அத்தியாயம் – 6
தட்சப் புதல்விகளின் வம்சம்
பதம் 6.6.1
ஸ்ரீ-சுக உவாச
தத: ப்ராசேதஸோ ‘ஸிக்ன்யாம் அனுனீத: ஸ்வயம்புவா
ஷஷ்டிம் ஸஞ்ஜனயாம் ஆஸ துஹிதரூ: பித்ரு-வத்ஸலா:

ஸ்ரீ சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தத:—அச்சம்பவத்திற்குப் பிறகு; ப்ராசேதஸ:—தட்சன்; அஸிக்ன்யாம்—அசிக்னி என்ற அவரது மனைவியிடத்தில்; அனுனீத:—தேற்றப்பட்டு; ஸ்வயம்புவா—பிரம்ம தேவரால்; ஷஷ்டிம்—அறுபது; ஸஞ்ஜனயாம் ஆஸ—பெற்றார்; துஹித்ரூ:—பெண்களை; பித்ரு-வத்ஸலா:—அவர்கள் தந்தையிடம் அன்பு மிக்கவர்களாக இருந்தனர்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஆகவே, அரசே, பிரம்மதேவரின் வேண்டுகோளின்படி, பராசேதஸர் எனப்படும் பிரஜாபதி தட்சன், தன் மனைவியான அசிக்னியின் கர்பத்தில் அறுபது புதல்விகளைப் பெற்றார். அப்புதல்விகள் எல்லோரும் தங்கள் தந்தையிடம் அன்பு மிக்கவர்களாக இருந்தனர்.

பதம் 6.6.2
தச தர்மாய காயாதாத் த்வி-ஷட் த்ரி-ணவ சேந்தவே
பூதாங்கிர:-க்ருசாஸ்வேப்யோ த்வே த்வே தார்க்ஷ்யாய சாபரா:

தச—பத்து; தர்மாய—தர்ம ராஜனாகிய யமராஜனுக்கு; காய—கஸ்யபருக்கு; அதாத்—கொடுத்தார்; த்வி-ஷட்—பதின்மூன்று; த்ரி-நவ—இருபத்தேழு; ச—கூட; இந்தவே—சந்திர தேவனுக்கு; பூத-அங்கிர:-க்ருசாஸ்வேப்ய:—பூதர், அங்கிரர், கிருசாஸ்வர் ஆகியோருக்கு; த்வே த்வே—ஒவ்வொருவருக்கும் இரண்டு; தார்க்ஷ்யாய—மீண்டும் கஸ்யபருக்கு; ச—மேலும்; அபரா:—எஞ்சியவர்களை.

அவர் தர்மராஜனுக்கு (யமராஜனுக்கு) பத்து பெண்களையும், கஸ்யபருக்கு (முதலில் பன்னிரண்டும் பிறகு ஒன்றுமாக) பதின்மூன்று பெண்களையும், சந்திரதேவனுக்கு இருபத்தேழு பெண்களையும், அங்கிரர், கிருசாஸ்வர், பூதர் ஆகிய இவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு பெண்களையும் கன்னிகாதானம் செய்தார். மற்ற நான்கு பெண்களும் கஸ்யபருக்கே கொடுக்கப்பட்டனர். (இவ்விதமாக கஸ்யபர் மொத்தம் பதினேழு பெண்களைப் பெற்றார்).

பதம் 6.6.3
நாமதேயானி அமூஷாம் த்வம் ஸாபத்யாணாம் ச மே ஸ்ருணு
யாஸாம் ப்ரஸூதி-ப்ரஸவைர் லோகா ஆபூரிதாஸ் த்ரய:

நாமதேயானி—வெவ்வேறு பெயர்களை; அமூஷாம்—அவர்களுடைய; த்வம்—நீர்; ஸ-அபத்யானாம்—அவர்களுடைய குழந்தைகளுடன்; ச—மேலும்; மே—என்னிடமிருந்து; ஸ்ருணு—கேட்பீராக; யாஸாம்—எவர்களுடைய; ப்ரஸூதி-ப்ரஸவை:—பல குழந்தைகளாலும், வம்சத்வர்களாலும்; லோகா:—உலகங்களும்; ஆபூரிதா:—ஜனத்தொகையால் நிரப்பப்பட்டன; த்ரய:—மூன்று (மேல், மத்திய, கீழ் உலகங்கள்).

இப்பொழுது, மூவுலகையும் நிரப்பிய இப்பெண்களின் பெயர்களையும், அவர்களுடைய வம்சத்தவர்களின் பெயர்களையும் என்னிடமிருந்து கேட்பீராக.

பதம் 6.6.4
பானுர் லம்பா ககுத் யாமிர் விஸ்வா ஸாத்யா மருத்வதீ
வஸுர் முஹூர்த்தா ஸங்கல்பா தர்ம-பத்ன்ய: ஸுதாஞ் ஸ்ருணு

பானு:—பானு; லம்பா—லம்பா; ககுத்—ககுத்; யாமி:—யாமி; விஸ்வா—விஸ்வா; ஸாத்யா—சாத்யா; மருத்வதீ—மருத்வதி; வஸு:—வஸு; முஹூர்த்தா—முகூர்த்தா; ஸங்கல்ப—சங்கல்பா; தர்ம-பத்ன்ய:—யமராஜனின் மனைவிகள்; ஸுதான்—அவர்களுடைய மகன்கள்; ஸ்ருணு—பற்றி இப்பொழுது கேட்பீராக.

யமராஜனுக்குக் கொடுக்கப்பட்ட பத்து பெண்களின் பெயர்கள் பானு, லம்பா, ககுத், யாமி, விஸ்வா, சாத்யா, மருத்வதி, வஸு, முகூர்த்தா மற்றும் சங்கல்பா என்பனவாகும். இப்பொழுது அவர்களுடைய மகன்களின் பெயர்களைக் கேட்பீராக.

பதம் 6.6.5
பானோஸ் து தேவ-ரிஷப இந்ரஸேனஸ் ததோ ந்ருப
வித்யோத ஆஸீல் லம்பாயாஸ் ததஸ் ச ஸ்தனயித்னவ:

பானோ:—பானுவின் கர்பத்திலிருந்து; து—நிச்சயமாக; தேவ-ரிஷப:—தேவ ரிஷபன்; இந்ரஸேன:—இந்திரசேனன்; தத:—அவனிலிருந்து (தேவ-ரிஷபனிலிருந்து); ந்ருப—அரசே; வித்யோத:—வித்யோதன்; ஆஸீத்—தோன்றினான்; லம்பாயா:—லம்பாவின் கர்பத்திலிருந்து; தத:—அவனிலிருந்து; ச—மேலும்; ஸ்தனயித்னவ:—எல்லா மேகங்களும்.

அரசே, பானுவின் கர்பத்திலிருந்து தேவ ரிஷபன் என்ற ஒரு மகன் பிறந்தான். அவனிலிருந்து இந்திரசேனன் என்ற ஒரு மகன் வந்தான். லம்பாவின் கர்பத்திலிருந்து வித்யோதன் என்ற ஒரு மகன் வந்தான். அவன் எல்லா மேகங்களையும் உற்பத்தி செய்தான்.

பதம் 6.6.6
ககுத: ஸங்கடஸ் தஸ்ய கீகடஸ் தனயோ யத:
புவோ துர்காணி யாமேய: ஸ்வர்கோ நந்திஸ் ததோ ‘பவத்

ககுத:—ககுத்வின் கர்பத்திலிருந்து; ஸங்கட:—ஸங்கடன்; தஸ்ய—அவனிலிருந்து; கீகட:—கீகடன்; தனய:—மகன்; யத:—எவனிலிருந்து; புவ:—பூமியின்; துர்காணி—(துர்கை என்றழைக்கப்படும்) இப்பிரபஞ்சத்தின் காவலர்களான, பல தேவர்கள்; யாமேய:—யாமியின்; ஸ்வர்க:—சுவர்கள்; நந்தி:—நந்தி; தத:—அவனிலிருந்து (சுவர்களிலிருந்து); அபவத்—பிறந்தான்.

ககுத்தின் கர்பத்திலிருந்து சங்கடன் என்ற மகன் வந்தான். அவனுடைய மகனின் பெயர் கீகடன். கீகடனிலிருந்து துர்கர்கள் என்ற பெயருடைய தேவர்கள் வந்தனர். யாமியிலிருந்து சுவர்கள் என்ற மகன் வந்தான். அவனுடைய மகனின் பெயர் நந்தி.

பதம் 6.6.7
விஸ்வே-தேவாஸ் து விஸ்வாயா அப்ரஜாம்ஸ் தான் ப்ரசக்ஷதே
ஸாத்யோ-கணஸ் ச ஸாத்யாயா அர்த்தஸித்திஸ் து தத்-ஸுத:

விஸ்வே-தேவா:—விஸ்வதேவர்கள் என்ற தேவர்கள்; து—ஆனால்; விஸ்வாயா:—விஸ்வாவிலிருந்து; அப்ரஜான்—மகன்களில்லை; தான்—அவர்களை; ப்ரசக்ஷதே—என்று கூறப்படுகிறது; ஸாத்ய:-கண:—சாத்யர்கள் என்ற தேவர்கள்; ச—மேலும்; ஸாத்யாயா:—சாத்யாவின் கர்பத்திலிருந்து; அர்தஸித்தி:—அர்தசித்தி; து—ஆனால்; தத்-ஸுத:—சாத்யர்களின் மகன்.

விஸ்வாவின் மகன்கள் விஸ்வதேவர்கள். அவர்களுக்கும் சந்ததி இல்லை. சாத்யாவின் கர்பத்திலிருந்து சாத்யர்கள் வந்தனர். அவர்களுக்கு அர்த்தசித்தி என்ற ஒரு மகன் இருந்தான்.

பதம் 6.6.8
மருத்வாம்ஸ் ச ஜயந்தஸ் ச மருத்வத்யா பபூவது:
ஜயந்தோ வாஸுதேவாம்ச உபேந்ர இதி யம் விது:

மருத்வான்—மருத்வான்; ச—கூட; ஜயந்த:—ஜயந்தன்; ச—மேலும்; மருத்வத்யா:—மருத்வதியிலிருந்து; பபூவது:—பிறந்தனர்; ஜயந்த:—ஜயந்தன்; வாஸுதேவ-அம்ச:—வாசுதேவரின் ஓர் அம்சமான; உபேந்ர:—உபேந்திரர்; இதி—இவ்வாறு; யம்—யாரை; விது:—அவர்கள் அறிவார்கள்.

மருத்வதியின் கர்பத்திலிருந்து மருத்வான், ஜயந்தன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். பகவான் வாசுதேவரின் ஓர் அம்சமாகிய ஜயந்தன், உபேந்திரர் என்று அறியப்படுகிறார்.

பதம் 6.6.9
மெளஹூர்திகா தேவ-கணா முஹூர்தாயாஸ் ச ஜக்ஞிரே
யே வை ஃபலம் ப்ரயச்சந்தி பூதானாம் ஸ்வ-ஸ்வ-காலஜம்

மௌஹூர்திகா:—மெளகூர்திகர்கள்; தேவ-கணா:—தேவர்கள்; முஹூர்தாயா:—முகூர்தாவின் கர்பத்திலிருந்து; ச—மேலும்; ஜக்ஞிரே—பிறந்தனர்; யே—எவர்கள்; வை—உண்மையில்; ஃபலம்—பலனை; ப்ரயச்சந்தி—அளிக்கின்றனர்; பூதானாம்—ஜீவராசிகளின்; ஸ்வ-ஸ்வ—அவர்களுடைய சொந்த; கால-ஜம்—காலத்திலிருந்து பிறந்த.

மெளகூர்த்திகர்கள் என்ற பெயருடைய தேவர்கள் முகூர்தாவின் கர்பத்திலிருந்து பிறந்தனர். இந்த தேவர்கள் ஜீவராசிகளுக்கு அவர்களுடைய தனிப்பட்ட செயல்களின் பலன்களை அளிக்கின்றனர்.

பதங்கள் 6.6.10 – 6.6.11
ஸங்கல்பாயாஸ் து ஸங்கல்ப: காம: ஸங்கல்பஜ: ஸ்ம்ருத:
வஸவோ ‘ஷ்டௌ வஸோ: புத்ராஸ் தேஷாம் நாமானி மே ஸ்ருணு

த்ரோண: ப்ராணோ த்ருவோ ‘ர்கோ ‘கனிர்
தோஷோ வாஸ்துர் விபாவஸு:
த்ரோணஸ்யாபிமதே: பத்ன்யா
ஹர்ஷ-சோக-பயாதய:

ஸங்கல்பாயா:—சங்கல்பாவின் கர்பத்திலிருந்து; து—ஆனால்; ஸங்கல்ப:—சங்கல்பன்; காம:—காமன்; ஸங்கல்ப-ஜ:—சங்கல்பனின் மகன்; ஸ்ம்ருத:—எனப்பட்டார்; வஸவ: அஷ்டௌ—எட்டு வஸுக்கள்; வஸோ:—வசுவின்; புத்ரா:—மகன்கள்; தேஷாம்—அவர்களின்; நாமானி—பெயர்கள்; மே—என்னிடமிருந்து; ஸ்ருணு—கேட்பீராக; த்ரோண:—துரோணர்; ப்ராண:—பிராணன்; த்ருவ:—துருவன்; அர்க:—அர்கன்; அக்னி:—அக்னி; தோஷ:—தோஷன்; வாஸ்து:—வாஸ்து; விபாவஸு:—விபாவசு; த்ரோணஸ்ய—துரோணரின்; அபிமதே:—அபிமதியிலிருந்து; பத்ன்யா:—மனைவி; ஹர்ஷ-சோக-பய-ஆதய:—ஹர்ஷன், சோகன், பயன் முதலான மகன்கள்.

சங்கல்பாவின் மகன் சங்கல்பன் எனப்பட்டார். அவரிலிருந்து துராசை (பேராசை) பிறந்தது. வஸுவின் மகன்கள் எட்டு வஸுக்கள் எனப்பட்டனர். அவர்களுடைய பெயர்கள் துரோணர், பிராணன், துருவன், அர்கன், அக்னி, தோஷன், வாஸ்து, விபாவசு என்பனவாகும். துரோணன் என்ற வஸுவின் மனைவியான அபிமதியிலிருந்து ஹர்ஷன், சோகன், பயன் முதலான மகன்கள் உற்பத்தி செய்யப்பட்டனர்.

பதம் 6.6.12
ப்ரானஸ்யோர்ஜஸ்வதீ பார்யா ஸஹ ஆயு: புரோஜவ:
த்ருவஸ்ய பார்யா தரணிர் அஸூத விவிதா: புர:

ப்ராணஸ்ய—பிராணனின்; ஊர்ஜஸ்வதி—ஊர்ஜஸ்வதி; பார்யா—மனைவி; ஸஹ:—சஹன்; ஆயு:—ஆயுஸ்; புரோஜவ:—புரோஜவன்; த்ருவஸ்ய—துருவனின்; பார்யா—மனைவி; தரணி:—தரணி; அஸூத—பெற்றெடுத்தாள்; விவிதா:—பல்வேறு, புர:—நகரங்களையும், பட்டணங்களையும்.

பிராணனின் மனைவியான ஊர்ஜஸ்வதி என்பவள், சஹன், ஆயுஸ், புரோஜவன் என்ற மூன்று மகன்களைப் பெற்றாள். துருவனின் மனைவி தரணி எனப்பட்டாள். அவளுடைய கர்பத்திலிருந்து பல்வேறு நகரங்கள் பிறந்தன.

பதம் 6.6.13
அர்கஸ்ய வாஸனா பார்யா புத்ராஸ் தர்ஷாதய: ஸ்ம்ருதா:
அக்னேர் பார்யா வஸோர் தாரா புத்ரா த்ரவிணகாதய:

அர்கஸ்ய—அர்கனின்; வாஸனா—வாசனா; பார்யா—மனைவி; புத்ரா:—மகன்கள்; தர்ஷ-ஆதய:—தர்ஷன் முதலான; ஸ்ம்ருதா:—புகழ்பெற்ற; அக்னே:—அக்னியின்; பார்யா—மனைவி; வஸோ:—வஸு; தாரா—தாரா; புத்ரா:—மகன்கள்; த்ரவிணக-ஆதய:—திவிணகன் முதலான.

அர்கனின் மனைவியான வாசனாவின் கர்பத்திலிருந்து தர்ஷன் முதலான பல மகன்கள் வந்தனர். அக்னி என்ற வஸுவின் மனைவியான தாரா, திரவிணகன் முதலான மகன்களைப் பெற்றாள்.

பதம் 6.6.14
ஸ்கந்தஸ் ச க்ருத்திகா-புத்ரோ யே விசாகாதயஸ் தத:
தோஷஸ்ய சர்வரீ-புத்ர: சிசமாரோ ஹரே: கலா

ஸ்கந்த:—ஸ்கந்தன்; ச—கூட; க்ருத்திகா-புத்ர:—கிருத்திகாவின் மகன்; யே—எவர்கள்; விசாக-ஆதய:—விசாகன் முதலான; தத:—அவரிலிருந்து (ஸ்கந்தனிலிருந்து); தோஷஸ்ய—தோஷனின்; சர்வரீ-புத்ர:—அவரது மனைவியான சர்வரியின் மகன்; சிசுமாற:—சிசுமாறன்; ஹரே:-கலா—பரமபுருஷரின் ஓர் அம்சமான.

அக்னியின் மற்றொரு மனைவியான கிருத்திகாவிலிருந்து கார்த்திகேயன் (ஸ்கந்தன்) என்ற மகன் வந்தார். விசாகன் முதலானோர் அவருடைய மகன்களாவர். தோஷன் என்ற வஸுவின் மனைவியான சர்வரியின் கர்பத்திலிருந்து சிசுமாறன் என்ற மகன் வந்தார். அவர் பரமபுருஷரின் ஓர் அம்சமாவார்.

பதம் 6.6.15
வாஸ்தோர் ஆங்கிரஸீ புத்ரோ விஸ்வகர்மாக்ருதீ-பதி:
ததோ மனுஸ் சாக்ஷு ஷோ ‘பூத் விஸ்வே ஸாத்யா மனோ: ஸுதா:

வாஸ்தோ:—வாஸ்துவின்; ஆங்கிரஸீ—ஆங்கிரசி என்ற அவரது மனைவியின்; புத்ர:—மகன்; விஸ்வகர்மா—விஸ்வகர்மா; ஆக்ருதீ-பதி—ஆக்ருதியின் கணவர்; தத:—அவர்களிலிருந்து; மனு: சாக்ஷுஷ:—சாக்ஷுஷர் என்ற மனு; அபூத்—பிறந்தார்; விஸ்வே—விஸ்வதேவர்கள்; ஸாத்யா:—சாத்யர்கள்; மனோ:—மனுவின்; ஸுதா:—மகன்கள்.

வாஸ்து என்ற வஸுவின் மனைவியான ஆங்கிரசியிலிருந்து விஸ்வகர்மா என்ற சிறப்புமிக்க சிற்பி பிறந்தார். விஸ்வகர்மா ஆக்ருதியின் கணவரானார். ஆக்ருதியிலிருந்து சாக்ஷுஷர் என்ற மனு பிறந்தார். அந்த மனுவின் புத்திரர்கள் விஸ்வதேவர்கள் என்றம் சாத்யர்கள் என்றும் அறியப்பட்டனர்.

பதம் 6.6.16
விபாவஸோர் அஸூதோஷா வ்யுஷ்டம் ரோசிஷம் ஆதபம்
பஞ்சயாமோ ‘த பூதானி யேன ஜாக்ரதி கர்மஸு

விபாவஸோ:—விபாவஸுவின்; அஸூத—பெற்றாள்; ஊஷா—ஊஷா என்ற; வ்யுஷ்டம்—வியுஷ்டன்; ரோசிஷம்—ரோசிஷன்; ஆதபம்—ஆதபன்; பஞ்சயாம:—பஞ்சயாமன்; அத—அதன் பிறகு; பூதானி—ஜீவராசிகள்; யேன—யாரால்; ஜாக்ரதி—தூண்டப்படுகின்றன; கர்மஸு—பௌதிக செயல்களில்.

விபாவஸுவின் மனைவியான ஊஷா, வியுஷ்டன், ரோசிஷன், ஆதபன் என்ற மூன்று மகன்களைப் பெற்றாள். ஆதபனிலிருந்து பஞ்சயாமன் வந்தார். அவர் அனைத்து ஜீவராசிகளையும் பெளதிக செயல்களைச் செய்யும்படி தூண்டும் காலமாவார்.

பதங்கள் 6.6.17 – 6.6.18
ஸரூபாஸூதே பூதஸ்ய பார்யா ருத்ராம்ஸ் ச கோடிச:
ரைவதோ ‘ஜோ பவோ பீமோ வாம உக்ரோ வ்ருஷாகபி:

அஜைகபாத் அஹிர்ப்ரத்னோ பஹுரூபோ மஹான் இதி
ருத்ரஸ்ய பார்ஷதாஸ் சான்யே கோரா: ப்ரேத-வினாயகா:

ஸரூபா—சரூபா; அஸூத—பெற்றாள்; பூதஸ்ய—பூதரின்; பார்யா—மனைவி; ருத்ரான்—ருத்திரர்களை; ச—மேலும்; கோடிச:—ஒரு கோடி; ரைவத:—ரைவதன்; அஜ:—அஜன்; பவ:—பவன்; பீம—பீமன்; வாம:—வாமன்; உக்ர:—உக்ரன்; வ்ருஷாகபி:—விருஷாகபி; அஜைகபாத்—அஜைகபாத்; அஹிர்ப்ரத்ன:—அஹிர்பிரத்னன் பஹுரூப:—பஹுரூபன்; மஹான்—மஹான்; இதி—இவ்வாறு; ருத்ரஸ்ய—இந்த ருத்திரர்களின்; பார்ஷதா:—அவர்களுடைய கணங்கள்; ச—மேலும்; அன்யே—பிற; கோரா:—கோரமான; ப்ரேத—பேய்கள், வினாயகா:—மற்றும் பிசாசுகள்.

பூதரின் மனைவியான சரூபா ஒரு கோடி ருத்திரர்களைப் பெற்றாள். அவர்களுள் ரைவதன், அஜன், பவன், ருமன், வாமன், உக்ரன், விருஷாகபி, அஜைகபாத், அஹிர்பிரத்னன், பஹுரூபன் மற்றும் மஹான் ஆகியோர் பதினொன்று முக்கிய ருத்திரர்கள் ஆவர். அவர்களுடைய கணங்களும் கோரமான தோற்றம் உள்ளவர்களுமான பேய்களும், பிசாசுகளும் பூதரின் மற்ற மனைவியிலிருந்து பிறந்தனர்.

பதம் 6.6.19
ப்ரஜாபதேர் அங்கிரஸ: ஸ்வதா பத்னீ பித்ரூன் அத
அதர்வாங்கிரஸம் வேதம் புத்ரத்வே சாகரோத் ஸதீ

ப்ரஜாபதே: அங்கிரஸ:—அங்கிரர் என்ற மற்றொரு பிரஜாபதியின்; ஸ்வதா—சுவதா; பத்னீ—அவரது மனைவி; பித்ரூன்—பிதாக்களை; அத—அதன்பிறகு; அதர்வ-ஆங்கிரஸம்—அதர்வாங்கிரஸ; வேதம்—வேத வடிவத்தை; புத்ரத்வே—மகனாக; ச—மேலும்; அகரோத்—ஏற்றாள்; ஸதீ—சதீ.

பிரஜாபதி அங்கிரருக்கு சுவதா, சதீ என்ற இரு மனைவிகள் இருந்தனர். சுவதா என்ற மனைவி எல்லாப் பிதாக்களையும் தன் மகன்களாக ஏற்றுக் கொண்டாள். சதீ அதர்வாங்கிரஸ வேதத்தைத் தன் மகனாக ஏற்றுக் கொண்டாள்.

பதம் 6.6.20
க்ருசாஸ்வோ ‘ர்சிஷி பார்யாயாம் தூமகேதும் அஜீஜனத்
திஷணாயாம் வேதசிரோ தேவலம் வயுனம் மனும்

க்ருசாஸ்வ:—கிருசாஸ்வர்; அர்சிஷி—அர்சிஸ்; பார்யாயாம்—அவரது மனைவியில்; தூமகேதும்—தூமகேதுவை; அஜீஜனத்—பெற்றார்; திஷணாயாம்—திஷணா என்ற மனைவியில்; வேதசிர:—வேதசிரா; தேவலம்—தேவலர்; வயுனம்—வயுனர்; மனும்—மனு.

கிருசாஸ்வருக்கு அர்சிஸ், திஷணா என்ற இரு மனைவிகள் இருந்தனர். அவர் அர்சிஸ் என்ற மனைவியில் தூமகேதுவையும், திஷனா என்ற மனைவியில் வேதசிரா, தேவலர், வயுனர், மனு என்ற நான்கு மகன்களையும் பெற்றார்.

பதங்கள் 6.6.21 – 6.6.22
தார்க்ஷ்யஸ்வ வினதா கத்ரூ: பதங்கீ யயமினீதி ச
பதங்கி அஸூத பதகான் யாமினீ சலபான் அத

ஸுபர்ணாஸூத கருடம் ஸாக்ஷாத் யக்ஞேச-வாஹனம்
ஸூர்ய-ஸூதம் அனூரும் ச கத்ரூர் நாகான் அனேகச:

தார்க்ஷ்யஸ்ய—தார்க்ஷ்யர் என்ற மற்றொரு பெயரையும் பெற்றிருந்த கஸ்யபரின்; வினதா—வினதா; கத்ரூ:—கத்ரூ; பதங்கீ—பதங்கி; யாமினி—யாமினி; இதி—இவ்வாறு; ச—மேலும்; பதங்கீ—பதங்கி; அஸூத—பெற்றாள்; பதகான்—வெவ்வேறு வகையான பறவைகளை; யாமினீ—யாமினி; சலபான்—வெட்டுக்கிளிகளை (பெற்றாள்); அத—பிறகு; ஸுபர்ணா—வினதா என்ற மனைவி; அஸூத—பெற்றாள்; கருடம்—கருடன் என்ற புகழ்பெற்ற பறவையை; ஸாக்ஷாத்—நேரடியாக; யக்ஞேச-வாஹனம்—பகவான் விஷ்ணுவின் வாகனமாகிய; ஸூர்யஸூதம்—சூரிய தேவனின் தேரோட்டி; அனூரும்—அனூரு; ச—மேலும்; கத்ரூ:—கத்ரூ; நாகான்—பாம்புகளை; அனேகச:—பல வகைகளில்.

தார்க்ஷ்யர் என்றும் அறியப்படுபவரான கஸ்யபருக்கு வினதா (சபர்ணா), கத்ரூ, பதங்கி, யாமினீ என்ற நான்கு மனைவிகள் இருந்தனர். பதங்கி பலவகையான பறவைகளைப் பெற்றாள். யாமினீ வெட்டுக்கிளிகளைப் பெற்றாள். வினதா (சுபர்ணா), பகவான் விஷ்ணுவின் வாகனமான கருடனையும் சூரிய தேவனின் தேரோட்டியான அனூருவையும் (அருணன்) பெற்றாள். கத்ரூ பலவகையான பாம்புகளைப் பெற்றாள்.

பதம் 6.6.23
க்ருதிகாதீனி நக்ஷத்ராண் ஈந்தோ: பத்ன்யஸ் து பாரத
தக்ஷ சாபாத் ஸோ ‘னபத்யஸ் தாஸு யக்ஷ்ம க்ரஹார்தித

க்ருத்திகா-ஆதீனி—கிருத்திகா முதலான; நக்ஷத்ராணி—நட்சத்திரக் கூட்டங்கள்; இந்தோ:—சந்திர தேவனின்; பத்ன்ய:—மனைவிகள்; து—ஆனால்; பாரத—பரத வம்சத்தவரான பரீட்சித்து மகாராஜனே; தக்ஷ-சாபாத்—தட்சனின் சாபத்தால்; ஸ:—சந்திர தேவன்; அனபத்ய:—குழந்தைகளில்லை; தாஸு—பல மனைவிகளில்; யக்ஷ்ம-க்ரஹ-அர்தித:—படிப்படியாகத் தேய்ந்துபோகும் நோயினால் வருத்தப்பட்டு.

பாரதர்களில் சிறந்தவரான பரீட்சித்து மகாராஜனே, கிருத்திகா என்ற நட்சத்திரக் கூட்டங்கள் சந்திரதேவனின் மனைவிகளாவர் ஆனால் சந்திரதேவன் படிப்படியாகத் தேய்ந்து போகும் நோய்க்கு ஆளாக வேண்டும் என்று பிரஜாபதி தட்சனால் சபிக்கப்பட்டதால், அவருடைய எந்த மனைவியின் மூலமாகவும் அவரால் குழந்தைகளைப் பெற இயலவில்லை.

பதங்கள் 6.6.24 – 6.6.26
புன: ப்ரஸாத்ய தம் ஸோம: கலா லேபே க்ஷயே திதா:
ஸ்ருணு நாமானி லோகானாம் மாத்ரூணாம் சங்கராணி ச

அத கஸ்யப-பத்னீனாம் யத்-ப்ரஸூதம் இதம் ஜகத்
அதிதிர் திதிர் தனு: காஷ்டா அரிஷ்டா ஸுரஸா இளா

முனி: க்ரோதவசா தாம்ரா ஸுரபி: ஸரமா திமி:
திமேர் யாதோ-கணா ஆஸன் ஸ்வாபதா: ஸரமா ஸுதா:

புன:—மீண்டும்; ப்ரஸாத்ய—சாந்தப்படுத்தி; தம்—அவரை (பிரஜாபதி தட்சனை); ஸோம:—சந்திர தேவன்; கலா:—ஒளியின் பகுதிகளை; லேபே—பெற்றார்; க்ஷயே—(தேய்பிறையில்) படிப்படியாகத் தேய்வதில்; திதா:—அகற்றப்பட்ட; ஸ்ருணு—கேட்பீராக; நாமானி—பெயர்களையெல்லாம்; லோகானாம்—கிரகங்களின்; மாத்ரூணாம்—தாய்களின்; சங்கராணி—பிரியமான; ச—கூட; அத—இப்பொழுது; கஸ்யப-பத்னீனாம்—கஸ்யபருடைய மனைவிகளின்; யத்-ப்ரஸூதம்—யாரிடத்திலிருந்து பிறந்தார்களோ; இதம்—இந்த; ஜகத்—பிரபஞ்சம்; அதிதி—அதிதி; திதி:—திதி; தனு:—தனு; காஷ்டா—காஷ்டா; அரிஷ்டா—அரிஷ்டா; ஸுரஸா—சுரஸா; இளா—இளா; முனி:—முனி; க்ரோதவசா—குரோதவசா; தாம்ரா—தாம்ரா; ஸுரபி:—சுரபி; ஸரமா—சரமா; திமி:—திமி; திமே:—திமியிலிருந்து; யாத:-கனா:—நீரினங்கள்; ஆஸன்—தோன்றின; ஸ்வாபதா:—சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்கள்; ஸரமா-ஸுதா:—சரமாவின் குழந்தைகள்.

அதன் பிறகு சந்திரதேவன் மரியாதையான வார்த்தைகளால் பிரஜாபதி தட்சனை சாந்தப்படுத்தி, தான் நோய்வாய்ப்பட்டிருந்த காலத்தில் இழந்திருந்த ஒளியின் பகுதிகளை மீண்டும் பெற்றார். இருப்பினும் அவரால் குழந்தைகளைப் பெற இயலவில்லை. சந்திரன் தேய்பிறைக் காலத்தில் தனது ஒளிவீசும் சக்தியை இழந்து, வளர்பிறையில் அதை திரும்பப் பெறுகிறார். பரீட்சித்து மகாராஜனே, கஸ்யப்பருடைய எந்த மனைவிகளின் கர்பங்களிலிருந்து முழுபிரபஞ்சத்தின் ஜனத்தொகையும் வந்ததோ, அந்த மனைவிகளின் பெயர்களை இப்பொழுது என்னிடமிருந்து கேட்பீராக. கிட்டத்தட்ட முழு பிரபஞ்சத்தின் மொத்த ஜனத் தொகைக்கும் அவர்களே தாய்களாவர். அவர்களுடைய பெயர்களைக் கேட்பதால் மங்களம் உண்டாகும். அவை அதிதி, திதி, தனு, காஷ்டா, அரிஷ்டா, கரஸா, இளா, முனி, குரோதவசா, தாம்ரா, சுரபி, சரமா மற்றும் திமி என்பனவாகும். திமியின் கர்பத்திலிருந்து புலிகள், சிங்கங்கள் போன்ற கொடிய மிருகங்கள் பிறந்தன.

பதம் 6.6.27
ஸுரபேர் மஹிஷா காவோ யே சான்யே த்விசஃபா ந்ருப
தாம்ராயா: ஸ்யேன க்ருத்ராத்யா முனேர் அப்ஸரஸாம் கணா:

ஸுரபே:—சுரபியின் கர்பத்திலிருந்து; மஹிஷா:—எருமை; காவ:—பசுக்கள்; யே—எவை; ச—கூட; அன்யே—மற்றவைகள்; த்வி-சஃபா:—பிளவுபட்ட குளம்புகளுடைய; ந்ருப—அரசே; தாம்ராயா:—தாம்ராவிலிருந்து; ஸ்யேன—கழுகுகள்; க்ருத்ர-ஆத்யா:—பருந்துகள் முதலான; முனே:—முனியிலிருந்து; அப்ஸரஸாம்—தேவதைகளின்; கணா:—கூட்டங்கள்.

பரீட்சித்து மகாராஜனே, சுரபியின் கர்பத்திலிருந்து எருமைகளும், மாடுகளும், பிளவுபட்ட குளம்புகளுடைய பிற மிருகங்களும் பிறந்தன. தாம்ராவின் கர்பத்திலிருந்து கழுகுகளும், பருந்துகளும், பிணந்தின்னும் பிற பெரிய பறவைகளும் பிறந்தன. மேலும் முனியின் கர்பத்திலிருந்து தேவதைகள் பிறந்தனர்.

பதம் 6.6.28
தந்தசூகாதய: ஸர்பா ராஜன் க்ரோதவசாத்மஜா:
இளாயா பூருஹா: ஸர்வே யாதுதானாஸ் ச ஸெளரஸா:

தந்தஸூக-ஆதய:—தந்தசூக பாம்புகள் முதலான; ஸர்பா:—ஊர்வன; ராஜன்—அரசே; க்ரோதவசா-ஆத்ம-ஜா:—குரோத வாசவிலிருந்து பிறந்தன; இளாயா:—இளாவின் கர்பத்திலிருந்து; ப்ரூஹா:—மரம், செடி, கொடிகள்; ஸர்வே—எல்லா வகையான; யாதுதானா:—இராட்சஸர்கள்; ச—கூட; ஸௌரஸா:—சுரஸாவின் கர்பத்திலிருந்து.

குரோதவசாவிலிருந்து தந்தசூகம் என்ற பாம்புகளும், மற்ற பாம்புகளும், கொசுக்களும் பிறந்தன. இளாவின் கர்பத்திலிருந்து எல்லா வகையான மரம் செடி கொடிகளும் பிறந்தன. சுரசாவின் கர்ப்பத்திலிருந்து இராட்சஸர்கள் பிறந்தனர்.

பதங்கள் 6.6.29 – 6.6.31
அரிஷ்டாயாஸ் து கந்தர்வா: காஷ்டாயா த்விசஃபேதரா:
ஸுதா தனோர் ஏக-ஷஷ்டிஸ் தேஷாம் ப்ராதானிகான் ஸ்ருணு

த்விமூர்தா சம்பரோ ‘ரிஷ்டோ ஹயக்ரீவோ விபாவஸு:
அயோமுக: சங்குசிரா: ஸ்வர்பானு: கபிலோ ‘ருண:

புலோமா வ்ருஷபர்வா ச ஏகசக்ரோ ‘னுதாபன:
தூம்ரகேசோ விரூபாக்ஷோ விப்ரசித்திஸ் ச துர்ஜய:

அரிஷ்டாயா:—அரிஷ்டாவின் கர்பத்திலிருந்து; து—ஆனால்; கந்தர்வா—கந்தர்வர்கள்; காஷ்டாயா:—காஷ்டாவின் கர்ப்பத்திலிருந்து; த்வி-சஃப இதரா:—பிளவுபடாத குளம்புகளுடைய குதிரைகளைப் போன்ற மிருகங்கள்; ஸுதா:—மகன்கள்; தனோ:—தனுவின் கர்பத்திலிருந்து; ஏக-ஷஷ்டி:—அறுபத்தொரு; தேஷாம்—அவர்களுள்; ப்ராதானிகான்—முக்கியமானவர்களை; ஸ்ருணு—கேட்பீராக; த்விமூர்தா—துவிமூர்தன்; சம்பர:—சம்பரன்; அரிஷ்ட:—அரிஷ்டன்; ஹயக்ரீவ:—ஹயக்ரீவன்; விபாவஸு:—விபாவஸு; அயோமுக:—அயோமுகன்; சங்குசிரா:—சங்குசிரா; ஸ்வர்பானு:—சுவர்பானு; கபில—கபிலர்; அருண:—அருணர்; புலோமா—புலோமா; வ்ருஷபர்வா—விருஷபர்வா; ச—கூட; ஏகசக்ர:—ஏகசக்ரர்; அனுதாபன:—அனுதாபனர்; தூம்ரகேச:—தூம்ரகேசர்; விரூபாக்ஷ:—விரூபாக்ஷர்; விப்ரசித்தி:—விப்ரசித்தி; ச—மேலும்; துர்ஜய:—துர்ஜயர்.

அரிஷ்டாவின் கர்பத்திலிருந்து கந்தர்வர்கள் பிறந்தனர். குதிரைகளைப் போன்ற பிளவுபடாத குளம்புகளுடைய மிருகங்கள் காஷ்டாவின் கர்ப்பத்திலிருந்து பிறந்தன. அரசே, தனுவின் கர்பத்திலிருந்து அறுபத்தொரு மகன்கள் வந்தனர். அவர்களுள் துவிமூர்தன், சம்பரர், அரிஷ்டர், ஹயகிரீவர், விபாவசு, அயோமுகர், சங்குசிரா, சுவர்பானு, கபிலர், அருணர், புலோமா, விருஷபர்வா, ஏகசக்ரர், அனுதாபனர், தூம்ரகேசர், விரூபாக்ஷர், விப்ரசித்தி மற்றும் துர்ஜயர் ஆகிய பதினெட்டு பேர்களும் மிகவும் முக்கியமானவர்களாவர்.

பதம் 6.6.32
ஸ்வர்பானோ: ஸுப்ரபாம் கன்யாம் உவாஹ நமுசி: கில வ்ருஷபர்வணஸ் து சர்மிஷ்டாம் யயாதிர் நாஹுஷோ பலீ

ஸ்வர்பானோ:—சுவர்பானுவின்; ஸுப்ரபாம்—சுப்ரபா; கன்யாம்—மகளை; உவாஹ—மணந்து கொண்டார்; நமுசி:—நமுசி; கில—உண்மையில்; வ்ருஷபர்வண:—விருஷபர்வாவின்; து—ஆனால்; சர்மிஷ்டாம்—சர்மிஷ்டா; யயாதி:—யயாதி மகாராஜன்; நாஹுஷ:—நஹுஷனின் மகன்; பலீ—மிகவும் சக்திவாய்ந்த.

சுப்ரபா என்ற சுவர்பானுவின் மகளை நமுசி மணந்து கொண்டார். விருஷபர்வாவின் மகளான சர்மிஷ்டா, நகுஷ புத்திரரான சக்தி வாய்ந்த யயாதி மகராஜனுக்கு கொடுக்கப்பட்டாள்.

பதங்கள் 6.6.33 – 6.6.36
வைஸ்வானர-ஸுதா யாஸ் ச சதஸ்ரஸ் சாரு-தர்சனா:
உபதானவீ ஹயசிரா புலோமா காலகா ததா

உபதானவீம் ஹிரண்யாக்ஷ: க்ரதுர் ஹயசிராம் ந்ருப
புலோமாம் காலகாம் ச த்வே வைஸ்வானர-ஸுதே து க:

உபயேமே ‘த பகவான் கஸ்யபோ ப்ரஹ்ம-சோதித:
பௌலோமா: காலகேயாஸ் ச தானவா யுத்த-சாலின்:

தயோ: ஷஷ்டி-ஸஹஸ்ராணி யக்ஞ-க்னாம்ஸ் தே பிது: பிதா
ஜகான ஸ்வர்-கதோ ராஜன் ஏக இந்ர-ப்ரியங்கர:

வைஸ்வானர-ஸுதா:—வைஷ்வானரரின் புதல்விகள்; யா:—யார்; ச—மேலும்; சதஸ்ர:—நான்கு; சாரு-தர்சனா:—மிக மிக அழகிய; உபதானவீ—உபதானவீ; ஹயசிரா—ஹயசிரா; புலோமா—புலோமா; காலகா—காலகா; ததா—கூட; உபதானவீம்—உபதானவீ; ஹிரண்யாக்ஷ:—இரண்யாக்ஷன்; க்ரது:—கிரது; ஹயசிராம்—ஹயசிரசா; ந்ருப—அரசே; புலோமாம் காலகாம் ச—புலோமா மற்றும் காலகா; த்வே—இருவரும்; வைஸ்வானர-ஸுதே—வைஸ்வானரரின் புதல்விகளை; து—ஆனால்; க:—பிரஜாபதி; உபயேமே—மணந்தார்; அத—பிறகு; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; கஸ்யப:—கஸ்யப முனிவர்; ப்ரஹ்ம-சோதித:—பிரம்ம தேவரால் கேட்டுக்கொள்ளப்பட்டு; பௌலோமா: காலகேயா:ச—பௌலோமர்கள் மற்றும் காலகேயர்கள்; தானவா:—அசுரர்கள்; யுத்த-சலின:—யுத்தப் பிரியர்களான; தயோ:—அவர்களின்; ஷஷ்டி-ஸஹஸ்ராணி—அறுபதாயிரம்; யக்ஞ-க்னான்—யாகங்களைக் குலைத்து வந்த; தே—உமது; பிது:—தந்தையின்; பிதா—தந்தை; ஜகான—கொன்றார்; ஸ்வ:-கத:—சுவர்க்க லோகங்களில்; ராஜன்—அரசே; ஏக:—தனியாக; இந்ர-ப்ரியம்-கர:—இந்திரனை திருப்திப்படுத்த.

தனுவின் மகனான வைஷ்வானரருக்கு உபதானவி, ஹயசிரா, புலோமா, காலகா என்ற நான்கு அழகிய புதல்விகள் இருந்தனர். இரண்யாக்ஷன் உபதானவியையும், கிரது ஹயசிரசாவையும் மணந்தனர். அதன் பிறகு பிரம்ம தேவரின் வேண்டுகோளுக்கிணங்க, பிரஜாபதியான கஸ்யபர், வைஸ்வானரரின் இரு புதல்விகளான புலோமாவையும், காலகாவையும் மணந்து கொண்டார். கஸ்யபருடைய இந்த இரு மனைவிகளின் கர்பங்களிலிருந்து அறுபதாயிரம் மகன்கள் வந்தனர். நிவாதகவசன் முதலான அம்மகன்கள் பௌலோமர்கள் என்றும் காலகேயர்கள் என்றும் அறியப்பட்டனர். அதிக தேக பலம் உள்ளவர்களும், யுத்த நிபுணர்களுமான அவர்கள், மாமுனிவர்களால் செய்யப்பட்ட யாகங்களுக்கு இடையூறு செய்வதையே தங்களுடைய இலட்சியமாகக் கொண்டிருந்தனர். அரசே, உமது பாட்டனாரான அர்ஜுனன் சுவர்க்க லோகங்களுக்குச் சென்று தனியாகவே அந்த அசுரர்களையெல்லாம் கொன்று, தேவேந்திரனின் பேரன்பிற்குப் பாத்திரமானார்.

பதம் 6.6.37
விப்ரசித்தி: ஸிம்ஹிகாயாம் சதம் சைகம் அஜீஜனத்
ராஹு-ஜ்யேஷ்டம் கேது-சதம் க்ரஹத்வம் ய உபாகதா:

விப்ரசித்தி:—விப்ரசித்தி; ஸிம்ஹிகாயாம்—அவரது மனைவி சிம்ஹிகாவின் கர்பத்தில்; சதம்—நூறு; ச—மற்றும்; ஏகம்—ஒன்று; அஜீஜனத்—பெற்றார்; ராஹு-ஜ்யேஷ்டம்—எவர்களுள் ராகு மூத்தவனோ; கேது-சதம்—நூறு கேதுக்கள்; க்ரஹத்வம்—கிரகங்களின் அந்தஸ்தை; யே—அவர்களனைவரும்; உபாகதா:—அடைந்தனர்.

விப்ரசித்தி தன் மனைவி சிம்ஹிகாவில் நூற்றியொரு மகன்களைப் பெற்றார். அவர்களுள் மூத்தவன் ராகு, மற்றவர்கள் நூறு கேதுக்கள் ஆவர். அவர்கள் அனைவருமே ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களின் அந்தஸ்துகளை அடைந்தனர்.

பதங்கள் 6.6.38 – 6.6.39
அதாத: ஸ்ரூயதாம் வம்சோ யோ ‘திதேர் அனுபூர்வச:
யத்ர நாராயணோ தேவ: ஸ்வாம்சேனாவாதரத் விபு:

விவஸ்வான் அர்யமா பூஷா த்வஷ்டாத ஸவிதா பக:
தாதா விதாதா வருணோ மித்ர: சத்ரு உருக்ரம:

அத—அதன்பிறகு; அத:—இப்பொழுது; ஸ்ரூயதாம்—கேட்கப்படட்டும்; வம்ச:—வம்சம்; ய:—எது; அதிதே:—அதிதியிலிருந்து வந்த; அனுபூர்வச:—காலக்கிரமப்படி; யத்ர—எங்கு; நாராயண:—பரமபுருஷராகிய; தேவ:—பகவான்; ஸ்வ-அம்சேன—அவரது சுய அம்சத்தினால்; அவாதரத்—அவதரித்தார்; விபு:—பரமன்; விவஸ்வான்—விவஸ்வான்; அர்யமா—அரியமா; பூஷா—பூஷா; த்வஷ்டா—துவஷ்டா; அத—அதன்பிறகு; ஸவிதா—சவிதா; பக:—பகன்; தாதா—தாதா; விதாதா—விதாதா; வருண:—வருணன்; மித்ர:—மித்ரன்; சத்ரு:—சத்ரு; உருக்ரம:—உருக்ரமர்.

காலக்கிரமப்படி அதிதியின் வம்சத்தவர்களைப் பற்றி நான் விவரிப்பதை இப்பொழுது கேட்பீராக. இந்த வம்சத்தில் பரமபுருஷராகிய நாராணயர் அவரது அம்ச அவதாரமாகத் தோன்றினார். அதிதி புத்திரர்களின் பெயர்கள் விவஸ்வான், அரியமா, பூஷா, துவஷ்டா, சவிதா, பகன், தாதா, விதாதா, வருணன், மித்ரன், சத்ரு மற்றும் உருக்ரமர் என்பனவாகும்.

பதம் 6.6.40
விவஸ்வத: ஸ்ராத்ததேவம் ஸம்க்ஞாஸூயத வை மனும்
மிதுனம் ச மஹா-பாகா யமம் தேவம் யமீம் ததா
ஸைவ பூத்வாத வடவா நாஸத்யௌ ஸுஷுவே புவி

விவஸ்வத:—சூரிய தேவனின்; ஸ்ராத்ததேவம்—சிராத்ததேவன் என்ற; ஸம்க்ஞா—சம்க்ஞா; அஸூயத—பெற்றாள்; வை—உண்மையில்; மனும்—மனுவை; மிதுனம்—இரட்டையர்களான; ச—மேலும்; மஹா-பாகா—பாக்கியசாலியான சம்க்ஞா; யமம்—யமராஜனையும்; தேவம்—தேவரான; யமீம்—யமீ என்ற அவரது தங்கையையும்; ததா—மேலும்; ஸா—அவள்; ஏவ—கூட; பூத்வா—ஆகி; அத—பிறகு; வடவா—ஒரு பெண் குதிரை; நாஸத்யௌ—அஸ்வினி குமாரர்களை; ஸுஷுவே—பெற்றாள்; புவி—இந்த பூமியில்.

சம்க்ஞா சூரியதேவனாகிய விவஸ்வானின் மனைவியாவாள். அவள் சிராத்ததேவர் என்ற மனுவைப் பெற்றாள். பாக்கியசாலியான அவளே இரட்டையர்களான யமராஜனையும், யமுனை நதியையும் பெற்றாள். பிறகு யமீ ஒரு பெண் குதிரையின் உருவில் பூமியில் சஞ்சரித்துக் கொண்டிருந்த பொழுது அஸ்வினி குமாரர்களைப் பெற்றாள்.

பதம் 6.6.41
சாயா சனைஸ்சரம் லேபே ஸாவர்ணிம் ச மனும் தத:
கன்யாம் ச தபதீம் யா வை வவ்ரே ஸம்வரணம் பதிம்

சாயா—சூரியதேவனின் மற்றொரு மனைவியான சாயா; சனைஸ்சரம்—சனியை; லேபே—பெற்றாள்; ஸாவர்ணிம்—சாவர்ணி; ச—மேலும்; மனும்—மனு; தத:—அவரிலிருந்து (விவஸ்வானிலிருந்து); கன்யாம்—ஒரு மகள்; ச—மற்றும்; தபதீம்—தபதி என்ற; யா—எவள்: வை—உண்மையில்; வவ்ரே—மணந்தாள்; ஸம்வரணம்—சம்வரணரை; பதிம்—கணவரான.

சூரியதேவனின் மற்றொரு மனைவியான சாயா, சனீஸ்வரன், சாவர்ணி மனு என்ற இரு மகன்களையும், தபதீ என்ற ஒரு மகளையும் பெற்றாள். அந்த மகள் சம்வரணரை மணந்து கொண்டாள்.

பதம் 6.6.42
அர்யம்ணோ மாத்ருகா பத்னீ தயோஸ் சர்ஷணய: ஸுதா:
யத்ர வை மானுஷீ ஜாதிர் ப்ரஹ்மணா சோபகல்பிதா

அர்யம்ண:—அரியமாவின்; மாத்ருகா—மாத்ருகா; பத்னீ—மனைவி; தயோ:—அவர்களுடைய சேர்க்கையினால்; சர்ஷணய: ஸுதா:—அறிஞர்களான பல புத்திரர்களை; யத்ர—எதில்; வை—உண்மையில்; மானுஷீ—மனித; ஜாதி:—இனங்கள்; ப்ரஹ்மணா—பிரம்மதேவரால்; ச—மேலும்; உபகல்பிதா—படைக்கப்பட்டன.

அரியமாவின் மனைவியான மாத்ருகாவின் கர்ப்பத்திலிருந்து பல கற்றறிந்த அறிஞர்கள் பிறந்தனர். பிரம்மதேவர், அவர்களுக்கிடையில் தன்னை அறிவதில் இயல்பான ஆர்வமுடைய மனித இனங்களைப் படைத்தார்.

பதம் 6.6.43
பூஷானபத்ய: பிஷ்டாதோ பக்ன-தந்தோ ‘பவத் புரா
யோ ‘ஸௌ தக்ஷாய குபிதம் ஜஹாஸ விவ்ருத-த்விஜ:

பூஷா—பூஷா; அனபத்ய:—குழந்தை இல்லாத; பிஷ்ட-அத:—அரைத்த மாவை உண்டு வாழும்; பக்ன-தந்த:—உடைந்த பற்களுடன்; அபவத்—ஆனான், புரா—முன்பு; ய:—யார்; அஸௌ—அந்த; தக்ஷாய—தட்சனிடம், குபிதம்—கோபம் கொண்டார்; ஐஹாஸ—சிரித்தான்; விவ்ருத-த்விஜ:—பற்களைக் காட்டியபடி.

பூஷாவிற்கு மகன்கள் இல்லை. சிவபெருமான் தட்சனிடம் கோபம் கொண்ட பொழுது, பூஷா தன் பற்களைக் காட்டியபடி சிவபெருமானைப் பார்த்து சிரித்தான். அதனால் தன் பற்களை இழந்த அவன், அரைத்த மாவை மட்டுமே உண்டு வாழ வேண்டியதாயிற்று.

பதம் 6.6.44
த்வஷ்டூர் தைத்யாத்மஜா பார்யா ரசனா நாம கன்யகா
ஸன்னிவேசஸ் தயோர் ஜக்ஞே விஸ்வரூபஸ் ச வீர்யவான்

த்வஷ்டு:—துவஷ்டாவின்; தைத்ய-ஆத்ம-ஜா—ஓர் அசுரனின் மகள்; பார்யா—மனைவி; ரசனா—ரசனா; நாம—என்பவள்; கன்யகா—கன்னிப்பெண்; ஸன்னிவேச:—சன்னிவேசன்; தயோ:—அவ்விருவரையும்; ஐக்ஞே—பிறந்தார்; விஸ்வரூப:—விஸ்வரூபர்; ச—மேலும்; வீர்யவான்—தேக பலத்தில் வலிமையுள்ள.

தைத்தியர்களின் மகளான ரசனா, பிரஜாபதி துவஷ்டாவின் மனைவியானாள். அவள் அவரது விந்துவின் மூலமாக தன் கர்பத்தில் சன்னிவேசன், விஸ்வரூபர் என்ற மிகவும் சக்திவாய்ந்த இரு மகன்களைப் பெற்றாள்

பதம் 6.6.45
தம் வவ்ரிரே ஸுர-கணா ஸ்வஸ்ரீயம் த்விஷதாம் அபி
விமதேன பரித்யக்தா குருணாங்கிரஸேன யத்

தம்—அவரை (விஸ்வரூபரை); வவ்ரிரே—புரோகிதராக ஏற்றனர்; ஸுர-கணா:—தேவர்கள்; ஸ்வஸ்ரீயம்—ஒரு புதல்வியின் மகன்; த்விஷதாம்—விரோதமுள்ள தேவர்களின்; அபி—என்ற போதிலும்; விமதேன—அவமதிக்கப்பட்டதால்; பரித்யக்தா:—கைவிடப்பட்ட; குருணா—அவர்களுடைய ஆன்மீக குருவால்; ஆங்கிரஸேன—பிருஹஸ்பதி; யத்—என்பதால்.

விஸ்வரூபர், தேவர்களின் நிரந்தர எதிரிகளாகிய அசுரர்களுடைய புதல்வியின் மகனாவார். இருப்பினும், தேவ குருவான பிருஹஸ்பதியை அவமதித்ததால், அவரால் அவர்கள் கைவிடப்பட்டபொழுது, தேவர்கள் பிரம்மாவின் உத்தரவுப்படி அந்த விஸ்வரூபரையே தங்களுடைய புரோகிதராக ஏற்றுக் கொண்டனர்.


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “தட்சப் புதல்விகளின் வம்சம்” எனும் தலைப்பை கொண்ட ஆறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare