அத்தியாயம் – 12
விருத்தாசுரனின் புகழ்மிக்க மரணம்
பதம் 6.12.1
ஸ்ரீ-ரிஷிர் உவாச
ஏவம் ஜிஹாஸுர் ந்ருப தேஹம் ஆஜௌ
ம்ருத்யும் வரம் விஜயான் மன்யமான:
சூலம் ப்ரக்ருஹ்யாப்யபதத் ஸுரேந்ரம்
யதா மஹா-புருஷம் கைடபோ ‘ப்ஸு
ஸ்ரீ-ரிஷி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறு; ஜிஹாஸு:—விட்டுவிட ஆவலாக இருந்தான்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே; தேஹம்—உடலை; ஆஜௌ—போரில்; ம்ருத்யும்—மரணமடைவதே; வரம்—சிறந்தது; விஜயாத்—வெற்றியை விட; மன்யமான:—என்றெண்ணி; சூலம்—சூலத்தை; ப்ரக்ருஹ்ய—கையிலெடுத்து; அப்யபதத்—தாக்கினான்; ஸுர-இந்ரம்—தேவ ராஜனான இந்திரனை; யதா—போல; மஹா-புருஷம்—பரமபுருஷரை; கைடப:—கைடப அசுரன்; அப்ஸு—முழு பிரபஞ்சமும் வெள்ளத்தில் மூழ்கியபோது.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: தன்னுடைய உடலை விட்டுவிட விரும்பிய விருத்ராசுரன், வெற்றியைக் காட்டிலும் யுத்தத்தில் மரணமடைவதே மேல் என்று கருதினான். பரீட்சித்து மகாராஜனே, பிரபஞ்சம் வெள்ளத்தில் மூழ்கியபொழுது, கைடபன் பரமபுருஷரை மிகுந்த பலத்துடன் தாக்கியது போலவே, விருத்ராசுரனும் தேவராஜனான இந்திரனைத் தனது சூலத்தால் பெரும் வலிமையுடன் தாக்கினான்.
பதம் 6.12.2
ததோ யுகாந்தாக்னி கடோர ஜிஹ்வம்
ஆவித்ய சூலம் தரஸாஸுரேந்ர:
க்ஷிப்த்வா மஹேந்ராய வினத்ய வீரோ
ஹதோ ‘ஸி பாபேதி ருஷா ஜகாத
தத:—அதன்பிறகு; யுக-அந்த-அக்னி—ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் உண்டாகும் தீ போல; கடோர—கூரிய; ஜிஹ்வம்—முனைகளுடைய; ஆவித்ய—சுழற்றி; சூலம்—சூலத்தை; தரஸா—பெரும் வலிமையுடன்; அஸுர-இந்ர:—அசுரர்களின் சிறந்த வீரனான விருத்ராசுரன்; க்ஷிப்த்வா—வீசி; மஹா-இந்ராய—இந்திரன் மீது; வினத்ய—கர்ஜித்தபடி; வீர:—அச்சிறந்த வீரன் (விருத்ராசுரன்); ஹத:— கொல்லப்பட்டாய்; அஸி—நீ; பாப—பாவியே; இதி—என்று; ருஷா—கடுங்கோபத்துடன்; ஜகாத—உரக்கக் கூவினான்.
பிறகு அசுரர்களில் சிறந்த வீரனான விருத்ராசுரன், யுகமுடிவில் கொழுந்து விட்டெரியும் தீச்சுடர்களைப் போன்ற முனைகளையுடைய தனது சூலத்தை வேகமாகச் சுழற்றி, “பாவியே இதோ உன்னைக் கொன்று விடுகிறேன் பார்” என்று உரக்கக் கூவி கர்ஜித்தபடி, பெரும் வலிமையுடனும், கோபத்துடனும் அதை இந்திரன் மீது வீசினான்.
பதம் 6.12.3
க ஆபதத் தத் விசலத் க்ரஹோல்கவன்
நிரீக்ஷ்ய துஷ்ப்ரேக்ஷ்யம் அஜாத விக்லவ:
வஜ்ரேண வஜ்ரீ சத-பர்வணாச்சினத்
புஜம் ச தஸ்யோரக-ராஜ-போகம்
கே—ஆகாயத்தில்; ஆபதத்—அவரை நோக்கிப் பறந்து சென்ற; தத்—அந்த சூலம்; விசலத்—சுழலும்; க்ரஹ-உல்க-வத்—எரி நட்சத்திரம் போல்; நிரீக்ஷ்ய—கண்டு; துஷ்ப்ரேக்ஷ்யம்—பார்க்க முடியாத; அஜாத-விக்லவ:—அஞ்சாத; வஜ்ரேண—வஜ்ராயுதத்தால்; வஜ்ரீ—வஜ்ராயுதபாணியான இந்திரன்; சத-பர்வணா—நூறு இணைப்புகளுடைய; ஆச்சினத்—வெட்டினார்; புஜம்—கையை; ச—மேலும்; தஸ்ய—அவனுடைய (விருத்ராசுரனுடைய); உரக-ராஜ—நாகராஜனான வாசுகியின்; போகம்—உடல்போல்.
ஆகாயத்தில் பறந்து சென்ற விருத்ராசுரனின் சூலம், ஒரு எரி நட்சத்திரம் போல் பிரகாசித்தது. அவ்வாறு பிரகாசித்த அந்த ஆயுதம் கண்ணால் பார்ப்பதற்குக் கடினமாக இருந்தது. இருப்பினும் அதற்கு அஞ்சாத தேவேந்திரன் தன் வஜ்ராயுதத்தினால் அதைக் கண்ட துண்டமாக வெட்டித் தள்ளினார். அதே சமயத்தில் நாகராஜனான வாசுகியின் உடலைப் போல் பருத்திருந்த விருத்ராசுரனின் ஒரு கையையும் அவர் வெட்டித் தள்ளினார்.
பதம் 6.12.4
சின்னைக பாஹு: பரிகேண வ்ருத்ர:
ஸம்ரப்த ஆஸாத்ய க்ருஹீத வஜ்ரம்
ஹனௌ ததாடேந்ரம் அதாமரேபம்
வஜ்ரம் ச ஹஸ்தான் ன்யபதன் மகோன:
சின்ன—துண்டிக்கப்பட்டு; ஏக—ஒரு; பாஹு:—யாருடைய கை; பரிகேண—இரும்பு கதையால்; வ்ருத்ர:—விருத்ராசுரன்; ஸம்ரப்த:—கடுங்கோபமடைந்து; ஆஸாத்ய—அடைந்து; க்ருஹீத—எடுத்து; வஜ்ரம்—வஜ்ராயுதத்தை; ஹனௌ—தாடையில்; ததாட—அடித்தான்; இந்ரம்—இந்திரனை; அத—கூட; அமர-இபம்—அவரது யானையை; வஜ்ரம்—வஜ்ராயுதம்; ச—மேலும்; ஹஸ்தாத்—கையிலிருந்து; ன்யபதத்—விழுந்தது; மகோன:—இந்திரனின்.
விருத்ராசுரனின் உடலிலிருந்து ஒரு கை துண்டிக்கப்பட்ட போதிலும், அவன் கோபத்துடன் இந்திரனை நெருங்கித் தன்னுடைய இரும்பு கதையினால் அவருடைய தாடையில் அடித்ததுடன், அவருடைய வாகனமான யானையையும் அடித்தான். இதனால் இந்திரனுடைய கையிலிருந்த அவரது வஜ்ராயுதம் நழுவி கீழே விழுந்தது.
பதம் 6.12.5
வ்ருத்ரஸ்ய கர்மாதி-மஹாத்புதம் தத்
ஸுராஸுராஸ் சாரண-ஸித்த-ஸங்கா:
அபூஜயம்ஸ் தத் புருஹூத-ஸங்கடம்
நிரீக்ஷ்ய ஹா ஹேதி விசுக்ருசுர் ப்ருசம்
வ்ருத்ரஸ்ய—விருத்ராசுரனின்; கர்ம—வெற்றியை; அதி—மிகவும்; மஹா—பெரிதாக; அத்புதம்—அற்புதமான; தத்—அந்த; ஸுர—தேவர்கள்; அஸுரா:—மற்றும் அசுரர்கள்; சாரண—சாரணர்கள்; ஸித்த-ஸங்கா:—மற்றும் சித்தர் சமூகம்; அபூஜயன்—போற்றினர்; தத்—அந்த; புருஹூத-ஸங்கடம்—ஆபத்தான இந்திரனின் நிலையை; நிரீக்ஷ்ய—கண்டு; ஹா ஹா—ஐயோ, ஐயோ; இதி—என்று; விசுக்ருசு:—புலம்பினர்; ப்ருசம்—மிகவும்.
தேவர்கள், அசுரர்கள், சாரணர்கள், சித்தர்கள் போன்ற வெவ்வேறு கிரகங்களின் வாசிகள் விருத்ராசுரனின் செயலைப் போற்றினர். இருப்பினும் இந்திரன் பேராபத்தில் இருப்பதைக் கண்டதும், “ஐயோ! ஐயோ!” என்று அவர்கள் புலம்பினர்.
பதம் 6.12.6
இந்ரோ ந வஜ்ரம் ஜக்ருஹே விலஜ்ஜிதஸ்
ச்யுதம் ஸ்வ-ஹஸ்தாத் அரி-ஸன்னிதௌ புன:
தம் ஆஹ வ்ருத்ரோ ஹர ஆத்த-வஜ்ரோ
ஜஹி ஸ்வ-சத்ரும் ந விஷாத-கால:
இந்திரா:—இந்திரன்; ந—இல்லை; வஜ்ரம்—வஜ்ராயுதத்தை; ஜக்ருஹே—எடுத்தார்; விலஜ்ஜித:—வெட்கமடைந்ததால்; ச்யுதம்—விழுந்த; ஸ்வ-ஹஸ்தாத்—தன் சொந்த கையிலிருந்து; அரி-ஸன்னி தெள—தன் எதிரியின் முன்; புன:—மீண்டும்; தம்—அவரிடம்; ஆஹ—கூறினான்; வ்ருத்ர:—விருத்ராசுரன்; ஹரே—இந்திரனே; ஆத்த-வஜ்ர:—உன்னுடைய வஜ்ராயுதத்தை எடுத்து; ஜஹி—கொன்றுவிடு; ஸ்வ-சத்ரும்—உன் எதிரியை; ந—இல்லை; விஷாத-கால:—புலம்புவதற்கு நேரம்.
தன் எதிரியின் முன்னிலையில் வஜ்ராயுதத்தைத் தன் கையிலிருந்து நழுவவிட்ட இந்திரன் தோல்வியடைந்தவர் போலானதால், அதனால் மிகவும் வெட்கமடைந்தார். அவர் அந்த ஆயுதத்தை மீண்டும் கையிலெடுக்கத் துணியவில்லை. ஆனால் விருத்ராசுரனோ, “உன்னுடைய வஜ்ராயுதத்தைக் கையிலெடுத்து உன் எதிரியைக் கொன்று விடு, விதியை எண்ணிப் புலம்புவதற்கு இது நேரமல்ல” என்று கூறி அவரை உற்சாகப்படுத்தினான்.
பதம் 6.12.7
யுயுத்ஸதாம் குத்ரசித் ஆததாயினாம்
ஜய: ஸதைகத்ர ந வை பராத்மனாம்
வினைகம் உத்பத்தி-லய-ஸ்திதீஸ்வரம்
ஸர்வக்ஞம் ஆத்யம் புருஷம் ஸனாதனம்
யுயுத்ஸதாம்—கலகப் பிரியர்களின்; குத்ரசித்—சிலசமயங்களில்; ஆததாயினாம்—ஆயுதங்கள் தரித்துள்ள; ஜய:—வெற்றி; ஸதா—எப்பொழுதும்; ஏகத்ர—ஓரிடத்தில்; ந—இல்லை; வை—உண்மையில்; பர-ஆத்மனாம்—பரமாத்மாவின் உத்தரவுக்கு மட்டுமே கீழ்ப்படிந்து நடக்கும் கீழ்ப்பட்ட ஜீவராசிகளின்; வினா—தவிர; ஏகம்—ஒருவரை; உத்பத்தி—படைப்பின்; லய—அழிவின்; ஸ்திதி—மற்றும் காத்தலின்; ஈஸ்வரம்—ஈசுவரர்; ஸர்வக்ஞம்—(கடந்த, நிகழ், எதிர் காலங்கள் ஆகிய) அனைத்தையும் அறிந்தவரான; ஆத்யம்—ஆதியானவர்; புருஷம்—அனுபவிப்பாளர்; ஸனாதனம்—நித்திய.
விருத்ராசுரன் தொடர்ந்து கூறினான்: இந்திரனே, ஆதி அனுபவிப்பாளரும் பகவானுமாகிய பரமபுருஷரைத் தவிர வேறு எவரும், எப்போதும் வெற்றி பெறுவது நிச்சயமில்லை. அவரே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகியவற்றிற்குக் காரணமும், அனைத்தும் அறிந்தவருமாவார். பிறர் உதவியை நம்பி இருப்பவர்களும், ஜட உடல்களை ஏற்கக் கட்டுப்பட்டவர்களும், கலகப் பிரியர்களுமான கீழ்நிலையோர் சில சமயங்களில் வெற்றியையும், சில சமயங்களில் தோல்வியையும் தழுவுகின்றனர்.
பதம் 6.12.8
லோகா: ஸபாலா யஸ்யேமே ஸ்வஸந்தி விவசா வசே
த்விஜா இவ சிசா பத்தா: ஸ கால இஹ காரணம்
லோகா:—லோகங்கள்; ஸ-பாலா:—அவற்றின் அதிபதிகளுடன்; யஸ்ய—யாருடைய; இமே—இவ்வெல்லா; ஸ்வஸந்தி—வாழும்; விவசா:—முழு ஆதரவில்; வசே—கட்டுப்பாட்டின் கீழ்; த்விஜா:—பறவைகள்; இவ—போல்; சிசா—ஒரு வலையால்; பத்தா:—பிடிக்கப்பட்ட; ஸ:—அந்த; கால:—கால தத்துவம்; இஹ—இதில்; காரணம்—காரணம்.
அனைத்து லோகாதிபதிகளும் உட்பட, இப்பிரபஞ்சத்தின் அனைத்து கிரகங்களிலும் உள்ள அனைத்து ஜீவராசிகளும், பகவானின் முழு கட்டுப்பாட்டில் உள்ளனர். அவர்கள் வலையில் அகப்பட்டு சுதந்திரமாக சுற்றித் திரிய முடியாத பறவைகளைப் போல் செயற்படுகின்றனர்.
பதம் 6.12.9
ஒஜ: ஸஹோ பலம் ப்ராணம் அம்ருதம் ம்ருத்யும் ஏவ ச
தம் அக்ஞாய ஜனோ ஹேதும் ஆத்மானம் மன்யதே ஜடம்
ஒஜ:—புலன் சக்தி; ஸஹ:—மனோபலம்; பலம்—தேகபலம்; ப்ராணம்—உயிர்வாழ் நிலை; அம்ருதம்—நித்திய வாழ்வு; ம்ருத்யும்—மரணம்; ஏவ—உண்மையில்; ச—கூட; தம்—அவரை (பரமபுருஷரை); அக்ஞாய—அறியாத; ஜன:—மூடன்; ஹேதும்—காரணம்; ஆத்மானம்—உடலே; மன்யதே—என்று எண்ணுகின்றனர்; ஜடம்—ஜடமானது என்றாலும்.
நம்முடைய புலன் சக்தி, மனோபலம், தேகபலம், பிராணன், நித்திய வாழ்வு, மரணம் ஆகிய அனைத்துமே பரமபுருஷரின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டவையாகும். இதையறியாத மூடர்கள், ஜடமான இந்த பெளதிக உடலே தங்களுடைய செயல்களுக்குக் காரணம் என்று நினைக்கின்றனர்.
பதம் 6.12.10
யதா தாருமயீ நாரீ யதா பத்ரமயோ ம்ருக:
ஏவம் பூதானி மகவன் ஈச-தந்த்ராணி வித்தி போ:
யதா—போல; தாரு-மயீ—மரத்தாலான; நாரீ—ஒரு பெண்; யதா—போல; பத்ர-மய: இலைகளாலான; ம்ருக:—ஒருமிருகம்; ஏவம்—இவ்வாறு; பூதானி—அனைத்தும்; மகவன்—இந்திரா; ஈச—பரம்புருஷரையே; தந்த்ராணி—சார்ந்துள்ளன; வித்தி—என்றறிவாயாக; போ:—ஐயனே.
தேவேந்திரா, எப்படி ஒரு பெண்ணைப் போல் காணப்படும் மரப்பொம்மையும் அல்லது புல்லாலும், இலைகளாலும் செய்யப்பட்ட ஒரு மிருகமும் சுதந்திரமாக அசையவோ, ஆடவோ முடியாமல், அவற்றை ஆட்டுவிப்பவனையே முற்றிலும் சார்ந்துள்ளனவோ, அப்படியே பரம ஆளுனராகிய பரமபுருஷரின் விருப்பத்திற்கேற்பவே நாம் அனைவரும் ஆடுகிறோம். எவருமே சுதந்திரமானவரல்ல.
பதம் 6.12.11
புருஷ: ப்ரக்ருதேர் வ்யக்தம் ஆத்மா பூதேந்ரியாசயா:
சக்னுவந்தி அஸ்ய ஸர்காதௌ ந வினா யத்-அனுக்ரஹாத்
புருஷ:—மொத்த ஜட சக்தியை உற்பத்தி செய்பவர்; ப்ரக்ருதி:—ஜட சக்தி அல்லது ஜட இயற்கை; வ்யக்தம்—தோற்றத்தின் அடிப்படை உண்மை (மஹத் தத்வம்); ஆத்மா—பொய் அகங்காரம்; பூத—பஞ்ச பூதங்கள்; இந்ரிய—பத்து புலன்கள்; ஆசயா:—மனம், புத்தி, உணர்வு; சக்னுவந்தி—முடியும்; அஸ்ய—இப்பிரபஞ்சத்தின்; ஸர்க-ஆதௌ—சிருஷ்டி போன்றவைகளில்; ந—இல்லை; வினா—இல்லாமல்; யத்—யாருடைய; அனுக்ரஹாத்—அனுக்கிரகம்.
காரணோதகசாயி விஷ்ணு, கர்போதகசாயி விஷ்ணு, க்ஷீரோதகசாயி விஷ்ணு ஆகிய மூன்று புருஷர்களாலும், ஜட இயற்கை, மொத்த பெளதிக சக்தி, பொய் அகங்காரம், பஞ்ச பூதங்கள், பெளதிக புலன்கள், மனம், புத்தி, உணர்வு ஆகியவற்றினாலும், பரமபுருஷரின் உத்தரவின்றி பெளதிகத் தோற்றத்தைப் படைக்க முடியாது.
பதம் 6.12.12
அவித்வான் ஏவம் ஆத்மானம் மன்யதே ‘நீசம் ஈஸ்வரம்
பூதை: ஸ்ருஜதி பூதானி க்ரஸதே தானி தை: ஸ்வயம்
அவித்வான்—ஓர் அறிவற்ற மூடன்; ஏவம்—இவ்வாறு; ஆத்மானம்—தன்னை; மன்யதே—கருதுகிறான்; அனீசம்—பிறரால் முழுமையாக ஆதரிக்கப்பட்ட போதிலும்; ஈஸ்வரம்—பரம ஆளுனனாக, சுதந்திரமானவனாக; பூதை:—ஜீவராசிகளால்; ஸ்ருஜதி—அவர் (பகவான்) படைக்கிறார்; பூதானி—பிற ஜீவராசிகளை; க்ரஸதே—அவர் விழுங்கிவிடுகிறார்; தானி—அவற்றை; தை:—பிற ஜீவராசிகளால்; ஸ்வயம்—அவரே.
ஓர் அறிவற்ற மூடனால் பரமபுருஷரைப் புரிந்துகொள்ள முடியாது. எப்பொழுதும் ஆதரிக்கப்படும் நிலையில் இருப்பினும், தன்னையே பரமன் என்று ஒருவன் தவறாக எண்ணுகிறான். “ஒருவனது முந்திய கருமங்களுக்கேற்ப, அவனுடைய பௌதிக உடல் தாய் தந்தையரால் உண்டாக்கப்படுகிறது. அதே உடல், வேறொரு மிருகம் ஒரு புலியால் கொன்று தின்னப்படுவது போல், வேறொருவனால் அழிக்கப்படுகிறது” என்று ஒருவன் நினைப்பானாயின், அது சரியான புரிந்துணர்வல்ல. பரம்புருஷரே ஜீவராசிகளைப் படைக்கிறார். அவரே அவற்றைப் பிற ஜீவராசிகளின் மூலம் அழிக்கவும் செய்கிறார்.
பதம் 6.12.13
ஆயு: ஸ்ரீ: கீர்த்திர் ஐஸ்வர்யம் ஆசிஷ: புருஷஸ்ய யா:
பவந்தி ஏவ ஹி தத்-காலே யதானிச்சோர் விபர்யயா:
ஆயு:—ஆயுள்; ஸ்ரீ:—செல்வம்; கீர்த்தி:—புகழ்; ஐஸ்வர்யம்—சக்தி; ஆசிஷ:—வரங்கள்; புருஷஸ்ய—ஜீவராசியின்; யா:—எவை; பவந்தி—எழுகின்றன; ஏவ—உண்மையில்; ஹி—நிச்சயமாக; தத்-காலே—சரியான அந்த நேரத்தில்; யதா—போல; அனிச்சோ:—விரும்பாதவனின்; விபர்யயா:—எதிர்மாறான சூழ்நிலைகளை.
ஒருவன் மரணமடைய விரும்பாவிட்டாலும், அவன் மரணத்தின் போது, ஆயுள், செல்வம், புகழ் ஆகியவற்றை இழந்தே தீருவான். அதுபோலவே ஒருவன் வெற்றியடையும் நேரம் வரும்போது, இவற்றையெல்லாம் அவன் பரமபுருஷரின் அருளால் பெறுகிறான்.
பதம் 6.12.14
தஸ்மாத் அகீர்த்தி-யசஸோர் ஜயாபஜயயோர் அபி
ஸம: ஸ்யாத் ஸுக-துஹ்காப்யாம் ம்ருத்யு-ஜீவிதயோஸ் ததா
தஸ்மாத்—ஆகவே (பரமபுருஷரின் விருப்பத்தையே முற்றிலும் சார்ந்துள்ள காரணத்தால்); அகீர்த்தி—இகழ்ச்சியின்; யசஸோ:—புகழ்ச்சி; ஜய—வெற்றி; அபஜயயோ:—தோல்வியின்; அபி—கூட; ஸம:—சமமாக; ஸ்யாத்—ஒருவன் இருக்க வேண்டும்; ஸுக-துஹ்காப்யாம்—இன்ப துன்பங்களுடன்; ம்ருத்யு:—மரணத்தின்; ஜீவதயோ:—அல்லது வாழ்வின்; ததா—மேலும்.
அனைத்தும் பரமபுருஷரின் மேலான விருப்பத்தையே சார்ந்திருப்பதால், ஒருவன் புகழ்ச்சியிலும், இகழ்ச்சியிலும், வெற்றியிலும், தோல்வியிலும், வாழ்விலும், சாவிலும் சமநிலை உடையவனாக இருக்கவேண்டும். இவற்றின் விளைவினால் வரும் இன்பத்தையும், துன்பத்தையும் ஒருவன் எவ்வித உணர்ச்சிக்கும் இடந்தராமல் சரிசமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
பதம் 6.12.15
ஸத்வம் ரஜஸ் தம இதி ப்ரக்ருதேர் நாத்மனோ குணா:
தத்ர ஸாக்ஷிணம் யோ வேத ஸ ந பத்யதே
ஸத்வம்—சத்வ குணம்; ரஜ:—ரஜோ குணம்; தம:—தமோ குணம்; இதி—இவ்வாறு; ப்ரக்ருதே—ஜட இயற்கையின்; ந—இல்லை; ஆத்மன:—ஆன்மீக ஆத்மாவின்; குணா:—குணங்கள்; தத்ர—அத்தகைய ஒரு நிலையில்; ஸாக்ஷிணம்—கவனிப்பவன்; ஆத்மானம்—தன்னை; ய:—எவனொருவன்; வேத—அறிந்தவன்; ஸ:—அவன்; ந—இல்லை; பத்யதே—கட்டுப்பட்டவன்.
சத்வம், ரஜஸ், தமஸ் ஆகிய முக்குணங்களும் ஆத்மாவின் குணங்களல்ல. மாறாக, ஜட இயற்கையின் குணங்கள் என்பதையும், துய ஆத்மாவானவன் இக்குணங்களின் செயல்களுக்கும், விளைவுகளுக்கும் சாட்சியாக மட்டுமே இருக்கிறான் என்பதையும் அறிந்தவன், முக்தி பெற்றவன் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அவன் இக்குணங்களுக்குக் கட்டுப்பட்டவனல்ல.
பதம் 6.12.16
பஸ்ய மாம் நிர்ஜிதம் சத்ரு வ்ருக்ணாயுத-புஜம் ம்ருதே
கடமானம் யதா-சக்தி தவ ப்ராண-ஜிஹீர்ஷயா
பஸ்ய—பார்; மாம்—என்னை; நிர்ஜிதம்—ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; சத்ரு—சத்துருவே; வ்ருக்ண—வெட்டப்பட்டு விட்டன; ஆயுத—என் ஆயுதமும்; புஜம்—கையும்; ம்ருதே—போரில்; கடமானம்—தொடர்ந்து முயற்சிக்கிறேன்; யதா-சக்தி—என் திறமைக்கேற்ப; தவ—உன்னுடைய; ப்ராண—உயிரை; ஜிஹீர்ஷயா—பறித்துவிடும் விருப்பத்துடன்
சத்துருவே, என்னைப் பார். நான் ஏற்கனவே தோற்கடிக்கப்பட்டுவிட்டேன். ஏனெனில் எனது ஆயுதமும், கையும் துண்டு துண்டாக வெட்டப்பட்டு விட்டன. இருப்பினும் உன்னைக் கொல்லும் விருப்பத்துடன் என்னால் இயன்றவரை போரிட நான் முயற்சி செய்கிறேன். இத்தகைய மோசமான நிலையிலும் நான் சிறிதும் வருத்தப்படவில்லை. ஆகவே நீ உன் வருத்தத்தை விட்டுவிட்டு தொடர்ந்து யுத்தம் செய்.
பதம் 6.12.17
ப்ராண-க்லஹோ ‘யம் ஸமர இஷு-அக்ஷோ வாஹனாஸன:
அத்ர ந ஞாயதே ‘முஷ்ய ஜயோ ‘முஷ்ய பராஜய:
ப்ராண-க்லஹ:—உயிரே பந்தயப் பொருளாகும்; அயம்—இந்த; ஸமர:—யுத்தம்; இஷு-அக்ஷ:—அம்புகள் தாயக்கட்டைகளாகும்; வாஹன-ஆஸன:—குதிரைகள், யானைகள் போன்ற வாகனங்கள் ஆட்டப் பலகையாகும்; அத்ர—இங்கு (இந்த சூதாட்டத்தில்); ந—இல்லை; ஞாயதே—அறியப்படுகிறது; அமுஷ்ய—அதனுடைய; ஜய:—வெற்றி; அமுஷ்ய—அதனுடைய; பராஜய:—தோல்வி.
என் சத்துருவே, இந்த யுத்தத்தை ஒரு சூதாட்டமாகவும், நம் உயிர்களைப் பந்தயப் பொருள்களாகவும், அம்புகளை தாயக் கட்டைகளாகவும், வாகனங்களாக செயற்படும் மிருகங்களை ஆட்டப் பலகையாகவும் எண்ணிக் கொள். வெற்றி யாருக்கு, தோல்வி யாருக்கு என்பதை எவராலும் புரிந்துகொள்ள முடியாது. அனைத்தும் விதியையே சார்ந்துள்ளன.
பதம் 6.12.18
ஸ்ரீ-சுக உவாச
இந்ரோ வ்ருத்ர-வச: ஸ்ருத்வா கதாலீகம் அபூஜயத்
க்ருஹீத-வஜ்ர: ப்ரஹஸம்ஸ் தம் ஆஹ கத-விஸ்மய:
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இந்ர:—இந்திரன்; வ்ருத்ர-வச:—விருத்ராசுரனின் வார்த்தைகளை; ஸ்ருத்வா—கேட்டு; கத-அலீகம்—கபடமின்றி; அபூஜயத்—பூஜித்து; க்ருஹீத-வஜ்ர:—வஜ்ராயுதத்தை எடுத்து; ப்ரஹஸன்—புன்னகை செய்து; தம்—விருத்ராசுரனிடம்; ஆஹ—கூறினார்; கத-விஸ்மய:—தனது வியப்பை விட்டுவிட்டு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: விருத்ராசுரனின் ஒளிவுமறைவற்ற உபதேச மொழிகளைக் கேட்ட தேவேந்திரன், அவனைப் புகழ்ந்து விட்டு மீண்டும் தன் வஜ்ராயுதத்தைக் கையிலெடுத்தார். பிறகு அவர் கலக்கமோ, கபடமோ இன்றி புன்னகை செய்து, விருத்ராசுரனிடம் பின்வருமாறு கூறலானார்.
பதம் 6.12.19
இந்திர உவாச
அஹோ தானவ ஸித்த ‘ஸி யஸ்ய தே மதிர் ஈத்ருசீ
பக்த: ஸர்வாத்மனாத்மானம் ஸுஹ்ருதம் ஜகத்-ஈஸ்வரம்
இந்திர: உவாச—இந்திரன் கூறினார்; அஹோ—ஐயனே; தானவ—அசுரனே; ஸிந்த: அஸி—நீ இப்பொழுது பக்குமடைந்தாய்; யஸ்ய—யாருடைய; தே—உன்னுடைய; மதி:—உணர்வு; ஈத்ருசீ—இது போன்ற; பக்த:—சிறந்த பக்தன்; ஸர்வ-ஆத்மனா—மாறுபாடு இல்லாமல்; ஆத்மானம்—பரமாத்மாவிற்கு; ஸுஹ்ருதம்—மிகச்சிறந்த நண்பரான; ஜகத்-ஈஸ்வரம்—பரமபுருஷருக்கு.
இந்திரன் கூறினார் சிறந்த அசுரனே, நீ ஆபத்தான நிலையில் இருந்த போதிலும் பக்தித் தொண்டில் உனக்கு பகுத்தறிவும், சகிப்புத் தன்மையில் இருப்பதையும், நீ பரமாத்மாவும், எல்லோருக்கும் நண்பருமான பரம புருஷரின் சிறந்த பக்தன் என்பதையும் என்னால் காண முடிகிறது.
பதம் 6.12.20
பவான் அதார்ஷீன் மாயாம் வை வைஷ்ணவீம் ஜன-மோஹினீம்
யத் விஹாயாஸுரம் பாவம் மஹா-புருஷதாம் கத:
பவான்—நீ; அதார்ஷீத்—தாண்டிவிட்டாய்; மாயாம்—மாயா சக்தியை; வை—உண்மையில்; வைஷ்ணவீம்—பகவான் விஷ்ணுவின்; ஜன-மோஹினீம்—ஜனங்களை மோகவசப்படுத்தும்; யத்—என்பதால்; விஹாய—விட்டுவிட்டு; ஆஸுரம்—அசுரர்களின்; பாவம்—மனோபாவத்தை; மஹா- புருஷதாம்—ஒரு சிறந்த பக்தனின் நிலையை; கத:—அடைந்துவிட்டாய்.
பகவான் விஷ்ணுவின் மாயாசக்தியை நீ தாண்டிவிட்டாய். இந்த விடுதலையின் காரணத்தினால் நீ அசுர மனோபாவத்தை விட்டுவிட்டு ஒரு சிறந்த பக்தனின் நிலையை அடைந்துவிட்டாய்.
பதம் 6.12.21
கல்வ் இதம் மஹத் ஆஸ்சர்யம் யத் ரஜ:-ப்ரக்ருதேஸ் தவ
வாஸுதேவே பகவதி ஸத்வாத்மனி த்ருடா மதி:
கலு—உண்மையில்; இதம்—இது; மஹத் ஆஸ்சர்யம்—பெரிய ஆச்சரியம்; யத்—எது; ரஜ:—ரஜோ குணத்தினால் ஆளப்படுகின்ற; ப்ரக்ருதே:—யாருடைய இயற்கை; தவ—உன்னுடைய; வாஸுதேவே—பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்; பகவதி—பரமபுருஷராகிய; ஸத்வ-ஆத்மனி—சுத்தசத்வ நிலையில் இருப்பவராகிய; த்ருடா—உறுதியான; மதி:—உணர்வு.
விருத்ராசுரனே, அசுரர்கள் பொதுவாக ரஜோ குணத்தினால் நடத்தப்படுகின்றனர். ஆகவே, என்ன ஆச்சரியம், நீ ஓர் அசுரனாக இருந்தும், ஒரு பக்தனின் மனோபாவத்தை ஏற்று, எப்பொழுதும் சுத்தசத்வ நிலையில் இருப்பவரும், பரமபுருஷருமாகிய வாசுதேவரிடம் உன் மனதைப் பதித்திருக்கிறாய்.
பதம் 6.12.22
யஸ்ய பக்திர் பகவதி ஹரௌ நிஹ்ஸ்ரேயஸேஸ்வரே
விக்ரீடதோ ‘ம்ருதாம்போதௌ கிம் க்ஷுத்ரை: காதகோதகை:
யஸ்ய—யாருடைய; பக்தி:—பக்தித்தொண்டு; பகவதி—பரம புருஷரிடம்; ஹரௌ—பகவான் ஸ்ரீ ஹரியிடம்; நிஹ்ஸ்ரேயஸ-ஈஸ்வரே—வாழ்வின் பரமபூரணத்துவத்தை, அல்லது பரம முக்தியை ஆள்பவரான; விக்ரீடத:—நீந்தும் அல்லது விளையாடும்; அம்ருத-அம்போதௌ—அமுதக் கடலில்; கிம்—என்ன பயன்; க்ஷுத்ரை:—சிறிய; காடக-உதகை:—சாக்கடை நீரால்.
பரமபுருஷரும், மிக உயர்ந்த மங்களத்திற்கு இறைவனுமாகிய ஸ்ரீ ஹரியின் பக்தித் தொண்டில் நிலைபெற்ற ஒருவன், அமுதக் கடலில் நீத்துபவனாகிறான். அவனுக்கு சாக்கடை நீரால் என்ன பயன்?
பதம் 6.12.23
ஸ்ரீ-சுக உவாச
இதி ப்ருவாணாவ் அன்யோன்யம் தர்ம-ஜிக்ஞாஸயா ந்ருப
யுயுதாதே மஹா-வீர்யாவ் இந்ர-வ்ருத்ரௌ யுதாம் பதீ
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இதி—இவ்வாறு; ப்ருவாணௌ—உரையாடி; அன்யோன்யம்—ஒருவரோடொருவர்; தர்ம-ஜிக்ஞாஸயா—இறுதியான பர தர்மத்தை (பக்தித் தொண்டை) அறியும் ஆவலுடன்; ந்ருப—அரசே; யுயுதாதே—போரிட்டனர்; மஹா-வீர்யெள—இருவரும் சிறந்த சக்திசாலிகளாவர்; இந்ர—இந்திரன்; வ்ருத்ரௌ—மற்றும் விருத்ராசுரன்; யுதாம் பதீ—இருவரும் சிறந்த சேனாதிபதிகள்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: விருத்ராசுரனும், தேவேந்திரனும் யுத்தகளத்தில் கூட பக்தித்தொண்டைப் பற்றி உரையாடினர். பிறகு கடமை உணர்ச்சியால் உந்தப்பட்டு மீண்டும் போரைத் துவங்கினார். அரசே, அவ்விருவருமே சம சக்தி படைத்த மிகச் சிறந்த வீரர்களாவர்.
பதம் 6.12.24
ஆவித்ய பரிகம் வ்ருத்ர: கார்ஷ்ணாயஸம் அரித்தம:
இந்திராய ப்ராஹிணோத் கோரம் வாம-ஹஸ்தேன மாரிஷ
ஆவித்ய—சுழற்றி; பரிகம்—கதையை; வ்ருத்ர:—விருத்ராசுரன்; கார்ஷ்ண-அயஸம்—இரும்பாலான; அரிம்-தம:—தன் எதிரியை அடக்கவல்லவனான; இந்திராய—இந்திரனை நோக்கி; ப்ராஹிணோத்—வீசி எறிந்தான்; கோரம்—மிகவும் பயங்கரமான; வாம-ஹஸ்தேன—அவனது இடது கையால்; மாரிஷா—அரச சிரேஷ்டரான பரீட்சித்து மகாராஜனே.
பரீட்சித்து மகாராஜனே, தன் எதிரியை முற்றிலும் அடக்க வல்லவனான விருத்ராசுரன், தனது இரும்பு கதையை எடுத்து, இடது கையால் அதைச் சுழற்றி, இந்திரனைக் குறி பார்த்து அதை வீசி எறிந்தான்.
பதம் 6.12.25
ஸ து வ்ருத்ரஸ்ய பரிகம் கரம் ச கரபோபமம்
சிச்சேத யுகபத் தேவோ வஜ்ரேண சத-பர்வணா
ஸ:—அவர் (இந்திரன்); து—ஆனால்; வ்ருத்ரஸ்ய—விருத்ராசுரனின்; பரிகம்—இரும்பு கதை; கரம்—அவனது கையை; ச—மற்றும்; கரப-உபமம்—யானையின் தும்பிக்கையைப் போல் வலிமைமிக்க: சிச்சேத—கண்டதுண்டமாக வெட்டினார்; யுகபத்—ஒரே சமயத்தில்; தேவா:—இந்திரன்; வஜ்ரேண—வஜ்ராயுதத்தால்; சத-பர்வணா—நூறு கணுக்களுடைய.
இந்திரனும் சதபர்வன் என்ற தனது வஜ்ராயுதத்தினால் விருத்ராசுரனின் கதையையும், எஞ்சியிருந்த அவனது கையையும் கண்ட துண்டமாக வெட்டித் தள்ளினார்.
பதம் 6.12.26
தோர்ப்யாம் உத்க்ருத்த-மூலாப்யாம் பபௌ ரக்த ஸரவோ ‘ஸூர:
சின்ன-பக்ஷோ யதா கோத்ர: காத் ப்ரஷ்டோ வஜ்ரிணா ஹத:
தோர்ப்யாம்—இரு கைகளிலிருந்து; உத்க்ருத்த-மூலாப்யாம்—வேரிலேயே வெட்டப்பட்டு; பபௌ—இருந்தது; ரக்த-ஸரவ:—இரத்தம் பெருக்கெடுத்தது; அஸுர:—விருத்ராசுரன்; சின்ன-பக்ஷ:—இறக்கைகள் வெட்டப்பட்ட; யதா—போல்; கோத்ர—மலை; காத்—ஆகாயத்திலிருந்து; ப்ரஷ்ட:—விழும்; வஜ்ரிணா—வஜ்ராயுதபாணியான இந்திரனால்; ஹத:—தாக்கப்பட்டு.
இரு கைகளும் அடிமட்டத்திலேயே வெட்டப்பட்டு இரத்தம் பெருக்கெடுத்தோடியதால், விருத்ராசுரன் இந்திரனால் இறக்கைகள் வெட்டப்பட்ட ஒரு பறக்கும் மலைபோல் மிகவும் அழகாக காணப்பட்டான்.
பதங்கள் 6.12.27 – 6.12.29
மஹா-ப்ராணோ மஹா-வீர்யோ மஹா-ஸர்ப்ப இவ த்விபம்
க்ருத் வாதராம் ஹனும் பூமௌ தைத்யோ திவி உத்தராம் ஹனும்
நபோ-கம்பீர-வக்த்ரேண லேலிஹோல்பண-ஜிஹ்வயா
தம்ஷ்ட்ராபி: கால-கல்பாபிர் க்ரஸன் இவ ஜகத்-த்ரயம்
அதிமாத்ர-மஹா-காய ஆக்ஷிபம்ஸ் தரஸா கிரீன்
கிரி-ராட் பாத-சாரீவ பத்ப்யாம் நிர்ஜரயன் மஹீம்
ஜக்ராஸ ஸ ஸமாஸாத்ய வஜ்ரிணம் ஸஹ-வாஹனம்
மஹா-ப்ராண:—மிகுந்த தேக பலமுள்ள; மஹா-வீர்ய:—அசாதாரணமான வீரத்தைக் காட்டியபடி; மஹா-ஸர்ப:—மிகப்பெரிய பாம்பு; இவ—போல்; த்விபம்—ஒரு யானை; க்ருத்வா—வைத்து; அதராம்—கீழ்; ஹனும்—தாடையை; பூமௌ—பூமியில்; தைத்ய—அந்த அசுரன்; திவி—ஆகாயத்தில்; உத்தராம் ஹனும்—மேல் தாடையை; நப:—ஆகாயம் போல்; கம்பீர—ஆழமான; வக்த்ரேண—வாயுடன்; லேலிஹ—ஒரு பாம்பு போல்; உல்பண—பயங்கரமான; ஜிஹ்வயா—நாக்குடன்; தம்ஷ்ட்ராபி:—பற்களுடன்; கால-கல்பாபி:—மரணத்தை, அல்லது காலனைப் போலவே; க்ரஸன்—விழுங்கிவிடுவது; இவ—போல்; ஜகத்-த்ரயம்—மூவுலகங்களையும்; அதி-மாத்ர—மிகவும் உயரமான; மஹா-காய:—பெரிய உடல்; ஆக்ஷிபன்—அதிரச் செய்து; தரஸா—பெரும் வலிமையுடன்; கிரீன்—மலைகளை; கிரி-ராட்—இமயமலைகள்; பாத-சாரீ—காலால் நகர்வது; இவ—போல்; பத்ப்யாம்—அவனது கால்களால்; நிர்ஜரயன்—நசுக்கிக்கொண்டு; மஹீம்—பூமியின் பரப்பை; ஜக்ராஸ—விழுங்கிவிட்டான்; ஸ:—அவன்; ஸமாஸாத்ய—அடைந்து; வஜ்ரிணம்—வஜ்ராயுதபாணியான இந்திரனை; ஸஹ-வாஹனம்—அவரது வாகனமான யானையுடன்.
விருத்ராசுரன் தேக பலமும், வசீகர சக்தியும் மிக்கவன், அவன் தன் கீழ்த் தாடையைத் தரையிலும், மேல் தாடையை ஆகாயத்திலும் வைத்தான். அவனது வாய் ஆகாயத்தைப் போலவே மிகவும் ஆழமானதாய் இருந்தது. அவனுடைய நாக்கு ஒரு பெரிய பாம்பை ஒத்திருந்தது. அவன் தன் மரணம் போன்ற கோரப் பற்களினால் முழு பிரபஞ்சத்தையும் விழுங்கிவிட முயல்வதுபோல் காணப்பட்டான். இவ்வாறு பெரும் அசுரனான விருத்ராசுரன் பிரம்மாண்டமான ஒரு உடலை ஏற்று, மலைகளையும் அதிரச் செய்தபடி, இமயமலையே நடந்து வருவது போல் நடந்து வந்து, பூமியின் மேற்பரப்பைத் தன் கால்களால் நசுக்கத் துவங்கினான். அவன் இந்திரன் முன் வந்து, ஒரு பெரிய மலைப்பாம்பு ஒரு யானையை விழுங்குவதுபோல், அவரையும் அவரது வாகனமான ஐராவதத்தையும் விழுங்கினான்.
பதம் 6.12.30
வ்ருத்ர-க்ரஸ்தம் தம் ஆலோக்ய ஸ்ப்ரஜாபதய: ஸுரா:
ஹா கஷ்டம் இதி நிர்விண்ணாஸ் சுக்ருக: ஸமஹர்ஷய:
வ்ருத்ர-க்ரஸ்தம்—விருத்ராசுரனால் விழுங்கப்பட்டதை; தம்—அவர் (இந்திரன்); ஆலோக்ய—கண்டு; ஸ-ப்ரஜாபதய:—பிரம்ம தேவராலும், மற்ற பிரஜாபதிகளாலும்; ஸுரா:—எல்லாத் தேவர்களாலும்; ஹா—ஐயோ; கஷ்டம்—என்ன பேரிடர்; இதி—என்று; நிர்விண்ணா:—மிகவும் வருத்தமடைந்து; சுக்ருசு:—புலம்பினர்; ஸ-மஹா-ரிஷய:—சிறந்த முனிவர்களுடன்.
இந்திரன் அந்த அசுரனால் விழுங்கப்பட்டதைக் கண்ட தேவர்களும், பிரம்மாவும், மற்ற பிரஜாபதிகளும், சிறந்த முனிவர்களும் மிகவும் வருத்தமடைந்து, “ஐயோ! என்ன பேரிடர்! என்ன பேரிடர்| என்று புலம்பினர்.
பதம் 6.12.31
நிகீர்ணோ பி அஸுரேந்ரேண ந மமாதோதரம் கத:
மஹாபுருஷ-ஸன்னத்தோ யோகமாயா-பலேன ச
நிகீர்ண:—விழுங்கப்பட்டார்; அபி—என்ற போதிலும்; அஸுர-இந்ரேண—அசுரர்களில் சிறந்த விருத்ராசுரனால்; ந—இல்லை; மமாத—இறந்தார்; உதரம்—வயிற்றை; கத:—அடைந்து; மஹா-புருஷ— பரமபுருஷராகிய நாராயணரின் கவசத்தினால்; ஸன்னத்த—பாதுகாக்கப்பட்டு; யோக-மாயா-பலேன—தன் சொந்த யோக சக்தியினால்; ச—கூட.
இந்திரன் பெற்றிருந்த பாதுகாப்பளிக்கும் நாராயண கவசமானது, பரமபுருஷராகிய நாராயணருடன் எல்லா வகையிலும் ஒத்தாகும். அந்த கவசத்தினாலும், தன் சொந்த யோக சக்தியினாலும் காக்கப்பட்டிருந்த இந்திரன், விருத்ராசுரனால் விழுங்கப்பட்ட போதிலும், அவனுடைய வயிற்றுக்குள் அவர் மரணம் அடையவில்லை.
பதம் 6.12.32
பித்வா வஜ்ரேண தத்-குக்ஷிம் நிஷ்க்ரம்ய பல-பித் விபு:
உச்சகர்த சிர: சத்ரோர் கிரி-ஸ்ருங்கம் இவௌஜஸா
பித்வா—பிளந்து கொண்டு; வஜ்ரேண—வஜ்ராயுதத்தினால்; தத்-குக்ஷிம்—விருத்ராசுரனின் வயிற்றை; நிஷ்க்ரம்ய—வெளியே வந்து; பல-பித்—பலன் என்ற அசுரனைக் கொன்ற; விபு:—சக்திமிக்க இந்திரன்; உச்சகர்த—வெட்டித் தள்ளினார்; சிர:—தலையை; சத்ரோ:—சத்துருவின்; கிரி-ஸ்ருங்கம்—ஒரு மலைச் சிகரம்; இவ—போன்ற; ஒஜஸா—பெரும் வலிமையுடன்.
சக்தி மிக்கவரும், பலன் என்ற அசுரனைக் கொன்றவருமான இந்திரன், வஜ்ராயுதத்தால் விருத்ராசுரனின் வயிற்றைப் பிளந்து கொண்டு வேகமாக வெளியே வந்து, மலைச்சிகரம் போல் உயர்ந்திருந்த அவனுடைய தலையை உடனே வெட்டித் தள்ளினார்.
பதம் 6.12.33
வஜ்ரஸ் து தத்-கந்தரம் ஆசு-வேக:
க்ருந்தன் ஸமந்தாத் பரிவர்த்தமான:
ன்யபாதயத் தாவத் அஹர்-கணேன
யோ ஜ்யோதிஷாம் அயனே வார்த்ர-ஹத்யே
வஜ்ர:—வஜ்ராயுதம்; து—ஆனால்; தத்-கந்தரம்—அவனது கழுத்தை; ஆசு-வேக:—அதிவேகமாக; க்ருந்தன்—வெட்டிய போதிலும்; ஸமந்தாத்—சுற்றிலும்; பரிவர்த்தமான:—சுழன்று; ன்யபாதயத்—விழச் செய்தது; தாவத்—பல; அஹ:-கணேன—நாட்கள்; ய—எது; ஜ்யோதிஷாம்—சூரிய, சந்திரர்களைப் போன்ற கிரகங்களின்; அயனே—பூமத்திய ரேகைக்கு இருபுறமும் சஞ்சரிப்பதில்; வார்த்ர-ஹத்யே—விருத்ராசுரனைக் கொல்வதற்கு ஏற்ற நேரத்தில்.
வஜ்ராயுதமானது விருத்ராசுரனின் கழுத்தைச் சுற்றிச்சுற்றி வேகமாகச் சுழன்ற போதிலும், அவனுடைய உடலிலிருந்து அவனது தலையை அறுத்தெடுப்பதற்கு ஓராண்டுகாலம், அதாவது 360 நாட்கள் பிடித்தது. அது சூரியனும், சந்திரனும், மற்ற கிரகங்களும் வட திசை மற்றும் தென் திசைப் பயணங்களை முடிக்கும் காலமாகும். பிறகு, விருத்ராசுரன் கொல்லப்பட வேண்டிய நேரம் வந்ததும், அவனது தலை தரையில் வீழ்ந்தது.
பதம் 6.12.34
ததா ச கே துந்துபயோ வினேதுர்
கந்தர்வ-ஸித்தா: ஸமஹர்ஷி-ஸங்கா:
வார்த்ர-க்ன-லிங்கைஸ் தம் அபிஷ்டுவானா
மந்த்ரைர் முதா குஸுமைர் அப்யவர்ஷன்
ததா—அப்பொழுது; ச—கூட; கே—ஆகாயத்திலுள்ள உயர் கிரகங்களில், துந்துபய:—துந்துபிகளை; வினேது:—முழங்கினர்; கந்தர்வ—கந்தவர்களும்; ஸித்தா:—சித்தர்களும்; ஸ-மஹர்ஷி-ஸங்கா:—ரிஷி முனிவர்களின் கூட்டத்துடன்; வார்த்ர-க்ன-லிங்கை:—விருத்ராசுரனைக் கொன்றவரின் வீரத்தைக் கொண்டாடி; தம்—அவரை (இந்திரனை); அபிஷ்டுவானா:—புகழ்ந்து; மந்த்ரை:—பல்வேறு மந்திரங்களால்; முதா—பேரானந்தத்துடன்; குஸுமை:—மலர்களை; அப்யவர்ஷன்—பொழிந்தனர்.
விருத்ராசுரன் கொல்லப்பட்ட பொழுது, சுவர்க்க லோகங்களிலுள்ள கந்தர்வர்களும், சித்தர்களும் மகிழ்ச்சியுடன் துந்துபிகளை முழங்கினர். அவர்கள் விருத்ராசுரனைக் கொன்ற இந்திரனின் வீரத்தை வேத மந்திரங்களால் புகழ்ந்து கொண்டாடி, பேரானந்தத்துடன் அவர் மீது மலர்களைப் பொழிந்தனர்.
பதம் 6.12.35
வ்ருத்ரஸ்ய தேஹான் நிஷ்க்ராந்தம் ஆத்ம-ஜ்யோதிர் அரிந்தம
பஸ்யதாம் ஸர்வ-தேவானாம் அலோகம் ஸமபத்யத
வ்ருத்ரஸ்ய—விருத்ராசுரனின்; தேஹாத்—உடலிலிருந்து; நிஷ்க்ராந்தம்—வெளியே வந்து; ஆத்ம-ஜ்யோதி:—பிரம்ம ஜோதி போல் பிரகாசித்த ஆன்மீக ஆத்மா; அரிம்-தம—எதிரிகளை அடக்குபவரான பரீட்சித்து மகாராஜனே; பஸ்யதாம்—பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது; ஸர்வ-தேவானாம்—எல்லா தேவர்களும்; அலோகம்—பிரம்ம ஜோதியால் நிரப்பட்டிருந்த பரலோகத்தை; ஸமபத்யத—அடைந்தான்.
எதிரிகளை அடக்குபவரான பரீட்சித்து மகாராஜனே, பிறகு விருத்ராசுரனின் உடலிலிருந்து வெளிப்பட்ட உயிர்ப்பொறியானது, பரமபுருஷரின் உலகிற்கு திரும்பிச் சென்றது. இவ்வாறாக அனைத்து தேவர்களும் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவன் பரலோகத்தில் பிரவேசித்து பகவான் சங்கர்ஷணரின் ஒரு சகாவாக மாறினான்.
ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “விருத்ராசுரனின் புகழ்மிக்க மரணம்” எனும் தலைப்பை கொண்ட பன்னிரெண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.