அத்தியாயம் – 15
பலி மகாராஜன் சுவர்க்க லோகங்களைக்
கைப்பற்றுதல்
பதங்கள் 8.15.1 – 8.15.2
ஸ்ரீ-ராஜோவாச
பலே: பத-த்ரயம் பூமே: கஸ்மாத் தரிர் அயாசத
பூதேஸ்வர: க்ருபண-வல் லப்தார்தோ ‘பி பபந்த தம்
ஏதத் வேதிதும் இச்சாமோ மஹத் கௌதூஹலம் ஹி ந:
யாச்ஞேஸ்வரஸ்ய பூர்ணஸ்ய பந்தனம் சாபி யநாகஸ:
ஸ்ரீ-ராஜா உவாச—ராஜன் கூறினார்; பலே:—பலி மகாராஜனின்; பத-த்ரயம்—மூன்றடி; பூமே:—நிலத்தின்; கஸ்மாத்—ஏன்; ஹரி:—பரமபுருஷ பகவான் (வாமனரின் உருவில்); அயாசத—யாசித்தார்; பூத்த-ஈஸ்வர:—எல்லாப் பிரபஞ்சங்களுக்கும் உரிமையாளரான; க்ருபண-வத்—ஓர் ஏழையைப் போல்; லப்த-அர்த:—அவர் பரிசாகப் பெற்றார்; அபி—எனினும்; பபந்த—கைது செய்தார்; தம்—அவரை (பலி); ஏதத்—இதுவெல்லாம்; வேதிதும்—புரிந்து கொள்வதற்கு; இச்சாம:—நாங்கள் விரும்புகிறோம்; மஹத்—மிகப் பெரிய; கௌதூஹலம்—பேராவல்; ஹி—உண்மையில்; ந:—எங்கள்; யாச்ஞா—யாசகம்; ஈஸ்வரஸ்ய—பரமபுருஷ பகவானின்; பூர்ணஸ்ய—அனைத்திலும் பூரணமானவராகிய; பந்தனம்—கைது செய்து; ச—மேலும்; அபி—என்றபோதிலும்; அனாகஸ:—குற்றமற்ற அவரின்.
பரீட்சித்து மகாராஜன் வினவினார்: பரமபுருஷ பகவானே அனைத்திற்கும் உரிமையாளராவார். அவர் எதற்காக ஓர் ஏழையைப் போல் பலி மகாராஜனிடமிருந்து மூன்றடி நிலத்தை யாசிக்க வேண்டும்? மேலும் யாசித்த பொருளை அவர் அடைந்த போதிலும், அவர் ஏன் பலி மகாராஜனைக் கைது செய்தார்? இம் முரண்பாடுகளின் மர்மத்தை அறிய நான் மிகவும் ஆவல் கொண்டுள்ளேன்.
பதம் 8.15.3
ஸ்ரீ-சுக உவாச
பராஜித-ஸ்ரீர் அஸுபிஸ் ச ஹாபிதோ
ஹீந்ரேண ராஜன் ப்ருகுபி: ஸ ஜீவத:
ஸர்வாத்மனா தான் அபஜத் ப்ருகூன் பலி:
சிஷ்யோ மஹாத்மார்த-நிவேதனேன
ஸ்ரீ-சுக:-உவாச—-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பராஜித—தோற்கடிக்கப்பட்டு; ஸ்ரீ:—செல்வங்கள்; அஸுபி: ச—மற்றும் உயிரையும்; ஹாபித:—இழந்து; ஹி—நிச்சயம்; இந்ரேண—இந்திரனால்; ராஜன்—அரசே; ப்ருகுபி:—பிருகு முனியின் வம்சத்தினரால்; ஸ:—அவர் (பலி); ஜீவித:—உயிர்ப்பிக்கப்பட்டார்; ஸர்வ-ஆத்மனா—மனப்பூர்வமாக; தான்—அவர்களை; அபஜத்—வழிபட்டார்; ப்ருகூன்—பிருகு வம்சத்தவரை; பலி:—பலி மகாராஜன்; சிஷ்ய:—ஒரு சீடராகி; மஹாத்மா—சிறந்த ஆத்மா; அர்த்த-நிவேதன—அனைத்தையும் கொடுத்து.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, பலி மகாராஜன் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்து, போரில் மரணமடைந்த போது, பிருகு முனியின் வம்சத்தில் வந்தவரான சுக்ராசார்யர் அவரை உயிர்ப்பித்தார். இக்காரணத்தால், மகாத்மாவாகிய பலி மகாராஜன் சுக்ராசார்யரின் சீடராகி, தம்மிடமிருந்த அனைத்தையும் அர்ப்பணித்து, பெரும் நம்பிக்கையுடன் அவருக்குத் தொண்டு செய்ய ஆரம்பித்தார்.
பதம் 8.15.4
தம் ப்ராஹ்மணா ப்ருகவ: ப்ரீயமாணா
அயாஜயன் விஸ்வஜிதா த்ரி-நாகம்
ஜிகீஷமாணம் விதினாபிஷிச்ய
மஹாபிக்ஷேகேண மஹானுபாவா:
தம்—அவரிடம் (பலி மகாராஜன்); ப்ராஹ்மணா:—பிராமணர்கள் அனைவரும்; ப்ருகவ:—பிருகு முனியின் வம்சத்தினரான; ப்ரீயமாணா:—மிகவும் திருப்தியடைந்ததால்; அயாஜயன்—ஒரு யாகத்தை இயற்றுவதில் அவரை ஈடுபடுத்தினர்; விஸ்வஜிதா—விஸ்வஜித் எனப்படும்; த்ரி-நாகம்—சுவர்க்க லோகங்களை; ஜிகீஷமாணம்—கைப்பற்ற விரும்பி; விதினா—கட்டுப்பாட்டு விதிகளுக்கேற்ப; அபிஷிச்ய—தூய்மை செய்த பின்; மஹா-அபிஷேகேண—பெரும் அபிஷேகச் சடங்கு ஒன்றில் அவரை ஸ்நானம் செய்வித்து; மஹா-அனுபாவா:—மேன்மை மிகு பிராமணர்கள்.
இந்திரனின் இராஜ்யத்தை வெல்ல விரும்பிய பலி மகாராஜனிடம், பிருகு முனிவரின் பிராமண வம்சத்தவர்கள் மிகவும் திருப்தியடைந்தனர். ஆகவே, அவரைத் தூய்மை செய்து, கட்டுப்பாட்டு விதிகளுக்கேற்ப முறையாக அவரை ஸ்நானம் செய்வித்த பின், விஸ்வஜித் எனப்படும் யாகத்தைச் செய்வதில் அவரை ஈடுபடுத்தினர்.
பதம் 8.15.5
ததோ ரத: காஞ்சன-பட்ட-நத்தோ
ஹயாஸ் ச ஹர்யஸ்வ-துரங்க-வர்ணா:
த்வஜஸ் ச ஸிம்ஹேன விராஜமானோ
ஹுதாசனாத் ஆஸ ஹவிர்பிர் இஷ்டாத்
தத:—அதன்பிறகு; ரத:—ஓர் இரதம்; காஞ்சன—தங்கத்துடன்; பட்ட—மற்றும் பட்டாடைகளும்; நத்த:—சுற்றி மூடப்பட்ட; ஹயா: ச—குதிரைகளும் கூட; ஹர்யஸ்வ-துரங்க-வர்ணா:—இந்திரனின் குதிரைகளைப் போன்ற அதே நிறம் கொண்ட (மஞ்சள்); த்வஜ: ச—ஒரு கொடியும் கூட; ஸிம்ஹேன—சிங்கத்தின் அடையாளம் பொறிக்கப்பட்ட; விராஜமான:—இருக்கும்; ஹுத-அசனாத்—கொழுந்து விட்டெரியும் நெருப்பிலிருந்து; ஆஸ—அங்கிருந்தது; ஹவிர்பி:—நெய்யை ஊற்றியதன் மூலமாக; இஷ்டாத்—வழிபட்டார்.
யாகத்தீயில் நெய் ஊற்றப்பட்டதும், அதிலிருந்து தங்கத்தாலும், பட்டாலும் மூடப்பட்ட தேவலோக இரதமொன்று வெளிப்பட்டது. இந்திரனுடையது போன்ற மஞ்சள் நிறக் குதிரைகளும், சிங்கத்தின் அடையாளம் பொறிக்கப்பட்ட ஒரு கொடியும் கூட அதிலிருந்து வெளிப்பட்டன.
பதம் 8.15.6
தனுஸ் ச திவ்யம் புரடோபனத்தம்
தூணாவ் அரிக்தௌ கவசம் ச திவ்யம்
பிதாமஹஸ் தஸ்ய ததௌ ச மாலாம்
அம்லான-புஷ்பாம் ஜலஜம் ச சுக்ர:
தனு:—ஒரு வில்; ச—கூட; திவ்யம்—அசாதாரணமான; புரட-உபனத்தம்—தங்க முலாம் பூசப்பட்ட; தூணெள—இரு அம்பறாத் தூணிகள்; அரிக்தெள—தவறாக; கவசம் ச—மற்றும் கவசமும்; திவ்யம்—திவ்யமான; பிதாமஹ: தஸ்ய—பிரகலாத மகாராஜன் எனப்படும் அவரது பாட்டனார்; ததௌ—கொடுத்தார்; ச—மேலும்; மாலாம்—ஒரு மாலையை; அம்லான-புஷ்பாம்—வாடாத மலர்களைக் கொண்ட; ஜல-ஜம்—(நீரில் பிறக்கும்) ஒரு சங்கை; ச—அத்துடன்; சுக்ர:—சுக்ராசார்யர்.
தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வில், தவறாத அம்புகளைக் கொண்ட இரு அம்பறாத்தூணிகள், மற்றும் திவ்யமான கவசம் ஆகியவையும் தோன்றின. பலி மகாராஜனின் பாட்டனாரான பிரகலாத மகாராஜன், என்றுமே வாடாத மலர் மாலையொன்றை பலிக்கு வழங்கினார். மேலும் சுக்ராசார்யர் அவருக்கு ஒரு சங்கை வழங்கினார்.
பதம் 8.15.7
ஏவம் ஸ விப்ரார்ஜித-யோதனார்தஸ்
தை: கல்பித-ஸ்வஸ்த்யயனோ ‘த விப்ரான்
ப்ரதக்ஷிணீ-க்ருத்ய க்ருத-ப்ரணாம:
ப்ரஹ்ராதம் ஆமந்த்ரிய நமஸ்-சகார
ஏவம்—இவ்வாறாக; ஸ:—அவர் (பலி மகாராஜன்); விப்ர-அர்ஜித—பிராமணர்களின் கருணையால் பெறப்பட்ட; யோதன-அர்த:—போருக்கான உபகரணங்களைக் கொண்டு; தை:—அவர்களால் (பிராமணர்கள்); கல்பித—அறிவுரை; ஸ்வஸ்த்யயன:—சடங்கு இயற்றுதல்; அத—அவ்வாறு; விப்ரான்—பிராமணர்கள் அனைவரையும் (சுக்ராசார்யரும், மற்றவர்களும்); ப்ரதக்ஷிணீ-க்ருத்ய—வலம் வந்து; க்ருத-ப்ரணாம—அவரது பணிவான வணக்கங்களைச் சமர்ப்பித்தார்; ப்ரஹ்ராதம்—பிரகலாத மகாராஜனுக்கு; ஆமந்தரிய—கூறி; நம:-சகார—அவரை வணங்கினார்.
இவ்வாறாக பலி மகாராஜன் பிராமணர்களின் யோசனைப்படி விசேஷ சடங்கை நிறைவேற்றி, அவர்களின் கிருபையால் போருக்கான தளவாடப் பொருட்களைப் பெற்றதும், அவர் பிராமணர்களை வலம் வந்து வணங்கினார். பிரகலாத மகாராஜனையும் கூட அவர் வாழ்த்தி வணங்கினார்.
பதங்கள் 8.15.8 -8.15.9
அதாருஹ்ய ரதம் திவ்யம் ப்ருகு-தத்தம் மஹாரத:
ஸுஸ்ரக்-தரோ ‘த ஸன்னஹ்ய தன்வீ கட்கீ த்ருதேஷுதி:
ஹேமாங்கத-லஸத்-பாஹு: ஸ்புரன்-மகர-குண்டல:
ரராஜ ரதம் ஆரூடோ திஷ்ண்ய-ஸ்த இவ ஹவ்யவாட்
அத—அதன்பிறகு; ஆருஹ்ய—மீதேறி; ரதம்—இரதத்தின்; திவ்யம்—திவ்யமான; ப்ருகு-தத்தம்—சுக்ராசார்யரால் கொடுக்கப்பட்ட; மஹா-ரத:—சிறந்த இரத வீரரான பலி மகாராஜன்; ஸு-ஸ்ரக்-தர:—நல்லதொரு மாலையால் அலங்கரிக்கப்பட்டு; அத—இவ்வாறாக; ஸன்னஹ்ய—கவசத்தால் தமது உடலை மறைத்து; தன்வீ—ஒரு வில்லுடன் கூடியவராய்; கட்கீ—ஓர் உடைவாளை எடுத்து; த்ருத-இஷுதி:—அம்புகளுடன் கூடிய ஓர் அம்பறாத் தூணியை எடுத்து; ஹேம-அங்கத-ஸஸத்-பாஹு:—அவரது கரங்கள் தங்கக் காப்புகளால் அலங்கரிக்கப்பட்டு; ஸ்புரத்-மகர-குண்டல:—நீலக்கற்களை யொத்த பிரகாசமான குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டு; ரராஜ—பிரகாசித்தார்; ரதம் ஆரூட:—இரதத்தின் மீதேறி; திஷ்ண்ய-ஸ்த:—யாக பீடத்திலிருந்த; இவ—போல்; ஹவ்ய-வாட்—வழிபடத்தக்க தீ.
பிறகு, சுக்ராசார்யரால் அளிக்கப்பட்ட இரதத்தின் மேல் அமர்ந்ததும், அழகியதொரு மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த பலி மகாராஜன் பாதுகாப்புக் கவசத்தை தமது உடலில் அணிந்து, ஒரு வில்லுடன் கூடியவராய், ஒர் உடைவாளையும், அம்புகளைக் கொண்ட ஓர் அம்பறாத்தூணியையும் கையிலெடுத்தார். அவரது கரங்கள் தங்கக் காப்புகளாலும், செவிகள் நீலக்கற்களாலான குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க, இரதத்தின் இருக்கையில் அவர் அமர்ந்த போது, பூஜிக்கத்தக்க ஒரு தீயைப் போல் அவர் பிரகாசித்தார்.
பதங்கள் 8.15.10 – 8.15.11
துல்யைஸ்வர்ய-பல-ஸ்ரீபி: ஸ்வ-யூதைர் தைத்ய-யூதபை:
பிபத்பிர் இவ கம் த்ருக்பிர் தஹத்பி: பரிதீன் இவ
வ்ருதோ விகர்ஷன் மஹதீம் ஆஸு-ரீம் த்வஜினீம் விபு:
யயாவ் இந்ர-புரீம் ஸ்வ்ருத்தாம் கம்பயன் இவ ரோதஸீ
துல்ய-ஐஸ்வர்ய—சம ஐசுவரியங்களைக் கொண்ட; பல—பலம்; ஸ்ரீபி:—மற்றும் அழகிலும்; ஸ்வ-யூதை:—அவரது சொந்த ஆட்களால்; தைத்ய-யூத-பை:—மற்றும் அசுரத்தலைவர்களாலும்; பிப்தபி:—பருகி விடுவது; இவ—போல்; கம்—ஆகாயத்தை; த்ருக்பி:—பார்வையால்; தஹத்பி:—எரித்துவிடுவது; பரிதீன்—எல்லாத் திசைகளையும்; இவ—போல்; வ்ருத:—சூழப்பட்டு; விகர்ஷன்—கவரும்; மஹதீம்—மகத்தான; ஆஸுரீம்—அசுர; த்விஜினீம்—போர் வீரர்கள்; விபு:—மிகமிக சக்திவாய்ந்த; யயௌ—சென்றார்; இந்ர-புரீம்—தேவேந்திரனின் தலைநகரை நோக்கி; ஸு-ருத்தாம்—செல்வம் மிகுந்த; கம்பயன்—நடுங்கச் செய்வது; இவ—போல்; ரோதஸீ—உலகின் மேல்பாகம் முழுவதையும்.
பலத்திலும், செல்வத்திலும், அழகிலும் தமக்கு நிகரான தமது சொந்த வீரர்களுடனும், அசுரத் தலைவர்களுடனும் அவர் இணைந்த போது, அவர்கள் தங்களுடைய பார்வையால் ஆகாயத்தையே விழுங்கி, எல்லாத் திசைகளையும் எரித்துவிடுவார்கள் எனத் தோன்றியது. இவ்வாறாக அசுர வீரர்களைத் திரட்டிய பின், பலி மகாராஜன் செல்வச் செழிப்புடைய இந்திரனின் தலைநகரை நோக்கிப் புறப்பட்டார். உண்மையில், அவர் முழு உலகையும் நடுங்கச் செய்து விடுபவரைப் போல் காணப்பட்டார்.
பதம் 8.15.12
ரம்யாம் உபவனோத்யானை: ஸ்ரீமத்பிர் நந்தனாதிபி:
கூஜத்-விஹங்க-மிதுனைர் காயம்-மத்த-மதுரவ்ரதை:
ப்ரவால-பல-புஷ்போரு-பார-சாகாமர-த்ருமை:
ரம்யாம்—மிகவும் ரம்மியமான; உபவன—பழத்தோட்டங்களுடனும்; உத்யானை:—மற்றும் பூங்காவனங்களுடனும்; ஸ்ரீமத்பி:—காண்பதற்கு மிகவும் அழகாக இருந்தன; நந்தன-ஆதிபி:—நந்தனத்தைப் போன்ற; கூஜத்—கீச்சிடும்; விஹங்க—பறவைகள்; மிதுனை:—ஜோடிகளாக; காயத்—பாடும்; மத்த—மதம் பிடித்த; மது-வ்ரதை:—தேனீக்களுடன்; ப்ரவால—இலைகளின்; பல-புஷ்ப—பழங்களும், புஷ்பங்களும்; உரு—மிகச் சிறந்த; பார—பாரத்தைத் தாங்கிய; சாகா—அவற்றின் கிளைகள்; அமர-த்ருமை:—நித்தியமான மரங்களுடன்.
தேவேந்திரனின் நகரம், நந்தனவனத்தைப் போன்ற இனிமையான பழத்தோட்டங்களாலும், பூந்தோட்டங்களாலும் நிறைந்திருந்தது. மலர்கள், இலைகள், மற்றும் பழங்களின் பாரத்தால், நித்திய வாழ்வுடைய அந்த மரங்களின் கிளைகள் வளைந்து தொங்கின. கீச்சிடும் ஜோடிப் பறவைகளும், பாடும் தேனீக்களும், பூ மற்றும் பழத் தோட்டங்களுக்கு வந்து தங்கிச் சென்றன. அச்சூழ்நிலை முழுவதுமே தெய்வீகமானதாக இருந்தது.
பதம் 8.15.13
ஹம்ஸ-ஸாரஸ-சக்ராஹ்வ-காரண்டவ-குலாகுலா:
நலின்யோ யத்ர க்ரீடந்தி ப்ரமதா: ஸுர-ஸேவிதா:
ஹம்ஸ—அன்னப் பறவைகளின்; ஸாரஸ—கொக்குகள்; சக்ராஹ்வ—சக்ரவாகம் எனப்படும் பறவைகள்; காரண்டவ—மற்றும் பெண் வாத்துகள்; குல—கூட்டங் கூட்டமாக; ஆகுலா:—குழுமியிருந்தன; நலின்ய:—தாமரைப் பூக்கள்; யத்ர—எங்கு; க்ரீடந்தி—விளையாடி மகிழ்ந்தனர்; ப்ரமதா:—அழகிய மங்கையர்; ஸுர-ஸேவிதா:—தேவர்களால் பாதுகாக்கப்பட்ட.
தேவர்களால் பாதுகாக்கப்பட்ட அழகிய மங்கையர், தோட்டங்களில் விளையாடி மகிழ்ந்தனர். அத்தோட்டங்களில் இருந்த தாமரைக் குளங்களில் அன்னப்பறவைகள், கொக்குகள், சக்ரவாகங்கள், பெண் வாத்துகள் ஆகியவை நிரம்பியிருந்தன.
பதம் 8.15.14
ஆகாச-கங்கயா தேவ்யா வ்ருதாம் பரிக-பூதயா
ப்ராகாரேணாக்னி-வர்ணேன ஸாட்டாலேனோன்னதேன ச
ஆகாச-கங்கயா—ஆகாச-கங்கா எனப்படும் கங்கை நீரால்; தேவ்யா—எப்பொழுதும் வழிபாட்டுக்குரிய தேவதையான; வ்ருதாம்—சூழப்பட்டு; பரிக-பூதயா—ஓர் அரணாக; ப்ராகாரேண—மதில் சுவர்களால்; அக்னி-வர்ணேன—அக்கினியை ஒத்த; ஸ-அட்டாலேன—போர் செய்வதற்கான இடங்களுடன் கூடிய; உன்னதேன—மிகவும் உயர்ந்த; ச—மேலும்.
அந்த நகரம் ஆகாச-கங்கா எனப்படும் கங்கை நீர் நிரம்பிய அரண்களாலும், நெருப்பின் நிறத்தையொத்த உயர்ந்ததோர் சுவராலும் சூழப்பட்டிருந்தது. இச்சுவரின் மீது போரிடுவதற்கான கைப்பிடிச்சுவர்கள் இருந்தன.
பதம் 8.15.15
ருக்ம-பட்ட-கபாடைஸ் ச த்வாரை: ஸ்படிக-கோபுரை:
ஜுஷ்டாம் விபக்த-ப்ரபதாம் விஸ்வகர்ம-வினிர்மிதாம்
ருக்ம-பட்ட—தங்கத்தாலான தகடுகளைக் கொண்ட; கபாடை:—அவற்றின் கதவுகள்; ச—மேலும்; த்வாரை:—நுழை வாயில்களுடன்: ஸ்படிக-கோபுரை:—மிகச்சிறந்த சலவைக்கற்களால் ஆன வாசல்களுடன்; ஸுஷ்டாம்—இணைக்கப்பட்ட; விபக்த-ப்ரபதாம்—பல்வேறு பொதுச் சாலைகளுடன்; விஸ்வகர்ம-வினிர்மிதாம்—தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவால் கட்டப்பட்ட.
கதவுகள் கெட்டியான தங்கத் தகடுகளால் செய்யப்பட்டிருந்தன. வாசல்களோ மிகச்சிறந்த சலவைக்கற்களால் செய்யப்பட்டிருந்தன. இவை பல்வேறு பொதுச் சாலைகளுடன் இணைக்கப்பட்டிருந்தன. நகரம் முழுவதுமே விஸ்வகர்மாவால் கட்டப்பட்டதாக இருந்தது.
பதம் 8.15.16
ஸபா-சத்வர-ரத்யாட்யாம் விமானைர் ஞாயர்புதைர் யுதாம்
ஸ்ருங்காடகைர் மணீமயைர் வஜ்ர-வித்ரும-வேதிபி:
ஸபா—சபா மண்டபங்களால்; சத்வர—முற்றங்கள்; ரத்ய—பொதுச் சாலைகளால்; ஆட்யாம்—செல்வச் செழிப்புள்ள; விமானை:—விமானங்களால்; ன்யார்புதை:—பத்து கோடிக்குக் குறையாத; யுதாம்—கொண்டுள்ள; ஸ்ருங்க-ஆதகை:—தெருச்சந்திகளுடன்; மணி-மயை:— முத்துக்களாலான; வஜ்ர—வைரங்களாலான; வித்ரும— மற்றும் பவளம்; வேதிபி:—அமரும் இடங்களுடன்.
அந்த நகரம் சபா மண்டபங்கள், அகலமான சாலைகள், முற்றங்கள் மற்றும் பத்துக்கோடிக்கு குறையாத விமானங்கள் ஆகியவற்றினால் நிரம்பியிருந்தது. தெருச் சந்திகள் முத்துக்களால் செய்யப்பட்டிருந்தன. மேலும் அமரும் இடங்கள் வைரங்களாலும், பவளங்களாலும் செய்யப்பட்டவையாக இருந்தன.
பதம் 8.15.17
யத்ர நித்ய-வ்யோ ரூபா: ஸ்யாமா விரஜ-வாஸஸ:
ப்ராஜந்தே ரூபவன்-நார்யோ ஹி அர்ச்சிபிர் இவ வஹ்னய:
யத்ர—அந்த நகரத்தில்; நித்ய-வய:-ரூபா:—நித்தியமான, அழகும், இளமையும், கொண்டவர்கள்; ஸ்யாமா:—ஸ்யாமத்தின் தன்மைகளைக் கொண்ட; விரஜ-வாஸஸ:—எப்பொழுதும் தூய ஆடைகளை அணிந்தவர்களாய்; ப்ராஜந்தே—மின்னும்; ரூப-வத்—நன்கு அலங்கரிக்கப்பட்ட; நார்ய:—மங்கையர்; ஹி—நிச்சயமாக; அர்சிபி:—பல ஜுவாலைகளுடன் கூடிய; இவ—போல்; வஹ்நய:—நெருப்புகள்.
தூய ஆடைகளை அணிந்து நித்திய அழகும் இளமையும் கொண்ட மங்கையர், ஜுவாலைகளுடன் கூடிய நெருப்புகளைப் போல் அந்த நகரத்தில் ஜொலித்தனர். அவர்களனைவரும் ஸ்யாமத்தின் குணத்தைப் பெற்றிருந்தனர்.
பதம் 8.15.18
ஸுர-ஸ்த்ரீ-கேச-விப்ரஷ்ட நவ-ஸௌகந்திக-ஸ்ரஜாம்
யத்ராமோதம் உபாதாய மார்க ஆவாதி மாருத:
ஸுர-ஸ்த்ரீ—தேவ மங்கையரின்; கேச—கூந்தலிலிருந்து; விப்ரஷ்ட—விழுந்து; நவ-ஸௌகந்திக—புதிய, நறுமணம் கொண்ட மலர்களாலான; ஸ்ரஜாம்—மலர் மாலைகளின்; யத்ர—எங்கு; ஆமொதம்—நறுமணம்; உபாதாய—ஏந்தி வரும்; மார்கே—சாலைகளின் மீது; ஆவாதி—வீசுகின்றது; மாருத:—இளங்காற்று.
நகர வீதிகளில் வீசும் இளங்காற்றுகள், தேவ மங்கையரின் கூந்தல்களிலிருந்து விழும் மலர்களின் நறுமணத்தைச் சுமந்து வந்தன.
பதம் 8.15.19
ஹேம-ஜாலாக்ஷ-நிர்கச்சத்-தூமேணாக்குரு-கந்தினா
பாண்டுரேண ப்ரதிச்சன்ன-மார்கே யாந்தி ஸுர-ப்ரியா:
ஹேம-ஜால-அக்ஷ—தங்க வேலைப்பாடு கொண்ட அழகான சிறிய சன்னல்களிலிருந்து; நிர்கச்சத்—வெளிப்படும்; தூமேன—புகையால்; அக்ரு-கந்தினா—அகரு எனப்படும் எரியும் தூபத்தினால் உண்டாகும் நறுமணம்; பாண்டுரேண—மிகவும் வெண்மையான; ப்ரதிச்சன்ன—மூடப்பட்ட; மார்கே—வீதியில்; யாந்தி—கடந்து சென்றனர்; ஸுர-ப்ரியா:—அப்ஸரஸ்கள் எனப்படும் அழகிய பொது மங்கையர் அல்லது தேவ மங்கையர்.
தங்க வேலைப்பாடு கொண்ட சன்னல்களிலிருந்து வெளிப்பட்ட அகுரு தூபத்தின் நறுமணமுள்ள வெள்ளைப் புகையால் மூடப்பட்ட வீதிகளை, அப்ஸரஸ்கள் கடந்து சென்றனர்.
பதம் 8.15.20
முக்தா-விதானைர் மணி-ஹேம-கேதுபிர்
நானா-பதாகா-வலபீபிர் ஆவ்ருதாம்
சிகண்டி-பாராவத-ப்ருங்க-நாதிதாம்
வைமானிக-ஸ்த்ரீ-கல-கீத-மங்களாம்
முக்தா-விதானை:—முத்துக்களால் அலங்கரிக்கப்பட்ட மேல்கட்டுகளால்; மணி-ஹேம-கேதுபி:—முத்துக்களாலும்; தங்கத்தாலும் செய்யப்பட்ட கொடிகளுடன்; நானா-பதாகா—பல்வேறு வகையான கொடிகளைக் கொண்ட; வலபீபி:—அரண்மனைகளின் குவிந்த கூரைகளுடன்; ஆவ்ருதாம்—மூடப்பட்டு; சிகண்டி—மயில்களைப் போன்ற பறவைகளின்; பாராவத—புறாக்கள்; ப்ருங்க—தேனீக்கள்; நாதிதாம்—அதனதன் ஓசைகளால் ஒலித்தன; வைமானிக—விமானங்களில் ஏறி; ஸ்த்ரீ—மங்கையரின்; கல-கீத—பாடலில் இருந்து; மங்களாம்—பூரண மங்களகரமான.
முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மேல் கட்டுகளால் நகரம் நிழல் சூழ்ந்திருந்தது. மேலும் அரண்மனையின் குவிந்த கூரைகளின் மீது முத்தாலும், தங்கத்தாலும் செய்யப்பட்ட கொடிகள் இருந்தன. நகரத்தில் எப்பொழுதும் மயில்கள், புறாக்கள் மற்றும் தேனீக்களின் குரலோசைகள் ஒலித்துக் கொண்டிருந்தன. மேலும் அழகிய மங்கையர் நிறைந்த விமானங்கள் நகரத்திற்கு மேல் பறந்தன. அவர்கள் செவிக்கு மிகவும் இனிமையாக இருந்த மங்களகரமான பாடல்களை எப்பொழுதும் பாடிக் கொண்டிருந்தனர்.
பதம் 8.15.21
ம்ருதங்க-சங்கானக-துந்துபி-ஸ்வனை:
ஸதால-வீணா-முரஜேஷ்ட-வேணுபி:
ந்ருத்யை: ஸவாத்யைர் உபதேவ-கீதகைர்
மனோரமாம் ஸ்வ-ப்ரபயா ஜித-ப்ரபாம்
ம்ருதங்க—மிருதங்கங்களின்; சங்க—சங்குகள்; ஆனக-துந்துபி—மற்றும் பேரிகைகள்; ஸ்வனை:—ஓசைகளால்; ஸ-தால—பக்குவமான ராகத்தில்; வீணா—வீணை; முரஜ—ஒருவனையான பேரிகை; இஷ்ட-வேணுபி:—பக்கவாத்தியமான இனிய புல்லாங்குழல் ஓசையால்; ந்ருத்யை:—நடனத்துடன்; ஸ-வாத்யை:—பொருத்தமான வாத்தியக் கருவிகளுடனும்; உபதேவ-கீதகை:—கந்தவர்களைப் போன்ற இரண்டாம் தரமான தேவர்களின் பாடலால்; மனோரமாம்—அழகும், இனிமையும்; ஸ்வ-ப்ரபயா—அதன் சொந்த பொலிவினால்; ஜித-ப்ரபாம்—அழகு தேவதையே வெற்றி கொள்ளப்பட்டது.
அந்த நகரம் மிருதங்கங்கள், சங்குகள், பேரிகைகள், புல்லாங்குழல்கள் மற்றும் நன்கு சுருதி ஏற்பட்ட வீணைகள் ஆகியவற்றின் ஓசைகளால் நிரம்பி இருந்தது. இவை அனைத்தின் ராகங்களும் ஒன்றோடொன்று இசைந்திருந்தன. அங்கு கந்தர்வர்கள் பாட, தொடர்ந்து நடனமும் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்திர புரியின் இணைந்த அழகு, அழகு தேவதையையும் தோற்கடித்தது.
பதம் 8.15.22
யாம் ந வ்ரஜந்தி அதர்மிஷ்டா: கலா பூத-த்ருஹ: சடா:
மானின: காமினோ லுப்தா ஏபிர் ஹீனா வ்ரஜந்தி யத்
யாம்—நகர வீதிகளில்; ந—இல்லை; வ்ரஜந்தி—கடக்க; அதர்மிஷ்டா:—மதப்பற்று இல்லாதவர்கள்; கலா:—பொறாமை கொண்டவர்கள்; பூத—த்ருஹ:—பிற ஜீவராசிகளிடம் கொடுமையாக நடந்து கொள்பவர்கள்; சடா:—மோசக்காரர்கள்; மானின:—பொய்க் கெளரவம் கொண்டவர்கள்; காமின:—காம இச்சையுடையவர்கள்; லுப்தா:—பேராசையுடையவர்கள்; ஏபி:—இந்த; ஹீனா:—அறவே இல்லாத; வ்ரஜந்தி—நடந்தனர்; யத்—வீதியில்.
பாவிகள், பொறாமை கொண்டவர்கள், பிற ஜீவராசிகளிடம் மூர்க்கத்தனம் கொண்டவர்கள், வஞ்சகர்கள், பொய்க் கௌரவம் கொண்டவர்கள், காம இச்சை அல்லது பேராசை கொண்டவர்கள் ஆகிய ஒருவராலும் அந்த நகரத்தினுள் நுழைய முடியாது.
பதம் 8.15.23
தாம் தேவ-தானிம் ஸ வரூதினீ-பதிர்
பஹி: ஸமந்தாத் ருருதே பிருதன்யயா
ஆசார்ய-தத்தம் ஜலஜம் மஹா-ஸ்வனம்
தத்மௌ ப்ராயுஞ்ஜன் பயம் இந்ர-யோஷிதாம்
தாம்—அந்த; தேவ-தானீம்—இந்திரன் வசித்த இடத்தை; ஸ:—அவர் (பலி மகாராஜன்); வருதினீ-பதி:—சேனைத்தலைவரை; பஹி:—வெளியில்; ஸமந்தாத்—எல்லாத் திசைகளிலும்; ருருதே—தாக்கினார்; ப்ருதன்யயா—போர் வீரர்களால்; ஆசார்ய-தத்தம்—சுக்ராச்சாரியரால் அளிக்கப்பட்ட; ஜலஜம்—சங்கு; மஹா-ஸ்வனம்—ஒரு பேரொலி; தத்மௌ—முழங்கியது; ப்ரயுஞ்ஜன்—உண்டாக்கி; பயம்—பயத்தை; இந்ர-யோஷிதாம்—இந்திரனால் பாதுகாக்கப்பட்ட அனைத்து பெண்களின்.
எண்ணற்ற வீரர்களுக்குச் சேனாதிபதியாக விளங்கிய பலி மகாராஜன் இந்திரனின் இந்த வசிப்பிடத்திற்கு வெளியே தமது வீரர்களைத் திரட்டி, எல்லாத் திசைகளிலிருந்தும் அதைத் தாக்கினார். தமது ஆன்மீக குருவாகிய சுக்ராசாரியரால் அளிக்கப்பட்ட சங்கை அவர் ஊதினார். இது இந்திரனால் பாதுகாக்கப்பட்ட மங்கையர்க்கு ஒரு பயங்கரமான சூழ்நிலையை உண்டாக்கியது.
பதம் 8.15.24
மகாவாம்ஸ் தம் அபிப்ரேத்ய பலே: பரமம் உத்யமம்
ஸர்வ-தேவ-கணோபேதோ குரும் ஏதத் உவாச ஹ
மகவான்—இந்திரன்; தம்—சூழ்நிலையை; அபிப்ரேத்ய—புரிந்து கொண்டு; பலே:—பலிமகாராஜனின்; பரமம் உத்யமம்—பெரும் உற்சாகத்தை; ஸர்வ-தேவ-கண—எல்லா தேவர்களாலும்; உபோத:—சூழப்பட்டவராய்; குரும்—ஆன்மீக குருவிடம்; ஏதத்—பின்வரும் வார்த்தைகளை; உவாச—கூறினார்; ஹ—உண்மையில்.
பலிமகாராஜனின் விடாமுயற்சியையும், அவரது நோக்கத்தையும் கண்ட தேவேந்திரன், மற்ற தேவர்களுடன் தமது ஆன்மீக குருவாகிய பிருஹஸ்பதியை அணுகி பின்வருமாறு கூறினார்.
பதம் 8.15.25
பகவன் உத்யமோ பூயான் பலேர் ந: பூர்வ-வைரிண:
அவிஷஹ்யம் இமம் மன்யே கேனாஸீத் தேஜஸோர்ஜித:
பகவன்—பிரபுவே; உத்யம:—உற்சாகத்தை; பூயான்—பெரும்; பலே:—பலிமகாராஜனின்; ந:—நமது; பூர்வ-வைரிண:—பூர்வீக விரோதியான; அவிஷஹ்யம்—பொறுக்கமுடியாத; இமம்—இந்த; மன்யே—நான் நினைக்கிறேன்; கேன—எவரால்; ஆஸீத்—பெற்ற; தேஜஸா—வீரியம்; ஊர்ஜித:—அடைந்திருக்கிறார்.
என் பிரபுவே, நமது பூர்வீக எதிரியான பலிமகாராஜன் இப்போது புதிய உற்சாகத்துடன் வந்துள்ளார். அவர் இத்தகைய ஆச்சரியமான சக்தியைப் பெற்றிருப்பதால், அவரது வீரியத்தை அநேகமாக நம்மால் எதிர்க்க முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம்.
பதம் 8.15.26
நைநம் கஸ்சித் குதோ வாபி ப்ரதிவ்யோடும் அதீஸ்வர:
பிபன் இவ முகேனேதம் லிஹன் இவ திசோ தச
தஹன் இவ திசோ த்ருக்பி: ஸம்வர்தாக்னிர் இவோத்தித:
ந—இல்லை; ஏனம்—இந்த ஏற்பாட்டை; கஸ்சித்—எவராலும்; குத:—எங்கிருந்தும்; வா அபி—ஏதேனும்; ப்ரதிவ்யோடும்—எதிர்க்க; அதீஸ்வர:—இயலும்; பிபன் இவ—பருகுவதைப் போல்; முகேன—வாயால்; இதம்—இதை (உலகம்); லிஹன் இவ—நக்கிவிடுவதைப்போல்; திச: தச—பத்து திசைகளையும்; தஹன் இவ—எரித்து விடுவதைப்போல்; திச:—எல்லாத் திசைகளையும்; த்ருக்பி:—அவரது பார்வையால்; ஸம்வர்த்த-அக்னி:—ஸம்வர்த்தம் எனப்படும் நெருப்பு; இவ—போல்; உத்தித:—இப்போது எழுந்துள்ளார்.
பலியின் இந்த சேனைகளின் அமைப்பை எவராலும், எங்கும் எதிர்க்க முடியாது. பலி இப்போது தனது வாயால் பிரபஞ்சம் முழுவதையும் குடித்துவிட முயல்வதைப் போலவும், தனது நாவால் பத்துத் திசைகளையும் நக்கிவிடுவது போலவும், கண்களால் ஒவ்வொரு திசைகளிலும் நெருப்பை உண்டாக்குவதைப் போலவும் காணப்படுகிறார். உண்மையில் ஸம்வர்த்தகம் என்ற அழிவை ஏற்படுத்தும் தீயைப் போல் அவர் எழுந்துள்ளார்.
பதம் 8.15.27
ப்ரூஹி காரணம் ஏதஸ்ய துர்தர்ஷத்வஸ்ய மத்-ரிபோ:
ஓஜ: ஸஹோ பலம் தேஜோ யத ஏதத் ஸமுத்யம:
ப்ரூஹி—அன்புடன் எங்களுக்குக் கூறுவீராக; காரணம்—காரணத்தை; ஏதஸ்ய—இவையனைத்தின்; துரதர்ஷத்வஸ்ய—எதிர்க்க முடியாத தன்மையின்; மத்-ரிபோ:—எனது எதிரியின்; ஓஜ:—வீரம்; ஸஹ:—சக்தி; பலம்—பலம்; தேஜ:—ஆதிக்கம்; யத:—எங்கிருந்து; ஏதத்—இவ்வெல்லா; ஸமுத்யம:—முயற்சி.
பலி மகாராஜனின் பலம், முயற்சி, ஆதிக்கம் மற்றும் வெற்றி ஆகியவற்றிற்குக் காரணமென்ன? அவர் எப்படி இவ்வளவு உற்சாகத்தைப் பெற்றார்? அன்புடன் எனக்குக் கூறுவீராக.
பதம் 8.15.28
ஸ்ரீ-குருர் உவாச
ஜானாமி மகவாஞ் சத்ரோர் உன்னதேர் அஸ்ய காரணம் சிஷ்யாயோபப்ருதம் தேஜோ ப்ருகுபிர் ப்ரஹ்ம-வாதிபி:
ஸ்ரீ-குரு: உவாச—பிருஹஸ்பதி கூறினார்; ஜானாமி—எனக்குத் தெரியும்; மகவன்—இந்திரனே; சத்ரோ:—எதிரியின்; உன்னதே:—உயர்வின்; அஸ்ய—அவரின்; காரணம்—காரணம்; சிஷ்யாய—சீடனுக்கு; உபப்ருதம்—அளித்துள்ளனர்; தேஜ:—சக்தியை; ப்ருகுபி:—பிருகுவின் சந்ததியினரால்; ப்ரஹ்ம-வாதிபி:—சர்வ சக்தி வாய்ந்த பிராமணர்கள்.
தேவர்களின் ஆன்மீக குருவான பிருஹஸ்பதி கூறினார்: இந்திரா, உன்னுடைய எதிரியின் பலத்துக்குக் காரணம் எனக்குத் தெரியும். பிராமணர்களான பிருகு முனியின் சந்ததியினர், தங்களது சீடரான பலி மகாராஜனிடம் திருப்தியடைந்து, அத்தகைய அசாதாரணமான சக்தியை அவருக்கு அளித்துள்ளனர்.
பதம் 8.15.29
ஒஜஸ்வினம் பலிம் ஜேதும் ந ஸமர்தோ ‘ஸ்தி கஸ்சன
பவத்-விதோ பாவான் வாபி வர்ஜயித்வேஸ்வரம் ஹரிம்
விஜேஷ்யதி ந கோ ‘பி ஏனம் ப்ரஹ்ம-தேஜ-ஸமேதிதம்
நாஸ்ய சக்த: புர: ஸ்தாதும் க்ருதாந்தஸ்ய யதா ஜனா:
ஓஜஸ்வினம்—மிகவும் சக்திவாய்ந்த; பலிம்—பலி மகாராஜனை; ஜேதும்—வெல்ல; ந—இல்லை; ஸமர்த:—முடியும்; அஸ்தி—இருப்பது; கஸ்சன—எவராலும்; பவத்-வித:—உம்மைப் போல்; பவான்—நீரே; வா அபி—அல்லது; வர்ஜயித்வா—தவிர; ஈஸ்வரம்—பரம ஆளுனரை; ஹரிம்—பரமபுருஷ பகவானை; விஜேஷ்யதி—வெல்லுவார்; ந—இல்லை; க: அபி—எவரேனும்; ஏனம்—அவரை (பலி மகாராஜன்); ப்ரஹ்ம-தேஜ:-ஸமேதிதம்—இப்போது ப்ரஹ்ம-தேஜஸ் எனப்படும் அசாதாரணமான சக்தி அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது; ந—இல்லை; அஸ்ய—அவரின்; சக்த:—முடியும்; புர:—முன்னிலையில்; ஸ்தாதும்—இருக்க; க்ருத-அந்தஸ்ய—யமராஜனின்; யதா—போல்; ஜனா:—ஜனங்களால்.
மிகவும் சக்தி வாய்ந்த பலியை உம்மாலோ, உமது ஆட்களாலோ வெல்ல முடியாது. உண்மையில், அவர் இப்போது (ப்ரஹ்ம-தேஜஸ் எனப்படும்) பரம ஆன்மீக சக்தியைப் பெற்றிருப்பதால், பரமபுருஷ பகவானைத் தவிர வேறொருவராலும் அவரை வெல்ல முடியாது. யமராஜனின் முன் ஒருவராலும் நிற்க முடியாது. அதைப்போலவே, இப்போது பலி மகாராஜனின் முன் ஒருவராலும் நிற்க முடியாது.
பதம் 8.15.30
தஸ்மான் நிலயம் உத்ஸ்ருஜ்ய யூயம் ஸர்வே த்ரி-விஷ்டபம்
யாத காலம் ப்ரதீக்ஷந்தோ யத: சத்ரோர் விபர்யய:
தஸ்மாத்—ஆகவே; நிலயம்—காணப்படாதவாறு; உத்ஸ்ருஜ்ய—கைவிட்டு; யூயம்—நீங்கள்; ஸர்வே—அனைவரும்; த்ரி-விஷ்டபம்—சுவர்க்கலோக இராஜ்யத்தை; யாத—வேறு எங்கேனும் சென்று விடுங்கள்; காலம்—காலத்திற்கு; ப்ரதீக்ஷந்த:—காத்திருக்க; யத:—காரணமாக; சத்ரோ:—உமது எதிரியின்; விபர்யய:—நேர்மாறான சூழ்நிலை வரும்வரை.
ஆகவே, உமது எதிரிகளின் சூழ்நிலை மாறும்வரை காத்திருக்கும் வேளையில், நீங்களனைவரும் இச்சுவர்க்க லோகத்தை விட்டு வெளியேறி, கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்காவது சென்று விடுங்கள்.
பதம் 8.15.31
ஏஷ விப்ர பலோதர்க: ஸம்ப்ரதி ஊர்ஜித-விக்ரம:
தேஷாம் ஏவாபமானேன ஸானுபந்தோ விநங்க்ஷ்யதி
ஏஷ:—இந்த (பலி மகாராஜன்); விப்ர-பல-உதர்க:—அவருக்கு அளிக்கப்பட்ட பிராமண சக்தியின் காரணத்தால் செழிப்புடன் இருக்கிறார்; ஸம்ப்ரதி—இச்சமயத்தில்; ஊர்ஜித-விக்ரம:—மிகவும் சக்தி வாய்ந்தவராக; தேஷாம்—அதே பிராமணர்களின்; ஏவ—உண்மையில்; அபமானேன—அவமரியாதையால்; ஸ-அனுபந்த:—நண்பர்களுடனும், உதவியாளர்களுடனும்; விநங்க்ஷ்யதி—அழிக்கப்பட்டுவிடுவார்.
பிராமணர்களால் கொடுக்கப்பட்ட வரங்களினால் பலி மகாராஜன் இப்போது மிகவும் சக்தி படைத்தவராக ஆகியிருக்கிறார். ஆனால் பிறகு அவர் பிராமணர்களை அவமதிக்கும்போது, தமது நண்பர்களுடனும், உதவியாளர்களுடனும் அவர் நாசமடைவார்.
பதம் 8.15.32
ஏவம் ஸுமந்த்ரிதார்தாஸ் தே குருணார்தானுதர்சினா
ஹித்வா த்ரி-விஷ்டபம் ஜக்முர் கீர்வாணா: காம-ரூபிண:
ஏவம்—இவ்வாறாக; ஸு-மந்த்ரித—நன்கு அறிவுறுத்தப்பட்டு; அர்தா:—கடமைகளைப் பற்றி; தே—அவர்கள் (தேவர்கள்); குருணா—அவர்களுடைய ஆன்மீக குருவினால்; அர்த-அனுதர்சினா—அவரது உபதேசங்கள் மிகவும் பொருத்தமானவையாகும்; ஹித்வா—கைவிட்டு; த்ரி-விஷ்டபம்—சுவர்க்கலோக இராஜ்யத்தை; ஜக்மு:—சென்றனர்; கீர்வாணா:—தேவர்கள்; காம-ரூபிண:—தாங்கள் விரும்பிய ரூபத்தை ஏற்கக் கூடியவர்களான அவர்கள்.
சுகதேவ கோஸ்கூாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக தங்களது நன்மைக்காக பிருஹஸ்பதியால் அறிவுறுத்தப்பட்ட தேவர்கள், அவரது வார்த்தைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டனர். அவரவர் விருப்பத்திற்கேற்ற உருவங்களை ஏற்று, சுவர்க்கலோக இராஜ்யத்தை விட்டு வெளியேறி, அசுரர்களின் கண்களுக்குப் புலப்படாதவாறு இங்குமங்குமாகப் பிரிந்து சென்று விட்டனர்.
பதம் 8.15.33
தேவேஷு அத நிலீனேஷு பலிர் வைரோசன: புரீம்
தேவ-தானீம் அதிஷ்டாய வசம் நின்யே ஜகத்-த்ரயம்
தேவேஷு—தேவர்கள் அனைவரும்; அத—இவ்வாறாக; நிலீனேஷு—மறைந்துவிட்ட போது; பலி:—பலி மகாராஜன்; வைரோசன:—விரோசனரின் புதல்வரான; புரீம்—சுவர்க்க லோக இராஜ்யத்தை; தேவ-தானீம்—தேவர்களின் வசிப்பிடமான; அதிஷ்டாய—ஆக்கிரமித்து; வசம்—கட்டுப்பாட்டின் கீழ்; நின்யே—கொண்டு வந்தார்; ஜகத்-த்ரயம்—மூவுலகங்களையும்.
தேவர்கள் மறைந்துவிட்டபோது, விரோசனரின் புதல்வரான பலி மகாராஜன் சுவர்க்கலோக இராஜ்யத்தினுள் பிரவேசித்து, அங்கிருந்து அவர் மூவுலகங்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
பதம் 8.15.34
தம் விஸ்வ-ஜயினம் சிஷ்யம் ப்ருகவ: சிஷ்ய-வர்ஸலா:
சதேன ஹயமேதானாம் அனுவ்ரதம் அயாஜயன்
தம்—அவரிடம் (பலிமகாராஜன்); விஸ்வ-ஜயினம்—முழுபிரபஞ்சத்தையும் வெற்றி கொண்ட; சிஷ்யம்—அவர் ஒரு சீடராக இருந்த காரணத்தால்; ப்ருகவ:—பிருகுவின் சந்ததியினரான, சுக்ராசார்யரைப் போன்ற பிராமணர்கள்; சிஷ்ய-வத்ஸலா:—சீடரிடம் மிகவும் திருப்தியடைந்து; சதேன-ஹய-மேதானாம்—நூறு அஸ்வமேத யாகங்களை; அனுவ்ரதம்—பிராமணர்களின் உபதேசத்தைப் பின்பற்றி; அயாஜயன்—நிறைவேற்றச் செய்தனர்.
முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்றிவிட்ட தங்களது சீடரிடம் மிகவும் திருப்தி கொண்ட பிருகுவின் பிராமண வம்சத்தினர், இப்போது அவரை நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வதில் ஈடுபடுத்தினர்.
பதம் 8.15.35
ததஸ் தத்-அனுபாவேன புவன-த்ரய-விஸ்ருதம்
கீர்திம் திக்ஷு விதன்வான: ஸ ரேஜ உடுராட் இவ
தத:—அதன்பிறகு; தத்-அனுபாவேன—அத்தகைய பெரும் யாகங்களை நிறைவேற்றியதால்; புவன-த்ரய—மூவுலகிலும்; விஸ்ருதாம்—புகழப்பட்டார்; கீர்த்திம்—கீர்த்தி; திக்ஷு—எல்லாத் திசைகளிலும்; விதன்வான:—பரவும்; ஸ:—அவர் (பலி மகாராஜன்); ரேஜே—பிரகாசம் உள்ளவரானார்; உடுராட்—சந்திரன்; இவ—போல.
இந்த யாகங்களை பலி மகாராஜன் செய்தபோது, எல்லாத் திசைகளிலும், மூவுகிலும் அவர் பெரும் புகழ் பெற்றவரானார். இவ்வாறாக ஆகாயத்திலுள்ள பிரகாசமான சந்திரனைப் போல் அவர் தமது பதவியில் பிரகாசித்தார்.
பதம் 8.15.36
புபுஜே ச ஸ்ரியம் ஸ்வ்ருத்தாம் த்விஜ-தேவோபலம்பிதாம்
க்ருத-க்ருத்யம் இவாத்மானம் மன்யமானோ மஹாமனா:
புபுஜே—அனுபவித்தார்; ச—மேலும்; ஸ்ரியம்—செல்வத்தையும்; ஸு-ருத்தாம்—செழுமையையும்; த்விஜ—பிராமணர்களின்; தேவ—தேவர்களுக்கு ஈடான; உபலம்பிதாம்—ஆதரவினால் அடைந்தார்; க்ருத-க்ருத்யம்—அவரது செயல்களால் மிகவும் திருப்தியடைந்ததாக; இவ—அவ்வாறு; ஆத்மானம்—அவராகவே; மன்யமான:—எண்ணினார்; மஹா-மனா:—உதார மனம் கொண்ட அவர்.
பிராமணர்களின் ஆதரவின் காரணத்தால், உதார மனம் கொண்டவரான பலி மகாராஜன், தாம் மிகவும் திருப்தி அடைந்திருப்பதாக எண்ணிக் கொண்டு, பெரும் செல்வமும் செழிப்பும் உள்ளவராகி, இராஜ்யத்தை அனுபவிக்கத் துவங்கினார்.
ஸ்ரீமத் பாகவதம், எட்டாம் காண்டத்தின் “பலி மகாராஜன் சுவர்க்க லோகங்களைக் கைப்பற்றுதல்” எனும் தலைப்பை கொண்ட பதினைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.