அத்தியாயம் – 5
இரண்யகசிபுவின் தெய்வப் புதல்வரான
பக்தப் பிரகலாதர்
பதம் 7.5.1
ஸ்ரீ-நாரத உவாச
பௌரோஹித்யாய பகவான் வ்ருத: காவ்ய: கிலாஸுரை:
ஷண்டாமர்கௌ ஸுதௌ தஸ்ய தைத்ய-ராஜ-க்ருஹாந்திகே

ஸ்ரீ-நாரத: உவாச ஸ்ரீ நாரத முனி கூறினார்; பௌரோஹித்யாய—புரோகிதராக செயற்பட; பகவான்-மிகவும் சக்திவாய்ந்த; வ்ருத:-தேர்ந்தெடுத்தனர்; காவ்ய:-சுக்ராச்சாரியரை; கில-உண்மையில்; அஸுரை:-அசுரர்களால் ; ஷண்ட-அமர்க்கௌ—சண்டனும், அமர்க்கனும்; ஸீதௌ-மகன்கள்; தஸ்ய-அவனது; தைத்ய-ராஜ அசுரராஜனான இரண்யகசிபுவின்; க்ருஹ-அந்திகே- அரண்மனைக்கருகில்.

மாமுனிவரான நாரதர் கூறினார்: இரண்யகசிபுவை தலைமையாகக் கொண்ட அசுரர்கள், சுக்ராச்சாரியாரைத் தங்களுடைய கிரிகைகளுக்குப் புரோகிதராக ஏற்றுக் கொண்டனர். சுக்ராச்சாரியரின் இரு மகன்களான சண்டனும் அமர்க்கனும் இரண்யகசிபுவின் அரண்மனைக்கருகில் வசித்தனர்.

பதம் 7.5.2
தௌ ராஜ்ஞா ப்ராபிதம் பாலம் ப்ரஹ்லாதம் நய கோவிதம்
பாடயாம் ஆஸது: பாடயான் அன்யாம்ஸ் சாஸுர-பாலகான

தௌ – அவ்விருவரும் (சண்டன், அமர்க்கன்); ராஜ்ஞா—அரசனால்; ப்ராபிதம்-அனுப்பப்பட்ட; பாலம்—பாலகனுக்கு; ப்ரஹ்லாதம்— பிரகலாதன் எனும் பெயர் கொண்ட; நய-கோவிதம்-நீதி நெறிகளை நன்கறிந்த; பாடயாம் ஆஸது:-கற்பித்தனர்; பாட்யான்-பௌதிக நூல்களிலிருந்து; அன்யான்-மற்ற; ச – கூட ; அஸீர-பாலகான்— அசுரக் குழந்தைகளுடன்.

பிரகலாத மகாராஜன் முன்பே பக்தி வாழ்வில் கற்பிக்கப்பட்டிருந்தார். ஆனால் அவரது தந்தை, சுக்ராச்சாரியரின் இரு மகன்களிடம் கல்வி கற்பிக்கப்பட அவரை அனுப்பிய போது, அவர்கள் தங்கள் பள்ளிக் கூடத்தில் மற்ற அசுரக் குழந்தைகளுடன் பிரகலாதரையும் ஏற்றுக் கொண்டனர்.

பதம் 7.5.3
யத் தத்ர குருணா ப்ரோக்தம் சுஸ்ருவே ‘நுபபாட ச
நஸாது மனஸா மேனே ஸ்வ-பராஸத்-க்ரஹாஸ்ரயம்

யத் – எது; தத்த—அங்கு (பள்ளியில்); குருணா—ஆசிரியர்களால்; ப்ரோக்தம் – கற்பிக்கப்பட்டதோ; கஸ்ருவே-கேட்டார்; அனுபபாட- திரும்பச் சொன்னார்; ச – மேலும்; ந – இல்லை; ஸாது—நல்லது; மனஸா – மனதால், கேனே-கருதினார்; ஸ்வ-தனது சொந்த; பர – பிறருடைய; அஸத் – க்ரஹ -தீயதத்துவத்தால்; ஆஸ்ரியம் – ஆதரிக்கப்பட்ட.

பிரகலாதர் ஆசிரியர்களால் கற்பிக்கப்பட்ட அரசியல், பொருளாதாரம் பற்றிய விசயங்களைக் கேட்டும், திருப்பிச் சொல்லியும் வந்தார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அரசியல் தத்துவமானது, ஒருவரை நண்பராகவும், மற்றொருவரைப் பகைவராகவும் நினைக்கச் செய்கிறது என்பதால் அதை அவர் விரும்பவில்லை.

பதம் 7.5.4
ஏகதாஸுர-ராட் புத்ரம் அங்கம் ஆராப்ப பாண்டவ
பப்ரச்ச கதயாம் வத்ஸ மன்யதே ஸாது யத் பவான்

ஏகதா – ஒரு சமயம்; அஸுர—ராட்—அசுரச் சக்கரவர்த்தி; புத்ரம்- தன் மகனை: அங்கம்-மடியில்; ஆராப்ய – வைத்துக் கொண்டு; பாண்டவ-யுதிஷ்டிர மகாராஜனே; பப்ரச்ச-வினவினான்; கத்யதாம் சொல்லப்படட்டும்; வத்ஸ-பிரிய மகனே; மன்யதே-கருதுகிறாய்; ஸாது—சிறந்தது; யத்—என்று எதை; பவான்—நீ.

யுதிஷ்டிர மகாராஜனே, ஒரு சமயம் அசுர ராஜனான இரண்யகசிபு. தன் மகனான பிரகலாதரைத் தன் மடியில் வைத்துக் கொண்டு, மிகவும் அன்புடன் பின்வருமாறு வினவினான்: குழந்தாய் உன் ஆசிரியரிடமிருந்து நீ கற்றறிந்த விஷயங்களில் எது சிறந்ததென்று நினைக்கிறாயோ அதைக் கூறு.

பதம் 7.5.5
ஸ்ரீ-ப்ரஹ்லாத உவாச
தத் ஸாது மன்யே ‘ஸுரத-வர்ய தேஹினாம்
ஸதா ஸமுத்விக்ன-தியாம் அஸத்-க்ரஹாத்
ஹித்வாத்ம-பாதம் க்ருஹம் அந்த-கூபம்
வனம் கதோ யத் தரிம் ஆஸ்ரயேத

ஸ்ரீ—ப்ரஹ்லாத: உவாச-பிரகலாத மகாராஜன் பதிலளித்தார்; தத்- அது; ஸாது-மிகச்சிறந்தது, அல்லது வாழ்வின் சிறந்த பகுதி; மன்யே- நான் நினைக்கிறேன்; அஸுர-வர்ய-அசுர வேந்தே; தேஹினாம்-ஜட உடலை ஏற்றவர்களின்; ஸதா—எப்பொழுதும்; ஸமுத்விக்ன—கவலை நிறைந்த; தியாம்-புத்தியை; அஸத்—க்ரஹாத்-நிலையற்ற உடலை அல்லது உடல் சம்பந்தமான உறவுகளை (“நான் இந்த உடல், இந்த உடலுக்குச் சொந்தமானதெல்லாம் என்னுடையது”, என்றெண்ணி) உண்மை என்று ஏற்றுக் கொள்வதால்; ஹித்வா-விட்டுவிட்டு; ஆத்ம-பாதம்-ஆன்மீகப் பண்பாடு அல்லது தன்னுணர்வு மார்கம் நிறுத்தப்படுகிறதோ அங்கு; க்ருஹம் -தேகாபிமானம் அல்லது குடும்ப வாழ்வு; அந்த – கூபம் வெறும் பாழடைந்த கிணறு (அங்கு நீரில்லை என்றாலும், மக்கள் நீரைத் தேடியலையும் கிணறு); வனம்—வனம்; கத:-சென்று; யத்- எது: ஹரிம் – பரமபுருஷரிடம்; ஆஸ்ரயேத – தஞ்சமடைய வேண்டும்.

பிரகலாத மகாராஜன் பதிலளித்தார்: அசுரர்களில் சிறந்தவராகிய அசுர வேந்தே, எனது ஆன்மீக குருவிடமிருந்து நான் கற்றிருப்பதைப் பொறுத்தவரை, எவன் நிலையற்ற ஒரு உடலையும், நிலையற்ற குடும்ப வாழ்வையும் ஏற்றுக் கொண்டுள்ளானோ அவன் கவலைகளால் கலவரமடைவது நிச்சயம். ஏனெனில், அது நீரில்லாத, துன்பம் மட்டுமே உள்ள இருண்ட கிணற்றினுள் விழுந்துவிட்ட நிலைக்கு ஒப்பாகும். ஒருவன் இந்த நிலையை விட்டு விட்டு வனத்திற்குச் செல்லவேண்டும். இன்னும் தெளிவாகக் கூறுமிடத்து, எங்கு கிருஷ்ண உணர்வு மட்டுமே காணப்படுகிறதோ, அந்த பிருந்தாவனத்திற்கு ஒருவன் சென்று, பரம புருஷரிடம் தஞ்சமடைய வேண்டும்.

பதம் 7.5.6
ஸ்ரீ-நாரத உவாச
ஸ்ருத்வா புத்தி-கிரோ தைத்ய: பர-பக்ஷ-ஸமாஹிதா:
ஜஹாஸ புத்திர் பாலானாம் பித்யதே பர-புத்திபி:

ஸ்ரீ – நாரத: உவாச-நாரத முனி கூறினார்; ஸ்ருவத்வா-கேட்டு; புத்த -கிர: – மகனின் போதனை மொழிகளை; தைத்ய:-இரண்யகசிபு; பர-பக்ஷ- எதிரியின் பக்கம்; ஸமாஹிதா:-முழு விசுவாசம் கொண்ட; ஜஹாஸ- சிரித்தான்; புத்தி:-புத்தி; பாலானாம்-சிறுவர்களின்; பித்யதே-கெடுக்கப்படுகிறது; பர- புத்திபி:- எதிரிகளின் பக்கமிருந்து வரும் துர்போதனைகளால்.

நாரதமுனி தொடர்ந்து கூறினார்: பிரகலாத மகாராஜன் பக்தித் தொண்டின் மூலமாக தன்னுணர்வைப் பெறும் மார்க்கத்தைப் பற்றி பேசி, எதிரிகளிடம் தனக்குள்ள விசுவாசத்தை வெளிப்படுத்தியதைக் கேட்ட அசுர ராஜனான இரண்யகசிபு, “இவ்வாறுதான் சிறுவர்களின் புத்தி பகைவர்களின் வார்த்தைகளால் கெட்டுப்போகிறது” என்று கூறிச் சிரித்தான்.

பதம் 7.5.7
ஸம்யக் விதார்யதாம் பாலோ குரு-கேஹே த்வி-ஜாதிபி:
விஷ்ணு-பக்ஷை: ப்ரதிச்சன்னார் ந பித்யேதாஸ்ய தீர் யதா

ஸம்யக்-முழுமையாக; விதார்யதாம் இவனுக்குப் பாதுகாப்பு கொடுங்கள்; பால:-சின்னஞ்சிறு பாலகனை; குரு-கேஹே-குரு குலத்தில்; த்வி ஜாதிபி: பிராமணர்களால்; விஷ்ணு பக்ஷை:- விஷ்ணுவின் பக்கமுள்ள; ப்ரதிச்சன்னை: மாறுவேடத்தில் மறைந்து கொண்டு; ந-பித்யேத-இவன் மனம் மாறாதபடி; அஸ்ய- இவனுடைய; தீ:-புத்தி; யதா—எவ்வாறு.

இரண்யகசிபு தன் சேவகர்களிடம் கூறினான்: அசுரர்களே, இச்சிறுவனுக்குக் கல்வி கற்பிக்கப்படும் இடமான குருகுலத்தில் இவனுக்கு முழு பாதுகாப்புக் கொடுங்கள். இதனால் மாறுவேடத்தில் அங்கு செல்லக்கூடிய வைஷ்ணவர்களால் இவனது புத்தி பேதலிக்காதிருக்கட்டும்.

பதம் 7.5.8
க்ரும் ஆனதீம் ஆஹூய ப்ராஹ்ராதம் தைத்ய-யாஜகா:
பர்சஸ்ய ஸ்லக்ஷ்ணயா வாசா ஸமப்ருச்சந்த ஸாமபி:

க்ருஹம் –ஆசிரியர்களின் (சண்டன், அமர்க்கன்) இடத்திற்கு; ஆனீதம்—அழைத்து வந்தனர்; ஆஹூய—அழைத்து; ப்ரஹ்ராதம்— பிரகலாதரை; தைத்ய-யாஜகா:-அசுரனான இரண்யகசிபுவின் புரோகிதர்கள்; ப்ரசஸ்ய-சமாதானப்படுத்தி; ஸ்லஷ்ணயா-மிகவும் மென்மையான; வாசா-குரலில்; ஸமப்ருச்சந்த—அவர்கள் கேட்டனர்; ஸாமபி:- மிகவும் இனிய வார்த்தைகளால்.

இரண்யகசிபுவின் சேவகர்கள் சிறுவனான பிரகலாதரை மீண்டும் குருகுலத்திற்கு அழைத்து வந்தபோது, அசுர புரோகிதர்களான சண்டனும், அமர்க்கனும் அவரை சமாதானப்படுத்தினர். அவர்கள் மிகவும் மென்மையான குரல்களுடனும், அன்பான வார்த்தைகளுடனும் அவரிடம் பின்வருமாறு வினவினர்.

பதம் 7.5.9
வத்ஸ ப்ரஹ்ராத பத்ரம் தே ஸத்யம் கதய மா ம்ருஷா
பாலான் அதி குதஸ் துப்யம் ஏஷ புத்தி-விபர்யய:

வத்ஸ-மகனே; ப்ரஹ்லாத-பிரகலாதா; பத்ரம் தே—உனக்குச் சகல நன்மைகளும் உண்டாகட்டும்; ஸத்யம்-உண்மையை; கதய-சொல்; மா-வேண்டாம்; ம்ருஷா-பொய்யுரைக்க; பாலான் அதி—மற்ற அரக்க சிறுவர்களை தாண்டிக்கொண்டு; குத-எங்கிருந்து; துப்யம்-உனக்கு; ஏஷ:-இந்த; புத்தி-புத்தியின்; விபர்யய:-பேதலிப்பு

மகனே பிரகலாதா, உனக்குச் சகல நன்மைகளும், சாந்தியும் உண்டாகட்டும். அன்புடன் பொய்யுரைக்காமல், உண்மையாக பதிலுரைப்பாயாக. நீ காணும் இச்சிறுவர்கள் உன்னைப் போன்றவர்கள் அல்ல. ஏனெனில், இவர்கள் வேறுவிதமாகப் பேசவில்லை. இந்த உபதேசங்களை நீ எவ்வாறு கற்றுக் கொண்டாய்? உன்னுடைய புத்தி எவ்வாறு இப்படி பேதலித்துப் போனது?

பதம் 7.5.10
புத்தி-பேத: பர-க்ருத உதாஹோ தே ஸ்வதோ ‘பவத்
பண்யதாம் ஸ்ரோது-காமானாம் குரூணாம் குல-நந்தன

புத்தி-பேத:-மனக்கறை;பர – க்ருத:-பகைவர்களால் ஏற்பட்டதா; உதாஹோ-அல்லது; தே-உனக்கு; ஸ்வத:-நீயாகவே; அபவத் -ஏற்படுத்தியதா; பண்யதாம்-சொல்; ஸ்ரோது-காமானாம்- அறிய ஆவலாக உள்ள எங்களிடம்; குரூணாம்—உன் ஆசிரியர்கள் எல்லோரும்; குல – நந்தன—உன் குலத்தில் சிறந்தவனே.

உன் குலத்தில் சிறந்தவனே, உனது மனக்கறை பகைவர்களால் ஏற்பட்டதா அல்லது உனக்கு நீயே ஏற்படுத்திக் கொண்டதா? உன் ஆசிரியர்களான நாங்கள் இதைப்பற்றி அறிய மிகவும் ஆவலாக உள்ளோம், தயவு செய்து எங்களிடம் உண்மையைக் கூறு.

பதம் 7.5.11
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
பர: ஸ்வஸ் சேதி அஸத்-க்ராஹ: பும்ஸாம் யன்-மாயயா க்ருத:
விமோக்ஷித-தியாம் த்ருஷ்டஸ் தஸ்மை பகவதே நம:

ஸ்ரீ – ப்ரஹ்ராத: உவாச-பிரகலாத மகாராஜன் பதிலளித்தார்; பர:- எதிரி;ஸ்வ:-உறவினர்அல்லது நண்பர்; ச – கூட; இதி- என்று; அஸத்- க்ராஹ:-பௌதிக கண்ணோட்டம்;பும்ஸாம்- மனிதர்களின்; யத்— யாருடைய; மாயயா-மாயா சக்தியால்; க்ருத:-ஏற்படுத்தப்பட்டது; விமோஹித – குழப்பமடைத்துள்ளது; தியாம்- யாருடைய புத்தி: திருஷ்ட:– அனுபவத்தில் உணரப்படுகிறது; தஸ்மை-அவருக்கு; பகவதே- புருஷோத்தமருக்கு; நம:-எனது பணிவான வணக்கங்கள்.

பிரகலாத மகாராஜன் விடையளித்தார்: பரமபுருஷரின் பகிரங்க சக்தியானது? மனிதர்களின் புத்தியை மயக்கி, “என் நண்பன்”, “என் பகைவன்” என்ற வேறுபாடுகளை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில், இதை நான் முன்பு வேத வல்லுனர்களிடமிருந்து கேட்டிருக்கிறேன் என்றாலும், இப்பொழுது நான் இதை அனுபவப்பூர்வமாக உணர்கிறேன்.

பதம் 7.5.12
ஸ யதானுவ்ரத: பும்ஸாம் பசு-புத்திர் விபித்யதே
அன்ய ஏக்ஷ ததான்யோ ‘ஹம் இதி பேத-கதாஸதீ

ஸ – அந்த பரமபுருஷர்; யதா—எப்பொழுது; அனுவ்ரத: -திருப்தியடைகிறாரோ; பும்ஸாம் -பந்தப்பட்ட ஆத்மாக்களுடைய; பசு-புத்தி:-(நான் கடவுள் எல்லோருமே கடவுள்”) என்ற மிருகத் தனமான எண்ணம்; விபித்யதே-அழிக்கப்படுகிறது; அன்ய:- வேறொருவன்; ஏக்ஷ – இவன்; ததா—அதேபோல்; அன்ய-வேறொருவன்: அஹம்-நான்; இதி-என்று: பேத-வேறுபாடு; கத- பாராட்டி; அஸதீ-நாசகரமானது.

ஒரு ஜீவராசியின் பக்தித் தொண்டின் காரணத்தால், பரமபுருஷர் அவனிடம் திருப்தியடையும் பொழுது, அவன் ஒரு பண்டிதனாகி விடுகிறான். இவ்வாறாக அவன் நண்பர்களுக்கும், பகைவர்களுக்கும், தனக்கும் இடையில் வேறுபாடுகளைக் காண்பதில்லை. பிறகு புத்திசாலித்தனமாக அவன் “நம்மில் ஒவ்வொருவரும் பகவானின் நித்தியத் தொண்டர்களாவோம். எனவே நமக்குள் எவ்வித வேறுபாடும் இல்லை” என்று நினைக்கிறான்.

பதம் 7.5.13
ஸ ஏஷ ஆதிமா ஸ்வ-பரேதி அபுத்திபிர்
துரத்யயானுக்ரமணோ நிரூப்யதே
முஹ்யந்தி யத்-வர்த்மனி வேத-வாதினோ
ப்ரஹ்மாதயோ ஹி ஏஷ பினத்தி மே மதிம்

ஸ:-அவர்: ஏஷ:-இது: ஆத்மா-எல்லோர் இதயத்திலும் உள்ள பரமாத்மா: ஸ்வ-பர—இது என் தொழில், அது வேறொருவருடையது; இதி- என்று; அபுத்திபி:—இத்தகைய துர்புத்தி உடையவர்களால்; துரத்யய-பின்பற்றுவதற்குக் கடினமான; அனுக்ரமண:-யாருடைய பக்தித் தொண்டு; நிரூப்பதே-(சாஸ்திரங்களால் அல்லது ஆன்மீக குருவின் உபதேசங்களால்) நிரூபிக்கப்பட்டுள்ளது; முஹ்யந்தி- குழப்பமடைகின்றனர்; யத்-யாருடைய; வர்த்மனி-பாதையில்: வேத- வாதின:-வேத விதிகளைப் பின்பற்றுபவர்கள்; ப்ரஹ்ம- ஆதய:- பிரம்ம தேவர் முதலான தேவர்கள்; ஹி-நிச்சயம்; ஏஷ:-இவர்; பினத்தி—மாற்றுகிறார்; மே-எனது; மதிம் – புத்தியை.

எப்பொழுதும் “எதிரி”, “நண்பன்” என்றே நினைத்துக் கொண்டிருப்பவர்களால், தங்களுக்குள் உள்ள பரமாத்மாவைக் கண்டறிய முடியாது. அவர்களைச் சொல்வானேன், வேத இலக்கியங்களில் நன்கு பரிச்சயம் உடையவர்களும், உயர்ந்த பதவிகளில் இருப்பவர்களுமான பிரம்மதேவரைப் போன்றவர்கள் கூட சிலசமயங்களில் பக்தித் தொண்டின் கொள்கைகளைப் பின்பற்றுவதில் குழப்பமடைகின்றனர். இச்சூழ்நிலையை உருவாக்கியுள்ள அதே பரமபுருஷர்தான், பெயரளவேயான உங்களுடைய எதிரியின் பக்கம் சேரும்படி எனக்கு புத்தியைக் கொடுத்துள்ளார் என்பதில் ஐயமில்லை.

பதம் 7.5.14
யதா ப்ராம்யதி அயோ ப்ரஹ்மன் ஸ்வயம் ஆகர்ஷ- ஸன்னிதெள
ததா மே பித்யதே சேதஸ் சக்ர-பாணேர் யத்ருச்சயா

யதா—எவ்வாறு; ப்ராம்பதி- ஈர்க்கப்பட்டு நகர்கிறதோ; அய:- இரும்பு: ப்ரஹ்மன்-பிராமணர்களே; ஸ்வயம்—தானாகவே; ஆகர்ஷத்- காந்தத்தின்; ஸன்னிதௌ-அருகில்; ததா—அவ்வாறே; மே – எனது; பித்யதே-மாற்றப்பட்டுள்ளது; சேத:-மனம் ; சக்ர-பாணே:- கையில் சக்கரம் ஏந்தியுள்ள பகவான் விஷ்ணுவின்; யத்ருச்சயா— விருப்பத்தினாலேயே.

பிராமணர்களே (ஆசிரியர்களே) ஒரு காந்தக் கல்லினால் ஈர்க்கப்பட்டு இரும்பு தானாகவே காந்தத்தை நோக்கி நகர்வதுபோலவே, என்னுடைய உணர்வும் பகவான் விஷ்ணுவின் விருப்பத்தால் மாற்றப்பட்டு, சக்ரபாணியான அவரால் ஈர்க்கப்பட்டுள்ளது. இவ்விதமாக எனக்கு எந்த சுதந்திரமும் இல்லை.

பதம் 7.5.15
ஸ்ரீ-நாரத உவாச
ஏதாவத் ப்ராஹ்மணாயோக்த்வா விரராம மஹா-மதி:
தம் ஸன்னிபர்த்ஸ்ய குபித: ஸுதீனோ ராஜ-ஸேவக:

ஸ்ரீ – நாரத: உவாச-நாரத முனிவர் கூறினார்; ஏதாவத்—இவ்வளவு: ப்ராஹ்மணாய – சுக்ராசாரியரின் மகன்களாக அந்த பிராமணர்களிடம் ; உக்த்வா— கூறியபின்; விரராம-மௌனமானார்; மஹா-மதி:- மகா புத்திசாலியான பிரகலாதர்; தம்-அவரிடம் (பிரகலாதரிடம்); ஸன்னிபர்த்ஸ்ய-கடுஞ்சொற்களால் திட்டி: குபித-கோபங்கொண்டு; ஸுதீன:-மிகவும் வேதனையடைந்து; ராஜ-ஸேவக:-இரண்யகசிபுவின் சேவகர்கள்.

மாமுனிவரான நாரதர் தொடர்ந்து கூறினார்: மகாத்மாவான பிரகலாத மகாராஜன், தன் ஆசிரியர்களும், சுக்ராச்சாரியரின் மகன்களுமான சண்டன் மற்றும் அமர்க்கன் ஆகியோரிடம் இவ்வாறு கூறியபின் மௌனமானார். இதனால் பெயரளவேயான அந்த பிராமணர்கள் அவரிடம் கோபம் கொண்டனர். அவர்கள் இரண்யகசிபுவின் சேவகர்களாக இருந்ததால் மிகவும் மனம் வருந்தி, பிரகலாத மகாராஜனைத் தண்டிக்கும் வகையில் பின்வருமாறு பேசலாயினர்.

பதம் 7.5.16
ஆனீயதாம் அரே வேத்ரம் அஸ்மாகம் அயசஸ்கர:
குலாங்காரஸ்ய துர்புத்தேஸ் சதுர்த்தோ ‘ஸ்யோதிதோ தம:

ஆனீயதாம் – கொண்டுவரப்படட்டும்; அரே – அடேய்; வேத்ரம்- பிரம்பு: அஸ்மாகம் -நமது; அயசஸ்கர:-அபகீர்த்தியைக் கொண்டு வரும்; குல -அங்காரஸ்ய- குலத்தைப் பொசுக்க வந்த தீப்போன்ற இவனை; துர்புத்தே:-துர்புத்தியுடைய; சதுர்த்த:-நான்காவது; அஸ்ய -இவனுக்கு ; உதித: கூறப்பட்டுள்ளது; தம:-தண்டனை (பிரம்பு).

அடேய் கொண்டுவா பிரம்பை! இந்த பிரகலாதன் நம்முடைய பெயருக்கும், புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்துகிறான். இவனுடைய துர்புத்தியினால், இவன் குலத்தைப் பொசுக்கும் தீப்போல் ஆகிவிட்டான். இப்பொழுது இவனுக்கு நான்கு வகையான அரசியல் தந்திரங்களில் நான்காவது உபாயமாகிய தண்டனையே தகுதியெனக் கூறப்பட்டுள்ளது.

பதம் 7.5.17
தைதேய-சந்தன-வனே ஜாதோ ‘யம் கண்டக-த்ரும:
யன்-மூலோன்மூல-பரசோர் விஷ்ணோர் நாலாயிதோ ‘ர்பக:

தைதேய-அசுரகுடும்பத்தின்; சந்தன – வனே – சந்தனமரக்காட்டில்; ஜாத:-பிறந்துள்ளான்; அயம்- இவன்; கண்டக – த்ரும:-முள் மரம்: யத்- எதன்; மூல-வேர்களை; உன்மூல-வெட்டும்; பரசோ:- கோடரி போன்ற; விஷ்ணோ:-பகவான் விஷ்ணுவின்; நாலாயித:- கைப்பிடியாக; அர்பக: சிறுவன்.

இந்த துரோகி சந்தன வனத்தில் முளைத்த ஒரு முள் மரத்தைப் போல் தோன்றியுள்ளான். சந்தன மரங்களை வெட்டித் தள்ளுவதற்கு ஒரு கோடரி தேவைப்படுகிறது. இத்தகைய ஒரு கோடாரியின் கைப்பிடிக்கு இந்த முள் மரத்தின் தண்டு மிகவும் பொருத்தமானதாகும். சந்தன மரமாகிய அசுர குலத்தை வெட்டி வீழ்த்துவதற்கு பகவான் விஷ்ணு கோடாரியாக உள்ளான். இந்த பிரகலாதனோ அந்த கோடாரியின் கைப்பிடியாக உள்ளான்.

பதம் 7.5.18
இதி தம் விவிதோபாயைர் பீஷயம்ஸ் தர்ஜனாதிபி:
ப்ரஹ்ராதம் க்ராஹயாம் ஆஸ த்ரி-வர்க்ஸ்யோபபாதனம்

இதி- இவ்விதம்; தம்- அவரை (பிரகலாதரை); விவித -உபாயை:- வெவ்வேறு வழிகளில்; பீஷயன்-பயமுறுத்தி; தர்ஜன— ஆதிபி:-அச்சுறுத்தல், அடித்தல் போன்றவைகளால்; ப்ரஹ்ராதம் -பிரகலாதனுக்கு; க்ராஹயாம் ஆஸ—கற்பித்தனர்; த்ரி—வர்கஸ்ய— வாழ்வின் மூன்று இலட்சியங்களை (தர்மம், அர்த்தம், காமம்); உபயாதனம்-போதிக்கும் வேத பாடங்களை.

பிரகலாத மகாராஜனின் ஆசிரியர்களான சண்டனும், அமர்க்கனும் தங்கள் சீடனான அவரைப் பலவழிகளில் தண்டித்தும், பயமுறுத்தியும் அவருக்கு தர்மவழி, பொருளாதார முன்னேற்றம் மற்றும் புலனின்பம் ஆகியவைகளைப் பற்றி போதிக்க ஆரம்பித்தனர். இவ்வாறுதான் அவருக்கு அவர்கள் கல்வி போதித்தனர்.

பதம் 7.5.19
தத ஞானம் குருர் ஞாத்வா ஞாத க்ஞேய சதுஷ்டயம்
தைத்யேந்ரம் தர்சயாம் ஆஸ மாத்ரு ம்ருஷ்டம் அலங்க்ருதம்

தத:- பிறகு; ஏனம்—அவரை (பிரகலாதரை); குரு—அவரது ஆசிரியர்கள்; ஞாத்வா-அறிந்து; ஞாத—அறியப்பட்ட; ஞேய- அறியப்பட வேண்டிய; சதுஷ்டயம்-நான்கு ராஜதந்திர முறைகள் (ஸாம சமாதானப்படுத்துவது; தான—பொருளை தானம் கொடுப்பது; பேத – பிரிவினையை ஏற்படுத்துவது; தண்ட – தண்டனை தருவது); தைத்ய-இந்ரம்-அசுர ராஜனான இரண்யகசிபுவிடம்: தர்சயாம்- ஆஸ-கொண்டு காட்டினர்; மாத்ரு-ம்ருஷ்டம்—அவரது தாயால் நன்கு குளிப்பாட்டப்பட்டு; அலங்க்ருதம் —ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டு.

சிறிது காலத்திற்குப் பிறகு, ஆசிரியர்களான சண்டனும், அமர்க்கனும், பொது ஜனத் தலைவர்களை சமாதானப்படுத்துதல், அவர்களுக்கு இலாபகரமான பதவிகளைக் கொடுத்து அவர்களை சாந்தப்படுத்துதல், அவர்களைப் பிரித்து ஆளுதல், அடிபணிய மறுக்கும் பொழுது தண்டித்தல் ஆகிய இராஜ தந்திரங்களில் பிரகலாத மகாராஜனுக்குப் போதுமான கல்வியை அளித்து விட்டதாக எண்ணினர். பிறகு ஒரு நாள் பிரகலாதரின் தாய் தானே அவரைக் குளிப்பாட்டி போதுமான ஆடை ஆபரணங்களால் அவரை நன்கு அலங்கரித்தபின், அவரை அவரது தந்தையிடம் அழைத்துச் சென்றனர்.

பதம் 7.5.20
பாதயோ பதிதம் பாலம் ப்ரதினந்யாசிஷாஸுர:
பரிஷ்வஜ்ய சிரம் தோர்ப்யாம் பரமாம் ஆப நிர்வ்ருதிம்

பாதயோ:-பாதங்களில்; பதிதம்-விழுந்து வணங்கிய: பாலம்- பாலகனை (பிரகலாதனை); ப்ரதினந்ய-மகிழ்ச்சியுடன் வரவேற்று; ஆசிஷா-(“அருமைக் குழந்தாய், நீ மகிழ்ச்சியுடன் தீண்ட காலம் வாழ்வாயாக” என்பது போன்ற) ஆசிர்வாதங்களுடன்; அஸுர; அசுரனான இரண்யகசிபு; பரிஷ்வஜ்ய – தழுவிக் கொண்டு; சிரம்- அன்பின் காரணத்தால் நீண்ட நேரம்; தோர்ப்யாம்-அவனது கரங்களால்; பரமாம் – பெரும்; ஆப- அடைந்தான்; நிர்வ்ருதிம் – மகிழ்ச்சி.

தன் பாதங்களில் விழுந்து வணங்கிய தன் மகனைக் கண்ட இரண்யகசிபு, பாசமுள்ள ஒரு தந்தையாக உடனே அவரை இருகைகளாலும் தழுவிக்கொண்டு குழந்தையை ஆசிர்வதித்தான். ஒரு தந்தை இயல்பாகவே தன் மகனை அணைத்துக் கொள்வதில் மகிழ்ச்சி யடைகிறார். இவ்விதமாக இரண்யகசிபுவும் மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.

பதம் 7.5.21
ஆவோப்யாங்கம் அவக்ராய மூர்தனி அஸ்கு-கலாம்புபி:
ஆஸிஞ்சன் விகஸத்-வக்த்ரம் இதம் ஆஹ யுதிஷ்டிர

ஆரோப்ய-வைத்து; அங்கம்-மடியில்; அவக்ராய மூர்தனி-உச்சி முகர்ந்து: அஸ்ரு- கண்ணீர்; கலா – அம்புபி: துளிகள் கண்களிலிருந்து பெருக; ஆஸிஞ்சன்—நனைத்து; விகஸத்-வக்த்ரம்—அவரது சிரித்த முகத்தை; இதம் – இதை; ஆஹ – கூறினான்; யுதிஷ்டிர – யுதிஷ்டிர மகாராஜனே.

நாரத முனிவர் தொடர்ந்து கூறினார் : யுதிஷ்டிர மகாராஜனே, இரண்யகசிபு பிரகலாதரைத் தன் மடியில் வைத்து உச்சி முகர்ந்தான். அன்பு மேலீட்டால் அவனது கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் குழந்தையின் புன்னகை பூத்த முகத்தை நனைக்க, தன் மகனிடம் அவன் பின்வருமாறு பேசினான்.

பதம் 7.5.22
ஹிரண்யகசிபுர் உவாச
ப்ரஹ்ராதானூச்யதாம் தாத ஸ்வதீதம் கிஞ்சித் உத்தமம்
காலோநைதாவதாயுஷ்மன் யத் அசிக்ஷத் குரோர் பவான்

ஹிரண்யகசிபு: உவாச-மன்னன் இரண்யகசிபு கூறினான்; ப்ரஹ்ராத -என் அருமை பிரகலாதனே; அனூச்யதாம்-கூறுவாயாக; தாத—என் அருமை மகனே; ஸ்வதீதம்-நன்கு கற்கப்பட்ட; கிஞ்சித்—ஏதேனும்; உத்தமம்-சிறந்ததை; காலேன -ஏதாவதா—இவ்வளவு நாட்களில்; ஆயுஷ்மன் – நீண்ட ஆயுளை உடையவனே; யத்—எதை; அசிக்ஷத்—நீ கற்றாய்;குரோ:-உன்ஆசிரியர்களிடமிருந்து;பவான் – நீ.

இரண்யகசிபு கூறினான்: என் அன்பு மகனே பிரகலாதா, நீண்ட ஆயுளை உடையவனே, இவ்வளவு காலமாக நீ உன் ஆசிரியர்களிடமிருந்து பல விஷயங்களை கேள்விப்பட்டிருக்கிறாய். அந்த அறிவில் எது சிறந்ததென்று நீ நினைக்கிறாயோ அதை இப்பொழுது கூறு.

பதங்கள் 7.5.23 – 7.5.24
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
ஸ்ரவணம் கீர்த்தனம் விஷ்ணோ: ஸ்மரணம் பாத-ஸேவனம்
அர்ச்சனம் வந்தனம் தாஸ்யம் ஸக்யம் ஆத்ம-நிவேதனம்

இதி பும்ஸார்பிதா விஷ்ணௌ பக்திஸ் சேன் நவ-லக்ஷணா
க்ரியேத பகவதி அத்தா தன் மன்யே ‘தீதம் உத்தமம்

ஸ்ரீ-ப்ரஹ்ராத: உவாச-பிரகலாத மகாராஜன் கூறினார்; ஸ்ரவணம்- கேட்பது; கீர்த்தனம்—பாடுவது; விஷ்ணோ:-பகவான் விஷ்ணுவின் (வேறு எவருடையதும் இல்லை); ஸ்மரணம்-நினைப்பது; பாத ஸேவனம் – பாத சேவை செய்வது; அர்ச்சனம் – (சோடசோபசாரம் எனப்படும் பதினாறு வகையான பூஜைப் பொருட்களால் அர்ச்சிப்பது; வந்தனம்—ஸ்தோத்திரம் செய்வது; தாஸ்யம்-சேவகனாக இருப்பது; ஸக்யம்—சிறந்த நண்பனாக இருப்பது; ஆத்ம-நிவேதனம் தன்னிடமுள்ள அனைத்தையும், பும்ஸா-தன்னையும் அர்ப்பணித்து விடுவது; இதி-இவ்வாறு: அர்ப்பிதா-பக்தனால் அர்ப்பணிக்கப்படும்; விஷ்ணைள—பகவான் விஷ்ணுவிற்கு (வேறு எவருக்கும் இல்லை); பக்தி:-பக்தித் தொண்டு; சேத்–இருந்தால்; நவ—லக்ஷணா-ஒன்பது முறைகள் அடங்கிய; க்ரியேத—ஒருவன் செய்ய வேண்டும்; பகவதி- பரமபுருஷருக்கு; அத்தா—நேரிடையாக அல்லது முழுமையாக; தத் – அது; மன்யே -என்று நினைக்கிறேன்; அதீதம் -கற்றவைகளில்; உத்தமம்—மிகச் சிறந்தது.

பிரகலாத மகாராஜன் கூறினார்: பகவான் விஷ்ணுவின் உன்னதமான நாமம், ரூபம், குணங்கள், உபகரணங்கள், மற்றும் லீலைகள் ஆகிய வற்றைப் பற்றி கேட்டல் மற்றும் பாடுதல், அவற்றை நினைத்துக் கொண்டிருத்தல், பகவானின் தாமரைப் பாதங்களுக்குத் தொண்டு செய்தல், பகவானுக்குப் பதினாறு வகையான உபசாரத்தைச் செய்தல், பகவானைத் துதித்தல், அவரது சேவகனாய் இருத்தல், பகவானைத் தனது உற்ற நண்பராக நினைத்தல், அனைத்தையும் அவருக்கு அர்ப்பணம் செய்தல் (அதாவது, மனோ, வாக்கு, காயம் ஆகியவற்றினால் அவருக்கு சேவை செய்தல்) ஆகிய இந்த ஒன்பது முறைகள் தூய பக்தித் தொண்டுகளாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. இவ்வொன்பது முறைகளின் மூலமாக தன் வாழ்வையே ஸ்ரீ கிருஷ்ணரின் சேவைக்காக அர்ப்பணித்துள்ளவன் பூரண அறிவைப் பெற்றிருப்பதால், அவன் மிகவும் கற்றறிந்தவன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

பதம் 7.5.25
நிசம்யைதத் ஸுத-வசோ ஹிரண்யகசிபுஸ் ததா
குரு-புத்ரம் உவாசேதம் ருஷா ப்ரஸ்ஃபுரிதாதர

நிசம்ய-கேட்டு ; ஏதத்-இதை ; ஸுத – வச: – தன் மகனின் பேச்சை; ஹிரண்யகசிபு:-இரண்யகசிபு; ததா-அப்பொழுது; குரு-புத்ரம்-தன் குருவான சுக்ராசாரியரின் மகனிடம்; உவாச-கூறினான்; இதம்- இதை ; ருஷா-கோபத்தால்; ப்ரஸ்ஃபுரித – துடி துடிக்க; அதர:- உதடுகள்.

இரண்யகசிபு தன் மகன் பிரகலாதரின் வாயிலிருந்து பக்தித் தொண்டைப் பற்றிய இவ்வார்த்தைகளைக் கேட்டு கடுங்கோபமடைந்தான். தன் உதடுகள் துடிதுடிக்க, தன் குரு சுக்ராச்சாரியரின் மகனான சண்டனிடம் பின்வருமாறு அவன் கூறலானான்.

பதம் 7.5.26
ப்ரஹ்ம-பந்தோ கிம் ஏதத் தே விபக்ஷம் ஸ்ரயதாஸதா
அஸாரம் க்ராஹிதோ பாலோ மாம் அனாத்ருத்ய துர்மதே

ப்ரஹ்ம-பந்தோ—ஒரு பிராமணரின் தகுதியற்ற மகனே; கிம்ஏதத்- என்ன இது; தே-உன்னால்; விபக்ஷம் -என் எதிரிகளின் பக்கம்; ஸ்ரயதா—புகலிடம் கொண்டு; அஸதா-மிகவும் துஷ்டர்களான; அஸாரம் — அபத்தம்; க்ராஹித:-கற்பித்திருக்கிறாய்; பால:-சிறுவனுக்கு; மாம்-என்னை; அனாத்ருத்ய—மதிக்காது; துர்மதே- முட்டாள் ஆசிரியனே.

அடேய்! ஒரு பிராமணரின் தகுதியற்ற, மிகவும் வெறுக்கத்தக்க புத்திரனே, நீ என் எதிரிகளின் பக்கம் சேர்ந்து கொண்டு என் கட்டளையை மீறிவிட்டாய். ஒன்றும் அறியாத இச்சிறுவனுக்கு நீ பக்தித்தொண்டைப் பற்றி கற்பித்திருக்கிறாய்! இதென்ன அபத்தம்?

பதம் 7.5.27
ஸந்தி ஹி அஸாதவோ லோகே துர்மைத்ராஸ் சத்ம-வேசிண:
தேஷாம் உதேதி அகம் காலே ரோக: பாதகினாம் இவ

ஸந்தி—உள்ளனர்; ஹி- நிச்சயம்; அஸாதவ:-துரோகிகள்; லோகே -இவ்வுலகில்; துர்மைத்ரா:-நம்பிக்கைத் துரோகம் செய்யும் நண்பர்கள்; சத்ம-வேசின:-பொய்யான உடையணிந்து; தேஷாம்- அவர்களுள்; உதேதி- எழுகிறது; அகம்-பாவ வாழ்வின் விளைவு; காலே – காலப்போக்கில்; ரோக:-நோய்; பாதகினாம்- பாவம் செய்பவர்களின்; இவ-போல.

பாவம் செய்தவர்களிடம் காலப்போக்கில் பல்வேறு வகையான நோய்கள் உண்டாகின்றன. அதுபோலவே, இவ்வுலகில் பொய்யுடை தரித்த பல போலியான நண்பர்கள் உள்ளனர். ஆனால் இறுதியில் பொய்யான நடத்தையின் காரணத்தால், அவர்களுடைய உண்மையான விரோதம் வெளிப்பட்டு விடுகிறது.

பதம் 7.5.28
ஸ்ரீ-குரு-புத்ர உவாச
ந மத்-ப்ரணீதம் ந பர-ப்ரணீதம்
ஸுதோ வததி ஏஷ தவேந்ர-ஸத்ரோ
நைஸவர்கிகீயம் மதிர் அஸ்ய ராஜன்
நியச்ச மன்யும் கத் அதா: ஸ்ம மா ந:

ஸ்ரீ-குரு-புத்ர: உவாச- இரண்யகசிபுவின் குருவான சுக்ராசாரியரின் மகன் கூறினான்; ந-இல்லை; மத்-ப்ரணீதம் – என்னால் கற்பிக்கப்பட்டதோ; ந-அல்லது: பர-ப்ரணீதம்—வேறு எவராலும் கற்பிக்கப்பட்டதோ; ஸுத:-மகன் (பிரகலாதன்); வததி-கூறுகிறான்; ஏஷ:- இந்த; தவ- தவங்கள்: இத்ர -சத்ரோ- தேவேந்திரனின் எதிரியே; நைஸர்கிகீ_இயற்கையாக; இயம் -இது; மதி:- ஈடுபாடு; அஸ்ய— இவனுடைய; ராஜன்-அரசே; நியச்ச—விட்டு விடுங்கள்; மன்யும்— உங்கள் கோபத்தை ; கத்-குற்றம்; அதா:-சுமத்துவதை: ஸ்ம-நிச்சயம்; மா-கூடாது; ந:- எங்கள் மீது.

இரண்யகசிபுவின் குரு புத்திரன் கூறினான்: தேவேந்திரனின் எதிரியே, அரசே, உங்களுடைய மகன் பிரகலாதன் கூறியதில் எதுவும், என்னாலோ, வேறு எவராலோ கற்பிக்கப்படவில்லை. இயற்கையான பக்தித் தொண்டு தன்னிச்சையாக அவனுள் எழுந்துள்ளது. ஆகவே தயவு செய்து உங்களுடைய கோபத்தை விடுங்கள். எங்களையும் அநாவசியமாக கோபிக்காதீர்கள். ஒரு பிராமணனை இவ்வாறு அவமதிப்பது நல்லதல்ல.

பதம் 7.5.29
ஸ்ரீ-நாரத உவாச
குருணைவம் ப்ரதிப்ரோக்தோ பூய ஆஹாஸுர: ஸுதம்
ந சேத் குரு-முகீயம் தே குதோ ‘பத்ராஸதீ மதி:

ஸ்ரீ-நாரத: உவாச-நாரத முனி கூறினார்; குருனா—ஆசிரியரால்; ஏவம்- இவ்வாறு; ப்ரதிப்ரோக்த:—பதிலளிக்கப்பட்ட; பூய:-திரும்பவும்; ஆஹ-கூறினான்; அஸுர;-பெரிய அசுரனான இரண்ய கசிபு: ஸுதம்— மகனிடம்; ந-இல்லை; சேத்-என்றால்; குரு-முகீ- குருவின் வாயிலிருந்து வந்தது; இயம்-இது; தே-உனக்கு; குத:- எங்கிருந்து; அபத்ர—அமங்களமானவனே; அஸதீ-மிகவும் கெட்ட; மதி:-புத்தி.

ஸ்ரீ நாரதமுனி தொடர்ந்து கூறினார்: ஆசிரியரிடமிருந்து இந்த பதிலைப் பெற்ற இரண்யகசிபு, தன் மகன் பிரகலாதனிடம் பின் வருமாறு கூறினான்: அயோக்கியனே, நம் குடும்பத்திலேயே மிகவும் இழிவடைந்தவனே, இதை உன் ஆசிரியர்களிடமிருந்து பெறவில்லையாயின் வேறு எங்கிருந்து பெற்றாய்?

பதம் 7.5.30
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
மதிர் ந க்ருஷ்ணே பரத: ஸ்வதோ வா
மிதோ ‘பிபத்யேத க்ருஹ-வ்ரதானாம்
அதாந்த-கோபிர் விசதாம் தமிஸ்ரம்
புன: புனஸ் சர்வித-சர்வணானாம்

ஸ்ரீ-ப்ரஹ்ராத: உவாச-பிரகலாத மகாராஜன் கூறினார்: மதி:-புத்தி; ந – ஒரு போதும் இல்லை; க்ருஷ்ணே-பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம்; பரத:-மற்றவர்களிடமிருந்தும்; ஸ்வத:-அவர்களது சொந்த அறிவினாலும்; வா—அல்லது; மித-இவையிரண்டும் கலந்ததாலோ: அபிபத்யேத— வளர்கிறது; க்ருஹ-வ்ரதானாம்-பௌதிகமான தேகாபிமானத்தில் அளவுக்கதிகமாக பற்றுக் கொண்டுள்ளவர்களின்; அதாந்த— கட்டுப்படுத்தப்படாத; கோபி:- புலன்களால்; விசதாம்-நுழைந்து; தமிஸ்ரம் – நரக வாழ்வு: புன:-மீண்டும்; புன:மீண்டும்; சர்வித- மெல்லப்பட்டதையே; சர்வணானாம்—மெல்லுபவர்கள்.

பிரகலாத மகாராஜன் பதிலளித்தார்: கட்டுப்பாடற்ற புலன்களின் காரணத்தால் பௌதிக வாழ்வில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள், நரகச் சூழ்நிலைகளை நோக்கி முன்னேறிச் சென்று, மென்றதையே திரும்பத்திரும்ப மென்று கொண்டே இருக்கின்றனர். மற்றவர்களின் உபதேசங்களாலோ, அவர்களது சொந்த முயற்சியாலோ, அல்லது இவ்விரண்டின் சேர்க்கையாலோ கிருஷ்ணரிடம் அவர்களுக்கு நாட்டம் ஏற்படுவதே இல்லை.

பதம் 7.5.31
ந தே விது: ஸ்வார்த்த-கதிம் ஹி விஷ்ணும்
துராசயா யே பஹிர்-அர்த்த-மானின:
அந்தா யதாந்தைர் உபனீயமானாஸ்
தே ‘பீஸ-தந்த்ரியாம் உரு-தாம்னி பக்தா:

ந – இல்லை; தே-அவர்கள்; விது:-அறிவார்கள்; ஸ்வ—அர்த்த— கதிம்-வாழ்வின் இறுதி இலட்சியம் அல்லது தங்களது சொந்த நலன்; ஹி – கட்டாயம்; விஷ்ணும் – பகவான் விஷ்ணுவும், அவரது உலகும்; துராசயா:- இந்த ஜட உலகை அனுபவிக்கும் பேராசை கொண்டு; யே- யார்; பஹி:-புறப் புலன் பொருட்களை; அர்த்த-மானின:- பெரிதாக மதித்து; அந்தா:-குருடர்கள்: யதா-எவ்வாறு; அந்தை:- வேறு குருடர்களால்; உபனீயமானா:-வழிகாட்டப்படுகிறார்களோ; தே—அவர்கள்; அபி -என்றாலும்; ஈச-தந்த்ரியாம்-ஜட இயற்கையின் நியதிகளான கயிறுகளால்; உரு—மிகவும் வலிமையுடைய; தாம்னி- நூல்கள்; பத்தா:-பிணைக்கப்படுகின்றனர்.

பௌதிக வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற உணர்வில் உறுதியாக சிக்கிக் கொண்டிருப்பவர்களும், புறப் புலன் பொருட்களில் பற்றுக் கொண்டுள்ள அவர்களைப் போன்ற ஒரு குருடனைத் தங்களது தலைவனாக அல்லது குருவாக ஏற்றுக் கொண்டுள்ளவர்களுமான மனிதர்களால், ஆன்மீக உலகிற்கு திரும்பிச் சென்று, பகவான் விஷ்ணுவின் சேவையில் ஈடுபடுவதுதான் வாழ்வின் இலட்சியம் என்பதைப் புரிந்து கொள்ள இயலாது. ஒரு குருடனால் வழிகாட்டப்படும் மற்ற குருடர்கள் சரியான வழியை விட்டு விலகிச் சென்று ஒரு சாக்கடையில் விழுவது போல், பௌதிக பற்றுடைய ஒருவனால் வழிகாட்டப்படும் பௌதிக பற்றுடைய மற்றவர்கள், பலன் கருதும் செயல்களெனும் மிகவும் உறுதியான கயிறுகளால் பிணைக்கப்படுகின்றனர். இவ்வாறாக அவர்கள் மூவகைத் துன்பங்களை அனுபவித்துக் கொண்டு பௌதிக வாழ்வைத் தொடர்ந்து நடத்திக் கொண்டே போகின்றனர்.

பதம் 7.5.32
நைஷாம் மதிஸ் தாவத் உருக்ராமாங்ரிம்
ஸ்ப்ருசதி அனர்த்தாபகமோ யத்-அர்த்த:
மஹீயஸாம் பாத-ரஜோ-‘பிஷேகம்
நிஷ்கிஞ்சனானாம் ந வ்ருணீத யாவத்

ந – இல்லை; ஏஷாம்—இவர்களது ; மதி:- புத்தி: தாவத்—அவ்வளவு நீண்ட காலம்; உருக்ரம்-அங்ரிம்—அசாதாரண செயல்களைப் புரிபவர் என்று பிரசித்திப்பெற்ற புருஷோத்தமரின் தாமரைப் பாதங்களை; ஸ்ப்ருசதி-தொடுகிறான்; அனர்த்த—வேண்டாத விஷயங்களின்; அபகம்:- மறைவு; யத்-எதன்; அர்த்த:-இலட்சியம்; மஹீயஸாம் – மகாத்மாக்களான பக்தர்களின்; பாத-ரஜ:-பாத சுமலங்களின் புழுதியால்; அபிஷேகம்- அபிஷேகம்; நிஷ்கிஞ் சனானாம்—இந்த ஜட உலகுடன் எந்த பற்றும் இல்லாத பக்தர்களின்; ந—இல்லை; வ்ருணீத- ஒப்புக் கொள்வர்; யாவத்—அதுவரை.

பௌதிக களங்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டுள்ள ஒரு வைஷ்ணவருடைய தாமரைப் பாதங்களின் புழுதியைத் தங்கள் உடல்களின் மேல் பூசிக் கொண்டல்லாது, பௌதிக வாழ்வில் அதிக நாட்டம் கொண்டுள்ளவர்களால், தமது அசாதாரணமான செயல்களுக்காக புகழப்படுபவரான பகவானின் தாமரைப் பாதங்களில் பற்றுக் கொண்டவர்கள் ஆக முடியாது. கிருஷ்ண உணர்வினர் ஆகி, அவரது தாமரைப் பாதங்களில் இவ்வாறு சரணடைவதால் மட்டுமே ஒருவனால் பெளதிக களங்கத்திலிருந்து விடுபட முடியும்.

பதம் 7.5.33
இதி உக்த்வோபரதம் புத்ரம் ஹிரண்யகசிபு ருஷா
அந்தீக்குதாத்மா ஸ்வோத்ஸங்கான் நிரஸ்யத மஹீ-தலே

இதி-இவ்வாறு; உக்த்வா-பேசிவிட்டு; உபரதம்- நிறுத்திய;புத்ரம்–மகனிடம்; ஹிரண்யகசிபு:-இரண்யகசிபு: ருஷா-கடுங்கோபத்துடன்; அந்தீக்ருத-ஆத்மா—கோபம் புத்தியை மறைத்து குருடாக்க; ஸ்வ—உத்ஸங்காத்—அவனுடைய மடியிலிருந்து: நிரஸ்யத -வீசினான்; மஹீ-தலே – தரையில்,

பிரகலாத மகாராஜன் இவ்வாறு பேசிமுடித்து மெளனமானதும், கோபத்தால் குருடனாகி விட்ட இரண்யகசிபு பிரகலாதரைத் தன் மடியிலிருந்து தரையில் தள்ளினான்.

பதம் 7.5.34
ஆஹாமர்ஷ்-ருஷாவிஷ்ட: கஷாயீ-பூத-லோசன:
வத்யதாம் ஆஸ்வ் அயம் வத்யோ நிஹ்ஸாரயத நைர்ருதா:

ஆஹ-கூறினான்; அமர்ஷ-வெறுப்பு: ருஷா-கடுங்கோபம் ஆகியவற்றால்; ஆவிஷ்ட:- ஆட்டிப்படைக்கப்பட்டவனாய்; கஷாயீ -பூத -உருக்கிச் சிவந்த தாமிரம் போல்; லோசன:-கண்களை உடையவனாய்; வத்யதாம்-கொல்லப்படட்டும்; ஆக-உடனேயே; அயம் – இவன்; வத்ய:- கொல்லப்பட வேண்டியவனான; நிஹ்ஸாத யத- எடுத்துச் செல்லுங்கள்; நைர்ருதா:—அசுரர்களே.

கோபமும் வெறுப்பும் கொண்ட இரண்யகசிபு, உருக்கிய தாமிரம் போல் கண்கள் சிவக்க, தன் சேவகர்களைப் பார்த்து கூறினான்: அசுரர்களே, இச்சிறுவனை என்னிடமிருந்து எடுத்துச் செல்லுங்கள். இவன் கொல்லப்பட வேண்டியவன். உடனே இவனைக் கொன்று விடுங்கள்!.

பதம் 7.5.35
அயம் மே ப்ராத்ரு-ஹா ஸோ யம்
ஹித்வா ஸ்வான் ஸுஹ்ருதோ ‘தம:
பித்ருவ்ய-ஹந்து: பாதௌ யோ
விஷ்ணோர் தாஸவத் அர்ச்சதி

அயம்- இவன்; மே-என்; ப்ராத்ரு—ஹா-சகோதரனைக் கொன்றவன்; ஸ:-இவன்; அயம்-இந்த; ஹித்வா-விட்டுவிட்டு; ஸ்வான்-சொந்த; ஸுஹ்ருத:-நலன் விழைவோரை; அதம: மிகவும் இழிவான; பித்ருவ்ய -ஹந்து:-பெரியப்பனான இரண்யாக்ஷணனைக் கொன்றவனுடைய; பாதௌ-பாதங்களில்; ய:-யார்; விஷ்ணோ:- பகவான் விஷ்ணுவின்; தாஸ—வத்—சேவகன் போல்; அர்ச்சதி—சேவை செய்கிறான்.

சிறுவனான இந்த பிரகலாதன் என் சகோதரனைக் கொன்றவனாவான். ஏனெனில் என் பகைவனான பகவான் விஷ்ணுவின் பக்தித் தொண்டில் ஓர் அடிமை போல் சேவை செய்வதற்காக இவன் தன் குடும்பத்தையே விட்டுவிட்டான்.

பதம் 7.5.36
விஷ்ணோர் வா ஸாது அஸௌ கிம் நு கரிஷ்யதி அஸமஞ்ஜஸ: ஸௌஹ்ருதம் துஸ்த்யஜம் பித்ரோர் அஹாத் ய: பஞ்ச-ஹாயன:

விஷ்ணோ:-விஷ்ணுவிடம்; வா—அல்லது; ஸாது—நன்மை; அஸௌ-இவன்; கிம்- என்ன; நு—நிச்சயம்; கரிஷ்யதி—செய்வானா; அஸமஞ்ஜஸ:- நம்பத்தகுந்தவன் அல்ல; ஸௌஹ்ருதம்—அன்பான உறவை; துஸ்த்யஜம்-விடுவதற்குக் கடினமான; பித்ரோ: இவனது தாய், தந்தையரின்; அஹாத் -விட்டுவிட்டான்; ய:-எவன்; பஞ்ச- ஹாயன:- ஐந்து வயது நிரம்பியவனான.

பிரகலாதன் ஐந்து வயதே நிரம்பிய பாலகனாக இருந்தபோதிலும், அந்த இளம் வயதிலேயே இவன் தன் தந்தையுடனும், தாயுடனும் உள்ள பாசப் பிணைப்பை விட்டுவிட்டான். எனவே நிச்சயமாக இவன் நம்பத் தகுந்தவனல்ல. இவன் விஷ்ணுவிடம் விசுவாசமாக நடந்து கொள்வான் என்பதும் சந்தேகம்தான்.

பதம் 7.5.37
பரோ ‘பி அபத்யம் ஹித-க்ருத் யதௌஷதம்
ஸ்வ-தேஹஜோ ‘பி ஆமயவத் ஸுதோ ‘ஹித:
சிந்யாத் தத் அங்கம் யத் உதாத்மனோ ‘ஹிதம்
சேஷம் ஸுகம் ஜீவதி யத்- விவர்ஜனாத்

பர:- தன் குடும்பத்தைச் சேராதவனாக; அபி-இருப்பினும்; அபத்யம்-குழந்தை; ஹித- க்ருத்-நன்மை செய்யக் கூடியவனாக; யதா—எவ்வாறு; ஒளக்ஷதம்- மூலிகை: ஸ்வ-தேஹ-ஜ: -தன் சொந்த உடலிலிருந்து பிறந்துள்ள; அபி-போதிலும்; ஆமய-வத்- வியாதியைப் போல்; ஸுத:ஒரு மகன்; அஹித:-நலனை விரும்பாதவன்; சிந்யாத்- வெட்டிவிட வேண்டும்; தத்-அந்த; அங்கம் -உறுப்பை ; யத்—எது; உத-நிச்சயம்; ஆத்மன:-உடலுக்கு; அஹிதம்- உபயோகமற்ற; சேஷம்- எஞ்சியிருக்கும்; ஸுகம் -மகிழ்ச்சியோடு; ஜீவதி-வாழ்கிறது; யத்—எதை; விவர்ஜனாத் – துண்டித்து விடுவதால்.

வனத்தில் தோன்றும் ஒரு மூலிகை மானிட இனத்தைச் சேர்ந்ததல்ல என்றாலும், அது மனிதனுக்கு நன்மை பயப்பதால் அதை கவனமாகப் பாதுகாக்கிறோம். அதுபோலவே மருந்து போல் நன்மை பயப்பவன் அயலானாக இருப்பினும், அவனுக்கு மகனைப் போல் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மற்றொருபுறம், ஒருவனது உடலிலுள்ள ஓர் அங்கம் நோயினால் பீடிக்கப்படுமானால், அதை நீக்கிவிட வேண்டும். இதனால் மீதியுள்ள உடல் சுகமாக இருக்கும். அதுபோலவே, ஒருவனது சொந்த மகன் தன்னுடைய சொந்த உடலிலிருந்து பிறந்தவனாக இருப்பினும், கெடுதல் விளைவிப்பவனாக இருந்தால், அவனை விலக்கிவிட வேண்டும்.

பதம் 7.5.38
ஸர்வைர் உபாயைர் ஸ்ந்த்வ்ய: ஸம்போஜ-சயனாஸனை:
ஸுஹ்ருத்-லிங்க-தர சத்ருர் முனேர் துஷ்டம் இவேந்ரியம்

ஸர்வை:-எல்லா; உபாயை- வழிகளிலும்; ஹந்தவ்ய-கொல்லப் பட வேண்டும்; ஸம்போஜ -சாப்பிட்டுக் கொண்டு! சயன -உறங்கிக் கொண்டு; ஆஸனை:-அமர்ந்து கொண்டு; ஸுஹ்ருத் – லிங்க – தர: – நண்பனைப் போல் வேஷம் போடும்; சத்ரு-எதிரி; முனே – ஒரு முனிவரின்; துஷ்டம் – கட்டுக்கடங்காத; இவ-போல; இந்ரியம்- புலன்கள்.

ஆன்மீக முன்னேற்றத்தில் ஈடுபட்டுள்ள யோகிகளுக்கெல்லாம், அடங்காப் புலன்கள் எதிரிகளாக இருப்பது போலவே, ஒரு நண்பன் போல் காணப்படும் இந்த பிரகலாதன் எனக்கு அடங்காதவனாக இருப்பதால், இவன் எனது எதிரியாவான். எனவே இந்த எதிரி சாப்பிட்டுக் கொண்டோ, உட்கார்ந்து கொண்டோ அல்லது உறங்கிக் கொண்டோ இருந்தாலும், எவ்வாறாயினும் உடனே கொல்லப்பட வேண்டியவன் ஆவான்.

பதங்கள் 7.5.39 – 7.5.40
நைர்ருதாஸ் தே ஸமாதிஷ்டா பர்த்ரா வை சூல-பாணய:
திக்ம-தம்ஸ்ட்ர கராலாயாஸ் தாம்ர ஸ்மஸ்ரு சிரோருஹா
நதந்தோ பைரவம் நாதம் சிந்தி பிந்தீதி வாதின:
ஆஸீனம் சாஹனாஞ் சூலை:ப்ரஹ்ராதம் ஸர்வ-மர்மஸு

நைர்ருதா—அசுரர்கள்; தே-அவர்கள்; ஸமாதிஷ்டா:- நன்கு உத்தரவிடப்பட்டவர்களாய்; பர்த்ரா- தங்கள் எஜமானனால்; வை – நன்கு: சூல-பாணய:- சூலங்களைக் கையில் ஏந்திக் கொண்டு; திக்ம- மிகவும் கூரான: தம்ஷ்ட்ர – பற்கள்; கரால-மற்றும் பயங்கரமான; ஆஸ்யா-முகங்களுடன்; தாம்ர-ஸ்மஸ்ரு-தாமிரம் போன்ற மீசை; சிரோருஹா:- மற்றும் தலைமுடி; நதந்த:-கூவிக் கொண்டு: பைரவம் -பயங்கரமான: நாதம்-ஓசையெழுப்பி; சிந்தி-வெட்டு; பிந்தி – கூறுபோடு; இதி-இவ்வாறு; வாதின:-கூறிக் கொண்டு; ஆஸீனம்- மௌனமாக உட்கார்ந்திருந்த; ச – கூட: அஹனன்-தாக்கினர்; சூலை: சூலங்களால்; ப்ரஹ்ராதம்- பிரகலாதரை; ஸர்வ-மர்மஷு உடலிலுள்ள மிருதுவான பாகங்களை எல்லாம்.

இவ்வாறாக இரண்யகசிபுவின் சேவகர்களான அசுரர்கள் பிரகலாத மகாராஜனுடைய உடலின் மென்மையான பகுதிகளைத் தங்கள் சூலங்களால் தாக்கத் துவங்கினர். அந்த அசுரர்கள் எல்லோரும் அச்சமூட்டும் முகங்களுடனும், கூரிய பற்களுடனும் தாமிரம் போல் சிவந்த தாடிகளுடனும், சிவந்த கேசத்துடனும் இருந்தனர். இவ்வாறாக அவர்கள் மிகவும் அச்சமூட்டும் தோற்றங்களுடன் காணப்பட்டனர். அவர்கள், அவனை வெட்டுங்கள்! அவனைக் குத்துங்கள்! என்று முழக்கமிட்டபடி. பரமபுருஷரை தியானித்தப்படி மௌனமாக அமர்ந்திருந்த பிரகலாத மகாராஜனை தாக்கத் துவங்கினர்.

பதம் 7.5.41
பரே ப்ரஹ்மணி அனிர்தேஸ்யே பகவதி அகிலாத்மனி
யுக்தாத்மனி அஃபலா ஆஸன் அபுண்யஸ்யேவ ஸத்-க்ரியா:

பரே-பரமனில்; ப்ரஹ்மணி- பரிபூரணமான; அநிர்தேஸ்யே – புலன்களால் உணர முடியாத; பகவதி- புருஷோத்தமர்; அகில- ஆத்மனி- எல்லோருக்கும் பரமாத்மாவான; யுக்த- ஆத்மனி- யாருடைய மனம் லயித்திருந்ததோ அவர்மீது (பிரகலாதர்மீது); அஃபலா: -பலனில்லாமல்; ஆஸன்— இருந்தனர்; அபுண்யஸ்ய- புண்ணிய பலன்களைப் பெறாதவனின்; இவ-போல்; ஸத்-க்ரியா:-(தவம், யாகம் போன்ற) நற்செயல்கள்.

புண்ணிய பலன்கள் இல்லாத ஒருவன் சில நல்ல கர்மங்களைச் செய்தாலும் அது பலனளிக்காது. இவ்வாறாக பிரகலாத மகாராஜன் ஒரு பக்தர் என்பதால், அவர் மீது அசுரர்களால் பிரயோகிக்கப்பட்ட ஆயுதங்கள் எந்த கணிசமான விளைவையும் ஏற்படுத்தவில்லை. அவர், பௌதிக புலன்களால் உணரமுடியாதவரும், மாற்றமற்றவரும், முழு பிரபஞ்சத்திற்கும் ஆத்மாவும் ஆகிய பரமபுருஷருக்குச் சேவை செய்து கொண்டு, பௌதிக சூழ்நிலைகளால் பாதிக்கப்படாமல் அவரது தியானத்தில் முழுமையாக ஆழ்ந்திருந்தார்.

பதம் 7.5.42
ப்ரயாஸே ‘பஹதே தஸ்மின் தைத்யேந்ர: பரிசங்கித:
சகேர தத்-வதோபாயான் நிர்பந்தேன யுதிஷ்டிர

ப்ரயாஸே-முயற்சி; அபஹதே- பயனற்றுப் போனதால்;தஸ்மின்- அந்த: தைத்ய- இந்த:— அகரராஜனான இரண்யகசிபு; பரிசங்கித- (எவ்வாறு அவன் காப்பாற்றப்படுகிறான் எண்றெண்ணி) அச்சமடைத்து; சத்கார—வகுத்தான்; தத்-வத-உபாயான்—அவரைக் கொல்ல பல திட்டங்களை; நிர்பத்தேன-மன உறுதியுடன்; யுதிஷ்டிர – யுதிஷ்டிர மகாராஜனே.

எனது பிரியமுள்ள யுதிஷ்டிர மகாராஜனே, பிரகலாத மகாராஜனைக் கொல்ல அசுரர்கள் மேற்கொண்ட எல்லா முயற்சிகளும் பயனற்றுப் போனதால், அசுரராஜனான இரண்யகசிபு, மிகவும் அச்சமடைந்து, அவரைக் கொல்ல வேறு திட்டங்களை தீட்டத் துவங்கினான்.

பதங்கள் 7.5.43 – 7.5.44
திக்-கஜைர் தந்தசூ கேந்தரைர் அபிசாராவபாதனை:
மாயாபி: ஸன்னிரோதைஸ் ச கர-தானைர் அபோஜனை:
ஹிம-வாயு-அக்னி ஸலிலை: பர்வதாக்ரமணைர் அபி

ந சசாக யதா ஹந்தும் அபாபம் அஸுர: ஸுதம்
சிந்தாம் தீர்க்கதாம் ப்ராப்தஸ் தத்-கர்தும் நாப்யபத்யத

திக்-கஜை:-காலடியிலுள்ள எதையும் மிதித்து நொறுக்கப் பயிற்சியளிக்கப்பட்டிருந்த பெரிய யானைகளால்; தந்த- சூக -இந்ரை:-அரசனின் பயங்கர விஷப் பாம்புகளின் கடியால்; அபிசார -சூனிய மந்திரங்களால்; அவபாதனை:- மலையுச்சிலிருந்து உருட்டித் தள்ளியும்: மாயாபி:-மாயையினால்; ஸன்னிரோதை:சிறைவாசத்தால் ; ச-கூட; கர-தானை:-விஷம் கொடுப்பதால்; அபோஜனை:- பட்டினி போடுவதால்; ஹிம-குளிர்; வாயு -காற்று; அக்னி-நெருப்பு: ஸலிலை:- மற்றும் நீரால்; பர்வத -ஆக்ரமணை:-பெரிய பாறை, மலைகளால் நசுக்குவதால்; அபி-மேலும்: ந சசாக-முடியவில்லை; யதா — எப்பொழுது; ஹந்தும் – கொல்ல; அபாபம் – சிறிதும் பாவமற்ற; அஸுர:-அசுரன் (இரண்யகசிபு); ஸுதம் – தன் மகனை; சிந்தாம்— கவலையை; தீர்க – தமாம்—நீடித்து நிற்கும்; ப்ராப்த:-அடைந்தான்;, தத் -கர்தும் அதைச் செய்ய ; ந-இல்லை: அப்யபத்தை-முடிய.

பெரிய யானைகளின் பாதங்களுக்கடியில் தள்ளியும் பெரிய பயங்கரமான பாம்புக்களுக்கிடையில் தள்ளியும், ஜால வித்தைகளைப் பிரயோகித்தும், மலையுச்சியிலிருந்து உருட்டித் தள்ளியும், துஷ்ட மந்திரங்களைப் பிரயோகித்தும், விஷம் கொடுத்தும், பட்டினி போட்டும், கடுங்குளிர், காற்று, நெருப்பு, நீர் ஆகியவற்றில் அவரை உட்படுத்தியும், அவர் மீது பெரிய பாறைகளை வீசியும் தன் மகனை இரண்யகசிபுவால் கொல்ல முடியவில்லை. முற்றிலும் பாவமற்றவரான பிரகலாதருக்குத் தன்னால் எவ்விதத்திலும் பாதகம் செய்ய முடியாததைக் கண்ட இரண்யகசிபு, அடுத்து என்ன செய்வது என்று பெருங்கவலையில் மூழ்கினான்.

பதம் 7.5.45
ஏஷ மே பஹு-அஸாதூக்தோ
வதோபாயாஸ் ச நிர்மிதா:
தைஸ் தைர் த்ரோஹைர் அஸத்-தர்மைர்
முக்த: ஸ்வேநைவ தேஜஸா

ஏஷ:- இது: மே-எனது: பஹு-பல; அஸாது—உக்த:-கெட்ட வார்த்தைகளை; வத-உபாயா:—அவனைக் கொல்வதற்குப் பல உபாயங்களை; ச-மேலும்; நிர்மிதா:-தீட்டினேன்; தை:-அவற்றால்; தை:- அவற்றால்; திரோஹை:-வஞ்சகங்களால்; அஸத்-தர்மை:- வெறுக்கத்தக்க செயல்களால்; முக்த:விடுப்பட்டான்; ஸ்வேன -தன் சொந்த; ஏவ-நிச்சயம்; தேஜஸா -சக்தியினால்.

இரண்யகசிபு எண்ணினான்: நான் இந்த பிரகலாதனை தண்டிப்பதில் பல கெட்ட வார்த்தைகளை உபயோகித்து, அவனைக் கொல்ல பல வழிகளைக் கையாண்டு எவ்வளவோ முயற்சிகளைச் செய்தும் அவனை என்னால் கொல்ல முடியவில்லை. உண்மையில், இந்த கொடூரமான, வெறுக்கத்தக்க செயல்களால் அவன் சிறிதும் பாதிப்படையாமல், தனது சொந்த சக்தியினால் தன்னைக் காப்பாற்றிக் கொண்டான்.

பதம் 7.5.46
வர்த்தமானோ ‘விதூரே வை பாலோ ‘பி அஜட-தீர் அயம்
ந விஸ்மரதி மே ‘நார்யம் சுன: சேப இவ ப்ரபு:

வர்த்தமான:-இருந்து கொண்டு; அவிதூரே-மிகவும் தூரத்தில் இல்லாது; வை-நிச்சயம்; பால:-சிறு பாலகன்; அபி-என்றாலும்; அஜட -தீ:- சிறிதும் அச்சமற்ற நிலையில்; அயம்-இவன்; ந- இல்லை; விஸ்ரமதி -மறக்கிறான்; மே-எனது; அனார்யம் துர் நடத்தையை; சுன:-சேப:-நாயின் வளைந்த வாலை; இவ – போலவே; ப்ரபு:-எல்லாம் செய்ய வல்லவன்.

இவன் ஒரு பச்சிளம் பாலகன். எனக்கு மிக அருகில் இருக்கிறான். இருந்தும் சிறிதும் அச்சமற்ற நிலையில் இருக்கிறான். இவன், ஒரு போதும் நிமிர்த்த முடியாத நாயின் வளைந்த வாலைப் போல் இருக்கிறான். ஏனெனில் இவன் ஒருபோதும் எனது துர் நடத்தையை மறப்பதில்லை. மேலும் எஜமானராகிய பகவான் விஷ்ணுவுடன் தனக்கிருக்கும் சம்பந்தத்தையும் இவன் மறப்பதில்லை.

பதம் 7.5.47
அப்ரமேயானுபாவோ ‘யம் அகுதஸ்சித்-பயோ ‘மர:
நூனம் ஏதத்-விரோதேன ம்ருத்யுர் மே பவிதா ந வா

அப்ரமேய- எல்லையற்ற; அனுபாவ: -மகிமை; அயம்-இவன்; அகுதஸ்சித்- பய:-யாருக்கும், எதற்கும் அஞ்சாதவனாக இருப்பதால்; அமர:- மரணமற்றவன்; நூனம் -நிச்சயம்; ஏதத்-விரோதேன- இவனை பகைத்துக் கொண்டதால்; ம்ருத்யு:-மரணம்;மே-எனது; பவிதா- இருக்குமோ;நவா-இருக்காதா.

இச்சிறுவன் என்னுடைய எந்த தண்டனைக்கும் அஞ்சாதவனாக இருப்பதால், இவனுக்கு எல்லையற்ற பலம் இருப்பதாகத் தெரிகிறது. இவன் மரணமற்றவனைப் போல் காணப்படுகிறான். எனவே இவனிடம் கொண்ட பகைமையின் காரணத்தால் நான்தான் மடியப் போகிறேன். அல்லது ஒருவேளை இது நடக்காமலும் இருக்கலாம்.

பதம் 7.5.48
இதி தச்-சிந்தயா கிஞ்சின் ம்லான-ஸ்ரியம் அதோ-முகம்
சண்டாமர்காவ் ஔசனஸௌ விவிக்த இதி ஹோசது:

இதி – இவ்வாறு: தத்—சிந்தயா—பிரகலாதரின் நிலையைக் கண்டு பயமும், கவலையும் கொண்டு; கிஞ்சித் -ஓரளவு: ம்லான-இழந்து; ஸ்ரியம் -தேகத்தின் பொலிவை; அத:-முகம் தலையை தொங்கப் போட்டுக் கொண்டு; ஷண்ட-அமர்க்கௌ-சண்டனும், அமர்க்கனும்; ஒளசனஸௌ—சுக்ராச்சாரியாரின் மகன்களான; விவிக்தே-இரகசிய மான ஓரிடத்தில்; இதி-இவ்வாறு ; ஹ-தான்; ஊசது:-கூறினர்.

இவ்வாறு எண்ணிய அசுரராஜன் வாடிய முகத்துடன், உடலின் காந்தியை இழந்து, தலையைத் தொங்கப் போட்டுக் கொண்டு மௌனமாக இருந்தான். பிறகு சுக்ராச்சார்யரின் இரு மகன்களான சண்டனும், அமர்க்கனும் ரகசியமாக அவனிடம் பேசினர்.

பதம் 7.5.49
ஜிதம் த்வயைகேன ஜகத்-த்ரயம் ப்ருவோர்
விஜ்ரும்பண-த்ரஸ்த-ஸமஸ்த- திஷ்ண்யபம்
ந தஸ்ய சிந்த்யம் தவ நாத சக்ஷ்வஹே
ந வை சிசூனாம் குண-தோஷயோ: பதம்

ஜிதம் – ஜயிக்கப்பட்டுள்ளன; த்வயா—உங்களால்; ஏகேன- தனி ஒருவராக;ஜகத்—த்ரயம்— மூவுலகங்களும்; ப்ருவோ- புருவங்களின்; விஜ்ரும்பண-நெறிவினாலேயே; த்ரஸ்த-பயங்கொண்டு; ஸமஸ்த- எல்லா; திஷ்ண்யபம்—அனைத்து லோகங்களின் தலைவர்களும்; ந- இல்லை; தஸ்ய-அவனிடமிருந்து; சிந்த்யம்—கவலைப்படுவதற்கு; தவ -தங்களுக்கு; நாத-தலைவரே; சக்ஷ்வஹே-தாங்கள் நினைக்கிறோம்; ந – அல்லது; வை-நிச்சயம்; சிசூனாம்- குழந்தைகளுடைய; குண-தோஷயோ: -நற்குணம் அல்லது குற்றம்; பதம்-இந்த விஷயம்.

தலைவரே, தங்களுடைய புருவங்கள் அசைவதைக் காண்பதற்கே லோக பாலகர்கள் எல்லோரும் மிகவும் அஞ்சுவதை நாங்கள் அறிவோம். யாருடைய உதவியும் இல்லாமல் மூவுலகங்களையும் நீங்கள் வென்றிருக்கிறீர்கள். எனவே உங்களுடைய வருத்தத்திற்கோ, பயத்திற்கோ எந்த ஒரு காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை. பிரகலாதனைப் பொருத்தவரை, அவன் ஒரு பாலகனாவான். உங்களுடைய கவலைக்கு அவன் ஒரு காரணமே அல்ல. அவனுடைய நல்ல அல்லது கெட்ட குணங்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது.

பதம் 7.5.50
இமம் து பாசைர் வருணயஸ்ய பத்வா
நிதேஹி பீதோ ந பலாயதே யதா
புத்திஸ் ச பும்ஸோ வயஸார்ய-ஸேவயா
யாவத் குருர் பார்கவ ஆகமிஷ்யதி

இமம்- இதை; து-ஆனால்; பாசை:-பாசத்தால்; வருணஸ்ய- வருணன் என்ற தேவருடைய; பத்வா-கட்டி: நிதேஹி—(இவனை) வைத்திருங்கள்; பீத:-பயந்து; ந-இல்லை; பலாயதே -ஓடுகிறான்; யதா—எவ்வாறு; புத்தி:-புத்தி; ச-கூட; பும்ஸ-ஒருவனின்; வயஸா—வயது முதிர்ச்சியால்; ஆர்ய—அனுபவம் மிக்க மனிதர்களால்; ஸேவயா-சேவையால்; யாவத்-அதுவரை; குரு:-நம் குரு; பார்கவ:- சுக்ராச்சாரியர்: ஆகமிஷ்யதி – வருவார்.

நம்முடைய குரு சுக்ராச்சாரியர் வரும்வரையில் இச்சிறுவனை வருணப் பாசத்தால் கட்டி வைத்து விடுங்கள். அதனால் இவன் பயந்து ஓடிவிடாமல் இருப்பான். எப்படியும், காலத்தால் இவன் சிறிது வளர்ந்தவனாகி, நமது உபதேசங்களை கிரகித்துக் கொண்டு அல்லது நமது குருவிற்குச் சேவை செய்து கொண்டு இருந்தால், இவன் தன் எண்ணங்களை மாற்றிக் கொள்வான். எனவே கவலைப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை.

பதம் 7.5.51
ததேதி குரு-புத்ரோக்தம்
அனுக்ஞாயேதம் அப்ரவீத்
தர்மோ ஹி அஸ்யோபதேஷ்டவ்யோ
ராஜ்ஞாம் யோ க்ருஹ-மேதினாம்

ததா – இவ்விதமாக; இதி-இவ்வாறு; குரு-புத்ர -உக்தம் சுக்ராச்சாரியரின் மகன்களான சண்டன் மற்றும் அமர்க்கனால் உபதேசிக்கப்பட்டு; அனுக்ஞாய— ஏற்றுக்கொண்டு; இதம்- இதை; அப்ரவீத்— கூறினான்; தர்ம:-கடமை, தர்மம்; ஹி- நிச்சயம்; அஸ்ய- பிரகலாதருக்கு; உபதேஷ்டவ்ய:-போதிக்கப்பட வேண்டும்; ராஜ்ஞம்— அரசர்களின்; ய:-எது ; க்ருஹ -மேதினம் குடும்பவாழ்வில் விருப்பம் உள்ளவர்களுக்கு.

தன் குருபுத்திரர்களான சண்டன் மற்றும் அமர்க்கனின் இவ்வுபதேசங்களைக் கேட்ட இரண்யகசிபு அதற்குச் சம்மதித்து, ராஜ குடும்பத்தினரால் பின்பற்றப்படும் தர்ம விதிமுறைகளைப் பற்றி பிரகலாதருக்கு உபதேசிக்கும்படி அவர்களை கேட்டுக் கொண்டான்.

பதம் 7.5.52
தர்மம் அர்த்தம் ச காமம் ச நிதராம் சானுபூர்வச:
ப்ரஹ்ராதோயோசதூ ராஜன் ப்ரஸ்ரிதாவனதாய ச

தர்மம்-பௌதிக கடமை:அர்த்தம்- பொருளதார முன்னேற்றம்:ச -மற்றும்; காமம்-புலன் நுகர்வு: ச-மேலும் : நிதராம் -எப்பொழுதும்; ச-கூட; அனுபூர்வச:- வரிசைக்கிரமமாக: ப்ரஹ்ராதாய-பிரகலாதருக்கு; ஊசதூ:-அவர்கள் கூறினர்; ராஜன்-அரசே; ப்ரஸ்ரித- பணிவும்: அவனதாய—அடக்கமும்; ச-கூட

அதன்பிறகு சண்டனும், அமர்க்கனும், பௌதிக தர்மம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு ஆகியவற்றைப் பற்றி, பணிவும் அடக்கமும் மிக்க பிரகலாத மகாராஜனுக்கு இடையறாதும், கிரமம் படியும் கற்பித்தனர்.

பதம் 7.5.53
யதா த்ரி-வர்கம் குருபிர் ஆத்மனே உபசிக்ஷிதம்
ந ஸாது மேனே தச்-சிக்ஷாம் த்வந்வாராமோபவர்ணிதம்

யதா–எவ்வாறு: த்ரி-வர்கம்-மூன்று வழிகள் (தர்மம், அர்த்தம், காமம்): குருபி:ஆசிரியர்களால்: ஆத்மனே -தனக்கு (பிரகலாதருக்கு); உபசிக்ஷிதம்- போதிக்கப்பட்டது; ந-இல்லை; ஸாது-உண்மையில் சிறந்தது ; மேனே—என்று எண்ணினார்;த்த்–சிக்ஷாம்—அந்த கல்வியில்; த்வந்தவ-ஆராம-(நட்பு. பகை என்ற) இருமையில் இன்புறு பவர்களால்; உபவர்ணிதாம்-விதிக்கப்பட்டுள்ளது.

சண்டனும், அமர்க்கனும் பிரகலாத மகாராஜனுக்கு, தர்மம், பொருளாதார முன்னேற்றம், புலன் நுகர்வு ஆகிய மூன்று வகையான பௌதிக முன்னேற்றங்களைப் பற்றி உபதேசித்தனர். ஆனால் இத்தகைய உபதேசங்களைவிட மேலான நிலையில் இருந்த பிரகலாதர் அவற்றை விரும்பவில்லை. ஏனெனில் இத்தகைய உபதேசங்கள் பௌதிக விவகாரங்களின் இருமையை அடிப்படையாகக் கொண்டவையாகும் பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகியவற்றைக் கொண்ட ஒரு பௌதிகமான வாழ்வு முறையில் இவை ஒருவனை அழைத்துச் செல்கின்றன.

பதம் 7.5.54
யதாசார்ய: பராவ்ருத்தோ க்ருஹமேதீய-கர்மஸு
வயஸ்யைர் பாலகைஸ் தத்ர ஸோபஹூத க்ருத-க்ஷணை:

யதா – எப்பொழுதும்; ஆசார்ய:-ஆசிரியர்கள்; பராவ்ருத்த:-ஈடுபட்டனரோ; க்ருஹ-மேதீய- குடும்ப வாழ்வில்; கர்மஸு-கடமைகளில்; வயஸ்யை:- அவருக்குச் சம வயதுடைய நண்பர்களால்; பாலகை:- சிறுவர்களான; தத்ர—அங்கு; ஸ:-அவர் (பிரகலாதர்); அபாஹூத:- அழைக்கப்பட்டார்; க்ருத—க்ஷணை:-அவகாசம் பெற்ற.

ஆசிரியர்கள் குடும்ப விவகாரங்களை கவனிப்பதற்காக வீட்டிற்குப் போயிருந்தபோது, விளையாட அவகாசம் பெற்ற, பிரகலாத மகாராஜனுக்குச் சம வயதுடைய மாணவர்கள் அவரை விளையாட அழைத்தனர்.

பதம் 7.5.55
அத தாஞ் ஸ்லக்ஷ்ணயா வாசா ப்ரத்யாஹுய மாஹா-புத:
உவாச வித்வாம்ஸ் தன்-நிஷ்டாம் க்ருபயா ப்ரஹஸன் இவ

அத-பிறகு: தான்—பள்ளித் தோழர்களுக்கு: ஸ்லணயா -மிகவும் இனிய; வாசா-வார்த்தைகளால்; ப்ரத்யாஹீய-கூறினார்; மஹா- புத:-கல்விக், கேள்விகளிலும், ஆன்மீக உணர்விலும் மிகவும் முன்னேறிய பிரகலாதர் (மஹா என்றால் “சிறந்த”, என்றும், புத என்றால் “கல்விமான்” என்றும் பொருள்படும்); உவாச-கூறினார்; வித்வான்— மிகவும் கற்றறிந்தவர்; தந்-நிஷ்டாம்—இறையுணர்வு மார்கத்தை; க்ருபயா-மிகவும் கருணை கொண்டு; ப்ரஹஸன்-சிரித்துக்கொண்டு; இவ-போல்.

அப்போது மகா புத்திமானும், பண்டிதருமாகிய பிரகலாத மகாராஜன், தமது வகுப்பறைத் தோழர்களைப் பார்த்து, சிரித்துக் கொண்டு, இனிய மொழியில், பௌதிக வாழ்வு முறையின் பயனற்ற தன்மையைப்பற்றி அவர்களுக்கு போதிக்கத் துவங்கினார். அவர்களிடம் மிகவும் இரக்கம் கொண்ட அவர், பின்வருமாறு அவர்களுக்கு உபதேசிக்கலானார்.

பதங்கள் 7.5.56 – 7.5.57
தே து தத் -கௌரவாத் ஸர்வே த்யக்த-க்ரீடா-பரிச்சதா:
பாலா அதூஷித-தியோ த்வந்வாராமேரிதேஹிதை:

பர்யுபாஸத ராஜேந்ர தன்-ன்யஸ்த-ஹ்ருதயேக்ஷணா:
தான் ஆஹ கருணோ மைத்ரோ மஹா-பாகவதோ ‘ஸுர:

தே-அவர்கள்; து-நிச்சயம்; தத்-கௌரவாத்- (பக்தர் என்ற காரணத்தால்) பிரகலாதரின் வார்த்தைகளில் பெருமதிப்பு வைத்து; ஸர்வே-அவர்கள் எல்லோரும்; த்யக்த்வா—விட்டுவிட்டு: க்ரீடா- பரிச்சதா:-விளையாட்டுப் பொருட்களை; பாலா:-அச்சிறுவர்கள்; அதூஷித-திய:-(தங்கள் தந்தைகளைப் போல்) புத்தி அவ்வளவாக களங்கமடையாதவர்களான; தீவந்த்வ -இருமையில்: ஆராம- இன்புறுபவர்களின் (ஆசிரியர்களான சண்டனும், அமர்க்கனும்); ஈரித— உபதேசங்களால்; ஈஹிதை:-மற்றும் செயல்களால்; பர்யுபாஸத சுற்றி உட்கார்ந்து கொண்டனர்; ராஜ-இந்ர-யுதிஷ்டிர மகாராஜனே; தத்— அவரிடம்; ன்யஸ்த—அளித்துவிட்ட; ஹ்ருதய – ஈக்ஷண:-தங்கள் மனதையும், கண்களையும்; தான்—அவர்களிடம்; ஆஹ – கூறினார்; கருண:-மிகவும் கருணை கொண்ட; மைத்ர:-உண்மை நண்பர்; மஹா-பாகவத:-பரமபக்தர்; ஆஸுர:—ஓர் அசுர தந்தைக்குப் பிறந்த பிரகலாத மகாராஜன்.

என் அருமை யுதிஷ்டிர மகாராஜனே, எல்லாச் சிறுவர்களும் பிரகலாத மகாராஜனிடம் அதிக அன்பும் மரியாதையும் கொண்டிருந்தனர். அவர்களுடைய இளம் வயதின் காரணத்தால், வெறுக்கத்தகுந்த இருமையிலும், உடல் சுகத்திலும் நாட்டம் கொண்டுள்ள அவர்களுடைய ஆசிரியர்களின் செயல்களாலும், போதனைகளாலும் அவர்கள் அவ்வளவாக களங்கம் அடைந்திருக்கவில்லை. இவ்வாறாக அச்சிறுவர்கள் தங்களுடைய விளையாட்டுப் பொருட்களை விட்டுவிட்டு, பிரகலாத மகாராஜன் கூறுவதைக் கேட்பதற்காக அவரைச் சுற்றி அமர்ந்து கொண்டனர். அவர்களது மனமும், கண்களும் பிரகலாதர் மீது நன்கு லயித்திருக்க, அவர்கள் மிகவும் ஆவலுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தனர். பிரகலாத மகாராஜன் ஓர் அசுர குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், சிறந்த பக்தராக இருந்ததால், அந்த அசுரர்களின் நலனையே அவர் நாடினார். இவ்வாறாக அவர் பௌதிக வாழ்வின் பயனற்ற தன்மையைப் பற்றி அவர்களுக்கு உபதேசிக்கத் துவங்கினார்.


ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “இரண்யகசிபுவின் தெய்வப் புதல்வரான பக்தப் பிரகலாதன்” எனும் தலைப்பைக் கொண்ட ஐந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare