அத்தியாயம் – 3
இரண்யகசிபு சாகாவரம் பெறும் திட்டம்
பதம் 7.3.1
ஸ்ரீ-நாரத உவாச
ஹிரண்யகசிபூ ராஜன் அஜேயம் அஜாமரம்
ஆத்மானம் அப்ரதித்வந்வம் ஏக-ராஜம் வ்யதித்ஸத
ஸ்ரீ-நாரத: உவாச-ஸ்ரீ நாரதர் கூறினார்; ஹிரண்யகசிபு:—அசுர ராஜனான இரண்யகசிபு: ராஜன்- யுதிஷ்டிர மகாராஜனே; அஜேயம்— எவராலும் ஜெயிக்க முடியாத; அஜர-மூப்பு அல்லது நோயின்றி; அமரம்- சாகா நிலை; ஆத்மானம்—தளக்கு; அப்ரதித்வந்வம்— பகைவரே இல்லாமல்; ஏக-ராஜம்—பிரபஞ்சத்தை ஆளும் ஒரே அரசனாக; வ்யதித்ஸத—ஆக விரும்பினான்.
நாரத முனி யுதிஷ்டிரரிடம் கூறினார்: அசுர ராஜனான இரண்யகசிபு பிறரால் ஜெயிக்க முடியாதவனாகவும், மூப்பும், மரணமும் இல்லாதவனாகவும், ஆக விரும்பினான். மரணமற்றவனாக வாழ்வதற்கு. அணிமா, லகிமா போன்ற யோக சித்திகளையெல்லாம் அவன் பெற விரும்பினான். மேலும் பிரம்மலோகம் உட்பட பிரபஞ்சம் முழுவதற்கும் தானே அரசனாக வேண்டும் என்றும் விரும்பினான்.
பதம் 7.3.2
ஸ தேபே மந்தர- த்ரோண்யாம் தப: பரம-தாருணம்
ஊர்த்வ-பாஹுர் நபோ-திருஷ்டி: பாதாங்குஷ்டாஸ்ரிதாவனி:
ஸ:–அவன் (இரண்யகசிபு); தேபே -செய்தான்; மந்தர—த்ரோண்யாம்-மந்தரமலைச் சாரலில்; தப:- தவம்;பரம- மிக மிக; தாருணம்- கடினமான; ஊர்த்வ—உயரத் தூக்கிக் கொண்டு; பாஹு:-கைகளை; நப-ஆகாயத்தை நோக்கி; த்ருஷ்டி:-பார்வை; பாத—அங்குஷ்ட- கால் கட்டை விரல்களால்; ஆஸ்ரித-நின்று கொண்டு; அவனி:- பூமியில்.
இரண்யகசிபு கைகளை உயரத் தூக்கி, கண்களால் வானத்தை நோக்கிக் கொண்டு, கால் கட்டை விரல்களால் பூமியில் நின்று கொண்டு, மந்தரமலைச் சாரலில் கடுந்தவங்களைச் செய்யலானான். இந்த நிலை மிகமிக கடினமான ஒன்றாகும். ஆனால் பூரணத்துவம் அடைவதற்குரிய ஒரு மார்க்கமாக இதை அவன் ஏற்றுக் கொண்டான்.
பதம் 7.3.3
ஜடா-தீதிதிபீ ரேஜே ஸம்வர்த்தார்க இவாம்சுபி:
தஸ்மிம்ஸ் தபஸ் தப்யமானே தேவா: ஸ்தானானி பேஜிரே
ஜடா-தீதிதிபி: தலையிலுள்ள கேசத்தின் பிரகாசத்தினால்; ரேஜே-ஜொலித்தான்; ஸம்வர்த்த—அர்க:-ஊழிக் காலத்து சூரியன்; இவ – போல்; அம்சுபி:-கதிர்களால்; தஸ்மின்-அவன் (இரண்யகசிபு); தப:-தவங்களில்; தப்யமானே-ஈடுபட்டபோது; தேவா:-இரண்யகசி புவின் அசுரச் செயல்களைக் காண பிரபஞ்சம் முழுவதிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்த தேவர்கள் எல்லோரும்; ஸ்தானானி-அவரவர் வசிப்பிடங்களுக்கு; பேஜிரே-திரும்பிச் சென்றனர்.
இரண்யகசிபுவின் தலையிலுள்ள முடியிலிருந்து ஊழிக்காலத்தில் ஏற்படுவது போன்ற, சூரியனின் சகிக்க முடியாத, பிரகாசமான கதிர்களைப் போன்ற ஒர் ஒளி வெளிப்பட்டது. இத்தகைய கடுந்தவங்களைக்கண்டு, எல்லாக் கிரகங்களிலும் சஞ்சரித்து வந்த தேவர்கள் அவரவர் வசிப்பிடங்களுக்குத் திரும்பினர்.
பதம் 7.3.4
தஸ்ய மூர்தன: ஸமுத்பூத: ஸதூமோ ‘க்னிஸ் தமோமய:
தீர்யக் ஊர்த்வம் அதே லோகான் ப்ராதபத் விஷ்வக் ஈரித:
தஸ்ய-அவனுடைய; மூர்தன: -தலையிலிருந்து; ஸமுத்பூத:- உண்டான; ஸ – தூம: – புகையுடன் கூடிய; அக்னி-நெருப்பு; தப:- மய:-கடுந்தவர்களினால்; தீர்யக் – பக்கங்களில்; ஊர்த்வம் – மேலே; அத: – கீழே ; லோகான்—எல்லாக் கிரகங்களையும்; ப்ராதபத் வெப்பமடையச் செய்தது; விஷ்வக்—சுற்றிலும்; ஈரித: – பரவி.
இரண்யகசிபுவின் கடுந்தவத்தின் காரணத்தால், அவனது தலையிலிருந்து நெருப்பு வெளிப்பட்டது. அந்த நெருப்பும், அதன் புகையும் ஆகாயம் முழுவதிலும் பரவி, உயர்ந்த மற்றும் தாழ்ந்த கிரகங்களைச் சூழ்ந்து கொண்டு, அவற்றை மிகவும் வெப்பமடையச் செய்தது.
பதம் 7.3.5
கக்ஷபுர் நதி-உதன்வந்த: ஸத்வீபாத்ரிஸ் சசால பூ:
நிபேது: ஸக்ரஹாஸ் தாரா ஜஜ்வலுஸ் ச திசோ தச
கக்ஷுபு:-கொந்தளித்தன; நதீ – உதன்வந்த: – நதிகளும், சமுத்திரங்களும்; ஸ – த்வீப-தீவுகளுடன்; அத்ரி:- மற்றும் மலைகள்; சசால – அதிர்ந்தன; பூ:-பூமியின் தளம்; நிபேது:-விழுந்தன; ஸ-க்ரஹா:- கிரகங்களுடன்; தாரா:-நட்சத்திரங்கள்; ஜஜ்வலு:-எரிந்தன; ச – கூட; திச: திச-பத்துத் திசைகளும்.
இக்கடுந்தவத்தின் வலிமையினால், எல்லா நதிகளும், சமுத்திரங்களும் கொந்தளிப்படைந்தன. மலைகளுடனும், தீவுகளுடனும் கூடிய பூமி அதிரத் துவங்கியது. நட்சத்திரங்களும் கிரகங்களும் கீழே விழுந்தன. எல்லாத் திசைகளும் கொழுந்துவிட்டு எரிந்தன.
பதம் 7.3.6
தேன தப்தா திவம் த்யக்த்வா ப்ரஹ்மலோகம் யயு: ஸுரா:
தாத்ரே விக்ஞாபயாம் ஆஸுர் தேவ-தேவ ஜகத்-பதே
தைத்யேந்ர-தபஸா தப்தா திவி ஸ்தாதும் ந சக்னும:
தேன- அதனால் (தவத்தீயினால்); தப்தா: -எரிக்கப்பட்ட; திவம் – உயர் கிரகங்களிலுள்ள அவர்களது வசிப்பிடங்களை; த்யக்த்வா- விட்டுவிட்டு; ப்ரஹ்ம-லோகம்-பிரம்மா வசிக்கும் லோகத்திற்கு; யயு:-சென்றனர்; ஸுரா:- தேவர்கள்; தாத்ரே-பிரபஞ்சத்தின் தலைவராகிய பிரம்மாவிடம்; விக்ஞாபயாம் ஆசு:-வேண்டினர்; தேவ – தேவ – தேவர்களின் தலைவரே; ஜகத்-பதே-பிரபஞ்சத்தின் தலைவரே; தைத்ய – இந்ர – தபஸா—தைத்திய ராஜனான இரண்யகசிபுவால் செய்யப்பட்ட கடுந்தவங்களினால்; தப்த:-வறுக்கப் பட்டு; திவி – சுவர்க்க லோகங்களில்; ஸ்தூதும் – இருக்க; ந-இல்லை; ஸக்னும:- எங்களால் முடிந்தது.
இரண்யகசிபுவின் கடுந்தவங்களினால் மிகவும் தொல்லைக்குள்ளாகி கட்டெரிக்கப்பட்ட எல்லா தேவர்களும் தாங்கள் வசிக்கும் கிரகங்களை விட்டு வெளியேறி பிரம்மதேவரின் கிரகத்திற்குச் சென்று, அவரிடம் பின்வருமாறு அறிவித்தனர்: தேவர்களின் தலைவரே, பிரபஞ்ச நாயகரே, இரண்யகசிபுவின் கடுந்தவங்களின் பலனாக அவனது தலையிலிருந்து வெளிப்படும் தீயினால் நாங்கள் மிகவும் தொல்லைக்குள்ளாகியுள்ளோம். இதனால் நாங்கள் எங்களுடைய கிரகங்களில் வகிக்க முடியாமல் உங்களிடம் வந்துள்ளோம்.
பதம் 7.3.7
தஸ்ய சோபஸமம் பூமன் விதேஹி யதி மன்யஸே
லேகா ந யாவன் நங்க்ஷ்யந்தி பலி-ஹாராஸ் தவாபிபூ:
தஸ்ய-இதனுடைய; ச – மேலும்; உபசமம் – நிறுத்தத்தை: பூமன் -மகிமையுடையவரே; விதேஹி—செய்யுங்கள்; யதி – என்றால்; மன்யஸே-சரி என்று நினைத்தீர்களானால்; லோக:-பல்வேறு கிரகங்களின் வாசிகள் எல்லோரும்; ந-இல்லை; யாவத்—எதுவரை; ரங்க்ஷ்யந்தி-அழிக்கப்பட்டு விடுவார்கள்; பலி – ஹாரா: – உங்களுக்குக் கீழ்ப்படிந்தவர்கள் தவ—உங்களது; அபிபூ-இப்பிரபஞ்சத்தின் தலைவரே.
ஓ மகிமைவாய்ந்தவரே, இப்பிரபஞ்சத்தின் தலைவரே, தாங்கள் சரியென்று நினைத்தால், உங்களுக்குக் கீழ்படிந்த பிரஜைகள் அனைவரும் அழிக்கப்படுவதற்கு முன்பாக, அனைத்தையும் அழித்து விடுவதற்காக ஏற்பட்ட இத்தொல்லைகளை தயவுசெய்து நிறுத்தி விடுங்கள்.
பதம் 7.3.8
தஸ்யாயம் கில ஸங்கல்பஸ் சரதோ துஸ்சரம் தப:
ஸ்ரூயதாம் கிம் ந விதிதஸ் தவாதாபி நிவேதிதம்
தஸ்ய – அவனுடைய; அயம்-இந்த; கில-நிச்சயமாக; ஸங்கல்ப:- உறுதியான தீர்மானம்; சரத:-செய்யும்; துஸ்சரம்-மிகவும் கடுமையான; தப: தவம்; ஸ்ரூயதாம்- கேட்கப்படட்டும்; கிம்- எது; ந-இல்லை; விதத:- அறிந்ததை; தவ-உங்களுக்கு: அதாபி- இருப்பினும்; நிவேதிதம்- விண்ணப்பிக்கிறோம்.
இரண்யகசிபு மிகவும் கடுமையான தவத்தை மேற்கொண்டான். அவனுடைய திட்டத்தைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள் என்றாலும், அவனுடைய நோக்கங்கள் என்னவென்பதை நாங்கள் கூறுகிறோம், தயவு செய்து கேளுங்கள்.
பதங்கள் 7.3.9-7.3.10
ஸ்ருஷ்ட்வா சராசரம் இதம் தபோ-யோக-ஸமாதினா
அத்யாஸ்தே ஸர்வ-திஷ்ண்யேப்ய பரமேஷ்டீ நிஜாஸனம்
தத் அஹம் வர்தமானேன தபோ-யோக-ஸமாதினா
காலாத்மனோஸ் ச நித்யத்வாத் ஸாதயிஷ்யே ததாத்மன:
ஸ்ருஷ்ட்வா-சிருஷ்டி செய்து; சர-அசைவன; அசரம்-மற்றும் அசையாதன; இதம்- இந்த; தப:- தவம்; யோக-மற்றும் யோக சக்தியின்; ஸமாதினா-சமாதிப்பயிற்சியினால்; அத்யாஸ்தே – நிலை பெற்று இருக்கிறார்; ஸர்வ-திஷ்ண்யேப்ய: (சுவர்க்க லோகம் உட்பட) எல்லாக் கிரகங்களையும் விட; பரமேஷ்டீ-பிரம்மதேவர்; நிஜ- ஆஸனம்—அவரது சிம்மாசனத்தை; தத் – எனவே; அஹம்-நான்; வந்தமானேன—அதிகரிப்பதன் மூலம்; தப:–தவம்; யோக-யோக சக்திகள் ஸமாதினா—மற்றும் சமாதி; கால-காலத்தின்; ஆத்மனோ:- மற்றும் ஆத்மாவின்; ச – கூட; நித்யத்வாத் – நித்தியமான நிலைக்காக; ஸாதயிஷ்யே- அடையப் போகிறேன்; ததா-அந்த அளவு; ஆத்மன:- எனக்காக.
இப்பிரபஞ்சத்திற்குள் பரம அதிகாரம் உள்ளவரான பிரம்மதேவர், அவரது உயர்ந்த பதவியை கடுந்தவங்கள். யோக சக்தி, சமாதி ஆகியவற்றின் வலிமையால் பெற்றுள்ளார். அதன் பயனாக பிரபஞ்சத்தைப் படைத்த பிறகு, அவர் பிரபஞ்சத்திற்குள் மிகவும் பூஜிக்கத்தக்க தேவராக ஆகியுள்ளார். நான் நித்தியமானவன், காலமும் நித்தியமானது என்பதால், நானும் இத்தகைய தவம், அஷ்ட சித்தி, சமாதி ஆகியவற்றையடைய முயன்று, பற்பல பிறவிகளுக்கு பிரம்மதேவரால் அனுபவிக்கப்படும் அதே பதவியை ஆக்கிரமிக்கப்போகிறேன்.
பதம் 7.3.11
அன்யதேதம் விதாஸ்யே ‘ஹம் அயதா பூர்வம் ஓஜஸா
கிம் அன்யை: கால-நிர்தூதை: கல்பாந்தே வைஷ்ண வாதிபி:
அன்யதா-இதற்கு மாறாக; இதம்-இப்பிரபஞ்சம்; விதாஸ்யே- செய்வேன்; அஹம்-தான்; அயதா- தலைகீழாக; பூர்வம்-முன்பிருந்தது போல்; ஓஜஸா—எனது தவ வலிமையினால்; கிம் -என்ன பயன்; அன்யை:-மற்றவைகளால்; கால-நிர்தூதை:—காலப் போக்கில் அழிக்கப்பட்டுவிடும்; கல்ப-அந்தே- யுக முடிவில்; வைஷ்ணவ ஆதிபி:- துருவ லோகம் அல்லது வைகுண்ட லோகம் போன்ற லோகங்களால்.
“என்னுடைய கடுந்தவங்களின் வலிமையால் பாவ புண்ணியச் செயல்களின் பலன்களை நான் தலைகீழாக மாற்றுவேன். இவ்வுலகில் நிலைநாட்டப்பட்டுள்ள எல்லாப் பழக்க வழக்கங்களையும் நான் தலைகீழாக மாற்றியமைப்பேன். யுக முடிவில் துருவலோகம் கூட அழிக்கப்பட்டுவிடும். ஆகவே அதனால் என்ன பயன்? பிரம்மனின் பதவியை அடையவே நான் விரும்புகிறேன்.
பதம் 7.3.12
இதி சுஸ்ரும நிர்பந்தம் தப: பரமம் ஆஸ்தித:
விதத்ஸ்வானந்தரம் யுக்தம் ஸ்வயம் த்ரி புவனேஸ்வர
இதி-இவ்வாறு; சுஸ்ரும-தாங்கள் கேள்விப்பட்டோம்; நிர்பந்தம் -உறுதியான தீர்மானம்; தப:-தவம்; பரமம்-மிகக் கடுமையான; ஆஸ்தித:-நிலைபெற்றிருக்கிறான்; விதத்ஸ்வ-நடவடிக்கை எடுங்கள்; அனந்தரம் – விரைவாக; யுக்தம்-தகுந்த; ஸ்வயம் நீங்களே; த்ரி – புவன – ஈஸ்வர – மூவுலகங்களுக்கும் தலைவரே.
பிரபுவே, உங்களுடைய பதவியை அடைவதற்காக இரண்யகசிபு இப்பொழுது கடுந்தவத்தில் ஈடுபட்டிருப்பதாக நம்பத்தகுந்த இடங்களிலிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். தாங்கள் மூவுலகிற்கும் தலைவராவீர். தயவு செய்து எது சரி என்று தோன்றுகிறதோ அதைத் தாமதமின்றி செய்யவும்.
பதம் 7.3.13
தவாஸனம் த்விஜ-கவாம் பாரமேஷ்ட்யம் ஜகத்-பதே
பவாய ஸ்ரேயஸே பூத்யை க்ஷேமாய விஜயாய ச
தவ-உங்களுடைய; ஆஸனம்—பதவி; த்விஜ-பிராமணப் பண்பாட்டின் அல்லது பிராமணர்களின்; கவாம்-பசுக்களின்; பாரமேஷ்ட்யம் — அனைத்திலும் மேலான; ஜகத்—பதே-பிரபஞ்சத்தின் தலை வரே; பவாய-முன்னேற்றத்திற்கு; ஸ்ரேயஸே-மேலான ஆனந்தத்திற்கு: பூத்யை -ஐசுவரிய விருத்திக்கு; க்ஷேமாய-பராமரிப்பு மற்றும் நல்லதிஷ்டத்திற்கு; விஜயாய-வெற்றி அடைவதற்கு மற்றும் மதிப்பு உயர்வதற்கு; ச – மேலும்.
பிரம்மதேவரே, இப்பிரபஞ்சத்திலுள்ள தங்களுடைய பதவி அனைவருக்கும், குறிப்பாக பசுக்களுக்கும், பிராமணர்களுக்கும் மிகவும் மங்களகரமானதாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை. பிராமணப் பண்பாட்டையும், பசு பராமரிப்பையும் அதிகமாக பேணிக்காத்து போற்றப்பட வேண்டும். இதனால் எல்லாவகையான பௌதிக இன்பங்களும், ஐஸ்வரியங்களும், நல்லதிர்ஷ்டமும் தானாகவே வளர்ச்சியடையும். ஆனால் துரதிஷ்டவசமாக, இரண்யகசிபு உங்களுடைய பதவியை ஆக்கிரமித்துக் கொண்டால் அனைத்தும் நாசமாகிவிடும்.
பதம் 7.3.14
இதி விக்ஞாபிதோ தேவைர் பகவான் ஆத்மபூர் ந்ருப
பரிதோ ப்ருக-தக்ஷாத்யைர் யயௌ தைத்யேஸ்வராஸ்ரமம்
இதி-இவ்வாறு: விக்ஞாபித:- அறிவிக்கப்பட்டதும்; தேவை:- எல்லா தேவர்களாலும்; பவான்— மிகவும் சக்திவாய்ந்த; ஆத்ம-பூ: – தாமரை மலரிலிருந்து பிறந்தவரான பிரம்ம தேவர்; ந்ருப—அரசே; பரித:-சூழப்பட்டவராய்; ப்ருசு-பிருகு: தக்ஷ – தட்சன்; ஆத்யை:- முதலியவர்களால்; யயை-சென்றார்; தைத்ய-ஈஸ்வர—தைத்ய ராஜனான இரண்யகசிபு; ஆஸ்ரமம் – தவம் செய்யும் இடத்திற்கு.
அரசே, தேவர்களால் இவ்வாறு அறிவிக்கப்பட்டதும், மிகவும் சக்தி வாய்ந்தவரான பிரம்மதேவர், பிருகு, தட்சன் மற்றும் வேறு மாமுனிவர்களால் பின் தொடரப்பட்டவராய், உடனடியாக இரண்யகசிபு தவம் செய்து கொண்டிருந்த இடத்திற்குப் புறப்பட்டார்.
பதங்கள் 7.3.15 – 7.3.16
ந ததர்ச ப்ரதிச்சன்னம் வல்மீக-த்ருண-கீசகை:
பிபீலிகாபிர் ஆசீர்ணம் மேதஸ்-த்வங்-மாம்ஸ்-சோணிதம்
தபந்தம் தபஸா ஸோகான் யதாப்ராபிஹிதம் ரவிம்
விலக்ஷ்ய விஸ்மித: பிராஹ ஹஸம்ஸ் தம் ஹம்ஸ வாஹன:
ந-இல்லை; ததர்ச – கண்டார்; ப்ரதிச்சன்னம் – மூடப்பட்டிருந்த; வல்மீக – ஓர்எறும்புப் புற்றால்; த்ருண—புல்; கீசகை:மற்றும் மூங்கில் புதர்கள்; பிபீலிகாபி:- எறும்புகளால்; ஆசீர்ணம்-சுற்றிலும் அரிக்கப்பட்டு; மேத:-கொழுப்பு: தீவக்—தோல்; மாம்ச – சதை; சோணிதம்— மற்றும் இரத்தம்; தபந்தம்—உஷ்ணப்படுத்திக் கொண்டு; தபஸா—கடுத்தவத்தால்; லோகான் – மூவுலகங்களையும்; யதா—போன்று; அப்ர – லோகங்களால்; அபிஹிதம் – மூடப்பட்ட: ரவிம்-சூரியன்; விலஷ்ய -பார்த்து: விஸ்மித:-மிகவும் ஆச்சரியமடைந்து; ப்ராஹ-கூறினார்; ஹஸன் – புன்னகை செய்து; தம்—அவனிடம்; ஹம்ஸ – வாஹன: – அன்ன வாகனமுடைய பிரம்மதேவர்.
ஓர் அன்ன விமானத்தால் சுமந்து செல்லப்பட்ட பிரம்மதேவரால் இரண்யகசிபு இருந்த இடத்தை முதலில் கண்டு பிடிக்க இயலவில்லை. ஏனெனில், இரண்யகசிபுவின் உடல் ஓர் எறும்புப் புற்றினாலும், புல்லாலும், மூங்கில் புதர்களாலும் மூடுப்பட்டிருந்தது. இரண்யகசிபு நீண்ட காலமாக அங்கேயே இருந்ததால், எறும்புகள் அவனது தோல், கொழுப்பு, சதை, இரத்தம் ஆகியவற்றைத் தங்களுக்கு இரையாக்கிக் கொண்டிருந்தன. பின்னர் பிரம்மதேவரும் மற்ற தேவர்களும், மேகத்தால் மறைக்கப்பட்ட சூரியனைப் போல், தன் தவ வலிமையால் உலகம் முழுவதையும் உஷ்ணப்படுத்திக் கொண்டிருந்த அவன் இருக்குமிடத்தைக் கண்டுபிடித்தனர். அதைக் கண்டு ஆச்சரியமடைந்த பிரம்மதேவர், புன்னகை செய்து பின்வருமாறு அவனிடம் கூறலானார்.
பதம் 7.3.17
ஸ்ரீ-ப்ரஹ்மோவாச
உத்திஷ்டோத்திஷ்ட பத்ரம் தே தப:-ஸித்தோ ‘ஸி காஸ்யப
வரதோ ‘ஹம் அனுப்ராப்தோ வ்ரியதாம் ஈப்ஸிதோ வர:
ஸ்ரீ – ப்ரஹ்மா உவாச-பிரம்மதேவர் கூறினார்; உத்திஷ்ட – எழுந்திரு; உத்திஷ்ட – எழுந்திரு; பத்ரம்—எல்லா நலன்களும்; தே – உனக்கு உண்டாகட்டும்; தப: – ஸித்த: -தவத்தில் பூரணத்துவம் அடைந்து; அஸி – இருக்கிறாய்; கஸ்யப-கஸ்யபரின் மகனே; வர —த:-வரமளிப்பவனான; அஹம்-நான்; அனுப்ராப்த:-வந்து விட்டேன்; வ்ரியதாம்—கேட்கப்படட்டும்; ஈப்ஸித:-விரும்பிய; வர:- வரம்.
பிரம்மதேவர் கூறினார்: கஸ்யப முனிவரின் மகனே எழுந்திரு, தயவு செய்து எழுந்திரு. உனக்கு எல்லா நலன்களும் உண்டாகட்டும். இப்பொழுது நீ உனது தவங்களில் பூரணத்துவம் அடைந்துவிட்டாய். ஆகவே உனக்கு நான் வரமளிக்கிறேன். இப்பொழுது உனக்கு வேண்டிய வரத்தை நீ கேட்கலாம். உன் விருப்பத்தை நான் நிறைவேற்ற முயற்சிக்கிறேன்.
பதம் 7.3.18
அக்ராக்ஷம் அஹம் ஏதம் தே ஹ்ருத்-ஸாரம் மஹத்-அத்புதம்
தம்ச-பக்ஷித -தேஹஸ்ய ப்ராணா ஹி அஸ்திஷு சேரதே
அத்ராக்ஷம் – நேரில் கண்டேன்; அஹம்-நான்; ஏதம்-இந்த; தே-உன்னுடை: ஹ்ருத் -ஸாரம்-சகிப்புத்தன்மையை; மஹத்- மிகச்சிறந்த; அத்புதம்- அற்புதத்தை; தம்ச – பக்ஷித—புழுக்களாலும், எறும்புகளாலும் அரிக்கப்பட்டு; தேஹஸ்ய – யாருடைய உடல்: ப்ராணா: – பிராணவாயு: ஹி- – மட்டும்; அஸ்திஷு – எலும்புகளில்; சேரதே – அடைக்கலம் கொண்டுள்ளது.
உன்னுடைய சகிப்புத் தன்மையைக் கண்டு நான் மிகவும் ஆச்சரியப் படுகிறேன். புழு பூச்சிகளாலும், எறும்புகளாலும் அரிக்கப்பட்டு உண்ணப்பட்ட போதிலும், நீ உன் எலும்புக்கிடையில் உனது பிராண வாயுவை இன்னும் சுழல விட்டுக் கொண்டிருக்கிறாய். உண்மையிலேயே இது அற்புதமான செயல்தான்.
பதம் 7.3.19
நைதத் பூர்வர்ஷயஸ் சக்ருர் ந கரிஷ்யந்தி சாபரே
நிரம்புர் தாரயேத் ப்ராணனான் கோ வை திவ்ய-ஸமா: சதம்
ந – இல்லை; ஏதத் – இதுபோல்; பூர்வ-ரிஷய:-உனக்கு முன் தோன்றிய பிருகு போன்ற முனிவர்கள்; சக்ரு:-செய்தவர்; ந- மாட்டார்கள்; கரிஷ்யந்தி-செய்ய; ச-கூட; அபரே-மற்ற எவரும்; நிரம்பு: – நீர் கூட பருகாமல்; தாரயேத் – பாதுகாக்க முடியும்; ப்ராணான் – பிராண வாயுவை; க:-யாரால்; வை-நிச்சயம்; திவ்ய-ஸமா:- தேவ ஆண்டுகள்; சதம்—நூறு,
உனக்கு முன் பிறந்த பிருகு போன்ற முனிவர்களால் கூட இத்தகைய கடுத்தவங்களைச் செய்ய முடியாது. எதிர்காலத்திலும் எவராலும் இவ்வாறு செய்ய முடியாது. நூறு தேவ ஆண்டுகளுக்கு நீர் கூட பருகாமல் உயிர் வாழக் கூடியவர் இந்த மூவுலகங்களிலும் யாரிருக்கிறார்?
பதம் 7.3.20
வ்யவஸாயேன தே ‘னேன துஷ்கரேண மனஸ்வினாம்
தபோ-நிஷ்டேன பவதா ஜிதோ ‘ஹம் திதி-நந்தன
வ்யவஸாயேன-மன உறுதியால்; தே-உன்னுடைய; அனேன— இந்த: துஷ்கரேண-செய்வதற்குக் கடினமான; மனஸ்வினாம்—பெரும் ரிஷி முனிவர்களுக்குக் கூட; தப:-நிஷ்டேன-தவத்தில் ஆழ்ந்துள்ள; பவதா—உன்னால்; ஜித:- வெற்றி கொள்ளப்பட்டேன்; அஹம்-நான்; திதி – நந்தன – திதியின் புதல்வனே.
என்னருமை திதியின் மைந்தனே, உன்னுடைய கடும் தவத்தினாலும் மன உறுதியினாலும் சிறந்த முனிவர்களால் கூட செய்ய முடியாததை நீ செய்து விட்டாய். இவ்வாறாக நிச்சயமாக உன்னால் நான் வெற்றி கொள்ளப்பட்டேன்.
பதம் 7.3.21
ததஸ் து ஆசிஷ: ஸர்வா ததாமி அஸுர-புங்கவ
மர்தயஸ்ய தே ஹி அமர்தஸ்ய தர்சனம் நாஃபலம் மம
தத: – இதனால்; தே-உனக்கு: ஆசிஷ: -வரங்களையும்; ஸர்வா:- எல்லா: ததாமி- நான் அளிப்பேன்; அஸுர—புங்கவ—அசுரர்களில் சிறந்தவனே; மர்தஸ்ய-மரணமடையும் தன்மையுடைய; தே – உன் போன்றவருக்கு; ஹி-நிச்சயம்; அமர்தஸ்ய – சாகாதவரின்; தர்சனம்— தரிசனம்; ந—இல்லை; அஃபலம்-பலனளிக்காமல்; மம -எனது.
அசுரர்களில் சிறந்தவனே, இக்காரணத்திற்காக உன் விருப்பப்படி உனக்கு வேண்டிய வரங்களையெல்லாம் அளிக்க நான் தயாராக உள்ளேன். நான், மனிதர்களைப்போல் சாகாதவர்களான தேவர்களின் சுவர்க்கலோகத்தைச் சேர்ந்தவன். ஆகவே நீ மரணத்திற்குட்பட்டவன் என்ற போதிலும், உனக்கு என் தரிசனம் வீண்போகாது.
பதம் 7.3.22
ஸ்ரீ-நாரத உவாச
இதி உக்த்வாதி-பவோ தேவோ பக்ஷிதாங்கம் பிபீலிகை:
கமண்டலு-ஜலேநெளக்ஷத் திவ்யேநாமோக-ராதஸா
ஸ்ரீ-நாரத: உவாச – ஸ்ரீ நாரத முனி கூறினார்; இதி-இவ்வாறு; உக்த்வா-கூறிவிட்டு; ஆதி-பவ:-பிரபஞ்சத்தில் முதல் ஜீவராசியான பிரம்ம தேவர்; தேவ:-தேவர்களில் முக்கியமான; பக்ஷித-அங்கம்— கிட்டத்தட்ட முற்றிலும் அரிக்கப்பட்டிருந்த இரண்யகசிபுவின் உடல் மீது; பிபீலிகை:-எறும்புகளால்; கமண்டலு-பிரம்மாவின் கைகளிலிருந்த விசேஷ கமண்டலத்தின்; ஜலேன—நீரால்; ஒளக்ஷத்- தெளித்தார்; திவ்யேன-சாதாரணமானது அல்லாத திவ்யமான; அமோக— பலனளிக்காமல் போகாது; ராதஸா—அதன் சக்தி.
ஸ்ரீ நாரத முனி தொடர்ந்து கூறினார்: இப்பிரபஞ்சத்தின் முதல் ஜீவராசியும், மிகவும் சக்தி வாய்ந்தவருமான பிரம்மதேவர் இரண்யகசிபுவிடம் இவ்வார்த்தைகளைக் கூறியபின், தமது கமண்டலத்திலுள்ள உன்னதமான, நிச்சயம் பலனளிக்க கூடிய, ஆன்மீகமான நீரை எடுத்து, எறும்புகளாலும் பூச்சிகளாலும் அரிக்கப்பட்டிருந்த இரண்யகசிபுவின் உடல் மீது தெளித்தார். இவ்வாறாக அவர் இரண்யகசிபுவுக்குப் புத்துணர்வு அளித்தார்.
பதம் 7.3.23
ஸ தத் கீசக-வல்மீகாத் ஸஹ-ஓஜோ-பலான்வித:
ஸர்வாவயவ-ஸம்பன்னோ வஜ்ர-ஸம்ஹனனோ யுவா
உத்திதஸ் தப்த-ஹேமாபோ விபாவஸுர் இவைதஸ:
ஸ – -இரண்யகசிபு; தத்- அந்த; கீசக -வல்மீகாத்- எரும்புப் புற்றிலிருந்தும், மூங்கில் புதரிலிருந்தும்; ஸஹ- மனோபலம்; ஓஜ –புலன்களின் சக்தி: பல-போதுமான தேக பலம்; அன்வித:-இவற்றுடன் கூடிய; ஸர்வ-எல்லா; அவயவ-உடலின் அவயவங்களும்; ஸம்பன்ன: -முழுமை அடையப்பெற்றவனாக; வஜ்ர-ஸம் -ஹனன:- வஜ்ரத்தைப் போல் உறுதியான ஒருடலுடன்; யுவா-இளைஞனாக; உத்தித:- எழுந்தான்;தப்த-ஹேம-ஆப்:- யாருடைய உடலின் காந்தி உருக்கிய தங்கம் போல் ஜொலித்ததோ அவன்; விபாவஸு:-நெருப்பு; இவ-போல்; ஏதஸ:- விறகிலிருந்து.
பிரம்மதேவரின் கமண்டலத்திலுள்ள நீர் அவன் மீது தெளிக்கப் பட்டவுடனேயே, இரண்யகசிபு வஜ்ரத்தின் தாக்குதலையும் தாங்கக் கூடிய, மிகவும் சக்தி வாய்ந்த அவயவங்களுடன் கூடிய முழுமையான ஓருடலுடன் கூடியவனாய் எழுந்து நின்றான். விறகிலிருந்து நெருப்பு வெளிப்படுவது போல், தேக பலத்துடனும், பொன்னிறமான ஒரு உடலுடனும், முற்றிலும் இளமையான ஒரு மனிதனாக அவன் எறும்புப் புற்றிலிருந்து வெளிவந்தான்.
பதம் 7.3.24
ஸ நிரீக்ஷ்யாம்பரே தேவம் ஹம்ஸ-வாஹம் உபஸ்திதம்
நனாம சிரஸா பூமௌ தத்-தர்சன-மஹோத்ஸவ:
ஸ:-அவன்; நிரீக்ஷ்ய – பார்த்து: அம்பரே-ஆகாயத்தில்: தேவம்- உயர்ந்த தேவரை; ஹம்ஸ-வாஹம் அன்ன வாகனமுடைய; உபஸ்திதம் -தன் முன் இருப்பதை; நனாம—வணங்கினான்; சிரஸா – தலையால்; பூமௌ – தரையில், தத்-தர்சன -பிரம்ம தேவரைக் கண்டதால்; மஹா-உத்ஸவ: – மிகவும் மகிழ்ச்சியடைந்தான்.
பிரம்ம தேவர் தமது அன்ன விமானத்தில் தன் முன் ஆகாயத்தில் இருப்பதைக் கண்ட இரண்யகசிபு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன் உடனே தன் தலை பூமியில் படும்படியாக விழுந்து வணங்கி, அவருக்குத் தான் கடமைப் பட்டிருப்பதை வெளிப்படுத்தத் துவங்கினான்.
பதம் 7.3.25
உத்தாய ப்ராஞ்ஜலி: ப்ரஹ்வ ஈக்ஷமாணோ த்ருசா விபும்
ஹர்ஷாஸ்ரு-புலகோத்பேதோ கிரா கத்கதயாக்ருணாத்
உத்தாய-எழுந்து; ப்ராஞ்ஜலி:-கூப்பிய கரங்களுடன்; ப்ரஹ்வ: – பணிவுடன்; ஈக்ஷமாண:-பார்த்துக் கொண்டு; த்ருசா – தன் கண்களால்; விபும்-இப்பிரபஞ்சத்திலேயே மேலானவரை; ஹர்ஷ் – மகிழ்ச்சியுடன்; அஸ்ரு-கண்ணீருடன்; புலக-மெய் சிலிர்க்க: உத் பேத:-புத்துணர்வூட்டப்பட்டு; கிரா-வார்த்தைகளால்; கத்கதயா- தழுதழுத்த; அக்ருணாத்-பிரார்த்தித்தான்.
பிறகு தரையிலிருந்து எழுந்து பிரம்மதேவரைத் தன் முன் கண்ட அந்த தைத்தியர்களின் தலைவன், ஆனந்தத்தால் பூரிப்படைந்தான். அவன் கண்களில் கண்ணீருடன், முழு உடலும் நடுநடுங்க, பிரம்மதேவரை திருப்திப்படுத்துவதற்காக கூப்பிய கரங்களுடனும், தழுதழுத்த குரலுடனும், பணிவுடன் பின்வருமாறு பிரார்த்திக்கத் துவங்கினான்.
பதங்கள் 7.3.26-7.3.27
ஸ்ரீ-ஹிரண்யகசிபுர் உவாச
கல்பாந்தே கால-ஸ்ருஷ்டேன யோ ‘ந்தேன தமஸாவ்ருதம்
அபிவ்யனக் ஜகத் இதம் ஸ்வயஞ்யோதி: ஸ்வ-ரோசிஷா
ஆத்மனா த்ரி-வ்ருதா சேதம் ஸ்ருஜதி அவதி லும்பதி
ரஜ:-ஸத்வ-தமோ-தாம்னே பராய மஹதே நம:
ஸ்ரீ-ஹிரண்யகசிபு: உவாச-இரண்யகசிபு கூறினான்; கல்ப – அந்தே – பிரம்மாவின் ஒரு நாளான கல்ப முடிவில்: கால-ஸ்ருஷ்டேன—காலமெனும் தத்துவத்தால் படைக்கப்பட்ட; ய – யார்; அந்தேன-அடர்ந்த இருளால்; தமஸா – அறியாமையால்: ஆவ்ருதம் – மூடப்பட்ட; அபிவ்யனக் — தோற்றுவிக்கப்பட்டது: ஜகத்-பிரபஞ்ச தோற்றம்: இதம் இது; ஸ்வயம்- ஜ்யோதி:-சுயப் பிரகாசத்துடன், ஸ்வ-ரோசிஷா-அவரது தேகக்கதிர்களால்; ஆத்மனா-தானே; த்ரி—வ்ருதா—ஜட இயற்கையின் முக்குணங்களால் நடத்தப்படும்; ச – கூட; இதம் – இந்த ஜட உலகத்தை; ஸ்ருஷ்டி-படைக்கிறார்; அவதி—காக்கிறார்; லும்பதி -அழிக்கிறார்; ரஜ:- ரஜோ (தீவிர) குணத்தின்; ஸத்வ—சத்வ (நல்ல) குணம்; தம: – தமோ (அறியாமை) குணம்; தாம்னே-புகலிடமான உயர்ந்த பிரபுவுக்கு; பராய- மேலான; மஹதே – மகிமையுடையவருக்கு; நம: – எனது பணிவான வணக்கங்கள்.
இப்பிரபஞ்சத்தின் பரம அதிகாரிக்கு எனது பணிவான வணக்கங்கள். அவரது ஒவ்வொரு பகலின் முடிவிலும் பிரபஞ்சமானது, காலத்தின் ஆதிக்கத்திற்கு உட்பட்டு அடர்ந்த இருளினால் முழுமையாக மூடப்பட்டு விடுகிறது. பிறகு மீண்டும் சுயப் பிரகாசமுடையவரான அந்த பிரபு தன் சொந்த பிரகாசத்தினால், மூன்று ஜட இயற்கைக் குணங்களுடன் கூடிய ஜட சக்தியின் மூலமாக முழு பிரபஞ்ச தோற்றத்தையும் படைத்து, காத்து, அழிக்கிறார். சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் ஆகிய அந்த இயற்கைக் குணங்களுக்கு பிரம்ம தேவரே புகலிடமாவார்.
பதம் 7.3.28
நம ஆத்யாய பீஜாய ஞான-விக்ஞான-மூர்த்தயே
ப்ராணேத்ரிய மணோ-புத்தி-விகாரைர் வ்யக்திம் ஈயுஷே
நம – எனது பணிவான வணக்கங்கள்; ஆத்யாய-ஆதியான முதல் ஜீவராசிக்கு; பீஜாய-பிரபஞ்ச தோற்றத்தின் விதையான; ஞான-ஞானத்தை; விக்ஞான-அறிவின் நடைமுறைச் செயல்பாட்டை; மூர்த்தயே-அந்த மூர்த்திக்கு: ப்ராண-உயிர் மூச்சின், இந்ரிய- புலன்களின்; மன-மனதின்; புத்தி-புத்தியின்; விகாரை:- மாற்றங்களால்; வ்யக்திம்-தோற்றம்: ஈயுஷே -அடைத்துள்ளவர்.
பிரம்மதேவர் அறிவாற்றல் உடையவரும், இப்பிரபஞ்ச தோற்றத்தைப் படைப்பதில் தன் மனதையும், தெளிவாக உணர்ந்த புத்தியையும் செலுத்தக் கூடியவரும் ஆவார். அவரது செயல்களின் காரணத்தால்தான் இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் கண்ணுக்குப் புலப்படுகின்றன. எனவே அவரே எல்லாத் தோற்றங்களுக்கும் காரணமாவார். இவ்வாறாக இப்பிரபஞ்சத்தின் மூல புருஷராக விளங்கும் அவருக்கு எனது வணக்கங்கள்.
பதம் 7.3.29
த்வம் ஈசிஷே ஜகதஸ் தஸ்தஷஸ் ச
ப்ராணேன முக்யேன பதி: ப்ரஜானாம்
சித்தஸ்ய சித்தைர் மன-இந்ரியாணாம்
பதிர் மஹான் பூத-குணா யே சயேச:
த்வம் – தாங்கள்; ஈசிஷே-உண்மையில் ஆள்பவர்; ஜகத:- அசையும் ஜீவன்களை; தஸ்துஷ: ஒரே இடத்தில் அசைவற்று கிடக்கும் ஜீவன்களை; ச-மேலும்; ப்ராணேன—உயிர்ச்சக்தியினால்; முக்யேன – எல்லாச் செயல்களுக்கும் பிறப்பிடமாவீர்; பதி:-தலைவர்; ப்ரஜானாம்.அனைத்து ஜீவராசிகளின்; சித்தஸ்ய-மனிதன்; சித்தை:- உணர்வினால்; மன: மனதின்; இந்ரியாணாம் – (செயல் மற்றும் அறிவுப் புலன் ஆகிய) இருவகைப் புலன்களின்; பதி:-தலைவர்; மஹான்—மிகச் சிறந்த; பூத-பெளதிக மூலப் பொருட்களின்; குண – மற்றும் பஞ்ச பூதங்களுடைய குணங்கள்; ஆசய—ஆசைகளின்; ஈச:- உயர்ந்த தலைவர்.
இந்த ஜட உலகைச் சேர்ந்த ஜீவன்களின் பிறப்பிடமான தாங்களே அசைவன, அசையாதன ஆகிய ஜீவராசிகளை ஆள்பவரும், அவற்றின் உணர்வுகளை உற்சாகப்படுத்துபவரும் ஆவீர். நீரே மனதையும், செயல் மற்றும் அறிவுப் புலன்களையும் பராமரிக்கிறீர். எனவே தாங்களே எல்லா பௌதிக மூலப்பொருட்கள் மற்றும் அவற்றின் குணங்கள் ஆகியவற்றின் உயர்ந்த ஆளுனரும், அனைத்து விருப்பங்களையும் ஆள்பவரும் ஆவீர்.
பதம் 7.3.30
த்வம் ஸப்த-தந்தூன் விதனோஷி தன்வா
த்ரய்யா சதுர்-ஹோத்ரக-வித்யயா ச
த்வம் ஏக ஆத்மாத்மவதாம் அனாதிர்
அனந்த-பார: கவிர் அந்தராத்மா
த்வம் – நீங்கள்; ஸப்த- தந்தூன்—அக்னிஷ்டோம யக்ஞத்திலிருந்து துவங்கும் ஏழு வகையான வேதக்கிரியைகளை; விதனோஷி-பரப்புகிறீர்கள்; தன்வா-உங்களுடைய உடலால்;த்ரய்யா—மூன்று வேதங்கள்; சது:-ஹோத்ரக-ஹோதா, அத்வர்யு, ப்ரஹ்ம, உக்காதா ஆகிய நான்கு வித புரோகிதர்களின்; வித்யயா-தேவையான அறிவால்; ச – கூட; த்வம்-நீங்கள்; ஏக:-ஒருவரே; ஆத்ம-பரமாத்மா; ஆத்ம – வதாம் எல்லா ஜீவராசிகளுக்கும்; அனாதி:-ஆதியற்ற; அனந்த-பார்:-அந்த மற்ற; கவி:- சிறந்த தூண்டுகோளாக விளங்குபவர்; அந்த:-ஆத்மா— இதயத்திலுள்ள ஆத்மா.
பிரபுவே, வேத சொரூபமாக உள்ள தங்களுடைய ரூபத்தினாலும், யாகம் செய்யும் அனைத்து பிராமணர்களின் செயல்களைப் பற்றிய அறிவின் மூலமாகவும், அக்னிஷ்டோமம் முதலான ஏழு வகையான யக்ஞங்களைக் கொண்ட வேதகிரியைகளைத் தாங்கள் பரப்புகிறீர்கள். உண்மையில், மூன்று வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள கிரிகைகளைச் செய்யும்படி யக்ஞ பிராமணர்களைத் தாங்கள் உற்சாகப்படுத்துகிறீர்கள். அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மா என்ற முறையில் தாங்கள் ஆதியும், அந்தமும் இல்லாதவரும், காலம் மற்றும் வெளி ஆகியவற்றின் எல்லைகளுக்கு அப்பாற்பட்டவருமாவீர்.
பதம் 7.3.31
த்வம் ஏவ காலோ ‘நிமிஷோ ஜனானாம்
ஆயுர் லவாதி-அவ்யவை: க்ஷிணோஷி
கூட ஸ்த ஆத்மா பரமேஷ்டி அஜோ மஹாம்ஸ்
த்வம் ஜீவ-லோகஸ்ய ச ஜீவ ஆத்மா
த்வம்- நீங்கள்; ஏவ-உண்மையில்; கால:-எல்லையற்ற காலம்; அனிமிஷ:-கண் சிமிட்டாத; ஜனானாம் – எல்லா ஜீவராசிகளின்; ஆயு:-ஆயுட்காலம்; லவ – ஆதி – வினாடி, நொடி, நிமிடம், மணி ஆகியவற்றைக் கொண்ட: அவயவை:- வெவ்வேறு பகுதிகளால்; க்ஷிணோஷி–குறைக்கிறீர்கள்; கூட-ஸ்த:- எதனாலும் பாதிப்படையாமல்; ஆத்மா-பரமாத்மா; பரமேஷ்டீ-பரம புருஷர்; அஜ: -பிறப்பற்றவர்; மஹான்-மேலானவர்; த்வம் – நீங்கள்; ஜீவ- லோகஸ்ய-இந்த ஜட உலகின்; ச- கூட; ஜீவ:-உயிரின் காரணம்; ஆத்மா – பரமாத்மா.
பிரபுவே நித்திய காலமாக விழித்துக் கொண்டிருக்கும் தாங்கள் நடப்பதையெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தாங்கள் நித்திய காலமாக இருந்துகொண்டு, நொடிகள், வினாடிகள், நிமிடங்கள், மணிகள் போன்ற உங்களுடைய வெவ்வேறு பகுதிகளின் மூலமாக அனைத்து ஜீவராசிகளின் ஆயுட் காலத்தையும் குறைக்கிறீர்கள். எனினும், தாங்கள் மாற்றமில்லாதவரும், பரமாத்மாவாக ஒரே இடத்தில் இருப்பவரும், சாட்சியும், பரமபுருஷரும், பிறப்பற்றவரும், மற்றும் உயிருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் காரணமாக உள்ள எங்கும் நிறைந்துள்ள ஆளுனரும் ஆவீர்.
பதம் 7.3.32
த்வத்த: பரம் நாபரம் அயி அனேஜத்
ஏஜச் ச கிஞ்சித் வ்யதிரிக்தம் அஸ்தி
வித்யா: கலாஸ் தே தனவஸ் ச ஸர்வா
ஹிரண்யகர்போ ‘ஸி ப்ருஹத் த்ரி ப்ருஷ்ட:
த்வத்த: – உங்களைவிட; பரம்-மேலானது; ந-இல்லை; அபரம்- கீழானது; அபி- கூட; அனேஜத்—அசையாதது: ஏஜத்—அசைவது: ச – மேலும்: கிஞ்சித் – எதுவும்; வ்யதிரிக்தம்-வேறானது; அஸ்தி-இருக்கிறது; வித்யா: – அறிவு: கலா: -அதன் அங்கங்கள்; தே-தங்களது. தனவ: -தேக அம்சங்கள்: ச-மேலும்; ஸர்வா: -எல்லாம்; ஹிரண்ய- கர்ப-பிரபஞ்சத்தைத் தமது வயிற்றுனும் வைத்திருப்பவர், அஸி- நீங்கள் இருக்கிறீர்கள்; ப்ருஹத் -பெரிதிலும் பெரிதாக; ப்ருஷ்ட- ஜட இயற்கையின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்டவராக.
ஒன்று உயர்ந்ததாகவோ, தாழ்ந்ததாகவோ, அசைவதாகவோ அல்லது அசையாததாகவோ இருப்பினும், எதுவுமே தங்களிடமிருந்து பிரிந்திருப்பதில்லை. உபநிஷதங்களைப் போன்ற வேத இலக்கியங்களிலிருந்து பெறப்படும் அறிவும், மூல வேத ஞானத்தின் துணை அங்கங்களிலிருந்து வரும் அறிவும் சேர்ந்ததே உங்களுடைய புற உடலாகும். தாங்கள் பிரபஞ்சத்தின் பிறப்பிடமான ஹிரண்யகர்பர் ஆவீர். எனினும், தாங்கள் பரம ஆளுனராக இருப்பதால், தாங்கள் மூன்று ஜட இயற்கைக் குணங்களைக் கொண்ட பௌதிக உலகிற்கு மேற்பட்டவராக இருக்கிறீர்கள்.
பதம் 7.3.33
வ்யக்தம் விபோ ஸ்தூலம் இதம் சரீரம்
யேனேந்ரிய ப்ராண-மனோ-குணாம்ஸ் த்வம்
புங்க்ஷே ஸ்திதோ தாமனி பாரமேஷ்ட்யே
அவ்யக்த ஆத்மா புருஷ: புராண:
வ்யக்தம் – தோற்றுவிக்கப்பட்ட; விபோ-பிரபுவே; ஸ்தூலம் -பிரபஞ்ச தோற்றம்; இதம்—இந்த; சரீரம்-புற உடல்; யேன— எதனால்; இந்ரிய—புலன்கள்; ப்ராண—உயிர் மூச்சு; மன:-மனம்; குணான்- உன்னத குணங்கள்; த்வம் -நீங்கள்; புங்க்ஷே-அனுபவிக்கிறீர்கள்: ஸ்தித:- இருந்து கொண்டு; தாமனி-உங்களுடைய இடத்தில்; பாரமேஷ்ட்யே – உத்தமமான; அவ்யக்த:-சாதாரண அறிவால் அறிய முடியாத; ஆத்மா-ஆத்மா; புருஷ:-பரமபுருஷர்; புராண:-பழமை யானவர்.
பிரபுவே, உங்களுடைய சொந்த இருப்பிடத்தில் மாற்றமில்லாதவராக இருக்கும் தாங்கள், இப்பிரபஞ்ச தோற்றத்திற்குள் தங்களுடைய விஸ்வரூபத்தை விரிவடையச் செய்வதன் மூலமாக இந்த ஜட உலகை அனுபவிப்பவராக காணப்படுகிறீர்கள். தாங்கள் பிரம்மனும், பரமாத்மாவும், பழமையானவரும், பரம புருஷருமாவீர்.
பதம் 7.3.34
அனந்தாவ்யக்த-ரூபேண யேனேதம் அகிலம் ததம்
சித்-அசிச்-சக்தி-யுக்தாய தஸ்மை பகவதே நம:
அனந்த—அவ்யக்த-ரூபேண எல்லையற்ற, தோற்றத்திற்கு வராத ரூபத்தினால்; யேன- எதனால்; இதம்-இந்த; அகிலம்-தொத்தமான; ததம்-விரிவடைத்துள்ளார்; சித்-ஆன்மீக; அசித்—பௌதிக; சக்தி- ஆற்றல்; யுக்தாய—உடையவருக்கு; தஸ்மை—அவருக்கு: பகவதே- பரமபுருஷருக்கு; நம:-எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன்.
எந்த பரமன் அவரது எல்லையற்ற, தோன்றா உருவில் இப்பிரபஞ்ச தோற்றத்திற்குள் பிரபஞ்சத்தின் மொத்த ரூபமாகப் பரந்து விரிந்துள்ளாரே, அவருக்கு எனது பணிவான வணக்கங்களை நான் சமர்ப்பிக்கிறேன். அவர் பகிரங்க மற்றும் அந்தரங்க சக்திகளையும், அனைத்து ஜீவராசிகளும் அடங்கிய நடுத்தரசக்தி என்று அழைக்கப்படும் கலப்படமான சக்தியையும் உடையவராவார்.
பதம் 7.3.35
யதி தாஸ்யஸி அபிமதான் வரான் மே வரதோத்தம
பூதேப்யஸ் த்வத்-விஸ்ருஷ்டேப்யோ ம்ருத்யுர் மா பூன் மம ப்ரபோ
யதி-என்றால் ; தரஸ்யஸி-கொடுப்பீர்கள்; அபிமதான் -விரும்பிய: வரான் -வரங்களை; மே-எனக்கு; வரத-உத்தம -வரமளிப்பவர்களில் சிறந்தவரே; பூதேப்ய:-ஜீவராசிகளால்; த்வத்-உங்களால்: விஸ்ருஷ்டேப்ய:-படைக்கப்பட்டுள்ள; ம்ருத்யு: மரணம்; மாபூத் ஏற்படக் கூடாது; மம-என்; ப்ரபோ-பிரபுவே.
பிரபுவே, வரமளிப்பவர்களில் சிறந்தவரே, நான் விரும்பும் வரத்தை நீங்கள் அளிப்பீர்கள் என்றால், தங்களால் படைக்கப்பட்ட எந்த ஜீவராசியாலும் எனக்கு மரணம் ஏற்படாதிருக்கட்டும்.
பதம் 7.3.36
நாந்தர் பஹிர் திவா நக்தம் அன்யஸ்மாத் அபி சாயுதை:
ந பூமௌ நாம்பரே ம்ருத்யுர் ந நரைர் ந ம்ருகைர் அபி
ந – இல்லை; அந்த:—(அரண்மனை அல்லது வீட்டின்) உள்ளே; பஹி:-வெளியே; திவா பகலில்; நக்தம்-இரவில்; அன்யஸ்மாத்—பிரம்மாவிற்கு மேலுள்ளயாராலும்; அபி -கூட; ச – மேலும்; ஆயுதை: -இந்த ஜட உலகில் உபயோகிக்கப்படும் எந்த ஆயுதத்தாலும்; ந- அல்லது; பூமௌ-பூமியில்; ந – கூடாது; அம்பரே- ஆகாயத்தில்;ம்ருத்யு:-மரணம்; ந-கூடாது; நரை:-எந்த மனிதனாலும்; ந- கூடாது; ம்ருகை:-எந்த மிருகத்தாலும்; அபி—கூட.
என் வசிப்பிடத்திலோ அல்லது அதற்கு வெளியிலோ, பகலிலோ அல்லது இரவிலோ, தரையிலோ அல்லது ஆகாயத்திலோ தங்களால் படைக்கப்பட்ட எந்த ஜீவராசியினாலோ, அல்லது எந்த ஆயுதத்தினாலோ, அல்லது எந்த மனிதனாலோ அல்லது மிருகத்தாலோ எனக்கு மரணம் ஏற்படக் கூடாது என்ற வரத்தை அருள்வீராக.
பதங்கள் 7.3.37- 7.3.38
வ்யஸுபிர் வாஸுமத்பிர் வா ஸுராஸுர-மஹோரகை:
அப்ரதித்வந்வதாம் யுத்தே ஜக-பத்யம் ச தேஹினாம்
ஸர்வேஷாம் லோக-பாலானாம் மஹிமானம் யதாத்மன:
தபோ-யோக-ப்ரபாவாணாம் யன் ந ரிஷ்யதி கர்ஹிசித்
வ்யஸுபி:-உயிரில்லாதவைகளால்; வா—அல்லது; அஸுமத்பி:- உயிருள்ள ஜீவன்களால்; வா—அல்லது; ஸுர—தேவர்களால்; அஸுர — அசுரர்களால்; மஹா-உருகை:-கீழுலங்களில் வாழும் பெரிய பாம்புகளால்; அப்ரதித்வந்வதாம்—எதிரி இல்லாத; யுத்தே -; ஜக-பத்யம்- தலைமையதிகாரம்; ச—மேலும்; தேஹினாம்-ஜடஉடல் படைத்தவர்களின் மேல்; ஸர்வேஷாம்-எல்லா; லோக-பாலானாம்— அனைத்து லோகங்களின் அதிதேவதைகள்; மஹி மானாம்-மகிமை; யதா- எவ்வாறு; ஆத்மன:-உங்களுடையது போல்; தப:-யோக— ப்ரபாவாணாம்-தவங்களாலும், அஷ்டாங்க யோகப்பயிற்சிகளாலும் அடையப்படும் சக்தியைப் பெற்றவர்களின்; யத்—எது; ந ரிஷ்யதி— ஒருபோதும் அழிவதில்லையோ; கர்ஹிசித்- எச்சமயத்திலும்.
உயிருள்ள அல்லது உயிரற்ற எந்த ஜீவராசியாலும், எந்த தேவராலும், எந்த அரசனாலும் அல்லது கீழுலகங்களிலுள்ள எந்த பாம்பினாலும் நான் கொல்லப்படக்கூடாது என்ற வரத்தையும் எனக்கு அளியுங்கள். யுத்தகளத்தில் உங்களைக் கொல்லக் கூடியவர் எவருமில்லை என்பதால், உங்களோடு போட்டியிடுபவர் எவருமில்லை. ஆகவே என்னுடன் போட்டியிடுபவரும் எவரும் இருக்கக் கூடாது என்ற வரத்தை எனக்குக் கொடுங்கள். அனைத்து ஜீவராசிகள் மற்றும் அதி தேவதைகளின் மீதான முழு அதிகாரத்தையும், அப்பதவியினால் அடையப்படும் எல்லாப் புகழையும் எனக்கு அருள்வீராக. மேலும், நீண்ட தவங்களாலும், யோகப் பயிற்சிகளாலும் அடையப்படக் கூடிய யோக சக்திகள் எக்காலத்திலும் அழியாதவை என்பதால் அவற்றையும் எனக்கு அருள்வீராக.
ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “இரண்யகசிபுவின் சாகாவரம் பெறும் திட்டம்”” எனும் தலைப்பைக் கொண்ட மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.