அத்தியாயம் – 7
பரத மன்னரின் செயல்கள்
பதம் 5.7.1
ஸ்ரீ ஷுக உவாச
பரதஸ் மஹா-பாகவதே யதா பகவதாவனி-தவ-பரிபா-லனாய
ஸஞ்சிந்நிதஸ் தத்-அனுஸாஸன-பர பஞ்சஜனீம் விஸ்வரூப-துஹிதரம்
உபயேமே

ஸ்ரீ-ஸுக: உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; பரத—மகாராஜா பரதன்; து—ஆனால்; மஹா-பாகவத:—ஒர் மகா பாகவதர் அதாவது பகவானின் சிறந்த பக்தராவார்; யதா—அப்பொழுது; பகவதா—அவர் தந்தை பகவான் ரிஷப தேவரின் கட்டளையினால்; அவனி-தவ—பூதலத்தில்; பரிபாலனாய—ஆட்சி செய்வதற்கு; ஸஞ்சிந்தித—மனதினைத் தயார் செய்தார்; தத்-அனுஸாஸன-பர:—உலகினை ஆள்வதில் ஈடுபட்டு; பஞ்சஜனீம்—பஞ்சஜனீ; விஸ்வ-ரூப-துஹிதரம்—விஸ்வரூபனின் புதல்வி; உபயேமே—மணந்தார்.

பரீட்சித்து மன்னரிடம் சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் அன்பார்ந்த மன்னனே! பரத மகாராஜா ஓர் சிறந்த பக்தர். தன்னை அரியணையில் அமர்த்தத் தீர்மானித்த தன் தந்தையின் கட்டளைகளைப் பின்பற்றி அவர் இவ்வுலகினை ஆட்சி செய்யத் தொடங்கினார். பரத மகாராஜா அவ்வுலகினை ஆண்டபொழுது தன் தந்தையின் கட்டளைக்கிணங்க நடந்து கொண்டதோடு விஸ்வரூபனின் மகள் பஞ்சஜனீ என்பவளையும் மணம் புரிந்து கொண்டார்.

பதம் 5.7.2
தஸ்யாம் உ ஹ வா ஆத்மஜான் கார்த்ஸுன்யேனானுரூபான்
ஆத்ம: பஞ்ச ஜனயாம் ஆஸ பூதாதிர் இவ பூத-ஸுக்ஷ்மாணி ஸுமதிம்
ராஷ்ட்ரப்ருதம் ஸுதர்ஸனம் ஆவரணம் தூம்ர-கேதும் இதி

தஸ்யாம்—அவள் வயிற்றில்; உ ஹ வா—உண்மையில்; ஆத்ம-ஜன்—புதல்வர்கள்; கார்த்ஸுன்யேன—முற்றிலும்; அனுரூபான்—அதேபோன்று; ஆத்மன:—அவரது; பஞ்ச—ஐந்து; ஜனயாம்-ஆஸ—பெற்றெடுத்தார்; பூத-ஆதிர்-இவ—வீண் ஆணவத்தினைப் போன்ற; பூத-ஸுக்ஷ்மாணி—புலனுணர்வின் ஐந்து சூட்சுமப் பொருட்கள்; ஸு-மதிம்— சுமதிம்; ராஷ்ட்ர-ப்ருதம்-ராஷ்ட்ரப்ரதன்; ஸு-தர்ஷனம்—சுதர்ஸனன்; ஆவரணம்—ஆவரணன்; தூம்ர-கேதும்—தூம்ர கேது; இதி—இவ்வாறு.

வீண் ஆணவம் சூட்சுமப் புலனுகர்ச்சிப் பொருட்களை உருவாக்குவதுபோல் மகாராஜா பரதன் தன் மனைவி பஞ்சஜனீயின் வயிற்றிலிருந்து ஐந்து புதல்வர்களைப் பெற்றெடுத்தார். இப்புதல்வர்களின் பெயர்கள் சுமதி, ராஷ்ட்ரப்ரதன், சுதர்ஸனன், ஆவரணன், மற்றும் தூம்ரகேது என்பவை.

பதம் 5.7.3
அஜநாபம் நாமைதத் வர்ஷம் பாரதம் இதி யத ஆராப்ய வ்யபதிஸந்தி

அஜநாபம்—அஜநாபம்; நாம—பெயரில்; ஏதத்—இந்த; வர்ஷம்—பூமி; பாரதம்—பாரத; இதி—இவ்வாறு; யத:—அவரிடமிருந்து; ஆராப்ய—தொடங்கி; வ்யபதிஸந்தி—அவர்கள் போற்றினர்.

முற்காலத்தில் இப்பூமி அஜநாப வர்ஷம் எனப்பட்டது. பின் பரத மன்னர் காலந்தொட்டு அது பாரத வர்ஷம் எனப்படுகிறது.

பதம் 5.7.4
ஸ பஹுவின் மஹீ-பதி: பித்ரு-பிதாமஹவத் உரு-வத்ஸ லதயா ஸ்வே
கர்மணி வர்தமானா: ப்ரஜா: ஸ்வ-தர்மம் அனுவர்தமான: பர்யபாலயத்.

ஸ:—அம்மன்னர்; (மகாராஜா பரதன்); பஹுவித்—மிக்க ஞானமுடையவர்; மஹீ—பதி:—இப்பூவுலகின் மன்னர்; பித்ரு—தந்தை; பிதாமஹ—தாத்தா; வத்—போன்று; உரு-வத்ஸ-லதயா—மக்கள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்; ஸ்வேஸ்வே—அவர்களுக்குரிய; கர்மணி—கடமைகள்; வர்தமானா:—இருந்து; ப்ரஜா:—குடிமக்கள்; ஸ்வ-தர்மம்-அனுவர்தமான:—தனக்குரிய சுதர்மத்தில் இருந்து; பர்யபாலயத்—ஆட்சி செய்தார்.

பரத மன்னர் இப்பூமியில் கல்வி கற்ற அறிஞராகவும் அனுபவம் மிக்க அரசராகவும் விளங்கினார். அவர் தனக்குரிய அறச்செயல்களைச் செய்து கொண்டு குடிமக்களை நன்முறையில் ஆட்சி செய்தார். தனது தந்தை மற்றும் தாத்தாவைப் போன்று குடிமக்கள் மீது மிக்க அன்புடையவராகவும் விளங்கினார். குடிமக்களையும் அறச் செயல்களில் ஈடுபடுத்தி அவர் இப்பூவியினை ஆட்சி செய்தார்.

பதம் 5.7.5
ஈஜே ச பகவந்தம் யஜ்ஞ-க்ரது-ரூபம் க்ரதுபிர் உச்சாவசை ஸ்ரத்தயா
ருதாக்னிகோத்ர-தர்ஷ-பூர்ணமாஸ-சாதுர்மாஸ்ய-பஸு-ஸோமானாம்
ப்ரக்ருதி-விக்ருதிபிர் அனுஸவனம் சாதுர்ஹோத்ர விதினா

ஈஜே—வழிபட்டார்; ச—மேலும்; பகவந்தம்—முழுமுதற்கடவுள்; யஜ்ஞ-க்ரது-ரூபம்—மிருகங்களைப் பலியிடும் வேள்விகள் மற்றும் மிருகங்களைப் பலியிடாத வேள்விகள்; க்ரதுபி:—இவ்வேள்விகளினால்; உச்சாவசை:—மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய; ஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; ஆஹ்ருத—செய்யப்பட்டது; அக்னி-ஹோத்ர—அக்னி ஹோத்திர யக்ஞம்; தர்ஷ—தர்ஷ யக்ஞம்; பூர்ணமாஸ—பூர்ணமாஸ யக்ஞம்; சாதுர்மாஸ்ய—சாதுர்மாஸ்ய யக்ஞம்; பஸு-ஸோமானாம்—மிருகங்கள் மற்றும் சோமரஸத்துடன் கூடிய யக்ஞம்; ப்ரக்ருதி—முற்றிலும் நிறைவேற்றப்பட்டது; விக்ருதிபி:—ஒரு பகுதி மட்டும் நிறைவேற்றப்பட்டது; அனுஸவனம்—பெரும்பாலும் எப்போதும்; சாது: ஹோத்ர-விதினா—நான்கு வகையான புரோகிதர்களினால் செய்யப்பட்ட வேள்விகளின் ஒழங்குமுறை விதிகளினால்.

முழு நம்பிக்கையுடன் பரத மன்னர் பல்வேறு வகையான வேள்விகளைச் செய்தார். அவர் அக்னி ஹோத்ரம், தர்ஷம், பூர்ணமாஸம், சாதுர் மாஸ்யம், பஸு யக்ஞம் (இதில் ஒரு குதிரை பலியிடப்படுகிறது); மற்றும் ஸோம யக்ஞம் (இதில் ஒருவகையான மதுபானம் அர்ப்பணிக்கப்படுகிறது). இவ்வேள்விகள் சில நேரங்களில் முழுமையாகவும் சில நேரங்களில் ஒரு பகுதி மட்டும் செய்யப்படுகின்றன. எனினும் அனைத்து வேள்விகளிலும் சாதுர் ஹோத்ரம் மிகக் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. இவ்வாறு பரத மகாராஜா முழுமுதற் கடவுளை வழிபட்டு வந்தார்.

பதம் 5.7.6
சம்ப்ரசரத்ஸு நானா-யோகேஷு விரசிதாங்க-க்ரியேஷ்வ அபூர்வம்
யத் தத் க்ரியாபலம் தர்மாக்யம் பிரமணி பரே யக்ஞ-புருஷே ஸர்வ
தேவதாலிங்கானாம் மந்த்ராணாம் அர்த-நியாம-கதயா சாக்ஷாத்-
கர்தரி பரதேவதாயாம் பகவதி வாஸுதேவ ஏவ பாவயமான ஆத்ம-
நைபுண்யம்ருதித-கஷாயோ ஹவி ஷ்வ அத்வர்யுபிர் க்ருஹ்யமா ணேஷு
ஸ யஜமானோ யஜ்ஞபாஜோ தேவாம்ஸ் தான் புருஷாவய வேஷ்வ
அத்யத்-யாயத்

ஸம்ப்ரசரத்ஸு—செய்வதற்கு தொடங்கும் போது; நானா-யோகேஷு—பல்வேறு வகையான வேள்விகள்; விரசித-அங்க-க்ரியேஷு—அதில் துணைச் சடங்குகள் செய்யப்படுகின்றன; அபூர்வம்—தொலைவில்; யத்—எதுவாயினும்; தத்—அது; க்ரியா-பலம்—அவ்வேள்வியின் பலன்; தர்ம-ஆக்யம்—தர்மத்தின் பெயரால்; ப்ரஹ்மணி—பரமபுருஷ பகவான்; பரே—உன்னதத்திற்கு; யஜ்ஞ-புருஷே—அனைத்து வேள்விகளையும் அனுபவிப்பவர்; ஸர்வ-தேவதா-லிங்கானாம்—அது எல்லா தேவர்களையும் வெளிப்படுத்தும்; மந்த்ராணாம்—வேதமந்திரங்கள்; அர்த-நியாம-கதயா—பொருட்களைக் கட்டுப்படுத்துபவர்களாயிருக்கும் காரணத்தினால்; ஸாக்ஷாத்-கர்தரி—நேரடியாகச் செய்பவர்; பர-தேவதாயாம்—தேவர்கள் அனைவர்க்கும் மூலமானவர்; பகவதி—முழுமுதற்கடவுள்; வாஸுதேவே—கிருஷ்ணருக்கு; ஏவ—உறுதியாக; பாவயமான:—எப்போதும் சிந்தித்து; அத்ம-நைபுண்ய-ம்ருதித-கஷாய:—இவ்வாறு சிந்திக்கும் திறமையினால் அனைத்துக் காம, குரோதங்களில் இருந்து விடுதலை பெறுதல்; ஹவி:ஸு—வேள்வியில் அர்ப்பணிக்கப்படும் அவிர்பாகம்; அத்வர்யுபி:—அதர்வண வேதத்தில் தேர்ச்சியுடைய புரோகிதர்கள்; க்ருஹ்ய மாணே ஷு—எடுக்கும் பொழுது; ஸ:—மகாராஜா பரதன்; யஜமான:—வேள்வி பெறுவோர்; யஜ்ஞ-பாஜ:—வேள்விகளின் பலன்களைப் பெறுவோர்; தேவான்—தேவர்கள் அனைவரும்; தான்—அவர்களின்; புருஷ-அவயவேஷு—முழுமுதற் கடவுளான கோவிந்தனின் உடலின் பல்வேறு அங்கங்கள் மற்றும் பாகங்கள்; அத்யத் யாயத்—அவர் எண்ணினார்.

பல்வேறு வேள்விகளுக்கானச் சடங்குகள் அனைத்தையும் செய்து, பரத மன்னர் அறத்தின் பெயரால் அவற்றின் பலன்களை முழுமுதற் கடவுளுக்குப் படைத்தார் அல்லது வாசுதேவ கிருஷ்ணருக்கே அர்ப்பணித்தார் என்றும் கூறலாம். தேவர்கள் வாசுதேவரின் உடலின் பல்வேறு பாகங்கள் ஆகையினால் தேவ மந்திரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் அவர்களை வாசுதேவரே கட்டுப்படுத்துகிறார். இவ்வாறு எண்ணியதினால் பரத மகாராஜா பற்று, காம, குரோதம் போன்ற மாசுக்களில் இருந்தும் விடுதலை பெற்றார். புரோகிதர்கள் வேள்வித் தீயில் அவிர்பாகங்களை அர்ப்பணிக்கும் பொழுது, பரத மகாராஜா, பல்வேறு தேவர்களுக்கும் அர்ப்பணிக்கப்படும் அந்த அவிர் பாகங்கள் உண்மையில் பகவானின் உடலின் பல்வேறு பாகங்களுக்கு எவ்வாறு அர்ப்பணிக்கப்படுகிறது என்று தேர்ந்த ஞானத்துடன் புரிந்து கொண்டார். சான்றாக இந்திரன் முழுமுதற் கடவுளின் கரமாக இருக்கிறான். சூரியன் அவரது விழிகளாக விளங்குகிறான். இவ்வாறு பரத மகாராஜா பல்வேறு தேவர்களுக்கும் வேள்வியில் அளிக்கப்படும் அவிர்பாகம் உண்மையில் பகவான் வாசுதேவரின் பல்வேறு அங்கங்களுக்கே அளிக்கப்படுகின்றது என்று கருதினார்.

பதம் 5.7.7
ஏவம் கர்ம-விஸுத்த்யா விஸுத்த-ஸத்தவஸ்யாந்தர்-ஹ்ருதயாக்ஷ-
ஸரீரே ப்ரஹ்மணி பகவதி வாஸுதேவே மஹா-புருஷ-ரூபோபலக்ஷண
ஸ்ரீவத்ஸ கௌஸ்துப-வன-மாலரி-தர-கதாதிபிர் உபலக்ஷிதே நிஜ-புருஷ
ஹ்ருல்லிகிதேனாத்மனி புருஷ-ரூபேண விரோசமான உச்-சைஸ்தராம்
பக்திர் அனுதினம் ஏதமான-ஏயாஜாயத

ஏவம்—இவ்வாறு; கர்ம-விஸுத்த்யா—எந்தவிதமான பலனையும் எதிர்பாராது எல்லாவற்றையும் முழுமுதற் கடவுளின் தொண்டிற்காக அர்ப்பணிப்பது; விஸுத்த-ஸத்தவஸ்ய—முற்றிலும் தூய்மையுடையவரான பரத மகாராஜாவின்; அந்த:-ஹ்ருதய-ஆகாஸ்-ஸரீரே—யோகிகளால் தியானிக்கப்படும் இதயத்திலுள்ள பரமாத்மா; ப்ரஹ்மணி—அருவக் கொள்கையுடைய ஞானிகளால் வணங்கப்படும் அருவப்பிரம்மம்; பகவதி—முழுமுதற்கடவுள்; வாஸுதேவ—வாஸுதேவரின் மைந்தனான பகவான் கிருஷ்ணர்; மஹா புருஷ—பரம புருஷரின்; ரூப—ரூபம்; உபலக்ஷணே—அடையாளங்களை உடையவர்; ஸ்ரீவத்ஸ—பகவானின் மார்பிலுள்ள சின்னம்; கௌஸ்துப—பகவான் அணிந்திருக்கும் கௌத்துப மாலை; வனமாலா—மலர்மாலை; அரி தர—சங்கு மற்றும் சக்கரம்; கதா-ஆதிபி:—கதாயுதப் போன்ற பிற சின்னங்கள்; உபலக்ஷிதே—அறியப்பட்டு; நிஜ-புருஷ-ஹ்ருத்-விகிதேன—தனது பக்தனின் இதயத்தில் சித்திரம் போல் பொறிக்கப்பட்டு வீற்றிருப்பவர்; ஆத்மனி—அவரது மனதினில்; புருஷ-ரூபணே—அவரது தனிப்பட்ட வடிவில்; விரோசமானே—ஒளிர்கின்ற; உச்சைஸ்-தராம்—மிகவுயர்ந்த நிலையில்; பக்தி:—பக்தித் தொண்டு; அனுதினம்— ஒவ்வொருநாளும்; ஏதமான—அதிகரித்து; ரயா—சக்தியுடையவராக; அஜாயத—தோன்றினார்.

இவ்வாறு வேள்விச் சடங்குகளினால் தூய்மை பெற்றவராக விளங்கிய பரத மகாராஜாவின் மனம் முற்றிலும் மாசற்றதாக இருந்தது. பகவான் வாசுதேவ கிருஷ்ணருக்கான அவரது பக்தித் தொண்டு நாள்தோறும் வளர்ந்து கொண்டே இருந்தது. வசுதேவரின் மைந்தனரான பகவான் கிருஷ்ணரே ஆதி முழுமுதற் கடவுளாகவும், பரமாத்மாவாகவும், பரப்பிரம்மமாகவும் இருக்கின்றார். யோகிகள் இதயத்தில் வீற்றிருக்கும் பரமாத்மாவை தியானிக்கின்றனர். ஞானியர் பரம மெய்ப்பொருளாக அருவப்பிரம்மத்தை வழிபடுகின்றனர். அவரது உன்னத உடல் பற்றி சாத்திரங்களில் விளக்கப்பட்டிருக்கின்றது. அவரது உடல் ஸ்ரீ வத்ஸ சின்னம். கௌத்துப மணி மற்றும் மலர் மாலையினால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. அவரது கரங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம் மற்றும் தாமரை மலர் இருக்கின்றன. நாரதர் போன்ற பக்தர்கள் எப்போதும் அவரைத் தமது இதயத்தில் சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

பதம் 5.7.8
ஏவம் வர்ஷாத-ஸஹஸ்ர-பர்யந்தாவஸித-கர்ம-நிர்வாணா வஸரோ
‘திபுஜ்யமானம் ஸ்வ-தனயேப்ய ரிக்தம் பித்ரு-பைதா மஹம் யதா தாயம்
விபஜ்ய ஸ்வயம் ஸகல-ஸம்பன்-நிகேதாத் ஸ்வ-நிகேதாத் புவஹஸ்ரமம்
ப்ரவல்ராஜ

ஏவம்—இவ்வாறு எப்போதும் ஈடுபட்டு; வர்ஷ-அயுத-ஸஹஸ்ர—ஆயிரம் மடங்கு; பத்தாயிரம் ஆண்டுகள்; பர்யந்த—அதன்பின்னர்; அவஸித-கர்ம-நிர்வாண-அவஸர:—மகாராஜா பரதன் தனது ராஜ வாழ்விற்கு முடிவுகாணும் நேரத்தினை உறுதி செய்தார்; அதிபுஜ்யமானம்—அக்காலம் வரை இவ்வழியில் அனுபவித்து மகிழ்ந்து; ஸ்வ-தனயேப்ய:—அவரது புதல்வர்களுக்கு; ரிக்தம்—செல்வம்; பித்ரு-பைதாமஹம்—தனது தந்தை மற்றும் முன்னோர்களிடமிருந்து பெற்றது; யதா தாயம்—மனுவின் “தாய—பாக்” நீதிக்கேற்ப; விபஜ்ய—பிரித்து; ஸ்வயம்—சுயமாக; ஸகல-ஸம்பத்—அனைத்துச் செல்வங்களையும்; நிகேதாத்—இருப்பிடம்; ஸ்வ-நிகேதாத்—அவரது பிறந்த இடத்திலிருந்து; புலஹ–ஆஸ்ரமம்-ப்ரவ்ராஜ—அவர் ஹரித்துவாரிலுள்ள புலஹரின் ஆஸ்ரமத்திற்குச் சென்றார். (அங்கே சாளக்ரமசிலைகள் கிடைக்கின்றன).

மகாராஜா பரதர் உலகச் செல்வங்களைப் பத்தாயிரம் வருடங்கள் ஆயிரம் மடங்கு அனுபவித்து மகிழ வேண்டும் என்பது விதி நிர்ணயித்தக் காலமாகும். அக்காலக் கெடு முடிந்தவுடன் அவர் குடும்ப வாழ்க்கையிலிருந்து ஒய்வு பெற்று தனது முன்னோர்களிடமிருந்து பெற்றச் செல்வத்தை தன் மைந்தர்களுக்குப் பிரித்துக் கொடுத்தார். அனைத்துச் செல்வங்களுக்கும் உறைவிடமாகத் திகழ்ந்த தன் பிறந்த வீட்டைத் துறந்து ஹரித்துவாரத்தில் உள்ள புலஹாஸ்ரமம் என்னும் இடத்திற்கு அவர் புறப்பட்டுச் சென்றார். அங்குதான் சாளக்ரம சிலைகள் கிடைக்கின்றன.

பதம் 5.7.9
யத் ர ஹ வாவ பகவான் ஹரிர் அத்யாபி தத்ரத்யானாம் நிஜ-
ஜனானாம் வாத்ஸல்யேன ஸன்னதிதாப்யத சிச்சார ரூபணே

யத்ர—அங்கே; ஹ-வாவ—உறுதியாக; பகவான்—முழுமுதற்கடவுள்; ஹரி:—பகவான்; அத்ய-அபி—இன்னுங்கூட: தத்ரத்யானாம்—அந்த இடத்தில் இருந்து; நிஜ-ஜனானாம்—அவரது பக்தர்களுக்கு; வாத்ஸல்யேன—அவரது உன்னதப் பிரியத்தினால்; ஸன்னிதாப்யதே—கண்களுக்குப் புலனாகிறார்; இச்சா-ரூபணே—பக்தர்களின் விருப்பத்திற்கேற்ப.

புலஹாஸ்ரமத்தில் முழுமுதற் கடவுளான ஹரி, தனது பக்தர்களின் மீது கொண்ட அன்பின் காரணத்தினால், தனது பக்தனுக்குக் காட்சி தந்து, அப்பக்தனின் விருப்பத்தினை நிறைவேற்றுகின்றார்.

பதம் 5.7.10
யத்ராஸ்ரம-பதானி உபயதோ நாபிபிர்-த்ருஷச்-சக்ரைஸ் சக்ர-நதி
நாம ஸரித்-ப்ரவரா ஸர்வத: பவித்ரீ-கரோதி

யத்ர—அங்கே; ஆஸ்ரம-பதானி—அனைத்து ஆஸ்ரமங்கள்; உபயத:—மேலும் கீழும்; நாபிபி:—நாபிச்சுழியின் அடையாளம்; த்ருஷத்—காணப்படும்; சக்ரை:—வட்டங்களுடன்; சக்ர நதீ—சக்கர நதி, கண்டகீ நதி என்று பொதுவாக அறியப்படுவது); நாம—என்ற பெயரில்; ஸரித்-ப்ரவரா—எல்லாவற்றினும் மிகச் சிறந்த நதி; ஸர்வத:—எங்கும்; பவித்ரீகரோதி—புனிதப்படுத்துகிறது.

புலஹ—ஆஸ்ரமத்தில், எல்லாநதிகளிலும் சிறந்த கண்டகீ நதி ஒடிக் கொண்டிருக்கின்றது. சாளக்கிரம சிலைகள் என்னும் படிக்கற்கள் அந்த இடம் முழுவதையும் புனிதப்படுத்தகின்றன. ஒவ்வொரு படிக்கல்லிலும் உந்திச் சுழியினைப் போன்ற வளைந்த கோடுகள் காணப்படுகின்றன.

பதம் 5.7.11
தஸ்மின் வாவ கில ஸ ஏகல: புலஹாஸ்ரமோ பவனே விவித-குஸும
கிஸலய-துளகிகாம்புபி: கந்த-மூல-பலோ-பஹாரைஸ் ச ஸமீஹமானோ
பகவத ஆராதனம் விவிக்த உபாத-விஷயாபிலாஷ உபப்ருதோபஸம:
பராம் நிர்வ்ருதிம் அவாப

தஸ்மின்—அந்த ஆஸ்ரமத்தில்; வாவ-கில—உண்மையில்; ஸ:—பரத மகாராஜா; ஏகல:—தனியே; அவர் மட்டும்; புலஹ-ஆஸ்ரம-உபவேன—புலஹ ஆஸ்ரமத்தைச் சுற்றியுள்ள நந்தவனங்கள்; விவித-குஸும்-கிஸலய-துளஸிகா-அம்புபி:—பல்வேறு வண்ண மலர்கள், துளசி இலைகள், காம்புகள் மற்றும் நீருடன்; கந்த-மூல-பவ-உபஹாரை:—கிழங்குகள், வேர்கள், கனிகள்; ச—மேலும்; ஸமீஹமான:—செய்து; பகவத—முழுமுதற்கடவுள்; ஆராதனம்—வழிபட்டு; விவிக்த:—தூய்மைபெற்றார்; உபரத—விடுதலை பெறுதல்; விஷய-அபிலாஷ:—பௌதீகம் புலனுகர்ச்சிக்கான விருப்பம்; உபப்ருத—அதிகரித்தல்; உபஸம:—அமைதியாக; பராம்—உன்னதமான; நிர்வ்ருதிம்—திருப்தி; அவாப—அவர் எய்தினார்.

புலஹ ஆஸ்ரமத்திலுள்ள நந்தவனத்தில் பரத மன்னர் பல்வேறு வண்ண மலர்கள் துளசி இலைகள் காம்புகள் போன்றவற்றைச் சேகரித்துக் கொண்டு தனியே வாழ்ந்து வந்தார். அவர் மேலும் கண்டகீ நதியின் நீர், பல்வேறு வகையான வேர்கள், கிழங்குகள் போன்றவற்றையும் சேகரித்தார். இவற்றையெல்லாம் அவர் முழு முதற் கடவுளான வாசுதேவருக்கு உணவாகப் படைத்து அவரை வழிபட்டுத் திருப்திடைந்தார். இவ்வழியே அவரது இதயம் முற்றிலும் துளியளவு ஆசைகூட இல்லாதிருந்தது. எல்லாவிதமான ஆசைகளும் மறைந்தொழிந்தன. இந்த உறுதியான நிலையில் அவர் முழுத்திருப்தியடைந்து பக்தித் தொண்டில் நிலைபெற்றிருந்தார்.

பதம் 5.7.12
தயேதம் அவிரத-புருஷ-பரி சர்யயா பகவதி ப்ரவர்தமானா-
நுராக-பர-த்ருத-ஹ்ருதய-ஸைதில்ய ப்ரஹர்ஷ -வேகேளாத் மனி
உத்பித்யமான-ரோம-புளக-குலக ஔத்கந்தய ப்ரவ்ருத்த-ப்ரணய
பாஷ்ப-நிருத்தாவலோக-நயன ஏவம் நிஜர மணாருண சரணார
விந்தானுத்யான-பரிசித-பக்தி-யோகேன பரிப்லுத பரமாஹ் லாத-
கம்பீர-ஹ்ருதய-ஹ்ரதாவகாட-கிஷணஸ் தாம் அபி க்ரியமாணாம்
பகவத்-ஸபர்யாம் ந ஸஸ்மார

தயா—அதன் மூலம்; இத்தம்—இவ்வாறு; அவிரத—தொடர்ந்து; புருஷ—பரமபுருஷ பகவானின்; பரிசர்யயா—தொண்டினால்; பகவதி—முழுமுதற் கடவுளுக்கு; பர்வர்தமான—தொடர்ந்து அதிகரித்து; அனுராக—பற்றின்; பர—பாரத்தினால்; த்ருத—இளகியது; ஹ்ருதய—இதயம்; ஸைதில்ய:—புறக்கணித்தல்; ப்ரஹர்ஷ—வேகேன—உன்னத மெய்மறத்தலின் வேகத்தினால்; ஆத்மனி—அவரது உடலில்; உத்பித்யமான-ரோம-புளக-குலக:—மயிர்க்கூச்செறிதல்; ஔத்கந்த்ய—அதீத விருப்பம்; ப்ரவ்ருத்த—உண்டானது; ப்ரணய-பாஷ்ப-நிருத்த-அவலோக-நயன:—அன்பு மிகுதியினால் கண்களில் கண்ணீர் பெருகி பார்வையினை மறைத்தல்; ஏவம்—இவ்வாறு; நிஜ-ரமண-அருண சரண-அரவிந்த—பகவானின் சிவந்த தாமரை மலர்ப் பாதங்களின் மீது; அனுத்யான—தியானத்தினால்; பரிசித—அதிகரித்தது; பக்தி யோகேனன—பக்தித்தொண்டின் சாயலினால்; பரிப்லுத—எங்கும் பரவியது; பரம—உயர்ந்த; ஆஹ்லாத—ஆன்மீக ஆனந்தத்தின்; கம்பீர—மிக ஆழமான; ஹ்ருதய-ஹ்ரத—இதயத்தில், அது குணத்துடன் ஒப்பிடப்பட்டிருக்கிறது; அவகாட—மூழ்கடிக்கப்பட்ட; திஷண:—அவரது புத்தி; தாம்—அது; அபி—இருந்தபோதிலும்; க்ரியமாணாம்—செய்தல்; பகவத்—முழுமுதற்கடவுளின்; ஸபர்யாம்—வழிபாடு; ந—இல்லை; ஸஸ்மார—நினைத்தல்.

மிகவும் உயர்ந்த பக்தரான பரத மன்னர் இவ்வாறு தொடர்ந்து பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபட்டு வந்தார். இயற்கையாகவே வாசுதேவ கிருஷ்ணர் மீது அவர் வைத்திருந்த அன்பு மேலும் மேலும் அதிகரித்தது. அதனால் அவர் இதயம் உருகியது. இதனைத் தொடர்ந்து அவர் படிப்படியாக ஒழுங்குமுறை விதிக்குட்பட்ட அறத்தின் மீதான அனைத்துப் பற்றுக்களையும் இழந்தார். அவர் உடலில் மயிர்க்கூச்செறிந்து மெய்ம்மறத்தலினால் உண்டாகும் அடையாளங்கள் உடலெங்கும் தோன்றின. கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாகப் பெருக்கெடுத்ததினால் அவரால் எதையும் பார்க்க முடியவில்லை. அச்சமயம் அவரது இதயம் என்னும் குளம் தன்னை மறந்த அன்பு வெள்ளத்தினால் நிரம்பியிருந்தது. அவரது மனம் அக்குணத்தினுள் மூழ்கி இருந்ததினால் அவர் பகவானுக்குச் செய்யும் ஒழுங்குமுறைத் தொண்டினைக் கூட மறந்திருந்தார்.

பதம் 5.7.13
இத்தம் த்ருத-பகவத் வ்ரத ஐணேயாஜின வாஸஸானுஸவ- னாபிஷேகார்த்ரகபிஸ-குடில-ஜடத-கலாபேன ஸ விரோ-சமான:
ஸூர்யர்சா பகவந்தம் ஹிரணமயம் புருஷம் உஜ்ஜி-ஹானே ஸூர்ய-
மண்டலே ‘டபயுபதிஷ்டன்ன் ஏதத் உ ஹோவாச

இத்தம்—இவ்வாறு; த்ருத-பகவத்-வ்ரத:—முழுமுதற் கடவுளுக்குத் தொண்டு செய்யும் சபதம் பூண்டு; ஐணேய-அஜின்வாஸ்ஸ—மான் தோலினை ஆடையாக அணிந்து; அனுஸவன—ஒர் நாளில் மூன்று முறை; அபிஷேக—நீராடியதினால்; அர்த்ர—ஈரமான; கபிஸ:—பழுப்புநிறமான; குடில-ஜடா—சுருண்ட சிக்கலான சடைவிழுந்த தலைமுடி; கலாபேன—ஏராளமாக; ச—மேலும்; விரோசமான:—அழகாக அலங்கரிக்கப்பட்டு; ஸூர்யர்சா—சூரிய நாராயணரைக் குறித்துத் துதிக்கும் வேதமந்திரங்களினால்; பகவந்தம்—முழுமுதற் கடவுளுக்கு; ஹிரண்மயம்—பகவான் அவரது உடல் பொன்னைப் போல் ஒளிர்ந்தது; புருஷம்—முழுமுதற்கடவுள்; உஜ்ஜிஹனே—எழும் பொழுது; ஸூர்ய-மண்டலே—சூரிய மண்டலம்; அப்புபதிஷ்டன்—வழிபட்டு; ஏதத்—இந்த; உஹ—நிச்சயமாக; உவாச—அவர் ஒதினார்.

பரத மன்னர் மிகவும் அழகாகக் காட்சியளித்தார். அவரது தலைமுடி சுருண்டு அலை அலையாக இருந்தது. தினமும் மும்முரை நீராடியதினால் அது ஈரமாகவும் இருந்தது. அவர் மான் தோலினாலான ஆடை அணிந்திருந்தார். அவர் பகவான் நாராயணரை வழிபட்டார். அவரது உடல் பொன்னொளி வீசியது. அவர் சூரிய மண்டலத்தில் இருந்தார். பரத மகாராஜா பகவான் நாராயணரை ரிக்வேத மந்திரங்களினால் துதித்தார். அவர் சூரிய உதயத்தில் பின்வரும் சுலோகத்தினை ஓதினார்.

பதம் 5.7.14
பரோ-ரஜ: ஸவிதுர் ஜாத-வேதோ
தேவஸ்ய பர்கோ மனஸேதம் ஜனான
ஸுரேதஸாத: புனர் ஆவிஸ்ய சஷ்டே
ஹம்ஸம் க்ருத்ரானம் ந்ருஷத்-ரிங்கிராம் இம:

பர:-ரஜ:—இரஜோகுணத்திற்கும் மேலாக (தூயசத்துவக் குணத்தில் இருத்தல்); ஸவிது:—இப்பிரபஞ்சம் முழுவதையும் ஒளிமயமாக்கும் ஒருவர்; ஜாத-வேத:—அதிலிருந்தே பக்தனின் அனைத்து ஆசைகளும் நிறைவேற்றப்படுகின்றன; தேவஸ்ய—பகவானின்; பர்க—சுய ஒளி; மனஸா—ஆழ்ந்து சிந்திப்பதினால்; இதம்—இப்பிரபஞ்சம்; ஜனான—படைக்கப்பட்டது; ஸு-ரேதஸாத—ஆன்மீகச் சக்தியினால்; அத:—படைக்கப்பட்ட இவ்வுலகம்; புன:—மீண்டும்; ஆவின்ய—புகுதல்; சஷ்டே—காணல் அல்லது பாதுகாத்தல்; ஹம்ஸம்—உயிர்வாழி; க்ருத்ராணம்—பருஉலக இன்பத்திற்கான ஆசை; ந்ருஷத்—புத்திக்கு; ரிங்காரம்—இயக்கம் அளிப்பவர்; இம:—எனது வந்தனங்களை அர்ப்பணிப்பேனாக.

“முழுமுதற்கடவுள் தூய சத்துவக் குணத்தில் வீற்றிருக்கின்றார். அவர் இப்பிரபஞ்சம் முழுவதையும் ஒளிமயமாக்கித் தனது பக்தர்களுக்கு அனைத்து நல்வரங்களையும் அருள்கின்றார். பகவான் இப்பிரபஞ்சத்தினை அவரது ஆன்மீகச் சக்தியிலிருந்தே உருவாக்கினார். பகவான் தனது விருப்பத்திற்கேற்ப பரமாத்மாவாக இப்பிரபஞ்சத்தினுள் புகுந்தார். மேலும் அவர் தனது பல்வேறு சக்திகளின் ஆற்றலினால் அவர் உலக இன்பம் நாடும் அனைத்து உயிர்களையும் காக்கின்றார். நற்புத்தியளிக்கும் பகவானுக்கு எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிப்பேனாக.


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “பரத மன்னரின் செயல்கள்” எனும் தலைப்பை கொண்ட ஏழாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare