அத்தியாயம் – 7
இந்திரன் தேவகுரு பிருஹஸ்பதியை
அவமதித்தல்
பதம் 6.7.1
ஸ்ரீ-ராஜோவாச
கஸ்ய ஹேதோ: பரித்யக்தா ஆசார்யேணாத்மன: ஸுரா:
ஏதத் ஆசக்ஷ்வ பகவாஞ் சிஷ்யாணாம் அக்ரமம் குரௌ
ஸ்ரீ-ராஜா உவாச—அரசர் வினவினார்; கஸ்ய ஹேதோ:—எந்த காரணத்திற்காக; பரித்யக்தா:—கைவிடப்பட்டனர்; ஆசார்யேன—ஆன்மீக குருவினால்; ஆத்மன:—அவருடைய; ஸுரா:—எல்லா தேவர்களும்; ஏதத்—இதை; ஆசக்ஷ்வ—தயவுசெய்து விளக்குங்கள்; பகவன்—மாமுனிவரே (சுகதேவ கோஸ்வாமி); சிஷ்யாணாம்—சீடர்களின்; அக்ரமம்—குற்றம்; குரெள—குருவிடம்.
பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: மாமுனிவரே, தேவகுருவான பிருஹஸ்பதி ஏன் தமது சொந்த சீடர்களான தேவர்களைக் கைவிட்டார்? தேவர்களால் தங்களது குருவிடம் செய்யப்பட்ட குற்றம் என்னவென்று தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள்.
பதங்கள் 6.7.2 – 6.7.8
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
இந்ரஸ் த்ரிபுவனைஸ்வர்ய-மதோல்லங்கித-ஸத்பத:
மருத்பிர் வஸுபீ ருத்ரைர் ஆதித்யைர் ரிபுபிர் ந்ருப
விஸ்வேதேவைஸ் ச ஸாத்யைஸ் ச நாஸத்யாப்யாம் பரிஸ்ரித:
ஸித்த-சாரண-கந்தர்வைர் முனிபிர் ப்ரஹ்மவாதிபி:
வித்யாதராப்ஸரோபிஸ் ச கின்னரை: பதகோரகை:
நிஷேவ்யமாணோ பகவான் ஸ்தூயமானஸ் ச பாரத
உபகீயமானோ லலிதம் ஆஸ்தானாத்யாஸனாஸ்ரித: பாண்டுரேணாதபத்ரேண சந்ர-மண்டல-சாருணா
யுக்தஸ் சான்யை: பாரமேஷ்ட்யைஸ் சாமர-வ்யஜனாதிபி:
விராஜமான: பௌலம்யா ஸஹார்தாஸனயா ப்ருசம்
ஸ யதா பரமாசார்யம் தேவானாம் ஆத்மனஸ் ச ஹ
நாப்யனந்தத ஸம்ப்ராப்தம் ப்ரத்யுத்தானாஸனாதிபி:
வாசஸ்பதிம் முனி-வரம் ஸுராஸுர-நமஸ்க்ருதம்
நோச்சசாலாஸனாத் இந்ர: பஸ்யன் அபி ஸபாகதம்
ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்; இந்ர:—இந்திரன்; த்ரி-புவன-ஐஸ்வர்ய—மூவுலகங்களின் ஐசுவரியங்களையெல்லாம் பெற்றிருந்த; மத—செருக்கினால்; உல்லங்கித—மீறிவிட்ட; ஸத்-பத:—வேதப் பண்பாட்டின் வழியை; மருத்பி:—மருத்கள் என்ற காற்றுத் தேவர்களாலும்; வஸுபி:—எட்டு வஸுக்களாலும்; ருத்ரை:—பதினொரு ருத்திரர்களாலும்; ஆதித்யை:—ஆதித்தியர்களாலும்: ரிபுபி:—ரிபுக்களாலும்; ந்ருப—அரசே; விஸ்வே—தேவை; ச—மற்றும் விஸ்வதேவர்களாலும்; ஸாத்யை:—சாத்யர்களால்; ச—கூட; நாஸத்யாப்யாம்—இரு அஸ்வினி குமாரர்களாலும்; பரிஸ்ரித:—சூழப்பட்டிருந்தார்; ஸித்த—சித்தலோக வாசிகளாலும்; சாரண—சாரணர்களும்; கந்தர்வை:—கந்தர்வர்களும்; முனிபி:—சிறந்த முனிவர்களாலும்; ப்ரஹ்ம-வாதிபி—கற்றறிந்த அருவவாதிகளாலும்; வித்யாதர-அப்ஸரோபி: ச—மற்றும் வித்யாதரர்களாலும், அப்ரஸ்களாலும்; கின்னரை:—கின்னரர்களாலும்; பதக-உரகை:—பதகர்களாலும் (பறவைகள்), உரகர்களாலும் (பாம்புகள்); நிஷேவ்ய்மாண:—சேவிக்கப்பட்ட; பகவான்—தேவேந்திரன்; ஸ்தூயமான: ச—மேலும் துதிக்கப்பட்ட; பாரத—பரீட்சித்து மகாராஜனே; உபகீயமான:—முன்னால் பாடப்பட்டு; லலிதம்—மிகவும் இனிமையாக; ஆஸ்தான—அவரது சபையில்; அத்யாஸன-ஆஸ்ரித:—அரியாசனத்தில் வீற்றிருந்தார்; பாண்டுரேண—வெள்ளை; ஆதபத்ரேண—தலைமேல் ஒரு குடையுடன்; சந்ர-மண்டல-சாருணா—சந்திர வட்டம் போல் அழகிய; யுக்த:—உடைய; ச அன்யை:—மேலும் பிறவற்றினால்; பாரமேஷ்ட்யை:—சிறந்த அரசருக்குரிய அறிகுறிகள்; சாமர—சாமரத்தினால்; வயஜன-ஆதிபி:—விசிறிகள் முதலானவைகளால்; விராஜமான:—பிரகாசிக்கும்; பௌலம்யா—அவரது மனைவி சசி; ஸஹ—உடன்; அர்த-ஆஸனயா—பாதி அரியாசனத்தை நிரப்பிய; ப்ருசம்—மிகவும்; ஸ:—அவர் (இந்திரன்); யதா—எப்பொழுது; பரம-ஆசார்யம்—மிகச்சிறந்த ஆசார்யரான ஆன்மீககுரு; தேவானாம்—எல்லா தேவர்களின்; ஆத்மன:—அவருடைய; ச—மேலும்; ஹ—உண்மையில்; ந—இல்லை; அப்யநந்தத—வரவேற்றார்; ஸம்ப்ராப்தம்—அவையில் தோன்றிய பொழுது; ப்ரத்யுத்தான—சிம்மாசனத்திலிருந்து எழுந்தும்; ஆஸன-ஆதிபி:—ஆசனம் முதலியவைகளாலும்; வாசஸ்பதிம்—தேவ குருவான பிருஹஸ்பதி; முனி-வரம்—முனிவர்களுள் சிறந்தவரான ஸுர-அஸுர-நமஸ்க்ருதம்—தேவர்களாலும், அசுரர்களாலும் மதிக்கப்படுபவரான; ந—இல்லை; உச்சசால—எழுந்தார்; ஆஸனாத்—ஆசனத்திலிருந்து; இந்ர:—இந்திரன்; பஸ்யன் அபி—பார்த்த போதிலும்; ஸபா-ஆகதம்—அவையில் பிரவேசித்ததை.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, ஒரு சமயம், சுவர்க்க ராஜனான இந்திரன், மூவுலகங்களின் செல்வங்களுக்கும் அதிபதியாக இருந்த காரணத்தினால் மிகவும் கர்வமடைந்து வேத ஆசாரத்தின் விதியை மீறினார். அவர் மருத்கள், வஸுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், ரிபுக்கள், விஸ்வதேவர்கள், சாத்யர்கள், அஸ்வினி குமாரர்கள், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள் மற்றும் சிறந்த முனிவர்களால் சூழப்பட்டபடி தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். வித்யாதரர்கள், அப்ஸரஸ்கள், கின்னரர்கள், பதகர்கள் (பறவைகள்) மற்றும் உரகர்கள் (பாம்புகள்) ஆகியோரும் அவரைச் சூழந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இந்திரனுக்கு மரியாதையுடன் சேவை செய்தனர். அப்ஸரஸ்களும், கந்தர்வர்களும் இனிமையான வாத்தியக் கருவிகளுடன் ஆடிப்பாடினர். இந்திரனின் தலைக்கு மேலே முழு நிலவைப் போல் பிராகாசமான ஒரு வெண்குடை இருந்தது. வெண்சாமரங்களால் விசிறப்பட்டும், சிறந்த அரசருக்குரிய உபகரணங்களால் சேவிக்கப்பட்டும் அமர்ந்திருந்த இந்திரனுடன் அவரது மனைவியான சசிதேவியும் பாதி சிம்மாசனத்தை நிரப்பியபடி அவருடன் அமர்ந்திருந்தாள். அப்பொழுது சிறந்த முனிவரான பிருஹஸ்பதி அந்த சபையில் தோன்றினார். முனிவர்களுள் சிறந்தவரான பிருஹஸ்பதி இந்திரன் முதலான தேவர்களின் ஆன்மீக குரு ஆவார். அவர் தேவர்களாலும் அசுரர்களாலும் சமமாக மதிக்கப்பட்டார். இருப்பினும், தன் முன் தனது ஆன்மீக குரு வந்திருப்பதைக் கண்ட இந்திரன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து நிற்கவோ அல்லது தன் குருவிற்கு ஆசனமளிக்கவோ அல்லது மரியாதையுடன் அவரை வரவேற்கவோ இல்லை. அவருக்கு மரியாதை காட்டும் வகையில் எதையுமே இந்திரன் செய்யவில்லை.
பதம் 6.7.9
ததோ நிர்கத்ய ஸஹஸா கவிர் ஆங்கிரஸ: ப்ரபு:
ஆயயெள ஸ்வ-க்ருஹம் தூஷ்ணீம் வித்வான் ஸ்ரீ-மத-விக்ரியாம்
தத:—அதன்பிறகு; நிர்கத்ய—வெளியேறி; ஸஹஸா—திடீரென்று; கவி:—கற்றறிந்த அந்த முனிவர்; ஆங்கிரஸ:—பிருஹஸ்பதி; ப்ரபு:—தேவர்களின் குருவான; ஆயயௌ—திரும்பிச் சென்றார்; ஸ்வக்ருஹம்—தமது வீட்டிற்கு; தூஷ்ணீம்—மௌனமாக; வித்வான்—புரிந்து கொண்டு; ஸ்ரீ-மத-விக்ரியாம்—செல்வச் செருக்கினால் ஏற்பட்ட திமிர்.
எதிர்காலத்தில் நிகழவிருக்கும் அனைத்தையும் பிருஹஸ்பதி அறிந்திருந்தார். இந்திரனின் அவமரியாதையைக் கண்ட அவர், அது செல்வச் செருக்கினால் ஏற்பட்ட திமிர் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டார். அவர் இந்திரனைச் சபிக்கக் கூடியவர் என்றாலும் அவ்வாறு செய்யாமல், மௌனமாக அந்த சபையை விட்டு வெளியேறி தமது வீட்டிற்குத் திரும்பினார்.
பதம் 6.7.10
தர்ஹி ஏவ ப்ரதிபுத்யேந்ரோ குரு-ஹேலனம் ஆத்மன:
கர்ஹயாம் ஆஸ ஸதஸி ஸ்வயம் ஆத்மானம் ஆத்மனா
தர்ஹி—பிறகு, உடனே; ஏவ—உண்மையாக; ப்ரதிபுத்ய—உணர்ந்து; இந்ர:—இந்திரன்; குரு-ஹேலனம்—குருவிற்குச் செய்த அவமரியாதையை; ஆத்மன:—தன் சொந்த; கர்ஹயாம் ஆஸ—கடிந்து கொண்டார்; ஸதஸி—அந்த அவையில்; ஸ்வயம்—சுயமாக; ஆத்மானம்—தன்னை; ஆத்மனா—தானாகவே.
அப்பொழுது சுவர்க்கராஜனான இந்திரன் தன்னால் குருவிற்கு ஏற்பட்ட அவமதிப்பை உணர்ந்து, சபையோரின் முன்னிலையில் தன்னையே நொந்து கொண்டார்.
பதம் 6.7.11
அஹோ பத மயாஸாது க்ருதம் வை தப்ர-புத்தினா
யன் மயைஸ்வர்ய-மத்தேன குரு: ஸதஸி காத்க்ருத:
அஹோ—ஐயோ; பத—உண்மையில்; மயா—என்னால்; அஸாது—அவமரியாதை; க்ருதம்—செய்யப்பட்ட; வை—நிச்சயமாக; தப்ர-புத்தினா—அறிவு பற்றாக் குறையினால்; யத்—ஏனெனில்; மயா—என்னால்; ஐஸ்வர்ய-மத்தேன—செல்வச் செருக்கினால்; குரு:—ஆன்மீக குரு; ஸதஸி—சபையில்; காத்-க்ருத:—தவறாக நடத்தப்பட்டார்.
ஐயோ! என்னுடைய அறிவு பற்றாக் குறையினாலும், செல்வச் செருக்கினாலும் எத்தகைய வெறுக்கத்தக்க செயலை நான் செய்து விட்டேன்! இந்த சபைக்குள் பிரவேசித்த எனது ஆன்மீக குருவிற்கு மரியாதை செலுத்தாமல் அவரை நான் அவமதித்து விட்டேனே!
பதம் 6.7.12
கோ க்ருத்யேத் பண்டிதோ லக்ஷ்மீம் த்ரிபிஷ்டப-பதேர் அபி
யயாஹம் ஆஸுரம் பாவம் நீதோ ‘த்ய விபுதேஸ்வர:
க:—யார்; க்ருத்யேத்—ஏற்பார்; பண்டித:—கற்றறிந்த; லக்ஷ்மீம்—ஐசுவரியங்களை; த்ரி-பிஷ்ட-ப-பதே:அபி—நான் தேவராஜனாக இருந்த போதிலும்; யயா—எதனால்; அஹம்—நான்; ஆஸுரம்—அசுரத்தனமான; பாவம்—மனோபாவம்; நீத—எடுத்துச் செல்லும்; அத்ய—இப்பொழுது; விபுத—சத்வ குணத்திலுள்ள தேவர்களின்; ஈஸ்வர:—அரசன்.
நான் சத்வ குணத்திலுள்ள தேவர்களின் அரசனாக இருந்தும், சிறிதளவு செல்வத்தினால் கர்வம் பிடித்தவனாகி பொய் அகங்காரத்தினால் களங்கப்பட்டவனானேன். இந்நிலையில் இவ்வுலகிலுள்ள யார் தான் இத்தகைய செல்வங்களை ஏற்று இழிவடையும் ஆபத்தைத் தேடிக் கொள்வார்கள்? ஐயோ! என் செல்வத்தையும்,ஐசுவரியத்தையும் நான் நொந்து கொள்கிறேன்.
பதம் 6.7.13
ய: பாரவேஷ்ட்யம் திஷணம் அதிதிஷ்டன் ந கஞ்சன
ப்ரத்யுத்திஷ்டேத் இதி ப்ரூயுர் தர்மம் தே ந பரம் விது:
ய:—யாரொருவன்; பாரமேஷ்ட்யம்—அரசருக்குரிய; திஷணம்—சிம்மாசனத்தில்; அதிதிஷ்டன்—அமர்ந்துள்ள; ந—இல்லை; கஞ்சன—ஒருவன்; ப்ரத்யுத்திஷ்டேத்—முன்னிலையில் எழுந்து நிற்க வேண்டும்; இதி—இவ்வாறு; ப்ரூயு:—கூறுபவர்கள்; தர்மம்—சமயக் கோட்பாடுகளை; தே—அவர்கள்; ந—இல்லை; பரம்—உயர்ந்த; விது:—அறிவார்.
“ஓர் அரசருக்குரிய உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவன் எழுந்து நின்று வேறொரு அரசருக்கோ அல்லது ஒரு பிராமணருக்கோ மரியாதை செலுத்தக் கூடாது” என்று கூறுபவன் உயர்ந்த சமயக் கோட்பாடுகளை அறியாதவன் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பதம் 6.7.14
தேஷாம் குபத-தேஷ்ட்ரூணாம் பததாம் தமஸி ஹி அத:
யே ஸ்ரத்தத்யுர் வசஸ் தே வை மஜ்ஜந்தி அஸ்ம-ப்லவா இவ
தோஷாம்—அவர்களின் (தவறாக வழிநடத்திச் செல்பவர்களின்); கு-பத்தேஷ்ட்ரூணாம்—ஆபத்தான வழியைக் காட்டும்; பததாம்—அவர்களே விழுவதோடு; தமஸி—இருளில்; ஹி—நிச்சயமாக; அத:—கீழே; யே—எவனொருவன்; ஸ்ரத்தத்யு:—நம்பிக்கை வைக்கிறானோ; வச:—வார்த்தைகளில்; தே—அவர்கள்; வை—உண்மையில்; மஜ்ஜந்தி—மூழ்கிவிடும்; அஸ்ம-ப்லவா:—கல்லாலான படகுகள்; இவ—போல.
(முந்திய சுலோகத்தில் விவரிக்கப்பட்டதுபோல்) அறியாமையில் விழுந்துவிட்டவர்களும், மக்களை அழிவுப் பாதையில் தவறாக வழிநடத்திச் செல்பவர்களுமான தலைவர்களும், குருட்டுத்தனமாக அவர்களைப் பின்பற்றுபவர்களும், உண்மையில் கல்லினால் செய்யப்பட்ட ஒரு படகில் ஏறிக் கொள்பவர்களைப் போன்றவர்களாவர். கல்லாலான ஒரு படகு மிதக்க முடியாமல் அதிலுள்ள பயணிகளுடன் நீரில் மூழ்கிவிடும். அதுபோலவே, மக்களைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வோரும் நரகத்திற்கே செல்வார்கள்.
பதம் 6.7.15
அதாஹம் அமராசார்யம் அகாத-திஷணம் த்விஜம்
ப்ரஸாதயிஷ்யே நிசட: சீர்ஷ்ணா தச்-சரணம் ஸ்ப்ருசன்
அத—ஆகவே; அஹம்—நான்; அமர-ஆசார்யம்—தேவகுருவை; அகாத-திஷணம்—ஆழமான ஆன்மீக அறிவுடைய; த்விஜம்—சிறந்த பிராமணரான; ப்ரஸாதயிஷ்யே—நான் திருப்திப்படுத்துவேன்; நிசட:—வஞ்சகமில்லாமல்; சீர்ஷ்ணா—என் தலையால்; தத்-சரணம்—அவரது தாமரைப் பாதங்களை; ஸ்ப்ருசன்—தொட்டு.
தேவேந்திரன் கூறினார்: ஆகவே மிகவும் வெளிப்படையாகவும், வஞ்சகமில்லாமலும் தேவ குருவான பிருஹஸ்பதியின் தாமரைப் பாதங்களில் இப்பொழுது என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சாத்வீக குணத்தில் இருப்பதால் அவர் எல்லா அறிவையும் முழுமையாகப் பெற்றவரும், சிறந்த பிராமணரும் ஆவார். இப்பொழுது நான் அவருடைய தாமரைப் பாதங்களைத் தொட்டு வணங்கி அவரை திருப்திப்படுத்த முயல்வேனாக.
பதம் 6.7.16
ஏவம் சிந்தயதஸ் தஸ்ய மகோனோ பகவான் க்ருஹாத்
ப்ருஹஸ்பதிர் கதோ ‘த்ருஷ்டாம் கதிம் அத்யாத்ம-மாயயா
ஏவம்—இவ்வாறு; சிந்தயத:—கடுமையாக சிந்தித்துக் கொண்டிருந்த பொழுது; தஸ்ய—அவர்; மகோன:—இந்திரன்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவரான; க்ருஹாத்—அவரது வீட்டிலிருந்து; ப்ருஹஸ்பதி:—பிருஹஸ்பதி; கத:—போய்விட்டார்; அத்ருஷ்டாம்—மறைந்து; கதிம்—என்ற நிலைக்கு; அத்யாத்ம—ஆத்ம உணர்வில் மிகவும் முன்னேறி இருந்ததால்; மாயயா—அவரது ஆற்றலால்.
தேவராஜனான இந்திரன் இவ்வாறு சிந்தித்தப்படி தனது அவையில் வருந்திக் கொண்டிருந்த பொழுது, அவருடைய மனதை, மிகவும் சக்தி வாய்ந்த குருவாகிய பிருஹஸ்பதியால் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்விதமாக தேவேந்திரனை விட அதிக ஆன்மீக சக்தியுடையவரான பிருஹஸ்பதி, இந்திரனால் காணமுடியாதபடி தன் வீட்டிலிருந்து மறைந்து போனார்.
பதம் 6.7.17
குரோர் நாதிகத: ஸம்ஜ்ஞாம் பரீக்ஷன் பகவான் ஸ்வராட்
த்யாயன் தியா ஸுரைர் யுக்த: சர்ம நாலபதாத்மன:
குரோ:—அவரது ஆன்மீக குருவின்; ந—இல்லை; அதிகத:—கண்டுபிடிக்க; ஸம்ஜ்ஞாம்—அடையாளத்தை; பரீக்ஷன்—சுற்றிலும் தீவிரமாகத் தேடி; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த இந்திரன்; ஸ்வராட்—சுதந்திரமான; த்யாயன்—தியானித்து; தியா—ஞானத்தினால்; ஸுரை:—தேவர்களால்; யுக்த:—சூழப்பட்டு; சர்ம—அமைதி; ந—இல்லை; அலபத—அடைந்தார்; ஆத்மன:—மனதின்.
இந்திரன் மற்ற தேவர்களின் உதவியுடன் கடுமையாகத் தேடியும் பிருஹஸ்பதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது இந்திரன், “ஐயோ, எனது ஆன்மீக குரு என்னிடம் அதிருப்தி அடைந்துவிட்டதால் இப்பொழுது எனக்கு நல்லதிர்ஷ்டத்தைப் பெறும் வழிமுறை இல்லாது போயிற்றே” என்று வருந்தினார். இந்திரன் தேவர்களால் சூழப்பட்டிருந்தும் மன நிம்மதியை இழந்து தவித்தார்.
பதம் 6.7.18
தச் ச்ருத்வைவாஸுரா: ஸர்வ ஆஸ்ரித்யெள சனஸம் மதம்
தேவான் ப்ரத்யுத்யமம் சக்ருர் துர்மதா ஆததாயின:
தத் ஸ்ருத்வா—அச்செய்திகளைக் கேட்டு; ஏவ—உண்மையில்; அஸுரா:—அசுரர்கள்; ஸர்வே—எல்லோரும்; ஆஸ்ரித்ய—தஞ்சமடைந்து; ஒளசனஸம்—சுக்ராசாரியரின்; மதம்—உபதேசத்தை; தேவான்—தேவர்கள்; ப்ரத்யுத்யமம்—எதிரான செயல்; சக்ரு:—செய்தனர்; துர்மதா:—அதிக புத்திசாலித்தனம் இல்லாத; ஆததாயின:—யுத்தத்திற்காக ஆயுதங்களைத் திரட்டிக் கொண்டு.
தேவேந்திரனின் பரிதாபகரமான இந்த நிலையைப்பற்றி கேள்விப்பட்ட அசுரர்கள், தங்களுடைய குருவான சுக்ராசார்யரின் உபதேசங்களைப் பின்பற்றி, ஆயுதங்களைத் திரட்டிக் கொண்டு, தேவர்களை எதிர்த்துப் போர் தொடுத்தனர்.
பதம் 6.7.19
தைர் விஸ்ருஷ்டேஷுபிஸ் தீக்ஷ்ணைர் நிர்பின்னாங்கோரு-பாஹவ:
ப்ரஹ்மாணம் சரணம் ஜக்மு: ஸஹேந்ரா நத-கந்தரா:
தை:—அவர்களால் (அசுரர்களால்); விஸ்ருஷ்ட—எறியப்பட்ட; இஷுபி:—அம்புகளால்; தீக்ஷ்ணை:—மிகவும் கூரான; நிர்பின்ன—முழுவதும் துளைக்கப்பட்டு; அங்க—உடல்களும்; ஊரு—தொடைகளும்; பாஹவ:—கைகளும்; ப்ரஹ்மாணம்—பிரம்ம தேவரின்; சரணம்—பாதுகாப்பை; ஜக்மு:—அனுகினர்; ஸஹ-இந்திரா:—இந்திரனுடன்; நத-கந்தரா:—குனிந்த தலைகளுடன்.
அசுரர்களால் விடப்பட்ட கூரிய அம்புகளால் தேவர்களுடைய தலைகளும், தொடைகளும், கைகளும், அவர்களுடைய உடல்களின் பிற பகுதிகளும் காயப்படுத்தப்பட்டன. இந்திரன் முதலான தேவர்கள் வேறு வழியில்லாமல், பாதுகாப்பிற்காகவும், தகுந்த அறிவுரைக்காகவும் தாழ்த்திய தலைகளுடன் உடனே பிரம்ம தேவரை அனுகினர்.
பதம் 6.7.20
தாம்ஸ் ததாப்யர்திதான் வீக்ஷ்ய பகவான் ஆத்மபூர் அஜ:
க்ருபயா பரயா தேவ உவாச பரிஸாந்த்வயன்
தான்—அவர்களை (தேவர்களை); ததா—அவ்வாறு; அப்யர்திதான்—அசுரர்களின் ஆயுதங்களால் காயப்படுத்தப்பட்ட; வீக்ஷ்ய—கண்டு; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த: ஆத்ம-பூ:—பிரம்ம தேவர்; அஜ:—சாதாரண மனிதர்களைப் போல் பிறக்காத; க்ருபயா—தனிப்பெருங் கருணையினால்; பரயா—மேலான; தேவ:—பிரம்ம தேவர்; உவாச—கூறினார்; பரிஸாந்த்வயன்—அவர்களை சாந்தப்படுத்தி.
அசுரர்களின் அம்புகளால் கடுமையாக காயப்படுத்தப்பட்ட உடல்களுடன் தேவர்கள் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும், மிகவும் சக்தி வாய்ந்தவரான பிரம்ம தேவர் தமது தனிப் பெரும் கருணையினால் அவர்களை சாந்தப்படுத்தி பின்வருமாறு கூறலானார்.
பதம் 6.7.21
ஸ்ரீ-ப்ரஹ்மோவாச
அஹோ பத ஸுர-ஸ்ரேஷ்டா ‘ஹி அபத்ரம் வ: க்ருதம் மஹத்
ப்ரஹ்மிஷ்டம் ப்ராஹ்மணம் தாந்தம் ஜஸ்வர்யான் நாப்யனந்தத
ஸ்ரீ-ப்ரஹ்மா உவாச—பிரம்ம தேவர் கூறினார்; அஹோ—ஐயோ; பத—ஆச்சரியமாக உள்ளது; ஸுர-ஸ்ரேஷ்டா:—தேவர்களில் சிறந்தவர்களே; ஹி—உண்மையில்; அபத்ரம்—அநீதி; வ:—உங்களால்; க்ருதம்—இழைக்கப்பட்டது; மஹத்—பெரிய; ப்ரஹ்மிஷ்டம்—பரப்பிரம்மனிடம் முழுமையாகச் சரணடைந்தவரும்; ப்ராஹ்மணாம்—ஒரு பிராமணரும்; தாந்தம்—மனதையும், புலன்களையும் முழுமையாக அடக்கியவருமான; ஐஸ்வர்யாத்—உங்களுடைய பௌதிக ஐசுவரியத்தினால்; ந—இல்லை; அப்யநந்தத—முறையாக வரவேற்றீர்கள்.
பிரம்மதேவர் கூறினார்: தேவர்களில் சிறந்தவர்களே, துரதிர்ஷ்டவசமாக உங்களுடைய பெளதிக செல்வத்தினால் விளைந்த மதத்தின் காரணத்தினால், பிருஹஸ்பதி உங்கள் அவைக்கு வந்த பொழுது அவரை நீங்கள் முறையாக வரவேற்கத் தவறிவிட்டீர்கள். அவர் பரப்பிரம்மனை அறிந்தவரும், தன் புலன்களை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும் என்பதால், அவர் பிராமணர்களிலேயே மிகச் சிறந்தவராவார். எனவே அவரிடம் நீங்கள் அறிவீனமாக நடந்து கொண்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
பதம் 6.7.22
தஸ்யாயம் அனயஸ்யாஸீத் பரேப்யோ வ: பராபவ:
ப்ரஷீணேப்ய: ஸ்வ-வைரிப்ய: ஸம்ருத்தானாம் ச யத் ஸுரா:
தஸ்ய—அது; அயம்—இது; அனயஸ்ய—உங்களுடைய நன்றிகெட்ட செயலின்; ஆஸீத்—இருந்தது; பரேப்ய:—பிறரால்; வ:—உங்கள் அனைவரின்; பராபவ:—தோல்வி; ப்ரக்ஷிணேப்ய:—அவர்கள் பலவீனமானவர்கள் என்றாலும்; ஸ்வ-வைரிப்ய:—முன்பு உங்களால் தோற்கடிக்கப்பட்ட உங்களுடைய எதிரிகளால்; ஸம்ருத்தானாம்—அதிக செல்வத்தைப் பெற்றுள்ள நீங்கள்; ச—மேலும்; யத்—எது; ஸுரா:—தேவர்களே.
பிருஹஸ்பதியிடம் நீங்கள் தவறாக நடந்து கொண்டதால் நீங்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டீர்கள் தேவர்களே. உங்களால் பலமுறை தோற்படிக்கப்பட்ட அசுரர்கள் பலவீனமானவர்கள் என்பதால், அதிக செல்வத்தைப் பெற்றுள்ள நீங்கள் வேறு எவ்வாறு அவர்களால் வெல்லப்படக்கூடும்?
பதம் 6.7.23
மகவன் த்விஷத: பஸ்ய ப்ரஷீணான் குரு-அதிக்ரமாத்
ஸம்ப்ரதி உபசிதான் பூய: காவ்யம் ஆராத்ய பக்தித
ஆததீரன் நிலயனம் மமாபி ப்ருகு-தேவதா:
மகவன்—இந்திரனே; த்விஷத—உனது எதிரிகள்; பஸ்ய—சற்று கவனி; ப்ரஷீணான்—(முன்பு) மிகவும் பலவீனமாக இருந்த; குரு-அதிக்ரமாத்—அவர்களுடைய குரு சுக்ராசார்யரை அவமதித்ததால்; ஸம்ப்ரதி—தற்பொழுது; உபசிதான்—சக்திவாய்ந்தவர்களாக உள்ளனர்; பூய:—மீண்டும்; காவ்யம்—அவர்களுடைய குரு சுக்ராசார்யரை; ஆராத்ய—வழிபட்டு; பக்தித:—மிகவும் பக்தியுடன்; ஆததீரன்—கைப்பற்றக்கூடும்; நிலயனம்—சத்தியலோகத்தை; மம—எனது; அபி—கூட; ப்ருகு-தேவதா:—இப்பொழுது பிருகுவின் சீடரான சுக்ராசார்யரின் உறுதியான பக்தர்களாக உள்ள அவர்கள்.
இந்திரனே, உன் பகைவர்களாக அசுரர்கள், சுக்ராசார்யரை அவமதித்தால் மிகவும் பலவீனம் அடைந்திருந்தனர். ஆனால் அவர்கள் மிகுந்த பக்தியுடன் சுக்ராசார்யரை இப்பொழுது வழிபட்டு மீண்டும் சக்தியுடையவர்களாக மாறியுள்ளனர். சுக்ராசார்யரிடம் கொண்ட பக்தியினால் அவர்கள் தங்களுடைய பலத்தை மிகவும் அதிகமாக பெருக்கிக் கொண்டிருப்பதால், என்னிடமிருந்து என்னுடைய லோகத்தைக் கூட அவர்களால் சுலபமாகக் கைப்பற்ற முடியும்.
பதம் 6.7.24
த்ரிபிஷ்டபம் கிம் கணயந்தி அபேத்ய-
மந்த்ரா ப்ருகூணாம் அனுசிக்ஷிதார்தா:
ந விப்ர-கோவிந்த-கவ்-ஈஸ்வராணாம்
பவந்தி அபத்ராணி நரேஸ்வராணாம்
த்ரி-பிஷ்ட-பம்—பிரம்ம தேவர் உட்பட அனைத்து தேவர்களும்; கிம்—என்ன; கணயந்தி—அவர்கள் கவலைப்படுகின்றனர்; அபேத்ய-மந்த்ரா:—தங்கள் ஆன்மீக குருவின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் தகர்க்க முடியாத உறுதி கொண்டுள்ள; ப்ருகூணாம்—சுக்ராசாரியரைப் போன்ற பிருகு முனிவருடைய சீடர்களின்; அனுசிக்ஷித-அர்தா:—உபதேசங்களைப் பின்பற்ற முடிவுசெய்து; ந—இல்லை; விப்ர—பிராமணர்களையும்; கோவிந்த—பரமபுருஷரான கிருஷ்ணரையும்; கோ—பசுக்களையும்; ஈஸ்வராணாம்—ஆதரிப்பவர்களின் அல்லது வழிபாட்டுக்குரியவர்களாகக் கருதுபவர்களின்; பவந்தி—இருக்கின்ற; அபத்ராணி—எந்த துரதிர்ஷ்டமும்; நர-ஈஸ்வராணாம்—அல்லது இக்கொள்கையைப் பின்பற்றும் அரசர்களின்.
சுக்ராசாரியரின் உபதேசங்களைப் பின்பற்றுவதில் திடமான உறுதி கொண்டிருந்ததால், அவருடைய சீடர்களான அசுரர்கள் இப்பொழுது தேவர்களைப் பற்றிய கவலையில்லாமல் இருக்கின்றனர். உண்மையில், பிராமணர்கள், பசுக்கள், பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரின் கருணையில் திடமான நம்பிக்கைக் கொண்டுள்ளவர்களும், இம்மூவரையும் எப்பொழுதும் பூஜிப்பவர்களுமான அரசர்களும் மற்றவர்களும் தங்கள் நிலையில் எப்பொழுதும் வலிமை உடையவர்களாக இருப்பார்கள்.
பதம் 6.7.25
தத் விஸ்வரூபம் பஜதாசு விப்ரம்
தபஸ்வினம் த்வாஷ்ட்ரம் அதாத்மவந்தம்
ஸபாஜிதோ ‘ர்தான் ஸ விதாஸ்யதே வோ
யதி க்ஷமிஷ்யத்வம் உதாஸ்ய கர்ம
தத்—ஆகவே; விஸ்வரூபம்—விஸ்வரூபரை; பஜத—குருவாக வழிபடுங்கள்; ஆசு—உடனே; விப்ரம்—சிறந்த பிராமணரான; தபஸ்வினம்—கடும் தவ விரதங்களைச் செய்யும்; த்வாஷ்ட்ரம்—துவஷ்டாவின் மகன்; அத—கூட; ஆத்ம-வந்தம்—மிகவும் சுதந்திரமாக; ஸபாஜித:—வழிபட்டு; அர்தான்—விருப்பங்களை; ஸ:—அவன்; விதாஸ்யதே—நிறைவேற்றுவான்; வ:—உங்கள் எல்லோருடைய; யதி—என்றால்; க்ஷமிஷ்யத்வம்—நீங்கள் பொறுத்துக் கொள்ளுங்கள்; உத—உண்மையில்; அஸ்ய—அவனது; கர்ம—(அசுரர்களை ஆதரிக்கும்) செயல்களை.
ஆகவே, தேவர்களாகிய நீங்கள் துவஷ்டாவின் புதல்வனான விஸ்வரூபனை அணுகி, அவனை உங்களுடைய குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவன் தவங்களையும், விரதங்களையும் மேற்கொண்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த, தூய பிராமணனாவான். உங்களுடைய வழிபாட்டினால் திருப்தியடைந்து உங்களுடைய விருப்பங்களை அவன் நிறைவேற்றுவான். ஆனால் அசுரர்களின் பக்கம் மனம் சாய்ந்தவனான அவனது குணத்தை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
பதம் 6.7.26
ஸ்ரீ-சுக உவாச
த ஏவம் உதிதா ராஜன் ப்ரஹ்மணா விகத-ஜ்வரா:
ரிஷிம் த்வாஷ்ட்ரம் உபவ்ரஜ்ய பரிஷ்வஜ்யேதம் அப்ருவன்
ஸ்ரீ-சுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தே—எல்லாத் தேவர்களும்; ஏவம்—இவ்வாறு; உதிதா:—அறிவுறுத்தப்பட்டு; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; ப்ரஹ்மணா—பிரம்ம தேவரால்; விசுத-ஜ்வரா:—அசுரர்களால் விளைவிக்கப்பட்ட கவலையிலிருந்து விடுவிக்கப்பட்டு; ரிஷிம்—சிறந்த முனிவரான; த்வஷ்ட்ரம்—துவஷ்டாவின் புத்திரரிடம்; உபவ்ரஜ்ய—சென்று; பரிஷ்வஜ்ய—தழுவிக் கொண்டு; இதம்—இதை; அப்ருவன்—கூறினர்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே இவ்வாறு பிரம்மதேவரால் அறிவுறுத்தப்பட்டு, தங்களுடைய கவலையிலிருந்து விடுபட்ட அனைத்து தேவர்களும், துவஷ்டாவின் புதல்வரான விஸ்வரூப முனிவரிடம் சென்று, அவரைத் தழுவிக் கொண்டு பின்வருமாறு கூறினர்.
பதம் 6.7.27
ஸ்ரீ-தேவா ஊசு:
வயம் தே ‘திதய: ப்ராப்தா ஆஸ்ரமம் பத்ரம் அஸ்து தே
காம: ஸம்பாத்யதாம் தாத பித்ரூணாம் ஸமயோசித:
ஸ்ரீ-தேவா: ஊசு:—தேவர்கள் கூறினர்; வயம்—நாங்கள்; தே—உன்னுடைய; அதிதய:—விருந்தினர்களாக; ப்ராப்தா:—வந்திருக்கிறோம்; ஆஸ்ரமம்—உன்னுடைய ஆசிரமத்திற்கு; பத்ரம்—மங்களம்; அஸ்து—உண்டாகட்டும்; தே—உனக்கு; காம:—ஆசை; ஸம்பாத்யதாம்— நிறைவேற்றப்படட்டும்; தாத—அன்பிற்குரியவனே; பித்ரூணாம்—உன்னுடைய தந்தைகளைப் போன்ற எங்களின்; ஸமயோசித:—தற்போதுள்ள காலத்திற்குத் தகுந்தபடி.
தேவர்கள் கூறினர்: அன்பிற்குரிய விஸ்வரூபா உனக்கு மங்களம் உண்டாகட்டும். தேவர்களாகிய நாங்கள் உன்னுடைய ஆசிரமத்திற்கு விருந்தினர்களாக வந்திருக்கிறோம். உன்னுடைய பெற்றோர்களைப் போன்ற நிலையில் நாங்கள் இருப்பதால், எங்களுடைய விருப்பங்களை காலத்திற்குத் தகுந்தபடி நிறைவேற்றி வைக்க வேண்டும்.
பதம் 6.7.28
புத்ராணாம் ஹி பரோ தர்ம: பித்ரு-சுஸ்ரூஷணம் ஸதாம்
அபி புத்ரவதாம் ப்ரஹ்மன் கிம் உத ப்ரஹ்மசாரிணாம்
புத்ராணாம்—மகன்களின்; ஹி—உண்மையில்; பர:—மேலான; தர்ம:—தர்மமாகும்; பித்ரு சுஸ்ரூஷணம்—பெற்றோர்களுக்குச் சேவை செய்வதே; ஸதாம்—நல்லது; அபி—கூட; புத்ர-வதாம்—மகன்களை உடையவர்களின்; ப்ரஹ்மன்—பிரியமுள்ள பிராமணனே; கிம் உத— என்னென்று சொல்வது; ப்ரஹ்மசாரிணாம்—பிரம்மச்சாரிகளைப் பற்றி.
பிராமணனே, ஒருவன் தனது சொந்த மகன்களைப் பெற்றிருந்த போதிலும், தன்னுடைய பெற்றோர்களுக்குச் சேவை செய்வதே அவனுடைய தலையாய கடமையாகும். அப்படியிருக்க பிரம்மச்சாரியாக உள்ள ஒரு மகனைப் பற்றி என்னவென்று சொல்வது?
பதங்கள் 6.7.29 – 6.7.30
ஆசார்யோ ப்ரஹ்மணோ மூர்த்தி: பிதா மூர்த்தி: ப்ரஜாபதே:
ப்ராதா மருத்ப்தேர் மூர்த்திர் மாதா ஸாக்ஷாத் க்ஷிதேஸ் தனு:
தயாயா பகினீ மூர்த்திர் தர்மஸ்யாத்மாதிதி: ஸ்வயம்
அக்னேர் அப்யாகதோ மூர்த்தி: ஸர்வ-பூதானி சாத்மன:
ஆசார்ய:—தமது சொந்த உதாரணத்தினால் வேத ஞானத்தை உபதேசிக்கும் ஆசான் அல்லது ஆன்மீக குரு; ப்ரஹ்மண:—அனைத்து வேதங்களின்; மூர்த்தி:—உருவானவர்; பிதா—தந்தை; மூர்த்தி—சொரூபமானவர்; ப்ரஜாபதே:—பிரம்ம தேவரின்; ப்ராதா—சகோதரன்; மருத்-பதே: மூர்த்தி:—இந்திரனின் சொரூபமாவான்; மாதா—தாய்; ஸாக்ஷாத்—நேரடியாக; க்ஷிதே:—பூமியின்; தனு:—உடல்; தயாயா:—கருணையின்; பகினீ—சகோதரி; மூர்த்தி:—வடிவானவள்; தர்மஸ்ய—தர்மத்தின்; ஆத்ம—தனக்குத்தானே; அதிதி:—அதிதியானவள்; ஸ்வயம்—சுயமாக; அக்னே:—அக்னிதேவனின்; அப்யாகத:—அழைக்கப்பட்ட விருந்தாளி; மூர்த்தி:—சொரூபமாவான்; ஸர்வ-பூதானி—அனைத்து ஜீவராசிகளும்; ச—மேலும்; ஆத்மன:—பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவின்.
அனைத்து வேத ஞானத்தையும் போதிப்பவரும், பூணூல் அணிவித்து தீட்சை அளிப்பவரும், ஆசார்யருமாகிய ஆன்மீக குரு வேதமே உருவானவர். அதுபோலவே ஒரு தந்தை பிரம்மதேவரின் சொரூபமாக விளங்குகிறார்; ஒரு சகோதரன் இந்திர சொரூபமாவான்; தாயானவள் பூதேவியின் சொரூபமாவாள்; சகோதரி கருணையே வடிவானவள்; அதிதியானவன் தர்ம சொரூபியாவான்; அழைக்கப்பட்ட விருந்தாளி அக்னி தேவரின் சொரூபமாவாள்; அனைத்து ஜீவராசிகளும் பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவின் சொரூபமாவார்.
பதம் 6.7.31
தஸ்மாத் பித்ரூணாம் ஆர்த்தானாம் ஆர்திம் பர-பராபவம்
தபஸாபனயம்ஸ் தாத ஸந்தேசம் கர்தும் அர்ஹஸி
தஸ்மாத்—ஆகவே; பித்ரூணாம்—பெற்றோர்களின்; ஆர்தானாம்—வருத்தத்தில் உள்ள; ஆர்திம்—வருத்தத்தை; பர-பராபவம்—எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டு; தபஸா—உன்னுடைய தவ வலிமையினால்; அபனயன்—அகற்றி; தாத—பிரிய மகனே; ஸந்தேசம்—எங்களுடைய விருப்பத்தை: கர்தும் அர்ஹஸி—நிறைவேற்ற நீ தகுதியுடையவன்.
அன்பு மகனே, நாங்கள் பகைவர்களால் தோற்கடிக்கப்பட்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். தயவுசெய்து உனது தவவலிமையினால் எங்களுடைய பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்த்து, எங்களுடைய துன்பங்களைப் போக்கி, கருணைகூர்ந்து எங்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
பதம் 6.7.32
வ்ருணீமஹே த்வோபாத்யாயம் ப்ரஹ்மிஷ்டம் ப்ராஹ்மணம் குரும்
யதாஞ்ஜஸா விஜேஷ்யாம: ஸபத்னாம்ஸ் தவ தேஜஸா
வ்ருணீமஹே—நாங்கள் தேர்வு செய்துள்ளோம்; த்வா—உன்னை; உபாத்யாயம்—ஆசானாகவும், ஆன்மீக குருவாகவும்; ப்ரஹ்மிஷ்டம்—பரப்பிரம்மனைப் பூரணமாக அறிந்திருப்பதால்; ப்ராஹ்மணம்—தகுதியுள்ள பிராமணனாகிய; குரும்—பக்குவமுள்ள ஆன்மீக குருவாகிய; யதா—இதனால்; அஞ்ஜஸா—மிகச் சுலபமாக; விஜேஷ்யாம்:—நாங்கள் வென்று விடுவோம்; ஸபத்னான்—எங்கள் எதிரிகளை; தவ—உன்னுடைய; தேஜஸா—தவ வலிமையினால்.
நீ பரப்பிரம்மனை முழுமையாக அறிந்திருப்பதால், நீ மிகச் சிறந்த ஒரு பிராமணனாவாய். ஆகவே எல்லாப் பிரிவினருக்கும் ஆன்மீக குருவாக நீ விளங்குகிறாய். உன்னை எங்களுடைய ஆன்மீக குருவாகவும் வழிகாட்டியாகவும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதனால் உனது தவ வலிமையினால் எங்களை வென்ற பகைவர்களை எங்களால் சுலபமாக வென்று விட முடியும்.
பதம் 6.7.33
ந கர்ஹயந்தி ஹி அர்தேஷு யவிஷ்டாங்ரி-அபிவாதனம்
சந்தோப்யோ ‘ன்யத்ர ந ப்ரஹ்மன் வயோ ஜ்யைஷ்ட்யஸ்ய காரணம்
ந—இல்லை; கர்ஹயந்தி—தடுக்கப்படுவது; ஹி—உண்மையில்; அர்தேஷு—நன்மையடைவதில்; யவிஷ்ட-அங்ரி—இளையவரின் தாமரைப் பாதங்களில்; அபிவாதனம்—வணங்குவது; சந்தோப்ய:—வேத மந்திரங்களை; அன்யத்ர—தவிர; ந—இல்லை; ப்ரஹ்மன்—பிராமணனே; வய:—வயது; ஜ்யைஷ்ட்யஸ்ய—முதுமையின்; காரணம்—காரணம்.
தேவர்கள் தொடர்ந்து கூறினர்: எங்களை விட இளையவனாக இருப்பதால், நிந்தனைக்குள்ளாவாய் என்று அஞ்ச வேண்டாம். இத்தகைய ஆசாரம் வேத மந்திரங்களின் விஷயத்தில் பொருந்துவதில்லை. வேதமந்திரங்களுடனான சம்பந்தத்தைத் தவிர மற்ற விஷயங்களில், வயது முதுமையே ஒருவரது மேம்பட்ட நிலையைத் தீர்மானிக்கிறது. ஆனால் வேத மந்திரங்களை ஓதுவதில் முன்னேறிய ஒருவர் இளையவராக இருப்பினும், அவரை வயது முதிர்ந்த ஒருவர் மரியாதையுடன் வணங்குவதில் தவறில்லை. ஆகவே நீ எங்களைவிட வயதில் இளையவன் என்றாலும், தயக்கமின்றி நீ எங்களுடைய புரோகிதனாகலாம்.
பதம் 6.7.34
ஸ்ரீ-ரிஷிர் உவாச
அப்யர்தித: ஸுர-கணை: பௌரஹித்யே மஹா-தபா:
ஸ விஸ்வரூபஸ் தான் ஆஹ ப்ரஸன்ன: ஸ்வக்ஷ்ணயா கிரா
ஸ்ரீ-ரிஷி: உவாச—சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்; அப்யர்தித—வேண்டிக்கொள்ளப்பட்டு; ஸுர-கணை:—தேவர்களால்; பெளரஹித்யே—புரோகிதனாக இருப்பதை ஏற்பதில்; மஹா-தபா:—தவ விரதங்களில் மிகவும் முன்னேறிய; ஸ:—அவர்; விஸ்வரூப:—விஸ்வரூபர்; தான்—தேவர்களிடம்; ஆஹ—பேசினார்; ப்ரஸ்ன்ன:—திருப்தியடைந்து; ஸ்லக்ஷ்ணயா—இனிய; கிரா—வார்த்தைகளால்.
தவ விரதங்களில் மிகவும் முன்னேறியிருந்த விஸ்வரூபர் தங்களது புரோகிதராக இருக்கும்படி தேவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டு, மிகவும் திருப்தியடைந்து பின்வருமாறு பதில் கூறலானார்.
பதம் 6.7.35
ஸ்ரீ-விஸ்வரூப உவாச
விகர்ஹிதம் தர்ம-சீலைர் ப்ரஹ்மவர்ச-உபவ்யயம்
கதம் நு மத்-விதோ நாதா லோகேசைர் அபியாசிதம்
ப்ரத்யாக்யாஸ்யதி தச்-சிஷ்ய: ஸ ஏவ ஸ்வார்த்த உச்யதே
ஸ்ரீ-விஸ்வரூப: உவாச—ஸ்ரீ விஸ்வரூபர் கூறினார்; விகர்ஹிதம்—இகழப்படுகிறது; தர்ம-சீலை:—தர்ம சீலர்களால்; ப்ரஹ்ம-வர்ச:—பிரம்ம தேஜசின்; உபவ்யயம்—இழப்பிற்குக் காரணமாகிறது; கதம்—எவ்வாறு; நு—உண்மையில்; மத்-வித:—என்னைப் போன்ற ஒருவன்; நாதா:—தலைவர்களே; லோக-ஈசை:—வெவ்வேறு கிரகங்களை ஆளும் சக்திகளால்; அபியாசிதம்—வேண்டுகோளை; ப்ரத்யாக்யாஸ்யதி—நிராகரிப்பேன்; தத்-சிஷ்ய:—அவர்களுடைய சீடர்களின் நிலையிலுள்ள; ஸ:—அது; ஏவ—உண்மையில்; ஸ்வ-அர்த:—உண்மையான நன்மை; உச்யதே—என்று விவரிக்கப்படுகிறது.
ஸ்ரீ விஸ்வரூபர் கூறினார்: தேவர்களே, புரோகிதத் தொழிலை ஏற்பதானது ஏற்கனவே அடையப்பட்ட பிராமண தேஜசை இழப்பதற்குக் காரணமாகும் என்று இகழப்படுகிறது. இருப்பினும் நீங்கள் எல்லோரும் பிரபஞ்ச ஆளுனர்கள் என்பதால் உங்களுடைய தனிப்பட்ட வேண்டுகோளை என்னைப் போன்ற ஒருவனால் எப்படி நிராகரிக்க முடியும்? உங்களுடைய சீடனாகிய நான் உங்களிடமிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே உங்களுக்கு நான் மறுப்புக் கூற முடியாது. என்னுடைய சொந்த நன்மைக்காக அதற்கு நான் சம்மதிக்கத்தான் வேண்டும்.
பதம் 6.7.36
அகிஞ்சனானாம் ஹி தனம் சிலோஞ்சனம்
தேனேஹ நிர்வர்தித-ஸாது-ஸத்க்ரிய:
கதம் விகர்ஹ்யம் நு கரோமி அதீஸ்வரா:
பௌரோதஸம் ஹ்ருஷ்யதி யேன துர்மதி:
அகிஞ்சனானம்—பெளதிக உடைமைகளின் பற்றைத் துறப்பதற்காக தவ, விரதங்களை ஏற்றுக் கொண்டுள்ளவர்களின்: ஹி—நிச்சயமாக; தனம்—செல்வம்; சில—வயலில் மிஞ்சியுள்ள தானியங்களைச் சேகரிப்பதும்; உஞ்சனம்—மொத்த வியாபாரச் சந்தைகளில் விட்டுச் செல்லப்படும் தானியங்களைச் சேகரிப்பதும்; தேன—அந்த வழியின் மூலம்; இஹ—இங்கு; நிர்வர்தித—நிறைவேற்றுதல்; ஸாது—உயர்ந்த பக்தர்களின்; ஸத்-க்ரிய:—எல்லாப் புண்ணியச் செயல்களையும்; கதம்—எப்படி; விகர்ஹ்யம்—நிந்தனைக்குரிய; நு—உண்மையில்; கரோமி—நான் நிறைவேற்றுவேன்; அதீஸ்வரா:—கிரக அமைப்புகளின் சிறந்த ஆளுனர்களே; பௌரோதஸம்—புரோகிதத் தொழில்; ஹ்ருஷ்யதி—திருப்தியடைகிறான்; யேன—எதனால்; துர்மதி—குறைமதியாளன்.
பல்வேறு கிரகங்களின் சிறந்த ஆளுனர்களே, பெளதிக உடைமைகள் இல்லாத உண்மையான பிராமணன் சிலோஞ்சன தொழிலை ஏற்றுத் தன் வாழ்வை நடத்துகிறான். அதாவது, அறுவடைக்குப்பின் வயலில் சிதறிக்கிடக்கும் தானியங்களையும், மொத்த வியாபாரச் சந்தையில் சிதறிக் கிடக்கும் தானியங்களையும் சேகரித்து அவன் தன் வாழ்வை நடத்துகிறான். தவ விரதக் கோட்பாடுகளை உண்மையாகப் பின்பற்றும் குடும்பஸ்த பிராமணர்கள் இந்த முறையின் மூலமாக தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பராமரிப்பதுடன், அவசியமான புண்ணியச் செயல்களையும் நிறைவேற்றுகின்றனர். புரோகிதத் தொழிலின் மூலமாகப் பொருளீட்டி மகிழ்ச்சியடைய விரும்பும் ஒரு பிராமணன் நிச்சயமாக இழிவான மனதுடையவனாக இருக்க வேண்டும். இத்தகைய புரோகிதத் தொழிலை எவ்வாறு நான் ஏற்றுக் கொள்வேன்?
பதம் 6.7.37
ததாபி ந ப்ரதிப்ரூயாம் குருபி: ப்ரார்த்திதம் கியத்
பவதாம் ப்ரார்திதம் ஸர்வம் ப்ராணைர் அர்தைஸ் ச ஸாதயே
ததா அபி—இருப்பினும்; ந—இல்லை; ப்ரதிப்ரூயாம்—நான் மறுக்கக்கூடும்; குருபி:—என் ஆன்மீக குருவின் அந்தஸ்தில் உள்ளவர்களின்; ப்ரார்திதம்—வேண்டுகோள்; கியத்—குறைந்த மதிப்புடைய; பவதாம்—உங்கள் அனைவரின்; ப்ரார்திதம்—விருப்பம்; ஸர்வம்—முழு; ப்ராணை:—எனது உயிரைக் கொண்டு; அர்தை:—எனது உடைமைகளைக் கொண்டு; ச—கூட; ஸாதயே—நான் நிறைவேற்றுவேன்.
நீங்கள் அனைவரும் என்னை விட வயதில் மூத்தவர்கள். ஆகவே புரோகிதத் தொழிலை ஏற்றுக் கொள்வதானது சிலசமயங்களில் நிந்தனைக்குரியது என்றாலும், உங்களுடைய ஒரு சிறு வேண்டுகோளைக் கூட என்னால் மறுக்க முடியாது. எனவே உங்களுடைய புரோகிதனாக இருக்க நான் சம்மதிக்கிறேன். என்னுடைய உயிரையும் பொருளையும் அர்ப்பணித்தாவது உங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றுவேன்.
பதம் 6.7.38
ஸ்ரீ பாதராயணிர் உவாச
தேப்ய ஏவம் ப்ரதிஸ்ருத்ய விஸ்வரூபோ மஹா-தபா:
பெளரஹித்யம் வ்ருதஸ் சக்ரே பரமேண ஸமாதினா
ஸ்ரீ பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தேப்ய:—அவர்களுக்கு (தேவர்களுக்கு); ஏவம்—இவ்வாறு; ப்ரதிஸ்ருத்ய—வாக்களித்து; விஸ்வரூப:—விஸ்வரூபர்; மஹா-தபா:—மகா தபஸ்வியான; பௌரஹித்யம்—புரோகிதத் தொழிலை; வ்ருத:—அவர்களால் சூழப்பட்டபடி; சக்ரே—நிறைவேற்றினார்; பரமேண—உயர்ந்த; ஸமாதினா—கவனத்துடன்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, தேவர்களுக்கு இந்த வாக்குறுதியை அளித்தபின், மேன்மைக்குரியவரான விஸ்வரூபர். தேவர்களால் சூழப்பட்டபடி மிகவும் உற்சாகத்துடனும், கவனத்துடனும் தேவையான புரோகிதக் காரியங்களை நடத்தினார்.
பதம் 6.7.39
ஸுர-த்விஷாம் ஸ்ரியம் குப்தாம் ஒளசனஸ்யாபி வித்யயா
ஆச்சித்யாதான் மஹேந்ராய வைஷ்ணவ்யா வித்யயா விபு:
ஸுர-த்விஷாம்—தேவர்களுடைய பகைவர்களின்; ஸ்ரியம்—செல்வம் (சாம்ராஜ்யம்); குப்தாம்—காக்கப்பட்டது; ஒளசனஸ்ய—சுக்ராசர்யரின்; அபி—என்ற போதிலும்; வித்யயா—சாமர்த்தியத்தினால்; ஆச்சித்ய—சேகரித்து; அதாத்—கொடுக்கப்பட்டது; மஹா-இந்திராய—தேவேந்திரனுக்கு; வைஷ்ணவ்யா—பகவான் விஷ்ணுவின்; வித்யயா—ஒரு பிரார்த்தனையால்; விபு:—மிகவும் சக்திவாய்ந்த விஸ்வரூபர்.
பொதுவாக தேவர்களின் பகைவர்கள் என்று அறியப்படுபவர்களான அசுரர்களின் சாம்ராஜ்யமானது சுக்ராசார்யரின் சாமர்த்தியத்தாலும், தந்திரத்தாலும் காக்கப்பட்டது. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தவரான விஸ்வரூபர் நாராயண-கவசம் என்ற ஒரு பாதுகாப்புப் பிரார்த்தனையை இயற்றினார். புத்திசாலித்தனமான இந்த மந்திரத்தினால் விஷ்வரூபர் அசுர சாம்ராஜ்யத்தைக் கவர்ந்து, அதை சுவர்க்க ராஜனான மகேந்திரனக்குக் கொடுத்தார்.
பதம் 6.7.40
யயா குப்த: ஸஹஸ்ராக்ஷோ ஜிக்யே ‘ஸுர-சமூர் விபு:
தாம் ப்ராஹ ஸ மஹேந்ராய விஸ்வரூப உதார-தீ:
யயா—எதனால்; குப்த:—காக்கப்பட்டாரோ; ஸஹஸ்ர-அக்ஷ:—ஆயிரம் கண்களுடைய தேவேந்திரன்; ஜிக்யே—வென்றார்; அஸுர—அசுரர்களின்; சமூ:—படைபலத்தை; விபு:—மிகவும் பலசாலியாகி; தாம்—அதை; ப்ராஹ—கூறினார்; ஸ:—அவர்; மஹேந்ராய—சுவர்க்க ராஜனான மகேந்திரனுக்கு; விஸ்வரூப:—விஸ்வரூபர்; உதார-தீ:—உதார மனமுள்ள.
உதாரகுணம் உள்ளவரான விஷ்வரூபர், எந்த இரகசிய மந்திரம் இந்திரனைக் (ஸஹஸ்ராக்ஷ) காத்ததோ, அதை அவருக்கு உபதேசித்து, அசுர சேனைகளை வென்றார்.
ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “இந்திரன் தேவகுரு பிருஹஸ்பதியை அவமதித்தல்” எனும் தலைப்பை கொண்ட ஏழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.