அத்தியாயம் – 6
பகவான் ரிஷப தேவரின் செயல்கள்
பதம் 5.6.1
ராஜ உவாச
ந நூனம் பகவ ஆத்மாராமானாம் யோக-ஸமீரித-ஜ்ஞானா வபர்ஜீத
கர்ம-பீஜனாம் ஐஸ்வர்யாணி புன: க்லேஸதானி பவிதும் அர்ஹந்தி யத்ருச்சயோபகதானி
ராஜ உவாச—மன்னர் பரீட்சித்து வினவினார்; ந—இல்லை; நூனம்—உண்மையில்; பகவ:—ஒ, சக்தி மிகுந்த சுகதேவ கோஸ்வாமி அவர்களே; ஆத்மாராணாம்—பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்கும் தூய பக்தர்கள்; யோக-ஸமீரித—யோகப் பயிற்சியினால் எய்தப்பெற்ற; ஜ்ஞான—ஞானத்தினால்; அவபர்ஜித—எரிதல்; கர்ம-பீஜனாம்—அவர்களின் பலன் தரும் செயல்களின் விதைகள்; ஐஸ்வர்யாணி—யோக சக்திகள்; புன—மீண்டும்; க்லேஸதானி—துன்பத்தின் ஆதாரங்கள்; பவிதும்—ஆவது; அர்ஹந்தி—இயலக்கூடுதல்; யத்ருச்சயா—தானாகவே; உபகதானி—எய்துதல்.
பரிட்சித்து மன்னர் சுகதேவ கோஸ்வாமியிடம் கேட்டார் போற்றுதற்குரிய பகவானே! இதயத்தில் முற்றிலும் தூய்மையுடையவர்களுக்கு, பக்தி யோகத்தினால் ஞானம் கைவரப் பெறுகிறது. உலகியல் செயல்களின் மீதான பற்று முற்றிலும் எரிந்து சாம்பலாகிறது. இவரைப் போன்ற மனிதர்களிடம் யோக சக்திகள் தாமாகவே வெளிப்படும். அவை துன்பத்திற்கு காரணமாவதில்லை. பின்னர் ஏன் ரிஷப தேவர் அவற்றைப் புறக்கணித்தார்?
பதம் 5.6.2
குஷிர் உவாச
ஸத்யம் உக்தம் கிந்த்வ இ ஹ வா ஏகே ந மனஸோ’ த்தா
விஸ்ரம்பம் அநவஸ்தானஸ்ய ஷட-கிராத இவ ஸங்கச்சந்தே
ருஷி உவாச—சுகதேவ கோஸ்வாமி கூறினார்; ஸத்யம்—சரியானதே; உக்தம்—கூறியது; கிந்து—ஆனால்; இஹ—இவ்வுலகில்; வா—அல்லது; ஏகே—சில; ந—இல்லை; மனஸ:—மனதின்; அத்தா—நேரடியாக; விஸ்ரம்பம்—நம்பிக்கை; அநவஸ்தானஸ்ய—உறுதியின்றி; ஷட—மிகத் தந்திரமான; கிராத:—ஓர் வேடன்; இவ—போன்று; ஸங்கச்சந்தே—ஆகிறான்.
ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார் அன்பிற்குரிய மன்னனே, நீ மிகச் சரியாகவே சொன்னாய். தந்திரமிக்க ஒரு வேடன் தான் பிடித்த விலங்குகளிடம் நம்பிக்கை வைப்பதில்லை. ஏனெனில் அவை தப்பி ஓடிவிடக் கூடும். அதுபோல் ஆன்மீக வாழ்க்கையில் வளர்ச்சி பெற்றவர்கள் மனதின் மீது நம்பிக்கை வைப்பதில்லை. உண்மையில் அவர்கள் எப்போதும் மிக்க கண்காணிப்புடன் இருந்து மனதின் போக்கினைக் கவனிக்கின்றனர்.
பதம் 5.6.3
ததோ சோக்தம்
ந குர்யாத் கர்ஹிசித் ஸக்யம் மனஸி ஹி அனவஸ்திருத
யத்-விஸ்ரம்பாச் சிராச் சீர்ணம் சஸ்கந்த தப ஐஸ்வரம்
ததா—ஆகையினால்; ச—மேலும்; உக்தம்—கூறப்படுகிறது; ந—இல்லை; குர்யாத்—செய்தல்; கர்ஹிசித்—எந்த நேரத்திலும், எவருடனும்; ஸக்யம்—நட்பு; மனஸி—மனதில்; ஹி—உறுதியாக; அனவஸ்திதே—அது மிக மிக அமைதியற்றது; யத்—அதில்; விஸ்ரம்பாத்—அதிக நம்பிக்கை வைப்பதிலிருந்து; சிராத்—நீண்ட நாட்கள்; சீர்ணம்—பயிற்சி செய்தல்; சஸ்கந்த—துன்பத்திற்காளாவது; தப—தவம்; ஐஸ்வரம்—சிவபெருமான் மற்றும் மாமுனிவர் சௌபரி போன்ற மகான்கள்.
கற்றறிந்த அறிஞர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியிருக்கின்றனர். மனமானது இயற்கையிலேயே மிகவும் அமைதியற்றதாகும். அதனால் அதனோடு ஒருவர் நட்பு பாராட்டக் கூடாது. நாம் நமது முழு நம்பிக்கையினையும் மனதின் மீது வைத்தால் அது எந்த நேரத்திலும் நம்மை ஏமாற்றி விடலாம். ஏன், பகவான் கிருஷ்ணரின் மோகினி வடிவத்தைக் கண்டு சிவபெருமான் கூடக் கிளர்ச்சியடைந்தார். சௌபரி முனிவரும் தனது முதிர்ந்த யோக நிலையிலிருந்து தவறி விட்டார்.
பதம் 5.6.4
நித்யம் ததாதி காமஸ்யச் சித்ரம் தம் அனு யே ‘ரய:
யோகின: க்ருத-மைத்ரஸ்ய பத்யுர் ஜாயேவ பும்ஸ்சலீ
நித்யம்—எப்போதும்; ததாதி—அளிக்கிறது; காமஸ்ய—காமம்; சித்ரம்—வசதி; தம்—து (சோகம்); அனு—பின்பற்றி; யே—அவை; அரய:—பகைவர்கள்; யோகின:—ஆன்மீக வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயலும் மனிதர்கள் அல்லது யோகிகள்; க்ருத-மைத்ரஸ்ய—மனதின் மீது நம்பிக்கை வைத்து; பத்யு:—கணவனின்; ஜாயா இவ—மனைவியைப் போல்; பும்ஸ்சலீ—அவள் கற்பில்லாதவள் அல்லது பிற ஆடவர்களினால் எளிதில் ஆட்கொள்ளப்படுவாள்.
கற்பில்லாத பெண் மிக எளிதில் பிற ஆடவர்களால் ஆட்கொள்ளப்படுகிறாள். மேலும் சில நேரங்களில் அவள் கணவன் கூட பிற ஆடவரால் கொல்லப்படுகிறான். ஒரு யோகி தன் மனதிற்கு ஒரு வாய்ப்புக் கொடுத்து அதனைக் கட்டுப்படுத்தவில்லையெனில் அவனது மனம், காம, குரோதம், மோகம் என்னும் பகைவர்களுக்கு இடமும் அளித்து பின் அவற்றினால் ஒருநாள் ஐயத்திற்கு இடமின்றி கொல்லப்படுகிறான்.
பதம் 5.6.5
காமோ மன்யுர் மத லோப: ஸோக-மோஹ-பயாதய:
கர்ம-பந்தஸ் ச யன் மூல: ஸ்வீகுர்யாத் கோ நு தத் புத:
காம—காமம்; மன்யு:—கோபம்; மத:—மதம்; லோப:—லோபம்; ஸோக—சோகம்; மோஹ—மோகம்; பய—பயம்; ஆதய:—இவையெல்லாம் இணைந்து; கர்ம-பந்த—பலன் தரும் செயல்களின் பந்தம்; ச—மேலும்; யத்-மூல:—அதன் மூலம்; ஸ்வீகுர்யாத்—ஏற்றுக் கொள்ளுதல்; க:—யார்; நு—உண்மையில்; தத்—அந்த மனம்; புத—கற்றறித்தவனாக இருந்தால்.
காம, குரோத, மோக, சோக, மத, மாச்சர்ய, பயம் அனைத்துக்கும் ஆதாரமாக இருப்பது மனமேயாகும். இவையனைத்தும் சேர்ந்தே ஒருவனது செயல்களோடு அவனைக் கட்டுப்படுத்துகிறது. எனவே ஆழ்ந்து கற்றறிந்த எவன் இந்த மனதின் மீது நம்பிக்கை வைப்பான்? மனம் போன போக்கெல்லாம் போக மாட்டான் அல்லவா!
பதம் 5.6.6
அனதவம் அகில-லோக-பால-வலாமோ’ பி விலக்ஷ-ணணர் ஜடவத்
அவதூத வேஷ-பாஷா-சரினதர் அவி-லக்ஷித-பகவத்-ப்ரபாவோ யோகினாம்
ஸாம்பராய-விதிம் அனுஸிக்ஷயன் ஸ்வ-கலேவரம் ஜிஹாஸுர்
ஆத்மனி ஆத்மானம் அஸம்வ்யவஹிதம் அனர்தாந்தர-பாவேனான்
வீக்ஷமாண உபரதானுவ்ருத்திர் உபாராம்
அத—அதன்பிறகு; ஏவம்—இவ்வழியில்; அகில-லோக-பால-லலாம:—பிரபஞ்சத்தின் தலைவர்கள் மற்றும் மன்னர்கள் அனைவரும்; அபி—இருந்தபோதிலும்; விலக்ஷணை:—பல்வேறு; ஜடவத்—ஒரு மூடனைப் போல்; அவதூத-வேஷ-பாஷா-சரிதை:—ஆடை, மொழி மற்றும் அவதூதத் தன்மைகளினால்; அவிலக்ஷித-பகவத்-ப்ரபாவ:—முழுமுதற் கடவுளின் வளங்களை மறைத்து (ஒரு சாதாரண மனிதனைப் போல் இருந்தல்); யோகினாம்—யோகிகளின்; ஸாம்பராய விதிம்—இப்பௌதீக உடலைத் துறக்கும் முறை; அனுஸிக்ஷயன்—கற்பித்து; ஸ்வ-கலேவரம்—பௌதீகமற்ற அவரது உடல்; ஜிஹாஸு:—ஒரு சாதாரண மனிதனைப் போல் துறக்க விரும்பி; ஆத்மனி—ஆதி புருஷரான வாசுதேவருக்கு; ஆத்மானம்—பகவான் விஷ்ணுவின் ஆவேஸ அவதாரமான பகவான் ரிஷபதேவர் தனக்குள்; அஸம்யவஹிதம்—மாயா சக்தியின் தலையீடு இன்றி; அனர்த-அந்தர-பாவேன—அவரே விஷ்ணுவின் நிலையில் இருப்பவர் தான்; அன்வீக்ஷமாண:—எப்போதும் கண்டு; உபரத-அன்வ்ருத்தி:—அவரது உடலினைத் துறப்பவர் போல் செயல்படுதல்; உபரராம—உலகின் சக்ரவர்த்தி போன்ற தனது லீலைகளை நிறுத்திக் கொண்டார்.
பகவான் ரிஷப தேவர் இகபர உலகின் அனைத்துத் தலைவர்கள், அரசர்களுக்கெல்லாம் தலைவர் ஆவார். ஆயினும் ஒர் அவதூதரைப் போல் மொழி பேசி ஆடை அணிந்து திரிந்ததினால் அவர் புத்தி தடுமாறியவரைப் போன்றும் உலகப் பாசம் உடையவர் போன்றும் செயல்பட்டார். இதனால் ஒருவராலும் அவரது தெய்வீக வளத்தினை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அவர் எவ்வாறு இவ்வுடலினைத் துறப்பது என்பதை யோகிகளுக்குப் போதிப்பதற்காகவே இவ்வாறு நடந்து கொண்டார். இருந்தும் அவர் பகவான் வாசுதேவ கிருஷ்ணரின் இயல்பில் தனது உண்மை நிலையினையும் பாதுகாத்தார். எப்போதும் இந்நிலையில் இருந்து கொண்டு அவர் உலகில் பகவான் ரிஷபதேவரின் லீலைகளை நிறுத்திக் கொண்டார். பகவான் ரிஷப தேவரின் காலடிகளைப் பின்பற்றி ஒருவன் தனது நுண்ணுடலைத் துறந்தானென்றால் அவனுக்குப் பரு உடலைப் பெறும் சந்தர்ப்பம் ஏற்படாது.
பதம் 5.6.7
தஸ்ய ஹ வா ஏவம் முக்த-லிங்கஸ்ய பகவத ருஷபஸ்ய யோகமாயா-
வாஸனயா தேஹ இமாம் ஜகதீம் அபிமானாபாஸேன ஸங்க்ரம –
மாண: கொங்க-வெங்க-குடகான் தக்ஷிண -கர்ணாடகான் தேஷான்
யத்ருச்சயோபகத: குடகாசலோபவன ஆஸ்ய க்ருதாஸ்த-கவல உன்மாத
இவ முக்த-மூர்தஜோ ‘ஸம்வீத ஏவ விசசார
தஸ்ய—அவரது (பகவான் ரிஷப தேவர்); ஹவா—இருந்ததுபோல்; ஏவம்—இவ்வாறு: முக்த-லிங்கஸ்ய—பூத மற்றும் நுண்ணுடலுடன் எந்தவிதமான அடையாளம் இல்லாதவர்; பகவத:—முழுமுதற் கடவுள்; ருஷபஸ்ய—பகவான் ரிஷப தேவர்; யோக-மாயா-வாஸனயா— பகவானின் லீலைகளுக்கான நோக்கத்திற்காக யோக மாயையின் சிறப்புத் தன்மையினால்; தேஹ—உடல்; இமாம்—இந்த; ஐதிகம்—பூமி; அபிமான-அபாஸேன—வெளித்தோற்றத்தில் பருப்பொருட்களினால் ஆன உடலைப் பெற்றிருத்தல் போன்ற; ஸங்க்ரமமாண:—பயணம் செய்து; கொங்க-வெங்க-குடகான்—கொங்கம், வெங்கம், குடகம்; தக்ஷிண—தென் இந்தியா; கர்நாடகான்—கர்நாடகப் பகுதி; தேஷான்—அனைத்து நாடுகளும்; யத்ருச்சயா—அவரது சுய விருப்பின் பேரில்; உபகத—அடைந்தார்; குடகாசல உபவனே—குடகாசலம் என்னும் பகுதியில் அருகிலுள்ள வனம்; ஆஸ்ய—வாயினுள்; க்ருத-அஸ்ம-கவல:—வாயினுள் கற்களை வைத்துக் கொண்டு; உன்மத: இவ—உன்மத்தம் பிடித்தவர் போன்று; முக்த-மூர்ஜத:—சடைவிழுந்த முடியுடன்; அஸம்வீத:—நிர்வாணமாக; ஏவ—போன்று; விசசார—பயணம் செய்தார்.
உண்மையில் பகவான் ரிஷப தேவர் உடலைப் பெற்றிருக்கவில்லை. ஆயினும் யோகமாயையினால் அவர் தனது உடலைப் பௌதீகமாகக் கருதினார். அத்தோடு அவர் ஒரு சாதாரண மனிதனைப் போல் செயல்பட்டாலும் அதனுடன் அடையாளம் காணும் மன நிலையினைத் துறந்தார். இக் கொள்கையினைப் பின்பற்றி அவர் உலகம் முழுவதும் பயணம் செய்யத் தொடங்கினார். இவ்வாறு பயணிக்கும் பொழுது அவர் தென்னிந்தியாவில் கர்நாடகத்தினை அடைந்து அங்கிருந்து கொங்கம், வேங்கம், குடகம் போன்ற பகுதிகளைக் கடந்து சென்றார். இவ்வழியில்தான் செல்லவேண்டும் எனும் திட்டமும் அவரிடம் இல்லை. ஆயினும் அவர் குடகாசலத்தினை அடைந்து அதன் அருகிலுள்ள காட்டினுள் சென்றார். வாய் நிறையக் கற்களை வைத்துக் கொண்டு, நிர்வாணமாகவும், பரட்டைத் தலையுடனும் ஒரு பைத்தியம் பிடித்த மனிதனைப் போல் அக்காடு முழுவதும் சுற்றிக் கொண்டிருந்தார்.
பதம் 5.6.8
அத ஸ மீர-வேக-விதூர-வேணு-விகர்ஷண-ஜாதோக்ர-தா வான
வஸ் தத் வனம் ஆலேவின ஸஹ தேன ததாஹ:
அத—அதன் பின்னர்; ஸமீர-வேக—காற்றின் வேகத்தினால்; விதூத—தூக்கி எறியப்பட்டு; வேணு—மூங்கில்கள்; விகர்ஷண—உராய்தலினால்; ஜாத—உண்டான; உக்ர—உக்கிரமான; தாவ-அனல:—காட்டுத் தீ; தத்—அந்த; வனம்—குடகாசலம் அருகிலுள்ள வனம்; ஆலேவிஹான:—அப்பகுதி முழுவதும் எரிந்தது; ஸஹ—உடன்; தேன—அந்த உடல்; ததாஹ—எரித்து சாம்பலாகியது.
அவ்வாறு அவர் திரிந்து கொண்டிருந்தபொழுது திடீரென்று அக்காட்டில் தீ பிடித்தது. பலமாக வீசிய காற்றினால் மூங்கில்கள் ஒன்றோடொன்று உராய்ந்ததினால் இத் தீ ஏற்பட்டதாகும். அதனால் காடு முழுவதும் எரிந்ததோடு பகவான் ரிஷப தேவரின் உடலும் எரிந்து சாம்பலாகியது.
பதம் 5.6.9
யஸ்ய கிலானுசரிதம் உபாகர்ண்ய கொங்க-வெங்க-குடகா-
னாம் ராஜார்ஹன்னாமோ ப ஸிக்ஷ்ய கலாவ் அதர்ம உத்க்ருஷ்ய-
மாணே பவிதவ்யேன விமோஹித ஸ்வ-தர்ம-பதம் அகுதோ-பயம்
அபஹாய குபத-பாகண்டம் அஸமாஞ்ஜஸம் நிஜ மணீஷயா மந்த
ஸம்ப்ரவர்தயிஷ்யயேத
யஸ்ய—அவரின் (பகவான் ரிஷபதேவர்); கில அனுசரிதம்— வர்ணாஸ்ரமக் கொள்கைகளுக்கு மேலான பரமஹம்ஸரைப் போன்ற செயல்கள்; உபாகர்ண்ய—கேட்டு; கொங்க-வெங்க-குடகானாம்—கொங்கம், வெங்கம் மற்றும் குடகத்தின்; ராஜா—அரசன்; அர்ஹத்-நாம—அவருடைய பெயர் அர்ஹத் (இப்போது ஜெயின் என்று அறியப்படுகிறது) என்பதாகும்; உபஸிக்ஷ்ய—பகவான் ரிஷப தேவரின் பரமஹம்ஸச் செயல்களைப் பாவனை செய்து; கலாவ்—இக்கலியுகத்தில்; அதர்மே உத்க்ருஷ்மாயணே—அதர்ம வாழ்க்கை அதிகரித்த காரணத்தினால்; பவிதவ்யேன—அதன் மூலம் நிகழக் கூடிய; விமோஹித:—குழப்பமுற்று; ஸ்வ-தர்ம-பதம்—தர்மத்தின் பாதை; அகுத:-பயம்—அது எல்லாவிதமானப் பயங்கரமான ஆபத்துக்களில் இருந்தும் விடுதலை பெற்றிருக்கிறது; அபஹாய—துறத்தல்; (தூய்மை,உண்மை, மன அடக்கம், புலனடக்கம், எளிமை, தர்மத்தின் நெறிமுறைகள், ஞானத்தினை நடைமுறைப்படுத்துதல் போன்ற பயிற்சிகள்); கு-பத-பாகண்டம்—நாத்திகத்தின் தவறானப் பாதை; அஸமஞ்ஜஸம்—முறையற்றது அல்லது வேதநெறிகளுக்கு எதிரானது; நிஜ-மணீஷயா—அவரது வளமான சுய அறிவினால்; மந்த:—நிர் மூடர்; ஸம்ப்ரவர்தயிஷ்யதே—அறிமுகப்படுத்தினார்.
சுகதேவ கோஸ்வாமி பரீக்ஷித்து மன்னரிடம் தொடர்ந்து கூறினார் அன்பார்ந்த மன்னனே, கொங்க, வெங்க, குடக நாட்டின் மன்னர் அர்ஹத் என்பவர் ரிஷப தேவரின் செயல்களைக் கேள்விப்பட்டு அவரது கொள்கைகளைப் பாவனை செய்து புதுவகையான சமயம் (தர்மம்) ஒன்றினை அறிமுகப்படுத்தினார். பாவச் செயல்களுக்குரிய காலமான கலியுகத்தினைப் பயன்படுத்தி மன்னர் அர்ஹத் குழப்ப நிலையில், இடர் தராத வேத அறநெறிகளைத் துறந்துவிட்டு யூகத்தின் அடிப்படையில் வேதத்திற்குப் புறம்பான ஒரு புதிய சமயத்தினை நிறுவினார். அதுவே ஜெயின் தர்ம நெறிமுறையின் தொடக்கமாகும். இந்த நாத்திக முறையினைப் பல சமயங்கள் பின்பற்றின.
பதம் 5.6.10
யேன ஹ வாவ கலௌ மனுஜாபஸதா தேவ-மாயா-மோஹி-
தா: ஸ்வ-விதினியோக-ஸௌ ச-சாரித்ர-விஹீனா தேவ-ஹேல
னானி அபவ்ரதானி நிஜ-நிஜேச்சயா க்ருஹ்ணானா அஸ்னா
னானாசமனாஸௌச-கேஸோல்லுஞ்சனாதீனி கலினாதர்ம பஹுலே
னோபஹத-தியோ ப்ரஹ்ம-பிராம்மண யஜ்ஞ-புருஷ-லோக விதூஷகா
ப்ராயேண பவிஷ்யந்தி
யேன—அந்தப் போலிச் சமய முறையினால்; ஹ வாவ—நிச்சயமாக; கலௌ—கலியுகத்தில்; மனுஜ-அபஸதா:—மிகுந்த கண்டனத்திற்குரிய மனிதர்கள்; தேவ-மாயா-மோஹிதா:—புறச்சக்தியினால் குழப்பப்பட்டு அல்லது முழுமுதற் கடவுளின் மாயா சக்தியினால் குழப்பப்பட்டு; ஸ்வ-விதினியோக-ஸெளச- சாரித்ர-விஹீனா:—நன்னடத்தை, தூய்மை மற்றும் வாழ்க்கையில் ஒருவனது கடமைக்கேற்ற ஒழுங்குமுறை விதிகள் போன்ற எதுவுமின்றி; தேவஹேலனானி—முழுமுதற் கடவுளைப் புறக்கணித்து; அபவ்-ரதானி—புனிதமற்ற சங்கல்பங்கள்; நிஜ-நிஜ-இச்சயா—அவர்களின் சுய இச்சைகளினால்; க்ருஹ்ணானா:—ஏற்றுக் கொண்டு; அஸ்னான-அனாசமன-அசௌச-கேஸ-உல்லூஞ்சன-ஆதீனி—நீராடுதல்; வாயைக் கழுவுதல், சுத்தமாக இருத்தல் என்பவை கூடாது, தலைமுடியினைப் பிடுங்கி எடுத்தல் வேண்டும் என்பதான கற்பனையான சமயக் கொள்கைகள்; கலினா—கலியுகத்தில்; அதர்ம பஹு லேன—ஏராளமான அதர்மங்களுடன்; உபஹத-திய:—அவர்களின் தூய உணர்வு அழிக்கப்படுகிறது; ப்ரஹ்ம-ப்ராஹ்மண-யஜ்ஞ- புருஷ-லோக-விதூஷகா:—வேதங்கள், அந்தணர்கள், வேள்விகள் போன்ற சமயச் சடங்குகள், முழுமுதற் கடவுள் மற்றும் அவர் பக்தர்கள் அனைவரையும் நிந்தித்தல்; ப்ராயேண—பெரும்பாலும் முழுவதும்; பவிஷ்யந்தி—ஆவர்.
மனிதர்களில் இழிந்தவர்களாகவும், பரமபுருஷ பகவானின் மாயா சக்தியினால் குழப்பமடைந்தும் இருக்கும் சிலர் உண்மையான வர்ணாஸ்ரம தர்மத்தினையும் அதன் ஒழுங்குமுறை விதிகளையும் கைவிட்டுவிடுவர். அவர்கள் ஒரு நாளைக்கு மூன்று முறை நீராடுவதும் இறைவனை வழிபடுவதும் இல்லை. தூய்மையினைக் கைவிட்டு முழுமுதற் கடவுளைப் புறக்கணிப்பர். புத்திக்கு ஒவ்வாதக் கொள்கைளை ஏற்றுக் கொள்வர். அவர்கள் தினசரி நீராடுவதோ, வாயைக் கழுவுவதோ இல்லை. அசுத்தமாகவே இருப்பர். தங்கள் தலை முடிகளைக் கைகளினால் பிடுங்குவர். கற்பனையான சமயத்தினைப் பின்பற்றி அவர்கள் வளம் பெறுவர். இக்கலியுகத்தில் மக்கள் அதர்ம நெறிகளையே அதிகம் நாடுவர். இதனைத் தொடர்ந்து மக்கள் இயற்கையாகவே வேதங்களின் அதிகாரத்தினையும், அவற்றைப் பின்பற்றுபவர்களையும், அந்தணர்களையும், முழுமுதற் கடவுளையும் அவர்தம் பக்தர்களையும் இழிவு செய்வர்.
பதம் 5.6.11
தே ச ஹி அர்வாக்தனயா நிஜ-லோக-யாத்ரயாந்த-பரம்பர யாஸ்
வஸ்தாஸ் தமஸி அந்தே ஸ்வயம் ஏவ ப்ரபதிஷ்யந்தி
தே—வேத நெறிகளைப் பின்பற்றாதவர்கள்; ச—மேலும்; ஹி—உறுதியாக; அர்வாக்தனயா—வேத தர்மத்தின் நித்தியக் கொள்கைகளிலிருந்து திசை மாறியவர்கள்; நிஜ-லோக-யாத்ரயா—அவர்கள் மனயூகத்தினால் விளைந்த பயிற்சியினால்; அந்த-பரம்பரயா—விழியற்ற அறியாமை மிக்க சீடபரம்பரையினால்; ஆஸ்வஸ்தா:—ஊக்கமளிக்கப்பட்டு; தமஹி—அறியாமையின் இருளில்; அந்தே—பார்வையின்றி; ஸ்வயம் ஏவ—அவர்கள்; ப்ரபதிஷ்யந்தி—கீழே வீழ்வர்.
தாழ்ந்த மனிதர்கள் அவர்களது அறியாமையினால் வேத நெறிகளுக்குப் புறம்பான சமய முறையினை அறிமுகப்படுத்துகின்றனர். தங்களது மன யூகத்தினைப் பின்பற்றி வாழ்வின் இருண்ட பகுதியில் அவர்கள் தாமாகவே வீழ்கின்றனர்.
பதம் 5.6.12
அயம் அவதாரோ ரஜஸோபப்லுத-கைவல்யோபஸிக்ஷ- ணார்த:
அயம் அவதார:—இந்த அவதாரம் (பகவான் ரிஷபதேவர்): ரஜஸோ—இரஜோ குணத்தினால்; உபப்லுத—ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றனர்; கைவல்ய-உபஸிக்ஷண-அர்த—விடுதலைக்கானப் பாதையினை மக்களுக்குப் போதித்தல்.
இக்கலியுகத்தில் மக்கள் இரஜோ குணம் தமோ குணங்களினால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றனர். இவர்களை மாயையின் பிடியிலிருந்து மீட்பதற்காகவே ரிஷப தேவர் பிறந்தார்.
பதம் 5.6.13
தஸ்யானுகுணான் ஸ்லோகான் காயந்தி-
அஹோ புவ: ஸப்த-ஸமுத்ரவத்யா
த்வீபேஷு வர்ஷேஷ்வ அதிபுண்யம் ஏதத்
காயந்தி யத்ரத்ய-ஜனா முராரே:
கர்மாணி பத்ராணி அவதாரவந்தி
தஸ்ய—அவரது (பகவன் ரிஷப தேவர்); அனுகுணான்—விடுதலைக்கான உபதேசங்களைப் பின்பற்றுதல்; ஸ்லோகான்—சுலோகங்கள்; காயந்தி—ஒதுதல்; அஹோ—ஓ, புவ:—இப்பூமியின்; ஸப்த-ஸமுத்ர-வித்யா—ஏழு சமுத்திரங்களை உடையது; த்வீபேஷு—தீவுகளுக்கு மத்தியில்; வர்ஷேஷு—நிலங்களுக்கு மத்தியில்; அதிபுண்யம்—எந்தவொரு தீவைவிடவும் புனிதமானது; ஏதத்—இந்த; (பாரத வர்ஷம்); காயந்தி—பாடுதல்; யத்ரத்ய-ஜனா:—இந்நிலப்பகுதியின் மக்கள்; முராரே—முராரியின்; முழுமுதற் கடவுளின்; கர்மாணி—செயல்கள்; பத்ராணி—அனைத்து மங்கலங்களும்; அவதார வந்தி—பகவான் ரிஷப தேவரைப் போன்ற பல அவதாரங்கள்.
கற்றறிந்த அறிஞர்கள் பகவான் ரிஷப தேவரின் உன்னதக் குணங்களை இவ்வாறு பாடுகின்றனர் “ஓ, ஏழு கடல்களையும், பல்வேறு தீவுகளையும், நிலப்பகுதிகளையும் உடைய இப்பூவுலகில் பாரத நாடே மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. முழு முதற் கடவுளின் அவதாரங்களான பகவான் ரிஷப தேவர் போன்றவர்களின் செயல்களைப் போற்றிப் புகழ்வதைப் பாரத மக்கள் வழக்கமாகக் கொண்டிருக்கின்றனர். இச்செயல்கள் அனைத்தும் மனித சமுதாயத்தின் நலனுக்கு மிகவும் மங்கலம் வாய்ந்தவையாகும்.
பதம் 5.6.14
அஹோ நு வம்ஸோ யஷஸாவதாத:
ப்ரையவரதோ யத்ர புமான் புராண:
க்ருதாவதார: புருஷ: ஸ ஆத்யஸ்
சசார தர்மம் யத் அகர்ம-ஹேதும்
ஆஹோ—ஒ, நு—உண்மையில்; வம்ஸ—ஆட்சி; யஷஸா— எங்கும் பரந்த புகழுடன்; அவதாத:—முற்றிலும் தூய்மையான; ப்ரையவ்ரத—மன்னர் பிரியவ்ரதனுக்குத் தொடர்புடைய; யத்ர—இதனில்; புமான்—பரமபுருஷர்; புராண—ஆதி; க்ருத-அவதார:—ஓர் அவதாரமாக அவதரித்தார்; புருஷ:—முழுமுதற் கடவுள்; ஸ:—அவர்; ஆத்ய:—ஆதிபுருஷர்; சசார—செய்தல்; தர்மம்—சமயஅறதெறிகள்; யத்—அதிலிருந்து; அகர்ம-ஹேதும்—பலன்தரும் செயல்களின் இறுதிக்கானக் காரணம்.
“ஒ, தூய்மையும் பெருமையும் மிக்கப் பிரியவிரதனின் ஆட்சியைப் பற்றி என்னவென்று சொல்வேன். அந்த ஆட்சியில் ஆதி முழுமுதற் கடவுளானப் பரம புருஷர் அவதரித்துப் பிறந்தார். உலகியல் செயல்களில் இருந்து ஒருவரை விடுவிக்கக் கூடிய சமய அற நெறிகளை அவர் நிறைவேற்றினார்.
பதம் 5.6.15
கோ ன்வ அஸ்ய காஷ்டாம் அபரோ ‘னுகச்சேன்
மனோ-ரதேனாபி அபவஸ்ய யோகீ
யோ யோக-மாயா: ஸ்ப்ருஹயதி உதஸ்தா
ஹி அஸத்தயா யேன க்ருத-ப்ரயத்னா:
க:—யார்; நு—உண்மையில்; அஸ்ய—பகவான் ரிஷப தேவரின்; காஷ்டாம்—உதாரணம்; அபர:—அத்தோடு; அனுகச்சேத்—பின்பற்றக்கூடும்; மன:-ராதேன—மனதினால்; அபி—கூட; அபவஸ்ய—பிறப்பற்றவரின்; யோகீ—யோகி; ய:—யார்; யோக-மாயா:—யோக மாயையின்; ஸ்ப்ருஹயதி—விரும்புதல்; உதஸ்தா:—ரிஷப தேவரினால் புறக்கணிக்கப்பட்ட; ஹி—உறுதியாக; அஸத்தயா—உண்மையற்ற; யேன—அவரால்; ரிஷப தேவரால்; க்ருத-ப்ரயத்னா:—தொண்டு செய்வதற்கு ஆர்வமிருந்தபோதிலும்.
பகவான் ரிஷப தேவரின் முன்னுதாரணத்தினை, தனது மனதில் கூடப் பின்பற்றும் திறனுடைய தெய்வீக யோகி எவர் இருக்கின்றனர்? எல்லா யோகிகளும் யோகஸித்திகளைத் தேடி ஓடிக் கொண்டிருக்கும் பொழுது பகவான் ரிஷப தேவர் இந்த யோகி ஸித்திகள் அனைத்தையும் புறக்கணித்தார். பகவான் ரிஷபதேவரோடு ஒப்பிடக் கூடிய வல்லமை பெற்ற யோகி யார்?
பதம் 5.6.16
இதி ஹ ஸ்ம ஸகல-வேத-லோக-தேவ-ப்ராஹ்மண-கலாம்
பரம-குரோர் பகவத ருஷபாக்யஸ்ய விஸுத்தாசரிதம் ஈரிதம் பும்ஸாம்-
ஸமஸ்த து ஸ்சரிதாபிஹரணம் பரம-மஹா-மங்கலாயனம் இதம்
அனுஸ்ரத்தயோபசிதயானுஸ்-ருணோதி ஆஸ்ராவயதி வாவஹிதோ
பகவதி தஸ்மின் வாஸுதேவ ஏகாந்ததோ பக்திர் அனயோர் அபி
ஸமனுவர்ததே
இதி—இவ்வாறு; ஹ ஸ்ம—உண்மையில்; ஸகல—அனைத்தும்; வேத—அறிவின்; லோக—பொதுமக்கள்; தேவ—தேவர்களின்; ப்ராஹ்மண—அந்தணர்களின்; கலாம்—பசுக்களின்; பரம—உயர்ந்த; குரோ:—குரு; பகவத:—முழுமுதற் கடவுளின்; ருஷப-ஆக்யஸ்ய—அவரது பெயர் பகவான் ரிஷப தேவர்; விசுத்த—தூய்மையான; ஆசரிதம்—செயல்கள்; ஈரிதம்—இப்போது விளக்கியது; பும்ஸாம்—ஒவ்வோர் உயிர்வாழியின்; ஸமஸ்த—எல்லாம்; துஸ்சரித—பாவச் செயல்கள்; அபிஹரணம்—அழிகின்ற; பரம—மிகவுயர்ந்த; மஹா—சிறந்த; மங்கல—மங்கலம்; அயனம்—அடைக்கலம்; இதம்-இந்த-அனுஸ்ரத்தயா—நம்பிக்கையுடன்; உபசிதயா—அதிகரித்தல்; அனுஸ்ருணோதி—அதிகாரம் பெற்றவரிடமிருந்து கேட்டல்; ஆஸ்ராவயதி—பிறரிடம் பேசுவது; வா—அல்லது; அவஹித—கவனமுடன்; பகவதி—முழுமுதற்கடவுள்; தஸ்மின்—அவருக்கு; வாஸுதேவ—பகவான் வாசுதேவருக்கு அதாவது பகவான் கிருஷ்ணருக்கு; ஏக-அந்தத:—மாறாத; பக்தி:—பக்தி; அனயோ:—பேசுபவர்கள், கேட்பவர்கள் என்னும் இரு பிரிவினர்; அபி—உறுதியாக; ஸமனுவர்-ததே—உண்மையில் தொங்குகிறது.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: வேதஞானம் நிறைந்த பகவான் ரிஷப தேவர், மனிதர்கள், தேவர்கள், பசுக்கள் மற்றும் அந்தணர்களின் தலைவர் ஆவார். நான் ஏற்கனவே உயிர்களின் அனைத்துப் பாவங்களையும் அழிக்கும் அவரது தூய உன்னத குணங்களைப் பற்றி விளக்கியிருக்கிறேன். பகவான் ரிஷப தேவரின் லீலைகளைப் பற்றிய இச்சரிதமானது அனைத்து மங்கலங்களும் நிரம்பியதாகும். ஆச்சாரியார்களின் சுவடுகளைப் பின்பற்றி இவற்றைப்பற்றிப் பேசுபவர்களும் கேட்பவர்களும் முழுமுதற் கடவுளான பகவான் வாசுதேவரின் திருவடித் தாமரைகளுக்கான குற்றமற்ற பக்தித் தொண்டினை நிச்சயம் எய்துவார்.
பதம் 5.6.17
யஸ்யாம் ஏவ கவய ஆத்மானம் அவிரதம் விவித-வ்ருஜின-ஸம்ஸார
பரிதாபோ பதப்யமானம் அனுஸவனம் ஸ்நாகயந்தஸ் தனயவ பரயா
நிர்வ்ருத்யா அபவர்கம் ஆத்யந்திகம் பரம-புருஷார்தம் அபி ஸ்வயம்
ஆஸாதிதம் நோ ஏவாத்ரியந்தே பகவ தீயத்வேனைவ பரிஸமாப்த-
ஸர்வார்தா:
யஸ்யாம் ஏவ—அதில் (கிருஷ்ண உணர்வு அல்லது பக்தித் தொண்டின் ரஸாம்ருதம்); கவய:—கற்றறிந்த அறிஞர்களின் முன்னேற்றம் அல்லது ஆன்மீக வாழ்வின் தத்துவவாதிகள்; ஆத்மானம்—தனது; அவிரதம்—தொடர்ந்து; விவித—பல்வேறு; வ்ருஜின—பாவங்கள் நிறைந்த; ஸம்ஸார—பொருள் இருப்பில்; பரிதாபோ—துன்பகரமான நிலைகளிலிருந்து; உதப்யமானம்—துன்புற்று; அனுஸவனம்—நிற்காது; ஸ்நாபயந்த:—ஸ்நானம் செய்தல்; தயா—அதன் மூலம்; ஏவ—உறுதியாக; பரயா—பெரிய; நிர்வ்ருத்யா—மகிழ்ச்சியுடன்; அபவர்கம்—விடுதலை; ஆத்யந்திகம்—இடையூறு இன்றி; பரம-புருஷ-அர்தம்—அனைத்து மனிதர்களும் எய்தியதில்; மிகச் சிறந்த; அபி—இருந்தபோதிலும்; ஸ்வயம்—சுயமாக; ஆஸாதிதம்—பெறுதல்; நோ—இல்லை; ஏவ—உறுதியாக; ஆத்ரியந்தே—எய்துதற்கான பெருமுயற்சி; பகவத்தீயத்வேன ஏவ—முழுமுதற் கடவுளுடனான உறவின் காரணமாக; பரிஸமாப்த ஸர்வ-அர்தா:—பௌதீக ஆசைகள் அனைத்திற்கும் முற்றுப் புள்ளி வைத்தார்கள்.
வாழ்வின் துன்பங்களிலிருந்து விடுதலை பெறுவதற்காக பக்தர்கள் எப்போதும் பக்தித் தொண்டில் திளைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனைச் செய்வதினால் பக்தர்கள் தெய்வீக இன்பத்தை அனுபவிக்கின்றனர். மேலும் வீடுபேறு மனித உருவில் வந்து அவர்களுக்குத் தொண்டு செய்கிறது. இருந்தும் அவர்கள் அத்தொண்டினை அது முழுமுதற் கடவுளால் அளிக்கப்பட்ட போதிலும்கூட ஏற்றுக் கொள்வதில்லை. பக்தர்களைப் பொறுத்தமட்டில் விடுதலை (முக்தி) என்பது சிறிதும் முக்கியத்துவமற்றதாகும். ஏனென்றால் பகவானின் மனவாசகம் கடந்த அன்புத் தொண்டினை அடையப் பெற்றவர்கள் அவர்கள் விரும்பிய அனைத்தையும் அடைவதோடு உலகியல் ஆசைகள் அனைத்தையும் கடந்தவர்களாகவும் இருக்கின்றனர்.
பதம் 5.6.18
ராஜன் பதிர் குருர் அலம் பவதாம் யதூனாம்
தைவம் ப்ரிய: குல-பதி: க்வ ச கிங்கரோ வ:
அஸ்த்வ ஏவம் அங்க பகவான் பஜதாம் முகுந்தோ
முக்திம் ததாதி கர்ஹிசித் ஸ்ம ந பக்தி-யோகம்
ராஜன்—ஒ, எனதன்பிற்குரிய மன்னனே; பதி:—காப்பவன்; குரு:—குரு; அலம்—உறுதியாக; பவதாம்—உங்களின்; யதூனாம்—யதுகுலம்; தைவம்—வணங்கப்படும் தெய்வம்; ப்ரிய—பிரிய மிக்க நண்பர்; குல-பதி:—குலத்தின் தலைவர்; க்வ ச—சில நேரங்களில்; கிங்கர:—சேவகனாகக் கூட; வ—உங்களின் (பாண்டவர்களின்); அஸ்து—நிச்சயமாக; ஏவம்—இவ்வாறு; அங்க—ஒ, அரசனே; பகவான்—முழுமுதற் கடவுள்; பஜதாம்—பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்கும் அப்பக்தர்கள்; முகுந்த:—முழுமுதற் கடவுளான பகவான்; முக்தி—விடுதலை; ததாதி—அருள்கிறார்; கர்ஹிசித்—எந்த நேரத்திலும்; ஸ்ம—உண்மையில்; ந—இல்லை; பக்தி-யோகம்:—அன்புடைய பக்தித் தொண்டு.
சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பிற்குரிய மன்னனே, முழுமுதற் கடவுளான முகுந்தன் பாண்டவ, யதுகுல உறுப்பினர்களை உண்மையில் காப்பவர் ஆகும். அவரே உனது குரு, வணங்குதற்குரிய தெய்வம், நண்பர் மற்றும் உனது செயல்கள் அனைத்தையும் இயக்குபவரும் அவரே. இதனைச் சொல்வதினால் ஒன்றும் இல்லை. அவர் சில சமயம் உங்கள் குடும்பத்திற்குத் தூதராகவும், தொண்டராகவும் இருந்து சாதாரணப் பணியாளர்கள் செய்வதைப் போன்று பணி செய்தார். பகவானின் கருணையினைப் பெறுவதற்காகத் தொண்டு செய்பவர்கள் பகவானிடமிருந்து விடுதலையினை மிக எளிதில் பெறுகின்றனர். ஆயினும் அவர் தனக்கு நேரடியாகத் தொண்டு செய்யும் வாய்ப்பினை ஒருவனுக்கு எளிதில் அளிப்பதில்லை.
பதம் 5.6.19
நித்யானுபூத-நிஜ-லாப-நிவ்ருத்த-த்ருஷ்ண:
ஸ்ரேயஸி அதத்- ரசனயா சிர-ஸுப்த-புத்தே:
லோகஸ்ய ய: கருணாயாபயம் ஆத்ம-லோகம்
ஆக்யான் நமோ பகவதே ருஷபாய தஸ்மை
நித்ய-அனுபூத—எப்போதும் அவரது உண்மை அடையாளத்தில் உணர்வுடைய காரணத்தினால்; நிஜ-லாப-நிவ்ருத்த-த்ருஷ்ண:—அவர் நிறைவேற்றுவதற்குரிய ஆசைகள் ஏதுமில்லாதது தன்னுள் திருப்தியுற்றவர் ஆவார்; ஸ்ரேயஸி—வாழ்வின் உண்மையான நலன்; அ-தத்-ரசனயா—உடதானாக எண்ணி உலகத்தின் செயல்களை விரிப்பதினால்; சிர—நீண்ட காலமாக; ஸுப்த—உறங்குதல்; புத்தே—அவர்களது புத்தி; லோகஸ்ய—மனிதர்களின்; ய:—அவர் (பகவான் ரிஷப தேவர்); கருணயா—அவரது கருணையினால்; அபயம்—அச்சமின்றி; ஆத்ம-லோகம்—தனது உண்மை அடையாளம்; ஆக்யாத்—உபதேசித்து; நம:—மரியாதைக்குரிய வந்தனங்களை; பகவதே—முழுமுதற் கடவுளுக்கு; ருஷபாய—பகவான் ரிஷப தேவருக்கு; தஸ்மை—அவருக்கு.
முழுமுதற் கடவுளான பகவான் ரிஷப தேவர் தனது உண்மை அடையாளத்தினை நன்கு அறிந்தவர் ஆவார் ஆகையினால் அவர் சுய நிறையுடையவராக விளங்கினார். அவர் புலநுகர்ச்சிகள் எதையும் விரும்பவில்லை. அவர் மன நிறைவுடையவராதலால் வெற்றி பெறுவதற்கான ஆசைகள் அவருக்குத் தேவையற்றவையாயின. தேவையின்றி உடலோம்பலில் ஈடுபட்டு அதற்குரிய சூழல்களை உண்டு பண்ணுவோர் சுயநலம் மிகுந்து அறியாமை மிக்கவர்களாகவே இருக்கின்றனர். தனது அளவற்றக் கருணையினால் பகவான் ரிஷப தேவர் சுய நலத்தினை அடையாளம் காட்டியதோடு வாழ்க்கை லட்சியத்தினையும் நமக்குப் போதித்தார். ஆகையினால் பகவான் ரிஷப தேவராக அவதரித்த இறைவனுக்கு நமது மரியாதைக்குரிய வந்தனங்களைச் செலுத்துவோம்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “பகவான் ரிஷப தேவரின் செயல்கள்” எனும் தலைப்பை கொண்ட ஆறாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.