அத்தியாயம் – 10
பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்
பதம் 7.10.1
ஸ்ரீ-நாரத உவாச
பக்தி-யோகஸ்ய தத் ஸர்வம் அந்தராயதயார்பக:
மன்யமானோ ஹ்ர்ஷீகேசம் ஸ்மயமான உவாச ஹ

ஸ்ரீ-நாரத: உவாச-நாரத முனிவர் கூறினார்; பக்தி—யோகஸ்ய- பக்தித்தொண்டின் கொள்கைகளின்; தத்—அவற்றை (பகவான் நரசிம் மரால் அருளப்பட்ட வரங்களை); ஸர்வம்—அவற்றில் ஒவ்வொன்றும்; அந்தராயதயா— (பக்தியோக வழியில்) தடைகளாக இருந்ததால்; அர்பக:-பிரகலாதர் ஒரு சிறுவனாக இருந்த போதிலும்; மன்யமான:- என்றெண்ணி; ஹ்ரிஷீகேசம்- பகவான் நரசிம்ம தேவரிடம்; ஸ்மய மான:—புன்னகை செய்து; உவாச கூறலானார்; ஹ— கடந்த காலத்தில்.

நாரதர் முனிவர் தொடர்ந்து கூறினார்: பகவான் நரசிம்ம தேவரால் அருளப்பட்ட வரங்களைச் செவிமடுத்த பிரகலாதர், ஒரு சிறுவனாக இருந்த போதிலும், அவற்றை பக்தித் தொண்டெனும் வழியில் தடைகளாகக் கருதினார். இவ்விதமாக அவர் புன்னகை செய்து பின்வருமாறு பேசலானார்.

பதம் 7.10.2
ஸ்ரீ -ப்ரஹ்ராத உவாச
மா மாம் ப்ரலோபயோத்பத்யா ஸக்தம் காமேஷு தைர் வரை:
தத் -ஸங்க-பீதோ நிர்விண்ணோ முமுக்ஷுஸ் த்வாம் உபாஸ்ரித:

ஸ்ரீப்ரஹ்ராத: உவாச-பிரகலாதர் கூறினர் (பரமபுருஷரிடம்); மா—தயவுகூர்ந்து வேண்டாம்; மாம் என்னை; ப்ரலோபய-மயக்க; உத்பத்யா – (அசுர குடும்பத்தில்) நான் பிறந்துள்ள காரணத்தால்; ஸக்தம்— {ஏற்கனவே நான்) பற்றுக் கொண்டவனாக இருக்கிறேன்; காமேஷுபௌதிக சுகபோகங்களில்; தை:-அவையனைத்தினாலும்; -பௌதிக உடைமைகளெனும் வரங்களான; தத்-ஸங்க- வரை:- பீத: இத்தகைய பௌதிக சகவாசத்தில் அச்சம் கொண்டிருப்பதால், நிர்விண்ண:-பௌதிக ஆசைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டு; முமுக: பௌதிக வாழ்விலிருந்து விடுபட விரும்பியே: தீவாம்.- உங்களுடைய தாமரைப் பாதங்களில்; உபாஸ்ரித:-நான் சரணடைந்தேன்.

பிரகலாத மகாராஜன் கூறினார்: எனது பிரியமுள்ள பகவானே, பரமபுருஷரே, நான் அசுர குடும்பத்தில் பிறந்துள்ள காரணத்தால், இயல்பாகவே பௌதிக சுகபோகங்களில் பற்றுக் கொண்டவனாக இருக்கிறேன். ஆகவே, தயவுகூர்ந்து இத்தகைய மாயைகளினால் எனக்கு ஆசை காட்டதீர்கள். பௌதிக நிலைகளைக் குறித்து நான் மிகவும் அச்சப்படுகிறேன். பௌதிக வாழ்விலிருந்து நான் விடுபட விரும்புகிறேன். இதற்காகத்தான் தங்களுடைய தாமரைப் பாதங்களில் தான் சரணடைந்தேன்.

பதம் 7.10.3
ப்ருத்ய-லக்ஷண-ஜிஜ்ஞாஸுர் பக்தம் காமேஷு அசோதயத்
பவான் ஸம்ஸார-பீஜேஷு ஹ்ருதய-க்ரந்திஷு ப்ரபோ

ப்ருத்ய—லக்ஷண ஜிக்ஞாஸு:—ஒரு தூய பக்தனுக்குரிய அறிகுறி களை வெளிப்படுத்த விரும்பி; பக்தம்-பக்தன்; காமேஷுகாம் இச்சைகள் மேலோங்கியுள்ள இந்த ஜட உலகில்; அசோதயத்- அனுப்பியிருக்கிறீர்கள்; பவான் தாங்கள்; ஸம்ஸார-பிஜேஷு—இந்த ஜட உலகில் இருப்பதற்கான மூல காரணம்; ஹ்ருதய க்ரந்திஷு” எல்லா பந்தப்பட்ட ஆத்மாக்களின் இதயங்களிலும் இருக்கும் (பௌதிக சுகத்தை அனுபவிக்கும் ஆசை); ப்ரபோ-எனது வழிபாட்டுக்குரிய பகவானே.

எனது வழிபாட்டுக்குரிய பகவானே, பௌதிக வாழ்வுக்கு மூல காரணமாகிய காம இச்சையெனும் வித்து எல்லோருடைய இதயங்களிலும் இருப்பதால், ஒரு தூய பக்தனின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்காக இந்த ஜட உலகிற்கு என்னைத் தாங்கள் அனுப்பி இருக்கிறீர்கள்.

பதம் 7.10.4
நான்யதா தே ‘கில-குரோ கடேத கருணாத்மன:
யஸ் த ஆசிஷ ஆசாஸ்தே ந ஸ ப்ருத்ய: ஸ வை வணிக்

ந – இல்லை; அன்யதா— இல்லையெனில்: தே- உங்களுடைய; அகில-குரோ – முழுசிருஷ்டிக்கும் பரம போதகரே; கடேத—இத்தகைய ஒன்று நடக்க முடியும்; கருணா—ஆத்மன: தமது பக்தர்களிடம் மிகவும் கருணையுடைய பரமபுருஷர்; ய:-எவனொருவன்; தே-உங்களிட மிருந்து; ஆசிஷ:பௌதிக நன்மைகளை; ஆசாஸ்தே— (உங்களுக்குச் செய்த சேவைக்குப் பதிலாக) விரும்புகிறானோ; த-இல்லை; ;~ அவன்; ப்ருத்ய:-ஒரு சேவகன்; ஸ:-அத்தகைய ஒருவன்; வை- உண்மையில்; வணிக்_(வியாபாரத்திலிருந்து பௌதிக இலாபத்தை அடைய விரும்பும்) ஒரு வியாபாரியாவான்.

பகவானே, அகில லோகங்களுக்கும் பரம குருவே, நீங்கள் உங்களுடைய பக்தனிடம் அதிக அன்புடையவர் என்பதால், அவனுக்கு நன்மையளிக்காத ஒன்றைச் செய்யும்படி அவனை உங்களால் தூண்ட முடியாது. மற்றொருபுறம், பக்தித் தொண்டிற்குப் பதிலாக ஏதேனும் பௌதிக நன்மையை விரும்புபவனால் உங்களுடைய தூய பக்தன் ஆகமுடியாது. உண்மையில் அவன் சேவைக்குப் பதிலாக இலாபத்தை விரும்பும் ஒரு வியாபாரியைவிட எவ்விதத்திலும் மேலானவனல்ல.

பதம் 7.10.5
ஆசாஸானோ ந வை ப்ருத்ய: ஸ்வாமினி ஆசிஷ ஆத்மன:
ந ஸ்வாமி ப்ருத்யத: ஸ்வாம்யம் இச்சன் யோ ராதி சாசிஷ:

ஆசாஸான:-(சேவைக்குக் கைமாறாக எதையேனும்) விரும்புபவன்; ந – இல்லை; வை- உண்மையில்; ப்ருத்ய:-தகுதியுடைய ஒரு சேவகன் அல்லது பகவானுடைய தூய பக்தன்; ஸ்வாமினி- எஜமானரிடமிருந்து; ஆசிஷ:-பௌதிக நன்மையை; ஆத்மன:- சொந்த புலன் நுகர்வுக்காக; ந-இல்லை; ஸ்வாமி-எஜமானன்; ப்ருதியத:- சேவகனிடமிருந்து; ஸ்வாம்யம்- எஜமானன் என்ற அந்த ஸ்தை; இச்சன் – விரும்பி; ய-இத்தகைய ஒரு எஜமானன்; ராதி- கொடுப்பானாயின்; ச – கூட; ஆசிஷ:பௌதிக நன்மையை.

தன் எஜமானரிடமிருந்து பௌதிக இலாபங்களை அடைய விரும்பும் ஒரு சேவகன் நிச்சயமாகத் தகுதியுடைய ஒரு சேவகனோ அல்லது தூய பக்தனோ அல்ல. அதுபோலவே எஜமானன் என்ற தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தன் சேவகனுக்கு வரமளிக்கும் எஜமானரும் புனிதமான எஜமானரல்ல.

பதம் 7.10.6
அஹம் து அகாமஸ் த்வத்-பக்தஸ் த்வம் ச ஸ்வாமி அனபாஸ்ரய: நான்யதேஹாவயோர் அர்த்தோ ராஜ-ஸேவகயோர் இவ

அஹம்-என்னைப் பொறுத்தவரை; து-உண்மையில்; அகாம:- பௌதிக ஆசை இல்லாத; த்வத்-பக்த:-உள்நோக்கமில்லாமல் உங்களிடம் பூரண பற்றுக் கொண்டுள்ள பக்தன்; த்வம் ச-பிரபுவாகிய தாங்களும்; ஸ்வாமி—உண்மையான எஜமானராவீர்; அளபாஸ்ரய— உள்நோக்கம் இல்லாதவர்; நஇல்லை; அவ்யதா-எஜமானர், சேவகன் என்ற இத்தகைய ஓர் உறவு முறையில் இல்லாமல்; இஹய இங்கு: ஆவயோ:-தம்முடைய; அர்த:-எந்த உள்நோக்கமும் (பகவான் புனிதமான எஜமானராவார். பிரகலாதரும் பௌதிக உள்நோக்கம் இல்லாத புனித பக்தராவார்); ராஜ-ஓரரசனின்; ஸேவகயோ:- சேவகனும்; இவபோல (சேவகளின் நன்மைக்காக அரசர் வரி வசூலிப்பது போல அல்து அரசரின் நன்மைக்காக பிரஜைகள் வரி செலுத்துவது போல).

பகவானே, நான் உள் நோக்கமில்லாத தங்களுடைய சேவகன், நீங்களும் எனது நித்தியமான எஜமானராவீர். நமக்கிடையில் எஜமானர், சேவகன் என்ற உறவைத் தவிர வேறொன்றும் அவசியமில்லை. இயற்கையாகவே தாங்கள் எனது எஜமானர். நானும் இயற்கையாகவே தங்களுடைய சேவகன். நமக்கிடையில் வேறெந்த உறவும் கிடையாது.

பதம் 7.10.7
யதி தாஸ்யஸி மே காமான் வராம்ஸ் த்வம் வரதர்ஷப
காமானாம் ஹ்ருதி அஸம்ரோஹம் பவதஸ் து வ்ருணோ வரம்

யதி-என்றால்; தாஸ்யஸி-கொடுக்க விரும்புகிறீர்; மே-எனக்கு; காமான்-விரும்பத் தகுந்த எதையேனும்; வரான்—வரமாக; த்வம் நீங்கள்; வரத-ரிஷப எந்த வரத்தையும் அருளக்கூடிய வரதராஜரான பரமபுருஷரே; காமானாம் பெளதிக சுகத்திற்கான எந்த ஆசையும்; ஹ்ருதி- என் இதயத்தில்; அஸம்ரோஹம்- முளைவிடக் கூடாது; பவத:- -உங்களிடமிருந்து; து— அப்படியானால்; வ்ருணே தான் வேண்டுகிறேன்; வரம்—என்ற வரத்தை.

பகவானே, வரமளிப்பவருள் சிறந்த வரதராஜரே, தாங்கள் நான் விரும்பிய வரத்தை அளிக்க விரும்பினால், என் இதயத்தில் எந்த பௌதிக ஆசையும் முளைக்கக் கூடாது என்ற வரத்தை எனக்கு அருள்வீராக.

பதம் 7.10.8
இந்ரியாணி மன: ப்ராண ஆத்மா தர்மோ த்ருதிர் மதி:
ஹ்ரீ: ஸ்ரீஸ் தேஜ: ஸம்ருதி: ஸத்யம் யஸ்ய நஸ்யத்தி ஜன்மனா

இந்ரியாணி- புலன்கள்; மன:-மனம்; ப்ராண:-உயிர்; ஆத்மா— உடல்; தர்ம:- தர்மம்; த்ருதி:-பொறுமை; மதி:-அறிவு; ஹ்ரீ— தேஜ:-பலம்; ஸ்குதி:- வெட்கம்; ஸ்ரீ:செல்வம்; தேது பலம்; ஞாபகம்; ஸதியம் உண்மை; யல்ய எந்த சிற்றின்ப ஆசைகளின் நஸ்யத்தி அழிவுறுகின்றனவோ ஜன்மனா— பிறப்பின் துவக்கத்திலிருந்து.

பகவானே, பிறப்பின் துவக்கத்திலிருந்து தொடர்ந்து வரும் சிற்றின்ப ஆசைகளின் காரணத்தால், ஒருவனுடைய புலன்கள், மனம், உயிர், உடல், தர்மம், பொறுமை, அறிவு, வெட்கம், செல்வம், பலம், ஞாபக சக்தி, உண்மை ஆகிய அனைத்தின் செயல்பாடுகளும் அழிந்துவிடுகின்றன.

பதம் 7.10.9
விமுஞ்சதி யதா காமான் மானவோ மனஸி ஸ்திதான்
தர்ஹி ஏவ புண்டரீகாக்ஷ பகவத்வாய கல்பதே

விமுஞ்சதி-விட்டுவிடுகிறானோ; யதா – எப்பொழுது; காமான்- எல்லா பௌதிக ஆசைகளையும்; மானவ:-மனிதன்; மனஸி- மலநில்; ஸ்திதான்-உறையும்; தர்ஹி-அப்பொழுதே; ஏவ- நிச்சயமாக; புண்டரீக-அக்ஷ தாமரைக் கண்ணா; பகவத்வாய- பகவானுக்கு இணையான செல்வத்தைப் பெற; கல்பதே தகுதி யுடையவன் ஆகிறான்.

தாமரைக்கண்ணா, ஒரு மனிதனால் எப்பொழுது தன் மனதிலுள்ள எல்லா பௌதிக ஆசைகளையும் விட்டுவிட முடிகிறதோ, அப்பொழுதே அவன் உங்களுக்கு இணையான செல்வத்தையும், ஐசுவரியத்தையும் பெறத் தகுதியுடையவன் ஆகிறான்.

பதம் 7.10.10
ஓம் நமோ பகவதே துப்யம் புருஷாய மஹாத்மனே
ஹரயே ‘த்புத-ஸிம்ஹாய ப்ரஹ்மணே பரமாத்மனே

ஓம் பகவானே, பரமபுருஷரே; நம:- எனது பணிவான வணக்கங்கள்; பகவதே -பரமபுருஷருக்கு; துப்யம்—தங்களுக்கு: புருஷாய-பரமபுருஷ பகவானுக்கு; மஹா-ஆத்மனே -பரமாத்மாவிற்கு: ஹரயே—பக்தர்களின் துயர்தீர்க்கும் பகவானுக்கு; அத்புத -லிம்ஹாய- உங்களுடைய அற்புதமான நரசிம்ம ரூபத்திற்கு; ப்ரஹ்மனே – பரப்பிம்மனுக்கு; பரம – ஆத்மனே பரமாத்மாவிற்கு.

ஆறு ஐசுவரியங்களும் நிரம்பிய பகவானே, பரமபுருஷரே, பக்தர்களின் துயர் தீர்க்கும் பகவான் ஸ்ரீ ஹரியே, பரமாத்மாவே, அற்புதமான நரசிம்ம ரூபத்தை ஏற்ற முழுமுதற் கடவுளே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.

பதம் 7.10.11
ஸ்ரீ-பகவான் உவாச
நைகாந்தினோ மே மயி ஜாது இஹாசிஷ
ஆசாஸதே ‘முத்ர ச யே பவத்-விதா:
ததாபி மன்வந்தரம் ஏதத் அத்ர
தைத்யேஸ்வராணாம் அனுபுங்க்ஷ்வ போகான்

ஸ்ரீபகவான் உவாச-பரமபுருஷர் கூறினார்; ந- இல்லை; ஏகாந்தின:- பக்தித்தொண்டைத் தவிர வேறெந்த ஆசையும் இல்லாத கலப்பட மற்றவன்; மே- என்னிடமிருந்து; மயி எனக்கு; ஜாது எச்சமயத்திலும்; இஹ இவ்வுலகில்; ஆசிஷ:வரங்கள்; ஆசாம தே – ஆசை: அமுத்ர-அடுத்த பிறவியில்; சமேலும்; யே- இத்தகைய எல்லா பக்தர்களும்;பவத்—விதா:-உன்னைப் போன்ற; ததாபி-இருப்பினும்; மன்வந்தரம் ஒரு மனுவின் மனுவின் ஆயுட்காலம் முடியும் வரை; ஏதத்-இந்த: அத்ர-ஜட உலகில்; தைத்ய-ஈஸ்வராணாம்- பௌதிக வாதிகளின் ஐசுவரியங்களை; அனுபுங்க்ஷ்வ—நீ அனுபவிக்கலாம்; போகான்—பௌதிக சுகபோகங்களை எல்லாம்.

பரமபுருஷர் கூறினார்: எனதருமைப் பிரகலாதா, உள்னைப் போன்ற ஒரு பக்தன் இப்பிறவியிலோ, அடுத்ததிலோ எவ்வித பௌதிக ஐசுவரியத்தையும் விரும்புவதே இல்லை. இருப்பினும், நீ அசுரர்களின் அரசனாக இருந்து கொண்டு, மனுவின் ஆயுட்காலம் முடியும்வரை, இந்த ஜட உலகின் அசுரர்களின் ஐசுவரியங்களை அனுபவிக்க வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன்.

பதம் 7.10.12
கதா மதீயா ஜுஷமாண: ப்ரியாஸ் த்வம்
ஆவேஸ்ய மாம் ஆத்மனி ஸந்தம் ஏகம்
ஸர்வேஷு பூதேஷு அதியக்ஞம் ஈசம்
யஜஸ்வ யோகேன ச கர்ம ஹின்வன்

கதா:- செய்திகளை அல்லது உபதேசங்களை; மதீயா:—என்னால் கொடுக்கப்படும்; ஜுஷமான; எப்பொழுதும் கேட்பதில் அல்லது மனதில் நினைப்பதில்; ப்ரியா:-மிகவும் பிரியமான; த்வம்நீ; ஆவேஸ்ய-முழுமையாக ஆழ்ந்து; மாம்—என்னில்; ஆத்மனி—உன் இதயத்தில்; ஸந்தம்-இருக்கும்; ஏகம் ஒருவனே (அதே பரமாத்மா); ஸர்வேஷுஅனைத்து; பூதேஷு-ஜீவராசிகளிலும்; அதியக்கும்— எல்லா வேதக்கிரியைகளையும் அனுபவிப்பவன்; ஈசம் பரமபுருஷர்; யஜஸ்வ-வழிபடுவாயாக; யோகேன-பக்தி யோகத்தினால்; சகூடர் கர்ம—பலன் கருதும் செயல்களை; ஹின்வன்-விட்டுவிட்டு.

நீ ஜட உலகில் இருப்பது கூட பாதகமில்லை. நீ எப்பொழுதும் என்னால் கொடுக்கப்படும் உபதேசங்களையும், செய்திகளையும் கேட்டு, என்னைப் பற்றிய சிந்தனையிலேயே எப்பொழுதும் ஆழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில், நானே எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக இருக்கிறேன். ஆகவே பலன் கருதும் செயல்களை விட்டுவிட்டு என்னை வழிபடுவாயாக.

பதம் 7.10.13
போகேன புண்யம் குசலேன பாபம்
கலேவரம் கால-ஜவேன ஹித்வா
கீர்த்திம் விசுத்தாம் ஸுர-லோக-கீதாம்
விதாய மாம் ஏஷ்யஸி முக்த-பந்த:

போகேன-பௌதிக மகிழ்ச்சியை அனுபவிப்பதன் மூலம்; புண்யம் – புண்ணியங்களை அல்லது புண்ணிய பலன்களை: குசலேன -புண்ணியச் செயல்களால் (புண்ணியச் செயல்களிலேயே மிகச் சிறந்தது பக்தித் தொண்டாகும்); பாபம்-எல்லா வகையான விளைவுகளையும்; கலேவரம் ஜட வலிமைமிக்க உடலை; பாவ கால ஐவேன் – காலத் தத்துவத்தினால்; ஹித்வா விட்டுவிட்டு; கிர்த்திம்- புகழை: விசுத்தாம் பரிசுத்தமடைந்து; ஸுரலோக— கீதாம்-சுவர்க்க லோகங்களிலும் போற்றப்படும்; விதாய-பிரபஞ்சம் முழுவதிலும் பரப்பிரமாம்- என்னிடம் ஏஷ்யஸி—நீ திரும்பி வருவாய்; முக்த- பந்த:- பௌதிக பந்தங்களைக் களைந்து.

எனது அன்பிற்குரிய பிரகலாதனே. இந்த ஜட உலகில் வாழும் பொழுது, இன்பத்தை அனுபவிப்பதன் மூலமாக புண்ணிய பலன்களையெல்லாம் நீ செலவழித்து விடுவாய். புண்ணியச் செயல்களால் பாவ விளைவுகளை நீ பொசுக்கி விடுவாய். சக்தி வாய்ந்த காலத்தின் வேகத்தினால் உடலைக் களைந்து, மேலுலகங்களில் கீர்த்தனம் செய்வதற்குரிய உனது புகழைப் பெருக்கி, தடைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாய் நீ என்னை அடைவாய்.

பதம் 7.10.14
ய ஏதத் கீர்த்தயேன் மஹ்யம் த்வயா கீதம் இதம் நர:
த்வாம் ச மாம் ச ஸ்மரன் காலே கர்ம-பந்தாத் ப்ரமுச்யதே

ய – எவனொருவன்; ஏதத்—இச்செயலை; கீர்த்தயேத் பாடுகிறா னோ; மஹ்யம்-எனக்கு; த்வயா—உன்னால்; கீதம்-செய்யப் பட்ட ஸ்தோத்திரத்தை; இதம் இந்த: நர: மனிதன்; தீவாம்—உன்னை; ச— மற்றும் ; மாம் ச-என்னக்கைட; ஸ்மரன்-நினைப்பவன்; காலே- காலப்போக்கில்; கர்ம-பந்தாத்—கர்ம பந்தத்திலிருந்து; ப்ரமுச்யதே— விடுபடுகிறான்.

உன்னுடைய செயல்களையும், என்னுடைய செயல்களையும் எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துள்ளவனும், உன்னால் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்களைப் பாடுபவனுமான ஒருவன், காலப்போக்கில் கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவான்.

பதங்கள் 7.10.15 – 7.10.17
ஸ்ரீ-ப்ரஹ்ராத உவாச
வரம் வரய ஏதத் தே வரதேசான் மஹேஸ்வர
யத் அனிந்தத் பிதா மே த்வாம் அவித்வாம்ஸ் தேஜ ஐஸ்வரம்

வித்தாமர்ஷாசய: ஸாக்ஷாத் ஸர்வ-லோக-குரும் ப்ரபும்
ப்ராத்ரு-ஹேதி ம்ருஷா-த்ருஷ்டிஸ் த்வத்-பக்தே மயி சாகவான்

தஸ்மாத் பிதா மே பூயேத துரந்தாத் துஸ்தராத் அகாத்
பூதஸ் தே ‘பாங்க-ஸம்த்ருஷ்டஸ் ததா க்ருபண-வத்ஸல

ஸ்ரீ – ப்ரஹ்ராத: உவாச-பிரகலாதர் கூறினார்; வரம்—வரத்தை; வரயே-நான் வேண்டுகிறேன்; எதத் இந்த; தே-தங்களிடமிருந்து; வரத-ஈசாத்—பிரம்மா, சிவன் முதலான சிறந்த தேவர்களுக்கும் வர மருளும் பரமபுருஷராகிய; மஹா-ஈஸ்வர பரமபுருஷரே ; யத் – அந்த; அநித்தத்-நிந்தித்தார்; பிதா தந்தை; மே என்; த்வாம்- உங்களை; அவித்வான்-அறிவலிலாமல்; தேஜ—பலத்தையும்; ஐஸ்வர்யம்-உயர்வையும் பற்றிய: வித்த—அகத்தமடைந்து: அமர்வு— கோபத்தால்; ஆசய:-இதயத்தில்; ஸாரத் நேரிடையாக; ஸர்வ- லோக குரும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பரம குருவை; பிரயும்— மேலான பிரபுவை; ப்ராத்ரு-ஹா—அவருடைய சகோதரனைக் கொன்றவர்; இதி-என்று; மிருஷ:-திருஷ்டி:-பொய்யான எண்ணத்தினால் பொய்யான பொறாமை கொண்டு; தீவத்—பக்தே உங்களுடைய பக்தனிடம்; மயி—என்னிடம்; ச-மேலும்; அக-வான்—பெரும் பாவச்செயல்களை இழைத்த: தஸ்மாத் – அதிலிருந்து; பிதா -தந்தையை; மே-என்; பூயேத் புனிதமடைவராக; துரந்தார் மிகப்பெரிய: துஸ்தராத் கடப்பதற்குக் கடினமான; அகரத்—எல்லாப் பாவச் செயல்களிலிருந்தும்; யூத:-புனிதமடைந்தார் (என்ற போதிலும்}; தேஉங்களுடைய; அபாங்க-பார்வையாலேயே; ஸம்திருஷ்ட பார்க்கப்பட்டதால்; ததா—அப்பொழுது; க்ருபண—வத்ஸல பௌதிக வாதிகளிடம் கருணை கொண்டவரே.

பிரகலாத மகாராஜன் கூறினார்: பரமபுருஷரே வீழ்ந்த ஆத்மாக்களிடம் தாங்கள் மிகவும் கருணை கொண்டவர் என்பதால், ஒரே ஒரு வரத்தை மட்டும் உங்களிடம் நான் கேட்கிறேன். என் தந்தை இறக்கும் தறுவாயில் உங்களுடைய பார்வை பட்டு ஏற்கனவே புனிதமடைந்து விட்டார் என்பதை நானறிவேன். ஆனால் உங்களுடைய சிறப்புமிக்க சக்தியையும், உயர்வையும் அறியாத காரணத்தால், உங்களைத் தன் சகோதரனைக் கொன்றவர் என்ற தவறான எண்ணத்துடன், அநாவசியமாக உங்களிடம் அவர் கோபம் கொண்டுவிட்டார். இவ்விதமாக, எல்லா ஜீவராசிகளுக்கும் பரம குருவாகிய உங்களை அவர் நேரிடையாக நிந்தித்து விட்டார். உங்களுடைய பக்தனான எனக்கெதிராகவும் அவர் பெரும் பாவச் செயல்களைச் செய்துள்ளார். இப்பாவச் செயல்களுக்காக அவரை நீங்கள் மன்னித்தருள வேண்டும்.

பதம் 7.10.18
ஸ்ரீ-பகவான் உவாச
த்ரி: ஸப்தபி: பிதா பூத பித்ருபி: ஸஹ தே ‘ னக
யத் ஸாதோ ‘ஸ்ய குலே ஜாதோ பவான் வை குல-பாவன:

ஸ்ரீ – பகவான் உவாச-பரமபுருஷர் கூறினார்: த்ரி- ஸப்தபி:- இருபத்தொரு; பிதா தந்தை; பூத: புளிதமடைந்தான்; பிதிகுபி:-உன் முன்னோர்களுடன்; ஸஹ-எல்லோரும்; தே-உன்னுடைய; அனக— சிறிதும் பாவமற்றவனே (பிரகலாதர்); யத் என்பதால்; லாதோ— பரம பக்தனே. அஸ்ய-இவனுடைய; குலே வம்சத்தில்; ஜாத— பிறந்ததால்; பவான்—நீ; வை—உண்மையில்; குல-பாவன: முழுவம்சத்தையும் புனிதப்படுத்தியவன் ஆவாய்.

பரமபுருஷர் கூறினார்: மிகவும் புனிதமானவனும், பரம பக்தனுமாகிய பிரகலாதா, உன் தந்தை மட்டுமின்றி உன் குடும்பத்தைச் சேர்ந்த இருபத்தொரு தலைமுறையினரும் புனிதப்படுத்தப்பட்டனர். நீ இக்குடும்பத்தில் பிறந்த காரணத்தால், இந்த முழு வம்சமும் புனிதமடைந்தது.

பதம் 7.10.19
யத்ர யத்ர ச மத்-பக்தா: ப்ரசாந்தா: ஸம-தர்சின:
ஸாதவ: ஸமுதாசாராஸ் தே பூயந்தே ‘பி கீகடா:

யத்ர யத்ர —எங்கெல்லாம் எப்போதெல்லாம்; ச – கூட;மத்-பக்த:- என் பக்தர்கள்; ப்ரசாந்தா:-மிகவும் அமைதியான; ஸம-தர்சின:- சமமான மனநிலையுடைய; ஸாதவ:-எல்லா நற்குணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள; ஸமுதாசாரா:-நன்நடத்தையுள்ள; தே- அவர்கள் எல்லோரும்; பூயந்தே-புனிதமடைகின்றனர்; அபி-கூட கீகடா:-இழிவடைந்த ஒரு தேசத்தில் அல்லது அத்தகைய இடத்தில் வசிப்பவர்கள்.

எங்கெல்லாம், எப்போதெல்லாம் அமைதியான, சமமான மன நிலையுடைய, நன் நடத்தையுள்ள, எல்லா நற்குணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள பக்தர்கள் இருக்கிறார்களோ, அந்த இடங்களும் அங்குள்ள வம்சங்களும் இழிவடைந்தவையாக இருப்பினும், புனிதமடைகின்றன.

பதம் 7.10.20
ஸர்வாத்மனா ந ஹிம்ஸந்தி பூத-க்ராமேஷு கிஞ்சன
உச்சாவசேஷு தைத்யேந்ர மத்-பாவ-விகத-ஸ்ப்ருஹா:

ஸர்வ-ஆத்மனா—எல்லா விஷயங்களிலும். கோபத்திலும், பொறாமையிலும் கூட; ந—இல்லை; ஹிம்ஸந்தி-பொறாமை கொள் கின்றனர்; பூத-க்ராமேஷு எல்லா உயிரினங்களுக்கு இடையிலும்; கிஞ்சன—அவர்கள் எவரிடமும்; உச்ச—அவசேஷு தாழ்ந்த மற்றும் உயர்ந்த ஜீவராசிகள்; தைத்ய இந்த தைத்திய ராஜனே பிரகலாதா; மத்பாவ என்னிடம் செய்யும் பக்தித் தொண்டின் காரணத்தால்; விகத- விட்டுவிட்டனர்; ஸ்ப்ருஹா: கோபம், பேராசை ஆகிய பௌதிக குணங்களை எல்லாம்.

தைத்திய ராஜனே பிரகலாதா, என் பக்தர்கள் என்னுடைய பக்தித் தொண்டில் பற்றுக் கொண்டிருப்பதால், அவர்கள் உயர்ந்த ஜீவராசிகள் என்றும், தாழ்ந்த ஜீவராசிகள் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எல்லா விஷயங்களிலும் அவர்கள் எவரிடமும் பொறாமை கொள்வதே இல்லை.

பதம் 7.10.21
பவந்தி புருஷா லோகே மத்-பக்தாஸ் தீவாம் அனுவ்ரதா:
பவான் மே கலு பக்தானாம் ஸர்வேஷாம் ப்ரதிருப-த்ருக்

பவந்தி—ஆவார்கள்; புருஷா:- மனிதர்கள்; லோகே-இவ்வுலகில்; மத்-பக்தா:-என்னுடைய தூய பக்தர்கள்; த்வாம்-உன்னை: அனு வ்ரதா- உன் அடிச்சுவடுகளைப் பின்பற்றி: பவான் – நீ; மே- என்னுடைய; கலு—உண்மையில்; பக்தானாம்-எல்லா பக்தர்களிலும்: ஸர்வேஷாம் வெவ்வேறு பக்குவ நிலைகளில், ப்ரதிரூப – த்ருக் – தெளிவான உதாரணம்.

உன்னுடைய உதாரணத்தைப் பின்பற்றுபவர்கள் இயற்கையாகவே என்னுடைய தூய பக்தர்களாக ஆவார்கள். என்னுடைய பக்தனுக்கு நீ மிகச் சிறந்த உதாரணமாவாய். மற்றவர்கள் உன்னுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்ற வேண்டும்.

பதம் 7.10.22
குரு த்வம் ப்ரேத-க்ருத்யானி பிது: பூதஸ்ய ஸர்வச:
மத்-அங்க-ஸ்பர்சனேனாங்க லோகான் யாஸ்யதி ஸுப்ரஜா:

குரு-செய்வாயாக; த்வம் – நீ ; ப்ரேத- க்ரியானி-மரணத்திற்குப் பின் செய்யப்படும் ஈமக் கிரியைகளை; பிது:-உன் தந்தையின்; பூதஸ்ய-ஏற்கனவே புனிதம் அடைந்து விட்டான்; மத்-அங்க -என்னுடைய உடலை; ஸ்பர்சனேன—தொட்டதால்; அங்க—குழந்தாய்; லோகான்-கிரகங்களுக்கு; யாஸ்யதி—அவன் உயர்த்தப்படுவான்; ஸு-ப்ரஜா:-பக்தப் பிரஜை ஆவதற்கு.

குழந்தாய், மரணத்தின் போது என்னுடைய உடலின் ஸ்பரிசத்தாலேயே உன் தந்தை புனிதமடைந்து விட்டான். இருப்பினும், தன் தந்தை ஒரு நல்ல பிரஜையாகவும், நல்ல பக்தனாகவும் வாழக்கூடிய ஒரு கிரகத்திற்கு உயர்த்தப்படுவதற்கு, அவனுடைய மரணத்திற்குப் பிறகு அந்திம கிரியைகளைச் செய்வது ஒரு மகனுடைய கடமையாகும்.

பதம் 7.10.23
பித்ரியம் சஸ்தானம் ஆகிஷ்ட யதோக்தம் ப்ரஹ்மவாதிபி:
மய் ஆவேஸ்ய மனஸ் தாத குரு கர்மாணி மத்-பர:

பித்ரியம் தந்தைக்குரிய; சகூட ஸ்தானம் ஸ்தானத்தில், சிம்மாசனத்தில்; ஆதிஷ்ட-அமர வேண்டும்; யதா-உக்தம்- விவரிக்கப்படுவது போல்; ப்ரஹ்மவாதிபி:-வேத நாகரீகத்தைப் பின்பற்றுபவர்களால்; மயி என்னில்; ஆவேஸ்ய-முழுமையாக ஆழ்ந்து; மன:-மனம்; தாத-குழந்தாய், குரு-நிறைவேற்ற வேண்டும்; கர்மாணி—விதிக்கப்பட்ட கடமைகளை; மத்-பர:- என்னுடைய செயலின் பொருட்டு.

ஈமக் கிரியைகளை நிறைவேற்றிய பிறகு, உன் தந்தையின் இராஜ்யப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள். நீ சிம்மாசனத்தில் அமர்ந்து பௌதிக செயல்களால் கலக்கமடையாமல், எப்பொழுதும் உன் மனதை என்னிடம் நிலைத்திருக்கச் செய்வாயாக. வேதவிதிகளை மீறாமல், சம்பிரதாயத்தை முன்னிட்டு உன்னுடைய குறிப்பிட்ட கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.

பதம் 7.10.24
ஸ்ரீ-நாரத உவாச
ப்ரஹ்ராதோ ‘பி ததா சக்ரே பிதுர் யத் ஸாம்பராயிகம்
யதாஹ பகவான் ராஜன் அபிஷிக்தோ த்விஜாதிபி:

ஸ்ரீ – நாரத: உவாச நாரத முனி கூறினார்; ப்ரஹ்ராத:-பிரகலாதர்; அபி—கூட; ததா—அவ்வாறு; சக்ரே-நிறைவேற்றினார்; பிது: தன் தந்தையின்; யத்—அனைத்தையும்; ஸாம்பிராயிகம்-மரணத்திற்குப் பிறகு செய்யப்பட வேண்டிய ஈமக் கிரியைகள்; யதா—அப்படியே; ஆஹ்-உத்தரவை; பகவான்- பரமபுருஷரின்; ராஜன்-யுதிஷ்டிர மகாராஜனே; அபிஷித்த:- இராஜ்யத்தின் அரியாசனத்தில் அவர் அமர்த்தப்பட்டார்;த்விஜாதிபி:- அங்கிருந்த பிராமணர்களால்.

ஸ்ரீ நாரதமுனி தொடர்ந்து கூறினார்: இவ்விதமாக பிரகலாதர் பரமபுருஷரின் உத்தரவுப்படியே தன் தந்தையின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றினார். யுதிஷ்டிர மகாராஜனே, பிறகு அவர் பிராமணர்களின் வழிகாட்டலுக்கேற்ப, இரண்யகசிபுவின் இராஜ்யத்தின் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டார்.

பதம் 7.10.25
ப்ரஸாத-ஸுமுகம் த்ருஷ்ட்வா ப்ரஹ்மா நரஹரிம் ஹரிம்
ஸ்துத்வா வாக்பி: பவித்ராபி: ப்ராஹ தேவாதிபிர் வ்ருத:

ப்ரஸாத—ஸுமுகம்— பகவானுடைய மகிழ்ச்சியைக் கண்டு முகம் மலர்ந்த; த்ருஷ்ட்வா— இச் சூழ்நிலையைக் கண்டு; ப்ரஹ்மா- பிரம்மதேவர்; நர-ஹரிம் -பகவான் நரசிம்ம தேவருக்கு; ஹரிம் பரமபுருஷராகிய; ஸ்துத்வா ஸ்தோத்திரம் செய்தார்; வாக்பி:- உன்னதமான வார்த்தைகளால்; பவித்ராபி:-எவ்வித மாசும் இல்லாமல்; ப்ராஹ—(பகவானிடம்) கூறினார்; தேவ-ஆதிபி:-பிற தேவர்களால்; வ்ருத:- சூழப்பட்டபடி.

பிற தேவர்களால் சூழப்பட்டிருந்த பிரம்மதேவர், பகவான் மகிழ்ச்சியடைந்ததைக் கண்டு முகம் மலர்ந்தார். இவ்வாறாக அவர் உன்னதமான வார்த்தைகளால் பகவானுக்கு ஸ்தோத்திரம் செய்யலானார்.

பதம் 7.10.26
ஸ்ரீ-ப்ரஹ்மோவாச
தேவ-தேவாகிலாத்ய பூத-பாவன பூர்வஜ
திஷ்ட்யா தே நிஹத: பாபோ லோக-ஸந்தாபனோ ‘ஸூர;

ஸ்ரீ – ப்ரஹ்மா உவாச-பிரம்மதேவர் கூறினர்; தேவ – தேவ- தேவர்களின் இறைவனாகிய பரமபுருஷரே; அகில—அத்யக்ஷ- முழு பிரபஞ்சத்திற்கும் உரிமையாளரே; பூத-பாவன—எல்லா ஜீவராசிகளுக்கும் காரணமாகவரே; பூர்வ-து-ஆதிபுருஷரே! திஷ்ட்யா – உங்களுடைய உதாரணத்தினால் அல்லது எங்களுடைய நல்லதிர்ஷ்டத்தின் காரணத்தால், தே-உங்களால்: நிஹத: கொல்லப்பட்டான்; பாப:-மகாபாவியான; லோக—ஸந்தாபன:- முழு பிரபஞ்சத்திற்கும் தொல்லை கொடுத்த; அஸுர:—அசுரனான இரண்யகசிபு.

பிரம்மதேவர் கூறினார்: தேவர்களுக்கெல்லாம் இறைவனாகிய பரமபுருஷரே, அகில லோகங்களுக்கும் உரிமையாளரே, அனைத்து ஜீவராசிகளையும் ஆதரிப்பவரே, ஆதிபுருஷரே, எங்களுடைய நல்லதிர்ஷ்டத்தின் காரணத்தால், முழு பிரபஞ்சத்திற்கும் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த, மகாபாவியான இந்த அசுரனை இப்பொழுது தாங்கள் கொன்றுவிட்டீர்கள்.

பதம் 7.10.27
யோ ‘ஸௌ லப்த வரோ மத்தோ ந வத்யோ மம ஸ்ருஷ்டிபி:
தபோ-யோ-பலோன்னத்த: ஸமஸ்த-நிகமான் அஹன்

ய:-எவன்; அஸௌ—இவன் (இரண்யகசிபு); லப்த வர:- அசாதாரணமான வரம் கொடுக்கப்பட்டதால்; மத்த:- என்னிடமிருந்து; ந – வத்ய:- கொல்லப்படமாட்டான்; மம ஸ்ருஷ்டிபி:- என்னால் படைக்கப்பட்ட எந்த ஜீவராசியாலும்; தப:-யோக- பல- தவம், யோக சக்தி மற்றும் பலம் ஆகியவற்றினால்; உன்னத்த:—இவ்வாறு மிகவும் கர்வம் கொண்டதால்; ஸமஸ்த-எல்லா; நிகமான்- வேத விதிகளையும்; அஹல்-அலட்சியப்படுத்தினான், மீறினான்.

அசுரனான இந்த இரண்யகசிபு, என்னுடைய சிருஷ்டியிலுள்ள எந்த ஜீவராசியாலும் கொல்லப்பட மாட்டான் என்ற வரத்தை என்னிடமிருந்து பெற்றான். இந்த தன்னம்பிக்கையினாலும், தவ வலிமையினாலும் அவன் அளவுக்கதிகமாக கர்வம் கொண்டு வேத விதிகளையெல்லாம் மீறினான்.

பதம் 7.10.28
திஷ்ட்யா தத் தனயோ: ஸாதுர் மஹா-பாகவதோ ‘ர்பக:
த்வயா விமோசிதோ ம்ருத்யோர் திஷ்ட்யா த்வாம் ஸமிதோ ‘துனா

திஷ்ட்யா-அதிர்ஷ்டவசமாக; தத்-தனய:-இவனுடைய மகன்; ஸாது:-மிகச்சிறந்த சாதுவும்; மஹா-பாகவத:-பரம் பக்தருமாகிய; அர்பக:-சிறுவனாக இருந்ததும்; த்வயா-பிரபுவாகிய உங்களால்; விமோசித:-விடுவிக்கப்பட்டான்; ம்ருத்யோ:-மரணத்தின் பிடியி லிருந்து; திஷ்ட்யா மீண்டும் பேரதிர்ஷ்டத்தினால்; தீவாம் ஸமித- உங்களுடைய பூரண பாதுகாப்பில்; அதுனா—இப்பொழுது.

பேரதிர்ஷ்டத்தினால், இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் இப்பொழுது மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஏனெனில், இவன் ஒரு சிறுவனாக இருந்த போதிலும், பரம பக்தனாவான். இவன் இப்பொழுது பூரணமாக உங்களுடைய தாமரைப் பாதங்களின் பாதுகாப்பின் கீழ் உள்ளான்.

பதம் 7.10.29
எதத் வபுஸ் தே பகவான் த்யாயத: பரமாத்மன:
ஸர்வதோ கோப்த்ரு ஸந்த்ராஸான் ம்ருத்யோர் அபி ஜிகாம்ஸத:

ஏதத் – இந்த: வபு:-உடலை; தே-உங்களுடைய; பகவன்- பரமபுருஷரே; த்யாயத:- தியானிப்பவர்கள்; பரம-ஆத்மன:- பரம ஆத்மாவின்; ஸர்வத:-எல்லா இடங்களிலிருந்தும்; கோப்த்ரு- காப்பவர்: ஸந்த்ராஸாத்- எல்லா வகையான பயத்திலிருந்தும்; ம்ருத்யோ: அபி -மரண பயத்திலிருந்து கூட; ஜிகாம்ஸத:- ஒருவன் ஓர் எதிரியால் பகைமை பாராட்டப்படுவானாயின்.

எம்பெருமானே, பரமபுருஷரே, நீங்கள் பரமாத்மா. உங்களுடைய திவ்ய ரூபத்தை ஒருவன் தியானிப்பானாயின், இயற்கையாகவே நீங்கள் எல்லா வகையான பயத்திலிருந்தும், நெருங்கிவிட்ட மரண பயத்திலிருந்தும் அவனைக் காப்பாற்றுகிறீர்கள்.

பதம் 7.10.30
ஸ்ரீ-பகவான் உவாச
மைவம் விபோ ‘ஸுராணாம் தே ப்ரதேய: பத்ம-ஸம்பவ
வர: க்ரூர-நிஸர்காணாம் அஹீனாம் அம்ருதம் யதா

ஸ்ரீ – பகவான் உவாச—(பிரம்மாவிற்கு) பரமபுருஷர் பதிலளித்தார்; மா-கூடாது; ஏவம்—இவ்வாறு; விபோ-சிறப்புடையவரே; அஸுராணாம்—அசுரர்களுக்கு; தே-உம்மால்: ப்ரதேய:-வரம் அளிக்கப்படுவது; பத்மஸம்பவ—தாமரையில் பிறந்த பிரம்ம தேவரே, வர: வரம்; க்ரூர-திஸர்காணாம் இயற்கையாகவே கொடியவர்களுக்கும், பொறாமை கொண்டவர்களுக்கும்; அஹீனாம்- பாம்புகளுக்கு: அம்ருதம்—அமிர்தம் அல்லது பால்; யதா—போல்.

பரமபுருஷர் பதிலளித்தார்: பிரம்மதேவரே, தாமரையில் பிறந்த சிறப்புடையவரே, எப்படி பாம்புக்குப் பால் வார்ப்பது ஆபத்தானதோ, அப்படியே இயற்கையாகவே கொடியவர்களும், பொறாமை கொண்டவர்களுமான அசுரர்களுக்கு வரம் கொடுப்பதும் ஆபத்தானதாகும். மீண்டும் இத்தகைய வரங்களை வேறெந்த அசுரனுக்கும் நீர் கொடுக்கக் கூடாதென்று நான் எச்சரிக்கிறேன்.

பதம் 7.10.31
ஸ்ரீ-நாரத உவாச
இதி உக்த்வா பகவான் ராஜம்ஸ் ததஸ் சாந்தர்ததே ஹரி:
அத்ருஸ்ய: ஸர்வ-பூதானாம் பூஜித: பரமேஷ்டினா

ஸ்ரீ நாரத: உவாச-நாரத முனி கூறினார்; இதி உக்த்வா-இவ்வாறு கூறிவிட்டு: பகவான்- பரமபுருஷர்; ராஜன் புதிஷ்டிர மகாராஜனே! தத:— அங்கிருந்து; சகூட; அந்தர்ததே மறைந்து போனார்; ஹரி:- பகவான் ஸ்ரீ ஹரி; அத்ருஸ்ய:-காணாமல்; ஸர்வ பூதானாம் எல்லா வகையான ஜீவராசிகளாலும்; பூஜித:-பூஜிக்கப்பட்டு; பரமேஷ்டினா- பிரம்ம தேவராலும்.

நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: யுதிஷ்டிர மகாராஜனே, சாதாரண மனிதனுக்குப் புலப்படாதவரான பரமபுருஷர் பிரம்ம தேவருக்கு இவ்வாறு உபதேசித்தார். பிறகு பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட பகவான் அங்கிருந்து மறைந்தருளினார்.

பதம் 7.10.32
தத: ஸம்பூஜ்ய சிரஸா வவந்தே பரமேஷ்டினம்
பவம் ப்ரஜாபதீன் தேவான் ப்ரஹ்ராதோ பகவத்-கலா:

தத:-அதன்பிறகு; ஸம்பூஜ்யபூஜித்து; சிரஸா சிரம் தாழ்த்தி: வவந்தே வந்தனம் செய்தார்; பரமேஷ்டினம்- பிரம்மதேவருக்கும்; பவம்- சிவபெருமானுக்கும்; ப்ரஜாபதீன்— ஜனத்தொகையைப் பெருக்கும் பணி ஒப்படைக்கப்பட்ட சிறந்த தேவர்களுக்கும்; தேவான்- மற்றெல்லா சிறந்த தேவர்களுக்கும்; ப்ரஹ்ராத:- பிரகலாதர்; பகவத் — கலா:- பகவானுடைய முக்கிய பகுதிகளான,

பிரகலாத மகாராஜன் பிறகு, பகவானுடைய பகுதிகளான பிரம்மா, சிவன், பிரஜாபதிகள் முதலான எல்லாத் தேவர்களையும் பூஜித்து வந்தனம் செய்தார்.

பதம் 7.10.33
தத: காவ்யாதிபி: ஸார்தம் முனிபி: கமலாஸன:
தைத்யானாம் தானவானாம் ச ப்ரஹ்ராதம் அகரோத் பதிம்

தத:-அதன்பிறகு; காவ்ய-ஆதிபி:- சுக்ராசாரியருடனும் மற்றவர் கருடனும்; ஸார்தம்-கூடி; முனிபி: சிறந்த முனிவர்களுடனும்; கமல்-ஆஸன:-பிரம்ம தேவர்; தைத்யானாம்—எல்லா அசுரர்களுக்கும்;தானாவானாம்- தானவர்களுக்கும் (அரக்கர்கள்); ச-மற்றும்; ப்ரஹ் ராதம்-பிரகலாத மகாராஜனை; அகரோத்— ஆக்கினார்; பதிம் – எஜமானர் அல்லது அரசர்.

அதன்பிறகு, தாமரைப் பூவைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரம்மதேவர், சுக்ராசாரியர் முதலான முனிவர்களுடன் கூட, பிரபஞ்சத்திலுள்ள எல்லா அசுரர்களுக்கும், தானவர்களுக்கும் பிரகலாத மகாராஜனை அரசராக்கினார்.

பதம் 7.10.34
ப்ரதிநந்ய ததோ தேவா: ப்ரயுஜ்ய பரமாசிஷ:
ஸ்வ-தாமானி யயூ ராஜன் ப்ரஹ்மாத்யா: ப்ரதிபூஜிதா

ப்ரதிநந்ய – பாராட்டி; தத-பிறகு; தேவா:-எல்லாத் தேவர்களும்; ப்ரயுஜ்ய-கொடுத்துவிட்டு; பரம-ஆசிஷ:-உயர்ந்த வரங்களை; ஸ்வ -தாமானி அவரவர் இருப்பிடங்களுக்கு; யயு:-திரும்பிச் சென்றனர்; ராஜன்-புதிஷ்டிர மகாராஜனே; ப்ரஹ்ம- ஆதயா:-பிரம்மா முதலான எல்லா தேவர்களும்; ப்ரதிபூஜிதா:(பிரகலாதரால்) நன்கு பூஜிக்கப்பட்ட பிறகு.

யுதிஷ்டிர மகாராஜனே, பிரம்மதேவர் முதலான எல்லாத் தேவர்களும் பிரகலாத மகாராஜனால் முறையாக பூஜிக்கப்பட்டபின், பிரகலாதருக்கு மிக உயர்ந்த வரங்களைக் கொடுத்துவிட்டு அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.

பதம் 7.10.35
ஏவம் ச பார்ஷதெள விஷ்ணோ: புத்ரத்வம் ப்ரபிதௌ திதே:
ஹ்ருதி ஸ்திதேன ஹரிணா வைர-பாவேன தௌ ஹதெள

ஏவம் – இவ்வாறாக; ச-கூட: பார்ஷதௌ-இரு அந்தரங்க சகாக்கள்; விஷ்ணோ: பகவான் விஷ்ணுவின்; பத்ரத்வம்—மகன்களாகி; ப்ராபிதௌ-பெற்றபிறகு: திதே: திதியின்; ஹ்ருதி-இதயத்தினுன்; ஸ்திதேன— இருப்பதால்; ஹரினா- பரமபுருஷரால்; வைர- பாவேன- ஓர் எதிரியாகக் கருதியதன் மூலம்; தௌ- அவ்விருவரும்; ஹதௌ- கொல்லப்பட்டனர்.

இவ்வாறாக இரண்யாக்ஷம் மற்றும் இரண்யகசிபு என்ற திதியின் மகன்களாகப் பிறந்திருந்த பகவான் விஷ்ணுவின் இரு சகாக்களும் கொல்லப்பட்டனர். அறியாமையினால், எல்லோருடைய இதயங்களிலும் இருப்பவரான பரமபுருஷரைத் தங்களுடைய எதிரியாக அவர்கள் நினைத்திருந்தனர்.

பதம் 7.10.36
புனஸ் ச விப்ர-சாபேன ராக்ஷஸெள தௌ பபூவது:
கும்பகர்ண-தச-க்ரீவௌ ஹதௌ தௌ ராம-விக்ரமை:

புன:-மீண்டும்; கூகூட: விப்ர-சாபேன பிராமணர்களால் சபிக்கப்பட்டு; ராக்ஷஸௌ-இரு இராட்சஸர்களான; தௌ— அவ்விரு வரும்; பபூவது:-பிறந்தனர்; கும்பகர்ண—தச க்ரீவௌ—(அவர்களது அடுத்த பிறப்பில்) குமர்பகர்ணன் மற்றும் பத்துத் தலை இராவணன் என்ற; ஹதௌ-அவ்விருவரும்; ராம-விக்ரமை:-பகவான் ராமச் சந்திரரின் அசாதாரணமான சக்தியால்.

அதே இரு சகாக்களும் பிராமணர்களால் சபிக்கப்பட்டு மீண்டும் கும்பகர்ணனாகவும், பத்துத்தலை இராவணனாகவும் பிறந்தனர். இவ்விரு இராட்சஸர்களும் பகவான் ராமச்சந்திரரின் அசாதாரணமான சக்தியால் கொல்லப்பட்டனர்.

பதம் 7.10.37
சயானௌ யுதி நிர்பின்ன- ஹ்ருதயௌ ராம-சாயகை:
தத்-சித்தௌ ஜஹதுர் தேஹம் யதா ப்ராக்தன-ஜன்மனி

சயானௌ-கீழே கிடந்து; யுதி—த்தகளத்தில்; நிர்பின்ன— துளைக்கப்பட்டு; ஹ்ருதயௌ— இதயத்தில்; ராம- சாயகை:-பகவான் ராமச் சந்திரரின் அம்புகளால்; தத்-சித்தௌ பகவான் ராமச்சந்திரரின் நினைவுடன்; ஐஹது :- விட்டனர்; தேஹம்-உடலை; யதா- என்றிருக்கும் பொழுது கூட; ப்ராக்தன—ஜன்மனி—அவர்களது முற்பிறவிகளில்.

கும்பகர்ணன், இராவணன் ஆகிய இருவரும் இரண்யாக்ஷன், இரண் யகசிபு என்ற தங்களுடைய முற்பிறவிகளில் செய்தது போலவே, இப்பிறவியிலும் பகவான் ராமச்சந்திரரின் அம்புகளால் துளைக்கப்பட்டு, பகவானின் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்தபடி தரையில் விழுந்து தங்களுடைய உடல்களை விட்டனர்.

பதம் 7.10.38
தாவ் இஹாத புனர் ஜாதௌ சிசுபால- கரூஷ-ஜௌ
ஹரௌ வைரானுபந்தேன பஸ்யதஸ் தே ஸமீயது:

தௌ-அவ்விருவரும்: இஹ-இந்த மனித சமுதாயத்தில்; அத-இவ்விதமாக: புன:-மீண்டும்; ஜாதௌ— பிறவியெடுத்தனர்; சிசுபால- சிசுபாலனாகவும்; கரூஷ-ஜௌ-தந்தவக்ரனாகவும்; ஹரௌ -பரமபுருஷரிடம்; வைர-அனுபந்தேன—பகவானை ஓர் எதிரியாகக் கருதும் பந்தத்தினால்; பஸ்யத: பார்த்துக் கொண்டிக்கும் போதே; தே-நீர்; ஸமீயது:-ஐக்கியமாயினர் அல்லது பகவானுடைய தாமரைப் பாதங்களுக்குள் சென்றனர்.

அவர்கள் மீண்டும் சிசுபாலனாகவும், தந்தவக்ரனாகவும் மனித சமுதாயத்தில் பிறவியெடுத்து பகவானிடம் தங்களுடைய அதே விரோதத்தைத் தொடர்ந்தனர். உன் முன்னிலையில் பகவானுடைய உடலுக்குள் ஐக்கியமானவர்கள் அவர்களேதான்.

பதம் 7.10.39
ஏன: பூர்வ-க்ருதம் யத் தத் ராஜான: க்ருஷ்ண-வைரிண:
ஜஹுஸ் தே `ந்தே தத்-ஆத்மான: கீட: பேசஸ்க்ருதோ யதா

ஏன:—(பகவானை நிந்தித்து) இப்பாவச் செயல்; பூர்வ-க்ருதம்- முற்பிறளிகளில் செய்யப்பட்ட; யத்–எது; தத்-அந்த; ராஜான:- அரசர்கள்; க்ருஷ்ண வைரிண: எப்பொழுதும் கிருஷ்ணரின் எதிரி களாக செயற்பட்டு: ஜஹு-விட்டனர்; தே—அவை: அந்தே- மரணத்தின்போது; தத்-ஆத்மான- அதே ஆன்மீக உடலையும், ரூபத்தையும் பெற்று; கீட:-ஒரு புழு: பேசஸ்க்ருத:-கருப்பு ஆண் தேனீயினால் (பிடிக்கப்பட்ட); யதா-போலவே.

சிசுபாலனும், தந்தவக்ரனும் மட்டுமின்றி வேறு பல அரசர்கள் கூட கிருஷ்ணரின் பகைவர்களாகச் செயற்பட்டு மரணத்தின்போது முக்தியடைந்தனர். கருநிற ஆண் தேனீயினால் பிடிக்கப்பட்ட புழுக்கள் அத்தேனீக்களைப் போன்ற அதே வகையான உடலைப் பெறுகின்றன. அதுபோலவே அவர்கள் பகவானைப் பற்றி நினைத்ததால் ஆன்மீக உடல்களைப் பெற்றனர்.

பதம் 7.10.40
யதா யதா பகவதோ பக்த்யா பரமயாபிதா
ந்ருபாஸ் சைத்யாதய: ஸாத்ம்யம் ஹரேஸ் தச்-சிந்தயா யயு:

யதா யதா-எப்படி: பகவத:–பரமபுருஷரின்; பக்த்யா-பக்தித் தொண்டினால்; பரமயா-பரமான; அபிதா—அத்தகைய செயல்களை இடையறாது நினைத்துக் கொண்டிருந்த; ந்ருபா-அரசர்கள்; சைத்ய- ஆதய:-சிசுபாலன், தந்தவக்ரன் முதலானவர்கள்; ஸாத்ம்யம்—அதே ரூபத்தை; ஹரே:-பரமபுருஷரின்; தத் சிந்தயா—அவரைப் பற்றி இடையறாது நினைத்ததன் மூலம் ; யயு:-பரமபதம் அடைந்தனர்.

பக்தித்தொண்டில் பரமபுருஷரைப் பற்றியே இடையறாது நினைத்துக் கொண்டிருக்கும் தூய பக்தர்கள் அவருடையதைப் போன்ற உடல்களைப் பெறுகின்றனர். இது ஸாரூப்ய-முக்தி எனப்படுகிறது. சிசுபாலன், தந்தவக்ரன் முதலான அரசர்கள் கிருஷ்ணரைத் தங்களுடைய பகைவராக நினைத்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களும் அதே பலனையே அடைந்தனர்.

பதம் 7.10.41
ஆக்யாதம் ஸர்வம் ஏதத் தே யன் மாம் த்வாம் பரிப்ருஷ்டவான்
தமகோஷ-ஸுதாதீனாம் ஹரே: ஸாத்ம்யம் அபி த்விஷாம்

ஆக்யாதம்-விவரித்தேன்; ஸர்வம்- அனைத்தையும்; ஏதத்- இந்த; தே-உமக்கு; யத் எதையெல்லாம்; மாம்-என்னிடம்: தீவம்- நீர்; பரிப்ருஷ்டவான்- கேட்டீரோ; தமகோஷு ஸுத ஆதீனாம்— தமகோஷ புத்திரனின் (சிசுபாலனின்) மற்றும் பிரரின்; ஹரே- பகவானுடைய; ஸாத்ம்யம் சமமான தேக அம்சங்கள்; அபி-கூட; த்விஷாம்-பகைமை கொண்டவர்களாக இருந்த போதிலும்.

சிசுபாலனும், மற்றவர்களும் பகைமை கொண்டவர்களாக இருந்த போதிலும், அவர்களால் எவ்வாறு முக்தியடைய முடிந்தது என்பதைப் பற்றி உம்மால் கேட்கப்பட்ட அனைத்திற்கும் என்னால் இப்பொழுது விளக்கம் அளிக்கப்பட்டது.

பதம் 7.10.42
ஏஷா ப்ரஹ்மண்ய-தேவஸ்ய க்ருஷ்ணஸ்ய ச மஹாத்மன:
அவதார-கதா புண்யா வதோ யத்ராதி-தைத்யயோ:

ஏஷா-இதெல்லாம்; ப்ரஹ்மண்ய-தேவஸ்ய எல்லா பிராமணர்களாலும் பூஜிக்கப்படும் பரமபுருஷரின்; க்ருஷ்ணஸ்ய -மூல முழுமுதற் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின்; ச-கூட; மஹா-ஆத்மன:- பரமாத்மா; அவதார கதா—அவரது அவதாரங்களைப் பற்றிய வர்ண னைகள்: புண்யா-புண்ணியமான, புனிதப்படுத்தும்; வத: வதம்; யத்ர எங்கு: ஆதி-யுகத்தின் ஆரம்பத்தில்; தைத்யோ-அசுரர்களின் (இரண்யாக்ஷன் மற்றும் இரண்யகசிபு).

பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய இந்த வர்ணனையில் பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றி அல்லது அம்சங்களைப் பற்றி விவரிக்கப்பட்டது. மேலும் இரண்யாக்ஷன், இரண்யகசிபு என்ற இரு அசுரர்கள் கொல்லப்பட்ட வரலாறும் விவரிக்கப்பட்டது.

பதங்கள் 7.10.43 – 7.10.44
ப்ரஹ்ராதஸ்யானுசரிதம் மஹா-பாகவதஸ்ய ச
பக்திர் ஞானம் விரக்திஸ் ச யாதார்த்யம் சாஸ்ய வை ஹரே:

ஸர்க-ஸ்திதி-அப்யயேசஸ்ய குண-கர்மானுவர்ணனம்
பராவரேஷாம் ஸ்தானானாம் காலேன வ்யத்யதோ மஹான்

ப்ரஹ்ராதஸ்ய-பிரகலாதரின்; அனுசரிதம்—(அவரது செயல்களைப் படிப்பதால் அல்லது விவரிப்பதால் அறியப்படும்) குணாதிசயங் களையும்; மஹா-பாகவதஸ்ய-மிகச்சிறந்த பரம பக்தரின்; ச-கூட; பக்தி: -பரமபுருஷருக்குச் செய்த பக்தித் தொண்டையும்; ஞானம்— பரப்பிரம்மனின் (பிரம்மன், பரமாத்மா மற்றும் பகவான்) பூரண அறிவையும்; விரக்தி:-பௌதிக வாழ்வின் துறவையும்; கூ கூட; யாதார்த்யம்—அவை ஒவ்வொன்றையும் பூரணமாகப் புரிந்து கொள் வதற்காகவே; ச-மேலும்; அஸ்ய—இதன்; வை— உண்மையில்; ஹரே:- எப்பொழுதும் பரமபுருஷரின் தொடர்பாகவே; ஸர்க படைத்தல்; ஸ்திதி காத்தல்; அப்பய மற்றும் அழித்தலின்; ஈசஸ்ய- எஜமானருடைய (பகவானுடைய); குண—உன்னத குணங்களை மற்றும் ஐசுவரியங்களின்; கர்ம மற்றும் செயல்களின்; *அனுவர்ணனம் —அப்பரம்பரைக்கு உட்பட்ட வர்ணனை;- பர—அவரேஷாம் தேவர்கள் என்றும் அசுரர்கள் என்றும் அறியப்படும் வெவ்வேறு வகையான ஜீவராசிகளின்; ஸ்தானானாம்-பல்வேறு கிரகங்களின் அல்லது வசிப்பிடங்களின்; காலேன-காலப்போக்கில்; வ்யத்யய:- அனைத்தும் அழிக்கப்பட்டு விடுகின்றன; மஹான்-மிகப் பெரியவை என்ற போதிலும்.
(*அனு என்றால், “பின்னர்” என்று பொருள், வேத வல்லுனர்கள் எதையும் புதிதாக உருவாக்குவதில்லை. மாறாக, முந்திய ஆச்சாரியர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர்.)

இந்த வர்ணனை, மிகச்சிறந்த பரம பக்தராகிய பிரகலாத மகாராஜனின் குணாதிசயங்களையும், நிலையான அவரது பக்தித் தொண்டையும், அவரது பக்குவமான அறிவையும், பக்குவமான அவரது பௌதிக துறவையும் விவரிக்கிறது. பரமபுருஷரே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றிற்குக் காரணம் என்பதையும் இது விவரிக்கிறது. பிரகலாத மகாராஜன் அவரது ஸ்தோஸ்த்திரத்தில் பகவானுடைய திவ்யமான குணங்களை விவரித்துள்ளார். தேவர்கள் மற்றும் அசுரர்களின் பல்வேறு இருப்பிடங்கள் எவ்வளவு செல்வச் செழிப்பு மிக்கவையாக இருப்பினும், அவை பகவானின் உத்தரவினாலேயே அழிக்கப்பட்டு விடுகின்றன என்பதையும் பிரகலாதர் விவரித்துள்ளார்

பதம் 7.10.45
தர்மோ பாகவதானாம் ச பகவான் யேன கம்யதே
ஆக்யானே ‘ஸ்மின் ஸமாம்னதாம் ஆத்யாத்மிகம் அசேஷத:

தர்ம: சமயக் கோட்பாடுகள்; பாகவதானாம்-பக்தர்களின்; மேலும்; பகவான் பரமபுருஷர்; யேன எதனால்; கம்யதே- ஒருவனால் அறிய முடியுமோ; ஆக்யானே-வர்ணனையில்: அஸ்மின்- இந்த: ஸமாம்னாதம்-பூரணமாக விவரிக்கப்படுகிறார்; ஆத்யாத்மிகம் -பரப்பிரம்மன்: அசேத: எந்த ஆட்சேபனையுமின்றி.

எதனால் பரமபுருஷரை உள்ளபடி அறியமுடியுமோ அந்த சமயக் கோட்பாடுகள் பாகவத-தர்மம் என்று அழைக்கப்படுகின்றன. ஆகவே, இக்கோட்பாடுகளைப் பற்றியதான இந்த வர்ணனையில், உண்மையான பரமன் (பரப்பிரம்மன்) முறையாக விவரிக்கப்படுகிறார்.

பதம் 7.10.46
ய ஏதத் புண்யம் ஆக்யானம் விஷ்ணோர் வீர்யோபப்ரும்ஹிதம்
கீர்த்தயேச் ச்ரத்தஸ்யா ஸ்ருத்வா கர்ம-பாசைர் விமுச்யதே

ய:-எவனொருவன்; ஏதத்-இந்த; புண்யம்-புண்ணியமான; ஆக் யானம்—வர்ணனையை; விஷ்ணோ:-பகவான் விஷ்ணுவின்; வீர்ய- சர்வ வல்லமை; உபப்ரும்ஹிதம் எதில் விவரிக்கப் பட்டுள்ளனவோ; கீர்த்தயேத்-கூறுகிறானோ; ஸ்ரத்தயா சிரத்தையுடன்; ஸ்ருத்வா- (சரியான மூலத்திலிருந்து) முறையாகக் கேட்டபின்; கர்ம பாசை:- கர்ம பந்தத்திலிருந்து; விமுச்யதே – விடுபடுகிறான்.

பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவின் சர்வ வல்லமையைப் பற்றிய இந்த வர்ணனையைக் கேட்பவனும் சொல்பவனும் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவான் என்பது நிச்சயம்.

பதம் 7.10.47
ஏதத் ய ஆதி-புருஷஸ்ய ம்ருகேந்ர-லீலாம்
தைத்யேந்ர-யூத-ப-வதம் ப்ரயத: படேத
தைத்யாத்மஜஸ்ய ச ஸதாம் ப்ரவரஸ்ய புண்யம்
ஸ்ருத்வானுபாவம் அகுதோ-பயம் ஏதி லோகம்

ஏதத்—இந்த வர்ணனையை எவனொருவன்; ஆதி புருஷயை ஆதி புருஷரின்; மிகுக இந்த லீலாம் சிங்கமும் மனிதனும் இணைந்த லீலைகளை; தைத்ய இந்த அகர ராஜனின் யூத ஒரு யானை போல் பலமுள்ள; வதம்வதம்; ப்ரயத மிகுந்த கவனத்துடன்; படேத-படிக்கிறானோ தைத்ய- ஆத்த தஸ்ய- அசுர குமாரரான பிரகலாத மகாராஜனின்; சகூட தாம் மிகச் சிறந்த பக்தர்களுக்கிடையில் ப்ரவரஸ்யமேன்மை மிக்கவராவார்; புண்யம்- புண்ணியமான; ஸ்ருத்வா-கேட்டு; அனுபாவம்–செயல்களை;அருத: பயம் எங்கு எச்சமயத்திலும் எவ்வித பயம் இல்லையோ: ஏதி- அடைகிறான்; லோகம்- அந்த ஆன்மீக உலகை.

பிரகலாத மகாராஜன் மிகச் சிறந்த பக்தர்களுக்கிடையிலும் மேன்மை மிக்கவராக விளங்கினார். எவனொருவன் பிரகலாத மகாராஜனின் செயல்கள், இரண்யகசிபுவின் வதம், பரமபுருஷராகிய நரசிம்மதேவரின் செயல்கள் ஆகியவற்றைப் பற்றிய இந்த வர்ணனையை மிகுந்த கவனத்துடன் கேட்கிறானோ, அவன் கவலையே இல்லாத ஆன்மீக உலகை அடைவது நிச்சயம்.

பதம் 7.10.48
யூயம் ந்ரு-லோகே பத பூரி-பாகா
லோகம் புனானா முனயோ ‘பியந்தி
யேஷாம் க்ருஹான் ஆவஸதீதி ஸாக்ஷாத்
கூடம் பரம் ப்ரஹ்ம மனுஷ்ய- லிங்கம்

யூயம்—நீங்களல்லாவ (பாண்டவர்கள்); ந்ரு-லோகே—இந்த ஜட உலகில்; பத – ஆனால் பூரி-பாகா:-மகா பாக்கியசாலிகள்; லோகம் அனைத்து லோகங்களையும்: புனானா: புனிதப்படுத்தக்கூடிய; முனய:-சிறந்த முனிவர்கள்; அபியந்தி எப்பொழுதும் வந்து போகிறார். களோ; யேஷாம்-யாருடைய; க்குஹான்- வீட்டிற்கு; ஆவஸதி- வசிக்கிறார்; இதி-என்று; ஸாக்ஷக்ஷ்ரத்- நேரிடையாக; கூடம் மிகவும் இரகசியமாக பரம்ப்ரஹ்ம- பரமபுருஷர்; மனுஷ்ய- லிங்கம்- ஒரு மனிதனைப் போலவே தோன்றி.

நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: யுதிஷ்டிர மகாராஜனே, பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரே மனித உருவில் உங்களுடைய அரண்மனையில் வசிப்பதில் நீங்கள் (பாண்டவர்கள்) மகா பாக்கியசாலிகள். சிறந்த முனிவர்கள் இதை நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகின்றனர்.

பதம் 7.10.49
ஸ வா அயம் ப்ரஹ்ம மஹத்-விம்ருக்ய-
கைவல்ய-நிர்வாண-சுகானுபூதி:
ப்ரிய: ஸுஹ்த் வ: கலு மாதுலேய
ஆத்மார்ஹணீயோ விதி-க்ருக் குருஸ் ச

ஸ: அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்) வா-கூட; அயம்-இந்த; ப்ரஹ்ம- (கிருஷ்ணரிலிருந்து வெளிப்பட்ட) அருவ பிரம்ம: மஹத்- சிறந்த முனிவர்களால்; விம்ருக்ய-தேடப்படும்; கைவல்ய-ஒருமைப் பாடு என்ற; நிர்வாணக-உன்னத ஆனந்தத்திற்கு: அனுபூதி: அனுபவப்பூர்வமான ஆதாரமாகும்; ப்ரிய:-மிகமிகப் பிரியமான; ஸூஹ்ருத்-நலம் விரும்பி; வ:-உங்களுடைய; கலு-உண்மையில்; மாதுலேய:- தாய்மாமன் மகனை; ஆத்மாஉடலும், ஆத்மாவும் இணைந்தது போலவே; அர்ஹணீய:-(அவர் பரமபுருஷர் என்பதால்) வழிபாட்டுக்குரியவர்; விதி க்ருத்(என்றாலும்) ஒரு சேவகர் (போன்று. உங்களுக்கு சேவை செய்கிறார்); குரு:-உங்களுடைய மேலான ஆலோசகர்; ச-கூட.

அருவ பிரம்மமும் ஸ்ரீ கிருஷ்ணரேயாகும். ஏனெனில் கிருஷ்ணரே அருவ பிரம்மத்திற்குப் பிறப்பிடமாவார். அவரே சிறந்த முனிவர்களால் நாடிச் செல்லப்படும் உன்னத ஆனந்தத்திற்கு மூலம். இருப்பினும் பரமபுருஷராகிய அவர் உங்களுடைய மிகப் பிரியமான நண்பராகவும், எப்பொழுதும் உங்களுடைய நலம் விரும்பியாகவும், உங்களுடைய தாய்மாமனின் மகன் என்ற நெருங்கிய உறவினராகவும் இருக்கிறார். உண்மையில் அவர் எப்பொழுதும் உங்களுடைய உடலும் உயிரும் போலாவார். அவர் வழிபாட்டுக்குரியவராக இருந்தும், உங்களுடைய சேவகராகவும், சிலசமயங்களில் உங்களுடைய ஆன்மீக குருவாகவும் செயற்படுகிறார்.

பதம் 7.10.50
ந யஸ்ய ஸாக்ஷாத் பவ-பத்மஜாதிபீ ரூபம்
தியா வஸ்துதயோபவர்ணிதம்
மௌனேன பக்த்யோபசமேன பூஜித:
ப்ரஸீததாம் ஏஷ ஸ ஸாத்வதாம் பதி:

ந – இல்லை; யஸ்ய-யாருடைய; ஸாக்ஷாத்—நேரிடையாக; பவ- சிவபெருமான்; பத்மஜ(தாமரையில் பிறந்த) பிரம்மதேவர்; ஆதிபி: —அவர்களாலும், பிறராலும் கூட; ரூபம்-ரூபம்; தியா-தியானத்தால்கூட; வஸ்துதயா-முக்கியமாக; உபவர்ணிதம்-விவரிக்கப்படு பவரும், பார்க்கப்படுபவருமான; மௌனேன்-சமாதியாலும்; பக்த்யா பக்தித் தொண்டினாலும்; உபசமேன-துறவினாலும்; பூஜித- பூஜிக்கப் படுபவரான; ப்ரஸீததாம்- திருப்தியடைவாராக; ஏஷ்:-இது; ஸ:- அவர்; ஸாத்வதாம்—சிறந்த பக்தர்களின்; பதி:-தலைவரான.

மேன்மைக்குரிய சிவபெருமான், பிரம்மதேவர் போன்றவர்களால் கூட பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உண்மையைச் சரிவர விவரிக்க இயலவில்லை. மௌன விரதம்,தியானம், பக்தித் தொண்டு, துறவு ஆகியவற்றை அனுஷ்டிக்கும் சிறந்த முனிவர்களால், பக்த இரட்சகராக எப்பொழுதும் பூஜிக்கப்படுபவரான அந்த பகவான் நம்மிடம் திருப்தியடைவாராக.

பதம் 7.10.51
ஸ ஏஷ பகவான் ராஜன் வ்யதனோத் விஹதம் யச:
புரா ருத்ரஸ்ய தேவஸ்ய மயேனானந்த- மாயினா

ஸ: ஏஷ: பகவான்— பரப்பிரம்மனாகிய அதே பரமபுருஷர்; ராஜன்- அரசே; வ்யதனோத் – விரிவடையச் செய்தார்; விஹதம் – அழிந்து போன; யச:-கீர்த்தியை; புரா—முன்னொரு காலத்தில்; ருத்ரஸ்ய- (தேவர்களுக்கிடையில் மிகவும் சக்திவாய்ந்தவரான) சிவபெருமானின்; தேவஸ்ய- தேவரான; மயேன-மயன் என்ற அசுரனால்; அனந்த- எல்லையற்ற; மாயினா—தொழில்நுட்ப அறிவைப் பெற்றிருந்த,

யுதிஷ்டிர மகாராஜனே, வரலாற்றில் மிக நீண்ட காலத்திற்கு முன்பு, தொழில் நுட்பத்தில் சிறந்த நிபுணனாக இருந்த மயதானவன் என்ற அசுரன் சிவபெருமானின் கீர்த்தியைக் குறைத்துவிட்டான். அந்நிலையில் பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர்தான் சிவபெருமானைக் காப்பாற்றினார்,

பதம் 7.10.52
ராஜோவாச
கஸ்மின் கர்மணி தேவஸ்ய மயோ ‘ஹஞ் ஜகத்-ஈசிது:
யதா சோபசிதா கீர்த்தி: க்ருஷ்ணேனானேன கத்யதாம்

ராஜ உவாச- யுதிஷ்டிர மகாராஜன் வினவினார்; கஸ்மின்- என்ன காரணத்திற்காக; கர்மணி— எச்செயல்களால்; தேவஸ்ய-சிவ பெருமானுடைய மய:-பெரிய அசுரனான மயதானவன்; அஹன் -அழித்தான்; ஜகத் – ஈசிது: பௌதிக சக்தியை ஆள்பவரும், துர்காதேவியின் கணவருமான சிலபெருமானின்; யதா-எப்படி; ச – மேலும்; உபசிதா – மீண்டும் விரிவடைந்ததோ; கீர்த்தி: கீர்த்தி; க்ருஷ்ணேன – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால்: அனேன – இதை ; கத்யதாம் – விவரிக்க வேண்டுகிறேன்.

யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: அசுரனான மயதானவன் என்ன காரணத்திற்காக சிவபெருமானுடைய கீர்த்தியைக் கெடுத்தான்? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி சிவபெருமானைக் காப்பாற்றி அவரது கீர்த்தியை மீண்டும் பரவச்செய்தார்? தயவு கூர்ந்து இச்சம்பவங்களை விவரிக்க வேண்டுகிறேன்.

பதம் 7.10.53
ஸ்ரீ-நாரத உவாச
நிர்ஜிதா அஸுரா தேவைர் யுதி அனேனோபப்ரும்ஹிதை:
மாயினாம் பரமாசார்யம் மயம் சரணம் ஆயயு:

ஸ்ரீ நாரத: உவாச-ஸ்ரீ நாரதமுனி கூறினார்; நிர்ஜிதா:-ஜெயிக்கப்பட்ட பொழுது; அசுரா:-எல்லா அசுரர்களும்; தேவை: -தேவர்களால்; யுதி – யுத்தத்தில்; அனேன – பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால்; உபப்ரும்ஹிதை:- சக்திபெற்று விளங்கிய; மாயினாம்—அசுரர்களுக்கெல்லாம்; பரம – ஆசார்யம் – பெரியவனும், சிறந்தவனுமான: மயம் – மய தானவனை; சரணம் – சரணம்: ஆயயு:-அடைந்தனர்.

நாரதமுனிவர் கூறினார்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால் எப்பொழுதும் சக்தி பெற்று விளங்கும் தேவர்களால் அசுரர்கள் ஜெயிக்கப்பட்ட பொழுது, அவர்கள் அசுரர்களுக்கெல்லாம் பெரிய அசுரனாக விளங்கிய மயதானவனைச் சரணடைந்தனர்.

பதங்கள் 7.10.54 – 7.10.55
ஸ நிர்மாய புரஸ் திஸ்ரோ ஹைமீ-ரௌப்யாயஸீர் விபு:
துர்லக்ஷ்யாபாய-ஸம்யோகா துர்விதர்க்ய-பரிச்சதா:

தாபிஸ் தே ‘ஸுர-ஸேனான்யோ லோகாம்ஸ் த்ரீன் சேஸ்வரான் ந்ருப ஸ்மரந்தோ நாசயாம் சக்ரு: பூர்வ-வைரம் அலக்ஷதா:

ஸ: – அவன்(மயதானவன்); நிர்மாய- நிர்மாணித்து; புர:-புரிகளை; திஸ்ர:மூன்று:ஹைமீ- தங்கத்தாலான; ரௌப்யா- வெள்ளியாலான; ஆயஸீ:- இரும்பாலான; விபு:-மிகப் பெரிய, சக்தி வாய்ந்த; துர்லக்ஷ்ய—அளவிட முடியாத; அபாயஸம்யோகா: வந்து போகும் அவற்றின் அசைவுகள்; துர்விதர்க்ய—அசாதாரணமான; பரிச்சதா:- உபகரணங்களை உடைய; தாபி:-அவற்றினால் (ஆகாய விமானங்களை ஒத்த திரிபுரங்களால்); தே—அவர்கள்; அஸுர-ஸேனா- அன்ய:-அசுர சேனாதிபதிகள்; லோகான்த்ரீன் மூவுலகங்களையும்; ஸ-ஈஸ்வரான்—அவற்றின் அதிபதிகளுடன்; ந்ருப-யுதிஷ்டிர மகாராஜனே; ஸ்மரந்த-நினைந்து; நாசயாம் சக்ரு:-அழிக்கத் துவங்கினர்; பூர்வு-பழைய; வைரம்-விரோதத்தை; அலக்ஷிதா:-யாராலும் காண முடியாதபடி.

அசுரர்களில் பெருந்தலைவனான மயதானவன் பொன்னாலும், வெள்ளியாலும், இரும்பாலும் செய்யப்பட்டதும், அசாதாரணமான உபகரணங்களை உடையதுமான, விமானங்களைப் போன்ற மூன்று பறக்கும் புரிகளை நிர்மானம் செய்து, அவற்றை அசுரர்களுக்குக் கொடுத்தான். யுதிஷ்டிர மகாராஜனே, இத்தகைய வசிப்பிடங்களைப் பெற்றதால், அசுர சேனாதிபதிகள் தேவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அசுரர்கள், பழைய விரோதத்தை நினைந்து, மேல், மத்திய, கீழ் ஆகிய மூன்று கிரக அமைப்புகளையும் நாசம் செய்யத் துவங்கினர்.

பதம் 7.10.56
ததஸ் தே ஸேஸ்வரா லோகா உபாஸாத்யேஸ்வரம் நதா:
த்ராஹி நஸ் தாவகான் தேவ வினஷ்டாம்ஸ் த்ரிபுராலயை:

தத:-அதன்பிறகு; தே-அவர்கள் (தேவர்கள்); ஸ-ஈஸ்வர- அவற்றின் அதிபதிகளுடன்; லோகா-கிரகங்களை; உபாஸாத்ய- அணுகி; ஈஸ்வரம்- சிவபெருமானை; நதா- சரணமென அடிபணிந்தனர்; த்ராஹி-காத்தருள வேண்டும்; ந – எங்களை; தாவகான் -உங்களுக்குப் பிரியமானவர்களும், அச்சமடைந்தவர்களுமான; தேவ– பெருமானே; வினஷ்டான்— அழிக்கப்படும் நிலையில் இருக்கிறோம்; த்ரிபுர-ஆலயை:— அந்த திரிபுரங்களில் வாழும் அசுரர்களால்.

அதன்பிறகு, அந்த அசுரர்கள் உயர்கிரக அமைப்புகளை அழிக்கத் துவங்கிய பொழுது, அக்கிரகங்களை ஆள்பவர்கள் சிவபெருமானிடம் சென்று அவரை முழுமையாகச் சரணடைந்து, “பெருமானே, மூவுலகங்களில் வாழும் தேவர்களாகிய நாங்கள் அழிக்கப்படும் நிலையில் இருக்கிறோம். உங்களைச் சார்ந்துள்ள எங்களைக் காத்தருள வேண்டும்” என்று கூறினர்.

பதம் 7.10.57
அதானுக்ருஹ்ய பகவான் மா பைஷ்டேதி ஸுாரான் விபு:
சரம் தனுஷி ஸந்தாய புரேஷு அஸ்த்ரம் வ்யமுஞ்சத

அத-அதன்பிறகு: அனுக்குஹ்ய— அவர்களை அனுக்கிரகிக்கும் பொருட்டு; பகவான் – மிகவும் சக்திவாய்ந்தவரான; மா-வேண்டாம்; பைஷ்ட-அஞ்ச; இதி- என்று; ஸுரான்—தேவர்களிடம்; விபு – சிவபெருமான்; சரம்-அம்புகளை; தனுஷி-வில்லில்; ஸந்தாய- பொருத்தி; புரேஷு—அசுரர்களின் அந்த மூன்று இருப்பிடங்களை நோக்கி; அஸ்த்ரம்— அஸ்திரங்களை; வ்யமுஞ்சத- விட்டார்.

அப்பொழுது மிகவும் சக்தி வாய்ந்தவரான சிவபெருமான் “பயப்படாதீர்கள்” என்று அவர்களிடம் கூறிவிட்டு, வில்லில் அம்புகளைப் பூட்டி. அசுரர்களின் அந்த மூன்று இருப்பிடங்களை நோக்கி அஸ்திரப் பிரயோகம் செய்தார்.

பதம் 7.10.58
ததோ ‘க்னி-வர்ணா இஷவ உத்பேது: ஸூர்ய-மண்டலாத்
யதா மயூக-ஸந்ததோஹா நாத்ருஸ்யந்த புரோ யத:

தத:-அதன்பிறகு; அக்னி – வர்ணா:-நெருப்பைப் போல் பிரகாச மான; இஷவ:- அம்புகளை; உத்பேது:-விட்டார்; ஸூர்ய – மண்டலாத்- சூரிய மண்டலத்திலிருந்து கிளம்பும்; யதா—எப்படி: மயூக – ஸந்தோஹா:- ஒளிக்கதிர்கள்; ந- அத்ருஸ்யந்த- காண முடியவில்லை; புர:-முப்புரங்களை; யத:–இதனால் (சிவ பெருமானுடைய அம்புகளால் மறைக்கப்பட்டதால்).

சிவபெருமானால் விடப்பட்ட அம்புகள் சூரிய மண்டலத்திலிருந்து கிளம்பும் நெருப்புக் கதிர்கள் போல் காணப்பட்டன. அவை முப்புரிகளாகிய அவ்விமானங்கள் மறைத்ததால் அந்த முப்புரிகளும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தன.

பதம் 7.10.59
தை: ஸ்ப்ருஷ்டா வ்யஸவ: ஸர்வே நிபேது: ஸ்ம புரௌகஸ:
தான் ஆனீய மஹா-யோகீ மய: கூப-ரஸே ‘க்ஷிபத்

தை:-அவற்றினால் (நெருப்பு போன்ற அம்புகளால்); ஸ்ப்ருஷ்டா:- தாக்கப்பட்டு அல்லது தொடப்பட்டு; வ்யஸவ:-உயிரில்லாமல்; ஸர்வே-எல்லா அசுரர்களும்; நிபேது:-வீழ்ந்தனர்; மை-முன்பு; புர-ஓகஸ:-மேற்கூறிய முப்புர வாசிகளாக இருந்த; தான்—அவர்கள் எல்லோரையும்; ஆனீய-கொண்டுவந்து;மஹா- யோகீ-மகா யோகியான; மய:-மய தானவன்; கூப-ரஸே—(மகா மாயாவியான மயனால் உண்டாக்கப்பட்ட) அமிர்தக் கிணற்றில்; அக்ஷிபத்- போட்டான்.

சிவபெருமானின் பொன் அம்புகளால் தாக்கப்பட்டு, அந்த மூன்று குடியிருப்புகளிலும் இருந்த அசுரர்கள் அனைவரும் உயிர் இழந்து கீழே விழுந்தனர். பிறகு மயதானவன் என்ற பெரிய மாயவன் தான் உருவாக்கிய ஒரு அமிர்த கிணற்றில் அசுரர்களை இறக்கினான்.

பதம் 7.10.60
ஸித்தாம்ருத-ரஸ-ஸ்ப்ருஷ்டா வஜ்ர-ஸாரா மஸௌஜஸ;
உத்தஸ்துர் மேக-தலனா வைத்யுதா இவ வஹ்னய:

ஸித்த-அம்ருத-ரஸ – ஸ்ப்ருஷ்டா:- அற்புத சக்திவாய்ந்த அமிர்த ரஸம் பட்ட அசுரர்கள்; வஜ்ர-ஸாரா:—அவர்களுடைய உடல்கள் வஜ்ரம் பாய்ந்தவையாக மாறின; மஹா-ஓஜஸ:-வலிமை மிக்கவையாக இருந்ததால்; உத்தஸ்து:-மீண்டும் எழுந்தனர்; மேக – தலனா:- மேகங்களை கிழித்துக் கொண்டு செல்லும்; வைத்யுதா:-மின்னல்; இவ -போல்; வஹ்னய:-நெருப்பு.

அந்த அமிர்த ரஸம் பட்ட மாத்திரத்தில் அந்த அசுரர்களின் உயிரற்ற உடல்கள், மேகத்தைப் பிளந்து கொண்டு வரும் மின்னல்களைப் போல் பிரகாசம் பொருந்தியவையாகவும், வைரம் பாய்ந்தவையாகவும் உயிர்த்தெழுந்தன.

பதம் 7.10.61
விலோக்ய பக்ன-ஸங்கல்பம் விமாகஸ்கம் வ்ருஷ-த்வஜம்
ததாயம் பகவான் விஷ்ணுஸ் தத்ரோபாயம் அகல்பயத்

விலோக்ய – கண்டு; பக்ன – ஸங்கல்பம்—ஏமாற்றம் அடைந்த; விமனஸ்கம் – மிகவும் மகிழ்ச்சியற்ற; வ்ருஷ – த்வஜம் – சிவ பெருமானை; ததா—அப்பொழுது; அயம்—இது; பகவான்—பரம புருஷர்; விஷ்ணு:- பகவான் விஷ்ணு; தத்ர—அமிர்த கிணற்றைப் பற்றி; உபாயம்—(அதை எப்படி தடுப்பது என்ற) உபாயத்தை; அகல்பயத்—யோசித்தார்.

சிவபெருமான் மிகவும் வருந்தமும், ஏமாற்றமும் அடைந்திருப்பதைக் கண்ட பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ விஷ்ணு, மயதானவனால் உண்டாக்கப்பட்ட இந்த உபத்திரவத்தை எப்படி தடுத்து நிறுத்துவதென்று யோசித்தார்.

பதம் 7.10.62
வத்ஸஸ் சாஸீத் ததா ப்ரஹ்மா ஸ்வயம் விஷ்ணுர் அயம் ஹி கௌ:
ப்ரவிஸ்ய த்ரிபுரம் காலே ரஸ-கூபாம்ருதம் பபௌ

வத்ஸ:-கன்று; ச – மேலும்; ஆஸீத்- ஆகி: ததா – அப்பொழுது; ப்ரஹ்மா-பிரம்மதேவர்: ஸ்வயம் -தானாகவே; விஷ்ணு: -பரமபுருஷராகிய பகவான் விஷ்ணு: அயம்-இந்த: ஹி- உண்மையில்; கௌ:-ஒரு பசுவாக; ப்ரவிஸ்ய— புகுந்து; த்ரி—புரம்-திரிபுரத்தினுள்; காலே-மத்தியான நேரத்தில்; ரஸ-கூப-அம்ருதம் – அக்கிணற்றிலிருந்த அமிர்தத்தை; பபௌ-பருகியிட்டார்.

பிறகு பகவான் விஷ்ணு தம்மை ஒரு பசுவாகவும், பிரம்ம தேவரை ஒரு கன்றாகவும் மாற்றிக் கொண்டு, அந்த திரிபுரத்தினுள் புகுந்து மத்தியான நேரத்தில் அக்கிணற்றிலிருந்த அமிர்தத்தைப் பருகிவிட்டார்.

பதம் 7.10.63
தே ‘ஸுரா ஹி அபி பஸ்யந்தோ ந ன்யஷேதன் விமோஹிதா:
தத் விக்ஞாய மஹா-யோகீ ரஸ-பாலான் இதம் ஜகௌ
ஸ்மயன் விசோக: சோகார்தான் ஸ்மரன் தைவ-கதிம் ச தாம்

தே—அந்த; ஆஸுரா:அசுரர்கள்; ஹி-உண்மையில்; அபி-கூட; பஸ்யந்த:-(பசுவும், கன்றும் அமிர்தத்தைப் பருகுவதை) கண்டு; ந- இல்லை; ன்யஷேதன் – தடுத்தனர்;விமோஹிதா-மாயையால் குழப்பமடைந்து; தத் விக்ஞாய—இதை முழுமையாக அறிந்து; மஹா-யோகி – மகா மாயாவியான மயதானவன்; ரஸ-பாலான்—அமிர்த்தத்தைக் காத்து வந்த அசுரர்களிடம்; இதம் – இதை; ஐகௌ—கூறினான்; ஸ்மயன்-குழப்பமடைந்து; விசோக:—அவ்வளவாக வருத்தமடையாத; சோக—ஆர்தான் மிகவும் வருத்தமடைந்த; ஸ்மரன்-நினைந்து; தைவ- கதிம்—ஆன்மீக சக்தியை; ச-கூட ; தாம்—அதை.

அந்த அசுரர்களால் அப்பசுவையும் கன்றையும் பார்க்க முடிந்தது. ஆனால் பரமபுருஷரின் சக்தியால் உண்டாக்கப்பட்ட மாயையின் காரணத்தால், அந்த அசுரர்களால் அதைத் தடுக்க இயலவில்லை. அப்பசுவும் கன்றும் அமிர்தத்தைப் பருகிக் கொண்டிருப்பதை மகா போகியான மயதானவன் அறிந்தான். இது கண்ணுக்குப் புலப்படாத பரமபுருஷரின் சக்தி என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறாக வருத்தத்துடன் புலம்பிக் கொண்டிருந்த அசுரர்களிடம் அவன் இவ்வாறு கூறலானான்.

பதம் 7.10.64
தேவோ ‘ஸுரோ நரோ ‘ன்யோ வா நேஸ்வரோ ‘ஸ்தீஹ கஸ்சன
ஆத்மனோ ‘ன்யஸ்ய வா திஷ்டம் தைவேனாபோஹிதும் த்வயோ:

தேவ:-தேவர்கள்; அசுர:–அகரர்கள்; நர:-மனிதர்கள்; அன்ய:- அல்லது வேறு யாராவது; வா—அல்லது: ந—இல்லை: ஈஸ்வர:- பரம ஆளுனர்; அஸ்தி-இருக்கிறது; இஹ -இவ்வுலகில்; கஸ்சன– யாரேனும்; ஆத்மன:-தன்னுடைய; அன்யஸ்ய-மற்றவர்களுடைய; வா—அல்லது; திஷ்டம் -விதிக்கப்பட்டதை; தைவேன-பரம புருஷரால் கொடுக்கப்பட்ட; அபோஹிதும் போக்கிக் கொள்ள: த்வயோ:-அவ்விருவரின்.

மயதானவன் கூறினான்: ஒருவன் ஒரு தேவனாகவோ, அசுரனாகவோ, மனிதனாகவோ அல்லது வேறு எவனாகவோ இருப்பினும், அவனால் தனக்கோ, பிறர்க்கோ அல்லது இருவருக்குமோ பரமபுருஷரால் விதிக்கப்பட்டதை போக்கிக் கொள்ள முடியாது.

பதங்கள் 7.10.65 – 7.10.66
அதாஸௌ சக்திபி: ஸ்வாபி: சம்போ: ப்ராதானிகம் வ்யதாத்
தர்ம-ஞான-விரக்தி-ருத்தி-தபோத-வித்யா-க்ரியாதிபி:
ரதம் ஸூதம் த்வஜம் வாஹான் தனுர் வர்ம-சராதி யத்
ஸன்னத்தோ ரதம் ஆஸ்தாய சரம் தனுர் உபாததே

அத—அதன்பிறகு; அஸௌ-அவர் (பகவான் ஸ்ரீ கிருஷ்ணர்); சக்திபி:-அவரது சக்திகளால்; ஸ்வாபி:-சுய; சம்போ:-சிவ பெருமானின்; ப்ராதானிகம் தேவைகளை; வ்யதாத்— ஏற்படுத்தினார்; தர்ம-தர்மம்; ஞான—அறிவு; விரக்தி-துறவு: ருத்தி—செல்வம்;தப:- தவம்; வித்யா -கல்வி; க்ரியா-செயல்கள்; ஆதிபி:-இவற்றினாலும், உன்னதமான பிற ஐசுவரியங்களிலும்; ரதம்—தேர்; ஸூதம் – தேரோட்டி; த்வஜம் -கொடி; வாஹான்-குதிரைகள் மற்றும் யானைகள்; தனு:- வில்; வர்ம-கேடயம்; சர ஆதி—அம்புகள் முதலான; யத்— தேவையான அனைத்தையும்; ஸன்னத்த:- கொடுத்து ஆயத்தப்படுத்தினார்; ரதம்— தேரில்; ஆஸ்தாய—அமர்ந்து; சரம்— அம்பை; தனு:-வில்லில்; உபாததே-பொருத்தினார்.

நாரதமுனி தொடர்ந்து கூறினார்: அதன்பிறகு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மம், அறிவு, துறவு, செல்வம், தவம், கல்வி, மற்றும் செயலாற்றல் ஆகியவை அடங்கிய தமது சுய ஆற்றலினால் தேர், தேரோட்டி, கொடி, குதிரைகள், யானைகள், வில், கவசம், அம்புகள் முதலான போர்ச் சாமான்களையெல்லாம் சிவபெருமானுக்கு ஆக்கித் தந்தார். சிவபெருமான் இவ்வாறு போருக்கு ஆயத்தமாகி தேரிலேறி அசுரர்களுடன் யுத்தம் செய்வதற்காக அம்புகளையும், வில்லையும் எடுத்தார்.

பதம் 7.10.67
சரம் தனுஷி ஸந்தாய முஹூர்த்தே ‘பிஜிதீஸ்வர:’
ததாஹ தேன துர்பேத்யா ஹரோ ‘த த்ரிபுரோ ந்ருப

சரம் – அம்புகளை; தனுஷி – வில்லில்; ஸந்தாய-பொருந்தி; முஹூர்த்தே அபிஜிதி – மத்தியான வேளையில்; ஈஸ்வர:- சிவபெருமான்; ததா ஹ – தீ மூட்டினார்; தேன—அவற்றினால் (அம்புகளாய்}} துர்பேத்யா:-துளைத்துச் செல்லக் கடினமான; ஹர:-சிவபெருமான்; அத-இவ்வாறு; த்ரி—புர:-அசுரர்களின் முப்புரங்களையும்; ந்ருப- யுதிஷ்டிர மகாராஜனே.

யுதிஷ்டிர மகாராஜனே, மிகவும் சக்திவாய்ந்தவரான சிவபெருமான் மத்தியான வேளையில் தனது வில்லில் அம்புகளைப் பூட்டி, அசுரர்களின் முப்புறங்களுக்கும் தீ மூட்டி அவற்றை அழித்தார்.

பதம் 7.10.68
திவி துந்துபயோ நேதுர் விமான-சத-ஸங்குலா:
தேவர்ஷி-பித்ரு-ஸித்தேசா ஜயேதி குஸுமோத்கரை:
அவாகிராஞ் ஜகுர் ஹ்ருஷ்டா நன்ருதுஸ் சாப்ஸரோ-கணா:

திவி- ஆகாயத்தில்; துந்துபய:- துந்துபிகளை; நேது-முழங்கினர்; விமான-விமானங்களின்; சத – நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான; ஸங்குலா-கொண்ட; தேவ-ரிஷி – எல்லா தேவர்களும் முனிவர்களும், பித்ரு – பித்ருலோக வாசிகளும்; ஸித்த-சித்தலோக வாசிகளும்; ஈசா-சிறந்த புருஷர்களும்; ஜய இதி- “வெற்றி உண்டாகட்டும்” என்று கோஷமிட்டனர்; குஸும – உத்கரை:-பல வகையான மலர்களை; அவாகிரன்- சிவபெருமானின் தலைமேல் பொழிந்தனர்; ஜகு- பாடினர்; ஹ்ருஷ்டா:-பேரானந்தத்துடன்; நன்ருது:-ஆடினர்; ச – மேலும்; அப்ஸர: கணா:-அழகிய சுவர்க்க லோகப் பெண்கள்.

ஆகாயத்தில் தங்களுடைய ஆகாய விமானங்களில் வீற்றிருந்த விண்ணுலகவாசிகள் பல துந்துபிகளை முழங்கினர். தேவர்களும், முனிவர்களும், பிதுருக்களும், சித்தர்களும் வேறு பல சிறந்த புருஷர்களும் சிவபெருமானின் தலைமீது மலர்மாரி பொழிந்து யுத்தத்தில் வெற்றி பெற அவரை வாழ்த்தினர். அப்ஸரஸ்கள் பேரானந்தத்துடன் ஆடிப்பாடத் துவங்கினர்.

பதம் 7.10.69
ஏவம் தக்த்வா புரஸ் திஸ்ரோ பகவான் புர-ஹா-ந்ருப
ப்ரஹ்மாதிபி: ஸ்தூயமான: ஸ்வம் தாம ப்ரத்யபத்யத

ஏவம் – இவ்வாறு; தக்த்வா-எரித்துச் சாம்பலாக்கி; புர: திஸ்ர:- அசுரர்களின் திரிபுரங்களை; பகவான்-மிகவும் சக்தி வாய்ந்தவர்; புர-ஹர-அசுரர்களின் வசிப்பிடங்களை அழித்தவரான; ந்ருப-யுதிஷ்டிர மகாராஜனே; ப்ரஹ்ம-ஆதிபி:-பிரம்மதேவர் முதலான தேவர்களால்; ஸ்தூயமான:- பூஜிக்கப்பட்டு; ஸ்வம்—அவரது சொந்த; தாம – இருப்பிடத்திற்கு; ப்ரத்யபத்யத— திரும்பிச் சென்றனர்.

யுதிஷ்டிர மகாராஜனே, இவ்வாறு அசுரர்களின் வசிப்பிடங்களான திரிபுரங்களையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கியதால் அவர் திரிபுராரி என்று அறியப்படுகிறார். பிறகு அவர் பிரம்மதேவர் முதலான தேவர்களால் பூஜிக்கப்பட்டபின் தனது இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றார்.

பதம் 7.10.70
ஏவம் விதானி அஸ்ய ஹரே: ஸ்வ-மாயயா
விடம்பமானஸ்ய ந்ரு-லோகம் ஆத்மன:
வீர்யாணி கீதானி ரிஷிபிர் ஜகத்-குரோர்
லோகம் புனானானி அபரம் வதாமி கிம்

ஏவம் விதானி-இவ்வாறு; அஸ்ய- கிருஷ்ணருடைய: ஹரே:- பரமபுருஷருடைய; ஸ்வ-மாயயா — அவரது உன்னத ஆற்றல்களினால்; விடம்பமானஸ்ய-ஒரு சாதாரண மனிதனைப்போல் செயற்பட்டு; ந்ரு- -லோகம்—மனித சமுதாயத்தில்; ஆத்மன:-அவருடைய; வீர்யாணி- திவ்யமான செயல்கள்; கீதானி_வர்ணனைகள்; ரிஷிபி:-சிறந்த முனிவர்களால்; ஜகத்-குரோ:-ஜகத்குருவின்; லோகம்-எல்லாக் கிரக அமைப்புக்களையும்; புனானானி- புனிதப்படுத்தும்; அபரம்- வேறெதை ; வதாபி கிம்- நான் சொல்ல இயலும்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மானிடராகத் தோன்றிய போதிலும், அவர் தமது ஆற்றலினால் பல அசாதாரணமான அற்புத லீலைகளை நிகழ்த்தினார். சிறந்த முனிவர்களால் பகவானுடைய செயல்களைப் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டதற்கு மேல் என்னால் எவ்வாறு சொல்ல இயலும்? அவரது செயல்களைப் பற்றி சரியான மூலத்திலிருந்து கேட்பதாலேயே அனைவராலும் புனிதமடைய முடியும்.


ஸ்ரீமத் பாகவதம், ஏழாம் காண்டத்தின், “பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்” எனும் தலைப்பைக் கொண்ட பத்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare