அத்தியாயம் – 11
விருத்தாசுரனின் உன்னத குணங்கள்
பதம் 6.11.1
ஸ்ரீ சுக உவாச
த ஏவம் சம்ஸதோ தர்மம் வச: பத்யுர் அசேதஸ:
நைவாக்ருஹ்ணந்த ஸம்ப்ராந்தா: பலாயன-பரா ந்ருப
ஸ்ரீ-சுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தே—அவர்கள்; ஏவம்—இவ்வாறு; சம்ஸத:—புகழ்ந்து; தர்மம்—தர்மத்தை; வச:—வார்த்தைகள்; பத்யு:—தங்கள் தலைவனின்; அசேதஸ:—மனம் குழம்பியவர்களாக; ந—இல்லை; ஏவ—உண்மையில்; அக்ருஹ்ணந்த—ஏற்றனர்; ஸம்பராந்தா:—அஞ்சினர்; பலாயன-பரா:—ஓட்டம் பிடிக்க எண்ணி; ந்ருப—அரசே.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அரசே, அசுர சேனாதிபதியான விருத்ராசுரன் தனது உபசேனாதிபதிகளுக்கு தர்மத்தை உபதேசித்தான். ஆனால், யுத்தகளத்தை விட்டு ஓட்டம் பிடிக்க எண்ணியிருந்த கோழைகளான அந்த அசுரத் தலைவர்கள் அவனுடைய வார்த்தைகளை ஏற்க இயலாமல் பெரும் அச்சத்திற்குள்ளாயினர்.
பதங்கள் 6.11.2 – 6.11.3
விசீர்யமாணாம் ப்ருதனாம் ஆஸுரீம் அஸுரர்ஷப:
காலானுகூலைஸ் த்ரிதசை: கால்யமானாம் அனாதவத்
த்ருஷ்ட்வாதப்யத ஸங்க்ருத்த இந்ர-சத்ருர் அமர்ஷித:
தான் நிவார்யௌஜஸா ராஜன் நிர்பர்த்ஸ்யேதம் உவாச ஹ
விசீர்யமாணாம்—சிதறடிக்கப்பட்டு; ப்ருதனாம்—சேனை; ஆஸுரீம்—அசுரர்களின்; அஸுர-ரிஷிப:—அசுரர்களில் சிறந்த விருத்ராசுரன்; கால-அனுகூலை:—காலத்தினால் உண்டான சூழ்நிலைகளைத் தொடர்ந்து; த்ரி-தசை:—தேவர்களால்; கால்யமானாம்—விரட்டப்பட்டதை; அனாத-வத்—அநாதைகள் போல்; த்ருஷ்ட்வா—கண்டு; அதப்யத—வேதனையடைந்தான்; ஸங்க்ருத்த:—மிகவும் கோபமடைந்த; இந்ர-சத்ரு:—இந்திரனின் சத்துருவான விருத்ராசுரன்; அமர்ஷித:—பொறுக்க இயலாமல்; தான்—அவர்களை (தேவர்களை); நிவார்ய—தடுத்து; ஓஜஸா—பெரும் வலிமையுடன்; ராஜன்— பரீட்சித்து மகாராஜனே; நிர்பர்த்ஸ்ய—கண்டித்து; இதம்—இதை; உவாச—கூறினான்; ஹ—உண்மையில்.
பரீட்சித்து மகாராஜனே, இந்த அனுகூலமான நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட தேவர்கள், பின்னாலிருந்து அசுர சேனைகளைத் தாக்கி, தலைவனற்ற சேனைபோல் அவர்களை இங்குமங்கும் சிதறியோடச் செய்தனர். அசுரர்களில் சிறந்தவனும், இந்திரனின் சத்துரு என்று அழைக்கப்பட்டவனுமான விருத்ராசுரன், தன் சேனையின் பரிதாபமான நிலையைக் கண்டு மிகவும் வருந்தினான். வருந்தத்தக்க இந்நிலையைப் பொறுக்க இயலாத அவன், கோபத்துடன் பின்வரும் வார்த்தைகளைக் கூறி, கடுமையாக தேவர்களைக் கண்டனம் செய்தான்.
பதம் 6.11.4
கிம் வா உச்சரிதைர் மாதுர் தாவத்பி: ப்ருஷ்டதோ ஹதை:
ந ஹி பீத-வத: ஸ்லாக்யோ ந ஸ்வர்க்ய: சூர-மானினாம்
கிம்—என்ன பயன்; வ:—உங்களுக்கு; உச்சரிதை:—மலத்தைப் போன்றவர்களால்; மாது:—தாயின்; தாவத்பி:—ஓட்டம் பிடிக்கும்; ப்ருஷ்டத:—பின்னாலிருந்து; ஹதை:—கொல்லப்படுவது; ந—இல்லை; ஹி—நிச்சயமாக; பீத-வத:—அஞ்சுபவனைக் கொல்வது; ஸ்லாக்ய:—புகழுக்குரியது; ந—இல்லை; ஸ்வர்க்ய:—சுவர்க்கலோகங்களுக்கு உயர்த்தக் கூடியது; சூர—மானினாம்—தங்களை வீரர்களாகக் கருதுபவர்களின்.
தேவர்களே, இந்த அசுர வீரர்களின் பிறப்பு பயனில்லாமற் போயிற்று. உண்மையில் இவர்கள் தங்களுடைய தாய்களின் உடல்களிலிருந்து மலத்தைப் போலவே வெளிவந்துள்ளனர். பயந்து ஓடும் இந்த எதிரிகளைப் பின்னாலிருந்து கொல்வதால் என்ன பயன்? தன்னை ஒரு வீரனென்று கருதுபவன், உயிரை இழக்க அஞ்சும் ஓர் எதிரியை கொல்லக்கூடாது. இத்தகைய கொலை புகழுக்குரியதும் இல்லை. சுவர்க்க லோகங்களுக்கு ஒருவனை உயர்த்தக் கூடியதுமில்லை.
பதம் 6.11.5
யதி வ: ப்ரதனே ஸ்ரத்தா ஸாரம் வா க்ஷுல்லகா ஹ்ருதி
அக்ரே திஷ்டத மாத்ரம் மே ந சேத் க்ராம்ய-ஸுகே ஸ்ப்ருஹா
யதி—என்றால்; வ:—உங்களுடைய; ப்ரதனே—யுத்தத்தில்; ஸ்ரத்தா—நம்பிக்கை; ஸாரம்—பொறுமை; வா—அல்லது; க்ஷுல்லகா:—அற்பமானவர்களே; ஹ்ருதி—இதயத்தில்; அக்ரே—முன்னால்; திஷ்டத—நில்லுங்களேன்; மாத்ரம்—நொடிப்பொழுது; மே—எனக்கு; ந—இல்லை; சேத்—என்றால்; க்ராம்ய-ஸுகே—புலன் நுகர்வில்; ஸ்ப்ருஹா—ஆசை.
அற்ப தேவர்களே, உங்களுடைய வீரத்தில் உண்மையாகவே நம்பிக்கை இருக்குமானால், உங்களுடைய இதயங்களில் உங்களுக்குப் பொறுமை இருக்குமானால், மேலும் புலன் நுகர்வில் நீங்கள் பேராசை கொண்டிருக்கவில்லை என்றால், தயவுசெய்து நொடிப்பொழுது என்முன் நில்லுங்கள்.
பதம் 6.11.6
ஏவம் ஸுர கணான் க்ருத்தோ பீஷயன் வபுஷா ரிபூன்
வ்யனதத் ஸுமஹா-ப்ராணோ யேன லோகா விசேதஸ:
ஏவம்—இவ்வாறு; ஸுர-கணான்—தேவர்களை; க்ருத்த:—மிகவும் கோபங் கொண்டு; பீஷயன்—பீதியடையச் செய்து; வபுஷா—அவனது உடலால்; ரிபூன்—அவனது பகைவர்களை; வ்யனதத்—கர்ஜித்தான்; ஸு-மஹா-ப்ராண:—மிகவும் சக்திவாய்ந்த விருத்ராசுரன்; யேன—எதனால்; லோகா:—எல்லா மனிதர்களும்; விசேதஸ:—மூர்ச்சையடைந்தனர்.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: மிகவும் சக்திவாய்ந்த வீரனும், கோபம் கொண்டவனுமான விருத்ராசுரன், தனது வலிமை மிக்க, பருத்த உடலுடன் தேவர்களை பயமுறுத்தினான். அவன் எதிரொலிக்கும் குரலுடன் கர்ஜித்தபொழுது கிட்டத்தட்ட அனைத்து ஜீவராசிகளுமே மூர்ச்சையடைந்து விட்டன.
பதம் 6.11.7
தேன தேவ கணா: ஸர்வே வ்ருத்ர-விஸ்ஃபோடனேன வை
நிபேதுர் மூர்ச்சிதா பூமொ யதைவாசனினா ஹதா:
தேன—அதனால்; தேவ-கணா:—தேவர்கள்; ஸர்வே—அனைவரும்; வ்ருத்ர-விஸ்ஃபோடனேன—விருத்ராசுரனின் கொடிய கர்ஜனையை; வை—உண்மையில்; நிபேது:—விழுந்தனர்; மூர்ச்சித:—மூர்ச்சித்து; பூமெள—தரையில்; யதா—அதுபோல்; ஏவ—உண்மையில்; அசனினா—இடியால்; ஹதா:—தாக்கப்பட்டது போல்.
விருத்ராசுரனின் சிங்கத்தையொத்த கொடிய கர்ஜனையைக் கேட்ட தேவர்கள் அனைவரும் மூர்ச்சையடைந்து, இடி விழுந்தவர்கள் போல் தரையில் விழுந்தனர்.
பதம் 6.11.8
மமர்த பத்ப்யாம் ஸுர-ஸைன்யம் ஆதுரம்
நிமீலிதாக்ஷம் ரண-ரங்க துர்மத:
காம் கம்பயன் உத்யத-சூல ஒஜஸா
நாலம் வனம் யூத-பதிர் யதோன்மத:
மமர்த—நசுக்கினான்; பத்ப்யாம்—தன் கால்களால்; ஸுர-ஸைன்யம்—தேவர்களின் சேனையை; ஆதுரம்—மிகவும் அஞ்சிய; நிமீலித-அக்ஷம்—அவர்களது கண்களை மூடிக்கொண்டு; ரண-ரங்க-துர்மத:—போர்க்களத்தில் கர்வமாக; காம்—பூமியை; கம்பயன்—அதிரச் செய்தபடி; உத்யத-சூல:—தன் சூலத்தை எடுத்து; ஓஜஸா—தன் பலத்தினால்; நாலம்—மூங்கில்களின்; வனம்—காடு; யூத-பதி:—ஒரு யானை; யதா—போல; உன்மத:—மதம்பிடித்த.
விருத்ராசுரன் தனது சூலாயுதத்தை கையிலெடுத்துக் கொண்டு, தன்னுடைய பெரும் பலத்தினால் பூமியை அதிரச் செய்தபடி, அச்சத்தினால் கண்களை மூடிக்கொண்ட தேவர்களை யுத்த களத்தில், மதம் பிடித்த யானையொன்று காட்டில் மூங்கில்களை நசுக்குவது போல், தன் கால்களால் நசுக்கினான்.
பதம் 6.11.9
விலோக்ய தம் வஜ்ர தரோ ‘தயமர்ஷித:
ஸ்வ-சத்ரவே ‘பித்ரவதே மஹா-கதாம்
சிக்ஷேப தாம் ஆபததீம் ஸுதுஹ்ஸஹாம்
ஜக்ராஹ வாமேன கரேண லீலயா
விலோக்ய—கண்டு; தம்—அவனை (விருத்ராசுரனை); வஜ்ர-தர:—வஜ்ராயுதபாணி (இந்திரன்); அதி—மிகவும்; அம்ரஷித:—பொறுமையிழந்து; ஸ்வ—தன் சொந்த; சத்ரவே—சத்துருவை நோக்கி; அபித்ரவதே—ஓடிய; மஹா—கதாம்—சக்திமிக்க கதையை; சிக்ஷேப—வீசினார்; தாம்—அதை (கதையை); ஆபுததீம்—அவனை நோக்கிப் பறந்து சென்ற; ஸு-துஹ்ஸஹாம்—தடுப்பதற்கு மிகக் கடினமான; ஜக்ராஹ—பிடித்தான்; வாமேன—இடது; கரேண—கையினால்; லீலயா—மிகச் சுலபமாக.
விருத்ராசுரனின் போக்கைக் கண்ட தேவேந்திரன் பொறுமை இழந்து, தடுப்பதற்கு மிகக் கடினமான தனது சக்தி வாய்ந்த கதைகளுள் ஒன்றை அவன் மேல் வீசியெறிந்தார். ஆனால் விருத்ராசுரனை நோக்கிப் பறந்து சென்ற அந்த கதையை அவன் சுலபமாகத் தனது இடது கையினால் பிடித்துவிட்டான்.
பதம் 6.11.10
ஸ இந்ர-சத்ரு: குபிதோ ப்ருசம் தயா
மஹேந்ர-வாஹம் கதயோரு-விக்ரம:
ஜகான கும்ப-ஸ்தல உன்னதன் ம்ருதே
தத் கர்ம ஸர்வே ஸமபூஜயன் ந்ருப
ஸ:—அந்த; இந்ர-சத்ரு:—விருத்ராசுரன்; குபித:—கோபங்கொண்டு; ப்ருசம்—மிகவும்; தயா—அதனால்; மஹேந்ர-வாஹம்—இந்திரனின் வாகனமான யானையை; கதயா—கதையால்; உரு-விக்ரம:—பெரும் வலிமைக்குப் பிரசித்தி பெற்ற; ஜகான—தாக்கினான்; கும்ப-ஸ்தலே—தலையில்; உன்னதன்—உரக்கப் பிளிறியது; ம்ருதே—அப்போரில்; தத் கர்ம—அச்செயலை; ஸர்வே—(இரு பக்கத்திலுள்ள) எல்லா வீரர்களும்; ஸமபூஜயன்—போற்றினர்; ந்ருப—பரீட்சித்து மகாராஜனே.
பரீட்சித்து மகாராஜனே, இந்திரனின் சத்துருவான வலிமைமிக்க அந்த விருத்ராசுரன் கோபத்துடன் இந்திரனுடைய யானையின் தலையை அந்த கதையால் தாக்கினான். அது யுத்தகளத்தில் பேரொலியை எழுப்பியது. இந்த வீரச் செயலுக்காக இரு பக்கத்து வீரர்களும் அவனைப் போற்றினர்.
பதம் 6.11.11
ஐராவதோ வ்ருத்ர கதாபிம்ருஷ்டோ
விகூர்ணிதோ ‘த்ரி: குலிசாஹதோ யதா
அபாஸரத் பின்ன முக: ஸஹேந்ரோ
முஞ்சன் அஸ்ருக் ஸப்த தனுர் ப்ருசார்த:
ஐராவத:—இந்திரனின் யானையான ஐராவதம்; வ்ருத்ர-கதா-அபிம்ருஷ்ட:—விருத்ராசுரனின் கையிலுள்ள கதையால் தாக்கப்பட்டு; விகூர்ணித:—குலுங்கி; அத்ரி:—ஒரு மலை; குலிச—இடியால்; ஆஹத:—தாக்கப்பட்டது; யதா—போல; அபாஸரத்—பின்னால் தள்ளப்பட்டது; பின்ன-முக:—வாய் கிழிந்து; ஸஹ-இந்ர:—இந்திரனுடன்; முஞ்சன்—கக்கியபடி; அஸ்ருக்—இரத்தம்; ஸப்த-தனு:—ஏழு விற்களால் அளக்கப்பட்ட தூரம் (கிட்டத்தட்ட பதினான்கு கஜ தூரம்); ப்ருச—மிகவும் கடுமையாக; ஆர்த:—வேதனைப்பட்டது.
விருத்ராசுரனின் கையிலிருந்த கதையால் தாக்குண்ட ஐராவத யானை, இடிவிழுந்த மலைபோல், மிகுந்த வேதனையுடனும், கிழிந்த வாயிலிருந்து இரத்தம் கக்கியபடி பதினான்கு கஜ தூரத்திற்குப் பின்னால் தள்ளப்பட்டு, பெரும் வேதனையுடன் இந்திரனோடு தரையில் விழுந்தது.
பதம் 6.11.12
ந ஸன்ன வாஹாய விஷண்ண சேதஸே
ப்ராயுங்க்த பூய: ஸ கதாம் மஹாத்மா
இந்ரோ ‘ம்ருத ஸ்யந்தி கராபிமர்ச
வீத-வ்யத-க்ஷத-வாஹோ ‘வதஸ்தே
ந—இல்லை; ஸன்ன—சோர்வுற்றது; வாஹாய—அவரது வாகனம்; விஷண்ண-சேதஸே—மனவருத்தமடைந்து; ப்ராயுங்க்த—உபயோகித்தான்; பூய:—மீண்டும்; ஸ:—அவன் (விருத்ராசுரன்); கதாம்—கதையை; மஹா-ஆத்மா—மகாத்மாவான; இந்ர:—இந்திரன்; அம்ருத-ஸ்யந்தி-கர—அமிர்தம் உண்டாக்கும் அவரது கையின்; அபிமர்ச—ஸ்பரிசத்தால்; வீத—விடுவிக்கப்பட்டது; வ்யத—வேதனையிலிருந்தும்; க்ஷத—காயங்களிலிருந்தும்; வாஹ:—அவரது யானை வாகனம்: அவதஸ்தே—அங்கு நின்றது.
இந்திரனின் வாகனமான அந்த யானை காயமடைந்து சோர்வுற்றதையும், தனது வாகனம் அவ்வாறு தாக்கப்பட்டதால் இந்திரன் வருத்தம் அடைந்ததையும் கண்ட சிறந்த ஆத்மாவான விருத்ராசுரன், தர்மத்தை அனுஷ்டித்து, கதையால் இந்திரனை மீண்டும் தாக்காது விட்டான். அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட இந்திரன், தனது அமிர்தம் உண்டாக்கும் கையினால் அந்த யானையைத் தொட்டு அதன் வேதனையைப் போக்கி, அதன் காயங்களை ஆற்றினார். பிறகு அந்த யானையும், இந்திரனும் மௌனமாக நின்றனர்.
பதம் 6.11.13
ஸ தம் ந்ருபேந்ராஹவ காம்யயா ரிபும்
வஜ்ராயுதம் ப்ராத்ரு-ஹணம் விலோக்ய
ஸ்மரம்ஸ் ச தத்-கர்ம ந்ரு-சம்ஸம் அம்ஹ:
சோகேன மோஹேன ஹஸஞ் ஜகாத
ஸ:—அவன்; தம்—அவரை (இந்திரனை); ந்ருப-இந்ர— பரீட்சித்து மகாராஜனே; ஆஹவ-காம்யயா—போரிடும் விருப்பத்துடன்; ரிபும்—அவனது பகைவன்; வஜ்ர-ஆயுதம்—(ததீசியின் எலும்புகளிலிருந்து செய்யப்பட்ட) வஜ்ராயுதமுடைய; ப்ராத்ரு-ஹணம்—தன் சகோதரனைக் கொன்றவரை; விலோக்ய—கண்டு; ஸ்மரன்—நினைந்து; ச—மேலும்; தத்-கர்ம—அவரது செயல்களை; ந்ரு-சம்சம்—கொடூரமான; அம்ஹ:—ஒரு பெரும் பாவத்தை; சோகேன—சோகத்துடன்; மோஹேன—மோகத்தால்; ஹஸன்—சிரித்துக் கொண்டு; ஜகாத—கூறினான்.
அரசே, தன் சகோதரனைக் கொன்றவரும், தன் பகைவருமான இந்திரன், யுத்தம் செய்யும் விருப்பத்துடன் கையில் வஜ்ராயுதத்துடன் தன் முன் நிற்பதைக் கண்ட மகா வீரனான விருத்ராசுரன், இந்திரன் தன் சகோதரனை கொடூரமாகக் கொன்ற விதத்தை நினைவு கூர்ந்தான். இந்திரனின் பாவச் செயல்களை நினைந்து சோகமும், மோகமும் மேலிட கேலியாக சிரித்துக்கொண்டு பின்வருமாறு கூறலானான்.
பதம் 6.11.14
ஸ்ரீ-வ்ருத்ர உவாச
திஷ்ட்யா பவான் மே ஸமவஸ்திதோ ரிபுச்
யோ ப்ரஹ்ம-ஹா குரு-ஹா ப்ராத்ரு-ஹா ச
திஷ்ட்யான்ருணோ ‘த்யாஹம் அஸத்தம த்வயா
மச்-சூல-நிர்பின்ன-த்ருஷத்-த்ருதசிராத்
ஸ்ரீ-வ்ருத்ர: உவாச—சிறந்த வீரனான விருத்ராசுரன் கூறினான்; திஷ்ட்யா—நல்லதிர்ஷ்டத்தினால்; பவான்—நீ; மே—எனக்கு; ஸம வஸ்தித:—(முன்னால்) இருக்கிறாய்; ரிபு:—என் எதிரியான; ய:—யார்; ப்ரஹ்ம-ஹா—ஒரு பிராமணரைக் கொன்றவன்; குரு-ஹா—குருவைக் கொன்றவன்; ப்ராத்ரு-ஹா—என் சகோதரனைக் கொன்றவன்; ச—கூட; திஷ்ட்யா—நல்ல அதிர்ஷ்டத்தினால்; அன்ருண:—(என் சகோதரனிடம் பட்ட) கடனை தீர்த்துக்கொள்ளப் போகிறேன்; அத்ய—இன்று; அஹம்—நான்; அஸத்-தம—மிகவும் வெறுக்கத்தக்கவனே; த்வயா—உன் மூலமாக; மத்—சூல—என் சூலத்தால்; நிர்பின்ன—பிளக்கப்பட்டு; த்ருஷத்—கல் போன்ற; ஹ்ருதா—யாருடைய இதயம்; அசிராத்—விரைவில்
ஸ்ரீ விருத்ராசுரன் கூறினான்: ஒரு பிராமணனைக் கொன்றவனும், தன் குருவைக் கொன்றவனும், என் சகோதரனைக் கொன்றவனுமான நீ, நல்ல அதிர்ஷ்டத்தினால், என் எதிரியாக இப்பொழுது என் முன் நேருக்கு நேராக நின்று கொண்டிருக்கிறாய். மிகவும் வெறுக்கத் தகுந்தவனே, கல்லுக்கொப்பான உன் இதயத்தை எனது சூலத்தால் பிளந்து, என் சகோதரனிடம் பட்ட கடனை நான் தீர்த்துக் கொள்ளப் போகிறேன்.
பதம் 6.11.15
யோ நோ ‘க்ரஜஸ்யாத்ம-விதோ த்விஜாதேர்
குரோர் அபாபஸ்ய ச தீக்ஷிதஸ்ய
விஸ்ரப்ய கட்கேன சிராம்ஸி அவ்ருஸ்சத்
பசோர் இவாகருண: ஸ்வர்க-காம:
ய:—யார்; ந—எனது: அக்ர-ஜஸ்ய—தமையனின்; ஆத்ம-வித:—முழு தன்னுணர்வு பெற்றவர்; த்வி-ஜாதே:—ஒரு தகுதியுள்ள பிராமணர்; குரோ:—உனது ஆன்மீக குரு; அபாபஸ்ய—பாவமற்றவர்; ச—கூட; தீக்ஷிதஸ்ய—உனது யக்ஞத்தைச் செய்ய நியமிக்கப்பட்டவர்; விஸ்ரப்ய—நம்பிக்கையுடன்; கட்கேன—உன் வாளால்; சிராம்ஸி—தலைகளை; அவ்ருஸ்சத்—துண்டித்து விட்டாய்; பசே—ஒரு மிருகத்தின்; இவ—போல்; அகருண:—இரக்கமற்ற; ஸ்வர்க-காம:—சுவர்க்க லோகங்களுக்கு ஆசைப்பட்டு.
சுவர்க்கலோகங்களில் வாழும் ஒரே ஆசையினால், தன்னுணர்வு பெற்றவரும், பாவமற்றவரும், தகுதியுடைய பிராமணரும், உனது தலைமைப் புரோகிதராக நியமிக்கப்பட்டவருமான என் தமையனை நீ கொன்று விட்டாய். உனக்கு குருவாக இருந்த அவரிடம் யாகப் பொறுப்பை நீ ஒப்படைத்திருந்தாய். இருப்பினும் ஒருவன் ஒரு மிருகத்தைக் கொலை செய்வது போல் அவரது தலைகளை நீ இரக்கமின்றி துண்டித்து விட்டாய்.
பதம் 6.11.16
ஸ்ரீ-ஹ்ரீ-தயா கீர்த்திபிர் உஜ்ஜிதம் த்வாம்
ஸ்வ-கர்மணா புருஷாதைஸ் ச கர்ஹ்யம்
க்ருச்ரேண மச்-சூல-விபின்ன-தேஹம்
அஸ்ப்ருஷ்ட-வஹ்ணிம் ஸமதந்தி க்ருத்ரா:
ஸ்ரீ—செல்வம் அல்லது அழகு; ஹ்ரீ—வெட்கம்; தயா—கருணை; கீர்த்திபி:—புகழ்; உஜ்ஜிதம்—இழந்து; த்வாம்—நீ; ஸ்வ-கர்மணா—உன் சொந்த செயல்களால்; புருஷ-அதை:—இராட்சஸர்களால்; ச—மேலும்; கர்ஹ்யம்—நிந்திக்கத் தக்கவன்; க்ருச்ரேண—மிகுந்த சிரமத்துடன்; மத்-சூல—என் சூலத்தால்; விபின்ன—பிளக்கப்பட்ட; தேஹம்—உன் உடலை; அஸ்ப்ருஷ்ட-வஹ்னிம்—நெருப்பால் கூட தீண்டப்படாத; ஸமதந்தி—தின்னும்; க்ருத்ரா:—கழுகுகள்.
இந்திரா, நீ வெட்கம், கருணை, புகழ், நல்லதிர்ஷ்டம் ஆகிய அனைத்தையும் இழந்துவிட்டாய். உன்னுடைய கருமங்களின் பலனாக இந்த நற்குணங்களையெல்லாம் இழந்துவிட்ட நீ இராட்சஸர்களாலும் நிந்திக்கத்தக்கவனாவாய். இப்பொழுது என் சூலத்தால் உன் உடலை நான் பிளக்கப்போகிறேன். பெரும் வேதனையுடன் நீ மடிந்த பிறகு நெருப்பு கூட உன்னைத் தீண்டாது கழுகுகள் மட்டுமே உன் உடலைத் தின்னும்.
பதம் 6.11.17
அன்யே ‘நு யே த்வேஹ ந்ரு-சம்ஸம் அக்ஞா
யத் உத்யதாஸ்த்ரா: ப்ரஹரந்தி மஹ்யம்
தைர் பூத-நாதான் ஸகணான் நிசாத-
த்ரிசூல-நிர்பின்ன-கலைர் யஜாமி
அன்யே—மற்றவர்களை; அனு—பின்பற்றும்; யே—யார்; த்வா—நீ; இஹ—இவ்விஷயத்தில்; ந்ரு-சம்ஸம்—மிகக் கொடூரமானவன்; அக்ஞா:—என் வீரத்தை அறியாதவர்கள்; யத்—என்றால்; உத்யத-அஸ்த்ரா:—தங்களுடைய உயர்த்திய வாள்களுடன்; ப்ரஹரந்தி—தாக்குவார்கள்; மஹ்யம்—என்னை; தை:—அவற்றைக் கொண்டு; பூத-நாதான்—பைரவரைப் போன்ற பேய்களின் தலைவர்களுக்கு; ஸ-கணான்—அவர்களுடைய கூட்டங்களால்; நிசாத—தீட்டப்பட்ட; த்ர-சூல—திரிசூலத்தினால்; நிர்பின்ன—துண்டிக்கப்பட்டு அல்லது துளைக்கப்பட்டு; கலை:—கழுத்துகள்; யஜாமி—நான் பலி கொடுக்கப் போகிறேன்.
இயற்கையாகவே நீ கொடூரமானவன். மற்ற தேவர்கள் உன்னைப் பின்பற்றி, உயர்த்திய ஆயுதங்களுடன் என்னைத் தாக்குவார்களானால், கூர்மையான இச்சூலத்தினால் அவர்களுடைய தலைகளை நான் துண்டித்து விடுவேன். அத்தலைகளைக் கொண்டு பைரவருக்கும், பூதங்களுக்கும், மற்ற பூத கணங்களுக்கும் நான் பலி கொடுப்பேன்.
பதம் 6.11.18
அதோ ஹரே மே குலிசேன வீர
ஹர்தா ப்ரமத்யைவ சிரோ யதீஹ
தத்ரான்ருணோ பூத-பலிம் விதாய
மனஸ்வினாம் பாத-ரஜ: ப்ரபத்ஸ்யே
அதோ—இல்லையெனில்; ஹரே—இந்திரனே; மே—என்னுடைய; குலிசேன—உன் வஜ்ராயுதத்தால்; வீர—சிறந்த வீரனே; ஹர்தா—நீ துண்டிப்பாய்; ப்ரமத்ய—என் சேனையை அழித்து; ஏவ—நிச்சயமாக; சிர:— தலையை; யதி—என்றால்; இஹ—இப்போரில்; தத்ர—அவ்வாறெனில்; அண்ருண:—இவ்வுலகக் கடன்களிலிருந்து விடுபட்டு; பூத-பலிம்—ஜீவராசிகளுக்கு ஒரு பரிசை; விதாய—ஏற்பாடு செய்து; மனஸ்வினாம்—நாரதரைப் போன்ற சிறந்த முனிவர்களின்; பாத-ரஜ:—தாமரைப் பாதங்களின் புழுதியை; ப்ரபத்ஸ்யே—நான் அடைவேன்.
ஆனால் இந்த யுத்தத்தில் நீ உன் வஜ்ராயுதத்தினால் என் தலையைத் துண்டித்து, என் வீரர்களையும் கொன்று விடுவாயானால், இந்திரனே, சிறந்த வீரனே, (குள்ள நரிகள், கழுகுகள் போன்ற) பிற ஜீவன்களுக்கு நான் எனது உடலைப் பெரும் மகிழ்ச்சியுடன் இரையாக்கி விடுவேன். இவ்விதமாக என் கர்ம விளைவுகளுக்குக் கட்டுப்பட்ட நிலையிலிருந்து விடுபட்டு, நாரத முனிவரைப் போன்ற சிறந்த பக்தர்களின் பாததுளியைப் பெறும் பாக்கியத்தை நான் அடைவேன்.
பதம் 6.11.19
ஸுரேச கஸ்மான் ந ஹிணோஷி வஜ்ரம்
புர: ஸ்திதே வைரிணி மய் அமோகம்
மா ஸம்சயிஷ்டா ந கதேவ வஜ்ர:
ஸ்யான் நிஷ்ஃபல: க்ருபணார்த்தேவ யாச்ஞா
ஸுர-ஈச—தேவராஜனே; கஸ்மாத்—ஏன்; ந—இல்லை; ஹிணோஷி—வீசினாய்; வஜ்ரம்—வஜ்ராயுதத்தை; புர:-ஸ்திதே—முன்னால் நிற்கிறேன்; வைரிணி—உன் எதிரி; மயி—என்மேல்; அமோகம்—என்றும் தவறாததை (உன் வஜ்ராயுதத்தை); மா—வேண்டாம்; ஸம்சயிஷ்டா:—சந்தேகிக்க; ந—இல்லை; கதா இவ—கதை போல்; வஜ்ர:—வஜ்ராயுதம்; ஸ்யாத்—என்றாலும்; நிஷ்ஃபல:—பயனற்றுப் போனது; க்ருபண—உலோபியிடமிருந்து; அர்த்தா—பணம்; இவ—போல்; யாச்ஞா—யாசித்த.
தேவராஜனே, உன் எதிரியான நான் உன் எதிரிலேயே நிற்கிறேன். நீ ஏன் உன் வஜ்ராயுதத்தை என் மீது பிரயோகிக்காமல் இருக்கிறாய்? உன் கதையால் நீ என்னைத் தாக்கியது, உலோபியிடம் யாசித்த பணம் போல் பயனற்றுப் போனது என்றாலும், நீ வைத்திருக்கும் வஜ்ராயுதம் அவ்வாறு பயனற்றுப் போகாது. இதில் சிறிதும் சந்தேகம் வேண்டாம்.
பதம் 6.11.20
நனு ஏஷ வஜ்ரஸ் தவ சக்ர தேஜஸா
ஹரேர் ததீசேஸ் தபஸா ச தேஜித:
தேனைவ சத்ரும் ஜஹி விஷ்ணு-யந்த்ரிதோ
யதோ ஹரிர் விஜய: ஸ்ரீர் குணாஸ் தத:
நனு—நிச்சயமாக; ஏஷ:—இந்த; வஜ்ர:—வஜ்ராயுதம்; தவ—உன்னுடைய; சக்ர—இந்திரனே; தேஜஸா—சக்தியினால்; ஹரே:—பரமபுருஷரான பகவான் விஷ்ணுவின்; ததீசே:—ததீசியின்; தபஸா—தவங்களினால்; ச—மேலும்; தேஜித:—சக்தியளிக்கப்பட்டுள்ள; தேன—அதனால்; ஏவ—நிச்சயமாக; சத்ரும்—உன் எதிரியை; ஜஹி—கொன்றுவிடு; விஷ்ணு-யந்த்ரித:—பகவான் விஷ்ணுவால் உத்தரவிடப்பட்டு; யத:—எதெல்லாம்; ஹரி:—பகவான் விஷ்ணு; விஜய:—வெற்றி; ஸ்ரீ:—செல்வங்கள்; குணா:—பிற நற்குணங்கள்; தத:—அங்கு.
சுவர்க்க ராஜனான இந்திரனே, என்னைக் கொல்வதற்காக நீ வைத்துள்ள வஜ்ராயுதம் பகவான் விஷ்ணுவின் சக்தியினாலும், ததீசியின் தவ வலிமையினாலும் சக்தியளிக்கப்பட்டுள்ளது. பகவான் விஷ்ணுவின் உத்தரவுப்படி என்னைக் கொல்வதற்காகவே நீ இங்கு வந்திருப்பதால், உன்னுடைய வஜ்ராயுதத்தினால் நான் கொல்லப்படுவேன் என்பதில் ஐயமில்லை. பகவான் விஷ்ணு உன் பக்கம் இருக்கிறார். ஆகவே வெற்றி, ஐசுவரியம், நற்குணங்கள் ஆகிய அனைத்தையும் நீ பெறுவது நிச்சயம்.
பதம் 6.11.21
அஹம் ஸமாதாய மனோ யதாஹ ந:
ஸங்கர்ஷணஸ் தச்-சரணாரவிந்தே
த்வத்-வஜ்ர-ரம்ஹோ-லுலித-க்ராம்ய-பாசோ
கதிம் முனேர் யாமி அபவித்த-லோக:
அஹம்—நான்; ஸமாதாய—நிலைக்கச் செய்து; மன:—மனதை; யதா—போல்; ஆஹ—கூறியது; ந:—என்னுடைய; ஸங்கர்ஷண:—பகவான் சங்கர்ஷணர்; தத்-சரண-அரவிந்தே—அவரது தாமரைப் பாதங்களில்; த்வத்-வஜ்ர—உன் வஜ்ராயுதத்தின்; ரம்ஹ:—வேகத்தினால்; லுலித—பிளக்கப்பட்டு; க்ராம்ய—பெளதிக பற்றின்; பாச:—பாசம்; கதிம்—கதியை; முனே:—நாரதர் போன்ற பக்தர்களின்; யாமி—நான் அடைவேன்; அபவித்த—கைவிட்டு; லோக:—(ஒருவன் நிலையற்றவைகளை விரும்பும்) இந்த ஜட உலகை.
உன்னுடைய வஜ்ராயுதத்தின் வேகத்தினால் நான் பௌதிக பந்தத்திலிருந்தும், பெளதிக ஆசைகளைக் கொண்ட இவ்வுடலிலிருந்தும், இவ்வுலகிலிருந்தும் விடுபடுவேன். நான் பகவான் சங்கர்ஷணர் கூறியதுபோல், நாரதரைப் போன்ற சிறந்த முனிவர்களின் கதியை அடைவேன்.
பதம் 6.11.22
பும்ஸாம் கிலைகாந்த-தியாம் ஸ்வகானாம்
யா: ஸம்பதோ திவி பூமௌ ரஸாயாம்
ந ராதி யத் த்வேஷ உத்வேக ஆதிர்
மத: கலிர் வ்யஸனம் ஸம்ப்ரயாஸ:
பும்ஸாம்—அவர்களுக்கு: கில—நிச்சயமாக; ஏகாந்த-தியாம்—ஆன்மீக உணர்வில் முன்னேறிய; ஸ்வகானாம்—பரமபுருஷரால் தமக்குச் சொந்தமானவர்களாக அறியப்பட்ட; யா:—எவை; ஸம்பத:—ஐசுவரியங்கள்; திவி—மேல்கிரக அமைப்புக்களில்; பூமௌ—மத்திய லோகங்களில்; ரஸாயாம்—கீழ் லோகங்களில்; ந—இல்லை; ராதி—அருள்கிறார்; யத்—எதிலிருந்து; த்வேஷ:—பகை; உத்வேக:—வருத்தம்; ஆதி:—மனக்கவலை; மத:—கர்வம்; கலி:—சண்டை; வ்யஸனம்—இழப்பினால் உண்டான துக்கம்; ஸம்ப்ரயாஸ:—பெருமுயற்சி.
பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் பூரண சரணடைந்தவர்களும், அவரது தாமரைப் பாதங்களையே எப்பொழுதும் நினைப்பவர்களும், பகவானால் அவரது அந்தரங்க சேவகர்களாக அல்லது உதவியாளர்களாக அங்கீகரிக்கப்படுகின்றனர். இத்தகைய சேவகர்களுக்கு இந்த ஜட உலகைச் சேர்ந்த மேல், கீழ் மற்றும் மத்திய கிரக அமைப்புக்களில் உள்ள செல்வங்களை பகவான் கொடுப்பதே இல்லை. மேற்கூறிய கிரக அமைப்புகளுள் ஒன்றில் ஒருவன் பெளதிக ஐசுவரியத்தை அடையும்பொழுது, இயல்பாகவே அது அவனுடைய பகை, வருத்தம், கவலை, கர்வம், போரில் ஈடுபாடு ஆகியவற்றை அதிகரிக்கிறது. இவ்விதமாக ஒருவன் தன் உடைமைகளை அதிகரிப்பதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் அதிக முயற்சியை மேற்கொள்வதுடன், அவற்றை இழக்கும்பொழுது பெருந்துன்பத்திற்கும் உள்ளாகிறான்.
பதம் 6.11.23
த்ரை-வர்கிகாயாஸ-விகாதம் அஸ்மத்-
பதிர் விதத்தே புருஷஸ்ய சக்ர
ததோ ‘நுமேயோ பகவத்-ப்ரஸாதோ
யோ துர்லபோ ‘கிஞ்சன-கோசரோ ‘ன்யை:
த்ரை-வர்கிக—அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று நோக்கங்களுக்காக; ஆயாஸ—முயற்சியின்; விகாதம்—அழிவு; அஸ்மத்—எங்கள்; பதி:—பகவான்; விதத்தே—செய்கிறார்; புருஷஸ்ய—ஒரு பக்தனின்; சக்ர—இந்திரனே; தத:—எதனால்; அனுமேய:—தீர்மானிக்கப்படுகிறது; பகவத்-ப்ரஸாத:—பரமபுருஷரின் விசேஷ கருணை; ய:—எது; துர்லப:—அடைவதற்கு மிகக் கடினமான; அகிஞ்சன-கோசர:—பக்தர்களால் அடையப்படக் கூடியது; அன்யை:—பெளதிக சுகத்திற்கு ஆசைப்படும் மற்றவர்களால்.
எங்கள் பெருமானாகிய பரமபுருஷர், அறம், பொருள், இன்பம் ஆகியவற்றுக்காகத் தமது பக்தர்கள் வீணாக மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிப்பார். இந்திரனே, பகவான் எவ்வளவு கருணையுடையவர் என்பதை இதைக் கொண்டு ஒருவனால் தீர்மானிக்கமுடியும். இத்தகைய கருணையை தூய பக்தர்களால் மட்டுமே அடையமுடியும், பௌதிக இலாபத்தை விரும்புபவர்களால் அல்ல.
பதம் 6.11.24
அஹம் ஹரே தவ பாதைக-மூல-
தாஸானுதாஸோ பவிதாம்ஸி பூய:
மன: ஸ்மரேதாஸு-பதேர் குணாம்ஸ் தே
க்ருணீத வாக் கர்ம கரோது காய
அஹம்—நான்; ஹரே—எம்பெருமானே; தவ—தங்களுடைய; பாத-ஏக-மூல—உங்களுடைய திருவடிகளை மட்டுமே புகலிடம் கொண்டுள்ள; தாஸ-அனுதாஸ:—உங்களுடைய தொண்டனுக்கும் தொண்டனாக; பவிதாஸ்மி—நான் ஆகவேண்டும்; பூய:—மீண்டும்; மன:—என் மனம்; ஸ்மரேத—நினைக்கட்டும்; அஸு-பதே:—என் பிராணநாதரின்; குணான்—குணங்கள்; தே—தங்களுடைய; க்ருணீத—உச்சரிக்கட்டும்; வாக்—என் வார்த்தைகள்; கர்ம—உங்களுடைய சேவையெனும் செயல்களையே; கரோது—செய்யட்டும்; காய:—என் உடல்.
எம்பெருமானே, பரமபுருஷரே, உங்களுடைய திருவடியொன்றிலேயே நாட்டமுள்ள உங்களுடைய நித்தியத் தொண்டர்களுக்கும் தொண்டனாக மீண்டும் நான் ஆகுமாறு அருள்புரிய வேண்டும். என் பிராண நாதரே, மீண்டும் நான் அவர்களுக்குச் சேவகனாகிப் பணிபுரிய வேண்டும். இதனால் தங்களுடைய உன்னத குணங்களையே என் மனம் எப்பொழுதும் நினைக்கட்டும்; அக்குணங்களையே என் வாக்கு எப்பொழுதும் துதிக்கட்டும்; தங்களுடைய அன்புத் தொண்டிலேயே எனது உடல் எப்பொழுதும் ஈடுபடட்டும்.
பதம் 6.11.25
ந நாக-ப்ருஷ்டம் ந ச பாரமேஷ்ட்யம்
ந ஸார்வ-பெளமம் ந ரஸாதிபத்யம்
ந யோக-ஸித்திர் அபுனர்-பவம் வா
ஸமாஞ்ஜஸ த்வா விரஹய்ய காங்க்ஷே
ந—இல்லை; நாக-ப்ருஷ்டம்—சுவர்க்க லோகங்களையோ அல்லது துருவலோகத்தையோ; ந—இல்லை; ச—கூட; பார மேஷ்ட்யம்—பிரம்மதேவர் வாழும் கிரகத்தையோ; ந—அல்லது; ஸார்வ-பெளமம்—முழு மண்ணுலக ஆதிக்கத்தையோ; ந—அல்லது; ரஸா-ஆதிபத்யம்—கீழ் கிரக அமைப்புகளின் இறையாண்மையையோ; ந—அல்லது; யோக-ஸித்தீ:—(அணிமா, லகிமா, மஹிமா போன்ற) எட்டு வகையான யோக சித்திகளையோ; அபுன:-பவம்—முக்தியையோ; வா—அல்லது; ஸமஞ்ஜஸ—எல்லாச் செல்வங்களுக்கும் உறைவிடமே; த்வா—உங்களை; விரஹய்ய—விட்டுப் பிரிந்திருப்பதை; காங்க்ஷே—நான் விரும்புகிறேன்.
எல்லாச் செல்வங்களுக்கும் உறைவிடமாகிய பகவானே, நான் துருவ லோகத்தையோ, சுவர்க்க லோகங்களையோ அல்லது பிரம்ம தேவர் வாழும் உலகத்தையோ அனுபவிக்க விரும்பவில்லை. அல்லது அனைத்து மண்ணுலகங்களுக்கும், அல்லது பாதாள லோகங்களுக்கும் மேலான அதிபதியாக இருப்பதையோ கூட நான் விரும்பவில்லை. யோக சித்திகளை நான் விரும்பவில்லை. தங்களுடைய தாமரைப் பாதங்களைக் கைவிட வேண்டுமாயின், முக்தியையும் நான் வேண்டேன்.
பதம் 6.11.26
அஜாத-பக்ஷா இவ மாதரம் ககா:
ஸ்தன்யம் யதா வத்ஸதரா: க்ஷுத்-ஆர்தா:
ப்ரியம் ப்ரியேவ வ்யுஷிதம் விஷண்ணா
மனோ ‘ரவிந்தாக்ஷ தித்ருக்ஷதே த்வாம்
அஜாத-பக்ஷா:—இறக்கை முளைக்காத; இவ—போல்; மாதரம்—தாய்; ககா:—குஞ்சுகள்; ஸ்தன்யம்—மடிப்பாலை; யதா—போல்; வத்ஸதரா:—இளங்கன்றுகள்; க்ஷுத்-ஆர்தா:—பசியினால் வருந்தும்; ப்ரியம்—பிரியமானவர் அல்லது கணவன்; ப்ரியா—மனைவி அல்லது காதலி; இவ—போல; வ்யுஷிதம்—தூரதேசம் சென்றுள்ள; விஷண்ணா—வருந்துகிற; மன:—என் மனம்; அரவிந்த-அக்ஷ—தாமரைக் கண்ணரே; தித்ருக்ஷதே—காண விரும்புகிறது; த்வாம்—தங்களை.
கமலக்கண்ணரே, இறக்கை முளைக்காத பறவைகள் தாய் வந்து உணவளிப்பாள் என்று அவளை நோக்கி எப்பொழுதும் அவாவுவது போலும், கயிறுகளால் கட்டப்பட்டு பசியினால் வருந்தும் இளங்கன்றுகள் தாயின் பாலைப் பருக அவாவுவது போலும், அல்லது மனங்கலங்கிய மனைவி தூரதேசம் சென்ற கணவன் திரும்பி வந்து தன்னை எல்லா விதத்திலும் திருப்திப்படுத்துவதற்காக எப்பொழுதும் அவாவுவது போலும், தங்களுக்கு நேரடியாகத் தொண்டு செய்யும் சந்தர்ப்பத்திற்காக என் மனம் எப்பொழுதும் அவாவுகிறது.
பதம் 6.11.27
மமோத்தமஸ்லோக-ஜனேஷு ஸக்யம்
ஸம்ஸார-சக்ரே ப்ரமத: ஸ்வ-கர்மபி:
த்வன்-மாயயாத்மாத்மஜ-தார-கேஹேஷு
ஆஸக்த-சித்தஸ்ய ந நாத பூயாத்
மம—என்னுடைய; உத்தம-ஸ்லோக-ஜனேஷு—பரமபுருஷரிடம் பக்திமிக்க உத்தம பக்தர்களிடம்; ஸக்யம்—நட்பு; ஸம்ஸார-சக்ரே—சம்ஸார சக்கரத்தில்; ப்ரமத:—சஞ்சரித்துக் கொண்டிருக்கும்; ஸ்வ-கர்மபி:—எனது சொந்த கர்ம பலன்களால்; த்வத்-மாயயா—தங்களுடைய புற சக்தியினால்; ஆத்ம—உடலிடம்; ஆத்ம-ஜ—குழந்தைகளிடம்; தார—மனைவியிடம்; கேஹேஷு—மற்றும் வீட்டிடம்; ஆஸக்த—பற்றுக் கொண்டுள்ளேன்; சித்தஸ்ய—யாருடைய மனம்; ந—இல்லை; நாத—பிரபுவே; பூயாத்—இருக்கட்டும்.
பிரபுவே, என் கருமங்களின் பலனாக இந்த ஜட உலகம் முழுவதிலும் நான் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறேன். ஆகவே பக்திமிக்க உங்களுடைய உத்தம பக்தர்களின் நட்பு எனக்கு ஏற்படவேண்டும். உங்களுடைய மாயா சக்தியின் வசியத்தினால், என்னுடைய உடல், மனைவி குழந்தைகள் வீடு ஆகியவற்றிலுள்ள எனது பற்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் இவற்றிடம் இனி பற்றற்றவனாக இருக்கவே நான் விரும்புகிறேன். என் மனம், உணர்வு முதலான அனைத்தும் தங்களிடம் மட்டுமே பற்றுக் கொண்டவையாக இருக்கட்டும்.
ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “விருத்ராசுரனின் உன்னத குணங்கள்” எனும் தலைப்பை கொண்ட பதினொன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது. .