அத்தியாயம் – 15
சித்ரகேதுவிற்கு நாரதரும், அங்கிரரும்
உபதேசித்தல்
பதம் 6.15.1
ஸ்ரீ-சுக உவாச
ஊசதுர் ம்ருதகோபாந்தே பதிதம் ம்ருதகோபமம்
சகாபிபூதம் ராஜானம் போதயந்தௌ ஸத்-உக்திபி:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஊசது:—அவர்கள் கூறினர்; ம்ருதக—இறந்த உடலுக்கு; உபாந்தே—அருகில்; பதிதம்—விழுந்து கிடந்த; ம்ருதக-உபமம்—மற்றொரு உயிரற்ற உடல் போலவே; சோக-அபிபூதம்—துக்கத்தினால் மிகவும் வருத்தமடைந்து; ராஜானம்—அரசருக்கு; போதயந்தெள—உபதேசம் செய்து; ஸத்-உக்திபி:—தற்காலிகமானது அல்லாத, உண்மையான உபதேசங்களால்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: துக்கத்தில் ஆழ்ந்துவிட்ட சித்ரகேது மகாராஜன், தன் இறந்த மகனின் உடலுக்கருகில் மற்றொரு இறந்த உடலைப் போல் படுத்துக்கிடந்தார். அப்பொழுது, சிறந்த முனிவர்களான நாரதரும், அங்கிரரும், ஆன்மீக உணர்வைப் பற்றி பின்வருமாறு அவருக்கு உபதேசித்தனர்.
பதம் 6.15.2
கோ ‘யம் ஸ்யாத் தவ ராஜேந்ர பவான் யம் அனுசோசதி
த்வம் சாஸ்ய கதம: ஸ்ருஷ்டௌ புரேதானீம் அத: பரம்
க:—யார்; அயம்—இவன்; ஸ்யாத்—இருக்கிறான்; தவ—உமக்கு; ராஜ-இந்திர—அரசர்களுள் சிறந்தவரே; பவான்—நீங்கள்; யம்—யாரை; அனுசோசதி—குறித்து துன்பப்படுகிறீரோ; த்வம்—நீர்; ச—கூட; அஸ்ய—(இறந்துவிட்ட) இவனுக்கு; கதம:—யார்; ஸ்ருஷ்டௌ—பிறப்பில்; புரா—முன்பு; இதானீம்—இப்பொழுது; அத: பரம்—இனிமேல் எதிர்காலத்தில்.
அரசே, யாரைக்குறித்து நீர் துக்கப்படுகிறீரோ, அந்த இறந்த உடல் உமக்கென்ன உறவு? அந்த இறந்த உடலுக்கு உம்முடன் என்ன உறவு? தந்தையாகவும், மகனாகவும் உறவு கொண்டிருப்பதாக இப்பொழுது நீர் கூறக்கூடும். ஆனால் இந்த உறவு முன்பு இருந்ததென்று நினைக்கிறீரா? உண்மையாகவே இப்பொழுது இருக்கிறதா? எதிர்காலத்தில் இது தொடருமா?
பதம் 6.15.3
யதா ப்ரயாந்தி ஸம்யாந்தி ஸ்ரோதோ-வேகேன பாலுகா: ஸம்யுஞ்யந்தே வியுஜ்யந்தே ததா காலேன தேஹின:
யதா—எவ்வாறு; ப்ரயாந்தி—பிரிகிறார்கள்; ஸம்யாந்தி—இணைகிறார்கள்; ஸ்ரோத:-வேகேன—அலைகளின் வேகத்தால்; பாலுகா:—சிறு மணல் துளிகள்; ஸம்யுஞ்யந்தே—அவை இணைகின்றன; வியுஜ்யந்தே—அவை பிரிகின்றன; ததா—அது போலவே; காலேன—காலத்தால்; தேஹின:—பௌதிக உடல்களை ஏற்றுள்ள ஜீவராசிகள்.
அரசே, சிறு மணல் துளிகள் எவ்வாறு அலைகளின் வேகத்தினால் சில சமயங்களில் இணைந்து, சில சமயங்களில் பிரிகின்றனவோ, அவ்வாறே, ஜட உடல்களை ஏற்றுள்ள ஜீவராசிகள் காலத்தின் வேகத்தினால் சில சமயங்களில் இணைகின்றனர், சில சமயங்களில் பிரிகின்றனர்.
பதம் 6.15.4
யதா தானாஸு வை தானா பவந்தி ந பவந்தி ச
ஏவம் பூதானி பூதேஷு சோதிதானீச-மாயயா
யதா—எவ்வாறு; தானாஸு—நெற்பயிர்களின் மூலம்; வை—உண்மையில்; தானா:—தானியங்கள்; பவந்தி—உற்பத்தி செய்யப்படுகின்றனவோ; ந—இல்லை; பவந்தி—உற்பத்தி செய்கின்றனவோ; ச—கூட; ஏவம்—இவ்வாறு; பூதானி—ஜீவராசிகள்; பூதேஷு—பிற ஜீவராசிகளுள்; சோதிதானி—இயக்கப்படுகின்றன; ஈச-மாயயா—பரமபுருஷரின் சக்தியால்.
விதைகள் பூமியில் விதைக்கப்படும்பொழுது, அவை சில சமயங்களில் செடிகளாக வளர்கின்றன, சில சமயங்களில் அவ்வாறு வளர்வதில்லை. சில சமயங்களில் பூமி வளமுடையதாக இருக்காது. இதனால் விதைக்கப்படும் விதைகள் முளைப்பதில்லை. அதுபோலவே, பரமபுருஷரின் தூண்டுதலால் ஒரு தந்தையால் குழந்தைபெற முடிகிறது. ஆனால் சில சமயங்களில் கருத்தரிப்பதில்லை. எனவே, செயற்கையான உறவின் மூலம் தந்தையாவது குறித்து ஒருவன் வருந்தக்கூடாது. ஏனெனில் முடிவாக அது பரமபுருஷரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
பதம் 6.15.5
வயம் ச த்வம் ச யே சேமே துல்ய-காலஸ் சராசரா:
ஜன்ம-ம்ருத்யோர் யதா பஸ்சாத் ப்ரான் நைவம் அதுனாபி போ:
வயம்—நாம் (சிறந்த முனிவர்கள், மந்திரிகள், அரசரின் பரிவாரங்கள்); ச—மேலும்; த்வம்—நீரும்; ச—கூட; யே—எவர்கள்; ச—கூட; இமே—இந்த; துல்ய-காலா:—ஒரே சமயத்தில் கூடியுள்ள; சர-அசரா:—அசைபவைகளும், அசையாதவைகளும்; ஜன்ம—பிறப்பு; ம்ருத்யோ:—மற்றும் மரணம்; யதா—அவ்வாறே; பஸ்சாத்—பிறகு; ப்ராக்—முன்பு; ந—இல்லை; ஏவம்—இவ்வாறாக; அதுனா—தற்பொழுது; அபி—கூட; போ:—அரசே.
அரசே, நீரும், உமது ஆலோசகர்கள், மனைவிகள், மந்திரிகள் ஆகிய நாங்களும், மேலும் இப்பொழுது இப்பிரபஞ்சம் முழுவதிலுமுள்ள அசைவன, அசையாதன ஆகிய நாமனைவரும் தற்காலிகமான ஒரு சூழ்நிலையில்தான் இருக்கிறோம். நாம் பிறப்பதற்கு முன் இச்சூழ்நிலை இருக்கவில்லை. நம் மரணத்திற்குப் பிறகும் இந்நிலை இருக்காது. எனவே இப்பொழுதுள்ள நம் சூழ்நிலை பொய்யல்ல என்றாலும், நிரந்தரமானதல்ல.
பதம் 6.15.6
பூதைர் பூதானி பூதேச ஸ்ருஜதி அவதி ஹந்தி ச
ஆத்ம-ஸ்ருஷ்டைர் அஸ்வதந்த்ரைர் அனபேக்ஷோ ‘பி பாலவத்
பூதை:—சில ஜீவராசிகளால்; பூதானி—மற்ற ஜீவராசிகள்; பூத-ஈச:—அனைத்திற்கும் எஜமானரான பரமபுருஷர்; ஸ்ருஜதி—படைக்கிறார்; அவதி—காக்கிறார்; ஹந்தி—கொல்கிறார்; ச—மேலும்; ஆத்ம-ஸ்ருஷ்டை:—அவரால் படைக்கப்பட்டவர்கள்; அஸ்வதந்த்ரை:—சுதந்திரமானவர்கள் அல்ல; அனபேக்ஷ:—(படைப்பில்) ஆர்வமில்லாதவர்; அபி—என்றபோதிலும்; பால-வத்—ஒரு சிறுவனைப் போல்.
அனைத்திற்கும் தலைவரும் உரிமையாளருமான பரமபுருஷர், நிச்சயமாக நிலையற்ற இந்த பிரபஞ்ச தோற்றத்தில் ஆர்வமில்லாதவராவார். எனினும், எப்படி கடற்கரையில் தான் உண்டாக்கிய ஒன்றில் ஒரு சிறுவன் ஆர்வம் காட்டுவதில்லையோ, அப்படியே அனைத்தையும் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ள பகவானும் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்கிறார். ஒரு தந்தை மகனைப் பெறுவதில் ஈடுபட்டு படைப்பைச் செய்கிறார். ஓர் அரசாங்கத்தை அல்லது அரசரை பொது ஜனங்களின் நன்மையைக் கவனிப்பதில் ஈடுபடுத்துவதன் மூலம் அவர் காக்கிறார். மேலும் பாம்புகளைப் போன்ற கொல்லும் பிராணிகளின் மூலமாக அவர் அழிக்கிறார். படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றைச் செய்யும் பிரதிநிதிகளுக்குச் சுதந்திரமாகச் செயற்படும் ஆற்றவில்லை. ஆனால் மாயா சக்தியின் வசியத்தினால், ஒருவன் தன்னையே படைத்து, காத்து, அழிப்பவனாக எண்ணுகிறான்.
பதம் 6.15.7
தேஹேன தேஹினோ ராஜன் தேஹாத் தேஹோ ‘பிஜாயதே
பீஜாத் ஏவ யதா பீஜம் தேஹி அர்த்த இவ சாஸ்வத:
தேஹேன—உடலால்; தேஹின:—ஜட உடலை உடைய தந்தையின்; ராஜன்—அரசே; தேஹாத்—(தாயின்) உடலிலிருந்து; தேஹ:—மற்றொரு உடல்; அபிஜாயதே—பிறக்கிறது; பீஜத்—ஒரு விதையிலிருந்து; ஏவ—உண்மையில்; யதா—எப்படி; பீஜம்—மற்றொரு விதை; தேஹீ—ஜட உடலை ஏற்றுள்ள ஒருவன்; அர்த்த:—பெளதிக மூலப் பொருட்கள்; இவ—போல்; சாஸ்வத:—நித்தியமானதாகும்.
அரசே, எப்படி ஒரு விதையிலிருந்து மற்றொரு விதை உற்பத்தி செய்யப்படுகிறதோ, அப்படியே ஒரு உடலிலிருந்து (தந்தையின் உடலிலிருந்து), மற்றொரு உடலின் மூலமாக (தாயின் உடல் மூலமாக), ஒரு மூன்றாவது உடல் (ஒரு மகனின் உடல்) உற்பத்தி செய்யப்படுகிறது. எப்படி ஜட உடலின் மூலப் பொருட்கள் நித்தியமானவையோ, அப்படியே இந்த பெளதிக மூலப்பொருட்களின் மூலமாகத் தோன்றும் ஜீவராசியும் நித்தியமானவனாவான்.
பதம் 6.15.8
தேஹ-தேஹி-விபாகோ ‘யம் அவிவேக-க்ருத: புரா
ஜாதி-வ்யக்தி-விபாகோ ‘யம் யதா வஸ்துனி கல்பித:
தேஹ—இவ்வுடலின்; தேஹி—மற்றும் உடலின் உரிமையாளன்; விபாக:—பிரிவு; அயம்—இது; அவிவேக—அறியாமையிலிருந்து; க்ருத:—செய்யப்பட்டது; புரா—நினைவுக்கெட்டாத காலத்திலிருந்து; ஜாதி—வகுப்பு அல்லது ஜாதியின்; வ்யக்தி—தனியொருவனும்; விபாக:—பிரிவு; அயம்—இது; யதா—அதுபோல்; வஸ்துனி—மூலப்பொருளில்; கல்பித:—கற்பனை செய்யப்படுகின்றன.
தேசீயம் மற்றும் தனித்துவம் போன்ற பொதுக்கருத்தின் பிரிவுகளும், தனிக்கருத்தின் பிரிவுகளும், அறிவு முதிர்ச்சியடையாதவர்களின் கற்பனைகளாகும்.
பதம் 6.15.9
ஸ்ரீ-சுக உவாச
ஏவம் ஆஸ்வாஸிதோ ராஜா சித்ரகேதுர் த்விஜோக்திபி:
விம்ருஜ்ய பாணினா வக்த்ரம் ஆதி-ம்லானம் அபாஷத
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; ஆஸ்வாஸித:—அறிவுறுத்தப்பட்டு அல்லது நம்பிக்கை அளிக்கப்பட்டு; ராஜா—அந்த அரசர்; சித்ரகேது:—சித்ரகேது; த்விஜ-உக்திபி:—(நாரதர் மற்றும் அங்கிரர் ஆகிய) சிறந்த பிராமணர்களின் உபதேசங்களால்; விம்ருஜ்ய—துடைத்து; பாணினா—கையால்; வக்த்ரம்—தன் முகத்தை; ஆதி-ம்லானம்—துக்கத்தினால் வாடிய; அபாஷத—அறிவுடன் பேசினார்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இவ்வாறு நாரதர் மற்றும் அங்கிரரின் உபதேசங்களால் அறிவுறுத்தப்பட்ட சித்ரகேது மகாராஜன் அறிவொளி பெற்றவரானார். பிறகு வாடிய முகத்தைத் தன் கையால் துடைத்துக் கொண்ட அரசர் பின்வருமாறு பேசலானார்.
பதம் 6.15.10
ஸ்ரீ-ராஜோவாச
கௌ யுவாம் ஞான-ஸம்பன்னௌ மஹிஷ்டௌ ச மஹீயஸாம்
அவதூதேன வேஷேண கூடாவ் இஹ ஸமாகதெள
ஸ்ரீ-ராஜா உவாச—சித்ரகேது மகாராஜன் கூறினார்; கௌ—யார்; யுவாம்—நீங்களிருவரும்; ஞான-ஸம்பன்னௌ—அறிவு முதிர்ந்தவர்கள்; மஹிஷ்டௌ—மேலானவர்கள்; ச—கூட; மஹீயஸாம்—மற்ற சிறந்த புருஷர்களுள்; அவதூதேன—முக்தியடைந்த துறவிகளின்; வேஷேண—உடையுடன்; கூடௌ—மாறுவேடத்தில்; இஹ—இங்கு; ஸமாகதெள—வந்திருக்கிறீர்கள்.
சித்ரகேது மகாராஜன் கூறினார்: நீங்களிருவரும் உங்களுடைய சுய ரூபங்களை மறைத்துக் கொள்வதற்காக, முக்திபெற்ற அவதூதர்களைப் போல் ஆடையணிந்து இங்கு வந்திருக்கிறீர்கள். ஆனால் நீங்கள் எல்லோரையும் விட மிகவும் மேலான, விஷயம் தெரிந்த நிலையில் இருப்பதை நான் காண்கிறேன். நீங்கள் அனைத்தையும் உள்ளபடி அறிவீர்கள் ஆகவே நீங்கள் உயர்ந்தவர்களுக்கெல்லாம் உயர்ந்தவர்களாவீர்.
பதம் 6.15.11
சரந்தி ஹி அவனௌ காமம் ப்ராஹ்மணா பகவத்-ப்ரியா:
மாத்ருசாம் க்ராம்ய-புத்தீனாம் போதாயோன்மத்த-லிங்கின:
சரந்தி—சஞ்சரிக்கின்றனர்; ஹி—உண்மையில்; அவனௌ—உலகில்; காமம்—விருப்பம்போல்; ப்ராஹ்மணா:—பிராமணர்கள்; பகவத்-ப்ரியா:—பரமபுருஷருக்கு மிகப் பிரியமான வைஷ்ணவர்களையும் உள்ள; மா-த்ருசாம்—என்னைப் போன்றவர்களின்; க்ராம்ய-புத்தீனாம்—தற்காலிகமான பௌதிக உணர்வினால் பீடிக்கப்பட்டுள்ள; போதாய—ஆத்ம போதத்திற்காக; உன்மத்த-லிங்கின:—பித்தர்களைப் போல் ஆடையணிந்து.
ஸ்ரீ கிருஷ்ணருக்கு மிகப் பிரியமுள்ள தொண்டர்களும், வைஷ்ணவர்களின் நிலையில் உயர்ந்து நிற்பவர்களுமான பிராமணர்கள், சிலசமயங்களில் பித்தர்களைப்போல் உடையணிகின்றனர். எப்பொழுதும் புலன் நுகர்வில் பற்றுக் கொண்டுள்ள எங்களைப் போன்ற பெளதிகவாதிகளுக்கு நன்மை செய்வதற்காகவும், எங்களுடைய அறியாமையைக் களைவதற்காகவுமே இந்த வைஷ்ணவர்கள் பூமியில் மனம் போனபடி சஞ்சரிக்கின்றனர்.
பதங்கள் 6.15.12 – 6.15.15
குமாரோ நாரத ரிபுர் அங்கிரா தேவலோ ‘ஸித:
அபாந்தரதமா வ்யாஸோ மார்க்கண்டேயோ ‘த கௌதம:
வஸிஷ்டோ பகவான் ராம: கபிலோ பாதராயணி:
துர்வாஸா யாக்ஞவல்க்யஸ் ச ஜாதுகர்ணஸ் ததாருணி:
ரோமசஸ் ச்யவனோ தத்த ஆஸுரி: ஸபதஞ்ஜலி:
ரிஷிர் வேத-சிரா தௌம்யோ முனி: பஞ்சசிகஸ் ததா
ஹிரண்யநாப: கௌசல்ய: ஸ்ருததேவ ருதத்வஜ:
ஏதே பரே ச ஸித்தேசாஸ் சரந்தி ஞான-ஹேதவ:
குமார:—சனத் குமாரர்; நாரத:—நாரத முனி; ரிபு:—ரிபு; அங்கிரா:—அங்கிரர்; தேவல:—தேவலர்; அஸித:—அசிதர்; அபாந்தரதமா:—அபாந்தரதமர், வியாசரின் பூர்வீக பெயர்; வ்யாஸ:—வியாசர்; மார்க்கண்டேய:—மார்க்கண்டேயர்; அத—மற்றும்; கௌதம:—கௌதமர்; வஸிஷ்ட:—வசிஷ்டர்; பகவான் ராம:—பகவான் பரசுராமர்; கபில:—கபிலர்; பாதராயணி:—சுகதேவ கோஸ்வாமி; துர்வாஸா:—துர்வாசர்; யக்ஞவல்க்ய:—யக்ஞவல்கியர்; ச—மேலும்; ஜாதுகர்ண:—ஜாதுகர்ணர்; தத—மேலும்; அருணி:—அருணி; ரோமச:—ரோமசர்; ச்யவன:—சியவனர்; தத்த:—தத்தாத்திரேயர்; ஆசுரி:—ஆசுரி; ஸ-பதஞ்ஜலி:—பதஞ்ஜலி ரிஷியுடன்; ரிஷி:—ரிஷி; வேத-சிரா:—வேதங்களுக்குத் தலைவரான; தௌம்ய:—தௌம்யர்; முனி:—முனிவர்; பஞ்சசிக:—பஞ்சசிகர்; ததா—அவ்வாறே; ஹிரண்யநாப:—ஹிரண்யநாபர்; கௌசல்ய:—கெளசல்யர்; ஸ்ருததேவ:—சுருததேவர்; ருதத்வஜ:—ருதத்வஜர்; ஏதே—இவர்கள் எல்லோரும்; பரே—மற்றவர்களும்; ச—மேலும்; ஸித்த-ஈசா:—யோக சித்தர்கள்; சரந்தி—சஞ்சரிக்கின்றனர்; ஞான-ஹேதவ:—உலக முழுவதிலும் பிரச்சாரம் செய்யும் மிகவும் கற்றறிந்தவர்கள்.
சிறந்த ஆத்மாக்களே, அறியாமையால் மூடப்பட்டுள்ள மக்களுக்கு ஞானத்தை போதிப்பதற்காக உலக முழுவதிலும் சஞ்சரிக்கும் சிறந்த பூரணத்துவம் அடைந்தவர்களுள், சனத்குமாரர், நாரதர், ரிபு, அங்கிரர், தேவலர், அசிதர், அபாந்தரதமர் (வியாசதேவர்); மார்க்கண்டேயர்; கௌதமர், வசிஷ்டர், பகவான் பரசுராமர், கபிலர், சுகதேவர், துர்வாசர், யாக்ஞவல்கியர், ஜாதுகர்ணர், அருணி, ரோமசர், சியவனர், தத்தாத்திரேயர், ஆசுரி, பதஞ்ஜலி, வேதங்களுக்குத் தலை போன்றவரான மாமுனிவர் தௌம்யர், பஞ்சசிகர், ஹிரண்யநாபர், கௌசல்யர், சுருததேவர் மற்றும் ரிதத்வஜர் ஆகியோர் அடங்குவர் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன். நிச்சயமாக நீங்களும் இவர்களுக்கிடையில் இருப்பீர்கள் என்பதில் ஐயமில்லை.
பதம் 6.15.16
தஸ்மாத் யுவாம் க்ராம்ய-பசோர் மம மூட-திய: ப்ரபூ
அந்தே தமஸி மக்னஸ்ய ஞான-தீப உதீர்யதாம்
தஸ்மாத்—ஆகவே; யுவாம்—நீங்களிருவரும்; க்ராம்ய-பசோ:—பன்றி அல்லது நாய் போன்ற ஒரு மிருகத்தின்; மம—எனக்கு; மூட-திய:—(ஆத்ம ஞானம் இல்லாததால்) மிகவும் அறிவிலியான; ப்ரபூ—பிரபுக்களே; அந்தே—குருட்டுத்தனத்தில்; தமஸி—இருளடர்ந்த; மக்னஸ்ய—ஆழ்ந்திருப்பவனின்; ஞான-தீப:—ஞான தீபம்; உதீர்யதாம்—ஏற்றப்படட்டும்.
நீங்கள் சிறந்த புருஷர்கள் என்பதால், உண்மை ஞானத்தை உங்களால் எனக்கு அருள முடியும். நான் அறியாமை இருளில் ஆழ்ந்திருப்பதால், பன்றி அல்லது நாயைப் போன்ற ஓர் அறிவற்ற கிராமத்தான் ஆவேன். ஆகையால், ஞான தீபமேற்றி என்னைக் காத்தருளுங்கள்.
பதம் 6.15.17
ஸ்ரீ-அங்கிரா உவாச
அஹம் தே புத்ர-காமஸ்ய புத்ரதோ ‘ஸ்மி அங்கிரா ந்ருப
ஏஷ ப்ரஹ்ம-ஸுத: ஸாக்ஷான் நாரதோ பகவான் ரிஷி:
ஸ்ரீ-அங்கிர: உவாச—மாமுனிவர் அங்கிரர் கூறினார்; அஹம்—நான்; தே—உமக்கு; புத்ர-காமஸ்ய—ஒரு மகனைப் பெற விரும்பிய; புத்ர-த:—மகனைக் கொடுத்தவன்; அஸ்மி—இருக்கிறேன்; அங்கிரா:—அங்கிர ரிஷி; ந்ருப—அரசே; ஏஷ:—இவர்; ப்ரஹ்ம-ஸுத:—பிரம்ம தேவரின் புத்திரரான; ஸாக்ஷாத்—நேராக; நாரத:—நாரத முனிவர்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; ரிஷி:—முனிவர்.
அங்கிரர் கூறினார்: அரசே, நீர் ஒரு மகனைப் பெற விரும்பியபோது உம்மிடம் வந்து, இந்த மகனை உமக்களித்த அதே அங்கிர ரிஷிதான் நான். இவர் பிரம்ம தேவரின் நேரடிப் புதல்வரான மிகச் சிறந்த நாரத முனிவராவார்.
பதங்கள் 6.15.18 – 6.15.19
இத்தம் த்வாம் புத்ர-சோகேன மக்னம் தமஸி துஸ்தரே
அதத்-அர்ஹம் அனுஸ்ம்ருத்ய மஹாபுருஷ-கோசரம்
அனுக்ரஹாய பவத: ப்ராப்தாவ் ஆவாம் இஹ ப்ரபோ
ப்ரஹ்மண்யோ பகவத்-பக்தோ நாவாஸாதிதும் அர்ஹஸி
இத்தம்—இவ்விதமாக; த்வாம்—நீர்; புத்ர-சோகேன—புத்திர சோகத்தினால்; மக்னம்—மூழ்கியுள்ள; தமஸி—இருளில்; துஸ்தரே—கடக்கமுடியாத; அ-தத்-அர்ஹம்—உம்மைப் போன்ற ஒருவருக்கு ஏற்றதல்ல; அனுஸ்ம்ருத்ய—நினைவிற்கொண்டு; மஹா-புருஷ—பரமபுருஷரை; கோசரம்—புரிந்துகொள்வதில் சிறந்த; அனுக்ரஹாய—அருள் புரிவதற்காகவே; பவத:—உம்மிடம்; ப்ராப்தௌ—வந்திருக்கிறோம்; ஆவாம்—நாங்களிலிருவரும்; இஹ—இங்கு; ப்ரபோ—அரசே; ப்ரஹ்மண்ய:—பரப்பிரம்மனில் நிலைபெற்றுள்ள; பகவத்-பக்த:—பரமபுருஷரின் சிறந்த பக்தர்; ந—இல்லை; அவாஸாதிதும்—துக்கப்பட; அர்ஹஸி—தகுதியுடையவர்.
அரசே, நீர் பரமபுருஷரின் ஒரு சிறந்த பக்தராவீர். பெளதிகமான ஒன்றின் இழப்பிற்காக துக்கத்தில் மூழ்கிவிடுவது உம்மைப் போன்ற ஒருவருக்கும் ஏற்றதல்ல. ஆகவே பொய்யான இந்த துக்கத்திலிருந்து உம்மை விடுவிப்பதற்காகவே நாங்களிருவரும் வந்திருக்கிறோம். நீர் அறியாமையெனும் இருளில் மூழ்கியிருந்ததே இந்த துக்கத்திற்குக் காரணம். ஆத்ம ஞானத்தில் முன்னேறியவர்கள், பௌதிக இலாப, நஷ்டங்களால் பாதிப்படைவது சிறிதும் விரும்பத்தக்கதல்ல.
பதம் 6.15.20
ததைவ தே பரம் ஞானம் ததாமி க்ருஹம் ஆகத: ஞாத்வான்யாபினிவேசம் தே புத்ரம் ஏவ ததாமி அஹம்
ததா—அப்பொழுதே; ஏவ—உண்மையில்; தே—உமக்கு; பரம்—உன்னத; ஞானம்—ஞானத்தை; ததாமி—அளித்திருப்பேன்; க்ருஹம்—உமது வீட்டிற்கு; ஆகத:—வந்த; ஞாத்வா—அறிந்து; அன்ய-அபினிவேசம்—வேறெதிலோ (பௌதிக விஷயங்களில்) ஆழ்ந்திருப்பதை; தே—உமக்கு; புத்ரம்—ஒரு மகனை; ஏவ—மட்டும்; ததாமி—கொடுத்தேன்; அஹம்—நான்.
முதன்முதலாக உமது வீட்டிற்கு நான் வந்திருந்த பொழுதே, மேலான இந்த உன்னத ஞானத்தை உமக்கு நான் கொடுத்திருக்க முடியும். ஆனால் உமது மனம் பௌதிக விஷயங்களில் ஆழ்ந்திருப்பதைக் கண்டு, இன்பத்திற்கும், துன்பத்திற்கும் காரணமான ஒரு மகனை மட்டுமே உமக்கு நான் கொடுத்தேன்.
பதங்கள் 6.15.21 – 6.15.23
அதுனா புத்ரினாம் தாபோ பவதைவானுபூயதே
ஏவம் தாரா க்ருஹா ராயோ விவிதைஸ்வர்ய-ஸம்பத:
சப்தாதயஸ் ச விஷயாஸ் சலா ராஜ்ய-விபூதய:
மஹீ ராஜ்யம் பலம் கோஷோ ப்ருத்யாமாத்ய-ஸுஹ்ருஜ்-ஜனா:
ஸர்வே ‘பி சூரஸேனேமே சோக-மோஹ-பயார்திதா:
கந்தர்வ-நகர-ப்ரக்யா: ஸ்வப்ன-மாயா-மனோரதா:
அதுனா—இப்பொழுது; புத்ரிணாம்—குழந்தைகள் உள்ளவனின்; தாப:—துன்பம்; பவதா—உம்மால்; ஏவ—உண்மையில்; அனுபூயதே—அனுபவிக்கப்படுகிறது; ஏவம்—இவ்வாறு; தாரா:—நல்ல மனைவி; க்ருஹா:—வீடு; ராய:—செல்வங்கள்; விவித—பலவிதமான; ஐஸ்வர்ய—ஐசுவரியங்கள்; ஸம்பத:—அபிவிருத்திகள்; சப்த-ஆதய:—ஒலி முதலியவைகள்; ச—கூட; விஷயா:—புலன் நுகர்வுப் பொருட்களும்; சலா:—தற்காலிகமான; ராஜ்ய—இராஜ்யத்தின்; விபூதய:—விபூதிகள்; மஹீ—நிலம்; ராஜ்யம்—இராஜ்யம்; பலம்—பலம்; கோஷ:—பொக்கிஷம்; ப்ருத்ய—சேவகர்கள்; அமாத்ய—மந்திரிகள்; ஸுஹ்ருக்-ஜனா:—நண்பர்கள்; ஸர்வே—எல்லோரும்; அபி—உண்மையில்; ஸூரஸேன—சூரசேன அரசே; இமே:—இவை; சோக—துக்கத்தையும்; மோஹ—மயக்கத்தையும் பய—பயத்தையும்; அர்தி—மற்றும் துன்பத்தையும்; தா:—கொடுப்பவை; கந்தர்வ-நகர-ப்ரக்யா:—கந்தர்வ நகரம் என்ற காட்டிலுள்ள ஒரு பெரிய அரண்மனையின்-மாயத் தோற்றம் முதலியவைகளால்; ஸ்வப்ன—கனவுகள்; மாயா—மாயத் தோற்றங்கள்; மனோரதா:—மற்றும் மனக் கற்பனைகள்.
அரசே, புத்திரர்களையும், புதல்விகளையும் உடைய ஒருவனின் துக்கத்தை இப்பொழுது நீர் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர். சூரசேன தேசத்து அதிபதியே, ஒருவனுடைய மனைவி, வீடு, இராஜ்யம், வேறு பல ஐசுவரியங்கள், புலன் நுகர்வுப் பொருட்கள் ஆகிய அனைத்தும் ஒன்றே. ஏனெனில் இவையனைத்தும் தற்காலிகமானவையே. ஒருவனது இராஜ்யம், படைபலம், பொக்கிஷம், சேவகர்கள், மந்திரிகள், நண்பர்கள், உறவினர்கள் ஆகிய அனைத்தும் பயம், மதி மயக்கம், புலம்பல், துக்கம் ஆகியவற்றிற்குக் காரணங்களாகும். இவை, காட்டில் இல்லாத ஓர் அரண்மனையை (கந்தர்வ-நகரம்) இருப்பதாக ஒருவன் கற்பனை செய்வதைப் போன்றவையாகும். இவை நிலையற்றவை என்பதால், இவை மாயத்தோற்றங்களையும் கனவுகளையும், மனக்கற்பனைகளையும் விட எவ்விதத்திலும் சிறந்தவையல்ல.
பதம் 6.15.24
த்ருஸ்யமானா வினார்த்தேன ந த்ருஸ்யந்தே மனோபவா:
கர்மபிர் த்யாயதோ நானா கர்மாணி மனஸோ ‘பவன்
த்ருஸ்யமானா:—பார்க்கப்படும்; வினா—இல்லாமல்; அர்த்தேன—கருப்பொருள் அல்லது உண்மை நிலை; ந—இல்லை; த்ருஸ்யந்தே—பார்க்கப்படுகின்றன; மனோபவா—மனக்கற்பனைகளின் படைப்புகளாகும்; கர்மபி:—கருமங்களால்; த்யாயத:—தியானிக்கும்; நானா—பலவிதமான; கர்மாணி—பலன் கருதும் செயல்கள்; மனஸ:—மனதிலிருந்து; அபவன்—தோன்றுகின்றன.
கண்களால் பார்க்கப்படும் பொருட்களான மனைவி, குழந்தைகள், உடைமை போன்றவை கனவுகளுக்கும், மனக் கற்பனைகளுக்கும் ஒப்பானவை. உண்மையில் நம்மால் காணப்படுபவைகளுக்கு நிரந்தரமான இருப்பு கிடையாது. சில சமயங்களில் இவை காணப்படுகின்றன. சில சமயங்களில் காணப்படுவதில்லை. நம்முடைய கடந்த செயல்களின் காரணத்தாலேயே இத்தகைய மனக்கற்பனைகளை நாம் ஏற்படுத்திக் கொள்கிறோம். இந்த மனக்கற்பனைகளின் காரணத்தால் நாம் மேற்கொண்டு செயல்களைச் செய்கிறோம்.
பதம் 6.15.25
அயம் ஹி தேஹினோ தேஹோ த்ரவ்ய-ஞான-க்ரியாத்மக:
தேஹினோ விவித-க்லேச-ஸந்தாப-க்ருத் உதாஹ்ருத:
அயம்—இது; ஹி—நிச்சயமாக; தேஹின:—ஜீவராசியின்; தேஹ—உடல்; த்ரவ்ய-ஞான-க்ரியா-ஆத்மக:—பெளதிக மூலப்பொருட்கள்; அறிவுப்புலன்கள், மற்றும் செயற்புலன்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள; தேஹின:—ஜீவராசியின்; விவித—பலவிதமான; க்லேச—துன்பங்கள்; ஸந்தாப—மற்றும் வலிகளுக்கு; க்ருத்—காரணம்; உதாஹ்ருத:—என்று கூறப்படுகிறது.
தேகாபிமானத்திலுள்ள ஜீவராசி, பௌதிக மூலப்பொருட்கள், ஐந்து அறிவுப் புலன்கள், ஐந்து செயற்புலன்கள் மற்றும் மனம் ஆகியவற்றின் சேர்க்கையாலான உடலில் ஆழ்ந்திருக்கிறான். மனதின் மூலமாக ஜீவராசி, அதிபௌதிகம், அதிதைவிகம் மற்றும் அத்யாத்மிகம் என்ற மூவகைத் துன்பங்களை அனுபவிக்கிறான். ஆகவே இந்த உடல் எல்லா வகையான துன்பங்களுக்கும் பிறப்பிடமாகும்.
பதம் 6.15.26
தஸ்மாத் ஸ்வஸ்தேன மனஸா விம்ருஸ்ய கதிம் ஆத்மன:
த்வைதே த்ருவார்த்த-விஸ்ரம்பம் த்யஜோபசமம் ஆவிச
தஸ்மாத்—ஆகவே; ஸ்வஸ்தேன—கவனமுள்ள; மனஸா—மனதுடன்; விம்ருஸ்ய—தீர்மானித்து; கதிம்—உண்மை நிலையை; ஆத்மன:—உன்னைப் பற்றி; த்வைதே—இருமையில்; த்ருவ—நிலையானதாக; அர்த்த—பொருள்; விஸ்ரம்பம்—நம்பிக்கை; த்யஜ—விட்டுவிட்டு; உபசமம்—ஓர் அமைதியான நிலையை; ஆவிச—எடுத்துக்கொள்ளும்.
ஆகவே சித்ரகேது மகாராஜனே, கவனமாக ஆத்மாவின் நிலையை யோசித்துப்பாரும். அதாவது, நீர் யார் (உடலா, மனமா அல்லது ஆத்மாவா) என்பதைப் புரிந்து கொள்ள முயற்சி செய்யும். நீர் எங்கிருந்து வந்தீர், உடலை விட்டதும் எங்கு செல்வீர், நீர் ஏன் பௌதிக துக்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கிறீர் என்பதையெல்லாம் யோசித்துப்பாரும். இவ்விதமாக உமது உண்மையான நிலையைப் புரிந்து கொள்ள முயல்வீராயின், தேவையற்ற பற்றுதலை உம்மால் விட்டுவிட முடியும். இந்த ஜட உலகம், அல்லது கிருஷ்ணருடைய சேவையுடன் நேரடியாகத் தொடர்பு கொண்டிராத எதுவும் நித்தியமானது என்ற நம்பிக்கையை உம்மால் விட்டுவிட முடியும். இவ்விதமாக நீர் அமைதியை அடைவீர்.
பதம் 6.15.27
ஸ்ரீ-நாரத உவாச
ஏதாம் மந்த்ரோபநிஷதம் ப்ரதீச்ச ப்ரயதோ மம
யாம் தாரயன் ஸப்த-ராத்ராத் த்ரஷ்டா ஸங்கர்ஷணம் விபும்
ஸ்ரீ-நாரத: உவாச—ஸ்ரீ நாரத முனி கூறினார்; ஏதாம்—இது; மந்த்ர-உபநிஷதம்—ஒரு மந்திர வடிவிலிருக்கும் உபநிஷதம் (இதனால் வாழ்வின் மிகவுயர்ந்த இலக்கை ஒருவனால் அடைய முடியும்); ப்ரதீச்ச—ஏற்றுக்கொள்வீராக; ப்ரயத:—(உமது மகனின் ஈமக் கடன்களை முடித்த பிறகு) மிகவும் கவனத்துடன்; மம—என்னிடமிருந்து; யாம்—எதை; தாரயன்—ஏற்றுக்கொண்டு; ஸப்த-ராத்ராத்—ஏழு இரவுகளுக்குப் பிறகு; த்ரஷ்டா—நீர் காண்பீர்; ஸங்கர்ஷணம்—பரமபுருஷராகிய சங்கர்ஷணரை; விபும்—பகவானை.
மாமுனிவரான நாரதர் தொடர்ந்து கூறினார்: அரசே, மிகவும் மங்களகரமான ஒரு மந்திரத்தை கவனத்துடன் என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளும், என்னிடமிருந்து இதை ஏற்றுக் கொண்ட பின், ஏழு இரவுகளில் உம்மால் நேருக்கு நேராக பகவானைக் காண முடியும்.
பதம் 6.15.28
யத்-பாத-மூலம் உபஸ்ருத்ய நரேந்த பூர்வே
சர்வாதயோ ப்ரமம் இமம் த்விதயம் விஸ்ருஜ்ய
ஸத்யஸ் ததீயம் அதுலானதிகம் மஹித்வம்
ப்ராபுர் பவான் அபி பரம் ந சிராத் உபைதி
யத்-பாத-மூலம்—யாருடைய (பகவான் சங்கர்ஷணருடைய) பாதகமலங்களில்; உபஸ்ருத்ய—புகலிடம் பெற்று; நர-இந்ர—அரசே; பூர்வே—முன்பு; சர்வ-ஆதய:—சிவபெருமான் முதலான சிறந்த தேவர்கள்; ப்ரமம்—மாயையை; இமம்—இந்த; த்விதயம்—இருமையைக் கொண்ட; விஸ்ருஜ்ய—விட்டுவிட்டு; ஸத்ய:—உடனே; ததீயம்—அவருடைய; அதுல—இணையற்ற; அனதிகம்—மிகச்சிறந்த; மஹித்வம்—மகிமைகளை; ப்ராபு:—அடைந்தனர்; பவான் அபி—நீரும்; பரம்—அந்த பரம இலக்கை; ந சிராத்—சீக்கிரமாக; உபைதி—அடைவீர்.
அரசே, முன்பு சிவபெருமானும் மற்ற தேவர்களும் சங்கர்ஷணரின் பாத கமலங்களில் சரணடைந்தனர். இவ்விதமாக அவர்கள் இருமை என்னும் மாயையிலிருந்து உடனே விடுபட்டு, ஆன்மீக வாழ்வில் இணையற்ற, மிகச் சிறந்த மகிமைகளைப் பெற்றனர். அதே நிலையை நீரும் விரைவில் அடைவீர்.
ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “சித்ரகேதுவிற்கு நாரதரும், அங்கிரரும் உபதேசித்தல்” எனும் தலைப்பை கொண்ட பதினைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.