அத்தியாயம் – 10
தேவர்களுக்கும் விருத்தாசுரனுக்கும்
இடையிலான யுத்தம்
பதம் 6.10.1
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
இந்திரம் ஏவம் ஸமாதிஸ்ய பகவான் விஸ்வ-பாவன:
பஸ்யதாம் அனிமேஷாணாம் தத்ரைவாந்தர்ததே ஹரி:

ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இந்திரம்—சுவர்க்க ராஜனான இந்திரனுக்கு; ஏவம்—இவ்வாறு; ஸமாதிஸ்ய—உபதேசித்த பிறகு; பகவான்—பரமபுருஷர்; விஸ்வ-பாவன:—பிரபஞ்ச தோற்றத்தின் மூல காரணமான; பஸ்யதாம் அனிமேஷாணாம்—தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்க; தத்ர—அங்கு, அப்பொழுதே; ஏவ—உண்மையில்; அந்தர்ததே—மறைந்தருளினார்; ஹரி—பகவான்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: பரமபுருஷரும், பிரபஞ்ச தோற்றத்திற்குக் காரணமுமான பகவான் ஸ்ரீ ஹரி, இந்திரனுக்கு இவ்வாறு உபதேசித்த பிறகு, தேவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே உடனே அங்கிருந்து மறைந்து போனார்.

பதம் 6.10.2
ததாபியாசிதோ தேவைர் ரிஷிர் ஆதர்வணோ மஹான்
மோதமான உவாசேதம் ப்ரஹஸன் இவ பாரத

ததா—அவ்வாறு; அபியாசித:—யாசிக்கப்பட்டு; தேவை:—தேவர்களால்; ரிஷி:—சிறந்த முனிவரும்; ஆதர்வண:—அதர்வாவின் புத்திரருமான தத்யஞ்சி; மஹான்—சிறந்த மகான்; மோதமான:—மகிழ்ந்து; உவாச—கூறினார்; இதம்—இதை; ப்ரஹஸன்—சிரித்து; இவ—கொஞ்சம்; பாரத—பரீட்சித்து மகாராஜனே.

பரீட்சித்து மகாராஜனே, தேவர்கள் பகவானின் உபதேசங்களைப் பின்பற்றி, அதர்வாவின் மகனான ததீசியை அனுகினர். அவர் மிகவும் தயாள குணமுள்ளவர். அவர்கள் அவரிடம் அவரது உடலை யாசித்ததும், அவர் உடனே அதற்குச் சம்மதித்தார். ஆனால் தேவர்களிடமிருந்து சமயக் கோட்பாடுகளைப் பற்றி கேட்பதற்காகவே அவர் சிரித்து பின்வருமாறு விளையாட்டாகப் பேசலானார்.

பதம் 6.10.3
அபி வ்ருந்தாரகா யூயம் ந ஜானீத சரீரிணாம்
ஸம்ஸ்தாயாம் யஸ் து அபித்ரோஹோ துஹ்ஸஹஸ் சேதனாபஹ:

அபி—இருந்தாலும்; வ்ருந்தாரகா:—தேவர்களே; யூயம்—நீங்களனைவரும்; ந ஜானீத—அறியவில்லை; சரீரிணாம்—ஜட உடல்களை உடையவர்கள்; ஸம்ஸ்தாயாம்—மரணத்தின்போது உடலை விடும்பொழுது; ய:—எது; து—பிறகு; அபித்ரோஹ:—கடும் வேதனை; துஹ்ஸஹ:—பொறுக்க முடியாத; சேதன—உணர்வை; அபஹ:—எது பறித்து விடுகிறதோ.

முன்னேற்றமடைந்த தேவர்களே, மரணத்தின் போது ஏற்படும் தாங்க முடியாத கடும் வேதனையானது ஜட உடல்களை ஏற்றுள்ள அனைத்து ஜீவராசிகளின் உணர்வையும் பறித்துவிடுகிறது. இந்த வேதனையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா?

பதம் 6.10.4
ஜிஜீவிஷூணாம் ஜீவானாம் ஆத்மா ப்ரேஷ்ட இஹேப்ஸித:
க உத்ஸஹேத தம் தாதும் பிக்ஷமாணாய விஷ்ணயே

ஜிஜீஷூணாம்—உயிரோடிருக்க விரும்புகின்றன; ஜீவானாம்—அனைத்து ஜீவராசிகளுக்கும்; ஆத்மா—உடல்; ப்ரேஷ்ட:—மிகவும் பிரியமானதாக; இஹ—இங்கு; ஈப்ஸித:—விரும்பப்படுகிறது; க:—யாரால்; உத்ஸஹேத—பொறுக்க முடியும்; தம்—அந்த உடலை; தாதும்—கொடுக்க; பிக்ஷமாணாய—யாசிக்கும்; விஷ்ணவே—பகவான் விஷ்ணுவிற்குக்கூட.

இந்த ஜட உலகிலுள்ள ஒவ்வொரு ஜீவராசியும் தனது ஜட உடலில் மிகவும் பற்றுக் கொண்டுள்ளான். என்றென்றும் தன் உடலை காப்பாற்றப் போராடும் அவன், உடைமைகளையெல்லாம் துறந்தாவது, எல்லா வழியிலும் அதைப் பாதுகாக்க முயல்கிறான். எனவே பகவான் விஷ்ணுவே வந்து ஒருவனது உடலைக் கேட்டாலும், யார்தான் தன் உடலைக் கொடுக்க முன்வருவான்?

பதம் 6.10.5
ஸ்ரீ-தேவா ஊசு
கிம் நு தத் துஸ்த்யஜம் ப்ரஹ்மன் பும்ஸாம் பூதானுகம்பினாம்
பவத்-விதானாம் மஹதாம் புண்ய-ஸ்லோகேட்ய-கர்மணாம்

ஸ்ரீ-தேவா: ஊசு:—தேவர்கள் கூறினார்; கிம்—என்ன; நு—உண்மையில்; தத்—அதை; துஸ்த்யஜம்—விடுவதற்குக் கடினமாக; ப்ரஹ்மன்—சிறந்த பிராமணரே; பும்ஸாம்—மனிதர்களின்; பூத-அனுகம்பினாம்—துன்புறும் ஜீவராசிகளிடம் மிகவும் இரக்கம் கொண்டுள்ள; பவத்-விதானாம்—பகவானாகிய உங்களைப் போன்ற; மஹதாம்—மிகச் சிறந்தவரான; புண்ய-ஸ்லோக-ஈட்ய-கர்மணாம்—யாருடைய புண்ணியச் செயல்கள் சிறந்த ஆத்மாக்களால் போற்றப்படுகின்றனவோ.

தேவர்கள் பதிலளித்தனர்: சிறந்த பிராமணரே, புகழத்தக்க செயல்களைச் செய்பவரான உங்களைப் போன்ற புண்ணிய புருஷர்கள் பொது மக்களிடம் மிகுந்த அன்பும், பாசமும் வைத்திருக்கிறீர்கள். இத்தகைய புண்ணிய ஆத்மாக்களால் மற்றவர்களின் நன்மைக்காக எதைத்தான் கொடுக்க முடியாது? அவர்களால் தங்கள் உடல்கள் உட்பட அனைத்தையும் கொடுக்க முடியும்.

பதம் 6.10.6
நூனம் ஸ்வார்த்த-பரோ லோகோ ந வேத பர-ஸங்கடம்
யதி வேத ந யாசேத நேதி நாஹ யத் ஈஸ்வர:

நூனம்—நிச்சயமாக; ஸ்வ-அர்த-பர:—இப்பிறவியிலும், அடுத்ததிலும் புலன்நுகர்வில் மட்டுமே ஆர்வம் கொண்டுள்ள; லோக:—பொதுவாக லோகாயத மனிதர்கள்; ந—இல்லை; வேத—அறிவார்கள்; பர-ஸங்கடம்—பிறருடைய துன்பத்தை; யதி—என்றால்; வேத—அறிவார்கள்; ந—இல்லை; யாசேத—கேட்பார்கள்; ந—இல்லை; இதி—இவ்வாறு: ந ஆஹ—கூறுவதில்லை; யத்—என்பதால்; ஈஸ்வர:—தானம் கொடுக்க முடிந்தவர்.

அதிக சுயநலவாதிகளாக இருப்பவர்கள் மற்றவர்களிடமிருந்து எதையேனும் யாசிக்கின்றனர். பிறருடைய வேதனை அவர்களுக்குத் தெரிவதில்லை. ஆனால் கொடுப்பவனின் சிரமத்தை யாசகன் அறிவானாயின், அவன் எதையுமே கேட்கமாட்டான். அதுபோலவே, தானம் கொடுக்க முடிந்தவனும் யாசகனின் சிரமத்தை அறிவதில்லை. அப்படி அறிந்ததிருந்தால் அவன் யாசகனால் வேண்டப்படும் எதையுமே கொடுக்கத் தயங்கமாட்டான்.

பதம் 6.10.7
ஸ்ரீ-ரிஷிர் உவாச
தர்மம் வ: ஸ்ரோது-காமேன யூயம் மே ப்ரத்யுதாஹ்ருதா:
ஏஷ வ: ப்ரியம் ஆத்மானம் த்யஜந்தம் ஸந்த்யஜாமி அஹம்

ஸ்ரீ-ரிஷி: உவாச—சிறந்த முனிவரான ததீசி கூறினார்; தர்மம்—சமயக் கோட்பாடுகளை; வ:—உங்களிடமிருந்து; ஸ்ரோது-காமேன—கேட்கும் ஆசையால்; யூயம்—நீங்கள்; மே—என்னால்; ப்ரத்யுதாஹ்ருதா:—எதிரிடையான பதில் கூறப்பட்டது; ஏஷ:—இது; வ:—உங்களுக்கு; ப்ரியம்—பிரியமான; ஆத்மானம்—உடல்; த்யஜந்தம்—இன்றோ நாளையோ என்னை விட்டுச் சென்றுவிடும்; ஸந்த்யஜாமி—விட்டுவிடுகிறேன்; அஹம்—நான்.

மாமுனிவரான ததீசி கூறினார்: உங்களிடமிருந்து சமயக் கோட்பாடுகளைப் பற்றி கேட்பதற்காகவே உங்களுடைய வேண்டுகோளை நான் நிராகரித்தேன். இப்பொழுது என்னுடைய உடல் எனக்கு மிகவும் பிரியமானது என்ற போதிலும், இன்றோ அல்லது நாளையோ இது என்னை விட்டுச் செல்லத்தான் போகிறது. எனவே உங்களுடைய உயர்ந்த நோக்கங்களுக்காக இதை நான் விடத்தான் வேண்டும்.

பதம் 6.10.8
யோ ‘த்ருவேணாத்மனா நாதா ந தர்மம் ந யச: புமான்
இஹேத பூத-தயயா ஸ சோச்ய: ஸ்தாவரைர் அபி

ய:—எவனொருவன்; அத்ருவேண—நிலையற்ற; ஆத்மனா—உடலால்; நாதா:—பிரபுக்களே; ந—இல்லை; தர்மம்—சமயக் கோட்பாடுகளையோ; ந—இல்லை; யச:—புகழையோ; புமான்—ஒருவன்; ஈஹேத—அடைய விரும்பும்; பூத-தயயா—ஜீவராசிகளிடமுள்ள கருணையால்; ஸ:—அவன்; சோச்ய:—பரிதாபப்படத்தக்கவன்; ஸ்தாவரை:—அசைவற்ற ஜீவன்களால்; அபி—கூட.

தேவர்களே, துன்பப்படும் மனித குலத்திடம் இரக்கமற்றவனும், சமயக்கோட்பாடுகளின் அல்லது நிரந்தர கீர்த்தியின் உயர்ந்த காரணங்களுக்காக நிலையற்ற தன் உடலைத் தியாகம் செய்யாதவனும், நிச்சயமாக அசைவற்ற ஜீவன்களால்கூட பரிதாபப்படத்தக்கவனாவான்.

பதம் 6.10.9
ஏதாவான் அவ்யயோ தர்ம: புண்ய-ஸ்லோகைர் உபாஸித:
யோ பூத-சோக-ஹர்ஷாப்யாம் ஆத்மா சோசதி ஹ்ருஷ்யதி

ஏதாவான்—இந்த அளவு; அவ்யய:—அழியாத; தர்ம:—சமயக் கோட்பாடு; புண்ய—ஸ்லோகை:—புண்ணியவான்கள் என்று புகழப்படும் கீர்த்தி வாய்ந்தவர்களால்; உபாஸித:—அங்கீகரிக்கப்படுகின்றன; ய:—எவை; பூத—ஜீவராசிகளின்; சோக—துன்பத்தால்; ஹர்ஷாப்யாம்—மற்றும் மகிழ்ச்சியால்; ஆத்மா—மனம்; சோசதி—வருந்துகிறான்; ஹ்ருஷ்யதி—மகிழ்ச்சியடைகிறான்.

ஒருவன் பிற ஜீவராசிகளின் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியின்மையும், அவர்களது இன்பத்தைக் கண்டு மகிழ்ச்சியும் அடைவானாயின், புண்ணியவான்கள் என்றும் உதார குணமுள்ளவர்கள் என்றும் கருதப்படும் மேன் மக்களால் அவனது சமயக் கோட்பாடுகள் அழிவற்றவை என்று போற்றப்படுகின்றன.

பதம் 6.10.10
அஹோ தைன்யம் அஹோ கஷ்டம் பாரக்யை: க்ஷண-பங்குரை:
யன் நோபகுர்யாத் அஸ்வார்தைர் மர்த்ய: ஸ்வ-ஞாதி-விக்ரஹை:

அஹோ—அந்தோ; தைன்யம்—துன்பமான ஒரு சூழ்நிலை; அஹோ—ஐயோ; கஷ்டம்—கஷ்டம்; பாரக்யை:—எது மரணத்திற்குபின் நாய்களாலும், நரிகளாலும் திண்ணப்படுமோ; க்ஷண-பங்குரை:—எந்த நொடியிலும் அழியக்கூடியதோ; யத்—ஏனெனில்; ந—இல்லை; உபகுர்யாத்—உதவும்; அ-ஸ்வ-அர்தை:—சுய நலத்திற்கு உரியவையல்ல; மர்த்ய:—மரணத்திற்குட்பட்ட ஒருஜீவன்; ஸ்வ—அவனது செல்வத்தினாலும்; ஞாதி—உறவினர்கள் மற்றும் நண்பர்களாலும்; விக்ரஹை:—உடலாலும்.

மரணத்துக்குப் பிறகு நாய்களுக்கும் நரிகளுக்கும் உணவாகப் போகும் இவ்வுடல் உண்மையில் ஆன்மீக ஆத்மாவாகிய எனக்கு எந்த நன்மையையும் செய்வதில்லை. குறுகிய காலத்துக்கு மட்டுமே உபயோகப்படக் கூடிய உடல் எந்த நொடியிலும் அழிந்துவிடக் கூடும். உடலுடன் அதன் உடைமைகள், உறவினர்கள், செல்வங்கள் ஆகிய அனைத்தும் பிறருடைய நன்மைக்காகவே ஈடுபடுத்தப்பட வேண்டும். இல்லையெனில் அவையே பெருந்துன்பத்துக்கும், விசனத்திற்கும் காரணங்களாகிவிடும்.

பதம் 6.10.11
ஸ்ரீ-பாதராயணிர் உவாச
ஏவம் க்ருத-வ்யவஸிதோ தத்யந் ஆதர்வணஸ் தனும்
பரே பகவதி ப்ரஹ்மணி ஆத்மானம் ஸன்னயன் ஜஹௌ

ஸ்ரீ-பாதராயணி: உவாச—ஸ்ரீசுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏவம்—இவ்வாறாக; க்ருத-வ்யவஸித:—(தேவர்களுக்குத் தன் உடலைக் கொடுப்பதில்) என்ன செய்வதென்பதைத் தீர்மானித்து; தத்யந்—ததீசி முனிவர்; ஆதர்வண:—அதர்வாவின் புத்திரரான; தனும்—அவரது உடலை; பரே—பரமனான; பகவதி—பரமபுருஷரிடம்; ப்ரஹ்மணி—பரப்பிரம்மனான; ஆத்மானம்—தன்னை, ஆத்மாவை; ஸன்னயன்—அர்ப்பணித்து; ஜஹௌ—விட்டார்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இவ்வாறாக அதர்வாவின் மகனான ததீசி முனிவர் தேவர்களின் சேவைக்காக தன் உடலைக் கொடுக்கத் தீர்மானித்தார். அவர் ஆன்மீக ஆத்மாவாகிய தன்னைப் பரமபுருஷரின் தாமரைப் பாதங்களில் வைத்து, பஞ்சபூதங்களாலான ஸ்தூல உடலை விட்டார்.

பதம் 6.10.12
யதாக்ஷாஸு-மனோபுத்திஸ் தத்வ-த்ருக் த்வஸ்த-பந்தன:
ஆஸ்தித: பரமம் யோகம் ந தேஹம் புபுதே கதம்

யத—கட்டுப்படுத்தினார்; அக்ஷ—புலன்களை; அஸு—உயிரை; மன:—மனதை; புத்தி:—புத்தியை; தத்வ-த்ருக்—ஜட மற்றும் ஆன்மீக சக்திகளின் தத்துவங்களை அறிந்தவன்; த்வஸ்த-பந்தன:—பந்தத்திலிருந்து விடுபட்ட; ஆஸ்தித:—நிலையில் இருப்பதால்; பரமம்—பரம; யோகம்—சமாதி; ந—இல்லை; தேஹ—ஜட உடல்; புபுதே—உணர்ந்தார்; கதம்—பிரிந்ததை.

ததீசி முன் தன் புலன்களையும், உயிர்ச்சக்தியையும், மனதையும், புத்தியையும், கட்டுப்படுத்தி சமாதியில் ஆழ்ந்தார். இவ்விதமாக அவருடைய எல்லா பெளதிக பந்தங்களையும் அவர் துண்டித்துக் கொண்டார். அவருடைய பெளதிக உடல் எப்படி அவருடைய ஆத்மாவிலிருந்து பிரிந்தது என்பதை அவரால் அறிய முடியவில்லை.

பதங்கள் 6.10.13 – 6.10.14
அதேந்ரோ வஜ்ரம் உத்யம்ய நிர்மிதம் விஸ்வகர்மணா
முனே: சக்திபிர் உத்ஸிக்கோ பகவத்-தேஜஸான்வித:

வ்ருதோ தேவ-கணை: ஸர்வைர் கஜேந்ரோபரி அசோபத
ஸ்தூயமானோ முனி-கணைஸ் த்ரைலோக்யம் ஹர்ஷயன் இவ

அத—பிறகு; இந்ர:—சுவர்க்க ராஜன்; வஜ்ரம்—வஜ்ராயுதத்தை; உத்யம்ய—உறுதியாகக் கையிலெடுத்தார்; நிர்மிதம்—செய்யப்பட்ட; விஸ்வகர்மணா—விஸ்கர்மாவால்; முனே:—சிறந்த முனிவரான ததீசியின்; சக்திபி:—சக்தியால்; உத்ஸிக்த:—ஊக்கமளிக்கப்பட்டு; பகவத்—பரமபுருஷரின்; தேஜஸா—ஆன்மீக சக்தியுடன்; அன்வித:—கூடிய; வ்ருத:—சூழப்பட்டு; தேவ-கணை:—பிற தேவர்களால்; ஸர்வை:—எல்லா; கஜேந்ர—அவரது யானை வாகனத்தின்; உபரி—மேலே; அசோபத—ஜொலித்தார்; ஸ்தூயமான:—துதிக்கப்பட்டு; முனி-கணை:—சிறந்த முனிவர்களால்; த்ரை-லோக்யம்—மூவுலகங்களையும்; ஹர்ஷயன்—மகிழ்வித்தபடி; இவ—அவ்வாறு.

அதன்பிறகு, விஸ்வகர்மாவால் ததீசியின் எலும்புகளிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட வஜ்ராயுதத்தை இந்திரன் மிகவும் உறுதியுடன் கையிலெடுத்தார். ததீசி முனியின் சிறந்த சக்தியால் ஊக்கமளிக்கப்பட்டு, பரமபுருஷரின் சக்தியால் ஞானம் பெற்ற இந்திரன் அனைத்து தேவர்களாலும் சூழப்பட்டபடி, தனது ஐராவத வாகனத்தின் மேல் சவாரி செய்தார். அப்பொழுது எல்லா சிறந்த முனிவர்களும் அவரை துதித்துப் போற்றினர். இவ்வாறாக விருத்ராசுரனைக் கொல்வதற்காக அவனை நோக்கிச் சென்று கொண்டிருந்த அவர், மூவுலகங்களையும் மகிழ்வித்தபடி மிகவும் அழகாக ஜொலித்தார்.

பதம் 6.10.15
வ்ருத்ரம் அப்யத்ரவச் சத்ரும் அஸுரானீக-யூதபை:
பர்யஸ்தம் ஓஜஸா ராஜன் க்ருத்தோ ருத்ர இவாந்தகம்

வ்ருத்ரம்—விருத்ராசுரனை; அப்யத்ரவத்—தாக்கினார்; சத்ரும்—எதிரியான; அஸுர-அனீக-யூதபை:—அசுர சேனைத் தலைவர்களால்; பர்யஸ்தம்—சூழப்பட்டு; ஓஜஸா—பெரும் வலிமையுடன்; ராஜன்—அரசே; க்ருத்த:—கோபங்கொண்டு; ருத்ர:—சிவபெருமானின் ஓர் அவதாரம்; இவ—போல்; அந்தகம்—அந்தகன், அல்லது யமராஜன்.

பரீட்சித்து மகாராஜனே, எப்படி அந்தகனிடம் (யமராஜனிடம்) கடுங்கோபங்கொண்டு ருத்திரன் முன்பு அந்தகனைக் கொல்ல அவரை நோக்கி ஓடினாரோ, அப்படியே அசுர சேனைகளால் சூழப்பட்டிருந்த விருத்ராசுரனை, இந்திரன் கோபத்துடனும், பெரும் பலத்துடனும் தாக்கினார்.

பதம் 6.10.16
தத: ஸுராணாம் அஸுரை ரண: பரம-தாருண:
த்ரேதா-முகே நர்மதாயாம் அபவத் ப்ரதமே யுகே

தத:—அதன்பிறகு; ஸுராணாம்—தேவர்களின்; அஸுரை:—அசுரர்களுடன்; ரண:—ஒரு பெரும் யுத்தம்; பரம-தாருண:—மிகவும் பயங்கரமான; த்ரேதா-முகே—திரேதா யுகத்தின் ஆரம்பத்தில்; நர்மதாயாம்—நர்மதா நதிக்கரையில்; அபவத்—நிகழ்ந்தது; ப்ரதமே—முதல்; யுகே—யுகத்தில்.

அதன்பிறகு, சத்திய யுகத்தின் முடிவில், திரேதாயுகத்தின் ஆரம்பத்தில், நர்மதா நதிக்கரையில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடையில் பயங்கரமான ஒரு யுத்தம் நிகழ்ந்தது.

பதங்கள் 6.10.17 – 6.10.18
ருத்ரைர் வஸுபிர் ஆதித்யைர் அஸ்விப்யாம் பித்ரு- வஹ்னிபி:
மருத்பிர் ரிபுபி: ஸாத்யைர் விஸ்வேதேவைர் மருத்-பதிம்

த்ருஷ்ட்வா வஜ்ர-தரம் சக்ரம் ரோசமானம் ஸ்வயா ஸ்ரியா
நாம்ருஷ்யன் அஸுரா ராஜன் ம்ருதே வ்ருத்ர-புரஹ்ஸரா:

ருத்ரை:—ருத்திரர்களால்; வஸுபி:—வசுக்களால்; ஆதித்யை:—ஆதித்தியர்களால்; அஸ்விப்யாம்—அஸ்வினி குமாரர்களால்; பித்ரு—பிதாக்களால்; வஹ்னிபி:—வஹ்னிகளால்; மருத்பி:—மருத்துகளால்; ரிபுபி:—ரிபுக்களால்; ஸாத்யை:—சாத்யர்களால்; விஸ்வே-தேவை:—விஸ்வதேவர்களால்; மருத்-பதிம்—சுவர்க்க ராஜனான இந்திரன்; த்ருஷ்ட்வா—கண்டு; வஜ்ர-தரம்—வஜ்ராயுதத்தை ஏந்தியபடி; சக்ரம்—இந்திரனின் மற்றொரு பெயர்; ரோசமானம்—ஜொலிப்பதை; ஸ்வயா—அவரது சுய; ஸ்ரியா—ஐசுவரியத்தினால்; ந—இல்லை; அம்ருஷ்யன்—பொறுத்துக் கொண்டனர்; அஸுரா:—அசுரர்கள்; ராஜன்—அரசே; ம்ருதே—போரில்; வ்ருத்ர-புரஹ்ஸரா:—விருத்ராசுரன் தலைமையிலான.

அரசே, எல்லா அசுரர்களும், விருத்ராசுரன் தலைமையில் போர்க்களத்தினுள் வந்தபொழுது, இந்திரன் கையில் வஜ்ராயுதத்துடன், ருத்திரர்கள், வஸுக்கள், ஆதித்தியர்கள், அஸ்வினி-குமாரர்கள், பிதாக்கள், வஹ்ணிகள், மருத்துக்கள், ரிபுகள், சாத்யர்கள், விஸ்வதேவர்கள் ஆகியோரால் சூழப்பட்டிருப்பதைக் கண்டனர். தன் சகாக்களால் சூழப்பட்டிருந்த இந்திரன் மிகவும் பிரகாசமாக ஜொலித்ததால், அவருடைய பிரகாசம் அசுரர்களுக்குப் பொறுக்க முடியாததாக இருந்தது.

பதங்கள் 6.10.19 – 6.10.22
நமுசி: சம்பரோ ‘னர்வா த்விமூர்தா ரிஷபோ ‘ஸுர:
ஹயக்ரீவ: சங்குசிரா விப்ரசித்திர் அயோமுக:

புலோமா வ்ருஷபர்வா ச ப்ரஹேதிர் ஹேதிர் உத்கல:
தைதேயா தானவா யக்ஷா ரக்ஷாம்ஸி ச ஸஹஸ்ரச:

ஸுமாலீ-மாலீ-ப்ரமுகா: கார்தஸ்வர-பரிச்சதா:
ப்ரதிஷித்யேந்ர-ஸேனாக்ரம் ம்ருத்யோர் அபி துராஸதம்

அப்யர்தயன் அஸம்ப்ராந்தா: ஸிம்ஹ-நாதேன துர்மதா:
கதாபி: பரிகைர் பாணை: ப்ராஸ-முத்கர-தோமரை:

நமுசி:—நமுசி; சம்பர:—சம்பரன்; அனர்வா—அனர்வா; த்வி மூர்தா—துவிமூர்தன்; ரிஷப:—ரிஷபன்; அஸுர:—அசுரன்; ஹயக்ரீவ—ஹயக்ரீவன்; சங்குசிரா:—சங்குசிரா: விப்ரசித்தி—விப்ரசித்தி; அயோமுக:—அயோமுகன்; புலோமா—புலோமா; வ்ருஷபர்வா—விருஷபர்வா; ச—கூட; ப்ரஹேதி:—பிரஹேதி; ஹேதி—ஹேதி; உத்கல—உத்கலன்; தைதேயா:—தைத்தியர்கள்; தானவா:—தானவர்கள்; யக்ஷா:—யக்ஷர்கள்; ரக்ஷாம்ஸி—இராட்சஸர்கள்; ச—மேலும்; ஸஹஸ்ரச:—ஆயிரக்கணக்கான; ஸுமாலி-மாலி-ப்ரமுகா:—கமாலி, மாலி முதலான பிறர்; கார்தஸ்வர—தங்க; பரிச்சதா:—ஆபரணங்களணிந்து; ப்ரதிஷித்ய—பின்னால் நிறுத்தி; இந்ர-ஸேனா-அக்ரம்—இந்திரனுடைய சேனையில் முன்னனி; ம்ருத்யோ:—மரணத்திற்கு; அபி—கூட; துராஸதம்—அனுகக் கடினமான; அப்யர்தயன்—துன்புறுத்தினர்; அஸம்ப்ராந்தா:—பயமின்றி; ஸிம்ஹ-நாதேன—சிம்ம நாதம் போல்; துர்மதா:—கொடூரமான; கதாபி:—கதைகளுடன்; பரிகை:—குண்டாந்தடிகளுடன்; பாணை:—அம்புகளுடன்; ப்ராஸ-முத்கர-தோமரை:—முட்களாலான எறிகணைகள், சம்மட்டிகள் மற்றும் ஈட்டிகள்.

சுமாலியையும், மாலியையும் தலைமையாகக் கொண்ட பல்லாயிரக்கணக்கான அசுரர்கள், சிற்றசுரர்கள், யக்ஷர்கள், இராட்சஸர்கள் ஆகியோரும், மற்றவர்களும் மரணதேவனால் கூட சுலபமாக வெற்றி கொள்ள முடியாத தேவேந்திரன் சேனைகளை எதிர்த்தனர். அவர்களுக்கிடையில் நமுசி, சம்பரன், அனர்வா, துவிமூர்தன், ரிஷபன், அசுரன், ஹயகிரீவன் சங்குசிரா, விப்ரசித்தி, அயோமுகன், புலோமா, விருஷபர்வா, பிரஹேதி, ஹேதி மற்றும் உட்கலன் ஆகியோர் இருந்தனர். சிங்கங்களைப் போல் பயமில்லாதவர்களும், உரக்க கர்ஜித்துக் கொண்டிருந்தவர்களும், வெல்ல முடியாதவர்களும், தங்க ஆபரணங்களை அணிந்தவர்களுமான இந்த அசுரர்கள், கதைகள், குண்டாந்தடிகள், அம்புகள், முள் ஆயுதங்கள், மரச் சம்மட்டிகள், நீண்ட ஈட்டிகள் போன்ற ஆயுதங்களால் தேவர்களுக்குத் துன்பம் விளைவித்தனர்.

பதம் 6.10.23
சூலை: பரஸ்வதை: கட்கை: சதக்னீபிர் புகண்டிபி:
ஸர்வதோ ‘வாகிரன் சஸ்த்ரைர் அஸ்த்ரைஸ் ச விபுதர்ஷபான்

சூலை:—திரிசூலங்களாலும்; பரஸ்வதை:—கோடரிகளாலும்; கட்கை:—கத்திகளாலும்; சதக்னீபி:—சதக்னிகளாலும்; புகண்டிபி:—புகண்டிகளாலும்; ஸர்வத:—சுற்றிலும்; அவாகிரன்—சிதறடித்தனர்; சஸ்த்ரை:—ஆயுதங்களால்; ஆஸ்தரை:—அம்புகளால்; ச—மற்றும்; விபுத-ருஷபான்—தேவர்களின் தலைவர்களை.

ஈட்டிகள், திரிசூலங்கள், கோடரிகள், கத்திகள் மற்றும் சதக்னி, புகண்டி போன்ற ஆயுதங்களை வைத்திருந்த அசுரர்கள் வெவ்வேறு திசைகளிலிருந்து தாக்கி தேவர்களுடைய சேனைகளின் தலைவர்களையெல்லாம் சிதறி ஓடச் செய்தனர்.

பதம் 6.10.24
ந தே ‘த்ருஸ்யந்த ஸஞ்சன்னா: சர—ஜாலை: ஸமந்தத:
புங்கானுபுங்க-பதிதைர் ஜ்யோதீம்ஷீவ நபோ-கணை:

ந—இல்லை; தே—அவர்கள் (தேவர்கள்); அத்ருஸ்யந்த—காணப்பட்டனர்; ஸஞ்சன்னா:—முற்றிலும் மூடப்பட்டு; சர-ஜாலை:—அம்பு மழையால்; ஸமந்தத:—எல்லாப் புறமும்; புங்க-அனுபுங்க—ஒன்றுக்கு பின் ஒன்றாக அம்புகள்; பதிதை:—விழுந்தன; ஜயோதீம்ஷி இவ—ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்கள் போல்; நப:-கணை:—அடர்ந்த மேகங்களால்.

எப்படி அடர்ந்த மேகங்களினால் மறைக்கப்படும் பொழுது ஆகாயத்திலுள்ள நட்சத்திரங்களைப் பார்க்க முடியாதோ, அப்படியே தேவர்களின் மீது பொழியப்பட்ட அம்பு மழையினால் முழுமையாக மறைக்கப்பட்ட தேவர்கள் கண்ணுக்குத் தெரியவில்லை.

பதம் 6.10.25
ந தே சஸ்த்ராஸ்த்ர-வர்ஷௌகா ஹி ஆசேது: ஸுர- ஸைனிகான்
சின்னா: ஸித்த-பதே தேவைர் லகு-ஹஸ்தை: ஸஹஸ்ரதா

ந—இல்லை; தே—அந்த; சஸ்த்ர-அஸ்த்ர-வர்ஷ-ஓகா:—அம்புகள் மற்றும் பிற ஆயுதங்களின் மழை; ஹி—உண்மையில்; ஆஸேது:—அடைந்தன; ஸுர-ஸைனிகான்—தேவ சேனைகள்; சின்னா:—வெட்டப்பட்டன; ஸித்த-பதே—ஆகாயத்திலேயே; தேவை:—தேவர்களால்; லகு-ஹஸ்தை:—விரைந்து செயற்பட்ட; ஸஹஸ்ர-தா—ஆயிரக்கணக்கான துண்டுகளாக.

தேவர்களின் சேனையைக் கொல்வதற்காக விடப்பட்ட பல்வேறு ஆயுதங்கள் மற்றும் அம்புகளின் மழைகள் தேவர்களை வந்தடையவில்லை. ஏனெனில் விரைவாக செயற்பட்ட தேவர்கள் ஆகாயத்திலேயே அந்த ஆயுதங்களை ஆயிரக்கணக்கான துண்டுகளாக வெட்டி வீழ்த்தி விட்டனர்.

பதம் 6.10.26
அத ஷீ ணாஸ்த்ர-சஸ்த்ரௌகா கிரி-ஸ்ருங்க-த்ருமோபலை:
அப்யவர்ஷன் ஸுர-பலம் சிச்சிதுஸ் தாம்ஸ் ச பூர்வவத்

அத—அதன்பிறகு; க்ஷீ ண—குறைக்கப்பட்டதால்; அஸ்த்ர:—மந்திரங்களால் ஏவப்பட்ட அம்புகளின்; சஸ்த்ர—ஆயுதங்களின்; ஓகா:—கூட்டங்கள்; கிரி—மலைகளின்; ஸ்ருங்க—சிகரங்களால்; த்ரும—மரங்களால்; உபலை:—மற்றும் பாறைகளாலும்; அப்யவர்ஷன்—பொழிந்தனர்; ஸுர-பலம்—தேவர்களின் படைபலம்; சிச்சிது:—துண்டுதுண்டாக உடைத்தனர்; தான்—அவற்றை; ச—மேலும்; பூர்வ-வத்—முன்போலவே.

அசுரர்களுடைய ஆயுதங்களும், மந்திரங்களும் குறைந்து கொண்டே வந்ததால் அவர்கள் மலைச் சிகரங்களையும், மரங்களையும், பாறைகளையும் தேவ சேனைகளின் மீது பொழியத் துவங்கினார். ஆனால் தேவர்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாகவும், திறமையானவர்களாகவும் இருந்ததால், முன்போலவே அந்த ஆயுதங்களையெல்லாம் ஆகாயத்திலேயே கண்டதுண்டமாக உடைத்தெறிந்தனர்.

பதம் 6.10.27
தான் அக்ஷதான் ஸ்வ்ஸ்திமதோ நிசாம்ய
சஸ்த்ராஸ்த்ர- பூகைர் அத வருத்ர-நாதா:
தருமைர் த்ருஷத்பிர் விவிதாத்ரி-ஸ்ருங்கைர்
அவிக்ஷதாம்ஸ் தத்ரஸுர் இந்ர-ஸைனிகான்

தான்—அவர்களை (தேவ சேனைகளை); அக்ஷதான்—காயப்படுத்தாது; ஸ்வஸ்தி-மத:—மிகவும் ஆரோக்கியமாக இருப்பது; நிசாம்ய—கண்டு; சஸ்த்ர-அஸ்த்ர-பூகை:—சரமாரியான ஆயுதங்களாலும், மந்திரங்களாலும்; அத—அதன்பிறகு; வ்ருத்ர-நாதா:—விருத்ராசுரனின் தலைமையிலான சேனைகள்; த்ருமை:—மரங்களால்; த்ருஷத்பி:—பாறைகளால்; விவத—பல்வேறு; அத்ரி—மலைகளின்; ஸ்ருங்கை:—சிகரங்களால்; அவிக்ஷதான்—காயமடையவில்லை; தத்ரஸு:—அச்சமடைந்தனர்; இந்ர-ஸைனிகான்—இந்திரனின் சேனைகள்.

இந்திரனின் சேனைகள் சரமாரியான ஆயுதங்களாலும், மரங்களாலும், பாறைகளாலும், மலைச்சிகரங்களாலும் சிறிதும் காயமடையாமல் நன்றாக இருப்பதைக் கண்ட விருத்ராசுரனின் தலைமையிலான அசுர சேனைகள் மிகவும் அச்சமடைந்தனர்.

பதம் 6.10.28
ஸர்வே ப்ரயாஸா அபவன் விமோகா:
க்ருதா: க்ருதா தேவ-கணேஷு தைத்யை:
க்ருஷ்ணானுகூலேஷு யதா மஹத்ஸு
க்ஷுத்ரை: ப்ரயுக்தா ஊஷதீ ரூக்ஷ-வாச:

ஸர்வே—எல்லாம்; ப்ரயாஸா:—முயற்சிகளும்; அபவன்—ஆயின; விமோகா:—பயனற்றவை; க்ருதா:—செய்யப்பட்ட; க்ருதா:—மீண்டும் செய்யப்பட்ட; தேவ-கணேஷு—தேவர்களுக்கு; தைத்யை:—அசுரர்களால்; க்ருஷ்ண-அனுகூலேஷு—எப்பொழுதும் கிருஷ்ணரால் காக்கப்பட்ட; யதா—எப்படி; மஹத்ஸு—வைஷ்ணவர்களுக்கு; க்ஷுத்ரை:—அற்ப மனிதர்களால்; ப்ரயுக்தா:—உபயோகிக்கப்பட்ட; ஊஷதீ:—அனுகூலமற்ற; ரூக்ஷ—கடுமையான; வாச:—வார்த்தைகள்.

அற்ப மனிதர்கள் சாதுக்களுக்கு எதிராகப் பொய்யான கோபம் நிறைந்த குற்றச்சாட்டுகளைச் சுமத்தி கடும் வார்த்தைகளை உபயோகிக்கும் பொழுது, பலனற்ற அவர்களுடைய வார்த்தைகள் மேன்மக்களை பாதிப்பதில்லை. அதுபோலவே, எப்பொழுதும் கிருஷ்ணரால் பாதுகாக்கப்பட்டிருந்த தேவர்களுக்கெதிரான அசுரர்களின் எல்லா முயற்சிகளும் பயனற்றுப்போயின.

பதம் 6.10.29
தே ஸ்வ-ப்ரயாஸம் விததம் நிரீக்ஷ்ய
ஹராவ் அபக்தா ஹத-யுத்த-தர்பா:
பலாயனாயாஜி-முகே விஸ்ருஜ்ய
பதிம் மனஸ் தே ததுர் ஆத்த-ஸாரா:

தே—அவர்கள் (அசுரர்கள்); ஸ்வ—ப்ரயாஸம்—அவர்களது சுய முயற்சிகள்; விததம்—பயனற்றுப் போனதை; நிரீக்ஷ்ய—கண்டு; ஹரௌ அபக்தா:—பகவத் பக்தர்களல்லாத அசுரர்கள்; ஹத—தோற்கடிக்கப்பட்டு; யுத்த-தர்பா:—போரில் அவர்களது தற்பெருமை; பலாயனாய—யுத்தகளத்தை விட்டுச் சென்றதற்காக; ஆஜி-முகே—போரின் துவக்கத்திலேயே; விஸ்ருஜ்ய—ஒரு புறம் விட்டுவிட்டு; பதிம்—சேனாதிபதியான விருத்ராசுரனை; மன:—அவர்களுடைய மனங்கள்; தே—அவர்களனைவரும்; தது:—கொடுக்கப்பட்ட; ஆத்த-ஸாரா:—யாருடைய வீரம் பறிக்கப்பட்டதோ.

பரமபுருஷராகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பக்தர்கள் அல்லாத அசுரர்கள், தங்களுடைய முயற்சிகளெல்லாம் பலிக்காததைக் கண்டு, யுத்தத்தில் தங்களுடைய தற்பெருமையை இழந்தனர். அவர்களுடைய வீரம் முழுவதும் எதிரிகளால் பறிக்கப்பட்டுவிட்டதால், போரின் துவக்கத்திலேயே தங்கள் தலைவனை அங்கேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்க முடிவு செய்தனர்.

பதம் 6.10.30
வ்ருத்ரோ ‘ஸுராம்ஸ் தான் அனுகான் மனஸ்வீ
ப்ரதாவத: ப்ரேக்ஷ்ய பபாஷ ஏதத்
பலாயிதம் ப்ரேக்ஷ்ய பலம் ச பக்னம்
பயேன தீவ்ரேண விஹஸ்ய வீர:

வ்ருத்ர:—அசுரர்களின் சேனாதிபதியான விருத்ராசுரன்; அஸுரான்—எல்லா அசுரர்களும்; தான்—அவர்களை; அனுகான்—அவனது ஆதரவாளர்களை; மனஸ்வீ—மகாமனம் படைத்த; ப்ரதாவத:—ஓட்டம் பிடிப்பதை; ப்ரேக்ஷ்ய—கண்டு; பபாஷ—கூறினான்; ஏதத்—இதை; பலாயிதம்—ஓடுவதை; ப்ரேக்ஷ்ய—கண்டு; பலம்—சேனை; ச—மேலும்; பகனம்—உடைந்து; பயேன—பயத்தால்; தீவ்ரேண—பெரும்; விஹஸ்ய—புன்னகை செய்து; வீர:—அச்சிறந்த வீரன்.

தனது அசுரசேனை தகர்ந்து, சிறந்த வீரர்கள் எனப்படும் அசுரர்கள் கூட பெரும் பயத்தினால் யுத்தகளத்தை விட்டு ஓடியதைக் கண்ட விருத்ராசுரன், உண்மையிலேயே மகாமனம் படைத்த வீரன் என்பதால், அவன் புன்னகை செய்து பின்வரும் வார்த்தைகளைப் பேசினான்.

பதம் 6.10.31
காலோபபன்னாம் ருசிராம் மனஸ்வினாம்
ஜகாத வாசம் புருஷ ப்ரவீர:
ஹே விப்ரசித் தே நமுசே புலோமன்
மயானர்வாஞ் ச்சம்பர மே ஸ்ருணுத்வம்

கால உபபன்னாம்—காலத்திற்கும், சூழ்நிலைக்கும் பொருத்தமான; ருசிராம்—மிகவும் அழகிய; மனஸ்வினாம்—சிறந்த அறிஞர்களிடம்; ஜகாத—கூறினான்; வாசம்—வார்த்தைகளை; புருஷ-ப்ரவீர:—வீரர்களுள் வீரனான விருத்ராசுரன்; ஹே—ஒ; விப்ரசித்தே— விப்ரசித்தி; நமுசே—ஒ நமுசி; புலோமன்—ஒ புலோமா; மய—ஓ மயனே; அனர்வன்—ஓ அனர்வா; சம்பர—ஓ சம்பரா; மே—என்னிடமிருந்து; ஸ்ருணுத்வம்—தயவுசெய்து கேளுங்கள்.

வீரர்களுள் வீரனான விருத்ராசுரன் தனது நிலைக்கும், காலத்திற்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப, அறிஞர்களால் மிகவும் போற்றத்தக்க வார்த்தைகளைப் பேசினான். அவன் அசுர வீரர்களைப் பார்த்து, “அடே விப்ரசித்தி! நமுசி! புலோமா! மயா! அனர்வா! சம்பரா! ஓடாதீர்கள், நான் சொல்வதைக் கேளுங்கள்” என்று அழைத்தான்.

பதம் 6.10.32
ஜாதஸ்ய ம்ருத்யுர் த்ருவ ஏவ ஸர்வத:
ப்ரதிக்ரியா யஸ்ய ந சேஹ க்லுப்தா
லோகோ யசஸ் சாத ததோ யதி ஹி அமும்
கோ நாம ம்ருத்யும் ந வ்ருணீத யுக்தம்

ஜாதஸ்ய—பிறவி எடுத்தவனின்; ம்ருத்யு:—மரணம்; த்ருவ:—தவிர்க்க முடியாதது; ஏவ—உண்மையில்; ஸர்வத:—பிரபஞ்சம் முழுவதிலும்; ப்ரதிக்ரியா—தடுப்பு; யஸ்ய—எதன்; ந—இல்லை; ச—கூட; இஹ—இந்த ஜட உலகில்; க்லுப்தா—திட்டமிடப்பட்ட; லோக:—உயர் கிரகங்களுக்கு ஏற்றம் பெறுதல்; யச:—நற்பெயரும், கீர்த்தியும்; ச—மேலும்; அத—பிறகு; தத:—அதிலிருந்து; யதி—என்றால்; ஹி—உண்மையில்; அமும்—அந்த; க:—யார்; நாம—உண்மையில்; ம்ருத்யும்—மரணம்; ந—இல்லை; வ்ருணீத—ஏற்பான்; யுக்தம்—பொருத்தமான.

விருத்ராசுரன் கூறினான்: இந்த ஜட உலகில் பிறவி எடுத்துள்ள எல்லா ஜீவராசிகளும் ஒருநாள் இறந்துதான் ஆகவேண்டும். நிச்சயமாக, மரணத்திலிருந்து காக்கக்கூடிய எந்த வழியையும் இவ்வுலகில் எவரும் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. விதிகூட மரணத்திலிருந்து தப்புவதற்கு எந்த வழியையும் அளிக்கவில்லை. இந்நிலையில் மரணத்தைத் தவிர்க்க முடியாது என்பதால், ஒருவன் வீர மரணமடைவதால் எப்பொழுதும் இங்கு புகழப்படுவதுடன், உயர்கிரகங்களுக்கும் ஏற்றம் பெறுவானாயின், யார் தான் இத்தகைய ஒரு பெருமைமிக்க மரணத்தை ஏற்றுக்கொள்ள மாட்டான்?

பதம் 6.10.33
த்வெள ஸம்மதாவ் இஹ ம்ருத்யூ துராபௌ
யத் ப்ரஹ்ம-ஸந்தாரணயா ஜிதாஸு:
கலேவரம் யோக-ரதோ விஜஹ்யாத்
யத் அக்ரணீர் வீர-சயே ‘நிவ்ருத்த:

த்வௌ—இரண்டும்; ஸம்மதெள—(சாஸ்திரங்களாலும், சிறந்த புருஷர்களாலும்) ஏற்றுக்கொள்ளப்பட்டவை; இஹ—இவ்வுலகில்; ம்ருத்யூ—மரணங்கள்; துராபெள—மிகவும் அரிது; யத்—எது; ப்ரஹ்ம-ஸந்தாரணயா—பிரம்மன், பரமாத்மா அல்லது பரப்பிரம்மனாகிய கிருஷ்ணரின் மீதான மனஒருமையால்; ஜித-அஸு:—மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்தி; கலேவரம்—உடல்; யோக-ரத:—யோகத்தில் ஈடுபட்டிருப்பதால்; விஜஹ்யாத்—ஒருவன் வெளியேறக்கூடும்; யத்—எது; அக்ரணீ:—முன் செய்வது; வீர-சயே—யுத்தகளத்தில்; அணிவ்ருத்த:—புறமுதுகு காட்டாமல்.

பெருமைமிக்க மரணத்தை சந்திப்பதற்கு இரு வழிகள் உள்ளன. அவ்விரண்டுமே மிகவும் அரிதானவை. எதனால் மனதையும் உயர் சக்தியையும் அடக்கி பரமபுருஷரின் எண்ணத்தில் ஆழ்ந்து மடிய முடியுமோ, அந்த பக்தி யோகத்தைச் செய்தபிறகு, அல்லது அஷ்டாங்க யோகத்தைச் செய்தபிறகு மரணமடைவது ஒரு வழியாகும். புறமுதுகு காட்டி ஓடாமல் சேனையை வழிநடத்திச் சென்று யுத்தகளத்தில் மரணமடைவது இரண்டாவது வழியாகும். இந்த இரண்டு வகையான மரணங்களும் சாஸ்திரங்களில் பெருமைமிக்கவை என்று போற்றப்படுகின்றன.


ஸ்ரீமத் பாகவதம், ஆறாம் காண்டத்தின் “தேவர்களுக்கும் விருத்ராசுரனுக்கும் இடையிலான யுத்தம்” எனும் தலைப்பை கொண்ட பத்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare