அத்தியாயம் – 6
அசுரத் தோழர்களுக்கு பிரகலாதரின்
உபதேசம்
பதம் 7.6.1
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
கௌமார ஆசரேத் ப்ராக்ஞோ தர்மான் பாகவதான் இஹ
துர்லபம் மானுஷம் ஜன்ம தத் அபி அத்ருவம் அர்ததம்
ஸ்ரீ—ப்ரஹராத: உவாச-பிரகலாத மகாராஜன் கூறினார்; கௌமார:- இளம் பிராயத்திலேயே; ஆசரேத்-கடைபிடிக்க வேண்டும்; ப்ராஜ்ஞ: -புத்திசாலியொருவன்; தர்மான்—வர்ணாஸ்ரம கடமைகளை; பாகவதான் – பரமபுருஷருக்குச் செய்யும் பக்தித்தொண்டுகளான; இஹ -இப்பிறவியில்; துர்லபம்—கிடைத்தற்கரியது; மானுஷம்-மனித; ஜன்ம- பிறப்பு: தத்—அது; அபி-கூட; அத்ருவம்-நிலையற்றது. தற்காலிகமானது; அர்த- தம் -பொருள் நிறைந்தது.
பிரகலாத மகாராஜன் கூறினார்: போதுமான அறிவுள்ள ஒருவன், வாழ்வின் துவக்கத்திலிருந்தே, அதாவது இளம் வயதான குழந்தைப் பருவத்திலிருந்தே இந்த மனித உடலை பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுத்த வேண்டும். மற்றெல்லா ஈடுபாடுகளையும் அவன் விட்டுவிட வேண்டும். கிடைத்தற்கரியதான இந்த மனித உடல் மற்ற உடல்களைப் போலவே நிலையற்றது என்றாலும், அர்த்தமுள்ளதாகும். ஏனெனில், மனித வாழ்வில் ஒருவனால் பக்தித் தொண்டைச் செய்ய முடியும். மனப்பூர்வமாக செய்யப்படும் சிறிதளவு பக்தித் தொண்டு கூட ஒருவருக்கு முழு பூரணத்துவத்தை அளிக்க வல்லதாகும்.
பதம் 7.6.2
யதா ஹி புருஷஸ்யேஹ விஷ்ணோ: பாதோபஸர்பணம்
யத் ஏஷ ஸர்வ-பூதானாம் ப்ரிய ஆத்மேஸ்வர: ஸுஹ்ருத்
யதா – எப்படி: ஹி-உண்மையில்; புருஷஸ்ய-ஒரு ஜீவராசியின்; இஹ-இங்கு; விஷ்ணோ:-பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவின்; பாத-உபஸர்பணம் தாமரைப் பாதங்களை அணுகி; யத்-ஏனெனில்; ஏஷ :-இவர்; ஸர்வ -பூதானாம்- அனைத்து ஜீவராசிகளுக்கும்; ப்ரிய: -பிரியமானவர்; ஆத்ம-ஈஸ்வர:-உயிருக்குயிரான பரமாத்மா; ஸுஹ்ருத்—உற்ற நண்பர்.
மனிதப் பிறப்பானது ஆன்மீக உலகிற்கு திரும்பிச் செல்லும் வாய்ப்பை அளிக்கிறது. ஆகவே ஒவ்வொரு ஜீவராசியும், குறிப்பாக மனித உருவைப் பெற்றவர்கள், பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் பக்தித் தொண்டாற்ற வேண்டும். பரமபுருஷராகிய பகவான் விஷ்ணு அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகப் பிரியமானவரும், உயிருக்குயிரான பரமாத்மாவும், உற்ற நண்பருமாவார். ஆகவே இந்த பக்தித் தொண்டு இயற்கையானதாகும்.
பதம் 7.6.3
ஸுகம் ஐந்ரியகம் தைத்யா தேஹ-யோகேன தேஹினாம்
ஸர்வத்ர லப்யதே தைவாத் யதா துஹ்கம் அயத்னத:
ஸுகம்—இன்பம்: ஐந்ரியகம்—பௌதிக புலன்கள் சம்பந்தப்பட்ட; தைத்யா:-அசுர குடும்பங்களில் பிறந்துள்ள தோழர்களே; தேஹ -யோகேன-ஒரு குறிப்பிட்ட வகையான ஜட உடலைப் பெற்றுள்ள காரணத்தால்; தேஹினாம்-உடல்பெற்ற அனைத்து ஜீவன்களின்; ஸர்வத்ர-எல்லா இடங்களிலும் (எந்த உயிரினத்திலும்); லப்யதே- அடைய முடியும்; தைவாத்-மேலான ஒரு ஏற்பாட்டினால்; யதா— எவ்வாறு; துஹ்கம்-துன்பம்; அயத்னத:-முயற்சி இல்லாமலேயே.
பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: அசுர குடும்பங்களில் பிறந்த என் தோழர்களே, புலன் பொருட்களுடன் தொடர்பு கொள்ளும் இந்த உடலால் உணரப்படும் இன்பத்தை, ஒருவனது முந்திய கர்ம பலன்களுக்கேற்ப எந்த உயிரினத்திலும் அடைய முடியும். எவ்வாறு துன்பம் தானாகவே அடையப்படுகிறதோ, அவ்வாறே இன்பமும் அடையப்படுகிறது.
பதம் 7.6.4
தத்-ப்ரயாஸோ ந கர்த்தவ்யோ யத ஆயுர்-வ்யய: பரம்
ந ததா விந்ததேத க்ஷேமம் முகுந்த-சரணாம்புஜம்
தத்—அதற்கு (புலன் நுகர்வு மற்றும் பொருளாதார முன்னேற்றம்); ப்ரயாஸ- முயற்சி; ந-இல்லை; கர்த்தவ்ய-செய்ய வேண்டியது; யத:-ஏனெனில்; ஆயு:- வ்யய:- ஆயுளை விரயம் செய்தல்; பரம் – மட்டுமே அல்லது முடிவாக ; ந -இல்லை; ததா- அவ்வாறு; விந்ததே-இன்புறுகிறான்; க்ஷேமம்-வாழ்வின் முடிவான இலக்கு; முகுந்த-பௌதிக பந்தத்திலிருந்து ஒருவரை விடுவிக்கக் கூடியவரான பரமபுருஷரின்; சரண – அம்புஜம்- தாமரைப் பாதங்களே.
வெறும் புலன் நுகர்வுக்காக அல்லது பௌதிக சுகத்திற்காக பொருளாதார முன்னேற்றத்தை அடைய முயற்சிப்பதை நிறுத்தி விட வேண்டும். ஏனெனில் அது நேரத்தையும், சக்தியையும் மட்டுமே விரயமாக்குகிறது. அதனால் உண்மையான நன்மை இல்லை, ஒருவரது முயற்சிகள் கிருஷ்ண உணர்வை நோக்கி செலுத்தப்படுமானால், அவர் தன்னுணர்வு நிலையான ஆன்மீக படித்தரத்தை அடைவது நிச்சயம். பொருளாதார முன்னேற்றத்தில் தன்னை ஈடுபடுத்துவதால் இத்தகைய நன்மையை அடைய முடியாது.
பதம் 7.6.5
ததோ யதேத குசல க்ஷேமாய பவம் ஆஸ்ரித:
சரீரம் பௌருஷம் யாவன் ந விபத்யேத புஷ்கலம்
தத: – ஆகவே; யதேத-முயற்சிக்க வேண்டும்; குசல-வாழ்வின் இறுதி இலட்சியத்தை அடைவதில் நாட்டமுள்ள புத்திசாலி ஒருவன். க்ஷேமாய – வாழ்வின் உண்மையான நன்மையை அடைய, அல்லது பௌதிக பந்தத்திலிருந்து விடுபட: பவம் ஆஸ்ரித:-பௌதிக வாழ்வில் இருப்பவன்; சரீரம்-உடல்; பௌருஷம்-மனித; யாவத் -உள்ளவரை ந-இல்லை; விபத்யேத-தோல்வியடைகிறான்; புஷ்கலம் – மன உறுதியும், பலமும் இருக்கும்பொழுதே.
ஆகவே, பௌதிக வாழ்வில் இருக்கும்பொழுதே (பவம் ஆஸ்ரித:), நல்லதையும், கெட்டதையும் பகுத்தறியும் சாமர்த்தியமுள்ள ஒருவன், உடல் நலிந்துவிடாமல் மன உறுதியுடனும், பலத்துடன் இருக்கும் பொழுதே வாழ்வின் மிகவுயர்ந்த இலக்கை அடையப் பாடுபடவேண்டும்.
பதம் 7.6.6
பும்ஸோ வர்ஷ-சதம் ஹி ஆயுஸ் தத்-அர்தம் சாஜிதாத்மன:
நிஷ்ஃபலம் யத் அஸௌ ராத்ரியாம் சேதே ‘ந்தம் ப்ராயிதஸ் தம:
பும்ஸ:—ஒவ்வொரு மனிதனுக்கும்; வர்ஷ- சதம்- நூறு ஆண்டுகள்; ஹி-உண்மையில்; ஆயு:-ஆயுள்; தத்- அதில்; அர்தம்-பாதி; ச – மேலும்; அஜித-ஆத்மன:-தன் புலன்களுக்குச் சேவகனாக உள்ள ஒருவனின்; நிஷ்ஃபலம்-பயனுமில்லை, அர்த்தமில்லை; யத் – ஏனெனில்; அஸௌ—அவன்; ராத்ரியாம்-இரவில்; சேதே-உறங்குகிறான்; அந்தம் -(உடலையும், ஆத்மாவையும் மறந்து)அறியாமையால்; ப்ராபித:- முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு; தம:-இருளினால்.
ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகபட்சம் நூறாண்டு கால ஆயுள் உள்ளது. ஆனால் தன் புலன்களை அடக்க முடியாதவனுக்கு அதில் பாதி ஆயுள் வீணாகக் கழிந்து விடுகிறது. ஏனெனில் அவன் அறியாமையால் மூடப்பட்டு இரவில் பன்னிரண்டு மணி நேரம் உறங்குகிறான். ஆகவே அத்தகைய மனிதனின் ஆயுள் ஐம்பது ஆண்டுகளே ஆகும்.
பதம் 7.6.7
முக்தஸ்ய பால்யே கைசோரே க்ரீடதோ யாதி விம்சதி:
ஜரயா க்ரஸ்த-தேஹஸ்ய யாதி அகல்பஸ்ய விம்சதி:
முக்தஸ்ய-குழப்பமடைந்த அல்லது பக்குவ ஞானமில்லாத ஒருவனின்; பால்யே-குழந்தைப் பருவத்தில்; கைசோரே-பிள்ளைப் பிராயத்தில்; க்ரீடத-விளையாட்டில்; யாதி-கழிகிறது; விம்சதி:- இருபது ஆண்டுகள், ஜரயா-முதுமையால்; க்ரஸ்த-தேஹஸ்ய- ஆட்கொள்ளப்பட்ட ஒருவனின்; யாதி- கழிகிறது; அகல்பஸ்ய-பௌதிக செயல்களைக் கூட செய்ய முடியாமல், மன உறுதி இல்லாமல்; விம்சதி:- மேலும் இருபது ஆண்டுகள்.
எல்லோரும் குழப்பமடைந்த நிலையிலுள்ள குழந்தைப் பருவமான பால்ய வயதில், பத்து ஆண்டுகளைக் கழித்து விடுகின்றனர். அது போலவே, பிள்ளைப் பிராயத்தில் விளையாட்டிலேயே மேலும் பத்து ஆண்டுகள் கழிகிறது. இவ்விதமாக இருபது ஆண்டுகள் வீணாக்கப்படுகின்றன. அதுபோலவே, முதுமையின் இயலாமை நிலையில், பௌதிக செயல்களைக் கூட செய்ய முடியாமல் மேலும் இருபது ஆண்டுகளை ஒருவன் வீணாகக் கழிக்கிறான்.
பதம் 7.6.8
துராபூரணே காமேன மோஹேன ச பலீயஸா
சேஷம் க்ருஹேஷு ஸக்தஸ்ய பிரமத்தஸ்யாபயாதி ஹி
துராபூரேண – நிறைவேறாத; காமேன—ஜட உலகை அனுபவிக்க வேண்டுமென்ற தீவிர விருப்பத்தினாலும்; மோஹேன- குழப்பத்தினாலும்; ச-கூட; பலீயஸா—சக்திவாய்ந்ததும், தடுக்க முடியாததுமான; சேஷம்- எஞ்சியுள்ள வாழ்நாள்; க்குஹேஷு-குடும்ப வாழ்வில்; ஸக்தஸ்ய-அதிக பற்றுடையவனின், ப்ரமத்தஸ்ய-அறிவிழந்து; அபயாதி-வீணாகக் கழிகிறது: ஹி-உண்மையில்.
மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்த முடியாதவன், தணியாத காம இச்சைகள் மற்றும் மிகுந்த அறியாமை ஆகியவற்றின் காரணத்தால், குடும்ப வாழ்வில் மேலும் அதிக பற்றுக் கொண்டவனாகிறான். இத்தகைய அறிவிழந்த ஒருவனின் வாழ்வில், எஞ்சியுள்ள ஆண்டுகளும் வீணடிக்கப்படுகின்றன. ஏனெனில் அந்த காலகட்டத்தில் கூட அவனால் தன்னை பக்தித் தொண்டில் ஈடுபடுத்திக் கொள்ள முடியவில்லை.
பதம் 7.6.9
கோ க்ருஹேஷு புமான் ஸக்தம் ஆத்மானம் அஜிதேந்ரிய:
ஸ்நேஹ-பாசைர் த்ருடைர் பத்தம் உத்ஸஹேத விமோசிதும்
க:-யார்; க்ருஹேஷு – குடும்ப வாழ்வில்; புமான் – மனிதன்; ஸக்தம்-மிகவும் பற்றுக்கொண்டுள்ள; ஆத்மானம் – தன்னை, ஆத்மாவை: அஜித-இந்ரிய:-தன் புலன்களை வெற்றி கொள்ளாத; ஸ்னேஹ-பாசை:-பாசக் கயிறுகளால்; த்ருடை:- இறுக்கமாக; பத்தம் – கை கால்கள் கட்டப்பட்டவனாக; உத்ஸஹேத -முடியும்; விமோசிதும்-பௌதிக பந்தத்திலிருந்து விடுபட.
பௌதிக வாழ்வில் அதிக பற்றுக் கொண்டு தன் புலன்களை அடக்க முடியாமல் இருக்கும் எவனால் தன்னை பௌதிக பந்தத்திலிருந்து விடுவித்துக் கொள்ள முடியும்? அதிக பற்றுக் கொண்டுள்ள குடும்பஸ்தன் தன் குடும்பத்திடமுள்ள (மனைவி, மக்கள், மற்ற உறவினர்கள்) பாசக் கயிற்றினால் மிகவும் உறுதியாக பிணைக்கப்படுகிறான்.
பதம் 7.6.10
கோ நு அர்த்த-த்ருஷ்ணாம் விஸ்ருஜேத்
ப்ராணேப்யோ ‘பி ய ஈப்ஸித:
யம் க்ரீணாதி அஸுபி: ப்ரேஷ்டைஸ்
தஸ்கர: ஸேவகோ வணிக்
க:யார்; நு—உண்மையில்; அர்த்த-திருஷ்ணாம் – பொருள் சேர்க்கும் தீவிர ஆசையுடைய; விஸ்ருஜேத்-விட முடியும்: ப்ராணேப்ய:- உயிரைக் காட்டிலும்; அபி-உண்மையில்; ய:-எவன்; ஈப்ஸித:-அதிகம் விரும்புகிறானோ; யம்-எவனை; க்ரீணாதி— சேகரிக்க முயல்கிறான்; அஸுபி;-தன் உயிருடன்; ப்ரேஷ்டை-மிகப் பிரியமான; தஸ்கர:-திருடன்; ஸேவக-தொழிலாளி; வணிக்- வணிகன்.
செல்வம் மிகவும் அருமையானதாக இருப்பதால், அதைத் தேனைக் காட்டிலும் இனிமையானதாக ஒருவன் கருதுகிறான். ஆகவே எவரால், குறிப்பாக இல்லற வாழ்விலுள்ள எவரால் பொருள் சேர்க்கும் ஆசையை விட முடியும்? திருடர்களும், போர் வீரர்களும், வணிகர்களும் தங்கள் உயிரைக் கூட பணயம் வைத்து பொருள் சேர்க்க முயலுகின்றனர்.
பதங்கள் 7.6.11 – 7.6.13
கதம் ப்ரியாயா அனுகம்பிதாயா:
ஸங்கம் ரஹஸ்யம் ருசிராம்ஸ் ச மந்த்ரான்
ஸுஹ்ருத்ஸு தத்-ஸ்னேஹ-ஸித: சிசூனாம்
கலாக்ஷராணாம் அனுரக்த-சித்த:
புத்ரான் ஸ்மரம்ஸ் தா துஹித்ரூர் ஹ்ருதய்யா
ப்ராத்ரூன் ஸ்வஸ்ரூர் வா பிதரௌ ச தீனௌ
க்ருஹான் மனோக்ஞோரு- பரிச்சதாம்ஸ் ச
வ்ருத்தீஸ் ச குல்யா: பசுப்ருத்ய- வர்கான்
த்யஜேத கோசஸ்-க்ருத் இவேஹமான:
கர்மாணி லோபாத் அவித்ருப்த- காம:
ஔபஸ்த்ய-ஜைஹ்வம் பஹு- மன்யமான:
கதம் விரஜ்யேத துரந்த-மோஹ:
கதம்—எப்படி; ப்ரியாயா:- மிகப் பிரியமான மனைவியின்; அனுகம்பிதாயா:-எப்பொழுதும் பாசமும், பரிவும் உள்ள; ஸங்கம்- சகவாசத்தை; ரஹஸ்யம்-தனிமையில்; ருசிரான்-மிகவும் இன்பமானதும், ஏற்புடையதுமான; ச-மேலும்; மந்த்ரான்—உபதேசங்களை; ஸுஹ்ருத்ஸு-மனைவி மக்களிடம்; தத்-ஸ்னேஹ-ஸித:-அவர்களது பாசத்தினால் கட்டப்பட்டு; சிசூனாம்-சிறு குழந்தைகளிடம்: கல—அக்ஷராணாம்- மழலை மொழியில் பேசும்; அனுரக்த—சித்த:- மனம் கவரப்பட்ட ஒருவன்; புத்ரான்-மகன்களை; ஸ்மரன்—நினைத்து; தாம்— அவர்களை; துஹித்ரூ:(திருமணமாகி, கணவன்களின் இல்லங்களில் வாழும்) புதல்விகளையும்; ஹ்ருதய்யா:-எப்பொழுதும் இதயத்தில் இருக்கும்; ப்ராத்ரூன்—சகோதரர்களை; ஸ்வஸ்ரூ: வா- அல்லது சகோதரிகளை; பிதரௌ-தாய் தந்தையர்கள்; ச-மேலும்; தீனௌ— வயதாகி சக்தியை இழந்துள்ள; க்ருஹான்-குடும்ப விவகாரங்களை; மனோக்ஞ- மிகவும் கவர்ச்சியான; உரு-மிகவும்; பரிச்சதான்- தட்டுமுட்டு சாமான்கள்; ச-மேலும்; வ்ருத்தீ:- அதிக வருவாய்க்கான மூலங்கள் (தொழிற்சாலை, வியாபாரம்); ச-மேலும்; குல்யா :- குடும்பத்துடன் சேர்ந்துள்ள; பசு—மிருகங்களுடைய (பசு, யானை முதலான வீட்டு மிருகங்கள்); ப்ருத்ய-வேலைக்காரன் மற்றும் வேலைக்காரிகளின்; வர்கான்—கூட்டம்;த்யஜேத-விட்டுவிடமுடியும்; கோச:- க்ருத்- பட்டுப்பூச்சி: இவ-போல்; ஈஹமான:- செய்யும்; கர்மணி- பலவித செயல்களை; லோபாத்- தணியாத ஆசைகளால்; அவித்ருப்த-காம:-அதிகரிக்கும் ஆசைகளை திருப்திப்படுத்த முடியாமல்; ஔபஸ்த்ய-காம சுகத்தை; ஜைஹ்வம்- நாக்கு மற்றும்; பஹு-மன்யமான:-மிகவும் முக்கியமானதாகக் கருதி ; கதம் -எப்படி ; விரஜ்யேத- விடமுடியும்; துரந்த-மோஹ:-பெரும் மோகத்தில் இருப்பதால்.
தன் குடும்பத்தினரிடம் அதிக பாசம் கொண்டுள்ளவனும், எப்பொழுது அவர்களுடைய சகவாசத்தை விட முடியும்? குறிப்பாக, மனைவியானவள் எப்பொழுதும் அன்பும், பரிவும் உள்ளவளாகவும், தனிமையில் கணவனை மகிழ்விப்பவளாகவும் இருக்கிறாள். இத்தகைய பிரியமும், பாசமும் உள்ள ஒரு மனைவியின் சகவாசத்தை யாரால் விட முடியும்? செவிக்கினிய மழலைப் பேச்சுகளைப் பேசும் சிறு குழந்தைகளிடம் பாசம் கொண்டுள்ள ஒரு தந்தை, எப்பொழுதும் அவர்களுடைய இனிய பேச்சுகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கிறான். அவர்களுடைய சகவாசத்தை அவனால் எப்படி விட முடியும்? வயதாக பெற்றோர்களும், பெண்களும் கூட மிகவும் பிரியமானவர்களே. குறிப்பாக ஒரு பெண் அவளுடைய தந்தைக்குப் பிரியமானவளாவாள். அவள் கணவன் வீட்டில் வாழும் பொழுது கூட தந்தையின் நினைவில் நிறைந்திருக்கிறாள். அந்த சகவாசத்தை யாரால் விட முடியும்? இவைகளைத் தவிர, குடும்ப வாழ்வில் பல்வேறு தட்டுமுட்டு சாமான்களும், மிருகங்களும், வேலைக்காரர்களும் கூட உள்ளனர். இத்தகைய வசதிகளை யாரால் விட முடியும்? குடும்பத்தில் பற்றுக் கொண்டுள்ளவன் ஒரு பட்டுப்பூச்சிக்கு ஒப்பாவான். பட்டுப் பூச்சியானது தன்னைச் சுற்றி ஒரு கூட்டை நெய்து வெளியே வர முடியாதபடி சிக்கிக் கொள்கிறது. இரு முக்கிய புலன்களான பாலுருப்புகள் மற்றும் நாக்கு ஆகியவற்றின் திருப்திக்காக ஒருவன் பௌதிக சூழ்நிலைகளால் பாதிக்கப்படுகிறான். அதிலிருந்து எப்படி தப்ப முடியும்?
பதம் 7.6.14
குடும்ப-போஷாய வியன் நிஜாயுர்
ந புத்யதே ‘ர்தம் விஹதம் ப்ரமத்த:
ஸர்வத்ர தாப-த்ரய-துஹ்கிதாத்மா
நிர்வித்யதே ந ஸ்வ-குடும்ப-ராம:
குடும்ப-குடும்ப அங்கத்தினர்களை; போஷாய- காப்பாற்றுவதற்காக; வியத்—அழித்து: நிஜ- ஆயு:-தன் வாழ்நாளை; ந-இல்லை; புத்யதே-புரிந்து கொள்கிறான்; அர்தம்- வாழ்வின் நோக்கத்தை; விஹதம்- வீணடிக்கப்படுகிறது; ப்ரமத்த:-பௌதிக சூழ்நிலைகளில் மனமாழ்ந்து; ஸர்வத்ர- எங்கும்; தாப- த்ரய- மூவித துன்பங்களால் (அத்யாத்மிக, அதிதைவிக, அதிபௌதிக); துஹ்கித -துக்கமடைந்து; ஆத்மா- தானே; நிர்வித்யதே கவலைக்குள்ளாகிறான்; ந -இல்லை; ஸ்வ-குடும்ப-ராம:-குடும்பத்தைப் பராமரிப்பதால் மாத்திரம் இன்பம் அனுபலித்து.
குடும்ப வாழ்வில் அதிக பற்றுடைய ஒருவன், தன் குடும்பத்தைப் பராமரிப்பதில் விலைமதிப்பற்ற தன் வாழ்வை வீணடிப்பதைப் புரிந்து கொள்வதில்லை. பரமபுருஷரை உணர்வதற்குப் பொருத்தமான இந்த மனித வாழ்வு தனக்குத் தெரியாமலேயே வீணாவதையும் அவன் அறியத் தவறி விடுகிறான். ஆயினும், தன் கவனக்குறைவினால் ஒரு செப்புக் காசைக்கூட இழந்துவிடாமல் இருப்பதில் மிகவும் சாதுரியமாகவும் கவனமாகவும் இருக்கிறான். இவ்வாறாக, பௌதிக வாழ்வில் பற்றுக் கொண்டுள்ள ஒருவன் எப்பொழுதும் மூன்று விதமான துன்பங்களை அனுபவிக்கிறான். இருப்பினும் பௌதிக வாழ்வு முறையில் பற்றின்மையை அவன் வளர்த்துக் கொள்வதில்லை.
பதம் 7.6.15
வித்தேஷு நித்யாபினிவிஷ்ட-சேதா
வித்வாம்ஸ் ச தோஷம் பர-வித்த- ஹர் து:
ப்ரேத்யேஹ வாதாபி அஜிதேந்ரியஸ் தத்
அசாந்த-காமோ ஹரதோ குடும்பீ
வித்தேஷு—பௌதிக செல்வத்தில்;நித்ய-அபினிவிஷ்ட-சேதா:- எப்பொழுதும் மனம் ஆழ்ந்துள்ள; வித்வான்-அறிந்து; ச-மேலும்; தோஷம்- குற்றத்தை; பர-வித்த-ஹர்து:-பிறரை ஏமாற்றுவதன் மூலம் அல்லது கருப்புச் சந்தையின் மூலம் பணத்தை அபகரிப்பவனின்; ப்ரேத்ய-இறந்த பிறகு: இஹ- இந்த ஜட உலகில்; வா—அல்லது; அதாபி-இன்னும்; அஜித-இந்ரிய:-புலன்களைக் கட்டுப்படுத்த முடியாத காரணத்தால்; தத்—அந்த; அசாந்த-காம:-திருப்தியடையாத ஆசைகளினால்; ஹரதே-திருடுகிறான்; குடும்பீ-குடும்ப வாழ்வில் அதிக பற்றுள்ளவன்.
ஒருவன் தன் புலன்களைக் கட்டுப்படுத்த முடியாமல் குடும்பத்தைப் பராமரிப்பதிலேயே அதிக பற்றுக் கொண்டிருப்பானாயின், அவனுடைய மனது பொருள் சேர்ப்பதெப்படி என்பதிலேயே மூழ்கிவிடுகிறது. பிறருடைய செல்வத்தை அபகரிப்பவன் அரசாங்க சட்டத்தினாலும், இறந்த பிறகு யமராஜனின் சட்டங்களாலும் தண்டிக்கப்படுவான் என்பதை அறிந்தும், அவன் தொடர்ந்து பிறரை ஏமாற்றிப் பொருள் சேர்க்கிறான்.
பதம் 7.6.16
வித்வான் அபீத்தம் தனுஜா: குடும்பம்
புஷ்ணன் ஸ்வ-லோகாய ந கல்பதே வை
ய: ஸ்வீய-பாரக்ய-விபின்ன-பாவஸ்
தம: ப்ரபத்யேத யதா விமூட:
வித்வான்—(பௌதிக வாழ்வின், குறிப்பாக இல்லற வாழ்வின் அசௌகரியங்களை) அறிவார்கள்; அபி-என்ற போதிலும்; இத்தம் -இவ்விதமாக; தனு- ஜா:-அசுர புத்திரர்களே; குடும்பம் – குடும்ப அங்கத்தினர்களை அல்லது (சமூகம், சமுதாயம், தேசம் அல்லது ஐக்கிய நாடுகள் போன்ற) பரந்த குடும்ப அங்கத்தினர்களை; புஷ்ணன்- வாழ்க்கைத் தேவைகளையெல்லாம் அளிப்பதில்; ஸ்வ- லோகாய- தன்னை அறிவதில்; ந-இல்லை; கல்பதே-தகுதியாக; வை -உண்மையில்; ய:-எவன்; ஸ்வீய—தன்னுடைய; பாரக்ய-பிறருடைய உடைமைகளை; விபின்ன-வேறாக; பாவ:-என்ற கருத்துடையவன்; தம:- இருள் மட்டுமே: ப்ரபதியேத–நுழைகிறது; யதா- எப்படி; விமூட்:-கல்வி இல்லாதவன், அல்லது ஒரு மிருகத்தைப் போன்றவன்.
எனது பிரிய நண்பர்களே, அசுர புத்திரர்களே! இந்த ஜட உலகில் கல்வியில் தேர்ச்சி பெற்றவர்களைப் போல் காணப்படுபவர்கள்கூட, “இது என்னுடையது, அது பிறருக்குரியது” என்று கருதும் சுபாவத்தைக் கொண்டுள்ளனர். இவ்விதமாக அவர்கள் கல்வியறிவற்ற நாய் பூனைகளைப் போல், குடும்ப வாழ்வெனும் குறுகிய கண்ணோட்டத்துடன், தங்கள் குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் எப்பொழுதும் ஈடுபட்டுள்ளனர். அறியாமையின் ஆதிக்கத்தினால் குழப்பமடைந்துள்ள அவர்கள் ஆன்மீக அறிவைப் பெற முடியாதவர்களாக இருக்கின்றனர்.
பதங்கள் 7.6.17 – 7.6.18
யதோ ந கஸ்சித் க்வ ச குத்ரசித் வா
தீன: ஸ்வம் ஆத்மானம் அலம் ஸமர்த:
விமோசிதும் காம-தருசாம் விஹார-
க்ரீடா-ம்ருகோ யன்-நிகடோ விஸர்க:
ததோ விதூராத் பரிஹ்ருத்ய தைத்யா
தைத்யேஷு ஸங்கம் விஷயாத்மகேஷு
உபேத நாராயணம் ஆதி-தேவம்
ஸமுக்த-ஸங்கைர் இஷிதோ ‘பவர்க:
யத:-ஏனெனில்; ந-ஒருபோதும் இல்லை; கஸ்சித்—எவனும்; க்வ—எந்த இடத்திலும்; ச-மேலும்; குத்ரசித்—எந்த நேரத்திலும்; வா—அல்லது; தீன:-சிற்றிவுடைய; ஸ்வம்-சொந்த; ஆத்மானம்- ஆத்மாவை; அலம்- அதிகமாக; ஸமர்த:-முடியும்; விமோசிதும்- வருவித்துக் கொள்ள; காம -த்ருசாம்-காம இச்சையுள்ள பெண்களின்; விஹார- உடலுறவு சுகத்தில்; க்ரீட- ம்ருக:-காமுகன்; யத் -யாரிடத்தில்; நிகட;- பௌதிக பந்தமெனும் சங்கிலியாகிய; விஸர்க:- குடும்ப உறவினர்களின் பெருக்கத்தை ; தத:-அந்நிலையில்; விதூராத்- தூரத்திலிருந்தே; பரிஹ்ருத்ய-விட்டுவிட்டு; தைத்யா-என் நண்பர்களே, அசுர புத்திரர்களே; தைத்யேஸு— அரசர்களுக்கிடையில்; ஸங்கம் -சகவாசம்: விஷய-ஆத்ம-கேஷு -புலன் சுகத்திலேயே ஆழ்ந்துள்ள; உபேத-அணுக வேண்டும்; நாராயணம்- பரம புருஷராகிய பகவான் நாராயணரை; ஆதி-தேவம்—எல்லாத் தேவர்களுக்கும் மூல பிறப்பிடமாகிய; ஸ:-அவர்; முகத்-ஸங்கை:-முக்தியடைந்தவர்களின் சகவாசத்தினால்; இஷித:-விரும்பிய; அபவர்க:- முக்தி மார்கத்தை,
அன்புத் தோழர்களே, அசுரப் புத்திரர்களே, பரமபுருஷரைப் பற்றிய அறிவு இல்லாத எவரும், எப்பொழுதும், எந்த நாட்டிலும் தங்களை பௌதிக பந்தத்தின் பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டதேயில்லை என்பது நிச்சயம். மாறாக, பகவானைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள், பௌதிக சட்டங்களினால் கட்டுப்படுத்தப்படுகின்றனர். உண்மையில் புலன் நுகர்வுக்கு அடிமைப்பட்டுள்ள அவர்கள் பெண்ணாசையையே இலக்காகக் கொண்டு, கவர்ச்சியான பெண்களின் கைப்பாவைகளாக உள்ளனர். இத்தகைய ஒரு வாழ்வு முறைக்கு பலியாகும் இவர்கள், குழந்தைகளாலும், பேரக்குழந்தைகளாலும், கொள்ளுப் பேரன்களாலும் சூழப்பட்டவர்களாகி பௌதிக பந்தத்துடன் இறுக்கமாக பிணைக்கப்படுகின்றனர். இத்தகைய வாழ்வு முறைக்கு அடிமையானவர்கள் அசுரர்கள் என்று அழைக்கப்படுகின்றனர். ஆகவே, நீங்கள் அசுர புத்திரர்கள் என்ற போதிலும், இத்தகைய நபர்களிடமிருந்து விலகி, பரமபுருஷரும், அனைத்து தேவர்களுக்கும் ஆதி மூலமுமாகிய நாராயணரைத் தஞ்சமடையுங்கள். ஏனெனில், நாராயண பக்தர்களின் முடிவான இலக்கு பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவதாகும்.
பதம் 7.6.19
ந ஹி அச்யுதம் ப்ரீணயதோ பஹு-ஆயாஸோ ‘ஸுராத்மஜா:
ஆத்மத்வாத் ஸர்வ-பூதானாம் ஸித்தத்வாத் இஹ ஸர்வத:
ந – இல்லை ; ஹி-உண்மையில்; அச்யுதம் – அழிவற்ற பரமபுருஷர்; ப்ரீணயத:-திருப்திப்படுத்த; பஹு-அதிக; ஆயாஸ:-முயற்சி; அஸுர – ஆத்ம – ஜ: – அசுர புத்திரர்களே; ஆத்மத்வாத்-பரமாத்மாவாக நெருங்கிய உறவு கொண்டுள்ள காரணத்தால்; ஸர்வ-பூதானாம்— அனைத்து ஜீவராசிகளின்; ஸித்தத்வாத் – நிலைநாட்டப்பட்டுள்ளதால்; இஹ-இவ்வுலகில்; ஸர்வத:-எல்லாத் திசைகளிலும்,எல்லாக் காலங்களிலும், எல்லாக் கோணங்களிலிருந்தும்.
அசுர புத்திரர்களே, பரமபுருஷராகிய நாராயணர் ஆதியான பரமாத்மாவும், எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையுமாவார். அதனால் ஒருவன் ஒரு குழந்தையாகவோ அல்லது முதியவனாகவோ இருந்தாலும், எந்த சூழ்நிலையிலும் அவரைத் திருப்திப்படுத்துவதற்கோ அல்லது அவரை வழிபடுவதற்கோ எந்த இடையூறும் இருக்காது. ஜீவராசிகளுக்கும், பரமபுருஷருக்கும் இடையிலுள்ள உறவு மாறாத உண்மையென்பதால், பகவானை திருப்திப்படுத்துவதில் எந்த சிரமமும் இல்லை.
பதங்கள் 7.6.20 – 7.6.23
பராவரேஷு பூதேஷு ப்ரஹ்மாந்த-ஸ்தாவராதிஷு
பௌதிகேஷு விகாரேஷு பூதேஷு அத மஹத்ஸு ச
குணேஷு குண-ஸாம்யே ச குண-வ்யதிகரே ததா
ஏக ஏவ பரோ ஹி ஆத்மா பகவான் ஈஸ்வரோ ‘வ்யய:
ப்ரத்யக் -ஆத்ம ஸ்வரூபேண த்ருஸ்ய-ரூபேண ச ஸ்வயம்
வ்யாப்ய-வ்யாபக-நிர்தேஸ்யோ ஹி அனிர்தேஸ்யோ ‘விகல்பித:
கேவலானுபவானந்த-ஸ்வரூப: பரமேஸ்வர:
மாயயாந்தர்ஹிதைஸ்வர்ய ஈயதே குண-ஸர்கயா
பர-அவரேஷு-வாழ்வின் உயர்ந்த அல்லது தாழ்ந்த நிலைகளில்; பூதேஷு- ஜீவராசிகளில்: ப்ரஹ்ம-அந்த-பிரம்மா வரை; ஸ்தாவர -ஆதிஷு- அசைவற்ற உயிரினங்களாகிய தாவரங்கள் முதல்; பெளதிகேஷு—பௌதிக மூலப் பொருட்களின்; விகாரேஷு—மாற்றங்களில்; பூதேஷு-பஞ்ச பூதங்களில்; அத-மேலும்; மஹத்ஸுமொத்த பௌதிக சக்தியான மஹத் -தத்துவத்தில்; ச-கூட; குணேஷு-ஜட இயற்கைக் குணங்களில்; குண-ஸாம்யே- பௌதிக குணங்களின் ஒரு சமநிலையில்; ச-மேலும்; குண-வ்யதிகரே- ஜட இயற்கைக் குணங்களின் சமமில்லாத தோற்றத்தில்; ததா-அப்படியே ; ஏக:-ஒன்று; ஏவ- மட்டுமே: பர:-உன்னதமான; ஹி—உண்மையில்: ஆத்மா- ஆதிமூலம்; பகவான்-பரமபுருஷர்; ஈஸ்வர:-ஈசுவரர்; அவ்யய:- குறைந்துவிடாது; ப்ரத்யக்-உள்ளேயுள்ள; ஆத்ம -ஸ்வரூபேண- பரமாத்மா என்ற அவரது ஆதியான உண்மை நிலையினால்; ச -கூட; ஸ்வயம் -தாமாகவே; வ்யாப்ய-வியாபித்து; வ்யாபசு- எங்கு நிறைந்திருக்கும்; நிர்தேஸ்ய:-விவரிக்கப்படக்கூடியவர்; ஹி- நிச்சயமாக; அனித்தேஸ்ய (மிகவும் சூட்சுமமானவர் என்பதால்) விவரிக்கப்பட முடியாதவர்; அவிகல்பித:- வேறுபாடில்லாமல் கேவல-மாத்திரம்;அனுபவ—ஆனந்த- ஸ்வரூப:-அறிவும், ஆனந்தமும் நிறைந்த ரூபமுடைய; பரம-ஈஸ்வர:-பரம ஈசுவரராகிய பகவான்; மாயயா-மாயா சக்தியால் ; அந்தர் ஹித-மறைக்கப்பட்டவர்; ஐஸ்வர்ய:-யாருடைய எல்லையற்ற ஐசுவரியம்; ஈயதே-என்று தவறாக கருதப்படுகிறதோ; குண- ஸர்கயா- ஜட இயற்கைக் குணங்களின் சேர்க்கை.
பரம் ஆளுனரும், அழிவற்றவரும், சளைக்காதவருமான பரம புருஷர், தாவரங்களைப் போன்ற அசையாத ஜீவராசிகளிலிருந்து, முதன்முதலாகப் படைக்கப்பட்ட ஜீவராசியான பிரம்மா வரையுள்ள வெவ்வேறு உயிரினங்களுக்குள் இருக்கிறார். அவர் பலதரப்பட்ட பௌதிக சிருஷ்டிகளிலும், பஞ்சபூதங்களிலும், மொத்த பௌதிக சக்தியிலும், ஜட இயற்கைக் குணங்களிலும் (சத்வம், ரஜஸ், தமஸ்) தோற்றத்திற்கு வராத ஜட இயற்கையிலும், பொய் அகங்காரத்திலும் கூட இருக்கிறார். அவர் ஒருவரே என்றாலும், எங்கும் வியாபித்திருக்கிறார். மேலும் அவர் எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணமும், அனைத்து ஜீவராசிகளின் இதயங்களிலும் சாட்சியாக உள்ள உன்னத பரமாத்மாவாகவும் இருக்கிறார். அவர் எங்கும் நிறைந்தவர் என்றும், சர்வ வியாபகமுள்ள பரமாத்மா என்றும் சுட்டிக்காட்டப்படுகிறார் என்றாலும், உண்மையில் அவர் சுட்டிக்காட்ட முடியாதவராவார். அவர் மற்றவர்களால் தனியே பிரித்து சுட்டிக்காட்ட முடியாதவராக இருப்பினும், அனைத்திலும் அவர் பிரிக்கப்பட முடியாதவராகக் கலந்திருக்கிறார். அவர் பரம சச்-சித்-ஆனந்தமாக உணரப்படுகிறார். பௌதிக சக்தி எனும் திரையினால் மறைக்கப்பட்டிருப்பதால், நாஸ்திகர்களுக்கு அவர் இல்லாதவராகக் காணப்படுகிறார்.
பதம் 7.6.24
தஸ்மாத் ஸர்வேஷு பூதேஷு தயாம் குருத ஸௌஹ்ருதம்
பாவம் ஆஸுரம் உன்முச்ய யயா துஷ்யதி அதோக்ஷஜ:
தஸ்மாத்-ஆகவே; ஸர்வேஷு—எல்லா; பூதேஷு—ஜீவன்களிடமும்; தயாம் – கருணை; குருத—காட்டுங்கள்; ஸௌஹ்ருதம் – நட்பை; பாவம்-பாவத்தை; ஆஸுரம்— (நண்பர்கள் என்றும் பகைவர்கள் என்றும் பிரிக்கும்) அசுரர்களின்; உன்முச்ய-விட்டுவிட்டு: யயா- எதனால்; துஷ்யதி—திருப்தியடைவாரோ; அதோக்ஷஜ—புலன்களின் உணர்வுக்கு அப்பாற்பட்டவரான பரமபுருஷர்.
ஆகவே, அசுர புத்திரர்களான எனது இளம் நண்பர்களே, தயவு செய்து பெளதிக அறிவிற்கு எட்டாதவரான பரமபுருஷர் திருப்தியடையும் வகையில் செயற்படுங்கள். உங்களுடைய அசுர சுபாவத்தை விட்டுவிட்டு, பகைமையும், இருமையும் இன்றி செயற்படுங்கள். பக்தித் தொண்டைப் புகட்டுவதன் மூலம் அனைத்து ஜீவராசிகளிடமும் கருணை காட்டி, அவர்களுடைய நண்பர்களாகுங்கள்.
பதம் 7.6.25
துஷ்டே ச தத்ர கிம் அலப்யம் அனந்த ஆத்யே
கிம் தைர் குண-வ்யதிகராத் இஹ யே ஸ்வ-ஸித்தா:
தர்மாதய: கிம் அகுணேன ச காங்க்ஷிதேன
ஸாரம் ஜுஷாம் சரணயோர் உபகாயதாம் ந:
துஷ்டே -திருப்தியடையும் பொழுது; ச-மேலும்; தத்ர-அங்கு: கிம்-என்ன; அலப்யம்- அடையமுடியாதது; அனந்தே-பரமபுருஷர்; ஆத்யே-எல்லாக்காரணங்களுக்கும் காரணமும், அனைத்திற்கும் ஆதிமூலமுமான; கிம்-தேவையென்ன: தை:-அவர்களுடன்; குண- வ்யதிகராத்- ஜட இயற்கைக் குணங்களுடைய செயல்களின் காரணத்தால்; இஹ-இவ்வுலகில்; யே-எவை; ஸ்வ-ஸித்தா —தானாகவே அடையப்படுகின்றன; தர்ம-ஆதய:-தர்மம், அர்த்தம், காமம் என்ற மூன்று பௌதிக முன்னேற்றக் கோட்பாடுகள்; கிம்- என்ன அவசியம்; அருணேல-பரமனில் முக்தியடைவதில்; ச-மேலும்; காங்க்ஷிதேன— விரும்பிய: ஸாரம்- சாராம்சம்; ஜுஷாம்- சுவைத்து அனுபவிக்கும்; சரணயோ:-பகவானுடைய இரு தாமரைப் பாதங்களை; உபகாயதாம்- பகவானுடைய குணாதிசயங்களைத் துதிக்கும்; ந:-எங்களின்.
எல்லாக் காரணங்களுக்கும் காரணமும், அனைத்திற்கும் ஆதி மூலமுமாகிய பரமபுருஷரை திருப்திப்படுத்திய பக்தர்களுக்கு அடைய முடியாதது எதுவுமில்லை. பகவான் எண்ணற்ற ஆன்மீக குணங்களுக்கு இருப்பிடமாவார். ஆகவே, ஜட இயற்கைக் குணங்களுக்கு அப்பாற்பட்ட நிலையிலுள்ள பக்தர்களுக்கு, இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தின் கீழ் தானாகவே அடையப்படும் தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகிய கொள்கைகளைப் பின்பற்றுவதால் என்ன பயன்? பக்தர்களாகிய நாங்கள் எப்பொழுதும் பகவானுடைய தாமரைப் பாதங்களை துதித்துப் போற்றுகிறோம். எனவே தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் ஆகியவற்றிற்காக நாங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
பதம் 7.6.26
தர்மார்த்-காம இதி யோ ‘பிஹிதஸ் த்ரி-வர்க
ஈக்ஷா த்ரயீ நய-தமௌ விவிவதா ச வார்தா
மன்யே தத் ஏதத் அகிலம் நிகமஸ்ய ஸத்யம்
ஸ்வாத்மார்ப்பணம் ஸ்வ-ஸுஹ்ருத: பரமஸ்ய பும்ஸ:
தர்ம – மதம்; அர்த்த-பொருளாதார முன்னேற்றம்; காம:- கட்டுப்பாடான புலன் நுகர்வு; இதி- என்று; ய:-எது; அபிஹித:- கூறப்பட்டதோ; த்ரி-வர்க: -இம்மூன்றும்; ஈக்ஷா—தன்னுணர்வு; த்ரயீ-வேதக் கிரியைகள்; நய-நியாயம்; தமௌ -மற்றும் சட்ட ஒழுங்குமுறை; விவிதா-பலவிதமான; ச – கூட; வார்தா-வாழ்க்கைத் தொழில், அல்லது ஒருவனது ஜீவனோபாயம்; மன்யே – நான் கருதுகிறேன்; தத்-அவற்றை; ஏதத். இவை; அகிலம் -எல்லாம்; நகமஸ்ய- வேதங்களின்; ஸத்யம்- உண்மை; ஸ்வ-ஆத்ம – பூரண சரணாகதி ; ஸ்வ—ஸுஹ்ருத:-பரம நண்பரிடம்; பரமஸ்ய-முடிவான ; பும்ஸ:- புருஷராகிய.
மதம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு ஆகிய இம்மூன்றும் வேதங்களில் த்ரி-வர்க என்று, அதாவது, முக்திக்கான மூன்று வழிகள் என்று விவரிக்கப்பட்டுள்ளன. இம்மூன்று பிரிவுகளுக்குள், கல்வி மற்றும் தன்னுணர்வு; வேதக் கிரியைகள்; தர்க்க சாஸ்திரம்; சட்ட ஒழுங்கு விஞ்ஞானம்; ஜீவனோபாயத்திற்கான பல்வேறு வழிமுறைகள் ஆகியவையும் அடங்கும். இவை வேதங்களில் கூறப்படும் புற விஷயங்களாகும். எனவே இவற்றை நான் பௌதிகமானவையாகக் கருதுகிறேன். ஆனால், பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் சரணடைவதை நான் திவ்யமானதாகக் கருதுகிறேன்.
பதம் 7.6.27
ஞானம் தத் ஏதத் அமலம் துரவாபம் ஆஹ
நாராயணோ நர-ஸக: கில நாரதாய
ஏகாந்தினாம் பகவதஸ் தத் அகிஞ்சனானாம்
பாதாரவிந்த-ரஜஸாப்லுத- தேஹினாம் ஸ்யாத்
ஞானம் – அறிவு; தத்- அந்த; ஏதத் -இந்த: அமலம்-பௌதிக களங்கமின்றி; துரவாபம் (ஒரு பக்தரின் கருணையின்றி) புரிந்து கொள்வது மிகக் கடினம்; ஆஹ—எடுத்துக் கூறினார்; நாராயண:- பரமபுருஷராகிய பகவான் நாராயணர்; நர—ஸக:—அனைத்து ஜீவரா சிகளுக்கும் (குறிப்பாக மனிதர்களுக்கு) நண்பரான; கில-நிச்சயமாக; நாரதாய-மாமுனிவரான நாரதரிடம்; ஏகாந்தினாம்- பரமபுருஷரிடம் பூரண சரணாகதி அடைந்தவர்களின்; பகவத:-பரமபுருஷரின்; தத்- அந்த (அறிவு); அகிஞ்சனானாம்- எந்த பெளதிக உடைமையையும் தனதென்று ஏற்றுக்கொள்ளாதவர்கள்; பாத—அரவிந்த- பகவானுடைய தாமரைப் பாதங்களின்; ரஜஸா-துசியினால்; ஆப்லுத-மூழ்கி; தேஹினாம்- யாருடைய உடல்கள்; ஸ்யாத்-சாத்தியமாகும்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் நண்பரும், அவர்களது நலம் விரும்பியும், பரம புருஷருமாகிய நாராயணர், முன்பு இந்த உன்னத ஞானத்தை மாமுனிவரான நாரதருக்கு எடுத்துரைத்தார். நாரதரைப் போன்ற ஒரு சாதுவின் கருணையின்றி இத்தகைய ஞானத்தைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். ஆனால் நாரதரின் சீடப்பரம்பரையைத் தஞ்சமடைந்துள்ள அனைவராலும் இரகசியமான இந்த அறிவைப் புரிந்து கொள்ள முடியும்.
பதம் 7.6.28
ஸ்ருதம் ஏதன் மயா பூர்வம் ஞானம் விக்ஞான-ஸம்யுதம்
தர்மம் பாகவதம் சுத்தம் நாரதாத் தேவ-தர்சனாத்
ஸ்ருதம்—கேட்கப்பட்டது; ஏதத்—இந்த; மயா -என்னால்; பூர்வம் -முன்பு; ஞானம்- இரகசிய அறிவு; விக்ஞான- ஸம்யுதம்- அனுபவ ஞானத்துடன் கூடிய; தர்மம் -உன்னதமான மதம்; பாகவதம் -பரமபுருஷருடன் சம்பந்தப்பட்டதான; சுத்தம்—பௌதிக செயல்களுடன் எந்த சம்பந்தமும் இல்லாத; நாரதரத்- நாரத முனிவரிடமிருந்து; தேவ -பரமபுருஷர்; தர்சனாத்— எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருப்பவர்.
பிரகலாத மகாராஜன் தொடர்ந்து கூறினார்: எப்பொழுதும் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ள நாரத முனிவரிடமிருந்து இந்த அறிவை நான் பெற்றேன். பாகவத-தர்மம் எனப்படும் இந்த அறிவு முற்றிலும் விஞ்ஞானப் பூர்வமானதாகும். இது நியாயத்தையும், தத்துவத்தையும் ஆதாரமாகக் கொண்டதும், பௌதிக களங்கத்திலிருந்து விடுபட்டதுமாகும்.
பதங்கள் 7.6.29 – 7.6.30
ஸ்ரீ-தைத்ய-புத்ரா ஊசு:
ப்ரஹ்ராத த்வம் வயம் சாபி நர்தே ‘ன்யம் வித்மஹே குரும்
ஏதாப்யாம் குரு-புத்ராப்யாம் பாலானாம் அபி ஹீஸ்வரௌ
பாலஸ்யாந்தஹ்புர-ஸ்தஸ்ய மஹத்-ஸங்கோ துரன்வய:
சிந்தி ந: ஸம்யதம் ஸௌம்ய ஸ்யாச் சேத் விஸ்ரம்ப-காரணம்
ஸ்ரீ – தைத்ய – புத்ரா; ஊசு:-அசுர புத்திரர்கள் வினவினர்; ப்ரஹ்ராத- அருமைத் தோழனே பிரகலாதா; த்வம்- நீ: வயம்- நாங்கள்; ச-மேலும்; அபி-கூட; ந-இல்லை; ருதே-தவிர; அன்யம் -வேறொரு; வித்மஹே -அறிவோம்; குரும்- ஆன்மீக குருவை; ஏதாப்யாம்—இவ்விரு; குரு-புத்ராப்யாம்-சுக்ராசாரியரின் மகன்களை; பாலானாம்-சிறு குழந்தைகளாக; அபி-இருந்தபோதிலும்; ஹி – நிச்சயமாக; ஈஸ்வரௌ-அடக்கி ஆள்பவர்கள்; பாலஸ்ய- ஒரு குழந்தையின்; அந்த: புர-ஸ்தஸ்ய- வீட்டினுள் அல்லது அரண்மனைக்குள் இருக்கும்; மஹத்-ஸங்க:- நாரதரைப் போன்ற ஒரு மகானின் சகவாசம்; துரன் வய:-கிடைத்தற்கரியதாகும்; சிந்தி– தயவு கூர்ந்து அகற்ற வேண்டும்; ந:- எங்களுடைய; ஸம்சயம்- சந்தேகத்தை; ஸௌம்ய-அன்பானவனே; ஸ்யாத்-இருக்கக்கூடும்; சேத்- இருந்தாலும்; விஸ்ரம்ப -காரணம்-(உன் வார்த்தைகளில்) நம்பிக்கைக்குக் காரணம்.
அசுர புத்திரர்கள் பதிலளித்தனர்: அன்புள்ள பிரகலாதா, நீயோ, நாங்களோ, சுக்ராசாரியரின் புத்திரர்களான சண்டனையும், அமர்க்கனையும் தவிர வேறெந்த ஆசானையோ அல்லது ஆன்மீக குருவையோ அறியோம். நாம் குழந்தைகள். அவர்களோ நம்மை அடக்கி ஆள்பவர்கள். குறிப்பாக, எப்பொழுதும் அரண்மனைக்குள்ளேயே இருக்கும் உனக்கு, ஒரு மகானுடன் சகவாசம் கொள்வது மிகவும் கடினமாயிற்றே! சாந்த சொரூபியமான பிரிய நண்பனே, நாரதரிடமிருந்து கேட்கும் வாய்ப்பை நீ எப்படி பெற்றாய் என்பதை விவரிக்க வேண்டுகிறோம். இவ்விஷயத்தில் எங்களுடைய சந்தேகங்களை அன்புடன் அகற்ற வேண்டும்.
ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “அசுரத் தோழர்களுக்கு பிரகலாதரின் உபதேசம்” எனும் தலைப்பைக் கொண்ட ஆறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.