அத்தியாயம் – 14
பிரபஞ்ச நிர்வாகத்தின் ஒழுங்கு
பதம் 8.14.1 : பரீட்சித்து மகாராஜன் விசாரித்தார்: பெரும் பாக்கியவானாகிய, சுகதேவ கோஸ்வாமியே, ஒவ்வொரு மன்வந்தரத்திலும் உள்ள மனுவும், மற்றவர்களும் எப்படி அவரவர் கடமைகளில் ஈடுபடுகின்றனர் என்பதையும், யாருடைய உத்தரவினால் அவர்கள் அவ்வாறு ஈடுபட்டுள்ளனர் என்பதையும் தயவு செய்து விளக்குவீராக.
பதம் 8.14.2 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, பரமபுருஷ பகவான், யக்ஞர் முதலான அவரது பல்வேறு அவதாரங்களில் வரும் போது மனுக்கள், மனு புத்திரர்கள், பெரும் ரிஷிகள், இந்திரர்கள், தேவர்கள் ஆகியோரை அவரவர் கடமைகளில் நியமிக்கின்றார்.
பதம் 8.14.3 : ராஜனே, யக்ஞரைப் போன்ற, பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றி நான் ஏற்கனவே விளக்கிவிட்டேன். மனுக்களும், மற்றவர்களும் இந்த அவதாரங்களால்தான் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்களுடைய உத்தரவின் கீழ்தான் பிரபஞ்ச இயக்கங்களை அவர்கள் நடத்துகின்றனர்.
பதம் 8.14.4 : ஒவ்வொரு சதுர்யுகங்களின் முடிவிலும், பெரும் முனிவர்கள், மனிதகுலத்தின் நித்தியமான வர்ணாஸ்ரம கடமைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைக் கண்டு, மதக் கொள்கைகளை மீண்டும் ஸ்தாபிக்கின்றனர்.
பதம் 8.14.5 : அதன்பிறகு, ராஜனே, பரமபுருஷ பகவானால் உபதேசிக்கப்பட்டதற்கேற்ப முழுமையாக ஈடுபட்டுள்ள மனுக்கள், சனாதன தர்மத்தின் கொள்கைகளை அதன் முழுமையான நான்கு பாகங்களில் நேரடியாக மீண்டும் ஸ்தாபிக்கின்றனர்.
பதம் 8.14.6 : யக்ஞங்களின் பலன்களை அனுபவிப்பதற்காக, மனுவின் புத்திரர்களும், பேரப்பிள்ளைகளுமாகிய, உலகின் ஆளுனர்கள், மனுவினுடைய ஆட்சிக் காலத்தின் இறுதிவரை பரமபுருஷ பகவானின் கட்டளைகளை நிறைவேற்றுகின்றனர். இந்த யக்ஞங்களின் பலன்களில் தேவர்களும் பங்கு கொள்கின்றனர்.
பதம் 8.14.7 : சுவர்க்க ராஜனான இந்திரன், பரமபுருஷ பகவானிடமிருந்து வரங்களைப் பெறுகிறார். இவ்வாறாக மிகச்சிறந்த ஐசுவரியங்களை அனுபவிக்கும் அவர், எல்லாக் கிரகங்களின் மீதும் போதுமான அளவுக்கு மழையைப் பொழிவதன் மூலமாக ஜீவராசிகளைப் பராமரிக்கிறார்.
பதம் 8.14.8 : பரம்புருஷ பகவானாகிய, ஹரி, ஒவ்வொரு யுகத்திலும், உன்னத அறிவைப் பிரச்சாரம் செய்வதற்காக, ஸனகரைப் போன்ற சித்தர்களின் உருவை ஏற்கிறார். கர்ம-மார்கத்தை போதிப்பதற்காக அவர் யக்ஞவல்க்யரைப் போன்ற புண்ணிய புருஷர்களின் உருவை ஏற்கிறார். மேலும் அஷ்டாங்க-யோக முறையை போதிப்பதற்காக அவர் தத்தாத்ரேயரைப் போன்ற பெரும் யோகிகளின் உருவை ஏற்கிறார்.
பதம் 8.14.9 : பிரஜாபதி மரீசியின் உருவில், பரமபுருஷ பகவான் சந்ததியை உற்பத்தி செய்கிறார்; அவர் அரசராகி திருடர்களையும், அயோக்கியர்களையும் கொலை செய்கிறார்; மற்றும் காலத்தின் வடிவில், அவர் அனைத்தையும் அழித்துவிடுகின்றார். பெளதிக இருப்பின் பல்வேறு குணங்களனைத்தும், முழுமுதற் கடவுளின் குணங்களே என்பதை உணர வேண்டும்.
பதம் 8.14.10 : பொதுவாக மக்கள் மாயச் சக்தியினால் குழப்பம் அடைந்துள்ளனர். ஆகவே அவர்கள் பரம சத்தியமான, பரமபுருஷ பகவானைப் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளின் மூலமாகவும், தத்துவார்த்த கற்பனையின் மூலமாகவும் கண்டறிய முயல்கின்றனர். ஆயினும், பரமபுருஷரை அவர்கள் காண முடியாமல் இருக்கின்றனர்.
பதம் 8.14.11 : ஒரு கல்பத்தில், அல்லது பிரம்மாவின் ஒரு பகலில், விகல்பங்கள் என்று அழைக்கப்படும் பல மாற்றங்கள் நிகழ்கின்றன. ராஜனே, இவை அனைத்தையும் உமக்கு நான் ஏற்கனவே விளக்கியிருக்கிறேன். பிரம்மாவின் ஒரு பகலில் பதினான்கு மனுக்கள் தோன்றுகின்றனர் என்று கடந்த, நிகழ் மற்றும் எதிர் காலங்களை அறிந்தவர்களான கற்றறிந்த பண்டிதர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.