அத்தியாயம் – 12
மோஹினி:மூர்த்தியால்
சிவபெருமான் பிரமை அடைதல்
பதங்கள் 8.12.1 – 8.12.2 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஒரு பெண்ணின் உருவிலிருந்த, முழுமுதற் கடவுளாகிய ஹரி, அசுரர்களை வசியப்படுத்தி, அமிர்தத்தை தேவர்கள் பருகும்படி செய்தார். இத்திருவிளையாடல்களைப் பற்றி கேள்விப்பட்டபின், ஓர் எருதால் தூக்கிச் செல்லப்படுபவரான சிவபெருமான், பகவானாகிய மதுசூதனர் வசிக்கும் இடத்திற்குச் சென்றார். தமது மனைவி உமாவுடன், அவரது சகாக்களான பூதகணங்களால் சூழப்பட்டவராய், பெண்ணாகத் தோன்றிய பகவானின் அந்த உருவத்தை அவர் காணச்சென்றார்.
பதம் 8.12.3 : பரமபுருஷ பகவான் சிவபெருமானையும், உமாவையும் மிகவும் மரியாதையுடன் வரவேற்றார். பிறகு வசதியாக அமர்ந்த பின், சிவபெருமான் பகவானை முறையாக வழிபட்டு, புன்னகையுடன் பின்வருமாறு பேசினார்.
பதம் 8.12.4 : மகாதேவன் கூறினார்: தேவர்களுக்கெல்லாம் மிகச் சிறந்த தேவரே எங்கும் பரவியுள்ள இறைவனே, பிரபஞ்சத்தின் எஜமானரே, உமது சக்தியால் நீர் சிருஷ்டியாக விரிவடைந்திருக்கிறீர். அனைத்திற்கும் வேராகவும், சாமர்த்தியமுள்ள காரணமாகவும் இருப்பவர் நீரே. நீர் பெளதிகமானவரல்லர். உண்மையில், நீரே அனைத்திலும் உள்ள பரமாத்மா அல்லது பரம உயிர்ச் சக்தியாவீர். ஆகவே, நீரே எல்லா ஆளுனர்களுக்கும் பரம ஆளுனரான பரமேஸ்வரராவீர்.
பதம் 8.12.5 : பரமபுருஷராகிய உம்மிடமிருந்தே, தோன்றியது, தோன்றாதது, பொய் அகங்காரம், இப்பிரபஞ்ச தோற்றத்தின் ஆரம்பம், பராமரிப்பு மற்றும் அழிவு ஆகிய அனைத்தும் வருகின்றன. ஆனால் நீரே பரம சத்தியமும், பரம பூரணமான ஜீவாத்மாவும், பரப்பிரம்மனுமாக இருப்பதால், பிறப்பு, இறப்பு மற்றும் பராமரிப்பு ஆகிய இம்மாற்றங்கள் உம்மிடம் காணப்படுவதில்லை.
பதம் 8.12.6 : வாழ்வின் மிகவுயர்ந்த இலக்கை அடைய விரும்புபவர்களும், புலன்நுகர்வுக்கான பெளதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவர்களுமான தூய பக்தர்கள் அல்லது சிறந்த புண்ணிய புருஷர்கள் உமது தாமரைப் பாதங்களின் தெய்வீகத் தொண்டில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளனர்.
பதம் 8.12.7 : எம்பெருமானே, நீரே அனைத்திலும் பூரணமான பரப்பிரம்மனாவீர் முற்றிலும் ஆன்மீகமானவராக இருப்பதால், நீரே நித்தியமானவரும், ஜட இயற்கைக் குணங்களிலிருந்து விடுபட்டவரும், முழுமையான தெய்வீக ஆனந்தம் கொண்டவருமாவீர். உண்மையில், உம்மிடம் துக்கம் என்ற கேள்விக்கே இடமில்லை. நீரே எல்லாக் காரணங்களுக்கும் பரம காரணமாக இருப்பதால், நீர் இல்லையெனில் எதனாலும் நிலைத்திருக்க முடியாது. இருப்பினும், காரண விளைவு எனும் ஓர் உறவுமுறையில் உம்மிடமிருந்து நாங்கள் வேறுபட்டவர்கள் ஆவோம். ஒருவிதத்தில் காரணமும், விளைவும் வெவ்வேறானவை என்பதே இதற்குக் காரணமாகும். படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலின் மூல காரணமும் நீரே. மேலும் எல்லா ஜீவராசிகளுக்கும் வரங்கள் அளிப்பவரும் நீரே. அனைவரும் தங்களுடைய செயல்களின் பலன்களுக்காக உம்மையே நம்பியுள்ளனர். ஆனால் நீர் எப்பொழுதும் சுதந்திரமானவராகவே இருக்கிறீர்.
பதம் 8.12.8 : எம்பெருமானே, நீர் ஒருவரே காரணமும், விளைவுமாக இருக்கிறீர். ஆகவே, இரண்டாக நீர் காணப்பட்டாலும், நீரே இரண்டற்ற ஒன்றாவீர். ஒரு தங்க ஆபரணத்திலுள்ள தங்கத்திற்கும், சுரங்கத்திலுள்ள தங்கத்திற்கும் வேறுபாடு இல்லை என்பதைப் போலவே, காரணத்திற்கும் விளைவிற்கும் இடையில் எந்த வேறுபாடும் இல்லை. அவை இரண்டும் ஒன்றேதான். அறியாமையின் காரணத்தால்தான் மக்கள் வேறுபாடுகளையும், இருமைகளையும் கற்பிக்கின்றனர். ஜடக் களங்கத்திலிருந்து நீர் விடுபட்டவராவீர். மேலும் பிரபஞ்சம் முழுவதும் உம்மாலேயே விளைவிக்கப்பட்டுள்ளது. உம்மையன்றி அதனால் ஜீவித்திருக்க முடியாது. அது உமது உன்னதமான குணங்களின் ஒரு விளைவாகும். இவ்வாறாக “பிரம்மமே சத்தியம் (மெய்), உலகம் பொய்” என்ற கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது.
பதம் 8.12.9 : அருவவாத வேதாந்திகள் எனப்படுபவர்கள் உம்மை அருவ பிரம்மமாகக் கருதுகின்றனர். மீமாம்ஸக தத்துவவாதிகள் எனப்படும் மற்றவர்கள் உம்மை மதமாக மதிக்கின்றனர். ஸாங்க்ய தத்துவவாதிகள் உம்மை பிரகிருதிக்கும், புருஷருக்கும் அப்பாற்பட்டவரும், தேவர்களையும்கூட ஆளும் தெய்வீக புருஷருமாகப் போற்றுகின்றனர். பஞ்சராத்ரங்கள் எனப்படும் பக்தித் தொண்டின் விதிகளைப் பின்பற்றுபவர்கள், உம்மை ஒன்பது வகையான வெவ்வேறு சக்திகளைக் கொண்டவராக போற்றுகின்றனர். மேலும் பதஞ்சலி முனிவரைப் பின்பற்றுபவர்களான பதஞ்ஜல தத்துவவாதிகள், உம்மை ஒப்புயர்வற்ற, பூரண சுதந்திரமுள்ள முழுமுதற் கடவுளாகக் கருதுகின்றனர்.
பதம் 8.12.10 : எம்பெருமானே, தேவர்களில் மிகச்சிறந்தவனாகக் கருதப்படும் நான், பிரம்மதேவர் மற்றும் மரீச்சி முதலான பெரும் ரிஷிகள் ஆகியோர் நற்குணத்தில் பிறந்தவர்களாவோம். ஆயினும், நாங்கள் உமது மாயா சக்தியினால் தடுமாற்றமடைந்து, இந்த சிருஷ்டி எத்தகையது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் தவிக்கிறோம். நாங்கள் ஒருபுறம் இருக்க, ஜட இயற்கையின் கீழான குணங்களில் (தீவிர குணம் மற்றும் அறியாமைக் குணம்) இருக்கும் அசுரர்களையும், மனிதர்களையும் போன்ற மற்றவர்களைப் பற்றி என்னவென்று சொல்வது? அவர்கள் உம்மை எப்படி அறிவார்கள்?
பதம் 8.12.11 : எம்பெருமானே, நீர் பரம அறிவின் சொரூபமாவீர். நீர் இப்படைப்பின் துவக்கம், பராமரிப்பு மற்றும் அழிவு ஆகியவற்றைப் பற்றிய அனைத்தையும் அறிவீர், ஜீவராசிகளின் அனைத்து முயற்சிகளையும் கூட நீர் அறிவீர். இம்முயற்சிகளால்தான் ஜீவராசிகளுக்கு இவ்வுலகில் பந்தமோ அல்லது இவ்வுலகிலிருந்து விடுதலையோ கிடைக்கிறது. காற்றானது, பரந்த ஆகாயத்திலும், அசையும், அசையாத ஜீவன்களின் உடல்களிலும் நுழைவதைப் போலவே, நீர் எங்கும் பரவியிருக்கிறீர். ஆகவே, நீரே எல்லோரையும் அறிபவர் ஆவீர்.
பதம் 8.12.12 : எம்பெருமானே, உமது தெய்வீக குணங்களால் நீர் மேற்கொண்ட எல்லாவகையான அவதாரங்களையும் நான் கண்டிருக்கிறேன். இப்போது நீர் ஒரு அழகிய இளம் மங்கையாக தோன்றியிருக்கிறீர். உமது அந்த உருவை நான் காண விரும்புகிறேன்.
பதம் 8.12.13 : எம்பெருமானே, அசுரர்களை முற்றிலும் வசியப்படுத்தி, அமிர்தத்தை தேவர்கள் மட்டும் பருகச் செய்வதற்காக ஒரு ரூபத்தை நீர் மேற்கொண்டீர். அந்த ரூபத்தைக் காணும் ஆவலுடன்தான் நாங்கள் இங்கு வந்திருக்கிறோம். அந்த ரூபத்தைக் காண நான் மிகவும் ஆவலுடன் இருக்கிறேன்.
பதம் 8.12.14 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கையில் ஒரு திரிசூலத்தை வைத்திருப்பவரான சிவபெருமான் பகவான் விஷ்ணுவை இவ்வாறு வேண்டிக்கொண்டபோது, அவரும் கம்பீரமாக புன்னகை செய்து, சிவபெருமானிடம் பின்வருமாறு பதில் கூறினார்.
பதம் 8.12.15 : பரமபுருஷ பகவான் கூறினார்: அமிர்த கலசத்தை அசுரர்கள் அபகரித்துச் சென்றபோது, அவர்களை ஏமாற்றிக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக ஓர் அழகிய பெண்ணின் உருவத்தை நான் ஏற்றேன். இவ்வாறாக அது தேவர்களின் விருப்பத்திற்கு உடன்பாடான செயலாயிற்று.
பதம் 8.12.16 : தேவர்களில் சிறந்தவரே, காம இச்சை கொண்டவர்களால் பெரிதும் போற்றப்படும் என்னுடைய அந்த உருவத்தை இப்போது உமக்குக் காட்டுகிறேன். நீர் அந்த உருவத்தைக் காண விரும்புவதால், உமக்கு முன்னிலையில் அதை நான் வெளிப்படுத்துகிறேன்.
பதம் 8.12.17 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறு பேசியபின், பரமபுருஷ பகவானாகிய விஷ்ணு, உடனே மறைந்துவிட்டார். அவரைத் தேடி, அசையும் கண்களுடன் சுற்றிலும் பார்த்தவாறு, சிவபெருமான் உமையுடன் அங்கேயே வீற்றிருந்தார்.
பதம் 8.12.18 : அதன்பிறகு, இளஞ்சிவப்பு இலைகளையும், பலவகையான புஷ்பங்களையும் கொண்ட மரங்களடர்ந்த, அருகிலுள்ள ஓர் அழகிய வனத்தில் ஓர் அழகிய மங்கை ஒரு பந்துடன் விளையாடிக் கொண்டிருப்பதை சிவபெருமான் கண்டார். அவளது இடுப்பு மினுமினுப்பான சேலையால் மறைக்கப்பட்டு, ஒரு கச்சையால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பதம் 8.12.19 : பந்து கீழே விழுந்தும், மேலே எழும்பியவாறும் இருந்ததால், அதனுடன் விளையாடிக் கொண்டிருந்த அவளது மார்பகங்கள் அசைந்தாடின. பவளத்தைப் போல் சிவந்திருந்த அவளது இரு மென்மையான பாதங்கள் இங்குமங்கும் அசைந்தபோது, அவளது அந்த மார்பகங்களின் பாரத்தாலும், மலர் மாலைகளின் பாரத்தாலும், ஒவ்வொரு அடியிலும் அவளது இடுப்பு உடைந்து விடுமோ என்பது போல் தோன்றியது.
பதம் 8.12.20 : அப்பெண்ணின் முகம் அகலமான, அழகிய, அமைதியற்ற கண்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவளது கரத்திலிருந்து பந்து இங்குமங்குமாக குதித்து ஓடுவதற்கேற்ப அவளுடைய கண்களும் அமைந்தன. அவளது செவிகளிலிருந்த பிரகாசமான இரு தோடுகள், நீலநிற பிரதிபலிப்புகளைப் போல் ஒளிவீசும் அவளது கன்னங்களை அலங்கரித்தன. மேலும் அவளது முகத்தின் மீது படர்ந்திருந்த கூந்தல் அவளை இன்னும் அழகுடையவளாகச் செய்தது.
பதம் 8.12.21 : பந்துடன் அவள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, அவளது உடலை மறைத்திருந்த சேலை தளர்ந்ததுடன், அவளது கூந்தலும் சிதறியது. கூந்தலை அவள் தமது அழகிய இடது கரத்தால் முடிச்சிட முயன்றாள். அதே சமயத்தில் தமது வலது கரத்தால் பந்தை அடித்து அதனுடன் விளையாடவும் தலைப்பட்டாள். இது மிகவும் கவர்ச்சிகரமாக இருந்தது. இவ்விதமாக பரமபுருஷர் தமது அந்தரங்க சக்தியின் மூலமாக அனைவரையும் வசியப்படுத்தினார்.
பதம் 8.12.22 : பந்துடன் விளையாடிக் கொண்டிருக்கும் அந்த அழகிய மங்கையை சிவபெருமான் கவனித்துக் கொண்டிருக்கும் போது, அவளும் அவ்வப்போது அவரைப் பார்த்து நாணத்தால் இலேசாக புன்னகை செய்தாள். இவர் அழகிய அம்மங்கையை நோக்க, அவளும் இவரை நோக்க, இவர் தம்மையே மறந்ததுடன், தமது மிகவும் அழகிய மனைவியான உமாவையும், அருகிலுள்ள அவரது சகாக்களையும் கூட மறந்து போனார்.
பதம் 8.12.23 : பந்து அவளது கையிலிருந்து குதித்துச் சென்று தூரத்தில் விழுந்த போது, அப்பெண் அதைப் பின்தொடர்ந்து செல்ல ஆரம்பித்தார். ஆனால் இச்செயல்களை சிவபெருமான் கவனித்துக் கொண்டு இருக்கும்போது, அவளை மறைத்திருந்த மெல்லிய உடையையும், கச்சையும் இளங்காற்று ஒன்று தீடீரென்று தூரமாக ஊதித் தள்ளியது.
பதம் 8.12.24 : அப்பெண்ணின் உடலிலுள்ள ஒவ்வொரு உறுப்பும் அழகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இவ்வாறாக சிவபெருமான் அப்பெண்ணை நோக்க, அழகிய அப்பெண்ணும் அவரை நோக்கினாள். ஆகவே, தன்னால் அவள் கவரப்பட்டிருக்கிறாள் என்றெண்ணி, சிவபெருமான் அவளால் மிகவும் கவரப்பட்டவரானார்.
பதம் 8.12.25 : அவளுடன் சுகம் அனுபவிக்க வேண்டும் எனும் காம இச்சைகளினால் தீவிர பித்துப் பிடித்தவராக சிவபெருமான், அப்பெண்ணிடம் தமது நற்புத்தியைப் பறிகொடுத்தார். இவ்வாறாக பவானியின் முன்னிலையிலேயே அவளை நெருங்கவும் அவர் தயங்கவில்லை.
பதம் 8.12.26 : அழகிய அப்பெண் அவர் முன்பே நிர்வாணமாக இருந்தாள். மேலும் தம்மை நோக்கி சிவபெருமான் வருவதைக் கண்ட அவள், மிகவும் கூச்சமடைந்தாள். இவ்வாறாக தொடர்ந்து புன்னகை செய்தவாறு இருந்த அவள், மரங்களுக்கிடையில் தம்மை ஒளித்துக் கொண்டதுடன், ஒரே இடத்தில் நிற்கவும் இல்லை.
பதம் 8.12.27 : காமத்துக்கு வசியமான யானையொன்று ஒரு பெண் யானையைப் பின் தொடர்ந்து செல்வதைப் போலவே, புலன்கள் சலனம் அடையப்பெற்ற சிவபெருமான், காம இச்சைகளின் வசப்பட்டவராய், அவளைப் பின்தொடர ஆரம்பித்தார்.
பதம் 8.12.28 : மிகவும் வேகமாக அவளைப் பின் தொடர்ந்து சென்ற சிவபெருமான், பின்னப்பட்டிருந்த அவளது கூந்தலைப் பற்றி தமக்கருகில் இழுத்தார். அவள் அதை விரும்பவில்லை என்ற போதிலும், அவர் தமது கரங்களால் அவளை கட்டித் தழுவினார்.
பதங்கள் 8.12.29 – 8.12.30 : பெண் யானையொன்று ஓர் ஆண் யானையால் தழுவப்படுவதைப் போலவே, சிவபெருமானால் அப்பெண் தழுவிக் கொள்ளப்பட்டாள். இதனால் இங்கு மங்குமாக சிதறிக் கிடந்த அவளது கூந்தல் ஒரு பாம்பைப் போல் சுழன்றது. ராஜனே, மிகப்பெரிய, உயர்ந்த இடுப்புகளைக் கொண்ட அவள் யோக மாயையினாலான ஒரு பெண்ணாவாள். அவள் முழுமுதற் கடவுளால் தோற்றுவிக்கப்பட்டவள் ஆவாள். எப்படியோ அவள் தன்னை சிவபெருமானின் அன்பான அணைப்பிலிருந்து விடுவித்துக்கொண்டு விலகி ஒடினாள்.
பதம் 8.12.31 : காம இச்சைகளின் வடிவிலுள்ள ஓர் எதிரியால் அலைக்கழிக்கப்பட்டதுபோல், சிவபெருமான், மிகவும் அற்புதமாகச் செயற்படுபவரும், மோஹினி ரூபத்தை ஏற்றவருமான பகவான் விஷ்ணுவின் வழியைப் பின்தொடர்ந்து சென்றார்.
பதம் 8.12.32 : கருதரிக்கச் செய்யக்கூடிய ஒரு பெண் யானையை காம வெறிபிடித்த ஆண் யானையொன்று பின் தொடர்வதைப்போலவே, அழகிய அப்பெண்ணை சிவபெருமான் பின் தொடர்ந்து சென்றார். அவரது விந்து ஒருபோதும் வீணாவதில்லை என்றாலும், அவரது விந்து வெளிப்பட்டது.
பதம் 8.12.33 : ராஜனே, சிறந்த புருஷரான சிவபெருமானின் விந்து பூமிமீது எங்கெல்லாம் விழுந்ததோ, அங்கெல்லாம் பிறகு வெள்ளி மற்றும் தங்கச் சுரங்கங்கள் தோன்றின.
பதம் 8.12.34 : மோஹினியைப் பின்தொடர்ந்து சிவபெருமான் எல்லா இடங்களுக்கும் சென்றார்-நதி மற்றும் ஏரிக்கரைகளுக்கருகில், மலைகளுக்கருகில், தோட்டங்களுக்கருகில், காடுகளுக்கருகில் மற்றும் எங்கெல்லாம் பெரும் முனிவர்கள் வாழ்ந்தனரோ அந்த இடங்களுக்கருகிலும் அவர் சென்றார்.
பதம் 8.12.35 : அரசர்களில் சிறந்த பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமான் விந்துவை முழுமையாகப் பாய்ச்சியபின், பரமபுருஷ பகவானால் உண்டாக்கப்பட்ட மாயையினால் எப்படி அவரே வஞ்சிக்கப்பட்டார் என்பதை அவரால் காண முடிந்தது. இவ்வாறாக மேலும் தொடரக் கூடிய மாயையிலிருந்து தம்மை அவர் கட்டுப்படுத்திக் கொண்டார்.
பதம் 8.12.36 : இவ்வாறாக சிவபெருமானால் தமது நிலையையும், எல்லையற்ற சக்திகளைக் கொண்டவரான பரமபுருஷ பகவானின் நிலையையும் புரிந்து கொள்ள முடிந்தது. இத்தகைய புரிந்துணர்வுக்கு வந்த அவர், பகவான் விஷ்ணு தம்மிடம் நடந்து கொண்ட அற்புதமான விதத்தைக் கண்டு சிறிதும் ஆச்சரியப்படவில்லை.
பதம் 8.12.37 : சிவபெருமான் சலனம் அடையாமலும், வெட்கப்படாமலும் இருப்பதைக் கண்ட பகவான் விஷ்ணு (மதுசூதனர்) மிகவும் திருப்தி அடைந்தார். இவ்வாறாக அவர் தமது சுய உருவத்தை மீண்டும் ஏற்று பின்வருமாறு பேசினார்.
பதம் 8.12.38 : பரமபுருஷ பகவான் கூறினார்: தேவர்களில் சிறந்தவரே ஒரு பெண்ணின் உருவை ஏற்றதிலுள்ள எனது சக்தியின் காரணத்தினால் நீர் மிகவும் அலைக்கழிக்கப்பட்டிருந்த போதிலும், உமது நிலையில் நீர் உறுதியாகவே இருக்கிறீர். எனவே உமக்குச் சகல நன்மையும் உண்டாகட்டும்.
பதம் 8.12.39 : எனதருமை சிவபெருமானே (சம்பு) உம்மைத்தவிர இவ்வுலகில் வேறு எவரால் எனது மாயா சக்தியை வெல்ல முடியும்? மக்கள் பொதுவாக புலன் இன்பத்தில் பற்றுக்கொண்டு, அதன் ஆதிக்கத்தினால் வெற்றி கொள்ளப்படுகின்றனர். உண்மையில் ஜட இயற்கையின் ஆதிக்கத்தை வெல்லுவது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமானதாகும்.
பதம் 8.12.40 : படைப்பில் என்னுடன் ஒத்துழைப்பதும், இயற்கையின் முக்குணங்களில் தோன்றியிருப்பதுமான ஜட அல்லது புறச்சக்தியால் (மாயா) இனிமேல் உம்மை சலனப்படுத்த முடியாது.
பதம் 8.12.41 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ராஜனே, இவ்வாறு தமது மார்பின் மீது ஸ்ரீவத்ஸமெனும் குறியைத் தாங்கியிருப்பவரான முழுமுதற் கடவுளால் புகழப்பட்ட சிவபெருமான் பகவானை வலம் வந்தார். பிறகு, அவரிடம் அனுமதி பெற்றபின், தமது வசிப்பிடமான கைலாயத்திற்குத் தமது சகாக்களுடன் திரும்பிச் சென்றார்.
பதம் 8.12.42 : பரத வம்சத்தில் தோன்றிய பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமான் பிறகு மிகவும் சந்தோஷத்துடன் தமது மனைவியான பவானியைப் பார்த்துக் கூறினார். பவானியை பகவான் விஷ்ணுவின் சக்தியாக எல்லா அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பதம் 8.12.43 : சிவபெருமான் கூறினார்: ஓ தேவி, பிறப்பற்றவரும், அனைவருக்கும் எஜமானருமான பரமபுருஷ பகவானின் மாயா சக்தியை இப்போது நீ கண்டாய். பகவானுடைய முக்கியமான விரிவாக்கங்களில் நானும் ஒருவன் என்றபோதிலும், நான் கூட அவரது சக்தியால் ஏமாற்றப்பட்டேன். மாயையை முழுமையாக நம்பியிருக்கும் மற்றவர்களைப் பற்றி என்னவென்று கூறுவது?
பதம் 8.12.44 : நான் ஓராயிரம் ஆண்டுகள் தியான யோகத்தைச் செய்து முடித்த போது, யாரை நான் தியானம் செய்தேனென்று நீ கேட்டாய். இப்போது இதோ இருக்கிறார் அப்பரமபுருஷர் அவரைக் காலத்தால் நெருங்க முடியாது, புரிந்து கொள்ளவும் முடியாது.
பதம் 8.12.45 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: எனதருமை ராஜனே, பாற்கடலைக் கடைவதற்காக மிகப்பெரிய மலையைத் தமது முதுகின் மேல் தாங்கிக் கொண்டவர், சாரங்கதன்வர் (சாரங்கபாணி) எனப்படும் அதே பரமபுருஷ பகவானாவார். அவரது தீரத்தைப் பற்றி இப்போது உமக்கு நான் விவரித்தேன்.
பதம் 8.12.46 : பாற்கடலைக் கடைந்த இவ்வரலாற்றை அடிக்கடி கேட்பவரின் அல்லது விவரிப்பவரின் முயற்சி ஒருபோதும் பலனளிக்காமல் போகாது. உண்மையில், பரமபுருஷ பகவானுடைய பெருமைகளைப் பாடுவதுதான் இந்த ஜட உலகிலுள்ள அனைத்து துன்பங்களையும் அழிப்பதற்கான ஒரே வழியாகும்.
பதம் 8.12.47 : ஓர் இளமங்கையின் உருவை ஏற்று அசுரர்களை வசியம் செய்த பரம்புருஷ பகவான், தமது பக்தர்களான தேவர்களுக்குப் பாற்கடலிலிருந்து கடைந்தெடுக்கப்பட்ட அமிர்தத்தைப் பகிர்ந்தளித்தார். தமது பக்தர்களின் விருப்பங்களை எப்பொழுதும் நிறைவேற்றுபவரான அந்த பரமபுருஷ பகவானுக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.