அத்தியாயம் – 4
பிரஜாபதி தட்சனின்
ஹம்ஸ:குஹ்ய பிரார்த்தனைகள்
பதங்கள் 6.4.1 – 6.4.2 : புண்ணியவானாகிய அரசர் சுகதேவ கோஸ்வாமியிடம் கூறினார்: பிரபுவே, தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், நாகர்கள், மிருகங்கள், பறவைகள் ஆகிய ஜீவன்கள் சுயம்புவ மனுவின் ஆட்சிக்காலத்தில் சிருஷ்டிக்கப்பட்டன. இந்த சிருஷ்டியைப் பற்றி தாங்கள் (மூன்றாம் காண்டத்தில்) சுருக்கமாகக் கூறியிருக்கிறீர்கள். இப்பொழுது இதையே விவரமாக அறிய நான் விரும்புகிறேன். மேலும் எதைக் கொண்டு பரமபுருஷர் இரண்டாந்தர சிருஷ்டியை உருவாக்கினாரோ, அந்த சக்தியைப் பற்றியும் நான் அறிய விரும்புகிறேன்.
பதம் 6.4.3 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: முனி சிரேஷ்டர்களே (நைமிஷாரண்யத்தில் கூடியிருந்தவர்கள்), மகா யோகியான சுகதேவ கோஸ்வாமி, பரீட்சித்து மகாராஜனின் கேள்வியைச் செவிமடுத்தபின், அதைப் பாராட்டி பின்வருமாறு பதிலளித்தார்.
பதம் 6.4.4 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பிராசீனபர்ஹியின் பத்து மகன்கள், தாங்கள் தவம் செய்துகொண்டிருந்த சமுத்திரத்திற்குள்ளிருந்து வெளியே வந்தபொழுது, உலகம் முழுவதும் மரங்களால் மூடப்பட்டிருப்பதைக் கண்டனர்.
பதம் 6.4.5 : நீருக்குள் நீண்ட தவம் புரிந்த காரணத்தால், பிரசேதர்கள் மரங்களிடம் கடுங்கோபங் கொண்டனர். அவற்றை எரித்துச் சாம்பலாக்கிவிடும் எண்ணத்துடன், தங்களுடைய வாய்களிலிருந்து காற்றையும், நெருப்பையும் அவர்கள் உற்பத்தி செய்தனர்.
பதம் 6.4.6 : பரீட்சித்து மகாராஜனே, மரங்களின் அரசனும், சந்திரனின் அதிதேவதையுமான சோமன், நெருப்பும், காற்றும் மரங்களையெல்லாம் எரித்துச் சாம்பலாக்குவதைக் கண்டு, மிகவும் பரிதாபப்பட்டார். ஏனெனில், எல்லா மூலிகைகளுக்கும், மரங்களுக்கும் இரட்சகர் அவரே. சோமன் பிரசேதர்களின் கோபத்தைத் தணிக்க பின்வருமாறு கூறினார்.
பதம் 6.4.7 : மகா பாக்கியசாலிகளே, பரிதாபகரமான இந்த மரங்களை நீங்கள் தீக்கிரையாக்கிக் கொல்லக்கூடாது. பிரஜைகளுக்கு செழிப்புண்டாகும்படி ஆசிர்வதித்து, அவர்களைக் காப்பாற்றுவதே உங்களுடைய கடமையாகும்.
பதம் 6.4.8 : பரமபுருஷரான ஸ்ரீ ஹரி, பிரம்மதேவரைப் போன்ற பிரஜாபதிகள் உட்பட அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவராவார். அவர் எங்கும் பரவியுள்ள, அழிவற்ற தலைவர் என்பதால், அவர் இந்த மரங்களையும், தாவர வகைகளையும் பிற ஜீவராசிகளுக்கு உணவுகளாகப் படைத்துள்ளார்.
பதம் 6.4.9 : இயற்கையின் ஏற்பாட்டினால், பழங்களும், மலர்களும் பூச்சிகளுக்கும், பறவைகளுக்கும் உணவாகக் கருதப்படுகின்றன; புல்லும் மற்ற காலில்லா ஜீவன்களும், பசுக்களையும், எருமைகளையும் போன்ற நாலு கால் மிருகங்களுக்கு உணவாகும்; முன்னங்கால்களைக் கைகளாக உபயோகிக்க முடியாத மிருகங்கள், கூரிய நகங்களுள்ள புலிகளைப் போன்ற மிருகங்களுக்கு உணவாகும்; மற்றும் மான்களையும், ஆடுகளையும் போன்ற நாலுகால் மிருகங்களும், உணவுத் தானியங்களும் மனிதர்களின் உணவாகும்.
பதம் 6.4.10 : தூய இதயம் படைத்தவர்களே, உங்கள் தந்தையான பிராசீன பர்ஹியும், பரமபுருஷரும் ஜனத்தொகையை உற்பத்தி செய்யும்படி உங்களுக்குக் கட்டளையிட்டுள்ளனர். எனவே உங்களுடைய பிரஜைகளையும், வம்சத்தினரையும் பராமரிப்பதற்குத் தேவையாக உள்ள இம்மரங்களையும், மூலிகைகளையும் நீங்கள் எப்படி எரித்துச் சாம்பலாக்கலாம்?
பதம் 6.4.11 : மனிதர்கள், மிருகங்கள், மரங்கள் உட்பட எல்லா பிரஜைகளையும் பராமரிப்பது தான் உங்களுடைய தந்தையாலும், பாட்டனாராலும், முப்பாட்டனாராலும் கடந்து செல்லப்பட்ட நல்வழியாகும். அதே வழியைத்தான் நீங்களும் பின்பற்ற வேண்டும். அநாவசியமான கோபம் உங்களுடைய கடமைக்கு விரோதமானதாகும். எனவே உங்களுடைய கோபத்தைக் கட்டுப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பதம் 6.4.12 : குழந்தைகளைப் பெற்றோர்கள் நண்பர்களாக இருந்து பாதுகாப்பதுபோல், கண்ணை இமை காப்பது போல், ஒரு பெண்ணை கணவன் பராமரித்துக் காப்பது போல், குடும்பஸ்தன் யாசகர்களை பராமரித்துக் காப்பது போல், மற்றும் அறிஞன் அறியாமையில் உள்ளவனுக்கு நண்பனாக இருப்பது போல், அரசனும் தன் பிரஜைகளுக்கெல்லாம் காவலனாகவும், உயிர் கொடுப்பவனாகவும் விளங்குகிறான். மரங்கள்கூட அரசனின் பிரஜைகளே. எனவே அவற்றிற்கும் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும்.
பதம் 6.4.13 : பரமபுருஷரானவர், உண்மையில் மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், மரங்கள் முதலான அசைவன மற்றும் அசையாதன ஆகிய அனைத்து ஜீவராசிகளின் இதயங்களுக்குள்ளும் பரமாத்மாவாக இருக்கிறார். எனவே ஒவ்வொரு உடலையும் பகவானின் ஒரு வசிப்பிடமாக அல்லது ஆலயமாக நீங்கள் கருத வேண்டும். இத்தகைய கண்ணோட்டத்தின் மூலம் உங்களால் பகவானை திருப்திப்படுத்த இயலும். நீங்கள் கோபங்கொண்டு மரங்களின் ரூபத்திலுள்ள இந்த ஜீவராசிகளை கொல்லக்கூடாது.
பதம் 6.4.14 : யாரொருவன் ஆன்மீக தன்னுணர்வைப் பற்றிய விசாரணையால், ஆகாயத்திலிருந்து விழுவதுபோல் உடலில் திடீரென்று பொங்கியெழும் சக்திவாய்ந்த தன் கோபத்தைக் கட்டுப்படுத்துகிறானோ, அவன் ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்தைக் கடந்தவனாகிறான்.
பதம் 6.4.15 : பரிதாபத்திற்குரிய இம்மரங்களை இனி எரிக்க வேண்டிய அவசியமில்லை. எஞ்சியிருக்கும் மரங்களை மகிழ்ச்சியுடன் வாழவிடுங்கள். உண்மையில், நீங்களும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இப்பொழுது, மரங்களால் தங்கள் மகளைப் போல் வளர்க்கப்பட்டவளும், அழகும், தகுதியும் உடையவளுமான மாரிஷா என்ற ஒரு பெண் இருக்கிறாள். இவ்வழகிய பெண்ணை உங்கள் மனைவியாக நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பதம் 6.4.16 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, சந்திர தேவனான சோமன் பிரசேதர்களை இவ்வாறு சாந்தப்படுத்திய பிறகு, பிரம்லோச்சா அப்ஸரஸ்ஸிற்குப் பிறந்த அழகிய பெண்ணை அவர்களுக்குக் கொடுத்தார். பிரசேதர்களும், மிகவும் அழகிய உயர்ந்த இடைகளையுடைய பிரம்லோச்சாவின் மகளை ஏற்றுக்கொண்டு, வேத முறைப்படி அவளைத் திருமணம் செய்து கொண்டனர்.
பதம் 6.4.17 : அப்பெண்ணின் கர்ப்பத்தில் பிரசேதர்கள் அனைவரும் தட்சன் என்ற ஒரு மகனைப் பெற்றனர். அவர் மூவுலகங்களையும் ஜீவராசிகளால் நிரப்பினார்.
பதம் 6.4.18 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தன் புதல்விகளிடம் மிகவும் பாசம் கொண்டிருந்த பிரஜாபதி தட்சன் எப்படி தன் விந்துவினாலும், மனதினாலும் வெவ்வேறு வகையான ஜீவராசிகளைப் படைத்தார் என்பதை என்னிடமிருந்து மிகவும் கவனமாகக் கேளும்.
பதம் 6.4.19 : பிரஜாபதி தட்சன், தன் மனதினால் முதலில் எல்லா வகையான தேவர்கள், அசுரர்கள், மனிதர்கள், பறவைகள், மிருகங்கள், நீர்வாழ் பிராணிகள் முதலியவைகளைப் படைத்தார்.
பதம் 6.4.20 : ஆனால் எல்லாவகையான ஜீவராசிகளையும் தான் சரியாக உற்பத்தி செய்யாததைக் கண்ட பிரஜாபதி தட்சன், விந்திய மலைத் தொடருக்கு அருகிலுள்ள ஒரு மலைக்குச் சென்று, மிகவும் கடினமான தவங்களைப் புரிந்தார்.
பதம் 6.4.21 : அந்த மலைக்கருகில் அகமர்ஷணம் என்ற பெயருடைய மிகவும் புனிதமான ஒரு ஸ்தலம் இருந்தது. அங்கு பிரஜாபதி தட்சன், பரமபுருஷரான ஸ்ரீ ஹரியை மகிழ்விக்கக் கடுந்தவங்களைப் புரிந்தும், வேத நியமங்களை நிறைவேற்றியும் அவரை திருப்திப்படுத்தினார்.
பதம் 6.4.22 : அரசே, தட்சனால் பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரியைக் குறித்து செய்யப்பட்ட ஹம்ஸ-குஹ்ய ஸ்தோத்திரங்களைப் பற்றியும், அதனால் பகவான் எப்படி அவரிடம் திருப்தியடைந்தார் என்பதையும் நான் முழுமையாக உமக்கு விளக்குகிறேன்.
பதம் 6.4.23 : பிரஜாபதி தட்சன் கூறினார்: பரமபுருஷரானவர் மாயா சக்திக்கும், அதனால் உண்டாக்கப்படும் பெளதிகப் பிரிவுகளுக்கும் அப்பாற்பட்டவராவார். அவர் நம்பத் தகுந்த அறிவுக்கும், உயர்ந்த மனோ சக்திக்கும் உறைவிடமாவார். மேலும் அவரே ஜீவராசிகளையும், மாயா சக்தியையும் அடக்கியாள்கிறார். இந்த பெளதிகத் தோற்றமே அனைத்தும் என்று ஏற்றுக் கொண்டுள்ள பந்தப்பட்ட ஆத்மாக்களால் அவரைக் காண முடியாது. ஏனெனில் அவர் ஆராய்ச்சி அறிவின் சான்றுக்கு அப்பாற்பட்டவராவார். அவர் சுய சான்றுடையவரும், தன்னிறைவு உடையவருமாவார். அவருடைய காரணத்திற்கு வேறு உயர்ந்த காரணமில்லை. அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.24 : புலன் பொருட்களால் (ரூபம், சுவை, ஸ்பரிசம், வாசனை, ஓசை), புலன்கள் எப்படி தங்களை நுகர்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியாது. அதுபோலவே, பந்தப்பட்ட ஆத்மாவானவன், தன் உடலில் பரமாத்மாவுடன் வாழ்ந்த போதிலும், பரம ஆன்மீக புருஷரும், பௌதிக சிருஷ்டியின் தலைவருமான அவர் எப்படி தன் புலன்களை வழிநடத்துகிறார் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடியாது. பரம ஈசுவரரான அப்பரமபுருஷருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.25 : உடல், பிராண வாயுக்கள், புறப் புலன்கள், அறிவுப் (அக) புலன்கள், பஞ்ச பூதங்கள் மற்றும் சூட்சுமமான புலன் பொருட்கள் (ரூபம், சுவை, வாசனை, ஓசை, ஸ்பரிசம்) ஆகிய இவையனைத்தும் வெறும் ஜடப் பொருட்கள் என்பதால், அவற்றினால் தங்கள் சொந்த இயல்பையோ, மற்ற புலன்களின் இயல்பையோ அல்லது அவற்றை ஆள்பவைகளின் இயல்பையோ அறிய முடியாது. ஆனால் ஜீவராசியால் அவனது ஆன்மீக இயல்பின் காரணத்தால், அவனது உடலையும், பிராண வாயுக்களையும், புலன்களையும், மூலப் பொருட்களையும், புலன் பொருட்களையும் மட்டுமின்றி, அவற்றிற்கு வேராக உள்ள முக்குணங்களையும் கூட அறிய முடியும். ஆயினும், ஜீவராசி இவைகளையெல்லாம் முழுமையாக அறிந்திருக்கிறான் என்றாலும், அவனால் சர்வக்ஞரும், எல்லையற்றவருமான பரமபுருஷரைக் காண முடியாதிருக்கிறது. எனவே அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.26 : ஸ்தூல மற்றம் சூட்சும நிலைகளிலுள்ள பெளதிக வாழ்வின் களங்கத்திலிருந்து ஒருவனது உணர்வு முற்றிலும் தூய்மையடையும் பொழுதும், விழிப்பு மற்றும் கனவு நிலைகளில் உள்ளதுபோல் உணர்வு கலக்கமடையாமல் இருக்கும்பொழுதும், மற்றும் ஆழ்ந்த உறக்கத்தில் (ஸுஷுப்தி) உள்ளது போல் மனம் கலைந்துவிடாமல் இருக்கும் பொழுதும் ஒருவன் பரவச நிலைக்கு வருகிறான். அப்பொழுது ஒருவனது பெளதிகப் பார்வையும், நாம ரூபங்களைத் தோற்றுவிக்கும் மனதின் ஞாபகங்களும் அழிந்துவிடுகின்றன. இத்தகைய ஒரு சமாதி நிலையில் மட்டுமே பரமபுருஷர் பிரசன்னமாகிறார். இவ்வாறாக, களங்கமற்ற உன்னதமான அந்த நிலையில் தரிசிக்கப்படுபவரான பரமபுருஷருக்கு நமது பணிவான வணக்கங்களை சமர்ப்பிப்போமாக.
பதங்கள் 6.4.27 – 6.4.28 : வைதிக சடங்குகளையும், யக்ஞங்களையும் செய்வதில் நிபுணர்களான சிறந்த பிராமண பண்டிதர்களால் எப்படி பதினைந்து ஸாமி தேனி மந்திரங்களை உச்சரித்து, விறகில் செயலற்று கிடக்கும் நெருப்பைப் பிரித்தெடுக்க முடிகிறதோ, அப்படியே, உணர்வில் உண்மையாக முன்னேறியவர்களால், அதாவது, கிருஷ்ண உணர்வு உடையவர்களால், இதய ஆழத்தில் தமது சுய ஆன்மீக சக்தியால் உறையும் பரமாத்மாவைக் காண முடிகிறது. இதயம் மூன்று ஜட இயற்கைக் குணங்களாலும், ஒன்பது பெளதிக மூலப் பொருட்களாலும் (ஜட இயற்கை, மொத்த ஜட சக்தி, அகங்காரம், மனம் மற்றும் ஐந்து புலன் நுகர்வுப் பொருட்கள்), மேலும் பஞ்ச பூதங்களாலும் மற்றும் பத்து புலன்களாலும் மூடப்பட்டுள்ளது. பகவானின் பகிரங்க சக்தியானது இருபத்தேழு மூலப் பொருட்களைக் கொண்டுள்ளது. சிறந்த யோகிகள், இதய ஆழத்தில் பரமாத்மாவாக அமர்ந்திருக்கும் பகவானை தியானிக்கின்றனர். அப்பரமாத்மா என்னிடம் திருப்தியடைவாராக. எண்ணற்ற வகையான பௌதிக வாழ்விலிருந்து ஒருவன் முக்தியடைய ஆவல் கொள்ளும்பொழுது, பரமாத்மா உணர்ந்தறியப்படுகிறார். பகவானின் உன்னத அன்புத் தொண்டில் ஈடுபட்டு, அச்சேவை மனப்பான்மையின் காரணத்தால் பகவானை ஒருவன் உணரும்பொழுது, உண்மையாகவே இத்தகைய முக்தியை அவன் அடைகிறான். பௌதிக புலன்களால் அறிய முடியாத பல்வேறு ஆன்மீக பெயர்களால் பகவானை அழைக்கலாம். அப்பரமபுருஷர் என்று என்னிடம் திருப்தியடைவார்?
பதம் 6.4.29 : பெளதிக ஓசையால் (வார்த்தைகளால்) விவரிக்கப்படும் எதுவும், பெளதிக புத்தியால் ஆராய்ந்தறியப்படும் எதுவும், பெளதிக புலன்களால் நுகரப்படும் எதுவும் அல்லது பௌதிக மனதிற்குள் ஊகிக்கப்படும் எதுவும், ஜட இயற்கைக் குணங்களின் விளைவேயாகும். ஆகவே இவற்றிற்கும், பரமபுருஷரின் நிஜமான இயற்கைக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. பரமபுருஷர் பெளதிக குணங்களுக்கும், சிருஷ்டிக்கும் மூலம் என்பதால், அவர் இந்த ஜட உலக சிருஷ்டிக்கு அப்பாற்பட்டவராவார். அவர் சிருஷ்டிக்கு முன்னும் பின்னும் எல்லாக் காரணங்களுக்கும் காரணமாக எப்பொழுதும் இருக்கிறார். அவருக்கு எனது பணிவான வணக்கங்களை நாம் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.
பதம் 6.4.30 : பரப்பிரம்மனாகிய ஸ்ரீ கிருஷ்ணரே அனைத்திற்கும் முடிவான புகலிடமும், மூலமுமாவார். அனைத்தும் அவராலேயே செய்யப்படுகின்றன. அனைத்தும் அவருக்கே சொந்தம். அனைத்தும் அவருக்கே அர்ப்பணிக்கப்படுகின்றன. அவரே முடிவான இலக்கும் ஆவார். செய்வதிலோ அல்லது பிறரைச் செய்விப்பதிலோ அவரே முடிவாகச் செயலாற்றுகிறார். உயர்ந்த, தாழ்ந்த என்ற பல காரணங்கள் உள்ளன. ஆனால் அவரே எல்லாக் காரணங்களுக்கும் மூல காரணம் என்பதால், அவர், எல்லாச் செயல்களுக்கும் முன்பே இருந்த பரப்பிரம்மன் என்று பிரசித்தி பெற்று விளங்குகிறார். அவர் இரண்டற்ற ஒருவரும், வேறெந்த காரணமும் இல்லாதவருமாவார். எனவே அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.31 : எண்ணற்ற உன்னத குணங்களுடையவரும், எங்கும் நிறைந்தவருமான பரமபுருஷருக்கு எனது பணிவான வணக்கங்கள். பல்வேறு கொள்கைகளைப் பரப்பும் தத்துவாதிகளுடைய இதயங்களின் ஆழத்தில் இருந்து கொண்டு செயற்படும் பகவான், சிலசமயங்களில் ஒப்புக் கொண்டும், சிலசமயங்களில் ஒப்புக்கொள்ளாமலும் தங்களுக்கிடையில் வேறுபட்ட அபிப்பிராயங்களைக் கொள்ளும் அத்தத்துவவாதிகள் தங்களுடைய சொந்த ஆத்மாக்களையே மறந்துவிடும்படி செய்கிறார். இவ்விதமாக எந்த ஒரு சூழ்நிலையில் அவர்களால் ஒரு முடிவுக்கு வர முடிவதில்லையோ, அத்தகைய ஒரு சூழ்நிலையை பகவான் இந்த ஜட உலகில் உண்டாக்குகிறார். அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.32 : ஆஸ்திகர்கள், நாஸ்திகர்கள் என்ற இரு கட்சியினர் உள்ளனர். பரமாத்மாவை ஏற்றுக்கொள்ளும் ஆஸ்திகன், அஷ்டாங்க யோகத்தின் வாயிலாக ஆன்மீக காரணத்தை அறிகிறான். ஆனால் பெளதிக மூலப் பொருட்களை மட்டும் ஆராய்வதில் ஈடுபட்டுள்ள சாங்கியவாதியோ அருவவாத முடிவுக்கு வந்து, ஒரு பரம காரணம் (பகவான், பரமாத்மா அல்லது பிரம்மன்) இருப்பதைக்கூட ஏற்க மறுக்கிறான். அதற்குப்பதிலாக அவன் ஜட இயற்கையின மிதமிஞ்சிய புறச் செயல்களில் ஆழ்ந்திருக்கிறான். ஆயினும், முடிந்த முடிவாக இருகட்சியினருமே பூரண உண்மையைத்தான் குறிக்கின்றனர். ஏனெனில், அவர்களுடைய கூற்றுகள் எதிரிடையானவையாக இருப்பினும், அவ்விருவரின் குறிக்கோளும் ஒரே மூலகாரணம்தான். அவ்விருவரும் ஒரே பரப்பிரம்மனைத்தான் நாடுகிறார்கள். அவருக்கு எனது பணிவான வணக்கங்கள்.
பதம் 6.4.33 : நினைத்தற்கரிய ஐசுவரியமுள்ளவரும், பெளதிக நாமங்களோ, ரூபங்களோ, லீலைகளோ இல்லாதவரும், எங்கும் நிறைந்தவருமான பரமபுருஷர், குறிப்பாகத் தமது தாமரைப் பாதங்களை வழிபடும் பக்தர்களிடம் கருணை கொண்டவராவார். இவ்வாறாக அவர் தமது வெவ்வேறு லீலைகளின் வாயிலாக, உன்னதமான தமது நாமங்களையும், ரூபங்களையும் காட்டுகிறார். அறிவும், ஆனந்தமும் நிரம்பிய நித்திய ரூபத்தையுடைய அப்பரம புருஷர் என்னிடம் கருணை கொள்வாராக.
பதம் 6.4.34 : பூவின் வாசனை அல்லது காற்றுடன் கலந்த புழுதியினால் உண்டாகும் வர்ணங்கள் ஆகியவற்றைப் போன்ற, பெளதிக மூலப் பொருட்களின் பல்வேறு இயல்புகளைக் காற்று ஏந்திச் செல்வது போலவே, பகவானும் ஒருவனுடைய விருப்பங்களுக்கேற்ப, கீழான வழிபாட்டு முறைகளின் வாயிலாக தேவர்களாகத் தோன்றுகிறாரேயொழிய, அவரது உண்மையான மூல ரூபத்திலல்ல. இத்தகைய மற்ற ரூபங்களால் என்ன பயன்? மூல முழுமுதற் கடவுள் என் விருப்பங்களை நிறைவேற்றி அருள் புரிவாராக.
பதங்கள் 6.4.35 – 6.4.39 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தமது பக்தர்களிடம் மிகவும் கருணையுடைவரும் பரமபுருஷருமாகிய பகவான் ஸ்ரீ ஹரி தட்சனின் பிரார்த்தனைகளால் மிகவும் மகிழ்ந்து, அகமர்ஷணம் என்ற அப்புண்ணிய ஸ்தலத்தில் தோன்றினார். குரு சிரேஷ்டராகிய பரீட்சித்து மகாராஜனே, பகவானின் தாமரைப் பாதங்கள் அவரது கருட வாகனத்தின் தோள்கள் மேல் படித்திருக்க, நீண்ட அழகிய எட்டு பலம் பொருந்திய கைகளுடன் அவர் காட்சியளித்தார். அவரது கைகளில் அவர், ஒரு சக்கரம், சங்கு, வாள், கேடயம், அம்பு, வில் கயிறு மற்றும் கதை ஆகியவற்றைப் பிடித்திருந்தார். இவ்விதமாக அவரது ஒவ்வொரு கையிலும் வெவ்வேறு ஆயுதங்கள் பிரகாசமாக ஜொலித்தன. அவரது ஆடைகள் மஞ்சள் நிறமாகவும், அவரது தேக வர்ணம் கரு நீலமாகவும் இருந்தன. அவரது கண்களிலும், முகத்திலும் மகிழ்ச்சி பொங்கியது. மேலும் அவரது கழுத்திலிருந்து பாதங்கள் வரை ஒரு வன மாலை தொங்கியது. அவரது மார்பு கௌஸ்துப மணியாலும், ஸ்ரீவத்ஸம் என்ற அடையாளத்தினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவரது தலையில் பெரியதொரு வட்டமான அழகிய கிரீடத்தை அவர் அணிந்திருந்தார். அவரது காதுகள் மகர குண்டலங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்த ஆபரணங்களைத்தும் அசாதாரணமான அழகுடன் விளங்கின. பகவான் அவரது இடுப்பில் ஒரு தங்கக் கச்சையையும், கைகளில் வளையல்களையும், விரல்களில் மோதிரங்களையும், மற்றும் கணுக்கால்களில் கொலுசுகளையும் அணிந்திருந்தார். பல்வேறு ஆபரணங்களால் இவ்வாறு அலங்கரிக்கப்பட்டு இருந்தவரும், மூவுலகிலுள்ள அனைத்து ஜீவராசிகளையும் கவர்ந்திழுப்பவருமான பகவான் ஸ்ரீ ஹரி புருஷோத்தமன் என்று அழைக்கப்படுகிறார். அவர் நாரதர், நந்தர் மற்றும் இந்திரனின் தலைமையிலான முக்கிய தேவர்கள், மற்றும் சித்தலோகம், கந்தர்வலோகம், சாரண லோகம் ஆகியவற்றைப் போன்ற மேலுலகவாசிகள் ஆகியோரைப் போன்ற சிறந்த பக்தர்களால் பின்தொடரப்பட்டார். இந்த பக்தர்கள், பகவானின் இரு பக்கங்களிலும், பின்புறத்திலும்கூட இருந்தபடி இடையறாது அவரை துதித்துக் கொண்டிருந்தனர்.
பதம் 6.4.40 : பரமபுருஷரின் அந்த பிரகாசமான அற்புத ரூபத்தைக் கண்டு பிரஜாபதி தட்சன் முதலில் அச்சத்திற்குள்ளானார் என்றாலும் பிறகு பகவத் தரிசனத்தால் மனம்மகிழ்ந்த அவர், பகவானுக்கு தன் வணக்கத்தைச் செலுத்த, உலக்கை போல் தரையில் விழுந்தார் (தண்டவத்).
பதம் 6.4.41 : ஒரு மலையிலிருந்து வரும் நீரோட்டத்தால் நதிகள் நிரம்புவது போல், தட்சனின் புலன்களெல்லாம் மகிழ்ச்சியால் நிரம்பின. மிகவுயர்ந்த அம்மகிழ்ச்சியின் காரணத்தால், எதுவும் பேச முடியாத தட்சன் அப்படியே பூமியில் கிடந்தார்.
பதம் 6.4.42 : பிரஜாபதி தட்சனால் எதுவும் கூற இயலவில்லை என்றாலும், எல்லோருடைய இதயங்களையும் அறிபவரான பகவான், தமது பக்தன் அவ்வாறு சாஷ்டாங்கமாக விழுந்து கிடப்பதையும், ஜனத்தொகையைப் பெருக்கும் விருப்பம் கொண்டுள்ளதையும் கண்டு, பின்வருமாறு அவரிடம் கூறினார்.
பதம் 6.4.43 : பரமபுருஷர் கூறினார்: மகா பாக்கியசாலியான பிராசேதஸரே, என்னிடம் உமக்குள்ள பெரும் சிரத்தையினால், பரம பக்தி பாவத்தை நீர் அடைந்து விட்டீர். உண்மையில், பரம பக்தியுடன் கூடிய உமது தவங்களின் காரணத்தால், உமது வாழ்வின் பயனை இப்பொழுது அடைந்து, முழு பூரணத்துவத்தை நீர் அடைந்துவிட்டீர்.
பதம் 6.4.44 : எனக்குப் பிரியமான பிரஜாபதி தட்சனே, உலக நன்மைக்காகவும் வளர்ச்சிக்காகவும் கடுந்தவங்களை நீர் புரிந்திருக்கிறீர். என் விருப்பமும் இவ்வுலகிலுள்ள அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்பதுதான். எனவே, உம்மிடம் நான் மிகவும் திருப்தியடைந்துள்ளேன். ஏனெனில் உலக நன்மையெனும் என் விருப்பத்தை நிறைவேற்ற நீர் பாடுபடுகிறீர்.
பதம் 6.4.45 : பிரம்ம தேவர், சிவபெருமான், மனுக்கள், உயர்கிரக அமைப்புக்களிலுள்ள மற்றெல்லா தேவர்கள் மற்றும் ஜனத் தொகையைப் பெருக்கும் பிரஜாபதிகளான நீங்கள் ஆகிய அனைவரும், அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காகவே செயற்படுகிறீர்கள். இவ்வாறாக, எனது நடுத்தர சக்தியின் விரிவங்கங்களாகிய நீங்கள் எனது பல்வேறு குணங்களின் அவதாரங்களாவீர்.
பதம் 6.4.46 : எனதருமை பிராமணரே, தியானத்தின் வடிவிலுள்ள தவம் எனது இதயமாகும். சுலோகங்கள் மற்றும் மந்திரங்களின் வடிவிலுள்ள வேத ஞானம் எனது உடலாகும். மேலும் ஆன்மீகச் செயல்களும், ஆனந்தப் பரவச நிலைகளும் எனது உண்மை சொரூபமாகும். சரியாக நிறைவேற்றப்படும் வேதக் கிரியைகளும், யக்ஞங்களும் என்னுடைய உடலின் வெவ்வேறு அவயவங்களாகும். புண்ணிய அல்லது ஆன்மீகச் செயல்களிலிருந்து உண்டாகும் கண்ணுக்குத் தெரியாத நல்லதிர்ஷ்டம் எனது மனமாகும். மேலும் வெவ்வேறு இலாக்காக்களில் எனது உத்தரவுகளை நிறைவேற்றும் தேவர்கள் எனது உயிரும், ஆத்மாவுமாவர்.
பதம் 6.4.47 : இப்பிரபஞ்ச தோற்றம் சிருஷ்டிக்கப்படுவதற்கு முன் நான் மட்டுமே எனது குறிப்பிட்ட ஆன்மீக சக்திகளுடன் இருந்தேன். அப்பொழுது, உறக்கத்தில் எப்படி ஒருவனது உணர்வு தோன்றா நிலையில் இருக்கிறதோ, அப்படியே உணர்வு தோன்றா நிலையில் இருந்தது.
பதம் 6.4.48 : நான் அளவற்ற சக்திகளின் களஞ்சியம் என்பதால், நான் எல்லையற்றவன் என்றும், எங்கும் நிறைந்தவன் என்றும் அறியப்படுகிறேன். என்னுடைய பௌதிக சக்தியிலிருந்து தான் பிரபஞ்ச தோற்றம் எனக்குள் தோன்றியது. மேலும் இப்பிரபஞ்ச தோற்றத்திலிருந்து தான் முக்கிய ஜீவனும், உமது பிறப்புக்குக் காரணமானவரும், ஒரு பெளதிக தாய்க்குப் பிறக்காதவருமான பிரம்மதேவர் தோன்றினார்.
பதங்கள் 6.4.49 – 6.4.50 : பிரபஞ்சத்தின் முக்கிய தலைவரான பிரம்மதேவர் (ஸ்வயம்பூ) எனது சக்தியால் தூண்டப்பட்டு, சிருஷ்டிக்க முயன்றபொழுது, தன்னை சிருஷ்டிக்கும் திறமையில்லாதவர் என்றெண்ணினார். ஆகவே அவருக்கு நான் அறிவுரை கூறினேன். என்னுடைய அந்த உபதேசங்களுக்கேற்ப அவர் கடுந்தவங்களைப் புரிந்தார். இத்தவங்களின் காரணத்தால், உம்மோடு சேர்த்து, சிருஷ்டித் தொழிலில் தனக்கு உதவக்கூடிய ஒன்பது பேர்களை சிறப்புடைய அந்த பிரம்மதேவரால் படைக்க முடிந்தது.
பதம் 6.4.51 : என் பிரிய மகனே தட்சா, பிரஜாபதி பஞ்சஜனனுக்கு அஸிக்னி என்றொரு மகள் இருக்கிறாள். அவளை உமக்குக் கொடுக்கிறேன், உமது மனைவியாக ஏற்றுக் கொள்வீராக.
பதம் 6.4.52 : இப்பொழுது இல்வாழ்க்கையில் கணவன் மனைவியாகச் சேருங்கள். இவ்வாறு உடலுறவின் மூலம், இப்பெண்ணின் கர்ப்பத்தில் நூற்றுக்கணக்கான குழந்தைகளைப் பெற்றெடுத்து உம்மால் ஜனத்தொகையைப் பெருக்க இயலும்.
பதம் 6.4.53 : பல நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான குழந்தைகளை நீர் பெற்றெடுத்த பின், அவர்களும் எனது மாயா சக்தியால் வசியப்படுத்தப்பட்டு, உம்மைப்போலவே உடலுறவு வாழ்வில் ஈடுபடுவார்கள். ஆனால் உம்மிடமும், அவர்களிடமும் நான் கொண்டுள்ள கருணையின் காரணத்தால், அவர்களாலும் பக்தியுடன் எனக்கு காணிக்கைகளைச் செலுத்த முடியும்.
பதம் 6.4.54 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: முழு பிரபஞ்சத்தையும் படைத்தவரான, பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரி, பிரஜாபதி தட்சன் முன் இவ்வாறு கூறிய பின், கனவில் அனுபவித்த ஒரு பொருளைப் போல் திடீரென்று மறைந்து விட்டார்.