அத்தியாயம் – 4
பிரஜாபதி தட்சனின்
ஹம்ஸ:குஹ்ய பிரார்த்தனைகள்
பதங்கள் 6.4.1 – 6.4.2
ஸ்ரீ-ராஜோவாச
தேவாஸுர-ந்ருணாம் ஸர்கோ நாகானாம் ம்ருக-பக்ஷிணாம்
ஸாமாஸிகஸ் த்வயா ப்ரோக்தோ யஸ் து ஸ்வாயம்புவே ‘ந்தரே
தஸ்யைவ வ்யாஸம் இச்சாமி ஞாதும் தே பகவன் யதா
அனுஸர்க்கம் யயா சக்த்யா ஸஸர்ஜ பகவான் பர:
ஸ்ரீ-ராஜா உவாச—அரசர் கூறினார்; தேவ-அஸுர-ந்ருணாம்—தேவர்கள், அசுரர்கள் மற்றும் மனிதர்களின்; ஸர்க:—சிருஷ்டி; நாகானாம்—நாகர்களின் (ஸர்ப்பங்கள்); ம்ருக-பக்ஷிணாம்—மிருகங்கள் மற்றும் பறவைகளின்; ஸாமாஸிக:—சுருக்கமாக; த்வயா—தங்களால்; ப்ரோக்த:—விவரிக்கப்பட்டது; ய:—எது; து—ஆனால்; ஸ்வாயம்புவே—சுயம்புவ மனுவின்; அந்தரே—காலத்தில்; தஸ்ய—இதனுடைய; ஏவ—மட்டுமே; வ்யாஸம்—விரிவான விளக்கத்தை; இச்சாமி—நான் விரும்புகிறேன்; ஞாதும்—அறிய; தே—தங்களிடமிருந்து; பகவன்—பிரபுவே; யதா—அதுமட்டுமின்றி; அனுஸர்கம்—அதைத் தொடர்ந்த சிருஷ்டியை; யயா—எந்த; சக்த்யா—சக்தியினால்; ஸஸர்ஜ—சிருஷ்டித்தார்; பகவான்—பரமபுருஷர்; பர—உன்னதமான.
புண்ணியவானாகிய அரசர் சுகதேவ கோஸ்வாமியிடம் கூறினார்: பிரபுவே, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், நாகர்கள், மிருகங்கள், பறவைகள் ஆகிய ஜீவன்கள் சுயம்புவ மனுவின் ஆட்சிக்காலத்தில் சிருஷ்டிக்கப்பட்டன. இந்த சிருஷ்டியைப் பற்றி தாங்கள் (மூன்றாம் காண்டத்தில்) சுருக்கமாகக் கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது இதையே விவரமாக அறிய நான் விரும்புகிறேன். மேலும் எதைக் கொண்டு பரமபுருஷர் இரண்டாந்தர சிருஷ்டியை உருவாக்கினாரோ, அந்த சக்தியைப் பற்றியும் நான் அறிய விரும்புகிறேன்.
பதம் 6.4.3
ஸ்ரீ-ஸூத உவாச
இதி ஸம்ப்ரஸ்நம் ஆகர்ண்ய ராஜர்ஷேர் பாதராயணி:
ப்ரதினந்ய மஹா-யோகீ ஜகாத முனி-ஸத்தமா:
ஸ்ரீ-ஸூத உவாச—சூத கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஸம்ப்ரஸ்னம்—கேள்வியை; ஆகர்ண்ய—கேட்டு; ராஜர்ஷே—பரீட்சித்து மகாராஜனின்; பாதராயணி:—சுகதேவ கோஸ்வாமி; ப்ரதினந்ய—பாராட்டி; மஹா-யோகீ—மகா யோகியான; ஜகாத—பதிலளித்தார்; முனி-ஸத்தமா:—முனி சிரேஷ்டர்களே.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முனி சிரேஷ்டர்களே (நைமிஷாரண்யத்தில் கூடியிருந்தவர்கள்), மகா யோகியான சுகதேவ கோஸ்வாமி, பரீட்சித்து மகாராஜனின் கேள்வியைச் செவிமடுத்தபின், அதைப் பாராட்டி பின்வருமாறு பதிலளித்தார்.
பதம் 6.4.4
ஸ்ரீ-சுக உவாச
யதா ப்ரசேதஸ: புத்ரா தச ப்ராசீனபர்ஹிஷ:
அந்த: ஸமுத்ராத் உன்மக்னா தத்ருசுர் காம் த்ருமைர் வ்ருதாம்
ஸ்ரீ-சுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; யதா—எப்பொழுது; ப்ரசேதஸ:—பிரசேதர்கள்; புத்ரா:—மகன்கள்; தச—பத்து; ப்ரசீனபர்ஹிஷ:—பிராசீனபர்ஹி மகாராஜனின்; அந்த: ஸமுத்ராத்—சமுத்திரத்திலிருந்து; உன்மக்னா:—வெளியே வந்து; தத்ருசு:—கண்டனர்; காம்—உலகம் முழுவதும்; த்ருமை:-வ்ருதாம்—மரங்களால் மூடப்பட்டிருப்பதை.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பிராசீனபர்ஹியின் பத்து மகன்கள், தாங்கள் தவம் செய்துகொண்டிருந்த சமுத்திரத்திற்குள்ளிருந்து வெளியே வந்தபொழுது, உலகம் முழுவதும் மரங்களால் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர்.
பதம் 6.4.5
த்ருமேப்ய: க்ருத்யமானாஸ் தே தபோ-தீபத-மன்யவ:
முகதோ வாயும் அக்னிம் ச ஸஸ்ருஜுஸ் தத்-திதக்ஷயா
த்ருமேப்ய:—மரங்களிடம்; க்ருத்யமானா:—மிகவும் கோபங்கொண்டதால்; தே—அவர்கள் (பிரசீனபர்ஹியின் பத்து மகன்கள்); தப: தீபித-மன்யவ:—நீண்ட தவத்தினால் கொழுந்துவிட்டெரியும் கோபம் உடையவர்களாய்; முகத:—வாயிலிருந்து; வாயும்—காற்றையும்; அக்னிம் ச—மற்றும் நெருப்பையும்; ஸஸ்ருஜு:—அவர்கள் உண்டாக்கினர்; தத்—அக்காடுகளை; திதிக்ஷயா—எரித்துவிடும் எண்ணத்துடன்.
நீருக்குள் நீண்ட தவம் புரிந்த காரணத்தால், பிரசேதர்கள் மரங்களிடம் கடுங்கோபங் கொண்டனர். அவற்றை எரித்துச் சாம்பலாக்கிவிடும் எண்ணத்துடன், தங்களுடைய வாய்களிலிருந்து காற்றையும், நெருப்பையும் அவர்கள் உற்பத்தி செய்தனர்.
பதம் 6.4.6
தாப்யாம் நிர்தஹ்யமானாம்ஸ் தான் உபலப்ய குரூத்வஹ
ராஜோவாச மஹான் ஸோமோ மன்யும் ப்ரசமயன் இவ
தாப்யாம்—காற்றாலும், நெருப்பினாலும்; நிர்தஹ்யமானான்—எரிக்கப்பட்ட; தான்—அவற்றை (மரங்களை); உபலப்ய—கண்டு; குரூத்வஹ—பரீட்சித்து மகாராஜனே; ராஜா—காடுகளின் அரசன்; உவாசா—கூறினார்; மஹான்—சிறப்புடைய; ஸோம:—சந்திரனின் அதிதேவதையான சோமதேவன்; மன்யும்—கோபத்தை; ப்ரசமயன்—தணிப்பது; இவ—போல்.
பரீட்சித்து மகாராஜனே, மரங்களின் அரசனும், சந்திரனின் அதிதேவதையுமான சோமன், நெருப்பும், காற்றும் மரங்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்குவதைக் கண்டு, மிகவும் பரிதாபப்பட்டார். ஏனெனில், எல்லா மூலிகைகளுக்கும், மரங்களுக்கும் இரட்சகர் அவரே. சோமன் பிரசேதர்களின் கோபத்தைத் தணிக்க பின்வருமாறு கூறினார்.
பதம் 6.4.7
ந த்ருமேப்யோ மஹா-பாகா தீனேம்யோ த்ரோக்தும் அர்ஹத
விவர்தயிஷவோ யூயம் ப்ரஜானாம் பதய: ஸ்ம்ருதா:
ந—இல்லை; த்ருமேப்ய:—மரங்களை; மஹா-பாகா:—மகாபாக்கியசாலிகளே; தீனேப்ய:—பரிதாபத்திற்குரிய; த்ரோக்தும்—எரித்துச் சாம்பலாக்க; அர்ஹத—நீங்கள் தகுதியுடையவர்கள்; விவர்தயிஷவ:—பெருக்குவதில் ஆர்வம் காட்டுங்கள்; யூயம்—நீங்கள்; ப்ரஜானாம்—உங்களைச் சரணடைந்துள்ள எல்லா ஜீவராசிகளின்; பதய:—எஜமானர்கள் அல்லது காவலர்கள்; ஸ்ம்ருதா:—எனப்படுகிறார்கள்.
மகா பாக்கியசாலிகளே, பரிதாபகரமான இந்த மரங்களை நீங்கள் தீக்கிரையாக்கிக் கொல்லக்கூடாது. பிரஜைகளுக்கு செழிப்புண்டாகும்படி ஆசிர்வதித்து, அவர்களைக் காப்பாற்றுவதே உங்களுடைய கடமையாகும்.
பதம் 6.4.8
அஹோ ப்ரஜாபதி-பதிர் பகவான் ஹரிர் அவ்யய:
வனஸ்பதீன் ஓஷதீஸ் ச ஸஸர்ஜேர்ஜம் இஷம் விபு:
அஹோ—ஐயோ பாவம்; ப்ரஜாபதி-பதி:—படைக்கப்பட்ட ஜீவன்களின் தலைவர்களுக்கெல்லாம் தலைவரான; பகவான் ஹரி:—பரமபுருஷரான ஹரி; அவ்யய:—அழிவற்ற; வனஸ்பதீன்—மரம் செடி கொடிகளையும்; ஒஷதீ:—மூலிகைகளையும்; ச—கூட; ஸஸர்ஜ—படைத்துள்ளார்; ஊர்ஜம்—திடப்படுத்தும்; இஷம்—உணவை; விபு:—பரமபுருஷர்.
பரமபுருஷரான ஸ்ரீ ஹரி, பிரம்மதேவரைப் போன்ற பிரஜாபதிகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவராவார். அவர் எங்கும் பரவியுள்ள, அழிவற்ற தலைவர் என்பதால், அவர் இந்த மரங்களையும், தாவர வகைகளையும் பிற ஜீவராசிகளுக்கு உணவுகளாகப் படைத்துள்ளார்.
பதம் 6.4.9
அன்னம் சராணாம் அசரா ஹி அபத: பாத-சாரிணாம்
அஹஸ்தா ஹஸ்த-யுக்தானாம் த்வி-பதாம் ச சதுஷ்-பத:
அன்னம்—உணவு; சராணாம்—சிறகுகளால் பறப்பவைகளுக்கு; அசரா:—அசையாதிருப்பவை (பழங்களும், மலர்களும்); ஹி—உண்மையில்; அபத:—புல்லைப் போன்ற காலில்லா ஜீவன்கள்; பாதசாரிணாம்—பசுக்களையும், எருமைகளையும் போன்ற, கால்களால் நடமாடும் மிருகங்களுக்கு; அஹஸ்தா:—கைகளில்லாத மிருகங்கள்; ஹஸ்த யுக்தானாம்—புலிகளைப் போன்ற கைகளுள்ள மிருகங்களுக்கு; த்வி-பதாம்—இரண்டு கால்களுள்ள மனிதர்களுக்கு; ச—மற்றும்; சது:-பத:—மானைப் போன்ற நாலு கால் மிருகங்கள்.
இயற்கையின் ஏற்பாட்டினால், பழங்களும், மலர்களும் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகக் கருதப்படுகின்றன; புல்லும் மற்ற காலில்லா ஜீவன்களும், பசுக்களையும், எருமைகளையும் போன்ற நாலு கால் மிருகங்களுக்கு உணவாகும்; முன்னங்கால்களைக் கைகளாக உபயோகிக்க முடியாத மிருகங்கள், கூரிய நகங்களுள்ள புலிகளைப் போன்ற மிருகங்களுக்கு உணவாகும்; மற்றும் மான்களையும், ஆடுகளையும் போன்ற நாலுகால் மிருகங்களும், உணவுத் தானியங்களும் மனிதர்களின் உணவாகும்.
பதம் 6.4.10
யூயம் ச பித்ரான்வாதிஷ்டா தேவ-தேவேன சானகா:
ப்ரஜா-ஸர்காய ஹி கதம் வ்ருக்ஷாண் நிர்தக்தும் அர்ஹத
யூயம்—நீங்கள்; ச—கூட; பித்ரா—உங்கள் தந்தையால்; அன்வாதிஷ்டா:—உத்தரவிடப்பட்டுள்ளீர்கள்; தேவ-தேவேன—தலைவர்களுக்கெல்லாம் தலைவரான பரமபுருஷரால்; ச—கூட; அனகா:—பாவமற்றவர்களே; ப்ரஜா-ஸர்காய—ஜனத்தொகை உற்பத்திக்காக; ஹி—உண்மையில்; கதம்—எவ்வாறு; வ்ருக்ஷான்—மரங்களை; நிர்தக்தும்—எரித்துச் சாம்பலாக்கி; அர்ஹத—முடிந்தது.
தூய இதயம் படைத்தவர்களே, உங்கள் தந்தையான பிராசீன பர்ஹியும், பரமபுருஷரும் ஜனத்தொகையை உற்பத்தி செய்யும்படி உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளனர். எனவே உங்களுடைய பிரஜைகளையும், வம்சத்தினரையும் பராமரிப்பதற்குத் தேவையாக உள்ள இம்மரங்களையும், மூலிகைகளையும் நீங்கள் எப்படி எரித்துச் சாம்பலாக்கலாம்?
பதம் 6.4.11
ஆதிஷ்டத ஸதாம் மார்க்கம் கோபம் யச்சத தீபிதம்
பித்ரா பிதாமஹேனாபி ஜூஷ்டம் வ: ப்ரபிதாமஹை:
ஆதிஷ்டத—பின்பற்றுங்கள்; ஸதாம் மார்க்கம்—சிறந்த புண்ணியவான்களின் வழியை; கோபம்—கோபத்தை; யச்சத—அடக்குங்கள்; தீபிதம்—இப்பொழுது எழுந்துள்ள; பித்ரா—தந்தையால்; பிதாமஹேன அபி—பாட்டனாராலும்; ஜுஷ்டம்—நிறைவேற்றப்பட்ட; வ:—உங்களுடைய; ப்ரபிதாமஹை:—முப்பாட்டனார்களால்.
மனிதர்கள், மிருகங்கள், மரங்கள் உட்பட எல்லா பிரஜைகளையும் பராமரிப்பது தான் உங்களுடைய தந்தையாலும், பாட்டனாராலும், முப்பாட்டனாராலும் கடந்து செல்லப்பட்ட நல்வழியாகும். அதே வழியைத்தான் நீங்களும் பின்பற்ற வேண்டும். அநாவசியமான கோபம் உங்களுடைய கடமைக்கு விரோதமானதாகும். எனவே உங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதம் 6.4.12
தோகானாம் பிதரெள பந்தூ த்ருச: பக்ஷ்ம ஸ்த்ரியா: பதி:
பதி: ப்ரஜானாம் பிக்ஷூணாம் க்ருஹி அக்ஞானாம் புத: ஸுஹ்ருத்
தோகானாம்—குழந்தைகளுக்கு; பிதரௌ—பெற்றோர்கள்; பந்தூ—நண்பர்கள்; த்ருச:—கண்ணுக்கு; பக்ஷ்ம—இமை; ஸ்த்ரியா:—பெண்ணுக்கு; பதி:—கணவன்; பதி:—காவலன்; ப்ரஜானாம்—பிரஜைகளுக்கு; பிக்ஷுணாம்—யாசகர்களுக்கு; க்ருஹீ—குடும்பஸ்தன்; அக்ஞானாம்—அறியாமையில் உள்ளவர்களுக்கு; புத:—அறிஞன்; ஸு-ஹ்ருத்—நண்பன்.
குழந்தைகளைப் பெற்றோர்கள் நண்பர்களாக இருந்து பாதுகாப்பதுபோல், கண்ணை இமை காப்பது போல், ஒரு பெண்ணை கணவன் பராமரித்துக் காப்பது போல், குடும்பஸ்தன் யாசகர்களை பராமரித்துக் காப்பது போல், மற்றும் அறிஞன் அறியாமையில் உள்ளவனுக்கு நண்பனாக இருப்பது போல், அரசனும் தன் பிரஜைகளுக்கெல்லாம் காவலனாகவும், உயிர் கொடுப்பவனாகவும் விளங்குகிறான். மரங்கள்கூட அரசனின் பிரஜைகளே. எனவே அவற்றிற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
பதம் 6.4.13
அந்தர் தேஹேஷு பூதானாம் ஆத்மாஸ்தே ஹரிர் ஈஸ்வர:
ஸர்வம் தத்-திஷ்ண்யம் ஈக்ஷத்வம் ஏவம் வஸ்தோஷிதோ ஹி அஸௌ
அந்த: தேஹேஷு—உடல்களுக்குள் (இதயங்களுக்குள்); பூதானாம்—ஜீவராசிகளின்; ஆத்மா—பரமாத்மா; ஆஸ்தே—இருக்கிறார்; ஹரி:—பரம்புருஷரான; ஈஸ்வர:—பகவான் அல்லது ஈசுவரர்; ஸர்வம்—அனைத்துமே; தத்-திஷ்ண்யம்—அவரது வசிப்பிடங்களே; ஈக்ஷத்வம்—என்பதைக் காண முயலுங்கள்; ஏவம்—இவ்விதம்; வ:—உங்களிடம்; தோஷித:—திருப்தியடைவார்; ஹி—உண்மையில்; அஸௌ—அப்பரமபுருஷர்.
பரமபுருஷரானவர், உண்மையில் மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் முதலான அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளின் இதயங்களுக்குள்ளும் பரமாத்மாவாக இருக்கிறார். எனவே ஒவ்வொரு உடலையும் பகவானின் ஒரு வசிப்பிடமாக அல்லது ஆலயமாக நீங்கள் கருத வேண்டும். இத்தகைய கண்ணோட்டத்தின் மூலம் உங்களால் பகவானை திருப்திப்படுத்த இயலும். நீங்கள் கோபங்கொண்டு மரங்களின் ரூபத்திலுள்ள இந்த ஜீவராசிகளை கொல்லக்கூடாது.
பதம் 6.4.14
ய: ஸமுத்பதிதம் தேஹ ஆகாசான் மன்யும் உல்பணம்
ஆத்ம-ஜிக்ஞாஸயா யச்சேத் ஸ குணான் அதிவர்ததே
ய:—யாதொருவன்; ஸமுத்பதிதம்—திடீரென்று பொங்கியெழும்; தேஹே—உடலில்; ஆகாசாத்—ஆகாயத்திலிருந்து; மன்யும்—கோபத்தை; உல்பணம்—சக்திவாய்ந்த; ஆத்ம-ஜிக்ஞாஸயா—ஆன்மீக தன்னுணர்வைப் பற்றிய விசாரணையால்; யச்சேத்—கட்டுப்படுத்துகிறானோ; ஸ:—அவன்; குணான்—ஜட இயற்கைக் குணங்களை; அதிவர்ததே—கடந்தவனாகிறான்.
யாரொருவன் ஆன்மீக தன்னுணர்வைப் பற்றிய விசாரணையால், ஆகாயத்திலிருந்து விழுவதுபோல் உடலில் திடீரென்று பொங்கியெழும் சக்திவாய்ந்த தன் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறானோ, அவன் ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தைக் கடந்தவனாகிறான்.
பதம் 6.4.15
அலம் தக்தைர் த்ருமைர் தீனை: கிலானாம் சிவம் அஸ்து வ:
வார்க்ஷீ ஹி ஏஷா வரா கன்யா பத்னீத்வே ப்ரதிக்ருஹ்யதாம்
அலம்—போதும்; தக்தை:—எரித்தது; த்ருமை:—மரங்களை; தீனை:—பரிதாபமான; கிலானாம்—எஞ்சியுள்ள மரங்களுக்கு; சிவம்—எல்லா நன்மைகளும்; அஸ்து—உண்டாகட்டும்; வ:—உங்களுக்கு; வார்க்ஷீ—மரங்களால் வளர்க்கப்பட்ட; ஹி—உண்மையில்; ஏஷா—இந்த; வரா—தேர்வு; கன்யா—மகள்; பத்னீத்வே—மனைவியாக; ப்ரதிக்ருஹ்யதாம்—ஏற்றுக் கொள்ளப்படட்டும்.
பரிதாபத்திற்குரிய இம்மரங்களை இனி எரிக்க வேண்டிய அவசியமில்லை. எஞ்சியிருக்கும் மரங்களை மகிழ்ச்சியுடன் வாழவிடுங்கள். உண்மையில், நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்பொழுது, மரங்களால் தங்கள் மகளைப் போல் வளர்க்கப்பட்டவளும், அழகும், தகுதியும் உடையவளுமான மாரிஷா என்ற ஒரு பெண் இருக்கிறாள். இவ்வழகிய பெண்ணை உங்கள் மனைவியாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பதம் 6.4.16
இதி ஆமந்த்ரிய வராரோஹாம் கன்யாம் ஆப்ஸரஸீம் ந்ருப
ஸோமோ ராஜா யயௌ தத்வா தே தர்மேணோபயேமிரே
இதி—இவ்வாறு; ஆமந்த்ரிய—கூறியபின்; வர-ஆரோஹாம்—அழகிய உயர்ந்த இடைகளையுடைய; கன்யாம்—பெண்ணை; ஆப்ஸரஸீம்—ஓர் அப்ஸரஸ்ஸிற்குப் பிறந்த; ந்ருப—அரசே; ஸோம:—சந்திர தேவனான சோமன்; ராஜா—அரசன்; யயௌ—திரும்பிச்சென்றார்; தத்வா—ஒப்படைத்துவிட்டு; தே—அவர்கள்; தர்மேண—தர்மமுறைப்படி; உபயேமிரே—மணந்து கொண்டனர்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, சந்திர தேவனான சோமன் பிரசேதர்களை இவ்வாறு சாந்தப்படுத்திய பிறகு, பிரம்லோச்சா அப்ஸரஸ்ஸிற்குப் பிறந்த அழகிய பெண்ணை அவர்களுக்குக் கொடுத்தார். பிரசேதர்களும், மிகவும் அழகிய உயர்ந்த இடைகளையுடைய பிரம்லோச்சாவின் மகளை ஏற்றுக்கொண்டு, வேத முறைப்படி அவளைத் திருமணம் செய்து கொண்டனர்.
பதம் 6.4.17
தேப்யஸ் தஸ்யாம் ஸமபவத் தக்ஷ: ப்ராசேதஸ: கில
யஸ்ய ப்ரஜா-விஸர்கேண லோகா ஆபூரிதாஸ் த்ரய:
தேப்ய:—அந்த எல்லா பிரசேதர்களிடமிருந்தும்; தஸ்யாம்—அவளிடம்; ஸமபவத்—பிறந்தார்; தக்ஷ:—குழந்தைகள் பெறுவதில் வல்லவரான; ப்ராசேதஸ:—பிரசேதர்களின் அந்த மகன்; கில—உண்மையில்; யஸ்ய—யாருடைய; ப்ரஜா-விஸர்கேண—ஜனத் தொகையின் உற்பத்தியால்; லோகா:—உலகங்களையும்; ஆபூரிதா:—நிரப்பினார்; த்ரய:—மூன்று.
அப்பெண்ணின் கர்ப்பத்தில் பிரசேதர்கள் அனைவரும் தட்சன் என்ற ஒரு மகனைப் பெற்றனர். அவர் மூவுலகங்களையும் ஜீவராசிகளால் நிரப்பினார்.
பதம் 6.4.18
யதா ஸஸர்ஜ பூதானி தக்ஷா துஹித்ரு-வத்ஸல:
ரேதஸா மனஸா சைவ தன் மமாவஹித: ஸ்ருணு
யதா—எவ்வாறு; ஸஸர்ஜ—படைத்தார்; பூதானி—ஜீவராசிகளை; தக்ஷ:—தட்சன்; துஹித்ரு-வத்ஸல:—தன் புதல்விகளிடம் மிகவும் பாசம் கொண்ட; ரேதஸா—விந்துவினாலும்; மனஸா—மனதாலும்; ச—கூட; ஏவ—உண்மையில்; தத்—அதை; மம—என்னிடமிருந்து; அவஹித:—கவனமாக; ஸ்ருணு—கேளும்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தன் புதல்விகளிடம் மிகவும் பாசம் கொண்டிருந்த பிரஜாபதி தட்சன் எப்படி தன் விந்துவினாலும், மனதினாலும் வெவ்வேறு வகையான ஜீவராசிகளைப் படைத்தார் என்பதை என்னிடமிருந்து மிகவும் கவனமாகக் கேளும்.
பதம் 6.4.19
மனஸைவாஸ்ருஜத் பூர்வம் ப்ரஜாபதிர் இமா: ப்ரஜா:
தேவாஸுர-மனுஷ்யாதீன் நப:-ஸ்தல-ஜலௌகஸ:
மனஸா—மனதினால்; ஏவ—உண்மையில்; அஸ்ருஜத்—படைத்தார்; பூர்வம்—துவக்கத்தில்; ப்ரஜாபதி:—பிரஜாபதி (தட்சன்); இமா:—இந்த; ப்ரஜா:—ஜீவராசிகள்; தேவ—தேவர்கள்; அஸுர—அசுரர்கள்; மனுஷ்ய-ஆதீன்—மனிதர்கள் முதலான பிற ஜீவராசிகள்; நப:—ஆகாயத்தில்; ஸ்தல—நிலத்தில்; ஜல—அல்லது நீருக்குள்; ஒகஸ:—தங்கள் வசிப்பிடங்களை உடைய.
பிரஜாபதி தட்சன், தன் மனதினால் முதலில் எல்லா வகையான தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், நீர்வாழ் பிராணிகள் முதலியவைகளைப் படைத்தார்.
பதம் 6.4.20
தம் அப்ரும்ஹிதம் ஆலோக்ய ப்ரஜா-ஸர்கம் ப்ரஜாபதி:
விந்ய-பாதான் உபவ்ரஜ்ய ஸோ ‘சரத் துஷ்கரம் தப:
தம்—அதை; அப்ரும்ஹிதம்—அதிகரிக்காமல் இருந்த; ஆலோக்ய—கண்டு; ப்ரஜா-ஸர்கம்—ஜீவராசிகளின் படைப்பு; ப்ரஜாபதி:—தட்சன்; விந்ய-பாதான்—விந்திய மலைத்தொடருக்கு அருகிலிருந்த மலைகளுக்கு; உபவ்ரஜ்ய—சென்று; ஸ:—அவர்; அசரத்—புரிந்தார்; துஷ்கரம்—மிகவும் கடினமான; தப:—தவங்களை.
ஆனால் எல்லாவகையான ஜீவராசிகளையும் தான் சரியாக உற்பத்தி செய்யாததைக் கண்ட பிரஜாபதி தட்சன், விந்திய மலைத் தொடருக்கு அருகிலுள்ள ஒரு மலைக்குச் சென்று, மிகவும் கடினமான தவங்களைப் புரிந்தார்.
பதம் 6.4.21
தத்ராகமர்ஷணம் நாம தீர்த்தம் பாப-ஹரம் பரம் உபஸ்ப்ருஸ்யானுஸவனம் தபஸாதோஷயத் தரிம்
தத்ர—அங்கு; அகமர்ஷணம்—அகமர்ஷணம்; நாம—என்ற பெயருடைய; தீர்த்தம்—புண்ணிய ஸ்தலம்; பாப-ஹரம்—எல்லாப் பாவ விளைவுகளையும் போக்குவதற்கேற்ற; பரம்—மிகச்சிறந்த; உபஸ்ப்ருஸ்ய—ஆசமனமும், ஸ்நானமும் செய்து; அனுஸவனம்—அனுதினமும்; தபஸா—தவங்களால்; அதோஷயத்—மகிழ்வித்தார்; ஹரிம்—பரமபுருஷரை.
அந்த மலைக்கருகில் அகமர்ஷணம் என்ற பெயருடைய மிகவும் புனிதமான ஒரு ஸ்தலம் இருந்தது. அங்கு பிரஜாபதி தட்சன், பரமபுருஷரான ஸ்ரீ ஹரியை மகிழ்விக்கக் கடுந்தவங்களைப் புரிந்தும், வேத நியமங்களை நிறைவேற்றியும் அவரை திருப்திப்படுத்தினார்.
பதம் 6.4.22
அஸ்தௌஷீத் தம்ஸ-குஹ்யேன பகவந்தம் அதோக்ஷஜம்
துப்யம் தத் அபிதாஸ்யாமி கஸ்யாதுஷ்யத் யதா ஹரி:
அஸ்தௌஷீத்—திருப்திப்படுத்தினார்; ஹம்ஸ-குஹ்யேன—ஹம்ஸ-குஹ்யம் என்ற பிரசித்தி பெற்ற ஸ்தோத்திரத்தால்; பகவந்தம்—பரமபுருஷரை; அதோக்ஷஜம்—புலன்களின் அணுகுமுறைக்கு அப்பாற்பட்ட; துப்யம்—உமக்கு; தத்—அதை; அபிதாஸ்யாமி—நான் விவரிக்கிறேன்; கஸ்ய—பிரஜாபதியான தட்சனிடம்; அதுஷ்யத்—திருப்தியடைந்தார்; யதா—எப்படி; ஹரி:—பரமபுருஷர்.
அரசே, தட்சனால் பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரியைக் குறித்து செய்யப்பட்ட ஹம்ஸ-குஹ்ய ஸ்தோத்திரங்களைப் பற்றியும், அதனால் பகவான் எப்படி அவரிடம் திருப்தியடைந்தார் என்பதையும் நான் முழுமையாக உமக்கு விளக்குகிறேன்.
பதம் 6.4.23
ஸ்ரீ-ப்ரஜாபதிர் உவாச
நம: பராயாவிததானுபூதயே
குண-த்ரயாபாஸ-நிமித்த-பந்தவே
அத்ருஷ்ட-தாம்னே குண-தத்வ-புத்திபிர்
நிவ்ருத்த-மானாய ததே ஸ்வயம்புவே
ஸ்ரீ-ப்ரஜாபதி: உவாச—பிரஜாபதி தட்சன் கூறினார்; நம:—பணிவான வணக்கங்கள்; பராய—உன்னதமானவருக்கு; அவிதத—சரியான; அனுபூதயே—எவருடைய ஆன்மீக சக்தி அவருடைய உணர்வை ஏற்படுத்துகிறதோ அவருக்கு; குண-த்ரய—மூன்று ஜட இயற்கைக் குணங்களின்; ஆபாஸ—தோற்றமுள்ள ஜீவராசிகளின்; நிமித்த—மற்றும் ஜடசக்தியின்; பந்தவே—இயக்குபவருக்கு; அத்ருஷ்ட தாம்னே—அவரது இருப்பிடத்தில் பார்க்கப்படாத; குண-தத்வ-புத்திபி:—நிஜ உண்மையானது, மூன்று ஜட இயற்கைக் குணங்களடங்கிய தோற்றங்களின் உள்ளது என்று யாருடைய குறைமதி சொல்கிறதோ, அந்த பந்தப்பட்ட ஆத்மாக்களால்; நிவ்ருத்த-மானாய—எல்லா பெளதிக அளவுகளுக்கும், கணக்குகளுக்கும் அப்பாற்பட்ட; ததே—நான் சமர்ப்பிக்கிறேன்; ஸ்வயம்புவ—காரணமின்றி தோன்றும் பரமபுருஷருக்கு.
பிரஜாபதி தட்சன் கூறினார்: பரமபுருஷரானவர் மாயா சக்திக்கும், அதனால் உண்டாக்கப்படும் பெளதிகப் பிரிவுகளுக்கும் அப்பாற்பட்டவராவார். அவர் நம்பத் தகுந்த அறிவுக்கும், உயர்ந்த மனோ சக்திக்கும் உறைவிடமாவார். மேலும் அவரே ஜீவராசிகளையும், மாயா சக்தியையும் அடக்கியாள்கிறார். இந்த பெளதிகத் தோற்றமே அனைத்தும் என்று ஏற்றுக் கொண்டுள்ள பந்தப்பட்ட ஆத்மாக்களால் அவரைக் காண முடியாது. ஏனெனில் அவர் ஆராய்ச்சி அறிவின் சான்றுக்கு அப்பாற்பட்டவராவார். அவர் சுய சான்றுடையவரும், தன்னிறைவு உடையவருமாவார். அவருடைய காரணத்திற்கு வேறு உயர்ந்த காரணமில்லை. அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.24
ந யஸ்ய ஸக்யம் புருஷோ ‘வைதி ஸக்யு:
ஸகா வஸன் ஸம்வஸத: புரே ‘ஸ்மின்
குணே யதாகுணிணே வ்யக்த-த்ருஷ்டேஸ்
தஸ்மை மஹேசாய நமஸ்கரோமி
ந—இல்லை; யஸ்ய—யாருடைய; ஸக்யம்—நட்பை; புருஷ:—ஜீவராசி; அவைதி—அறிகிறானோ; ஸக்யு:—உயர்ந்த நண்பரின்; ஸகா—நண்பன்; வஸன்—வாழ்ந்துகொண்டு; ஸம்வஸத:—உடன் வாழ்பவரின்; புரே—உடலில்; அஸ்மின்:—இந்த; குண:—புலனால் உணரப்படும் பொருள்; யதா—போல்; குணின:—அதனதன் புலனுறுப்புக்களின்; வ்யக்த-த்ருஷ்டே:—பெளதிக தோற்றத்தை மேற்பார்வையிடும்; தஸ்மை—அவருக்கு; மஹா-ஈசாய—பரம ஈசுவரருக்கு; நமஸ்கரோமி—எனது வணக்கங்கள்.
புலன் பொருட்களால் (ரூபம், சுவை, ஸ்பரிசம், வாசனை, ஓசை), புலன்கள் எப்படி தங்களை நுகர்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அதுபோலவே, பந்தப்பட்ட ஆத்மாவானவன், தன் உடலில் பரமாத்மாவுடன் வாழ்ந்த போதிலும், பரம ஆன்மீக புருஷரும், பௌதிக சிருஷ்டியின் தலைவருமான அவர் எப்படி தன் புலன்களை வழிநடத்துகிறார் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியாது. பரம ஈசுவரரான அப்பரமபுருஷருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.25
தேஹோ ‘ஸவோ ‘க்ஷா மனவோ பூத-மாத்ராம்
ஆத்மானம் அன்யம் ச விது: பரம் யத்
ஸர்வம் புமான் வேத குணாம்ஸ் ச தஜ்-ஜ்ஞோ
ந வேத ஸர்வ-க்ஞம் அனந்தம் ஈடே
தேஹ:—இவ்வுடல்; அஸவ:—பிராண வாயுக்கள்; அக்ஷா:—வெவ்வேறு புலன்கள்; மனவ:—மனம், புரிந்துணர்வு, புத்தி மற்றும் அகங்காரம்; பூத-மாத்ராம்—ஐந்து பௌதிக மூலப் பொருட்களும், புலன் பொருட்களும் (ரூபம், சுவை, ஓசை முதலானவை); ஆத்மானம்—அவைகளையும்; அன்யம்—மற்றவைகளையும்; ச—கூட; விது:—அறிவர்; பரம்—அப்பாற்பட்ட; யத்—எது; ஸர்வம்—அனைத்தையும்; புமான்—ஜீவராசி; வேத—அறிகிறான்; குணான்—ஜட இயற்க்கையின் குணங்கள்; ச—மற்றும்; தத்-க்ஞ:—அப்பொருட்களை அறிந்து; ந—இல்லை; வேத—அறிகிறான்; ஸர்வ-க்ஞம்—சர்வக்ஞருக்கு; அனந்தம்—எல்லையற்றவரான; ஈடே—எனது பணிவான வணக்கங்கள்.
உடல், பிராண வாயுக்கள், புறப் புலன்கள், அறிவுப் (அக) புலன்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் சூட்சுமமான புலன் பொருட்கள் (ரூபம், சுவை, வாசனை, ஓசை, ஸ்பரிசம்) ஆகிய இவையனைத்தும் வெறும் ஜடப் பொருட்கள் என்பதால், அவற்றினால் தங்கள் சொந்த இயல்பையோ, மற்ற புலன்களின் இயல்பையோ அல்லது அவற்றை ஆள்பவைகளின் இயல்பையோ அறிய முடியாது. ஆனால் ஜீவராசியால் அவனது ஆன்மீக இயல்பின் காரணத்தால், அவனது உடலையும், பிராண வாயுக்களையும், புலன்களையும், மூலப் பொருட்களையும், புலன் பொருட்களையும் மட்டுமின்றி, அவற்றிற்கு வேராக உள்ள முக்குணங்களையும் கூட அறிய முடியும். ஆயினும், ஜீவராசி இவைகளையெல்லாம் முழுமையாக அறிந்திருக்கிறான் என்றாலும், அவனால் சர்வக்ஞரும், எல்லையற்றவருமான பரமபுருஷரைக் காண முடியாதிருக்கிறது. எனவே அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.26
யதோபரோமோ மனஸோ நாம-ரூப-
ரூபஸ்ய த்ருஷ்ட-ஸ்ம்ருதி-ஸம்ப்ரமோஷாத்
ய ஈயதே கேவலயா ஸ்வ-ஸம்ஸ்தயா
ஹம்ஸாய தஸ்மை சுசி-ஸத்மனே நம:
யதா—சமாதி நிலையில்; உபராம:—முழுமையாக நிறுத்தப்பட்டு; மனஸ:—மனதின்; நாம-ரூப—பௌதிக நாம ரூபங்கள்; ரூபஸ்ய—எந்த ரூபத்தில் அவை தோன்றுகின்றனவோ அதன்; த்ருஷ்ட—பௌதிக பார்வையின்; ஸ்ம்ருதி—மற்றும் நினைவின்; ஸம்ப்ரமோஷாத்—அழிவின் காரணத்தால்; ய:—யார் (பரமபுருஷர்); ஈயதே—உணரப்படுகிறார்; கேவலயா—ஆன்மீகமான; ஸ்வ ஸம்ஸ்தயா—சுயமான அவரது ஆதிரூபம்; ஹம்ஸாய—பரிசுத்தமானவருக்கு; தஸ்மை—அவருக்கு; சுசி ஸத்மனே—தூய ஆன்மீக நிலையில் மட்டுமே உணரப்படக்கூடிய; நம:—எனது பணிவான வணக்கங்கள்.
ஸ்தூல மற்றம் சூட்சும நிலைகளிலுள்ள பெளதிக வாழ்வின் களங்கத்திலிருந்து ஒருவனது உணர்வு முற்றிலும் தூய்மையடையும் பொழுதும், விழிப்பு மற்றும் கனவு நிலைகளில் உள்ளதுபோல் உணர்வு கலக்கமடையாமல் இருக்கும்பொழுதும், மற்றும் ஆழ்ந்த உறக்கத்தில் (ஸுஷுப்தி) உள்ளது போல் மனம் கலைந்துவிடாமல் இருக்கும் பொழுதும் ஒருவன் பரவச நிலைக்கு வருகிறான். அப்பொழுது ஒருவனது பெளதிகப் பார்வையும், நாம ரூபங்களைத் தோற்றுவிக்கும் மனதின் ஞாபகங்களும் அழிந்துவிடுகின்றன. இத்தகைய ஒரு சமாதி நிலையில் மட்டுமே பரமபுருஷர் பிரசன்னமாகிறார். இவ்வாறாக, களங்கமற்ற உன்னதமான அந்த நிலையில் தரிசிக்கப்படுபவரான பரமபுருஷருக்கு நமது பணிவான வணக்கங்களை சமர்ப்பிப்போமாக.
பதங்கள் 6.4.27 – 6.4.28
மனீஷிணோ ‘ந்தர்-ஹ்ருதி ஸன்னிவேசிதம்
ஸ்வ-சக்திபிர் நவபிஸ் ச த்ரிவ்ருத்பி:
வஹ்னிம் யதா தாருணி பாஞ்சதஸ்யம்
மனீஷயா நிஷ்கர்ஷந்தி கூடம்
ஸ வை மமாசேஷ-விசேஷ-மாயா-
நிஷேத-நிர்வாண-ஸுகானுபூதி:
ஸ ஸர்வ-நாம ஸ ச விஸ்வ-ரூப:
ப்ரஸீததாம் அனிருக்தாத்ம-சக்தி:
மனீஷிண:—வைதிக சடங்குகளையும், யக்ஞங்களையும் செய்யும் சிறந்த பிராமண பண்டிதர்கள்; அந்த:-ஹ்ருதி—இதயத்தின் ஆழத்தில்; ஸன்னிவேசிதம்—இருப்பதால்; ஸ்வ-சக்திபி:—அவரது சுய ஆன்மீக சக்திகளால்; நவபி:—ஒன்பது வகையான சக்திகளுடனும் கூட (ஜட இயற்கை, மொத்த ஜட சக்தி, அகங்காரம், மனம் மற்றும் ஐந்து புலன் பொருட்கள்); ச—மற்றும் (ஐந்து பௌதிக மூலப்பொருட்கள் மற்றும் பத்து அறிவு மற்றும் செயற் புலன்கள்); த்ரிவ்ருத்பி:—மூன்று ஜட இயற்கைக் குணங்களால்; வஹ்னிம்—நெருப்பு; யதா—போல்; தாருணி—விறகிலுள்ள; பாஞ்சதஸ்யம்—ஸாமிதேனீ எனப்படும் பதினைந்து மந்திர ஜபத்தினால் உண்டாக்கப்படும்; மனீஷயா—தூய்மையடைந்த புத்தியால்; நிஷ்கர்ஷந்தி—பிரித்தெடுக்கிறார்கள்; கூடம்—வெளிப்படவில்லை என்றாலும்; ஸ:—பரமபுருஷர்; வை—உண்மையில்; மம—என்னிடம்; அசேஷ—அனைத்து; விசேஷ—வகையான; மாயா—மாயாசக்தியின்; நிஷேத—மறுக்கும் முறையினால்; நிர்வாண—முக்தியின்; ஸுக அனுபூதி:—உன்னத ஆனந்தத்தினால் உணரப்படக்கூடிய; ஸ:—அப்பரம புருஷர்; ஸர்வ-நாமா—சகல நாமங்களுக்கும் மூலமான; ஸ:—அப்பரம புருஷர்; ச—கூட; விஸ்வ-ரூப:—பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட ரூபம்; ப்ரஸுததாம்—அவர் கருணை கொள்வாராக; அனிருக்த—நினைத்தற்கரிய; ஆத்ம-சக்தி:—எல்லா ஆன்மீக சக்திகளுக்கும் உறைவிடம்.
வைதிக சடங்குகளையும், யக்ஞங்களையும் செய்வதில் நிபுணர்களான சிறந்த பிராமண பண்டிதர்களால் எப்படி பதினைந்து ஸாமி தேனி மந்திரங்களை உச்சரித்து, விறகில் செயலற்று கிடக்கும் நெருப்பைப் பிரித்தெடுக்க முடிகிறதோ, அப்படியே, உணர்வில் உண்மையாக முன்னேறியவர்களால், அதாவது, கிருஷ்ண உணர்வு உடையவர்களால், இதய ஆழத்தில் தமது சுய ஆன்மீக சக்தியால் உறையும் பரமாத்மாவைக் காண முடிகிறது. இதயம் மூன்று ஜட இயற்கைக் குணங்களாலும், ஒன்பது பெளதிக மூலப் பொருட்களாலும் (ஜட இயற்கை, மொத்த ஜட சக்தி, அகங்காரம், மனம் மற்றும் ஐந்து புலன் நுகர்வுப் பொருட்கள்), மேலும் பஞ்ச பூதங்களாலும் மற்றும் பத்து புலன்களாலும் மூடப்பட்டுள்ளது. பகவானின் பகிரங்க சக்தியானது இருபத்தேழு மூலப் பொருட்களைக் கொண்டுள்ளது. சிறந்த யோகிகள், இதய ஆழத்தில் பரமாத்மாவாக அமர்ந்திருக்கும் பகவானை தியானிக்கின்றனர். அப்பரமாத்மா என்னிடம் திருப்தியடைவாராக. எண்ணற்ற வகையான பௌதிக வாழ்விலிருந்து ஒருவன் முக்தியடைய ஆவல் கொள்ளும்பொழுது, பரமாத்மா உணர்ந்தறியப்படுகிறார். பகவானின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபட்டு, அச்சேவை மனப்பான்மையின் காரணத்தால் பகவானை ஒருவன் உணரும்பொழுது, உண்மையாகவே இத்தகைய முக்தியை அவன் அடைகிறான். பௌதிக புலன்களால் அறிய முடியாத பல்வேறு ஆன்மீக பெயர்களால் பகவானை அழைக்கலாம். அப்பரமபுருஷர் என்று என்னிடம் திருப்தியடைவார்?
பதம் 6.4.29
யத் யன் நிருக்தம் வசஸா நிரூபிதம்
தியாக்ஷபிர் வா மனஸோத யஸ்ய
மா பூத் ஸ்வரூபம் குண-ரூபம் ஹி தத் தத்
ஸ வை குணாபாய-விஸர்க-லக்ஷண:
யத் யத்—எதெல்லாம்; நிருக்தம்—விவரிக்கப்படுகிறதோ; வாசஸா—வார்த்தைகளால்; நிரூபிதம்—ஆராய்ந்தறியப்பட்டு; தியா—பெயரளவேயான தியானத்தால் அல்லது புத்தியால்; அக்ஷபி:—புலன்களால்; வா—அல்லது; மனஸா—மனதால்; உத—நிச்சயமாக; யஸ்ய—யாருடைய; மா-பூத்—இருக்காது; ஸ்வ-ரூபம்—பகவானின் உண்மையான ரூபம்; குண-ரூபம்—முக்குணங்களைக் கொண்ட; ஹி—உண்மையில்; தத் தத்—அதெல்லாம்; ஸ:—அப்பரமபுருஷர்; வை—உண்மையில்; குண-அபாய—ஜட இயற்கைக் குணங்களாலான அனைத்தின் அழிவிற்கும் காரணமானது; விஸர்க—மற்றும் சிருஷ்டி; லக்ஷண:—போல் தோன்றும்.
பெளதிக ஓசையால் (வார்த்தைகளால்) விவரிக்கப்படும் எதுவும், பெளதிக புத்தியால் ஆராய்ந்தறியப்படும் எதுவும், பெளதிக புலன்களால் நுகரப்படும் எதுவும் அல்லது பௌதிக மனதிற்குள் ஊகிக்கப்படும் எதுவும், ஜட இயற்கைக் குணங்களின் விளைவேயாகும். ஆகவே இவற்றிற்கும், பரமபுருஷரின் நிஜமான இயற்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பரமபுருஷர் பெளதிக குணங்களுக்கும், சிருஷ்டிக்கும் மூலம் என்பதால், அவர் இந்த ஜட உலக சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவராவார். அவர் சிருஷ்டிக்கு முன்னும் பின்னும் எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக எப்பொழுதும் இருக்கிறார். அவருக்கு எனது பணிவான வணக்கங்களை நாம் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
பதம் 6.4.30
யஸ்மின் யதோ யேன ச யஸ்ய யஸ்மை
யத் யோ யதா குருதே கார்யதே ச
பராவரேஷாம் பரமம் ப்ராக் ப்ரஸித்தம்
தத் ப்ரஹ்ம தத்-தேதுர் அனன்யத் ஏகம்
யஸ்மின்—எவரில் (பரமபுருஷரில் அல்லது அடைக்கலம் புகும் பரமபதத்தில்); யத:—எவரிலிருந்து (அனைவரும் தோன்றுகின்றனவோ); யேன—எவரால் (அனைத்தும் நடத்தப்படுகின்றனவோ); ச—கூட; யஸ்ய—எவருக்கு அனைத்தும் சொந்தமோ; யஸ்மை—எவருக்கு (அனைத்தும் அர்ப்பணிக்கப்படுகின்றனவோ); யத்—எது; ய:—யார்; யதா—எவ்வாறு; குருதே—செய்கிறார்; கார்யதே—செய்விக்கிறார்; ச—மேலும்; பர-அவரேஷாம்—பௌதிக மற்றும் ஆன்மீக இருப்புகளில் உள்ள இவ்விரண்டின்; பரமம்—பரமானவர்; ப்ராக்—ஆதியானவர்; ப்ரஸித்தம்—பிரசித்தி பெற்றவர்; தத்—அந்த; ப்ரஹ்ம—பரப்பிரம்மன்; தத் ஹேது—எல்லாக் காரணங்களுக்கும் காரணமானவரும்; அனன்யத்—வேறெந்த காரணமும் இல்லாதவரும்; ஏகம்—இரண்டற்ற ஒருவருமான.
பரப்பிரம்மனாகிய ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் முடிவான புகலிடமும், மூலமுமாவார். அனைத்தும் அவராலேயே செய்யப்படுகின்றன. அனைத்தும் அவருக்கே சொந்தம். அனைத்தும் அவருக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன. அவரே முடிவான இலக்கும் ஆவார். செய்வதிலோ அல்லது பிறரைச் செய்விப்பதிலோ அவரே முடிவாகச் செயலாற்றுகிறார். உயர்ந்த, தாழ்ந்த என்ற பல காரணங்கள் உள்ளன. ஆனால் அவரே எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணம் என்பதால், அவர், எல்லாச் செயல்களுக்கும் முன்பே இருந்த பரப்பிரம்மன் என்று பிரசித்தி பெற்று விளங்குகிறார். அவர் இரண்டற்ற ஒருவரும், வேறெந்த காரணமும் இல்லாதவருமாவார். எனவே அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.31
யச்-சக்தயோ வததாம் வாதினாம் வை
விவாத-ஸம்வாத-புவோ பவந்தி
குர்வந்தி சைஷாம் முஹுர் ஆத்ம-மோஹம்
தஸ்மை நமோ ‘னந்த-குணாய பூம்னே
யத்-சக்தய:—யாருடைய பலவகைப்பட்ட சக்திகள்; வததாம்—வெவ்வேறு தத்துவங்களைப் பேசும்; வாதினாம்—பேச்சாளர்களுடைய; வை—உண்மையில்; விவாத—விவாதத்தின்; ஸம்வாத—மற்றும் ஒப்புதலின்; புவ:—காரணங்கள்; பவந்தி—இருக்கிறார்கள்; குர்வந்தி—உண்டாக்குகிறார்; ச—மேலும்; ஏஷாம்—அவர்களுடைய (தத்துவவாதிகள்); முஹு:—தொடர்ச்சியாக; ஆத்ம-மோஹம்—ஆத்மாவின் இருப்பைப் பற்றிய குழப்பம்; தஸ்மை—அவருக்கு; நம:—எனது பணிவான வணக்கங்கள்; அனந்த—எல்லையற்ற; குணாய—உன்னத குணங்களுடைய; பூம்னே—எங்கும் நிறைந்த பரமபுருஷர்.
எண்ணற்ற உன்னத குணங்களுடையவரும், எங்கும் நிறைந்தவருமான பரமபுருஷருக்கு எனது பணிவான வணக்கங்கள். பல்வேறு கொள்கைகளைப் பரப்பும் தத்துவாதிகளுடைய இதயங்களின் ஆழத்தில் இருந்து கொண்டு செயற்படும் பகவான், சிலசமயங்களில் ஒப்புக் கொண்டும், சிலசமயங்களில் ஒப்புக்கொள்ளாமலும் தங்களுக்கிடையில் வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொள்ளும் அத்தத்துவவாதிகள் தங்களுடைய சொந்த ஆத்மாக்களையே மறந்துவிடும்படி செய்கிறார். இவ்விதமாக எந்த ஒரு சூழ்நிலையில் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடிவதில்லையோ, அத்தகைய ஒரு சூழ்நிலையை பகவான் இந்த ஜட உலகில் உண்டாக்குகிறார். அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.32
அஸ்தீதி நாஸ்தீதி ச வஸ்து-நிஷ்டயோர்
ஏக-ஸ்தயோர் பின்ன-விருத்த-தர்மணோ:
அவேக்ஷிதம் கிஞ்சன யோக-ஸாங்க்யயோ:
ஸமம் பரம் ஹி அனுகூலம் ப்ருஹத் தத்
அஸ்தி—இருக்கிறது; இதி—இவ்வாறாக; ந—இல்லை; அஸ்தி—இருக்கிறது; இதி—இவ்வாறாக; ச—மேலும்; வஸ்து-நிஷ்டயோ:—மூல காரணத்தைப் பற்றிய அறிவை உடைய; ஏக-ஸ்தயோ:—பிரம்மனை நிலைநாட்டும் ஒரே விஷயத்தைக் கொண்ட; பின்ன—வித்தியாசத்தையும்; விருத்த-தர்மணோ:—எதிரிமறையான குணங்களையும் காட்டும்; அவேக்ஷிதம்—அறியப்படுகிறது; கிஞ்சன—ஏதோ ஒன்றான அது; யோக-ஸாங்க்யயோ:—அஷ்டாங்க யோகம் மற்றும் சாங்கிய தத்துவம் (இயற்கையின் இயல்புகளின் ஆராய்ச்சி) ஆகியவற்றிற்கு; ஸமம்—சமமானதாகும்; பரம்—உன்னதமான; ஹி—உண்மையில்; அனுகூலம்—உறைவிடம்; ப்ருஹத்-தத்—அந்த மூல காரணம்.
ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள் என்ற இரு கட்சியினர் உள்ளனர். பரமாத்மாவை ஏற்றுக்கொள்ளும் ஆஸ்திகன், அஷ்டாங்க யோகத்தின் வாயிலாக ஆன்மீக காரணத்தை அறிகிறான். ஆனால் பெளதிக மூலப் பொருட்களை மட்டும் ஆராய்வதில் ஈடுபட்டுள்ள சாங்கியவாதியோ அருவவாத முடிவுக்கு வந்து, ஒரு பரம காரணம் (பகவான், பரமாத்மா அல்லது பிரம்மன்) இருப்பதைக்கூட ஏற்க மறுக்கிறான். அதற்குப்பதிலாக அவன் ஜட இயற்கையின மிதமிஞ்சிய புறச் செயல்களில் ஆழ்ந்திருக்கிறான். ஆயினும், முடிந்த முடிவாக இருகட்சியினருமே பூரண உண்மையைத்தான் குறிக்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய கூற்றுகள் எதிரிடையானவையாக இருப்பினும், அவ்விருவரின் குறிக்கோளும் ஒரே மூலகாரணம்தான். அவ்விருவரும் ஒரே பரப்பிரம்மனைத்தான் நாடுகிறார்கள். அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.33
யோ ‘நுக்ரஹார்த்தம் பஜதாம் பாத-மூலம்
அனாம-ரூபோ பகவான் அனந்த:
நாமானி ரூபாணி ச ஜன்ம-கர்மபிர்
பேஜே ஸ மஹ்யம் பரம: ப்ரஸீதது
ய:—யார் (பரமபுருஷர்); அனுக்ரஹ—அர்த்தம் அவரது காரணமற்ற கருணையைக் காட்ட; பஜதாம்—எப்பொழுதும் பக்தித் தொண்டாற்றும் பக்தர்களுக்கு; பாத-மூலம்—உன்னதமான அவரது தாமரைப் பாதங்களுக்கு; அனாம—பௌதிக பெயர் இல்லாத; ரூப:—அல்லது பெளதிக ரூபம்; பகவான்—பரமபுருஷர்; அனந்த:—எல்லையற்ற எங்கும் நிறைந்துள்ள, மற்றும் நித்தியமான; நாமானி—உன்னதமான புனித நாமங்கள்; ரூபாணி—அவரது உன்னத ரூபங்கள்; ச—கூட; ஜன்ம-கர்மபி:—அவரது உன்னதமான பிறப்பு மற்றும் செயல்களுடன்; பேஜே—தோன்றுகிறார்; ஸ:—அவர்; மஹ்யம்—எனக்கு; பரம:—பரமபுருஷர்; ப்ரஸீதது—கருணை கொள்வராக.
நினைத்தற்கரிய ஐசுவரியமுள்ளவரும், பெளதிக நாமங்களோ, ரூபங்களோ, லீலைகளோ இல்லாதவரும், எங்கும் நிறைந்தவருமான பரமபுருஷர், குறிப்பாகத் தமது தாமரைப் பாதங்களை வழிபடும் பக்தர்களிடம் கருணை கொண்டவராவார். இவ்வாறாக அவர் தமது வெவ்வேறு லீலைகளின் வாயிலாக, உன்னதமான தமது நாமங்களையும், ரூபங்களையும் காட்டுகிறார். அறிவும், ஆனந்தமும் நிரம்பிய நித்திய ரூபத்தையுடைய அப்பரம புருஷர் என்னிடம் கருணை கொள்வாராக.
பதம் 6.4.34
ய: ப்ராக்ருதைர் ஞான-பதைர் ஜனானாம்
யதாசயம் தேஹ-கதோ விபாதி
யதானில: பார்த்திவம் ஆஸ்ரிதோ குணம்
ஸ ஈஸ்வரோ மே குருதாம் மனோரதம்
ய:—யார்; ப்ராக்ருதை:—கீழ் நிலையிலுள்ள; ஞான-பதை:—வழிபாட்டு முறைகளால்; ஜனானாம்—அனைத்து ஜீவராசிகளின்; யதா-ஆசயம்—விருப்பத்திற்கேற்ப; தேஹ-கத:—இதய ஆழத்திலுள்ள; விபாதி—தோன்றுகிறார்; யதா—எவ்வாறு; அனில:—காற்று; பார்த்திவம்—மண்ணினுடைய; ஆஸ்ரித:—பெற்று; குணம்—(வர்ணம் மற்றும் வாசனை போன்ற) குணத்தை; ஸ:—அவர்; ஈஸ்வர:—பரமபுருஷர்; மே—எனது; குருதாம்—நிறைவேற்றுவாராக; மனோரதம்—(பக்தித் தொண்டிற்குரிய) விருப்பத்தை.
பூவின் வாசனை அல்லது காற்றுடன் கலந்த புழுதியினால் உண்டாகும் வர்ணங்கள் ஆகியவற்றைப் போன்ற, பெளதிக மூலப் பொருட்களின் பல்வேறு இயல்புகளைக் காற்று ஏந்திச் செல்வது போலவே, பகவானும் ஒருவனுடைய விருப்பங்களுக்கேற்ப, கீழான வழிபாட்டு முறைகளின் வாயிலாக தேவர்களாகத் தோன்றுகிறாரேயொழிய, அவரது உண்மையான மூல ரூபத்திலல்ல. இத்தகைய மற்ற ரூபங்களால் என்ன பயன்? மூல முழுமுதற் கடவுள் என் விருப்பங்களை நிறைவேற்றி அருள் புரிவாராக.
பதங்கள் 6.4.35 – 6.4.39
ஸ்ரீ-சுக உவாச
இதி ஸ்துத: ஸம்ஸ்துவத: ஸ தஸ்மின் அகமர்ஷணே
ப்ராதுராஸீத் குரு-ஸ்ரோஷ்ட பகவான் பக்த-வத்ஸல:
க்ருத-பாத: ஸுபர்ணாம்ஸே ப்ரலம்பாஷ்ட-மஹாபுஜ:
சக்ர-சங்காஸி-சர்மேஷு-தனு:-பாச-கதா-தர:
பீத-வாஸா கன-ஸ்யாம: ப்ரஸன்ன-வதனேக்ஷண:
வன-மாலா-நிவீதாங்கோ லஸச்-ஸ்ரீவத்ஸ-கொஸ்துப
மஹா-கிரீட-கடக: ஸ்ஃபுரன்-மகர-குண்டல:
காஞ்சி-அங்குலீய-வலய-நூபுராங்கத-பூஷித:
த்ரைலோக்ய-மோஹனம் ரூபம் பிப்ரத் த்ரிபுவனேஸ்வர:
வ்ருதோ நாரத-நந்தாத்யை: பார்ஷதை: ஸுர-யூதபை:
ஸ்தூயமானோ ‘நுகாயத்பி: ஸித்த-கந்தர்வ-சாரணை:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஸ்துத:—துதிக்கப்பட்டு; ஸம்ஸ்துவத:—பிரார்த்தனைகள் செய்து கொண்டிருந்த தட்சனின்; ஸ:—அப்பரம புருஷர்; தஸ்மின்—அந்த; அகமர்ஷணே—அகமர்ஷணம் என்று கீர்த்திபெற்ற அப்புண்ணிய ஸ்தலத்தில்; ப்ராதுராஸீத்—தோன்றினார்; குரு-ஸ்ரோஷ்ட—குரு சிரேஷ்டரே; பகவான்—பரமபுருஷர்; பக்த-வத்ஸல:—தம் பக்தர்களிடம் மிகவும் கருணையுடைய; க்ருத-பாத:—அவரது தாமரைப் பாதங்கள் வைக்கப்பட்டு; ஸுபர்ண-அம்ஸே—அவரது கருட வாகனத்தின் தோள்களில்; ப்ரலம்ப—மிகவும் நீண்ட; அஷ்ட-மஹா-புஜ:—எட்டு பலம் பொருந்திய கைகளுடைய; சக்ர—சக்கரம்; சங்க—சங்கு; அஸி—வாள்; சர்ம—கேடயம்; இஷு—அம்பு; தனு:—வில்; பாச—கயிறு; கதா—கதை; தர—இவற்றை தரித்தவரால்; பீத-வாஸா:—மஞ்சள் நிற பீதாம்பரங்களுடன்; கன-ஸ்யாம:—கருநீல வர்ணமுடைய அவரது தேகம்; ப்ரஸன்ன—மிகவும் மகிழ்ச்சி பொங்கும்; வதன—முகத்துடனும்; ஈக்ஷண:—பார்வையுடனும்; வன-மாலா—காட்டுப் பூக்களாலான ஒருமாலையால்; நிவீத-அங்க:—கழுத்திலிருந்து பாதங்கள் வரை அவரது தேகம் அலங்கரிக்கப்பட்டிருந்தது; லஸத்—ஜொலிக்கும்; ஸ்ரீவத்ஸ-கொஸ்துப:—கௌஸ்துப மணியும், ஸ்ரீவத்ஸம் என்ற அடையாளமும்; மஹா-கிரீட—மிகப் பெரிய அழகிய ஒரு கீரிடத்தின்; கடக:—ஒரு வளையம்; ஸ்ஃபுரத்—பிரகாசிக்கும்; மகர-குண்டல:—மகர (சுறாமீன்) குண்டலங்கள்; காஞ்சீ—ஒரு கச்சையுடன்; அங்குலீய—மோதிரங்கள்; வலய—வளையல்கள்; நூபுர—கொலுசுகள்; அங்கத—தோளணிகள்; பூஷித:—இவைகளால் அலங்கரிக்கப்பட்டவராய்; த்ரை-லோக்ய-மோஹனம்—மூவுலகங்களையும் வசியப்படுத்தும்; ரூபம்—அவரது தேக அம்சங்கள்; பிப்ரத்—பிரகாசிக்கும்; த்ரி-புவன—மூவுலகங்களையும்; ஈஸ்வர:—பரம ஈசுவரர்; வ்ரத:—சூழப்பட்டவராய்; நாரத—நாரதர் முதலான சிறந்த பக்தர்களால்; நந்த-ஆத்யை:—மற்றும் நந்தரைப் போன்ற மற்றவர்களாலும்; பார்ஷதை:—நித்திய சகாக்களான; ஸுர-யூதபை:—மற்றும் தேவர்களின் தலைவர்களாலும்; ஸ்தூயமான:—துதிக்கப்பட்டவராய்; அனுகாயத்பி:—அவரை பின் தொடர்ந்து பாடும்; ஸித்த-கந்தர்வ-சாரணை:—சித்தர்கள், கந்தர்வர்கள் மற்றும் சாரணர்களால்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தமது பக்தர்களிடம் மிகவும் கருணையுடைவரும் பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ ஹரி தட்சனின் பிரார்த்தனைகளால் மிகவும் மகிழ்ந்து, அகமர்ஷணம் என்ற அப்புண்ணிய ஸ்தலத்தில் தோன்றினார். குரு சிரேஷ்டராகிய பரீட்சித்து மகாராஜனே, பகவானின் தாமரைப் பாதங்கள் அவரது கருட வாகனத்தின் தோள்கள் மேல் படித்திருக்க, நீண்ட அழகிய எட்டு பலம் பொருந்திய கைகளுடன் அவர் காட்சியளித்தார். அவரது கைகளில் அவர், ஒரு சக்கரம், சங்கு, வாள், கேடயம், அம்பு, வில் கயிறு மற்றும் கதை ஆகியவற்றைப் பிடித்திருந்தார். இவ்விதமாக அவரது ஒவ்வொரு கையிலும் வெவ்வேறு ஆயுதங்கள் பிரகாசமாக ஜொலித்தன. அவரது ஆடைகள் மஞ்சள் நிறமாகவும், அவரது தேக வர்ணம் கரு நீலமாகவும் இருந்தன. அவரது கண்களிலும், முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. மேலும் அவரது கழுத்திலிருந்து பாதங்கள் வரை ஒரு வன மாலை தொங்கியது. அவரது மார்பு கௌஸ்துப மணியாலும், ஸ்ரீவத்ஸம் என்ற அடையாளத்தினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது தலையில் பெரியதொரு வட்டமான அழகிய கிரீடத்தை அவர் அணிந்திருந்தார். அவரது காதுகள் மகர குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த ஆபரணங்களைத்தும் அசாதாரணமான அழகுடன் விளங்கின. பகவான் அவரது இடுப்பில் ஒரு தங்கக் கச்சையையும், கைகளில் வளையல்களையும், விரல்களில் மோதிரங்களையும், மற்றும் கணுக்கால்களில் கொலுசுகளையும் அணிந்திருந்தார். பல்வேறு ஆபரணங்களால் இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு இருந்தவரும், மூவுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் கவர்ந்திழுப்பவருமான பகவான் ஸ்ரீ ஹரி புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறார். அவர் நாரதர், நந்தர் மற்றும் இந்திரனின் தலைமையிலான முக்கிய தேவர்கள், மற்றும் சித்தலோகம், கந்தர்வலோகம், சாரண லோகம் ஆகியவற்றைப் போன்ற மேலுலகவாசிகள் ஆகியோரைப் போன்ற சிறந்த பக்தர்களால் பின்தொடரப்பட்டார். இந்த பக்தர்கள், பகவானின் இரு பக்கங்களிலும், பின்புறத்திலும்கூட இருந்தபடி இடையறாது அவரை துதித்துக் கொண்டிருந்தனர்.
பதம் 6.4.40
ரூபம் தன் மஹத்-ஆஸ்சர்யம் விசக்ஷ்யாகத-ஸாத்வஸ:
நானாம தண்டவத் பூமௌ ப்ரஹ்ருஷ்டாத்மா ப்ரஜாபதி:
ரூபம்—உன்னத ரூபத்தை; தத்—அந்த; மஹத்-ஆஸ்சர்யம்—ஆதியற்புதமான; விசக்ஷ்ய—கண்டு; ஆகத-ஸாத்வஸ:—முதலில் அச்சம் கொண்டு; நானாம—வணங்கினார்; தண்ட-வத்—உலக்கை போல்; பூமௌ—தரையில்; ப்ரஹ்ருஷ்ட-ஆத்மா—உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றும் ஆனந்தத்தில் திளைக்க; ப்ரஜாபதி:—தட்சன் என்ற பிரஜாபதி.
பரமபுருஷரின் அந்த பிரகாசமான அற்புத ரூபத்தைக் கண்டு பிரஜாபதி தட்சன் முதலில் அச்சத்திற்குள்ளானார் என்றாலும் பிறகு பகவத் தரிசனத்தால் மனம்மகிழ்ந்த அவர், பகவானுக்கு தன் வணக்கத்தைச் செலுத்த, உலக்கை போல் தரையில் விழுந்தார் (தண்டவத்).
பதம் 6.4.41
ந கிஞ்சனோதீரயிதும் அசகத் தீவ்ரயா முதா
ஆபூரித-மனோத்வாரைர் ஹ்ரதின்ய இவ நிர்ஜரை:
ந—இல்லை; கிஞ்சன—எதுவும்; உதீரயிதும்—பேச; அசகத்—அவரால் முடிந்தது; தீவ்ரயா—மிகப்பெரிய; முதா—மகிழ்ச்சியால்; ஆபூரித—நிரம்பின; மன:-த்வாரை:—புலன்களால்; ஹ்ரதின்ய:—நதிகள்; இவ—போல்; நிர்ஜரை:—மலையிலிருந்து வரும் பிரவாகம்.
ஒரு மலையிலிருந்து வரும் நீரோட்டத்தால் நதிகள் நிரம்புவது போல், தட்சனின் புலன்களெல்லாம் மகிழ்ச்சியால் நிரம்பின. மிகவுயர்ந்த அம்மகிழ்ச்சியின் காரணத்தால், எதுவும் பேச முடியாத தட்சன் அப்படியே பூமியில் கிடந்தார்.
பதம் 6.4.42
தம் ததாவனதம் பக்தம் ப்ரஜா-காமம் ப்ரஜாபதிம்
சித்த க்ஞ: ஸர்வ-பூதானாம் இதம் ஆஹ ஜனார்தன:
தம்—அவரை (பிரஜாபதி தட்சனை); ததா—அவ்விதத்தில்; அவனதம்—தம் முன் சாஷ்டாங்கமாய் வணங்கிய; பக்தம்—சிறந்த பக்தன்; ப்ரஜா-காமம்—ஜனத்தொகையைப் பெருக்கும் விருப்பம் கொண்டு; ப்ரஜாபதிம்—அந்த பிரஜாபதியிடம் (தட்சனிடம்); சித்தக்ஞ:—இதயங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவரான; ஸர்வ-பூதானாம்—அனைத்து ஜீவராசிகளின்; இதம்—இதை; ஆஹ—கூறினார்; ஜனார்தன:—எல்லோருடைய விருப்பங்களையும் திருப்திப்படுத்தக்கூடிய பரமபுருஷர்.
பிரஜாபதி தட்சனால் எதுவும் கூற இயலவில்லை என்றாலும், எல்லோருடைய இதயங்களையும் அறிபவரான பகவான், தமது பக்தன் அவ்வாறு சாஷ்டாங்கமாக விழுந்து கிடப்பதையும், ஜனத்தொகையைப் பெருக்கும் விருப்பம் கொண்டுள்ளதையும் கண்டு, பின்வருமாறு அவரிடம் கூறினார்.
பதம் 6.4.43
ஸ்ரீ-பகவான் உவாச
ப்ராசேதஸ மஹா-பாக ஸம்ஸித்தஸ் தபஸா பவான்
யச் ச்ரத்தயா மத்-பரயா மயி பாவம் பரம் கத:
ஸ்ரீ-பகவான் உவாச—பரமபுருஷர் கூறினார்; ப்ராசேதஸ—பிராசேதஸரே; மஹா-பாக—மகா பாக்கியசாலியே; ஸம்ஸித்த:—பூரணத்துவம் அடைந்து விட்டீர்; தபஸா—உமது தவங்களால்; பவான்—நல்லாத்மாவாகிய நீர்; யத்—ஏனெனில்; ஸ்ரத்தயா—பெரும் சிரத்தையால்; மத்-பரயா—என்னையே இலக்காகக் கொண்டு; மயி—என்னில்; பாவம்—ஆனந்தத்தை; பரம்—பரம; கத:—அடைந்துள்ளீர்.
பரமபுருஷர் கூறினார்: மகா பாக்கியசாலியான பிராசேதஸரே, என்னிடம் உமக்குள்ள பெரும் சிரத்தையினால், பரம பக்தி பாவத்தை நீர் அடைந்து விட்டீர். உண்மையில், பரம பக்தியுடன் கூடிய உமது தவங்களின் காரணத்தால், உமது வாழ்வின் பயனை இப்பொழுது அடைந்து, முழு பூரணத்துவத்தை நீர் அடைந்துவிட்டீர்.
பதம் 6.4.44
ப்ரீதோ ‘ஹம் தே ப்ரஜா-நாத யத் தே ‘ஸ்யோத்ப்ரும்ஹணம் தப:
மமைஷ காமோ பூதானாம் யத் பூயாஸுர் விபூதய:
ப்ரீத:—மிகவும் திருப்தியடைகிறேன்; அஹம்—நான்; தே—உம்மிடம்; ப்ரஜா-நாத—பிரஜைகளின் அரசே; யத்—ஏனெனில்; தே—உமது; அஸ்ய—இந்த ஜட உலகின்; உத்ப்ரும்ஹணம்—அதிகரிக்கச் செய்யும்; தப:—தவம்; மம—எனது; ஏஷ:—இந்த; காம:—விருப்பம்; பூதானாம்—ஜீவராசிகளுடைய; யத்—எந்த; பூயாஸு:—இருக்கட்டும்; விபூதய:—எல்லா வகையிலும் முன்னேற்றம்.
எனக்குப் பிரியமான பிரஜாபதி தட்சனே, உலக நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் கடுந்தவங்களை நீர் புரிந்திருக்கிறீர். என் விருப்பமும் இவ்வுலகிலுள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதுதான். எனவே, உம்மிடம் நான் மிகவும் திருப்தியடைந்துள்ளேன். ஏனெனில் உலக நன்மையெனும் என் விருப்பத்தை நிறைவேற்ற நீர் பாடுபடுகிறீர்.
பதம் 6.4.45
ப்ரஹ்மா பவோ பவந்தஸ் ச மனவோ விபுதேஸ்வரா:
விபூதயோ மம ஹி ஏதா பூதானாம் பூதி-ஹேதவ:
ப்ரஹ்மா—பிரம்ம தேவர்; பவ:—சிவபெருமான்; பவந்த:—பிரஜாபதிகளான நீங்களனைவரும்; ச—மற்றும்; மனவ:—மனுக்களும்; விபுத-ஈஸ்வரா:—(உலக நன்மைக்காக வெவ்வேறு செயல்களுக்குப் பொறுப்பேற்றுள்ள சூரியன், சந்திரன், வெள்ளி, செவ்வாய், வியாழன் முதலான) பல்வேறு தேவர்கள்; விபூதய:—சக்தியின் விரிவங்கங்களாவீர்; மம—எனது; ஹி—உண்மையில்; ஏதா:—இவ்வெல்லா; பூதானாம்—ஜீவராசிகளின்; பூதி—நன்மையின்; ஹேதவ:—காரணங்கள்.
பிரம்ம தேவர், சிவபெருமான், மனுக்கள், உயர்கிரக அமைப்புக்களிலுள்ள மற்றெல்லா தேவர்கள் மற்றும் ஜனத் தொகையைப் பெருக்கும் பிரஜாபதிகளான நீங்கள் ஆகிய அனைவரும், அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவே செயற்படுகிறீர்கள். இவ்வாறாக, எனது நடுத்தர சக்தியின் விரிவங்கங்களாகிய நீங்கள் எனது பல்வேறு குணங்களின் அவதாரங்களாவீர்.
பதம் 6.4.46
தபோ மே ஹ்ருதயம் ப்ரஹ்மம்ஸ் தனுர் வித்யா க்ரியாக்ருதி:
அங்கானி க்ரதவோ ஜாதா தர்ம ஆத்மாஸவ: ஸுரா:
தப:—மனவடக்கம், அஷ்டாங்க யோகம் மற்றும் தியானம் போன்ற தவங்கள்; மே—எனது; ஹ்ருதயம்—இதயமாகும்; ப்ரஹ்மன்—பிராமணரே; தனு:—உடலாகும்; வித்யா—வேத சாஸ்திரங்களிலிருந்து பெறப்படும் அறிவு; க்ரியா—ஆன்மீக செயல்கள்; ஆக்ருதி:—வடிவம்; அங்கானி—உடலின் அவயவங்கள்; க்ரதவ:—வேத இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிரியைகளும், யக்ஞங்களும்; ஜாதா:— நிறைவேற்றப்படும்; தர்ம:—கிரியைகளை நிறைவேற்ற உதவும் சமயக் கோட்பாடுகள்; ஆத்மா—எனது ஆத்மாவாகும்; அஸவ:—உயிர்க் காற்றுகள்; ஸுரா:—ஜட உலகின் வெவ்வேறு இலாக்காக்களில் எனது உத்தரவுகளை நிறைவேற்றும் தேவர்கள்.
எனதருமை பிராமணரே, தியானத்தின் வடிவிலுள்ள தவம் எனது இதயமாகும். சுலோகங்கள் மற்றும் மந்திரங்களின் வடிவிலுள்ள வேத ஞானம் எனது உடலாகும். மேலும் ஆன்மீகச் செயல்களும், ஆனந்தப் பரவச நிலைகளும் எனது உண்மை சொரூபமாகும். சரியாக நிறைவேற்றப்படும் வேதக் கிரியைகளும், யக்ஞங்களும் என்னுடைய உடலின் வெவ்வேறு அவயவங்களாகும். புண்ணிய அல்லது ஆன்மீகச் செயல்களிலிருந்து உண்டாகும் கண்ணுக்குத் தெரியாத நல்லதிர்ஷ்டம் எனது மனமாகும். மேலும் வெவ்வேறு இலாக்காக்களில் எனது உத்தரவுகளை நிறைவேற்றும் தேவர்கள் எனது உயிரும், ஆத்மாவுமாவர்.
பதம் 6.4.47
அஹம் ஏவாஸம் ஏவாக்ரே நான்யத் கிஞ்சாந்தரம் பஹி:
ஸம்க்ஞான-மாத்ரம் அவ்யக்தம் ப்ரஸுப்தம் இவ விஸ்வத:
அஹம்—பரமபுருஷராகிய நான்; ஏவ—மட்டுமே; ஆஸம்—இருந்தேன்; ஏவ—நிச்சயமாக; அக்ரே—ஆரம்பத்தில், சிருஷ்டிக்கு முன்; ந—இல்லை; அன்யத்—வேறு; கிஞ்ச—எதுவும்; அந்தரம்—என்னைத் தவிர; பஹி:—வெளியேயுள்ள (ஏனெனில், இப்பிரபஞ்ச தோற்றம் ஆன்மீக உலகிற்கு வெளியில் இருப்பதால், ஜட உலகம் இல்லாத போதும் ஆன்மீக உலகம் இருந்தது); ஸம்க்ஞான-மாத்ரம்—ஜீவராசிகளின் உணர்வு மட்டுமே; அவ்யக்தம்—வெளிப்படாத நிலையில்; ப்ரஸுப்தம்—உறங்குவது; இவ—போல்; விஸ்வத:—எங்கும்.
இப்பிரபஞ்ச தோற்றம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன் நான் மட்டுமே எனது குறிப்பிட்ட ஆன்மீக சக்திகளுடன் இருந்தேன். அப்பொழுது, உறக்கத்தில் எப்படி ஒருவனது உணர்வு தோன்றா நிலையில் இருக்கிறதோ, அப்படியே உணர்வு தோன்றா நிலையில் இருந்தது.
பதம் 6.4.48
மய் அனந்த-குணே ‘னந்தே குணதோ குண-விக்ரஹ:
யதாஸீத் தத ஏவாத்ய: ஸ்வயம்பூ: ஸமபூத் அஜ:
மயி—என்னில்; அனந்த-குணே—எல்லையற்ற சக்தி படைத்த; அனந்தே—எல்லையற்ற; குணத:—மாயா என்ற என் சக்தியிலிருந்து; குண-விக்ரஹ:—இயற்கைக் குணங்களின் ஒரு விளைவான இப்பிரபஞ்சம்; யதா—அப்பொழுது; ஆஸீத்—அது தோற்றத்திற்கு வந்த; தத:—அதனில்; ஏவ—உண்மையில்; ஆத்ய:—முதல் ஜீவராசியான; ஸ்வயம்பூ:—பிரம்மதேவர்; ஸமபூத்—பிறந்தார்; அஜ:—ஒரு பெளதிக தாயிலிருந்தல்ல என்ற போதிலும்.
நான் அளவற்ற சக்திகளின் களஞ்சியம் என்பதால், நான் எல்லையற்றவன் என்றும், எங்கும் நிறைந்தவன் என்றும் அறியப்படுகிறேன். என்னுடைய பௌதிக சக்தியிலிருந்து தான் பிரபஞ்ச தோற்றம் எனக்குள் தோன்றியது. மேலும் இப்பிரபஞ்ச தோற்றத்திலிருந்து தான் முக்கிய ஜீவனும், உமது பிறப்புக்குக் காரணமானவரும், ஒரு பெளதிக தாய்க்குப் பிறக்காதவருமான பிரம்மதேவர் தோன்றினார்.
பதங்கள் 6.4.49 – 6.4.50
ஸ வை யதா மஹாதேவோ மம வீர்யோபப்ரும்ஹித:
மேனே கிலம் இவாத்மானம் உத்யத: ஸ்வர்க-கர்மணி
அத மே ‘பிஹிதோ தேவஸ் தபோ ‘தப்யத தாருணம்
நவ விஸ்வ-ஸ்ருஜோ யுஷ்மான் யேனாதாவ் அஸ்ருஜத் விபு:
ஸ:—அந்த பிரம்மதேவர்; வை—உண்மையில்; யதா—அப்பொழுது; மஹா-தேவ:—தேவர்களுக்கெல்லாம் தலைவரான; மம—எனது; வீர்ய-உபப்ரும்ஹித:—சக்தியினால் பெருக்கமடைந்தவராய்; மேனே—நினைத்தார்; கிலம்—திறமையில்லாதவர்; இவ—போன்று; ஆத்மானம்—தன்னை; உத்யத:—முயற்சி செய்து; ஸ்வர்க கர்மணி—பிரபஞ்சத்தின் படைப்புத் தொழிலில்; அத—அப்பொழுது; மே—என்னால்; அபிஹித:—அறிவுறுத்தப்பட்டு; தேவ:—அந்த பிரம்மதேவர்; தப:—தவத்தை; அதப்யத—செய்தார்; தாருணம்—மிகவும் கடுமையான; நவ—ஒன்பது; விஸ்வ-ஸ்ருஜ:—பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க முக்கியமானவர்களை; யுஷ்மான்—நீங்களெல்லோரும்; யேன—யாரால்; ஆதெள—துவக்கத்தில்; அஸ்ருஜத்—படைத்தார்; விபு:—சிறப்புடைய.
பிரபஞ்சத்தின் முக்கிய தலைவரான பிரம்மதேவர் (ஸ்வயம்பூ) எனது சக்தியால் தூண்டப்பட்டு, சிருஷ்டிக்க முயன்றபொழுது, தன்னை சிருஷ்டிக்கும் திறமையில்லாதவர் என்றெண்ணினார். ஆகவே அவருக்கு நான் அறிவுரை கூறினேன். என்னுடைய அந்த உபதேசங்களுக்கேற்ப அவர் கடுந்தவங்களைப் புரிந்தார். இத்தவங்களின் காரணத்தால், உம்மோடு சேர்த்து, சிருஷ்டித் தொழிலில் தனக்கு உதவக்கூடிய ஒன்பது பேர்களை சிறப்புடைய அந்த பிரம்மதேவரால் படைக்க முடிந்தது.
பதம் 6.4.51
ஏஷா பஞ்சஜனஸ்யாங்க துஹிதா வை ப்ரஜாபதே:
அஸிக்னீ நாம பத்னீத்வே ப்ரஜேச ப்ரதிக்ருஹ்யதாம்
ஏஷா—இந்த; பஞ்சஜனஸ்ய—பஞ்சஜனனுடைய; அங்க—என் பிரிய மகனே; துஹிதா—பெண்; வை—உண்மையில்; ப்ரஜாபதே:—மற்றொரு பிரஜாபதியின்; அஸிக்னீ நாம—அஸிக்னி என்ற பெயருடைய; பத்னீத்வே—உமது மனைவியாக; ப்ரஜேச—பிரஜாபதியே; ப்ரதிக்ருஹ்யதாம்—இவள் ஏற்றுக் கொள்ளப்படட்டும்.
என் பிரிய மகனே தட்சா, பிரஜாபதி பஞ்சஜனனுக்கு அஸிக்னி என்றொரு மகள் இருக்கிறாள். அவளை உமக்குக் கொடுக்கிறேன், உமது மனைவியாக ஏற்றுக் கொள்வீராக.
பதம் 6.4.52
மிதுன-வ்யவாய-தர்மஸ் த்வம் ப்ரஜா-ஸர்கம் இமம் புன:
மிதுன-வ்யவாய-தர்மிண்யாம் பூரிசோ பாவயிஷ்யஸி
மிதுன—ஆண் பெண் இருவரின்; வ்யவாய—உடலுறவுச் செயல்களை; தர்ம:—தர்ம முறைப்படி ஏற்றுக் கொள்பவன்; த்வம்—நீர்; ப்ரஜா-ஸர்கம்—ஜீவராசிகளின் சிருஷ்டியை; இமம்—இதை; புன:—மீண்டும்; மிதுன—ஆண் பெண் சேர்க்கையின்; வ்யவாய-தர்மிண்யாம்—தர்ம முறைப்படியான உடலுறவுக்கேற்ப; அவளில்; பூரிச:—பல மடங்கு; பாவயிஷ்யஸி—நீர் உற்பத்தி செய்வீர்.
இப்பொழுது இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாகச் சேருங்கள். இவ்வாறு உடலுறவின் மூலம், இப்பெண்ணின் கர்ப்பத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பெற்றெடுத்து உம்மால் ஜனத்தொகையைப் பெருக்க இயலும்.
பதம் 6.4.53
தவத்தோ ‘தஸ்தாத் ப்ரஜா: ஸர்வா மிதுனீ-பூய மாயயா
மதீயயா பவிஷ்யந்தி ஹரிஷ்யந்தி ச மே பலிம்
த்வத்த:—உமக்கு; அதஸ்தாத்—பிறகு; ப்ரஜா:—ஜீவராசிகள்; ஸர்வா:—எல்லோரும்; மிதுனீ-பூய—உடலுறவு கொண்டு; மாயயா—மாயா சக்தியால் அளிக்கப்படும் செல்வாக்கின் அல்லது வசதிகளின் காரணத்தால்; மதீயயா—எனது; பவிஷ்யந்தி—அவர்கள் ஆவார்கள்; ஹரிஷ்யந்தி—அளிப்பார்கள்; ச—கூட; மே—எனக்கு; பலிம்—காணிக்கைகள்.
பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழந்தைகளை நீர் பெற்றெடுத்த பின், அவர்களும் எனது மாயா சக்தியால் வசியப்படுத்தப்பட்டு, உம்மைப்போலவே உடலுறவு வாழ்வில் ஈடுபடுவார்கள். ஆனால் உம்மிடமும், அவர்களிடமும் நான் கொண்டுள்ள கருணையின் காரணத்தால், அவர்களாலும் பக்தியுடன் எனக்கு காணிக்கைகளைச் செலுத்த முடியும்.
பதம் 6.4.54
ஸ்ரீ-சுக உவாச
இதி உக்த்வா மிஷதஸ் தஸ்ய பகவான் விஸ்வ-பாவன:
ஸ்வப்னோபலப்தார்த்த இவ தத்ரைவாந்தர்ததே ஹரி:
ஸ்ரீ-சுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்;
இதி—இவ்வாறு; உக்த்வா—கூறிவிட்டு; மிஷத: தஸ்ய—அவர் (தட்சன்) நேரடியாக பார்த்துக் கொண்டிருக்கும் போதே; பகவான்—பரமபுருஷர்; விஸ்வ-பாவன:—பிரபஞ்ச அலுவல்களைப் படைப்பவரான; ஸ்வப்ன-உபலப்த-அர்த:—கனவில் அடையப்பட்ட ஒரு பொருள்; இவ—போன்று; தத்ர—அங்கேயே; ஏவ—நிச்சயமாக; அந்தர்-ததே—மறைந்து விட்டார்; ஹரி:—பரமபுருஷர்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: முழு பிரபஞ்சத்தையும் படைத்தவரான, பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரி, பிரஜாபதி தட்சன் முன் இவ்வாறு கூறிய பின், கனவில் அனுபவித்த ஒரு பொருளைப் போல் திடீரென்று மறைந்து விட்டார்.
ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “பிரஜாபதி தட்சனின் ஹம்ஸ-குஹ்ய பிரார்த்தனைகள்” எனும் தலைப்பை கொண்ட நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.