அத்தியாயம் – 1
பிரபஞ்ச நிர்வாகிகனான மனுக்கள்
பதம் 8.1.1 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: என் எஜமானரே, ஆன்மீக குருவே, இப்போது நான் சுயம்புவ மனுவின் வம்சத்தைப் பற்றி உம்மிடமிருந்து பூரணமாகக் கேட்டறிந்தேன். ஆனால் மற்ற மனுக்களும் கூட உள்ளனர். அவர்களுடைய வம்சத்தைப் பற்றியும் நான் கேட்க விரும்புகிறேன். அன்புடன் அவற்றை எங்களுக்குக் கூறுவீராக.
பதம் 8.1.2 : புலமை வாய்ந்த பிராமணராகிய சுகதேவ கோஸ்வாமியே, பூரண அறிவு படைத்த பெருங்கல்விமான்கள், பல்வேறு மன்வந்தரங்களில், பரம்புருஷ பகவானின் செயல்களையும், தோற்றத்தையும் பற்றி விவரிக்கின்றனர். இந்த வரலாறுகளைப் பற்றி செவிசாய்க்க நாங்கள் மிகவும் ஆவலுள்ளவர்களாக இருக்கிறோம். அன்புடன் அவற்றை விவரிப்பீராக.
பதம் 8.1.3 : ஓ பிராமண சிரேஷ்டரே, இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைத்தவரான பரமபுருஷ பகவான் கடந்த மன்வந்தரங்களில் எத்தகைய செயல்களையெல்லாம் செய்தார், இப்போது என்ன செய்கிறார், மேலும் எதிர்கால மன்வந்தரங்களில் என்ன செய்வார் என்பதை தயவுசெய்து எங்களிடம் விளக்குவீராக.
பதம் 8.1.4 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இப்பொழுதுள்ள கல்பத்தில் ஏற்கனவே ஆறு மனுக்கள் வந்து சென்றுவிட்டனர். சுயம்புவ மனுவைப்பற்றியும், பல தேவர்களின் தோற்றத்தைப் பற்றியும் உங்களிடம் நான் விளக்கியிருக்கிறேன். பிரம்மாவின் இக்கல்பத்தில் முதல் மனு சுயம்புவ மனுவாவார்.
பதம் 8.1.5 : சுயம்புவ மனுவிற்கு ஆகூதி மற்றும் தேவஹூதி எனும் இரு புதல்விகள் இருந்தனர். அவர்களின் கருக்களிலிருந்து முறையே யக்ஞமூர்த்தி மற்றும் கபிலர் எனும் இரு புதல்வர்களாக பரமபுருஷ பகவான் தோன்றினார். இப்புதல்வர்களிடம் மதம், அறிவு ஆகியவற்றைப் பற்றிய பிரச்சாரம் ஒப்படைக்கப்பட்டது.
பதம் 8.1.6 : குரு சிரேஷ்டரே, நான் ஏற்கனவே (மூன்றாம் காண்டத்தில்) தேவஹூதியின் புதல்வரான கபிலரின் செயல்களை விவரித்துவிட்டேன். இப்போது நான் ஆகூதியின் புதல்வராகிய யக்ஞபதியின் செயல்களை விவரிக்கிறேன்.
பதம் 8.1.7 : சதரூபாவின் கணவரான சுயம்புவ மனு, இயல்பாகவே புலனின் பத்தில் சிறிதும் பற்றற்றவராக இருந்தார். இவ்வாறாக அவர் புலனின்பம் நிறைந்த தமது இராஜ்யத்தைத் துறந்து, தவங்களைப் பயில்வதற்காக தமது மனைவியுடன் வனம் புகுந்தார்.
பதம் 8.1.8 : பரதவம்சத் தோன்றலே, இவ்வாறாக சுயம்புவ மனு தமது மனைவியுடன் வனம் புகுந்தார். அதன்பின் சுனந்தா நதிக்கரையில் அவர் ஒரு காலில் நின்று கொண்டு நூறு ஆண்டுகள் கடுந்தவங்களைப் புரிந்தார். இத்தவங்களை நிறைவேற்றும் வேளையில், பின்வருமாறு அவர் பேசினார்.
பதம் 8.1.9 : மனு பெருமான் கூறினார்: உயிர்ப்புள்ள இந்த ஜட உலகை பரம புருஷர் படைத்துள்ளார்; அவர் இந்த ஜட உலகத்தால் படைக்கப்பட்டவரல்ல. அனைத்தும் நிசப்தமாக இருக்கும் பொழுது, பரம ஜீவன் சாட்சியாக விழித்திருக்கிறார். அவரை ஜீவராசி அறியவில்லை, ஆனால் அனைத்தையும் அவர் அறிந்திருக்கின்றார்.
பதம் 8.1.10 : இப்பிரபஞ்சத்தில், பரமபுருஷ பகவான் தமது பரமாத்ம சொரூபத்தில், எங்கெல்லாம் உயிருள்ள அல்லது உயிரற்ற பொருள்கள் உள்ளனவோ அங்கெல்லாம் இருக்கிறார். எனவே, தனக்கென பகிர்ந்தளிக்கப்பட்டதை மட்டும் ஒருவர் ஏற்றுக் கொள்ள வேண்டும்; மற்றவர்களின் சொத்தை ஆக்கரமிக்க ஒருவன் ஆசைப்படக் கூடாது.
பதம் 8.1.11 : பரமபுருஷர் இடைவிடாமல் உலகின் இயக்கங்களை கவனித்துக் கொண்டிருக்கிறார் என்றாலும், ஒருவரும் அவரைக் காண்பதில்லை. ஒருவரும் அவரைக் காண்பதில்லை என்பதால், அவரும் எவரையும் காண்பதில்லை என்று ஒருவன் நினைக்கக்கூடாது. ஏனெனில், அவரது காணும் சக்தி ஒருபோதும் குறைந்துவிடுவதில்லை. எனவே, தனிப்பட்ட ஆத்மாவுடன் எப்பொழுதும் ஒரு நண்பராக இருக்கும் பரமாத்மாவை அனைவரும் வழிபட வேண்டும்.
பதம் 8.1.12 : பரமபுருஷ பகவானுக்கு ஆரம்பமோ, முடிவோ, நடு நிலையோ இல்லை. ஒரு குறிப்பிட்ட நபருக்கோ அல்லது தேசத்திற்கோ அவர் சொந்தமானவரும் அல்லர். அவருக்கு உள்ளுமில்லை, புறமுமில்லை. ஆரம்பம் மற்றும் முடிவு, என்னுடைய மற்றும் அவர்களுடையது என்பன போன்ற இந்த ஜட உலகினுள் காணப்படும் இரட்டைகள் அனைத்தும் பரமபுருஷரின் சொரூபத்தில் காணப்படுவதில்லை. பகவானிடமிருந்து தோன்றும் பிரபஞ்சம், அவருடைய மற்றுமொரு அம்சமாகும். ஆகவே பரமபுருஷரே முடிவான உண்மையும், பூரண மகிமையுடையவரும் ஆவார்.
பதம் 8.1.13 : பிரபஞ்ச தோற்றம் முழுவதும் பரம சத்தியமான முழுமுதற் கடவுளின் உடலாகும். அவருக்கு எண்ணிலடங்காத நாமங்களும், எல்லையற்ற சக்திகளும் உள்ளன. அவர் சுயப்பிரகாசம் கொண்டவரும், பிறப்பற்றவரும், மாற்றமற்றவரும் ஆவார். அனைத்திற்கும் அவரே ஆரம்பம்; ஆனால் அவருக்கு ஆரம்பமே இல்லை. இப்பிரபஞ்ச தோற்றத்தை அவர் தமது பகிரங்க சக்தியின் மூலமாக படைத்திருப்பதால், பிரபஞ்சம் அவரால் படைத்து, காத்து, அழிக்கப்படுவதாகத் தோன்றுகிறது. ஆயினும், அவர் தமது ஆன்மீக சக்தியில் சுறுசுறுப்பற்றவராகவும், ஜட சக்தியின் செயல்களால் பாதிக்கப்படாதவராகவும் இருக்கிறார்.
பதம் 8.1.14 : ஆகவே, பிரதிபலன்களால் களங்கப்படாத செயல்களின் நிலையை மக்கள் அடைவதை சாத்தியமானதாகச் செய்வதற்காக, சிறந்த முனிவர்கள் முதலில் மக்களை பலன் நோக்குக் கருமங்களில் ஈடுபடுத்துகின்றனர். ஏனெனில், சாஸ்திர விதிகளுக்கேற்ப ஒருவன் செயற்படத் துவங்கினாலன்றி, முக்தி நிலையை, அல்லது பிரதி பலன்களை ஏற்படுத்தாத செயல்களின் நிலையை அவனால் அடைய முடியாது.
பதம் 8.1.15 : பரமபுருஷ பகவான் சுயமாகவே ஐசுவரியங்களை பூரணமாகக் கொண்டு இருப்பவராவார். இருப்பினும் அவர் இந்த ஜட உலகை படைப்பவராகவும், காப்பவராகவும், அழிப்பவராகவும் செயற்படுகின்றார். இவ்வாறு செயற்பட்டாலும், அவர் ஒருபோதும் பந்தப்படுவதில்லை. ஆகையால் அவரது அடிச்சுவடுகளைப் பின்பற்றும் பக்தர்களும் ஒருபோதும் பந்தப்படுவதில்லை.
பதம் 8.1.16 : முழுமுதற் கடவுளாகிய கிருஷ்ணர், ஒரு சாதாரண மனிதனைப் போலவே செயலாற்றுகிறார் என்றாலும், செயலின் பலன்களை அனுபவிக்க அவர் விரும்புவதில்லை. அவர் பூரண அறிவுடையவரும், பெளதிக ஆசைகள் மற்றும் வழிபிறத்தல் ஆகியவற்றிலிருந்து விடுபட்டவரும், முற்றிலும் சுதந்திரமானவரும் ஆவார். மனித சமூகத்தின் பரம போதகர் எனும் முறையில், அவரது சொந்த செயல்முறையை அவர் போதிக்கிறார். இவ்வாறாக, மதத்தின் உண்மையான மார்கத்தை அவர் ஆரம்பித்துவைக்கிறார். அனைவரும் அவரைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறான்.
பதம் 8.1.17 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறாக உபநிஷதங்கள் எனப்படும் வேதத்தின் உபதேச மந்திரங்களை உச்சரித்தவாறு சுயம்புவ மனு சமாதியில் ஆழ்ந்திருந்தார். அவரைக் கண்டதும் இராட்சஸர்களும், அசுரர்களும், மிகவும் பசியோடு இருந்ததால், அவரை உடனே விழுங்கிவிட விரும்பி அவரை நோக்கி மிகவும் வேகமாக ஓடினர்.
பதம் 8.1.18 : ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருப்பவரும், பரமபுருஷருமான விஷ்ணு, யக்ஞபதியாகத் தோன்றி, இராட்சஸர்களும், அசுரர்களும் சுயம்புவ மனுவை விழுங்கப் போவதைக் கண்டார். இவ்வாறாக யாமர்கள் எனப்படும் அவரது புதல்வர்களாலும், மற்றெல்லா தேவர்களாலும் சூழப்பட்டவராய், பகவான் அசுரர்களையும், இராட்சஸர்களையும், கொன்று வீழ்த்தினார். பிறகு இந்திர பதவியை ஏற்று, சுவர்க்கலோக இராஜ்யத்தை ஆளத்துவங்கினார்.
பதம் 8.1.19 : ஸ்வரோசிஷர் எனப்படும் அக்னியின் புதல்வர் இரண்டாவது மனுவானார். அவருக்கு தியுமத், சுஷேணர் மற்றும் ரோசிஷ்மத் ஆகியோரைத் தலைமையாகக் கொண்ட அநேக புதல்வர்கள் இருந்தனர்.
பதம் 8.1.20 : ஸ்வாரோசிஷரின் ஆட்சிக் காலத்தில், இந்திர பதவி, யக்ஞரின் புத்திரரான ரோசனரால் மேற்கொள்ளப்பட்டது. துஷிதரும், மற்றவர்களும் முக்கிய தேவர்களாயினர். மேலும் ஊர்ஜர், ஸ்தம்பர் மற்றும் பிறரும் ஏழு ரிஷிகளாயினர். அவர்களனைவரும் பகவானின் விசுவாசமுள்ள பக்தர்களாவர்.
பதம் 8.1.21 : வேதசிரா எனும் ரிஷி மிகவும் புகழ் பெற்றவராவார். அவரது மனைவியான துஷிதாவின் கர்பத்திலிருந்து விபு எனும் பெயர் கொண்ட அவதாரம் தோன்றினார்.
பதம் 8.1.22 : விபு ஒரு பிரம்மச்சாரியாகவே எஞ்சியிருந்தார். அவரது வாழ்வில் அவர் திருமணம் செய்து கொள்ளவேயில்லை. அவரிடமிருந்து எண்பத்தெட்டாயிரம் பிற புண்ணிய புருஷர்கள் புலனடக்கம், தவம் முதலிய ஒழுக்கங்களில் பாடம் கற்றனர்.
பதம் 8.1.23 : அரசே, பிரியாவிரத மகாராஜனின் புதல்வராகிய உத்தமன், மூன்றாவது மனுவானார். இம்மனுவின் புதல்வர்களுள் பவனர், ஸ்ருஞ்சயர் மற்றும் யக்ஞஹோத்ரர் ஆகியோரும் அடங்குவர்.
பதம் 8.1.24 : மூன்றாவது மனுவின் ஆட்சிக் காலத்தில், பிரமதரும், வசிஷ்டரின் மற்ற புத்திரர்களும் சப்த ரிஷிகளாயினர். ஸத்யர்களும், வேதசுருதர்களும் பத்ரர்களும் தேவர்களாயினர். மேலும் இந்திர பதவிக்கு ஸத்யஜித் தேர்வு செய்யப்பட்டார்.
பதம் 8.1.25 : இந்த மன்வந்தரத்தில், பரமபுருஷ பகவான் சூன்ருதாவின் கருவிலிருந்து தோன்றினார். இவர் தர்மத்திற்குப் பொறுப்பாக உள்ள தேவரான தர்மரின் மனைவியாவார். பெருமான் ஸத்யசேனரென்று புகழப்பட்டார். அவர் ஸத்யவிரதர்கள் எனப்படும் மற்ற தேவர்களுடன் தோன்றினார்.
பதம் 8.1.26 : ஸத்யசேனர், தமது நண்பரும், சுவர்க்க ராஜன் இந்திரனுமாகிய ஸத்யஜித்துடன், மற்ற ஜீவராசிகளுக்கு துன்பமிழைத்த யக்ஷர்களையும், இராட்சஸர்களையும் மற்றும் பூதகணங்களையும் கொன்றார். இவர்களனைவரும் பொய் பேசுபவர்களும், பாவிகளும் மற்றும் துஷ்டர்களுமாவர்.
பதம் 8.1.27 : மூன்றாவது மனுவின் சகோதரரான உத்தமர், தாமஸர் எனும் பெயரால் போற்றப்பட்டார். மேலும் அவர் நான்காவது மனுவானார். பிருது, கியாதி, நரர் மற்றும் கேது ஆகியோரை தலைமையாகக் கொண்ட பத்து புதல்வர்கள் தாமஸருக்கு இருந்தனர்.
பதம் 8.1.28 : தாமஸ மனுவின் ஆட்சிக் காலத்தில், ஸத்யர்கள், ஹரிகள் மற்றும் வீரர்கள் ஆகியோர் தேவர்களாக இருந்தனர். சுவர்க்க ராஜன் அல்லது இந்திரனாக திரிசிகர் இருந்தார். சப்தரிஷி-தாமத்தில் இருந்த ரிஷிகள் ஜோதிர்தாமரை தலைமையாகக் கொண்டிருந்தனர்.
பதம் 8.1.29 : ராஜனே, தாமஸ மன்வந்தரத்தில், வைத்ருதிகள் என்று அறியப்பட்ட வித்ருதியின் புத்திரர்களும் கூட தேவர்களாயினர். காலப்போக்கில் வேத பிரமாணம் மறைந்துவிட்டதால், இத்தேவர்கள், தங்களின் சுய சக்திகளால், வேத பிரமாணத்தைப் பாதுகாத்தனர்.
பதம் 8.1.30 : தவிரவும், இந்த மனவந்தரத்தில், பரமபுருஷராகிய விஷ்ணு, ஹரிமேதாவின் மனைவியான ஹரிணீயின் கருவிலிருந்து பிறந்தார். அவர் ஹரி என்று அறியப்பட்டார். கஜேந்திரன் யானைகளின் அரசனாகும். ஹரி, தமது பக்தனான கஜேந்திரனை, ஒரு முதலையின் வாயிலிருந்து காப்பாற்றினார்
பதம் 8.1.31 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: எம்பெருமானே, பாதராயணி கஜேந்திரன் ஒரு முதலையால் தாக்கப்பட்டபோது, ஹரி எப்படி அதைக் காப்பாற்றினார் என்பதை விவரமாக அறிய நாங்கள் ஆசைப்படுகிறோம்.
பதம் 8.1.32 : எந்த ஒரு இலக்கியத்தில் அல்லது கதையில், உத்தமசுலோகராகிய பரமபுருஷ பகவான் விவரிக்கப்பட்டு, புகழப்படுகின்றாரோ, அது நிச்சயமாக உயர்வானதும், தூயதும், புகழுக்குரியதும், மங்களம் அளிப்பதும் மற்றும் சர்வ நன்மையளிப்பதும் ஆகும்.
பதம் 8.1.33 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பிராமணர்களே, இவ்வாறு விரைவில் நேரிடப் போகும் மரணத்தை எதிர்நோக்கியிருந்த பரீட்சித்து மகாராஜன், சுகதேவ கோஸ்வாமியைப் பேசுமாறு வேண்டினார். அப்போது மன்னரின் வார்த்தைகளால் உற்சாகப்படுத்தப்பட்ட சுகதேவ கோஸ்வாமி, மன்னருக்கு மரியாதை செலுத்தியப்பின், தாம் பேசுவதை செவியுற விரும்பிய முனிவர்களின் சபையில் பெருமகிழ்ச்சியுடன் பேசினார்.