அத்தியாயம் – 7
இந்திரன் தேவகுரு பிருஹஸ்பதியை
அவமதித்தல்
பதம் 6.7.1 : பரீட்சித்து மகாராஜன் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: மாமுனிவரே, தேவகுருவான பிருஹஸ்பதி ஏன் தமது சொந்த சீடர்களான தேவர்களைக் கைவிட்டார்? தேவர்களால் தங்களது குருவிடம் செய்யப்பட்ட குற்றம் என்னவென்று தயவுசெய்து விளக்கிக் கூறுங்கள்.
பதங்கள் 6.7.2 – 6.7.8 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, ஒரு சமயம், சுவர்க்க ராஜனான இந்திரன், மூவுலகங்களின் செல்வங்களுக்கும் அதிபதியாக இருந்த காரணத்தினால் மிகவும் கர்வமடைந்து வேத ஆசாரத்தின் விதியை மீறினார். அவர் மருத்கள், வஸுக்கள், ருத்திரர்கள், ஆதித்தியர்கள், ரிபுக்கள், விஸ்வதேவர்கள், சாத்யர்கள், அஸ்வினி குமாரர்கள், சித்தர்கள், சாரணர்கள், கந்தர்வர்கள் மற்றும் சிறந்த முனிவர்களால் சூழப்பட்டபடி தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார். வித்யாதரர்கள், அப்ஸரஸ்கள், கின்னரர்கள், பதகர்கள் (பறவைகள்) மற்றும் உரகர்கள் (பாம்புகள்) ஆகியோரும் அவரைச் சூழந்திருந்தனர். அவர்கள் அனைவரும் இந்திரனுக்கு மரியாதையுடன் சேவை செய்தனர். அப்ஸரஸ்களும், கந்தர்வர்களும் இனிமையான வாத்தியக் கருவிகளுடன் ஆடிப்பாடினர். இந்திரனின் தலைக்கு மேலே முழு நிலவைப் போல் பிராகாசமான ஒரு வெண்குடை இருந்தது. வெண்சாமரங்களால் விசிறப்பட்டும், சிறந்த அரசருக்குரிய உபகரணங்களால் சேவிக்கப்பட்டும் அமர்ந்திருந்த இந்திரனுடன் அவரது மனைவியான சசிதேவியும் பாதி சிம்மாசனத்தை நிரப்பியபடி அவருடன் அமர்ந்திருந்தாள். அப்பொழுது சிறந்த முனிவரான பிருஹஸ்பதி அந்த சபையில் தோன்றினார். முனிவர்களுள் சிறந்தவரான பிருஹஸ்பதி இந்திரன் முதலான தேவர்களின் ஆன்மீக குரு ஆவார். அவர் தேவர்களாலும் அசுரர்களாலும் சமமாக மதிக்கப்பட்டார். இருப்பினும், தன் முன் தனது ஆன்மீக குரு வந்திருப்பதைக் கண்ட இந்திரன் தன் ஆசனத்திலிருந்து எழுந்து நிற்கவோ அல்லது தன் குருவிற்கு ஆசனமளிக்கவோ அல்லது மரியாதையுடன் அவரை வரவேற்கவோ இல்லை. அவருக்கு மரியாதை காட்டும் வகையில் எதையுமே இந்திரன் செய்யவில்லை.
பதம் 6.7.9 : எதிர்காலத்தில் நிகழவிருக்கும் அனைத்தையும் பிருஹஸ்பதி அறிந்திருந்தார். இந்திரனின் அவமரியாதையைக் கண்ட அவர், அது செல்வச் செருக்கினால் ஏற்பட்ட திமிர் என்பதை முழுமையாகப் புரிந்து கொண்டார். அவர் இந்திரனைச் சபிக்கக் கூடியவர் என்றாலும் அவ்வாறு செய்யாமல், மௌனமாக அந்த சபையை விட்டு வெளியேறி தமது வீட்டிற்குத் திரும்பினார்.
பதம் 6.7.10 : அப்பொழுது சுவர்க்கராஜனான இந்திரன் தன்னால் குருவிற்கு ஏற்பட்ட அவமதிப்பை உணர்ந்து, சபையோரின் முன்னிலையில் தன்னையே நொந்து கொண்டார்.
பதம் 6.7.11 : ஐயோ! என்னுடைய அறிவு பற்றாக் குறையினாலும், செல்வச் செருக்கினாலும் எத்தகைய வெறுக்கத்தக்க செயலை நான் செய்து விட்டேன்! இந்த சபைக்குள் பிரவேசித்த எனது ஆன்மீக குருவிற்கு மரியாதை செலுத்தாமல் அவரை நான் அவமதித்து விட்டேனே!
பதம் 6.7.12 : நான் சத்வ குணத்திலுள்ள தேவர்களின் அரசனாக இருந்தும், சிறிதளவு செல்வத்தினால் கர்வம் பிடித்தவனாகி பொய் அகங்காரத்தினால் களங்கப்பட்டவனானேன். இந்நிலையில் இவ்வுலகிலுள்ள யார் தான் இத்தகைய செல்வங்களை ஏற்று இழிவடையும் ஆபத்தைத் தேடிக் கொள்வார்கள்? ஐயோ! என் செல்வத்தையும்,ஐசுவரியத்தையும் நான் நொந்து கொள்கிறேன்.
பதம் 6.7.13 : “ஓர் அரசருக்குரிய உயர்ந்த சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பவன் எழுந்து நின்று வேறொரு அரசருக்கோ அல்லது ஒரு பிராமணருக்கோ மரியாதை செலுத்தக் கூடாது” என்று கூறுபவன் உயர்ந்த சமயக் கோட்பாடுகளை அறியாதவன் என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும்.
பதம் 6.7.14 : (முந்திய சுலோகத்தில் விவரிக்கப்பட்டதுபோல்) அறியாமையில் விழுந்துவிட்டவர்களும், மக்களை அழிவுப் பாதையில் தவறாக வழிநடத்திச் செல்பவர்களுமான தலைவர்களும், குருட்டுத்தனமாக அவர்களைப் பின்பற்றுபவர்களும், உண்மையில் கல்லினால் செய்யப்பட்ட ஒரு படகில் ஏறிக் கொள்பவர்களைப் போன்றவர்களாவர். கல்லாலான ஒரு படகு மிதக்க முடியாமல் அதிலுள்ள பயணிகளுடன் நீரில் மூழ்கிவிடும். அதுபோலவே, மக்களைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் நரகத்திற்குச் செல்வார்கள். அவர்களைப் பின்பற்றிச் செல்வோரும் நரகத்திற்கே செல்வார்கள்.
பதம் 6.7.15 : தேவேந்திரன் கூறினார்: ஆகவே மிகவும் வெளிப்படையாகவும், வஞ்சகமில்லாமலும் தேவ குருவான பிருஹஸ்பதியின் தாமரைப் பாதங்களில் இப்பொழுது என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன். சாத்வீக குணத்தில் இருப்பதால் அவர் எல்லா அறிவையும் முழுமையாகப் பெற்றவரும், சிறந்த பிராமணரும் ஆவார். இப்பொழுது நான் அவருடைய தாமரைப் பாதங்களைத் தொட்டு வணங்கி அவரை திருப்திப்படுத்த முயல்வேனாக.
பதம் 6.7.16 : தேவராஜனான இந்திரன் இவ்வாறு சிந்தித்தப்படி தனது அவையில் வருந்திக் கொண்டிருந்த பொழுது, அவருடைய மனதை, மிகவும் சக்தி வாய்ந்த குருவாகிய பிருஹஸ்பதியால் புரிந்து கொள்ள முடிந்தது. இவ்விதமாக தேவேந்திரனை விட அதிக ஆன்மீக சக்தியுடையவரான பிருஹஸ்பதி, இந்திரனால் காணமுடியாதபடி தன் வீட்டிலிருந்து மறைந்து போனார்.
பதம் 6.7.17 : இந்திரன் மற்ற தேவர்களின் உதவியுடன் கடுமையாகத் தேடியும் பிருஹஸ்பதியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்பொழுது இந்திரன், “ஐயோ, எனது ஆன்மீக குரு என்னிடம் அதிருப்தி அடைந்துவிட்டதால் இப்பொழுது எனக்கு நல்லதிர்ஷ்டத்தைப் பெறும் வழிமுறை இல்லாது போயிற்றே” என்று வருந்தினார். இந்திரன் தேவர்களால் சூழப்பட்டிருந்தும் மன நிம்மதியை இழந்து தவித்தார்.
பதம் 6.7.18 : தேவேந்திரனின் பரிதாபகரமான இந்த நிலையைப்பற்றி கேள்விப்பட்ட அசுரர்கள், தங்களுடைய குருவான சுக்ராசார்யரின் உபதேசங்களைப் பின்பற்றி, ஆயுதங்களைத் திரட்டிக் கொண்டு, தேவர்களை எதிர்த்துப் போர் தொடுத்தனர்.
பதம் 6.7.19 : அசுரர்களால் விடப்பட்ட கூரிய அம்புகளால் தேவர்களுடைய தலைகளும், தொடைகளும், கைகளும், அவர்களுடைய உடல்களின் பிற பகுதிகளும் காயப்படுத்தப்பட்டன. இந்திரன் முதலான தேவர்கள் வேறு வழியில்லாமல், பாதுகாப்பிற்காகவும், தகுந்த அறிவுரைக்காகவும் தாழ்த்திய தலைகளுடன் உடனே பிரம்ம தேவரை அனுகினர்.
பதம் 6.7.20 : அசுரர்களின் அம்புகளால் கடுமையாக காயப்படுத்தப்பட்ட உடல்களுடன் தேவர்கள் தன்னை நோக்கி வருவதைக் கண்டதும், மிகவும் சக்தி வாய்ந்தவரான பிரம்ம தேவர் தமது தனிப் பெரும் கருணையினால் அவர்களை சாந்தப்படுத்தி பின்வருமாறு கூறலானார்.
பதம் 6.7.21 : பிரம்மதேவர் கூறினார்: தேவர்களில் சிறந்தவர்களே, துரதிர்ஷ்டவசமாக உங்களுடைய பெளதிக செல்வத்தினால் விளைந்த மதத்தின் காரணத்தினால், பிருஹஸ்பதி உங்கள் அவைக்கு வந்த பொழுது அவரை நீங்கள் முறையாக வரவேற்கத் தவறிவிட்டீர்கள். அவர் பரப்பிரம்மனை அறிந்தவரும், தன் புலன்களை முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பவரும் என்பதால், அவர் பிராமணர்களிலேயே மிகச் சிறந்தவராவார். எனவே அவரிடம் நீங்கள் அறிவீனமாக நடந்து கொண்டது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.
பதம் 6.7.22 : பிருஹஸ்பதியிடம் நீங்கள் தவறாக நடந்து கொண்டதால் நீங்கள் அசுரர்களால் தோற்கடிக்கப்பட்டீர்கள் தேவர்களே. உங்களால் பலமுறை தோற்படிக்கப்பட்ட அசுரர்கள் பலவீனமானவர்கள் என்பதால், அதிக செல்வத்தைப் பெற்றுள்ள நீங்கள் வேறு எவ்வாறு அவர்களால் வெல்லப்படக்கூடும்?
பதம் 6.7.23 : இந்திரனே, உன் பகைவர்களாக அசுரர்கள், சுக்ராசார்யரை அவமதித்தால் மிகவும் பலவீனம் அடைந்திருந்தனர். ஆனால் அவர்கள் மிகுந்த பக்தியுடன் சுக்ராசார்யரை இப்பொழுது வழிபட்டு மீண்டும் சக்தியுடையவர்களாக மாறியுள்ளனர். சுக்ராசார்யரிடம் கொண்ட பக்தியினால் அவர்கள் தங்களுடைய பலத்தை மிகவும் அதிகமாக பெருக்கிக் கொண்டிருப்பதால், என்னிடமிருந்து என்னுடைய லோகத்தைக் கூட அவர்களால் சுலபமாகக் கைப்பற்ற முடியும்.
பதம் 6.7.24 : சுக்ராசாரியரின் உபதேசங்களைப் பின்பற்றுவதில் திடமான உறுதி கொண்டிருந்ததால், அவருடைய சீடர்களான அசுரர்கள் இப்பொழுது தேவர்களைப் பற்றிய கவலையில்லாமல் இருக்கின்றனர். உண்மையில், பிராமணர்கள், பசுக்கள், பரமபுருஷராகிய ஸ்ரீ கிருஷ்ணர் ஆகியோரின் கருணையில் திடமான நம்பிக்கைக் கொண்டுள்ளவர்களும், இம்மூவரையும் எப்பொழுதும் பூஜிப்பவர்களுமான அரசர்களும் மற்றவர்களும் தங்கள் நிலையில் எப்பொழுதும் வலிமை உடையவர்களாக இருப்பார்கள்.
பதம் 6.7.25 : ஆகவே, தேவர்களாகிய நீங்கள் துவஷ்டாவின் புதல்வனான விஸ்வரூபனை அணுகி, அவனை உங்களுடைய குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அவன் தவங்களையும், விரதங்களையும் மேற்கொண்டுள்ள மிகவும் சக்தி வாய்ந்த, தூய பிராமணனாவான். உங்களுடைய வழிபாட்டினால் திருப்தியடைந்து உங்களுடைய விருப்பங்களை அவன் நிறைவேற்றுவான். ஆனால் அசுரர்களின் பக்கம் மனம் சாய்ந்தவனான அவனது குணத்தை நீங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
பதம் 6.7.26 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே இவ்வாறு பிரம்மதேவரால் அறிவுறுத்தப்பட்டு, தங்களுடைய கவலையிலிருந்து விடுபட்ட அனைத்து தேவர்களும், துவஷ்டாவின் புதல்வரான விஸ்வரூப முனிவரிடம் சென்று, அவரைத் தழுவிக் கொண்டு பின்வருமாறு கூறினர்.
பதம் 6.7.27 : தேவர்கள் கூறினர்: அன்பிற்குரிய விஸ்வரூபா உனக்கு மங்களம் உண்டாகட்டும். தேவர்களாகிய நாங்கள் உன்னுடைய ஆசிரமத்திற்கு விருந்தினர்களாக வந்திருக்கிறோம். உன்னுடைய பெற்றோர்களைப் போன்ற நிலையில் நாங்கள் இருப்பதால், எங்களுடைய விருப்பங்களை காலத்திற்குத் தகுந்தபடி நிறைவேற்றி வைக்க வேண்டும்.
பதம் 6.7.28 : பிராமணனே, ஒருவன் தனது சொந்த மகன்களைப் பெற்றிருந்த போதிலும், தன்னுடைய பெற்றோர்களுக்குச் சேவை செய்வதே அவனுடைய தலையாய கடமையாகும். அப்படியிருக்க பிரம்மச்சாரியாக உள்ள ஒரு மகனைப் பற்றி என்னவென்று சொல்வது?
பதங்கள் 6.7.29 – 6.7.30 : அனைத்து வேத ஞானத்தையும் போதிப்பவரும், பூணூல் அணிவித்து தீட்சை அளிப்பவரும், ஆசார்யருமாகிய ஆன்மீக குரு வேதமே உருவானவர். அதுபோலவே ஒரு தந்தை பிரம்மதேவரின் சொரூபமாக விளங்குகிறார்; ஒரு சகோதரன் இந்திர சொரூபமாவான்; தாயானவள் பூதேவியின் சொரூபமாவாள்; சகோதரி கருணையே வடிவானவள்; அதிதியானவன் தர்ம சொரூபியாவான்; அழைக்கப்பட்ட விருந்தாளி அக்னி தேவரின் சொரூபமாவாள்; அனைத்து ஜீவராசிகளும் பரமபுருஷராகிய பகவான் விஷ்ணுவின் சொரூபமாவார்.
பதம் 6.7.31 : அன்பு மகனே, நாங்கள் பகைவர்களால் தோற்கடிக்கப்பட்டு மிகுந்த வருத்தத்தில் உள்ளோம். தயவுசெய்து உனது தவவலிமையினால் எங்களுடைய பிரார்த்தனைகளுக்குச் செவி சாய்த்து, எங்களுடைய துன்பங்களைப் போக்கி, கருணைகூர்ந்து எங்களுடைய விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும்.
பதம் 6.7.32 : நீ பரப்பிரம்மனை முழுமையாக அறிந்திருப்பதால், நீ மிகச் சிறந்த ஒரு பிராமணனாவாய். ஆகவே எல்லாப் பிரிவினருக்கும் ஆன்மீக குருவாக நீ விளங்குகிறாய். உன்னை எங்களுடைய ஆன்மீக குருவாகவும் வழிகாட்டியாகவும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். இதனால் உனது தவ வலிமையினால் எங்களை வென்ற பகைவர்களை எங்களால் சுலபமாக வென்று விட முடியும்.
பதம் 6.7.33 : தேவர்கள் தொடர்ந்து கூறினர்: எங்களை விட இளையவனாக இருப்பதால், நிந்தனைக்குள்ளாவாய் என்று அஞ்ச வேண்டாம். இத்தகைய ஆசாரம் வேத மந்திரங்களின் விஷயத்தில் பொருந்துவதில்லை. வேதமந்திரங்களுடனான சம்பந்தத்தைத் தவிர மற்ற விஷயங்களில், வயது முதுமையே ஒருவரது மேம்பட்ட நிலையைத் தீர்மானிக்கிறது. ஆனால் வேத மந்திரங்களை ஓதுவதில் முன்னேறிய ஒருவர் இளையவராக இருப்பினும், அவரை வயது முதிர்ந்த ஒருவர் மரியாதையுடன் வணங்குவதில் தவறில்லை. ஆகவே நீ எங்களைவிட வயதில் இளையவன் என்றாலும், தயக்கமின்றி நீ எங்களுடைய புரோகிதனாகலாம்.
பதம் 6.7.34 : தவ விரதங்களில் மிகவும் முன்னேறியிருந்த விஸ்வரூபர் தங்களது புரோகிதராக இருக்கும்படி தேவர்களால் வேண்டிக் கொள்ளப்பட்டு, மிகவும் திருப்தியடைந்து பின்வருமாறு பதில் கூறலானார்.
பதம் 6.7.35 : ஸ்ரீ விஸ்வரூபர் கூறினார்: தேவர்களே, புரோகிதத் தொழிலை ஏற்பதானது ஏற்கனவே அடையப்பட்ட பிராமண தேஜசை இழப்பதற்குக் காரணமாகும் என்று இகழப்படுகிறது. இருப்பினும் நீங்கள் எல்லோரும் பிரபஞ்ச ஆளுனர்கள் என்பதால் உங்களுடைய தனிப்பட்ட வேண்டுகோளை என்னைப் போன்ற ஒருவனால் எப்படி நிராகரிக்க முடியும்? உங்களுடைய சீடனாகிய நான் உங்களிடமிருந்து பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே உங்களுக்கு நான் மறுப்புக் கூற முடியாது. என்னுடைய சொந்த நன்மைக்காக அதற்கு நான் சம்மதிக்கத்தான் வேண்டும்.
பதம் 6.7.36 : பல்வேறு கிரகங்களின் சிறந்த ஆளுனர்களே, பெளதிக உடைமைகள் இல்லாத உண்மையான பிராமணன் சிலோஞ்சன தொழிலை ஏற்றுத் தன் வாழ்வை நடத்துகிறான். அதாவது, அறுவடைக்குப்பின் வயலில் சிதறிக்கிடக்கும் தானியங்களையும், மொத்த வியாபாரச் சந்தையில் சிதறிக் கிடக்கும் தானியங்களையும் சேகரித்து அவன் தன் வாழ்வை நடத்துகிறான். தவ விரதக் கோட்பாடுகளை உண்மையாகப் பின்பற்றும் குடும்பஸ்த பிராமணர்கள் இந்த முறையின் மூலமாக தங்களையும் தங்கள் குடும்பங்களையும் பராமரிப்பதுடன், அவசியமான புண்ணியச் செயல்களையும் நிறைவேற்றுகின்றனர். புரோகிதத் தொழிலின் மூலமாகப் பொருளீட்டி மகிழ்ச்சியடைய விரும்பும் ஒரு பிராமணன் நிச்சயமாக இழிவான மனதுடையவனாக இருக்க வேண்டும். இத்தகைய புரோகிதத் தொழிலை எவ்வாறு நான் ஏற்றுக் கொள்வேன்?
பதம் 6.7.37 : நீங்கள் அனைவரும் என்னை விட வயதில் மூத்தவர்கள். ஆகவே புரோகிதத் தொழிலை ஏற்றுக் கொள்வதானது சிலசமயங்களில் நிந்தனைக்குரியது என்றாலும், உங்களுடைய ஒரு சிறு வேண்டுகோளைக் கூட என்னால் மறுக்க முடியாது. எனவே உங்களுடைய புரோகிதனாக இருக்க நான் சம்மதிக்கிறேன். என்னுடைய உயிரையும் பொருளையும் அர்ப்பணித்தாவது உங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றுவேன்.
பதம் 6.7.38 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, தேவர்களுக்கு இந்த வாக்குறுதியை அளித்தபின், மேன்மைக்குரியவரான விஸ்வரூபர். தேவர்களால் சூழப்பட்டபடி மிகவும் உற்சாகத்துடனும், கவனத்துடனும் தேவையான புரோகிதக் காரியங்களை நடத்தினார்.
பதம் 6.7.39 : பொதுவாக தேவர்களின் பகைவர்கள் என்று அறியப்படுபவர்களான அசுரர்களின் சாம்ராஜ்யமானது சுக்ராசார்யரின் சாமர்த்தியத்தாலும், தந்திரத்தாலும் காக்கப்பட்டது. ஆனால் மிகவும் சக்தி வாய்ந்தவரான விஸ்வரூபர் நாராயண-கவசம் என்ற ஒரு பாதுகாப்புப் பிரார்த்தனையை இயற்றினார். புத்திசாலித்தனமான இந்த மந்திரத்தினால் விஷ்வரூபர் அசுர சாம்ராஜ்யத்தைக் கவர்ந்து, அதை சுவர்க்க ராஜனான மகேந்திரனக்குக் கொடுத்தார்.
பதம் 6.7.40 : உதாரகுணம் உள்ளவரான விஷ்வரூபர், எந்த இரகசிய மந்திரம் இந்திரனைக் (ஸஹஸ்ராக்ஷ) காத்ததோ, அதை அவருக்கு உபதேசித்து, அசுர சேனைகளை வென்றார்.