அத்தியாயம் – 3
நாபி மனைவி மேருதேவியிடம் ரிஷப தேவர் பிறத்தல்
பதம் 5.3.1
ஸ்ரீ ஷூக உவாச
நாபிர் அபத்ய-காமோ’ப்ரஜயா மேருதேவ்யா பகவந்தம் யஜ்ஞ-
புருஷம் அவஹிதாத் மாயஜத
ஸ்ரீ-ஷூக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; நாபி:—மகாராஜா ஆக்னீதரனின் மைந்தன்; அபத்ய-காம:—புதல்வர்கள் வேண்டி; அப்ரஜயா—புதல்வர்களைப் பெறவில்லை; மேருதேவ்யா—மேருதேவியுடன்; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; யஜ்ஞ-புருஷம்—செய்யப்படும் வேள்விகள் அனைத்தின் நாயகர் மற்றும் அனுபவிப்பவர், பகவான் விஷ்ணு; அவஹித-அத்மா—மிகுந்த கவனத்துடன்; அயஜத—பிரார்த்தனைகள் செய்தார்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் ஆக்னீதர மன்னன் தனக்குப் புதல்வர்கள் பிறக்கவேண்டுமென்று விரும்பினார். அதனால் அவர் அவைத்து வேள்விகளின் நாயகராகவும், அனுபவிப்பவராகவும் விளங்கும் பகவான் விஷ்ணுவை மணப்பூர்வமாகப் பிரார்த்தித்து வழிபடலானார். குழந்தைகள் ஏதும் பெற்றெடுக்காத நாபி மன்னரின் மனைவியான மேருதேவியும் அவருடன் சேர்ந்து பகவான் விஷ்ணுவை வழிபட்டு வந்தார்.
பதம் 5.3.2
தஸ்ய ஹ வாவ ஹ்ரத்தயா விஷூத்த-பாவனே யஜத: ப்ரவர்க்யேஷூ
ப்ரசரத்ஸு த்ரவ்ய-தேஷ-கால-மந்த்ரர்த்விக்-தக்ஷிணா-விதான
யோகபபத்த்யா துரதிகமோ ‘பி பகவான் பாகவத-வாத்ஸல்தயா
ஸூப்ரதீக ஆத்மானம் அபராஜிதம் நிஜ-ஜனாபிப்ரேதார்த-விஹி தஸ்யா
க்ருஹீதஹ்ருதயோ ஹ்ருதயங்கமம் மனோ-நயனானந்தனா வயவா
பிராமம் ஆவிஷ்சகார
தன்ய—அவர் அப்பொழுது (நாபி); ஹவாவ—உறதியாக; ஷ்ரத்தயா—முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும்; விஷூத்த-பாவனே—தூய மாசற்ற மனத்துடன்; யஜத:—வழிபட்டுக் கொண்டிருந்தார்; ப்ரவர்க்யேஷூ—பிரவர்க்ய எனப்படும் பலன்தரும் செயல்கள்; ப்ரசரத்ஸூ—செய்யப்பட்டு; த்ரவ்ய—பொருட்கள்; தேஷ—இடம்; கால—நேரம்; மந்த்ர—மந்திரங்கள்; ருத்விக்—சடங்கினைச் செய்யும் புரோகிதர்கள்; தக்ஷிணா—தட்சணை; விதான—ஒழுங்குமுறை விதிகள்; யோக—முறைகளின்; உபபத்தியா—செய்வதினால்; துரதிகம:—எய்ய முடியாத; அபி—இருந்தபோதிலும்; பகவான்—முழுமுதற் கடவுள்; பாகவத-வாத்ஸல்யதயா—தன் பக்தர்களின் மீது மிகவும் அன்புடையவராதலினால்; ஸூப்ரதீக:—மிகுந்த எழில்மிக்க உருவங்கொண்டு; ஆத்மானம்—அவர் தனது; அபராஜிதம்—யாரலும் வெற்றி கொள்ள முடியாத; நிஜ-ஜன—அவர் பக்தனின்; அபிப்ரேத-அர்த—விருப்பம்; விதித்ஸயா—நிறைவேற்றுவதற்கு; க்ருஹீதஹ்ருதய:—அவர் மனம் குளிர்ந்து; ஹ்ருதயங்கமம்—கவர்ந்து; மன:-நயன ஆனந்தன:—மனம், மற்றும் விழிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும்; அவயவ—அவயவங்கள்; அபிராமம்—அழகிய; ஆவிஷ் சகார—தோன்றினார்.
வேள்வி செய்யும்பொழுது முழுமுதற் கடவுளின் கருணையைப் பெறுவதற்கு ஏழு வழிகள் உள்ளன: (1) உயர்ந்த உண்ணும் பொருட்களை நிவேதனம் செய்தல்; (2) இடத்திற்குத் தகுந்தாற்போல் செயல்கள் ஓதுதல்; (3) காலத்திற்குத் தகுந்தாற்போல் செயல்படுதல்; (4) மந்திரங்கள் ஓதுதல்; (5) புரோகிதர்களின் மூலம் செய்ய வைத்தல்; (6) புரோகிதர்களுக்குத் தட்சணை வழங்குதல்; (7) ஒழுங்கு முறை விதிகளைப் பின்பற்றுதல் என்பவையே அவை ஏழும் ஆகும். ஆயினும் இம்முறைகளினால் ஒருவன் எப்போதும் முழுமுதற் கடவுளை எய்த முடியாது. இருந்தபோதிலும் பகவான் தன் பக்தன் மீது மிகவும் பாசமுடையவராவார்; ஆகையினால் நாபி மன்னன் முழு நம்பிக்கையுடனும், பக்தியுடனும், மாசுமருவற்ற தூய இதயத்துடனும், பிரவர்க்ய முறைப்படி வெளிப்படையாக வேள்விகள் செய்தபொழுது, அன்புக்கடலான முழுமுதற் கடவுள் தன் பக்தன் மீது கொண்ட பாசத்தினால், யாராலும் வெல்ல முடியாத, மயங்கச் செய்யும் தனது நாற்கரக் கோலத்தில் நாபி மன்னரின் முன்னர் தோன்றினார். தன் பக்தனின் விருப்பத்தினை நிறைவேற்றும் பொருட்டு முழுமுதற் கடவுள் தனது அழகிய வடிவத்தில் தன் பக்தனின் முன்பு காட்சியளித்தார். அவர் உருவம் பக்தர்களின் மனங்களையும் விழிகளையும் கொள்ளை கொண்டது.
பதம் 5.3.3
அத ஹ தம் ஆவிஷ்க்ருத்-புஜ-யுகல-த்வயம் ஹிரண்மயம் புருஷ
விஷேஷம் கபிஷ-கௌஷேயாம்பர-தரம் உரஸிவிலஸச்-ச்ரீவத்ஸு-
லதாமம் தரவர-வனருஹ-வன-மாலாச்சூரி-அம்ருத-மணி-கதாதிபிர்
உபலக்ஷிதம் ஸ்புட-கிரண-ப்ரவர-முகுட-குண்டல-கடக-கடிஸுத்ர-
ஹார-கேயூ-நூபுராதி- அங்க-பூஷன-விபூஷிதம் ருத்விக்-ஸதஸ்யக்ருஹ-
பதயோ‘தனா இவோத்தம-தனம் உபலப்ய ஸபஹு-மானம் அர்ஹ
ணேனாவதை-ஷீர்ஷாண உபதஸ்து:
அத—அதன்பிறகு; ஹ—உறுதியாக; தம்—அவரது; ஆவிஷ்க்ருத-புஜ-யுகலத்வயம்—நான்கு கரங்களுடன் காட்சியளித்தவர்; ஹிரண்மயம்—ஒளிமிக்க; புருஷ-விஷேஷம்—உயிர்கள் அனைத்திலும் மிகவுயர்ந்த புருஷோத்தமன்; கபிஷ-கௌஷேய-அம்பர-தரம்—மஞ்சள் வண்ண பட்டாடை உடுத்தி; உரஸி—மார்பில்; விலஸத்—அழகிய; ஸ்ரீவத்ஸ—ஸ்ரீவத்ஸம் எனப்படும்; லலாமம்—அடையாளத்தினை உடையவர்; தர-வர—ஒரு சங்கினால்; வனருஹ—தாமரை மலர்; வன-மால—வனத்திலுள்ள மலர்களினாலான மாலை; அச்சூரி—சக்கரம்; அம்ருத மணி—கௌஸ்துப மணி; கதா-ஆதிபி:—கதாயுதம் போன்ற பிற அடையாளங்களினால்; உபலக்ஷிதம்—அறிகுறிகளினாலான; ஸ்புட-கிரண—கதிர்ஒளி; ப்ரவர—நேர்த்தியான; முகுட—மணிமகுடம்; குண்டல—செவிக்குண்டலங்கள்; கடக—கடகங்கள்: கடிஸுத்ர—ஒட்டியாணம்; ஹார—கழுத்தணி; கேயூர—கைவளை; நூபுர—நூபுரங்கள் (காற்சலங்கை); ஆதி— போன்றவைகளுடன்; அங்க—உடலின்; பூஷண—ஆபரணங்களுடன்; விபூஷிதம்—அலங்கரிக்கபட்டு; ருத்விக்—புரோகிதர்கள்; ஸதஸ்ய—துணைவர்கள்; க்ருஹ-பதய:—மற்றும் மன்னர் நாபி; அதனா:—ஏழைகள்; இவ—போன்று; உத்தம-தனம்—சிறந்த பொக்கிஷம்; உபலப்ய—எய்தப் பெற்று; ஸ-பஹு-மனம்—மிகுந்த மரியாதையுடன்; அர்ஹணேன—வழிபடுவதற்குரியப் பொருட்களுடன்; அவதை—குனிந்து; ஷிரஷாண:—தங்கள் தலைகளை; உபதஸ்து:—வழிபட்டனர்.
பகவான் விஷ்ணு நாபி மன்னரின் முன் நான்கு கரங்களுடன் தோன்றினார். அவர் ஒளிமிக்கவராகவும், புருஷோத்தமராகவும் தோன்றினார். அவர் தனது இடுப்பில் மஞ்சள் வண்ணப் பட்டாடை உடுத்தியிருந்தார். அவருடைய மார்பில் எப்போதும் அழகு செய்து கொண்டிருக்கும் ஸ்ரீ வத்ஸ சின்னம் இருந்தது. அவர் சங்கு, தாமரை மலர், சக்கரம், கதாயுதம் போன்றவற்றை வைத்திருந்தார். அவர் வனத்திலுள்ள மலர்களினாலான மாலையும் கௌத்துப மணியும் அணிந்திருந்தார். அவர் வைரங்கள் பதிக்கப் பெற்ற மணிமகுடம், செவிக்குண்டலம், கைவளைகள், ஒட்டியாணம், முத்துமாலை, கடகங்கள், காற்சலங்கைகள் போன்ற பொன்னாபரணங்களினால் அலங்கரிக்கப்பட்டிருந்தார். தங்கள் முன் பகவான் அளித்த காட்சி நாபி மன்னருக்கும் புரோகிதர்களுக்கும், அவர்கள் அடியவர்களுக்கும், தாம் ஏழைகளாக இருந்து திடீரென்று பெருஞ்செல்வம் பெற்றதைப் போன்றிருந்தது. அவர்கள் பகவானை வரவேற்று, வழிபாட்டுக்குரிய பொருட்களை அர்ப்பணித்து தலை குனிந்து மரியாதையுடன் அவரை வழிபட்டனர்.
பதங்கள் 5.3.4 – 5.3.5
ருத்விஜ ஊசு
அர்ஹஸி முஹுர் அர்ஹத்தமார் ஹணம் அஸ்மாகம் அனுபதானாம்
நமோ இதி ஏதாவத் ஸத்-உபஷிக்ஷிதம் கோ ‘ர்ஹதி புமான் ப்ரக்ருதி-
குணவ்யதிகர-மதிர் அனீஷ் ஈஷ்வரஸ்ய பரஸ்ய ப்ரக்ருதி-புருஷயோர்
அர்வாக்தனாரி நாம-ரூபாக்ருதிபீ ரூப நிரூபணம் ஸகல-ஜனனிகாய-
வ்ருஜின-நிரஸன -ஷிவதம-ப்ரவர-குண-கணைக-தேஷகதனாத் ருதே
ருத்விஜ: ஊசு:—புரோகிதர்கள் கூறினார்; அர்ஹஸி—அருள்
கூர்ந்து (ஏற்றுக் கொள்வீராக); முஹு:—மீண்டும் மீண்டும்;
அர்ஹத்தம—ஒ, மேன்மை மிக்கவரே; வணக்கத்திற்குரியவர்; அர்ஹணம்—பிரார்த்தனையின் அர்ப்பணிப்பு; அஸ்மாகம்—எமது; அனுபதானாம்—உமது தொண்டர்கள்; நம:—மரியாதைக்குரிய வந்தனங்கள்; இதி—இவ்வாறு; ஏதாவத்—இதுவரை; ஸத்—மேன்மை மிக்கவர்களின்; உபஷிக்ஷிதம்—உபதேசிக்கப்பட்டு; க:—என்ன; அர்ஹித—திறனுடைய (செய்வதற்கு); புமான்—மனிதன்; ப்ரக்ருதி—இயற்கையின்; குண—குணங்களின்; வ்யதிகர—மாற்றங்களில்; மதி:—அவர்கள் மனம் (ஆழ்ந்திருக்கிறது); அனீஷ்—திறமையுற்ற; ஈஷ்வரஸ்ய—பரம புருஷ பகவானின்; பரஸ்ய—அப்பால்; ப்ரக்ருதி-புருஷயோ:—ஜடஇயற்கை முக்குணங்களின் எல்லை; அர்வாக்தனாபி:—அதுவரை அதனால் எட்ட முடியாது அல்லது அவை இப்பௌதீக உலகைச் சார்ந்தவை; நாம-ரூப-ஆக்ருதிபி:—நாமம், ரூபம் குணங்களினால்; ரூப—உமது இயற்கை அல்லது நிலையினால்; நிரூபணம்—உறுதிப்படுத்தல்; ஸகல—எல்லாம்; ஜன-நிகாய—மனிதஇனத்தில்; வ்ருஜின—பாவச் செயல்கள்; நிரஸன—அது நீக்குகிறது; ஜிவ-தம—மிகவும் மங்களகரமான; ப்ரவா—நேர்த்தியான; குண-கண—உன்னதக் குணங்களின்; ஏக-தேஷ—ஒரு பகுதி; கதனாத்—சொல்லினால்; ருதே—தவிர.
பகவானுக்குத் தங்கள் பிரார்த்தனைகளை புரோகிதர்கள் கூறினார்; ஒ மிகுந்த வணக்கத்திற்குரியவரே, யாம் உமது தொண்டர்கள். நீர் நிறைவுற்றவர். ஆதலினால் உமது அளவற்றக் கருணையினால் உமது நித்தியத் தொண்டர்களான எம் சிறிய சேவையினை ஏற்றுக் கொள்வீராக. உமது உன்னத வடிவத்தினை உண்மையில் நாங்கள் அறிந்தோமில்லை. ஆயினும் வேத உபதேசங்கள், ஆச்சாரியர்களின் அறிவுரைகளுக்கேற்ப நாங்கள் மீண்டும் மீண்டும் உமக்கு எமது ஆழ்ந்த வணக்கங்களைச் செலுத்துகிறோம். உலகில் உயிர்கள் மிகுந்த பற்றுடையவர்களாக இல்லை. ஆனால் நீரோ மனித சிந்தனைகளை எல்லாம் கடந்தவராக இருக்கின்றீர். உமது நாம், ரூப, குணங்கள் எல்லாம் உன்னதமானவை என்பதோடு அனுபவ அறிவிற்கு அப்பாற்பட்டவையாகும். உண்மையில் உம்மை உணர யாரேவல்லார்? உலகிலுள்ள எங்களால் பௌதீக நாமங்களையும், வடிவங்களையும் மட்டுமே உணரமுடியும். உம் போன்ற உன்னதமானவருக்கு எங்களது ஆழ்ந்த வந்தனங்களையும், வழிபாடுகளையும் அர்ப்பணிப்பதைத் தவிர வேறெந்த ஆற்றலும் எங்களிடம் கிடையாது. உமது மங்களகரமான உயர்ந்த குணங்களைப் பேசுவதனால் மனிதகுலத்தின் பாவமெல்லாம் மறைகிறது. இதுவே எங்களுக்கு மிகுந்த புண்ணியச் செயலாகும். எங்களால் உமது இயற்கைக்கு அப்பாற்ப்பட்ட நிலையின் ஒரு பகுதியினை மட்டுமே அறிய முடிகிறது.
பதம் 5.3.6
பரிஜனானுராக-விரசித-ஷபல-ஸம்ஷப்த-ஸலில-ஸித-கிஸலய-
துளஸிகா துர்வாங்குரைர் அபி ஸம்ப்ருதயா ஸபர்யயா கில பரம
பரிதுஷ்யஸி
பரிஜன—உமது தொண்டர்களினால்; அனுராக—தம்மை மறந்த நிலையில்; விரசித—நிறைவேற்றப்படும்; ஷபல—நடுங்கும் குரலுடன்; ஸம்ஷ்ப்த—பிரார்த்தனைகளுடன்; ஸலில—நீர்; ஸித-கிஸாய—புதிய இலைகளையுடைய மிலார்கள்; துளஸிகா—துளசி இலைகள்; தூர்வா-அங்குரை:—புதிதாக வளர்ந்த புற்கள்; அபி—மேலும்; ஸம்ப்ருதயா—செய்யப்பட்டு; ஸபர்யயா—வழிபாட்டினால்; கில—உண்மையில்; பரம—ஒ, பரமபுருஷ பகவானே; பரிதுஸ்யஸி—நீர் திருப்தியடைகின்றீர்.
ஒ, பரமபுருஷ பகவானே, நீர் எல்லாம் நிறைந்தவர் ஆவீர், உமது பக்தர்கள் தம்மை மறந்த நிலையில், நடுங்கும் குரலுடன் துளசி இலை, நீர், புதிய இலைகளுடன் கூடிய மிலார்கள், புதிதாக வளர்ந்த புற்கள் போன்றவற்றைக் கொண்டு உம்மை வழிபடுதல் நீர் உறுதியாக மகிழ்வீர்!.
பதம் 5.3.7
அதானயாபி ந பவத இஜ்யனோடு -பார- பரயா -ஸமுசிதம் அர்தம்
இஹோபலபாமஹே
அத—அதனால்; அனமா—இந்த; அபி—கூட; ந—இல்லை; பவத:—மேன்மைமிக்க உமக்கு; இஜ்யவா—வேள்விகளைச் செய்வதினால்; உருபார-பரயா—ஏராளமானப் பொருட்களை நிரப்புவதினால்; ஸமுசிதம்—தேவைப்படுவது; அர்தம்—பயன்; இஹ—இங்கே; உபலபாமஹே—நாங்கள் காண்பது.
பல்வேறு பொருட்களைக் கொண்டும், வேள்விகளை உமக்குச் செய்து உமது வழிபாட்டில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். ஆயினும் மேலாண்மைமிக்க உம்மைத் திருப்திப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் தேவையில்லை என்றும் கருதுகிறோம்.
பதம் 5.3.8
ஆத்மன ஏவாறுஸவனம் அஞ்ஜஸாவ்யதிரேகேன போபூய மானா
ஷேஷ-புருஷார்த் – ஸ்வரூஸ்ய கிந்து நாதாஷிஹ ஆஷா னானாம் ஏதத்
அபிஸம்ராதன -மாத்ரம் பவிதும் அர்ஹதி
ஆத்மன:—சுயபூர்த்தி; ஏவ—உறுதியாக; அனுஸவனம்—ஒவ்வொரு கணமும்; அஞ்ஜஸா—நேரடியாக; அவ்யதிரேகேண—நிற்காமல்; போயூயமான—அதிகரிக்கின்றது: அஷேஷ—அளவின்றி; புருஷ-அர்த—வாழ்க்கை லட்சியம்; ஸ்வ-ரூபஸ்ய—உமது உண்மை வடிவம்; கிந்து—ஆனால்; நாத—ஒ, பகவானே; ஆஷிஷ:—பௌதீக இன்பத்திற்கான வரங்கள்; ஆஷாஸானானாம்—எப்போதும் விரும்புகின்ற எங்களின்; ஏதத்—இந்த; அபிஸம்ராதன—உமது கருணையைப் பெறுவதற்காக; மாத்ரம்—மட்டுமே; பவிதும்-அர்ஹதி—முடியக் கூடியது.
வாழ்க்கையின் லட்சியங்களும், வளங்களும் உம்மிடம் நேரடியாகவும், நிறைவாகவும் தங்கு தடையின்றியும், அளவில்லாமலும் அதிகரிக்கின்றன. உண்மையில் நீரே, உம்மில் அளவற்ற மகிழ்ச்சி மற்றும், ஆனந்தமாக இருக்கின்றீர். நாங்களோ எப்போதும் இன்பத்தின் பின்னே அலைந்து கொண்டிருக்கின்றோம். இது போன்ற வேள்விகள் எல்லாம் உமக்குத் தேவையற்றதாகும். ஆயினும் மேலாண்மைமிக்க உம்மிடமிருந்து வரங்கள் பெறுவதற்கு இவையே எமக்கு வழிகளாக இருக்கின்றன. இவ்வேள்விகள் அனைத்தும் எங்களின் பயன்களுக்காகவே செய்யப்படுகின்றன. உண்மையில் இவைகள் உமக்குத் தேவைப்படுவதில்லை.
பதம் 5.3.9
தத் யதா பாலிஷானாம் ஸ்வயம் ஆத்மன: ஷ்ரேய: பரம் அவிதுஷாம்
பரமபரமபுருஷ ப்ரகர்ஷ-கருணா ஸ்வ-மஹிமானம் சாபவர்காக்யம்
உபகல்பயிஷ்யன் ஸவயம் நாபசித ஏவேதரவத் இஹோபலக்ஷித:
தத்—அது; யதா—போன்ற; பாலிஷானாம்—மூடர்களின்; ஸ்வயம்—உம்மால்; ஆத்மன:—தனது; ஷ்ரேய:—நலன்; பரம்—இறுதி; அவிதுஷாம்—அறியாத மனிதர்களின்; பரம-பரம-புருஷ—ஒ, தேவதேவனே; ப்ரகர்ஷ-கருணயா—அளவற்றக் கருணையினால்; ஸ்வ மஹிமானம்—உமது சுயமகிமை; ச—மேலும்; அபவர்க-ஆக்யம்—அபவர்க என்றழைக்கப்படுகிறது (விடுதலை); உபகல்கயிஷ்யன்—கொடுப்பதற்கு விரும்புகின்ற; ஸ்வயம்—சுயமான; ந அபசித:—முறையாக வழிபடவில்லை; ஏவ—இருந்த போதிலும்; இத-வத்—ஒரு சாதாரண மனிதனைப் போல்; இஹ—இங்கே; உபலக்ஷித:—(நீர்) தோன்றவும் (எம்மால்) காணப்படவும் செய்கின்றீர்.
ஒ, தேவதேவனே, விடுதலை பெறுவதற்கான அறம், பொருள், இன்பம் வீடுபேறு என்பவற்றை முற்றிலும் அறியாதவர்களாக நாங்கள் இருக்கின்றோம். வாழ்க்கையின் லட்சியம் என்னவென்பதை உண்மையில் நாங்கள் அறியவில்லை. வணங்கப்பட வேண்டும் என விரும்பும் மனிதனைப் போல் நீர் எங்கள் முன் வந்துள்ளீர். நாங்கள் காண வேண்டும் என்பதற்காகவே இங்கே காட்சிதருகின்றீர். எமது நோக்கம் நிறைவேறவும் எமது நன்மை கருதியும் உமது சுய மகிமையான “அபவர்க” எனப்படும் விடுதலையின் பயனை எங்களுக்கு அருளவும், உமது அளவற்ற கருணையினால் இங்கே நீர் எழுந்தருளியிருக்கின்றீர். எமது அறியாமையினால் நீர் முறையாக வழிபடவில்லையென்ற போதிலும் கூட நீர் இங்கே எழுந்தருளியிருக்கின்றீர்.
பதம் 5.3.10
அதாயம் ஏவ் வரோ ஹி அர்ஹத்தம யர்ஹி பர்ஹிஷி ராஜர்ஷேர்
வரதர்ஷபோ பவான் நிஜ-புருஷேக்ஷண-விஷய ஆஸீத்
அத—அதன்பின்னர்; அயம்—இந்த; ஏவ—உறுதியாக; வர:—வரம்; ஹி—உண்மையில்; அர்ஷத்-தம—ஒ, வணங்கப்படுபவர்களினால் வணங்கப்படுபவரே; யர்ஹி—ஏனென்றால்; பர்ஹிஷி—வேள்வியில்; ராஜ-ருக்ஷே:—மன்னர் நாபியின்; வரத-ருஷப:—வரம் அருள்பவர்களிற் சிறந்த; பவான்—உமது மேலாண்மை; நிஜ-புருஷ—உமது பக்தர்களின்; ஈக்ஷண-விஷய:—பார்வையின் பொருள்; ஆஸீத்—ஆகியிருக்கிறது.
ஒ. வணங்கப்படுவோர் அனைவரினும் சிறந்தவரே, வரம் அளிக்கும் அனைவரினும் நீரே சிறந்தவர். ராஜரிஷி நாபியின் வேள்விச் சாலையில் நீர் எழுந்தருளியிருப்பது எங்களின் நன்மைக்கேயாகும். உம்மைக் காணும் பேற்றினை எமக்கு அருளியதின் மூலம் எங்களுக்கு மிகவுயர்ந்த வரத்தினை நீர் அருளியிருக்கின்றீர்.
பதம் 5.3.11
அஸங்க-நிஷித-ஜஞனானல-விதூதா ஷேஷ – மவானாம் பவத்-
ஸ்வபாவானாம் ஆத்மாராணாம் முனீனாம் அனவரத-பரிகுணித-குண-
கண-பரம மங்கலாயண-குண-கண் கதனோ ‘ஸி
அஸங்க—பற்றின்மையினால்; நிஷித—வலிமையான; ஜ்ஞான—ஞானம்; அலை—நெருப்பினால்; விதூத—நீக்கி; அஷேஷ—அளவற்ற; மலானாம்—அவர்களது அழுக்குகள்; பவத்-ஸ்வபாவானாம்—உமது குணங்களை எய்தியிருக்கின்றனர்; ஆத்ம ஆராமாணாம்—சுயதிருப்தியடைந்தவர்; முனீனாம்—மாமுனிவர்களின்; அனவரத—தொடர்ந்து; பரிகுணித—எடுத்தோதுதல்; குண-கண—ஒ, பகவானே, அவரது ஆன்மீகக் குணங்கள்; பரமமங்கல—பரம மங்களம்; ஆயன—உண்டாகிறது; குண-கண-கதன:—அவரது பண்புநலன்களை ஓதுபவர்; அஸி—நீரே.
போற்றுதற்குரிய பகவானே, சிந்தனை மிகுந்த மாமுனிவர்களும், மகான்களும் தொடர்ந்து உமது ஆன்மீக குணங்களைப் போற்றுகின்றனர். இம்முனிவர்கள் தங்களிடமிருந்த ஏராளமான அழுக்குகளை உலகின் மீதான பற்றின்மையினை வலுப்படுத்தியதின் மூலமும், ஞானத்தீயினாலும் சுட்டுச் சாம்பலாக்கி விட்டனர். இவ்வாறு அவர்கள் உமது குணங்கள் எய்தப் பெற்றவர்களாகவும் சுயதிருப்தியுடையவர்களாகவும் இருக்கின்றனர். உமது பண்புநலன்களை ஓதி பெருமகிழ்வு அடைந்தவர்கள் முன்பு கூட பகவான் எழுந்தருள்வது மிக மிக அரிய செயலாகும்.
பதம் 5.3.12
அத கதஞ்சித் ஸ்கவன-க்ஷுத்-பதன ஜ்ரும்பண-துரவஸ்-தானாதிஷு
விவஷானாம் ந: ஸ்மரணாய ஜ்வர-மரண-தஷாயாம் அபி ஸகல கஷ்மல
நிரஸனானி தவ குண-க்ருத-நாமதேயானி வசன-கோசராணி பவந்து
அத—அதனால்; கதஞ்சித்—ஏதோ ஒர் வழியில்; ஸ்கலன—தடுமாற்றம்; க்ஷுத்—பசி; பதன—கீழே வீழ்தல்; ஜ்ரும்பண—வாயினால் சுவாசித்தல்; துரவஸ்தான—விருப்பமில்லாத நிலையில் வைக்கப்பட்ட காரணத்தினால்; ஆதிஷு—போன்றவற்றினால்; விவஷானாம்—திறனற்ற; ந:—எமது; ஸ்மரணாய—நினைப்பதற்கு; ஜ்வர-மரண-தஷாயாம்—மரண வேளையில் வரும் கடும் ஜுரம்; அபி—மேலும்; ஸகல—அனைத்தும்; கஷ்மல—பாவங்கள்; நிரஸனானி—நீக்கக் கூடியது; தவ—உமது; குண—குணங்கள்; க்ருத—செயல்கள்; நாமதேயானி—நாமங்கள்; வசன-கோசராணி—உச்சரிப்பதற்கு சாத்தியமான; பவந்து—அவர்களை ஆக விடுவீராக.
போற்றுதற்குரிய பகவானே, தடுமாற்றம், பசி, தவறி வீழ்தல், வாயினால் சுவாசித்தல் அல்லது மரண வேளையில் ஏற்படும் கடுமையான காய்ச்சலில் வீழ்தல் போன்றவற்றினால் உமது பெயர் தோற்றம் குணம் முதலியவற்றை எம்மால் நினைக்க முடியாது போகலாம். ஆகையினால் பக்தர்கள் மீது அளவற்ற அன்புடைய பகவானே உம்மை நாங்கள் வழிபடுகிறோம். எங்களது பாவச் செயல்கள் அனைத்தையும் நீக்கவல்ல உமது புனித நாமங்கள், குணங்கள் மற்றும் செயல்களை எப்போதும் நாங்கள் சிந்தித்திருக்க எங்களுக்கு உதவுவீராக.
பதம் 5.3.13
கிஞ்சாயம் ராஜர்ஷிர் அபத்ய-காம ப்ரஜாம் பவாத்ருஷீம் ஆஷாஸன
ஈஷ்வ்ரம் ஆஷிஷாம் ஸ்வர்காபவர்கயோர் அபி பவந்தம் உபதாவதி
ப்ரஜாயாம் அர்த-ப்ரத்யயோ தனதம் இவாதன: பலீகரணம்
கிஞ்ச—மேலும்; அயம்—இந்த; ராஜ-ருஷி:—ராஜரிஷி (நாபி); அபத்ய-காம:—சந்ததியை விரும்பி; ப்ரஜாம்—ஒரு மைந்தன்; பவாத்ருஷீம்—உம்மைப் போன்ற; ஆஷாஸான:—விருப்பப்படுகிறார்; ஈஷ்வரம்—பரம நெறியாளர்; ஆஷிஷாம்—வரங்களின்; ஸ்வர்க-அபவர்கயோ:—சொர்க்கம் மற்றும் விடுதலையின்; அபி—இருந்த போதிலும்; பவந்தம்—நீர்; உபதாவதி—வழிபடுதல்; ப்ரஜாயம்—குழந்தைகள்; அர்த-ப்ரத்யய:—வாழ்க்கையின் இறுதி லட்சியமாக; தன-தம்—ஏராளமான செல்வத்தை தானமாக வழங்கக் கூடியவருக்கு; இவ—போன்று; அதன:—ஒர் ஏழை மனிதன்; பலீகரணம்—சிறிது தானியம்.
போற்றுதற்குரிய பகவானே, இதோ நிற்கும் நாபி மன்னர் உம்மைப் போன்ற ஒரு மைந்தனைப் பெறுவதையேத் தனது வாழ்க்கையின் இறுதி லட்சியமாகக் கொண்டிருக்கிறார். மேலாண்மை மிக்க இறைவரே அவரது நிலை சிறிதளவு தானியம் வேண்டி பெரும் செல்வந்தனை அணுகியது போன்றதாகும். நாபி மன்னனுக்கு நீர், விடுதலை பெறுதல், வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடைதல் போன்ற மேன்மைமிக்க நிலை எது அளித்த போதிலும் அவர் விருப்பம் என்னவோ ஒரு மைந்தன் வேண்டும் என்பதே, அதனாலே அவர் உம்மை வணங்கி நிற்கின்றார்.
பதம் 5.3.14
கோ வா இஹ தே’ பராஜிதோ ‘பராஜிதயா மாயய-‘வைஸித-
பதவ்யானாவ்ருத-மதிர்விஷய-விஷ-ரயானாவ்ருத-ப்ராக்ருதிர்
அனுபாஸித-மஹச்-சரண:
க: வா—யாரந்த மனிதன்; இஹ—இப்பௌதீக உலகில்; தே—உமது மேலாண்மையின்; அபாஜித:—வெல்வதில்லை; அபராஜிதயா—வெல்ல முடியாமையினால்; மாயயா—மாயாசக்தி; அவைஸித பதவ்ய—அவர்கள் பாதை உறுதியானதாக இருக்க முடியாது; அனாவ்ருத மதி:—அவர்கள் மதி குழப்படைவதில்லை; விஷய-விஷ—உலக இன்பத்தின்; இது நச்சுப் போன்றதாகும்; ரய—பயணம் செய்வதினால்; அனாவ்ருத—மூடப்படாத; ப்ராக்ருதி:—அவரது இயற்கை: அனுபாஷித—வழிபாடின்றி; மஹத்-சரண:—உயர்ந்த பக்தர்களின் தாமரைத் திருவடிகள்.
போற்றுதற்குரிய பகவானே, உயர்ந்த தொண்டர்களின் தாமரைத் திருவடிகளை ஒருவன் வழிபடவில்லையென்றால் அவன் மாயா சக்தியினால் வெல்லப்படுவான் என்பதோடு அவனது புத்தியும் குழப்பமடைந்துவிடும். உண்மையில் நஞ்சினைப் போன்ற இன்ப அலைகடலினால் யாரே அடித்துச் செல்லப்படாதவர்? உமது மாயா சக்திவெல்ல முடியாத ஒன்றாகும். இந்த சக்தியின் பாதையினைக் கண்டவரும் இல்லை. அது எவ்வாறு செயல்படுகிறது என்று விண்டவரும் இல்லை.
பதம் 5.3.15
யத் உஹ வாவ தவ புனர் அதப்ர-கர்தர் இஹ ஸமா-ஸூ
தஸ் தத்ரார்ததியாம் மந்தானாம் நஸ் தத் யத் தேவ-ஹேலனம்
தேவ-தேவார்ஹஸி ஸாம்யேன ஸர்வான் ப்ரதி-வோடம் அவிதுஷாம்
யத்—ஏனென்றால்; உ ஹ வாவ—உண்மையின்; தவ—உமது; புன:—மீண்டும்; அதப்ர-கர்த:—ஒ, பகவானே அவர் பல்வேறு செயல்களைச் செய்பவர்; இஹ—இங்கே; இவ்வேள்விச் சாலையில்; ஸமாஹுத:—வரவேற்றது; தத்ர—ஆகையினால்; அர்த்தியாம்—உலக ஆசைகளை நிறைவேற்ற விரும்புவர்; மந்தானாம்—புத்தி மேன்மையற்ற; ந:—எமது; தத்—அந்த; யத்—அது; தேவ ஹேலனம்—முழுமுதற் கடவுளுக்கு அவமரியாதை; தேவ-தேவ—தேவதேவன்; அர்ஹஸி—அருள் கூர்ந்து; ஸாம்யேன—ஏனென்றால் உமது சரிசமமான நிலை; ஸர்வான்—எல்லாம்; ப்ரதிவோடும்—பொறுத்தல்; அவிதுஷாம்—அறியாமை மிக்க எங்களின்.
ஓ, பகவானே! நீர் அதிசயிக்கத்தக்கச் செயல்கள் பலவற்றைச் செய்கின்றீர் எங்களது ஒரே லட்சியம் இம்மாபெரும் வேள்வியினைச் செய்வதின் மூலம் ஒரு மைந்தனைப் பெற வேண்டும் என்பதேயாகும் ஆகையினால் எமது புத்தி அத்துணைக் கூர்மையுடையதாக இல்லை. வாழ்க்கை லட்சியத்தில் உறுதியாக இருப்பதில் நாங்கள் இன்றும் அனுபவம் பெறவில்லை. எந்தவிதச் சிறப்புமில்லாத இந்த வேள்விக்கு சில உலகப் பற்றினை ஒட்டி உம்மை அழைத்ததின் மூலம் நாங்கள் உமது தாமரைத் திருவடிகளுக்கு மிகப் பெரிய தவறிழைத்துவிட்டோம். ஆகையினால் தேவதேவனே! உமது அளவற்ற கருணையினாலும், சம நிலையுடைய மனதினாலும் எங்களது குற்றத்தினை மன்னித்தருள்வீராக.
பதம் 5.3.16
ஸ்ரீ ஷூக உவாச
இதி நிகதேனாபிஷ்டூயமானோ பகவான் அநிமிஷர்-ஷபோ வர்ஷ
தராபிவாதிதாபிவந்தித-சரண: ஸதயம் இதம் ஆஹ
ஸ்ரீ- ஷூக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; நிகதேன—உரைநடையிலான பிரார்த்தனையினால்; அபிஷ்டூயமான:—வழிபடப்பட்டு; பகவான்—பரம புருஷ பகவான்; அநிமிஷ-ருஷப:—தேவர்களின் தலைவர்; வர்ஷ-தர—மன்னர் நாபியினால்; பரதவர்ஷத்தின் சக்கரவர்த்தி; அபிவாதித—வழிபட்டார்; அபிவந்தித—அவர்கள் கீழே குனிந்து; சரண:—அவரது திருவடிகளை; ஸதயம்—அன்புடன்; இதம்—இந்த; ஆஹ—கூறினார்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார் பாரத நாட்டின் நாபி மன்னரால் வணங்கப்படுகின்ற புரோகிதர்கள் தங்கள் வழிபாட்டினை உரைநடையில் (பொதுவாக அவை செய்யுள் வடிவில் இருக்கும்) கூறி அவரது திருவடித் தாமரைகளை தங்கள் தலைகளினால் வணங்கினர். தேவர்களை ஆளும் தேவதேவன் அவர்கள் மீது மகிழ்ச்சி கொண்டு பின்வருமாறு கூறத் தொடங்கினார்.
பதம் 5.3.17
ஸ்ரீ-பகவான் உவாச
அஹோ பதாஹம் ருஷயோ பவத்பிர் அவிதத-கீர்கிர் வரம் அஸுலபம்
அபியாசிதோ யத் அமுஷ்யாத் மஜோ மயா ஸத்ருஷோ பூயாத் இதி
மமாணம் ஏவாபிரூப: கைவல்யாத் அதாபி ப்ரஹ்ம-வாதோ ந ம்ருஷா
பவிதும் அர்ஹதி மமைவ ஹி முகம் யத் த்விஜ-தேவ குலம்.
அஹோ—அந்தோ; பத—நிச்சயம் நான் மகிழ்ச்சியடைகிறேன்; அஹம்:—நான்; ருஷய:—ஓ, மாமுனிவர்களே; பவத்பி—உம்மால்; அவிதத-கீர்பி:—அவர்கள் வார்த்தைகள் அனைத்தும் உண்மையே; வரம்—வரத்திற்காக; அஸுலபம்—கிடைப்பதற்கரிய; அபியாசித:—வேண்டிக் கொண்டபடி; யத்—அது; அமுஷ்ய—மன்னர் நாபியின்; ஆத்ம-ஜ:—ஒரு மைந்தன்; மயா-ஸத்ருஷ:—என்னைப்போல்; பூயாத்—கிடைக்கலாம்; இதி—இவ்வாறு; மம—எனது; அஹம்—நான்; ஏவ—மட்டும்; அபிரூப:—சமமாக; கைவல்யாத்—இரண்டற்றக் காரணத்தினால்; அதாபி—பதிலாக; ப்ரஹ்ம-வாத:—மேன்மைமிக்க அந்தணர்களால் கூறப்பட்ட வார்த்தைகள்; ந—இல்லை; ம்ருஷா—தவறான; பவிதும்—ஆவதற்கு; அர்ஹதி—வேண்டும்; மம—எனது; ஏவ—உறுதியாக; ஹி—ஏனென்றால்; முகம்—வாய்; யத்—அது; த்விஜ-தேவகுலம்—தூய அந்தணர் பிரிவு.
முழுமுதற்கடவுள் பதில் கூறினார் ஒ, மாமுனிவர்களே, உங்களது வழிபாட்டினால் யான் மிக்க மனம் மகிழ்ந்தேன். நீங்கள் அனைவரும் உண்மையானவர்கள். நீங்கள் அனைவரும் நாபி மன்னருக்கு என்னைப் போல் புதல்வன் பிறக்க வேண்டுமென்று வேண்டினீர்கள். ஆனால் அச்செயல் மிகவும் அரியது. யான் ஒரே முழுமுதற் கடவுள் எனக்கு இணையானவர் எவருமிலர், என்னைப் போல் ஒருவரைக் காண்பதும் அரிது. இருந்தபோதிலும் நீவிர் தகுதியுள்ள அந்தணர்களாதலின் நீங்கள் ஓதிய மந்திரங்கள் பொய்த்துவிடக் கூடாது. அந்தணத்தன்மைகள் நிறைந்த தகுதியுள்ள அந்தணர்களை நான் எனது வாயாகக் கருதுகிறேன்.
பதம் 5.3.18
தத ஆக்னீத்ரீயே ‘ம்ஷ-கலயா வதரிஷ்யாமி ஆத்ம-துல்யம்
அனுபலபமான:
தத:—ஆகையினால்; ஆக்னீத்ரீயே—ஆக்னீதரனின் மைந்தன் மனைவி நாபியிடம்; அம்ஷ-கவயா—எனது தனிப்பட்ட வடிவத்தின்; அம்ச—விரிவாக ; அவதரிஷ்யாமி—நான் அவதரிப்பேன்; ஆத்ம-துல்யம்—எனக்கு இணை; அனுபலபமான:—காணமுடியாது.
எனக்கு இணையாக எவருமிலர். ஆதலினால் நான் என்னையே எனது இயல்புகளின் ஒரு பகுதியாக்கி ஆக்னீதரனின் புதல்வன் நாபி மன்னனின் மனைவி மேருதேவியின் வயிற்றில் பிறப்பேன்.
பதம் 5.3.19
ஸ்ரீ-ஷுக உவாச
இதி நிஷாமயந்த்யா மேருதேவ்யா: பதிம் அபிதாயந்தர்ததே பகவான்
ஸ்ரீ- ஷுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; இதி—இவ்வாறு; நிஷாமயன்த்யா:—கேட்டுக் கொண்டிருந்தான்; மேருதேவ்யா:—மேருதேவியின் முன்னிலையில்; பதிம்—அவள் கணவருக்கு; அபிதாய—கூறப்பட்டதை; அந்தர்ததே—மறைந்தார்; பகவான்—முழுமுதற்கடவுள்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார் இவ்வாறு கூறிய பின்னர் பகவான் அங்கிருந்து மறைந்தார். நாபி மன்னரின் மனைவி மேருதேவியும் தன் கணவனின் அருகிலேயே அமர்ந்திருந்தாள். அதனால் இறைவன் கூறியதை அவளால் கேட்க முடிந்தது.
பதம் 5.3.20
பர்ஹிஷி தஸ்மின்ன் ஏவ விஷ்ணுதத்த பகவான் பரமர்ஷிபி
ப்ரஸாதிதோ நாபே: ப்ரிய சிகீர்ஷயா தத்-அவரோதாயனே மேரு
தேவ்யாம் தர்மான் தர்ஷயிது-காமோ வாத-ரஷனானாம் ஷ்ரமனானாம்
ருஷீணாம் ஊர்த்வமந்தினாம் ஷுக்லயா தனுவாவததார
பர்ஹஷி—வேள்விச் சாலையில்; தஸ்மின்—அந்த; ஏவ—இவ்வழியே; விஷ்ணுதத்த—ஒ, பரீட்சித்து மன்னரே!; பகவான்—முழுமுதற்கடவுள்; பரம-ருஷிபி:—முனிவர்களினால்; ப்ரஸாதிது—மகிழ்ச்சியடைந்து; நாபே:-ப்ரிய-சிகீர்ஷயா—மன்னர் நாபியை மகிழ்விக்க; தத்-அவரேதாயனே—அவர் மனைவியினிடத்தில்; மேருதேவ்யாம்—மேருதேவி; தர்மான்—சமய தர்மங்கள்; தர்ஷயிது-காம்:—எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை வெளிப்படுத்த விரும்பி; வாத-ரஷனானாம்—துறவிகளின் (அவர்கள் பெரும்பாலும் ஆடை அணிவது இல்லை); ஷ்ரமனானாம்—வானப்பிரஸ்தன்களின்; ருஷீணாம்—மாமுனிவர்களின்; ஊர்த்வ-மந்தினாம்—பிரம்மச்சாரிகளின்; ஷுக்லயா-தனுவா—இயற்கைக் குணங்களைக் கடந்த அவரது உண்மையான ஆன்மீக வடிவில்; அவததார—ஓர் புதிய பிறப்பில் தோன்றினார்.
ஒ, விஷ்ணு தத்த, பரீட்சித்து மகாராஜாவே, வேள்விச் சாலையில் இருந்த மாமுனிவர்களினால் முழுமுதற் கடவுள் மகிழ்ச்சியடையுமாறு செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து பகவான் சமய தர்மங்களை பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், வானப்பிரஸ்தன், சந்நியாசி போன்றோர் சடங்குகளில் ஈடுபடுவதின் மூலம் பின்பற்றுவதைத் தானே தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்திக் காட்டவும், நாபி மன்னனின் விருப்பத்தினை நிறைவேற்றுவதென்றும் தீர்மானித்தார். இதனைத் தொடர்ந்து அவர், இயற்கையின் முக்குணங்களுக்கு அப்பாற்பட்ட தனது உண்மையான ஆன்மீக வடிவத்தில் மேருதேவியின் மைந்தனாகப் பிறப்பெடுத்தார்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “நாபி மன்னரின் மனைவி மேருதேவியிடம் ரிஷப தேவர் பிறத்தல்” எனும் தலைப்பை கொண்ட மூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.