அத்தியாயம் – 8
பரத மகாராஜாவின் குண நலன் பற்றிய ஒரு விளக்கம்
பதம் 5.8.1
ஸ்ரீ ஸுக உவாச
ஏகதா து மஹா-நத்யாம் க்ருதாபிஷேக நையமிகாவஸ்யகோ ப்ரஹ்
மாக்ஷரம் அபிக்ருணானோ முகூர்த்த-த்ரயம் உதகாந்த உபவிவேஸ

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஏகதா—ஒரு சமயம்; து—ஆனால்; மஹா-நத்யாம்—கண்டகீ என்னும் மகா நதியில்; க்ருத-அபிஷேக-நையமிக-அவஸ்யக:—மல ஜலம் கழித்தல் போன்ற காலைக் கடன்களை முடித்து, பல்துலக்கி, நீராடி; ப்ரஹ்ம-அக்ஷரம்—பிரணவ மந்திரத்தை (ஒம்); அபிக்ருணான—ஒதுதல்; முஹுர்த்த-த்ரயம்—மூன்று நிமிடங்கள்; உதக-அந்தே—ஆற்றின் கரை மீது; உபவிவேஸ—அவர் அமர்ந்திருந்தார்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார் அன்பார்ந்த மன்னனே, ஒரு நாள் மகாராஜா பரதன் மலஜலம் கழித்தல், நீராடுதல் போன்ற காலைக் கடன்களை முடித்து கண்டகீ நதியின் கரை மேல் சிறிது நேரம் அமர்ந்திருந்து பின்னர் ஒம்கார மந்திரத்துடன் தொடங்கும் தனது மந்திரத்தை ஒதத் தொடங்கினார்.

பதம் 5.8.2
தத்ர ததா ராஜன் ஹரிணீ பிபாஸயா ஜலாஸயாப்யாஸம்
ஏனகவோபஜகாம

தத்ர—நதிக் கரையில்; ததா—அந்தநேரம்; ராஜன்—ஓ அரசனே; ஹரிணீ—ஒரு பெண்மான்; பிபாஸயா—தாகத்தின் காரணமாக; ஜலாஸய அப்யாஸம்—நதியின் அருகே; ஏக—தனியே; ஏவ—உறுதியாக; உபஜகாம—வந்தது.

ஒ, மன்னனே: பரத மகாராஜா அந்நதிக் கரையில் அமர்ந்திருந்த பொழுது தாகத்தின் மிகுதியால் தவித்த ஒரு பெண்மான் நீர் அருந்துவதற்காக அங்கே வந்தது.

பதம் 5.8.3
தயா பேபியமான உதகே தாவத் ஏவாவிதூரனே நததோ ம்ருக-
பதேர் உன்னாதோ லோக-பயங்கர உதபதத்

தயா—மான்; பேபீயமானே—மிகுந்த திருப்தியுடன் நீர் அருந்தியது; உதகே—தண்ணீர்; தாவத்-ஏவ—அந்த சமயத்தில்; அவிதூரனே—மிக அருகில்; நதத—கர்ஜனை; ம்ருக-பதே—ஒரு சிங்கத்தின்; உன்னாத—ஆரவார ஓசை; லோக-பயம்-கர—உயிர்வாழிகள் அனைவர்க்கும் மிகுந்த அச்சம் அளிக்கக் கூடிய; உதபதத்—எழுந்தது.

அப்பெண்மான் மிக்க திருப்தியுடன் நீர் அருந்திக் கொண்டிருந்த பொழுது அதன் அருகே ஒரு சிங்கத்தின் உறுமல் மிகப் பயங்கரமாகக் கேட்டது. உயிர்கள் அனைத்துக்கும் அச்சமூட்டுவதாக இருந்த அவ்வோசையினை அப்பெண்மான் கேட்டது.

பதம் 5.8.4
தம் உபஸ்ருத்ய ஸா ம்ருக-வதூ ப்ரக்ருதி-விக்வவா சகித-நிரீக்ஷணா
ஸுதராம் அபி ஹரி-பயாபினிவேஸ-வ்யக்ர-ஹ்ருதயா பாரிப்லவ-
த்ருஷ்டிர் அகத-த்ருஷா பயாத் ஸஹஸைவோச்சக்ராம

தம் உபஸ்ருத்ய—குலை நடுங்கச் செய்யும் ஓசையினைக் கேட்டு; ஸா—அது; ம்ருக-வதூ—பெண்மான்; ப்ரக்ருதி-விக்வவா—இயற்கையிலேயே பிறரால் கொல்லப்பட்டு விடுவோம் என்னும் பயம்; சகித-நிரீக்ஷணா—அலைபாயும் கண்களுடன்; ஸுதரம்-அபி—பெரும்பாலும் உடனடியாக; ஹரி—சிங்கத்தின்; பய—பயம்; அபினி வேஷ—வாயினால்; வ்யக்ர-ஹ்ருதய—அதன் மனம் கொந்தளித்து; பாரிப்வவ-த்ருஷ்டி—அதன் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்ந்து; அகதத்ருஷா—தாகம் முற்றிலும் தணியாது; பயாத்—அச்சத்தின் காரணமாக; ஸஹஸா—திடீரென்று; உச்சக்ராம—ஆற்றினுள் பாய்ந்தது.

இயற்கையிலேயே மான் பிறரால் கொல்லப்பட்டு விடுவோம் என்னும் அச்சம் உடையதாகும். அதனால் எதனையும் அது சந்தேகக் கண் கொண்டே பார்க்கும். சிங்கத்தின் உறுமலைக் கேட்டவுடன் அது நடு நடுங்கியது. அங்குமிங்கும் அச்சத்துடனும் அலைபாயும் கண்களுடன் பார்த்த அந்த மான், தனது தாகம் தணிவதற்குள்ளாகவே ஆற்றினுள் பாய்ந்தது.

பதம் 5.8.5
தஸ்யா உத்பதந்த்யா அந்தர்வத்ன்யா உரு-பயாவகலிதோ யோனி-
நிர்கருதா கர்ப: ஸ்ரோதஸி நிபபாத

தஸ்யா—அதன்; உத்பதந்த்யா—வேகமாகத் தாவியது; அந்தர் வத்ன்யா—அது தனது கருப்பையில் குட்டியைச் சுமந்திருந்த சினைமான் ஆதலினால்; உரு-பய—மிகுந்த அச்சத்தினால்; அவகலித—வழுக்கி விழுந்ததினால்; யோனி நிர்கத—கருப்பையிலிருந்து வெளியே வந்தது; கர்ப—குட்டி; ஸ்ரோதஸி—ஓடும் ஆற்று நீரில்; நிபபாத—வீழ்ந்தது.

அம்மான் சினைமான் ஆதலினால், அது அச்சங்கொண்டு தாவியவுடன் அதன் வயிற்றிலிருந்து மான் குட்டி வெளியே வந்து வேகமாகப் பாய்கின்ற ஆற்று நீரினுள் வீழ்ந்தது.

பதம் 5.8.6
தத் ப்ரஸவோத்ஸர்பண-பய-கேதாதுரா ஸ்வ-கணேன வ்யுஜ்யமானா
கஸ்யாஞ்சித் தர்யாம் க்ருஷ்ண-ஸாரஸதீ நிபபாதாத ச மமார

தத் ப்ரஸவ—குறைப் பிரசவத்தில் பிறந்ததினால் (குட்டிமான்); உத்ஸர்பண—ஆற்றினைத் தாண்டி; பய—பயத்தினால்; கேத—களைப்பினால்; ஆதுரா—துன்புற்று; ஸ்வ-கணேன—மான் கூட்டத்தி லிருந்து; வியுஜ்யமானா—தனியே பிரிந்து; கஸ்யாஞ்சித்—சில; தர்யாம்—மலைக் குகையினுள்; க்ருஷ்ண-ஸாரஸதீ—கருநிற மான்; நிபபாத—கீழே விழுந்து; அத—ஆகையினால்; ச—மேலும்; மமார—இறந்தது.

தனது கூட்டத்திலிருந்து பிரிந்து ஆற்றைக் கடக்கும்பொழுது தான் கருப்பையில் சுமந்திருந்த குட்டியும் பிறந்து ஆற்றில் விழுந்த காரணத்தினால் அக்கருநிற மான் மிகவும் வருந்தியது. உண்மையில் அது ஒர் மலைக் குகையினுள் வீழ்ந்து அதனால் மரணமடைந்தது.

பதம் 5.8.7
தம் த்வ ஏண-குணகம் க்ருபணம் ஸ்ரோதஸானூஹ்-ய மானும்
அபிவீக்ஷ்யாபவித்தம் பந்துர் இவானுகம்பயா ராஜர்ஷிர் பரத ஆதாய
ம்ருத – மாதரம் இதி ஆஸ்ரம-பதம் அனயத்

தம்—அது; து—ஆனால்; ஏண-குணகம்—மான் குட்டி; க்ருபணம்—உதவியின்றி; ஸ்ரோதஸா—அலைகளினால்; அனுஹ்யமானம்—மிதந்து கொண்டு; அபிவீக்ஷ்ய—கண்டு; அபவித்தம்—தனது சொந்த இனத்திலிருந்து பிரிந்து; பந்துர்—பந்து; இவ—ஒர் நண்பனைப் போல்; அனுகம்பயா—கருணையுடன்; ராஜ-ருஷி: பரத—ராஜரிஷி பரத மகாராஜா; ஆதாய—எடுத்துக் கொண்டு; ம்ருத-மாதரம்—தனது தாயைப் பிரிந்த; இதி—இவ்வாறு நினைத்து; ஆஸ்ரம-பதம்—ஆஸ்ரமத்திற்கு; அனயத்—கொணர்ந்தார்.

கரையின் மீதமர்ந்து இருந்த பரத மகாராஜா தனது தாயைப் பிரிந்து ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்த மான் குட்டியைக் கண்டார். அதன் மீது அவர் மிகுந்த இரக்கம் கொண்டார். ஒர் உயிர் நண்பனைப் போல் அவர் அம்மான்குட்டியை நீரிலிருந்து வெளியே எடுத்தார். அதற்குத் தாய் இல்லை என்பதை அறிந்து அவர் அதனைத் தன் ஆஸ்ரமத்திற்குக் கொணர்ந்தார்.

பதம் 5.8.8
தஸ்ய ஹ வா ஏன- குணக் உச்சைர் ஏதஸ்மின் க்ருத-நிஜா
பிமானஸ்யாஹர் -அஹஸ் தத் போஷண – பாவன-லாலன-ப்ரீண
னானுத்யா-னேனாத்ம நியமா: ஸஹ-யமா: புருஷ-பரிசர்யாதய
ஏகைகஸ: கதிபயேனாஹர்-கணேன வியுஜ்ய மானா: கில ஸர்வ
ஏவோதவஸன்

தஸ்ய—அம்மன்னரின்; ஹவா—உண்மையில்; ஏண-குணகே—மான் குட்டியிடம்; உச்சை—மிகுந்த; ஏதஸ்மின்—இதனில்; க்ருத-நிஜ-அபிமானஸ்ய—தனக்குப் பிறந்த குழந்தையாகவே அம்மான் குட்டியினை ஏற்றுக் கொண்டார்; அஹ: அஹ:—ஒவ்வொரு நாளும்; தத்-போஷண—குட்டியைப் பாதுகாத்தல்; பாலன—ஆபத்திலிருந்து காப்பது; லாவன—வளர்த்தல் அல்லது அதை முத்தமிடுவது போன்றவற்றின் மூலம் அன்பினை வெளிப்படுத்துதல்; ப்ரீணன—செல்லமாக வளர்த்தல்; அனுத்யானேன—இப்பற்றின் காரணத்தினால்; ஆத்ம-நியமா:—தனது உடலைப் பேணும் தனிப்பட்டச் செயல்கள்; ஸஹ-யமா—வன்முறை இன்மை, பொறுமை, எளிமை போன்ற ஆன்மீகக் கடமைகள்; புருஷ-பரிசர்யா-ஆதய—முழுமுதற்கடவுளை வழிபட்டுப் பிற செயல்களைச் செய்வது; ஏக-ஏகஸ—அனுதினமும்; கதிபயேன—ஒரு சில; அஹஹ-கணேன—நாட்களின் காலத்தில்; வியுஜ்யமானா—துறந்து; கில—உண்மையில்; ஸர்வே—எல்லாம்; ஏவ—உறுதியாக; உதவஸன்—அழிந்து போனது.

பரத மன்னர் படிப்படியாக அம்மான் குட்டியின் மீது மிகுந்த பற்றுடையவரானார். புல் பூண்டு முதலியவற்றைப் போட்டு அதனை வளர்க்கத் தொடங்கினார். புலி போன்ற கொடிய விலங்குகளிடமிருந்து அதை கவனமுடன் பாதுகாத்தார். அது தன் மீது உரசும் பொழுது அதனைத் தட்டிக் கொடுப்பார். அதனை கண்ணுங் கருத்துமாக வளர்ப்பதில் கவனமுடன் முயற்சித்து வந்தார். அன்பின் மிகுதியால் அதனை அவர் முத்தமிடுவார். மானின் மீது கொண்ட பற்றுதல் காரணமாக பரத மகாராஜா ஆன்மீக வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஒழுங்குமுறை விதிகளை மறந்தார். படிப்படியாக அவர் முழுமுதற் கடவுளை வழிபடுவதையும் கூட மறந்தார். சிறிது நாட்களில் அவர் தனது ஆன்மீக வளர்ச்சிக்கான அனைத்தையுமே மறந்து போனார்.

பதம் 5.8.9
அஹோ பதாயம் ஹரிண-குணக க்ருபண ஈஸ்வர-ரத-சரண-
பரிப்ரமண-ரயேண ஸ்வ-கண-ஸுஹ்ருத் -பந்துப்ய பரிவர்ஜித
ஸரணம் ச மோபஸாதிதோ மாம் ஏவ மாதா-பிதரௌ ப்ராதுர்-
ஜ்ஞாதீன் யௌதிகாம்ஸ் சைவோபேயாய நான்யம் கஞ்சன வேத மய்ய
அதி-விஸ்ரதஸ் சாத ஏவ மயா மத்-பராயணஸ்ய போஷண-பாலன-
ப்ரீணன-லாலனம் அனஸுயுனானுஷ்டேயம் ஸரண்யோ-பேக்ஷா-
தோஷ- விதிஷா

அஹோபத—அந்தோ; அயம்—இந்த; ஹரிண-குணக—மான்குட்டி; க்ருபண—உதவியின்றி; ஈஸ்வர-ரத-சரண பரிப்ரமண-ரயேண—முழுமுதற் கடவுளின் காலச் சுழற்சியின் வேகத்தினால், அது இங்கே அவரது தேர்ச்சக்கரத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது; ஸ்வ-கண—சொந்த உறவினர்; ஸுஹ்ருத்—நண்பர்கள்; பந்துப்ய—உறவினர்கள்; பரிவர்ஜித—எய்தப்பெற்று; ஸரணம்—தங்குமிடம்; ச—மற்றும்; மா—நான்; உபஸாதித—பெற்று; மாம்—எனது; ஏவ—தனியே; மாதா-பிதரௌ—அன்னையும் தந்தையும்; ப்ராத்ரு ஜ்ஞாதீன்—சகோதரர்கள் மற்றும் நெருங்கிய உறவினர்; யௌதிகான்—கூட்டத்தைச் சேர்ந்த; ச—மேலும்; ஏவ—உறுதியாக; உபேயாய—எய்தப்பெற்று; ந—இல்லை; அன்யம்—ஒருவரேனும்; கஞ்சன—சிலர்; வேத—இது அறிந்தது; மயி—என்னிடத்தில்; அதி—மிகவும்; விஸ்ரப்த—நம்பிக்கை வைத்து; ச—மேலும்; அத: ஏவ—ஆகையினால்; மயா—என்னால்; மத்-பராயணஸ்ய—என்னையே நம்பியிருக்கும் ஒன்று; போஷண-பாலன-ப்ரீணன-லாலனம்—வளர்த்தல், கவனித்தல், பாசம் வைத்தல், பாதுகாத்தல்; அனஸுயுனா—நான் எந்தவிதக் காழ்ப்புணர்ச்சியுமின்றி; அனுஷ்தேயம்—செய்வது; ஸரண்ய—சரணடைந்த ஒருவருக்கு; உபேக்ஷா—புறக்கணித்தல்; தோஷ-விதுஷா—தவறினை அறிந்தவன்.

மாமன்னர் பரத மகாராஜா பின்வருமாறு சிந்திக்கத் தொடங்கினார் அந்தோ, ஒருவர் துணையுமில்லாத இந்த இளமான் குட்டி முழுமுதற் கடவுளின் தூதனாகக் காலத்தின் வேகத்தினால் அதன் உற்றார் உறவினரை இழந்து இப்போது என்னிடம் தஞ்சம் புகுந்திருக்கின்றது. என்னைத் தவிர இதற்கு வேறு எவரையும் தெரியாது. நானே இதற்குத் தாயும், தந்தையும், சகோதரனும், நண்பனுமாக இருக்கிறேன். இவ்வாறே இந்த மான் நினைக்கின்றது ஆகையினால் இந்த மான் மீது இது எனது சுய நன்மையினை அழிக்கிறது என்று காழ்ப்புணர்ச்சி கொள்ளக் கூடாது. நானே இதனை வளர்த்து, புரந்து, ஆதரவளித்து மகிழ்வித்தல் வேண்டும். இது என்னை அடைக்கலம் புகும்பொழுது அதனை நான் எவ்வாறு மறுதலிக்க முடியும்? இம்மான் எனது ஆன்மீக வாழ்விற்கு இடையூறு விளைவித்தபோதிலும், தஞ்சமென்று வந்த ஒன்றைத் தள்ளிவிடக் கூடாது என்று நான் உணர்கிறேன். அது மிகப் பெரிய தவறாகும்.

பதம் 5.8.10
நூனம் ஹி ஆர்யா உபஸம-ஸீலா: க்ருபண-ஸுஹ்ருத ஏவம் விதார்தே
ஸ்வார்தான் அபி குருதரான் உபேக்ஷந்தே.

நூனம்—உண்மையில்; ஹி—உறுதியாக; ஸாத்வ—முனிவர்கள்; உபஸம-ஸீலா—துறவற வாழ்வில் முற்றிலும் இருந்தபோதிலும்; க்ருபண-ஸுக்ருத—ஆதரவற்றோரின் நண்பர்கள்; ஏவம்-வித-அர்தே—இவ்விதிகளை நிறைவேற்றுவதற்கு; ஸ்வ-அர்தான்-அபி—தங்களது சுய நலத்திற்காகக்கூட; குரு-தரான்—மிக முக்கியம்; உபேக்ஷந்தே—புறக்கணித்தல்.

முதிர்ந்த துறவற வாழ்க்கையில் ஒருவன் இருந்தாலும், வருந்துகின்ற உயிர்கள் மீது நிச்சயம் கருணை கொள்கிறான். தன்னிடம் அடைக்கலம் புகுந்தவரைக் காப்பதற்காக, அது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பினும் ஒருவன் தனது சுய நன்மைகளைப் புறக்கணிக்கவே வேண்டும்.

பதம் 5.8.11
இதி க்ருதோனுஷங்க ஆஸன-ஸயனாடன-ஸ்நானா-ஸனா திஷு
ஸ்ஹ ம்ருக-ஜஹுனா ஸ்னேஹானுபத்த-ஹ்ருதய ஆஸுத்

இதி—இவ்வாறு; க்ருத-ஆனுஷங்க—பற்று மிகுதியாகி; ஆஸன—அமர்ந்தும்; ஸயன—படுத்தும்; அடன—நடந்தும்; ஸ்னான—நீராடியும்; ஆஸன-ஆதிஷு—உண்டும் இது போன்ற; ஸஹ-ம்ருக-ஜஹுனா—மான் குட்டியுடன்; ன்நேஷ-அனுபத்த—பாசத்தினால் கவரப்பட்டு; ஹ்ருதய—அவரது இதயம்; ஆஸுத்—ஆனது.

மானின் மீது கொண்ட பாசத்தினால் பரத மன்னர் அதனோடு உண்டும், உறங்கியும், நீராடியும், நடந்தும் வந்தார். இவ்வாறு அவரது இதயம் மானின் மீது கொண்ட பாசத்தினால் கட்டப்பட்டது.

பதம் 5.8.12
குஸ-குஸும-ஸமித்-பலாஸ-பல- மூவோதகானி ஆஹரிஷ்ய
மாணோ வ்ருகஸாலா-வ்ருகோதிப்யோ பயம் ஆஸம் ஸமானோ யதா
ஸஹ ஹரிண-குணகேன வனம் ஸமாவிஸதி

குஸ—சடங்குகளில் பயன்படுத்தப்படும் தருப்பைப் புல்; குஸும—மலர்கள்; ஸமித்—சமித்துக்கள் (விறகு); பலாஸ—இலைகள், பல மூல—பழங்கள், கிழங்குகள்; உதகானி—தண்ணீர்; ஆஹரிஷ்யமான—சேகரிப்பதற்கான விருப்பம்; வ்ருகஸாலா-வ்ருக—ஓநாய்கள் மற்றும் நாய்களிடமிருந்து; ஆதிப்ய—பிற விலங்குகளான புலிகள் போன்றவை; பயம்—பயம்; ஆஸம்ஸமான:—ஜனங்கொண்டு; யதா—அப்பொழுது; ஸஹ—உடன்; ஹரிண-குணகேன—மான் குட்டி; வனம்—வனம்; ஸமாவிஸதி—புகும்பொழுது.

தர்பைப்புல், மலர்கள், சமித்துக்கள், இலைகள், கனிகள், கிழங்குகள், தண்ணீர் போன்றவற்றைச் சேகரிப்பதற்காகப் பரதர் காட்டிற்குள் போகும்பொழுது புலி, ஒநாய் போன்ற கொடிய மிருகங்களினால் மான்குட்டி கொல்லப்பட்டுவிடுமோ என்று அஞ்சினார். அதனால் அவர் எப்போது காட்டிற்குள் சென்றாலும் மான் குட்டியையும் தன்னுடன் அழைத்துச் செல்வார்.

பதம் 5.8.13
பதிஷு முக்த-பாவேன தத்ர தத்ர விஷக்த-மதி-ப்ரணய பர
ஹ்ருதய: கார்பண்யாத் ஸ்கந்தேனோத்வஹதி ஏவம் உத்ஸங்க உரஸி
சதாயோபலாலயம் முதம் பரமான் அவாப

பதிஷு—காட்டிற்குப் போகும் பாதையில்; ச—மேலும்; முக்த-பாவேன—மானின் குழந்தைத்தனமான நடத்தையினால்; தத்ர தத்ர—இங்குமங்கும்; விஷக்த-மதி—அவரது மனம் அதிகமாகக் கவரப்பட்டு; ப்ரணய—அன்புடன்; பர—பாரம்; ஹ்ருதய—அவரது இதயம்; கார்பண்யாத்—பாசம் மற்றும் அன்பின் காரணமாக; ஸ்கந்தேன—தோள்களின் மீது; உத்வஹதி—சுமந்துகொண்டு; ஏவம்—இவ்வாறு; உத்ஸங்கே—சிலநேரம் மடியின் மீது; உரஸி—உறங்கும் பொழுது மார்பின் மீது; ச—மேலும்; ஆதாய—வைத்துக் கொண்டு; உபலாலயன்—செல்லமாக; முதம்—மகிழ்ச்சி; பரமாம்—மிகவும் அதிகமாக; அவாப—அவர் நினைத்தார்.

காட்டினுள் சென்று கொண்டிருக்கும்பொழுது மானின் குழந்தைத் தனமான சேட்டைகள் பரத மன்னரை மிகவும் கவர்ந்தன. பரதர் அதன் மீது கொண்ட பாசத்தின் காரணமாக அதைத் தோள்கள் மீது கூடத் தூக்கிச் செல்வார். அவரது இதயம் பாசத்தினால் நிரம்பியிருந்தது. ஆகையினால் சில நேரம் அதனைத் தன் மடி மீது வைத்துக் கொள்வார். உறங்கும்போது அம்மானைத் தன் மார்பின் மீது போட்டுக் கொள்வார். இவ்வாறு அந்த மானைச் செல்லமாக வளர்ப்பதில் அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.

பதம் 5.8.14
க்ரியாயாம் நிர்வர்த்யமானாயாம் அந்தராலே ‘பி உத்தா யோத்தாய
யனதனடத அபிசக்ஷுத தர்ஹி வாவ ஸ வர்ஷ-பதி: ப்ரக்ருதி-
ஸ்தேனமனஸா தஸ்மா ஆஸிஷ ஆஷாஸ்தே ஸ்வஸ்தி ஸ்தாத் வத்ஸ தே
ஸர்வத இதி

க்ரியாணாம்—பகவானை வழிபடுவது அல்லது சமயச்சடங்குகளைச் செய்வது; நிர்வர்த்யமானாயாம்—முடிப்பதற்கு முன்பே; அந்தராலே—நடுவில் உள்ள இடைவேளைகளில்; அபி—இருந்த போதிலும்; உத்தாய உத்தாய—அடிக்கடி எழுந்து; யதா—அப்பொழுது; ஏனம்—மான் குட்டி: அபிசக்ஷீம—பார்ப்பார்; தர்ஹி வாவ—அச்சமயம்; ஸ—அவர்; வர்ஷ-பதி—பரத மகாராஜா; ப்ருக்ருதி-ஸ்தேன—மகிழ்ந்து; மனஸா—மனதில்; தஸ்மை—அதற்கு; ஆஸிஷ-ஆஷாஸ்தே—ஆசியருள்வார்; ஸ்வஸ்தி—எல்லா மங்கலங்களும்; ஸ்தாத்—கிடைக்கட்டும்; வத்ஸ—ஒ, அன்பிற்குரிய மான்குட்டியே; தே—உனக்கு; ஸர்வத—எல்லா வழியிலும்; இதி—இவ்வாறு.

பரத மன்னர் உண்மையில் பகவானை வழிபட்டுக் கொண்டோ அல்லது சில சடங்குகளில் ஈடுபட்டுக்கொண்டோ இருக்கும்பொழுது அது முடிவதற்கு முன்பாகவே இடையிடையே எழுந்து அந்த மான்குட்டி எங்கே இருக்கிறது என்று பார்ப்பார். அது பாதுகாப்புடன் இருப்பதை அறிந்தால் உடனே மனமும் இதயமும் மகிழும். அவர் அந்த மானை “அன்பிற்குரிய மான்குட்டியே உனக்கு அனைத்து மங்கலங்களும் உண்டாகட்டும்” என்று வாழ்த்துவார்.

பதம் 5.8.15
அன்யதா ப்ருஸம் உத்விக்ன-மனா நஷ்ட – த்ரவிண இவ க்ருபண
ஸகருணம் அதி -தர்ஷேண ஹரிண-குணக-விரஹ-விஹ்வல-ஹ்ருதய
ஸந்தாபஸ்தம் ஏவவானுஷோசன் கில கஸ்மலம் மஹத் அபிரம்பித
இதி ஹோவாச

அன்யதா—சில நேரம் (மான் குட்டியைக் காணாத பொழுது); ப்ருஷம்—மிகுந்த; உத்விக்ன-மனா—அவர் மனம் மிக்க கவலையுடன்; நஷ்ட-த்ரவினை—தனது பெருஞ் செல்வத்தை இழந்து; இவ—போன்று; க்ருபண—ஒரு கஞ்சன்; ஸ-கருணம்—வருத்தங்கொண்டு; அதி-தர்ஷேண—மிகுந்த கவலையுடன்; ஹரிண-குணக—மானின் குட்டியிடமிருந்து; விரஹ—பிரிவினால்; விஹ்வல—கொதித்து; ஹ்ருதய—இதயம் அல்லது மனம்; ஸ்நாப—அவரது துன்பம்; தம்—அந்த மான் குட்டி; ஏவ—மட்டும்; அனுஷோசன்—தொடர்ந்து நினைத்து; கில—உறுதியாக; கஸ்மலம்—மோகம்; மஹத்—மிகுந்த; அபிரம்பித—எய்தியது; இதி—இவ்வாறு; ஹ—உறுதியாக; உவாச—கூறினார்.

சில நேரம் மானைக் காணவில்லையெனில் பரதரின் மனம் மிகவும் கொந்தளித்துவிடும். ஒரு கஞ்சன் தனது செல்வத்தை இழந்தது போல் அவர் மனம் மிகுந்த வருத்தமெய்தும். மான் குட்டி எங்காவது சென்றுவிட்டால் அவர் கவலை கொண்டு அதன் பிறகு பிரிவை எண்ணித் கலங்குவார். மோக வயப்பட்டு அவர் பின்வருமாறு கூறுவார்.

பதம் 5.8.16
அபி பத ஸ னவ க்ருபண ஏண-பாலகோ ம்ருத-ஹரிணீ-ஸுதோ’
ஹோ மமாணார்யஸ்ய ஷட-கிராத-மதேர் அக்ருத-ஸுக்ருதஸ்ய க்ருத-
விஸ்ரம்ப ஆத்ம-ப்ரத்யயேன தத் அபிகணயன் ஸுஜன இவாக மிஷ்யதி

அபி—உண்மையில்; பத—அந்தோ; ஸ—அந்த மான் குட்டி; வை—உறுதியாக; க்ருபண—துன்பமுற்று; ஏண-பாலக:—மான்குட்டி; ம்ருத-ஹரிணீ-ஸுத—இறந்துபோன மானின் குட்டி; அஹோ—ஒ; மம—எனது; அனார்யஸ்ய—மோசமான நடத்தையினால்; ஷட—ஏமாற்றுபவனின்; கிராத—அல்லது நாகரீகமில்லாத கொடுமைக்காரனின்; மதே—அப்படிப்பட்ட அவர் மனம்; அக்ருத-ஸுக்ருதஸ்ய—புண்ணியச் செயல்கள் எதுவும் செய்யாத; க்ருத-விஸ்ரம்ப—நம்பிக்கை முழுவதையும் வைத்து; ஆத்ம-ப்ரத்யயேன—அவனைப் போல் என்னை நினைத்து; தத் அவிகணயம்—இவற்றையெல்லாம் எண்ணிப் பாராது; ஸு-ஜன: இவ—ஒரு நேர்மை மிக்க மனிதனைப் போல்; அகமிஷ்யதி—மீண்டும் அது திரும்பி வருமா.

மகாராஜா பரதன் இவ்வாறு நினைத்தார் அந்தோ, அந்த மான் இப்போது ஆதரவின்றி இருக்கிறது. நான் மிகுந்த தீவினையேன் என்று என் உள்ளம் எப்போதும் சூழ்ச்சிகளினாலும், கொடுமைகளினாலும் நிரம்பியிருக்கும் தந்திரமான வேடனைப் போன்று இருக்கின்றது. நன்னடத்தை மீது பற்றுள்ள ஒரு நல்லவன் மோசமான நடத்தையும் சூழ்ச்சியும் கொண்ட தன் நண்பனை மன்னித்து அவன் மீது நம்பிக்கை வைப்பது போல் இந்தமான் குட்டியும் என் மீது நம்பிக்கை வைத்திருந்தது. நான் நம்பிக்கையற்றவன் என்றாலும் அந்த மான் குட்டி மீண்டும் என்மீது நம்பிக்கை வைத்து இங்கு திரும்பி வருமா?

பதம் 5.8.17
அபி க்ஷே மேணாஸ்மின்ன ஆஸ்ரமோபவனே ஸஷ்பாணி சரந்தம்
தேவ-குப்தம் த்ரக்ஷ்யாமி

அபி—இருக்கக் கூடுமா; க்ஷே மேண—அச்சமின்றி ஏனெனில் புலிகள் போன்ற மிருகங்கள் இல்லாததினால்; அஸ்மின்—இதில்; ஆஸ்ரமே-உபவனே—ஆஸ்ரமத்தின் நந்தவனத்தில்; ஸஷ்பாணி-சரந்தம்—புற்களைத் தின்று கொண்டும் திரிந்து கொண்டும்; தேவ குப்தம்—தேவர்களினால் காக்கப்பட்டு; த்ரக்ஷ்யாமி—நான் காண்பேனா.

அந்தோ, புலிகள் போன்ற மிருகங்களினால் தாக்கப்படாமல் தேவர்களினால் காக்கப்பட்டு அந்த அழகியமான் உயிரோடு இருப்பதை நான் மீண்டும் காண முடியுமா? அது ஆஸ்ரமத்தின் நந்தவனத்தில் புற்களைத் தின்று கொண்டு திரிவதை மீண்டும் நான் காண்பேனா?

பதம் 5.8.18
அபி ச ந வ்ருக: ஸாலா-வ்ருகோ ‘ன்யதமோ வா நைக-சர ஏக-சரோ
வா பக்ஷயதி

அபி ச—அல்லது; ந—இல்லை; வ்ருக—ஓநாய்; ஸாலா-வ்ருக—நாய்; அன்யதம—இவற்றில் ஏதேனும் ஒன்று; வா—அல்லது; ந-ஏக-சர—கூட்டமாக அலையும் பன்றிகள்; ஏக-சர—தனியாகத் திரியும் புலி; வா—அல்லது; பக்ஷயதி—தின்று கொண்டு (அந்த வாயில்லா ஜீவனை).

உண்மை என்னவென்று நான் அறியேன். ஆயினும் எனது மான் ஒரு ஓநாயினாலோ, அல்லது நாயினாலோ அல்லது கூட்டமாக அலையும் பன்றிகளினாலோ அல்லது தனியாகத் திரியும் புலியினாலோ நிச்சயம் கொன்று தின்னப்பட்டிருத்தல் வேண்டும்.

பதம் 5.8.19
நிம்லோசதி ஹ பகவான் ஸகல -ஜகத் –க்ஷேமோதயஸ்த்ரய்ய்-
ஆத்மாத்யாபி மம ந ம்ருக-வதூ-ந்யாஸ ஆகச்சதி

நிம்லோசதி—மறைதல்; ஹ—அந்தோ; பகவான்—முழுமுதற் கடவுள்; சூரியனாகத் தோன்றுகிறார்; ஸகல-ஜகத்—எல்லாப் பிரபஞ்சங்களிலும்; க்ஷேம-உதய—மங்கலத்தினை அதிகரிப்பவர்; த்ரயீ-ஆத்மா—அவர் மூன்று வேதங்களினால் ஆனவர்; அத்ய-அபி—இதுவரை; மம—எனது; ந—இல்லை; ம்ருக-வதூ-ந்யாஸ:—இம்மான்குட்டி அதன் தாயினால் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது; ஆகச்சதி—வருவதற்கு.

அந்தோ, சூரியன் உதிக்கும்பொழுது எல்லாவிதமான மங்கலங்களும் துவங்குகின்றன. துரதிர்ஷ்டவசமாக அவை எனக்காக ஆரம்பமாகவில்லை. சூரியதேவன் வேதங்களின் வடிவமானவர். ஆனால் நானோ வேதங்களின் விதிகளையெல்லாம் இழந்து நிற்கிறேன். சூரியன் மேல்வானில் மறையப் போகிறது. ஆனால் தனது தாய் இறந்ததிலிருந்து என்னை நம்பியிருந்த மான்குட்டி இன்னும் திரும்பி வரவில்லை.

பதம் 5.8.20
அபி ஸ்வித் அக்ருத-ஸுக்ருதம் ஆகத்ய மாம் ஸுகயிஷ்யதி ஹரிண
ராஜ-குமாரோ விவித-ருசிர-தர்ஷணீய-நிஜ-ம்ருக-தாரக-விநோதைர்
அஸந்தோஷம் ஸ்வானாம் அபனுதன்

அபஸ்வித்—இவ்வாறு நேர்ந்திருக்குமோ; அக்ருத-ஸுக்ருதம்—புண்ணியச் செயல்கள் எதையும் செய்யாதவர்; ஆகத்ய—திரும்பி வருதல்; மாம்—என்னிடம்; ஸுகயிஷ்யதி—மகிழ்ச்சியளிக்க; ஹரிண ராஜ குமார:—எனது மைந்தனைப் போல் நான் காத்தேன் (அந்த மானும் ஒரு ராஜ குமாரனைப் போன்றதுதான்); விவித—பல்வேறு; ருசிர—மிகவும் இனிமையளிக்கும்; தர்ஷணீய—காண்பதற்கு; நிஜ—சொந்தம்; ம்ருக-தராக—மானின் குட்டிக்குப் பொருத்தமான; விநோதை—இனிமையான செயல்களினால்; அஸந்தோஷம்—மகிழ்ச்சியின்றி; ஸ்வானாம்—அதன் சொந்த இனம்; அபனுதன்—ஓடிவிட்டது.

மான் ஒரு ராஜ குமாரனைப் போன்றே இருந்தது. அது எப்போது திரும்பி வரும்? மீண்டும், மனதிற்கு இனிமையளிக்கக் கூடிய தனது செயல்களை எப்போது செய்து காட்டும்? என்னைப் போன்று துன்புற்றவருக்கு அது மீண்டும் அமைதி அளிக்குமா? உண்மையில் என்னிடம் புண்ணிய பலன்கள் ஏதுமில்லை, அவ்வாறு இருந்திருந்தால் மான் இதற்குள் திரும்பி வந்திருக்கும்.

பதம் 5.8.21
க்ஷ்வேலிகாயாம் மாம் ம்ருஷா-ஸமாதினாமீலித-த்ருஷம் ப்ரேம
ஸம்ரபேண சகித-சகித ஆகத்ய ப்ருஷத்-அபருஷ- விஷாணாக்ரேண
லுடதி

க்ஷ்வேலிகாயாம்—விளையாடும்பொழுது; மாம்—எனக்கு; ம்ருஷா—போலியான; ஸமாதினா—தியான சமாதியினால்; ஆமீவித-த்ருஷம்—மூடிய கண்களுடன்; ப்ரேம-ஸம்ரம்பேண—அன்பின் விளைவாக எழுந்த ஆத்திரம் காரணமாக; சகித-சகித—அச்சத்துடன்; ஆகத்ய—வந்து; ப்ருஷத்—தண்ணீர்த் துளிகள்; அபருஷ—மிகவும் மென்மையான; விஷாண—கொம்புகளின்; அக்ரேண—துளிகளினால்; லுடதி—எனது உடலைத் தொடும்.

அந்தோ, அச்சிறிய மான்குட்டி என்னோடு விளையாடும் பொழுதும், நான் கண்களை மூடி தியானத்திலிருப்பது போல் பாவனை செய்வதைக் கண்டதென்றாலும், அன்பின் உணர்ச்சிப் பெருக்கால், என்னைச் சுற்றி வந்து மிகுந்த அச்சத்துடன் தனது கொம்புகளின் நுனியினால் எனது உடலைத் தொடும். அது எனக்குக் குளிர்ந்த நீர்த்துளிகளைப் போன்று இருக்கும்.

பதம் 5.8.22
ஆஸாதித-ஹவிஷி பர்ஹிஷி தூஷிதே மயோபாலப்தோ பீத—பீத
ஸபதி உபரத-ராஸ ருஷி-குமாரவத் அவஹித-கரண-கலாப ஆஸ்தே

ஆஸாதித—இடுதல்; ஹவிஷி—வேள்வியில் இடப்படும் பொருட்கள் அனைத்தும்; பர்ஹிஷி—தர்ப்பைப் புல்லின் மேல்; துஷிதே—அசுத்தமடையும்பொழுது; மயா-உபவப்த—என்னால் மிரட்டப்பட்டு; பீத-பீத:—மிகுந்த அச்சத்தில்; ஸபதி—உடனடியாக; உபரத-ராஸ—விளையாட்டை நிறுத்தி; ருஷி-குமாரவத்—ஒரு ரிஷிகுமாரனைப் போல்; அவஹித—முற்றிலும் கட்டுப்பாட்டுடன்; கரண-கலாப—அனைத்துப் புலன்களும்; ஆஸ்தே—அமர்ந்திருக்கும்.

நான் தர்ப்பைப் புல்லின் மீது வேள்விக்கான பொருட்களை வைத்திருக்கும்பொழுது விளையாடிக்கொண்டிருக்கும் மான் தனது பற்களினால் தர்ப்பைப் புல்லைத் தொட்டு அசுத்தப்படுத்தும். அப்போது அதை நாம் மிரட்டித் தள்ளினேன் என்றால் அது மிகுந்த அச்சத்துடன் ஒர் ரிஷிகுமாரனைப் போல் ஒரே இடத்தில் அசையாது அமர்ந்திருக்கும். இவ்வாறு அது தனது விளையாட்டினை சற்றே நிறுத்தும்.

பதம் 5.8.23
கிம் வா அரே ஆசரிதம் தபஸ் தபஸ்வின்யானயா யத் இயம் அவனி:
ஸவிநய-க்ருஷ்ண-ஸார-தனய-தனுதர-ஸுபக-ஸிவதமாகர-குரபத
பங்க்திபிர் த்ரவினை-விதுரா-து ரஸ்ய க்ருபணஸ்ய மம த்ரவிண
பதவீம் ஸுசயந்தி ஆத்மானம் ச ஸர்வத க்ருத-கௌதுகம் த்விஜானாம்
ஸவர்காபவர்க-காமானாம் தேவ-யஜனம் கரோதி

கிம் வா—என்ன; அரே—ஓ; ஆசரிதம்—பயிலுதல்; தப—தவம்; தபஸ்வின்யா—மிகுந்த அதிர்ஷ்டத்தினால்; அனயா—இப்பூமி; யத்—இருந்து; இயம்—இந்த; அவனி—பூமி; ஸ-விநய—மிகவும் மென்மையாகவும் நன்கு பழகியும்; க்ருஷ்ண-ஸார-தனய—கருமானின் குட்டியின்; தனுதர—சிறிய; ஸுபக—அழகிய; ஸிவ-தம—மிக்க புனிதமான; அகர—மெல்லிய; குர—குளம்புகளின்; பத-பங்க்திபி:—காலடித் தடங்களின் அடையாளத்தினால்; த்ரவிண-விதுர-ஆதரஸ்ய—செல்வத்தை இழந்ததினால் மிகவும் வருந்தும் ஒருவன்; க்ருபணஸ்ய—மகிழ்ச்சியற்ற ஒர் உயிர்; மம—எனக்காக; த்ரவிண பதவீதம்—அச்செல்வத்தைப் பெறுவதற்கான வழி; ஸுசயந்தி—குறிப்பிடுகின்ற; ஆத்மானம்—அவளது சொந்த உடல்; ச—மேலும்; ஸர்வத—எல்லாப் பக்கங்களிலும்; க்ருத-கௌதுகம்—அணி செய்யப்பட்டு; த்விஜானாம்—அந்தணர்களின்; ஸவர்க-அபவர்க-காமானாம்—சொர்க்கம் பெறுவதற்கு அல்லது விடுதலை பெறுவதற்கு விரும்புபவர்கள்; தேவ-யஜனம்—தேவர்களுக்கு வேள்வி செய்யும் இடம்; கதோதி—இது செய்கிறது.

இவ்வாறு புத்தி சுவாதீனமற்றவரைப் போல் தனக்குள் பேசிக் கொண்ட பரத மன்னர் எழுந்து வெளியே சென்றார். மானின் குளம்படித் தடத்தினைப் பூமியில் கண்டவுடன் அன்பு மிகுதியினால் அவற்றை அவர் புகழ்ந்து கூறினார் ஒ, வருத்தத்துக்குரிய பரதனே, இப்பூமி செய்த தவம் மற்றும் விரதத்துடன் ஒப்பிடும்பொழுது நீ செய்த தவங்களும் விரதங்களும் ஒன்றுமில்லாதவையாகும். இப்பூமி செய்த தவத்தினால் இம்மானின், அழகிய, மெல்லிய, மங்களகரமான குளம்படித்தடங்கள் இதன் மீது பதிந்திருக்கின்றன. இக்காலடித் தடங்கள் மானை இழந்து தவிக்கும் என்போன்ற ஒருவனுக்கு அத்தகைய மான் காட்டினுள் எவ்வாறு சென்றது என்பதையும் எவ்வாறு நான் இழந்த செல்வத்தை மீண்டும் பெறக் கூடும் என்பதையும் எடுத்துக் காட்டுகின்றன. காலடித் தடங்களினாலேயே சொர்க்கத்திற்குச் செல்வது அல்லது தேவர்களுக்குச் செய்யும் வேள்வியினால் விடுதலை பெறுவது என்று விரும்பும் அந்தணர்களுக்கு இந்த பூமி பொருத்தமான இடமாக இருக்கின்றது.

பதம் 5.8.24
அபி ஸ்வித் அஸௌ பகவான் உடு-பதிர் ஏனம் ம்ருக-பதி-பயான்
ம்ருதமாதரம் ம்ருக-பாலகம் ஸ்வாஸ்ரம-பரிப்-ரஷ்டம் அனுகம்பயா
க்ருபண ஜன-வத்ஸல: பரிபாதி

அபி ஸ்வித்—செய்யக் கூடுமா; அஸௌ—இந்த; பகவான்—ஆற்றல் மிக்க; உடு பதி—சந்திரன்; ஏனம்—இது; ம்ருக-பதி-பயாத்—சிங்கம் மீது கொண்ட பயத்தின் காரணமாக; ம்ருத-மாதரம்—அது தன் தாயை இழந்து; ம்ருக-பாலகம்—மானின் குட்டி; ஸ்வ-ஆஸ்ரம-பரிப்ரஷ்டம்—ஆஸ்ரமத்திலிருந்து தனியே திரிகிறது; அனுகம்பயா—கருணையினால்; க்ருபண-ஜன-வத்ஸல—மகிழ்ச்சியற்ற மனிதன் மீது மிகுந்த அன்புடையவன் (சந்திரன்); பரிபாதி—இப்போது அதனைப் பாதுகாக்கின்றான்.

பரதமகாராஜா புத்தி சுவாதீனமற்ற மனிதனைப் போல் தொடர்ந்து பேசினார். தலைக்கு மேல் வானில் நிலவிலே தோன்றிய இருள் தடங்கள் அவருக்கு ஒரு மானைப் போல் காட்சி தந்தன. எனவே அவர் கூறினார் மகிழ்ச்சியற்ற மனிதன் மேல் மிகுந்த அன்புடைய சந்திரனாகிய இவன், தாயை இழந்த இந்த மான் ஆஸ்ரமத்திலிருந்து தனியே வந்துவிட்டதை அறிந்து அதன் மீதும் அன்பு வைத்திருப்பானோ? சிங்கத்தின் பயங்கரமானத் தாக்குதலிலிருந்து காப்பதற்காக இச்சந்திரன் அந்த மானுக்குத் தனது அருகிலேயே அடைக்கலம் கொடுத்திருக்கிறான் போலும்.

பதம் 5.8.25
கிம் வாத்மஜ-விஸ்வேஷ-ஜ்வர-தவ-தஹன-ஸிகாபிர் உபதப்ய
மான ஹ்ருதய-ஸ்தல-நளினீகம் மாம் உபஸ்ருத-ம்ருகீ-தனயம் ஸிஸீர
ஸாந்தானுராக – குணித-நிஜ-வதன-ஸலிலாம்ருதமய – கபஸ்திபி
ஸ்வதயநிதி ச

கிம் வா—அல்லது இவ்வாறிருக்கலாம்; ஆத்மஜ—மைந்தவிடமிருந்து; விஸ்வேஷ—தனியே பிரிந்த காரணத்தினால்; ஜ்வர—வெம்மை; தவ-தஹண—காட்டுத்தீயின்; ஸிகாபி—தீப்பிழம்புகளினால்; உபதப்யமான—எரிந்தது; ஹ்ருதய—இதயம்; ஸ்தல-நளினீகம்—செந்தாமரை மலருடன் ஒப்பிடக் கூடிய; மாம்—எனக்கு; உபஸ்ருத-ம்ருகீ-தனயம்—மான்குட்டி யாரிடம் தன்னை மிகவும் இணக்கமாக வைத்திருந்ததோ; ஸிஸிர-ஸாந்த—அது மிகவும் அமைதியும் குளிர்ச்சியும் வாய்ந்தது; அனுராக—அன்பினால்; குணித—பொங்கி வரும்; நிஜ-வதன-ஸலிவ—அதன் வாயிலிருந்து தண்ணீர்; அம்ருத-மய—அமிர்தம் போன்றது; கபஸ்திபி—நிலவின் கதிர்களினால்; ஸ்வலயதி—எனக்கு இன்பம் அளிக்கின்றது; இதி—இவ்வாறு; ச—மேலும்.

நிலவொளியினைக் கண்ட பின்னர் பரத மன்னர் தொடர்ந்து ஓர் உன்மத்தம் பிடித்தவனைப் போல் பேசினார் மான் குட்டி என்னிடம் மிகுந்த இணக்கமாகவும் எனக்கு மிகவும் பிரியமானதாகவும் இருந்தது. அதன் பிரிவு எனது மைந்தனை யான் பிரிந்தது போலிருக்கின்றது. தகிக்கும் அப்பிரிவுத் தீ உண்மையில் காட்டுத் தீ போல் என்னைச் சுடுகின்றது. மல்லிகை மலர் போன்ற மென்மையான எனது மனம் இப்போது எரிகின்றது. எனது துன்பத்தைக் கண்ட சந்திரன் எப்படி கடுமையான காய்ச்சலில் வருந்தும் தன் நண்பன் மீது ஒருவன் குளிர்ந்த நீரைத் தெளிப்பானோ அது போல் தனது குளிர்ந்த அமிர்தம் போன்ற கதிர்களை என்மீது தெளிக்கின்றான் சந்திரன். இவ்வாறு எனக்கு மகிழ்ச்சியினை அளிக்கிறது.

பதம் 5.8.26
ஏவம் அகடமான- மனோரதாகுல- ஹ்ருதயோ ம்ருக-தாரகாபாஸேன
ஸ்வாரப்த-கர்மணா யோகா ரம்பணதோ விப்ரம்- ஸித ஸ யோக-
தாபஸோ பகவத்-ஆராதன லஷணாச் ச கதம் இதரதா ஜாதி-அந்தர
ஏணகுணக ஆஸங்க ஸாக்ஷான் நி ஷ்ரேயஸ- ப்ரதிபக்ஷதயா ப்ராக்
பரித்யக்த துஸ்த்யஜ- ஹ்ருதயா பிஜாதஸ்யதஸ்யைவம் அந்தராய-விஹத
யோகாரம் பணஸ்ய ராஜர்ஷேர் பரதஸ்ய தாவன் ம்ருகார்பக-போஷண-
பாலன – ப்ரீணன- லாலனானுஷங்கேணாவிகணயத ஆத்மானம் அஹிர்
இவாகு பிலம் துரதிக்ரம் கால கரால-ரபஸ ஆபத்யத

ஏவம்—இவ்வழியில்; அகடமான—எய்துதற்கு அரிய; மன-ரத—மனோரதம் போன்ற ஆசைகளினால்; ஆகுஆ—துன்புற்று; ஹ்ருதய—அவரது இதயம்; ம்ருக-தாரக-ஆபாஸேன—மான் குட்டியைப் போன்று; ஸ்வ-ஆரப்த-கர்மணா—கண்ணனுக்குப் புலனாகாத அவரது தீவினைப் பயனால்; யோக ஆரம்பதை—யோகச் செயல்கள் செய்வதிலிருந்த; விப்ரம்ஸித—கீழே வீழ்ந்து; ஸ—அவர் (பரத மகாராஜா); யோக-தாபஸ—யோக ஸித்தி செயல்கள் மற்றும் தவங்கள் செய்தல்; பகவத்-ஆராதன-லக்ஷணாத்—முழுமுதற் கடவுளுக்குச் செய்யும் பக்தித் தொண்டின் செயல்களிலிருந்து; ச—மேலும்; கதம்—எவ்வாறு; இதரதா—அத்தோடு; ஜாதி-அந்தரே—பல்வேறு உயிர்களின் வாழ்க்கையினைச் சார்ந்து; ஏண-குணகே—மான் குட்டியின் உடலிற்கு; ஆஸங்க—மிகுந்த பிரியமுடனான பற்று; ஸாக்ஷாத்—நேரடியாக; நி ஷ்ரேயஸ—வாழ்வின் இறுதி லட்சியத்தை எய்துவதற்கு; ப்ரதிபக்ஷதயா—ஒரு தடவையாக இருக்கும் குணத்துடன்; ப்ராக்—அவர் முன்பு; பரித்யக்த—துறந்து; துஸ்த்யஜ—துறப்பதற்கு மிகுந்த கடினமாக இருந்த போதிலும்; ஹ்ருதய அபிஜாதஸ்ய—தனது இதயத்தில் பிறந்த தனது சொந்த மைந்தர்கள்; தஸ்ய—அவரது; ஏவம்—இவ்வாறு; அந்தராய—அந்தத் தடையினால்; விஹத—தடுக்கப்பட்டு; யோக-ஆரம்பணஸ்ய—யோகஸித்திகளைப் பயிற்சி செய்வதற்கான அவரது பாதையில்; ராஜருஷே—ராஜரிஷி; பரதஸ்ய—பரத மகராஜா; தாவத்—அவ்வழியில்; ம்ருக-அர்பக—ஒரு மான்குட்டியின்; போஷண—காப்பதில்; பாலன—பாதுகாப்பதில்; ப்ரீணன—மகிழ்ச்சி எய்தி; வாலன—செல்லமாக வளர்ப்பதில்; அனுஸங்கேண—தொடர்ந்து கவனிப்பதினால்; அவிகணயத—புறக்கணித்து; ஆத்மானம்—அவரது சுய ஆத்மா; அஹி இவ—ஒரு பாம்பினைப் போன்று; ஆகுபிலம்—எலியின் வளையினுள்; துரதிக்ரம—கடக்க முடியாத; கால—இறுதி மரணம்; கரால—பயங்கரமான; ரபஸ:—வேகமாக; ஆபத்யத—அடைதல்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் அன்பார்ந்த மன்னனே, பரத மன்னர் மானின் வடிவத்தில் வெளிப்பட்ட அடக்க முடியாத ஆசைக்குப் பலியானார். அவரது முன்னையப் பலன்தரும் செயலின் விளைவினால் அவர் யோக ஸித்தி, தவம், முழுமுதற் கடவுளை வழிபடுதல் போன்றவற்றிலிருந்து தவறி விட்டார். இது அவரது முன்னைய பலன் தரும் செயலின் விளைவினால் ஏற்படவில்லையெனில் அவர் தனது மனைவி, மக்கள், குடும்பம் போன்றவை தனது ஆன்மீக வாழ்வுப் பாதையில் தடையாக இருக்கும் என்று கருதி எவ்வாறு அவற்றின் தொடர்பினைக் கைவிட முடிந்தது? ஒரு மானின் மீது அளவிறந்த பாசத்தினை எவ்வாறு அவரால் காட்ட முடிந்தது? ஆகையினால் இது நிச்சயம் அவரது முன்னைய கர்மவினையின் பயனேயாகும். மன்னர் தனது ஆன்மீகச் செயல்களிலிருந்து நிலை தடுமாறுகின்ற அளவிற்கு அவர் அந்த மானைச் செல்லமாக வளர்ப்பதில் தன்னை மறந்து ஆளாகியிருந்தார். உரிய காலத்தில், எலிவளையில் புகுந்து கொண்டு எலியின் வரவிற்காகக் காத்திருக்கும் நச்சுப் பாம்பு போலும் மரணம் அவர் முன் வீற்றிருந்தது.

பதம் 5.8.27
ததானீம் அபி பார்ஸ்வ-வர்தினம் ஆத்மஜம் இவானுஸோசந்தம்
அபிவீக்ஷமாணோம்கே ஏவாபிநிவேஷித-மனா விஷ்ருஜ்ய லோகம் இமம்
ஸஹ ம்ருகேண கலேவரம் ம்ருதம் அனு ந ம்ருத-ஜன்மானுஸ்ம்ருதிர்
இதரவன் ம்ருக-ஸரீரம் அவாப

ததானீம்—அச்சமயம்; அபி—உண்மையில்; பார்ஸ்வ-வர்தினம்—அவரது மரணப் படுக்கையின் அருகில்; ஆத்ம-ஜம்—அவரது சொந்த மகன்; இவ—போன்று; அனுஸோசந்தம்—அழுது புலம்பி; அபிவீக்ஷமாண—கண்டு; ம்ருகே—மானின்; ஏவ—உறுதியாக; அபிநிவேஷிதமனா—அவரது மனம் ஆழ்ந்திருந்தது; விஸ்ருஜ்ய—துறந்து; லோகம்—உலகினை; இமம்—இந்த; ஸஹ—உடன்; ம்ருகேண—மான்; கலேவரம்—அவருடைய உடல்; ம்ருதம்—இறந்து; அனு—அதன் பின்னர்; ந—இல்லை; ம்ருத—அழிதல்; ஜன்ம அனுஸ்ம்ருதி—தனது மரணத்திற்கு முன்பு நிகழ்ந்தவைகளின் நினைவு; இதர-வத்—பிறரைப் போன்று; ம்ருக-ஸரீரம்—மானின் உடலில்; அவாப—பெற்றார்.

அவர் மரணம் அடையும்பொழுது தனது மகனைப் போலவே தன் அருகில் இருந்து தன் மரணத்திற்காக மான் அழுது புலம்புவதை அவர் கண்டார். உண்மையில் அவர் மனம் மானின் உடலின் மீதே ஆழ்ந்திருந்தது. இதனைத் தொடர்ந்து கிருஷ்ண உணர்வினை இழந்தவர்களைப் போன்று அவர் இந்த உலகம், மான், மற்றும் தனது பெளதீக உடல் எல்லாவற்றையும் துறந்து மானின் உடலைப் பெற்றார். அதிலும் கூட ஓர் நன்மை இருந்தது. அவர் மனித உடலைத் துறந்து மானின் உடலைப் பெற்ற போதிலும் அவர் தனது முற்பிறப்பில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் எதையும் மறக்கவில்லை.

பதம் 5.8.28
தத்ராபி ஹவா ஆத்மனோ ம்ருகத்வ-காரணம் பகவத்-ஆராதன
ஸமீஹானுபாவேனானுஸ்ம்ருத்ய ப்ருஷம் அனுதப்யமான ஆஹ

தத்ர அபி—இப்பிறவியில்; ஹ வா—உண்மையில்; ஆத்மன—அவரது; ம்ருகத்வ-காரணம்—மானின்உடலை ஏற்றுக் கொண்டதற்கான காரணம்; பகவத்-ஆராதன-ஸமஹா—பக்தித் தொண்டின் முன்னையச் செயல்களின்; அனுபாவேன—தொடர்ச்சியினால்; அனுஸ்ம்ருத்ய—நினைவு கொண்டு; ப்ருஷம்—எப்போதும்; அனுப்தயமான—அனுதாபங்கொண்டு; ஆஹ—கூறினார்.

மானின் உடலில் இருந்தபோதிலும் பரத மன்னர் தனது முந்தைய வாழ்வின் வலிமைமிக்கப் பக்தியினால் இப்பிறப்பில் தான் பெற்றிருக்கும் உடலைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது. தனது முற்பிறப்பு மற்றும் இப்பிறப்பு போன்றவற்றைக் கருத்தில் கொண்டு தனது செயல்களுக்காக அவர் மிகவும் மனம் வருந்தி பின்வருமாறு கூறினார்.

பதம் 5.8.29
அஹோ கஷ்டம் ப்ரஷ்டோ ‘ஹம் ஆத்மவதாம் அனுபதாத் யத் விமுக்த
ஸமஸ்த ஸங்கஸ்ய விவிகத புண்யாரண்ய-ஸரணஸ்-யாத்மவத ஆத்மணி
ஸர்வேஷாம் ஆத்மனாம் பகவதி வாஸுதேவே தத்-அனுஸ்வரண-
மனனஸங்கீர்தனாராதனானுஸ்மரணாபி-யோகேனாஸுன்ய-ஸகல-
யாமேன காலேன ஸமாவேஸிதம் ஸமாஹிதம் கார்த்ஸ்ன்யேன மனஸ்
தத் து புனர் மமாபுதஸ்-யாரான் ம்ருக-ஸுதும் அனு பரிஸுஸ்ராவ

அஹோ கஷ்டம்—அந்தோ, என்ன துன்ப நிறைவுடைய வாழ்க்கை; ப்ரஷ்ட—வீழ்ந்து; அஹம்—நான்; ஆத்ம-வதாம்—நிறைவு எய்தப் பெற்ற சிறந்த பக்தர்களின்; அனுபதாத்—வாழ்க்கை முறையிலிருந்து; யத்–அதிலிருந்து; விமுக்த ஸமஸ்த-ஸங்கஸ்ய—நான் பெற்றெடுத்தப் பிள்ளைகளையும் வீட்டையும் துறந்த போதிலும்; விவிக்த—தனிமையான; புண்ய-அரண்ய—புண்ணியவனத்தில்; ஸரணஸ்ய—அடைக்கலம் புகுந்து; ஆத்ம-வத—உன்னத நிலையில் நிறைவு பெற்று இருந்த ஒருவரின்; ஆத்மனி—பரமாத்மாவினிடத்தில்; ஸர்வேஷாம்—அனைவரின்; ஆத்மனாம்—உயிர்வாழிகள்; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; வாஸுதேவே—பகவான் வாஸுதேவர்; தத்—அவரது; அனுஸ்ரவண—தொடர்ந்து கேட்டும்; மனை—நினைத்தும்; ஸங்கீர்தன—ஓதியும்; ஆராதன—வழிபட்டும்; அனுஸ்மரண—தொடர்ந்து சிந்தித்தும்; அபியோகேன—அதில் ஆழ்ந்ததினால்; அஸுன்ய—நிறைந்து; ஸகல-யாமேன—எந்நேரமும் அதில்; காலேன—காலத்தினால்; ஸமாவேஸிதம்—முற்றிலும் நிறுவப்பட்டு; ஸமா-ஹிதம்—நிலை நின்று; கார்த்ஸ்ன்யேன—மொத்தம்; மன—இதுபோன்ற நிலையில் மனம்; தத்—அந்த மனம்; து—ஆனால்; புன—மீண்டும்; மம—எனது; அபுதஸ்ய—ஒரு நிர்மூடன்; ஆராத்—வெகு தொலைவில் இருந்து; மிருக-ஸுதம்—ஒரு மானின் குட்டி; அனு—பாதிப்பினால்; பரிஸுஸ்ராவ—கீழே வீழ்ந்தேன்.

மானின் உடலிலிருந்து பரத மகாராஜா தனக்குள் புலம்பத் தொடங்கினார். என்ன தீவினை தன்னுணர்வுப் பாதையினின்றும் நான் தவறி விட்டேன். ஆன்மீக வாழ்வில் வளர்ச்சி பெறுவதற்காக எனது மனைவி, மக்கள், குடும்பம் எல்லாவற்றையும் துறந்து காட்டிலுள்ள ஒரு தனிமையான புனித இடத்தில் தஞ்சம் புகுந்தேன். தன்னடக்கமும் தன்னுணர்வும் பெற்றவனானேன். மேலும் நான் முழுமுதற் கடவுளான வாசுதேவரைப் பற்றிக் கேட்டல், நினைத்தல், ஓதுதல், வழிபடுதல் போன்ற பக்தித் தொண்டில் தொடர்ந்து ஈடுபட்டிருந்தேன். பக்தித் தொண்டில் எனது மனம் நிலை பெற்ற வரை எனது முயற்சியில் நான் வெற்றியும் பெற்றேன். ஆயினும் எனது மூடத்தனத்தினால் எனது மனம் இச்சமயம் ஒரு மானின் மீது பற்று வைத்துவிட்டது. நான் இப்போது ஒரு மானின் உடலைப் பெற்று எனது பக்திப் பயிற்சிகளிலிருந்து வெகுதொலைவில் வீழ்ந்துவிட்டேன்.

பதம் 5.8.30
இதி ஏவம் நிகூட -நிர்வேதோ விஸ்ருஜ்ய ம்ருகீம் மாதரம் புனர்
பகவத்க்ஷேத்ரம் உபஸம்-ஸீல-முனி-கண-தயிதம் ஸாக்ராமம் புலஸ்த்ய
புலஹாஸ்ரமம் காலஞ்ஜராத் ப்ரத்யா-ஜகாம

இதி—இவ்வாறு; ஏவம்—இவ்வழியே; நி கூட—மறைந்து; நிர்வேத—உலகியல் செயல்கள் மீது முற்றிலும் பற்றறுத்து; விஸ்ருஜ்ய துறந்து; ம்ருகீம்—மான்; மாதரம்—அதன்தானய; புன—மீண்டும்; பகவத்-க்ஷேத்ரம்—முழுமுதற் கடவுள் வழிபடப்படும் இடம்; உபஸம-ஸீல—பௌதீகப் பற்றுக்களிலிருந்து முற்றிலும் பிரிந்து; முனி-கண-தயிதம்—அது மாமுனிவர்களின் இருப்பிற்கு மிகவும் பிரியமானது; ஸாலக்ராமம்—சாலக்கிராமம் என்னும் சிற்றூர்; புலஸ்த்ய-புலஹ-ஆஸ்ரமம்—புலஸ்தியர் மற்றும் புலஹர் இருந்த ஆஸ்ரமம்; காலஞ்ஜராத்—தான் ஒரு மானின் வயிற்றில் பிறந்த இடமான காலஞ்ஜரா என்னும் மலைப்பகுதி; ப்ரத்யா-ஜகாம—அவர் திரும்பி வந்தார்.

பரத மன்னர் ஒரு மானின் உடலைப் பெற்றிருந்தபோதிலும் தொடர்ந்து வருந்தியதன் காரணமாக உலக விஷயங்கள் எல்லாவற்றின் மீதும் முற்றிலும் பற்றறுத்தவரானார். அவர் இவ்வுண்மைகளை எவரிடத்தும் உரைக்கவில்லை. ஆயினும் தான் பிறந்த இடமான காலஞ்ஜர மலைப் பகுதியில் தன் தாய் மானை விட்டு விட்டு அவர் பிரிந்து வந்தார். அவர் மீண்டும் சாளக்கிராம வனத்திலுள்ள புலஸ்தியர் மற்றும் புலஹரின் ஆஸ்ரமத்திற்குத் திரும்பி வந்தார்.

பதம் 5.8.31
தஸ்மின்ன அபி கலம் ப்ரதீக்ஷ மாண ஸங்காச் ச ப்ருஸம் உத்விக்ன
ஆத்மஸஹசர ஸுஷ்க-பர்ண-த்ருண-வீருதா வர்தமானோ ம்ருகத்வ
நிமித்தாவஸானம் ஏவ கணயன் ம்ருக-ஸரீரம் தீர்தோதக-க்லின்னம்
உத்ஸஸர்ஜ

தஸ்மின் அபி—அந்த ஆஸ்ரமத்தில் (புலஹ ஆஸ்ரமம்); கலம்—மான் உடலின் இறுதிக்காலம் வரை; ப்ரதீக்ஷமான—எப்போதும் காத்திருந்து; ஸங்காத்—தொடர்பிலிருந்து; ச—மேலும்; ப்ருஸம்—தொடர்ந்து; உத்விக்ன—முழு ஆர்வத்துடன்; ஆத்ம-ஸகரச—பரமாத்மாவை மட்டுமே நித்தியத் துணையாகக் கொண்டு (ஒருவரும் தான் தனியே இருப்பதாக எண்ணக் கூடாது); ஸுஷ்க-பர்ண-த்ருண-வீருதா—காய்ந்த இலை தழைகளைத் தின்று; வர்தமான—வாழ்ந்து; ம்ருகத்வ நிமித்த—மானுடைய உடலின் காரணமாக; அவஸானம்—முடிவில்; ஏவ—மட்டும்; கணயன்—கருதி; ம்ருக-ஸரீரம்—மானின் உடல்; தீர்த-உதக-க்லின்னம்—அப்புனித இடத்தில் நதியில் நீராடி; உத்ஸஸர்ஜ—துறந்தார்.

பரத மன்னர் மீண்டும் ஒரு மோசமான உறவிற்குப் பலியாகிவிடக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையுடன் வாழ்ந்து வந்தார். தனது கடந்த காலத்தைப் பற்றி யாரிடமும் கூறாது காய்ந்த இலை தழைகளைத் தின்று அவர் அந்த ஆஸ்ரமத்தில் வசித்து வந்தார். அவர் ஒன்றும் அங்கே தனியே இல்லை. அவர் பரமாத்மாவின் துணையைப் பெற்றிருந்தார். இவ்வாறாக இவர் மானின் உடலில் தனது மரணத்திற்காகக் காத்திருந்தார். அப்புனித இடத்தில் நீராடி இறுதியில் அவர் அந்த உடலைத் துறந்தார்.


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “பரத மகாராஜாவின் குண நலன் பற்றிய ஒரு விளக்கம்” எனும் தலைப்பை கொண்ட எட்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare