அத்தியாயம் – 18
தேவேந்திரனைக் கொல்வதெனும்
திதியின் சபதம்
பதம் 6.18.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: சவிதா, அதிதியின் பன்னிரண்டு மகன்களில் ஐந்தாவது மகனாவான். அவனது மனைவியான விருஷ்னி, சாவித்ரி, வியாகிருதி, திரயி என்ற மூன்று புதல்விகளையும், அக்னிஹோத்ரன், பசு, சோமன், சாதுர்மாஸ்யன் என்ற மகன்களையும், ஐந்து மகாயக்ஞர்களையும் பெற்றாள்.
பதம் 6.18.2 : அரசே, அதிதியின் ஆறாவது மகனாகிய பகனின் மனைவியான சித்தி, மஹிமா, விபு, பிரபு என்ற மூன்று மகன்களையும், ஆசி என்ற மிகவும் அழகிய ஒரு மகளையும் பெற்றாள்.
பதங்கள் 6.18.3 – 6.18.4 : அதிதியின் ஏழாவது மகனான தாதாவிற்கு குஹு, சினிவாலீ, ராகா, அனுமதி என்ற நான்கு மனைவிகள் இருந்தனர். இந்த மனைவிகள் முறையே சாயம், தர்சன், பிராதன், பூர்ணமாசன் என்ற நான்கு மகன்களைப் பெற்றனர். அதிதியின் எட்டாவது மகனான விதாதாவின் மனைவி கிரியா எனப்பட்டாள். அவள் மூலமாக புரீஷ்யர்கள் என்ற ஐந்து அக்னி தேவர்களை விதாதா பெற்றார். அதிதியின் ஒன்பதாவது மகனான வருணனின் மனைவி சர்ஷணீ. பிரம்மாவின் புத்திரரான பிருகு அவளது கர்ப்பத்தில் மீண்டும் பிறந்தார்.
பதம் 6.18.5 : வருணனுடைய விந்தின் மூலமாக ஓர் எறும்புப் புற்றிலிருந்த, மகாயோகியான வால்மீகி பிறந்தார். பிருகுவும் வால்மீகியும் வருணனின் பிரத்தியேக புத்திரர்களாவர். ஆனால் அகஸ்தியரும், வசிஷ்டரும், வருணன் மற்றும் அதிதியின் பத்தாவது மகனான மித்திரன் ஆகியோரின் பொதுவான மகன்களாவர்.
பதம் 6.18.6 : தேவலோக மங்கையான ஊர்வசியைப் பார்த்ததும் மித்திரனும், வருணனும் விந்தை வெளிப்படுத்தினர். அதை அவர்கள் ஒரு மண் குடத்தில் பத்திரப்படுத்தி வைத்தனர். பிறகு அக்குடத்திலிருந்து அகஸ்தியர், வஸிஷ்டர் என்ற இரு மகன்கள் தோன்றினர். எனவே அவர்கள் மித்திரனுக்கும், வருணனுக்கு பொதுவான மகன்களாவர். மித்திரன் தனது மனைவியான ரேவதியின் கர்பத்தில் உத்சர்கன், அரிஷ்டன், பிப்பலன் என்ற மூன்று மகன்களைப் பெற்றார்.
பதம் 6.18.7 : பரீட்சித்து மகாராஜனே, சுவர்க்க ராஜனும், அதிதியின் பதினொன்றாவது மகனுமான இந்திரன், தன் மனைவி பௌலோமியின் கர்பத்தில் ஜயந்தன், ரிஷபன், மீடுஷன் என்ற மூன்று மகன்களைப் பெற்றார் என்று நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பதம் 6.18.8 : பலவித சக்திகளை உடையவரான பரமபுருஷர், தமது சுய சக்தியினால், குள்ளமான ஒரு ரூபத்தில் உருக்ரமராக, அதிதியின் பன்னிரண்டாவது மகனாகத் தோன்றினார். அவர் தமது மனைவியான கீர்த்தியின் கர்பத்தில் பிருஹத்ஸ்லோகர் என்ற ஒரு மகனைப் பெற்றார். பிருஹதஸ்லோகருக்கு செளபகர் முதலான பல மகன்கள் இருந்தனர்.
பதம் 6.18.9 : பிறகு (ஸ்ரீமத் பாகவதத்தின் எட்டாவது காண்டத்தில்), உருக்ரமரான பகவான் வாமனதேவர் எவ்வாறு சிறந்த முனிவரான கஸ்யபரின் மகனாகத் தோன்றி, மூன்றடிகளால் மூவுலகங்களையும் அளந்தார் என்பதை நான் விவரிப்பேன். அவர் புரிந்த அசாதாரணமான செயல்களையும், அவரது குணங்களையும், அவரது சக்தியையும், எப்படி அதிதியின் கர்பத்திலிருந்து அவர் பிறந்தார் என்பதையும் கூட நான் விவரிப்பேன்.
பதம் 6.18.10 : இப்பொழுது, கஸ்யபரால் பெறப்பட்டு அசுரர்களாக மாறிய திதியின் மகன்களைப் பற்றி நான் விவரிக்கப்போகிறேன். இந்த அசுர குடும்பத்தில் சிறந்த பக்தரான பிரகலாத மகாராஜன் தோன்றினார். அதே குடும்பத்தில் பலி மகாராஜனும் தோன்றினார். அசுரர்கள் திதியின் கர்பத்திலிருந்து பிறந்தவர்கள் என்பதால், தைத்தியர்கள் என்று அறியப்படுகின்றனர்.
பதம் 6.18.11 : முதலில் திதியின் கர்பத்திலிருந்து இரண்யகசிபு, இரண்யாக்ஷன் என்ற இரு மகன்கள் பிறந்தனர். மிகவும் சக்திசாலிகளான அவ்விருவரும் தைத்தியர்களாலும், தானவர்களாலும் பூஜிக்கப்பட்டனர்.
பதங்கள் 6.18.12 – 6.18.13 : இரண்யகசிபுவின் மனைவி கயாது எனப்பட்டாள். அவள் ஜம்பனின் மகளும், தனுவின் வம்சத்தவளுமாவாள். அவள் வரிசையாக சம்ஹலாதன், அனுஹலாதன், ஹலாதன் மற்றும் பிரகலாதன் என்ற நான்கு மகன்களைப் பெற்றாள். இந்நால்வரின் சகோதரி சிம்ஹிகா எனப்பட்டாள். அவள் விப்ரசித் என்ற அசுரனை மணந்து, ராகு என்ற மற்றொரு அசுரனைப் பெற்றாள்.
பதம் 6.18.14 : ராகு மாறுவேடத்தில், தேவர்களுக்கிடையில் அமிர்தத்தைப் பருகிக் கொண்டிருக்கும் பொழுது, பரமபுருஷர் அவனது தலையைத் துண்டித்தார். சம்ஹலாதனின் மனைவியின் பெயர் கிருதி சம்ஹலாதனுடனான சேர்க்கையால் கிருதி பஞ்சஜனன் என்ற ஒரு மகனைப் பெற்றாள்.
பதம் 6.18.15 : ஹலாதனுடைய மனைவியின் பெயர் தமனி. அவன் வாதாபி, இல்வளன் என்ற இரு மகன்களைப் பெற்றாள். அகஸ்திய முனிவர் இல்வளனின் விருந்தாளியாக வந்தபொழுது, இல்வளன் செம்மறிக்கடாவின் உருவிலிருந்த வாதாபியைச் சமைத்து அவருக்கு விருந்தளித்தான்.
பதம் 6.18.16 : அனுஹலாதனின் மனைவியின் பெயர் சூர்யா. அவள் பாஷ்கலன், மஹிஷன் என்ற இரு மகன்களைப் பெற்றாள். பிரகலாதருக்கு விரோசனன் என்ற ஒரு மகன் இருந்தான். அவனது மனைவி பலி மகாராஜனைப் பெற்றாள்.
பதம் 6.18.17 : அதன்பிறகு, பலி மகாராஜன் அசனாவின் கர்பத்தில் நூறு மகன்களைப் பெற்றான். இந்த நூறு மகன்களுள் பாணன் மூத்தவனாவான். பலி மகாராஜனின் புகழுக்குரிய செயல்கள் பிறகு (எட்டாவது காண்டத்தில்) விவரிக்கப்படும்.
பதம் 6.18.18 : பாணன் சிவபெருமானுடைய சிறந்த உபாசகன் என்பதால், அவன் புகழ்பெற்ற சில கணங்களுள் ஒருவனானான். இப்பொழுது கூட, சிவபெருமான் பாணனின் பக்கத்திலேயே எப்பொழுதும் நின்றபடி அவனுடைய தலைநகரைக் காக்கிறார்.
பதம் 6.18.19 : நாற்பத்தொன்பது மருத்தேவர்கள் கூட திதியின் கர்பத்திலிருந்து பிறந்தனர். அவர்களுள் எவருக்கும் மகன்களில்லை. அவர்கள் திதிக்குப் பிறந்தவர்கள் என்றாலும், இந்திரன் அவர்களுக்கு தேவர்களின் அந்தஸ்தை அளித்தார்.
பதம் 6.18.20 : பரீட்சித்து மகாராஜன் வினவினார்: பிரபுவே, நாற்பத்தொன்பது மருத்களும் அவர்களது பிறப்பின் காரணத்தால், அசுர மனப்பான்மை உடையவர்களாக இருந்திருக்க வேண்டும். சுவர்க்க ராஜனான இந்திரன் ஏன் அவர்களைத் தேவர்களாக மாற்றினார்? அதற்காக அவர்கள் செய்த புண்ணிய கருமம் என்ன?
பதம் 6.18.21 : அன்புள்ள பிராமணரே நானும் என்னுடன் இங்குள்ள எல்லா பிராமணர்களும் இதைப் பற்றி அறிய ஆவலாக இருக்கிறோம். ஆகவே, சிறந்த ஆத்மாவே, இதன் காரணத்தை எங்களுக்கு விளக்கியருள வேண்டும்.
பதம் 6.18.22 : ஸ்ரீ சூத கோஸ்வாமி கூறினார்: மாமுனிவர் சௌனகரே, கேட்கத் தகுந்த முக்கிய விஷயங்களைப் பற்றி பரீட்சித்து மகாராஜன் மரியாதையுடனும், சுருக்கமாகவும், பேசியதைக் கேட்டு, எல்லாம் அறிந்த சுகதேவ கோஸ்வாமி, பெருமகிழ்ச்சியுடன் அவரது முயற்சியைப் புகழ்ந்து பின்வருமாறு பதிலளித்தார்.
பதம் 6.18.23 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இந்திரனுக்கு உதவும் பொருட்டு, பகவான் விஷ்ணு, இரு சகோதரர்களான இரண்யாக்ஷனையும், இரண்யகசிபுவையும் கொன்றார். அவர்கள் கொல்லப்பட்டு சோகத்தினால் உண்டான கொழுந்து விட்டெரியும் கோபத்துடன் திதி பின்வருமாறு சிந்திக்கலானாள்.
பதம் 6.18.24 : பகவான் விஷ்ணுவின் மூலமாக, இரு சகோதர்களான இரண்யாக்ஷனையும், இரண்யகசிபுவையும் கொன்றவனும், புலன்நுகர்வில் உழல்பவனும், கொடியவனும், நெஞ்சில் ஈரமில்லாதவனும், பாவியுமான இந்திரனை மடியச் செய்து நான் எப்பொழுது சுகமாகப் படுப்பேன்?
பதம் 6.18.25 : அரசர்களென்றும், பெரிய தலைவர்களென்றும் அறியப்படுபவர்களின் உடல்கள் இறந்த பிறகு, புழுக்களாகவோ, மலமாகவோ அல்லது சாம்பலாகவோ மாறுகின்றன. ஒருவன் இத்தகைய ஒருடலைப் பராமரிக்கும் பொருட்டு, மற்றவர்களிடம் பொறாமை கொண்டு அவர்களைக் கொல்வானாயின், அவன் வாழ்வின் உண்மையான நலனை அறிந்தவனாவானா? நிச்சயமாக அதை அவன் அறிய மாட்டான். ஏனெனில், பிற ஜீவராசிகளிடம் பொறாமை கொண்டவன் நரகத்திற்குச் செல்வது நிச்சயம்.
பதம் 6.18.26 : திதி நினைத்தாள்: இந்திரன் தனது உடலை நித்தியமானது என்று கருதுவதால், கட்டுப்பாடில்லாதவனாக ஆகிவிட்டான். எனவே இந்திரனின் மதத்தை அகற்றக்கூடிய ஒரு மகனை நான் பெற விரும்புகிறேன். இதில் எனக்கு உதவக்கூடிய ஏதேனும் வழியை நான் மேற்கொண்டாக வேண்டும்.
பதங்கள் 6.18.27 – 6.18.28 : (இந்திரனைக் கொல்ல ஒரு மகனைப் பெறும் விருப்பத்துடன்) இவ்வாறு சிந்தித்த திதி, தனது இனிய நடத்தையினால் கஸ்யபரைத் திருப்திப்படுத்தும் வகையில் செயற்பட்டாள். அரசே, திதி கஸ்யபரின் உத்தரவுகளை அவர் விருப்பம் போல் எப்பொழுதும் மிகவும் விசுவாசத்துடன் நிறைவேற்றி வந்தாள். திதி சேவையினாலும், அன்பினாலும், அடக்கத்தினாலும், கட்டுப்பாட்டினாலும், கணவனை திருப்திப்படுத்தும் இனிய வார்த்தைகளாலும், புன்னகைகளாலும், பார்வைகளாலும் அவரது மனதைக் கவர்ந்து, அவரைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தாள்.
பதம் 6.18.29 : கஸ்யப முனிவர் கற்றறிந்த பண்டிதராக இருந்தும், அவர் திதியின் செயற்கையான நடத்தையினால் மயக்கப்பட்டு, அவளது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டார். எனவே அவளுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதாக அவளுக்கு உறுதியளித்தார். ஒரு கணவனின் இத்தகைய உறுதிமொழி சிறிதும் ஆச்சரியமானதல்ல.
பதம் 6.18.30 : பிரபஞ்சத்திலுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும் தந்தையான பிரம்மதேவர், படைப்பின் துவக்கத்தில் அனைத்து ஜீவராசிகளும் பற்றில்லாமல் இருப்பதைக் கண்டார். ஜனத் தொகையை அதிகரிக்கும் பொருட்டு, பிறகு அவர், பெண்ணின் நடத்தை புருஷனின் மனதை அபகரிப்பதாக இருப்பதால், புருஷனுடைய உடலின் சரிபாதியிலிருந்து பெண்ணைப் படைத்தார்.
பதம் 6.18.31 : பிரியமானவரே, மிகவும் சக்திவாய்ந்தவரான கஸ்யப முனிவர். தன் மனைவி திதியின் அன்பான நடத்தையினால் மிகவும் மகிழ்ந்து, புன்னகை செய்து, அவளிடம் பின்வருமாறு பேசலானார்.
பதம் 6.18.32 : கஸ்யப முனிவர் கூறினார்: அழகிய பெண்ணே, குற்றங்காண முடியாதவளே, உன்னுடைய நடத்தையால் நான் மிகவும் மகிழ்ந்தேன். எனவே வேண்டிய வரத்தை நீ கேட்கலாம். ஒரு கணவன் திருப்தியடைந்தால் அவனது மனைவியால் இவ்வுலகிலோ, அடுத்ததிலோ அடைவதற்குக் கடினமான ஆசை என்ன உள்ளது?
பதங்கள் 6.18.33 – 6.18.34 : ஒரு பெண்ணுக்குத் தன் கணவனே கண் கண்ட தெய்வமாவான். ஸ்ரீதேவியின் கணவரும், பகவான் வாசுதேவருமான பரமபுருஷர் எல்லோருடைய இதயங்களிலும் இருக்கிறார். அவர் தேவர்களின் பல்வேறு பெயர்கள் மற்றும் ரூபங்களின் மூலமாக கருமிகளால் வழிபடப்படுகிறார். அதுபோலவே, ஒரு பெண்ணின் வழிபாட்டுக்குரியவன் என்ற முறையில், ஒரு கணவன் பகவானைப் பிரதிநிதிக்கிறான்.
பதம் 6.18.35 : அன்பான மனைவியே, உனது இடை மெல்லியதாக இருப்பதால் உன்னுடைய உடல் மிகவும் அழகாக காணப்படுகிறது. நேர்மையுள்ள ஒரு பெண் பதிவிரதையாகவும், கணவனின் சொற்படி நடப்பவளாகவும் இருக்க வேண்டும். அவள் தன் கணவனை வாசுதேவரின் ஒரு பிரதிநிதியாக எண்ணி மிகவும் பக்தியுடன் அவரைப் பூஜிக்க வேண்டும்.
பதம் 6.18.36 : நற்குணமுள்ள என் மனைவியே, நீ என்னைப் பரமபுருஷரின் ஒரு பிரதிநிதியாகப் பாவித்து பக்தி சிரத்தையுடன் பூஜித்ததால், பதிவிரதையல்லாத மனைவிகளுக்குக் கிடைக்க முடியாத உன் விருப்பங்களை நிறைவேற்றி, உனக்கு நான் சன்மானம் அளிக்க போகிறேன்.
பதம் 6.18.37 : திதி பதிலுரைத்தாள்: சிறந்த ஆத்மாவாகிய என் கணவரே, நான் என் மகன்களை இழந்து விட்டேன். தாங்கள் எனக்கு ஒரு வரம் கொடுக்க விரும்பினால், இந்திரனைக் கொல்லக்கூடிய மரணமற்ற ஒரு மகனை நான் வேண்டுகிறேன். ஏனெனில், இந்திரன் விஷ்ணுவின் உதவியுடன் என் இரு மகன்களான இரண்யாக்ஷனையும், இரண்யகசிபுவையும் கொன்று விட்டான்.
பதம் 6.18.38 : திதியின் வேண்டுகோளைக் கேட்ட கஸ்யப முனிவர் மிகவும் துக்கப்பட்டு, “ஐயகோ, இப்பொழுது இந்திரனைக் கொல்லும் பாவச் செயலின் அபாயம் எனக்கு வந்திருக்கிறதே” என்று புலம்பினார்.
பதம் 6.18.39 : கஸ்யப முனிவர் எண்ணினார்: ஐயோ, நான் இப்பொழுது பெளதிக சுகத்தில் அதிக பற்றுக் கொண்டவனாக ஆகிவிட்டேன். இதைச் சாதகமாகக் கொண்டு, என் மனம், ஒரு பெண்ணின் (என் மனைவியின்) உருவிலுள்ள பரமபுருஷரின் மாயா சக்தியால் வசீகரிக்கப்பட்டது. ஆகவே துரதிர்ஷ்டசாலியான நான் நரகத்தை நோக்கிச் சரிவது நிச்சயம்.
பதம் 6.18.40 : என் மனைவியான இவள், தன் சுபாவத்திற்குத் தகுந்த உபாயத்தைப் பின்பற்றினாள். எனவே இவள் குற்றாஞ்சாட்டப்பட வேண்டியவள் அல்ல, ஆனால் நான் ஒரு ஆண். ஆகவே பழியெல்லாம் எனக்குத்தான்! என் புலன்களை என்னால் கட்டுப்படுத்த இயலாததால், எனக்கு எது நல்லது என்ற விஷயத்தில் நான் சிறிதும் பரிச்சயம் இல்லாதவனானேன்.
பதம் 6.18.41 : ஒரு பெண்ணின் முகமானது, இலையுதிர் காலத்தில் மலரும் தாமரைபோல் கவர்ச்சியாகவும், அழகாகவும் இருக்கிறது. அவளது வார்த்தைகள் மிகவும் இனிமையாகவும், செவிக்கு இன்பமளிப்பவையாகவும் இருக்கின்றன. ஆனால் ஒரு பெண்ணின் இதயத்தை நாம் ஆராய்வோமானால், அது கத்தியின் முனைபோல் மிகவும் கூர்மையானது என்பதைப் புரிந்து கொள்வோம். இச்சூழ்நிலைகளில் ஒரு பெண்ணின் செயல்களை யாரால் புரிந்து கொள்ள இயலும்?
பதம் 6.18.42 : பெண்கள் தங்களுடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக, எல்லோரிடமும் மிகவும் பிரியமானவர்கள் போல் நடந்து கொள்கிறார்கள். ஆனால் உண்மையில் அவர்களுக்குப் பிரியமானவர்கள் ஒருவருமில்லை. பெண்கள் அதிக பக்தி சிரத்தை உள்ளவர்களாக இருக்க வேண்டியவர்கள். ஆனால் தங்களுடைய சுய நலன்களுக்காக அவர்கள் தங்களுடைய கணவன்களையும், மகன்களையும், சகோதரர்களையும் கூட கொல்லவோ, அல்லது கொல்லப்படும்படி செய்யவோ தயங்கமாட்டார்கள்.
பதம் 6.18.43 : நான் அவளுக்கு ஒரு வரமளிப்பதாக வாக்களித்திருக்கிறேன். அதை என்னால் மீற முடியாது. ஆனால் இந்திரன் கொல்லப்படத்தகுந்தவரல்ல. இச்சூழ்நிலையில் நான் கொண்டிருக்கும் தீர்வு மிகவும் சரியானதாகும்.
பதம் 6.18.44 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: கஸ்யப முனிவர் இவ்வாறு சிந்தித்து, சிறிது கோபமடைந்தார். குரு வம்சத்தவரான பரீட்சித்து மகாராஜனே, அவர் தன்னையே நொந்து கொண்டு திதியிடம் பின்வருமாறு கூறலானார்.
பதம் 6.18.45 : கஸ்யப முனி கூறினார்: நற்குணப் பெண்ணே, இந்த விரதம் சம்பந்தமான என் உபதேசங்களைக் குறைந்தது ஓராண்டு காலத்திற்கு நீ பின்பற்றுவாயானால், உன்னால் இந்திரனைக் கொல்லக் கூடிய ஒரு மகனை நிச்சயமாகப் பெறமுடியும். ஆனால், வைஷ்ணவக் கோட்பாடுகளைப் பின்பற்றுவதெனும் இந்த விரதத்திலிருந்து நீ விலகுவாயானால், இந்திரனுக்குச் சாதகமான ஒரு மகனை நீ பெறுவாய்.
பதம் 6.18.46 : ததி பதிலுரைத்தாள்; பிராமணரே, நான் உங்களுடைய அறிவுரையை ஏற்று இந்த விரதத்தைப் பின்பற்றுகிறேன். நான் செய்ய வேண்டியது எது, செய்யக் கூடாதது எது, என் விரதத்தை முறியடிக்காதது எது என்பதையெல்லாம் இப்பொழுது எனக்கு தெளிவாக விவரிக்க வேண்டுகிறேன்.
பதம் 6.18.47 : கஸ்யப முனிவர் கூறினார்: அன்பு மனைவியே, இவ்விரதத்தை அனுஷ்டிப்பதற்கு, யாரையும் இம்சிக்கக்கூடாது; யாரையும் சபிக்கக் கூடாது; பொய்யுரைக்கக்கூடாது; நகங்களையும் உரோமத்தையும் வெட்டக்கூடாது; எலும்பு, மண்டையோடு போன்ற அமங்கலப் பொருட்களைத் தொடக்கூடாது.
பதம் 6.18.48 : கஸ்யப முனி தொடர்ந்து கூறினார்: எனதன்புள்ள மனைவியே, நீரில் இறங்கி குளிக்க கூடாது; கோபித்தல் கூடாது; துர் நடத்தை உள்ளவர்களோடு பேசவோ அல்லது உறவாடவோ கூடாது; சுத்தம் செய்யாத துணிகளை அணியக் கூடாது; ஏற்கனவே அணியப்பட்ட மலர் மாலையை அணியக் கூடாது.
பதம் 6.18.49 : உண்டு மிஞ்சிய உணவை சாப்பிடக்கூடாது; காளி தேவிக்கு (துர்கைக்கு) படைக்கப்பட்டதை சாப்பிடக்கூடாது மாமிசத்தால் அல்லது மீனால் அசுத்தமடைந்த உணவை சாப்பிடக்கூடாது; ஒரு சூத்திரனால் கொண்டுவரப்பட்ட அல்லது தொடப்பட்ட எதையும் சாப்பிடக்கூடாது; மாதப் போக்குள்ள பெண்ணால் பார்க்கப்பட்ட எதையும் சாப்பிடக்கூடாது கைகளினால் ஏந்தி நீரைப் பருக்கூடாது.
பதம் 6.18.50 : சாப்பிட்ட பிறகு, உனது வாயையும், கை கால்களையும் கழுவாமல் நீ வெளியில் செல்லக்கூடாது. பொழுது சாயும் நேரத்திலும், அவிழ்ந்த கேசத்துடனும், ஆபரணங்களால் நன்கு அலங்கரித்துக் கொள்ளாமலும், வாக்கை அடக்காமலும், உடலை நன்கு மறைத்துக் கொள்ளாமலும் நீ வெளியில் செல்லக் கூடாது.
பதம் 6.18.51 : கால்களைக் கழுவாமலும், அசுத்தமாகவும், ஈரக் கால்களுடனும், வடக்கிலோ மேற்கிலோ தலை வைத்தும், நிர்வாணமாகவும், மற்ற பெண்களுடனும், சூரிய உதயத்தின் போதும், சூரிய அஸ்தமனத்தின் போதும் நீ சயனிக்கக் கூடாது.
பதம் 6.18.52 : சுத்தமான ஆடையணிந்து, எப்பொழுதும் பரிசுத்தமாகவும், மஞ்சள், சந்தனம் முதலான மங்களப் பொருட்களால் அலங்கரிக்கப்பட்டு, காலையில் சாப்பிடுவதற்கு முன்பாக பசுக்களையும், பிராமணர்களையும், லக்ஷ்மி தேவியையும், பரமபுருஷரையும் பூஜிக்க வேண்டும்.
பதம் 6.18.53 : இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் ஒரு பெண் சுமங்கலிப் பெண்களை மலர் மாலைகளாலும், சந்தனத்தாலும், ஆபரணங்களாலும், மற்ற பொருட்களாலும் பூஜிக்க வேண்டும். கர்பவதியான மனைவி தன் கணவனைத் துதித்து அவரை வழிபட வேண்டும். மேலும் தன் கணவனே கர்பத்தில் புகுந்திருப்பதாக எண்ணி அவரைத் தியானிக்க வேண்டும்.
பதம் 6.18.54 : கஸ்யப முனிவர் தொடர்ந்து கூறினார்: பும்ஸவனம் என்ற இந்த விரதத்தைத் தவறுதலின்றி குறைந்தது ஒரு வருஷத்திற்கு நீ அனுஷ்டித்தால், உனக்கு இந்திரனைக் கொல்லக்கூடிய ஒரு மகன் பிறப்பான். ஆனால் இந்த விரத அனுஷ்டானத்தில் தவறு ஏற்படுமானால், உன் மகன் இந்திரனுக்கு நண்பனாகி விடுவான்.
பதம் 6.18.55 : பரீட்சித்து மகாராஜனே, கஸ்யபரின் மனைவியான திதி, “சரி, உங்களுடைய ஆலோசனைப்படியே அனைத்தையும் நான் நிறைவேற்றுவேன்” என்று கூறி, பும்ஸவனம் என்ற இப்புனிதச் சடங்கை அனுஷ்டிப்பதாக ஒப்புக்கொண்டாள். பெரு மகிழ்ச்சியுடன் கஸ்யபரிடமிருந்து விந்துவைப் பெற்று கர்பவதியான அவள், ஒழுங்காக அந்த விரதத்தை அனுஷ்டிக்கலானாள்.
பதம் 6.18.56 : அனைவருக்கும் மரியாதை அளிப்பவரான அரசே, திதியின் நோக்கத்தை அறிந்த இந்திரன், தனது சுய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளத் திட்டமிட்டார். அவர் தற்காப்பே இயற்கையின் முதல் சட்டம் என்ற நியாயத்தைப் பின்பற்றி, திதியின் விரதத்தை முறியடிக்க விரும்பினார். இவ்வாறாக, ஓர் ஆசிரமத்தில் வசித்துவந்த தன் சிற்றன்னையான திதியின் சேவையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
பதம் 6.18.57 : இந்திரன் தினமும் பழங்கள், மலர்கள், கிழங்குகள், யாகக் குச்சிகள் ஆகியவற்றைக் காட்டிலிருந்து கொண்டு வந்தும், தர்பைப்புல், இலைகள், முளைகள், மண், நீர் ஆகியவற்றைச் சரியான நேரத்தில் கொண்டு வந்தும் தன் சிற்றனைக்குச் சேவை செய்யலானார்.
பதம் 6.18.58 : பரீட்சித்து மகாராஜனே, ஒரு மானைப் பிடிக்க விரும்பும் வேடன், மானின் தோலால் உடலை மூடிக் கொண்டு, மானைப் போல் ஆகி, மானுக்குச் சேவை செய்கிறான். அதுபோலவே, இந்திரனும் திதியின் மகன்களிடம் மனதில் பொறாமை கொண்டிருந்தார் என்றாலும், வெளித் தோற்றத்தில் நட்புடையவர் போல், நம்பிக்கையூட்டும் வகையில் திதிக்கு சேவை செய்து வந்தார். திதியின் விரத அனுஷ்டானத்தில் ஏதேனும் குற்றத்தைக் கண்டு பிடித்ததும் அவளை வஞ்சித்து விட வேண்டும் என்பதே இந்திரனின் நோக்கம். தன்னைப்பற்றிய இரகசியம் வெளிப்பட்டுவிடாமல் இருப்பதற்காக மிகவும் கவனமாக அவளுக்கு அவர் சேவை செய்யலானார்.
பதம் 6.18.59 : உலகின் நாயகரே, அவளிடம் எந்த குற்றத்தையும் கண்டுபிடிக்க முடியாத இந்திரன், “எனக்கெவ்வாறு நன்மை ஏற்படக் கூடும்?” என்று எண்ணியவாறு, கவலையில் முழ்கினார்.
பதம் 6.18.60 : விரத அனுஷ்டானத்தை உறுதியாகப் பின்பற்றியதன் காரணத்தால், மெலிந்து பலவீனமடைந்திருந்த திதி ஒரு சமயம் சாப்பிட்ட பிறகு, துரதிர்ஷ்டவசமாக வாயையும், கை கால்களையும் கழுவாமல், சந்தியா வேளையில் உறங்கி விட்டாள்.
பதம் 6.18.61 : யோக சக்திகளையெல்லாம் (அணிமா, லகிமா போன்ற சித்திகளை) பெற்றிருந்த இந்திரன், அவளிடம் இந்த குற்றத்தைக் கண்டு பிடித்ததும், அவள் ஆழ்ந்த உறக்கத்தில் நினைவில்லாமல் இருந்த பொழுது, அவளது கர்பத்தினுள் புகுந்தார்.
பதம் 6.18.62 : திதியின் கர்ப்பத்தினுள் புகுந்த இந்திரன், தனது வஜ்ராயுதத்தால் பொன்நிறமான கருவை ஏழு துண்டுகளாக வெட்டினார். ஏழு இடங்களில், ஏழு ஜீவன்கள் அழத்துவங்கின. அவைகளை, “அழ வேண்டாம்” என்று சொல்லிக் கொண்டே அவை ஒவ்வொன்றையும் மீண்டும் ஏழு துண்டுகளாக வெட்டினார்.
பதம் 6.18.63 : அரசே, மிகவும் துக்கமடைந்த அவர்கள் கூப்பிய கரங்களுடன், “இந்திரனே, நாங்கள் உமது சகோதர்களான மருத்கள். எங்களை ஏன் கொல்ல முயற்சிக்கிறீர்கள்?” என்று கூறினர்.
பதம் 6.18.64 : உண்மையில் அவர்கள் தன்னிடம் விசுவாசம் கொண்ட தனது ஆதரவாளர்கள் என்பதைக் கண்ட இந்திரன் அவர்களிடம், “நீங்களனைவரும் எனது சகோதர்களென்றால், இனிமேல் என்னிடம் அச்சம் கொள்வதற்கு எதுவுமில்லை” என்று கூறினார்.
பதம் 6.18.65 : சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, அஸ்வத்தாமனின் பிரம்மாஸ்திரத்தினால் நீர் எரிக்கப்பட்ட பொழுது, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உமது தாயின் கர்பத்தினுள் புகுந்து உம்மைக் காப்பாற்றினார். அதுபோலவே, ஒரு கரு இந்திரனின் வஜ்ராயுதத்தால் நாற்பத்தொன்பது துண்டுகளாக வெட்டப்பட்ட போதிலும், அவையனைத்தும் பரமபுருஷரின் கருணையால் காப்பாற்றப்பட்டன.
பதங்கள் 6.18.66 – 6.18.67 : மூல முழுமுதற் கடவுளை ஒரே ஒரு தடவை வழிபட்டவன் கூட, ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்பட்டு, விஷ்ணுவின் அதே தேக அம்சங்களைப் பெறும் நன்மையை அடைகிறான். திதி கிட்டத்தட்ட ஓராண்டு காலத்திற்கு ஒரு சிறந்த விரதத்தை அனுஷ்டித்து பகவான் விஷ்ணுவை வழிபட்டாள். அவளது இத்தகைய ஆத்ம பலத்தினால் நாற்பத்தொன்பது மருத்கள் பிறந்தனர். அவ்வாறிருக்க, மருத்கள் திதியின் கர்பத்தில் பிறந்தும் பரமபுருஷரின் கருணையால் தேவர்களுக்குச் சமமானவர்கள் ஆனது எவ்வாறு ஆச்சரியமானதாகும்?
பதம் 6.18.68 : பரமபுருஷரை வழிபட்டதால் திதி முற்றிலும் தூய்மையடைந்தாள். படுக்கையிலிருந்து அவள் எழுந்ததும், இந்திரனுடன் நாற்பத்தொன்பது மகன்கள் இருப்பதைக் கண்டாள். இந்த நாற்பத்தொன்பது மகன்களும் நெருப்புபோல் பிரகாசமாகவும், இந்திரனுடன் நட்பு கொண்டவர்களாகவும் இருக்கக் கண்ட திதி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள்.
பதம் 6.18.69 : அதன்பிறகு திதி இந்திரனிடம் கூறினாள்: பிரிய மகனே, பன்னிரண்டு ஆதித்தியர்களான உங்களைக் கொல்லக்கூடிய ஒரு மகனைப் பெறுவதற்காகவே கடினமாக இந்த விரதத்தை நான் அனுஷ்டித்தேன்.
பதம் 6.18.70 : நான் ஒரே ஒரு மகனைத்தான் வேண்டினேன். ஆனால் இப்பொழுது நாற்பத்தொன்பது பேர்கள் இருப்பதைப் பார்க்கிறேன். இது எவ்வாறு நிகழ்ந்தது? மகனே இந்திரா, உனக்குத் தெரியுமானால், என்னிடம் உண்மையைக் கூறு. பொய்யுரைக்க முயலாதே.
பதம் 6.18.71 : இந்திரன் பதிலளித்தார்: தாயே, நான் சுய நலத்தினால் குருடாக்கப்பட்ட காரணத்தினால், சமயப் பார்வையை இழந்தவனானேன். நீங்கள் ஆன்மீக வாழ்வை மேற்கொண்டு ஒரு மிகச் சிறந்த விரதத்தை அனுஷ்டிப்பதை அறிந்து, நான் உங்களிடம் ஏதேனும் ஒரு குற்றத்தைக் கண்டுபிடிக்க விரும்பினேன். அத்தகைய ஒரு குற்றத்தைக் கண்டுபிடித்ததும், நான் உங்களுடைய கர்பத்தினுள் புகுந்து, கருவைத் துண்டு துண்டாக வெட்டினேன்.
பதம் 6.18.72 : முதலில் நான் கர்பத்திலிருந்த குழந்தையை ஏழாக வெட்டினேன். அவை ஏழு குழந்தைகளாயின. பிறகு ஏழு குழந்தைகளில் ஒவ்வொன்றையும் மீண்டும் ஏழு ஏழு துண்டுகளாக வெட்டினேன். ஆனால் பரமபுருஷரின் கருணையால் அவர்களில் எவரும் இறக்கவில்லை.
பதம் 6.18.73 : அருமைத் தாயே, நாற்பத்தொன்பது மகன்களும் உயிரோடு இருந்ததைக் கண்டு உண்மையாகவே நான் ஆச்சரியமடைந்தேன். இது, பகவான் விஷ்ணுவை வழிபட்டு, அவருக்கு தினமும் நீங்கள் பக்தித் தொண்டு செய்து வந்ததன் இரண்டாந்தரமான பலன் என்ற முடிவுக்கு நான் வந்தேன்.
பதம் 6.18.74 : பரமபுருஷரை வழிபடுவதில் மட்டுமே ஈடுபாடு கொண்டுள்ளவர்கள், பகவானிடமிருந்து பெளதிகமான எதையும் விரும்புவதில்லை. அவர்கள் முக்தியைக்கூட விரும்புவதில்லை என்றாலும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்களுடைய எல்லா ஆசைகளையும் நிறைவேற்றுகின்றார்.
பதம் 6.18.75 : பரமபுருஷரின் ஒரு தொண்டனாவதே எல்லா நோக்கங்களுக்கும் முடிவான இலக்காகும். புத்திசாலியான ஒருவன், மிகப் பிரியமானவரும், தமது பக்தர்களுக்குத் தம்மையே கொடுப்பவருமான பகவானுக்கே சேவை செய்வானாயின், கிடைக்கக் கூடிய பெளதிக சுகத்தை அவனால் எவ்வாறு விரும்ப முடியும்?
பதம் 6.18.76 : தாயே, பெண்களுள் சிறந்தவளே, நான் ஒரு முட்டாள். நான் செய்த பிழைகளையெல்லாம் பொறுத்தருள வேண்டும். உங்களுடைய பக்தித் தொண்டினால், உங்களுடைய நாற்பத்தொன்பது மகன்களும் எந்த சேதமும் இல்லாமல் பிறந்துள்ளார். ஓர் எதிரியாக அவர்களை நான் கண்டதுண்டமாக வெட்டினேன். ஆனால் உங்களுடைய பக்தித் தொண்டின் காரணத்தால் அவர்கள் இறக்கவில்லை.
பதம் 6.18.77 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இந்திரனின் நன்னடத்தையால் திதி மிகவும் திருப்தியடைந்தாள். பிறகு இந்திரன் தனது சிற்றன்னைக்கு வணக்கம் செலுத்திவிட்டு, அவளது அனுமதியுடன், தன் சகோதரர்களான மருத்களுடன் சுவர்க்க லோகங்களுக்குச் சென்றார்.
பதம் 6.18.78 : பரீட்சித்து மகாராஜனே, உமது கேள்விக்கு, குறிப்பாக மருத்களைப் பற்றிய தூய, மங்களகரமான இந்த வர்ணனையைப் பற்றிய உமது கேள்விகளுக்கு என்னால் முடிந்தவரை நான் பதிலளித்தேன். இப்பொழுது நீர் தொடர்ந்து கேட்கலாம். நானும் தொடர்ந்து விவரிக்கிறேன்.