அத்தியாயம் – 1
பரமபுருஷர் அனைவருக்கும் சமமானவர்
பதம் 7.1.1
ஸ்ரீ-ராஜோவாச
ஸம: ப்ரிய ஸுஹ்ருத் ப்ரஹ்மன் பூதானாம் பகவான் ஸ்வயம்
இந்ரஸ்யார்த்தே கதம் கைத்யான் அவதீத் விஷமோ யதா
ஸ்ரீ-ராஜா உவாச-பரீட்சித்து மகாராஜன் கூறினார்; ஸம:-சமமான வரும்; ப்ரிய:- பிரியமானவரும்; ஸுஹ்ருத்-நண்பருமாவார்; ப்ரஹ் மன்-பிராமணரே (சுகதேவரே) ; பூதானாம்—எல்லா ஜீவராசிகளிடமும்; பகவான்- பரம புருஷராகிய விஷ்ணு; ஸ்வயம் -தாமே: இந்ரஸ்ய- இந்திரனின்; அர்த்தே-நன்மைக்காக; கதம் -எவ்வாறு; தைத்யான்- அசுரர்களை; அவதீத்-கொன்றார்; விஷம:-பாரபட்சம்; யதா— உள்ளவர் போல்.
பரீட்சித்து மகாராஜன் வினவினார்: பிராமணரே, பரமபுருஷராகிய ஸ்ரீ விஷ்ணு அனைவருக்கும் நலம்விரும்பி என்ற முறையில், எல்லோரிடமும் சமமானவரும், மிகவும் பிரியமுள்ளவருமாவார். அப்படியிருக்க, அவர் எவ்வாறு ஒரு சாதாரண மனிதனைப் போல் இந்திரனிடம் பாரபட்சம் கொண்டு, இந்திரனின் எதிரிகளைக் கொன்றார் எல்லோரிடமும் பாரபட்சமின்றி நடத்துகொள்ளும் ஒருவர் எப்படி சிலரிடம் பாரபட்சம் கொண்டவராகவும், மற்றவர்களிடம் விரோதம் கொண்டவராகவும் இருக்க முடியும்?
பதம் 7.1.2
ந ஹி அஸ்யார்த்த: ஸுர-கணை: ஸாக்ஷான் நிஹ்ஸ்ரேயஸாத்மன: தைவாஸுரேப்யோ வித்வேஷோ நோத்வேகஸ் சாகுணஸ்ய ஹி
ந-இல்லை; ஹி-நிச்சயமாக; அஸ்ய-அவரது; அர்த்த:- நன்மை, இலாபம்; ஸுர—கணை:-தேவர்களுடன்; ஸாக்ஷாத்-நேரிடையாக; நிஹ்ஸ்ரேயஸ-பரமானந்தத்தின்; ஆத்மன:-இயல்புடைய; ந – இல்லை; ஏவ-நிச்சயமாக; அஸுரேப்ய:—அகரர்களிடம்; வித் வேஷ:— பகை; ந–இல்லை; உத்வேக:-பயம்; ச-மற்றும்; அகுணஸ்ய- பௌதிக குணங்களற்றவரான; ஹி-நிச்சயமாக.
பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ விஷ்ணு தான் எல்லா ஆனந்தத்திற்கும் இருப்பிடமாவார். எனவே, தேவர்களின் பக்கமிருப்பதால் என்ன நன்மையை அவரால் அடைய முடியும்? இவ்விதமாக எந்த நோக்கத்தை அவரால் நிறைவேற்றிக் கொள்ள இயலும்? பகவான் திவ்ய புருஷர் என்பதால் அசுரர்களைக் கண்டு அவர் ஏன் அஞ்ச வேண்டும்? மேலும் அவரால் அவர்களிடம் எப்படி பொறாமை கொள்ள இயலும்?
பதம் 7.1.3
இதி ந: ஸுமஹா-பாக நாராயண-குணான் ப்ரதி
ஸம்சய: ஸுமஹுாஞ் ஜாதஸ் தத் பவாம்ஸ் சேத்தும் அர்ஹதி
இதி-இவ்வாறாக; ந:- எங்களுடைய; ஸு-மஹா-பாக- மகிமை பொருந்தியவரே; நாராயண -குணான்-நாராயணரின் குணங் கள்; ப்ரதி -பற்றி; வம்சய:-சந்தேகம்; ஸு-மஹான்- மிகப் பெரிய; ஜாத:-பிறந்துள்ளது; தத்—அதை; பவான்–தாங்கள்; சேத்தும் அர்ஹதி-போக்கியருள வேண்டும்.
மகா பாக்கியசாலியான கற்றறிந்த பிராமணரே, நாராயணர் பாரபட்சம் உடையவரா இல்லையா என்பது பெரும் சந்தேகத்திற்குரிய ஒரு விஷயமாகியுள்ளது. நாராயணர் எப்பொழுதும் பாரபட்சமின்றி அனைவரிடமும் சமமாக நடந்து கொள்பவர் என்ற தகுந்த ஆதாரத்தை காட்டி என் சந்தேகத்தைப் போக்கியருள வேண்டுகிறேன்.
பதங்கள் 7.1.4-7.1.5
ஸ்ரீ-ரிஷிர் உவாச
ஸாது ப்ருஷ்டம் மஹாராஜ ஹரேஸ் சரிதம் அத்புதம்
யத் பாகவத-மாஹாத்ம்யம் பகவத்-பக்தி-வர்தனம்
கீயதே பரமம் புண்யம் ரிஷிபிர் நாரதாதிபி:
நத்வா க்ருஷ்ணாய முனயே கதயிஷ்யே ஹரே: கதாம்
ஸ்ரீரிஷி: உவாச -முனிவரான ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸாது-மிக நன்று; ப்ருஷ்டம்-கேள்வி; மஹா-ராஜ -மகாராஜனே ; ஹரே:- பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரியின்; சரிதம்-செயல்கள்; அத்புதம்- அற்புதமான; யத் -எதிலிருந்து; பாகவத—பகவத் பக்தரின் (பிரகலாதரின்); மாஹாத்ம்யம்-பெருமைகள்; பகவத்—பக்தி – பகவத் பக்தி; வர்தனம் – பெருகும் வண்ணம்; கீயதே-பாடப்படுகிறது; பரமம் – தலைசிறந்த: புன்யம் -புண்ணியம்; ரிஷிபி:-முனிவர்களால்; நாரத – ஆதிபி:-ஸ்ரீ நாரத முனிவர் முதலான; நத்வா – வணக்கம் செலுத்திய பின்; க்ருஷ்ணாய–கிருஷ்ண துவையாயன வியாசருக்கும்; முனயே-மாமுனிவரான: கதயிஷ்யே-நான் விவரிக்கிறேன்; ஹரே:- ஸ்ரீ ஹரியின்; கதாம் கதைகளை.
மாமுனிவரான சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, நீர் என்னிடம் மிகச் சிறந்த ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர். எதில் பக்தர்களின் பெருமைகளும் காணப்படுகின்றனவோ, அந்த பகவானின் செயல்களைப் பற்றிய உரையாடல்கள் பக்தர்களுக்கு மிகவும் இன்பம் அளிப்பவையாகும். அற்புதமான இத்தகைய கதைகள் பௌதிக வாழ்வு முறையினால் உண்டாகும் துன்பங்களை எப்பொழுதும் தடுத்து விடுகின்றன. எனவேதான் நாரதரைப் போன்ற மாமுனிவர்கள் எப்பொழுதும் ஸ்ரீமத் பாகவதத்தைப் பற்றியே பேசுகின்றனர். ஏனெனில், பகவானின் அற்புதச் செயல்களைப் பற்றி ஒருவன் கேட்பதற்கும், பாடுவதற்கும் உரிய வாய்ப்பை அது அளிக்கிறது. ஸ்ரீல வியாசதேவருக்கு எனது பணிவான வணக்கங்களைச் செலுத்தியபின், பகவான் ஸ்ரீ ஹரியின் செயல்களைப் பற்றிய கதைகளை நான் விவரிக்கத் துவங்குவேனாக.
பதம் 7.1.6
நிர்குணோ ‘பி ஹி அஜோ ‘வ்யக்தோ பகவான் ப்ரக்ருதே: பர:
ஸ்வ-மாயா-குணம் ஆவிஸ்ய பாத்ய-பாதகதாம் கத:
நிர்குண:-பௌதிக குணங்கள் இல்லாதவர்; அபி -என்ற போதிலும்; ஹி-நிச்சயமாக; அஜ:-பிறப்பற்றவரும்; அவ்யக்த:-வெளிப்படையாகத் தோன்றாதவரும்; பகவான்- பரமபுருஷர்; ப்ரக்ருதே:- ஜட இயற்கைக்கு ; பர:-மேலான; ஸ்வ-மாயா—அவரது சுய சக்தியின்; குணம்-பௌதிக குணங்களில்; ஆவிஸ்ய-புகுந்து: பாத்ய-கடமைக்கு: பாதகதாம்- கட்டுப்பட்ட நிலையை; கத:- ஏற்றுக் கொள்கிறார்.
பரமபுருஷரான ஸ்ரீ விஷ்ணு எப்பொழுதும் பௌதிக குணங்களுக்கு மேற்பட்டவராவார். எனவேதான் அவர் நிர்குண அதாவது குணங்களற்றவர் என்று அழைக்கப்படுகிறார். அவர் பற்றற்றவர் என்பதால், விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்ட ஒரு ஜட உடல் அவருக்கில்லை. பகவான் எப்பொழுதும் பௌதிக வாழ்வுக்கு மேற்பட்டவராக இருக்கிறார் என்றாலும், தமது ஆன்மீக சக்தியின் வாயிலாகத் தோன்றி, ஒரு சாதாரண மனிதனைப் போல் செயற்பட்ட அவர், புறத்தோற்றத்தில் ஒரு பந்தப்பட்ட ஆத்மாவைப் போல் கடமைகளையும், பொறுப்புகளையும் ஏற்றுக் கொண்டார்.
பதம் 7.1.7
ஸத்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் நாத்மனோ குணா:
ந தேஷாம் யுகபத் ராஜன் ஹ்ராஸ உல்லாஸ ஏவ வா
ஸத்வம்-சத்வ குணம்; ரஜ:-ரஜோ குணம்; தம;-தமோ குணம்; இதி-இவ்வாறாக; ப்ரக்குதே -ஜட இயற்கையின்; ந—இல்லை; ஆத்மன-ஆன்மீக ஆத்மாலவின்; குணா;-குணங்கள்; ந-இல்லை; தேஷாம் -அவற்றின்; யுகபத்- ஒரே சமயத்தில், ராஜன்- அரசே; ஹ்ராஸ:-குறைவது; உல்லாஸ:-அதிகரிப்பது; ஏவ -நிச்சயமாக; வா—அல்லது.
பரீட்சித்து மகாராஜனே, சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய பௌதிக குணங்கள் ஜட உலகிற்குச் சொந்தமானவையாகும். இவை பரம புருஷரைத் தொடுவது கூட இல்லை. இம்மூன்று குணங்களால் அதிகமாவதையும், குறைவதையும் ஒரே சமயத்தில் செய்ய முடியாது.
பதம் 7.1.8
ஜய-காலே து ஸத்வஸ்ய தேவர்ஷீன் ரஜஸோ ‘ஸுரான்
தமஸோ யக்ஷ-ரக்ஷாம்ஸி தத்-காலானுகுணோ பஜத்
ஜய-காலே – மேலோங்கியுள்ள காலத்தில்: து—உண்மையில்; ஸத்வஸ்ய – சத்வ குணத்தின்; தேவ-தேவர்களும்; ரிஷீன்-முனி வர்களும்; ரஜஸ:-ரஜோ குணத்தின்; அஸுரான்—அசுரர்கள்; தமஸ:- தமோ குணத்தின்; யக்ஷ— ரக்ஷாம்ஸி-யக்ஷர்களும், இராட்சஸர்களும்; தத்—கால-அனுகுண:-குறிப்பிட்ட காலத்திற் கேற்ப; அபஜத்- வளர்க்கப்படுகிறது.
சத்வ குணம் மேலோங்கி இருக்கும்பொழுது, முனிவர்களும், தேவர்களும் அதன் உதவியுடன் செழிப்படைகின்றனர். பரமபுருஷரும் இக்குணத்தை அவர்களுக்குள் ஊட்டி நிரப்புகிறார். அதுபோலவே, ரஜோ குணம் மேலோங்கும் பொழுது அசுரர்கள் செழிப்படைகின்றனர். தமோ குணம் மேலோங்கும் பொழுது யக்ஷர்களும், இராட்சஸர்களும் செழிப்புறுகின்றனர். பரமபுருஷர் சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய இக்குணங்களின் பிரதிபலன்களை வளர்த்துக் கொண்டு எல்லோருடைய இதயங்களிலும் வீற்றிருக்கிறார்.
பதம் 7.1.9
ஜ்யோதிர்-ஆதிர் இவாபாதி ஸங்காதான் ந விவிச்யதே
விதந்தி ஆத்மானம் ஆத்ம-ஸ்தம் மதித்வா கவயோ ‘ந்தத:
ஜ்யோதி:- நெருப்பு: ஆதி:- முதலான மற்ற மூலப் பொருட்கள்: இவ—போல்; ஆபாதி—தோன்றுவது; ஸங்காதாத்—தேவர்கள் அல்லது மற்றவர்களின் உடல்களிலிருந்து; ந—இல்லை; விவிச்யதே- பிரித்தறியப்படுகின்றன; விதந்தி—காண்கின்றனர்; ஆத்மானம்-பரமாத்மாவை; ஆத்ம -ஸ்தம் -இதயத்தில் உள்ள; மதித்வா-பகுத்துணர்வதன் மூலம்; கவய:-சிறந்த அறிஞர்கள்; அந்தத:-தவங்களுக்குள்.
எங்கும் நிறைந்துள்ள பரமபுருஷர் ஒவ்வொரு ஜீவராசியின் இதயத்திலும் இருக்கிறார். அவர் எவ்வாறு அங்கு பெரிய அளவிலோ அல்லது சிறிய அளவிலோ இருக்கிறார் என்பதைச் சிறந்ததொரு அறிஞரால் காண முடியும். எப்படி ஒருவனால் விறகிலுள்ள தீயை, குடத்திலுள்ள நீரை அல்லது ஒரு பாத்திரத்திலுள்ள ஆகாயத்தைப் புரித்துகொள்ள முடிகிறதோ அப்படியே, ஒரு ஜீவராசியின் பக்தி பூர்வமான செயல்களைக் கொண்டு அந்த ஜீவராசி ஓர் அசுரனா அல்லது ஒரு தேவரா என்பதைப் புரிந்துகொள்ள முடியும். ஒரு நபரின் செயல்களைக் காண்பதன் மூலம் அவன் பரம புருஷரால் எந்த அளவிற்கு அனுக்கிரகிக்கப்பட்டுள்ளான் என்பதை சிந்தனையாளரால் புரிந்துகொள்ள முடியும்.
பதம் 7.1.10
யதா ஸிஸ்ருக்ஷு: புர ஆத்மன: பரோ
ரஜ: ஸ்ருஜதி ஏஷ ப்ருதக் ஸ்வ-மாயயா
ஸத்வம் விசித்ராஸு ரிம்ஸுர் ஈஸ்வர:
சயிஷ்யமாணஸ் தம ஈரயதி அஸௌ
யதா—எப்பொழுது; விஸ்ருக்ஷு-சிருஷ்டிக்க விரும்பி; புர:- ஜட உடல்களை; ஆத்மன:-ஜீவராசிகளுக்கு; பார:-பரமபுருஷர்; ரஜ:-ரஜோ குணத்தை: ஸ்ருஜதி-தோற்றுவிக்கிறார்; ஏஷ- அவர்; ப்ருதக்-தனியாக, மேலோங்கியவாறு; ஸ்வ-மாயயா—அவரது சொந்த படைப்புச் சக்தியால்; ஸத்வம்-சத்வ குணத்தை; விசித்ராஸு -பல்வேறு வகையான உடல்களில்; ரிரம்ஸு:-செயற்பட விரும்பி; ஈஸ்வர:-பரமபுருஷர்; சயிஷ்மாண:-முடிக்கப் போகும் தறுவாயில்; தம-தமோ குணத்தை: ஈரயதி—எழச் செய்கிறார்; அஸெள—அப்பரம புருஷர்.
பரமபுருஷர் வெவ்வேறு வகையான உடல்களைப் படைத்து, ஒவ்வொரு ஜீவராசிக்கும் அவனது குணத்திற்கும், பலன்கருதும் செயல்களுக்கும் ஏற்ப ஒரு குறிப்பிட்ட உடலை அளிப்பதன் மூலமாக, சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய எல்லா ஜட இயற்கைக் குணங்களையும் உயிர்தெழச் செய்கிறார். பிறகு அவர் பரமாத்மாவாக, ஒவ்வொரு உடலுக்குள்ளும் புகுந்து, காப்பதற்கு சத்வ-குணத்தையும், படைப்பதற்கு ரஜோ-குணத்தையும், அழிப்பதற்குத் தமோ குணத்தையும் உபயோகித்து, படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய குணங்களின் மீது ஆதிக்கம் செலுத்துகிறார்.
பதம் 7.1.11
காலம் சரந்தம் ஸ்ருஜநீச ஆஸ்ரயம்
பிரதான-பும்பியாம் நர-தேவ ஸத்ய-க்ருத்
காலம் -காலத்தை; சரந்தம்-நகர்ந்து கொண்டேயிருக்கும்; ஸ்ருஜதி-படைக்கிறார்; ஈச:-பரமபுருஷர்; அஸ்ரயம்—அடைக்கலம்; பிரதான—ஜட சக்திக்கும்; பும்ப்யாம்-ஜீவராசிக்கும்; நர-தேவ- மக்களை ஆள்பவரே; ஸத்ய-உண்மையான : க்ருத்-சிருஷ்டிக்கர்த்தா.
மாமன்னரே, ஜட ஆன்மீக சக்திகளை ஆள்பவரும், முழு பிரபஞ்சத்தையும் படைத்தவருமான பரமபுருஷர்தான், ஜட சக்தியையும், ஜீவராசியையும் காலத்தின் எல்லைகளுக்குள் செயற்படச் செய்வதற்காக காலத் தத்துவத்தைப் படைக்கிறார். இவ்வாறாக பரமபுருஷர் காலத் தத்துவத்திற்கோ, பௌதிக சக்திக்கோ ஒருபோதும் கீழ்ப்படுவதேயில்லை.
பதம் 7.1.12
ய ஏஷ ராஜன் அபி கால ஈசிதா
ஸத்வம் ஸுரானீகம் இவைதயதி அத:
தத்-ப்ரத்யனீகான் அஸுரான் ஸுர-ப்ரியோ
ரஜஸ்-தமஸ்கான் ப்ரமிணோதி உருஸ்ரவா:
ய:-எது; ஏஷ:- இந்த; ராஜன்—அரசே; அபி-கூட; கால – காலம்; ஈசிதா—பரமபுருஷர்; ஸத்வம்-சத்வ குணம்; ஸுர—அனீகம்— தேவர்களின் எண்ணிக்கையை; இவ – நிச்சயமாக; ஏதயதி—அதி கரிக்கச் செய்கிறதோ; அத:-ஆகையால்; தத்-ப்ரத்யனீகான்—அவர்களுக்கு விரோதமாக; அஸுரான்—அசுரர்களை; ஸுர-ப்ரிய:- தேவர்களின் நண்பராக இருப்பதால்; ரஜ:-தமஸ்கான்-ரஜோ மற்றும் தமோ குணங்களால் மூடப்பட்டிருக்கும்; ப்ரமிணோதி—அழிக்கிறார்; உரு-ஸ்ரவா:-வானலாவிய புகழுடையவர்.
அரசே, இக்காலத் தத்துவமானது சத்வ குணத்தை வளப்படுத்துகிறது. இவ்வாறாக பரமபுருஷர் அனைத்தையும் ஆள்பவர் என்றாலும், சத்வ- குணம் மேலோங்கியுள்ள தேவர்களுக்கு அவர் அருள் புரிகிறார். தமோ-குணம் மேலோங்கியுள்ள அசுரர்களோ அழிக்கப்படுகின்றனர். காலத் தத்துவத்தை வெவ்வேறு வழிகளில் செயற்படும்படி பரமபுருஷர் தூண்டுகிறார். ஆனால் அவர் ஒருபோதும் பாரபட்சம் உள்ளவரல்ல. மாறாக, அவரது செயல்கள் பெருமை வாய்ந்தவையாகும். எனவேதான் அவர் உருஸ்ரவா என்று அழைக்கப்படுகிறார்.
பதம் 7.1.13
அத்ரைவோதாஹ்ருத: பூர்வம் இதிஹாஸ: ஸுரர்ஷிணா
ப்ரீத்யா மஹா-க்ரதௌ ராஜன் ப்ருச்சதே ‘ஜாத-சத்ரவே
அத்ர- இவ்விஷயத்தில்; ஏவ-நிச்சயமாக; உதாஹ்ருதே:- எடுத்துரைக்கப்பட்டது; பூர்வம்- முன்பு: இதிஹாஸ :-ஒரு பழைய கதை; ஸுர – ரிஷிணா – மாமுனிவரான நாரதரால் ; ப்ரீத்யா-மகிழ்ச்சியுடன்; மஹா-க்ரதௌ-மகத்தான ராஜஸூய யாகத்தில்; ராஜன்-அரசே; ப்ருச்சதே-கேள்விக்கு; அஜாத—சத்ரவே- பகைவரற்ற யுதிஷ்டிர மகாராஜன்.
அரசே, முன்பு யுதிஷ்டிர மகாராஜனால் நடத்தப்பட்ட மகத்தான ராஜஸூய யாகத்தின்போது, அவரால் நாரத முனிவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அக்கேள்விக்கு விடையளித்த மாமுனிவரான நாரதர், பரமபுருஷர் எப்படி அசுரர்களைக் கொல்லும் பொழுது கூட எப்பொழுதும் பாரபட்சமற்றவராகவே நடந்து கொள்கிறார் என்பதைக் காட்டும் சரித்திர உண்மைகளை எடுத்துரைத்தார். இவ்விஷயத்தில் ஒரு தெளிவான உதாரணத்தை அவர் கொடுத்துள்ளார்.
பதங்கள் 7.1.14-7.1.15
த்ருஷ்ட்வா மஹாத்புதம் ராஜா ராஜஸூய மஹா-க்ரதௌ
வாஸுதேவே பகவதி ஸாயுஜ்யம் சேதிபூ-புஜ:
தத்ராஸீனம் ஸுர-ரிஷிம் ராஜா பாண்டு-ஸுத: க்ரதௌ
பப்ரச்ச விஸ்மித-மனா முனீனாம் ஸ்ருண்வதாம் இதம்
த்ருஷ்ட்வா—கண்டபின்;மஹா— அத்புதம் பெரும் அற்புதத்தை: ராஜா—அரசர்; ராஜஸூயே-ராஜஸூம் என்ற; மஹா—க்ரதௌ- மகா யாகத்தில்;வாஸுதேவே— வாசுதேரில்; பகவதி- பரமபுருஷரான;ஸாயுஜ்யம் – ஐக்கியமானதை; சேதிபூ-புஜ:-சேதி ராஜனான சிசு பாலனின்; தத்ர-அங்கு;ஆஸீனம்— அமர்ந்திருந்த; ஸுர-ரிஷிம்—தேவரிஷி நாரதர்; ராஜா—அரசரான ; பாண்டு-ஸுத:-பாண்டு புத்திரரான
யுதிஷ்டிரர்; க்ரதௌ-யக்ஞத்தில்; பப்ரச்ச—கேட்டார்; விஸ்மித-மனா:- மிகவும் ஆச்சரியமடைந்தவராய்; முனீனாம்-முனிவர்களின் முன்னிலையில்; ஸ்ருண்வதாம்- கேட்டுக் கொண்டிருக்க; இதம்- இதை.
அரசே, ராஜஸூய யக்ஞத்தில், பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரின் உடலுக்குள் சிசுபாலன் ஐக்கியமானதை, பாண்டு புத்திரரான யுதிஷ்டிர மகாராஜன் நேரடியாகக் கண்டார். இதனால் ஆச்சரியமடைந்த அவர் இதற்கான காரணத்தைப் பற்றி அங்கு வீற்றிருந்த தேவரிஷி நாரதரிடம் வினவினார். அவர் கேட்ட கேள்வியை அங்கு கூடியிருந்த மற்றெல்லா முனிவர்களும் கூட செவியுற்றனர்.
பதம் 7.1.16
ஸ்ரீ-யுதிஷ்டிர உவாச
அஹோ அதி-அத்புதம் ஹி ஏதத் துர்லபைகாந்தினாம் அபி
வாஸுதேவே பரே தத்வே ப்ராப்திஸ் சைத்யஸ்ய வித்விஷ:
ஶ்ரீ-யுதிஷ்டிர: உவாச-யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்; அஹோ- ஓ;அதி-அத்புதம்-அதியற்புதமாக; ஹி-நிச்சயமாக; ஏதத்- இது: தர்லப: -பெறுதற்கரிய;ஏகாந்தினாம்- ஆன்மீகிகளுக்கு; அபி-கூட; வாஸுதேவே-வாசுதேவரில்: பதே – பரம; தத்வே -தத்துவமான; ப்ராப்தி:-ஐக்கியம்; சைதயஸ்ய-சிசுபாலனின்; வித்விஷ:- பொறாமை கொண்ட.
யுதிஷ்டிர மகாராஜன் வினவினார்: அசுரனான சிசுபாலன் மிகவும் பொறாமை கொண்டிருந்த போதிலும், அவன் பரமபுருஷரின் உடலுக்குள் ஐக்கியமானது மிகவும் அற்புதமாக உள்ளது. இந்த ஸாயுஜ்ய முக்தி சிறந்த ஆன்மீகிகளால் கூட அடைதற்கரியதாகும். அவ்வாறிருக்க பகவானின் பகைவன் எப்படி அதை அடைந்தான்?
பதம் 7.1.17
ஏதத் வேதிதும் இச்சாம: ஸர்வ ஏவ வயம் முனே
பகவன்-நிந்தயா வேனோ த்விஜைஸ் தமஸி பாதித
ஏதத்-இதை; வேதிதும்-அறிய; இச்சாம:விரும்புகிறோம்;ஸர்வே- அனைவரும்; ஏவ—நிச்சயமாக; வயம் – நாங்கள்; முனே- மாமுனிவரே; பகவத்-நிந்தயா—பகவானை நிந்தித்த காரணத்தால்; வேன:- பிருது மகாராஜனின் தந்தையான வேனன்; த்விஜை:- பிராமணர்களால்; தஸ்மை— நரகத்தில்; பாதித: வீழ்த்தப்பட்டான்;
மாமுனிவரே, பகவானுடைய இந்த கருணைக்காக காரணத்தை அறிய நாங்களனைவரும் ஆவலாக உள்ளோம். வேனன் என்ற ஓரரசன் முன்பு பரமபுருஷரை நிந்தித்தான் என்றும், அதன் விளைவாக பிராமணர்களால் அவன் நரகத்தில் வீழ்த்தப்பட்டான் என்றும் நான் கேட்டிருக்கிறேன், சிசுபாலனும் நரகத்திற்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும். அப்படியிருக்க அவன் எப்படி பகவானிடத்தில் ஐக்கியமானான்?
பதம் 7.1.18
தமகோஷ-ஸுத பாப ஆரப்ய கல-பாஷணாத்
ஸம்ப்ரதி அமர்ஷீ கோவிந்தே தந்தவக்ரஸ் ச துர்மதி:
தாகோஷு – ஸுத:-தமகோஷனின் மகனான சிசுபாலன்; பாப:- பாவியான;ஆரப்ய-முதற்கொண்டே; கல-பாஷணாத்-குழந்தையின் மழலைப் பேச்சு பேசும் போதிருந்தே; ஸம்ப்ரதி—இன்று வரை: அமர்ஷீ—பொறாமை கொண்டவனால்; கோவிந்தே- ஸ்ரீகிருஷ்ணரீடம்;தந்தவக்ர:- தந்தவக்ரன்; ச-கூட: துர்மதி:-துர்மதியுடைய.
சரியாக பேசக்கூடத் தெரியாத அவனது குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலிருந்தே, தமகோஷனின் மிகவும் பாவமுள்ள மகனான சிசுபாலன் பகவானை நிந்திக்கத் துவங்கினான். மேலும் மரணமடையும் வரை அவன் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தொடர்ந்து பகைமை பாராட்டி வந்துள்ளான். அவனது சகோதரனான தந்தவக்ரனும் அதையேதான் செய்து வந்துள்ளான்.
பதம் 7.1.19
சபதோர் அஸக்ருத் விஷ்ணும் யத் ப்ரஹ்ம பரம் அவ்யயம்
ஸ்வித்ரோ ந ஜாதோ ஜிஹ்வாயாம் நாந்தம் விவிசதுஸ் தம:
சபதோ:-நிந்தனை செய்து வந்த சிசுபாலன், தந்தவக்ரன் ஆகிய இருவரின்; அஸக்ருத்— திரும்பத்திரும்ப; விஷ்ணும்; பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை; யத்—எது; ப்ரஹ்ம-பரம் -பரப்பிரம்மனான; அவ்யயம்- குறையில்லாமல்; ஸ்வித்ர -வெண்குஷ்டம்; ந-இல்லை; ஜாத:- தோன்றியது; ஜிஹ்வயாம்—நாவில்; ந-இல்லை; அந்தம்- இருண்ட; விவிசது: அவர்கள் புகுந்தனர்; தமச-நரகில்.
சிசுபாலன், தந்தவக்ரன் ஆகிய இவ்விருவரும், பரமபுருஷரும், பரப்பிரம்மனுமாகிய பகவான் விஷ்ணுவை (கிருஷ்ணரை) திரும்பத் திரும்ப நிந்தனை செய்து வந்த போதிலும் அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தனர். அவர்களது நாக்குகள் வெண் குஷ்டத்தினால் பீடிக்கப்படவுமில்லை, அவர்கள் நரக வாழ்வின் இருண்ட பிரதேசத்தில் பிரவேசிக்கவுமில்லை. அதைக் கண்டு நாங்கள் உண்மையாகவே மிகவும் ஆச்சரியப்படுகிறோம்.
பதம் 7.1.20
கதம் தஸ்மின்பகவதி துரவக்ராஹ்ய-தாமனி
பஸ்யதாம் ஸர்வ-லோகானாம் லயம் ஈயதுர் அஞ்ஜஸா
கதம்—எவ்வாறு; தஸ்மின்—அந்த; பகவதி-பரமபுருஷரில்; துரவக் ராஹ்ய-அடைவதற்குக் கடினமான; தாமனி-இயற்கையுடைய; பஸ்யதாம்-பார்த்துக் கொண்டிருக்கும் போதே; ஸர்வலோகானாம் -எல்லோகும்; லயம்-ஈயது:-ஐக்கியமாவது: அஞ்ஜஸர்-சுலபமாக.
பல உயர்ந்த புருஷர்களின் முன்னிலையில், அடைதற்கரிய இயற்கையுடைய ஸ்ரீ கிருஷ்ணரின் உடலுக்குள் சிசுபாலனும், தந்தவக்ரனும் மிகச் சுலபமாகப் பிரவேசிப்பது எப்படி சாத்தியமாகும்?
பதம் 7.1.21
ஏதத் ப்ராம்யதி மே புத்திர் தீபார்சிர் இவ வாயுனா
ப்ரூஹி ஏதத் அத்புததமம் பகவான் ஹி அத்ர காரணம்
ஏதத்-இது தொடர்பாக; ப்ராம்பதி-தடுமாறுகிறது; மே- எனது; புத்தி: – புத்தி; தீப—அர்சி:-ஒரு தீபச் சுடர்; இவ-போல; வாயுனா—காற்றினால்; ப்ரூஹி-கூறியருளுங்கள்; ஏதத்-இந்த: அத்புததமம்- அதியற்புதத்தை; பகவான்-எல்லா அறிவும் உடைய; ஹி- உண்மையில்; அத்ர—இங்கு;காரணம்-காரணத்தை.
இவ்விஷயம் சந்தேகமின்றி மிகவும் அற்புதமானதுதான். உண்மையில், வீசும் காற்றால் ஒரு தீபச் சுடர் அலைபாய்வதைப் போல் என் புத்தி தடுமாற்றம் அடைந்துள்ளது. நாரத முனிவரே தாங்கள் எல்லாம் அறித்தவர். அற்புதமான இச்சம்பவத்திற்கான காரணத்தை எனக்குக் கூறியருளுங்கள்.
பதம் 7.1.22
ஸ்ரீ பாதராயணிர் உவாச
ராஜ் ஞஸ் தத் வச ஆகர்ணய நாரதோ பகவான் ரிஷி:
துஷ்ட்: ப்ராஹ தம் ஆபாஷ்ய ஸ்ருண்வத்யஸ் தத்-ஸத: கதா:
ஸ்ரீ-பாதராயணி; உவாச-ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார். ராஜ்ஞ:-அரசரின் (யுதிஷ்டிரரின்); தத் -அந்த; அச: வார்த்தைகளை; ஆகர்ண்ய -கேட்டபின்; நாரத:-நாரத முனிவர்; பகவான்- சக்திவாய்ந்த ; ரிஷி:- முனிவரான; துஷ்ட:-திருப்தியடைந்து ; ப்ராஹ- பேசினார்; தம்- அவரை: ஆபாஷ்ய—விளித்து; ஸ்ருண் வத்யா: தத் – ஸ்த:-சபையோரின் முன்னிலையில்; கதா:-கதைகளை.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மிகவும் சக்திவாய்ந்த ஆன்மீக குருவும், அனைத்தும் அறிந்தவருமான நாரத முனிவர் யுதிஷ்டிர மகாராஜனின் அவ்வார்த்தையைக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தார். இவ்வாறாக யாகத்தில் பங்கேற்ற எல்லோர் முன்னிலையிலும் அவர் பின்வருமாறு பதிலளித்தார்.
பதம் 7.1.23
ஸ்ரீ-நாரத உவாச
நிந்தன-ஸத்வ ஸத்கார ன்யக்காரார்த்தம கலேவரம்
ப்ரதான-பரயோ ராஜன் அவிவேகேன கல்பிதம்
ஸ்ரீ-நாரத: உவாச-ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்; நிந்தன—இகழ்ச்சி: ஸ்தவ- புகழ்ச்சியும்; ஸத்கார-மரியாதை; ன்யக்கார—அவமரியாதை அர்த்தம்— அந்த நோக்கத்திற்காக; கலேவரம் -உடல்; ப்ரதான -பரயோ: இயற்கை மற்றுடம் பரமபுருஷரின்; ராஜன் — அரசே ; அவிவேகேன— பாகுபாடின்றி; கல்பிதம்-உண்டாக்கப்பட்டது.
மாமுனிவர் ஸ்ரீ நாரதாஜி கூறினார்: அரசே, இகழ்ச்சி, புகழ்ச்சி, அவமரியாதை, மரியாதை ஆகியவை அறியாமையின் காரணத்தால் தான் அனுபவிக்கப்படுகின்றன. பந்தப்பட்ட ஆத்மாவின் உடலானது இந்த ஜட உலகில் துன்புறுவதற்கேற்ற முறையில், பகவானால் திட்டமிடப்பட்டு அவரது புறச்சக்தியின் வாயிலாக உருவாக்கப்படுகிறது.
பதம் 7.1.24
ஹம்ஸா தத் -அபிமானேன தண்ட-பாருஷ்யயோர் யதா
வைஷம்யம் இஹ பூதானாம் மமாஹம் இதி பார்த்திவ
ஹிம்ஸா – துன்பம்; தத்—அதனுடைய; அபிமானேன—பொய்யான அபிமானத்தால்; தண்ட-பாருஷ்யயோ:-தண்டனையும், கடுஞ் சொற்களும் வரும்பொழுது; யதா—எவ்வாறு; வைஷம்யம்- தவறான அபிப்பிராயம்; இஹ-இங்கு(இவ்வுடலில்);பூதானாம் -ஜீவராசிகளின்; மம – அஹம்- நான், எனது; இதி-இவ்வாறு: பார்த்திவ – பூவுலகின் பதியே.
அரசே, பந்தப்பட்ட ஆத்மா தேகாபிமானத்தில் இருப்பதால், தனது உடலைத் தான் என்றும், அவ்வுடலுடன் சம்பந்தப்பட்டுள்ள அனைத்தையும் தனதென்றும் கருதுகிறான். வாழ்வில் இந்த தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருப்பதால் அவன் புகழ்ச்சி, இகழ்ச்சி போன்ற இருமைகளுக்கு உட்பட்டுள்ளான்.
பதம் 7.1.25
யன்-நிபத்தோ ‘பிமானோ ‘யம் தம் வதாத் ப்ராணினாம் வத:
ததா ந யஸ்ய கைவல்யாத் அபிமானோ ‘கிலாத்மன:
பரஸ்ய தம-கிர்துர் ஹி ஹிம்ஸா கேனாஸ்ய கல்ப்யதே
யத்—எதில்; நிபத்த:-கட்டப்பட்டு; அபிமான:-பொய்யான அபி மானம் ; அயம் இந்த ; தத்—அதன் (உடலின்); வதாத்—அழிவிலிருந்து; ப்ராணினாம்-ஜீவராசிகளின்; வத:-அழிவு; ததா—அதுபோலவே; ந- இல்லை; யஸ்ய-யாரின்; கைவல்யாத்—இரண்டற்ற ஒருவர் என்ற பரிபூரண நிலையிலிருப்பதால்; அபிமான:-பொய்யான அபிமானம்; அகில-ஆத்மன:-அனைத்து ஜீவன்களுக்கும் பரமாத்மாவின்; பரஸ்ய -பரமபுருஷர்; தம – கர்து:-பரம ஆளுனராவார்; ஹி-நிச்சயமாக; ஹிம்ஸா-தீங்கு; கேன- எப்படி; அஸ்ய-அவருடைய கல்ப்யதே- செய்யப்படுகிறது.
பந்தப்பட்ட ஆத்மா அவனது தேகாபிமானத்தின் காரணத்தால், உடல் அழியும்போது, உயிரும் அழித்துவிடுகிறது என்று எண்ணுகிறான். பரமபுருஷரும், பரம ஆளுனருமாகிய பகவான் விஷ்ணு அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்மா ஆவார். அவருக்கு ஜட உடல் இல்லையென்பதால், “நான், எனது” என்ற பொய் அபிமானமும் அவருக்கில்லை. எனவே இகழ்ச்சியிலும், புகழ்ச்சியிலும் அவர் துன்பத்தையோ, இன்பத்தையோ உணர்கிறார் என்று நினைப்பது தவறாகும். இவ்வாறாக அவருக்கு நண்பருமில்லை, பகைவருமில்லை. அசுரர்களை அவர் தண்டிப்பது அவர்களுடைய நன்மைக்காகவேயாகும். பக்தர்களின் பிரார்த்தனைகளை ஏற்றுக் கொள்வது பக்தர்களின் நன்மைக்காகவேயாகும். அவர் புகழ்ச்சிகளாலோ அல்லது இகழ்ச்சிகளாலோ பாதிக்கப்படுவதேயில்லை.
பதம் 7.1.26
தஸ்மாத் வைரானுபந்தேன நிர்வைரேண பயேன வா
ஸ்நேஹாத் காமேன வா யுஞ்யாத் கதஞ்சின் நேக்ஷதே ப்ருதக்
தஸ்மாத்-எனவே;வைர- அனுபந்தேன – இடையறாத பகையினால்; நிர்வைரேண -பக்தியால்; பயேன-பயத்தால்; வா—அல்லது:ஸ்நேஹாத்- அன்பினால்; காமேன- காம இச்சைகளால்; வா -அல்லது; யுஞ்யாத் – ஒருவன் மனதை ஒருமுகப்படுத்த வேண்டும்; கதஞ்சித்—எப்படியாவது; ந-இல்லை; ஈக்ஷதே-பார்க்கிறார்; ப்ருதக் – வேறொன்றை.
எனவே பகைமையினாலோ அல்லது பக்தித் தொண்டினாலோ பயத்தினாலோ, அன்பினாலோ அல்லது காம இச்சையினாலோ, அல்லது இவையனைத்தினாலோ, ஒரு பந்தப்பட்ட ஆத்மா எப்படியாவது தன் மனதை பகவான் மீது குவிப்பானாயின், அதன் விளைவு ஒன்றே. ஏனெனில், பகவானுடைய ஆனந்தமயமான நிலையின் காரணத்தால், அவர் பகைமையாலோ, அல்லது நட்பினாலோ ஒரு போதும் பாதிக்கப்படுவதேயில்லை.
பதம் 7.1.27
யதா வைரானுபத்தேன மர்த்யஸ் தன்-மயதாம் இயாத்
ந தாத பக்தி-யோகேன இதி மே நிஸ்சிதா மதி:
யதா—எவ்வாறு; வைர-அனுபத்தேன -தொடர்ந்த பகைமையால்; மர்த்ய:-ஒருவன்; தத்-மயதாம்- அவரில் ஆழ்ந்து விடுவதை; இயாத்-அடைய முடியுமோ; ந-இல்லை; ததா-அந்த முறையில்; பக்தி-யோகேன – பக்தித் தொண்டினால்; இதி – இவ்வாறு; மே – எனது; நிஸ்சிதா—உறுதியான; மதி:-அபிப்பிராயமாகும்.
நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: எவ்வாறு பரமபுருஷரிடமுள்ள தொடர்ந்த பகைமையால் ஒருவன் பகவானைப் பற்றிய எண்ணத்தில் தீவிரமாக ஆழ்ந்துவிட முடியுமோ, அவ்வாறு பக்தித் தொண்டினாலும் ஆகமுடியாது என்பது என்னுடைய உறுதியான அபிப்பிராயமாகும்.
பதங்கள் 7.1.28-7.1.29
கீட: பேசஸ்க்ருதா ருத்த: குட்யாயாம் தம் அனுஸ்மரன்
ஸம்ரம்ப-பய-யோகேன விந்ததே தத் ஸ்வரூபதாம்
ஏவம் க்ருஷ்ணோ பகவதி மாயா-மனுஜ ஈஸ்வரே
வைரேண பூத-பாப்மானஸ் தம் ஆபுர் அனுசிந்தயா
கீட:-புல்லினபுழு; பேசஸ்க்குதா – ஒரு வண்டினால்; ருத்த: அடைக்கப்பட்ட; குட்யாயாம்-சுவற்றிலுள்ள ஒரு துவாரத்தில்; தம்- அதை (வண்டை); அனுஸ்மரன்-பற்றியே நினைத்து; ஸம்ரம்ப பய-யோகேன்—தீவிர பயத்தினாலும்; விநோதத்தினாலும்; விந்ததே -அடைகிறது; தத்-அந்த வண்டின்; ஸ்வ-ரூபதாம்-அதே ரூபத்தை; ஏவம்—இவ்வாறு: க்ருஷ்ணே-கிருஷ்ணரிடம்; பகவதி-பரமபுருஷராகிய; மாயா – மனுஜே-அவரது நித்தியமான மானிட ரூபத்தில் அவரது சுய சக்தியினால் தோன்றிய ; ஈஸ்வரே – பரம புருஷரிடம்: வைரேண-விரோதத்தால்; பூத-பாப்மான:-பாவங்களிலிருந்து தூய்மையடைத்தவர்கள்; தம்— அவரை: ஆபு;–அடைந்தனர்; அனு சிந்தயா-பற்றியே நினைத்து.
சுவற்றிலுள்ள ஒரு துவாரத்தில் ஒரு வண்டினால் அடைக்கப்பட்ட புல்லின புழு ஒன்று, பயத்தினாலும், விரோதத்தினாலும் எப்பொழுதும் அந்த வண்டைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறது. இத்தகைய நினைப்பின் காரணத்தால் பிறகு அதுவும் ஒரு வண்டாக மாறி விடுகிறது. அதுபோலவே, பந்தப்பட்ட ஆத்மாக்கள், சச்-சித்-ஆனந்த- விரேஹமான ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றி எப்படியாவது நினைத்துக் கொண்டிருப்பார்களானால், அவர்கள் தங்கள் பாவங்களிலிருந்து விடுபடுவார்கள். ஸ்ரீ கிருஷ்ணரைத் தங்களது வழிபாட்டுக்குரிய இறைவனாகவோ அல்லது விரோதியாகவே நினைத்தாலும், அவரைப் பற்றிய இடையறாத சிந்தனையின் காரணத்தால், அவர்கள் தங்களுடைய ஆன்மீக உடல்களைத் திரும்பப் பெறுவர்.
பதம் 7.1.30
காமாத் த்வேஷாத் பயாத் ஸ்நேஹாத் யதா பக்த்யேஸ்வரே மன:
ஆவேஸ்ய தத்-அகம் ஹித்வா பஹவஸ் தத்-கதிம் கதா:
காமாத்- காமத்தினாலும்; த்வேஷத்-வெறுப்பினாலும்; பயாத்- பயத்தினாலும்; ஸ்நேஹாத்-அன்பினாலும்; யதா—மேலும்; பக்த்யா – பக்தியாலும்; ஈஸ்வரே-பரமனில்; மன:-மனதை; ஆவேஸ்ய – ஆழ்த்தி: தத் -அதன்; அகம் – பாவத்தை; ஹித்வா—விட்டு; பஹவ:- பலர்; தத்-அந்த; கதிம்- முக்தி வழியை; கதா:-அடைந்துள்ளனர்.
பலபேர்கள் மிகுந்த கவனத்துடன் கிருஷ்ணரைப் பற்றி நினைத்து, பாவச் செயல்களை விட்டதாலேயே முக்தியடைந்துள்ளனர். இந்த பயத்தாலோ, அன்பினாலோ அல்லது பக்தித் தொண்டினாலோ ஏற்பட்டதாக இருக்கக்கூடும். கிருஷ்ணரின் மீது மனதைக் குவிப்பதாலேயே எப்படி ஒருவன் அவரது கருணையைப் பெறுகிறான் என்பதை இப்பொழுது நான் விளக்குகிறேன்.
பதம் 7.1.31
கோப்ய: காமாம் பயாத் கம்ஸோ த்வேஷாச் சைத்யாதயோ ந்ருபா:
ஸம்பந்தாத் வ்ருஷ்ணய: ஸ்நேஹாத் யூயம் பக்த்யா வயம் விபோ
கோப்ய:- கோபியர்களும்: காமாத் -காம இச்சைகளால்; பயாத்- பயத்தால்; கம்ஸ:-கம்ச மன்னனும்; த்வேஷாத்-துவேஷத்தால்; சைத்ய-ஆதய:-சிசுபாலனும், மற்றவர்களும்; ந்ருபா:-அரசர்களும்; ஸம்பந்தாத்-உறவால்; வ்ருஷ்ணய:- விருஷ்ணிகள் அல்லது யாத வர்களும்; ஸ்நேஹாத்—நட்பால்; யூயம் – நீங்களும் (பாண்டவர்கள்); பக்த்யா—பக்தித் தொண்டால்; வயம்—நாங்களும்; விபோ-பேரரசே.
யுதிஷ்டிர மகாராஜனே, காமத்தால் கோபியர்களும், பயத்தால் கம்சனும், துவேஷத்தால் சிசுபாலனும் மற்ற அசுரர்களும், குடும்ப உறவினால் யாதவர்களும் கிருஷ்ணரின் கருணையைப் பெற்றனர். சிறந்த நட்பினால் பாண்டவர்களாகிய நீங்களும், பக்தித் தொண்டினால் பொதுவான பக்தர்களாகிய நாங்களும் அதைப் பெற்றுள்ளோம்.
பதம் 7.1.32
கதமோ ‘பி ந வேன: ஸ்யாத் பஞ்சானாம் புருஷம்ப்ரதி
தஸ்மாத் கேனாபி உபாயேன மன: க்ருஷ்ணே நிவேசயேத்
கதம: அபி-எவராயிருந்தாலும்; ந—இல்லை; வேன:-நாத்திக அரசனான வேனன்; ஸ்யாத்—மேற்கொள்வான்; பஞ்சானாம்— (முன்பு குறிப்பிட்ட) ஐந்தில்; புருஷம்-பரமபுருஷரை; ப்ரதி—அவர் விஷயத்தில்; தஸ்மாத்—ஆகவே; கேனாபி—ஏதாவதொரு; உபாயேன- வழியில்; மன:-மனதை; க்ருஷ்ணே-கிருஷ்ணரில்; நிவேசயேத்- ஒருவன் நிலை நிறுத்த வேண்டும்.
ஏதாவதொரு வழியில் ஒருவன் கிருஷ்ணரின் ரூபத்தைத் தீவிரமாக மனதில் தியானிக்க வேண்டும். அப்படிச் செய்தால், மேற்கூறிய ஐந்து முறைகளுள் ஒன்றினால் பரமபதத்தை அடையமுடியும். ஆனால் வேனனைப் போன்ற நாஸ்திகர்களால் இவ்வனைத்து முறைகளில் எதனாலும் கிருஷ்ணரின் ரூபத்தைப்பற்றி நினைக்க முடியாது என்பதால், அவர்களால் முக்தியடைய முடியாது. ஆகவே, ஒருவன் எவ்விதத்திலாவது, நட்புணர்ச்சியுடனோ அல்லது பகையுணர்ச்சியுடனோ கிருஷ்ணரை நினைப்பது அதிசயமாகும்.
பதம் 7.1.33
மாத்ரு-ஷ்வஸ்ரேயோ வஸ் சைத்யோ தந்தவக்ரஸ் ச பாண்டவ
பார்ஷத-ப்ரவரௌ விஷ்ணோர் விப்ர-சாபாத் பத-ச்யுதௌ
மாத்ரு-ஸ்வஸ்ரேய:-தாயின் சகோதரியின் மகன்(சிசுபாலன்); வ:-உமது; சைத்ய:-மன்னன் சிசுபாலன்; தந்தவக்ர:-தந்தவக்ரன்; ச-கூட; பாண்டவ-பாண்டவரே; பக்ஷத-ப்ரவரெள-இரு சிறந்த சேவகர்கள்: விஷ்ணோ – விஷ்ணுவின்; விப்ர-பிராமணர்களின்; சாபாத்- சாபத்தால்; பத—அவர்களது வைகுண்ட பதவியிலிருந்து; ச்யுதௌ- விழுந்தனர்.
நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: பாண்டவர்களில் சிறந்தவரே, உமது சிறிய தாயார் மகன்களும், உமது ஒன்றுவிட்ட சகோதரர்களுமான சிசுபாலனும், தந்தவக்ரனும் முன்பு பகவான் விஷ்ணுவின் சகாக்களாக இருந்தவர்கள். ஆனால் பிராமணர்களின் சாபத்தினால் அவர்கள் வைகுண்டத்திலிருந்து இந்த ஜட உலகில் வீழ்ந்தனர்.
பதம் 7.1.34
ஸ்ரீ-யுதிஷ்டிர உவாச
கீத்ருச: கஸ்ய வா சாபோ ஹரி தாஸாபிமர்சன:
அஸ்ரத்தேய இசாபாதி ஹரேர் ஏகாந்தினாம் பவ:
ஸ்ரீ- யுதிஷ்டிர: உவாச-புதிஷ்டிர மகாராஜன் கூறினார்; கீத்ருச:- எத்தகைய; கஸ்ய-யாருடைய; வா—அல்லது; சாப:-சாபம்; ஹரி- தாஸ-ஹரியின் சேவகர்கள்; அபிமர்சன:-மேல் வந்தது; அஸ்ரத்தேய: – நம்ப முடியாதது; இவ-போன்று; ஆபாதி-தோன்றுகிறது; ஹரே:- ஹரியின்; ஏகாந்தினாம்-சிறந்த சேவகர்களாக பிரத்தியேகமாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்களின்; பவ:-பிறப்பு.
யுதிஷ்டிர மகாராஜன் வினவினார்: முக்திபெற்ற விஷ்ணு பக்தர்களைக் கூட பாதிக்கக்கூடிய சாபம், எத்தகைய சக்திவாய்ந்த சாபமாக இருக்கும்: பகவானின் சகாக்களைக் கூட சபிக்கக்கூடியவர் எத்தகையவராக இருப்பார்! உறுதியான பகவத் பக்தர்களுக்கு மீண்டும் இந்த ஜட உலகி விழுவதென்பது அசாத்தியமாகும். இதை என்னால் நம்ப முடியவில்லை.
பதம் 7.1.35
தேஹேந்ரியாஸு – ஹீனானாம் வைகுண்ட-புர-வாஸினாம்
தேஹே-ஸம்பந்த-ஸம்பத்தம் ஏதத் ஆக்யாதும் அர்ஹஸி
தேஹ-ஒரு ஜட உடலின்; இந்ரிய -ஜடப் புலன்கள்; அஸு -உயிர் மூச்சு; ஹீனானாம்—இல்லாதவர்களின்; வைகுண்ட-புர- வைகுண்டத்தின்; வாஸினாம்—வாசிகளின்; தேஹ-ஸம்பந்த-ஒரு ஜட உடலில்; ஸம்பந்தம்—பந்தப்பட்டுள்ள; ஏதத்—இதை; ஆக் யாதும் அர்ஹஸி-விவரிக்க வேண்டுகிறேன்.
வைகுண்ட வாசிகளின் தேகங்கள் முற்றிலும் ஆன்மீகமானவை. அவற்றிற்கு ஜட உடலுடனோ, புலன்களுடனோ, உயிர் மூச்சுடனோ எவ்வித தொடர்பும் இல்லை. எனவே பகவானின் சகாக்கள் எப்படி சாதாரண மனிதர்கள்போல் ஜட உடல்களில் பிறக்கும்படி சபிக்கப்பட்டனர் என்பதை விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 7.1.36
ஸ்ரீ-நாரத உவாச
ஏகதா ப்ரஹ்மண: புத்ரா விஷ்ணு-நோகம் யத்ருச்சயா
ஸனந்தனாதயோ ஜக்முஸ் சரந்தோ புவன-த்ரயம்
ஸ்ரீ-நாரத:உவாச-ஸ்ரீ நாரத முனிவர் கூறினார்; ஏகதா—முன்னொரு சமயம்; ப்ரஹ்மண:-பிரம்ம தேவரின்; புத்ரா:—புத்திரர்களான; விஷ்ணு—பகவான் விஷ்ணுவின்; லோகம்-லோகத்திற்கு; யத்ருச்சயா -தற்செயலாக; ஸனந்தன—ஆதய:-சனந்தனர் முதலானவர்கள்; ஐக்மு:-சென்றனர்; சரந்த:-சஞ்சரித்தபடி: புவன-த்ரயம்—மூவுலகங்களிளும்.
மாமுனிவரான நாரதர் கூறினார்: முன்னொரு சமயம், பிரம்மதேவரின் புத்திரர்களான சனகர், சனாதனர், சனந்தனார், சனத்குமாரர் ஆகிய நால்வரும் மூவுலகங்களிலும் சஞ்சரித்துக் கொண்டிருந்த பொழுது, தற்செயலாக வைகுண்ட லோகத்தை அடைந்தனர்.
பதம் 7.1.37
பஞ்ச-ஷட்டாயனார்பாபா:
பூர்வேஷாம் அபி பூர்வஜா:
திக்-வாஸஸ: சிசூன் மத்வா
த்வா: ஸதௌ தான் ப்ரத்ய ஷேததாம்
பஞ்ச- ஷட்-தா -ஐந்து அல்லது ஆறு வயதுடைய; ஆயன- நெருங்கி வரும்; அர்ப-ஆபா:-சிறுவர்கள்போல்; பூர்வேஷாம் (மரீசி முதலான) பிரபஞ்சத்தின் முன்னோர்களுக்கு: அபி-என்றாலும்; பூர்வ – ஜா:-முன் பிறந்தவர்கள்; திக்-வாஸஸ-நிர்வாணமாக இருந்ததால்; சிசூன்-குழந்தைகள்; மத்வா—என்றெண்ணி: த்வா- ஸ்தௌ – இரு வாயில் காப்பான்களான ஜயனும், விஜயனும்: தான்-அவர்களை; ப்ரத்ய ஷேததாம்-தடுத்தனர்.
இந்நான்கு மாமுனிவர்களும், மரீசியைப் போன்ற பிரம்மாவின் மற்ற புதல்வர்களை விட மூத்தவர்கள் என்றாலும், அவர்கள் ஆடையணியாத ஐந்து அல்லது ஆறு வயதுடைய சிறுவர்கள் போல் காட்சியளித்தனர். அவர்கள் வைகுண்ட லோகத்தில் பிரவேசிக்க முயல்வதைக் கண்ட வாயில் காப்பான்களான ஜயனும், விஜயனும் அவர்களைச் சாதாரண குழந்தைகள் என்றெண்ணி நுழையவிடாமல் தடுத்தனர்.
பதம் 7.1.38
அசபன் குபிதா ஏவம் யுவாம் வாஸம் ந சார்ஹத:
ரஜஸ்-தமோப்யாம் ரஹிதே பாத-மூலே மதுத்விஷ:
பாபிஷ்டாம் ஆஸுரீம் யோனிம் பாலிசெள யாதம் ஆஸ்வ் அத:
அசபன்-சபித்தனர்; குபிதா:- கடுங்கோபங் கொண்டு; ஏவம்- இவ்வாறாக; யுவாம் – நீங்களிருவரும்; வாஸம் – வசிப்பிடத்திற்கு; ந-இல்லை: ச:-மேலும்; அர்ஹத:- தகுதியுடையவர்கள்; ரஜ:- தமோப்யாம்- ரஜோ மற்றும் தமோ குணங்களிலிருந்து; ரஹிதே- விடுபட்டுள்ள; பாத— மூலே – தாமரைப் பாதங்களில்; மது – த்விஷ:- மது என்ற அசுரனைக் கொன்ற விஷ்ணுவின்; பாபிஷ்டாம்-மிகவும் பாவமுள்ள; ஆஸுரிம்-அசுர; யோனிம்- கர்பத்திற்கு; பாலிசௌ- மூடர்களே; யாதம்-சொல்லுங்கள்; ஆக-உடனடியாக; அத:- எனவே.
இவ்வாறு வாயில்காப்பான்களான ஜய, விஜயர்களால் தடுக்கப் பட்ட சனந்தனரும் மற்ற மாமுனிவர்களும் கடுங்கோபங்கொண்டு பின்வருமாறு அவர்களைச் சபித்தனர். “மூடர்களே, ரஜோ மற்றும் தமோ ஆகிய பௌதிக குணங்களால் தூண்டப்பட்டுள்ள, வாயில் காப்போன்களான நீங்களிருவரும், இத்தகைய குணங்களிலிருந்து விடுபட்டுள்ள மதுத்விஷருடைய தாமரைப் பாதங்களின் புகலிடத்தில் வாழத் தகுதியற்றவர்களாவீர். நீங்கள் உடனே ஜட உலகிற்குச் சென்று, பெரும் பாவிகளான அசுரர்களின் குடும்பத்தில் பிறவி எடுக்க வேண்டும்.”
பதம் 7.1.39
ஏவம் சப்தௌ ஸ்வ-பவனாத் பதந்தௌ தௌ க்ருபாலுபி:
ப்ரோக்தௌ புனர் ஜன்மபிர் வாம் த்ரிபிர் லோகாய கல்பதாம்
ஏவம் – இவ்வாறு: சப்தௌ-சபிக்கப்பட்டு; ஸ்வ-பவனாத்- அவர்களுடைய இருப்பிடமான வைகுண்டத்திலிருந்து; பதந்தௌ- விழுந்து கொண்டிருந்த; தௌ-அவ்விருவரும் (ஐயனும், விஜயனும்); க்ருபாலுபி:-(சனந்தனர் முதலான) கருணைமிக்க முனிவர்களால்; ப்ரோக்தௌ-கூறப்பட்டனர்; புன:-மீண்டும்; ஜன்மபி:- பிறவிகளுடன்; வாம்—உங்களுடைய; த்ரிபி: மூன்று; லோகாய-பதவிக்கு; கல்பதாம்- சாத்தியமாகக் கடவது.
முனிவர்களால் இவ்வாறு சபிக்கப்பட்ட ஜயனும், விஜயனும் ஜட உலகை நோக்கி விழுந்துகொண்டிருக்கும் பொழுது, அவர்களிடம் மிகவும் கருணையுடைய அதே முனிவர்கள் பின்வருமாறு அவர்களிடம் கூறினர். “வாயில் காப்பான்களே, நீங்கள் மூன்று பிறவிகளுக்குப்பின் சாபம் தீர்ந்து, மீண்டும் வைகுண்ட பதவியை அடைவீர்கள்.”
பதம் 7.1.40
ஜக்ஞாதே தௌ திதே: புத்ரௌ தைத்ய-தானவ-வந்திதௌ
ஹிரண்யகசிபுர் ஜ்யேஷ்டோ ஹிரண்யாகே’ஷா ‘நுஜஸ் தத:
ஜக்ஞாதே-பிறந்தனர்; தெள-இருவரும்; ததே:-திதியின்; புத்ரௌ-புத்திரர்களாக; தைத்ய -தானவ—எல்லா அசரர்களாலும்; வந்திதௌ-பூஜிக்கப்பட்டு; ஹிரண்யகசிபு:- இரண்யகசிபு; ஜ்யேஷ்ட:- மூத்தவன்; ஹிரண்யாக்ஷ:-இரண்யாக்ஷன்; அனுஜ:-இளையவன்; தத:-பிறகு.
பகவானின் சகாக்களான ஜயன், விஜயன் ஆகிய இருவரும் பிறகு ஜட உலகிற்கு வந்து, திதியின் இரு புத்திரர்களாகப் பிறந்தனர். இவர்களில் மூத்தவன் இரண்யகசிபு ஆவான். இளையவன் இரண்யாக்ஷனாவான். இவர்கள் (அசுர இனத்தவர்களான) தைதியர்களாலும், தானவர்களாலும் மிகவும் மதிக்கப்பட்டனர்.
பதம் 7.1.41
ஹதோ ஹிரண்யகசியுர் ஹரிணா ஸிம்ஹ-ரூபிணா
ஹிரண்யாகே’ஷா தரோத்தாரே பிப்ரதா செளகரம் வபு:
ஹத:-கொல்லப்பட்டான்; ஹிரண்யகசிபு:-இரண்யகசிபு: ஹரிணா- ஸ்ரீ ஹரி விஷ்ணுவால்; ஸிம்ஹ-ரூபிணா—(பகவான் நரசிம்மராக) சிம்ம ரூபத்தில்; ஹிரண்யாஷ—இரண்யாக்ஷன்; தரா உத்தாரே- பூமியைத் தூக்கி எடுப்பதற்காக; பிப்ரதா-ஏற்று; சௌக்ரம்—காட்டுப் பன்றியைப் போன்ற; வபு:-ரூபத்தை.
பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ ஹரி நரசிம்மராகத் தோன்றி இரண்யகசிபுவைக் கொன்றார். கர்போதக சமுத்திரத்தில் விழுந்து கிடந்த பூமியை, பகவான் வராக ரூபத்தை ஏற்று தூக்கியெடுத்த பொழுது, அவரைத் தடுக்க முயன்ற இரண்யாக்ஷணை அவர் கொன்றார்.
பதம் 7.1.42
ஹிரண்யகசிபு: புத்ரம் ப்ரஹ்லாதம் கேசவ-ப்ரியம்
ஜிகாம்ஸுர் அகரோன் நானா யாதனா ம்ருத்யு-ஹேதவே
ஹிரன்யகசிபு:-இரண்யகசிபு: புத்ரம்-பூத்திரனான; ப்ரஹ்லாதம்— பிரகலாத மகாராஜனை; கேசவ-ப்ரியம்-கேசவரின் பிரிய பக்தனான; ஜிகாம்ஸு:- கொல்ல விரும்பி; அகரோத்-செய்தான்; நானா-பல வகையான; யாதனா:-சித்திரவதைகளை; ம்ருத்யு—மரணத்தை; ஹேதவே – விளைவிக்க.
தன் மகனான பிரகலாதன், பகவான் விஷ்ணுவின் பரம பக்தனாக விளங்கியதால், அவரைக் கொல்ல விரும்பிய இரண்யகசிபு, பலவழிகளில் அவரைச் சித்திரவதை செய்தான்.
பதம் 7.1.43
தம் ஸர்வ-பூதாத்ம-பூதம் ப்ரசாந்தம் ஸம-தர்சனம்
பகவத்-தேஜஸா ஸ்ப்ருஷ்டம் நாசக்னோத் தந்தும் உத்யமை:
தம் – அவரை: ஸர்வ-பூத-ஆத்ம-பூதம்-எல்லா ஜீவன்களிலும் உள்ள ஆத்மாவான; ப்ரசாந்தம்—வெறுப்பு முதலியவை இன்றி சாந்த சொரூபியாக விளங்கும்; ஸம-தர்சனம்—அனைவரிடமும் சமமாக நடந்து கொள்பவரான: பகவத்-தேஜஸா-பரமபுருஷருடைய சக்தியால்; ஸ்ப்ருஷ்டம்-காப்பாற்றப்பட்டு; ந- இல்லை; அசக்னோத்— முடிந்தது; ஹன்தும்- கொல்ல; உத்யமை: -பெரும் முயற்சிகளாலும், பல்வேறு ஆயுதங்களாலும்.
அனைத்து ஜீவராசிகளுக்கும் பரமாத்வாகிய பகவான் தெளிவும், அமைதியும், அனைவரிடமும் சமத்துவமும் உடையவராவார். சிறந்த பக்தரான பிரகலாதர் பகவானின் சக்தியால் பாதுகாக்கப்பட்டிருந்ததால், பல வழிகளில் முயன்றும் இரண்யகசிபுவால் அவரைக் கொல்ல இயலவில்லை.
பதம் 7.1.44
ததஸ் தௌ ராக்ஷஸௌ ஜாதௌ கேசின்யாம் விஸ்ரவ:-ஸுதௌ
ராவண: கும்பகர்ணஸ் ச ஸர்வ-லோகோபதாபனௌ
தத:-பின்னர்; தௌ- இரு வாயில்காப்பான்களும் (ஜயனும், விஜயனும் ) ராக்ஷஸௌ-அசுரர்களான; ஜாதௌ-பிறந்தனர். கேசின்யாம் -கேசினியின் கர்பத்தில்; விஸ்ரவ:-ஸுதௌ-விஸ்ரவரின் மகன்களாக ; ராவண:-இராவணன்; கும்பகர்ண:-கும்பகர்ணன்; ச- மேலும்; ஸர்வ-லோக—எல்லா மனிதர்களுக்கும்; உபதாபனௌ- தொல்லைகளைக் கொடுத்தனர்.
அதன்பிறகு பகவான் விஷ்ணுவின் இருவாயில் காப்பான்களான அதே ஜயனும், விஜயனும் விஸ்ரவரால் கேசினியின் கர்பத்தில் பெற்றெடுக்கப்பட்ட இராவணனாகவும், கும்பகர்ணனாகவும் பிறவி எடுத்தனர். அவர்கள் பிரபஞ்ச மக்களுக்கெல்லாம் பெருந்ததொல்லைகளைச் செய்துவந்தனர்.
பதம் 7.1.45
தத்ராபி ராகவோ பூத்வா ன்யஹனச் சாப-முக்தயே
ராம-வீர்யம் ஸ்ரோஷ்யஸி த்வம் மார்க்கண்டேய-முகாத் ப்ரபோ
தத்ர அபி-அதன்பிறகு: ராகவ:-பகவான் ராமச்சந்திரராக; பூத்வா – தோன்றி: ன்யஹனத் கொன்றார்;சாப-முக்தயே-சாப விமோச்சனத்திற்கு; ராம- வீர்யம்—பகவான் ஸ்ரீ ராமரின் பராக்கிரமங்களை; ஸ்ரோஷ்யஸி-கேட்பீர்; த்வம்—நீர்; மார்க்கண்டேய- முகாத் மார்க்கண்டேய முனிவரின் வாயிலிருந்து; ப்ரபோ-பிரபுவே.
நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்; அரசே, இராவணனையும் கும்பகர்ணனையும் கொன்று, அந்த பிராமணர்களின் சாபத்திலிருந்து ஜயனையும், விஜயனையும் விடுவிப்பதற்காகவே பகவான் ராமச்சந்திரர் தோன்றினார். பகவான் ராமச்சந்திரரின் செயல்களைப் பற்றிய வர்ணணைகளை மார்க்கண்டேயரிடமிருந்து கேட்பது உமக்கு நன்மையாக இருக்கும்.
பதம் 7.1.46
தாவ் அத்ர க்ஷத்ரியௌ ஜாதௌ மாத்ரு-ஷ்வஸ்ராத்மஜௌ தவ
அதுனா சாப-நிர்முக்தௌ க்ருஷ்ண-சக்ர ஹதாம்ஹஸௌ
தௌ-அவ்விருவரும்; அத்ர-இங்கு, மூன்றாவது பிறவியில்: க்ஷத்ரியௌ-க்ஷத்திரியர்களாக அல்லது அசுரர்களாக; ஜாதௌ -பிறந்தனர்; மாத்ரு -ஸ்வஸ்ரு-ஆத்ம-ஜௌ -தாயின் சகோதரி புத்திரர்களாக; தவ-உமது; அதுனா—இப்பொழுது; சாப-நிர்முக்தௌ – சாபத்திலிருந்து விடுதலை அடைந்தனர்; க்ருஷ்ண சக்ர-கிருஷ்ணரின்-சக்கராயுதத்தால்; ஹத—அழிக்கப்பட்டு; அம்ஹஸௌ—அவர்களுடைய பாவங்கள்.
அதே ஜயனும், விஜயனும் அவர்களது மூன்றாவது பிறப்பில், ஒரு க்ஷத்திரிய குடும்பத்தில் உமது தாயாரின் சகோதரியின் மகன்களாகத் தோன்றினர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தமது சக்கராயுதத்தினால் அவர்களைத் தாக்கியதால், அவர்களுடைய எல்லாப் பாவ விளைவுகளும் அழிக்கப்பட்டு, சாபத்திலிருந்து இப்பொழுது விடுதலை அடைத்தனர்.
பதம் 7.1.47
வைரானுபந்த-தீவ்ரேண தியானேனாச்யுத-ஸாத்மதாம்
நீதௌ புனர் ஹரே: பார்ஸ்வம் ஜக்மதுர் விஷ்ணு-பார்ஷதௌ
வைர—அனுபந்த-வெறுப்பெனும் பந்தம்: தீவ்ரேண-மிகவும் தீவிரமான; த்யாயேன—தியானத்தால்; அச்யுத—ஸாத்மதாம் – இழிவற்ற பகவானின் ஒளியை; நீதௌ—அடைந்தனர்; புன:-மீண்டும்; ஹரே- பகவான் ஸ்ரீ ஹரியின்: பார்ஸ்வம்-சமீபத்தை; ஜக்மது:–அவர்கள் அடைந்தனர்; விஷ்ணு-பார்ஷதௌ-வாயில் காப்போன்களான விஷ்ணுவின் சகாக்கள்.
பகவான் விஷ்ணுவின் சகாக்களான ஜயன், விஜயன் ஆகிய இருவரும் மிக நீண்டகாலமாக இப்பகை உணர்ச்சியைப் பாதுகாத்து வந்தனர். இவ்விதமாக எப்பொழுதும் ஸ்ரீ கிருஷ்ணரையே நினைத்த வண்ணம் இருந்ததால் அவர்கள் பரமபதத்தை அடைந்து, பகவானிடம் மீண்டும் தஞ்சம் புகுந்தனர்.
பதம் 7.1.48
ஸ்ரீ-யுதிஷ்டிர உவாச
வித்வேஷோ தயிதே புத்ரே கதம் ஆஸீன் மஹாத்மனி
ப்ரூஹி மே பகவன் யேன ப்ரஹ்லாதஸ்யாச்யுதாத்மதா
ஸ்ரீ – யுதிஷ்டிர: – உவாச-யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்; வித்வேஷு:- பகை உணர்ச்சி; தயிதே-தனக்குப் பிரியமானவரிடம்: புத்ரே- மகனிடம்: கதம்—எப்படி; ஆஸுத்-இருந்தது; மஹா-ஆத்மனி- மகாத்மாவான பிரகலாதர்; ப்ரூஹி-கூறியருளுங்கள்; மே- எனக்கு; பகவன்-சிறந்த முனிவரே: யேன- எதனால்: ப்ரஹ்லாதஸ்ய–பிரகலாத மகாராஜனின்; அச்யுத—அச்சுதனிடம்; ஆத்மதா-ஆழ்ந்த பற்று.
யுதிஷ்டிர மகாராஜன் வினவினார்: பிரபுவே நாரதமுனி, இரண்யகசிபுவுக்கும் அவனது பிரிய மகனான பிரகலாத மகாராஜனுக்கும் இடையில் இத்தகைய பகை உணர்ச்சி ஏன் உண்டானது? பிரகலாத மகாராஜன் எப்படி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இத்தகைய ஒரு மிகச் சிறந்த பக்தரானார்? இதை எனக்கு விளக்கியருள வேண்டுகிறேன்.
ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “பரமபுருஷர் அனைவருக்கும் சமமானவர்” எனும் தலைப்பைக் கொண்ட முதல் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.