அத்தியாயம் – 9
பிரகலாதர் பகவான் நரசிம்மரை
சாந்தப்படுத்துதல்
பதம் 7.9.1
ஸ்ரீ-நாரத உவாச
ஏவம் ஸுராதய: ஸர்வே ப்ரஸஹ்ம-ருத்ர-புர: ஸரா:
நோபைதும் அசகன் மன்பு-ஸம்ரம்பம் ஸுதுராஸதம்
நாரத உவாச-சிறந்த முனிவராக நாரதர் கூறினார்; ஏவம்- இவ்வாறாக; ஸுர–ஆதய:-தேவர்களின் கூட்டங்கள்: ஸர்வேஎல்லோரும்; ப்ரஹ்ம-குத்ர-புர -ஸரா:- பிரம்மதேவர் மற்றும் சிவபெரு மானின் தலைமையிலான; த-இல்லை; உபைதும்-பகவான் முன் செல்ல; அசகன் -முடிந்தது; மன்பு-ஸம்ரம்பம்-முற்றிலும் கோப ஒரு மனோபாவத்தில்; ஸுதுரசஸதம்-நெருங்குவதற்கு மிகக் கடினமான (பகவான் நரசிம்ம தேவர்).
சிறந்த முனிவரான நாரதர் தொடர்ந்து கூறினார்: பிரம்மதேவர், சிவபெருமான், பிற சிறந்த தேவர்கள் ஆகியோரின் தலைமையிலான தேவர்கள், அப்பொழுது கடுங்கோபத்துடனிருந்த பகவான் முன் வரத்துணியவில்லை.
பதம் 7.9.2
ஸாக்ஷாத் ஸ்ரீ: ப்ரோஷிதா தேவைர் தருஷ்ட்வா தம் மஹத் அத்புதம் அதிருஷ்டாஸ்ருத-பூர்வத்வாத் ஸா நோபேயாய சங்கிதா
ஸாக்ஷாத்-நேராக; ஸ்ரீ :- லக்ஷ்மிதேவி; ப்ரேஷிதா (பகவானிடம் செல்லும்படி) கேட்டுக் கொள்ளப்பட்டான்; தேவை:-(பிரம்மா, சிவன் முதலான) எல்லா தேவர்களாலும்; திருஷ்ட்வா – கண்டபின்; தம் – அவரை (பகவான் நரசிம்மரை); மஹத் – மிகப்பெரிய; அத்புதம்- அற்புதமாகிய: அதிருஷ்ட – ஒருபோதும் கண்டதுமில்லை; அஸ்ருத கேட்டதுமில்லை என்பதால்; பூர்வத்வாத்-இதற்குமுன்; லக்ஷ்மி தேவி; ந -இல்லை; உபேயாய -பகவான் முன் சென்றாள்: சங்கிதா- மிகவும் அச்சம் கொண்டிருந்ததால்.
ஸ்ரீதேவியாகிய லஷ்மிதேவி, பகவான் முன் செல்லும்படி அங்கு கூடியிருந்த எல்லாத் தேவர்களாலும் கேட்டுக்கொள்ளப்பட்டாள். ஆனால் பயத்தின் காரணத்தால் அவளால் அவ்வாறு செய்ய இயலவில்லை. இதற்குமுன் லக்ஷ்மிதேவி கூட இத்தகைய ஓர் அற்புதமான, அசாதாரணமான பகவானின் ரூபத்தைக் கண்டதில்லை. அவளால் பகவானை அணுக இயலவில்லை.
பதம் 7.9.3
ப்ரஹ்ராதம் ப்ரேஷயாம் ஆஸ ப்ரஹ்மாவஸ்திதம் அந்திகே
தாத ப்ரசமயோபேஹி ஸ்வ-பித்ரே குபிதம் ப்ரபும்
ப்ரஹ்ராதம் – பிரகலாத மகாராஜனை: ப்ரேஷயாம் ஆஸ கேட்டுக் கொண்டார்; ப்ரஹ்மா- பிரம்மதேவர்; அவஸ்நிதம் – இருப்பதால்; அந்திகே-மிகவும் அருகாமையில்; தாத-குழந்தாய்; ப்ரசமய-சாந்தப் படுத்த முயற்சி செய்; உபேஹி -அருகில் சென்று; ஸ்வ-பித்ரே-உன் தந்தையின் அசுரச் செயல்களின் காரணத்தால்; குபிதம்- மிகவும் கோபமடைந்துள்ள; ப்ரபும்-பகவானை.
அதன்பிறகு பிரம்மதேவர் தமக்கு மிக அருகாமையில் நின்று கொண்டிருந்த பிரகலாதரிடம், “குழந்தாய், பகவான் நரசிம்மதேவர் உன் அசுரத் தந்தையிடம் மிகவும் கோபங் கொண்டுள்ளார். ஆகவே தயவுகூர்ந்து அவரிடம் சென்று அவரை சாந்தப்படுத்துவாயாக” என்று கேட்டுக் கொண்டார்.
பதம் 7.9.4
ததேதி சனகை ராஜன் மஹ-பாகவதோ ‘ர்பக:
உபேத்ய புவி காயேன நனாம வித்ருதாஞ்ஜலி:
ததா-அப்படியே ஆகட்டும்; இதி-என்று பிரம்மதேவரின் வார்த்தைகளை ஏற்றுக் கொண்டு; சனகை :-மிகவும் மெதுவாக; ராஜன்- அரசே (யுதிஷ்டிரரே); மஹா-பாகவத:- பரமபக்தர் (பிரகலாதர் ); அர்பக:-ஒரு சிறுவனாக இருந்த போதிலும்; உபேத்ய-படிப்படியாக அருகில் சென்று; புவி-தரையில்; காயேன-உடலால்; வணங்கினார்; வித்ருத அஞ்ஜலி:-கரங்களைக் கூப்பியவாறு.
நாரத முனிவர் தொடர்த்து கூறினார்: அரசே, பரம பக்தரான பிரகலாத மகாராஜன் ஒரு சிறுவனாக இருந்த போதிலும், அவர் பிரம்மதேவரின் வார்த்தைகளை எற்றுக் கொண்டார். மெதுவாக பகவான் நரசிம்மதேவரை நோக்கி நெருங்கிச் சென்று, கூப்பிய கரங்களுடன் தரையில் விழுந்து மரியாதையுடன் அவரை வணங்கினார்.
பதம் 7.9.5
ஸ்வ-பாத-மூலே பதிதம் தம் அர்பகம்
விலோக்ய தேவ: க்ருபயா பரிப்லுத:
உத்தாப்ய தச்-சீர்ஷ்ணி அததாத் கராம்புஜம்
காலாஹி-வித்ரஸ்த-தியாம் க்ருதாபயம்
ஸ்வ-பாத-மூலே-அவரது தாமரைப் பாதங்களில்; பதிகம் – விழுந்த தம் – அவரை (பிரகலாதரை); அர்பகம் – சிறுவனான விலோக்ய-பார்த்து; தேவ:- பகவான் நரசிம்மதேவர்; க்ருபயா-தனிப் பெருங் கருணையினால்; பரிப்லுத:-(பரவசத்தினால்) பீடிக்கப்பட்டவராய்; உத்தாப்ய-எழுப்பி; தத்-சீர்ஷ்ணி-அவரது தலைமேல்; அததாத்-வைத்தார்; கர-அம்புஜம்-அவரது திருக்கரத்தை;கால-அஹி-(உடனே மரணத்தை விளைவிக்கக்கூடிய) கொடிய பாம்பெனும் காலத்தினால்; வித்ரஸ்த-பயமடைந்த; தியாம்-அவர்களுடைய மனங்களுக்கு; க்ருத-அபயம்-பயமின்மையை ஏற்படுத்தும்.
சிறுவனான பிரகலாத மகாராஜன் தமது பாதங்களில் சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குவதைக் கண்ட பகவான் நரசிம்மதேவர், அன்பினால் பேரானந்தமடைந்தார். பிரகலாதரை எழுப்பி அவரது தலைமேல் பகவான் தமது திருக்கரத்தை வைத்தார். தமது பக்தர்களுக்கு அபயமளிக்க பகவானுடைய கை எப்பொழுதும் தயாராக இருக்கிறது.
பதம் 7.9.6
ஸ தத்-கர-ஸ்பர்ச-துதாகிலாசுப:
ஸபதி அபிவ்யக்த-பராத்ம-தர்சன:
தத்-பாத-பத்மம் ஹ்ருதி நிர்வ்ருதோ ததௌ
ஹ்ருஷ்யத்-தனு: க்லின்ன-ஹ்ருத் -அஸ்ரு-லோசன:
ஸ:-அவர் (பிரகலாதர்); தத்-கர-ஸ்பர்ச-நரசிம்மதேவரின் தாமரைக் கையால் தலையில் தொடப்பட்டதால்; துத-பரிசுத்தமடைத்து; அகில- எல்லா; அசுப:-மாசுகளும் அல்லது பெளதிக ஆசைகளும்; ஸபதி-உடனே; அபிலவ்யதக்த-தோன்றியது; பர-ஆத்ம-தர்சன:- பரமாத்ம உணர்வு (ஆத்ம ஞானம்); தத்-பாத-பத்மம்- பகவான் நரசிம்மரின் தாமரைப் பாதங்கள்; ஹ்ருதி – இதயத்தினுள்; நிர்வ்ருத:- உன்னத ஆனந்தத்தை; ததௌ – கைப்பற்றினார்; ஹ்ருஷ்யத்-தனு:- உடலில் உன்னத ஆனந்தப் பரவச நிலை தோன்றப்பெற்று; க்லின்ன ஹ்ருத்-உன்னதமான பரவத்தினால் மனமுருக; அஸ்ரு-லோசன:- அவரது கண்களில் கண்ணீர் மல்க.
பகவான் நரசிம்மதேவரின் கை பிரகலாதரின் தலைமேல் பட்டதால், பிரகலாதர் எல்லா பௌதிக மாசுகளிலிருந்தும், ஆசைகளிலிருந்தும் விடுபட்டு, முற்றிலும் தூய்மையடைந்தவர் போலானார். இதனால் உடனே உன்னத நிலையில் நிலைபெற்ற அவரது உடலில் உன்னத பரவசத்தின் அறிகுறிகள் தோன்றின. அவரது இதயம் அன்பினால் நிறைந்தது, கண்களில் கண்ணீர் மல்கியது. இந்நிலையில் பகவானின் தாமரைப் பாதங்களைத் தன் இதயத்தில் அவரால் முழுமையாகக் கைப்பற்ற முடிந்தது.
பதம் 7.9.7
அஸ்தௌஷீத் தரிம் ஏகாக்ர-மனஸா ஸுஸமாஹித:
ப்ரேம-கத்கதயா வாசா தன்-ன்யஸ்த-ஹ்ருதயேக்ஷண:
அஸ்தௌஷீத்-ஸ்தோத்திரம் செய்யத் துவங்கினார்; ஹரிம் – பரமபுருஷரிடம்; ஏகாக்ர-மனஸா-பகவானின் தாமரைப் பாதங்களில் மனதை முழுமையாகப் பதித்து; ஸுஸமாஹித:-(வேறு சிந்தனையின்றி] மிகுந்த கவனத்துடன்; ப்ரேம-கத்கதயா-உன்னதமான ஆனந்தப் பரவசத்தினால் தழுதழுத்த; வாசா-குரலுடன்; தத்- ன்யஸ்த- அவரிடம் (நரசிம்மதேவரிடம்) பூரண சரணடைந்தார் ஹ்ருதய-ஈக்ஷண:- இதயத்துடனும், பார்வையுடனும்.
பிரகலாத மகாராஜன் பூரண சமாதி நிலையில் முழு கவனத்துடன் தமது மனதையும், பார்வையையும் பகவான் நரசிம்ம தேவரிடம் நிலைக்கச் செய்தார். இவ்வாறு நிலைத்த மனதுடன், தழுதழுத்த குரலில், அன்புடன் அவர் ஸ்தோத்திரம் செய்யத் துவங்கினார்.
பதம் 7.9.8
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
ப்ரஹ்மாதய: ஸுர-கணா முனயோ ‘த ஸித்தா:
ஸத்வைகதான-கதயோ வசஸாம் ப்ரவாஹை:
நாராதிதும் புரு-குணைர் அதுனாபி பிப்ரு:
கிம் தோஷ்டும் அர்ஹதி மே ஹரிர் உக்ர-ஜாதே:
ஸ்ரீ-ப்ரஹ்ராத: உவாச-பிரகலாத மகாராஜன் துதித்தார்; ப்ரஹ்ம- ஆதய:- பிரம்மதேவர் முதலான ; ஸுர-கணா:-உயர் கிரக வாசிகள்: முனய:-சிறந்த முனிவர்கள்; அத-(நான்கு குமாரர்களைப் போன்ற வர்கள்) கூட; ஸித்தா :- பூரணத்துவத்தை அல்லது பூரண ஞானத்தைப் பெற்ற; ஸத்வ-ஆன்மீக வாழ்வை; ஏகதான – கதய :பௌதிக செயல்களில் மனதைத் திருப்பாமல் ஏற்றுக் கொண்டுள்ள; வசஸாம்- வர்ணனைகளின் அல்லது வார்த்தைகளின்; ப்ரவாஹை :- பிரவாகத் தினால்; ந -இல்லை; ஆராதிதும் – திருப்திப்படுத்த; புரு-குணை :- முழு தகுதியுடையவர்கள் என்ற போதிலும்; அதுனா-இக்கணம் வரை; அபி-கூட; பீப்ரு: கிம் முடிந்ததா; தோஷ்டும் – திருப்தியடையச் செய்ய; அர்ஹதி – முடிந்தது; ஸ:-அவர் (பகவான்); மே-என்னுடைய; ஹரி : – பரமபுருஷர்; உக்ர-ஜாதே:-ஓர் அசுர குடும்பத்தில் பிறந்த.
பிரகலாத மகாராஜன் பின்வருமாறு துதித்தார்:அசுரர்களின் குடும்பத்தில் பிறந்த நான், பரமபுருஷரை திருப்திப்படுத்தக்கூடிய தகுந்த ஸ்தோத்திரங்களைச் செய்வது எவ்வாறு சாத்தியமாகும்? பிரம்மா முதலான அனைத்து தேவர்களும், அனைத்து முனிவர்களும் சத்வ குணத்தில் இருப்பதால், தகுதி மிக்கவர்களாக இருப்பினும், அவர்களுடைய வார்த்தைப் பிரவாகங்களால் இக்கணம் வரை அவர்களால் பகவானைத் திருப்திப்படுத்த இயலவில்லை. அப்படியிருக்க நான் எம்மாத்திரம்? எனக்குச் சிறிதளவு தகுதிகூட இல்லை.
பதம் 7.9.9
மன்யே தனாபிஜன-ரூப தப:-ஸ்ருதௌஜஸ்-
தேஜ:-ப்ரபாவ-பல-பௌருஷ-புதிதி-யோகா:
நாராதனாய ஹி பவந்தி பரஸ்ய பும்ஸோ
பக்த்யா துதோஷ பகவான் கஜு-யூத-பாய
மன்யே-நான் கருதுகிறேன்; தன-செல்வம்: அபிஜன-உயர் குடிப்பிறப்பு: ரூப-உடலழகு: தப:-தவம்; ஸ்ருத-வேத ஞானம்; ஓஜ:- ஆற்றல்; தேஜ:-காந்தி; ப்ரபாவ-செல்வாக்கு: பல-தேகபலம்: பௌருஷ-முயற்சி; புத்தி-புத்தி: யோகா:-யோக சக்தி; ந-இல்லை; ஆராதனாய-திருப்திப்படுத்துவதற்கு; ஹி – உண்மையில்; பவந்தி- இருக்கின்றன; பரஸ்ய-பரமனை; பும்ஸ:-பரமபுருஷரை; பக்த்யா- பக்தித் தொண்டினாலேயே; துதோஷ- திருப்தியடைந்தார்; பகவான்- அப்பரம புருஷர்; கஜுயூத-யாய-கஜேந்திரனிடம்.
பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: ஒருவன் செல்வம், உயர்குடிப் பிறப்பு, அழகு, தவம், கல்வி, ஆற்றல், காந்தி, செல்வாக்கு, தேகபலம், முயற்சி, புத்தி, யோக சக்தி ஆகிய இத்தகுதிகளை யெல்லாம் பெற்றிருக்கக்கூடும் என்றாலும், இவை அனைத்தினாலும் கூட பரமபுருஷரை அவனால் திருப்திப்படுத்த முடியாதென்று நான் நினைக்கிறேன். ஆனால் பக்தித்தொண்டின் மூலம் பகவானை ஒருவனால் திருப்திப்படுத்த முடியும். இந்த பக்தியாலல்லவா பகவான் கஜேந்திரனிடம் திருப்தியடைந்தார்.
பதம் 7.9.10
விப்ராத் த்வி-ஷட்-குண-யுதாத் அரவிந்த-நாப-
பாதாரவிந்த-விமுகாத் ஸ்வபசம் வரஷ்டம்
மன்யே தத்-அர்பித-மனோ-வசனேஹிதார்த-
ப்ராணம் புனாதி ஸ குலம் ந து பூரிமான:
விப்ராத் ஒரு பிராமணனை விட: த்வி- ஷட்- குண- யுதாத்- பிராமணர்களுக்குரிய பன்னிரண்டு தகுதிகளைப் பெற்றிருத்தல்;” அரவிந்த-நாப-யாருடைய நாபியிலிருந்து ஒரு தாமரை வளர்ந்ததோ அந்த பகவான் விஷ்ணு; பாத-அரவிந்த-பகவானுடைய தாமரைப் பாதங்களிடம்; விமுகாத்-பக்தித் தொண்டில் ஈடுபாடில்லாத; ஸ்வ- பசம்–ஒரு சண்டாளன்; வரிஷ்டம்- மேலானவன்; மன்யே-நான் கருதுகிறேன்; தத் -அர்பித-பகவானின் தாமரைப் பாதங்களில் சரணடைந்த; மன:-அவனது மனம்; வசன-வார்த்தைகள்; ஈஹித- ஒவ்வொரு முயற்சியும்: அர்த்த – செல்வம்; ப்ராணம்- மற்றும் உயிர்: புனாதி-புனிதப்படுத்துகிறான்; ஸ-அவன் (பக்தன்); குலம் – தன் குடும்பத்தை; இல்லை; து-ஆனால்; பூரிமான:-தான் கௌரவமான ஒரு அந்தஸ்தில் இருப்பதாக கர்வம் கொண்டவன்.
ஒரு பிராமணன், (சனத்-சுஜாதம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள) பன்னிரண்டு பிராமணத் தகுதிகளையும் பெற்றிருப்பினும், பக்தனல்லாதவனாகவும், பகவானுடைய தாமரைப் பாதங்களிடம் வெறுப்புடையவனாகவும் இருப்பானாயின், அவன், நாய் மாமிசம் திண்ணும் ஒரு சண்டாளனாயிருந்தும், பரமபுருஷரிடம் தனது மனம், வாக்கு, செயல், செல்வம், உயிர் ஆகிய அனைத்தையும் அர்ப்பணித்துள்ள ஒரு பக்தனைவிடக் கீழானவன் என்பது நிச்சயம். இத்தகைய ஒரு பக்தன் இத்தகைய ஒரு பிராமணனை விடச் சிறந்தவனாவான். ஏனெனில், அவனால் தன் குடும்பம் முழுவதையும் புனிதப்படுத்த முடியும். ஆனால் பொய்க் கௌரவம் என்ற நிலையிலுள்ள பெயரளவேயான அந்த பிராமணனால் தன்னையே கூட புனிதப்படுத்திக் கொள்ள முடியாது.
பதம் 7.9.11
நைவாத்மன: ப்ரபுர் அயம் நிஜ-லாப-பூர்ணோ
மானம் ஜனாத் அவிதுஷ: கருணோ வ்ருணீதே
யத் யஜ் ஜனோ பகவதே விததீத மானம்
தச் சாத்மனே ப்ரதிமுகஸ்ய வதா முக-ஸ்ரீ:
த-இல்லாமல் ஏவ நிச்சயமாக; ஆத்மன:- தன் சொந்த நன்மைக்காக: ப்ரபு:-பகவான்; அயம்-இந்த; நிஜுலாபபூர்ண:-எப்பொழுதும் சுயதிருப்தியுடையவர் (பிறருடைய சேவையால் திருப்தியடையும் அவசியம் அவருக்கில்லை); மானம்- மரியாதை; ஜனாத்- ஒருவனிடமிருந்து; அவிதுஷ:- வாழ்வின் இலட்சியம் பரமபுருஷரை திருப்திப்படுத்துவதே என்பதை அறியாது கருணை:- அறியாமையிலுள்ள இந்த மூடனிடம் மிகவும் கருணை கொண்டுள்ளவர் (பரமபுருஷர்); வ்ருணீதே- ஏற்றுக் கொள்கிறார்; யத் யத்-எதை யெல்லாம்: ஜன:- ஒருவன்; பகவதே -பரமபுருஷருக்கு; விததீத- அர்ப்பணிக்கிறானோ; மானம்-வணக்கத்தை ததி– அந்த; ச-நிச்சயமாக; ஆத்மனே -தன் சொந்த நன்மைக்காக; ப்ரதி-முகஸ்ய-கண்ணாடியில் தெரியும் முகத்தின் பிரதிபலிப்பு: யதா-எப்படி: முக-ஸ்ரீ-முகத்தின் அலங்காரம்.
பரமபுருஷர் எப்பொழுதும் பூரண சுயதிருப்தி உடையவராவார். எனவே அவருக்கு ஏதேனும் அர்ப்பணிக்கப்படும் பொழுது, அந்த அர்ப்பணம், பகவானின் கருணையால், பக்தனின் நன்மைக்கே உரியதாகும். ஏனெனில் எவருடைய சேவையும் பகவானுக்குத் தேவையில்லை. உதாரணமாக, ஒருவனது முகம் அலங்கரிக்கப்பட்டு இருக்குமானால், கண்ணாடியில் தெரியும் அம்முகத்தின் பிரதிபலிப்பு கூட அலங்கரிக்கப்பட்டதாகவே காணப்படும்.
பதம் 7.9.12
தஸ்மாத் அஹம் விகத-விக்லவ ஈஸ்வரஸ்ய
ஸர்வாத்மனா மஹி க்ருணாமி யதா மனீஷம்
நிசோ ‘ஜய குண-விஸர்கம் அனுப்ரவிஷ்ட:
பூயேத யேன ஹி புமான் அனுவர்ணிதேன
தஸ்மாத-ஆகவே; அஹம்-நான்; விகத-விக்லவ:-தகுதியற்றவன் என்ற எண்ணத்தை விட்டுவிட்டு; ஈஸ்வரஸ்ய-பரமபுருஷரின்; ஸர்வ- ஆத்மனா-முழு சரணாகதியில்; மஹி – மகிமையை; க்ருணாமி – நான் பாடுவேன் அல்லது விவரிப்பேன்; யதா மனீஷம்-என் புத்திக் கேற்றவாறு; நீச:- (என் தந்தை நற்குணங்களே இல்லாத பெரிய அகரன் என்பதால்) நீசனாகப் பிறந்துள்ள போதிலும்; அஜயா- அறியாமையின் காரணத்தால்; குண-விஸர்கம்-(இயற்கைக் குணங்களின் மாசுக்கேற்ப ஜீவராசிகள் பிறவியெடுக்கும்) ஜட உலகில்; அனுப்ரவிஷ்ட:-நுழைத்தனர்; பூயேத-புனிதமடையக் கூடும்; யேன – எதனால் (பகவானுடைய மகிமை); ஹி – நிச்சயமாக; புமான்-ஒருவன்; அனுவர்ணிதேன – ஜபித்தோ அல்லது பாடியோ.
ஆகவே, நான் ஓர் அசுர குடும்பத்தில் பிறந்துள்ள போதிலும், என் புத்திக்கேற்பவும், முழு முயற்சியுடனும் பகவானிடம் பிரார்த்தனைகள் செய்வேன். ஜட உலகில் நுழையும்படி அறியாமையால் கட்டாயப்படுத்தப்பட்ட எவருமே, பகவானின் மகிமைகளைக் கேட்பதாலும், அவரிடம் பிரார்த்தனைகள் செய்வதாலும் பௌதிக வாழ்விலிருந்து புனிதமடைய முடியும்.
பதம் 7.9.13
ஸர்வே ஹி அமீ விதி- கராஸ் தவ ஸத்வ-தாம்னோ
ப்ரஹ்மாதயோ வயம் இவேச த சோத்விஜந்த
க்ஷேமாய பூதய உதாத்ம-ஸுகாய சாஸ்ய
விக்ரீடிதம் பகவதோ ருசிராவதாரை:
ஸர்வ- எல்லோரும்; ஹி – நிச்சயமாக; அமீ இந்த; விதி-கரா:- கட்டளைகளை செயல்படுத்துபவர்கள்; தவ-தங்களுடைய; ஸத்வ- தாம்ன:- எப்பொழுதும் உன்னதமான உலகில் இருப்பதால்; ப்ரஹ்ம- ஆதய:-பிரம்மா முதலான தேவர்கள்; வயம் -நாங்கள்; இவ-போல்; ஈச-பகவானே; ந-இல்லை: ச-மேலும்; உத்விஜந்த:-(தங்களுடைய பயங்கரமான தோற்றத்தினால்) பயந்து போயுள்ள; க்ஷேமாய- பாதுகாப்புக்காக; பூதயே- வளர்ச்சிக்காக; உத- என்று கூறப்படுகிறது; ஆத்ம-ஸூகாய-இத்தகைய லீலைகளின் மூலம் ஆத்ம திருப்திக்காக; ச-கூட; அஸ்ய -இந்த ஜட உலகின்; விக்ரீடிதம்-தோற்றுவிக்கப் பட்டுள்ள; பகவத:- தங்களுடைய; ருசிர-மிகவும் இன்பமூட்டும்; அவதாரை:-தங்களுடைய அவதாரங்களால்.
பகவானே, பிரம்மதேவர் முதலான எல்லாத் தேவர்களும், உன்னத நிலையிலுள்ள தங்களுடைய உண்மையான சேவகர்களாவர். ஆகவே இவர்கள் எங்களைப் (பிரகலாதர், அவரது தந்தை இரண்யகசிபு) போன்றவர்களல்ல.இந்த பயங்கரமான ரூபத்தில் தாங்கள் தோன்றியிருப்பது, ஆத்ம திருப்திக்காக மேற்கொள்ளப்பட்ட தங்களுடைய திருவிளையாடலாகும். இத்தகைய ஓர் அவதாரம் எப்பொழுதும் பிரபஞ்சத்தின் பாதுகாப்பிற்கும், முன்னேற்றத்திற்குமே ஆகும்.
பதம் 7.9.14
தத் யச்ச மன்யும் அஸுரஸ் ச ஹதஸ் த்வயாத்ய
மோதேத ஸாதுர் அபி வ்ருஸ்சிக-ஸர்ப-ஹத்யா
லோகாஸ் ச நிர்வ்ருதிம் இதா: ப்ரதியந்தி ஸர்வே
ரூபம் ந்ருஸிம்ஹ விபயாய ஜனா: ஸ்மரந்தி
தத்-ஆகவே: யச்ச- தயவுகூர்ந்து விட்டுவிடுங்கள்; மன்யும்- தங்களுடைய கோபத்தை: அஸுர:-என் தந்தையும், பெரிய அசுரனுமான இரண்யகசிபு: ச-கூட; ஹத:-கொல்லப்பட்டான்; தலை:- தங்களால்; அதிய-இன்று; மோதேத-மகிழ்ச்சி அடைகிறார்; ஸாது: அபி-ஒரு சாது கூட; வ்ருஸ்சிக-ஸர்ப-ஹத்யா-ஒரு பாம்பையோ அல்லது தேளையோ கொல்வதில்; லோகா:-அனைத்து லோகங்களும்; ச-உண்மையில்; நிர்வ்ருதிம் – மகிழ்ச்சி: இதா- அடைந்துள்ளனர்; ப்ரதியந்தி-(தங்களுடைய கோபம் தணிவதற்காக] காத்திருக்கிறார்கள்; ஸர்வே-இவர்களனைவரும்; ரூபத்தை; ந்ருஸிம்ஹ-பகவான் நரசிம்மதேவரே; விபவாய-இவர் களுடைய பயத்தைக் குறைப்பதற்கு: ஜனா:-பிரபஞ்ச மக்களனைவரும்; ஸ்மரந்தி-நினைவில் வைத்திருப்பார்கள்.
ஆகவே, பகவான் நரசிம்மதேவரே, என் தந்தையும், பெரிய அசுரனுமான இரண்யகசிபு இப்பொழுது கொல்லப்பட்டு விட்டதால் தயவுகூர்ந்து கோபம் தணிந்து சாந்தமடையுங்கள். சாதுக்கள் ஒரு தேளையோ, பாம்பையோ கொல்வதில் மகிழ்ச்சியடைகின்றனர் என்பதால், இந்த அசுரன் கொல்லப்பட்டதன் காரணமாக அனைத்து லோகங்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளன. அவர்களுக்குத் தங்களுடைய மகிழ்ச்சியில் இப்பொழுது நம்பிக்கை பிறந்துள்ளது. அவர்கள் பயத்திலிருந்து விடுபடுவதற்ககு உங்களுடைய மங்களகரமான இந்த அவதாரத்தை எப்பொழுதும் நினைந்து போற்றுவார்கள்.
பதம் 7.9.15
நாஹம் பிபேமி அஜித தே ‘திபயானகாஸ்ய-
ஜிஹ்வார்க-நேத்ர-ப்ருகுடீரபஸோக்ர-தம்ஷ்ட்ராத்
ஆந்த்ர-ஸ்ரஜ:-க்ஷதஜ-கேசர-சங்கு-கர்ணான்
நிர்ஹ்ராத-பீத-திகிபாத் அரி-பின்-நகாக்ராத்
ந-இல்லை; அஹம்-தான்; பிபேமி -பயப்படுகிறேன்; அஜித எவராலும் ஜயிக்க முடியாத பரம வெற்றிப்புருஷரே; தே- உங்களுடைய; அதி – மிகவும்; பயானக-பயங்கரமான; ஆஸ்ய- வாய்; ஜிஹ்வா-நாக்கு: அர்க-நேத்ர-சூரியனைப்போல் ஜொலிக்கும் கண்கள்; ப்ருகுடீ-நெறிந்த புருவங்கள்; ரபஸ-உறுதியான; உக்ர- தம்ஷ்ட்ராத்-பயங்கரமான பற்கள்: ஆந்த்ர-ஸ்ரஜ:-குடல்கலால் மாலையிடப்பட்டு; க்ஷதஜ – இரத்தம் தோய்ந்த; கேசர-பிடறி மயிர்; சங்கு-கர்ணாத்-ஆப்பு போன்ற காதுகள்; நிர்ஹ்ராத-கர்ஜனையால் பீத-பயந்த; திகிபாத்-எதனால் பெரிய பெரிய யானைகள் கூட அரி-பித்- எதிரியைப் பிளக்கும்; நக-அக்ராத் -எவருடைய நகங்களின் நுனிகள்.
எவராலும் ஜெயிக்க முடியாத பகவானே. உங்களுடைய பயங்கரமான வாய் மற்றும் நாக்கு, உங்களுடைய சூரியன்போல் பிரகாசிக்கும் கண்கள், நெறிந்த புருவங்கள் ஆகியவற்றைக் கண்டு நான் பயப்படவில்லை. உங்களடைய கூர்மையான கொடிய பற்கள், குடல்மாலை, இரத்தம் தோய்ந்த பிடரி மயிர், உயர்ந்த ஆப்பு போன்ற காதுகள் ஆகியவற்றைக் கண்டு நான் பயப்படவில்லை. யானைகளை வெகுதூரம் விரட்டியடிக்கும் உங்களுடைய உரத்த கர்ஜனையையோ, அல்லது எதிரிகளைக் கொல்வதற்கென அமைந்த நகங்களையோ கண்டும் நான் பயப்படவில்லை.
பதம் 7.9.16
த்ரஸ்தோ ‘ஸ்மி அஹம் க்ருபண-வத்ஸல துஹ்ஸஹோக்ர-
ஸம்ஸார-சக்ர-கதனாத் க்ரஸதாம் ப்ரணீத:
பத்த: ஸ்வ-கர்மபிர் உசத்தம தே ‘ங்ரி-மூலம்
ப்ரீதோ ‘பவர்க-சரணம் ஹ்வயஸே கதா து
த்ரஸ்த:- பயப்படுகிறேன்; அஸ்மி -இருக்கிறேன்; அஹம்-நான்; க்ருபண-வத்ஸல-(ஆத்ம ஞானமற்ற) இழிவடைந்த ஆத்மாக்களிடம் மிகவும் கருணை கொண்ட பகவானே; துஹ்ஸஹ-பொறுக்க முடியாத, உக்ர-கொடூரமான; ஸம்ஸார-சக்ர-பிறவிச் சக்கரத்தின்; சுதனாத்-இத்தகைய ஒரு துன்பகரமான நிலையிலிருந்து; க்ரஸதாம்- ஒருவரையொருவர்
விழுங்கும் பிற பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கிடையில்; ப்ரணீத:-வீசப்பட்ட;பத்த:- பந்தப்பட்டவனாக; ஸ்வ-கர்மபி:- என்னுடைய வினைகளின் பலனாகவே; உசத்தம-வெல்ல முடியாதவரே; தே-உங்களுடைய; அங்ரி-மூலம்-பாத மூலத்திற்கு; ப்ரீரீத-(என்னிடம்) திருப்தியடைந்து; அபவர்க-சரணம்-பௌதிக வாழ்வின் மோசமான இந்நிலையிலிருந்து முக்தியளிக்கும் சரணாலயமாகிய ஹ்வயஸே- (என்னை) நீங்கள் அழைத்துக் கொள்ள போகிறீர்கள்; கதா-எப்பொழுது; நு-நிச்சயமாக.
மிகச் சக்திவாய்ந்தவரும், இழிவடைந்த ஆத்மாக்களிடம் கருணை கொண்டவருமான வெல்லுதற்கரிய பகவானே. எனது செயல்களின் விளைவாக நான் அசுரர்களிடையே தள்ளப்பட்டிருக்கிறேன். ஆகவே பொறுக்கமுடியாததும், கொடியதுமான இந்த ஜட உலக வாழ்க்கையைக் கண்டு நான் மிகவும் அச்சப்படுகிறேன். பகவானே, பந்தப்பட்ட வாழ்விலிருந்து முக்தியளிக்கும் சரணாலயமாகிய உங்களுடைய பாத மூலத்திற்கு எப்போது என்னை நீங்கள் அழைத்துக் கொள்ளப்போகிறீர்கள்.
பதம் 7.9.17
யஸ்மாத ப்ரியாப்ரிய-வியோக- ஸம்யோக – ஜன்ம
சோகாக்னினா ஸகல-யோனிஷு தஸ்யமான:
துஹ்கௌஷதம் தத் அபி துஹ்கம் அதத்-தியாஹம்
பூமன் ப்ரமாமி வத மே தவ தாஸ்ய-யோகம்
யஸ்மாத்-எதனால் (ஜட உலகில் வாழும் காரணத்தால்); ப்ரிய- பிரியமானவை; அப்சிய-பிரியமற்றவை; வியோக-பிரிவினாலும்; ஸம்யோக-சேர்க்கையினாலும்; ஜன்ம-யாருடைய பிறவி; சோக- அக்னினா-சோகத் தீயினால்; ஸகல-யோனிஷு- எந்த விதமான உடலிலும்; தஹ்யமான:-எரிக்கப்பட்டு; துஹ்க-ஔஷதம்-துன்பகரமான வாழ்விற்கான பரிகாரங்கள்; தத்-அந்த; அபி-கூட; துஹ்கம்- துன்பமடைந்து; அ-தத்-தியா-உடலையே ஆத்மாவாகக் கருதுவதால்; அஹம்- நான்: பூமன் – உயர்ந்தவரே; ப்ரமாமி-(பிறவிச் சக்கரத்தில்) சுற்றிக் கொண்டிருக்கிறேன்; வத-உபதேசிக்க வேண்டுகிறேன்; மே- எனக்கு: தவ -தங்களுடைய; தாஸ்ய-யோகம்-தொண்டு செய்யும் செயல்களை
உயர்ந்தவரே, பரமபுருஷரே, பிரியமுள்ள மற்றும் பிரியமற்ற சூழ்நிலைகளின் சேர்கையினாலும், அவற்றின் பிரிவினாலும், ஒருவன் சுவர்க்க லோகத்திலோ அல்லது நரக லோகத்திலோ, சோகத் தீயில் எரிவது போன்ற மிகவும் வருந்ததக்க ஒரு நிலையில் தள்ளப் படுகிறான். துன்பகரமான வாழ்விலிருந்து வெளியேறுவதற்குப் பல பரிகாரங்கள் இருந்த போதிலும், இந்த ஜட உலகிலுள்ள இத்தகைய பரிகாரங்கள், துன்பங்களைப் போக்குவதற்குப் பதிலாக, அதிக துன்பங்களையே கொடுக்கின்றன. ஆகவே தங்களுடைய சேவையில் ஈடுபடுவதே ஒரே பரிகாரம் என்று நான் கருதுகிறேன். இத்தகைய சேவையைப் பற்றி எனக்கு உபதேசித்து அருளுங்கள்.
பதம் 7.9.18
ஸோ ‘ஹம் ப்ரியஸ்ய ஸுஹ்ருத: பரதேவதாயா
வீலா-கதாஸ் தவ ந்ருஸிம்ஹ விரிஞ்ச -கீதா:
அஞ்ஜஸ் திதர்மி அனக்ருணன் குண – விப்ரமுக்தோ
துர்காணி தே பத-யுகாலய- ஹம்ஸ- ஸங்க:
ஸ:-அந்த; அஹம்-நான்; ப்ரியஸ்ய-மிகப் பிரியமான; ஸுஹ்ருத:- நலம் விரும்பி; பரதேவதாயா:-பரமபுருஷரின்: லீலா-கதா-லீலைகளின் வர்ணணைகளை; தவ – உங்களுடைய; ந்ருஸிம்ஹ – நரசிம்ம தேவரே; விரிஞ்ச-கீதா:-சீடப்பரம்பரை மூலம் பிரம்மாவால் கொடுக்கப்பட்ட; அஞ்ஜ:-சுலபமாக; திதர்மி -நான் கடந்துவிடுவேன்; அனுக்குருணன்-இடையறாது விவரித்துக் கொண்டு; குண – ஜட இயற்கைக் குணங்களால்; விப்ரமுக்த:-குறிப்பாக மாசற்றவனாகி; துர்காணி- வாழ்வின் எல்லாத் துன்பச் சூழ்நிலைகளும்; தே- உங்களுடைய; பத-யுக-ஆலய-தாமரைப் பாதங்களின் தியானத்தில் முழுமையான ஆழ்ந்து; ஹம்ஸ-ஸங்க:-(பௌதிக செய்லகளுடன் தொடர்பு கொண்டிராத) முக்தி பெற்றவர்களின் (ஹம்ஸர்களின்) சகவாசத்தைப் பெற்று.
பகவான் நரசிம்மதேவரே, முக்திபெற்ற ஆத்மாக்களான (ஹம்ஸர்களான) உங்களுடைய பக்தர்களின் சகவாசத்தினால், உங்களுடைய உன்னத அன்புத் தொண்டில் ஈடுபடுவதன் மூலமாக பௌதிக, குணங்களின் சகவாசத்தினால் உண்டான களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு, எனக்கு மிகப் பிரியமான பெருமானாகிய தங்களுடைய மகிமைகளை என்னால் பாட முடியும். பிரம்மதேவர் மற்றும் அவரது சீடப்பரம்பரையின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி தங்களுடைய மகிமைகளை நான் பாடுவேன். இவ்விதமாக, ஐயமின்றி அறியாமைக் கடலை என்னால் கடந்துவிட முடியும்.
பதம் 7.9.19
பாலஸ்ய நேஹ சரணம் பிதரௌ ந்ருஸிம்ஹ
நார்தஸ்ய சாகதம் உதன்வதி மஜ்ஜதோ நௌ:
தப்தஸ்ய தத் ப்ரதிவிதிர் ய இஹாஞ்ஜஸேஷ்டஸ்
தாவத் விபோ தனு-ப்ருதாம் த்வத்- உபேக்ஷிதானாம்
பாலஸ்ய-சிறு குழந்தை; ந-இல்லை;இஹ-இவ்வுலகில், சரணம்-புகலிடம் (பாதுகாப்பு): பிதரௌ-பெற்றோர்கள்;ஸிம்ஹ- பகவான் நரசிம்மதேவரே; ந -இல்லை; ஆர்தஸ்ய-ஏதோ ஒரு நோயினால் துன்புறுபவனின்; ச-கூட: அகதம்-மருந்து; உதன்வதி-சமுத்திர நீரில்; மஜ்ஜத:-மூழ்கிக் கொண்டிருப்பவனின்; நௌ -படகு; தப்தஸ்ய-பௌதிக துன்பத்தினால் துன்புறுபவன்; தத்-ப்ரதிவிதி:-(பௌதிக வாழ்வின் துன்பத்தை நிறுத்தவதற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட) எதிர்த்தாக்கு முறை; ய:-எது; இஹ-இந்த ஜட உலகில்; அஞ்ஜஸா-மிகச் சுலபமாக; இஷ்ட:-(பரிகாரமாக) ஏற்றுக் கொள்ளப்பட்டது; தாவத்-அவ்வாறே; விபோ -பகவானே, பரமனே; தனு-ப்ருதாம்-பௌதிக உடல்களை ஏற்றுள்ள ஜீவராசிகளின்; த்வத்-உபேக்ஷிதானாம்-உங்களால் ஏற்றுக் கொள்ளப்படாது ஓதுக்கப் பட்டவர்கள்.
பகவான் நரசிம்மதேவரே, பரமனே, தேகாபிமானத்தின் காரணத்தால், உங்களால் கவனிக்கப்படாது ஒதுக்கப்பட்ட உடல்பெற்ற ஆத்மாக்களால் அவர்களுடைய மேன்மைக்காக எதையுமே செய்ய முடியவில்லை. அவர்களால் செய்யப்படும் பரிகாரங்கள் தற்காலிகமாக நன்மையளித்த போதிலும், நிச்சயமாக நிரந்தரமானவையல்ல. உதாரணமாக பெற்றோர்களால் தங்கள் குழந்தையைக் காப்பாற்ற முடியாது, மருத்துவராலும், மருந்தினாலும் துன்புறும் நோயாளியை அதிலிருந்து விடுவிக்க முடியாது. சமுத்திரத்திலுள்ள ஒரு படகினால் நீரில் மூழ்கிக் கொண்டிருப்பலனைக் காப்பாற்ற முடியாது.
பதம் 7.9.20
யஸ்மின் யதோ யர்ஹி யேன ச யஸ்ய யஸ்மாத்
யஸ்மை யதா யத் உத யஸ் து அபர: பரோ வா
பாவ: கரோதி விகரோதி ப்ருதக் ஸ்வபாவ:
ஸஞ்சோதிதஸ் தத் அகிலம் பவத: ஸ்வரூபம்
யஸ்மின் – வாழ்வின் எந்த நிலையிலும்; யத:-எந்த காரணத்தினாலும்; யர்ஜி-(கடந்த, நிகழ், எதிர் என்ற) எந்த காலத்திலும்; யேன – எதோ ஒன்றினால்; ச-கூட; யஸ்ய-பிறருடனான உறவில்; யஸ்மாத்-எந்த ஒரு காரணத்தினாலும்; யஸ்மை-(இடம், நபர் அல்லது காலம் என்ற பாகுபாடு இல்லாமல்) எவருக்கும்: யதா~ எவ்விதத்திலும்; யத்-என்னவாக இருப்பினும்; உத-நிச்சயமாக; :- ய – யாரானாலும்; து-ஆனால்; அபர:-வேறு; பர:-உயர்ந்த; வா- அல்லது; பாவ:-உணர்வு; கரோதி-செய்கிறது; விகரோதி- மாறுகிறது; ப்ருதக் -தனியாக; ஸ்வபாவ:-(வெவ்வேறு ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட) சுபாவம்; ஸஞ்சோதித: ஆதிக்கம் செலுத்தப்பட்டு; தத் -அது; அகிலம்-எல்லா; பவத:- உங்களுடைய; ஸ்வரூபம்-உங்களுடைய வெவ்வேறு சக்திகளிலிருந்து வெளிப்பட்டவையே.
பகவானே இந்த ஜட உலகிலுள்ள அனைவரும் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் உள்ளனர். மிகவும் மேலானவரான பிரம்மதேவரிலிருந்து சிறிய எறும்பு வரையுள்ள அனைவருமே இக்குணங்களின் ஆதிக்கத்தின் கீழ்தான் செயற்படுகின்றனர். ஆகவே இவ்வுலகிலுள்ள அனைவரும் உங்களுடைய சக்தியினால் வசீகரிகப்படுகின்றனர். அவர்கள் செயற்படுவதற்கான காரணம், செயற்படும் இடம், செயற்படும் நேரம், எந்த காரணத்தினால் செயற்படுகிறார்களோ அந்த விஷயம், அவர்கள் முடிவானது என்று கருதிய வாழ்க்கையின் இலட்சியம், அந்த இலட்சியத்தை அடைவதற்கான முறை ஆகிய அனைத்தும் உங்களுடைய சக்தியின் தோற்றங்களேயன்றி வேறில்லை. உண்மையில், சக்தியும், சக்தியளிப்பதும் ஒன்றே என்பதால் இவையனைத்தும் உங்களுடைய தோற்றங்களே ஆகும்.
பதம் 7.9.21
மாயா மன: ஸ்ருஜதி கர்மமயம் பலீய:
காலேன சோதித-குணானுமதேன பும்ஸ:
சந்தோமயம் யத் அஜயார்பித- ஷோடசாரம்
ஸம்ஸார-சக்ரம் அஜகோ ‘திதரேத் த்வத்-அன்ய:
மாயா- பரமபுருஷரின் புறச்சக்தி: மன:- மனம்; ஸ்ருஜதி – படைக்கிறது; கர்ம-மயம்-ஆயிரக்கணக்கான ஆசைகளை உற்பத்தி செய்தும், அதற்கேற்ப செயற்பட்டும்; பலீய- மிகமிக சக்தி வாய்ந்ததும்; வெல்ல முடியாததுமான; காலேன-காலத்தால்; சோதித குண – எதன் மூன்று ஜட இயற்கைக் குணங்கள் கிளர்ச்சி அடைகின்றனவோ; அனுமதேன- பார்வையின் (காலத்தின்) கருணையால் அனுமதிக்கப்பட்டு; பும்ஸ:-பசுவான் ஸ்ரீ கிருஷ்ணரின் விரிவாக்கமான பூரண அம்சத்தின் (பகவான் விஷ்ணுவின்); சந்த:- மயம்- முக்கியமாக வேத விதிகளால் நடத்தப்பட்ட; யத் – எது; அஜயா- இருண்ட அறியாமையின் காரணத்தால்; அர்பித- அர்ப்பணிக்கப்பட்ட; ஷோடச- பதினாறு; அரம்-ஆரக்கால்கள்; ஸம்ஸார- சக்ரம்- பிறவிச் சக்கரம்; அஜ-பிறப்பற்ற பசுவானே; க:-யார் (இருக்கிறார்); அதிதரேத் -வெளியேறக் கூடியவன்; தவத்-அன்ய: தங்களுடைய தாமரைப் பாதங்களில் சரணடையாது.
நித்திய புருஷராகிய பகவானே, தங்களுடைய பூரண அம்சத்தை விரிவடையச் செய்வதன் மூலம், காலத்தால் கிளர்ச்சியடையும் தங்களுடைய புறச் சக்தியின் வாயிலாக, ஜீவராசியின் சூட்சும சரீரங்களைத் தாங்கள் படைத்திருக்கிறீர்கள். இவ்விதமாக மனமானது பலவகைப்பட்ட எண்ணிலடங்காத ஆசைகளில் ஜீவராசியை சிக்க வைக்கிறது. எண்ணிலடங்காத இந்த ஆசைகள், வேதக் கர்ம காண்டத்திலுள்ள வழிமுறைகளாலும், பதினாறு பௌதிக மூலப் பொருட்களாலும் நிறைவேற்றப்பட வேண்டியவை தங்களுடைய தாமரைப் பாதங்களில் சரணடைந்தாலன்றி, யாரால் இந்த சிக்கலிலிருந்து விடுபட முடியும்?
பதம் 7.9.22
ஸ த்வம் ஹி நித்ய-விஜிதாத்ம குண: ஸ்வ-தாம்னா
காலோ வசீ-க்ருத-விஸ்ருஜ்ய- விஸர்க – சக்தி:
சக்ரே விஸ்ருஷ்டம் அஜயேஸ்வர ஷோடசாரே
நிஷ்பீட்யமானம் உபகர்ஷ விபோ ப்ரபன்னம்
ஸ:-அந்த ஒருவர் (எவர் தமது புறச் சக்தியின் வாயிலாக, இந்த ஜட உலகிலுள்ள துன்பங்களுக்கெல்லாம் காரணமான பௌதிக மனதைப் படைத்தாரோ, அந்த பரம சுதந்திரமுள்ள புருஷர்); த்வம்- நீங்கள் (இருக்கிறீர்கள்); ஹி-உண்மையில்: நித்ய-நித்தியமாக; விஜித- ஆத்ம-வெற்றிகொண்ட; குண:-யாருடைய அறிவுத்திறன்; ஸ்வ -தாம்னா-உங்களுடைய பிரத்தியேகமான ஆன்மீக சக்தியால்; கால:- (படைத்து, அழிக்கும்) காலத் தத்துவம்; வசீ-க்ருத-உங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட; விஸ்ருஜ்ய-எதனால் எல்லா விளைவுகளும்; விஸர்க- காரணங்களும்: சக்தி:-சக்தியும்; சக்ரே-காலச் சக்கரத்தில் (பிறவிச் சக்கரத்தில்); விஸ்ருஷ்டம்- எறியப்பட்டு; அஜயா-உங்களுடைய புறச்சக்தியான தமோ குணததினால்; ஈஸ்வர-பரம ஆளுனரே; ஷோடசஅரே-பதினாறு ஆரக்கால்கால் (பஞ்ச பூதங்கள், பத்து புலன்கள், மற்றும் புலன்களின் தலைவனான மனம்); நிஷ்பீட்யமானம் -(அந்த சக்கரத்தின் கீழ்) நசுக்கப்பட்டு; உபகர்ஷ-(உங்களுடைய தாமரைப் பாதங்களின்) புகலிடத்திற்கு: விபோ-பரமபுருஷரே; ப்ரபன்னம்- உங்களிடம் பூரண சரணாகதி அடைந்துள்ள.
பகவானே, பரமபுருஷரே. நீங்கள் பதினாறு பகுதிப் பொருட்களையுடைய இந்த ஜட உலகைப் படைத்திருக்கிறீர்கள். ஆனால் அவற்றின் பௌதிக குணங்களுக்குத் தாங்கள் அப்பாற்பட்டவராவீர். அதாவது, இந்த பௌதிக குணங்கள் உங்களுடைய முழு கட்டுப்பாட்டில் உள்ளன. இவற்றினால் நீங்கள் ஜயிக்கப்படுவதே இல்லை. ஆகவே காலத் தத்துவமானது உங்களுடைய பிரதிநிதியாகும். பகவானே, பரமபுருஷரே, உங்களை எவராலும் வெல்ல முடியாது. ஆனால் என்னைப் பொறுத்தவரை, காலச் சக்கரத்தினால் நான் நசுக்கப்படுகிறேன். ஆகவே நான் உங்களிடம் பூரண சரணாகதி அடைகிறேன். அன்புடன் தங்களுடைய தாமரைப் பாதங்களில் எனக்குப் பாதுகாப்பு அளித்து அருள்வீராக.
பதம் 7.9.23
த்ருஷ்டா மயா திவி விபோ ‘கில- திஷ்ண்ய-பானாம்
ஆயு: ஸ்ரியோ விபவ இச்சதி யாஞ் ஜனோ ‘யம்
யே ‘ஸ்மத் பிது: குபித-ஹாஸ- விஜ்ரும்பித-ப்ரூ-
விஸ்ஃபுர்ஜிதேன லுலிதா: ஸ து தே நிரஸ்த:
த்ருஷ்டா :- கண்கூடாகக் காணப்பட்டது; மயா -என்னால்; திவி- மேலுலகங்களில்; விபோ-பகவானே; அகில-எல்லா; திஷ்ணய- பானாம்- வெவ்வேறு தேசங்களுடைய அல்லது கிரகங்களுடைய தலைவர்களின்; ஆயு:-ஆயுள்: ஸ்ரிய:- செல்வங்கள்; விபவ:- பெருமைகள், செல்வாக்குகள்; இச்சதி- விரும்புகிறார்கள்; யான்- எவைகளை; ஜன: அயம்-பொதுவாக இவர்கள்; யே-எவர்களுடைய (ஆயுள், செல்வம் போன்றவை); அஸ்மத் பிது:-என் தந்தையான இரண்யகசிபுவின்; குபித-ஹாஸ-கோபாசேவம் கொண்ட அட்டகாசமான சிரிப்பினால் விஜ்ரும்பித-விரிவினால்; ப்ரூ-புருவங்களின்; விஸ்ஃபூர்ஜிதேன-நெறிக்கும் குறியினாலேயே; லுலிதா:- தள்ளப்பட்டார்கள் அல்லது முடிவை அடைந்தார்கள்; ஸ:- அவன் (என் தந்தை); து-ஆனால்; தே-உங்களால்; நிரஸ்த:-முற்றிலும் நாசம் செய்யப்பட்டான்.
பகவானே, பொதுவாக மக்கள் நீண்ட ஆயுளையும், செல்வத்தையும், சுகபோகங்களையும் அடையும் பொருட்டு மேலுலகங்களுக்கு ஏற்றம் பெற விரும்புகின்றனர். என் தந்தையின் செயல்களின் மூலம் இவற்றையெல்லாம் நான் கண்கூடாகக் கண்டேன். என் தந்தை கோபாவேசத்துடன் தேவர்களைப் பார்த்து அட்டகாசமாகச் சிரித்தபொழுது, அவரது புருவங்களின் நெறிவுகளைக் கண்டதாலேயே உடனே அவர்கள் முறியடிக்கப்பட்டனர். இருப்பினும் மிகவும் பலசாலியான என் தந்தை ஒரு நொடியில் உங்களால் முற்றிலும் முறியடிக்கப்பட்டார்.
பதம் 7.9.24
தஸ்மாத் ஆமூஸ் தனு-ப்ருதம் அஹம் ஆசிஷோ ‘க்ஞ
ஆயு: ஸ்ரியம் விபவம் ஐந்ரியம் ஆவிரிஞ்ச்யாத்
நேச்சாமி தே விலுலிதான் உருவிக்ரமேண
காலாத்மனோபனய மாம் நிஜ-ப்ருத்ய-பார்ஸ்வம்
தஸ்மாத்- ஆகவே; அமூ:- அவை எல்லாம் (செல்வங்கள்); தனு- ப்ருதாம்-ஜட உடல்களைப் பெற்றுள்ள ஜீவராசிகளின் தொடர் பான; அஹம் – நான்; ஆசிஷ: அக்ஞ:-அத்தகைய வரங்களின் பலன் களை நன்கு அறிந்துள்ள; ஆயு:- நீண்ட ஆயுள்: ஸ்ரியம் பௌதிக செல்வங்கள்; விபவம்-செல்வாக்கு மற்றும் பெருமைகள்: ஐந்ரியம்- எல்லாம் புலன் நுகர்வுக்குரியவையே; ஆவிரிஞ்சயாத்-பிரம்மதேவர் முதல் (சிறு எறும்பு வரை); ந – இல்லை: இச்சாமி-நான் விரும்பு கிறேன்; தே-உங்களால்; விலுலிதான் முடிவுக்குட்பட்ட; உரு. விக்ரமேண மிகவும் சக்தி வாய்ந்தவரான; கால-ஆத்மனா-காலத் தத்துவத்தின் தலைவர் என்ற முறையில்; உபனய-அன்புடன் எடுத்துச் செல்லுங்கள்: மாம்-என்னை; நிஜ-ப்ருத்ய-பார்ஸ்வம்-உங்களிடம் விசுவாசமுள்ள சேவகர்களாகிய உங்களுடைய பக்தர்களின் சகவாசத்திற்கு
எனதருமை பகவானே, பிரம்மதேவர் முதல் எறும்பு வரையுள்ள எல்லா ஜீவராசிகளாலும் அனுபவிக்கப்படும் இகலோக ஐசுவரியம், யோக சித்தி, நீண்ட ஆயுள் முதலான பௌதிக சுகபோகங்களைப் பற்றிய முழுமையான அனுபவத்தை இப்பொழுது நான் பெற்றுள்ளேன். சக்திவாய்ந்த காலமாக இருந்து கொண்டு இவற்றையெல்லாம் நீங்கள் அழித்து விடுகிறீர்கள். ஆகவே, நான் பெற்ற அனுபவத்தின் காரணமாக, இவற்றை அடைவதில் எனக்கு விருப்பமில்லை. பகவானே, உங்களுடைய தூய பக்தரின் சகவாசத்தில் என்னை வைத்து, அவருடைய உண்மையான ஒரு சேவகனாக இருந்து அவருக்கு தான் சேவை செய்ய எனக்கு அருள் புரிவீராக.
பதம் 7.9.25
குத்ராசிஷ: ஸ்ருதி-ஸுகா ம்ருகத்ருஷ்ணி-ரூபா:
க்வேதம் கலேவரம் அசேஷ-ருஜாம் விரோஹ:
நிர்வித்யதே ந து ஜனோ யத் அபீதி வித்வான்
காமானலம் மது-லவை: சமயன் துராபை:
குத்ர-எங்கே;ஆசிஷ:-ஆசீர்வாதங்கள்;ஸ்ருதி-ஸுகா:- காதுகளைக் குளிர வைக்கும்; மருகத்ருஷ்ணி-ரூபா:- பாலைவனத்திலுள்ள கானல்நீரைப் போன்றதே; க்வ – எங்கே; இதம்- இந்த; கலேவரம்-உடல்;அசேஷ-எண்ணற்ற; ருஜாம்-வியாதிகளை விரோஹ:-உற்பத்தி செய்யும் இடம்; நிர்வித்யதே – திருப்தியடைகிறது; ந -இல்லை; து-ஆனால்; ஜன:-பொதுவாக மக்கள்; யத் -அபி – என்ற போதிலும்; இதி – என்று; வித்வான் – பெயரளவேயான கற்றறிந்த தத்துவவாதிகள். விஞ்ஞானிகள் மற்றும் அரசியல் வாதிகள்; காம -அனலம்- காமத் தீயை; மது-லவை:- தேன் துளிகளால் (மகிழ்ச்சியால்); சமயன் – கட்டுப்படுத்துதலை; துராபை:-அடைவது மிகக் கடினம்.
இந்த ஜட உலகில் ஒவ்வொரு ஜீவராசியும், பாலைவனத்திலுள்ள கானல் நீர் போன்ற வருங்கால மகிழ்ச்சியையே விரும்புகிறான். பாலைவனத்தில் நீரேது? அதாவது இந்த ஜட உலகில் மகிழ்ச்சியேது? இந்த உடலைப் பொறுத்தவரை இதன் மதிப்பென்ன? இது பல்வேறு நோய்களுக்குப் பிறப்பிடம், அவ்வளவே. பெயரளவேயான தத்துவவாதிகளும், விஞ்ஞானிகளும், அரசியல்வாதிகளும் இதை நன்கறிவர் இருப்பினும் தற்காலிகமான இன்பத்தையே இவர்கள் நாடுகின்றனர். மகிழ்ச்சியை அடைவது மிகக் கடினம். ஆனால் புலன்களைக் கட்டுப்படுத்தமுடியாத காரணத்தால், பெயரளவேயான இந்த பௌதிக மகிழ்ச்சியின் பின்னால் ஓடும் இவர்கள், சரியான ஒரு முடிவுக்கு வருவதேயில்லை.
பதம் 7.9.26
க்வாஹம் ரஜ:-ப்ரபவ ஈச தமோ ‘திகே ‘ஸமின்
ஜாத: ஸுரேதர-குலே க்வ தாவனுகம்பா
ந ப்ரஹ்மணோ ந து பவஸ்ய ந வை ரமாயா
யன் மே ‘ர்பித: சிரஸி பத்ம-கர: ப்ரஸாத:
க்வ-எங்கே; அஹம்-நான்; ரஐ-ப்ரபவ:-ரஜோ குணம் நிறைந்த ஒரு உடலில் பிறந்துள்ள; ஈச – பகவானே; தம:-தமோ குணம்; அதிகே- அதிகமாக இருக்கும்; அஸ்மின் – இதில்; ஜாத:-பிறந்த; ஸுர-இதர-குலே-(பக்தர்களுக்குக் கீழான) அசுர குலத்தில், க்வ-எங்கே; தவ-உங்களுடைய; அனுகம்பா- காரணமற்ற கருணை; ந – இல்லை; ப்ரஹ்மன:- பிரம்மதேவரின்; ந -இல்லை; து-ஆனால் பவஸ்ய-சிவபெருமானின்; ந – இல்லை; வை-கூட; ரமாயா:-லக்ஷ்மி தேவியின்; யத் – அந்த; மே-என்னுடைய; அர்பித – வைக்கப்பட்டப் விரஸி-தலைமேல்; பத்ம-கர:-தாமரைக்கை; ப்ரஸாத:- கருணையின் அடையாளமாகிய.
பரமபுருஷரே, தமோகுணம் மிக்கதும், ரஜோகுணம் குடிகொண்டதுமான, இந்த அசுர குடும்பத்தில் பிறந்த நான் எங்கே? பிரம்மதேவருக்கும், சிவபெருமானுக்கும், லக்ஷ்மிதேவிக்கும் கூட அளிக்கப்படாத, கருணையின் அடையாளமாகிய உங்களுடைய தாமரைத் திருக்கரத்தை என் தலைமேல் வைத்து ஆசீர்வதித்த உங்களுடைய கருணை எங்கே?
பதம் 7.9.27
நைஷா பராவர-மதிர் பவதோ நனு ஸ்யாஜ்
ஜந்தோர் யதாத்ம-ஸுஹ்ருதோ ஜகதஸ் ததாபி
ஸம்ஸேவயா ஸுரதரோர் இவ தே ப்ரஸாத:
ஸேவானுரூபம் உதயோ ந பராவரத்வம்
ந -இல்லை; ஏஷ-இந்த; பர-அவர-மேலானது அல்லது கீழானது: மதி:-என்ற பாகுபாடு; பவத:-உங்களுடைய; நனு- நிச்சயமாக; ஸ்யாத்-இருக்க முடியும்; ஜந்தோ:-சாதாரண ஜீவராசியின்; யதா-எப்படி; ஆத்ம-ஸுஹ்ருத:- நண்பனகாக இருக்கும் ஒருவனின்; ஜகத:-முழு ஜட உலகின்: ததாபி-இருப்பினும் (நெருக்கமோ அல்லது வேற்றுமையோ அங்கு காணப்படுகிறது); ஸம்ஸேவயா- பக்தனுடைய சேவையின் அளவுக்கேற்ப; ஸுரதரோ: இவ-(பக்தனின் விருப்பத்திற்கேற்ப பலன்களை அளிக்கும்) வைகுண்டத்திலுள்ள கற்பக விருட்சத்தைப் போல்; தே-உங்களுடைய; ப்ரஸாத:-வரம் அல்லது ஆசி; ஸேவா-அனுரூபம்- பகவானுக்கு ஒருவன் செய்யும் சேவைக்கேற்ப; உதய:-தோற்றம்; ந-இல்லை;பர-அவரத்வம்-உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலைகளினால்
உண்டாகும் தராதரம்.
பகவானே, உங்களுக்கு உயர்ந்தது, தாழ்ந்தது என்ற பாகுபாடு இல்லை. ஆகவே ஒரு சாதாரண ஜீவராசியைப் போல் நீங்கள் நண்பர்கள், பகைவர்கள் என்றும், வேண்டியது, வேண்டாதது என்றும் வேற்றுமை பாராட்டுவதில்லை. கற்பக விருட்சம், உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடில்லாமல் ஒருவனுடைய விருப்பத்திற்கேற்ப பலன்களை அளிப்பது போலவே, நீங்களும் ஒருவனுடைய சேவையின் தரத்திற்கேற்ப வரங்களை அளிக்கிறீர்கள்.
பதம் 7.9.28
ஏவம் ஜனம் நிபதிதம் ப்ரபவாஹி-கூபே
காமாபிகாமம் அனு ய: ப்ரபதன் ப்ரஸங்காத்
க்ருவாத்மஸாத் ஸுரார்ஷிணா பகவன் க்ருஹீத்:
ஸோ ‘ஹம் கதம் நு விஸ்ருஜே தவ ப்ருத்ய-ஸேவாம்
ஏவம்- இவ்வாறு; ஜனம்-பொது ஜனங்கள்; நிபதிதம்-இழிவடைந்த ப்ரபவ-பௌதிக வாழ்வின்; அஹி-கூபே-பாம்புகள் நிறைந்த பாழுங்கிணற்றில்; காமா-அபிகாமம் -புலன் பொருட்களை விரும்பி; அனு- பின்பற்றி; ய:- எவனொருவன்; ப்ரபதன் – (இந்நிலையில்) விழுந்து கொண்டிருக்கும்; ப்ரஸங்காத்-தீய சகவாசத்தின் காரணத்தால் அல்லது பௌதிக ஆசைகளுடனான அதிக சகவாசத்தின் காரணத்தால்; க்ருதவா-ஆத்மஸாத்- (ஸ்ரீ நாரதருடையதைப் போன்ற ஆன்மீக குணங்களை அடையுமபடி) என்னைச் செய்து; ஸுர-ரிஷிணா-தேவ ரிஷியால் (நாரதரால்); பகவன்- பகவானே; க்ருஹீத:-ஏற்றுக்கொண்டார்; ஸ:-அவர்; அஹம் – நான்; கதம்- எவ்வாறு; நு- உண்மையில்; விஸ்ருஜே-விடமுடியும்; தவ- தங்களுடைய; ப்ருத்ய-ஸேவாம்-உங்களுடைய தூய பக்தருக்குச் செய்யும் சேவையை.
பகவானே, பரமபுருஷரே, ஒன்றன் பின் ஒன்றாக பௌதிக ஆசைகளுடன் நான் கொண்ட சகவாசத்தின் காரணத்தால், பொது ஜனங்களைப் பின்பற்றி, நானும் சிறிது சிறிதாக பாம்புகள் நிறைந்த பாழுங்கிணற்றில் விழுந்து கொண்டிருந்தேன். ஆனால் உங்களுடைய சேவகரான நாரத முனிவர் அன்புடன் என்னை அவரது சீடராக ஏற்றுக் கொண்டு, உன்னதமான இந்நிலையை அடையும் மார்கத்தை எனக்கு உபதேசித்தார். ஆகவே அவருக்குச் சேவை செய்வதே எனது முதல் கடமை என்பதால், அதை எவ்வாறு நான் விட்டுவிட இயலும்?
பதம் 7.9.29
மத்-ப்ராண-ரக்ஷணம் அனந்த பிதுர் வஸ் ச
மன்யே ஸ்வ-ப்ருத்ய -ரிஷி வாக்யம் ருதம் விதாதும்
கட்கம் ப்ரக்ருஹ்ய யத் அவோசத் அஸத்-விதித்ஸுஸ்
த்வாம் ஈஸ்வரோ மத்-அபரோ ‘வது ஹராமி
மத்-ப்ராண-ரக்ஷணம் -என் உயிரைக் காப்பாற்றுவதில்; அனந்த எல்லையற்றவரே, எண்ணற்ற உன்னத குணங்களின் இருப்பிடமே பிது – என் தந்தையை; சத: ச-கொல்வதிலும்; மன்யே – நான் கருதுகிறேன்; ஸ்வ-ப்ருத்ய -உங்களுடைய தூய சேவகர்களின்; ரிஷி- வாக்யம்-மற்றும் மாமுனிவரான நாரதரின் வார்த்தைகள்; ரிதம்- உண்மை என்பதை; விதாதும்-நிரூபிக்க; கட்கம் – வாளை; ப்ரக்ருஹ்ய-கையிலெடுத்து; யத்-எது; அவோசத்- என் தந்தை கூறினாரோ; அஸத்-விதித்ஸு;-பக்தியற்றவராக செயற்பட விரும்பி; த்வாம்- நீங்கள்; ஈஸ்வர:-எந்த பரம ஈசுவரர்; மத்-அபர:- என்னைத் தவிர வேறு; அவது-அவர் காப்பாற்றட்டும்; கம்-உன் தலையை; ஹராமி-இப்பொழுது துண்டிக்கப்போகிறேன்.
பகவானே, எண்ணற்ற உன்னத குணங்களின் இருப்பிடமே. நீங்கள் என் தந்தை இரண்யகசிபுவைக் கொன்று என்னை அவரது வாளிடமிருந்து காப்பாற்றினீர்கள். அவர் என்னிடம் “என்னைத் தவீர வேறு பரம ஈசுவரன் இருந்தால் உன்னைக் காப்பாற்றட்டும். இப்பொழுது உன் தலையை நான் துண்டிக்கப்போகிறேன்” என்று மிகவும் கோபத்துடன் கூறினார். ஆகவே என்னைக் காப்பாற்றுவதிலும், என் தந்தையைக் கொல்வதிலும், உங்களுடைய பக்தர்களின் வார்த்தைகள் உண்மையென்பதை மெய்ப்பிக்கும் வகையில் தாங்கள் நடந்து கொண்டீர்கள். இதற்கு வேறு காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
பதம் 7.9.30
ஏகஸ் த்வம் ஏவ ஜகத் ஏதம் அமுஷ்ய யத் த்வம்
ஆதி அந்தயோ: ப்ருதக் அவஸ்யஸி மத்யதஸ் ச
ஸ்ருஷ்ட்வா குண-வ்யதிகரம் நிஜ-மாயயேதம்
நானேவ தைர் அவமிதஸ் ததி அனுப்ரவிஷ்ட:
ஏக: – ஒருவர்; த்வம் -நீங்கள்; ஏவ-மட்டுமே; ஜகத்-பிரபஞ்ச தோற்றம்; எதம்- இந்த; அமுஷ்ய-இதன் (முழு பிரபஞ்சத்தின்); யத்- அதனால்; த்வம் -நீங்கள்; ஆதி-ஆரம்பத்தில்; அந்தயோ:-முடிவில்;ப்ருதக்- தனித்தனியாக: அவஸ்யஸி- (காரணமாக) இருக்கிறீர்கள். மத்யத: ச-நடுவிலும் (ஆரம்பத்திற்கும், முடிவிற்கும் நடுவில்); ஸ்ருஷ்ட்வா- படைத்து: குண-வ்யதிகரம்-மூன்று ஜட இயற்கைக் குணங்களின் மாறுதல்கள்:நிஜு-மாயயா- உங்களுடைய புறச் சக்தியினால்; இதம்- இந்த; நானா இவ- பலவகைப்பட்டவை போல்; தை:- அவற்றினால் (குணங்களினால்); அவஸித: – அனுபவம் அடைகிறார்; தத்-அது; அனுப்ரவிஷ்ட: பிரவேசிக்கிறது.
பகவானே, நீங்கள் சிருஷ்டிக்கு முன்பும் இருந்தீர்கள். அழிவுக்குப் பிறகும் இருக்கிறீர்கள். மேலும் ஆரம்பத்திற்கும் முடிவிற்கும் இடையிலுள்ள காப்பவரும் நீங்களே. ஆகவே முழு பிரபஞ்சமாக விரிவடைந்திருப்பவரும் நீங்கள் ஒருவரேயாவிர். இவையெல்லாம் உங்களுடைய புறச் சக்தியின் மூலமாக, மூன்று ஜட இயற்கைக் குணங்களின் செயல் விளைவுகளின் வாயிலாக செய்யப்படுகின்றன. எனவே உள்ளும், புறமும் இருப்பவை அனைத்தும் நீங்களேயாவீர்,
பதம் 7.9.31
த்வம் வா இதம் ஸதஸத் ஈச பவாம்ஸ் ததோ ‘ன்யோ
மாயா யத் ஆத்ம-பரம-புத்திர் இயம் ஹி அபார்தா
யத் யஸ்ய ஜன்ம நிதனம் ஸ்திதிர் ஈக்ஷணம் ச
தத் வைதத் ஏவ வஸுகாலவத் அஷ்டி-தர்வோ:
த்வம்— நீங்கள்; வா—அல்லது; இதம் – முழு பிரபஞ்சமும்; ஸத்— அஸத்—காரணத்தையும், விளைவையும் உடைய (நீங்களே காரணம் உங்களுடைய சக்தியே விளைவு); ஈச- பகவானே, பரம ஆளுனரே; பவான்-நீங்கள்; தத:-பிரபஞ்சத்திலிருந்து; அன்ய:- பிரிந்திருக்கிறீர்கள் (சிருஷ்டி பகவான் செய்யப்படுகிறது என்றாலும், அதிலிருந்து அவர் பிரிந்திருக்கிறார்); மாயா-தனிப்பட்ட ஒரு சிருஷ்டியாகக் காணப்படும் சக்தி; யத்-எதன்; ஆத்ம-பர-புத்தி:- தன்னுடையது, பிறருடையது என்ற எண்ணம்; இயம்- இந்த: ஹி- நிச்சயம்; அபார்தா—அர்த்தமற்றது (அனைத்தும் நீங்களே என்பதால், “என்னுடையது,” “உன்னுடையது” என்ற கேள்விக்கே இடமில்லை); யத்—எதிலிருந்து:யஸ்ய- எதனுடைய; ஜன்ம-படைப்பு; நிதனம்— அழிவு: ஸ்திதி:- காத்தல்; ஈக்ஷணம்-தோற்றம்; ச-மேலும்; தத் -அது; வா—அல்லது; ஏதத்-இது; ஏவ-நிச்சயமாக; வஸுகாலவத்— -பூமியாக இருப்பதும், அதற்கும் மேலாக, பூமியின் சூட்சுமமான மூலப் பொருளாக (வாசனையாக) இருப்பதும்; அஷ்டி-தர்வோ;- (காரணமான) விதையும், (அதன் விளைவாகிய) மரமும் போல..
பகவானே, பரமபுருஷரே, முழு பிரபஞ்ச சிருஷ்டியும் உங்களாலேயே செய்யப்படுகிறது. பிரபஞ்ச தோற்றமானது உங்களுடைய சக்தியின் ஒரு விளைவாகும், முழ பிரபஞ்சமும் உங்களைத் தவிர வேறொன்றுமில்லை என்றாலும், நீங்கள் அதனிடமிருந்து தனித்திருக்கிறீர்கள். “என்னுடையது “உன்னுடையது” என்ற எண்ணம் நிச்சயமாக ஒருவித மாயையாகும். ஏனெனில், அனைத்தும் உங்களிடமிருந்து தோன்றியவையே என்பதால் அவை உங்களிடமிருந்து வேறுபட்டவையல்ல. உண்மையில் பிரபஞ்ச தோற்றத்திற்கும், உங்களுக்கும் எந்த வேறுபாடும். இல்லை. அழிவும் உங்களால்தான் செய்யப்படுகிறது. பகவானாகிய உங்களுக்கும், பிரபஞ்சத்திற்கும் உள்ள வேறுபாடானது. சூட்சும காரணமான விதை மற்றும் ஸ்தூல தோற்றமான மரம் என்ற உதாரணத்தால் சித்தரிக்கப்படுகிறது.
பதம் 7.9.32
ன்யஸ்யேதம் ஆத்மனி ஜகத் விலயாம்ப-மத்யே
சேஷேத்மனா நிஜ-ஸுகானுபவோ நிரீஹ:
யோகேன மீலித-த்ருக்-ஆத்ம-நிபீத -நித்ரஸ்
துர்யே ஸ்திதோ ந து தமோ ந குணாம்ஸ் ச யுங்கேஷ
ன்யஸ்ய-எறிந்துவிட்டு; இதம்-இது; ஆத்மனி-உங்களுக்குள்ளேயே; ஜகத்-உங்களால் படைக்கப்பட்ட பிரபஞ்சத் தோற்றம்; விலய- அம்ப -மத்யே – எதில் சேமித்து வைக்கப்படும் சக்திபோல் அனைத்தும் பாதுகாக்கப்படுகிறதோ, அந்த காரண சமுத்திரத்தில்; சேஷே -உறங்குவது போல் செயற்படும்; ஆத்மனா-உங்களால்; நிஜ- உங்களுடைய சொந்த; ஸுக—அனுபவ:-ஆனந்தமயமான ஆன்மீக நிலையை அனுபவித்துக் கொண்டு; நிரீஹ:-ஒன்றும் செய்யாதவர் போல் காணப்படும்; யோகேன-யோக சக்தியால்; மீலித -த்ருக்- மூடியது போல் காணப்படும் கண்கள்: ஆத்ம -உங்களுடைய ஒரு தோற்றத்தினால்; நிபீத-தடுத்த; நித்ர:-யாருடைய உறக்கம்; துர்யே- உன்னத நிலையில்; ஸ்தித:—(நீங்கள்) இருந்து கொண்டு; ந -இல்லை: து-ஆனால்; தம:-பௌதிகமாக உறக்க நிலை; ந -இல்லை; குணான்—பௌதிக குணங்களில்; ச-மேலும்: யுங்க்ஷே – உங்களை ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள்..
பகவானே, பரமபுருஷரே, அழிவுக்குப்பின் படைப்புச் சக்தியானது, பாதி மூடிய கண்களுடன் உறங்குவது போல் (யோக நித்திரையில் இருப்பது போல்) காணப்படும் உங்களுக்குள் பத்திரப்படுத்தி வைக்கப்படுகிறது. ஆனால் உண்மையில் நீங்கள் ஒரு சாதாரண மனிதனைப் போல் உறங்குவதில்லை. ஏனெனில் நீங்கள் எப்பொழுதும் ஜட சிருஷ்டிக்கு அப்பாற்பட்ட உன்னதமான ஒரு நிலையில் இருக்கிறீர்கள். அந்நிலையில் நீங்கள் எப்பொழுதும் உன்னத ஆனந்தத்தை அனுபவிக்கிறீர்கள். காரணோதகசாயி விஷ்ணுவாக, பௌதிக பொருட்களால் தொடப்படாதவராக, உங்களுடைய உன்னதமான நிலையில் இருக்கிறீர்கள். நீங்கள் உறங்குவதுபோல் காணப்பட்டாலும், இந்த உறக்கம் அறியாமையில் உறங்குவதிலிருந்து வேறுபட்டதாகும்.
பதம் 7.9.33
தஸ்யைவ தே வபுர் இதம் நிஜ-கால- சக்த்யா
ஸஞ்சோதித-ப்ரக்குதி-தர்மண ஆத்ம-கூடம்
அம்பஸி அனந்த-சயனாத் விரமத்- ஸமாதேர்
நாபேர் அபூத் ஸ்வ-கணிகா- வடவன் – மஹாப்ஜம்
தஸ்ய-அந்த பரமபுருஷருடைய; ஏவ -நிச்சயமாக; தே-உங்களுடைய; வபு:-பிரபஞ்ச உடல் (விஸ்வ ரூபம்); இதம்-இந்த (பிரபஞ்சம்); நிஜ- கால – சக்திமிக்க காலத் தத்துவத்தினால்; ஸ்ஞ்சோதித-கிளர்ச்சி செய்யப்பட்டு: ப்ரக்ருதி-தர்மண:-யாரால் முக்குணங்கள்: ஆத்ம- கூடம் -உங்களுக்குள் செயலற்றுகிடக்கும்; அம்பஸி-காரண ஜலத்தில்; அனந்த-சயனாத்—(உங்களுடைய மற்றொரு அம்சமான) அனந்தன் என்ற படுக்கையிலிருந்து; விரமத்— ஸமாதே:-சமாதியிலிருந்து (யோக நித்திரையிலிருந்து) எழுந்ததும்; நாபே:- நாபியிலிருந்து: அபூத் -தோன்றியது; ஸ்வ-கணிகா—விதையிலிருந்து; வட-வத்-பெரிய ஆலமரம் போல் மஹா-அப்ஜம்- உலகங்களடங்கிய பெரிய தாமரையும் (அவ்வாறே வளர்ந்தது).
இந்த பிரபஞ்ச தோற்றம் அல்லது ஜட உலகம் கூட உங்களுடைய உடலேயாகும். இந்த மொத்த ஜடப்பிண்டமானது உங்களுடைய ஆற்றல் மிக்க சக்தியான கால-சக்தியினால் கிளர்ச்சியூட்டப்படுகிறது. இவ்வாறாக மூன்று ஜட இயற்கைக் குணங்கள் தோன்றுகின்றன. நீங்கள் அனந்த சேஷன் எனும் படுக்கையிலிருந்து எழுந்ததும், உங்களுடைய நாபியிலிருந்து உன்னதமான ஒரு சிறு விதை உற்பத்தி செய்யப்படுகிறது. சிறு விதையிலிருந்து பெரிய ஆலமரம் வளர்வது போலவே, இந்த விதையிலிருந்துதான் பிரும்மாண்டமான பிரபஞ்சத்தைக் கொண்ட தாமரை மலர் தோன்றியது.
பதம் 7.9.34
தத்-ஸம்பவ: கவிர் அதோ ‘ன்யத் அபஸ்யமானஸ்
த்வம் பீஜம் ஆத்மனி ததம் ஸ பஹிர் விசிந்த்ய
நாவிந்த்த் அப்த-சதம் அப்ஸு நிமஜ்ஜமானோ
ஜாதே ‘ங்குரே கதம் உ ஹோபலபேத பீஜம்
தத் – ஸம்பவ:-தாமரைப் பூவிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டவர்; கவி:-படைப்பின் சூட்சும காரணத்தைப் புரிந்து கொள்ளக் கூடியவரான அவர்(பிரம்மதேவர்); அத:- அதிலிருந்து (தாமரையிலிருந்து);அன்யத் -வேறெதையும் ; அபஸ்யமான: -காண முடியவில்லை; த்வாம்-நீங்கள்; பீஜம்-தாமரைக்குக் காரணமான; ஆத்மனி- தனக்குள்ளேயே; தத – விரிவடைந்து; ஸ:-அவர் (பிரம்மதேவர்); பஹி: விசிந்த்ய-வெளியில் இருப்பதாகக் கருதி; ந-இல்லை; அவிந்தத்- (உங்களை) புரிந்து கொண்டார்; அப்த—சதம்-நூறு தேவ ஆண்டுகளுக்கு;- அப்ஸு- நீருக்குள்; நிமஜ்ஜமான:- மூழ்கிச் சென்று; ஜாதே அங்குரே-விதை முளைத்து கொடியாக வளரும்பொழுது; கதம்- எவ்வாறு; உஹ- பசுவானே; உபலபேத-ஒருவனால் காண முடியும்: பீஜம்-முன்பே முளைத்து வளர்ந்துவிட்ட விதையை.-தேவர்களுக்கு ஒரு நாள் நமக்கு ஆறு மாதங்களுக்குச் சமமாகும்.
அப்பெரிய தாமரைப் பூவிலிருந்து பிரம்மா உற்பத்தி ஆனார். ஆனால் நிச்சயமாக பிரம்மாவால் அந்த தாமரையைத் தவிர வேறெதையும் காண இயலவில்லை. ஆகவே, நீங்கள் வெளியில் இருப்பதாகக் கருதிய பிரம்மதேவர், நீருக்குள் மூழ்கி, நூறு ஆண்டுகாலமாக அந்த தாமரையின் பிறப்பிடத்தை அறிய முயன்றார். ஆனால் விதையானது முளைத்த பிறகு மீண்டும் அந்த விதையைக் காண முடியாது என்பதால், உங்களைப் பற்றி அவரால் எதையுமே தெரிந்து கொள்ள இயலவில்லை.
பதம் 7.9.35
ஸ து ஆத்ம-யோனீர் அதிவிஸ்மித ஆஸ்ரிதோ ‘ப்ஜம்
காலேன தீவ்ர-தபஸா பரிசுத்த-பாவ:
த்வாம் ஆத்மனீச புவி கந்தம் இவாதிஸுக்ஷ்மம்
பூதேந்ரியாசயமயே விததம் ததர்ச
ஸ:-அவர் (பிரம்மா); து-ஆனால்; ஆத்ம-யோனி:-ஒரு தாய் இல்லாமல் பிறந்தவரான (நேரடியாக தந்தையான பகவான் விஷ்ணுவால் பெற்றெடுக்கப்பட்டவரான); அதி-விஸ்மித (தன் பிறப்பின் மூலத்தை அறியாது? மிகவும் ஆச்சரியமடைந்தார்; ஆஸ்ரித- இருந்துகொண்டு;அப்ஜம்- தாமரைமேல்; காலேன -காலப்போக்கில்; தீவ்ர-தபஸா- கடுந்தவங்களினால்; பரிசுத்த-பாவ:முற்றிலும் பரிசுத்தமடைந்தவராய்; த்வாம்—நீங்கள் ; ஆதிமனி – அவரது உடலிலும், உயிரிலும்: ஈச-பகவானே; புவி – பூமியில்: கந்தம்-வாசனை: இவ-போல்; அதி-ஸுக்ஷ்மம் மிகவும் சூட்சுமமான; பூத-இந்திய-பௌதிக மூலப்பொருட்கள் மற்றும் புலன்களாலானது; ஆசய- மயே-மற்றும் ஆசைமயமானது (மனம்): விததம்-பரவிலிருப்பதை; ததர்ச—கண்டார்.
தாயில்லாமல் பிறந்ததால் ஆத்ம-யோனி என்று புகழுப்படும் பிரம்மதேவர் தன் பிறப்பை எண்ணி ஆச்சரியமடைத்தார். இவ்வாறாக அவர் அத்தாமரைப் பூவையே தஞ்சமடைந்தார். அங்கு பல நூற்றுக் கணக்கான ஆண்டுகள் கடுந்தவமிருந்து பரிசுத்தமடைந்தார். பிறகு, வாசனையானது மிகவும் சூட்சுமமானதாக இருப்பினும் பூமியில் உணரப்படுவது போல், எல்லாக் காரணங்களுக்கும் காரணமாகிய பரமபுருஷர் தன் சொந்த உடல் மற்றும் புலன்கள் முழுவதிலும் பரவியிருப்பதை அவரால் காண முடிந்தது.
பதம் 7.9.36
ஏவம் ஸஹஸ்ர-வதனாங்ரி-சிர: கரோரு-
நாஸாத்ய-கர்ண- நயனாபரணாயுதாட்யம்
மாயாமயம் ஸத்-உபலக்ஷித- ஸன்னிவேசம்
த்ருஷ்ட்வா மஹா-புருஷம் ஆப முதம் விரிஞ்ச:
ஏவம்—இவ்வாறாக; ஸஹஸ்ர- ஆயிரமாயிரம்; வதன-முகங்கள்: அங்ரி—பாதங்கள்; சிர:-தலைகள்; கர-கைகள்; உரு-தொடைகள்: நாஸ -ஆத்ய மூக்குகள் முதலான; கர்ண-காதுகள்; நயன—கண்கள்; ஆபரண- பலவகையான ஆபரணங்கள்; ஆயுத-பலவகையான ஆயுதங்கள்; ஆட்யம்-ஆகியவற்றுடன் கூடியவராய்; மாயா- மயம்- எல்லையற்ற சக்தியினால் செய்து காட்டப்பட்ட; ஸத்-உபலக்ஷித- வெவ்வேறு அடையாளங்களில் தோன்றிய; ஸன்னிவேசம்- ஒன்றாக இணைந்திருப்பதை: திருஷ்ட்வா-கண்டு; மஹா-புருஷம் -பரம புருஷர்: ஆப—அடைந்தார்; முதம்—உன்னத ஆனந்தத்தை; விரிஞ்ச:— பிரம்மதேவர்.
பிறகு நீங்கள் ஆயிரமாயிரம் முகங்களையும், பாதங்களையும், தலைகளையும், கைகளையும், தொடைகளையும், மூக்குகளையும், காதுகளையும் மற்றும் கண்களையும் பெற்றிருப்பதை பிரம்மதேவரால் காண முடிந்தது. நீங்கள் மிகவும் அழகாக உடையணிந்தும், பலவகையான ஆபரணங்கள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தீர்கள். மேலும் உங்களுடைய உருவமும், அடையாளங்களும் உன்னதமானவையாக இருப்பதையும், உங்கள் கால்கள் கீழுலகங்களைத் தொட்டுக் கொண்டிருப்பதையும் அவர் கண்டார். உங்களை இந்த விஷ்ணு ரூபத்தில் கண்ட பிரம்மதேவர் உன்னத ஆனந்தத்தை அடைந்தார்.
பதம் 7.9.37
தஸ்மை பவான் ஹய-சிரஸ் தனுவம் ஹி பிப்ரத்
வேத-த்ருஹாவ் அதிபலௌ மது- கைடபாக்யெள
ஹத்வானயச் ச்ருதி-கணாம்ஸ் ச ரஜஸ் தமஸ் ச
ஸத்வம் தவ ப்ரியதமாம் தனும் ஆமனந்தி
தஸ்மை-பிரம்மதேவரிடம்; பவான்-நீங்கள்; ஹய-சிர:-குதிரை யின் தலையும், கழுத்தும் கொண்ட, தனுவம்-அவதாரம்; ஹி- உண்மையாகவே; பிப்ரத்-ஏற்றுக் கொண்டு: வேத-த்ருஹௌ-வேத நெறிகளுக்கு எதிரான இரு அசுரர்களான;அதி—பலென— மிகவும் சக்திவாய்ந்த; மது-கைடப-ஆக்யெள—மது மற்றும் கைடபன் என்பவர்களை; ஹத்வா-கொன்று; அனயத்— ஒப்படைத்தீர்கள்; ஸ்ருதி –கணான்—எல்லா வேதங்களையும் (சாம, யஜுர், ரிக் மற்றும் அதர்வ);.ச-மேலும்; ரஜ: தம: ச-ரஜோ மற்றும் தமோ குணங்களைக் கொண்ட; ஸத்வம்—உன்னதமான தூய சத்வகுணம்; தவ-உங்களுடைய; ப்ரிய- தமாம் -மிகவும் பிரியமான; தனும்-(ஹயகிரீவ) ரூபத்தை; ஆமனந்தி—அவர்கள் கௌரவிக்கின்றனர்.
பகவானே, நீங்கள் குதிரைத் தலையுடன் ஹயகிரீவராகத் தோன்றிய பொழுது, ரஜோ மற்றும் தமோ குணங்கள் நிரம்பிய மது, கைடபன் என்ற இரு அசுரர்களைக் கொன்று, வேத ஞானத்தை பிரம்மதேவரிடம் ஒப்படைத்தீர்கள். இதனால் சிறந்த முனிவர்கள் எல்லோரும் உங்களுடைய ரூபங்களை பௌதிக குணங்களால் தொடப்படாத திவ்ய ரூபங்களாக ஏற்றுக் கொள்கின்றனர்.
பதம் 7.9.38
இத்தம் ந்ரு-திர்யக்-ரிஷி-தேவ- ஜஷாவதாரைர்
லோகான் விபாவயஸி ஹம்ஸி ஜகத் ப்ரதீபான்
தர்மம் மஹா-புருஷ பாஸி யுகானுவ்ருத்தம்
சன்ன: கலௌ யத் அபவஸ் த்ரி-யுகோ ‘த ஸ த்வம்
இத்தம்—இவ்விதமாக; ந்ரு-ஒரு மனிதனைப் போல் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணராக அல்லது பசுவான் ராமச்சந்திரராக); தீர்யக்- (பன்றி முதலான) மிருகங்களைப் போல்; ரிஷி.-சிறந்த ரிஷியாக (பரசுராமர்); தேவ—தேவர்களாக; ஜஷ-(மீன், அமை போன்ற) கடல்வாழ் இனமாக; அவதாரை:-இத்தகைய வேறுபட்ட அவதாரங்களில்;லோகான்— எல்லாக் கிரக அமைப்புக்களையும்; விபாவயஸி—நீங்கள். காப்பாற்றுகிறீர்கள்; ஹம்ஸி(சிலசமயம்) நீங்கள் வதம் செய்கிறீர்கள்; ஜகத்ப்ரதீபான்—இவ்வுலகில் எப்பொழுதும் தொல்லைகள் கொடுப்பவர்களை; தர்மம்- தர்ம நெறியை; மஹா-புருஷ மகாபுருஷரே; பாஸி – நீங்கள் காப்பாற்றுகிறீர்கள்; யுக-அனுவிருத்தம்-வெவ்வேறு யுகங்களுக்கேற்ப; சன்ன:-மூடப்பட்டவராக; கலென -கலியுகத்தில்; யத்—எது; அபவ:-இருந்ததோ (எதிர்காலத்திலும் இருக்குமோ); த்தி—க:-திரியுகம் எனப்படுகிறீர்கள்; அத-ஆகவே; ஸ;அதே புருஷராகிய; த்வம்—நீங்கள்.
இவ்வாறாக பகவானே, நீங்கள் ஒரு மனிதராகவும், மிருகமாகவும், சிறந்த முனிவராகவும், தேவராகவும், மீனாகவும், ஆமையாகவும் வெவ்வேறு அவதாரங்களில் தோன்றுகிறீர்கள். இவ்விதமாக நீங்கள் அசுர சக்திகளைக் கொன்று, வெவ்வேறு கிரக அமைப்புக்களிலுள்ள முழு சிருஷ்டியையும் பராமரிக்கிறீர்கள். பகவானே வெவ்வேறு யுகங்களுக்கேற்ப சமயக் கோட்பாடுகளை நீங்கள் காத்து வருகிறீர்கள். ஆனால் இக்கலியுகத்தில் நீங்கள் உங்களைப் பரமபுருஷராக காட்டிக் கொள்வதில்லை. ஆகவே நீங்கள் த்ரியுக, மூன்று யுகங்களில் தோன்றுபவர் என்று அறியப்படுகிறீர்கள்.
பதம் 7.9.39
நைதன் மனஸ் தவ கதாஸு விகுண்ட-நாத
ஸம்ப்ரீயதே துரித-துஷ்டம் அஸாது தீவ்ரம்
காமாதுரம் ஹர்ஷ-சோக- பயைஷணார்தம்
தஸ்மின் கதம் தவ கதிம் விம்ருசாமி தீன:
ந-நிச்சயமாக இல்லை; ஏதத்-இது; மன:-மனதை; தவ- உங்களுடைய; கதாஸு—உன்னதமான கதைகளில்; விகுண்ட நாத-கவலையே இல்லாத வைகுண்டத்தின் நாயகரே; ஸம்ப்ரீயதே- சாந்தமடைவதோ அல்லது விரும்புவதோ; துரித-பாவச் செயல்களினால்; துஷ்டம்- கறை படித்த: அஸாது-நேர்மையற்ற: தீவ்ரம்— கட்டுப்படுத்துவதற்கு மிகக் கடினமாக; காம–ஆதுரம்-பலவித ஆசைகளும், காம மனோபாவங்களும் நிறைந்த: ஹர்ஷ-சோக- சிலசமயம் இன்பத்தினாலும், சிலசமயம் துன்பத்தினாலும்; பய— சிலசமயம் பயத்தினாலும்; ஏஷணா-விரும்புவதாலும்; ஆர்தம்- துன்புறும்; தஸ்மின்—அந்த மனோ நிலையில்: கதம் – எப்படி; தவ-உங்களுடைய; கதிம்-திவ்யமான செயல்களை; விம்ருசாமி- நான் கருத்திற் கொண்டு, புரிந்து கொள்ள முயலுவேன்; தீன:-மிகவும் இழிவடைந்தவனும், எளியவனுமான.
கவலையே இல்லாத வைகுண்ட லோகங்களின் நாயகரே, என் மனம் சிலசமயம் பெயரளவேயான இன்ப துன்பங்களில் ஆழ்ந்து, மிகவும் பாவமானதாகவும், காம வேட்கையுடையதாகவும் இருக்கிறது. மேலும் இது வருத்தமும், பயமும் நிறைந்ததாகவும், எப்பொழுதும் அதிகமான பணத்தையே நாடுவதாகவும் இருக்கிறது. இவ்வாறு மிகவும் மாசு படிந்ததாக உள்ள இது, உங்களைப் பற்றிய கதைகளில் நாட்டம் கொள்வதேயில்லை. ஆகவே நான் மிகவும் இழிவடைந்தவனாகவும், எளியவனாகவும் இருக்கிறேன். இந்நிலையிலுள்ள என்னால் எவ்வாறு உங்களுடைய செயல்களைப் பற்றி விவாதிக்க இயலும்?
பதம் 7.9.40
ஜிஹ்வைகதோ ‘ச்யுத விகர்ஷதி மாவித்ருப்தா
சிஸ்னோ ‘ன்யதஸ் த்வக்-உதரம் ஸ்ரவணம் குதஸ்சித்
க்ராணோ ‘ன்யதஸ் சபல-த்ருக் க்வ ச கர்ம-சக்திர்
பஹ்வ்ய: ஸபத்ன்ய இவ கேஹ- பதிம் லுனந்தி
ஜிஸ்வா-நாக்கு ; ஏகத:-ஒருபுறம்; அச்யுத—இழிவற்ற பகவானே; விகர்ஷதி-கவர்ந்திழுக்கிறது; மா-என்னை; அவித்ருப்தா- திருப்தி யடையாததால்; அவிக்குப்தா-திருப்தியடையாததால்; சிஸ்ன:- பாலுறுப்புகள்: அன்யத:- மற்றொருபுறம்; தீவக்- சருமம் (மென்மையான பொருளை தொடுவதற்கு); உதரம்-வயிறு (பலவகையான உணவுகளுக்கு); ஸ்ரவணம்-காது (இனிய இசையைக் கேட்பதற்கு); அன்யத:–மேலும் வேறொரு புறத்திற்கு: சபல -திருக் -சபலமுள்ள பார்வை: க்வ ச-எங்கேயோ; கர்ம- சக்தி:- செயற்புலன்கள்; பவ்ய:- பல; ஸ-பத்ன்ய:-சக மனைவிகள்; இவ -போல்; கேஹ-பதிம்- ஒரு குடும்பஸ்தன்; லுனந்தி-அழித்துவிடுகின்றன.
இழிவற்ற பகவானே, என்னுடைய நிலை, பல மனைவிகளை உடைய ஒருவன் அவர்களால் வெவ்வேறு வழிகளில் கவர்ந்து இழுக்கப்படுவதற்கு ஒப்பானதாகும். உதாரணமாக, நாக்கு அறுசுவை உணவுகளால் கவரப்படுகிறது. பாலுறுப்பு கவர்ச்சியான ஒரு பெண்ணுடனான காம சுகத்தை நாடுகிறது. சருமம் தொட்டு அனுபவிக்கக்கூடிய மென்மையான பொருட்களால் கவரப்படுகிறது. வயிறானது நிரம்பி விட்ட பிறகும் இன்னும் உண்ண விரும்புகிறது. காது உங்களைப் பற்றி கேட்க முயலாமல், பொதுவாக சினிமா பாடல்களைக் கேட்க விரும்புகிறது. முகரும் புலனோ வேறொரு புறம் கவரப்பட்டுள்ளது. அமைதியற்ற கண்கள் புலன் நுகர்வுக் காட்சிகளால் கவரப்படுகின்றன. செயற்புலன்கள் வேறு எதனாலோ கவரப்படுகின்றன. இவ்விதமாக நான் மிகவும் தர்ம சங்கடமான ஒரு நிலையில் சிக்கிக் கொண்டிருக்கிறேன்.
பதம் 7.9.41
ஏவம் ஸ்வ-கர்ம-பதிதம் பவ- வைதரண்யாம்
அன்யோன்ய-ஜன்ம-மரணாசன-பீத-பீதம்
பஸ்யஞ் ஜனம் ஸ்வ-பர-விக்ரஹ- வைர-மைத்ரம்
ஹந்தேதி பாரசர பீப்ருஹி மூடம் அத்ய
ஏவம்-இவ்வாறு; ஸ்வ- கர்ம- பதிதம்- சுய கருமங்களால் இழிவடைந்துள்ள; பவ- (பிறப்பு, இறப்பு, மூப்பு, நோய் கொண்ட) இந்த அறியாமை உலகுடன் ஒப்பிடும் பொழுது; வைதரண்யாம்- (மரணதேவனான யமராஜனின் வாயிலுக்கு முன்னால் உள்ள) வைதரணி என்ற நதியில்; அன்ய: அன்ய- ஒவ்வொன்றாக; ஜன்ம-பிறப்பு: மரண – மரணம்; ஆசன- வெவ்வேறு வகையான உணவுகளை உண்ணுதல்; பீத-பீதம் -மிகவும் அஞ்சுவதால்; பஸ்யன்-பார்த்து; ஜனம் -ஜீவராசிகளை; ஸ்வ-தன்னுடைய; பர-மற்றவர்களுடைய; விக்ரஹ—உடலில்; வைர-மைத்ரம்- நட்பும், பகைமையும் கொண்டு; ஹந்த—ஆச்சரியம்; இதி- இவ்விதமாக; பாரசர-மரணமெனும் நதிக்கு அப்புறம் இருப்பவரே; பீப்ருஹி-(இந்த அபாய நிலையிலிருந்து) எங்களைக் காத்தருங்கள்; மூடம்—நாங்கள் ஆன்மீக அறிவற்ற மூடர்கள்; அத்ய-இப்பொழுது (நீங்கள் இங்கு எழுந்தருளியிருப்பதால்).
பகவானே, நீங்கள் எப்பொழுதும் மரணமெனும் நதிக்கு அப்புறத்தில் உன்னதமான நிலையில் இருக்கிறீர்கள். ஆனால் எங்களுடைய சொந்த கர்ம விளைவுகளின் காரணத்தால் இப்புறத்தில் நாங்கள் துன்புறுகிறோம். உண்மையில், இந்த நதிக்குள் விழுந்து கிடக்கும் நாங்கள் பிறப்பு, இறப்பெனும் தொடர்ந்த துன்பத்தை அனுபவித்துக் கொண்டு, உண்ணத்தகாத பொருட்களைப் புசித்துக் கொண்டிருக்கிறோம். அருள்கூர்ந்து இப்பொழுது என்மீதும், துன்பத்திலிருக்கும் மற்றனைவர் மீதும் பார்வையைத் திருப்பி, உங்களுடைய அகாரணமான கருணையினாலும், இரக்கத்தினாலும் எங்களை விடுவித்துக் காத்தருள வேண்டும்.
பதம் 7.9.42
கோ நு அத்ர தே ‘கில-குரோ பகவன் ப்ரயாஸ
உத்தாரணே ‘ஸ்ய பவ-ஸம்பவ- லோப- ஹேதோ
மூடேஷு வை மஹத்-அனுக்ரஹ ஆர்த்த-பந்தோ
கிம் தேன ப்ரிய-ஜனான் அனுலேவதாம் ந:
க:அது என்ன; நு—நிச்சயமாக; அத்ர-இவ்விஷயத்தில்; தே -உங்களுடைய; அகில- குரோ-சிருஷ்டி முழுவதற்கும் பரம ஆன்மீக குருவானவரே; பகவன்-பரமபுருஷரே; ப்ரயாஸ:- முயற்சி: உத்தாணே—இழிவடைந்த இந்த ஆத்மாக்களின் விடுதலைக்காக; அஸ்ய—இதன்; பவ-ஸம்பவ—படைத்தல் மற்றும் காத்தலின்; லோப -மேலும் அழித்தலின்;ஹேதோ:காரணத்தின்; மூடேஷு—இந்த ஜட உலகில் அழுகிக் கொண்டிருக்கும் முட்டாள்களுக்கு;வை-உண்மையில்; மஹத்—அனுக்ரஹ:-பரமனின் கருணை; ஆர்த்த—பந்தோ—துன்புறும் ஜீவராசிகளின் நண்பரே; கிம்–என்ன கஷ்டம்; தேன—அதில்; தே- உங்களுடைய; ப்ரிய-ஜனான்—பிரியமானவர்களை (பக்தர்களை); அனுஸேவதாம்—சேவை செய்வதில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ள; ந;- (அவ்வாறு ஈடுபட்டுள்ள) எங்களைப் போன்றவர்களை.
பகவானே, பரமபுரஷரே, அகில லோகங்களுக்கும் ஆதி குருவே, பிரபஞ்ச விவகாரங்களை நடத்தும் உங்களுக்கு, உங்களுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள இழிவடைந்த ஆத்மாக்களை மீட்பதில் என்ன கஷ்டம் உள்ளது? நீங்கள் துன்புறும் மனித குலம் முழுவதற்கும் நண்பராவீர். மகா-புருஷர்களுக்கு அறிவற்ற மூடர்களிடம் கருணை காட்டுவது அவசியமல்லவா! ஆகவே, உங்களுடைய சேவையில் ஈடுபட்டுள்ள எங்களைப் போன்றவர்களிடம், உங்களுடைய காரணமற்ற கருணையைக் காட்டுவீர்கள் என்று நான் நினைக்கிறேன்.
பதம் 7.9.43
தைவோத்விஜே பர துரத்யய- வைதரண்யாஸ்
த்வத்-வீர்ய-காயன-மஹாம்ருத-மக்ன-சித்த:
சோசே ததோ விமுக-சேதஸ இந்ரியார்த்த-
மாயா-ஸுகாய பரம் உத்வஹதோ விமூடான்
ந-இல்லை; ஏவ- நிச்சயமா; உத்விஜே -நான் அஞ்சுகிறேன்: பர-பரமனே; ; துரத்யய-கடக்க முடியாத; வைதரண்யா-ஜட உலகின் நதியாகிய வைதரணியின்; த்வத்-வீர்ய-உங்களுடைய மகிமைகள் மற்றும் செயல்களை; காயன-பாடுவதிலிருந்து அல்லது விநியோகிப்பதிலிருந்து; மஹா-அம்குத-அழுவது போன்ற ஆன்மீக ஆனந்தத்தின் பெருங்கடலில்; மக்ன-சித்த:-மூழ்கியிருக்கும் மனதை; சோசே- நான் வருந்துகிறேன்; தத:-அதிலிருந்து; விமுக- சேதஸ:-கிருஷ்ண உணர்வற்ற மூடர்களும், கயவர்களும்; இந்ரிய-அர்த்த-புலன் நுகர்வில்; மாயா- ஸுகாய -தற்காலிகமான மாயா சுகத்திற்காக; பரம்- (ஒருவனது குடும்பம், சமூகம், தேசம் ஆகியவற்றைப் பராமரிப்பது மற்றும் அதற்கான விரிவான ஏற்பாடுகளைச் செய்வதின்) பொய்யான சுமை அல்லது கடமை; உத்வஹத:-(இந்த ஏற்பாட்டிற்காக பெரிய திட்டங்களைத் தீட்டுவதன் மூலம்) உயர்த்துபவர்கள்; விமூடான்- இவர்களனைவரும் முட்டாள்களும், சுயவர்களுமே ஆவர் என்றாலும் (இவர்களைப் பற்றியும் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்).
மகா புருஷர்களில் மிகச் சிறந்தவரே, நான் பௌதிக வாழ்வைக் குறித்து சிறிதும் அஞ்சவில்லை. ஏனெனில் நான் எங்கே இருந்தாலும் உங்களுடைய மகிமைகள் மற்றும் செயல்களைப் பற்றிய சிந்தனையிலேயே முழுமையாக ஆழ்ந்திருக்கிறேன். பௌதிக சுகத்திற்காகவும், தங்களுடைய குடும்பம், சமூகம், தேசம் ஆகியவற்றிற்காகவும் பெரிய பெரிய திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கும் முட்டாள்களையும், கயவர்களையும் பற்றித்தான் நான் கவலைப்படுகிறேன்.
பதம் 7.9.44
ப்ராயேண தேவ முனய: ஸ்வ-விமுக்தி-காமா
மெளனம் சரந்தி விஜனே ந பரார்த-நிஷ்டா:
நைதான் விஹாய க்ருபணான் விமுமுக்ஷ ஏகோ
நான்யம் த்வத் அஸ்ய சரணம் ப்ரமதோ ‘நுபஸ்யே
ப்ராயேண-பெரும்பாலும்; தேவ -பகவானே; முனய:-சிறந்த முனிவர்கள்; ஸ்வ-சொந்த; விமுக்தி -காமா:-இந்த ஜட உலகிலிருந்து விடுதலையடைய ஆசைப்படுகின்றனர்; மௌனம்— மௌனமாக; சரந்தி—(பௌநிகவாதிகளின் செயல்களுடன் தொடர்பில்லாத இமயத்தின் காடுகளைப் போன்ற இடங்களில்) சஞ்சரிக்கின்றனர்; விஜனே-தனிமையான இடங்களில்; ந-இல்லை; பர-அர்த்த-நிஷ்டா: -கிருஷ்ண உணர்வைக் கொடுப்பதன் மூலம் மற்றவர்களுக்கு நன்மை செய்வதில் ஆர்வம் கொண்டுள்ளனர்; ந- இல்லை; ஏதான்.-இவர்களை; விஹாய-விட்டுவிட்டு: க்ருபணான்- மூடர்களையும், கயவர்களையும்; விமுமுக்ஷே-நான் முக்தியடைந்து பரமபதத்தை அடைய விரும்புகிறேன்; ஏக:-தனியாக; ந – இல்லை; அன்யம்- வேறு; த்வத்-ஆனால் உங்களைத் தவிர; அஸ்ய – இதனுடைய; சரணம் -புகலிடத்தை; ப்ரமத:- பிரபஞ்சம் முழுவதிலும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் ஜீவராசிகளுக்கு; அனுபஸ்யே- நான் காண்கிறேன்.
பகவான் நரசிம்மதேவரே, உண்மையில் பல சிறந்த முனிவர்கள் இங்கிருப்பதை நான் காண்கிறேன். ஆனால் தங்களுடைய சொந்த முக்தியில் மட்டுமே இவர்கள் நாட்டம் கொண்டுள்ளனர். இவர்கள் பெரிய நகரங்களிலும், பட்டணங்களிலும் வாழும் மக்களைப் பற்றி கவலைப்படாமல், மெளன விரதம் பூண்டு தியானம் செய்வதற்காக இமயமலைக்கு அல்லது வனத்திற்குச் செல்கின்றனர். மற்றவர்களைக் கடைத்தேற்றுவதில் இவர்களுக்கு ஆர்வமில்லை. ஆனால் என்னைப் பொறுத்தவரை, தீனர்களான இந்த மூடர்களையும், கயவர்களையும் விட்டுவிட்டு தனியான முக்தியடைவதை நான் விரும்பவில்லை. கிருஷ்ண உணர்வின்றி, உங்களுடைய தாமரைப் பாதங்களின் புகலிடமின்றி ஒருவனால் மகிழ்ச்சியடைய முடியாதென்பதை நானறிவேன். ஆகவே இவர்களை உங்களுடைய தாமரைப் பாதங்களின் புகலிடத்திற்கு திரும்பவும் அழைத்துவர நான் விரும்புகிறேன்.
பதம் 7.9.45
யன் மைதுனாதி-க்ருஹமேதி-ஸுகம் ஹி துச்சம்
கண்டூயனேன கரயோர் இவ துஹ்க-துஹ்கம்
த்ருப்யந்தி நேஹ க்ருபணா பஹு- துஹ்க- பாஜ:
கண்டுதிவன் மனஸிஜம் விஷஹேத் தீர:
யத்—எது (பௌதிக புலன் நுகர்வுக்குரியது); மைதுன – ஆதி-பாலுறவைப் பற்றி பேசுதல், அதைப் பற்றிய புத்தங்களைப் படித்தல், பாலுறவை அனுபவித்தல் போன்றவை; க்ருஹமேதி- ஸுகம்- குடும்பம், சமூகம், நட்பு போன்றவைகளிடமுள்ள பற்றின் அடிப்படையில் வரும் எல்லா வகையான பௌதிக இன்பமும்; ஹி-உண்மையில்: துச்சம்- துச்சமானவையாகும்; கண்டூயனேன- அரிப்புக்கு; கரயோ: (அரிப்பைப் போக்கிக் கொள்ள) இருகைகளின்; இவ-போல்; துஹ்க—துஹ்கம்—(இத்தகைய அரிப்புடைய புலன் நுகர்வுக்குப் பிறகு ஒருவன் புகுத்தப்படும்) வெவ்வேறு வகைவான துக்கங்கள்; திருப்யந்தி-திருப்தியடைகிறான்; ந-ஒருபோதும் இல்லை; இஹ-பௌதிக புலன் நுகர்வில்; க்ருபணா-மூடர்கள்: பஹு-துஹ்க-பாஜ:-பலவகையான பௌதிக துன்பங்களுக்கு ஆளாகி; கண்டூதி—வத்- இத்தகைய அரிப்பிலிருந்து ஒருவனால் கற்றுக் கொள்ள முடியுமானால்; மனஸிஜம்—எது வெறும் மனக் கற்பனையோ (உண்மையில் மகிழ்ச்சி என்பதே இல்லை); விஷஹேத(இத்தகைய அரிப்பை) பொறுத்துக் கொள்கிறானோ; தீர:-அவனால் மிகவும் பக்குவமுடையவனாக, நிதானமுடையவனாக (ஆக முடியும்).
உடலுறவு வாழ்வானது, அரிப்பைப் போக்க கைகளை ஒன்றோடொன்று தேய்ப்பதற்கு ஒப்பாகும். ஆன்மீக அறிவு இல்லாத பெயரளவேயான கிருஹஸ்தர்கள் (க்ருஹமேதீ), இந்த அரிப்புதான் மிக உயர்ந்த இன்பம் என்று எண்ணுகின்றனர். ஆனால் உண்மையில் அதுவே துன்பத்திற்கு பிறப்பிடமாகும். பிராமணர்களுக்கு நேர் எதிரானவர்களான முட்டாள்கள் (க்ருபணர்கள்), தொடர்ந்து புலன் சுகத்தினாலும் திருப்தியடைவதில்லை. ஆனால் புத்தி வன்மை உடையவர்களும், இந்த அரிப்பைப் பொறுத்துக் கொள்பவர்களுமான தீரர்கள், முட்டாள்களுக்கும், கயவர்களுக்கும் உரிய துன்பங்களுக்கு ஆளாவதில்லை.
பதம் 7.9.46
மௌன-வ்ரத-ஸ்ருத தபோ ‘த்யயன- ஸ்வ-தர்ம-
வ்யாக்யா-ரஹோ-ஜப-ஸமாதய ஆபவர்க்யா:
ப்ராய: பரம் புருஷ தேது அஜிதேந்ரியாணாம்
வார்தா பவந்தி உத ந வாத்ர து தாம்பிகானாம்
மௌன – மௌனம்; வ்ரத—விரதங்கள்: ஸ்ருத-வேத ஞானம்; தப:-தவம்; அத்யயன-சாஸ்திரங்களைக் கற்றல்; ஸ்வ-தர்ம- வர்ணாஸ்ரம தர்மத்தை நிறைவேற்றுதல்; வ்யாக்யா-சாஸ்திரங்களை விளக்கிக் கூறுவது; ரஹ:-தனிமையான இடத்தில் வாழ்வது; ஜபம்— மந்திர ஜபம்; ஸமாதய:-சமாதியில் இருப்பது; ஆபவர்க்யா-இவை முக்தி வழியில் முன்னேறுவதற்கான பத்து வகையான செயல்களாகும்; ப்ராய:-பொதுவாக; பரம்- ஒரே வழியாகும்; புருஷ—பகவானே;தே- இவையனைத்தும்;து-ஆனால்; அஜித-இந்தியாணாம் —புலன்களைக் கட்டுப்படுத்த முடியாதவர்களின்; வார்தா:-வாழ்வதற்கான வழிகளாக; பவந்தி- இருக்கின்றன; உத- என்று கூறப்படுகிறது; ந-இல்லை; வா- அல்லது; அத்ர—இது சம்பந்தமாக;து-ஆனால்; தாம்பிகனாம்- பொய்யான தற்பெருமை கொண்டவர்களின்.
பரமபுருஷரே, முக்தியடைவதற்குப் பத்து வழிமுறைகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அவை, மௌனம் அனுஷ்டித்தல், விரதங்களை அனுஷ்டித்தல், எல்லா வகையான வேத அறிவையும் சேகரித்தல், தவங்களைச் செய்தல், வேதங்களையும் பிற வேத இலக்கியங்களையும் கற்றறிதல், வர்ணாஸ்ரம-தர்ம கடமைகளை நிறைவேற்றுதல், சாஸ்திரங்களை விளக்கிக் கூறுதல், தனிமையான இடத்தில் வசித்தல், மௌனமாக மந்திரங்களை ஓதுதல் மற்றும் சமாதியில் ஆழ்ந்திருத்தல் என்பனவாகும். வெவ்வேறான இந்த முக்தி வழிகளெல்லாம், பொதுவாக புலன்களை அடக்க முடியாதவர்களுக்குரிய ஜீவனோபாய வழிகளாகவும், பொருளீட்டும் தொழில்களாகவும் மட்டுமே இருக்கின்றன. இத்தகைய மனிதர்கள் பொய்யான தற்பெருமை கொள்வதால், இந்த வழிமுறைகள் வெற்றி அளிக்காமலும் போகக் கூடும்.
பதம் 7.9.47
ரூபே இமே ஸத்-அஸதீ தவ வேத-ஸ்ருஷ்டே
பீஜாங்குராவ் இவ ந சான்யத் அரூபகஸ்ய
யுக்தா: ஸமக்ஷம் உபயத்ர விசக்ஷந்தே தீவாம்
யோகேன வஹ்னிம் இவ தாருஷு நான்யத்: ஸ்யாத்
ரூபே-ரூபங்களில்; இமே-இவ்விரு ; ஸத்—அஸதீ- காரண தவ -உங்களுடைய; வேத -ஸ்ருஷ்டே- வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ள; பீஜ-அங்குரௌ— விதையும், முளையும்; இவ-போல ;ந—இல்லை; ச – கூட; அன்யத்—வேறொன்று; அரூபகஸ்ய-பௌதிக ரூபத்தைப் பெற்றிராத உங்களின்; யுக்தா:-உங்களுடைய பக்தித் தொண்டில் ஈடுபட்டிருப்பவர்கள்; ஸமக்ஷம்—கண்ணெதிரிலேயே; உபயத்ர— (பௌதிகம் மற்றும் ஆன்மீகம் என்ற) இருவழிகளிலும்; விசக்ஷந்தே- உண்மையாகக் காணமுடியும்; த்வாம்-உங்களை; யோகேன — பக்தித் தொண்டு முறையினாலேயே; வஹ்னிம்- நெருப்பு; இவ—போல்: தாருஷு-விறகிலுள்ள; ந—இல்லை; அன்யத:—வேறெந்த வழியாலும்; ஸ்யாத்—சாத்தியமில்லை.
பிரபஞ்சத்திலுள்ள காரண விளைவுகளின் ரூபங்கள் பரமபுருஷருக்குச் சொந்தமானவை என்பதை அதிகாரப்பூர்வமான வேத ஞானத்தின் மூலமாக, ஒருவனால் காண முடியும். ஏனெனில் பிரபஞ்ச தோற்றம் அவருடைய சக்தியாகும். காரணம், விளைவு ஆகிய இரண்டும் பகவானுடைய சக்திகளேயன்றி வேறில்லை. ஆகவே, பகவானே, காரண விளைவுகளை ஆராய்வதன் மூலம் எப்படி விறகில் நெருப்பு ஊடுருவிப் பரவியிருக்கிறது என்பதை அறிவுள்ள ஒருவனால் காண முடிகிறதோ, அப்படியே நீங்கள் எப்படி காரணமாகவும், விளைவாகவும் இருக்கிறீர்கள் என்பதை பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்கள் புரிந்து கொள்கின்றனர்.
பதம் 7.9.48
த்வம் வாயுர் அக்னிர் அவனிர் வியத் அம்பு மாத்ரா:
ப்ராணேந்ரியாணி ஹ்ருதயம் சித் அனுக்ரஹஸ் ச
ஸர்வம் த்வம் ஏவ ஸகுணோ விகுணஸ் ச பூமன்
நான்யத் த்வத் அஸ்தி அபி மனோ-வசஸா நிருக்தம்
த்வம்—நீங்களே(ஆவீர்); வாயு:-காற்று: அக்னி:- நெருப்பு: அவனி: -மண்; வியத்-ஆகாயம்: அம்பு- நீர்; மாத்ரா—புலன் பொருட்கள்; ப்ராண-பிராணவாயு: இந்ரியாணி—புலன்கள்; ஹ்ருதயம் -மனம்; சித்—உணர்வு; அனுக்ரஹ: ச-மற்றும் பொய் அகங்காரம் அல்லது தேவர்கள்; ஸர்வம் -அனைத்தும்; த்வம்-நீங்கள்; ஏவ-மாத்திரமே; ஸ-குண:-முக்குணங்களுடன் கூடிய ஜட இயற்கை; ச-மேலும்; பூமன் -எம்பெருமானே; ந-இல்லை; அன்யத்-வேறு; த்வத்- உங்களைத் தவிர; அஸ்தி-இருக்கிறது; அபி-என்ற போதிலும்; மன:- வசஸா-மனதாலும், வாக்காலும்; நிருக்தம்- தோற்றுவிக்கப்படும். அனைத்தும்.
பரமபுருஷரே, மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய அனைத்தும் உண்மையில் நீங்களே ஆவீர். நீங்களே புலன் உணர்வுப் பொருட்களாகவும், உயிர்க் காற்றுகளாகவும், ஐந்து புலன்களாகவும், மனமாகவும், உணர்வாகவும் மற்றும் பொய் அகங்காரமாகவும் இருக்கிறீர்கள். உண்மையில், ஸ்தூலமான மற்றும் சூட்சுமமான அனைத்தும் நீரே. மனதாலோ அல்லது வாக்காலோ விவரிக்கப்படுபவை மற்றும் பௌதிக மூலப்பொருட்கள் ஆகிய அனைத்தும் நீங்களேயன்றி வேறில்லை.
பதம் 7.9.49
நைதே குணா ந குணிணோ மஹத்-ஆதயோ யே
ஸர்வே மன: ப்ரப்ருதய: ஸஹதேவ-மர்த்யா:
ஆதி-அந்தவந்த உருகாய விதந்தி ஹி த்வாம்
ஏவம் விம்ருஸ்ய ஸுதியோ விரமந்தி சப்தாத்
ந – இரண்டுமல்ல; ஏதே-இவையெல்லாம்; குணா:-மூன்று ஐட இயற்கைக் குணங்களாகிய; ந-இல்லை; குணின:-முக்குணங்களின் அதி தெய்வங்கள் (ரஜோகுண மூர்த்தியான பிரம்மதேவர், தமோகுண மூர்த்தியான சிவபெருமான்); மஹத்-ஆதய:-பஞ்ச பூதங்கள், புலன்கள் மற்றும் புலன் பொருட்கள்; யே-எவை; ஸர்வே-எல்லாம்; மன: மனம்; ப்ரப்ருதய:-முதலானவை; ஸஹ-தேவ மர்த்யா:- தேவர்களும், மனிதர்களும்; ஆதி—அந்த- வந்த -ஆரம்பமும்,முடிவும் உள்ளவைகளான; உருகாய-சாதுக்களால் துதிக்கப்படுபவரான பரம புருஷரே; விதந்தி- புரிந்து கொள்கின்றனர்; ஹி-உண்மையில், த்வாம்-நீங்கள்; ஏவம்-இவ்வாறு; விம்ருஸ்ய-எண்ணிக் கொண்டு; ஸுதிய:-விவேமுள்ள அனைவரும்; விரமந்தி-நிறுத்தி விடுகின்றனர்; சப்தாத்- வேதங்களைப் படிப்பதை அல்லது புரிந்து கொள்வதை.
மூன்று ஜட இயற்கைக் குணங்களாலோ (சத்வகுணம், ரஜோகுணம், தமோகுணம்), இம்மூன்று குணங்களையும் ஆளும் தெய்வங்களாலோ, பஞ்ச பூதங்களாலோ, மனதாலோ, தேவர்களாலோ அல்லது மனிதர்களாலோ உங்களைப் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில் இவையனைதும் பிறப்பிற்கும், அழிவுக்கும் உட்பட்டவையாகும். இதைக் கருத்திற்கொண்டு தான் ஆன்மீக வாழ்வில் முன்னேறியவர்கள் பக்தித் தொண்டை ஏற்றுக் கொண்டுள்ளனர். இத்தகைய விவேகிகள் வேதங்களைக் கற்பதில் அவ்வளவாக கருத்தைச் செலுத்துவதில்லை. மாறாக, அவர்கள் நேரடியாக பக்தித் தொண்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர்.
பதம் 7.9.50
தத்தே ‘ர்ஹத்தம நம: ஸ்துதி-கர்ம- பூஜா:
கர்ம ஸ்ம்ருதிஸ் சரணயோ: ஸ்ரவணம் கதாயாம்
ஸம்ஸேவயா த்வயி வினேதி ஷம்- அங்கயா கிம்
பக்திம் ஜன: கரமஹம்ஸ-கதௌ லபேத
தத் -ஆகவே; தே-உங்களுக்கு: அர்ஹத்-தம- வழிபாட்டுக்குரியவர்களில் மிகவும் மேலானவரே; நம:-பணிவான வணக்கங்கள்; ஸ்துதி-கர்ம-பூஜா:- ஸ்தோத்திரங்களாலும், பிற பக்தி பூர்வமான செயல்களாலும் உங்களை வழிபடுவது; கர்ம-செயல்களை உங்களுக்கு அர்ப்பணிப்பது: ஸ்ம்ருதி:- எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருப்பது; சரணயோ:-உங்களுடைய தாமரைப் பாதங்களை; ஸ்ரவணம் -எப்பொழுதும் கேட்பது: கதாயாம்—(உங்களைப் பற்றிய) விஷயங்கனை; ஸம்ஸேவயா-இத்தகைய பக்தித்தொண்டு; த்வயி- உங்களுக்கு; வினா-இல்லாமல்; இதி-இவ்வாறு; ஷட்-அங்கயா- ஆறு வெவ்வேறு பகுதிகளுடைய; கிம்-எவ்வாறு; பக்திம்-பக்தித் தொண்டை; ஜன:-ஒருவன்; பரமஹம்ஸ்-கதௌ- பரமஹம்ஸர்களால் அடையப்படக் கூடிய: லபேத-அடைவார்கள்.
ஆகவே, ஸ்தோத்திரம் செய்யப்படுபவருள் மிகவும் மேலானவராகிய பரமபுருஷரே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள். ஏனெனில், ஸ்தோத்திரம் செய்தல், செயல்களின் பலன்களையெல்லாம் அர்ப்பணித்தல், உங்களை வழிபடுதல், உங்கள் சார்பாக செயலாற்றுதல், எப்பொழுதும் உங்களுடைய தாமரைப் பாதங்களை நினைத்துக்கொண்டிருத்தல் மற்றும் உங்களுடைய மகிமைகளைப் பற்றி கேட்டல் ஆகிய இந்த ஆறு வகையான பக்தித் தொண்டுகளைச் செய்யாமல், யாரால் பரமஹம்ஸர்களுக்கு உரியதை அடைய முடியும்?.
பதம் 7.9.51
ஸ்ரீ-நாரத உவாச
ஏதாவத் வர்ணித-குணோ பக்த்யா பக்தேன நிர்குண
ப்ரஹ்ராதம் ப்ரணதம் ப்ரீதோ யத- மன்யுர் அபாஷத
ஸ்ரீ-நாரத:உவாச- ஸ்ரீநாரத முனிவர் கூறினார்; ஏதாவத்- இதுவரை: வர்ணித-வர்ணிக்கப்பட்ட; குண:- உன்னத குணங்கள்; பக்த்யா- பக்தியுடன்;பக்தேன—பக்தரால் (பிரகலாதரால்);நிர்குண:- உன்னதமாக பகவான்: ப்ரஹ்ராதம்-பிரகலாதரிடம்; ப்ரணதம்-பகவானுடைய தாமரைப் பாதங்களில் சரணடைந்த: ப்ரீத:-திருப்தியடைந்து; யத -மன்யு:-கோபத்தை அடக்கிக் கொண்டு;அபாஷத—(பின்வருமாறு) பேசத் துவங்கினார்.
மாமுனிவரான நாரதர் கூறினார்: இவ்வாறாக உன்னத படித்தரத்திலிருந்த பக்தரான பிரகலாத மகாராஜனால் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்களால் பகவான் நரசிம்ம தேவர் திருப்தியடைந்தார். அவர் தமது கோபத்தை விட்டுவிட்டு, சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டிருந்த பிரகலாதரிடம் உள்ள பேரன்பினால் பின்வருமாறு பேசலானார்.
பதம் 7.9.52
ஸ்ரீ-பகவான் உவாச
ப்ரஹ்ராத பதிர பத்ரம் தே ப்ரீதோ ‘ஹம் தே ‘ஸுரோத்தம
வரம் வ்ருணீஷ்வாபிமதம் காம-பூரோ ‘ஸ்மி அஹம் ந்ருணா
ஸ்ரீ- பகவான் உவாச-பரமபுருஷர் கூறினார்; ப்ரஹ்ராத—எனதன்புப் பிரகலாதா; பத்ர—நீ நற்குணமுள்ளவன்; பத்ரம்-மங்களம்; தே – உனக்கு; ப்ரீத:- மகிழ்ச்சியடைந்தேன்; அஹம்-நான்; தே-உன்னிடம்; அஸுர—உத்தம—அசுரகுலத்தில் மிகச் சிறந்தவனே; வரம் – வரத்தை; வ்ருணீஷ்வ—(என்னிடமிருந்து) கேள்; அபிமதம்-விரும்பிய; காம- பூர:- எல்லோருடைய ஆசைகளையும் நிறைவேற்றுபவனாக; அஸ்மி— இருக்கிறேன்; அஹம்-நான்; ந்ருணாம்—எல்லா மனிதர்களின்.
பரமபுருஷர் கூறினார்: எனதற்பிற்குரிய பிரகலாதா, நற்குணவானே, அசுர குலத்தில் சிறந்தவனே, உனக்கு மங்களம். உன்னிடம் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். எல்லா ஜீவராசிகளுடைய ஆசைகளையும் நிறைவேற்றுவது எனது லீலையாகும். ஆகவே உனக்கு விருப்பமான வரத்தைக் கேள்.
பதம் 7.9.53
மாம் அப்ரீணத ஆயுஷ்மன் தர்சனம் துர்லபம் ஹி மே
திருஷ்ட்வா மாம் ந புனர் ஜந்துர் ஆத்மானம் தப்தும் அர்ஹதி
மாம்- என்னை; அப்ரீணத:- திருப்திப்படுத்தாமல்; ஆயுஷ்மன்- நீடுழி வாழ்வாயாக ஓ பிரகலாதா; தர்சம்-பார்ப்பது; துர்லபம்- மிகவும் அரிது : ஹி—உண்மையில்; மே-என்னுடைய; த்ருஷ்ட்வா- கண்டபின்: மாம்- என்னை; ந-இல்லை: புன:-மீண்டும்; ஜந்து: – ஜீவராசி; ஆத்மானம்—அவனுக்கு; தப்தும்-வருத்துவதற்கு; அர்ஹதி -தகுதியுடையவன்.
எனதருமை பிரகலாதா, நீ நீடூழி வாழ்வாயாக. என்னை திருப்திப் படுத்தாமல் ஒருவனால் என்னைப் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் என்னை தரிசித்தவனுக்கு, அல்லது திருப்திப்படுத்தியவனுக்கு, தன் சொந்த திருப்தியைக் குறித்து வருந்துவதற்கு எதுவுமில்லை.
பதம் 7.9.54
ப்ரீணந்தி ஹி அத மாம் தீரா: ஸர்வ-பாவேன ஸாதவ:
ஸ்ரேயஸ்-காமா மஹா-பாக ஸர்வாஸாம் ஆசிஷாம் பதிம்
ப்ரீணந்தி-திருப்திப்படுத்த முயல்கின்றனர்; ஹி-உண்மையில்; அத-இதன் காரணமாக; மாம்—என்னை; தீரா:-நிதானமும், உயர்ந்த அறிவும் உள்ளவர்கள்; ஸர்வ-பாவேன—எல்லா வகையிலும், பக்தித் தொண்டின் வெவ்வேறு நிலைகளில்; ஸாதவ:- நன்னடத்தை உடையவர்கள் (எல்லா விதத்திலும் சிறப்புடையவர்கள்); ஸ்ரேயஸ்- காமா:-வாழ்வின் மிகச் சிறந்த நன்மையை விரும்பும்; மஹா-பாக- மகா பாக்கியசாலியே; ஸர்வாஸாம்- எல்லா; ஆசிஷாம்- வகையானவரங்களுக்கும்; பதிம்-(நான்) தலைவன்.
எனதருமை பிரகலாதா, நீ மகா பாக்கியசாலியாவாய். மேன்மைமிக்கவர்களான விவேசிகள் வெவ்வேறு வகையான ராஸானுபாவங்களில் என்னை திருப்திப்படுத்த முயல்கின்றனர் என்பதை என்னிடமிருந்து அறிந்து கொள். ஏனெனில், என்னால் மட்டுமே எல்லோருடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்ற முடியும்.
பதம் 7.9.55
ஸ்ரீ-நாரத உவாச
ஏவம் ப்ரலோப்யமாணோ ‘பி வரைர் லோக-ப்லோபனை:
ஏகாந்தித்வாத் பகவதி நைச்சத் தான் அஸுரோத்தம:
ஸ்ரீ-நாரத:உவாச-மாமுனிவர் நாரத கூறினார்; ஏவம்- இவ்வாறு: ப்ரலோப்யமான:-மயக்கப்பட்டார் அல்லது தூண்டப்பட்டார்; அபி- என்றபோதிலும்; வரை-வரங்களால்; லோக—உலகின்; ப்ரலோபனை:- வெவ்வேறு வகையான வசீகரங்களால்; ஏகாந்தித்வாத் -பூரண சரணாகதி அடைந்திருந்த காரணத்தால்; பகவதி-பரமபுருஷரிடம்; ந- ஐச்சத் விரும்பவில்லை; தான்—அவ்வரங்களை; அஸுர-உத்தம:- அசுரர்களில் சிறந்தவரான பிரகலாத மகாராஜன்.
நாரத முனிவர் கூறினார்: எப்பொழுதும் பௌதிக இன்பங்களை அடைய விரும்பும் அசுரர்களை விட பிரகலாத மகாராஜன் மிகச் சிறந்தவராவார். பௌதிக சுகத்தை அளிக்கும் எல்லா வரங்களையும் கொடுத்து பரமபுருஷரால் மயக்கப்பட்ட போதிலும், பிரகலாதர் தமது தூய கிருஷ்ண உணர்வின் காரணத்தால், புலன் நுகர்வுக்கான எந்த வரத்தையும் அடைய விரும்பவில்லை.
ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “பிரகலாதர் பகவான் நரசிம்மரை சாந்தப்படுத்துதல்” எனும் தலைப்பைக் கொண்ட ஒன்பதாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.