அத்தியாயம் – 3
தன் தூதர்களுக்கு யமராஜனின் உபதேசம்
பதம் 6.3.1 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: என் பிரபுவே, சுகதேவ கோஸ்வாமியே, யமராஜன்தான் பாவ, புண்ணியங்களுக்கேற்ப அனைத்து ஜீவ ராசிகளையும் ஆள்கிறார். ஆனால் அவருடைய கட்டளையும் முறியடிக்கப்பட்டதே அஜாமிளனைக் கைது செய்வதிலிருந்து தங்களைத் தடுத்துவிட விஷ்ணுதூதர்களால் தாங்கள் தோற்கடிக்கப்பட்டதை யமதூதர்கள் யமராஜனிடம் கூறிய பொழுது அவர் என்ன பதிலளித்தார்.
பதம் 6.3.2 : மாமுனிவரே, யமராஜனின் ஒரு கட்டளை மீறப்பட்டதை இதுவரை நான் எங்குமே கேள்விப்பட்டதில்லை. எனவே இது குறித்து மக்களுக்கு ஏற்படப்போகும் சந்தேகங்களை, உங்களைத் தவிர வேறுயாரும் போக்க முடியாது. இதுதான் எனது உறுதியான நம்பிக்கை என்பதால், இச்சம்பவங்களுக்கான காரணங்களை விளக்கியருள வேண்டுகிறேன்.
பதம் 6.3.3 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: அரசே, விஷ்ணு தூதர்களால் தங்கள் முயற்சி தடுக்கப்பெற்ற யமதூதர்கள், தங்கள் எஜமானரும், சம்யமனீபுரியின் தலைவரும், பாவிகளைத் தண்டிப்பவருமான யமராஜனிடம் இச்சம்பவத்தை விவரிக்கச் சென்றனர்.
பதம் 6.3.4 : யமதூதர்கள் கூறினர்: பிரபுவே, இந்த ஜட உலகில் எத்தனை ஆளுனர்கள் உள்ளனர்? மூன்று ஜட இயற்கைக் குணங்களின் கீழ் (ஸத்வ-குண, ரஜோ-குண மற்றும் தமோ-குண) செய்யப்படும் செயல்களின் பல்வேறு பலன்களைத் தோற்றுவிப்பதற்குக் காரணமாக உள்ளவர்கள் எத்தனை பேர்?
பதம் 6.3.5 : இப்பிரபஞ்சத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ள பல ஆளுனர்களும், நீதிபதிகளும் இருப்பார்களானால், அவர்களுடைய தண்டனையும், வெகுமதியும் வெவ்வேறாக இருக்கும். இவ்வாறாக அவர்களுடைய தீர்ப்புகள் ஒன்றையொன்று எதிர்த்து, ஒன்றை மற்றொன்று பயனில்லாமல் செய்துவிடும். இதனால் ஒருவருமே தண்டிக்கப்படவோ அல்லது வெகுமதி அளிக்கப்படவோமாட்டார்கள். ஒருவேளை கருத்துவேறுபாடுள்ள அவர்களது செயல்கள் ஒன்றையொன்று நிஷ்பலமாக்கவில்லை என்றால், எல்லோருமே தண்டனைக்கும், வெகுமதிக்கும் ஆளாவார்கள்.
பதம் 6.3.6 : யமதூதர்கள் தொடர்ந்து கூறினர்: பலதரப்பட்ட கருமிகள், அல்லது செயல் புரிபவர்கள் இருப்பதால், அவர்களுக்கு நியாயம் வழங்க வெவ்வேறு நீதிபதிகள் அல்லது தலைவர்கள் இருக்கக்கூடும். ஆனால் ஒரு மத்திய பெருந்தலைவர் வெவ்வேறு இலாக்காக்களின் தலைவர்களைக் கட்டுப்படுத்துவது போல், எல்லா நீதிபதிகளுக்கும் வழிகாட்டக்கூடிய ஒரு பரம ஆளுனர் இருந்தாக வேண்டும்.
பதம் 6.3.7 : தலைமை நீதிபதி ஒருவராகத்தான் இருக்க வேண்டும், பலர் அல்ல. தாங்கள்தான் அந்த தலைமை நீதிபதி என்றும், தேவர்கள் மீதும் தங்களுக்கு அதிகாரம் உண்டு என்றும் நாங்கள் நினைத்திருந்தோம். மேலும் தாங்களே அனைத்து ஜீவராசிகளுக்கும் தலைவர் என்றும், மனிதர்களின் பாவங்களையும், புண்ணியங்களையும் பகுத்துணர்ந்து அவர்களைத் தண்டிக்கும் பரம அதிகாரி என்றும் நினைத்தோம்.
பதம் 6.3.8 : ஆனால் தங்களுடைய கட்டளை அற்புதமான நான்கு சித்தர்களால் மீறப்பட்டுவிட்டதால், தங்களால் உத்தரவிடப்பட்ட தண்டனை இப்பொழுது உலகில் செல்லவில்லை என்பதை நாங்கள் காண்கிறோம்.
பதம் 6.3.9 : தங்கள் கட்டளைப்படி, மகாபாவியான அஜாமிளனை நரக லோகங்களுக்குக் கொண்டுவர, பாசக் கயிறுகளால் அவனை நாங்கள் கட்டியிருந்தோம். அப்பொழுது சித்தலோகத்திலிருந்து வந்த அந்த அழகிய புருஷர்கள் பலாத்காரமாக அப்பாசக் கயிறுகளைக் கட்டவிழ்ந்து அவனை விடுவித்து விட்டனர்.
பதம் 6.3.10 : பாவியான அஜாமிளன் நாராயணா என்று உச்சரித்த உடனேயே, இந்நான்கு சுந்தர புருஷர்களும், “பயப்படாதே” என்று கூறிக் கொண்டு உடனடியாக அங்கு வந்துவிட்டனர். அவர்களைப் பற்றி உங்களிடமிருந்து அறிய நாங்கள் விரும்புகிறோம். எங்களால் அவர்களைப் புரிந்துகொள்ள முடியும் என்று தாங்கள் எண்ணினால், அவர்கள் யார் என்பதை விவரிக்க வேண்டுகிறோம்.
பதம் 6.3.11 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: ஜீவராசிகளின் பரம ஆளுனரான யமராஜன் இவ்வாறு கேட்கப்பட்டவுடன், நாராயணரின் புனித நாமத்தை உச்சரித்ததால் தம் சேவகர்களிடம் மிகவும் மகிழ்ந்த, அவர் பகவானின் தாமரைப் பாதங்களை மனதில் தியானித்து, பதிலளிக்கத் துவங்கினர்.
பதம் 6.3.12 : யமராஜன் கூறினார்: என் அருமை சேவகர்களே, உண்மையில் நீங்கள் நினைப்பது போல் நான் பரமனல்ல. எனக்கும் மேலாக, இந்திரன் சந்திரன் உட்பட மற்றெல்லா தேவர்களுக்கும் மேலாக, பரம ஆளுனரும், பெருந்தலைவருமான ஒருவர் இருக்கிறார். பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல் மற்றும் அழித்தலுக்குப் பொறுப்பேற்றுள்ள பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் ஆகியோர் அவரது பூரணமற்ற அம்சங்களாவர். அவர், நெய்யப்பட்டுள்ள ஒரு துணியில் குறுக்கும், நெடுக்கும் செல்லும் இரு நூல்களைப் போன்றவராவார். ஒரு காளை அதன் மூக்கணாங்கயிற்றால் ஆளப்படுவது போல், உலகம் முழுவதுமே அவரால்தான் ஆளப்படுகிறது.
பதம் 6.3.13 : மாட்டு வண்டிக்காரன் எப்படி தன் காளைமாடுகளை அடக்க அவற்றின் மூக்குகளில் முக்கணாங்கயிறுகளைப் பொருத்துகிறானோ, அப்படியே பரம புருஷரும், மனித சமுதாயத்தின் (பிராமணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய) வெவ்வேறு பிரிவுகளின் பெயர்களையும், செயல்களையும் நிர்ணயிக்கும் வேத வாக்கியங்களெனும் கயிறுகளின் மூலமாக அனைவரையும் கட்டுகிறார். வெவ்வேறு வர்ணங்களைச் சேர்ந்த இவர்கள் பயத்தினால் உந்தப்பட்டு, அவரவர் செயல்களுக்குத் தக்கவாறு பரமபுருஷருக்கு காணிக்கைகளைச் செலுத்தி அவரை வழிபடுகின்றனர்.
பதங்கள் 6.3.14 – 6.3.15 :நான் (யமராஜன்); இந்திரன்; நிர்ருதி; வருணன்; சந்திரன்; அக்னி; சிவபெருமான்; பவனர்; பிரம்ம தேவர்; சூரிய தேவன்; விஸ்வாசு; எட்டு வசுக்கள்; சாத்யர்கள்; மருத்கள்; ருத்திரர்கள்; சித்தர்கள்; பிரபஞ்ச விவகாரங்களை நடத்துவதில் ஈடுபட்டுள்ள மரீசி முதலான மற்ற மகரிஷிகள்; பிருகஸ்பதி முதலான தேவோத்தமர்கள் மற்றும் பிருகு முதலான மாமுனிவர்கள் ஆகிய நாங்களனைவரும் ரஜோ மற்றும் தமோ என்ற இரு கீழான ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டுள்ளோம் என்பதில் ஐயமில்லை. ஆயினும், சத்வ குணத்திலுள்ள எங்களால் கூட பரமபுருஷரின் செயல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. அப்படியிருக்க, இறைவனை அறிந்துவிட்டதாக மனப்பால் குடிக்கும், மாயையின் வசப்பட்டுள்ள மற்றவர்களைப் பற்றி என்னென்று சொல்வது?
பதம் 6.3.16 : எப்படி உடலின் வெவ்வேறு பகுதிகளால் கண்களைக் காண முடியாதோ, அப்படியே எல்லோருடைய இதயங்களிலும் பரமாத்மாவாக உறையும் பரமபுருஷரை ஜீவராசிகளால் காண முடியாது. புலன்களாலோ, உயிர்மூச்சினாலோ, இதயத்தில் தோன்றும் எண்ணங்களாலோ, அல்லது வார்த்தைகளின் அதிர்வினாலோ பரமபுருஷரின் உண்மை நிலையை ஜீவராசிகளால் ஆராய்ந்தறிய முடியாது.
பதம் 6.3.17 : பரமபுருஷர் தன்னிறைவு உடையவரும், பூரண சுதந்திரமுள்ளவருமாவார். அவரே மாயா சக்தி உட்பட அனைத்திற்கும், அனைவருக்கும் எஜமானராவார். அவருக்கு ரூபம், குணங்கள் மற்றும் அம்சங்கள் ஆகியவை உண்டு; அதுபோலவே அவரது தூதர்களும், சுந்தர புருஷர்களுமாகிய வைஷ்ணவர்களும் கிட்டத்தட்ட பகவானுடையதைப் போன்ற தேக அம்சங்களையும், உன்னத குணங்களையும், உன்னத சுபாவத்தையும் பெற்றுள்ளனர். அவர்கள் இவ்வுலகில் எப்பொழுதும் பூரண சுதந்திரத்துடன் சஞ்சரிக்கின்றனர்.
பதம் 6.3.18 : தேவர்களாலும் பூஜிக்கப்படுபவர்களான பகவான் விஷ்ணுவின் தூதர்கள், விஷ்ணுவினுடையதைப் போன்ற அற்புதமான தேக அம்சங்களைப் பெற்றுள்ளனர். அவர்களைக் காண்பது மிகவும் அரிது. விஷ்ணுதூதர்கள் பக்தர்களைப் பகைவர்களிடமிருந்தும், பொறாமை கொண்டவர்களிடமிருந்தும், இயற்கையின் தொல்லைகளிலிருந்தும், என் ஆதிக்கத்திலிருந்தும் கூட காப்பாற்றுகின்றனர்.
பதம் 6.3.19 : உண்மையான மதக் கோட்பாடுகள் நேரடியாக பரமபுருஷரால் இயற்றப்படுபவையாகும். முழுமையாக சத்வ குணத்தில் உள்ளவர்களும், மிகவுயர்ந்த கிரகங்களில் வாழ்பவர்களுமான சிறந்த ரிஷிகளால் கூட உண்மையான சமயக் கோட்பாடுகளை ஆராய்ந்து கண்டுபிடிக்க முடியாது. தேவர்களாலும், சித்தலோகத் தலைவர்களாலும் முடியாது. அசுரர்களோ, சாதாரண மனிதர்களோ, வித்யாதரர்களோ, சாரணர்களோ எங்கனம் அதை அறிவர்?
பதங்கள் 6.3.20 – 6.3.21 : பிரம்ம தேவர், நாரதர், சிவ பெருமான், நான்கு குமாரர்கள், பகவான் கபிலர் (தேவஹூதியின் மகன்), சுயம்புவ மனு, பிரகலாத மகாராஜன், ஜனக மகாராஜன், பாட்டனார் பீஷ்மர், பலி மகாராஜன், சுகதேவ கோஸ்வாமி மற்றும் நான் ஆகிய பன்னிருவரும் உண்மையான சமயக் கோட்பாட்டை அறிந்தவர்களாவோம். அன்பிற்குரிய சேவகர்களே, பாகவத-தர்மம் அல்லது பரமபுருஷரிடம் அன்பு கொண்டு அவரிடம் சரணாகதியடைதல் எனப்படும் இந்த உன்னதமான சமயக் கோட்பாடு, ஜட இயற்கைக் குணங்களால் கறைப்படுத்தப்படாததாகும். இது மிகவும் இரகசியமானதும், சாதாரண மனிதர்களால் புரிந்து கொள்வதற்குக் கடினமானதுமாகும். ஆனால் அதிர்ஷ்டவசமாக இதை ஒருவன் புரிந்து கொண்டுவிட்டால், அவன் உடனே முக்தியடைந்து பரமபதத்திற்கு பகவானின் இராஜ்ஜியத்திற்குச் சென்று விடுகிறான்.
பதம் 6.3.22 : பகவானின் புனித நாம ஜபத்திலிருந்து துவங்கும் பக்தித் தொண்டுதான், மனித சமுதாயத்திலுள்ள ஜீவராசிக்கு முடிவான சமயக் கோட்பாடாகும்.
பதம் 6.3.23 : என் மகன்களுக்கு நிகரான பிரியமுள்ள சேவகர்களே, பகவானுடைய புனித நாம ஜபத்தின் மகத்துவத்தைப் பாருங்கள். மகாபாவியான அஜாமிளன், பகவான் புனித நாமத்தை உச்சரிக்கிறோம் என்பதை அறியாமைலேயே, பகவானின் நாமத்தைச் சொல்லி தன் மகனை அழைத்தான். ஆயினும், பகவானின், புனித நாமத்தை ஜபித்ததால் பகவான் நாராயணரை அவன் நினைத்துக் கொண்டான். இவ்வாறாக மரணத்தின் கயிறுகளிலிருந்து அவன் உடனே காப்பாற்றப்பட்டான்.
பதம் 6.3.24 : எனவே, பகவானின் புனித நாம ஜபத்தினாலும், அவரது குணங்கள் மற்றும் செயல்களைப் பாடுவதாலும், ஒருவன் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் எளிதில் விடுபடுகிறான் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். பாவ விளைவுகளிலிருந்து விடுபடுவதற்கு இந்த ஒரு வழிமுறைதான் சிபாரிசு செய்யப்படுகிறது. பகவானின் புனித நாமத்தைப் பிழையான உச்சரிப்புடன் ஒருவன் ஜபித்தாலும், அது குற்றமின்றி ஜபிக்கப்படுமானால், பெளதிக பந்தத்திலிருந்து அவன் விடுதலையடைவான். உதாரணமாக, அஜாமிளன் மகா பாவியாக இருந்த போதிலும், இறக்கும் தறுவாயில் அவன் புனித நாமத்தை உச்சரித்தான். உண்மையில் அவன் தன் மகனைத்தான் அழைத்தான் என்றாலும், நாராயணரின் திருநாமத்தை நினைத்த காரணத்தால் அவன் பரிபூரண முக்தியடைந்தான்.
பதம் 6.3.25 : சமய சாஸ்திரங்களைத் தொகுத்தவர்களான யாக்ஞவல்கியரும், ஜைமினியும், மற்றவர்களும் பரமபுருஷரின் மாயா சக்தியால் மதிமயங்கியவர்களாக இருப்பதால், அவர்களால் பன்னிரண்டு மகாஜனங்களின் இரகசியமான சமய முறையை அறிய முடியவில்லை. பக்தித் தொண்டைச் செய்வதின் அல்லது ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதின் உன்னதமான மகத்துவத்தை அவர்களால் புரிந்துகொள்ள முடியாது. அவர்களுடைய மனங்கள் குறிப்பாக யஜூர், சாம, மற்றும் ரிக் வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள வேதக் கிரியைகளால் கவரப்பட்டுள்ளதால், அவர்களது புத்தி மழுங்கிவிட்டது. இவ்வாறாக அவர்கள், பெளதிக இன்பத்திற்காக சுவர்க்கலோகத்திற்க்கு ஏற்றம் பெறுவதைப் போன்ற, தற்காலிகமான நன்மைகளை மட்டுமே அளிக்கும் வேதக் கிரியைகளுக்கு உரிய பொருள்களைச் சேகரிப்பதிலேயே சுறுசுறுப்பாக உள்ளனர். சங்கீர்த்தன இயக்கத்திடம் அவர்களுக்குக் கவர்ச்சி ஏற்படவில்லை மாறாக, தர்மம், அர்த்தம், காமம் மற்றும் மோட்சத்தில் அவர்கள் நாட்டம் கொண்டுள்ளனர்.
பதம் 6.3.26 : ஆகவே, இவ்விஷயங்களையெல்லாம் கருத்திற் கொண்டுதான், புத்திசாலிகள், தங்களுடைய எல்லாப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில், எல்லோருடைய இதயங்களிலும் உறைபவரும், எல்லாக் கல்யாண குணங்களுக்கும் உறைவிடமான பகவானின் புனித நாமத்தை ஜபிப்பதெனும் பக்தித்தொண்டைப் பின்பற்றுகின்றனர். இப்படிப்பட்டவர்கள் தண்டனைக்குரிய என் ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களல்ல. பொதுவாக அவர்கள் பாவங்கள் புரிவதில்லை. ஆனால் தவறுதலாகவோ அல்லது பிரமையினாலோ சில சமயங்களில் அவர்கள் பாவம் செய்ய நேரிட்டாலும், அவர்கள் எப்பொழுதும் ஹரே கிருஷ்ண மந்திரத்தை ஜபிப்பதால், பாவ விளைவுகளிலிருந்து காப்பாற்றப்படுகின்றனர்.
பதம் 6.3.27 : எனது பிரிய சேவகர்களே, இத்தகைய பக்தர்கள் பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் பூரண சரணாகதி அடைந்துள்ளனர் என்பதால், அவர்களின் அருகில்கூட நெருங்காதீர்கள். அவர்கள் சமதரிசிகள்; தேவர்களாலும், சித்தர்களாலும் பாடப்படும் புனிதமான சரித்திரத்தை உடையவர்கள். நீங்கள் அவர்களை நெருங்கவும் வேண்டாம். அவர்கள் பரமபுருஷரின் கதையால் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகின்றனர். எனவே பிரம்மதேவரும், நானும், காலமும் கூட அவர்களைத் தண்டிக்கும் தகுதியுடையவர்களல்ல.
பதம் 6.3.28 : பரமஹம்சர்கள், பெளதிக சுகபோகங்களில் பற்றில்லாதவர்களும், பகவானுடைய தாமரைப் பாதங்களின் தேனைப் பருகுபவர்களுமான மேன்மக்களாவர். எனது அன்பார்ந்த சேவகர்களே, அந்த தேனின் சுவையை வெறுப்பவர்களும், பரமஹம்சர்களுடன் சகவாசம் கொள்ளாதவர்களும், குடும்ப வாழ்விலும், நரகத்தை நோக்கி அழைத்துச் செல்லும் பெளதிக சுகபோகங்களிலும் பற்றுக் கொண்டவர்களுமான மனிதர்களை மட்டுமே, தண்டிப்பதற்கு என்னிடம் கொண்டு வாருங்கள்.
பதம் 6.3.29 : அன்புத் தொண்டர்களே, எந்த பாவிகள் ஸ்ரீ கிருஷ்ணரின் புனித நாமத்தையும், குணங்களையும் பாட தங்கள் நாவை உபயோகிப்பதில்லையோ, யாருடைய இதயங்கள் ஒரு முறையேனும் கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களை நினைக்கவில்லையோ, மேலும் யாருடைய தலைகள் ஒரு முறையேனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் முன் வணங்கவில்லையோ அவர்களை மட்டும் என்னிடம் கொண்டு வாருங்கள். பகவான் விஷ்ணுவுக்குச் செய்ய வேண்டிய மனித வாழ்வின் ஒரே கடமையைச் செய்யாதவர்களை என்னிடம் அனுப்புங்கள். இத்தகைய மூடர்களையும், அயோக்கியர்களையும் என்னிடம் அழைத்து வாருங்கள்.
பதம் 6.3.30 : (பிறகு யமராஜன் தம்மையும், தம் சேவகர்களையும் குற்றம் புரிந்தவர்களாகக் கருதி, பகவானிடம் மன்னிப்புக் கோரி பின்வருமாறு பேசினார்.) எம்பெருமானே, என் சேவர்கள் அஜாமிளனைப் போன்ற ஒரு வைஷ்ணவனைக் கைது செய்து நிச்சயம் பெருங்குற்றத்தைச் செய்துவிட்டனர். நாராயணா, பரமபுருஷரே, ஆதி புருஷரே தயவுகூர்ந்து எங்களை மன்னித்தருளுங்கள். எங்களுடைய அறியாமையின் காரணத்தால், அஜாமிளன் தங்களுடைய ஒரு சேவகன் என்பதை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. இவ்விதமாக நாங்கள் பெருங்குற்றத்தைச் செய்துவிட்டோம். எனவே நாங்கள் கூப்பிய கரங்களுடன் தங்களிடம் மன்னிப்புக் கோருகிறோம். பெருமானே தாங்கள் பரம கருணாமூர்த்தியும், நற்குணங்கள் நிரம்பியவரும் ஆவீர். ஆகவே எங்களை மன்னித்தருளுங்கள். தங்களுக்கு எங்களுடைய மரியாதை கலந்த வணக்கங்களை நாங்கள் சமர்ப்பிக்கிறோம்.
பதம் 6.3.31 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, பகவானின் புனித நாம ஜபமானது, கொடிய பாவங்களின் விளைவுகளைக் கூட வேரறுக்க வல்லது. ஆகவே, சங்கீர்த்தன இயக்கத்தின் நாம சங்கீர்த்தனமே முழு பிரபஞ்சத்திலும் மிகவும் மங்களகரமான செயலாகும். இதை நீர் புரிந்துகொள்ள வேண்டும். இதனால் மற்றவர்களும் இதை முக்கியமாக எடுத்துக் கொள்வார்கள்.
பதம் 6.3.32 : பகவானின் புனித நாமத்தையும், அவரது செயல்களைப் பற்றியும் இடைவிடாது கேட்டுக்கொண்டும், பாடிக்கொண்டும் இருப்பவனால், இதயத்திலுள்ள அழுக்கை அகற்றிவிடக்கூடிய தூய பக்தித் தொண்டின் படித்தரத்தைச் சுலபமாக அடைந்துவிட முடியும். விரதங்களை அனுஷ்டிப்பதாலும், வேதச் சடங்குகளை நிறைவேற்றுவதாலும் மட்டுமே இத்தகைய தூய்மையை ஒருவனால் அடைய முடியாது.
பதம் 6.3.33 : எப்பொழுதும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களிலுள்ள தேனைப் பருகும் பக்தர்கள், ஜட இயற்கையின் முக்குணங்களின் கீழ் செய்யப்படுபவையும், துன்பத்தை மட்டுமே தருபவையுமான பெளதிக செயல்களை சிறிதும் விரும்புவதில்லை. உண்மையில், பக்தர்கள் பகவானின் தாமரைப் பாதங்களை விட்டுவிட்டு பெளதிக செயல்களுக்குத் திரும்புவதேயில்லை. ஆனால் பகவானின் திருவடித் தொண்டை அலட்சியம் செய்து, வேதச் சடங்குகளில் பற்றுக் கொண்டுள்ளவர்களும், காம இச்சைகளால் மதி மயங்கியிருப்பவர்களுமான மற்றவர்கள், சில சமயங்களில் பிராயச்சித்தங்களைச் செய்கின்றனர். ஆயினும், முற்றிலும் தூய்மையடையாத காரணத்தால், அவர்கள் திரும்பத் திரும்ப பாவச் செயல்களுக்குத் திரும்புகின்றனர்.
பதம் 6.3.34 : பகவானுடைய அசாதாரணமான மகிமைகள், நாமம், புகழ் மற்றும் குணங்கள் ஆகியவற்றைப் பற்றி தங்கள் எஜமானரின் வாயிலிருந்து கேட்ட யமதூதர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர். அன்று முதல் அவர்கள் பக்தர்களைக் கண்டதும், அவர்களிடம் அச்சம் கொண்டு, மீண்டும் அவர்களைப் பார்க்கவும் துணிவதில்லை.
பதம் 6.3.35 : கும்ப புத்திரரும், மாமுனிவருமான அகஸ்தியர், பரமபுருஷரை பூஜித்துக் கொண்டு, மலய பர்வதத்தில் வாழ்ந்து வந்தபொழுது நான் அவரை அணுகினேன். அவரும் மிகவும் இரகசியமான இந்த வரலாற்றை எனக்கு விவரித்தார்.