அத்தியாயம் – 4
முழுமுதற்கடவுளான ரிஷப தேவரின் குண நலன்கள்
பதம் 5.4.1
ஸ்ரீ ஷுக உவாச
அத ஹ தம் உத்பத்த்யை வாபிவ்யஜ்யமான-பகவல்-லக்ஷணம்
ஸாம்யோபஷம—வைராக்யைஷ்வர்ய-மஹா-விபூதி-பிர் அனுதினம்
ஏதமானுபாவம் ப்ரக்ருதய: ப்ரஜா ப்ராஹ்மணா தேவதாஷ் சாவனி-
தலஸமவனா யாதிதாரம் ஜக்ருது:
அத ஹ—இவ்வாறு; (முழுமுதற்கடவுள் அவதரித்தபிறகு); தம்—அவரை; உத்பத்த்யா—அவர் தோன்றியது முதல்; ஏவ—கூட; அபிவ்யஜ்யமான—தெளிவாக வெளிப்படுத்துதல்; பகவத்-லக்ஷணம்—முழுமுதற்கடவுளின் லட்சணம் உடையவராக; ஸாம்ய—எல்லோரிடத்தும் சமமானவராக; உபஷம—புலன்கள் மற்றும் மனதினைக் கட்டுப்படுத்தி முற்றிலும் அமைதியாக இருத்தல்; வைராக்ய—வைராக்கியம்; ஜஷ்வர்ய—செல்வங்கள்; மஹா-விபூதிபி:—சிறந்த குணங்களுடன்; அனுதினம்—அனுதினமும்; ஏதமான—அதிகரித்து; அனுபாவம்—அவரது சக்தி; ப்ரக்ருத்ய:—அமைச்சர்கள்; ப்ரஜா—பிரஜைகள்; ப்ராஹ்மணா:—பிரம்மத்தைப் பற்றிய நிறையறிவு உடைய மேலோர்கள்; தேவதா:—தேவர்கள்; ச—மேலும்; அவனி-தவ—பூமியின் மேற்பரப்பினை; ஸமவனாய—ஆள்வதற்கு; அதிதராம்—மிகவும்; ஜக்ருது:—விரும்பினார்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார் மகாராஜா நாபி மன்னரின் புதல்வர் பிறந்தவுடன், தனது உள்ளங்காலில் அடையாளங்களைப் (கொடி, வஜ்ராயுதம்) பெற்றிருந்தார். அவர் அனைவர்க்கும் பொதுவாகவும் மிகவும் அமைதியுடனும் விளங்கினார். அவர் தனது மனம் மற்றும் புலன்களைக் கட்டுப்படுத்தக் கூடியவராகவும் எல்லாச் செல்வங்களும் உடையவராகவும் விளங்கினார். அவர் உலகியல் இன்பத்தைத் தேடி அலையவில்லை. இக்குணங்கள் அனைத்தும் கொண்டு விளங்கிய நாபி மன்னரின் மைந்தர், தமது ஆற்றல் நாளுக்கு நாள் அதிகரிக்கப் பெற்றார். இதன் காரணமாக அந்தணர்களும், தேவர்களும், அமைச்சர்களும், குடிமக்களும் ரிஷபதேவர் மன்னராகி உலகினை ஆளவேண்டுமென்று விரும்பினார்.
பதம் 5.4.2
தஸ்ய ஹ வா இத்தம் வர்ஷ்மனா வரீயஷா ப்ருஹச்-ச்லோ-கேன
சௌஜஸா பலேன ஸ்ரீயா யஷஸா வீர்ய-ஷௌராப்யாம் ச பிதா ருஷப
இதீதம் நாம சகார
தஸ்யாம்—அவரது; ஹ வா—உறுதியாக; இத்தம்—இவ்வாறு; வர்ஷ்மணா—உடல் அமைப்புகளினால்; வரீணஸா—மிகவுயர்ந்த; ப்ருஹத்-ஷலோகேன—கவிஞர்கள் பாராட்டும் அனைத்துக் குண நலன்களும் வாய்க்கப்பெற்று; ச—மேலும்; ஒ ஜஸா—வீரத்தினால்; பலேன—பலத்தினால்; ஸ்ரீயா—அழகினால்; யஷஸா—புகழினால்; வீர்ய-ஷௌர்யாப்யாம்—செல்வாக்கு மற்றும் வீரியத்தினால்; ச—மேலும்; பிதா—தந்தை (மகாராஜா நாபி); ருஷப:—மிகச்சிறந்தவர்; இதி—இவ்வாறு; இதம்—இந்த; நாம—நாமம்; சகார—அளித்தார்.
நாபி மன்னரின் புதல்வர் வெளிப்பட்ட பொழுது அவர் கவிஞர்களால் பாராட்டப்படும் முழுமுதற் கடவுளின் அடையாளங்களுடன் கூடிய உடல் உறுதி, வீரம், பலம், அழகு, பெயர், புகழ், செல்வாக்கு, ஊக்கமுடைமை போன்ற நற்குணங்கள் அனைத்தும் வாய்க்கப்பெற்றிருந்தார். தன் மைந்தனின் இக்குணங்களைக் கண்டு நாபி மன்னர், மனிதருள் தன் மகனே சிறந்தவர் என்று கருதினார். ஆகையினால் தன் மைந்தனுக்கு “ரிஷப” என்னும் பெயர் சூட்டினார்.
பதம் 5.4.3
யஸ்ய ஹீந்த்ர: ஸ்பர்த்மானோ பகவான் வர்ஷே ந வவர்ஷ தத்
அவதார்ய பகவான் ருஷப தேவோ யோகேஷ்வர: ப்ரஹயஸ்யாத்ம-
யோகமாயயா ஸ்வ- வர்ஷம் அஜநாபம் நாமாப்யவர்ஷத்
யஸ்ய—அவரை; ஹி—உண்மையில்; இந்த்ர:—தேவலோகத்தின் தேவேந்திரன்; ஸ்பர்த்மான:—காழ்ப்புணர்ச்சி கொண்டு; பகவான்—வளமிக்கவர்; வர்ஷே—பாரதவர்ஷத்தின் மீது; ந-வவர்ஷ—மழை பொழியச் செய்யவில்லை; தத்—அந்த; அவதார்ய—அறிந்து கொண்ட; பகவான்—முழுமுதற்கடவுள்; ருஷப-தேவ:—ரிஷப தேவர்; யோக-ஈஷ்வர:—யோகேஷ்வரன்; ப்ரஹஸ்ய—புன்னகைத்து; ஆத்ம:-யோக-மாயயா—அவரது சுய ஆன்மீகச் சக்தியினால்; ஸ்வ-வர்ஷம்—அவர் இடத்தின் மீது; அஜநாபம்—அஜநாபம்; நாம—பெயருடைய; அப்யவர்ஷத்—அவர் மழை பெய்யச் செய்தார்.
செல்வச்சிறப்புடன் விளங்கிய தேவேந்திரன், மன்னர் ரிஷபதேவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டான். பாரதவர்ஷம் என்றறியப்படும் உலகின் மீது மழை பொழியாதிருக்குமாறும் செய்தான். அப்போது பரமபுருஷ பகவானும் யோகேஷ்வரனுமாகிய ரிஷபதேவர் தேவேந்திரனின் உள்நோக்கத்தைப் புரிந்து கொண்டு சிறிது புன்னகை புரிந்தார். பிறகு அவர் தனது யோகமாயையினால் (அவரது அகச்சக்தி) தனது இருப்பிடமான அஜநாபம் என்னும் இடத்தின் மீது ஏராளமாக மழை பெய்யச் செய்தார்.
பதம் 5.4.4
நாபிஸ் து யதாபிலஷிதம் ஸுப்ரஜஸ்த்வம் அவருத்யாதி-ப்ரமோத
பரவிஹ்வலோ கத்கதா க்ஷரயா கிராஸ்வைரம் க்ருஹீத-நரலோக-
ஸதர்மம் பகவந்தம் புராண-புருஷம் மாயா-விவஸித-மதிர்-வத்ஸ
தாதேதி ஸானுராகம் உபலா-லயன் பராம் நிர்வ்ருதிம் உபகத:
நாபி:—மன்னர் நாபி; து—உறுதியாக; யதா-அபிலாஷிதாம்—அவரது விருப்பத்திற்கேற்ப; ஸு-ப்ரஜஸ்வதம்—மிக அழகிய மைந்தன்; அவருத்ய—பெற்று; அதி-ப்ரமோத—மிகுந்த மகிழ்ச்சியில்; பர—அளவுக்கு மீறிய; விஹ்வல:—உணர்ச்சி வயப்பட்டு; கத்கத அக்ஷரயா—மெய்மறந்த நிலையில் நடுங்கிய; கிரா—குரலுடன்; ஸ்வைரம்—அவரது சுதந்திரமான விருப்பத்தினால்; க்ருஹீத—ஏற்றுக் கொண்டார்; நர-லோக-ஸதர்மம்—ஒரு மனிதனைப் போல் நடந்து கொண்டு; பகவந்தம்—முழுமுதற்கடவுள்; புராண-புருஷம்—உயிர்களிடையே மிகவும் பழமையானவர்; மாயா—யோக மாயையினால்; விவஸித—குழப்பமுற்று; மதி:—அவரது மனப்பான்மை; வத்ஸ—எனதருமை மகனே; தாத—என் உயிரே; இதி—இவ்வாறு; ஸ-அனுராகம்—மிகுந்த பாசத்துடன்; உபலாலயன்—வளர்ந்து; பராம்—உன்னதமான; நிர்வ்ருதிம்—ஆனந்தம்; உபகத—அடைந்தார்.
தான் விரும்பிய வண்ணமே நாபி மன்னர் ஒரு நிறைவான புதல்வனைப் பெற்றதினால் எப்போதும் உன்னத ஆனந்தத்தினால் உணர்ச்சி வயப்பட்டவராகவும் தன் புதல்வன் மீது மிகுந்த பாசமுடையவராகவும் திகழ்ந்தார். மெய்மறந்த நிலையில், நடுங்கும் குரலில் அவர் தன் மைந்தனை எப்போதும் அன்பு மகனே என் உயிரே என்று அழைத்தார். இம்மனப்பான்மையினை அவர் பரமபுருஷபகவானான பரம பிதாவினைத் தன் மைந்தனாக ஏற்றுக் கொண்டதினால் விளைந்த யோக மாயையினால் ஏற்பட்டதாகும். பகவான் தனது முழு நல்லெண்ணத்தினால் ஒருவரது புதல்வனானார் அனைவரிடமும் ஒரு சாதாரண மனிதனைப் போன்றே பழகினான். இவ்வாறு மன்னர் நாபி தன் உன்னத மைந்தனை மிகுந்த பாசத்துடன் வளர்க்கத் தொடங்கினார். மேலும் அவர் உன்னத ஆனந்தம், மகிழ்ச்சி மற்றும் பக்தியினால் உணர்ச்சிவயப்பட்டவராகத் திகழ்ந்தார்.
பதம் 5.4.5
விதிதானுராகம் ஆபௌர -ப்ரக்ருதி ஜன -பதோ ராஜா நாபிர் –
ஆத்மஜம் ஸமய– ஸேது -ரக்ஷாயாம் அபிஷிச்ய ப்ராஹ்மணேஷு பனிதாப
ஸஹ மேருதேவ்யா விஷாலாயாம் ப்ரஸன்ன- நிபுணேன தபாஸ ஸமாதி –
யோகேன நர- நாராயணாக்யம் பகவந்தம் வாஸு தேவம் உபாஸீ ன:
காலேன தன்மஹிமானம் அவாப
விதித—நன்றாக அறிந்து கொண்டு; அனுராகம்—செல்வாக்கு; ஆபௌர ப்ரக்ருதி—குடிமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் மத்தியில்; ஜன-பத:—பொதுமக்களுக்கு சேவை செய்யும் விருப்பத்தில்; ராஜா—மன்னர்; நாபி—நாபி; ஆத்மஜம்—அவர் மைந்தன்; ஸமய-ஸேது-ரக்ஷாயாம்—சமய வாழ்க்கையின் தேவ நெறிகளுக்கேற்ப மக்களை முறையாகப் பாதுகாப்பதற்கு; அபிஷிச்ய—முடிசூட்டுதற்கு; ப்ராஹ்மணேஷு—கற்றறிந்த அந்தணர்களுக்கு; உபநிதாய—ஒப்படைத்து; ஸஹ—உடன்; மேருதேவ்யா—அவர் மனைவி; மேருதேவி; விஷாலாயாம்—பத்ரிகாஸ்ரமத்தில்; ப்ரஸன்ன-நிபுணேன—முழுத்திருப்தியுடனும் தேர்ச்சியுடனும் செய்த; தபஸா—தவங்கள் மற்றும் துறவு நெறிகளினால்; ஸமாதி-யோகேன—முழுசமாதி நிலையில்; நர-நாராயண-ஆக்யம்—நர-நாராயணர் என்னும் பெயரில்; பகவந்தம்—முழுமுதற்கடவுள்; வாஸு-தேவம்—கிருஷ்ணர்; உபாஸீன:—வழிபட்டு; காலேன—உரிய காலத்தில்; தத்-மஹிமானம்—அவரது புகழ்மிக்க இருப்பிடமும் ஆன்மீக உலகுமான வைகுண்டம்; அவாப—அடைந்தார்.
நாபி தன் மைந்தன் ரிஷப தேவருக்குக் குடிமக்கள், அரசு அலுவலர்கள், அமைச்சர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். தன் மைந்தனுக்கிருந்த செல்வாக்கினைப் புரிந்து கொண்ட மன்னர் நாபி, வேத நெறிமுறைகளுக்கேற்ப இவ்வுலகிலுள்ள பொது மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தன் மைந்தனை இவ்வுலகின் மாமன்னனாக முடி சூட்டினார். இதனைச் செய்வதற்கு அவர் தன் மைந்தனை அரசு நிர்வாகத்தில் வழி காட்டக்கூடிய கற்றறிந்த அந்தணர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் மன்னர் நாபி தன் மனைவி மேருதேவியுடன் இமயமலைப் பகுதியிலுள்ள பத்திரிகாஸ்ரமம் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கு அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் தவம் மட்டும் துறவறங்களை மேற்கொண்டார். மேலும் அவர் முழு சமாதி நிலையில் முழுமுதற் கடவுளான நாராயணரை வழிபட்டார். இவரே தமது சுயாம்ஸ விரிவில் கிருஷ்ணராக இருக்கின்றார். இதனைச் செய்ததின் மூலம் மகாராஜா நாபி உரிய காலத்தில் வைகுண்டம் என்றறியப்படும் ஆன்மீக உலகிற்கு உயர்வுபெற்றார்.
பதம் 5.4.6
யஸ்ய ஹ பாண்டவேய ஷ்லோகாவ் விதாஹரந்தி-
கோ நு தத் கர்ம ராஜர்ஷேர் நாபேர் அன்வ ஆசரேத் புமான்
அபத்யயதாம் அகாத் யஸ்ய ஹாித் ஷுத்தேன கர்மணா
யஸ்ய—அவரது; ஹ—உண்மையில்; பாண்டவேய—ஒ, மகாராஜா பரீக்ஷித்துவே; ஷ்லோகென—இரண்டு சுலோகங்கள்; உதா-ஹரந்தி—பாடினர்; க—யார்; நு—பிறகு; தத்—அந்த; கர்ம—செயல்; ராஜ-ருஷே:—ராஜரிஷி; நாபே—நாபி; அனு—பின்பற்றி; ஆசரேத்—நிறைவேற்றக் கூடும்; புமான்—ஒரு மனிதன்; அபத்யாம்—மைந்தனாக; அகாத்—சம்மதித்தார்; யஸ்ய—அவரது; ஹரி:—முழுமுதற்கடவுள்; ஷுத்தேன—பக்தித் தொண்டு செய்த தூயவர்; கர்மணா—செயல்களினால்.
ஒ, பரீட்சித்து மன்னரே! மகாராஜா நாபியினைப் புகழ்ந்து பழங்கால முனிவர்கள் இரண்டு சுலோகங்களைப் பாடியுள்ளனர். அவற்றுள் ஒன்று “நாபி மன்னரது மன நிறைவினை யாரே அடைய முடியும்? யாரே அவர்தம் செயல்களைச் செய்தற் கூடும்? அவரது பக்தித் தொண்டு காரணத்தினாலேயே முழுமுதற் கடவுள் அவர் மைந்தனாகப் பிறக்கச் சம்மதித்தார்.
பதம் 5.4.7
ப்ரஹ்மண்யோ ‘ன்ய குதோ நாபேர் விப்ரா மங்கல-பூஜிதா:
யஸ்ய பர்ஹிஷி யஜ்ஞேஷம் தர்ஷளாம் அஸுர் ஒஜஸ
ப்ரஹ்மண்ய:—அந்தணர்களின் ஒரு பக்தன்; அன்ய:—எவரேனும்; குத:—எங்கிருக்கிறான்; நாபே:—மகாராஜா நாபியைத் தவிர; விப்ரா:—அந்தணர்கள்; மங்கல-பூஜிதா:—நன்கு வழிபட்டுத் திருப்தியடைதல்; யஸ்ய—அவரது; பர்ஹிஷி—வேள்விச் சாலையில்; யஜ்ஞ-ஈஷம்— முழுமுதற்கடவுள்; அவரே வேள்விகள் அனைத்தையும் அனுபவிப்பவர்; தர்ஷயாம்-ஆஸு:—காட்டினார்; ஒஜஸா—அவர்களது அந்தண ஆற்றலினால்.
(இரண்டாவது வழிபாடு இதுவாகும்) “மகாராஜா நாபியை விட அந்தணர்களைச் சிறப்பாக வழிபட்டோர் யாரே உளர்? தகுதி வாய்ந்த அந்தணர்களை, அவர்களுக்குத் திருப்தி ஏற்படும் வண்ணம் அவர் வழிபட்டக் காரணத்தினால், அந்தணர்கள் தமது ஆற்றலினால் மகாராஜா நாபிக்கு முழுமுதற் கடவுளான நாராயணரை தனிப்பட்ட முறையில் காட்டினர்.
பதம் 5.4.8
அத ஹ பகவான் ருஷப தேவ: ஸ்வ- வர்ஷம் கர்ம-க்ஷேத்ரம்
அனுமன்யமான: ப்ரதர்ஷித குருகுல-வாஷோ லப்த-வரைர்
குருபிர் அனுஜ்ஞாதோ க்ருஹமேதினாம் தர்மான் அனுஷிக்ஷமாணோ
ஜயந்த்யாம் இந்த்ர-தத்தாயாம் உபய-லக்ஷணம் கர்ம ஸமாம்னாயாம்-னாதாம்
அபியுஞ்ஜன்ன ஆத்மஜானாம் ஆத்ம-ஸமானானானாம் ஷதம் ஜனயாம் ஆஸ
அத—அதன்பின்னர் (அவர் தந்தை சென்றபிறகு); ஹ—உண்மையில்; பகவான்—முழுமுதற்கடவுள்; ருஷப-தேவ:—ரிஷப தேவர்; ஸ்வ—அவருக்குரிய; வர்ஷம்—அரசு; கர்ம-க்ஷேத்ரம்—செயற்களம்; அனுமன்யமான:—அப்படியே ஏற்றுக் கொண்டு; ப்ரதர்ஷித—உதாரணமாக விளங்கினார்; குரு-குலவாஸ—குருகுலவாசம் செய்து; லப்த—எய்தப் பெற்று; வரைர்:—தட்சிணை; குருபி:—ஆன்மீகக் குருக்களினால்; அனுஜ்ஞாத:—கட்டளைப்படி; க்ருஹ-மேதினாம்—இல்லற வாசிகளின்; தர்மான்—கடமைகள்; அனுஷிக்ஷமாண:—உதாரணத்தினால் கற்பித்து; ஐயந்த்யாம்—அவர் மனைவி, ஜெயந்தி; இந்த்ர-தத்தாயாம்—இந்திரனால் அருளப்பட்ட; உபய-லக்ஷணம்—இருவிதமான; கர்ம—செயல்கள்; ஸமாம்-னயாம்-னாதம்—வேதங்களில் குறிப்பிட்டுள்ளபடி; அபியுஞ்ஜன்—செய்து; ஆத்மஜானாம்—புதல்வர்கள்; ஆத்ம-ஸமானானாம்—அவரைப் போன்றே; ஷதம்—நூறு; ஜனயாம்-ஆஸ—பெற்றெடுத்தார்.
பத்ரிகாஸ்ரமத்திற்கு மகாராஜா நாபி புறப்பட்டுச் சென்ற பிறகு பகவான் ரிஷப தேவர் தனது நாடே தனது செயற்களம் என்று கண்டு கொண்டார். ஆகையினால் அவர்தான் ஆடவருள் முன்னோடியாக விளங்க வேண்டுமென்பதற்காகவும், இல்லறத்தார்க்குரிய கடமைகள் என்னவென்று உபதேசிப்பதற்காகவும் முதலில் தனது ஆன்மீக குருக்களின் கட்டளையின்படி பிரம்மச்சரியத்தினை மேற்கொண்டார். அதற்காக அவர் ஆன்மீக குருவின் இருப்பிடமான குருகுலத்திற்குச் சென்றார். அங்கே அவரது கல்விப் பயிற்சி முடிவுற்ற பின்னர் அவர் தனது ஆன்மீகக் குருக்களுக்கு குரு தட்சணை அளித்துவிட்டு இல்லற வாழ்க்கையினை மேற்கொண்டார். பின்னர் அவர் இந்திரனால் அளிக்கப்பட்ட ஜெயந்தி என்னும் பெண்ணை மனைவியாக ஏற்றுக் கொண்டு அவளிடம் நூறு புதல்வர்களைப் பெற்றெடுத்தார். அந்நூறு புதல்வர்களும் அவரைப் போன்றே ஆற்றல்மிக்கவர்களாக விளங்கினார்கள். ரிஷப தேவரும், ஜெயந்தியும் தங்கள் இல்லற வாழ்வினை மிகவும் சிறந்த முறையில், ஷ்ருதி மற்றும் ஸ்மிருதி சாத்திரங்களில் கூறப்பட்டுள்ள சமயச் சடங்குகளை நிறைவேற்றியபடி வாழ்ந்தனர்.
பதம் 5.4.9
யேஷாம் கலு மஹா-யோகீ பரதோ ஜ்யேஷ்ட: ஷ்ரேஷ்ட குண
ஆஸுத் யேனேதம் வர்ஷம் பாரதம் இதி வ்யபதிஷந்தி
யேஷாம்—அவரது; கலு—உண்மையில்; மஹா-யோகீ—பகவானின் உயர்ந்த பக்தர்; பரத:—பரதன்; ஜ்யேஷ்ட:—மூத்தவர்; ஷ்ரேஷ்ட-குண:—நற்குணம் நிரம்பியவர்; ஆஸீத்—இருந்தார்; யேன—அவரால்; இதம்—இந்த; வர்ஷம்—பூலோகம்; பாரதம்—பாரதம்; இதி—இவ்வாறு; வ்யபதிஷந்தி—மக்கள் அழைக்கின்றனர்.
ரிஷபதேவரின் நூறு புதல்வர்களில் மூத்தவர் பரதன் என்று அழைக்கப்பட்டார். நற்குணங்கள் அனைத்தும் நிரம்பிய அவர் சிறந்த பக்தர். அவரது சிறப்பின் காரணமாகவே இப்பூமி பாரதவர்ஷம் எனப்படுகிறது.
பதம் 5.4.10
தம் அனு குஷாவர்த இலாவர்தோ ப்ரஹ்மாவர்தோ மலய: கேதுர்
பத்ரஸேன இந்த்ரஸ்ப்ருக் விதர்ப: கீகடி இதி நவ நவதி ப்ரதானா:
தம்—அவரை; அனு—பின்பற்றி; குஷாவர்த—குஷாவர்தன்; இலாவர்த:—இலாவர்தன்; ப்ரஹ்மாவர்த:—பிரம்மாவர்தன்; மலய:—மலயன்; கேது:—கேது; பத்ர-ஸேன:—பத்ரசேனன்; இந்த்ர-ஸ்ப்ருக்—இந்திரஸ்ப்ருக்; விதர்ப:—விதர்பன்; கீகட:—கீகடன்; இதி—இவ்வாறு; நவ—ஒன்பது; நவதி—தொண்ணூறு; ப்ரதானா:—மூத்தவர்கள்.
பரதனுக்குப் பின்னால் தொண்ணூற்றொன்பது புதல்வர்கள் இருந்தனர். அவர்களுள் மூத்தவர்கள் குஷாவர்தன், இலாவர்தன், பிரம்மதேவன், மலயன், கேது, பத்ரசேனன், இந்த்ரஸ்ப்ருக், விதர்பன், கீகடன் என்போர்.
பதங்கள் 5.4.11 – 5.4.12
கவிர் ஹவிர் அந்தரிக்ஷ: ப்ரபுத்த: பிப்பலாயன:
ஆவிர் ஹோத்ரோ ‘த த்ருமிலஷ் சமஸ கரபாஜன:
இதி பாகவத-தர்ம-தர்ஷன நவ மஹா-பாகவதாஸ் தேஷாம் ஸுசாிதம்
பகவன்-மஹிமோபப்ரிம்ஹிதம் வஸதேவ –நாரத-ஸம்வாதம்
உபஷமாயனம் உபரிஷ்டாத் வர்ணயிஷ்யாம:
கவிர்—கவி; ஹவிர்—ஹவி; அந்தரிக்ஷ:—அந்தரிக்ஷன்; ப்ரபுத்த:—பிரபுத்தன்; பிபலாயன:—பிப்பலாயனன்; ஆவிர் ஹோத்ர:—ஆவிர்ஹோர்தன்; அத—மேலும்; த்ருமில:—துருமிலன்; சமஸ:—சமஸன்: கரபாஜன:—கரபாஜனன்; இதி—இவ்வாறு; பாகவத-தர்ம-தர்ஷன:—ஸ்ரீமத் பாகவத்தினை உபதேசிக்கும் அதிகாரம் பெற்றவர்கள்; நவ—ஒன்பது; மஹா-பகவதா:—மிகச் சிறந்த பக்தர்கள்; தேஷாம்—அவர்களின்; ஸுசரிதம்—நற்பண்புகள்; பகவத்-ஹிமா-உபப்ரும்ஹிதம்—பரமபுருஷ பகவானின் பெருமைகளின் துணையினால்; வஸுதேவ- நாரத- ஸமவாதம்—வசுதேவருக்கும் நாரதருக்கும் இடையே நடைபெற்ற உரையாடல்; உபஷமாயனம்—மனதிற்கு அவை முழுதிருப்தியளிக்கும்; உபரிஷ்டாம்—இதன்பிறகு; (பதினோராவது காண்டத்தில்); வர்ணயிஷ்யாம:—நான் தெளிவாக விளக்குவேன்.
இம்மைந்தர்களில் கவி, ஹவி, அந்தரிக்ஷன், பிரபுத்தன், பிப்பலாயனன், ஆவிர் ஹோர்தன, துருமிலன், சமஸன், கராபஜனன் என்று ஒன்பது பேர் இருந்தனர். இவர்கள் அனைவரும் மேன்மை மிக்கவர்கள், வளர்ச்சி பெற்ற பக்தர்கள் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்தினை உபதேசிக்கும் அதிகாரம் பெற்றவர்கள் ஆவர். முழுமுதற் கடவுளான வாசுதேவரின் மீது கொண்ட அசைக்க முடியாத பக்தியினால் இப்பக்தர்கள் புகழ்மிக்கவர்களாக விளங்கினர். இதனால் அவர்கள் மேன் மக்களாகத் திகழ்ந்தனர். மனதினை நிறைவாகத் திருப்திப்படுத்துவதற்காக நான் (சுகதேவ கோஸ்வாமி) நாரதருக்கும், வாசுதேவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலைப் பற்றி விவாதிக்கும் பொழுது இவ்வொன்பது பக்தர்களின் பண்பு நலன்களைப் பற்றித் தெளிவாக விளக்குவேன்.
பதம் 5.4.13
யவீயாம்ஸ ஏகாஷீதிர் ஜாயந்தேயா பிதுர் ஆதேஷ-கரா மஹா-
ஷாலீனா மஹாஷ்ரோத்ரியா யஜ்ஞ-ஷீல கர்ம-விஷுத்தா ப்ராஹ்மணா பபூவு
யவீயாம்ஸ:—இளையோர்; ஏகா-ஷுதி:—எண்பத்தியோரு; ஜாயந்தேயா:—ரிஷபதேவரின் மனைவி ஜெயந்தியின் புதல்வர்கள்; பிது:—அவர்கள் தந்தையின்; ஆதேஷகரா:—கட்டளையினைப் பின்பற்றி; மஹா-ஷாலீனா:—நன்னடத்தை மற்றும் நற்பழக்கவழக்கம் உடையவர்களாக விளங்கினர்; மஹா-ஷ்ரோத்ரியா:—தேவ ஞானங்களை முழுவதும் கற்று; யஜ்ஞ-ஷீலா:—சமயச் சடங்குகளைச் செய்வதில் தேர்ந்தவர்கள்; கர்ம-விஷுத்தா:—தங்கள் செயல்களில் மிகுந்த தூய்மையுடையவர்கள்; ப்ராஹ்மணா:—தகுதியுடைய அந்தணர்கள்; பபூவு:—ஆயினர்.
மேலே குறிப்பிடப்பட்டிருக்கும் பத்தொன்பது மைந்தர்களைத் தவிர ரிஷப தேவருக்கும் ஜெயந்திக்கும் மேலும் எண்பத்தியோரு புதல்வர்கள் பிறந்தனர். தங்கள் தந்தையின் கட்டளைக்கேற்ப அவர்கள் அனைவரும் நற்குணம், நற்பழக்கம், செயல்களில் தூய்மை வேதச் சடங்குகள் செய்து வேத ஞானத்திலும் மேன்மை மிக்கவர்களாக விளங்கினர். இவ்வாறு இவர்கள் அனைவரும் தகுதியுடைய சிறந்த அந்தணர்களாயினர்.
பதம் 5.4.14
பகவான் ருஷப-ஸம்ஜ்ஞ ஆத்ம-தந்த்ர: ஸ்வயம் நித்ய-
நிவ்ருத்தானர்தபரம்பர: கேவலானந்தானுபவ ஈஷ்வர ஏவ விபரீத-
வத் கர்மாணி ஆரபமான காலேனானுகதம் தர்மம் ஆசரணேனோ-
பஷிக்ஷயன்ன அதத்விதாம் ஸம உபஷாந்தோ மைத்ர: காருணிகோ
தர்மார்த-யஷ:-ப்ரஜானந்தாம்ருதாவரோததேன க்ருஹேஷு லோகம்
நியமயத்
பகவான்—முழுமுதற்கடவுள்; ருஷப:—ரிஷப தேவர்; ஸம்ஜ்ஞ:—பெயரில்; ஆத்ம-தந்த்ர:—முழுச்சுதந்திரத்துடன்; ஸ்வயம்—சுயமாக; நித்ய—நித்தியமாக; நிவ்ருத்த—விடுதலை; அனர்த:—தேவையில்லாதவற்றிலிருந்து (பிறப்பு, முதுமை, பிணி, மரணம் போன்றவை); பரம்பர:—ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியான தொடர்ச்சி; கேவல—மட்டும்; ஆனந்த—அனுபவ:—உன்னத ஆனந்தம் நிரம்பப் பெற்று; ஈஷ்வர:—ஈஷ்வரன் பரமபுருஷபகவான்; ஏவ—உண்மையில்; விபரீத-வத்—அதற்கு நேர்மாறாக; கர்மாணி—பௌதீகச் செயல்கள்; ஆரபமாண:—செய்து; காலேன—உரியகாலத்தில்; அனுகதம்—புறக்கணித்து; தர்மம்—வர்ணாஸ்ரம தர்மம்; ஆசரணேனோ—செயல்படுத்துவதன் மூலம்; உபஷிக்ஷயன்—கற்பித்தல்; அ-தத்-விதாம்—அறியாமையில் இருக்கும் மனிதர்கள்; ஸம—சம நோக்கில்; உபஷந்த—பௌதீகப் புலன்களின் தொல்லையின்றி; மைத்ர—எல்லோரிடமும் மிகுந்த நட்புடன்; காருணிகோ—எல்லோாிடமும் மிகவும் இரக்கமுள்ளவர்; தர்மா—மதப்கோட்பாடுகள்; அர்த—பொருளாதார வளர்ச்சி; யஷ:—புகழ்; ப்ரஜா—புதல்வர்கள், புதல்விகள்; ஆனந்த—பௌதீக இன்பம்; அம்ருத—நித்திய வாழ்க்கை; அவரோதேன—எய்துவதற்காக; க்ருஹேஷு—இல்வாழ்க்கையில்; லோகம்—பொது மக்கள்; நியமயத்—அவர் ஒழுங்கு செய்தார்.
முழுமுதற் கடவுளின் மறுபிறப்பெனவே பகவான் ரிஷபதேவர் முற்றிலும் சுதந்திரமுடையவராக இருந்தார். ஏனெனில் அவரது உருவம், ஆன்மீக, நித்திய, உன்னத ஆனந்தம் நிரம்பியதாகும். அவருக்கு நால்வகைத் துன்பங்களோடு (பிறப்பு, இறப்பு, பிணி, மூப்பு) நித்தியமாக எந்தவிதமான தொடர்பும் கிடையாது. அவர் உலகப் பற்றுடையவருமல்லர். அவர் எப்போதும் எல்லோரிடத்தும் சமமாக நடந்து கொண்டார். எல்லோரையும் ஒரே நிலையிலேயே நோக்கினார். பிறர் துன்பத்தைக் கண்டு வருந்தினார். அவர் அனைத்து உயிர்களின் நலனை விரும்பினார். அவர் மிக்க நிறைவுடையவராகவும், பரம புருஷபகவானாகவும், எல்லாவற்றையும் கட்டுப்படுத்துபவராக இருந்தபோதிலும் அவர் ஒரு சாதாரண ஆத்மாவினைப் போலவே நடந்து கொண்டார். அதனால் அவர் வர்ணாசிரம தர்மத்தினைக் கடுமையாகப் பின்பற்றி அதற்கேற்ப நடந்து கொண்டார். ஒரு குறிப்பிட்ட காலத்தில் வர்ணாஷ்ரம தர்மக் கொள்கைகள் புறக்கணிக்கப்பட்டன. ஆகையினால் அவர் தனது தனிப்பட்டப் பண்பினாலும் செயலினாலும் வர்ணாசிரம் தர்மத்தின் கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை அறியாத பொது மக்களுக்குக் கற்பித்தார். இவ்வழியே அவர் தர்மம், பொருளாதாரம், புகழ், புத்திர, புத்திரிகள் பெறுதல், உலக இன்பம் இறுதியில் நித்திய வாழ்க்கை போன்றவற்றில் வளர்ச்சி பெறுவதற்கான திறனுடையவர்களாக்கினார். அவரது உபதேசங்களின் மூலம் அவர் மக்களை இல்லறத்தில் இருக்கச் செய்ததோடு வர்ணாஷ்ரம தர்மங்களைப் பின்பற்றுவதின் மூலம் அவர்களை நிறைவுடையவர்களாகவும் மாற்றினார்.
பதம் 5.4.15
யத் யச் சீர்ஷண்யா சரிதம் தத் தத் அனுவர்ததே லோக:
யத் யச்:—எதுவாயினும்; ஷீர்ஷண்ய—தலைவர்களினால்; ஆசரிதம்—செய்யப்பட்ட; தத் தத்—அது; அனுவர்ததே—பின்பற்றி; லோக:—பொதுமக்கள்.
உயர்ந்தவன் எதனைச் செய்தாலும் அதனைச் சாதாரண மனிதர்கள் பின்பற்றுவர்.
பதம் 5.4.16
யத்யபி ஸ்வ-விதிதம் ஸகல -தர்மம் ப்ராஹ்மம் குஹ்யம்
ப்ராஹ்மணைர் தர்ஷித-மார்கேண ஸாமாதிபிர் உபாயைர் ஜனதாம்
அனுஷஷாஸ
யத்யபி—இருந்தபோதிலும்; ஸ்வ-விதிதம்—அவரால் அறியப்பட்டது; ஸகல-தர்மம்—எல்லா வகையான தர்மங்களும்; ப்ரஹ்மம்—வேத நெறிகள்; குஹ்யம்—மிகவும் இரகசியமான; ப்ராஹ்மனை—அந்தணர்களினால்; தர்ஷித-மார்கேண—காட்டப்பட்டப் பாதையினால்; ஸாம-ஆதிபி:—ஸாம, தம, திதிக்ஷா (மனதினைக் கட்டுப்படுத்துதல், புலன்களைக் கட்டுப்படுத்துதல், பொறுமையினைப் பயிலுதல்) போன்றவை; உபாயை:—வழிகளினால்; ஜனதாம்—பொது மக்கள்; அனுஷஷாஸ—அவர் ஆட்சி செய்தார்.
எல்லா அறங்களைப் பற்றிய செய்திகளையும் உள்ளடக்கிய இரகசிய வேத ஞானம் அனைத்தையும் அறிந்தவராக பகவான் ரிஷப தேவர் இருந்தபோதிலும் அவர் தன்னை எப்போதும் ஒரு சத்திரியராகவே பாவித்து மன அடக்கம், புலனடக்கம், பொறுமை ஆகிய அந்தணர்களின் உபதேசங்களைப் பின்பற்றினார். இவ்வாறு அவர் மக்களை வர்ணாசிரம தர்ம முறையின்படி ஆட்சி செய்தார். வர்ணாஷ்ரம தர்மம், அந்தணர்கள் சத்திரியர்களுக்கு உபதேசிக்க, அவ்வுபதேசங்களின் கீழ் சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்களின் மூலம் நாட்டை ஆள வேண்டும் என்று கட்டளையிடுகிறது.
பதம் 5.4.17
த்ரவ்ய-தேஷ-கால-வய-ஷ்ரத்தர்த்விக விவிதோத்தேஷோ பசிதை
ஸர்வைர் அபி க்ர துபிர் யதோபதேஷம் ஷத-க்ருத்வ-இயாஜ
த்ரவ்ய—யக்ஞத்திற்குத் தேவையானப் பொருட்கள்; தேஷ—குறிப்பிட்ட இடம், புனித இடம் அல்லது கோவில்; கால—வசந்த காலம் போன்ற குறிப்பிட்ட காலம்; வய—வயது குறிப்பாக இளமை; ஷ்ரத்தா—இரஜோ, தமோ குணம் தவிர்த்து சத்துவ குணத்தில் நம்பிக்கை வைத்தல்; ருத்விக்—புரோகிதர்கள்; விவித-உத்தேஷ—பல்வேறு நோக்கங்களுக்காகப் பல்வேறு தேவர்களை வழிபடல்; உபசிதை—வேள்விச் சடங்குகள்; ஸர்வைர்:—எல்லாவிதமான; அபி—நிச்சயமாக; க்ர-துபிர்—யாகம் செய்யும் சடங்குகளால்; யதா-உபதேஷம்—உபதேசத்திற்கேற்ப; ஷத-க்ருத்வ—நூறு முறை; இயாஜ—அவர் வழிபட்டார்.
பகவான் ரிஷப தேவர் எல்லாவகையான வேள்விகளையும் வேத இலக்கியங்களின் நெறிமுறைகளுக்கேற்ப நூறு தடவைகள் செய்தார். இவ்வாறு அவர் பகவான் விஷ்ணுவை எல்லா வழியிலும் வழிபட்டார். எல்லாச் சடங்குகளும் முதல்தரமானப் பொருட்களினால் வளப்படுத்தப்பட்டன. இவையனைத்தும் நம்பிக்கையும், இளமையும் கொண்ட புரோகிதர்களால் புனித இடங்களில் பொருத்தமான நல்ல நேரத்தில் நடத்தப்பட்டன. இவ்வாறு பகவான் விஷ்ணு வழிபடப்பட்டு, பிரசாதம் அனைத்துத் தேவர்களுக்கும் அர்ப்பணிக்கப்பட்டன. இவ்வாறு சடங்குகளும், விழாக்களும் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
பதம் 5.4.18
பகவதர்ஷபேண பரிரஷயமான ஏதஸ்மின் வர்ஷே ந கஷ்சன புருஷோ
வாஞ்சதி அவித்யமானம் இவாத்மனோ ‘வித்யமானம் இவாத்மனோ
`ன்யஸ்மாத் கதாஞ்சன கிம்பி கர்ஹிசித் அவேக்ஷதே பர்தரி
அனுஸவனம் விஜ்ரும்-பித -ஸ்நேஹாதிஷயம் அந்தரேண
பகவதா—முழுமுதற் கடவுளினால்; ருஷபணே—மன்னர் ரிஷபர்; பரிரக்ஷயமாணே—பாதுகாக்கப்பட்டு; ஏதஸ்மின்—இதன் மீது; வர்ஷே—உலகம்; ந—இல்லை; கஷ்சன—எவரேனும்; புருஷ—ஒரு சாதாரண மனிதன்; வாஞ்சதி—விரும்புகிறான்; அவித்யமானம்—உண்மையில் வெளிப்படுவதில்லை; இவ—போன்று; ஆத்மன—அவர்க்குரிய; அனயஸ்மாத்—யாரேனும் ஒருவரிடமிருந்து; கதஞ்சன—ஏதேனும் வழியினால்; கிம்பி—எதுவும்; கர்ஹிசித—எந்த நேரத்திலும்; அவேக்ஷதே—காண்பதில் கவனம் கொள்ளுதல்; பர்தரி—தலைவருக்கு; அனுஸவனம்—எப்போதும்; விஜ்ரும்பித—விரிதல்; ஸ்நேக-அதிஷயம்—மிகுந்த பாசத்துடன்; அந்தேரண—ஒருவனது தன்னுணர்வினுள்.
கொள்ளிவாய்ப் பிசாசு அல்லது ஆகாயத் தாமரை போன்றவற்றைச் சொந்தம் கொள்ள எவரும் விரும்புவதில்லை. ஏனெனில் இவையெல்லாம் உண்மையில்லை. பரத கண்டத்தை பகவான் ரிஷப தேவர் ஆண்டபொழுது ஒரு சாதாரண மனிதன் எதையும், எக்காலத்திலும், எந்த வழியிலும் கேட்க விரும்பியதில்லை. கொள்ளிவாய்ப் பிசாசினை எவரும் எப்போதும் கேட்பதில்லை. அதாவது அனைவரும் அனைத்தையும் பெற்றிருந்ததினால் முழுத் திருப்தியடைந்திருந்தனர். ஆதலினால் அவர்கள் எதையும் கேட்டுப் பெறும் நிலையில் இல்லை எனலாம். மக்கள் அனைவரும் மன்னர் மீது தங்கள் உயிரையே வைத்திருந்தனர். மேலும் இப்பாசம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே போனதினால் அவர்கள் எதையும் மன்னரிடம் கேட்க விரும்பியதில்லை.
பதம் 5.4.19
ஸ-கதாசித் அடமானோ பகவான் ருஷபோ ப்ரஹ்மாவர்த-
கதோ ப்ரஹ்மர்ஷிப்ரவர-ஸபாயாம் ப்ரஜானாம் நிஷாமயந்-தீனாம்
ஆத்மஜான் அவஹிதாந்த்மன: ப்ரஷ்ரய-ப்ரணய-பர ஸுயந்த்ரிதான் அபி
உபஷிக்ஷயன்ன் இதி ஹோவாச
ஸ—அவர்; கதாசித்—ஒரு முறை; அடமான—பயணம் செய்த பொழுது; பகவான்—முழுமுதற் கடவுள்; ருஷப—பகவான் ரிஷபர்; ப்ரஹ்மாவர்த-கத:—பிரம்மாவர்தம் என்னும் இடத்தினை அடைந்த பொழுது; (இந்த இடம் சிலர் பர்மா என்றும் சிலர் உத்திரப்பிரதேசத்திலுள்ள கான்பூர் அருகிலுள்ளது என்றும் கூறுகின்றனர்); ப்ரஹ்ம-ருஷி-ப்ரவர-ஸபாயாம்—முதல்தர அந்தணர்களின் கூட்டம் ஒன்றில்; ப்ரஜானாம்—மக்கள்; நிஷாமயந்தீனாம்—கேட்டுக் கொண்டிருக்கும் பொழுது; ஆத்மஜான்—அவரது புதல்வர்கள்; அவஹித-ஆத்மன:—கவனமாக; ப்ரஷ்ரய—நன்னடத்தையின்; ப்ரணய—பக்தியின்; பர—ஒர் நிறைவினால்; ஸுயந்த்ரிதான்—நன்கு கட்டுப்படுத்தப்பட்டு; அபி—இருந்தபோதிலும்; உபஷிக்ஷயன்—உபதேசித்து; இதி—இவ்வாறு; ஹ—உறுதியான; உவாச—கூறினார்.
ஒரு முறை பகவான் ரிஷப தேவர் பிரம்மாவர்தம் என்னும் இடத்திற்குச் சென்றார். அங்கே கற்றறிந்த அந்தணர்களின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலும் மன்னரின் அனைத்துப் புதல்வர்களும் அந்தணர்களின் உபதேசங்களை மிகவும் ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் நிறைந்த அந்தக் கூட்டத்தில் ரிஷப தேவர் தமது மைந்தர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே நன்னடத்தையும், பக்தியும், நற்குணமும் உடையவர்களாக இருந்தபோதிலும், நல்லுரைகளை உபதேசித்தார். எதிர்காலத்தில் அவர்கள் இவ்வுலகினை நல்ல முறையில் ஆட்சி செய்ய வேண்டும் எனக்கருதியே அவர் பின்வருமாறு கூறியுள்ளார்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “முழுமுதற்கடவுளான ரிஷப தேவரின் குண நலன்கள்” எனும் தலைப்பை கொண்ட நான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.