அத்தியாயம் – 15
பலி மகாராஜன் சுவர்க்க லோகங்களைக்
கைப்பற்றுதல்
பதங்கள் 8.15.1 – 8.15.2 : பரீட்சித்து மகாராஜன் வினவினார்: பரமபுருஷ பகவானே அனைத்திற்கும் உரிமையாளராவார். அவர் எதற்காக ஓர் ஏழையைப் போல் பலி மகாராஜனிடமிருந்து மூன்றடி நிலத்தை யாசிக்க வேண்டும்? மேலும் யாசித்த பொருளை அவர் அடைந்த போதிலும், அவர் ஏன் பலி மகாராஜனைக் கைது செய்தார்? இம் முரண்பாடுகளின் மர்மத்தை அறிய நான் மிகவும் ஆவல் கொண்டுள்ளேன்.
பதம் 8.15.3 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, பலி மகாராஜன் தனது செல்வங்கள் அனைத்தையும் இழந்து, போரில் மரணமடைந்த போது, பிருகு முனியின் வம்சத்தில் வந்தவரான சுக்ராசார்யர் அவரை உயிர்ப்பித்தார். இக்காரணத்தால், மகாத்மாவாகிய பலி மகாராஜன் சுக்ராசார்யரின் சீடராகி, தம்மிடமிருந்த அனைத்தையும் அர்ப்பணித்து, பெரும் நம்பிக்கையுடன் அவருக்குத் தொண்டு செய்ய ஆரம்பித்தார்.
பதம் 8.15.4 : இந்திரனின் இராஜ்யத்தை வெல்ல விரும்பிய பலி மகாராஜனிடம், பிருகு முனிவரின் பிராமண வம்சத்தவர்கள் மிகவும் திருப்தியடைந்தனர். ஆகவே, அவரைத் தூய்மை செய்து, கட்டுப்பாட்டு விதிகளுக்கேற்ப முறையாக அவரை ஸ்நானம் செய்வித்த பின், விஸ்வஜித் எனப்படும் யாகத்தைச் செய்வதில் அவரை ஈடுபடுத்தினர்.
பதம் 8.15.5 : யாகத்தீயில் நெய் ஊற்றப்பட்டதும், அதிலிருந்து தங்கத்தாலும், பட்டாலும் மூடப்பட்ட தேவலோக இரதமொன்று வெளிப்பட்டது. இந்திரனுடையது போன்ற மஞ்சள் நிறக் குதிரைகளும், சிங்கத்தின் அடையாளம் பொறிக்கப்பட்ட ஒரு கொடியும் கூட அதிலிருந்து வெளிப்பட்டன.
பதம் 8.15.6 : தங்க முலாம் பூசப்பட்ட ஒரு வில், தவறாத அம்புகளைக் கொண்ட இரு அம்பறாத்தூணிகள், மற்றும் திவ்யமான கவசம் ஆகியவையும் தோன்றின. பலி மகாராஜனின் பாட்டனாரான பிரகலாத மகாராஜன், என்றுமே வாடாத மலர் மாலையொன்றை பலிக்கு வழங்கினார். மேலும் சுக்ராசார்யர் அவருக்கு ஒரு சங்கை வழங்கினார்.
பதம் 8.15.7 : இவ்வாறாக பலி மகாராஜன் பிராமணர்களின் யோசனைப்படி விசேஷ சடங்கை நிறைவேற்றி, அவர்களின் கிருபையால் போருக்கான தளவாடப் பொருட்களைப் பெற்றதும், அவர் பிராமணர்களை வலம் வந்து வணங்கினார். பிரகலாத மகாராஜனையும் கூட அவர் வாழ்த்தி வணங்கினார்.
பதங்கள் 8.15.8 -8.15.9 : பிறகு, சுக்ராசார்யரால் அளிக்கப்பட்ட இரதத்தின் மேல் அமர்ந்ததும், அழகியதொரு மாலையால் அலங்கரிக்கப்பட்டிருந்த பலி மகாராஜன் பாதுகாப்புக் கவசத்தை தமது உடலில் அணிந்து, ஒரு வில்லுடன் கூடியவராய், ஒர் உடைவாளையும், அம்புகளைக் கொண்ட ஓர் அம்பறாத்தூணியையும் கையிலெடுத்தார். அவரது கரங்கள் தங்கக் காப்புகளாலும், செவிகள் நீலக்கற்களாலான குண்டலங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருக்க, இரதத்தின் இருக்கையில் அவர் அமர்ந்த போது, பூஜிக்கத்தக்க ஒரு தீயைப் போல் அவர் பிரகாசித்தார்.
பதங்கள் 8.15.10 – 8.15.11 : பலத்திலும், செல்வத்திலும், அழகிலும் தமக்கு நிகரான தமது சொந்த வீரர்களுடனும், அசுரத் தலைவர்களுடனும் அவர் இணைந்த போது, அவர்கள் தங்களுடைய பார்வையால் ஆகாயத்தையே விழுங்கி, எல்லாத் திசைகளையும் எரித்துவிடுவார்கள் எனத் தோன்றியது. இவ்வாறாக அசுர வீரர்களைத் திரட்டிய பின், பலி மகாராஜன் செல்வச் செழிப்புடைய இந்திரனின் தலைநகரை நோக்கிப் புறப்பட்டார். உண்மையில், அவர் முழு உலகையும் நடுங்கச் செய்து விடுபவரைப் போல் காணப்பட்டார்.
பதம் 8.15.12 : தேவேந்திரனின் நகரம், நந்தனவனத்தைப் போன்ற இனிமையான பழத்தோட்டங்களாலும், பூந்தோட்டங்களாலும் நிறைந்திருந்தது. மலர்கள், இலைகள், மற்றும் பழங்களின் பாரத்தால், நித்திய வாழ்வுடைய அந்த மரங்களின் கிளைகள் வளைந்து தொங்கின. கீச்சிடும் ஜோடிப் பறவைகளும், பாடும் தேனீக்களும், பூ மற்றும் பழத் தோட்டங்களுக்கு வந்து தங்கிச் சென்றன. அச்சூழ்நிலை முழுவதுமே தெய்வீகமானதாக இருந்தது.
பதம் 8.15.13 : தேவர்களால் பாதுகாக்கப்பட்ட அழகிய மங்கையர், தோட்டங்களில் விளையாடி மகிழ்ந்தனர். அத்தோட்டங்களில் இருந்த தாமரைக் குளங்களில் அன்னப்பறவைகள், கொக்குகள், சக்ரவாகங்கள், பெண் வாத்துகள் ஆகியவை நிரம்பியிருந்தன.
பதம் 8.15.14 : அந்த நகரம் ஆகாச-கங்கா எனப்படும் கங்கை நீர் நிரம்பிய அரண்களாலும், நெருப்பின் நிறத்தையொத்த உயர்ந்ததோர் சுவராலும் சூழப்பட்டிருந்தது. இச்சுவரின் மீது போரிடுவதற்கான கைப்பிடிச்சுவர்கள் இருந்தன.
பதம் 8.15.15 : கதவுகள் கெட்டியான தங்கத் தகடுகளால் செய்யப்பட்டிருந்தன. வாசல்களோ மிகச்சிறந்த சலவைக்கற்களால் செய்யப்பட்டிருந்தன. இவை பல்வேறு பொதுச் சாலைகளுடன் இணைக்கப்பட்டிருந்தன. நகரம் முழுவதுமே விஸ்வகர்மாவால் கட்டப்பட்டதாக இருந்தது.
பதம் 8.15.16 : அந்த நகரம் சபா மண்டபங்கள், அகலமான சாலைகள், முற்றங்கள் மற்றும் பத்துக்கோடிக்கு குறையாத விமானங்கள் ஆகியவற்றினால் நிரம்பியிருந்தது. தெருச் சந்திகள் முத்துக்களால் செய்யப்பட்டிருந்தன. மேலும் அமரும் இடங்கள் வைரங்களாலும், பவளங்களாலும் செய்யப்பட்டவையாக இருந்தன.
பதம் 8.15.17 : தூய ஆடைகளை அணிந்து நித்திய அழகும் இளமையும் கொண்ட மங்கையர், ஜுவாலைகளுடன் கூடிய நெருப்புகளைப் போல் அந்த நகரத்தில் ஜொலித்தனர். அவர்களனைவரும் ஸ்யாமத்தின் குணத்தைப் பெற்றிருந்தனர்.
பதம் 8.15.18 : நகர வீதிகளில் வீசும் இளங்காற்றுகள், தேவ மங்கையரின் கூந்தல்களிலிருந்து விழும் மலர்களின் நறுமணத்தைச் சுமந்து வந்தன.
பதம் 8.15.19 : தங்க வேலைப்பாடு கொண்ட சன்னல்களிலிருந்து வெளிப்பட்ட அகுரு தூபத்தின் நறுமணமுள்ள வெள்ளைப் புகையால் மூடப்பட்ட வீதிகளை, அப்ஸரஸ்கள் கடந்து சென்றனர்.
பதம் 8.15.20 : முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த மேல் கட்டுகளால் நகரம் நிழல் சூழ்ந்திருந்தது. மேலும் அரண்மனையின் குவிந்த கூரைகளின் மீது முத்தாலும், தங்கத்தாலும் செய்யப்பட்ட கொடிகள் இருந்தன. நகரத்தில் எப்பொழுதும் மயில்கள், புறாக்கள் மற்றும் தேனீக்களின் குரலோசைகள் ஒலித்துக் கொண்டிருந்தன. மேலும் அழகிய மங்கையர் நிறைந்த விமானங்கள் நகரத்திற்கு மேல் பறந்தன. அவர்கள் செவிக்கு மிகவும் இனிமையாக இருந்த மங்களகரமான பாடல்களை எப்பொழுதும் பாடிக் கொண்டிருந்தனர்.
பதம் 8.15.21 : அந்த நகரம் மிருதங்கங்கள், சங்குகள், பேரிகைகள், புல்லாங்குழல்கள் மற்றும் நன்கு சுருதி ஏற்பட்ட வீணைகள் ஆகியவற்றின் ஓசைகளால் நிரம்பி இருந்தது. இவை அனைத்தின் ராகங்களும் ஒன்றோடொன்று இசைந்திருந்தன. அங்கு கந்தர்வர்கள் பாட, தொடர்ந்து நடனமும் நிகழ்ந்து கொண்டிருந்தது. இந்திர புரியின் இணைந்த அழகு, அழகு தேவதையையும் தோற்கடித்தது.
பதம் 8.15.22 : பாவிகள், பொறாமை கொண்டவர்கள், பிற ஜீவராசிகளிடம் மூர்க்கத்தனம் கொண்டவர்கள், வஞ்சகர்கள், பொய்க் கௌரவம் கொண்டவர்கள், காம இச்சை அல்லது பேராசை கொண்டவர்கள் ஆகிய ஒருவராலும் அந்த நகரத்தினுள் நுழைய முடியாது.
பதம் 8.15.23 : எண்ணற்ற வீரர்களுக்குச் சேனாதிபதியாக விளங்கிய பலி மகாராஜன் இந்திரனின் இந்த வசிப்பிடத்திற்கு வெளியே தமது வீரர்களைத் திரட்டி, எல்லாத் திசைகளிலிருந்தும் அதைத் தாக்கினார். தமது ஆன்மீக குருவாகிய சுக்ராசாரியரால் அளிக்கப்பட்ட சங்கை அவர் ஊதினார். இது இந்திரனால் பாதுகாக்கப்பட்ட மங்கையர்க்கு ஒரு பயங்கரமான சூழ்நிலையை உண்டாக்கியது.
பதம் 8.15.24 : பலிமகாராஜனின் விடாமுயற்சியையும், அவரது நோக்கத்தையும் கண்ட தேவேந்திரன், மற்ற தேவர்களுடன் தமது ஆன்மீக குருவாகிய பிருஹஸ்பதியை அணுகி பின்வருமாறு கூறினார்.
பதம் 8.15.25 : என் பிரபுவே, நமது பூர்வீக எதிரியான பலிமகாராஜன் இப்போது புதிய உற்சாகத்துடன் வந்துள்ளார். அவர் இத்தகைய ஆச்சரியமான சக்தியைப் பெற்றிருப்பதால், அவரது வீரியத்தை அநேகமாக நம்மால் எதிர்க்க முடியாது என்று நாங்கள் நினைக்கிறோம்.
பதம் 8.15.26 : பலியின் இந்த சேனைகளின் அமைப்பை எவராலும், எங்கும் எதிர்க்க முடியாது. பலி இப்போது தனது வாயால் பிரபஞ்சம் முழுவதையும் குடித்துவிட முயல்வதைப் போலவும், தனது நாவால் பத்துத் திசைகளையும் நக்கிவிடுவது போலவும், கண்களால் ஒவ்வொரு திசைகளிலும் நெருப்பை உண்டாக்குவதைப் போலவும் காணப்படுகிறார். உண்மையில் ஸம்வர்த்தகம் என்ற அழிவை ஏற்படுத்தும் தீயைப் போல் அவர் எழுந்துள்ளார்.
பதம் 8.15.27 : பலி மகாராஜனின் பலம், முயற்சி, ஆதிக்கம் மற்றும் வெற்றி ஆகியவற்றிற்குக் காரணமென்ன? அவர் எப்படி இவ்வளவு உற்சாகத்தைப் பெற்றார்? அன்புடன் எனக்குக் கூறுவீராக.
பதம் 8.15.28 : தேவர்களின் ஆன்மீக குருவான பிருஹஸ்பதி கூறினார்: இந்திரா, உன்னுடைய எதிரியின் பலத்துக்குக் காரணம் எனக்குத் தெரியும். பிராமணர்களான பிருகு முனியின் சந்ததியினர், தங்களது சீடரான பலி மகாராஜனிடம் திருப்தியடைந்து, அத்தகைய அசாதாரணமான சக்தியை அவருக்கு அளித்துள்ளனர்.
பதம் 8.15.29 : மிகவும் சக்தி வாய்ந்த பலியை உம்மாலோ, உமது ஆட்களாலோ வெல்ல முடியாது. உண்மையில், அவர் இப்போது (ப்ரஹ்ம-தேஜஸ் எனப்படும்) பரம ஆன்மீக சக்தியைப் பெற்றிருப்பதால், பரமபுருஷ பகவானைத் தவிர வேறொருவராலும் அவரை வெல்ல முடியாது. யமராஜனின் முன் ஒருவராலும் நிற்க முடியாது. அதைப்போலவே, இப்போது பலி மகாராஜனின் முன் ஒருவராலும் நிற்க முடியாது.
பதம் 8.15.30 : ஆகவே, உமது எதிரிகளின் சூழ்நிலை மாறும்வரை காத்திருக்கும் வேளையில், நீங்களனைவரும் இச்சுவர்க்க லோகத்தை விட்டு வெளியேறி, கண்ணுக்குத் தெரியாமல் வேறெங்காவது சென்று விடுங்கள்.
பதம் 8.15.31 : பிராமணர்களால் கொடுக்கப்பட்ட வரங்களினால் பலி மகாராஜன் இப்போது மிகவும் சக்தி படைத்தவராக ஆகியிருக்கிறார். ஆனால் பிறகு அவர் பிராமணர்களை அவமதிக்கும்போது, தமது நண்பர்களுடனும், உதவியாளர்களுடனும் அவர் நாசமடைவார்.
பதம் 8.15.32 : சுகதேவ கோஸ்கூாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக தங்களது நன்மைக்காக பிருஹஸ்பதியால் அறிவுறுத்தப்பட்ட தேவர்கள், அவரது வார்த்தைகளை உடனடியாக ஏற்றுக் கொண்டனர். அவரவர் விருப்பத்திற்கேற்ற உருவங்களை ஏற்று, சுவர்க்கலோக இராஜ்யத்தை விட்டு வெளியேறி, அசுரர்களின் கண்களுக்குப் புலப்படாதவாறு இங்குமங்குமாகப் பிரிந்து சென்று விட்டனர்.
பதம் 8.15.33 : தேவர்கள் மறைந்துவிட்டபோது, விரோசனரின் புதல்வரான பலி மகாராஜன் சுவர்க்கலோக இராஜ்யத்தினுள் பிரவேசித்து, அங்கிருந்து அவர் மூவுலகங்களையும் தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தார்.
பதம் 8.15.34 : முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்றிவிட்ட தங்களது சீடரிடம் மிகவும் திருப்தி கொண்ட பிருகுவின் பிராமண வம்சத்தினர், இப்போது அவரை நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வதில் ஈடுபடுத்தினர்.
பதம் 8.15.35 : இந்த யாகங்களை பலி மகாராஜன் செய்தபோது, எல்லாத் திசைகளிலும், மூவுகிலும் அவர் பெரும் புகழ் பெற்றவரானார். இவ்வாறாக ஆகாயத்திலுள்ள பிரகாசமான சந்திரனைப் போல் அவர் தமது பதவியில் பிரகாசித்தார்.
பதம் 8.15.36 : பிராமணர்களின் ஆதரவின் காரணத்தால், உதார மனம் கொண்டவரான பலி மகாராஜன், தாம் மிகவும் திருப்தி அடைந்திருப்பதாக எண்ணிக் கொண்டு, பெரும் செல்வமும் செழிப்பும் உள்ளவராகி, இராஜ்யத்தை அனுபவிக்கத் துவங்கினார்.