுபாகதான்

தக்ஷிணாம்—தட்சிணம் (கொஞ்சம் பணம் அல்லது தங்கம்); குரவே—குருவிடம்; தத்யாத்—ஒருவர் கொடுக்க வேண்டும்; ரித்விக்ப்ய:—மேலும் ஆன்மீக குருவால் வேலைக்கு அமர்த்தப்பட்ட வேதியர்களுக்கு; யதா-அர்ஹத:—இயன்றயளவு; அன்ன-அத்யேன—பிரசாத விநியோகத்தின் மூலமாக; அஸ்வ-பாகான்—நாயின் இறைச்சியை உண்ணும் பழக்கம் கொண்ட சண்டாளர்களுக்கும் கூட; ச—மேலும்; ப்ரீணயேத்—ஒருவர் திருப்திபடுத்த வேண்டும்; ஸமுபாகதான்—அந்த சடங்கிற்காக அவர்கள் அங்கு கூடியிருப்பதால்.

வஸ்திரம், ஆபரணங்கள், பசுக்கள் மற்றும் கொஞ்சம் பொருள் ஆகியவற்றைக் கொடுத்து, ஆன்மீக குருவையும், உதவியாளர்களான வேதியர்களையும் திருப்திப்படுத்த வேண்டும். மேலும் பிரசாத விநியோகத்தினால், மனிதர்களில் கடைப்பட்டவர்களான சண்டாளர்களும் (நாயின் இறைச்சியை உண்பவர்கள்) உட்பட, கூடியுள்ள அனைவரையும் ஒருவர் திருப்திப்படுத்த வேண்டும்.

பதம் 8.16.56
புக்தவத்ஸு ச ஸர்வேஷு தீனாந்த க்ருபணாதிஷு
விஷ்ணோஸ் தத் ப்ரீணனம் வித்வான் புஞ்ஜீத ஸஹ பந்துபி:

புக்தவத்ஸு—உணவளித்த பின்; ச—கூட; ஸர்வேஷு—அங்குள்ள அனைவருக்கும்; தீன—மிகவும் ஏழ்மையானவர்கள்; அந்த—குருடர்கள்; க்ருபண—பிராமணர் அல்லாதவர்கள்; ஆதிஷு—முதலான; விஷ்ணோ:—அனைவரது இதயத்திலும் இருப்பவரான பகவான் விஷ்ணுவின்; தத்—அதை (பிரசாதத்தை); ப்ரீணனம்—திருப்தியளிக்கும்; வித்வான்—இத்தத்துவத்தை அறியும் ஒருவர்; புஞ்ஜீத—அவர் பிரசாதத்தை உட்கொள்ள வேண்டும்; ஸஹ—உடன்; பந்துபி—நண்பர்கள் மற்றும் உறவினர்கள்.

ஏழை மனிதன், குருடன், பக்தனல்லாதவன் மற்றும் பிராமணன் அல்லாதவன் ஆகியோர் உட்பட அனைவருக்கும் விஷ்ணு பிரசாதத்தை ஒருவர் விநியோகிக்க வேண்டும். அனைவருக்கும் விஷ்ணு பிரசாதம் அளிக்கப்படும்போது பகவான் விஷ்ணு மிகவும் திருப்தியடைகிறார் என்பதை அறிந்த, யாகம் இயற்றுபவர், தனது நண்பர்களுடனும், உறவினர்களுடனும் பிறகு பிரசாதத்தை உட்கொள்ள வேண்டும்.

பதம் 8.16.57
நிருத்ய-வாதித்ர-கீதைஸ் ச ஸ்துதிபி: ஸ்வஸ்தி-வாசகை:
காரயேத் தத்-கதாபிஸ் ச பூஜாம் பகவதோ ‘ன்வஹம்

ந்ருத்ய—நாட்டியத்தால்; வாதித்ர—மேளம் கொட்டுவதன் மூலமாக; கீதை:—மற்றும் பாடுவதன் மூலமாகவும்; ச—மேலும்; ஸ்துதிபி:—மங்களகரமான மந்திரங்களைப் பாடுவதன் மூலமாக; ஸ்வஸ்தி-வாசகை:—துதி செய்வதன் மூலம்; காரயேத்—நிறைவேற்ற வேண்டும்; தத்-கதாபி:—பாகவதம் மற்றும் பகவத் கீதையைப் போன்ற இலக்கியங்களைப் பாராயணம் செய்வதன் மூலமாக; ச—மேலும்; பூஜாம்—வழிபாடு; பகவதோ—பரமபுருஷ பகவான், விஷ்ணு; அன்வஹம்—ஒவ்வொரு நாளும் (ப்ரதிபத்திலிருந்து த்ரயோதசி வரை).

ஒவ்வொரு நாளும் பிரதிபத்திலிருந்து திரயோதசிவரை, நாட்டியம், பாடல், மேளம் வாசித்தல், துதி செய்தல், சர்வ மங்களகரமான மந்திரங்களை ஓதுதல் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாராயணம் செய்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இவ்விதமாக, பரமபுருஷ பகவானை ஒருவர் வழிபட வேண்டும்.

பதம் 8.16.58
ஏதத் பயோ-வ்ரதம் நாம புருஷாராதனம் பரம்
பிதாமஹேனாபிஹிதம் மயா தே ஸமுதாஹ்ருதம்

ஏதத்—இதுவே; பய-வ்ரதம்—பயோ-விரதம் எனப்படும் சடங்கு; நாம—அப்பெயரால்; புருஷ-ஆராதனம்—பரமபுருஷ பகவானை வழிபடும் முறை; பரம்—மிகச்சிறந்த; பிதாமஹேன—எனது பாட்டனாரான பிரம்ம தேவரால்; அபிஹிதம்—குறிப்பிடப்பட்டது; மயா—என்னால்; தே—உனக்கு; ஸமுதாஹ்ருதம்—முழு விவரத்துடன் விளக்கப்பட்டது.

இதுவே பயோ-விரதம் எனப்படும் மதச் சடங்காகும். இதனால் பரமபுருஷ பகவானை ஒருவர் வழிபடலாம். எனது பாட்டனாரான பிரம்மாவிடமிருந்து இத்தகவலை நான் பெற்றேன். இப்போது இதை நான் முழு விவரத்துடன் உனக்கு விளக்கியுள்ளேன்.

பதம் 8.16.59
த்வம் சானேன மஹா-பாகே ஸம்யக் சீர்ணேன கேசவம்
ஆத்மனா சுத்த-பாவேன நியதாத்மா பஜாவ்யயம்

த்வம் ச—நீயும்; அனேன—இம்முறையால்; மஹா-பாகே—மகாபாக்கியசாலியே; ஸம்யக் சீர்ணேன—முறையாக நிறைவேற்றப்பட்டது; கேசவம்—பகவான் கேசவனுக்கு; ஆத்மனா—ஒருவரால்; சுத்த-பாவேன—தூய மனோபாவத்தில்; நியத-ஆத்மா—ஒருவர் தன்னைக் கட்டுப்படுத்தி; பஜ—தொடர்ந்து வழிபட வேண்டும்; அவ்யயம்—குறையாத தன்மையுடைய பரமபுருஷ பகவானை.

பெரும் பாக்கியசாலியான பெண்ணே, உன் மனதை நன்றாக நிலைப்படுத்தி, இப் பயோ-விரத முறையை நிறைவேற்று. இவ்வாறாக குறையற்றவரான முழுமுதற் கடவுளை, கேசவனை வழிபடுவாயாக.

பதம் 8.16.60
அயம் வை ஸர்வ-யக்ஞாக்ய: ஸர்வ-வ்ரதம் இதி ஸ்ம்ருதம்
தப:-ஸாரதம் இதம் பத்ரே தானம் சேஸ்வர-தர்பணம்

அயம்—இது; வை—உண்மையில்; ஸர்வ-யக்ஞ—எல்லா வகையான சடங்குகளும், யாகங்களும்; ஆக்ய:—எனப்படுகிறது; ஸர்வ-வ்ரதம்—எல்லா மதச் சடங்குகளும்; இதி—இவ்வாறாக; ஸ்ம்ருதம்—அறியப்படுகிறது; தப:-ஸாரம்—எல்லாத் தவங்களுக்கும் சாரம்; இதம்—இது; பத்ரே—நற்பண்புடையவனே; தானம்—தானம்; ச—மேலும்; ஈஸ்வர—பரமபுருஷ பகவானை; தர்பணம்—திருப்திப்படுத்தும் முறையாகும்.

இந்த பயோ-விரதம் ஸர்வ-யக்ஞம் என்றும் அறியப்படுகிறது. அதாவது, இந்த யாகத்தைச் செய்வதன் மூலமாக, மற்றெல்லா யாகங்களையும் ஒருவர் தானாகவே செய்துவிட முடியும். அனைத்து சமயச் சடங்குகளிலும் இதுவே மிகச் சிறந்ததாக அங்கீகரிக்கப்படுகிறது. நற்பண்புகளைக் கொண்ட பெண்ணே, எல்லாத் தவங்களுக்கும் இதுவே சாராம்சமாகும். இதுவே தானம் கொடுப்பதற்கும், பரம ஆளுனரைத் திருப்திப்படுத்துவதற்கும் உரிய முறையாகும்.

பதம் 8.16.61
த ஏவ நியமா: ஸாக்ஷாத் ஏவ ச யமோத்தமா:
தபோ தானம் வ்ரதம் யக்ஞோ யேன துஷ்யதி அதோக்ஷஜ:

தே—இதுவே; ஏவ—உண்மையில்; நியமா:—கட்டுப்பாட்டு விதிகள் அனைத்தும்; ஸாக்ஷாத்—நேரடியாக; தே—இதுவே; ஏவ—உண்மையில்; ச—மேலும்; யம-உத்தமா:—புலன்களைக் கட்டுப்படுத்துவதற்கான மிகச்சிறந்த முறை; தப:—தவங்கள்; தானம்—தானம்; வ்ரதம்—விரதங்கள் அனுஷ்டித்தல்; யக்ஞ—யாகம்; யேன—இம்முறையால்; துஷ்யதி—மிகவும் திருப்தியடைகிறார்; அதோக்ஷஜ:—ஜடப் புலன்களால் அறியப்பட முடியாதவரான பரமபுருஷர்.

அதோக்ஷஜர் எனப்படுபவரான முழுமுதற் கடவுளை திருப்திப்படுத்துவதற்கு இதுவே மிகச்சிறந்த முறையாகும். இதுவே எல்லாக் கட்டுப்பாட்டு நியமனங்களிலும் மிகச் சிறந்ததும், மிகச் சிறந்த தவமும், தானம் கொடுப்பதற்கான மிகச் சிறந்த முறையும், மிகச் சிறந்த யாக முறையுமாகும்.

பதம் 8.16.62
தஸ்மாத் ஏதத் வ்ரதம் பத்ரே ப்ரயதா ஸ்ரத்தயாசர
பகவான் பரிதுஷ்டஸ் தே வரான் ஆசு விதாஸ்யதி

தஸ்மாத்—ஆகவே; ஏதத்—இந்த; வ்ரதம்—விரதத்தை அனுஷ்டித்தல்; பத்ரே—எனது அன்பிற்குரிய பெண்ணே; ப்ரயதா—விதிகளையும், கட்டுப்பாடுகளையும் அனுஷ்டிப்பதன் மூலமாக; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; ஆசர—நிறைவேற்று; பகவான்—பரமபுருஷ பகவான்; பரிதுஷ்ட:—மிகவும் திருப்தியடைந்து; தே—உனக்கு; வரான்—வரங்களை; ஆசு—மிக விரைவில்; விதாஸ்யதி—அளிப்பார்.

ஆகவே, எனது அன்பிற்குரிய பெண்ணே, கட்டுப்பாட்டு விதிகளை உறுதியாகப் பின்பற்றி, இவ்விரதத்தை நீ மேற்கொள்ள வேண்டும். இம் முறையினால் பரமபுருஷர் வெகுவிரைவில் திருப்தியடைந்து, உனது ஆசைகளை எல்லாம் நிறைவேற்றுவார்.


ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பயோ-விரத வழிபாட்டு முறையை நிறைவேற்றுதல்” எனும் தலைப்பை கொண்ட பதினாறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare