அத்தியாயம் – 10
பரம பக்தர்களுள் சிறந்த பிரகலாதர்
பதம் 7.10.1 : நாரதர் முனிவர் தொடர்ந்து கூறினார்: பகவான் நரசிம்ம தேவரால் அருளப்பட்ட வரங்களைச் செவிமடுத்த பிரகலாதர், ஒரு சிறுவனாக இருந்த போதிலும், அவற்றை பக்தித் தொண்டெனும் வழியில் தடைகளாகக் கருதினார். இவ்விதமாக அவர் புன்னகை செய்து பின்வருமாறு பேசலானார்.
பதம் 7.10.2 : பிரகலாத மகாராஜன் கூறினார்: எனது பிரியமுள்ள பகவானே, பரமபுருஷரே, நான் அசுர குடும்பத்தில் பிறந்துள்ள காரணத்தால், இயல்பாகவே பௌதிக சுகபோகங்களில் பற்றுக் கொண்டவனாக இருக்கிறேன். ஆகவே, தயவுகூர்ந்து இத்தகைய மாயைகளினால் எனக்கு ஆசை காட்டதீர்கள். பௌதிக நிலைகளைக் குறித்து நான் மிகவும் அச்சப்படுகிறேன். பௌதிக வாழ்விலிருந்து நான் விடுபட விரும்புகிறேன். இதற்காகத்தான் தங்களுடைய தாமரைப் பாதங்களில் தான் சரணடைந்தேன்.
பதம் 7.10.3 : எனது வழிபாட்டுக்குரிய பகவானே, பௌதிக வாழ்வுக்கு மூல காரணமாகிய காம இச்சையெனும் வித்து எல்லோருடைய இதயங்களிலும் இருப்பதால், ஒரு தூய பக்தனின் அறிகுறிகளை வெளிப்படுத்துவதற்காக இந்த ஜட உலகிற்கு என்னைத் தாங்கள் அனுப்பி இருக்கிறீர்கள்.
பதம் 7.10.4 : பகவானே, அகில லோகங்களுக்கும் பரம குருவே, நீங்கள் உங்களுடைய பக்தனிடம் அதிக அன்புடையவர் என்பதால், அவனுக்கு நன்மையளிக்காத ஒன்றைச் செய்யும்படி அவனை உங்களால் தூண்ட முடியாது. மற்றொருபுறம், பக்தித் தொண்டிற்குப் பதிலாக ஏதேனும் பௌதிக நன்மையை விரும்புபவனால் உங்களுடைய தூய பக்தன் ஆகமுடியாது. உண்மையில் அவன் சேவைக்குப் பதிலாக இலாபத்தை விரும்பும் ஒரு வியாபாரியைவிட எவ்விதத்திலும் மேலானவனல்ல.
பதம் 7.10.5 : தன் எஜமானரிடமிருந்து பௌதிக இலாபங்களை அடைய விரும்பும் ஒரு சேவகன் நிச்சயமாகத் தகுதியுடைய ஒரு சேவகனோ அல்லது தூய பக்தனோ அல்ல. அதுபோலவே எஜமானன் என்ற தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, தன் சேவகனுக்கு வரமளிக்கும் எஜமானரும் புனிதமான எஜமானரல்ல.
பதம் 7.10.6 : பகவானே, நான் உள் நோக்கமில்லாத தங்களுடைய சேவகன், நீங்களும் எனது நித்தியமான எஜமானராவீர். நமக்கிடையில் எஜமானர், சேவகன் என்ற உறவைத் தவிர வேறொன்றும் அவசியமில்லை. இயற்கையாகவே தாங்கள் எனது எஜமானர். நானும் இயற்கையாகவே தங்களுடைய சேவகன். நமக்கிடையில் வேறெந்த உறவும் கிடையாது.
பதம் 7.10.7 : பகவானே, வரமளிப்பவருள் சிறந்த வரதராஜரே, தாங்கள் நான் விரும்பிய வரத்தை அளிக்க விரும்பினால், என் இதயத்தில் எந்த பௌதிக ஆசையும் முளைக்கக் கூடாது என்ற வரத்தை எனக்கு அருள்வீராக.
பதம் 7.10.8 : பகவானே, பிறப்பின் துவக்கத்திலிருந்து தொடர்ந்து வரும் சிற்றின்ப ஆசைகளின் காரணத்தால், ஒருவனுடைய புலன்கள், மனம், உயிர், உடல், தர்மம், பொறுமை, அறிவு, வெட்கம், செல்வம், பலம், ஞாபக சக்தி, உண்மை ஆகிய அனைத்தின் செயல்பாடுகளும் அழிந்துவிடுகின்றன.
பதம் 7.10.9 : தாமரைக்கண்ணா, ஒரு மனிதனால் எப்பொழுது தன் மனதிலுள்ள எல்லா பௌதிக ஆசைகளையும் விட்டுவிட முடிகிறதோ, அப்பொழுதே அவன் உங்களுக்கு இணையான செல்வத்தையும், ஐசுவரியத்தையும் பெறத் தகுதியுடையவன் ஆகிறான்.
பதம் 7.10.10 : ஆறு ஐசுவரியங்களும் நிரம்பிய பகவானே, பரமபுருஷரே, பக்தர்களின் துயர் தீர்க்கும் பகவான் ஸ்ரீ ஹரியே, பரமாத்மாவே, அற்புதமான நரசிம்ம ரூபத்தை ஏற்ற முழுமுதற் கடவுளே, தங்களுக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 7.10.11 : பரமபுருஷர் கூறினார்: எனதருமைப் பிரகலாதா, உள்னைப் போன்ற ஒரு பக்தன் இப்பிறவியிலோ, அடுத்ததிலோ எவ்வித பௌதிக ஐசுவரியத்தையும் விரும்புவதே இல்லை. இருப்பினும், நீ அசுரர்களின் அரசனாக இருந்து கொண்டு, மனுவின் ஆயுட்காலம் முடியும்வரை, இந்த ஜட உலகின் அசுரர்களின் ஐசுவரியங்களை அனுபவிக்க வேண்டுமென்று நான் கட்டளையிடுகிறேன்.
பதம் 7.10.12 : நீ ஜட உலகில் இருப்பது கூட பாதகமில்லை. நீ எப்பொழுதும் என்னால் கொடுக்கப்படும் உபதேசங்களையும், செய்திகளையும் கேட்டு, என்னைப் பற்றிய சிந்தனையிலேயே எப்பொழுதும் ஆழ்ந்திருக்க வேண்டும். ஏனெனில், நானே எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக இருக்கிறேன். ஆகவே பலன் கருதும் செயல்களை விட்டுவிட்டு என்னை வழிபடுவாயாக.
பதம் 7.10.13 : எனது அன்பிற்குரிய பிரகலாதனே. இந்த ஜட உலகில் வாழும் பொழுது, இன்பத்தை அனுபவிப்பதன் மூலமாக புண்ணிய பலன்களையெல்லாம் நீ செலவழித்து விடுவாய். புண்ணியச் செயல்களால் பாவ விளைவுகளை நீ பொசுக்கி விடுவாய். சக்தி வாய்ந்த காலத்தின் வேகத்தினால் உடலைக் களைந்து, மேலுலகங்களில் கீர்த்தனம் செய்வதற்குரிய உனது புகழைப் பெருக்கி, தடைகளிலிருந்து முற்றிலும் விடுபட்டவனாய் நீ என்னை அடைவாய்.
பதம் 7.10.14 : உன்னுடைய செயல்களையும், என்னுடைய செயல்களையும் எப்பொழுதும் ஞாபகத்தில் வைத்துள்ளவனும், உன்னால் செய்யப்பட்ட ஸ்தோத்திரங்களைப் பாடுபவனுமான ஒருவன், காலப்போக்கில் கர்ம பந்தத்திலிருந்து விடுபடுவான்.
பதங்கள் 7.10.15 – 7.10.17 : பிரகலாத மகாராஜன் கூறினார்: பரமபுருஷரே வீழ்ந்த ஆத்மாக்களிடம் தாங்கள் மிகவும் கருணை கொண்டவர் என்பதால், ஒரே ஒரு வரத்தை மட்டும் உங்களிடம் நான் கேட்கிறேன். என் தந்தை இறக்கும் தறுவாயில் உங்களுடைய பார்வை பட்டு ஏற்கனவே புனிதமடைந்து விட்டார் என்பதை நானறிவேன். ஆனால் உங்களுடைய சிறப்புமிக்க சக்தியையும், உயர்வையும் அறியாத காரணத்தால், உங்களைத் தன் சகோதரனைக் கொன்றவர் என்ற தவறான எண்ணத்துடன், அநாவசியமாக உங்களிடம் அவர் கோபம் கொண்டுவிட்டார். இவ்விதமாக, எல்லா ஜீவராசிகளுக்கும் பரம குருவாகிய உங்களை அவர் நேரிடையாக நிந்தித்து விட்டார். உங்களுடைய பக்தனான எனக்கெதிராகவும் அவர் பெரும் பாவச் செயல்களைச் செய்துள்ளார். இப்பாவச் செயல்களுக்காக அவரை நீங்கள் மன்னித்தருள வேண்டும்.
பதம் 7.10.18 : பரமபுருஷர் கூறினார்: மிகவும் புனிதமானவனும், பரம பக்தனுமாகிய பிரகலாதா, உன் தந்தை மட்டுமின்றி உன் குடும்பத்தைச் சேர்ந்த இருபத்தொரு தலைமுறையினரும் புனிதப்படுத்தப்பட்டனர். நீ இக்குடும்பத்தில் பிறந்த காரணத்தால், இந்த முழு வம்சமும் புனிதமடைந்தது.
பதம் 7.10.19 : எங்கெல்லாம், எப்போதெல்லாம் அமைதியான, சமமான மன நிலையுடைய, நன் நடத்தையுள்ள, எல்லா நற்குணங்களாலும் அலங்கரிக்கப்பட்டுள்ள பக்தர்கள் இருக்கிறார்களோ, அந்த இடங்களும் அங்குள்ள வம்சங்களும் இழிவடைந்தவையாக இருப்பினும், புனிதமடைகின்றன.
பதம் 7.10.20 : தைத்திய ராஜனே பிரகலாதா, என் பக்தர்கள் என்னுடைய பக்தித் தொண்டில் பற்றுக் கொண்டிருப்பதால், அவர்கள் உயர்ந்த ஜீவராசிகள் என்றும், தாழ்ந்த ஜீவராசிகள் என்றும் வேறுபடுத்திப் பார்ப்பதில்லை. எல்லா விஷயங்களிலும் அவர்கள் எவரிடமும் பொறாமை கொள்வதே இல்லை.
பதம் 7.10.21 : உன்னுடைய உதாரணத்தைப் பின்பற்றுபவர்கள் இயற்கையாகவே என்னுடைய தூய பக்தர்களாக ஆவார்கள். என்னுடைய பக்தனுக்கு நீ மிகச் சிறந்த உதாரணமாவாய். மற்றவர்கள் உன்னுடைய அடிச் சுவடுகளைப் பின்பற்ற வேண்டும்.
பதம் 7.10.22 : குழந்தாய், மரணத்தின் போது என்னுடைய உடலின் ஸ்பரிசத்தாலேயே உன் தந்தை புனிதமடைந்து விட்டான். இருப்பினும், தன் தந்தை ஒரு நல்ல பிரஜையாகவும், நல்ல பக்தனாகவும் வாழக்கூடிய ஒரு கிரகத்திற்கு உயர்த்தப்படுவதற்கு, அவனுடைய மரணத்திற்குப் பிறகு அந்திம கிரியைகளைச் செய்வது ஒரு மகனுடைய கடமையாகும்.
பதம் 7.10.23 : ஈமக் கிரியைகளை நிறைவேற்றிய பிறகு, உன் தந்தையின் இராஜ்யப் பொறுப்பை நீ ஏற்றுக்கொள். நீ சிம்மாசனத்தில் அமர்ந்து பௌதிக செயல்களால் கலக்கமடையாமல், எப்பொழுதும் உன் மனதை என்னிடம் நிலைத்திருக்கச் செய்வாயாக. வேதவிதிகளை மீறாமல், சம்பிரதாயத்தை முன்னிட்டு உன்னுடைய குறிப்பிட்ட கடமைகளை நீ நிறைவேற்ற வேண்டும்.
பதம் 7.10.24 : ஸ்ரீ நாரதமுனி தொடர்ந்து கூறினார்: இவ்விதமாக பிரகலாதர் பரமபுருஷரின் உத்தரவுப்படியே தன் தந்தையின் ஈமக் கிரிகைகளை நிறைவேற்றினார். யுதிஷ்டிர மகாராஜனே, பிறகு அவர் பிராமணர்களின் வழிகாட்டலுக்கேற்ப, இரண்யகசிபுவின் இராஜ்யத்தின் அரியாசனத்தில் அமர்த்தப்பட்டார்.
பதம் 7.10.25 : பிற தேவர்களால் சூழப்பட்டிருந்த பிரம்மதேவர், பகவான் மகிழ்ச்சியடைந்ததைக் கண்டு முகம் மலர்ந்தார். இவ்வாறாக அவர் உன்னதமான வார்த்தைகளால் பகவானுக்கு ஸ்தோத்திரம் செய்யலானார்.
பதம் 7.10.26 : பிரம்மதேவர் கூறினார்: தேவர்களுக்கெல்லாம் இறைவனாகிய பரமபுருஷரே, அகில லோகங்களுக்கும் உரிமையாளரே, அனைத்து ஜீவராசிகளையும் ஆதரிப்பவரே, ஆதிபுருஷரே, எங்களுடைய நல்லதிர்ஷ்டத்தின் காரணத்தால், முழு பிரபஞ்சத்திற்கும் தொல்லைகள் கொடுத்துக் கொண்டிருந்த, மகாபாவியான இந்த அசுரனை இப்பொழுது தாங்கள் கொன்றுவிட்டீர்கள்.
பதம் 7.10.27 : அசுரனான இந்த இரண்யகசிபு, என்னுடைய சிருஷ்டியிலுள்ள எந்த ஜீவராசியாலும் கொல்லப்பட மாட்டான் என்ற வரத்தை என்னிடமிருந்து பெற்றான். இந்த தன்னம்பிக்கையினாலும், தவ வலிமையினாலும் அவன் அளவுக்கதிகமாக கர்வம் கொண்டு வேத விதிகளையெல்லாம் மீறினான்.
பதம் 7.10.28 : பேரதிர்ஷ்டத்தினால், இரண்யகசிபுவின் மகனான பிரகலாதன் இப்பொழுது மரணத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டான். ஏனெனில், இவன் ஒரு சிறுவனாக இருந்த போதிலும், பரம பக்தனாவான். இவன் இப்பொழுது பூரணமாக உங்களுடைய தாமரைப் பாதங்களின் பாதுகாப்பின் கீழ் உள்ளான்.
பதம் 7.10.29 : எம்பெருமானே, பரமபுருஷரே, நீங்கள் பரமாத்மா. உங்களுடைய திவ்ய ரூபத்தை ஒருவன் தியானிப்பானாயின், இயற்கையாகவே நீங்கள் எல்லா வகையான பயத்திலிருந்தும், நெருங்கிவிட்ட மரண பயத்திலிருந்தும் அவனைக் காப்பாற்றுகிறீர்கள்.
பதம் 7.10.30 : பரமபுருஷர் பதிலளித்தார்: பிரம்மதேவரே, தாமரையில் பிறந்த சிறப்புடையவரே, எப்படி பாம்புக்குப் பால் வார்ப்பது ஆபத்தானதோ, அப்படியே இயற்கையாகவே கொடியவர்களும், பொறாமை கொண்டவர்களுமான அசுரர்களுக்கு வரம் கொடுப்பதும் ஆபத்தானதாகும். மீண்டும் இத்தகைய வரங்களை வேறெந்த அசுரனுக்கும் நீர் கொடுக்கக் கூடாதென்று நான் எச்சரிக்கிறேன்.
பதம் 7.10.31 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: யுதிஷ்டிர மகாராஜனே, சாதாரண மனிதனுக்குப் புலப்படாதவரான பரமபுருஷர் பிரம்ம தேவருக்கு இவ்வாறு உபதேசித்தார். பிறகு பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட பகவான் அங்கிருந்து மறைந்தருளினார்.
பதம் 7.10.32 : பிரகலாத மகாராஜன் பிறகு, பகவானுடைய பகுதிகளான பிரம்மா, சிவன், பிரஜாபதிகள் முதலான எல்லாத் தேவர்களையும் பூஜித்து வந்தனம் செய்தார்.
பதம் 7.10.33 : அதன்பிறகு, தாமரைப் பூவைத் தனது ஆசனமாகக் கொண்ட பிரம்மதேவர், சுக்ராசாரியர் முதலான முனிவர்களுடன் கூட, பிரபஞ்சத்திலுள்ள எல்லா அசுரர்களுக்கும், தானவர்களுக்கும் பிரகலாத மகாராஜனை அரசராக்கினார்.
பதம் 7.10.34 : யுதிஷ்டிர மகாராஜனே, பிரம்மதேவர் முதலான எல்லாத் தேவர்களும் பிரகலாத மகாராஜனால் முறையாக பூஜிக்கப்பட்டபின், பிரகலாதருக்கு மிக உயர்ந்த வரங்களைக் கொடுத்துவிட்டு அவரவர் இருப்பிடங்களுக்குத் திரும்பிச் சென்றனர்.
பதம் 7.10.35 : இவ்வாறாக இரண்யாக்ஷம் மற்றும் இரண்யகசிபு என்ற திதியின் மகன்களாகப் பிறந்திருந்த பகவான் விஷ்ணுவின் இரு சகாக்களும் கொல்லப்பட்டனர். அறியாமையினால், எல்லோருடைய இதயங்களிலும் இருப்பவரான பரமபுருஷரைத் தங்களுடைய எதிரியாக அவர்கள் நினைத்திருந்தனர்.
பதம் 7.10.36 : அதே இரு சகாக்களும் பிராமணர்களால் சபிக்கப்பட்டு மீண்டும் கும்பகர்ணனாகவும், பத்துத்தலை இராவணனாகவும் பிறந்தனர். இவ்விரு இராட்சஸர்களும் பகவான் ராமச்சந்திரரின் அசாதாரணமான சக்தியால் கொல்லப்பட்டனர்.
பதம் 7.10.37 : கும்பகர்ணன், இராவணன் ஆகிய இருவரும் இரண்யாக்ஷன், இரண் யகசிபு என்ற தங்களுடைய முற்பிறவிகளில் செய்தது போலவே, இப்பிறவியிலும் பகவான் ராமச்சந்திரரின் அம்புகளால் துளைக்கப்பட்டு, பகவானின் சிந்தனையில் முழுமையாக ஆழ்ந்தபடி தரையில் விழுந்து தங்களுடைய உடல்களை விட்டனர்.
பதம் 7.10.38 : அவர்கள் மீண்டும் சிசுபாலனாகவும், தந்தவக்ரனாகவும் மனித சமுதாயத்தில் பிறவியெடுத்து பகவானிடம் தங்களுடைய அதே விரோதத்தைத் தொடர்ந்தனர். உன் முன்னிலையில் பகவானுடைய உடலுக்குள் ஐக்கியமானவர்கள் அவர்களேதான்.
பதம் 7.10.39 : சிசுபாலனும், தந்தவக்ரனும் மட்டுமின்றி வேறு பல அரசர்கள் கூட கிருஷ்ணரின் பகைவர்களாகச் செயற்பட்டு மரணத்தின்போது முக்தியடைந்தனர். கருநிற ஆண் தேனீயினால் பிடிக்கப்பட்ட புழுக்கள் அத்தேனீக்களைப் போன்ற அதே வகையான உடலைப் பெறுகின்றன. அதுபோலவே அவர்கள் பகவானைப் பற்றி நினைத்ததால் ஆன்மீக உடல்களைப் பெற்றனர்.
பதம் 7.10.40 : பக்தித்தொண்டில் பரமபுருஷரைப் பற்றியே இடையறாது நினைத்துக் கொண்டிருக்கும் தூய பக்தர்கள் அவருடையதைப் போன்ற உடல்களைப் பெறுகின்றனர். இது ஸாரூப்ய-முக்தி எனப்படுகிறது. சிசுபாலன், தந்தவக்ரன் முதலான அரசர்கள் கிருஷ்ணரைத் தங்களுடைய பகைவராக நினைத்துக் கொண்டிருந்த போதிலும், அவர்களும் அதே பலனையே அடைந்தனர்.
பதம் 7.10.41 : சிசுபாலனும், மற்றவர்களும் பகைமை கொண்டவர்களாக இருந்த போதிலும், அவர்களால் எவ்வாறு முக்தியடைய முடிந்தது என்பதைப் பற்றி உம்மால் கேட்கப்பட்ட அனைத்திற்கும் என்னால் இப்பொழுது விளக்கம் அளிக்கப்பட்டது.
பதம் 7.10.42 : பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய இந்த வர்ணனையில் பகவானின் பல்வேறு அவதாரங்களைப் பற்றி அல்லது அம்சங்களைப் பற்றி விவரிக்கப்பட்டது. மேலும் இரண்யாக்ஷன், இரண்யகசிபு என்ற இரு அசுரர்கள் கொல்லப்பட்ட வரலாறும் விவரிக்கப்பட்டது.
பதங்கள் 7.10.43 – 7.10.44 : இந்த வர்ணனை, மிகச்சிறந்த பரம பக்தராகிய பிரகலாத மகாராஜனின் குணாதிசயங்களையும், நிலையான அவரது பக்தித் தொண்டையும், அவரது பக்குவமான அறிவையும், பக்குவமான அவரது பௌதிக துறவையும் விவரிக்கிறது. பரமபுருஷரே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றிற்குக் காரணம் என்பதையும் இது விவரிக்கிறது. பிரகலாத மகாராஜன் அவரது ஸ்தோஸ்த்திரத்தில் பகவானுடைய திவ்யமான குணங்களை விவரித்துள்ளார். தேவர்கள் மற்றும் அசுரர்களின் பல்வேறு இருப்பிடங்கள் எவ்வளவு செல்வச் செழிப்பு மிக்கவையாக இருப்பினும், அவை பகவானின் உத்தரவினாலேயே அழிக்கப்பட்டு விடுகின்றன என்பதையும் பிரகலாதர் விவரித்துள்ளார்
பதம் 7.10.45 : எதனால் பரமபுருஷரை உள்ளபடி அறியமுடியுமோ அந்த சமயக் கோட்பாடுகள் பாகவத-தர்மம் என்று அழைக்கப்படுகின்றன. ஆகவே, இக்கோட்பாடுகளைப் பற்றியதான இந்த வர்ணனையில், உண்மையான பரமன் (பரப்பிரம்மன்) முறையாக விவரிக்கப்படுகிறார்.
பதம் 7.10.46 : பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவின் சர்வ வல்லமையைப் பற்றிய இந்த வர்ணனையைக் கேட்பவனும் சொல்பவனும் பௌதிக பந்தத்திலிருந்து விடுபடுவான் என்பது நிச்சயம்.
பதம் 7.10.47 : பிரகலாத மகாராஜன் மிகச் சிறந்த பக்தர்களுக்கிடையிலும் மேன்மை மிக்கவராக விளங்கினார். எவனொருவன் பிரகலாத மகாராஜனின் செயல்கள், இரண்யகசிபுவின் வதம், பரமபுருஷராகிய நரசிம்மதேவரின் செயல்கள் ஆகியவற்றைப் பற்றிய இந்த வர்ணனையை மிகுந்த கவனத்துடன் கேட்கிறானோ, அவன் கவலையே இல்லாத ஆன்மீக உலகை அடைவது நிச்சயம்.
பதம் 7.10.48 : நாரத முனிவர் தொடர்ந்து கூறினார்: யுதிஷ்டிர மகாராஜனே, பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரே மனித உருவில் உங்களுடைய அரண்மனையில் வசிப்பதில் நீங்கள் (பாண்டவர்கள்) மகா பாக்கியசாலிகள். சிறந்த முனிவர்கள் இதை நன்கு அறிந்திருப்பதால், அவர்கள் இந்த வீட்டிற்கு அடிக்கடி வந்து போகின்றனர்.
பதம் 7.10.49 : அருவ பிரம்மமும் ஸ்ரீ கிருஷ்ணரேயாகும். ஏனெனில் கிருஷ்ணரே அருவ பிரம்மத்திற்குப் பிறப்பிடமாவார். அவரே சிறந்த முனிவர்களால் நாடிச் செல்லப்படும் உன்னத ஆனந்தத்திற்கு மூலம். இருப்பினும் பரமபுருஷராகிய அவர் உங்களுடைய மிகப் பிரியமான நண்பராகவும், எப்பொழுதும் உங்களுடைய நலம் விரும்பியாகவும், உங்களுடைய தாய்மாமனின் மகன் என்ற நெருங்கிய உறவினராகவும் இருக்கிறார். உண்மையில் அவர் எப்பொழுதும் உங்களுடைய உடலும் உயிரும் போலாவார். அவர் வழிபாட்டுக்குரியவராக இருந்தும், உங்களுடைய சேவகராகவும், சிலசமயங்களில் உங்களுடைய ஆன்மீக குருவாகவும் செயற்படுகிறார்.
பதம் 7.10.50 : மேன்மைக்குரிய சிவபெருமான், பிரம்மதேவர் போன்றவர்களால் கூட பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய உண்மையைச் சரிவர விவரிக்க இயலவில்லை. மௌன விரதம்,தியானம், பக்தித் தொண்டு, துறவு ஆகியவற்றை அனுஷ்டிக்கும் சிறந்த முனிவர்களால், பக்த இரட்சகராக எப்பொழுதும் பூஜிக்கப்படுபவரான அந்த பகவான் நம்மிடம் திருப்தியடைவாராக.
பதம் 7.10.51 : யுதிஷ்டிர மகாராஜனே, வரலாற்றில் மிக நீண்ட காலத்திற்கு முன்பு, தொழில் நுட்பத்தில் சிறந்த நிபுணனாக இருந்த மயதானவன் என்ற அசுரன் சிவபெருமானின் கீர்த்தியைக் குறைத்துவிட்டான். அந்நிலையில் பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர்தான் சிவபெருமானைக் காப்பாற்றினார்,
பதம் 7.10.52 : யுதிஷ்டிர மகாராஜன் கூறினார்: அசுரனான மயதானவன் என்ன காரணத்திற்காக சிவபெருமானுடைய கீர்த்தியைக் கெடுத்தான்? பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எப்படி சிவபெருமானைக் காப்பாற்றி அவரது கீர்த்தியை மீண்டும் பரவச்செய்தார்? தயவு கூர்ந்து இச்சம்பவங்களை விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 7.10.53 : நாரதமுனிவர் கூறினார்: பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையால் எப்பொழுதும் சக்தி பெற்று விளங்கும் தேவர்களால் அசுரர்கள் ஜெயிக்கப்பட்ட பொழுது, அவர்கள் அசுரர்களுக்கெல்லாம் பெரிய அசுரனாக விளங்கிய மயதானவனைச் சரணடைந்தனர்.
பதங்கள் 7.10.54 – 7.10.55 : அசுரர்களில் பெருந்தலைவனான மயதானவன் பொன்னாலும், வெள்ளியாலும், இரும்பாலும் செய்யப்பட்டதும், அசாதாரணமான உபகரணங்களை உடையதுமான, விமானங்களைப் போன்ற மூன்று பறக்கும் புரிகளை நிர்மானம் செய்து, அவற்றை அசுரர்களுக்குக் கொடுத்தான். யுதிஷ்டிர மகாராஜனே, இத்தகைய வசிப்பிடங்களைப் பெற்றதால், அசுர சேனாதிபதிகள் தேவர்களின் கண்களுக்குப் புலப்படவில்லை. இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட அசுரர்கள், பழைய விரோதத்தை நினைந்து, மேல், மத்திய, கீழ் ஆகிய மூன்று கிரக அமைப்புகளையும் நாசம் செய்யத் துவங்கினர்.
பதம் 7.10.56 : அதன்பிறகு, அந்த அசுரர்கள் உயர்கிரக அமைப்புகளை அழிக்கத் துவங்கிய பொழுது, அக்கிரகங்களை ஆள்பவர்கள் சிவபெருமானிடம் சென்று அவரை முழுமையாகச் சரணடைந்து, “பெருமானே, மூவுலகங்களில் வாழும் தேவர்களாகிய நாங்கள் அழிக்கப்படும் நிலையில் இருக்கிறோம். உங்களைச் சார்ந்துள்ள எங்களைக் காத்தருள வேண்டும்” என்று கூறினர்.
பதம் 7.10.57 : அப்பொழுது மிகவும் சக்தி வாய்ந்தவரான சிவபெருமான் “பயப்படாதீர்கள்” என்று அவர்களிடம் கூறிவிட்டு, வில்லில் அம்புகளைப் பூட்டி. அசுரர்களின் அந்த மூன்று இருப்பிடங்களை நோக்கி அஸ்திரப் பிரயோகம் செய்தார்.
பதம் 7.10.58 : சிவபெருமானால் விடப்பட்ட அம்புகள் சூரிய மண்டலத்திலிருந்து கிளம்பும் நெருப்புக் கதிர்கள் போல் காணப்பட்டன. அவை முப்புரிகளாகிய அவ்விமானங்கள் மறைத்ததால் அந்த முப்புரிகளும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தன.
பதம் 7.10.59 : சிவபெருமானின் பொன் அம்புகளால் தாக்கப்பட்டு, அந்த மூன்று குடியிருப்புகளிலும் இருந்த அசுரர்கள் அனைவரும் உயிர் இழந்து கீழே விழுந்தனர். பிறகு மயதானவன் என்ற பெரிய மாயவன் தான் உருவாக்கிய ஒரு அமிர்த கிணற்றில் அசுரர்களை இறக்கினான்.
பதம் 7.10.60 : அந்த அமிர்த ரஸம் பட்ட மாத்திரத்தில் அந்த அசுரர்களின் உயிரற்ற உடல்கள், மேகத்தைப் பிளந்து கொண்டு வரும் மின்னல்களைப் போல் பிரகாசம் பொருந்தியவையாகவும், வைரம் பாய்ந்தவையாகவும் உயிர்த்தெழுந்தன.
பதம் 7.10.61 : சிவபெருமான் மிகவும் வருந்தமும், ஏமாற்றமும் அடைந்திருப்பதைக் கண்ட பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ விஷ்ணு, மயதானவனால் உண்டாக்கப்பட்ட இந்த உபத்திரவத்தை எப்படி தடுத்து நிறுத்துவதென்று யோசித்தார்.
பதம் 7.10.62 : பிறகு பகவான் விஷ்ணு தம்மை ஒரு பசுவாகவும், பிரம்ம தேவரை ஒரு கன்றாகவும் மாற்றிக் கொண்டு, அந்த திரிபுரத்தினுள் புகுந்து மத்தியான நேரத்தில் அக்கிணற்றிலிருந்த அமிர்தத்தைப் பருகிவிட்டார்.
பதம் 7.10.63 : அந்த அசுரர்களால் அப்பசுவையும் கன்றையும் பார்க்க முடிந்தது. ஆனால் பரமபுருஷரின் சக்தியால் உண்டாக்கப்பட்ட மாயையின் காரணத்தால், அந்த அசுரர்களால் அதைத் தடுக்க இயலவில்லை. அப்பசுவும் கன்றும் அமிர்தத்தைப் பருகிக் கொண்டிருப்பதை மகா போகியான மயதானவன் அறிந்தான். இது கண்ணுக்குப் புலப்படாத பரமபுருஷரின் சக்தி என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்வாறாக வருத்தத்துடன் புலம்பிக் கொண்டிருந்த அசுரர்களிடம் அவன் இவ்வாறு கூறலானான்.
பதம் 7.10.64 : மயதானவன் கூறினான்: ஒருவன் ஒரு தேவனாகவோ, அசுரனாகவோ, மனிதனாகவோ அல்லது வேறு எவனாகவோ இருப்பினும், அவனால் தனக்கோ, பிறர்க்கோ அல்லது இருவருக்குமோ பரமபுருஷரால் விதிக்கப்பட்டதை போக்கிக் கொள்ள முடியாது.
பதங்கள் 7.10.65 – 7.10.66 : நாரதமுனி தொடர்ந்து கூறினார்: அதன்பிறகு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மம், அறிவு, துறவு, செல்வம், தவம், கல்வி, மற்றும் செயலாற்றல் ஆகியவை அடங்கிய தமது சுய ஆற்றலினால் தேர், தேரோட்டி, கொடி, குதிரைகள், யானைகள், வில், கவசம், அம்புகள் முதலான போர்ச் சாமான்களையெல்லாம் சிவபெருமானுக்கு ஆக்கித் தந்தார். சிவபெருமான் இவ்வாறு போருக்கு ஆயத்தமாகி தேரிலேறி அசுரர்களுடன் யுத்தம் செய்வதற்காக அம்புகளையும், வில்லையும் எடுத்தார்.
பதம் 7.10.67 : யுதிஷ்டிர மகாராஜனே, மிகவும் சக்திவாய்ந்தவரான சிவபெருமான் மத்தியான வேளையில் தனது வில்லில் அம்புகளைப் பூட்டி, அசுரர்களின் முப்புறங்களுக்கும் தீ மூட்டி அவற்றை அழித்தார்.
பதம் 7.10.68 : ஆகாயத்தில் தங்களுடைய ஆகாய விமானங்களில் வீற்றிருந்த விண்ணுலகவாசிகள் பல துந்துபிகளை முழங்கினர். தேவர்களும், முனிவர்களும், பிதுருக்களும், சித்தர்களும் வேறு பல சிறந்த புருஷர்களும் சிவபெருமானின் தலைமீது மலர்மாரி பொழிந்து யுத்தத்தில் வெற்றி பெற அவரை வாழ்த்தினர். அப்ஸரஸ்கள் பேரானந்தத்துடன் ஆடிப்பாடத் துவங்கினர்.
பதம் 7.10.69 : யுதிஷ்டிர மகாராஜனே, இவ்வாறு அசுரர்களின் வசிப்பிடங்களான திரிபுரங்களையும் சிவபெருமான் எரித்துச் சாம்பலாக்கியதால் அவர் திரிபுராரி என்று அறியப்படுகிறார். பிறகு அவர் பிரம்மதேவர் முதலான தேவர்களால் பூஜிக்கப்பட்டபின் தனது இருப்பிடத்திற்கு திரும்பிச் சென்றார்.
பதம் 7.10.70 : பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஒரு மானிடராகத் தோன்றிய போதிலும், அவர் தமது ஆற்றலினால் பல அசாதாரணமான அற்புத லீலைகளை நிகழ்த்தினார். சிறந்த முனிவர்களால் பகவானுடைய செயல்களைப் பற்றி ஏற்கனவே சொல்லப்பட்டதற்கு மேல் என்னால் எவ்வாறு சொல்ல இயலும்? அவரது செயல்களைப் பற்றி சரியான மூலத்திலிருந்து கேட்பதாலேயே அனைவராலும் புனிதமடைய முடியும்.