அத்தியாயம் – 4
இரண்யகசிபு பிரபஞ்சத்தை
பீதியடையச் செய்தல்
பதம் 7.4.1
ஸ்ரீ-நாரத உவாச
ஏவம் வ்ருத: சத-த்ருதிர் ஹிரண்யகசிபுபோர் அத
ப்ராதாத் தத்-தபஸா ப்ரீதோ வராம்ஸ் தஸ்ய ஸுதுர்லபான்
ஸ்ரீ -நாரத:உவாச-ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்; ஏவம்—இவ்வாறு; வ்ருத:- வேண்டப்பட்ட; சத -த்ருதி: -பிரம்ம தேவர்; ஹிரண்யகசியோ:- இரண்யகசிபுவின்; அத-பிறகு; ப்ராதாத் அளித்தார்; தத்- அவனது; தபஸா – கடினமான தவங்களால்; ப்ரீத: – திருப்தியடைந்து; வரான்—வரங்களை; தஸ்ய-இரண்யகசிபுவுக்கு; ஸு – துர்லபான்- அடைவதற்கு மிகவும் அரிதான.
நாரதமுனி தொடர்ந்து கூறினார்: பிரம்ம தேவர் இரண்யகசிபுவின் கடுந்தவங்களால் மிகவும் திருப்தியடைந்தார். ஆகவே வரங்கள் வேண்டப்பட்ட பொழுது, அத்தகைய வரங்களை அடைவது மிகவும் அரிது என்றாலும், அவற்றை அவர் அருளினார்.
பதம் 7.4.2
ஸ்ரீ-ப்ரஹ்மோவாச
தாதேமே துர்லபா: பும்ஸாம் யான் வ்ருணீஷே வரான் மம்
ததாபி விதராமி அங்க வரான் யத்யபி துர்லபான்
ஸ்ரீ – ப்ரஹ்மா உவாச-பிரம்மதேவர் கூறினார்; தாத-மகனே; இமே – இந்த எல்லா; துர்லபா:-அடைவதற்கு மிகவும் அரிதான; பும்ஸாம்-மனிதர்களால்; யான்-எவைகளை; வ்ருணீஷே-நீ கேட்கிறாயோ; வரான்—வரங்களை: மம – என்னிடமிருந்து; ததாபி- இருந்தாலும்; விதராமி-நான் அளிக்கிறேன்; அங்க-இரண்யகசிபுவே; வரான் — வரங்களை; யத்யபி – என்றாலும்; துர்லபான் – பொதுவாக யாருக்கும் கிடைக்காதவை.
பிரம்மதேவர் கூறினார்: இரண்யகசிபுவே, நீ கேட்டுள்ள இந்த வரங்களை அடைவது பெரும்பாலான மனிதர்களுக்கு மிகக் கடினமாகும். ஆயினும் மகனே, பொதுவாக இவ்வரங்கள் யாருக்கும் கிடைக்காதவை என்றாலும், இவற்றை நான் உனக்கு அளிக்கிறேன்.
பதம் 7.4.3
ததோ ஜகாம பகவான் அமோகானுக்ரஹோ விபு:
பூஜிதோ ‘ஸுர-வர்யேண ஸ்தூயமான: ப்ரஜேஸ்வரை:
தத:-பிறகு; ஜகாம – புறப்பட்டுச் சென்றார்; பகவான் – மிகவும் சக்திவாய்ந்த பிரம்மதேவர்; அமோக – பொய்க்காத; அனுக்ரஹ – வரங்களை அருள்பவரான: விபு:-இப்பிரபஞ்சத்திலேயே பரமானவர்; பூஜித:- பூஜிக்கப்பட்டு; அஸுர-வர்யேண—அசுரர்களில் சிறந்த இரண்யகசிபுவினால்; ஸ்தூயமான:-போற்றப்பட்டு; ப்ரஜா-ஈஸ்வரை:- வெவ்வேறு கிரகங்களுக்கு அதிபதிகளான பல தேவர்களால்,
பிறகு பொய்க்காத வரங்களை அளிப்பவரான பிரம்மதேவர், அசுரர்களில் சிறந்தவனான இரண்யகசிபுவால் பூஜிக்கப்பட்டும், சிறந்த முனிவர்களாலும், சாதுக்களாலும் போற்றப்பட்டும், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
பதம் 7.4.4
ஏவம் லப்த- வரோ தைத்யோ பிப்ரத் தேமமயம் வபு:
பகவதி அகரோத் த்வேஷம் ப்ராதுர் வதம் அனுஸ்மரன்
ஏவம்- இவ்வாறு; லப்த-வர:-அவன் விரும்பிய வரத்தைப் பெற்ற; தைத்ய:-இரண்யகசிபு; பிப்ரத்-கிடைக்கப்பெற்று; ஹேம-மயம்:- தங்கத்தைப் போல் பிரகாசிக்கும்; வபு:-ஒருடல்; பகவதி- பரமபுருஷரான பகவான் விஷ்ணுவிடம்; அகரோத்-பாராட்டி வந்தான்; த்வேஷம் – பகைமை; ப்ராது: வதம்-தன் சகோதரனின் கொலையை: அனுஸ்மரன்—எப்போதும் நினைத்து நினைத்து.
இவ்வாறு பிரம்மதேவரால் ஆசீர்வதிக்கப்பட்டு, ஒளிமயமான பொன்னிற மேனியைப் பெற்ற அசுரனான இரண்யகசிபு, தன் சகோதரனின் மரணத்தைத் தொடர்ந்து நினைவிற்கொண்டதால், பகவான் விஷ்ணுவிடம் பகைமை கொண்டவனானான்.
பதங்கள் 7.4.5 – 7.4.7
ஸ விஜித்ய திச: ஸர்வா லோகாம்ஸ் ச த்ரீன் மஹாஸுர:
தேவாஸுர-மனுஷ்யேந்ர கந்தர்வ-கருடோரகான்
ஸித்த-சாரண-வித்யாதரான் ரிஷீன் பித்ரு-பதின் மனூன்
யக்ஷ-ரக்ஷ:-பிசாசேசான் ப்ரேத-பூத-பதீன் அபி
ஸர்வ-ஸத்வ-பதீன் ஜித்வா வசம் ஆனீய விஸ்வ-ஜித்
ஜஹார லோக-பாலானாம் ஸ்தானானி ஸஹ தேஜஸா
ஸ:-அவன்; விஜித்ய-வெற்றி கொண்டு; திச:-திக்குகளையும்; ஸர்வா:- எல்லா; லோகான்—கிரக அமைப்புக்களை; ச-கூட; த்ரீன் -மூன்று (மேல், மத்திய, கீழ்); மாஹா-அஸுர:-பெரிய அசுரன்; தேவ -தேவர்கள்; அஸுர—அசுரர்கள்; மனுஷ்ய-மனிதர்களின்; இந்ர -அரசர்கள்; கந்தர்வ -கந்தர்வர்கள்; கருட -கருடர்கள்; சாரண – சாரணர்கள்; வித்யதரான் – வித்யாதரர்கள்; ரிஷின் – மாமுனிவர்கள் மற்றும் சாதுக்கள்; பித்கு – பதீன் – யமராஜன் மற்றும் பிதாக்களின் மற்ற தலைவர்கள்; மனூன்-எல்லா மனுக்கள்; யக்ஷ – யக்ஷர்கள்; ரக்ஷ:- இராட்சஸர்கள்; பிசாச – ஈசான் – பிசாசுகளின் தலைவர்கள்; ப்ரேத- பிரேதங்களின்; பூத-மற்றும் பூதங்களின்; பதீன்-தலைவர்கள்; அபி- கூட ; ஸர்வ- ஸத்வ – பதீன் – எல்லாக் கிரகங்களின் தலைவர்களையும்; ஜித்வா – ஜயித்து வசம் – ஆனீய – தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து; விஸ்வ – ஜித்-முழு பிரபஞ்சத்தையும் ஜயிக்கக் கூடிய; ஜஹார – அபகரித்துக் கொண்டான்; லோக – பாலானாம்-பிரபஞ்ச விவகாரங்களை நிர்வகிக்கும் தேவர்களின்; ஸ்தானாளி—இடங்கள்; ஸஹ- உடன்; தேஜஸா-அவர்களுடைய எல்லா சக்திகளையும்.
இரண்யகசிபு முழு பிரபஞ்சத்தையும் கைப்பற்றியவனானான். உண்மையில் சக்தி வாய்ந்த அந்த அசுரன், மனிதர்கள், கந்தர்வர்கள், கருடர்கள், மகா ஸர்பங்கள், சித்தர்கள், சாரணர்கள், வித்யாதரர்கள்,மாமுனிவர்கள், யமராஜன், மனுக்கள், யக்ஷர்கள், இராட்சஸர்கள், பிசாசுகள் மற்றும் அவற்றின் தலைவர்கள் மற்றும் பேய், பூதங்களின் தலைவர்கள் ஆகியோரின் கிரகங்கள் உட்பட, மேல், மத்திய, கீழ் ஆகிய மூவுலகங்களையும் வெற்றி கொண்டான். எங்கெல்லாம் ஜீவராசிகள் உள்ளனவோ அவ்வெல்லாக் கிரகங்களின் அதிபதிகளையும் அவன் வெற்றி கொண்டு தன் வசமாக்கிக் கொண்டான். எல்லோருடைய உலகங்களையும் வெற்றி கொண்ட அவன், அவர்களுடைய சக்திகளையும், செல்வாக்குகளையும் பறித்துக் கொண்டான்.
பதம் 7.4.8
தேவோத்யான-ஸ்ரியா ஜுஷ்டம் அத்யாஸ்தே ஸ்ம த்ரி-பிஷ்டபம்
மஹேந்ர-பவனம் ஸாக்ஷான் நிர்மிதம் விஸ்வகர்மணா
த்ரைலோக்ய-லக்ஷ்மி-ஆயதனம் அத்யுவாஸாகிலர்த்திமத்
தேவ – உத்யான-பிரசித்திபெற்ற தேவலோகத்து நந்தவனம்; ஸ்ரியா- ஐசுவரியங்களால்; ஜூஷ்டம் – மேலும் வளப்படுத்தப்பட்ட; அத்யாஸ்தே-ஸ்ம – வசித்து வந்தான்; த்ரி-பிஷ்டபம்-பல்வேறு தேவர்கள் வாழும் உயர்கித அமைப்பு; மஹேந்ர -பவனம்-சுவர்க்க ராஜனான இந்திரனின் அரண்மனை; ஸாக்ஷாத்-தானே; நிர்மிதம் – நிர்மாணிக்கப்பட; விஸ்வகர்மணா—தேவ சிற்பி விஸ்வகர்மாவினால்; த்ரைலோக்ய- மூவுலங்களின்; லக்ஷ்மீ – ஆயதனம்- அதிர்ஷ்ட தேவதையின் வசிப்பிடம் அத்யுவாஸ – வாழ்ந்து வந்தான்; அகில – ருத்தி – மத் – முழு பிரபஞ்சத்தின் எல்லா ஐசுவரியங்களையும் உடைய.
எல்லா ஐசுவரியங்களையும் பெற்றிருந்த இரண்யகசிபு, தேவர்களால் அனுபவிக்கப்படுவதும், புகழ்பெற்ற நந்தவன தோட்டத்துடன் கூடியதுமான சுவர்க்கத்தில் வாழத் துவங்கினான். உண்மையில் சுவர்க்க ராஜனான இந்திரனின் செல்வம் கொழிக்கும் அரண்மனையில் அவன் வாழ்ந்தான். தேவ சிற்பியான விஸ்வகர்மாவால் நேரடியாக வடிக்கப்பட்டிருந்த அந்த அரண்மனை, முழு பிரபஞ்சத்தின் அதிர்ஷ்ட தேவதையே அங்கு வாழ்ந்ததுபோல் அழகாக வடிக்கப்பட்டிருந்தது.
பதங்கள் 7.4.9 – 7.4.12
யத்ர வித்ரும-ஸோபானா மஹா-மாரகதா புவ:
யத்ர ஸ்ஃபாடிக-குட்யானி வைதூர்ய-ஸ்தம்ப-பங்க்தய:
யத்ர சித்ர-விதானானி பத்ராகாஸனானி ச
பய:-ஃபேன-நிபா: சய்யா முக்தாதாம-பரிச்சதா:
கூஜத்பிர் நூபுரைர் தேவ்ய: சப்த-யந்த்ய இதஸ் தத:
ரத்ன-ஸ்தலீஷு பஸ்யந்தி ஸுததீ: ஸுந்தரம் முகம்
தஸ்மின் மஹேந்ர-பவனே மஹா-பலோ
மஹா-மணா நிர்ஜித-லோக ஏக ராட்
ரேமே ‘பிவந்யாங்ரி-யுக: ஸுராதிபி:
ப்ரதாபிதைர் ஊர்ஜித- சண்ட-சாஸன:
யத்ர—எனக்கு (இந்திரனின் மாளிகை); வித்ரும-ஸோபானா:- பவளத்தால் செய்யப்பட்ட படிக்கட்டுகள்; மஹா-மாரகதா:- மரகதம் பதிக்கப்பட்டு; புவ: தரைகள்; யத்ர – எங்கு; ஸ்ஃபாடிக-பளிங்கு; குட்யானி-சுவர்கள்; வைதூர்ய-வைடூரியத்தாலான; ஸ்தம்ப – தூண்களின்; பங்க்தய:-வரிசைகள்; யத்ர – எங்கு; சித்ர – அற்புதமான; விதானானி- விதானங்கள்; பத்மராக – சிவப்புக்கற்கள் பதிக்கப்பட்ட; ஆஸனானி-ஆசனங்கள்; ச – கூட; பய:-பாலின்; பேன – நுரை; நிபா:- போன்ற; சய்யா:- மஞ்சங்கள்; முக்தாதாம-முத்துக்களாலான; பரிச்சதா:-கரைகளுடைய; கூஜத்பி:-ஓசையெழுப்பும்; நூபுரை:- கொலுகளுடன்; தேவ்ய:-தேவலோகப் பெண்கள்; சப்த – யந்திய;- இனிய ஓசையை எழுப்பிக் கொண்டு; இத: தத: – -இங்குமங்கும்; ரத்ன – ஸ்தலீஷு—இரத்தினங்களாலும், மணிகளாலும் இழைக்கப்பட்ட இடங்களில்: பஸ்யந்தி-பார்த்துக் கொண்டனர்; ஸு – ததீ: – அழகிய பற்களையுடைய; ஸுந்தரம் – மிகவும் அழகான; முகம்— முகங்களை; தஸ்மின்—அதில்; மஹேந்ர-பவனே – சுவர்க்க ராஜனின் மாளிகைகள்: மஹா-பல:-வலிமைமிக்க; மஹா – மனா:மிக்க யோசனையுடைய; நிர்ஜித-லோக:- எல்லோரையும் அடக்கியாண்ட: ஏசு-ராட்-சக்திவாய்ந்த சக்ரவர்த்தி; ரேமே-அனுபவித்தான்; அபிவந்ய-பூஜிக்கப்பட்டு: அங்கி-யுக:-யாருடைய பாதங்கள்; ஸுர – ஆதிபி: தேவர்களால்; ப்ரதா பிதை:-இம்சிக்கப்பட்ட; ஊர்ஜித- எதிர்பார்த்ததைவிட அதிக; சண்ட-கொடுமையான; சாஸன:-ஆட்சி செலுத்துபவன்.
தேவேந்திரனுடைய மாளிகையின் படிக்கட்டுகள் பவளத்தால் செய்யப்பட்டிருந்தன. தரையோ விலைமதிப்பற்ற மரகதக் கற்கள் பதிக்கப்பட்டதாகவும், சுவர்கள் பளிங்குக் கற்களால் செய்யப்பட்டவையாகவும், தூண்கள் வைடூர்ய கற்களால் செய்யப்பட்டவையாகவும் இருந்தன. அற்புதமான விதானங்கள் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தன. ஆசனங்கள் சிவப்புக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. பால் நுரையைப் போன்ற வெண்மையான பட்டு மஞ்சம் முத்துக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அழகிய பற்களுடனும், அதி அற்புதமான முகங்களுடனும் கூடிய அரண்மனைப் பெண்கள், தங்களுடைய கொலுசுகள் இனிமையான ஒலிக்க, அரண்மனையில் இங்கு மங்கும் நடந்துகொண்டும் நவரத்தினங்களில் தெரிந்த தங்களுடைய சொந்த அழகிய பிரதிபலிப்புகளைக் கண்டு ரசித்துக் கொண்டிருந்தனர். ஆனால் மிகவும் துன்புறுத்தப்பட்ட தேவர்களோ மிகவும் வருத்தத்துடன், அவனுக்கு அடிபணிந்து அவனுடைய பாதங்களில் வணங்க வேண்டியிருந்தது. அவனும் காரணமின்றி அந்த தேவர்களை மிகவும் கடுமையாக தண்டித்துக் கொண்டிருந்தான். இவ்வாறாக இரண்யகசிபு அந்த அரண்மனையில் வாழ்ந்து கொண்டு, அனைவரையும் தனது கொடுங்கோல் ஆட்சிக்கு உட்படுத்தி வந்தான்.
பதம் 7.4.13
தம் அங்க மத்தம் மதுநோரு – கந்தினா
விவ்ருத்த-தாம்ராக்ஷம் அசேஷ – திஷ்ண்ய-பா:
உபாஸதோபாயன-பானிபிர் வினா
த்ரிபிஸ் தபோ-யோக பலௌஜஸாம் பதம்
தம் – அவனை; அங்க—அரசே; மத்தம்-போதையேறிய; மதுனா -மதுவினால்;உரு-கந்தினா- கடுமையான வாடை வீசும்; விவ்ருத்த – சுழலும்; தாம்ர- அக்ஷம் -தாமிரம் போன்ற கண்களையுடைய அசேஷ-திஷ்ண்ய-பா:-எல்லா லோகங்களின் அதிபதிகளும் உபாஸத-பூஜித்தனர்; உபாயன-பூஜைக்குரிய பொருட்களால் பாணிபி:-அவர்களது சொந்த கைகளால்; வினா—தவிர; த்ரிபி: – மும்மூர்த்திகள் (விஷ்ணு, பிரம்ம, சிவன்); தப:-தவத்தின்; யோக – யோக சக்தி; பல – தேக பலம்; ஒஜஸாம்-புலன்களின் சக்தி; பதம் – இருப்பிடம்..
அரசே, இரண்யகசிபு எப்பொழுதும் கடுமையான நாற்றமுடைய மதுபானங்களையும், கள்ளையும் குடித்து போதையேறியவனாக இருந்ததால், தாமிரம் போன்ற அவனது கண்கள் எப்பொழுதும் போதையால் சுழன்று கொண்டிருந்தன. இவ்வாறு வெறுக்கத்தகுந்தவனாக இருந்தும், அஷ்டாங்க யோக நிலையில் கடுந்தவங்களை அவன் புரிந்திருப்பதால், மும்மூர்த்திகளான பிரம்மதேவர், சிவபெருமான், பகவான் விஷ்ணு ஆகியோரைத் தவிர மற்றனைவரும் அவனை திருப்திப்படுத்தும் பொருட்டு, தங்களுடைய சொந்த கைகளால் பல்வேறு காணிக்கைகளைக் கொண்டு வந்து நேரடியாக அவனை வழிபட்டனர்.
பதம் 7.4.14
ஜகுர் மஹேந்ராஸனம் ஒஜஸா ஸ்திதம்
விஸ்வாவஸுஸ் தும்புருர் அஸ்மத்-ஆதய:
கந்தர்வ-ஸித்தா ரிஷயோ ‘ஸ்துவன் முஹுர்
வித்யாதரஸ் சாப்ரஸஸ் ச பாண்டவ
ஜகு:-புகழ்ந்து பாடினோம்; மஹேந்ர—ஆஸனம்- தேவேந்திரனின் சிம்மாசனம்; ஒஜஸா-சொந்த சக்தியினால்; ஸ்திதம்—நிலைபெற்றுள்ள; விஸ்வாவஸு:- கந்தர்வர்களின் பிரதான பாடகரான விஸ்வாவசு; தும்புரு:- மற்றொரு கந்தர்வ பாடகர்: அஸ்மத் – ஆதய: – நாங்களும் கூட (நாரதரும், மற்றவர்களும் கூட இரண்யகசிபுவை துதித்தனர்); கந்தர்வ – கந்தர்வலோக வாசிகள்: ஸித்தா:—சித்தலோக வாசிகள்: ரிஷய:-சிறந்த முனிவர்கள் மற்றும் சாதுக்கள்; அஸ்துவன் – துதித்தனர்; முஹு: – மீண்டும் மீண்டும்; வித்யாதரா:-வித்யாதர லோக வாசிகள்: ச – கூட: அப்ரைஸ:-அப்ஸரலோகவாசிகள்: ச-மேலும்; பாண்டவ- பாண்டு வம்சத்தவரே.
பாண்டு வம்சத்தவரான யுதிஷ்டிர மகாராஜனே, தனது சொந்த தவ வலிமையினால் தேவேந்திரனின் அரியாசனத்தில் அமர்ந்திருந்த இரண்யகசிபு, மற்றெல்லா கிரக வாசிகளையும் அடக்கியாண்டான். விஸ்வாவஸு, தும்புரு ஆகிய இரு கந்தவர்களும், நானும், வித்யாதரர்களும், அப்ஸரஸ்களும் மற்றும் முனிவர்களும், மீண்டும் மீண்டும் அவனை துதித்துப் போற்றினோம்.
பதம் 7.4.15
ஸ ஏவ வர்ணாஸ்ரமிபி: க்ரதுபிர் பூரி-தக்ஷிணை:
இஜ்யமானோ ஹவிர்-பாகான் அக்ரஹீத் ஸ்வேன தேஜஸா
ஸ;-அவன்; ஏவ – மட்டும்; வர்ண—ஆஸ்ரமிபி: நான்கு வர்ணங்கள் மற்றும் நான்கு ஆஸ்ரமங்களின் கோட்பாடுகளை உறுதியாகப் பின்பற்றுபவர்களால்; க்ரதுபி:-வேதக் கிரியைகளால்: பூரி – நிறைய:தக்ஷிணை:- காணிக்கைகளால் இஜ்யமான:பூஜிக்கப்பட்டவன்;ஹவி: -பாகான் – அவிர் பாகங்களை; அக்ரஹீத்-பறித்துக் கொண்டான்; ஸ்வேன-தனது சொந்த; தேஜஸா- சக்தியினால்.
வர்ணாஸ்ரம கொள்கைகள் உறுதியாகப் பின்பற்றியவர்களால், சிறந்த காணிக்கைகளுடன் கூடிய யக்ஞங்களால் வழிபடப்பட்ட இரண்யகசிபு, தேவர்களுக்குச் சேர வேண்டிய அவிர்பாகங்களை அவர்களுக்குக் கொடுக்காமல் தானே ஏற்றுக் கொண்டான்.
பதம் 7.4.16
அக்ருஷ்ட-பச்யா தஸ்யாஸீத் ஸப்த-த்வீபவதீ மஹீ
ததா காம-துகா காவோ நானாஸ்சர்ய-பதம் நப:
அக்ருஷ்ட-பச்யா—உழுது பயிரிடப்படாமலேயே தானியங்களை அளித்தது; தஸ்ய – -இரண்யகசிபுவின்; அஸீத் – இருந்தது: ஸப்த— த்வீபவதீ- எழு தீவுகளைக் கொண்ட; மஹீ-பூமி; ததா—அந்த அளவு அதிகமான; காம-துகா:- வேண்டிய அளவு பால் கறக்கக் கூடிய; காவ:-பசுக்கள்; நானா-பலவித; ஆஸ்சர்ய-பதம்- ஆச்சரியமான பொருட்களை; நப:- ஆகாயம்.
ஏழு தீவுகளைக் கொண்ட மண்ணுலகும், இரண்யகசிபுவிடம் அச்சம் கொண்டிருப்பது போல், பூமி உழுது பயிரிடப்படாமலேயே உணவுத் தானியங்களைக் கொடுத்தது. இவ்வாறாக அது ஆன்மீக உலகிலுள்ள சுரபியைப் போன்ற பசுக்களை அல்லது சுவர்க்கத்தைச் சேர்ந்த காமதேனுவை ஒத்திருந்தது. பூமி போதுமான உணவுத் தானியங்களை அளித்தது. பசுக்களோ ஏராளமான பாலை அளித்தன. மேலும் ஆகாயமோ பலவகையான அற்புத விஷயங்களால் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பதம் 7.4.17
ரத்னாகராஸ் ச ரத்னொளகாம்ஸ்
தத்-பத்ன்யஸ் சோஹுர் ஊர்மிபி:
க்ஷார-ஸீது-க்ருத-க்ஷௌத்ர –
ததி-க்ஷீராம்ருதோதகா:
ரத்னாகரா:-கடல்களும், சமுத்திரங்களும்;ச – கூட; ரத்ன – ஓகான்— பலவகையான இரத்தினங்களையும், விலையுயர்ந்த மணிகளையும்: தத்-பத்னிய:—அவைகளின் மனைவிகளான நதிகள்; ச – கூட; ஊஹு:—எடுத்து வந்தன; ஊர்மிபி:- அவற்றின் அலைகளால்; க்ஷார – உப்புநீர்க் கடல்; ஸீது-மதுக்கடல்; க்ருத-நெய்க்கடல்; க்ஷௌத்ர- கரும்புச்சாறு கடல்; ததி—தயிறுக் கடல்; க்ஷுர—பாற்கடல்; அம்ருத— மற்றும் அமுதுபோல் தித்திக்கும் கடல்; உதகா:-நீர்.
பிரபஞ்சத்திலுள்ள பல்வேறு சமுத்திரங்களும், உபநிதிகளும், சமுத்திரங்களின் மனைவியரோடு ஒப்பிடப்படும் நதிகளும் அவற்றின் அலைகளால் மோதி எடுத்து வந்து பலவகையான இரத்தினங்களையும், மணிகளையும் இரண்யகசிபுவின் உபயோகத்திற்காக அளித்தன. இச்சமுத்திரங்கள் உப்புநீர், கரும்புச்சாறு, மது, நெய், பால்,தயிர்,மற்றும் இனிப்புநீர் ஆகியவற்றைக் கொண்டவையாகும்.
பதம் 7.4.18
சைலா த்ரோணீபிர் ஆக்ரீடம் ஸர்வர்துஷு குணான் த்ருமா:
ததார லோக-பாலானாம் ஏக ஏவ ப்ருதக் குணான்
சைலா:-குன்றுகளும், மலைகளும்; த்ரோணீபி:-பள்ளத்தாக்குகளுடன் கூடிய; ஆக்ரீடம்-இரண்யகசிபுவுக்கு விளையாட்டு மைதானங்கள் ஆயின; ஸர்வ—எல்லா; ருதுஷு – பருவ காலங்களிலும்; குணான்—வெவ்வேறு விதங்களில் (பழங்களையும், பூக்களையும்); த்ருமா:-செடிகளும், மரங்களும்,ததார-அளித்தன;லோக-பாலானாம் – இயற்கையின் வெவ்வேறு இலாக்காக்களின் அதிபதிகளான மற்ற தேவர்களின்; ஏக:–ஒருவனாக; ஏவ – மட்டும்; ப்ருதக்—வெவ்வேறு; குணான் – குணங்களை.
மலைகளுக்கு இடையிலுள்ள பள்ளத்தாக்குகள் இரண்யகசிபுவுக்கு இன்பமூட்டும் விளையாட்டு மைதானங்களாயின. அவனுடைய செல்வாக்கினால் எல்லா மரங்களும், செடிகளும் எல்லாப் பருவ காலங்களிலும் பழங்களையும், மலர்களையும் ஏராளமான உற்பத்தி செய்தன. பிரபஞ்சத்தின் மூவேறு இலாக்காக்களின் தலைவர்களான இந்திரன், வாயு, அக்னி ஆகியோரின் கடமைகளை நீரூற்றுதல், உலர்த்துதல் மற்றும் எரித்தல் ஆகியவை எல்லாம் அம்மூன்று தேவர்களின் உதவியின்றி இரண்யகசிபுவால் தனியாகவே நடத்தப்பட்டன.
பதம் 7.4.19
ஸ இத்தம் நிர்ஜித-ககுப் ஏக-ராட் விஷயான் ப்ரியான்
யதோபஜோஷம் புஞ்ஜானோ நாத்ருப்யத் அஜிதேந்ரிய:
ஸ:- அவன்; இத்தம்—இவ்வாறு; நிர்ஜித-ஜயித்து: ககுப் -பிரபஞ்சத்திலுள்ள எல்லாத் திசைகளையும்; ஏக-ராட்-ஏகச் சக்கரவர்த்தியாக; விஷயான்-பௌதிக பலன் பொருட்களை; பிரியான்-மிகவும் விரும்பக்கூடிய; யதா-உபஜோஷம்இயன்ற அளவுக்கு; புஞ்ஜான:-அனுபவித்தும்; ந—இல்லை; அத்ருப்யத்— திருப்தியடையவில்லை; அஜித-இந்ரிய:-தன் புலன்களை அடக்க முடியாததால்.
இரண்யகசிபு எல்லாத் துறைகளையும் ஆளும் சக்தியைப் பெற்றிருந்த போதிலும், தன்னால் இயன்ற அளவு எல்லாவகையான புலன் நுகர்வுகளையும் அனுபவித்த போதிலும், திருப்தியடையாதவனாகவே இருந்தான். ஏனெனில், அவன் தன் புலன்களை அடக்குவதற்குப் பதிலாக, அவற்றிற்கு அடிமையாகி இருந்தான்.
பதம் 7.4.20
ஏவம் ஐஸ்வர்ய-மத்தஸ்ய த்ருப்தஸ்யோச்சாஸ்த்ர-வர்தின:
காலோ மஹான் வ்யதீயாய ப்ரஹ்ம-சாபம் உபேயுஷ:
ஏவம்-இவ்வாறாக; ஐஸ்வர்ய- மத்தஸ்ய-ஐசுவரியத்தினால் மதி மயங்கியவனின்;த் ருப்தஸ்ய-மிகவும் செருக்குடையவனாக: உத்— சாஸ்த்ர- வர்தின:-சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள சட்ட திட்டங்களை மதிக்காமல்; கால:- காலத்தை; மஹான்—நீண்ட; வ்யதீயாய- கழித்தான்; ப்ரஹ்ம-சாபம்-சிறந்த பிராமணர்களின் ஒரு சாபத்திற்கு; உபேயுஷ:- உள்ளானான்.
இவ்வாறாக இரண்யகசிபு தன் ஐசுவரியங்களில் மிகவும் செருக்குக் கொண்டவனாகவும், அதிகாரப்பூர்வமான சாஸ்திரங்களில் குறிப்பிட்டுள்ள சட்ட திட்டங்களை மதிக்காதவனாகவும் நீண்ட காலத்தைக் கழித்தான். எனவே அவன் பிராமண சிரேஷ்டர்களான நான்கு குமாரர்களின் சாபத்திற்குள்ளானான்.
பதம் 7.4.21
தஸ்யோக்ர-தண்ட ஸம்விக்னா: ஸர்வே லோகா: ஸபாலக:
அன்யத்ராலப்த-சரணா: சரணம் யயுர் அச்யுதம்
தஸ்ய-அவனுடைய; உக்ர-தண்ட-கொடுமைகளினால்; ஸம்விக்னா:- துன்பத்திற்குள்ளாயினர்; ஸர்வே-எல்லா; லோகா:- கிரகங்களும்; ஸ-பாலகா:-அவற்றின் அதிபதிகளுடன்; அன்யத்ர -வேறெங்கும்; அலப்த-பெறாததால்; சரணா:-புகலிடம்; சரணம்- புகலிடம் தேடி: யயு:-அணுகினர்; அச்யுதம்-பரமபுருஷரை.
லோக பாலகர்கள் உட்பட அனைவரும், இரண்யகசிபுவின் கொடுங்கோல் ஆட்சியின் காரணத்தால் கடுந்துன்பத்திற்கு ஆளாயினர். பயந்துபோய் கலக்கமடைந்திருந்த அவர்கள் வேறு புகலிடத்தைக் காணாதவர்களாய், இறுதியில் பரமபுருஷராகிய ஸ்ரீ விஷ்ணுவைச் சரணடைந்தனர்.
பதங்கள் 7.4.22 – 7.4.23
தஸ்யை நமோ ‘ஸ்து காஷ்டாயை யத்ராத்மா ஹரிர் ஈஸ்வர:
யத் கத்வா ந நிவர்தந்தே சாந்தா: ஸன்யாஸினோ ‘மலா:
இதி தே ஸம்யதாத்மான ஸமாஹித- தியோ ‘மலா:
உபதஸ்துர் ஹ்ரிஷீகேசம் வினித்ரா வாயு-போஜனா:
தஸ்யை- அந்த; நம-பணிவான வணக்கங்கள்; அஸ்து- உரித்தாகட்டும்; காஸ்டாயை-திசைக்கு; யத்ர—எங்கு; ஆத்மா-பரமாத்மா; ஹரி-பரமபுருஷர்; ஈஸ்வர:-பரம ஈசுவரரான; யத்- எங்கு; கத்வா- சென்றால்; ந -ஒருபோதும் இல்லையோ; நிவர்தந்தே -திரும்பி வருவது:சாந்தா:-சாந்தமான; ஸந்யாஸின:-துறவு வாழ்விலுள்ள சந்தியாசிகள்: அமலா:-புனிதமானவர்கள்; இதி-இவ்வாறு; தே- அவர்கள்; ஸம்யத – ஆத்மனா: – கட்டுப்படுத்தப்பட்ட மனத்துடன்; ஸமாஹித-ஒருமுகப்படுத்திய; திய:-புத்தியுடன்; அமலா-புனிதர்கள்; உபதஸ்து:வழிபட்டனர்; ஹ்ரிஷீகேசம்-புலன்களின் அதிபதியை; வினித்ரா-உறங்காது; வாயுபோஜனா: – காற்றை மட்டுமே உணவாகக் கொண்டு.
“எந்த திசையில் பரமபுருஷர் இருக்கிறாரோ, எங்கு துறவு வாழ்விலுள்ள பரிசுத்த ஆத்மாக்களாகிய புண்ணிய புருஷர்கள் செல்கிறார்களோ, எங்கு சென்ற பிறகு அவர்கள் திரும்பி வருவதேயில்லையோ, அந்த திசைக்கு எங்களுடைய பணிவான வணக்கங்களை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்” என்ற தியானத்துடன், பல்வேறு கிரகங்களின் அதிதேவதைகள் அனைவரும் உறக்கமின்றி, தங்களுடைய மனங்களை முற்றிலும் அடக்கி, காற்றை மட்டுமே சுவாசித்துக் கொண்டு, ரிஷிகேசரை வழிபடத் துவங்கினர்.
பதம் 7.4.24
தேஷாம் ஆவிரபூத் வாணி ஆரூபா மேக-நிஹ்ஸ்வனா
ஸன்னாதயந்தீ ககுப: ஸாதூனாம் அபயங்கரீ
தேஷாம் – அவர்கள் முன்; ஆவிரபூத் – எழுந்தது; வாணீ-ஒரு குரல்; அரூப – உருவமில்லாத; மேக-நிஹ்ஸ்வனா—மேக முழக்கத்தைப் போல்; ஸன்னாதயந்தீ—அதிரச் செய்தது; ககுப – எல்லாத் திசைகளையும்; ஸாதூனாம் – சாதுக்களின்; அபயங்கரீ—அபயம் அளிப்பது போல்.
பிறகு, பௌதிக கண்களுக்குப் புலப்படாத ஒரு ரூபத்திலிருந்து, உன்னதமான ஓர் அசிரீரி அவர்கள் முன் எழுந்தது. மேகத்தின் ஒலி போன்ற அந்த வாக்கு மனதிலிருந்து பயத்தைப் போக்கி உற்சாகமளிப்பதாக இருந்தது.
பதங்கள் 7.4.25-7.4.26
மா பைஷ்ட விபுத-ஸ்ரேஷ்டா: ஸர்வேஷாம் பத்ரம் அஸ்து வ:
மத்-தர்சனம் ஹி பூதானாம் ஸர்வ-ஸ்ரேயோபபத்தயே
ஞாதம் ஏதஸ்ய தௌராத்ம்யம் தைதேயாபஸதுஸ்ய யத்
தஸ்ய சாந்திம் கரிஷ்யாமி காலம் தாவத் ப்ரதீக்ஷத
மா-வேண்டாம்; பைஷ்ட-பயம்; விபுத -ஸ்ரேஷ்டா: -கல்வி மான்களின் சிறந்தவர்களே; ஸர்வேஷாம்—எல்லோருக்கும்; பத்ரம் – மங்களம்; அஸ்து -உண்டாகட்டும்; வ:-உங்களுக்கு; மத் தர்சனம்- என் தரிசனம் (அல்லது பரிபூரண செயல்களாகிய, என்னைத் துதித்தல் அல்லது என்னைப் பற்றி கேட்டல்); ஹி-நிச்சயம்; பூதானாம் – எல்லா ஜீவராசிகளுக்கும்; ஸர்வ -ஸ்ரேய-சகல நன்மைகளையும்: உபபத்தயே-அடைவதற்கு; ஞாதம் -அறிந்தோம்; ஏதஸ்ய-இதைப் பற்றி; தௌராத்ம்யம் -துஷ்டச் செயல்களன; தைதேய-அபஸதஸ்ய- பெரிய அசுரனான இரண்யகசிபுவின்; யத்—எதுவோ; தஸ்ய-அதன்; சாந்திம் – முடிவை: கரிஷ்யாமி- கொண்டு வருவேன்; காலம்—காலம்; தாவத் -வரும்வரை; ப்ரதீக்ஷத-காத்திருங்கள்.
பகவானின் அசிரீரி பின்வருமாறு ஒலித்தது: கல்விமான்களில் சிறந்தவர்களே அஞ்ச வேண்டாம்! உங்களுக்கு நலம் உண்டாகட்டும். என்னைப் பற்றி கேட்டும், பாடியும், என்னிடம் பிரார்த்தனைகள் செய்தும் என்னுடைய பக்தர்களாகுங்கள். ஏனெனில், இவை அனைத்து ஜீவராசிகளுக்கும் நிச்சயமாக சிறந்த வரங்களை அளிக்கக் கூடியவையாகும். இரண்யகசிபுவின் எல்லாச் செயல்களையும் நான் அறிவேன். அவற்றை மிக விரைவில் நான் ஒரு முடிவுக்குக் கொண்டு வருவேன். தயவு செய்து அதுவரை பொறுமையுடன் காத்திருங்கள்.
பதம் 7.4.27
யதா தேவேஷு வேதேஷு கோஷு விப்ரேஷு ஸாதுஷு
தர்மெ மயி ச வித்வேஷ: ஸ வா ஆசு வினஸ்யதி
யதா—எப்போது; தேவேஷு- தேவர்களிடம்; வேதேஷு- வேதங்களிடம்; கோஷு-பசுக்களிடம்; விப்ரேஷ – பிராமணர்களிடம்; ஸாதுஷு – சாதுக்களிடம்; தர்மே-தர்மத்தில்; மயி-பரமபுருஷராகிய என்னிடம் ; ச-கூட: வித்வேஷு: -துவேஷம்; ஸ:- -கொண்டுள்ளவன்; வை—நிச்சயம்; ஆக-மிக விரைவில்; வினஸ்யதி-நாசமடைவான்.
எப்போது பரமபுருஷரைப் பிரதிநிதிக்கும் தேவர்களிடமும், சகல ஞானத்தையும் அளிக்கும் வேதங்களிடமும், பசுக்களிடமும், பிராமணர்களிடமும், வைஷ்ணவர்களிடமும், சமயக் கோட்பாடுகளிடமும் இறுதியாக பரமபுருஷராகிய என்னிடமும் துவேஷம் வளர்கிறதோ, அப்போது அவன் அவனுடைய நாகரீகத்துடன் விரைவில் நாசமடைவான்.
பதம் 7.4.28
நிர்வைராய ப்ராசாந்தாய ஸ்வ-ஸுதாய மஹாத்மனே
ப்ரஹ்ராதாய யதா த்ருஹ்யேத் தனிஷ்யே ‘பி வரோர்ஜிதம்
நிர்வைராய—பகைவரற்றவனான; ப்ரசாந்தாய-சாந்தம் மிகுந்த; ஸ்வ-ஸுதாய—தன் சொந்த மகனும்; மஹா-ஆத்மனே- சிறந்த பக்தனுமான; ப்ரஹ்ராதாய-பிரகலாத மகாராஜனை; யதா—அப்போது; த்ருஹ்யேத் – நான் அவனைக் கொல்வேன்; அபி – என்றாலும்; வர – ஊர்ஜிதம் – பிரம்மதேவரின் வரங்களால் அனுக்கிரகிக்கப்பட்டவன்.
இரண்யகசிபு, தன் சொந்த மகனும், சாந்தனும், நிதானமானவனும் பகைவரற்றவனும், சிறந்த பக்தனுமான பிரகலாதனை பரிகாசம் செய்து துன்புறுத்தும் பொழுது, பிரம்மாவின் வரங்களைப் பெற்றவனாக இருப்பினும், அவனை உடனடியாக நான் கொன்றுவிடுவேன்.
பதம் 7.4.29
ஸ்ரீ-நாரத உவாச
இதி உக்தா லோக-குருணா தம் ப்ரணம்ய திவௌகஸ:
ன்யவர்தந்த கதோத்வேகா மேனிரே சாஸுரம் ஹதம்
ஸ்ரீ – நாரத: உவாச-மாமுனிவரான நாரதர் கூறினார்; இதி- இவ்வாறு ; உக்தா:-கூறப்பட்டதும்; லோக-குருணா—அனைவருக்கும் பரம ஆன்மீக குருவினால்; தம்-அவரை; ப்ரணம்ய – வணங்கி; திசௌகஸ:-எல்லா தேவர்களும்; ன்யவர்தந்த-திரும்பிச் சென்றனர்; கத-உத்வேகா:-எல்லாக் கவலைகளும் நீங்கியவர்களாய்; மேனிரே- எண்ணினர்: ச – கூட; அஸுரம்—அந்த அசுரன் (இரண்யகசிபு); ஹதம்- கொல்லப்பட்டுவிட்டதாக.
மாமுனிவரான நாரதர் தொடர்ந்து கூறினார்: அனைவருக்கும் ஆன்மீக குருவாகிய பரமபுருஷர், சுவர்க்க லோகங்களில் வாழ்ந்த அனைத்து தேவர்களுக்கும் இவ்வாறு உறுதியளித்ததும், அவர்கள் தங்களுடைய பணிவான வணக்கங்களை அவருக்குச் செலுத்திவிட்டு, அசுரனான இரண்யகசிபு இப்பொழுது கிட்டத்தட்ட இறந்துவிட்டவனாவான் என்ற நம்பிக்கையுடன் திரும்பிச் சென்றனர்.
பதம் 7.4.30
தஸ்ய தைத்ய-பதே: புத்ராஸ் சத்வார: பரமாத்புதா:
ப்ரஹ்ராதோ ‘பூன் மஹாம்ஸ் தேஷாம் குணைர் மஹத்-உபாஸத:
தஸ்ய-அவனுக்கு (இரண்யகசிபுவுக்கு); தைத்ய—பதே:—அசுர ராஜனான; புத்ரா:-மகன்கள்; சத்வார:- நால்வர்; பரம-அத்புதா:- மிகவும் தகுதியுள்ள, அதியற்புதமான; ப்ரஹ்ராத:-பிரகலாதன் என்பவர்; அபூத்—இருந்தார்; மஹான்-மிகச் சிறந்தவராக; தேஷாம்- அவர்களுள்; குணை:-உன்னத குணங்களுடன்; மஹத்-உபாஸக்:- பரமபுருஷரின் தூய பக்தராக விளங்கினார்.
இரண்யகசிபுவுக்குச் சிறந்த தகுதிகளைக் கொண்ட அற்புதமான புத்திரர்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள் பிரகலாதன் சிறந்தவராவார். உண்மையில் பிரகலாதன் பரமபுருஷரின் ஒரு தூய பக்தர் என்பதால் அவர் உன்னத குணங்களுக்கெல்லாம் இருப்பிடமாக விளங்கினார்.
பதங்கள் 7.4.31 – 7.4.32
ப்ரஹ்மண்ய: சீல-ஸம்பன்ன: ஸத்ய-ஸந்தோ ஜிதேந்ரிய:
ஆத்மவத் ஸர்வ-பூதானாம் ஏக-ப்ரிய-ஸுஹ்ருத்தம:
தாஸவத் ஸன்னதார்யாங்ரி: பித்ருவத் தீன-வத்ஸல:
ப்ராத்ருவத் ஸத்ருசே ஸ்னிக்தோ குரஷ்வ் ஈஸ்வர-பாவன:
வித்யார்த்த-ரூப-ஜன்மாட்யோ மான-ஸ்தம்ப-விவர்ஜித:
ப்ராஹ்மண்ய:-பிராமண நெறியில் சிறந்தவராக; சீல – ஸம்பன்ன:- எல்லா நற்குணங்களும் பெற்று; ஸத்ய – ஸந்த:-பரம சத்தியத்தை அறிய ஆவலுடையவராக; ஜித—இந்ரிய: – புலன்களையும், மனதையும் முழுமையாக அடக்கியவராக; ஆத்ம – வத்-பரமாத்மாவைப் போல்; ஸர்வ – பூதானாம் – அனைத்து ஜீவராசிகளின்; ஏக – ப்ரிய – ஒரே பிரியராக; ஸுஹ்ருத் – தம:-உற்ற நண்பராக; தாஸவத் – எளிய தொண்டன் போல்; ஸன்னத—எப்பொதும் அடங்கி நடப்பவராக; ஆர்ய – அங்ரி :- மகான்களின் பாதங்களில்; பித்ரு – வத் – ஒரு தந்தை போல்; தீன – வத்ஸலவ: – ஏழை, எளியவர்களிடம் அன்புடையவராக; ப்ராத்ரு-வத்-ஒரு சகோதரன் போல்; ஸத்ருசே -சமமானவர்களிடம்; ஸ்னிக்த:- மிகவும் அன்புடையவராக; குருஷு-குருமார்களிடம்; ஈஸ்வர-பாவன:-பரமபுருஷரைப் போல் பாவிப்பவராக; வித்யா— கல்வி; அர்த்த-செல்வம்; ரூப-அழகு; ஜன்ம-நற்குடிப்பிறப்பு: ஆத்ய -ஆகியவை இருந்தும்; மானே- கர்வம்; ஸ்தம்ப-செருக்கு; விவர்ஜத:-இவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக.
(இரண்யகசிபுவின் மகனான பிரகலாத மகாராஜனின் குணங்கள் இங்கு விவரிக்கப்படுகின்றன) அவர் சீரிய ஒழுக்கம் உடையவராகவும், பரம சத்தியத்தைப் புரிந்து கொள்வதில் உறுதி கொண்டவராகவும் இருந்த காரணத்தால், அவர் பண்பாடு மிக்க, தகுதியிடைய ஒரு பிராமணராக இருந்தார். மேலும் அவர் புலன்களையும் மனதையும் வென்றவராக இருந்தார். பரமாத்மாவைப் போல், அனைத்து ஜீவராசிகளிடமும் அன்புடையவராகவும், அனைவருக்கும் உற்ற நண்பராகவும் இருந்தார். மரியாதைக்குரியவர்களிடம் ஓர் எளிய தொண்டனைப் போலவும், ஏழைகளிடம் ஒரு தந்தையைப் போலவும், சமமானவர்களிடம் சகோதர அன்பு உடையவராகவும் அவர் நடந்துக் கொண்டார். அவர் தமது ஆசான்களையும், குருமார்களையும், தன்னைவிட வயதில் மூத்த தெய்வச் சகோதரர்களையும். பரமபுருஷருக்குச் சமமானவர்களாக பாவித்தார். அவர் நல்ல கல்வி, செல்வம், அழகு, உயர்பிறப்பு, முதலியவைகளைப் பெற்றிருந்தும், அவற்றினால் எழக் கூடிய இயற்கைக்கு விரோதமான செருக்கிலிருந்து முற்றிலும் விடுபட்டவராக இருந்தார்.
பதம் 7.4.33
நோத்விக்ன-சித்தோ வ்யஸனேஷு நிஹ்ஸ்ப்ருஹ:
ஸ்ருதேஷு த்ருஷ்டேஷு குணேஷ்வ் அவஸ்து த்ருக்
தாந்தேந்ரிய-ப்ராண-சரீர-தீ: ஸதா
ப்ரசாந்த-காமோ ரஹிதாஸுரோ ‘ஸுர:
ந-இல்லை; உத்விக்ன—கலக்கம்; சித்த—சித்தமுடையவர்; வ்யஸனேஷு-ஆபத்தான சமயங்களில்; நிஹ்ஸ்ப்ருஹ:- ஆசையில்லாமல் ஸ்ருதேஷு-கேள்விப்படும் விஷயங்களில் (குறிப்பாக, புண்ணியத்தால் சுவர்க்க லோகங்களுக்கு ஏற்றம் பெறும் விஷயங்களில்); த்ருஷ்டேஷு—மேலும் பார்க்கும் நிலையற்ற பொருள்களிலும்; குணேஷு – ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்திலுள்ள புலன் நுகர்வுப் பொருட்களை; அவஸ்து – த்ருக் – பயனற்றவை என்று பாவித்து; தாந்த-கட்டுப்படுத்தி; இந்ரிய—புலன்களை; ப்ராண- உயிர்ச்சக்தியை; சரீர-உடலை: தீ:- மற்றும் புத்தியை; ஸதா- எப்பொழுதும்; ப்ரசாந்த-சாந்தமாக; காம:-யாருடைய பௌதிக ஆசைகள்; ரஹித-சிறிதும் இல்லாமல்: அஸுர:—அசுரத் தன்மை; அஸுர:—ஓர் அசுர குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும்.
பிரகலாத மகாராஜன் ஓர் அசுர குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், அசுர சுபாவம் சிறிதும் இல்லாமல், பகவான் விஷ்ணுவின் சிறந்த பக்தராக விளங்கினார். மற்ற அசுரர்களைப் போல் வைஷ்ணவர்களிடம் அவர் விரோதம் கொண்டதேயில்லை. அவர் ஆபத்தில் கலங்காத சித்தமுடையவராகவும், வேதங்களில் விவரிக்கப்பட்டுள்ள பலன் கருதும் செயல்களில் நேரடியாகவே, மறைகமாகவோ விருப்பமில்லாதவராகவும் இருந்தார். உண்மையில் பௌதிகமானவை எல்லாம் பயனற்றவை என்று அவர் கருதியதால், பௌதிக ஆசைகள் சிறிதும் இல்லாதவராக இருந்தார். அவர் எப்பொழுதும் தமது புலன்களையும், பிராணனையும் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவர் மாறாத புத்தியையும், உறுதியையும் உடையவராக இருந்ததால், எல்லா காம இச்சைகளையும் அவரால் அடக்க முடிந்தது.
பதம் 7.4.34
யஸ்மின் மஹத்-குணா ராஜன் க்ருஹ்யந்தே கவிபிர் முஹு:
ந தே ‘துனா பிதீயந்தே யதா பகவதீஸ்வரே
யஸ்மின்- யாரிடத்தில்; மஹத்-குணா:-உயர்ந்த தெய்வீக குணங்கள்; ராஜன்-அரசே; க்ருஹ்யந்தே:- புகழப்படுகின்றனவோ; கவிபி:-புத்திமான்களாலும், கல்விமான்களாளும்; முஹு: – எப்பொழுதும்; ந – இல்லை; தே—அவைகள்; அதுனா-இன்றும்; பிதீயந்தே- மறைந்து போவது: யதா—எவ்வாறு; பகவதி – பரமபுருஷரில்; ஈஸ்வரே – பரம ஈசுவரரான.
அரசே, பிரகலாத மகாராஜனின் நற்குணங்கள் இன்றும் கற்றறிந்த சாதுக்களாலும், வைஷ்ணவர்களாலும் புகழப்படுகின்றன. எல்லா நற்குணங்களும் பரமபுருஷரில் எப்பொழுதும் இருப்பது போலவே, அவை பகவத் பக்தரான பிரகலாத மகாராஜனிடமும் என்றென்றும் உள்ளன.
பதம் 7.4.35
யம் ஸாது-காதா-ஸதஸி ரிபவோ ‘பி ஸுரா ந்ருப
ப்ரதிமானம் ப்ரகுர்வந்தி கிம் உதான்யே பவாத்ருசா:
யம் – யாரை; ஸாது – காதா – ஸதஸி – சாதுக்கள் கூடும் சபையில் அல்லது சீரிய பண்புகள் விவாதிக்கப்படும் சபையில்; ரிபவ:- பிரகலாதரின் எதிரிகள் என்று சொல்லக்கூடியவர்கள் (பிரகலாதரைப் போன்ற ஒரு பக்தருக்குக் கூட, அவரது சொந்த தந்தை உட்பட பல எதிரிகள் இருந்தனர்); அபி-கூட; ஸுர:-தேவர்கள் (அகரர்கள் தேவர்களின் எதிரிகளாவர். பிரகலாதர் அசுர குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், தேவர்கள் அவருடைய எதிரிகளாக இருந்திருக்க வேண்டும்); ந்ருப-யுதிஷ்டிர மகாராஜனே; ப்ரதிமானம் – ஒரு சிறந்த பக்தருக்கு எடுத்துக்காட்டாக; ப்ரகுர்வந்தி-வைக்கின்றனர்; கிம்-உத— என்னென்று சொல்வது; அன்யே – மற்றவர்களைப் பற்றி; பவாத்ருசா: – உங்களைப் போன்ற மேன்மக்களாகிய.
யுதிஷ்டிர மகாராஜனே, சாதுக்களையும், பக்தர்களையும் புகழ்ந்து பேசப்படும் எந்த ஒரு சபையிலும், அசுரர்களின் பகைவர்களான தேவர்கள் கூட, பிரகலாத மகாராஜனை ஒரு சிறந்த பக்தருக்கு உதாரணமாக எடுத்துக் கூறும்போது, உம்மைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா!
பதம் 7.4.36
குணைர் அலம் அஸங்க்யேனையர் மாஹாத்ம்யம் தஸ்ய ஸூச்யதே வாஸுதேவே பகவதி யஸ்ய நைஸர்கிகீ ரதி:
குணை:-உன்னத குணங்களினால்; அலம்—என்ன தேவை: அஸங்க்யேயை:- எண்ணற்றவையான; மாஹாத்ம்யம்-மகிமை: தஸ்ய—அவரது (பிரகலாதரின்); ஸூச்யதே—சுட்டிக்காட்டப்படுகிறது; வாஸுதேவே – வசுதேவ புத்திரரான ஸ்ரீ கிருஷ்ணரிடம்; பகவதி- பரமபுருஷர்; யஸ்ய-யாருக்கு; நைஸர்கிகீ – இயற்கையான; ரதி:- ஈடுபாடு.
பிரகலாத மகாராஜனின் எண்ணற்ற உன்னத குணங்களை யாரால் பட்டியல் போட முடியும்? அவருக்கு வாசுதேவரிடம் (வசுதேவரின் புத்திரர்), அதாவது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் உறுதியான நம்பிக்கையும், தூய பக்தியும் இருந்தது. முற்பிறவியில் அவர் செய்து வந்த பக்தித் தொண்டின் காரணத்தால் இயற்கையாகவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் அவருக்குப் பற்றுதல் இருந்தது. அவரது நற்குணங்களை எண்ணிக் கணக்கிட முடியாது அவர் ஒரு மகாத்மா என்பதையே அவை நிருபிக்கின்றன.
பதம் 7.4.37
ன்யஸ்த-ரீடனகோ பாலோ ஜடவத் தன்-மனஸ்தயா
க்ருஷ்ண-க்ரஹ-க்ருஹீதாத்மா ந வேத ஜகத் ஈத்ருசம்
ந்யஸ்த-விட்டுவிட்டு; க்ரீடனக: -குழந்தைத்தனமான எல்லா விளையாட்டுகளையும் அல்லது செயல்களையும்; பால:- ஒரு பாலகன்; ஜட—வத்-ஒரு ஜடம் போல் செயலற்று; தத்- மனஸ்தயா- கிருஷ்ணரின் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து; க்ருஷ்ண—க்ரஹ— (ஒரு கிரகத்தின் ஆதிக்கத்தைப் போன்ற) கிருஷ்ணரின் வலிமைமிக்க வசீகரத்தினால்; க்ருஹீத-ஆத்மா-மனம் முழுமையாக கவரப்பட்டு; ந-இல்லை; வேத-அறிய; ஜகத்-ஜட உலகத்தை; ஈத்ருசம்— இத்தகையதாக.
பிரகலாத மகாராஜன் தமது குழந்தைப் பருவத்தின் துவக்கத்திலிருந்தே, குழந்தைத் தனமான விளையாட்டுப் பொருட்களில் விருப்பற்றவராக இருந்தார். உண்மையில் அவற்றை ஒரேயடியாக விட்டுவிட்ட அவர், கிருஷ்ண உணர்வில் முழுமையாக ஆழ்ந்து மௌனமாகவும், ஜடமாகவும் இருந்தார். அவரது மனது சதா கிருஷ்ண உணர்வினால் பாதிக்கப்பட்டிருந்தால், புலன் நுகர்வுச் செயல்களில் முழுமையாக ஆழ்ந்துள்ள உலகம் எப்படி இயங்குகிறது என்பதை அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.
பதம் 7.4.38
ஆஸீன: பர்யடன் அஸ்னன் சயான: ப்ரபிபன் ப்ருவன்
நானுஸந்தத்த ஏதானி கோவிந்த- பரிரம்பித
ஆஸீன:-உட்கார்ந்திருக்கும் போது; பர்யடன்-நடக்கும் போது; அஸ்னன்-சாப்பிடும் போது; சயான:-படுக்கும் போது: ப்ரபிபன்- குடிக்கும் போது; ப்ருவன் பேசும் போது: ந—இல்லை; அனுஸந்தத்தே -அறிய: ஏதானி-அச்செயல்களெல்லாம்; கோவிந்த-புலன்களுக்குப் புத்துணர்வு அளிப்பவரான பரமபுருஷரால் ; பரிரம்பித: ஆரத்தழுவப்பட்டு.
பிரகலாத மகாராஜன் எப்பொழுதும் கிருஷ்ணரைப் பற்றிய சிந்தனையிலேயே ஆழ்ந்திருந்தார். இவ்விதமாக, எப்பொழுதும் பகவானால் ஆரத் தழுவப்பட்டிருந்த அவர் உட்கார்ந்திருத்தல், நடத்தல், சாப்பிடுதல், குடித்தல், படுத்தல், பேசுதல் முதலான உடல் தேவைகளெல்லாம் எப்படித் தானாகவே நிறைவேற்றப்பட்டன என்பதை உணரவில்லை.
பதம் 7.4.39
க்வசித் ருததி வைகுண்ட-சிந்தா-சபல-சேதன
க்வசித் தஸதி தச்-சிந்தா-ஹ்லாத் உத்காயதி க்வசித்
க்வசித்-சிலசமயம்; ருததி – அழுவார்; வைகுண்ட—சிந்தா— கிருஷ்ணரைப் பற்றிய எண்ணங்களால்; சபல- சேதன:- மனக்கலக்கம் உடையவரால்; க்வசித்-சிலசமயம்; ஹஸதி-சிரிப்பார்; தத் – சிந்தா- அவரைப் பற்றிய சிந்தனையால்; ஆஹ்லாத-ஆனந்தமடைந்து; உத்காயதி-உரக்கப்பாடுவார்; க்வசித்- சிலசமயங்களில்.
கிருஷ்ண உணர்வில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தினால், அவர் சில சமயங்களில் அழுவார், சில சமயங்களில் சிரிப்பார், சில சமயங்களில் ஆனந்தத்தை வெளிப்படுத்துவார். மற்றும் சில சமயங்களில் உரக்க பாடுவார்.
பதம் 7.4.40
நததி க்வசித் உத்கண்டோ விலஜ்ஜோ ந்ருத்யதி க்வாசித்
க்வசித் தத்-பாவனா-யுக்தஸ் தன்மயோ ‘நுசகார ஹ
நததி – (“ஹேகிருஷ்ணா” என்று பகவானை) உரக்கக் கூவியழைப்பார்; க்வசித்- சிலசமயம்; உத்கண்ட:-மிகவும் ஆவலுடன்; விலஜ்ஜ:- வெட்கமின்றி; ந்ருத்யதி-ஆடுவார்; க்வசித் – சிலசமயம்; தத்-பாவனா-கிருஷ்ணரைப் பற்றிய எண்ணங்களில்; யுக்த:-ஆழ்ந்து: தத்- மய:-தானே கிருஷ்ணராக மாறிவிட்டது போல் பாவித்து; அனுசகார—அவரைப் போல் செயற்பட்டார்; ஹி- உண்மையில்.
பிரகலாத மகாராஜன் சில சமயங்களில் பரம புருஷரைக் கண்டதும் மிகவும் கவலையுடன் உரக்கக் கூவி அழைப்பார். சில சமயங்களில் மகிழ்ச்சியால் வெட்கத்தை இழந்து பரவசத்துடன் ஆடத் துவங்குவார். மற்றும் சில சமயங்களில், கிருஷ்ணரின் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்து, தன்னைக் கிருஷ்ணராகவே பாவித்து அவருடைய லீலைகளைச் செய்வார்.
பதம் 7.4.41
க்வசித் உத்புலகஸ் தூஷ்ணீம் ஆஸ்தே ஸம்ஸ்பர்ச-நிர்வ்ருத:
அஸ்பந்த-ப்ரணயானந்த-ஸலிகாமீலிதேக்ஷண:
க்வசித்-சில சமயங்களில்; உத்புலக:-மெய் சிலிர்க்க; தூஷ்ணீம்- முற்றிலும் மௌனமாக; ஆஸ்தே-இருப்பார்; ஸம்ஸ்பர்ச—நிர்வ்ருத:- பகவானுடனான ஸ்பரிசத்தினால் ஆனந்தப் பரவசமடைவார்; அஸ்பந்த – இமைக்காமல்; ப்ரணய-ஆனந்த- அன்பான உறவு முறையிலிருந்து உண்டான பரமானந்தத்தினால்; ஸலில-கண்ணீர் மல்க: அமீலித- பாதி முடிய: ஈக்ஷண:- கண்களை உடையவராய்.
சில சமயங்களில் அவர் பகவானுடைய தாமரைக் கரங்களின் ஸ்பரிசத்தை உணர்ந்தவராய், ஆனந்தப் பரவசமடைந்து. மெய்சிலரிக்க, அவரது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தோட, அசைவின்றி மௌனமாக இருப்பார்.
பதம் 7.4.42
ஸ உத்தம- ஸ்லோக- பதாரவிந்தயோர்
நிக்ஷேவயாகிஞ்சன-ஸங்க-ஸப்தயா
தன்வன் பராம் நிர்வ்ருதிம் ஆத்மனோ முஹுர்
துஹ்ஸங்க-தீனஸ்ய மன: சமம் வ்யதாத்
ஸ:-அவர் (பிரகலாதர்); உத்தம-ஸ்லோக-பத-அரவிந்தயோ- உன்னத துதிகளால் பூஜிக்கப்படும் புருஷோத்தமரின் தாமரைப் பாதங்களில்: நிஷேவயா- சதா சேவை செய்வதால்; அகிஞ்சன-ஜட உலகுடன் எந்த ஈடுபாடும் இல்லாத பக்தர்களின்; ஸங்க—சகவாசத்தில், ஸப்தயா-கிடைக்கப் பெற்றதால்; தன்வன்-அதிகமாக்கிக் கொண்டு; பராம்-மிக உயர்ந்த; நிர்வ்ருதிம்—ஆனந்தத்தை; ஆத்மன-ஆத்மாவின்; முஹீ-இடையறாது; துஹ்ஸங்க-தீனஸ்ய – தீய சேர்க்கையினால் ஆன்மீக முன்னேற்றம் அடையாதவர்களின்; மன-மனதை; சமம்-சாந்தமடைய; வ்யதாத்-செய்தார்.
பிரகலாத மகாராஜன், பௌதிகமான எதனுடனும் எவ்வித தொடர்பும் கொண்டிராத பக்குவமான தூய பக்தர்களுடன் கொண்டிருந்த சகவாசத்தின் காரணத்தால், இடையறாது பகவானின் பாத சேவையில் ஈடுபட்டிருந்தார். ஆன்மீக முன்னேற்றம் அடையாதவர்கள், பூரண பரவச நிலையிலிருந்த அவரது தேக அம்சங்களைக் கண்டதால் தூய்மையடைந்தனர். அதாவது, பிரகலாத மகாராஜன் அவர்களுக்கு உன்னத ஆனந்தத்தை அருளினார்.
பதம் 7.4.43
தஸ்மின் மஹா-பாகவதே மஹா-பாகே மஹாத்மனி
ஹிரண்யகசிபூ ராஜன் அகரோத் அகம் ஆத்மஜே
தஸ்மின் – அவரிடம்; மஹா-பாகவதே-பகவானின் உத்தம பக்தரான; மஹா-பாகே-மகா பாக்கியசாலியான; மஹா-ஆத்மனி- பரந்த மனமுடைய; ஹிரண்யகசிபு-அசுரனான இரண்யகசிபு: ராஜன்- அரசே; அகரோத்—செய்தான்; அகம்-பெரும் பாவத்தை; ஆத்ம – ஜே-தன் சொந்த மகனுக்கு.
யுதிஷ்டிர மகாராஜனே, இந்த மகா பாக்கியசாலியான பிரகலாதன் தன் சொந்த மகனாக இருந்த போதிலும், அசுரனான இரண்யகசிபு அவரைச் சித்ரவதை செய்தான்.
பதம் 7.4.44
ஸ்ரீ-யுதிஷ்டிர உவாச
தேவர்ஷ ஏதத் இச்சாமோ வேதிலும் தவ ஸுவ்ரத
யத் ஆத்மஜாய சுத்தாய பிதாதாத் ஸாதவே ஹி அகம்
ஸ்ரீ-யுதிஷ்டிர:-உவாச-யுதிஷ்டிர மகாராஜன் வினவினார்; தேவ- ரிஷே-தேவர்களில் தலைசிறந்த முனிவரே; ஏதத்-இதை இச்சாம:- ஆசைப்படுகிறோம்; வேதிதும்-அறிய; தவ-தங்களிடமிருந்து; ஸு- வ்ரத—ஆன்மீக முன்னேற்றத்தில் உறுதி பூண்டவரே: யத் – ஏதனால்; ஆத்ம-ஜாய-தன் சொந்த மகனுக்கு; சுத்தாய-மேன்மையுடைய பரிசுத்தமான; பிதா—தந்தையான இரண்யகசிபு: அதாத்-கொடுத்தான்; ஸாதவே—சிறந்த சாதுவான; ஹி-அதிகமான; அகம்-தொல்லை.
புதிஷ்டிர மகாராஜன் கூறினார்: தேவர்களுக்கிடையில் மிகச் சிறந்த முனிவரே, ஆன்மீக குருமார்களில் தலைசிறந்தவரே, பிரகலாதர் தன் சொந்த மகனாக இருந்தும், மிகச் சிறந்த தூய பாகவதரான அவருக்கு இரண்யகசிபு எவ்வாறு இவ்வளவு அதிகமான தொல்லைகளைக் கொடுத்தான்? இவ்விசயத்தைப் பற்றி தங்களிடமிருந்து அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.
பதம் 7.4.45
புத்ரான் விப்ரதிகூலான் ஸ்வான பிதர: புத்ர-வத்ஸலா:
உபாலபந்தே சிக்ஷார்த்தம் நைவாகம் அபரோ யதா
புத்ரான் – மகன்களை; விப்ரதிகூலான் – தந்தையின் விருப்பத்திற்கு மாறாக நடக்கும்; ஸ்வான் – தங்களுடைய; பிதர:-தந்தைமார்கள்; புத்ர -வத்ஸலா-குழந்தைகளிடம் மிகவும் அன்பு கொண்டிருப்பதால்; உபாலபந்தே- தண்டிப்பார்கள்; சிக்ஷ- அர்த்தம்-அவர்களுக்குப் புரிய வைப்பதற்காக; ந – இல்லை; ஏவ -நிச்சயம்; அகம் – தண்டனை; அபர: – எதிரி; யதா-போல்.
ஒரு தாயும், தந்தையும், தங்கள் குழந்தைகளிடம் எப்பொழுதும் அன்பு கொண்டுள்ளனர். அக்குழந்தைகள் கீழ்ப்படியாது நடக்கும் பொழுது, பெற்றோர்கள் அக்குழந்தைகளின் நன்மைக்காக அவர்களைக் கண்டிக்கின்றனர். அது அவர்களிடம் உள்ள பகையால் அல்ல. பிரகலாத மகாராஜனின் தந்தையான இரண்யகசிபு இத்தகைய ஒரு சிறப்புடைய மகனை எவ்வாறு தண்டித்தான்? நான் அறிய ஆவலாக இருப்பது இதைத்தான்.
பதம் 7.4.46
கிம் உதானுவசான் ஸாதூம்ஸ் தாத்ருசான் குரு-தேவதான்
ஏதத் கௌதூஹலம் ப்ரஹ்மன் அஸ்மாகம் விதம ப்ரபோ
பிது: புத்ராய யத் த்வஷோ மரணாய ப்ரயோஜித:
கிம் உத – அதுபற்றி சொல்லவே வேண்டாம்; அதுவசான்— கீழ்ப்படிந்த, நல்ல மகன்களுக்கு: ஸாதூன்-சிறந்த பக்தர்கள்; தாத்ருசான்-அத்தகைய; குரு-தேவதான் தந்தையைக் கடவுளாகவே மதிக்கும்; ஏதத் – இந்த; கௌதூஹலம் – சந்தேகத்தை; ப்ரஹ்மன்— பிராமணரே; அஸ்மாகம் -எங்களது; விதம – போக்கியருளுங்கள்; ப்ரபோ-பிரபுவே; பிது:-தந்தையின்; புத்ராய – மகனிடம்; யத் – எந்த; த்வஷ:-துவேஷம்; மரணாய-கொல்வதற்கே; ப்ரயோஜித: -தூண்டயதோ.
யுதிஷ்டிர மகாராஜன் தொடர்ந்து வினவினார்: கீழ்ப்படியும் குணமும், நன்னடத்தையும், தன் தந்தையிடம் மரியாதையும் உள்ள சிறப்புமிக்க ஒரு மகனிடம் ஒரு தந்தை இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்வது எப்படி சாத்தியமாகும்? பிராமணரே, என் பிரபுவே, பாசமுள்ள ஒரு தந்தை, மேன்மைமிக்க தன் மகனைக் கொல்லும் நோக்கத்துடன் சித்திரவதை செய்யவும் துணிந்ததை இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. தயவு கூர்ந்து இதுதொடர்பான எங்களது சந்தேகங்களைப் போக்கியருள வேண்டுகிறேன்.
ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “இரண்யகசிபு பிரபஞ்சத்தை பீதியடையச் செய்தல்” எனும் தலைப்பைக் கொண்ட நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.