அத்தியாயம் – 14
சிறப்புடைய இல்லற வாழ்வு
பதம் 7.14.1
ஸ்ரீ-யுதிஷ்டிர உவாச
க்ருஹஸ்த ஏதாம் பதவீம் விதினா யேன சாஞ்ஜஸா
யாயாத் தேவ-ரிஷே ப்ரூஹி மாத்ருசோ க்ருஹ-மூட-தீ:
ஸ்ரீ-யுதிஷ்டிர:உவாச—யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்; க்ருஹஸ்த:—தன் குடும்பத்துடன் வாழ்பவன்; ஏதாம்—இந்த (முந்திய அத்தியாயத்தில் விவரிக்கப்பட்ட முறைப்படி); பதவீம்—முக்தி நிலையை; விதினா—வேத விதிகளுக்கேற்ப; யேவ—எதனால்; ச—மேலும்; அஞ்ஜஸா—சுலபமாக; யாயாத்—அடையக்கூடிய; தேவ-ரிஷே—தேவ ரிஷியே; ப்ரூஹி—விவரிக்க வேண்டுகிறேன்; மாத்ருச:—என்னைப் போன்றவன்; க்ருஹ-மூட-தீ:—வாழ்வின் இலட்சியத்தைப் பற்றி சிறிதும் அறியாத.
யுதிஷ்டிர மகாராஜன் நாரத முனிவரிடம் வினவினார்: பிரபுவே, சிறந்த முனிவரே, வாழ்வின் இலட்சியத்தைப் பற்றி அறியாமல் வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாங்களும், வேத உபதேசங்களுக்கேற்ப சுலபமாக முக்தியடைவது எவ்வாறு என்பதை விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 7.14.2
ஸ்ரீ-நாரத உவாச
க்ருஹேஷு அவஸ்திதோ ராஜன் க்ரியா: குர்வன் யதோசிதா:
வாஸுதேவார்ப்பணம் ஸாக்ஷாத் உபாஸீத மஹா-முனீன்
ஸ்ரீ-நாரத: உவாச—ஸ்ரீ நாரத முனி பதிலளித்தார்; க்ருஹேஷு—வீட்டில்; அவஸ்தித:—வசிப்பவர்கள் (பொதுவாக ஒரு கிருஹஸ்தன் தன் மனைவி மக்களுடன் வீட்டில்தான் வசிக்கிறான்); ராஜன்—அரசே; க்ரியா—செயல்களை; குர்வன்—செய்துகொண்டு; யதோசிதா:—(குருவாலும், சாஸ்திரத்தாலும் உபதேசிக்கப்பட்டது போல்) தகுந்தபடி; வாஸுதேவ—பகவான் வாசுதேவருக்கு; அர்ப்பணம்—அர்ப்பணித்து விட்டு; ஸாக்ஷாத்—நேரிடையாக; உபாஸீத—வழிபட வேண்டும்; மஹாமுனீன்—சிறந்த பக்தர்கள்.
நாரத முனி பதில் கூறினார்: அரசே, குடும்பஸ்தர்களாக வீட்டில் இருப்பவர்கள் தங்களுடைய வாழ்க்கைத் தேவைகளைச் சம்பாதிப்பதற்குச் செயற்பட வேண்டியுள்ளது. தங்களுடைய செயலின் பலங்களை தாங்களாவே அனுபவிக்க முயற்சி செய்வதற்குப் பதிலாக, அப்பலன்களை அவர்கள் வாசுதேவரான கிருஷ்ணருக்கு அர்ப்பணித்து விட வேண்டும். இப்பிறவியில் வாசுதேவரை திருப்திப்படுத்துவது எப்படி என்பதை பகவானுடைய சிறந்த பக்தர்களின் சகவாசத்தின் மூலம் நன்கு அறிந்து கொள்ள முடியும்.
பதங்கள் 7.14.3 – 7.14.4
ஸ்ருண்வன் பகவதோ ‘பீஷ்ணம் அவதார-கதாம்ருதம்
ஸ்ரத்தானோ யதா-காலம் உபசாந்த-ஜனாவ்ருத:
ஸத்-ஸங்காச் சனகை: ஸங்கம் ஆத்ம-ஜாயாத்மஜாதிஷு
விமுஞ்சேன் முச்யமானேஷு ஸ்வயம் ஸ்வப்னவத் உத்தித:
ஸ்ருண்வன்—கேட்டு; பகவத:—பகவானுடைய; அபீஷ்ணம்—எப்பொழுதும்; அவதார—அவதாரங்களின்; கதா—கதைகளை; அம்ருதம்—அமிர்தமான; ஸ்ரத்ததான:—பரமபுருஷரைப் பற்றி கேட்பதில் மிகவும் நம்பிக்கைக் கொண்டு; யதா-காலம்—காலத்திற்கு ஏற்றவாறு (பொதுவாக ஒரு கிருஹஸ்தனுக்கு நடுப்பகலிலோ அல்லது மாலையிலோ தான் நேரம் கிடைக்கிறது); உபசாந்த—பௌதிக செயல்களிலிருந்து முற்றிலும் விடுபட்டு; ஜன—மனிதர்களால்; ஆவ்ருத:—சூழப்பட்டு; ஸத்-ஸங்காத்—இத்தகைய நல்ல சகவாசத்திலிருந்து; சனகை:—படிப்படியாக; ஸங்கம்—சகவாசத்தை; ஆத்ம—உடலில்; ஜாயா—மனைவியில்; ஆத்மஜ-ஆதிஷு—மற்றும் குழந்தைகளில்; விமுஞ்சேத்—இத்தகைய சகவாசப் பற்றிலிருந்து ஒருவன் விடுபட வேண்டும்; முச்யமானேஷு—(அவனிடமிருந்து) பிரிந்து; ஸ்வயம்—சுயமாக; ஸ்வப்ன-வத்—ஒரு கனவு போல்; உத்தித:—எழுப்பப்படும்.
ஒரு கிருஹஸ்தன் திரும்பத் திரும்ப சாதுக்களுடன் சகவாசம் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் ஸ்ரீமத் பாகவத்திலும், மற்ற புராணங்களிலும் விவரிக்கப்பட்டுள்ள பரமபுருஷரின் மற்றும் அவரது அவதாரங்களின் அமிர்தம் போன்ற செயல்களைப் பற்றி மிகுந்த மரியாதையுடன் கேட்க வேண்டும். இவ்வாறாக, கனவிலிருந்து விழித்தெழும் ஒரு மனிதனைப் போல் ஒருவன் தன் மனைவி மக்களிடமுள்ள பாசத்தைப் படிப்படியாக குறைத்துக் கொள்ள வேண்டும்.
பதம் 7.14.5
யாவத்-அர்த்தம் உபாஸீனோ தேஹே கேஹே ச பண்டித:
விரக்தோ ரக்தவத் தத்ர ந்ரு-லோகே நரதாம் ன்யஸேத்
யாவத்-அர்த்தம்—தனது ஜீவனத்திற்குத் தேவையான அளவு முயற்சியை; உபாஸீன:—சம்பாதித்து; தேஹ—உடலில்; கேஹே—குடும்ப விவகாரங்களில்; ச—கூட; பண்டித:—கற்றறிந்த ஒருவன்; விரக்த:—சிறிதும் பற்றில்லாத; ரக்த-வத்—மிகவும் பற்றுக் கொண்டவன் போல்; தத்ர—இதில்; ந்ரு-லோகே—மனித சமுதாயத்தில்; நரதாம்—மனித வாழ்வை; ன்யஸேத்—ஒருவன் காட்ட வேண்டும்.
உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்குத் தேவையான வாழ்க்கைத் தேவையைச் சம்பாதிப்பதற்காக வேலை செய்யும் பொழுது, உண்மையில் கற்றறிந்த ஒருவன், வெளிப்படையாக மிகவும் பற்றுக் கொண்டவனாகக் காணப்பட்ட போதிலும், அவன் குடும்ப விவகாரங்களில் பற்றற்றவனாக மனித சமுதாயத்தில் வாழ வேண்டும்.
பதம் 7.14.6
ஞாதய: பிரதரௌ புத்ரா ப்ராதர: ஸுஹ்ருதோ ‘பரே
யத் வதந்தி யத் இச்சந்தி சானுமோதேத நிர்மம:
ஞாதய:—உறவினர்கள், குடும்ப அங்கத்தினர்கள்; பிதரௌ—தந்தை மற்றும் தாய்; புத்ரா:—குழந்தைகள்; ப்ராதர:—சகோதரர்கள்; ஸுஹ்ருத:—நண்பர்கள்; அபரே—மற்றும் பிறர்; யத்—எதை; வதந்தி—(ஜீவனோபாய முறையைப் பற்றி) கூறுகிறார்களோ; யத்—எதை; இச்சந்தி—விரும்புகிறார்களோ; ச—மேலும்; அனமோதேத—அவன் ஒப்புக் கொள்ள வேண்டும்; நிர்மம:—அவற்றை ஒரு பொருட்டாக மதிக்காமல்.
மனித சமுதாயத்திலுள்ள அறிவாளி ஒருவன், தன் சொந்த செயல்முறைகளை மிகவும் எளிமையானதாகச் செய்து கொள்ள வேண்டும். அவனது நண்பர்கள், குழந்தைகள், பெற்றோர்கள், சகோதரர்கள் அல்லது மற்றவர்களிடமிருந்து ஏதேனும் புத்திமதிகள் வருமானால், “ஆம், அது சரிதான்” என்று வெளிப்படையாக அவன் ஒப்புக் கொள்ள வேண்டும். ஆனால் எதில் வாழ்வின் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முடியாதோ, அத்தகைய தொந்தரவான ஒரு வாழ்வை ஏற்படுத்திக் கொள்ளக் கூடாது என்பதில் உள்முகமாக அவன் உறுதி கொண்டிருக்க வேண்டும்.
பதம் 7.14.7
திவ்யம் பெளமம் சாந்தரீக்ஷம் வித்தம் அச்யுத-நிர்மிதம்
தத் ஸர்வம் உபயுஞ்ஜான ஏதத் குர்யாத் ஸ்வதோ புத:
திவ்யம்—மழையின் காரணத்தால் எளிதில் அடையப்படுபவை; பெளமம்—சுரங்கங்களிலிருந்தும், கடலிலிருந்தும் அடையப்படுபவை; ச—மற்றும்; ஆந்தரீக்ஷம்—எதிர்பாராமல் அடையப்படுபவை; வித்தம்—ஆகிய எல்லா சொத்துக்களும்; அச்யுத-நிர்மிதம்—பரம புருஷரால் படைக்கப்பட்டவையே; தத்—அவற்றை; ஸர்வம்—எல்லாம்; உபயுஞ்ஜான—(மனித சமுதாயத்திற்காக அல்லது அனைத்து ஜீவராசிகளுக்காக) உபயோகித்து; ஏதத்—இதை (உடலையும் ஆத்மாவையும் இணைத்து பராமரிப்பதை); குர்யாத்—ஒருவன் செய்ய வேண்டும்; ஸ்வத:—அதிக முயற்சியின்றி தானாக அடையப்படும்; புத:—அறிவாளி.
பரமபுருஷரால் படைக்கப்பட்ட இயற்கையான உற்பத்திப் பொருட்களை, அனைத்து ஜீவராசிகளின் உடல்களையும் ஆத்மாக்களையும் இணைத்து வைத்திருப்பதற்காக உபயோகிக்க வேண்டும். வாழ்வின் தேவைகள் மூன்று வகைப்படும். அவை, ஆகாயத்திலிருந்து (மழையிலிருந்து) உற்பத்தி செய்யப்படுபவை, மண்ணிலிருந்து (சுரங்கங்கள், கடல்கள் அல்லது வயல்களிலிருந்து) உற்பத்தி செய்யப்படுபவை, மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையிலிருந்து உற்பத்தி செய்யப்படுபவை (திடீரென்று எதிர்பாராமல் அடையப்படுபவை).
பதம் 7.14.8
யாவத் ப்ரியேத ஜடரம் தாவத் ஸ்வத்வம் ஹி தேஹினாம்
அதிகம் யோ ‘பிமன்யேத ஸ ஸ்தேனோ தண்டம் அர்ஹதி
யாவத்—எவ்வளவு; ப்ரியேத—நிரப்ப முடியுமோ; ஜடரம்—வயிற்றை; தாவத்—அவ்வளவு; ஸ்வத்வம்—உரிமை கொண்டாடலாம்; ஹி—உண்மையில்; தேஹினாம்—ஜீவராசிகளின்; அதிகம்—அதைவிட அதிகமாக; ய:—எவனொருவன்; அபிமன்யேத—ஏற்றுக் கொள்கிறானோ; ஸ:—அவன்; ஸ்தேன:—ஒரு திருடனாக; தண்டம்—தண்டிக்கப்பட; அர்ஹதி—தகுதியுடையவனாவான்.
உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதற்கு எவ்வளவு பிரச்சாரம் சொத்து தேவைப்படுகிறதோ அவ்வளவுக்கு மட்டுமே ஒருவன் உரிமை கொண்டாடலாம். ஆனால் அதற்கும் அதிகமாக ஒருவன் உரிமை கொண்டாடினால், அவன் ஒரு திருடன் என்று கருதப்பட வேண்டும். அவன் இயற்கைச் சட்டங்களால் தண்டிக்கப்பட வேண்டியவனாவான்.
பதம் 7.14.9
ம்ருகோஷ்ட்ர-கர-மர்காகு-ஸரீஸ்ருப் கக-மக்ஷிகா:
ஆத்மன: புத்ரவத் பஸ்யேத் தைர் ஏஷாம் அந்தரம் கியத்
ம்ருக—மான்; உஷ்ட்ர—ஒட்டகங்கள்; கர—கழுதைகள்; மர்க—குரங்குகள்; ஆகு—எலிகள்; ஸரீஸ்ருப்—பாம்புகள்; கக—பறவைகள்; மஷிகா:—ஈக்கள்; ஆத்மன:—தன்னுடைய; புத்ர-வத்—மகன்களைப் போலவே; பஸ்யேத்—பார்க்க வேண்டும்; தை:—அந்த மகன்களுடன்; ஏஷாம்—இம்மிருகங்களின்; அந்தரம்—வேறுபாடு; கியத்—மிகவும் குறைவானதே.
ஒருவன் மான், ஒட்டகம், கழுதை, குரங்கு, எலி, பாம்பு, பறவை, ஈ போன்ற மிருகங்களைத் தன் சொந்த மகனைப் போலவே பாவிக்க வேண்டும். குழந்தைகளுக்கும், குற்றமற்ற இந்த விலங்குகளுக்கும் இடையில், உண்மையில் என்ன வேறுபாடு இருக்கிறது?
பதம் 7.14.10
த்ரி-வர்கம் நாதிக்ருச்ரேண பஜேத க்ருஹ-மேதி அபி
யதா தேசம் யதா-காலம் யாவத்-தைவோபபாதிதம்
த்ரி-வர்கம்—மூன்று கோட்பாடுகளான அறம், பொருள், இன்பம்; ந—இல்லை; அதி-க்ருச்ரேண—கடும் முயற்சியால்; பஜேத—நிறைவேற்ற வேண்டும்; க்ருஹ-மேதீ—குடும்ப வாழ்வில் மட்டுமே விருப்புடையவன்; அபி—என்ற போதிலும்; யதா-தேசம்—இடத்திற்கேற்ப; யதா-காலம்—காலத்திற்கேற்ப; யாவத்—எவ்வளவு: தைவ—பகவானுடைய அருளால்; உபபாதிதம்—அடையப்பட்டதோ.
ஒரு பிரம்மச்சாரியாகவோ, சந்நியாசியாகவோ அல்லது வானப்பிரஸ்தனாகவோ இல்லாமல், ஒரு குடும்பஸ்தனாக இருப்பவன் கூட அறம், பொருள், இன்பம் ஆகிய இம்மூன்றையும் தேடுவதில் அதிகமாக பாடுபடக் கூடாது. இல்லற வாழ்வில் கூட பகவானின் அருளால், காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப, குறைந்த முயற்சியுடன் கிடைப்பதைக் கொண்டு, உடலையும், ஆத்மாவையும் இணைத்து வைத்திருப்பதில் ஒருவன் திருப்தியடைய வேண்டும். ஒருவன் உக்ர-கர்மத்தில் அதாவது கடினமான உழைப்பில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளக் கூடாது.
பதம் 7.14.11
ஆஸ்வாகந்தே ‘வஸாயிப்ய: காமான் ஸம்விபஜேத் யதா
அபி ஏகாம் ஆத்மனோ தாராம் ந்ருணாம் ஸ்வத்வ-க்ரஹோ யத:
ஆ—அதுவரைகூட; ஸ்வ—நாய்; அக—பாவ மிருகங்கள் அல்லது ஜீவராசிகள்; அந்தே அவஸாயிப்ய:—மனிதரில் கடைப்பட்ட சண்டாளர்கள் (நாய், பன்றிகளை உண்பவர்கள்); காமான்—வாழ்க்கைத் தேவைகளை; ஸம்வி-பஜேத்—பிரிக்க வேண்டும்; யதா—எவ்வளவு (தகுதிக்கேற்ப); அபி—கூட; ஏகாம்—ஒரு; ஆத்மன:—சொந்த; தாராம்—மனைவியை; ந்ருணாம்—பொதுவாக ஜனங்களின்; ஸ்வத்வ-க்ரஹ:—தனக்கு ஒத்தவளாகக் கருதப்படும் மனைவியை; யத:—எதனால்.
நாய்கள், இழிவடைந்தவர்கள், தீண்டத்தகாதவர்கள் மற்றும் நாய் தின்னும் சண்டாளர்கள் ஆகிய அனைவருக்கும் அவர்களுக்குரிய சரியான வாழ்க்கைத் தேவைகள் அளிக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும். இவர்களுடைய வாழ்க்கைத் தேவைகளெல்லாம் குடும்பஸ்தர்களால் அளிக்கப்பட வேண்டும். வீட்டில் மிகவும் நெருக்கமாக தான் பற்றுக் கொண்டுள்ள தன் மனைவியைக்கூட ஒருவன் விருந்தினர்களையும், பொதுஜனங்களையும், உபசரிப்பதற்காக அர்பணித்துவிட வேண்டும்.
பதம் 7.14.12
ஜஹ்யாத் யத்-அர்தே ஸ்வான் ப்ராணான்
ஹன்யாத் வா பிதரம் குரும்
தஸ்யாம் ஸ்வத்வம் ஸ்த்ரியாம் ஜஹ்யாத்
யஸ் தேன ஹி அஜிதோ ஜித:
ஜஹ்யாத்—ஒருவன் விட்டுவிடக் கூடும்; யத்-அர்தே—யாருக்காக; ஸ்வான்—தன்னுடைய; ப்ராணான்—உயிரையே; ஹன்யாத்—பறித்து விடக்கூடும்; வா—அல்லது; பிதரம்—தந்தையை; குரும்—அசானை அல்லது குருவை; தஸ்யாம்—அவளிடம்; ஸ்வத்வம்—சொந்தத்தை; ஸ்த்ரியாம்—மனைவியிடம்; ஜஹ்யாத்—ஒருவன் விட்டுவிட வேண்டும்; ய:—எவர் (பரமபுருஷர்); தேன—அவனால்; ஹி—உண்மையில்; அஜித:—வெல்லப்பட முடியாத; ஜித:—வெல்லப்படுகிறார்.
தன் மனைவி தனக்கே சொந்தமானவள் என்று ஒருவன் தீவிர எண்ணம் கொண்டிருப்பதால், அவளுக்காக அவன் தன் பெற்றோர்கள் மற்றும் குரு உட்பட, சிலசமயம் தன்னையோ அல்லது மற்றவர்களையோ கூட கொன்றுவிடுகிறான். ஆகவே இத்தகைய ஒரு மனைவியிடமுள்ள தன் பற்றை ஒருவனால் விட முடியுமானால், அவனால் எவராலும் வெல்ல முடியாத பரமபுருஷரையும் வென்று விட முடியும்.
பதம் 7.14.13
க்ருமி-வித்-பஸ்ம-நிஷ்டாந்தம் க்வேதாம் துச்சம் கலேவரம்
க்வ ததீய-ரதிர் பார்யா க்வாயம் ஆத்மா நபஸ்-சதி:
க்ருமி—கிருமிகள்; விட்—மலம்; பஸ்ம—சாம்பல்; நிஷ்ட—பற்று; அந்தம்—முடிவில்; க்வ—எங்கே இருக்கிறது; இதம்—இது (உடல்); துச்சம்—அற்பமான; கலேவரம்—இந்த ஜட உடல்; க்வ—அது என்ன; ததீய-ரதி:—அவ்வுடலிடம் கவர்ச்சி; பார்யா—மனைவி; க்வ அயம்—இவ்வுடலின் மதிப்புதான் என்ன; ஆத்மா—பரமாத்மா; நப:-சதி:—ஆகாயத்தைப் போல் எங்கும் பரவியிருக்கும்.
நிதானித்த ஆழ்ந்த யோசனையின் மூலமாக, இறுதியில் சிறு கிருமிகளாகவோ, மலமாகவோ அல்லது சாம்பலாகவோ மாறிவிடப் போகும் தன் மனைவியின் உடலிடம் உள்ள கவர்ச்சியை ஒருவன் விட்டு விட வேண்டும். அற்பமான இவ்வுடலில் சிறப்பாக என்ன இருக்கிறது ஆகாயத்தைப் போல் எங்கும் பரவியிருக்கும் பரமபுருஷர் எவ்வளவு மேன்மையானவர்?
பதம் 7.14.14
ஸித்தைர் யக்ஞாவசிஷ்டார்தை: கல்பயேத் வ்ருத்திம் ஆத்மன:
சேஷே ஸ்வத்வம் த்யஜன் ப்ராக்ஞ: பதவீம் மஹதாம் இயாத்
ஸித்தை:—பகவானின் அருளால் அடையப்பட்டவைகளை; யக்ஞ அவசிஷ்ட-அர்த்தை:—யாகத்திற்குப் பின் அல்லது பரிந்துரைக்கப்பட்ட பஞ்ச-ஸுனா யக்ஞத்தைச் செய்தபிறகு அடையப்படுபவை; கல்பயேத்—ஒருவன் கருத்திற்கொள்ள வேண்டும்; வ்ருத்திம்—ஜீவனோபாய முறையை; ஆத்மன:—தனக்குரிய; சேஷே—முடிவில்; ஸ்வத்வம்—தன் மனைவி, மக்கள், வீடு, தொழில் முதலியவைகள் மீதான பெயரளவேயான உரிமையை; த்யஜன்—விட்டுவிட்டு; ப்ராக்ஞ:—விவேகிகள்; பதவீம்—நிலையை; மஹதாம்—ஆன்மீக உணர்வில் பூரண திருப்தியடைந்துள்ள மகாத்மாக்களின்; இயாத்—அடைய வேண்டும்.
அறிவுள்ள ஒருவன் பகவானுக்குப் படைக்கப்பட்ட பிரசாதத்தை உண்பதாலோ, அல்லது ஐந்து வகையான யக்ஞங்களைச் (பஞ்ச-ஸூனா) செய்வதாலோ திருப்தியடைய வேண்டும். இத்தகைய செயல்களால் தேகப்பற்றையும், உடலிடம் கொண்டுள்ள பெயரளவேயான உரிமையையும் ஒருவனால் விட்டுவிட முடியும். இதைச் செய்யக்கூடிய ஒருவன் ஒரு மகாத்மாவின் நிலையை அடைகிறான்.
பதம் 7.14.15
தேவான் ரிஷீன் ந்ரு-பூதானி பித்ரூன் ஆத்மானம் அன்வஹம்
ஸ்வ-வருத்யாகத-வித்தேன யஜேத புருஷம் ப்ருதக்
தேவான்—தேவர்களையும்; ரிஷீன்—சிறந்த முனிவர்களையும்; ந்ரு—மனித சமுதாயத்தையும்; பூதானி—பொதுவாக ஜீவராசிகளையும்; பித்ரூன்—முன்னோர்களையும்; ஆத்மானம்—தன்னையும் அல்லது பரமாத்மாவையும்; அன்வஹம்—ஒவ்வொரு நாளும்; ஸ்வ-வ்ருத்யா—தன் ஜீவனோபாய முறையினால்; ஆகத-வித்தேன—தானாக வரும் செல்வத்தினால்; யஜேத—ஒருவன் வழிபட வேண்டும்; புருஷம்—ஒவ்வொருவருடைய இதயத்திலும் உள்ள புருஷரை; ப்ருதக்—தனித்தனியாக.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரின் இதயத்திலும் வீற்றிருக்கும் பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும். இந்த அடிப்படையில் தேவர்களையும், சாதுக்களையும், சாதாரண மனிதர்களையும், ஜீவராசிகளையும், முன்னோர்களையும், தன்னையும் ஒருவன் தனித் தனியாக வழிபட வேண்டும். இவ்விதமாக ஒவ்வொருவருடைய இதயத்திலுள்ள பரமபுருஷரை ஒருவனால் வழிபட முடியும்.
பதம் 7.14.16
யர்ஹி ஆத்மனோ ‘திகாராத்யா: ஸர்வா: ஸ்யுர் யக்ஞ-ஸம்பத:
வைதானிகேன விதினா அக்னி-ஹோத்ராதினா யாஜேத்
யர்ஹி—எப்பொழுது; ஆத்மன:—தன்னுடைய; அதிகார-ஆத்யா:—அதிகாரத்திற்கு உட்பட்டுள்ள பொருட்கள்; ஸர்வா:—எல்லாம்; ஸ்யு:—ஆகிறது; யக்ஞ-ஸம்பத:—யாகம் செய்வதற்குரிய பொருட்கள் அல்லது பரம்புருஷரை திருப்திப்படுத்துவதற்குரிய பொருட்கள்; வைதானிகேன—யக்ஞம் செய்வதற்கு வழிகாட்டும் அதிகாரபூர்வமான நூல்களுடன்; விதினா—கட்டுப்பாட்டு விதிகளுக்கேற்ப; அக்னி-ஹோத்ர-ஆதினா—அக்னியில் நிவேதனம் செய்தல் போன்றவைகளால்; யஜேத்—பரமபுருஷரை ஒருவன் வழிபட வேண்டும்.
ஒருவன் செல்வ வளத்தையும், அறிவு வளத்தையும் முழுமையாகப் பெற்று, அவற்றைக் கொண்டு யக்ஞம் செய்யக்கூடிய அல்லது பரமபுருஷரை திருப்திப்படுத்தக் கூடிய நிலையில் இருக்கும்பொழுது, அவன் சாஸ்திர விதிகளுக்கேற்ப யாகங்களைச் செய்து அக்னியில் நைவேத்தியம் செய்ய வேண்டும். இவ்விதமாக பரமபுருஷரை அவன் வழிபட வேண்டும்.
பதம் 7.14.17
ந ஹி அக்னி-முகதோ ‘யம் வை பகவான் ஸர்வ-யக்ஞ-புக்
இஜ்யேத ஹவிஷா ராஜன் யதா விப்ர-முகே ஹுதை:
ந—இல்லை; ஹி—உண்மையில்; அக்னி—தீ; முகத:—வாயிலிருந்து அல்லது சுடரிலிருந்து; அயம்—இந்த; வை—நிச்சயமாக; பகவான்—பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்; ஸர்வ-யக்ஞ-புக்-எல்லா வகையான யாகப் பலன்களையும் அனுபவிப்பவராவார்; இஜ்யேத—வழிபடப்படுகிறார்; ஹவிஷா—நெய்யை நிவேதனம் செய்வதால்; ராஜன்—அரசே; யதா—எவ்வளவு; விப்ர-முகே—ஒரு பிராமணரின் வாய் வழியாக; ஹுதை:—முதல்தர உணவை அவருக்கு அளிப்பதன் மூலம்.
பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரே யாக நிவேதனங்களை அனுபவிப்பவர். அரசே, வேள்வித் தீயில் செய்யப்படும் நிவேதனங்களை பகவான் உண்கிறார் என்ற போதிலும், தானியங்களும், நெய்யும் கொண்டு தயாரிக்கப்பட்ட நல்ல உணவு தகுதியுள்ள பிராமணர்களுடைய வாய்களின் மூலமாக அவருக்கு அர்ப்பணிக்கப்படும் பொழுது அவர் அதிக திருப்தியடைகிறார்.
பதம் 7.14.18
தஸ்மாத் ப்ராஹ்மண-தேவேஷு
மர்த்யாதிஷு யதார்ஹத
தைஸ் தை: காமைர் யஜஸ்வைனம்
க்ஷேத்ர-க்ஞம் ப்ராஹ்மணான் அனு
தஸ்மாத்—ஆகவே; ப்ராஹ்மண-தேவேஷு—பிராமணர்கள் மற்றும் தேவர்கள் மூலமாக; மர்த்ய-ஆதிஷு—சாதாரண மனிதர்கள் அல்லது பிற ஜீவராசிகள் மூலமாக; யதா-அர்ஹத:—உமது திறமைக்கேற்ப; தை: தை:—இவையனைத்தையும் கொண்டு; காமை:—அறுசுவை உணவு, மலர், மாலைகள், சந்தனம் முதலான பலவித போகப் பொருட்களை; யஜஸ்வ—நீர் வழிபட வேண்டும்; ஏனம்—இந்த; க்ஷேத்ர-க்ஞம்—எல்லா ஜீவன்களின் இதயங்களிலும் உறையும் பரமாத்மாவை; ப்ராஹ்மணான்—பிராமணர்களுக்கு; அனு—பிறகு.
ஆகவே, அரசே, முதலில் பிரசாதத்தை பிராமணர்களுக்கும், தேவர்களுக்கும் அர்ப்பணித்து அவர்களை திருப்திப்படுத்திய பிறகு, அதை மற்ற ஜீவராசிகளுக்கு உமது திறமைக்கேற்ப நீர் விநியோகிக்க வேண்டும். இவ்விதமாக உம்மால் அனைத்து ஜீவராசிகளையும், அதாவது எல்லா ஜீவராசிகளிலும் உறையும் பரம ஜீவராசியை வழிபட முடியும்.
பதம் 7.14.19
குர்யாத் அபர-பக்ஷீயம் மாஸி ப்ரௌஷ்ட-பதே த்விஜ:
ஸ்ராத்தம் பித்ரோர் யதா-வித்தம் தத்-பந்தூனாம் ச வித்தவான்
குர்யாத்—ஒருவன் செய்ய வேண்டும்; அபர-பக்ஷீயம்—தேய் பிறையின் கிருஷ்ண பட்சத்தில்; மாஸி—அஸ்வின மாதத்தில் (அக்டோபர்—நவம்பர்); ப்ரௌஷ்ட-பதே—பாத்ரமாதத்தில் (ஆகஸ்டு—செப்டம்பர்); த்விஜ:—இருபிறப்பெய்திய; ஸ்ராத்தம்—சிரார்த்தங்களை; பித்ரோ:—முன்னோர்களுக்கு; யதா-வித்தம்—ஒருவனுடைய வருவாய்க்கேற்ப; தத்-பந்தூனாம் ச—முன்னோர்களின் உறவினர்களுக்குக் கூட; வித்த-வான்—போதுமான செல்வம் படைத்தவன்.
போதுமான செல்வம் படைத்துள்ள பிராமணன் ஒருவன் பாத்ர மாதத்தின் பிற்பகுதியான கிருஷ்ணபட்சத்தில் முன்னோர்களுக்கு நைவேத்தியம் படைக்க வேண்டும். அவ்வாறே, ஆஸ்வின மாதத்தில் மஹாலயா சடங்குகளின் போது, முன்னோர்களின் உறவினர்களுக்கு நைவேத்தியம் படைக்க வேண்டும்.
பதங்கள் 7.14.20 – 7.14.23
அயனே விஷுவே குர்யாத் வ்யதீபாதே தின-க்ஷயே சந்ராதித்யோபராகே ச த்வாதஸ்யாம் ஸ்ரவணேஷு ச
த்ரிதீயாயாம் சுக்ல-பக்ஷே நவம்யாம் அத-கார்த்திகே
சதஸ்ருஷு அபி அஷ்டகாஸு ஹேமந்தே சிசிரே ததா
மாகே ச ஸித-ஸப்தம்யாம் மகா-ராகா-ஸமாகமே
ராகயா சானுமத்யா ச மாஸர்க்ஷாணி யுதானி அபி
த்வாதஸ்யாம் அனுராதா ஸ்யாச் ச்ரவனஸ் திஸ்ர உத்தரா:
திஸ்ருஷு ஏகாதசீ வாஸு ஜன்மர்க்ஷ-ஸ்ரோண-யோக-யுக்
அயனே—சூரியன் வடக்கு நோக்கி நகரத் துவங்கும் நாளான மகர-சங்கராந்தியன்றும், சூரியன் தெற்கு நோக்கி நகரத் துவங்கும் நாளான மஹாலயா பண்டிகை ஆஸ்வின மாதத்து கிருஷ்ண-பட்சத்தின் பதினைந்தாவது நாளில் கொண்டாடப்படுகிறது. அந்நாள் வைதிக சூரிய ஆண்டின் கடைசி நாளைக் குறிக்கிறது. கர்கட- சங்கராந்தியன்றும்; விஷுவே—மேஷ-சங்கராந்தியிலும், துலா-சங்கராந்தியிலும்; குர்யாத்—ஒருவன் செய்ய வேண்டும்; வ்யதீபாதே—வியதீபாதம் என்ற யோகத்தில்; தின-க்ஷயே—மூன்று திதிகளும் சேர்ந்திருக்கும் நாளிலும்; சந்ர-ஆதித்ய-உபராகே—சூரிய, சந்திர கிரணங்களின் போதும்; ச—மேலும்; த்வாதஸ்யாம் ஸ்ரவணேஷு—துவாதசியான பன்னிரண்டாம் நாளில், சிரவண நட்சத்திரத்தில்; ச—மேலும்; த்ருதீயாம்—அக்ஷய திருதீய நாளிலும்; சுக்ல-பக்ஷே—வளர்பிறையான சுக்ல-பட்சத்திலும்; நவம்யாம்—நவமி திதியிலும்; அத—கூட; கார்த்திகே—கார்த்திகை மாதத்திலும் (அக்டோபர்—நவம்பர்); சதஸ்ருஷு—நான்கில்; அபி—கூட; அஷ்டகாஸு—அஷ்டகங்களிலும்; ஹேமந்தே—குளிர்காலத்திற்கு முன்பும்; சிசிரே—குளிர் காலத்திலும்; ததா—கூட; மாகே—மாக மாதத்திலும் (ஜனவரி—பிப்ரவரி); ச—மேலும்; ஸித-ஸப்தம்யாம்—சுக்ல பட்சமாகிய வளர்பிறையின் ஏழாவது நாளிலும்; மகா-ராகா ஸமாகமே—மகா-நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்த நாளிலும்; ராகயா—பூர்ண சந்திரனுடன் கூடிய பௌர்ணமியிலும்; ச—மேலும்; அனுமத்யா—சந்திரன் பூரணமாக இல்லாமல் சிறிது குறைந்திருக்கும் பெளர்ணமியிலும்; ச—மேலும்; மாஸ-ருக்ஷாணி—பல்வேறு மாதங்களின் பெயர்களுக்குப் பிறப்பிடமான நட்சத்திரங்கள்; யுதானி—சேர்ந்திருக்கும் சமயம்; அபி—கூட; த்வாதஸ்யாம்—பன்னிரண்டாம் நாளான துவாதசியில்; அனுராதா—அனுராதா என்ற நட்சத்திரம்; ஸ்யாத்—நிகழக்கூடிய; ஸ்ரவண:—சிரவணம் என்ற நட்சத்திரம்; திஸ்ர:—இம்மூன்றிலும் (நட்சத்திரங்களிலும்); உத்தரா:—உத்தரா என்ற நட்சத்திரங்களிலும் (உத்தர—ஃபல்குனி, உத்தராஷாடா மற்றும் உத்தரபாத்ரபதா); திஸ்ருஷு—மூன்றிலும்; ஏகாதசீ—பதினொன்றாவது நாளான ஏகாதசியிலும்; வா—அல்லது; ஆஸு—இவைகளில்; ஜன்ம-ருக்ஷ—தன் பிறந்த நாளான ஜன்ம நட்சத்திரத்தின்; ஸ்ரோண—சிரவண நட்சத்திரத்தின்; யோக—ஒரு சேர்க்கையினால்; யுக்—உடைய.
(சூரியன் வடக்குத் திசையில் நகரத் துவங்கும் நாளான) மகர-சங்கராந்தியன்று அல்லது (சூரியன் தெற்குத்திசையில் நகரத் துவங்கும் நாளான) கர்கட-சங்கராந்தியன்று ஒருவன் சிரார்த்த சடங்கைச் செய்ய வேண்டும். ஒருவன் மேஷ-சங்கராந்தி தினத்தன்றும், துலா-சங்கராந்தி தினத்தன்றும், வியதீபாத-யோகத்திலும், மூன்று திதிகள் இணையும் நாளிலும், சூரிய அல்லது சந்திர கிரணத்தின் போதும், துவாதசியான பன்னிரண்டாவது நாளிலும், சிரவண-நட்சத்திரத்திலும் கூட இச்சடங்கைச் செய்ய வேண்டும். அக்ஷய-திருதீயை நாளன்றும், கார்த்திகை மாதத்து சுக்ல-பட்சத்தின் நவமி திதியிலும், பனிக்காலம் மற்றும் குளிர்க் காலத்தின் நான்கு அஷ்டமிகளிலும், மாகமாதத்து சுக்ல பட்சத்தின் சப்தமியிலும், பெளர்ணமியும், மகம் நட்சத்திரமும் கூடிய வேளையிலும், சந்திரன் பூரணமாக இருக்கும் பெளர்ணமியிலும், அல்லது பூரணமாக இல்லாத பௌர்ணமியிலும், எதிலிருந்து குறிப்பிட்ட மாதங்களின் பெயர்கள் பெறப்படுகின்றனவோ அந்த நட்சத்திரங்களுடன் இந்த நாட்கள் சேரும் பொழுதும் இச்சடங்கை ஒருவன் செய்ய வேண்டும். மேலும் அனுராதா, சிரவண, உத்தர-ஃபல்குனி, உத்தராஷாட அல்லது உத்தர-பாத்ரபதா ஆகிய ஏதேனும் ஒரு நட்சத்திரத்துடன் துவாதசி சேர்ந்திருக்கும் பொழுதும் சிரார்த்தச் சடங்கை ஒருவன் செய்ய வேண்டும். மேலும் உத்தர ஃபல்குனி, உத்தராஷாட அல்லது உத்தரபாத் ருபத-நட்சத்திரத்துடன் கூடிய நாட்களிலும் இந்த சிரார்த்தச் சடங்கை ஒருவன் செய்ய வேண்டும்.
பதம் 7.14.24
த ஏதே ஸ்ரேயஸ: காலா ந்ரூணாம் ஸ்ரேயோ- விவர்தனா:
குர்யாத் ஸர்வாத்மனைதேஷு ஸ்ரேயோ ‘மோகம் தத் ஆயுஷ:
தே—ஆகவே; ஏதே—ஜோதிட கணக்குகளை விவரிக்கும் இவ்வெல்லா; ஸ்ரேயஸ:—மங்களகரமான; காலா:—காலங்களும்; ந்ரூணாம்—மனிதர்களுக்கு; ஸ்ரேய:—மங்களம்; விவர்தனா:—அதிகரிக்கும்; குர்யாத்—ஒருவன் செய்ய வேண்டும்; ஸர்வ-ஆத்மனா—(சிரார்த்த சடங்கு மட்டுமின்றி) பிற செயல்களாலும்; ஏதேஷு—இவைகளில் (பருவ காலங்களில்); ஸ்ரேய:—மங்களமும்; அமோகம்—வெற்றியும்; (உண்டாக்கும்); தத்—ஒரு மனிதனுடைய; ஆயுஷ:—வாழ்நாளிலேயே.
இவ்வெல்லாப் பருவ காலங்களும் மனித குலத்திற்கு மிகவும் மங்களகரமான காலங்களாக கருதப்படுகின்றன. இத்தகைய காலங்களில் ஒருவன் எல்லா மங்கள காரியங்களையும் செய்ய வேண்டும். ஏனெனில் இத்தகைய செயல்களினால் ஒரு மனிதன் தனது குறுகிய வாழ்நாளிலேயே வெற்றியை அடைகிறான்.
பதம் 7.14.25
ஏஷு ஸ்னானம் ஜபோ ஹோமோ வ்ரதம் தேவ-த்விஜார்ச்சனம்
பித்ரு-தேவ-ந்ரு-பூதேப்யோ யத் தத்தம் தத் தி அனஸ்வரம்
ஏஷு—இவற்றில் (பருவ காலங்களில்); ஸ்னானம்—கங்கை, யமுனை முதலான புண்ணிய தீர்த்தங்களில் நீராடுதல்; ஜப:—ஜபம் செய்தல்; ஹோம:—யாகங்கள் செய்தல்; வ்ரதம்—விரதங்களை அனுஷ்டித்தல்; தேவ—பரமபுருஷரை; த்விஜ-அர்ச்சனம்—பிராமணர்களை அல்லது வைஷ்ணவர்களை வழிபடுதல்; பித்ரு—முன்னோர்களுக்கும்; தேவ—தேவர்களுக்கும்; ந்ரு—பொதுவாக மனிதர்களுக்கும்; பூதேப்ய:—மற்றெல்லா ஜீவராசிகளுக்கும்; யத்—எது; தத்தம்—அளிக்கப்படுகிறதோ; தத்—அது; ஹி—நிச்சயமாக; அனஸ்வரம்—நிலையான நற்பயனை அளிக்கும்.
ஒருவன் கங்கையிலோ, யமுனையிலோ அல்லது வேறெந்த புண்ணிய தீர்த்தத்திலோ நீராடினாலும், ஜபம் செய்தாலும், யாகம் செய்தாலும், விரதங்களை அனுஷ்டித்தாலும், அல்லது பரமபுருஷர், பிராமணர்கள், முன்னோர்கள், தேவர்கள் மற்றும் பொதுவாக ஜீவராசிகள் ஆகியோரை வழிபட்டாலும், இப்பருவ காலங்களின் மாற்றத்தின் போது அவனால் செய்யப்படும் தான தருமங்களெல்லாம் நிலையான நற்பயனை அளிக்கும்.
பதம் 7.14.26
ஸம்ஸ்கார-காலோ ஜாயாயா அபத்யஸ்யாத்மனஸ் ததா
ப்ரேத-ஸம்ஸ்தா ம்ருதாஹஸ் ச கர்மணி அப்யுதயே ந்ருப
ஸம்ஸ்கார-கால:—வேத சம்ஸ்காரங்களுக்குரிய சரியான காலத்தில்; ஜாயாயா:—மனைவிக்கும்; அபத்யஸ்ய—குழந்தைகளுக்கும்; ஆத்மன:—மற்றும் தனக்கும்; ததா—அப்படியே; ப்ரேத-ஸம்ஸ்தா—அந்திம கிரியைகளும்; ம்ருத-அஹ:—வருடாந்தர சிறப்புச் சடங்குகளும்; ச—மற்றும்; கர்மணி—பலன் கருதும் செயல்களின்; அப்யுதயே—அபிவிருத்திக்கு; ந்ருப—அரசே.
யுதிஷ்டிர மகாராஜனே, ஒருவன் தனக்கும், தன் மனைவிக்கும் அல்லது தன் குழந்தைகளுக்கும் விதிக்கப்பட்ட சம்ஸ்காரங்களைச் செய்ய வேண்டிய சரியான காலத்திலோ, அல்லது அந்திம கிரியைகளைச் செய்யும் போதோ அல்லது வருடாந்திர சிரார்த்த சடங்குகளைச் செய்யும் போதோ அவன் மேற்கூறிய மங்களகரமான சடங்குகளைச் செய்ய வேண்டும். இதனால் அவனது காரிய சித்தி பெருகும்.
பதங்கள் 7.14.27 – 7.14.28
அத தேசான் ப்ரவக்ஷ்யாமி தர்மாதி-ஸ்ரேய-ஆவஹான்
ஸ வை புண்யதமோ தேச: ஸத்-பாத்ரம் யத்ர லப்யதே
பிம்பம் பகவதோ யத்ர ஸர்வம் ஏதத் சராசரம்
யத்ர ஹ ப்ராஹ்மண-குலம்-தபோ-வித்யா-தயான்விதம்
அத—பிறகு; தேசான்—இடங்களை; ப்ரவக்ஷ்யாமி—நான் விவரிக்கிறேன்; தர்ம-ஆதி—சமயச் சடங்குகள் முதலான; ஸ்ரேய—மங்களகரமான; ஆவஹான்—கொண்டுவரக் கூடிய; ஸ:—அது; வை—உண்மையில்; புண்ய-தம:—மிகவும் புனிதமான; தேச:—இடம்; ஸத்-பாத்ரம்—ஒரு வைஷ்ணவர்; யத்ர—எங்கு; லப்யதே—கிடைக்கிறதோ; பிம்மம்—(ஆலயத்திலுள்ள) அந்த விக்கிரகத்தை; பகவத:—(ஆதாரமான) பரமபுருஷரின்; யத்ர—எங்கு; ஸர்வம் ஏதத்—இம்முழு பிரபஞ்சத்தின்; சர அசரம்—அசைவன அசையாதன ஆகிய ஜீவராசிகளுடன்; யத்ர—எங்கு; ஹ—உண்மையில்; ப்ராஹ்மண-குலம்—பிராமணர்களுடனான சகவாசம்; தப:—தவங்கள்; வித்யா—கல்வி; தயா—கருணை; அன்விதம்—ஆகியவற்றுடன் கூடிய.
நாரதமுனி தொடர்ந்து கூறினார்: வேதக் கிரியைகளை நன்கு நிறைவேற்றக் கூடிய இடங்களை இப்பொழுது நான் விவரிக்கிறேன். எங்கு ஒரு வைஷ்ணவர் இருக்கிறாரோ, அந்த இடம் மங்களகரமான எல்லாச் செயல்களுக்கும் மிகச்சிறந்த இடமாகும். அசைவன, அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளையும் கொண்ட இந்த முழுபிரபஞ்ச தோற்றத்திற்கும் பரமபுருஷரே ஆதாரம். பகவானுடைய விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள இடமான ஆலயம் மிகவும் புனிதமான ஓரிடமாகும். மேலும் கற்றறிந்த பிராமணர்கள் தவம், கல்வி, கருணை ஆகியவற்றைச் செய்வதன் மூலமாக வேதக் கொள்கைகளை அனுஷ்டிக்கும் இடங்கள் மிகவும் மங்களகரமானவையும், புனிதமானவையும் ஆகும்.
பதம் 7.14.29
யத்ர யத்ர ஹரேர் அர்ச்சா ஸ தேச: ஸ்ரேயஸாம் பதம்
யத்ர கங்காதயோ நத்ய: புராணேஷு ச விஸ்ருதா:
யத்ர யத்ர—எங்கெல்லாம்; ஹரே:—பரமபுருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின்; அர்ச்சா—விக்கிரகம் பூஜிக்கப்படுகிறதோ; ஸ:—அந்த; தேச:—இடம், நாடு அல்லது சுற்றுப்புறம்; ஸ்ரேயஸாம்—மங்களகரமான; பதம்—இடமாகும்; யத்ர—எங்கெல்லாம்; கங்கா-ஆதய:—கங்கை, யமுனை, நர்மதா, காவேரி போன்ற; நத்ய:—புண்ணிய நதிகள்; புராணேஷு—புராணங்களில்; ச—கூட; விஸ்ருதா:—கொண்டாடப்படுகின்றன.
எங்கு பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் முறையாக பூஜிக்கப்படுகிறாரோ, அத்தகைய ஓர் ஆலயம் இருக்கும் இடம் உண்மையாகவே மங்களரகமானதாகும். மேலும் புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள, புகழ்பெற்ற புண்ணிய நதிகள் ஓடும் இடங்களும் மங்களகரமானவையே. அங்கு செய்யப்படும் எந்த ஆன்மீக செயலும் நிச்சயமாக நல்ல பயனை அளிக்கக் கூடியதாக இருக்கும்.
பதங்கள் 7.14.30 – 7.14.33
ஸராம்ஸி புஷ்கராதீனி க்ஷேத்ராணி அர்ஹாஸ்ரிதானி உத
குருக்ஷேத்ரம் கய-சிர ப்ரயாக: புலஹாஸ்ரம:
நைமிஷம் ஃபால்குணம் ஸேது: ப்ரபாஸோ ‘த குச-ஸ்தலீ
வாராணஸீ மது-புரீ பம்பா பிந்து-ஸரஸ் ததா
நாராயணாஸ்ரமோ நந்தா ஸீதா-ராமாஸ்ரமாதய:
ஸர்வே குலாசலா ராஜன் மஹேந்ர-மலயாதய:
ஏதே புண்யதமா தேசா ஹரேர் அர்சாஸ்ரிதாஸ் ச யே
ஏதான் தேசான் நிஷேவேத ஸ்ரேயஸ்-காமோ ஹி அபீக்ஷ்ணச:
தர்மோ ஹி அத்ரேஹித பும்ஸாம் ஸஹஸ்ராதி-ஃபலோதய:
ஸராம்ஸி—ஏரிகள்; புஷ்கர-ஆதீனி—புஷ்கரம் போன்ற; க்ஷேத்ராணி—(குருட்சேத்திரம், கயாக்ஷேத்திரம், ஜகந்நாதபுரி போன்ற) புண்ணிய ஸ்தலங்கள்; அர்ஹ—வழிபாட்டுக்குரிய சாதுக்களுக்குரிய; ஆஸ்ரிதானி—சரணாலயங்கள்; உத—கொண்டாடப்படுகின்றன; குருஷேத்ரம்—ஒரு குறிப்பிட்ட புண்ணிய ஸ்தலம் (தர்ம-க்ஷேத்ரம்); கய-சிர:—கயாசுரன் பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களில் தஞ்சமடைந்த, கயா என்ற இடம்; ப்ரயாக:—புனித நதிகளான கங்கையும், யமுனையும் ஒன்று சேரும் இடமான அலகாபாத்; புலஹ-ஆஸ்ரம:—புலஹ முனியின் ஆசிரமம்; நைமிஷம்—(லக்னோவிற்கு அருகிலுள்ள) நைமிஷாரண்யம் என்ற இடம்; ஃபால்குணம்—ஃபல்கு நதி ஓடும் இடம்; ஸேது:—இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் பகவான் ராமச்சந்திரர் பாலம் கட்டிய இடமான சேதுபந்தம்; ப்ரபாஸ:—பிரபாச க்ஷேத்திரம்; அத—அவ்வாறே; குச-ஸ்தலீ—துவாரவதி, அல்லது துவாரகை; வாராணஸீ—பெனாரஸ்; மது-புரீ—மதுரா; பம்பா—பம்பா என்ற ஏரி அமைந்துள்ள ஓரிடம்; பிந்து-ஸர:—பிந்து-சரோவரம் அமைந்துள்ள இடம்; ததா—அங்கு; நாராயண-ஆஸ்ரம:—பத்ரிகாசிரமம் என்ற; நந்தா—நந்தா நதி ஓடும் இடம்; ஸீதா-ராம—பகவான் ராமச்சந்திரர் மற்றும் அன்னை சீதையின்; ஆஸ்ரம-ஆதய:—சித்திரக்கூடம் போன்ற புகலிடங்கள்; ஸர்வே—(இத்தகைய இடங்கள்) எல்லாம்; குலாசலா:—மலைப் பிரதேசங்கள்; ராஜன்—அரசே; மஹேந்ர—மகேந்திரம் என்ற; மலய-ஆதய:—மேலும் மலயாசலம் போன்ற மற்றவை; ஏதே—இவையனைத்தும்; புண்ய-தமா:—மிகமிக புண்ணியமான; தேசா:—இடங்கள்; ஹரே:—பரமபுருஷரின்; அர்ச்ச-ஆஸ்ரிதா:—ராதா-கிருஷ்ண விக்கிரகம் பூஜிக்கப்படும் இடங்கள் (நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ், ஸன் பிரான்சிஸ்கோ போன்ற அமெரிக்க நகரங்கள், மற்றும் கிருஷ்ண உணர்வு மையங்களுள்ள லண்டன், பாரிஸ் போன்ற ஐரோப்பிய நகரங்கள்); ச—மேலும்; யே—எவை; ஏதான் தேசான்—இவ்வெல்லா தேசங்களிலும்; நிஷேவேத—வழிபடவேண்டும் அல்லது சென்று காண வேண்டும்; ஸ்ரேய:-காம:—மங்களத்தை விரும்பும் ஒருவன்; ஹி—நிச்சயமாக: அபீஷ்ணச:—திரும்பத் திரும்ப; தர்ம:—சமயச் செயல்களை; ஹி—எதிலிருந்து; அத்ர—இவ்விடங்களில்; ஈஹித:—செய்யப்படும்; பும்ஸாம்—மனிதர்களின்; ஸஹஸ்ர-அதி—ஆயிரம் மடங்குக்கும் அதிகமான; ஃபல-உதய:—பலனளிப்பதாகும்.
புஷ்கரம் போன்ற புனிதமான ஏரிகளும், சாதுக்கள் வாழும் குருட்சேத்திரம், கயா, பிரயாகை, புலகாசிரமம், நைமிஷாரண்யம், ஃபால்கு நதிக்கரைகள், சேதுபந்தம், பிரபாசை, துவாரகை, வாரணாசி, மதுரா, பம்பா, பிந்து-ஸரோவரம், பத்ரிகாஸ்ரமம் (நாராயணாசிரமம்), நந்தா நதி ஓடும் இடங்கள், பகவான் இராமச்சந்திரரும், அன்னை சீதையும் புகலிடம் கொண்ட சித்திரக் கூடம், மகேந்திரம் மற்றும் மலய மலைப் பிரதேசங்கள் போன்ற இவ்வெல்லா இடங்களும் மிகவும் புண்ணியமானவையாகவும், புனிதமானவையாகவும், கருதப்படுகின்றன. அவ்வாறே, ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்புபவர்கள் இந்தியாவிற்கு வெளியிலுள்ள கிருஷ்ண பக்தி இயக்க மையங்களுக்கும். ராதா-கிருஷ்ண விக்கிரகங்கள் வழிபடப்படும் ஆலயங்களுக்கும் யாத்திரை செல்ல வேண்டும். ஆன்மீக வாழ்வில் முன்னேற விரும்பும் ஒருவன். இந்த இடங்களுக்கெல்லாம் யாத்திரை சென்று சமயச் சடங்குகளை நிறைவேற்றி, மற்ற இடங்களில் அடையக்கூடிய பலன்களைவிட ஆயிரம் மடங்கு மேலான பலன்களை அடைய முடியும்.
பதம் 7.14.34
பாத்ரம் து அத்ர நிருக்தம் வை கவிபி: பாத்ர-வித்தமை:
ஹரிர் ஏவைக உர்வீச யன்-மயம் வை சராசரம்
பாத்ரம்—யாருக்கு தானம் செய்யப்பட வேண்டுமோ அச்சிறந்த மனிதர்; து—ஆனால்; அத்ர—உலகில்; நிருக்தம்—தீர்மானித்துள்ளனர்; வை—உண்மையாக; கவிபி:—கற்றறிந்த மேதைகளால்; பாத்ர-வித்தமை:—தானம் கொடுக்கப்பட வேண்டிய சரியான நபரைக் கண்டுபிடிப்பதில் வல்லவர்களான; ஹரி:—பரமபுருஷர்; ஏவ—உண்மையில்; ஏக:—ஒருவரே; உர்வீ-ஈச—மண்ணுலக அரசே; யத்-மயம்—எவரை அனைத்தும் சார்ந்துள்ளனவோ; வை—எவரிலிருந்து அனைத்தும் வருகின்றனவோ; சர-அசரம்—இப்பிரபஞ்சத்திலுள்ள அசைவன, அசையாதன ஆகிய அனைத்தும்.
மண்ணுலக அரசே, எவரை இப்பிரபஞ்சத்திலுள்ள அசைவன, அசையாதன ஆகிய அனைத்தும் சார்ந்துள்ளனவோ, எவரிடம் அனைத்தையும் அர்ப்பணித்துவிட வேண்டுமோ, எவரிடமிருந்து அனைத்தும் வருகின்றனவோ, அந்த பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் ஒருவரே உத்தமபுருஷர் என்று கற்றறிந்த மேதைகளான நிபுணர்களால் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பதம் 7.14.35
தேவர்ஷி-அர்ஹத்ஸு வை ஸத்ஸு தத்ர ப்ரஹ்மாத்மஜாதிஷு
ராஜன் யத் அக்ர-பூஜாயாம் மத: பாத்ரதயாச்யுத:
தேவ-ரிஷி—நாரத முனிவர் உட்பட தேவர்கள் மற்றும் சிறந்த சாதுக்களுக்கிடையில்; அர்ஹத்ஸு—மிகவும் மரியாதைக்கும், வழிபாட்டுக்கும் உரிய சிறந்த மகான்களான; வை—உண்மையில்; ஸத்ஸு—சிறந்த பக்தர்கள்; தத்ர—அங்கு (ராஜஸூய யாகத்தில்); ப்ரஹ்ம ஆத்ம-ஜாதிஷு—மேலும் (சனகர், சனந்தனர், சனத் மற்றும் சனாதனர் முதலான) பிரம்மதேவரிர் புத்திரர்களும்; ராஜன்—அரசே; யத்—எவரிடமிருந்து; அக்ர-பூஜாயாம்—முதல் பூஜைக்குரியவர்; மத:—முடிவு; பாத்ரதயா—ராஜஸூய யாகத்திற்குத் தலைவராக இருப்பதற்குத் தகுந்தவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்; அச்யுத:—கிருஷ்ணர்.
யுதிஷ்டிர மகாராஜனே, பிரம்ம தேவரின் நான்கு புத்திரர்கள் உட்பட, தேவர்களும், பல சிறந்த முனிவர்களும், ஞானிகளும், நானும் உமது ராஜசூய யாகத்தில் கலந்து கொண்டோம். ஆனால் முதலில் பூஜிக்கப்பட வேண்டியவர் யார் என்ற கேள்வி எழுந்தபொழுது, அனைவரும் பரம்புருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே அதற்குத் தகுதியுடையவர் என்று முடிவு செய்தனர்.
பதம் 7.14.36
ஜீவ-ராசிபிர் ஆகிர்ண அண்ட-கோசாங்ரிபோ மஹான்
தன்-மூலத்வாத் அச்யுதேஜ்யா ஸர்வ-ஜீவாத்ம தர்பணம்
ஜீவ-ராசிபி:—கோடிக்கணக்கான ஜீவராசிகளால்; ஆகீர்ண:—நிரப்பப்பட்டுள்ள; அண்ட-கோச—முழு பிரபஞ்சமும்; அங்ரிப:—ஒரு மரத்தைப்போல்; மஹான்—மிகமிகப் பெரிய; தத்-மூலத்வாத்—இந்த மரத்தின் வேராக இருப்பதால்; அச்யுத-இஜ்யா—பரமபுருஷரை வழிபடுவது; ஸர்வ—அனைத்தின்; ஜீவ-ஆத்ம—ஜீவராசிகள்; தர்பணம்—திருப்தியாகும்.
ஜீவராசிகளால் நிறைந்துள்ள பிரபஞ்சம் முழுவதும், பரமபுருஷராகிய அச்சுதரை (கிருஷ்ணரை) வேராகக் கொண்ட ஒரு மரத்தைப் போன்றதாகும். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பூஜிப்பதாலேயே ஒருவனால் அனைத்து ஜீவராசிகளையும் பூஜிக்க முடியும்.
பதம் 7.14.37
புராணி அனேன ஸ்ருஷ்டானி ந்ரு-திர்யக்-ரிஷி-தேவதா:
சேதே ஜீவேன ரூபேன புரேஷு புருஷோ ஹி அஸௌ
புராணி—வசிப்பிடங்கள் அல்லது உடல்கள்; அனேன—அவரால் (பரமபுருஷரால்); ஸ்ருஷ்டானி—அப்படைப்புகளில்; ந்ரு—மனிதன்; திர்யக்—மனிதர்களைத் தவிர (மிருகங்கள், பறவைகள் போன்றவை); ரிஷி—முனிவர்கள்; தேவதா:—மற்றும் தேவர்கள்; சேதே—படுத்திருக்கிறார்; ஜீவேன—ஜீவராசிகளுடன்; ரூபேண—பரமாத்மாவின் ரூபத்தில்; புரேஷு—இந்த வசிப்பிடங்களுக்குள் அல்லது உடல்களுக்குள்; புருஷ:—பரமபுருஷர்; ஹி—நிச்சயமாக; அஸௌ—அவர் (பரமபுருஷர்).
மிருகம், பறவை, முனிவர், தேவர் மற்றும் மனித உடல்களைப் போன்ற பல வசிப்பிடங்களை பரமபுருஷர் படைத்துள்ளார். எண்ணற்ற இந்த தேக ரூபங்கள் அனைத்திலும் பகவான் பரமாத்மாவாக அந்தந்த ஜீவராசியுடன் வாழ்கிறார். இதனால் அவர் புருஷாவதாரம் எனப்படுகிறார்.
பதம் 7.14.38
தேஷு ஏவ பகவான் ராஜம்ஸ் தாரதம்யேன வர்ததே
தஸ்மாத் பாத்ரம் ஹி புருஷோ யாவான் ஆத்மா யதேயதே
தேஷு—(தேவர், மனிதன், மிருகம், பறவை போன்ற) வெவ்வேறு வகையான உடல்களுக்கிடையில்; ஏவ—நிச்சயமாக; பகவான்—பரமபுருஷர் அவரது பரமாத்மா அம்சத்தில்; ராஜன்—அரசே; தாரதம்யேன—ஒப்பிடும்பொழுது, ஏறக்குறைய; வர்ததே—இருக்கிறார்; தஸ்மாத்—ஆகவே; பாத்ரம்—பரமபுருஷரை; ஹி—நிச்சயமாக; புருஷ:—பரமாத்மா; யாவான்—எவ்வளவுக்கெவ்வளவு; ஆத்மா—புரிந்து கொள்ளும் விகிதம்; யதா—தவ, விரதங்களின் விருத்தி; ஈயதே—வெளிப்படுகிறது.
யுதிஷ்டிர மகாராஜனே, ஒவ்வொரு உடலிலும் உள்ள பரமாத்மா, தனிப்பட்ட ஆத்மாவின் புரிந்து கொள்ளும் சக்திக்கேற்ப அவனுக்கு அறிவைக் கொடுக்கிறார். எனவே பரமாத்மா தான் உடலுக்குள் முக்கியமானவராக விளங்குகிறார். தனிப்பட்ட ஆத்மாவின் அறிவு, தவம், விரதம் முதலியவைகளின் வளர்ச்சிக்கேற்ப பரமாத்மா தம்மை அவனுக்கு வெளிப்படுத்துகிறார்.
பதம் 7.14.39
த்ருஷ்ட்வா தேஷாம் மிதோ ந்ருணாம் அவஜ்ஞானாத்மதாம் ந்ருப
த்ரேதாதிஷு ஹரேர் அர்ச்சா க்ரியாயை கவிபி: க்ருதா
த்ருஷ்ட்வா—நேரிடையாகக் கண்டபிறகு; தேஷாம்—பிராமணர்கள் மற்றும் வைஷ்ணவர்களுக்கிடையில்; மித:—பரஸ்பரம்; ந்ருணாம்—மனித சமுதாயத்தின்; அவஜ்ஞான- ஆத்மதாம்—ஒவ்வொருவருக்கும் இடையிலான பரஸ்பர நடத்தையை; ந்ருப—அரசே; த்ரேதா-ஆதிஷு—திரேதாயுகம் முதற்கொண்டு; ஹரே:—பரமபுருஷரின்; அர்ச்சா—(ஆலயத்தில்) விக்கிரக வழிபாடு; க்ரியாயை—வழிபாட்டு முறையை அறிமுகப்படுத்தும் நோக்கத்திற்காக; கவிபி:—கற்றறிந்தவர்களால்; க்ருதா—செய்யப்பட்டது.
அரசே, திரேதாயுகத்தின் துவக்கத்தில் சிறந்த முனிவர்களும் சாதுக்களும் மக்களிடையே அபச்சாரமான நடவடிக்கைகளைப் பார்த்த பொழுது, எல்லா உபகரணங்களுடனும் கூடிய விக்கிரக வழிபாடு அறிமுகப்படுத்தப்பட்டது.
பதம் 7.14.40
ததோ ‘ர்ச்சாயாம் ஹரிம் கேசித் ஸம்ஸ்ரத்தாய ஸபர்யயா
உபாஸத உபாஸ்தாபி நார்த்தா புருஷ-த்விஷாம்
தது:—பிறகு; அர்ச்சாயாம்—விக்கிரகத்தை; ஹரிம்—பரம்புருஷராகிய (பகவானுடைய ரூபம் பகவானுடன் ஒன்றுபட்டது என்பதால்); கேசித்—ஒருவன்; ஸம்ஸ்ரத்தாய—மிகுந்த நம்பிக்கையுடனும்; ஸபர்யயா—தேவையான பொருட்களுடனும்; உபாஸதே—வழிப்படுகிறான்; உபாஸ்தா அபி—(நம்பிக்கையுடனும், ஒழுங்குடனும்) விக்கிரகத்தை வழிபட்டபோதிலும்; ந—இல்லை; அர்த்த-தா—பயன்; புருஷ-த்விஷாம்—பகவான் விஷ்ணுவிடமும், அவரது பக்தர்களிடமும் பொறாமை கொண்டவர்களுக்கு.
சிலசமயம் பக்குவமடையாத பக்தனொருவன் விக்கிரகத்தை பகவானாகவே பாவித்து, உண்மையாகவே எல்லாப் பொருட்களையும் கொண்டு பகவானை வழிபடுகிறான். ஆனால் பகவான் விஷ்ணுவின் அதிகாரப்பூர்வமான பக்தர்களிடம் அவன் பொறாமை கொண்டவனாக இருப்பதால், அவனுடைய பக்தித் தொண்டினால் பகவான் ஒருபோதும் திருப்தியடைவதில்லை.
பதம் 7.14.41
புருஷேஷு அபி ராஜேந்ர ஸுபாத்ரம் ப்ராஹ்மணம் விது:
தபஸா வித்யயா துஷ்ட்யா தத்தே வேதம் ஹரேஸ் தனும்
புருஷேஷு—மனிதர்களில்; அபி—உண்மையில்; ராஜ-இந்ர—அரச சிரேஷ்டரே; ஸு-பாத்ரம்—மிகச் சிறந்தவர்; ப்ராஹ்மணம்—தகுதியுடைய பிராமணர்; விது:—என்பதை ஒருவன் அறிய வேண்டும்; தபஸா—தவத்தின் பயனாக; வித்யயா—கல்வி; துஷ்ட்யா—மற்றும் மன நிறைவின் பயனாக; தத்தே—அடைகிறான்; வேதம்—வேத ஞானத்தை; ஹரே:—பரமபுருஷரின்; தனும்—உடலாக, அல்லது பிரதிநிதியாக.
அரசே,அனைத்து மனிதர்களிலும் தகுதிவாய்ந்த ஒரு பிராமணரை, இந்த ஜட உலகிலேயே மிகச் சிறந்தவராக ஏற்றுக் கொள்ள வேண்டும். ஏனெனில் இத்தகைய ஒரு பிராமணர், தவம், வேதக்கல்வி, மனநிறைவு ஆகியவற்றைப் பயில்வதன் மூலமாக, பரமபுருஷருடைய உடலின் ஒத்த பகுதியாகவே மாறிவிடுகிறார்.
பதம் 7.14.42
நனு அஸ்ய ப்ராஹ்மணா ராஜன் க்ருஷ்ணஸ்ய ஜகத்-ஆத்மன:
புனந்த: பாத-ரஜஸா த்ரி-லோகீம் தைவதம் மஹத்
நனு—ஆனால்; அஸ்ய—அவரால்; ப்ராஹ்மண:—தகுதியுள்ள பிராமணர்கள்; ராஜன்—அரசே; க்ருஷ்ணஸ்ய—பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால்; ஜகத்-ஆத்மன:—முழு சிருஷ்டிக்கும் உயிரும், ஆத்மாவுமான; புனந்த:—புனிதப்படுத்தி; பாத-ரஜஸா—அவர்களுடைய தாமரைப் பாதங்களின் புழுதியால்; த்ரி-லோகீம் மூவுலகங்களையும்; தைவதம்—பூஜிக்கத் தகுந்தவர்கள்; மஹத்—மேன்மையுடையவர்கள்.
யுதிஷ்டிர மகாராஜனே, குறிப்பாக உலகம் முழுவதிலும் பகவானின் மகிமைகளைப் பிரச்சாரம் செய்வதில் ஈடுபட்டுள்ள பிராமணர்கள், சிருஷ்டி முழுவதற்கும் உயிரும், ஆத்மாவுமான பரமபுருஷரால் அங்கீகரிக்கப்பட்டு பூஜிக்கப்படுகின்றனர். பிராமணர்கள் தங்களுடைய பிராச்சாரத்தின் மூலமாக, தங்களுடைய தாமரைப் பாதங்களின் புழுதியால் மூவுலகங்களையும் புனிதப்படுத்துகின்றனர். இவ்வாறாக அவர்கள் கிருஷ்ணராலும் பூஜிக்கத் தகுந்தவர்கள் ஆகின்றனர்.
ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின் “சிறப்புடைய இல்லற வாழ்வு” எனும் தலைப்பை கொண்ட பதினான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.