அத்தியாயம் – 1
அஜாமிளனின் வாழ்க்கை வரலாறு
பதம் 6.1.1 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்; பிரபுவே, சுகதேவ கோஸ்வாமி, முக்தி மார்க்கத்தை (இரண்டாம் காண்டத்தில்) தாங்கள் ஏற்கனவே விவரித்து விட்டீர்கள். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதால், ஒருவன் படிப்படியாக மிகவுயர்ந்த கிரக அமைப்பான பிரம்ம லோகத்திற்கு ஏற்றம் பெறுவது நிச்சயம். அங்கிருந்து பிரம்மதேவருடன் அவன் ஆன்மீக உலகிற்கு உயர்த்தப்படுகிறான். இவ்விதமாக உலகில் தொடர்ச்சியான பிறப்பும், இறப்பும் நின்று விடுகிறது.
பதம் 6.1.2 : மாமுனிவரான சுகதேவ கோஸ்வாமியே, ஜீவராசியானவன் ஜட இயற்கைக் குணங்களின் பாதிப்பிலிருந்து விடுபட்டாலல்லாது, இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிப்பதற்கான வெவ்வேறு வகையான உடல்களை பெற்றுக் கொண்டே இருக்கிறான். மேலும் அவன் பெறும் உடலுக்கேற்ப அவனுக்கு வேறுபட்டவிருப்பங்கள் இருப்பதாக புரிந்து கொள்ளப்படுகிறது. இவ்விருப்பங்களைப்பின்பற்றுவதன் மூலமாக, தாங்கள் முன்பே (மூன்றாம் காண்டத்தில்) விவரித்துள்ளது போல், எதனால் ஒருவன் சுவர்க்க லோகங்களுக்கும் ஏற்றம் பெற முடியுமோ, அந்த ப்ரவ்ருத்தி-மார்க்கத்தை அவன் கடந்து செல்கிறான்.
பதம் 6.1.3 : தாங்கள் (ஐந்தாம் காண்டத்தின் முடிவில்) பாவச் செயல்களிலிருந்து விளையும் பலவகையான நரக வாழ்வுகளையும், (ஐந்தாம் காண்டத்தில்) பிரம்ம தேவரின் புத்திரரான சுயம்புவமனுவால் பதவியேற்கப்பட்ட முதல் மன்வந்திரத்தையும் கூட விவரித்தீர்கள்.
பதங்கள் 6.1.4 -6.1.5 : பிரபுவே, பிரியவிரத மகாராஜன் மற்றும் உத்தானபாத மகாராஜன் ஆகியோரைப் பற்றிய வம்சங்களையும் சிறப்பியல்புகளையும் தாங்கள் விவரித்தீர்கள். பரமபுருஷர் இந்த ஜட உலகை பல்வேறு பிரபஞ்சங்களுடனும், கிரக அமைப்புக்களுடனும், கிரகங்களுடனும் மற்றும் நட்சத்திரங்களுடனும், பலவகையான நாடுகளுடனும், கடல்களுடனும், மலைகள், நதிகள், தோட்டங்கள் மற்றும் மரங்களுடனும் படைத்துள்ளார். இவை இந்த மண்ணுலகில் சில, விண்வெளியிலுள்ள ஒளிரும் கோளங்களில் சில, மற்றும் தாழ்ந்த கிரக அமைப்புக்களில் சில என்று பிரிக்கப்பட்டுள்ளன. தாங்கள் இக்கிரகங்களையும் இவற்றில் வாழும் ஜீவராசிகளையும் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்.
பதம் 6.1.6 : மகா பாக்கியசாலியான சுகதேவ கோஸ்வாமியே, மனிதர்கள் பல விதமான நரகச் சூழ்நிலைகளை அடைந்து, கடுமையான வேதனைகளை அனுபவிப்பதிலிருந்து எவ்வாறு காப்பாற்றப்படுவார்கள் என்பது பற்றி எனக்கு விளக்கி அருள்வீராக.
பதம் 6.1.7 : சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: அரசே, ஒருவன் அவனுடைய மரணம் வருவதற்கு முன்பே, இப்பிறவியில் அவனுடைய மனோ, வாக்குக், காயத்தினால் அவன் செய்துள்ள பாவங்களுக்கு, மனு சம்ஹிதை மற்றும் பிற தர்ம சாஸ்திரங்களுக்கேற்ப முறையாக பிராயச்சித்திங்களைச் செய்தாக வேண்டும். இல்லையெனில் மரணத்திற்குப்பின் அவன் நரக லோகங்களில் புகுந்து பயங்கரமான துன்பங்களை அனுபவிப்பது நிச்சயம். இதை முன்பே உமக்கு நான் விவரித்துள்ளேன்.
பதம் 6.1.8 : ஆகவே, ஒருவனது மரணம் நெருங்குவதற்குள், அவனுடைய உடல் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது சாஸ்திர விதிகளுக்கேற்ப பிராயச்சித்த முறையை விரைவில் அவன் மேற்கொள்ள வேண்டும்; இல்லையெனில் காலம் கழிந்து அவனுடைய பாவ விளைவுகள் அதிகரித்துவிடும். மருத்துவ நிபுணர் ஒருவர் ஒரு நோயின் கடுமைக்கேற்ப சிகிச்சையளிப்பது போலவே, ஒருவன் தனது பாவங்களின் கடுமைக்கேற்ப பிராயச்சித்த முறையை மேற்கொள்ள வேண்டும்.
பதம் 6.1.9 : பரீட்சித்து மகாராஜன் கூறினார்: குற்றவாளியொருவன் அரசாங்கத்தால் தண்டிக்கப்படுவதையும், பொதுமக்களால் திட்டப்படுவதையும் உண்மையாகவே ஒருவன் காண்கிறான். மேலும் பாவம் செய்வதற்காக அடுத்த பிறவியில் ஒருவன் நரக சூழ்நிலைகளில் தள்ளப்படுகிறான் என்பதை சாஸ்திரங்கள் மற்றும் வேத வல்லுனர்களிடமிருந்து அவன் கேள்விப்படுகிறான். இதனால் பாவம் செய்வது தனக்கு நல்லதல்ல என்பதை அவன் அறிவான். ஆயினும், பிராயச்சித்தங்கள் செய்த பின்னரும் கூட, திரும்பத்திரும்ப பாவம் செய்யும்படி ஒருவன் கட்டாயப்படுத்தப்படுகிறான். ஆகவே, இத்தகைய பிராயச்சித்தத்தினால் என்ன பயன்?
பதம் 6.1.10 : சிலசமயங்களில் பாவச் செயல்களிலிருந்து கவனமாக விலகியிருப்பவன் கூட, மீண்டும் பாவச் செயலுக்கு பலியாகிறான். எனவே தொடர்ந்து பாவம் செய்வதும், பிறகு பிராயச்சித்தம் செய்வதுமான இந்த முறை பயனற்றது என்று நான் கருதுகிறேன். இது ஒரு யானையின் குளியலைப் போன்றதாகும். ஏனெனில், ஒரு யானை நன்கு குளித்து தன்னை சுத்தப்படுத்திக் கொள்கிறது ஆனால் கரையேறியதும் தன் மேல் மண்ணை வாரி இறைத்துக் கொள்கிறது.
பதம் 6.1.11 : வியாச புத்திரரான சுகதேவ கோஸ்வாமி பதிலளித்தார்: அரசே, பாவச் செயல்களை நிஷ்பலப்படுத்துவதற்காக செய்யப்படும் செயல்களும் பலன் கருதும் செயல்களே என்பதால், பலனை எதிர்பார்த்து செயற்படும் பாவத்திலிருந்து அச்செயல்கள் ஒருவனை விடுவிக்காது. பிராயச்சித்த முறையை ஏற்றுக் கொள்பவர்கள் புத்திசாலிகளே அல்ல, உண்மையில் அவர்கள் அறியாமையில் உள்ளவர்களாவர். ஒருவன் அறியாமைக் குணத்திலிருந்து விடுவிக்கப்பட்டாலல்லாது, ஒரு செயலை மற்றொன்றால் நிஷ்பலமாக்க முயல்வது பயனற்றதாகும். ஏனெனில், இது ஒருவனின் ஆசைகளை வேருடன் களையாது. இவ்வாறாக வெளித்தோற்றத்தில் ஒருவன் புண்ணியவான் போல் காணப்பட்டாலும், அவன் பாவம் செய்யும் சுபாவம் உடையவன்தான் என்பதில் ஐயமில்லை. எனவே, எதனால், பரப்பிரம்மனை ஒருவனால் அறிய முடியுமோ, அந்த பக்குவ ஞானமான வேதாந்தத்தில் ஏற்படும் ஞானோதயம் தான் உண்மையான பிராயச்சித்தமாகும்.
பதம் 6.1.12 : அரசே, ஒரு மருத்துவரால் சிபாரிசு செய்யப்படும் தூய குற்றமற்ற உணவை நோய்வாய்ப்பட்டவன் உண்பானாயின், அவன் படிப்படியாக குணமடைந்து விடுவான். நோய்க் கிருமிகள் இனி அவனைத் தொடாது. அதுபோலவே, ஒருவன் அறிவுக்கான கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றுவானாயின், அவன் படிப்படியாக பெளதிக களங்கத்திலிருந்து விடுபட்டு முக்தியை நோக்கி முன்னேறுகிறான்.
பதங்கள் 6.1.13 – 6.1.14 : மனதை ஒருநிலைப்படுத்த ஒருவன் பிரம்மச்சரியத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதுடன், கீழே விழுந்து விடாதபடியும் பார்த்துக் கொள்ள வேண்டும். தன்னிச்சையாக புலனின்பத்தைக் கைவிடும் தவத்தையும் ஒருவன் மேற்கொள்ள வேண்டும். பிறகு ஒருவன் தன் மனதையும், புலன்களையும் கட்டுப்படுத்த வேண்டும். தான, தருமங்களைச் செய்ய வேண்டும். சத்தியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சுத்தம், அகிம்சை ஆகியவற்றை கடைபிடிக்க வேண்டும். கட்டுப்பாட்டு விதிகளைப் பின்பற்றவேண்டும். மேலும் பகவானின் புனித நாமத்தை தினமும் ஜபிக்க வேண்டும். இவ்வாறாக சமயக் கோட்பாடுகளை அறிந்துள்ளவனும், நிதானபுத்தியுள்ளவனும், நம்பிக்கையுள்ளவனுமான ஒருவன், அவனது மனோ, வாக்குக், காயத்தினால் செய்யப்பட்ட எல்லாப் பாவங்களிலிருந்தும் தற்காலிகமாக தூய்மையடைகிறான். இப்பாவங்கள் ஒரு மூங்கில் புதரின் அடியிலுள்ள உலர்ந்த இலைகளைப் போன்றவையாகும். அந்த இலைகள் நெருப்பினால் எரிந்து போகக்கூடும் என்றாலும், அவற்றின் வேர்கள் அப்படியே உள்ளன. அதனால் எந்த சமயத்திலும் அது மீண்டும் முளைக்கக் கூடும்.
பதம் 6.1.15 : கிருஷ்ணரிடம் முழுமையான தூய பக்தித்தொண்டை மேற்கொண்ட மிகவும் அரிதான ஒருவரால் மட்டுமே, பாவ விதைகள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பில்லாதபடி அவற்றை வேருடன் பிடுங்கியெறிய முடியும். சூரியன் அதன் கதிர்களால் உடனே பனியை அகற்றுவதுபோல், பக்தித்தொண்டை நிறைவேற்றுவதாலேயே இதை அவரால் செய்துவிட முடியும்.
பதம் 6.1.16 : அரசே, பாவியொருவன் உண்மையான ஒரு பகவத் பக்தரின் தொண்டில் ஈடுபட்டு, கிருஷ்ணரின் தாமரைப் பாதங்களில் தன் வாழ்வை அர்ப்பணிக்கக் கற்றுக் கொள்வானாயின், அவனால் முழுமையாக தூய்மையடைய முடியும். முன்பு நான் விவரித்த விரதம், தவம், பிரம்மச்சரியம் முதலான பிராயச்சித்த முறைகளை மேற்கொள்வதால் மட்டும் ஒருவரால் தூய்மை அடைய முடியாது.
பதம் 6.1.17 : நன்நடத்தை உடையவர்களும், சிறந்த தகுதி முறைகளை முழுமையாக உடையவர்களுமான தூய பக்திமான்களால் பின்பற்றப்படும் பாதை நிச்சயமாக இவ்வுலகிலேயே மிகவும் மங்களகரமான பாதையாகும். அது பயத்திலிருந்து விடுபட்டதும், சாஸ்திரங்களால் அங்கீகரிக்கப்பட்டதுமாகும்.
பதம் 6.1.18 : அரசே, ஒருகள்குடத்தைப் பலநதிகளின் தீர்த்தங்களால் கழுவினாலும், அதை தூய்மைப்படுத்த முடியாது. அதுபோலவே, பக்தரல்லாதவர்கள் பிராயச்சித்த முறைகளை நன்கு நிறைவேற்றினாலும் அவர்களால் தூய்மையடைய முடியாது.
பதம் 6.1.19 : ஸ்ரீ கிருஷ்ணரை முழுமையாக உணர்ந்தறியவில்லை என்றாலும், யார் ஒரு தடவையாவது அவரது பாத கமலங்களில் முழுமையாக சரணடைந்து அவரது நாமம், ரூபம், குணங்கள் மற்றும் லீலைகளால் கவரப்பட்டனரோ, அவர்கள் சரியான பிராயச்சித்த முறையை ஏற்ற காரணத்தினால் எல்லாப் பாவ விளைவுகளிலிருந்தும் முழுமையாக விடுபட்டவர்களாகின்றனர். இத்தகைய சரணடைந்த ஆத்மாக்கள், யமராஜனையோ அல்லது பாவிகளைக் கட்டும் பாசக் கயிற்றைக் கையில் வைத்துள்ள அவரது தூதர்களையோ சொப்பனத்திலும் காண்பதில்லை.
பதம் 6.1.20 : இது தொடர்பாக, மஹான்களும், சாதுக்களுக்கும், விஷ்ணு தூதர்களுக்கும், யம தூதர்களுக்கும் நிகழ்ந்த உரையாடலைப் பற்றிய ஒரு பழமையான வரலாற்றுச் சம்பவத்தை விவரிக்கின்றனர். இதை நான் கூறக் கேளும்.
பதம் 6.1.21 : கன்யாகுப்ஜ நகரில், அஜாமிளன் என்றொரு பிராமணன் இருந்தான். அவன் ஒரு தாசியை மணந்து, அந்த கீழ்த்தரமான பெண்ணின் உறவினால் தனது பிராமண குணங்களையெல்லாம் இழந்தவனானான்.
பதம் 6.1.22 : இழிவடைந்த பிராமணனான இந்த அஜாமிளன், மற்றவர்களைக் கைது செய்தும், சூதாட்டத்தில் அவர்களை ஏமாற்றியும், அல்லது நேரிடையாக அவர்களைக் கொள்ளையடித்தும், அவர்களுக்குத் தொல்லை கொடுத்தும் வந்தான். இவ்வாறு தான் அவன் தன் வாழ்க்கைக்குத் தேவையானதைச் சம்பாதித்து, அவனது மனைவியையும், குழந்தைகளையும் பராமரித்து வந்தான்.
பதம் 6.1.23 : அரசே, இவ்வாறாக அந்த தாசியின் பல மகன்களைப் பராமரிப்பதற்காக, வெறுக்கத்தக்க பாவச் செயல்களில் தன் நேரத்தைக் கழிப்பதிலேயே அவனுடைய ஆயுளின் பெரும்பகுதியான எண்பத்தெட்டு ஆண்டுகள் கழிந்து போயிற்று.
பதம் 6.1.24 : வயது கடந்த அஜாமிளனுக்குப் பத்து மகன்கள் இருந்தனர். அவர்களுள் கடைசிக் குழந்தையின் பெயர் நாராயணன். நாராயணன் எல்லோரிலும் இளையவன் என்பதால், இயல்பாகவே அவனுடைய பெற்றோர்களுக்கு அவன் மிகவும் பிரியமானவனாக இருந்தான்.
பதம் 6.1.25 : அக்குழந்தையின் மழலைப் பேச்சாலும், தளர் நடையாலும், வயோதிகனான அஜாமிளன் அதனிடம் அதிக பற்றுக் கொண்டவனானான். அவன் எப்பொழுதும் அக்குழந்தையைக் கவனித்தும், அதன் செயல்களில் மகிழ்ந்தும் வந்தான்.
பதம் 6.1.26 : அஜாமிளன் அக்குழந்தையிடமுள்ள அன்பின் மிகுதியால், தான் உணவை மென்று சாப்பிடும்பொழுது குழந்தையை மென்று சாப்பிடச் செய்தும், தான் பருகும்பொழுது குழந்தையைப் பருகச் செய்தும் வந்தான். இவ்வாறு எப்பொழுதும் குழந்தையைக் கவனிப்பதிலும், நாராயணா என்ற அவனது பெயரை அழைப்பதிலும் ஈடுபட்டிருந்த அம்மூடன், தனக்கு வயதாகி மரணம் நெருங்கிவிட்டதை உணரவில்லை.
பதம் 6.1.27 : மூடனான அந்த அஜாமிளனின் மரண காலம் நெருங்கியபோது. அவன் தன் மகனான நாராயணனைப் பற்றியே அதிகமாக நினைக்க ஆரம்பித்தான்.
பதங்கள் 6.1.28 – 6.1.29 : பிறகு அஜாமிளன், கோணல் மாணலான தேக அம்சங்களுடனும், பயங்கரமான உருத்தெரியாத முகங்களுடனும், உடல்களில் குத்திட்டு நிற்கும் ரோமங்களுடனும் கூடிய மூன்று விகாரமான புருஷர்களைக் கண்டான். அவனை யமலோகத்திற்கு எடுத்துச் செல்வதற்காக அவர்கள் தங்கள் கைகளில் பாசக்கயிறுகளுடன் வந்திருந்தனர். அவர்களைக் கண்ட அஜாமிளன் மிகுவும் கலக்கமடைந்து, சிறிது தூரத்தில் விளையாடிக் கொண்டிருந்த தன் மகனிடம் உள்ள பாசத்தினால் உரத்த குரலில் அவனது பெயரைச் சொல்லி அழைக்கலானான். இவ்வாறாக கண்களில் கண்ணீர் மல்க எப்படியோ நாராயணரின் புனித நாமத்தை அவன் உச்சரித்தான்.
பதம் 6.1.30 : அரசே, மரண வாயிலிருந்த அஜாமிளனின் வாயிலிருந்து, தங்கள் எஜமானரின் புனித நாமம் பெரும் பயத்தின் காரணத்தால் குற்றமின்றி உச்சரிக்கப்பட்டதைக் கேட்ட விஷ்ணு தூதர்கள் உடனேயே அங்கு வந்து சேர்ந்தனர்.
பதம் 6.1.31 : யமதூதர்கள், அந்த தாசியின் கணவனான அஜாமிளனுடைய ஆத்மாவை அவனுடைய இதயத்திற்குள்ளிருந்து வெளியே இழுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் கம்பீரமான குரல்களால் விஷ்ணு தூதர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
பதம் 6.1.32 : இவ்வாறு தடுக்கப்பட்ட, சூரிய தேவனின் புத்திரரான யமராஜனின் அத்தூதர்கள், அவர்களைப் பார்த்து, ‘யமதர்மராஜனின் கட்டளையைத் தடுக்கும் அளவிற்குத் துணிவுள்ள நீங்கள் யார்?’ என்று கேட்டனர்.
பதம் 6.1.33 : ஐயா, நீங்களனைவரும் யாருடைய சேவகர்கள்? எங்கிருந்து வருகிறீர்கள்? நாங்கள் அஜாமிளனின் உடலைத் தொடுவதை ஏன் தடுக்கிறீர்கள்? நீங்கள் சுவர்க்க லோகங்களிலிருந்து வந்த தேவர்களா? அல்லது உபதேவர்களா? அல்லது உத்தம பக்தர்களா?
பதங்கள் 6.1.34 – 6.1.36 : அந்த யமதூதர்கள் கூறினர்: உங்களுடைய கண்கள் தாமரையின் இதழ்களைப் போலவே உள்ளன. மஞ்சள் பட்டாடைகளை அணிந்தும், தாமரைப்பூ மாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், அழகுமிக்க கிரீடங்களைத் தலைகளிலும், குண்டலங்களைக் காதுகளிலும் அணிந்தும் உள்ள நீங்கள் எல்லோரும் புத்திளமையுடன் காட்சியளிக்கிறீர்கள். உங்கள் எல்லோருடைய நான்கு நீண்ட கைகளும், வில்கள், அம்பறாத்தூண்கள், வாள்கள், கதைகள், சங்குகள், சக்கரங்கள் மற்றும் தாமரைகள் ஆகியவற்றினால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. உங்களுடைய காந்தி, அதன் அசாதாரணமான பிரகாசத்தினால் இந்த இடத்தின் இருளைப் போக்கிவிட்டது. நீங்கள் ஏன் இப்பொழுது எங்களைத் தடுக்கிறீர்கள்?
பதம் 6.1.37 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: யமதூதர்களால் இவ்வாறு கேட்கப்பட்ட வாசுதேவரின் சேவகர்கள், புன்னகை செய்து, மேக கர்ஜனை போன்ற கம்பீரமான குரல்களில் பின்வருமாறு கூறினர்.
பதம் 6.1.38 : புண்ணியாத்மாக்களான விஷ்ணு தூதர்கள் கூறினர்: நீங்கள் எல்லோரும் உண்மையிலேயே யமராஜனின் சேவகர்கள்தான் என்றால், தர்மத்தின் பொருளையும் அதர்மத்தின் அடையாளங்களையும் எங்களுக்கு நீங்கள் விளக்கவேண்டும்.
பதம் 6.1.39 : மற்றவர்களைத் தண்டிப்பது எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது? உண்மையில் தண்டனைக்கு உரியவர்கள் யார்? பலன் கருதும் செயல்களில் ஈடுபட்டுள்ள எல்லாக் கருமிகளும் தண்டனைக்குரியவர்களா? அல்லது அவர்களில் சிலர் மட்டுமா?
பதம் 6.1.40 : யமதூதர்கள் பதிலளித்தனர்: வேதங்களில் விதிக்கப்பட்டிருப்பது தர்மமாகும். அதற்குப் புறம்பானது அதர்மமாகும். வேதங்கள் சுயமாகத் தோன்றியவை என்றும், அவை நேரடியாக பரமபுருஷரான நாராயணரே என்றும் யமராஜனிடமிருந்து நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம்.
பதம் 6.1.41 : அனைத்து காரணங்களுக்கும் பரம காரணமான நாராயணர் அவரது சொந்த இருப்பிடமான ஆன்மீக உலகில் வாழ்கிறார். எனினும், சத்வம், ரஜஸ் மற்றும் தமஸ் எனும் மூன்று ஜட இயற்கைக் குணங்களுக்கேற்ப அவர் முழு பிரபஞ்ச தோற்றத்தையும் ஆள்கிறார். இவ்விதமாக அனைத்து ஜீவராசிகளுக்கும் வெவ்வேறு குணங்களும், (பிராமணர், க்ஷத்திரியர், வைசியர்) என்ற வெவ்வேறு பெயர்களும், வர்ணாசிரம ஸ்தாபனத்திற்கேற்ப வெவ்வேறு கடமைகளும், வெவ்வேறு ரூபங்களும் அளிக்கப்படுகின்றன. இவ்வாறாக நாராயணர் தான் முழு பிரபஞ்ச தோற்றத்திற்கும் காரணமாவார்.
பதம் 6.1.42 : சூரியன், அக்னி, ஆகாயம், காற்று, தேவர்கள், சந்திரன், சாயங்காலம், பகல், இரவு, திசைகள், நீர், பூமி மற்றும் பரமாத்மா ஆகிய அனைத்தும் ஒரு ஜீவராசியின் செயல்களுக்குச் சாட்சிகளாக விளங்குகின்றன.
பதம் 6.1.43 : அவரவர்களுக்கு விதிக்கப்பட்ட கடமைகளிலிருந்து (தர்மம்) வழுவியவர்களின் குற்றங்கள் இத்தனை சாட்சிகளால் உறுதி செய்யப்படுவதால், அதர்ம வழி சென்றவர்கள் தண்டனைக்குரியவர்கள் ஆகின்றனர். பலன் கருதும் செயல்களில் ஈடுபட்டுள்ள ஒவ்வொருவரும் அவரவர் பாவச் செயல்களுக்கேற்ப, தண்டிக்கப்படத் தகுந்தவராவர்.
பதம் 6.1.44 : வைகுண்ட வாசிகளே நீங்கள் பாவமற்றவர்கள். ஆனால் இந்த ஜட உலகில் உள்ளவர்கள் புண்ணியங்களையோ அல்லது பாவங்களையோ செய்தாலும் அவர்களனைவருமே கருமிகள்தான். அவர்கள் இயற்கையின் முக்குணங்களால் களங்கமடைந்தும், அதற்கேற்ப செயற்பட வேண்டியவர்களாகவும் இருப்பதால், இந்த இருவகைச் செயல்களுமே அவர்களுக்குச் சாத்தியம்தான். ஜட உடலை ஏற்றவனால் செயலாற்றாமல் இருக்க முடியாது. மேலும் ஜட இயற்கைக் குணங்களின் கீழ் செயற்படுபவர்களுக்கு, பாவம் செய்வது தவிர்க்க முடியாததாகும். எனவே இந்த ஜட உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளும் தண்டனைக்குரியவையே.
பதம் 6.1.45 : இப்பிறவியில் ஒருவன் செய்யும் தர்மச் செய்லகள் அல்லது அதர்மச் செயல்களின் விகிதத்திற்கேற்ப, அடுத்த பிறவியில் அவன் தனது கர்ம பலன்களான இன்பத்தையோ அல்லது துன்பத்தையோ அனுபவிக்கிறான்.
பதம் 6.1.46 : தேவர்களுள் சிறந்தவர்களே, மூன்று இயற்கைக் குணங்களின் களங்கத்தின் காரணத்தால் மூன்று வகையான வாழ்வுகளை நாம் காண்கிறோம். இவ்விதமாக ஜீவராசிகள், சாந்த நிலை, தீவிரநிலை மற்றும் அறியாமை நிலையில் உள்ளவர்களாகவும், மகிழ்ச்சி, மகிழ்ச்சியின்மை மற்றும் அதற்கிடைப்பட்ட நிலையில் உள்ளவர்களாகவும், தர்ம நிலை, அதர்ம நிலை மற்றும் இரண்டுங் கெட்டான் நிலையில் உள்ளவர்களாவும் அறியப்படுகின்றனர். அடுத்த பிறவியிலும், இம்மூன்று வகையான பௌதிக குணங்கள் இதே முறையில்தான் செயற்படும் என்பதை நம்மால் ஊகிக்க இயலும்.
பதம் 6.1.47 : நிகழ்காலத்து வசந்தம், கடந்த மற்றும் எதிர்காலங்களிலுள்ள வசந்தங்களின் தன்மையை சுட்டிக்காட்டுவது போலவே, இன்பத்தையோ, துன்பத்தையோ அல்லது இவற்றின் கலப்படத்தையோ கொண்ட இப்பிறவி, கடந்த மற்றும் எதிர்காலங்களில் ஒருவன் செய்த அல்லது செய்யப்போகின்ற தர்ம, அதர்மச் செயல்களைப் பற்றிய அறிகுறியைக் கொடுக்கிறது.
பதம் 6.1.48 : சர்வசக்தி படைத்த யமராஜன் பிரம்மதேவருக்கு நிகரானவராவார். ஏனெனில், அவரது சொந்த இருப்பிடத்தில் இருந்து கொண்டே, அனைவருடைய இதயங்களிலுமுள்ள பரமாத்மாவைப் போல், அவர் ஒரு ஜீவராசியின் கடந்த காலச் செயல்களை மனதால் கண்டறிந்து, எதிர்காலத்தில் அந்த ஜீவராசி எப்படி செயற்படுவான் என்பதைப் புரிந்து கொள்கிறார்.
பதம் 6.1.49 : உறங்கிக் கொண்டிருப்பவன், தன் கனவில் தோன்றிய உடலுக்கேற்ப செயற்பட்டு, அதைத் தான் என்று ஏற்றுக் கொள்கிறான். அதுபோலவே, ஒருவன் தன் கடந்தகால தர்ம, அதர்மச் செயல்களால் பெற்ற தற்போதைய உடலுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்கிறான். அவனால் தனது கடந்த கால பிறவிகளையோ, எதிர்கால பிறவிகளையோ அறிய முடியாது.
பதம் 6.1.50 : ஐந்து அறிவுப் புலன்களுக்கும் (ஞானேந்திரியங்கள்), ஐந்து செயற் புலன்களுக்கும் (கர்மேந்திரியங்கள்), ஐந்து புலன் விஷயங்களுக்கும் மேலே பதினாறாவதாக மனம் இருக்கிறது. மனதிற்கும் மேலே பதினேழாவதாக ஆத்மா இருக்கிறது. அந்த ஆத்மா, மற்ற பதினாறின் ஒத்துழைப்புடன் ஜட உலகைத் தனியாக அனுபவிக்கிறான். ஜீவராசியானவன், இன்பம், துன்பம், இவற்றின் கலப்படம் என்ற மூன்று வகையான அனுபவங்களுக்கு ஆளாகிறான்.
பதம் 6.1.51 : சூட்சும சரீரம் பதினாறு பாகங்களைக் கொண்டதாகும். அவை: ஐந்து அறிவு திரட்டும் புலன்கள், ஐந்து சொற்புலன்கள், ஐந்து புலனின்பப் பொருட்கள், மற்றும் மனம். இந்த சூட்சும சரீரம், மூன்று ஐட இயற்கைக் குணங்களின் ஒரு விளைவாகும். இது கடக்க முடியாத உறுதியான ஆசைகளால் ஆனது. எனவே இது மனித வாழ்வு, மிருக வாழ்வு மற்றும் தேவ வாழ்வு ஆகியவற்றுக்கிடையில் ஜீவராசி வெவ்வேறு உடல்களை எடுக்கும்படி செய்கிறது. ஜீவராசி ஒரு தேவ உடலைப் பெறும் பொழுது அதிக மகிழ்ச்சியடைகிறான். ஒரு மனித உடலைப் பெறும்பொழுதும் வருத்தமடைகிறான். ஒரு உடலைப் மிருக பெறும்பொழுதும் வருத்தமடைகிறான். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவன் துக்ககரமான நிலையில் இருக்கிறான் என்பதுதான் உண்மை. அவனது பரிதாபகரமான இந்நிலைதான் சம்சாரம் (ஸம்ஸ்ருதி) என்று அழைக்கப்படுகிறது.
பதம் 6.1.52 : தன் புலன்களையும், மனதையும் அடக்கியாள முடியாதவனும், உடலுக்குள் சிறைப்பட்டவனுமான முட்டாள் ஜீவராசி, தன் விருப்பமின்றியே, ஜட இயற்கைக் குணங்களின் ஆதிக்கத்திற்கேற்ப செயற்படும்படி கட்டாயப்படுத்தப்படுகிறான். அவன் ஒரு பட்டுப்பூச்சியைப் போன்றவனாவான். அது தன் சொந்த உமிழ்நீரைக்கொண்டு தன்னைச் சுற்றி ஒரு கூட்டை நெய்து வெளிவருவதற்குச் சாத்தியமில்லாதபடி உள்ளேயே அடைபட்டுக் கிடக்கிறது. ஜீவராசி, அவனது சொந்த பலன் கருதும் செயல்களின் பின்னலுக்குள் தானாகவே அடைபட்டுக் கொள்கிறான். பிறகு தன்னை விடுவித்துக் கொள்ளும் வழியறியாது தவிக்கிறான். இவ்வாறாக அவன் எப்பொழுதும் புத்திபேதலித்தவனாகவும், திரும்பத் திரும்ப மரணமடைபவனாகவும் இருக்கிறான்.
பதம் 6.1.53 : எந்த ஒரு ஜீவராசியாலும் ஒரு கணம் கூட செயற்படாமல் இருக்க முடியாது. ஒருவன் தனது இயற்கையான சுபாவத்தினால், ஜட இயற்கையின் முக்குணங்களுக்கேற்ப செயற்பட்டுத்தான் ஆக வேண்டும். ஏனெனில், இந்த இயற்கைச் சுபாவமானது, ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயற்படும்படி அவனைக் கட்டாயப்படுத்துகிறது.
பதம் 6.1.54 : ஒரு ஜீவராசியால் செய்யப்படும் பாவ, புண்ணிய கருமங்களே அவனுடைய ஆசைகளின் நிறைவேற்றத்திற்கு காரணமாகும். கண்ணுக்குத் தெரியாத இக்காரணம்தான் ஜீவராசியின் வெவ்வேறு உடல்களுக்கு அடிப்படையாக உள்ளது. தீவிர ஆசையின் காரணத்தால் ஜீவராசி ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்து, அவனுடைய தந்தையைப் போன்ற அல்லது தாயைப் போன்ற ஒருடலைப் பெறுகிறான். ஸ்தூல மற்றும் சூட்சும உடல்கள் அவனது விருப்பத்திற்கேற்பவே படைக்கப்படுகின்றன.
பதம் 6.1.55 : ஜீவராசி ஜட இயற்கையுடன் தொடர்பு கொண்டிருப்பதால், ஆபத்தான ஒரு நிலையில் இருக்கிறான். ஆனால் மனித ரூபத்திலுள்ள வாழ்வில் பரம்புருஷருடனோ அல்லது அவரது பக்தருடனோ சகவாசம் கொள்ளும் முறை அவனுக்கு கற்பிக்கப்படுமானால், இந்த நிலையை மாற்றிவிட முடியும்.
பதங்கள் 6.1.56 – 6.1.57 :துவக்கத்தில் அஜாமிளன் என்ற இந்த பிராமணன், வேதங்களைக் கற்றவனாகவும், நல்லொழுக்கமும், நன்னடத்தையும், நற்குணங்களும் உடையவனாகவும், வேத விதிகளை அனுஷ்டிப்பதில் உறுதியுள்ளவனாகவும், சாந்தனாகவும், புலன்களையும் மனதையும் அடக்கியவனாகவும், உண்மையே பேசுபவனாகவும், வேதம் ஓதுவதை அறிந்தவனாகவும், பரிசுத்தனாகவும் இருந்தவன். மேலும் குருவையும், அக்னி தேவனையும், அதிதிகளையும், தன் குடும்பத்திலுள்ள முதியோர்களையும் மரியாதையுடன் பூஜிப்பவனாகவும், போலி கெளரவத்திலிருந்து விடுபட்டவனாகவும், நேர்மையானவனாகவும், எல்லாப் பிராணிகளிடத்தும் அன்புடையவனாகவும், அதிகம் பேசாதவனாகவும், எவரிடமும் பொறாமை கொள்ளாதவனாகவும் இருந்தவன்.
பதங்கள் 6.1.58 – 6.1.60 : ஒருசமயம் அஜாமிளன் என்ற இந்த பிராமணன், தந்தையின் கட்டளைப்படி பழங்கள், பூக்கள், சமித்து மற்றும் தர்ப்பை என்ற இருவித புற்கள் ஆகியவற்றை சேகரிப்பதற்காக வனம் சென்றான். வீடு திரும்பும் வழியில், நான்காம் தரமான காமவெறி கொண்ட ஒரு சூத்திரன் வெட்கமின்றி ஒரு வேசியைத் தழுவுவதையும், முத்தமிடுவதையும் கண்டான். அந்த சூத்திரனோ, தன் நடத்தையில் தப்பில்லை என்பது போல் பாடிக்கொண்டும், சிரித்துக் கொண்டும் இன்பம் அனுபவித்துக் கொண்டிருந்தான். அந்த சூத்திரன், வேசி இருவருமே கள் குடித்திருந்தனர். அந்த தாசியின் கண்கள் போதையால் சுழன்றன. அவளது ஆடை களைந்திருந்தது. அஜாமிளன் பார்த்த பொழுது அவர்களது நிலை இப்படித்தான் இருந்தது.
பதம் 6.1.61 : அந்த சூத்திரன் மஞ்சள் பூசி அலங்கரிக்கப்பட்ட தன் கையால் அந்த வேசியை கட்டி அணைத்துக் கொண்டிருந்தான். அஜாமிளன் அவளைக் கண்டதும், அவனது இதயத்தில் செயலற்றுக்கிடந்த காம இச்சைகள் தலைதூக்கின. அதனால் அவன் மோக வசப்பட்டு அவற்றிற்கு அடிமையானான்.
பதம் 6.1.62 : ஒரு பெண்ணைக் காண்பது கூட தவறு என்ற சாஸ்திரங்களின் உபதேசங்களை, அவன் தன்னால் இயன்றளவு பொறுமையாக நினைவுகூற முயன்றான். இந்த அறிவினாலும், தன் புத்தியினாலும் தனது காம இச்சைகளை அவன் கட்டுப்படுத்த முயன்றான். ஆனால் அவனது இதயத்திலெழுந்த காம வேகத்தின் காரணத்தால் தன் மனதைக் கட்டுப்படுத்த அவனால் முடியவில்லை.
பதம் 6.1.63 : சூரியனும், சந்திரனும் எவ்வாறு கீழானதொரு கிரகத்தால் பிடிக்கப்படுகிறார்களோ, அப்படியே அந்த பிராமணன் தன் நற்புத்தியை முழுமையாக இழந்தான். இச்சூழ்நிலையைக் காரணமாகக் கொண்டு, அவன் எப்பொழுதும் அந்த தாசியையே நினைத்துக் கொண்டிருந்தான். இவ்வாறாக குறுகிய காலத்திலேயே அவளைத் தன் வீட்டு வேலைக்காரியாக்கிக் கொண்டு, ஒரு பிராமணனுக்குரிய எல்லாக் கட்டுப்பாட்டு விதிகளையும் கைவிட்டான்.
பதம் 6.1.64 : இவ்வாறு, தன் தந்தையிடமிருந்து பெற்ற சொத்துக்களையெல்லாம், பல்வேறு பொருட்களினால் அந்த தாசியை திருப்திப்படுத்தி, தன்னிடம் மகிழ்ந்து அவள் தன்னுடனேயே இருக்க வேண்டுமென்று செலவழிக்கத் துவங்கினான். அந்த தாசியை திருப்திப்படுத்துவதற்காக அவன் தன் பிராமண செயல்களையெல்லாம் கைவிட்டான்.
பதம் 6.1.65 : அவனது புத்தி அந்த விபச்சாரியின் காமம் நிறைந்த பார்வையால் துளைக்கப்பட்ட காரணத்தால், அதற்குப் பலியான பிராமணனான அஜாமிளன், அவளது சகவாசத்தில் பாவச் செயல்களில் ஈடுபட்டான். அந்த பாவி, மிகவும் மரியாதைக்குரிய ஒரு பிராமண குடும்பத்திலிருந்து வந்த இளமையுள்ள தன் அழகிய மனைவியின் உறவைக் கூட கைவிட்டான்.
பதம் 6.1.66 : ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்திருந்த போதிலும், இந்த அறிவிலி, அந்த விபச்சாரியின் சேர்க்கையினால் புத்தியை இழந்து நியாயமாகவோ, அநியாயமாகவோ, எங்கெல்லாம், எப்படியெல்லாம் முடிகிறதோ அப்படியெல்லாம் பணம் சம்பாதித்து, பல பிள்ளைகளையும், பெண்களையும் உடைய அந்த விபச்சாரியின் குடும்பத்தைக் காப்பாற்றினான்.
பதம் 6.1.67 : இந்த பிராமணன் பொறுப்பில்லாமல் சாஸ்திர விதிகளை மீறுவதிலும், ஊதாரித்தனமாக வாழ்வதிலும், ஒரு தாசியால் சமைக்கப்பட்ட உணவை உண்டும் தனது நீண்ட ஆயுளைக் கழித்தான். எனவே இவன் பாவங்கள் நிறைந்தவனாவான். இவன் அழுக்கடைந்தவனாகவும், தடைவிதிக்கப்பட்ட செயல்களில் பற்றுக்கொண்டவனாகவும் உள்ளான்.
பதம் 6.1.68 : பாவச் செயல்களைச் செய்தவனும், அதற்குப் பிராயச்சித்தம் செய்யாதவனுமான இந்த அஜாமிளனை நாங்கள் யமராஜனிடம் அழைத்துச் செல்லப் போகிறோம். அங்கு, இவனது பாவச் செயல்களுக்கேற்ப தண்டிக்கப்பட்டு இவன் சுத்தியடைவான்.