அத்தியாயம் – 17
அன்னை பார்வதி சித்ரகேதுவைச் சபித்தல்
பதம் 6.17.1
ஸ்ரீ-சுக உவாச
யதஸ் சாந்தர்ஹிதோ ‘நந்தஸ் தஸ்யை க்ருத்வா திசே நம:
வித்யாதரஸ் சித்ரகேதுஸ் சசார ககனே சர:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; யத:—எந்த (திசையில்); ச—மேலும்; அந்தர்ஹித:—மறந்த; அனந்த:—எல்லையற்றவரான பரமபுருஷர்; தஸ்யை—அதை நோக்கி; க்ருத்வா—செலுத்திய பின்; திசே—திசையை; நம:— வணக்கம்; வித்யாதர:—வித்யாதர லோகத்தின் அரசரான; சித்ரகேது:—சித்ரகேது; சசார—பிரயாணம் செய்தார்; ககனே—வானவெளியில்; சர:—சஞ்சரித்தபடி.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: எந்த திசையில் பரமபுருஷராகிய பகவான் அனந்தர் மறைந்தருளினாரோ அந்த திசைக்கு வணக்கம் செலுத்திய பிறகு, சித்ரகேது, வித்யாதரர்களின் தலைவராக வான வெளியில் பிரயாணம் செய்யத் துவங்கினார்.
பதங்கள் 6.17.2 – 6.17.3
ஸ லக்ஷம் வர்ஷ-லக்ஷாணாம் அவ்யாஹத-பலேந்ரிய:
ஸ்தூயமானோ மஹா-யோகீ முனிபி: ஸித்த-சாரணை:
குலாசலேந்ர-த்ரோணீஷு நானா-ஸங்கல்ப-ஸித்திஷு
ரேமே வித்யாதர-ஸ்த்ரீபிர் காபயன் ஹரிம் ஈஸ்வரம்
ஸ:—அவர் (சித்ரகேது); லக்ஷம்—ஒரு இலட்சம்; வர்ஷ—ஆண்டுகளின்; லக்ஷாணாம்—ஒரு இலட்சம்; அவ்யாஹத—இடையூறு இல்லாமல்; பல-இந்ரிய:—யாருடைய பலமும், புலன்களின் சக்தியும்; ஸ்தூயமான:—புகழப்பட்டவாறு; மஹா-யோகீ—மகா யோகியான; முனிபி:—முனிவர்களாலும்; ஸித்த-சாரணை:—சித்தர்கள் மற்றும் சாரணர்களாலும்; குலாசலேந்ர-த்ரோணீஷு—குலாசலேந்ரம் அல்லது சுமேரு எனப்பட்ட பெரிய மலையின் பள்ளத்தாக்குகளில்; நானா-ஸங்கல்ப-ஸித்திஷு—எங்கு ஒருவன் எல்லா வகையான யோக சித்திகளிலும் பூரணத்துவம் அடைகிறானோ அங்கு; ரேமே—சுகம் அனுபவித்தார்; வித்யாதர-ஸ்த்ரீபி:—வித்யாதர லோகத்துப் பெண்களுடன்; காபயன்—துதிக்கச் செய்து; ஹரிம்—பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரியை; ஈஸ்வரம்—ஆள்பவராகிய.
மிகவும் சக்திவாய்ந்த மகா யோகியான சித்ரகேது, சிறந்த முனிவர்களாலும், ஞானிகளாலும், சித்த மற்றும் சாரணலோகவாசிகளாலும் புகழப்பட்டவாறு சஞ்சரித்தபடி, கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு வாழ்வை அனுபவித்தார். அழிவற்ற தேக பலத்தையும், புலன்களையும் பெற்றிருந்த அவர், பலவகையான யோக சித்திகளுக்கு இருப்பிடமான சுமேரு மலையின் பள்ளத்தாக்குகளில் பிரயாணம் செய்தார். அப்பள்ளத்தாக்குகளில், பரமபுருஷரான ஸ்ரீ ஹரியின் மகிமைகளைப் பாடுவதன் மூலமாக, வித்யாதர லோகத்துப்பெண்களுடன் அவர் வாழ்வை அனுபவித்தார்.
பதங்கள் 6.17.4 – 6.17.5
ஏகதா ஸ விமானேன விஷ்ணு-தத்தேன பாஸ்வதா
கிரிசம் தத்ருசே கச்சன் பரீதம் ஸித்த-சாரணை:
ஆலிங்யாங்கீக்ருதாம் தேவீம் பாஹுனா முனி-ஸம்ஸதி
உவாச தேவ்யா: ஸ்ருண்வந்த்யா ஜஹாஸோச்சைஸ் தத்-அந்திகே
ஏகதா—ஒருசமயம்; ஸ:—அவர் (சித்ரகேது); விமானேன—அவருடைய விமானத்தில்; விஷ்ணு-தத்தேன—பகவான் விஷ்ணுவால் கொடுக்கப்பட்ட; பாஸ்வதா—பிரகாசமாக ஜொலிக்கும்; கிரிசம்—சிவபெருமானை; தத்ருசே—கண்டார்; கச்சன்—சென்றபடி; பரீதம்—சூழப்பட்டிருந்த; ஸித்த—சித்தலோக வாசிகளாலும்; சாரணை:—சாரணலோக வாசிகளாலும்; ஆலிங்ய—அணைத்துக் கொண்டிருப்பதை; அங்கீக்ருதாம்—அவரது மடியில் அமர்ந்துள்ள; தேவீம்—அவரது மனைவியான பார்வதியை; பாஹுனா—கைகளால்; முனி-ஸம்ஸதி—சிறந்த முனிவர்களின் முன்னிலையில்; உவாச—கூறினார்; தேவ்யா:—தேவி பார்வதி; ஸ்ருண்வந்த்யா:—கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது; ஜஹாஸ—அவர் சிரித்தார்; உச்சை:—உரக்க; தத்-அந்திகே—அருகில்.
ஒருசமயம் சித்ரகேது மகாராஜன், பகவான் விஷ்ணுவால் அளிக்கப்பட்ட, பிரகாசமாக ஜொலிக்கும் ஒரு விமானத்தில் விண்வெளியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது சித்தர்களாலும், சாரணர்களாலும் சூழப்பட்டிருந்த சிவபெருமான், சிறந்த முனிவர்களின் சபையில், பார்வதியை மடியில் வைத்துக் கொண்டு, அவளைத் தமது கைகளால் அணைத்துக் கொண்டிருப்பதைக் கண்டு, பார்வதியின் காதில் விழும்படி சிரித்து பின்வருமாறு கூறாலானார்.
பதம் 6.17.6
சித்ரகேதுர் உவாச
ஏஷ லோக-குரு: ஸாக்ஷாத் தர்மம் வக்தா சரீரிணாம்
ஆஸ்தே முக்ய: ஸபயாம் வை மிதுனீ-பூய பார்யயா
சித்ரகேது: உவாச—சித்ரகேது கூறினார்; ஏஷ:—இவர்; லோக குரு:—வேத உபதேசங்களைப் பின்பற்றும் மக்களின் ஆன்மீக குருவான; ஸாக்ஷாத்—நேரிடையான; தர்மம்—தர்மத்தை; வக்தா—சொல்லுபவர்; சரீரிணாம்—ஐட உடல்களை ஏற்றுள்ள எல்லா ஜீவராசிகளுக்கும்; ஆஸ்தே—அமர்ந்திருக்கையிலும்; முக்ய—தலைவராக; ஸபாயாம்—சபையில்; வை—உண்மையில்; மிதுணி-பூய—அணைத்துக் கொண்டிருக்கிறார்; பார்யயா—தன் மனைவியை.
சித்ரகேது கூறினார்: பொது ஜனங்களின் ஆன்மீக குருவான சிவபெருமான், பெளதிக உடல்களை ஏற்றுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் சிறந்தவரும், அவர்களுக்கு தர்மத்தை உபதேசிப்பவருமாவார். இருந்தும் சிறந்த முனிவர்களின் ஒரு சபையில் தலைவராக அமர்ந்திருக்கும் அவர் சபையோரின் மத்தியில் தன் மனைவி பார்வதியை அணைத்துக் கொண்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது.
பதம் 6.17.7
ஜடா-தரஸ் தீவ்ர-தபா ப்ரஹ்மவாதி-ஸபா-பதி:
அங்கீக்ருத்ய ஸ்த்ரியம் சாஸ்தே கத-ஹ்ரீ: ப்ராக்ருதோ யதா
ஜடா-தர:—ஜடாமுடி தரிப்பராயும்; தீவ்ர-தபா:—கடுந்தவ விரதங்களை அனுஷ்டித்து மேன்மை அடைந்தவராயும்; ப்ரஹ்மவாதி—வேதக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும்; ஸபா-பதி—ஒரு சபையோரின் தலைவரும்; அங்கீக்ருத்ய—அணைத்தபடி; ஸ்த்ரியம்—ஒரு பெண்ணை; ச—மேலும்; ஆஸ்தே—அமர்ந்திருக்கிறார்; கத-ஹ்ரீ:—வெட்கமில்லாமல்; ப்ராக்ருத:—ஜட இயற்கையால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன்; யதா—போல்.
தலையில் ஜடாமுடி தரிப்பவரான சிவபெருமான் கடும் தவ, விரதங்களை அனுஷ்டித்தவர் என்பதில் ஐயமில்லை. உண்மையில் அவர் வேதக் கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றும் ஒரு சபையோருக்குத் தலைவருமாவார். அப்படியிருந்தும், முனிவர்களுக்கு மத்தியில் அவர் தன் மனைவியை மடியில் வைத்துக்கொண்டு, வெட்கமில்லாத ஒரு சாதாரண மனிதனைப் போல் அமர்ந்திருக்கிறார்.
பதம் 6.17.8
ப்ராயச: ப்ராக்ருதாஸ் சாபி ஸ்த்ரியம் ரஹஸி பிப்ரதி
அயம் மஹா-வ்ரத-தரோ பிபர்த்தி ஸதஸி ஸ்த்ரியம்
ப்ராயச:—பொதுவாக; ப்ராக்ருதா:—பந்தப்பட்ட ஆத்மாக்கள்; ச—கூட; அபி—இருந்தபோதிலும்; ஸ்த்ரியம்—ஒரு பெண்ணை; ரஹஸி—தனிமையான ஓரிடத்தில்தான்; பிப்ரதி—அணைத்துக் கொள்கிறார்கள்; அயம்—இவர் (சிவபெருமான்); மஹா-வ்ரத-தர:—சிறந்த தவ, விரதங்களுக்குத் தலைவரான; பிபர்த்தி—அனுபவிக்கிறார்; ஸதஸி—சிறந்த முனிவர்களின் ஒரு சபையில்; ஸ்த்ரியம்—தன் மனைவியை.
சாதாரண பந்தப்பட்ட ஆத்மாக்கள் பொதுவாக தங்களது மனைவிகளைத் தனிமையான இடங்களில் அணைத்து இன்புறுகின்றனர். ஆனால் சிவபெருமான் தவங்களுக்குச் சிறந்த தலைவராக இருந்தும், முனிவர்களுடைய ஒரு சபையின் மத்தியில் பகிரங்கமாக தன் மனைவியை அணைத்துக் கொள்வது ஆச்சரியமாக உள்ளது.
பதம் 6.17.9
ஸ்ரீ-சுக உவாச
பகவான் அபி தச் ச்ருத்வா ப்ரஹஸ்யாகாத-தீர் ந்ருப
தூஷ்ணீம் பபூவ ஸதஸி ஸப்யாஸ் ச தத்-அனுவ்ரதா:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பகவான்—சிவபெருமான்; அபி—கூட; தத்—அதை; ஸ்ருத்வா—கேட்டு; ப்ரஹஸ்ய—சிரித்துவிட்டு; அகாத—தீ:—ஆழங்காண முடியாத அறிவுடைய; ந்ருப—அரசே; தூஷ்ணீம்—மௌனமாக; பபூவ—இருந்தார்; ஸதஸி—சபையில்; ஸப்யா:—இருந்த சபையோரும்; ச—மேலும்; தத்-அனுவ்ரதா:—சிவபெருமானைப் பின்பற்றினர் (மெளனமாக இருந்து விட்டனர்).
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அரசே, சித்ரகேதுவின் வார்த்தையைக் கேட்டு, மிகவும் சக்திவாய்ந்தவரும், ஆழங்காண முடியாத அறிவுடையவருமான சிவபெருமான் வெறும் புன்னகையுடன் மௌனமாக இருந்தார். சபையோரும் அவரைப் பின்பற்றி மெளனமாக இருந்துவிட்டனர்.
பதம் 6.17.10
இதி அதத்-வீர்ய-விதுஷி ப்ருவாணே பஹு-அசோபனம்
ருஷாஹ தேவீ த்ருஷ்டாய நிர்ஜிதாத்மாபிமானினே
இதி—இவ்வாறு; அ-தத்-வீர்ய-விதுஷி—சிவபெருமானுடைய பெருமையை அறியாத சித்ரகேது; ப்ருவாணே—பேசியபொழுது; பஹு-அசோபனம்—சபையின் நாகரீகத்திற்கு ஏற்றதாக இல்லாததை (மேன்மைக்குரிய சிவபெருமானை குறைகூரியது); ருஷா—கோபத்துடன்; ஆஹ—கூறினாள்; தேவீ—தேவி பார்வதி; த்ருஷ்டாய—கொஞ்சமும் வெட்கமில்லாத சித்ரகேதுவிடம்; நிர்ஜித-ஆத்ம—தனது புலன்களைக் கட்டுப்படுத்தியவராக; அபிமானினே—தன்னை எண்ணியிருந்த.
சிவபெருமான் மற்றும் பார்வதியின் சக்தியை அறியாத சித்ரகேது அவர்களைக் கடுமையாக விமர்சித்தார். அவரது கூற்றுகள் சிறிதும் திருப்தி அளிப்பவையாக இல்லை. எனவே கடுங்கோபங் கொண்ட பார்வதிதேவி, புலனடக்கத்தில் தான் சிவபெருமானைவிடச் சிறந்தவர் என்று எண்ணியிருந்த சித்ரகேதுவிடம் பின்வருமாறு கூறினாள்.
பதம் 6.17.11
ஸ்ரீ-பார்வதி உவாச
அயம் கிம் அதுனா லோகே சாஸ்தா தண்ட-தர: ப்ரபு:
அஸ்மத்-விதானாம் துஷ்டானாம் நிர்லஜ்ஜானாம் ச விப்ரக்ருத்
ஸ்ரீ-பார்வதீ உவாச—பார்வதி தேவி கூறினாள்; அயம்—இது; கிம்—ஒருவேளை; அதுனா—இப்பொழுது; லோகே—இவ்வுலகில்; சாஸ்தா—பரம ஆளுனரும்; தண்ட-தர:—தண்டனையளிக்கும் அதிகாரக் கோலை வைத்திருப்பவருமான; ப்ரபு:—தலைவர்; அஸ்மத்- விதானாம்—நம்மைப் போன்றவர்களுக்கு; துஷ்டானாம்—துஷ்டர்களும்; நிர்லஜ்ஜானாம்—வெட்கமற்றவர்களுமான; ச—மேலும்; விப்ரக்ருத்—கட்டுப்படுத்துபவரும்.
தேவி பார்வதி கூறினாள்: அந்தோ, நம்மைப் போன்ற துஷ்டர்களுக்கும், வெட்கமற்றவர்களுக்கும் பரம ஆளுனரும், தண்டனையளிப்பவனும், கட்டுப்படுத்துபவனுமான பிரபு இப்பொழுது இந்த புதுப் பதவியாளன் தானோ!
பதம் 6.17.12
ந வேத தர்மம் கில பத்மயோனிர்
ந ப்ரஹ்ம-புத்ரா ப்ருகு-நாரதாத்யா:
ந வை குமார: கபிலோ மனுஸ் ச
யே நோ நிஷேதந்தி அதி-வர்தினம் ஹரம்
ந—இல்லை; வேத—அறிந்தனர்; தர்மம்—தர்மத்தை; கில—போலும்; பதம்-யோனி:—பிரம்ம தேவரா; ந—அல்லது; ப்ரஹ்ம-புத்ரா:—பிரம்மதேவரின் புத்திரர்களான; ப்ருகு—பிருகு; நாரத—நாரதர்; ஆத்யா:—முதலானவர்கள்; ந—அல்லது; வை—அல்லவா; குமார:—நான்கு குமாரர்கள் (சனகர், சனத் குமாரர், சனந்தனர் மற்றும் சனாதனர்); கபில:—பகவான் கபிலர்; மனு:—மனு; ச—மற்றும்; யே—யார்; நோ—இல்லை; நிஷேதந்தி—நிறுத்தும்படி கட்டளையிட்டனர்; அதி-வர்தினாம்—சட்டங்களுக்கும் உத்தரவுகளுக்கும் அப்பாற்பட்டவரான; ஹரம்—சிவபெருமானை.
அந்தோ, சிவபெருமான் முறைகேடாக நடப்பதிலிருந்து அவரைத் தடுக்க முயலாத தாமரையிலிருந்து பிறந்த பிரம்மதேவரும், பிருகு மற்றும் நாரதர் போன்ற சிறந்த முனிவர்களும், சனத் குமாரர் முதலான நான்கு குமாரர்களாலும், கபிலரும், மனுவும் தர்மத்தை அறியவில்லை போலும்!
பதம் 6.17.13
ஏஷாம் அனுத்யேய-பதாப்ஜ-யுக்மம்
ஜகத்-குரும் மங்கல-மங்கலம் ஸ்வயம்
ய: க்ஷத்ர-பந்து: பரிபூய ஸூரீன்
ப்ரசாஸ்தி த்ருஷ்டஸ் தத் அயம் ஹி தண்ட்ய:
ஏஷாம்—(சிறந்த புருஷர்களான) இவர்களின்; அனுத்யேய—இடையறாத தியானத்திற்குரிய; பத-அப்ஜ-யுக்மம்—யாருடைய இரு தாமரைப் பாதங்கள்; ஜகத்-குரும்—ஜகத் குருவை; மங்கல-மங்கலம்—மிக உயர்ந்த சமயக் கோட்பாட்டின் சொரூபமான; ஸ்வயம்—தானே; ய:—எவன்; க்ஷத்ர-பந்து:—க்ஷத்திரியர்களுள் கடைப்பட்டவன்; பரிபூய—அடக்கமில்லாமல்; ஸூரீன்—தேவர்களையும் (பிரம்மா போன்றவர்களையும், மற்றவர்களையும்); ப்ரசாஸ்தி—தண்டிக்கிறான்; த்ருஷ்ட:—விவேகமற்ற; தத்—ஆகவே; அயம்—இவன்; ஹி—நிச்சயமாக; தண்ட்ய:—தண்டிக்கப்பட்ட வேண்டியவன்.
இந்த சித்ரகேது க்ஷத்தியர்களிலேயே கடைப்பட்டவனாவான். ஏனெனில், சிவபெருமானை அவமதித்ததன் மூலமாக, அவரை எப்பொழுதும் தியானிக்கும் பிரம்மாவையும், மற்ற தேவர்களையும் அடக்கமில்லாமல் அவமதித்துவிட்டான். சிவபெருமான் தர்ம சொரூபியும், முழு உலகிற்கும் ஆன்மீக குருவுமாவார். எனவே சித்ரகேது தண்டனைக்குரியவனாவான்.
பதம் 6.17.14
நாயம் அர்ஹதி வைகுண்ட-பாத-மூலோபஸர்பணம்
ஸம்பாவித-மதி: ஸ்தப்த: ஸாதுபி: பர்யுபாஸிதம்
ந—இல்லை; அயம்—இவன்; அர்ஹதி—தகுதியுடையவன்; வைகுண்ட-பாத -மூல-உபஸர்பணம்—பகவான் விஷ்ணுவினுடைய தாமரைப் பாதங்களின் புகலிடத்தை அணுகுவதற்கு; ஸம்பாவித-மதி:—தன்னை மிகவும் முக்கியமானவனென்று கருதும்; ஸ்தப்த:—அடக்கமற்ற; ஸாதுபி:—சிறந்த சாதுக்களால்; பர்யுபாஸிதம்—பூஜிக்கப்படும்.
இவன் தன்னுடைய சாதனைகளால் கர்வமடைந்து, “நான் தான் சிறந்தவன்” என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். இவன் தன்னை மிகவும் முக்கியமானவனென்று எண்ணிக்கொண்டு, அடக்கம் இல்லாதவனாக இருப்பதால், புண்ணிய புருஷர்கள் சிறந்த சாதுக்களால் பூஜிக்கப்படும் பகவான் விஷ்ணுவின் தாமரைப் பாதங்களின் புகலிடத்தை அணுகுவதற்குத் தகுதியுடையவனல்ல.
பதம் 6.17.15
அத: பாபீயஸீம் யோனிம் ஆஸுரீம் யாஹி துர்மதே
யதேஹ பூயோ மஹதாம் ந கர்த்தா புத்ர கில்பிஷம்
அத:—ஆகவே; பாபீயஸீம்—பாவம் மிகுந்த; யோனிம்—உயிரனங்களுக்கு; ஆஸுரீம்—அசுர; யாஹி—அடைவாயாக; துர்மதே—மதிகெட்டவனே; யதா—இதனால்; இஹ—இவ்வுலகில்; பூய:—மீண்டும்; மஹதாம்—சிறந்த மகான்களுக்கு; ந—இல்லை; கர்த்தா—செய்வாய்; புத்ர—மகனே; கில்பிஷம்—எந்த குற்றமும்.
ஆகவே மதிகெட்ட மகனே, இப்பொழுது பாவம் மிகுந்த, இழிவான அசுரர்களின் குடும்பத்தில் பிறப்பாயாக. இதனால், இவ்வுலகிலுள்ள சிறந்த சாதுக்களிடம் இத்தகைய குற்றத்தை மீண்டும் நீ செய்யாதிருப்பாய்.
பதம் 6.17.16
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் சப்தஸ் சித்ரகேதுர் விமானாத் அவருஹ்ய ஸ:
ப்ரஸாதயாம் ஆஸ ஸதீம் மூர்த்னா நம்ரேண பாரத
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; சப்த:—சபிக்கப்பட்டு; சித்ரகேது:—சித்ரகேது; விமானாத்—தன் விமானத்திலிருந்து; அவருஹ்ய—இறங்கி; ஸ:—அவர்; ப்ரஸாதயாம் ஆஸ—முழுமையாக திருப்திப்படுத்தினார்; ஸதீம்—பார்வதியை; மூர்த்னா—தலையால்; நம்ரேண—வணங்கிய; பாரத—பரீட்சித்து மகாராஜனே.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: பரீட்சித்து மகாராஜனே, சித்ரகேது பார்வதியால் சபிக்கப்பட்ட பொழுது, அவர் தனது விமானத்திலிருந்து இறங்கி, மிகவும் பணிவுடன் சிரம் தாழ்த்தி வணங்கி, அவளை முழுமையாக திருப்திப்படுத்தினார்.
பதம் 6.17.17
சித்ரகேதுர் உவாச
ப்ரதிக்ருஹ்ணாமி தே சாபம் ஆத்மனோ ‘ஞ்ஜலினாம்பிகே
தேவைர் மர்த்யாய யத் ப்ரோக்தம் பூர்வ-திஷ்டம் ஹி தஸ்ய தத்
சித்ரகேது: உவாச—சித்ரகேது கூறினார்; ப்ரதிக்ருஹ்ணாமி—நான் ஏற்றுக் கொள்கிறேன்; தே—உங்களுடைய; சாபம்—சாபத்தை; ஆத்மன:—என் சொந்த; அஞ்ஜலினா—கூப்பிய கரங்களுடன்; அம்பிகே—தாயே; தேவை:—தேவர்களால்; மர்த்யாய—மனிதனுக்கு; யத்—எது; ப்ரோக்தம்—விதிக்கப்பட்டதோ; பூர்வ-திஷ்டம்—ஒருவனது முன் வினைப்பயனாக ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது; ஹி—அல்லவா; தஸ்ய—அவனுக்கு; தத்—அது.
சித்ரகேது கூறினார்: தாயே, இரு கரங்களையும் கூப்பி உங்களது சாபத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த சாபத்தை நான் பொருட்படுத்தவில்லை. ஏனெனில் இன்பமும், துன்பமும் ஒருவனது முன் வினைப்பயனாக தேவர்களால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது அல்லவா?
பதம் 6.17.18
ஸம்ஸார-சக்ர ஏதஸ்மிஞ் ஜந்துர் அஞ்ஞான-மோஹித:
ப்ராம்யன் ஸுகம் ச துஹ்கம் ச புங்க்தே ஸர்வத்ர ஸர்வதா
ஸம்ஸார-சக்ரே—பெளதிக வாழ்வின் சக்கரத்தில்; ஏதஸ்மின்—இந்த; ஜந்து:—ஜீவராசி; அஞ்ஞான-மோஹித:—அறியாமையால் குழப்பமடைந்து; ப்ராம்யன்—சஞ்சரித்து; ஸுகம் ச—இன்பத்தையும்; துஹ்கம் ச—துன்பத்தையும்; புங்க்தே—அனுபவிக்கிறான்; ஸர்வத்ர—எங்கும்; ஸர்வதா—எப்பொழுதும்.
அறியாமையினால் மயங்கி, ஜீவராசி, எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும், தனது கர்மங்களால் விளையும் இன்ப துன்பங்களை அனுபவித்தபடி, ஜட உலகெனும் இக்காட்டில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறான். (ஆகவே தாயே, இச்சம்பவத்தைக் குறித்து நீங்களோ, நானோ குற்றங்சாட்டப்பட முடியாது).
பதம் 6.17.19
நைவாத்மா ந பரஸ் சாபி கர்த்தா ஸ்யாத் ஸுக-துஹ்கயோ:
கர்த்தாரம் மன்யதே ‘த்ராக்ஞ ஆத்மானம் பரம் ஏவ ச
ந—இல்லை; ஏவ—நிச்சயமாக; ஆத்மா—ஜீவாத்மாவோ; ந—அல்லது; பர:—மற்றொருவரோ (நண்பன் அல்லது பகைவன்); ச—கூட; அபி—உண்மையில்; கர்த்தா—செய்பவன்; ஸ்யாத்—இருக்க முடியும்; ஸுக-துஹ்கயோ:—இன்ப துன்பங்களின்; கர்த்தாரம்—செய்பவன்; மன்யதே—என்று கருதுகிறான்; அத்ர—இது தொடர்பாக; அஜ்ஞ:-நிஜ—உண்மையை அறியாதவன்; ஆத்மானம்—தன்னையும்; பரம்—மற்றொருவனையும்; ஏவ—நிச்சயமாக; ச—கூட.
இந்த ஜட உலகில், பெளதிக இன்ப துன்பங்களுக்கு ஜீவராசியோ அல்லது மற்றவர்களோ (நண்பர்கள் மற்றும் பகைவர்கள்) காரணமல்ல. ஆனால் முழு அஞ்ஞானத்தினால் தானும், மற்றவர்களுமே காரணம் என்று ஜீவராசி எண்ணுகிறான்.
பதம் 6.17.20
குண-ப்ரவாஹ ஏதஸ்மின் க: சாப: கோ நு அனுக்ரஹ
க: ஸ்வர்கோ நரக: கோ வா கிம் ஸுகம் துஹ்கம் ஏவ வா
குண-ப்ரவாஹே—ஜட இயற்கைக் குணங்களின் பிரவாகத்தில்; ஏதஸ்மின்—இந்த; க:—எது; சாப:—சாபம்; க:—எது; நு—உண்மையில்; அனுக்ரஹ:—அனுக்கிரகம்; க:—எது; ஸ்வர்க:—சுவர்க்கம்; நரக:—நரகம்; க:—எது; வா—அல்லது; கிம்—எது; ஸுகம்—இன்பம்; துஹ்கம்—துன்பம்; ஏவ—உண்மையில்; வா—அல்லது.
இடையறாது ஒடிக்கொண்டிருக்கும் நதியின் அலைகளுக்கு ஒப்பான இந்த ஜட உலகில், உண்மையில் எது சாபம், எது அனுக்கிரகம்? எது சுவர்க்கம், எது நரகம்? எது இன்பம், எதுதான் துன்பம்? அலைகள் இடையறாது ஓடிக்கொண்டிருப்பதால், இவற்றில் எதற்கும் நிலையான விளைவு கிடையாது.
பதம் 6.17.21
ஏக: ஸ்ருஜதி பூதானி பகவான் ஆத்ம-மாயயா
ஏஷாம் பந்தம் ச மோக்ஷம் ஸுகம் துஹ்கம் ச நிஷ்கல:
ஏக:—ஒருவரே; ஸ்ருஜதி—சிருஷ்டிக்கிறார்; பூதானி—வெவ்வேறு உயிரினங்களை; பகவான்—பரமபுருஷர்; ஆத்ம-மாயயா—அவரது சுயசக்திகளினால்; ஏஷாம்—எல்லா பந்தப்பட்ட ஆத்மாக்களின்; பந்தம்—பந்தப்பட்ட வாழ்வு; ச—மேலும்; மோக்ஷம்—முக்திபெற்ற வாழ்வு; ச—மேலும்; ஸுகம்—இன்பம்; துஹ்கம்—துன்பம்; ச—மற்றும்; நிஷ்கல:—பௌதிக குணங்களால் பாதிக்கப்படாமல்.
பரமபுருஷர் ஒருவரே, ஜட உலகின் நிலைகளால் பாதிக்கபடாதவராக அவர் தமது சுய சக்தியினால் எல்லா பந்தப்பட்ட ஆத்மாக்களையும் சிருஷ்டிக்கிறார். பௌதிக சக்தியினால் களங்கமடைந்துள்ளதால் ஜீவராசி அறியாமையில் புகுத்தப்பட்டு, வெவ்வேறு பந்தப்பட்ட நிலைகளுள் சிக்கிக் கொள்கிறான். சிலசமயங்களில் அறிவினால் ஜீவராசிக்கு முக்தி அளிக்கப்படுகிறது. சத்வம் மற்றும் ரஜோ குண நிலைகளில் அவன் இன்ப துன்பங்களுக்கு ஆளாகிறான்.
பதம் 6.17.22
ந தஸ்ய கஸ்சித் தயித: ப்ரதீபோ
ந ஞாதி-பந்துர் ந பரோ ந ச ஸ்வ:
ஸமஸ்ய ஸர்வத்ர நிரஞ்ஜனஸ்ய
ஸுகே ந ராக: குத ஏவ ரோஷ:
ந—இல்லை; தஸ்ய—அவருடைய (பகவானுடைய); கஸ்சித்—எவரும்; தயித:—பிரியமானவரோ; ப்ரதீப:—பிரியமில்லாதவரோ; ந—அல்லது; ஞாதி—உறவினரோ; பந்து:—நண்பரோ; ந—அல்லது; பர:-அந்நியரோ; ந—இல்லை; ச—கூட; ஸ்வ:—தன்னுடைய; ஸமஸ்ய—சமமானவர்; ஸ்ர்வத்ர—எங்கும்; நிரஞ்ஜனஸ்ய—ஜட இயற்கையால் பாதிக்கப்படாத; ஸுகே—மகிழ்ச்சியில்; ந—இல்லை; ராக:—பற்று; குத:—எங்கிருந்து; ஏவ—நிச்சயமாக; ரோஷ:—கோபம்.
பரமபுருஷர் எல்லா ஜீவராசிகளிடமும் சமமாக நடந்து கொள்கிறார். ஆகவே யாருமே அவருக்கு மிகப்பிரியமானவரும் இல்லை, மிகப்பெரிய விரோதியும் இல்லை யாருமே அவரது நண்பருமில்லை, அவரது உறவினருமில்லை. அவருக்கு பௌதிக உலகிடம் பற்றில்லை என்பதால், பெயரளவேயான இன்பத்தில் விருப்போ அல்லது பெயரளவேயான துன்பத்தில் வெறுப்போ கிடையாது. இன்பம், துன்பம் என்ற இரு சொற்களும் ஒன்றுக்கொன்று சம்பந்தமுள்ளவை. பகவான் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருப்பதால், அவருக்குத் துன்பம் என்ற பேச்சுக்கே இடமில்லை.
பதம் 6.17.23
ததாபி தச்-சக்தி-விஸர்க ஏஷாம்
ஸுகாய துஹ்காய ஹிதாஹிதாய
பந்தாய மோக்ஷாய ச ம்ருத்யு-ஜன்மனோ:
சரீரிணாம் ஸ்ம்ஸ்ருதயே ‘வகல்பதே
ததாபி—ஆயினும்; தத்-சக்தி—பகவானுடைய சக்தியின்; விஸர்க:—படைப்பு; ஏஷாம்—இவற்றின் (பந்தப்பட்ட ஆத்மாக்களின்); ஸுகாய—இன்பத்திற்கும்; துஹ்காய—துன்பத்திற்கும்; ஹித-அஹிதாய—இலாப நஷ்டங்களுக்கும்; பந்தாய—பந்தத்திற்கும்; மோக்ஷாய—மோட்சத்திற்கும்; ச—கூட; ம்ருத்யு—இறப்பிற்கும்; ஜன்மனோ:—பிறப்பிற்கும்; சரீரிணாம்—பெளதிக உடல்களை ஏற்றுக் கொள்ளும் அனைவருடைய; ஸம்ஸ்ருதயே—தொடர்ச்சிக்காக; அவகல்பதே—செயற்படுகிறது.
பரமபுருஷர் கர்மத்திற்கேற்ப ஏற்படும் நம்முடைய இன்ப துன்பங்களில் பற்றற்றவர் என்றாலும், எவருமே அவருக்குப் பகைவரோ அல்லது வேண்டியவரோ இல்லை. இருப்பினும், அவர் தமது பெளதிக சக்தியின் மூலமாகப் பாவ, புண்ணியச் செயல்களைப் படைக்கிறார். இவ்வாறாக பௌதிக வாழ்வு முறையின் தொடர்ச்சிக்காக அவர் இன்ப துன்பங்களையும், நன்மை தீமைகளையும், பந்த மோட்சத்தையும், பிறப்பு இறப்புகளையும் சிருஷ்டிக்கிறார்.
பதம் 6.17.24
அத ப்ரஸாதயே ந த்வாம் சாப-மோக்ஷாய பாமினி
யன் மன்யஸே ஹி அஸாதூக்தம் மம தத் க்ஷம்யதாம் ஸதி
அத—ஆகவே; ப்ரஸாதயே—நான் மகிழ்விக்க முயற்சிக்கிறேன்; ந—இல்லை; த்வாம்—உங்களை; சாப-மோக்ஷாய—உங்களுடைய சாபத்தலிருந்து விடுபடுவதற்காக; பாமினி—கடுங்கோபம் கொண்டுள்ள தாயே; யத்—எதை; மன்யஸே—நீங்கள் கருதுகிறீர்களோ; ஹி—உண்மையில்; அஸாது-உக்தம்—தகாத பேச்சென்று; மம—என்னுடைய; தத்—அது; க்ஷம்யதாம்—மன்னிக்கப்படட்டும்; ஸதி—பதிபக்தியில் சிறந்தவளே.
தாயே, நீங்கள் இப்பொழுது தேவையில்லாமல் கோபப்படுகிறீர்கள். என்னுடைய இன்ப துன்பங்களெல்லாம் எனது பூர்வ செயல்களால் விதிக்கப்பட்டவை என்பதால், உங்களுடைய சாபத்திலிருந்து விடுபடுவதற்காக நான் உங்களை மகிழ்விக்க முயல்வதாக எண்ண வேண்டாம். நான் கூறியது தவறல்ல என்றாலும், எது தவறென்று உங்களால் கருதப்படுகிறதோ அது மன்னிக்கப்படட்டும்.
பதம் 6.17.25
ஸ்ரீ-சுக உவாச
இதி ப்ரஸாத்ய கிரிசௌ சித்ரகேதுர் அரிந்தம
ஜகாம ஸ்வ-விமானேன பஸ்யதோ: ஸ்மயதோஸ் தயோ:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ப்ரஸாத்ய—திருப்திப்படுத்திய பின்; கிரிசௌ—சிவபெருமானையும், அவரது மனைவி பார்வதியையும்; சித்ரகேது:—சித்ரகேது; அரிம்-தம—எதிரியை எப்பொழுதும் அடக்கக்கூடிய பரீட்சித்து மகாராஜனே; ஜகாம—சென்றுவிட்டார்; ஸ்வ-விமானேன—தன் விமானத்தினால்; பஸ்யதோ:—பார்த்துக் கொண்டிருக்கும் போதே; ஸ்மயதே:—சிரித்தப்படி; தயோ:—சிவபெருமானும், பார்வதியும்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: எதிரிகளை அடக்கும் பரீட்சித்து மகாராஜனே, சிவபெருமானையும், பார்வதியையும் திருப்திப்படுத்தியபின், அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே சித்ரகேது தனது விமானத்திலேறி அங்கிருந்து சென்றுவிட்டார். சாபத்தைப் பற்றி அறிவிக்கப்பட்ட போதிலும், சித்ரகேது அஞ்சாததைக் கண்ட சிவபெருமானும், பார்வதியும் அவரது நடத்தையினால் முற்றிலும் வியப்படைந்து புன்னகை செய்தனர்.
பதம் 6.17.26
ததஸ் து பகவான் ருத்ரோ ருத்ராணீம் இதம் அப்ரவீத்
தேவர்ஷி-தைத்ய-ஸித்தானாம் பார்ஷதானாம் ச ஸ்ருண்வதாம்
தத:—பின்னர்; து—பிறகு; பகவான்—மிகவும் சக்திவாய்ந்தவரான; ருத்ர:—சிவபெருமான்; ருத்ராணீம்—தமது மனைவியான பார்வதியிடம்; இதம்—இதை; அப்ரவீத்—கூறினார்; தேவர்ஷி—மாமுனிவரான நாரதரும்; தைத்ய—அசுரர்களும்; ஸித்தானாம்—யோக சக்திகளில் நிபுணர்களான சித்தலோகவாசிகளும்; பார்ஷதானாம்—அவரது சொந்த சகாக்களும்; ச—கூட; ஸ்ருண்வதாம்—கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது.
பின்னர், மிகவும் சக்திவாய்ந்தவரான சிவபெருமான், மாமுனிவரான நாரதரும், அசுரர்களும், சித்தலோக வாசிகளும், தமது சொந்த சகாக்களும் கேட்கும்படியாக அவர்கள் முன்னிலையில் பார்வதியிடம் பின்வருமாறு கூறினார்.
பதம் 6.17.27
ஸ்ரீ-ருத்ர: உவாச
த்ருஷ்டவதி அஸி ஸுஸ்ரோணி
ஹரேர் அத்புத-கர்மண:
மாஹாத்ம்யம் ப்ருத்ய-ப்ருத்யானாம்
நிஹ்ஸ்ஃருஹாணாம் மஹாத்மனாம்
ஸ்ரீ-ருத்ர: உவாச—சிவபெருமான் கூறினார்; த்ருஷ்டவதீ அஸி—நீ பார்த்தாயா; ஸுஸ்ரோணி—அழகிய பார்வதியே; ஹரே:—பரம்புருஷருடைய; அத்புத-கர்மண:—அற்புதச் செயல்களையுடையவர்களும்; மாஹாத்ம்யம்—பெருமையை; ப்ருத்ய-ப்ருத்யானாம்—அடியார்க்கு அடியவர்களின்; நிஹ்ஸ்ஃருஹாணாம்—புலன் நுகர்வில் விருப்பமற்றவர்களுமாகிய; மஹாத்மனாம்—மகாத்மாக்களின்.
சிவபெருமான் கூறினார்: அழகிய பார்வதியே, வைஷ்ணவர்களின் பெருமையைப் பார்த்தாயா? பரமபுருஷராகிய ஸ்ரீ ஹரியின் அடியார்களுக்கும் அடியவர்களாகிய அவர்கள் மகாத்மாக்களாவர். அவர்கள் எவ்விதமான பௌதிக சுகத்திலும் விருப்பமற்றவர்களாக உள்ளனர்.
பதம் 6.17.28
நாராயண-பரா: ஸர்வே ந குதஸ்சன பிப்யதி
ஸ்வர்கோபவர்க-நரகேஷு அபி துல்யார்த்த-தர்சின:
நாராயண-பரா:—பரமபுருஷராகிய பகவான் நாராயணரின் தொண்டில் மட்டுமே சிரத்தை கொண்டுள்ள தூய பக்தர்கள்; ஸர்வே—அனைவரும்; ந—இல்லை; குதஸ்சன—எந்த இடத்திலும்; பிப்யதி—பயப்படுவது; ஸ்வர்க—சுவர்க்க லோகங்களிலும்; அபவர்க—முக்தியிலும்; நரகேஷு—நரகத்திலும்; அபி—கூட; துல்ய—சமமான; அர்த்த—மதிப்பையே; தர்சின:—காண்கின்றனர்.
பரமபுருஷராகிய பகவான் நாராயணரின் பக்தித் தொண்டில் மட்டுமே ஈடுபட்டுள்ள பக்தர்கள், வாழ்க்கையின் எந்த சூழ்நிலைக்கும் அஞ்சுவதில்லை. இத்தகைய பக்தர்கள் பகவானின் தொண்டில் மட்டுமே ஆர்வம் கொண்டிருப்பதால், இவர்களுக்குச் சுவர்க்க லோகங்கள், முக்தி, நரக லோகங்கள் ஆகிய அனைத்துமே சமமானவைதான்.
பதம் 6.17.29
தேஹினாம் தேஹ-ஸம்யோகாத் த்வந்வானீஸ்வர-லீலயா
ஸுகம் துஹ்கம் ம்ருதிர் ஜன்ம சாபோ ‘நுக்ரஹ ஏவ ச
தேஹினாம்—பெளதிக உடல்களை ஏற்றுக் கொண்டுள்ளவர்களுக்கு; தேஹ-ஸ்ம்யோகாத்—ஜட உடலுடன் கொண்ட தொடர்பின் காரணத்தால்; த்வந்வானி—இருமைகள்; ஈஸ்வர-லீலயா—பகவானுடைய மேலான விருப்பத்தினால்; ஸுக—இன்பமும்; துஹ்கம்—துன்பமும்; ம்ருதி:—இறப்பும்; ஜன்ம—பிறப்பும்; சாப:—சாபமும்; அனுக்ரஹ:—அனுக்கிரகமும்; ஏவ—நிச்சயமாக; ச—மேலும்.
பரமபுருஷரின் புறச்சக்தியினுடைய செயல்களின் காரணத்தால், ஜட உடல்களுடனான தொடர்பில் ஜீவராசிகள் பந்தப்படுத்தப்படுகின்றன. இருமைகளான இன்ப துன்பம், பிறப்பு இறப்பு, சாபம் அனுக்கிரகம் ஆகியவை, பௌதிக உலகுடன் கொண்ட இத்தொடர்பின் இயற்கையான விளைவுகளாகும்.
பதம் 6.17.30
அவிவேக-க்ருத: பும்ஸோ ஹி அர்த்த-பேத இவாத்மனி
குண-தோஷ-விகலபஸ் ச பித் ஏவ ஸ்ரஜிவத் க்ருத:
அவிவேக-க்ருத:—சமயோசித புத்தியின்றி அறியாமையில் செய்யப்பட்ட; பும்ஸ:—ஜீவராசியின்; ஹி—நிச்சயமாக; அர்த்த-பேத:—மதிப்பின் வித்தியாசம்; இவ—போல; ஆத்மனி—அவனிடத்தில்; குண-தோஷ—குணம், குற்றம் ஆகியவைகளின்; விகல்ப:—கற்பனை; ச—கூட; பித்—வேறுபாடு; ஏவ—நிச்சயமாக; ஸ்ரஜி—ஒரு மாலையில்; வத்—போல; க்ருத—செய்யப்பட்டது.
எப்படி ஒருவன் ஒரு மலர் மாலையைப் பாம்பென்று தவறாக கருதுகிறானோ அல்லது கனவில் இன்ப துன்பங்களை அனுபவிக்கிறானோ, அப்படியே, இந்த ஜட உலகில், சமயோசித புத்தியில்லாத காரணத்தால், இன்பத்திற்கும், துன்பத்திற்கும் இடையில் வேறுபாடு இருப்பதாக எண்ணி, ஒன்றை நல்லதென்றும், மற்றதைக் கெட்டதென்றும் நாம் கருதுகிறோம்.
பதம் 6.17.31
வாஸுதேவே பகவதி பக்திம் உத்வஹதாம் ந்ருணாம்
ஞான-வைராக்ய-வீர்யாணாம் ந ஹி கஸ்சித் வ்யபாஸ்ரய:
வாஸுதேவே—வாசுதேவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடத்தில்; பகவதி—பரமபுருஷருடைய; பக்திம்—பக்தித் தொண்டில் அன்பும், நம்பிக்கையும்; உத்வஹதாம்—வைத்திருக்கும்; ந்ருணாம்—மனிதர்களுக்கு; ஞான-வைராக்ய—உண்மையான அறிவும் துறவும் உள்ள; வீர்யாணாம்—சக்திவாய்ந்த பலம் உடையவர்களுக்கு; ந—இல்லை; ஹி—நிச்சயமாக; கஸ்சித்—எதுவும்; வ்யபாஸ்ரய:—நாடி அடையவேண்டியது.
வாசுதேவராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளவர்கள் இயல்பாகவே பக்குவ ஞானத்தையும் இந்த ஜட உலகில் பற்றின்மையையும் பெற்றுள்ளனர். எனவே இத்தகைய பக்தர்கள் இவ்வுலகின் பெயரளவேயான இன்பத்திலோ அல்லது துன்பத்திலோ ஆர்வம் கொண்டிருப்பதில்லை.
பதம் 6.17.32
நாஹம் விரிஞ்சோ ந குமார-நாரதெள
ந ப்ரஹ்ம-புத்ரா முனய: ஸுரேசா:
விதாம யஸ்யேஹிதம் அம்சகாம்சகா
ந தத்-ஸ்வரூபம் ப்ருதக்-ஈச-மானின:
ந—இல்லை; அஹம்—நானோ (சிவபெருமான்); விரிஞ்ச:—பிரம்ம தேவரோ; ந—அல்லது; குமார—அஸ்வினி குமாரர்களோ; நாரதெள—சிறந்த முனிவரான நாரதரோ; ந—அல்லது; ப்ரஹ்ம-புத்ரா:—பிரம்மாவின் புத்திரர்களோ; முனய:—முனிவர்களோ; ஸுர-ஈசா:—சிறந்த தேவர்களோ; விதாம—அறிந்தோம்; யஸ்ய—அவருடைய; ஈஹிதம்—செயல்முறைகளை; அம்சக-அம்சகா:—அம்சங்களின் அம்சங்களான; ந—இல்லை; தத்—அவருடைய; ஸ்வ-ரூபம்—சுயரூபத்தை; ப்ருதக்—தனித்தனியே; ஈச—ஈசுவரர்கள்; மானின:—என்று தங்களை நினைக்கும்.
நானோ (சிவபெருமான்), பிரம்மாவோ, அஸ்வினி-குமாரர்களோ, நாரதரோ, பிரம்மாவின் மற்ற புத்திரர்களான சிறந்த முனிவர்களோ அல்லது தேவர்களோ கூட பரமபுருஷரின் சுய ரூபத்தையோ அவரது லீலைகளையோ புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் அந்த பரமபுருஷரின் அம்சங்களின் அம்சங்கள் என்ற போதிலும், எங்களைத் தனித்தனியே ஈஸ்வரர்கள் என்றும், சுதந்திரமானவர்கள் என்றும் கருதுகிறோம். இதனால் அவருடைய சுயரூபத்தை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை.
பதம் 6.17.33
ந ஹி அஸ்யாஸ்தி ப்ரிய: கஸ்சின் நாப்ரிய: ஸ்வ: பரோ ‘பி வா
ஆத்மத்வாத் ஸர்வ-பூதானாம் ஸர்வ-பூத-ப்ரியோ ஹரி:
ந—இல்லை; ஹி—உண்மையில்; அஸ்ய—பகவானுடைய; அஸ்தி—இருக்கிறது; ப்ரிய:—மிகப் பிரியமானவரோ; கஸ்சித்—எவரும்; ந—அல்லது; அப்ரிய:—பிரியமில்லாதவரோ; ஸ்வ:—தன்னவரோ; பர:—மற்றவரோ; அபி—கூட; வா—அல்லது; ஆத்மத்வாத்—ஆத்மாவின் ஆத்மா என்பதால்; ஸர்வ-பூதானாம்—எல்லா ஜீவராசிகளுடைய; ஸர்வ-பூத—அனைத்து ஜீவராசிகளுக்கும்; ப்ரிய:—மிகமிகப் பிரியமானவராவார்; ஹரி:—பகவான் ஸ்ரீ ஹரி.
இவருக்குப் பிரியமானவரும் இல்லை, பிரியமில்லாதவரும் இல்லை தன்னுடையவனுமில்லை, அந்நியனுமில்லை. உண்மையில் இவர் அனைத்து ஜீவராசிகளின் ஆத்மாவிற்கும் ஆத்மாவாக இருக்கிறார். இவ்வாறாக அனைத்து ஜீவராசிகளுக்கும் உற்ற நண்பராகிய பகவான் ஸ்ரீ ஹரி அவர்களனைவருக்கும் மிகவும் நெருங்கியவரும், பிரியமானவருமாவார்.
பதங்கள் 6.17.34 – 6.17.35
தஸ்ய சாயம் மஹா-பாகஸ் சித்ரகேது: ப்ரியோ ‘நுக:
ஸர்வத்ர ஸம-த்ருக் சாந்தோ ஹி அஹம் சைவாச்யுத-ப்ரிய:
தஸ்மான் ந விஸ்மய: கார்ய: புருஷேஷு மஹாத்மஸு
மஹாபுருஷ-பக்தேஷு சாந்தேஷு ஸம-தர்சிஷு
தஸ்ய—அவருடைய (பகவானுடைய); ச—மேலும்; அயம்—அந்த; மஹா-பாக:—மகா பாக்கியசாலியுமான; சித்ரகேது:—சித்ரகேது; ப்ரிய:—பிரியமானவர்; அனுக:—மிகவும் அடக்கமுள்ள தொண்டர்; ஸர்வத்ர—எங்கும்; ஸம-த்ருக்—சம திருஷ்டியுடையவரும்; சாந்த:—சாந்தரும்; ஹி—உண்மையில்; அஹம்—நான்; ச—கூட; ஏவ—நிச்சயமாக; அச்யுத-ப்ரிய:—தோல்வியே இல்லாதவரான பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகப் பிரியமானவன்; தஸ்மாத்—ஆகவே; ந—இல்லை; விஸ்மய:—ஆச்சரியம்; கார்ய—செய்யப்பட வேண்டியது; புருஷேஷு—புருஷர்களுக்கிடையில்; மஹா-ஆத்மஸு—மிகச்சிறந்த ஆத்மாக்களான; மஹா-புருஷ-பக்தேஷு—பகவான் விஷ்ணுவின் பக்தர்கள்; சாந்தேஷு—அமைதி நிறைந்த; ஸம-தர்சிஷு—அனைவருக்கும் சமமான.
மிகவும் தயாள குணமுடைய இந்த சித்ரகேது பகவானுக்கு மிகப் பிரியமுள்ள ஒரு பக்தராவார். அவர் எல்லா ஜீவராசிகளையும் சமமாகப் பாவிப்பவரும், விருப்பு வெறுப்பிலிருந்து விடுபட்டவருமாவார். அவ்வாறே நானும் பகவான் நாராயணருக்கு மிகவும் பிரியமானவனாவேன். எனவே, மிகச் சிறந்தவர்களான நாராயண பக்தர்களின் செயல்களைக் கண்டு எவரும் ஆச்சரியப்படக்கூடாது. ஏனெனில் அவர்கள் விருப்பு, வெறுப்புகளிலிருந்து விடுபட்டவர்களாகவும், எப்பொழுதும் சாந்தர்களாகவும், அனைவரையும் சமமாகப் பாவிப்பவர்களாகவும் இருக்கின்றனர்.
பதம் 6.17.36
ஸ்ரீ-சுக உவாச
இதி ஸ்ருத்வா பகவத: சிவஸ்யோமாபிபாஷிதம்
பபூவ சாந்த-தீ ராஜன் தேவி விகத-விஸ்மயா
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; ஸ்ருத்வா—கேட்டு; பகவத:—மிகவும் சக்திவாய்ந்தவரின்; சிவஸ்ய—சிவபெருமானின்; உமா—பார்வதி; அபிபாஷிதம்—உபதேசத்தை; பபூவ—ஆனாள்; சாந்த-தீ:—மிகவும் அமைதியுடையவளாக; ராஜன்—பரீட்சித்து மகாராஜனே; தேவீ—தேவி பார்வதி; விகத-விஸ்மயா—வியப்பு நீங்கி.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, தன் கணவரின் இப்பேச்சைக் கேட்ட தேவி பார்வதி (உமை), சித்ரகேதுவின் செயலில் உண்டான வியப்பு நீங்கி, சாந்த மதியுடையவளானாள்.
பதம் 6.17.37
இதி பாகவதோ தேவ்யா: ப்ரதிசப்தும் அலந்தம:
மூர்த்னா ஸ ஜக்ருஹே சாபம் ஏதாவத் ஸாது-லக்ஷணம்
இதி—இவ்வாறு; பாகவத:—மிகச்சிறந்த பக்தரான; தேவ்யா:—பார்வதியை; ப்ரதிசப்தும்—எதிர்த்து பதில் சாபமிடுவதற்கு; அலந்தம:—எல்லா விதத்திலும் தகுதிபடைத்த; மூர்த்னா—தன் தலையால்; ஸ:—அவர் (சித்ரகேது); ஜக்ருஹே—ஏற்றுக் கொண்டார்; சாபம்—அந்த சாபத்தை; ஏதாவத்—இவ்வளவு; ஸாது-லக்ஷணம்—ஒரு பக்தரின் இலட்சணம்.
மிகச் சிறந்த பக்தரான சித்ரகேது தாய் பார்வதியின் சாபத்தை எதிர்த்து பதில் சாபமிடும் அளவிற்கு மிகவும் தகுதியுடையவராகவும், பெரும் சக்தி படைத்தவராகவும் இருந்தார். ஆனால் அவ்வாறு செய்வதற்குப் பதிலாக, அவர் சிவபெருமானையும், அவரது மனைவியையும் சிரம்தாழ்த்தி வணங்கி, மிகவும் அடக்கத்துடன் அந்த சாபத்தை ஏற்றுக்கொண்டார். இது ஒரு வைஷ்ணவருடைய நடத்தையின் உயர்ந்த தரம் என்று மிகவும் உயர்வாக மதித்துப் போற்றப்படுகிறது.
பதம் 6.17.38
ஜக்ஞே த்வஷ்டுர் தக்ஷிணாக்னௌ தானவீம் யோனிம் ஆஸ்ரித:
வ்ருத்ர இதி அபிவிக்யாதோ ஞான-விஜ்ஞான-ஸம்யுத:
ஜக்ஞே—பிறந்தார்; த்வஷ்டு:—துவஷ்டா என்ற பிராமணருடைய; தக்ஷிண அக்னெள—தக்ஷிணாக்னி என்ற யாகத்தீயில்; தானவீம்—அசுரத் தன்மையுள்ள; யோனிம்—உயிரினத்தை; ஆஸ்ரித:—தஞ்சமடைந்து; வ்ருத்ர:—விருத்ரன்; இதி—என்று; அபிவிக்யாத:—போற்றப்பட்டார்; ஞான-விஜ்ஞான-ஸம்யுத:—உன்னத அறிவையும், நடைமுறை வாழ்வில் அதைச் செயற்படுத்தும் அறிவையும் முழுமையாகப் பெற்று.
தாய் துர்கையால் (சிவபெருமானின் மனைவியான பவானியால்) சபிக்கப்பட்ட அதே சித்ரகேது, ஓர் அசுர இனத்தில் பிறவியை ஏற்றார். உன்னத உறவையும், நடைமுறை வாழ்வில் அதைச் செயற்படுத்தும் அறிவையும் இன்னமும் அவர் முழுமையாகப் பெற்றிருந்த போதிலும், துவஷ்டாவால் செய்யப்பட்ட ஒரு யாகத்தீயில் ஓர் அசுரனாக அவர் தோன்றினார். இவ்வாறாக அவர் விருத்ராசுரன் என்று பிரசித்தி பெற்றார்.
பதம் 6.17.39
ஏதத் தே ஸர்வம் ஆக்யாதம் யன் மாம் த்வம் பரிப்ருச்சஸி வ்ருத்ரஸ்யாஸுர-ஜாதேஸ் ச காரணம் பகவான்-மதே:
ஏதத்—இது; தே—உமக்கு; ஸர்வம்—எல்லாம்; ஆக்யாதம்—விளக்கப்பட்டது; யத்—எது; மாம்—என்னை; த்வம்—நீர்; பரிப்ருச்சஸி—கேட்டது; வ்ருத்ரஸ்ய—விருத்ராசுரனுடைய; அஸுர-ஜாதே:—அசுர குலத்தில் பிறவியெடுத்த; ச—மேலும்; காரணம்—காரணம்; பகவத்-மதே:—கிருஷ்ண உணர்விலுள்ள மேலான புத்திக்கு.
பரீட்சித்து மகாராஜனே, சிறந்த பக்தனான விருத்ராசுரன் எப்படி ஓர் அசுர குடும்பத்தில் பிறவியெடுத்தான் என்று நீர் கேட்டீர். இவ்விதமாக இதைப் பற்றிய அனைத்தும் உமக்கு விவரிக்கப்பட்டது.
பதம் 6.17.40
இதிஹாஸம் இமம் புண்யம் சித்ரகேதோர் மஹாத்மன:
மாஹாத்ம்யம் விஷ்ணு-பக்தானாம் ஸ்ருத்வா பந்தாத் விமுச்யதே
இதிஹாஸம்—வரலாற்றை; இமம்—இந்த; புண்யம்—மிகவும் புண்ணியமான; சித்ரகேதோ:—சித்ரகேதுவின்; மஹா-ஆத்மன:—மிகச்சிறந்த பக்தரான; மாஹாத்ம்யம்—பெருமைகளடங்கிய; விஷ்ணு-பக்தானாம்—விஷ்ணுவின் பக்தர்களிடமிருந்து; ஸ்ருத்வா—கேட்டு; பந்தாத்—பௌதிக பந்தத்திலிருந்து; விமுச்யதே—விடுபடுகிறான்.
சித்ரகேது ஒரு மிகச்சிறந்த பக்தராவார் (மகாத்மா ஆவார்). அவருடைய இந்த வரலாற்றை ஒரு தூய பக்தரிடமிருந்து கேட்பவன் கூட பெளதிக பந்தத்திலிருந்து விடுபடுகிறான்.
பதம் 6.17.41
ய ஏதத் ப்ராதர் உத்தாய ஸ்ரத்தயா வாக்-யத: படேத்
இதிஹாஸம் ஹரிம் ஸ்ம்ருத்வா ஸ யாதி பரமாம் கதிம்
ய:—எவனொருவன்; ஏதத்—இந்த; ப்ராத:—அதிகாலையில்; உத்தாய—எழுந்து; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; வாக்-யத:—மனதையும், வாக்கையும் கட்டுப்படுத்தி; படேத்—படிப்பானோ; இதிஹாஸம்—வரலாற்றை; ஹரிம்—பரமபுருஷரை; ஸ்ம்ரூத்வா—நினைந்து; ஸ:—அவன்; யாதி—செல்கிறான்; பரமாம் கதிம்—பரமபதமாகிய ஆன்மீக உலகிற்கு.
எவனொருவன் அதிகாலையில் எழுந்து, தன் மனதையும் வாக்கையும் கட்டுப்படுத்தியும், பரமபுருஷரை நினைந்தும், சித்ரகேதுவின் இந்த வரலாற்றைப் படிக்கிறானோ, அவன் சிரமமின்றி பரமபதமாகிய ஆன்மீக உலகை அடைவான்.
ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “அன்னை பார்வதி சித்ரகேதுவைச் சபித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினேழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.