அத்தியாயம் – 26
நரகலோகம் பற்றிய விளக்கம்
பதம் 5.26.1 : பரீக்ஷித்து மன்னர் சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: போற்றுதற்குரியப் பெரியீர், உயிர்வாழிகள் ஏன் பல்வேறு பௌதீக நிலைகளில் வைக்கப்படுகின்றன? அருள் கூர்ந்து இதனை எனக்கு விளக்குவீராக.
பதம் 5.26.2 : மாமுனிவர் சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, இப்பௌதீக உலகில் மூன்று வகையானச் செயல்கள் சத்துவ குணத்தில் உள்ளவை, இரஜோ குணத்தில் உள்ளவை, தமோ குணத்தில் உள்ளவை என்று இருக்கின்றன. மக்கள், அனைவரும் ஜட இயற்கையின் முக்குணங்களினால் பாதிக்கப்படுவதால் அவர்களது செயல்களின் விளைவும் கூட மூன்றாகவேப்பிரிக்கப்படுகின்ற, சத்துவ குணத்தில் செயல்படுபவன் சமயச்சார்புடையவனாகவும், மகிழ்ச்சியுடையவனாகவும் இருக்கிறான். இரஜோ குணத்தில் செயல்படுபவன் இன்ப துன்பங்களைக் கலந்து பெறுகிறான், தமோ குணத்தில் செயல்படுபவன் எப்போதும் துன்பத்தில் உழன்று ஒரு மிருகம் போல் வாழ்கிறான். பல்வேறு கோளங்களில் உயிர்வாழிகள் ஜட இயற்கையின் வெவ்வேறான குணங்களினால் பாதிக்கப்படுவதினால் அவர்களது இலக்குகளும் கூட பல்வேறு வகையுடையனவாக இருக்கின்றன.
பதம் 5.26.3 : புண்ணியச் செயல்கள் செய்வதினால் ஒருவன் சொர்க்க வாழ்வின் பல்வேறு நிலைகளை எய்துவதுபோல், பாவச்செயல்களைச் செய்வதின் மூலம் ஒருவன் நரக வாழ்வின் பல்வேறு நிலைகளை அடைகிறான். தமோ குணத்தில் செயல்படுபவன் பாவச்செயல்களில் ஈடுபடுகிறான். அவர்களது அறியாமையின் அளவிற்கேற்ப அவர்கள் பல்வேறுவகைகளையுடைய நரக வாழ்வில் இடப்படுகிறான். அறியாமையின் காரணமாக ஒருவன் தமோ குணத்தில் செயல்படுவதினால் அதனால் விளையும் அவன் துன்பமானது சிறிதளவே கடுமையுடன் இருக்கும். பாவ புண்ணியச் செயல்களுக்கிடையேயுள்ள வேறுபாட்டினை அறிந்தும் ஒருவன் பாவச் செயல் செய்வானெனில் அவன் நடுத்தரமானக் கடுமையுடன் கூடிய நரகத்தில் இடப்படுகிறான். நாத்திகத் தன்மையின் காரணமாக ஒருவன் அறியாமை மற்றும் தீமையில் செயல்படுவானெனில் அதனால் விளையும் நரக வாழ்க்கையானது மிகமிக மோசமானதாக இருக்கும். அறியாமையின் காரணமாக ஒவ்வொரு உயிர்வாழியும் ஆதிகாலந்தொட்டு பல்வேறு ஆசைகளினால் ஆயிரக்கணக்கான நரகங்களுக்கு இழுத்துச் செல்லப்படுகிறான். என்னால் முடிந்த அளவு அவற்றை நான் விளக்க முயற்சிக்கிறேன்.
பதம் 5.26.4 : மன்னர் பரீக்ஷித்து சுகதேவ கோஸ்வாமியிடம் வினவினார்: மரியாதைக்குரிய பெரியீர், நரக லோகங்கள், பிரபஞ்சத்திற்கு வெளியே இருக்கின்றனவோ, அல்லது உள்ளே இருக்கின்றனவா அல்லது இவ்வுலகின் பல்வேறு பகுதிகளில் இருக்கின்றனவா?
பதம் 5.26.5 : மாமுனிவர் சுகதேவ கோஸ்வாமி பதில் கூறினார்: நரக லோகங்கள் அனைத்தும் மூவுலகங்களும், கர்போதகக் கடலுக்கும் நடுவில் இருக்கின்றன. அவை பூமண்டலத்திற்குக் கீழே பிரபஞ்சத்தின் தென்பகுதியில், கர்போதகக் கடலுக்குச் சிறிது மேலாக இருக்கின்றன. பித்துரு லோகம் கூட இப்பகுதியில் கர்போதகக் கடல், மற்றும் கீழ் உலகங்களுக்கு இடையேதான் இருக்கின்றன. அக்னிஷ்வாத்தா தலைமையின் கீழ் பித்துரு லோகத்தில் உள்ள அனைவரும் முழுமுதற் கடவுளை தியானித்தபடி ஆழ்ந்த சமாதி நிலையில் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் தங்கள் குடும்ப நலம் வேண்டுகின்றனர்.
பதம் 5.26.6 : பிதாக்களின் அரசன் சூரிய தேவனின் ஆற்றல்மிக்க மைந்தன் யமராஜன் ஆவான். இவன் பித்ரு லோகத்தில் தனது துணைவர்களுடன் இருக்கிறான். பரமபுருஷபகவான் ஏற்படுத்தியுள்ள ஒழுங்குமுறை விதிகளுக்குக் கட்டுப்பட்டு இவனது தூதர்களான யமதூதர்கள் பாவம் செய்யும் மனிதர்கள் இறந்தவுடன் அவர்களை உடனே இவனிடம் அழைத்து வருகின்றனர். அவனது எல்லைக்குள் வந்தவுடன் இவன் அவரவர் செய்த பாவங்களுக்கேற்ப சரியான தண்டனை அனுபவிப்பதற்காக அவர்களைப் பல்வேறு நரக லோகங்களுக்கு அனுப்பிவைக்கிறான்.
பதம் 5.26.7 : அதிகாரம் பெற்ற சிலர் இருபத்தோரு நரகலோகங்கள் என்று கூற சிலர் இருபத்தெட்டு என்கின்றனர். அன்பார்ந்த மன்னனே அவற்றின் பெயர், வடிவம் மற்றும் அடையாளத்தினை நான் உனக்குக் கோடிட்டுக் காட்டுவேன். பல்வேறுவகையான நரகங்களின் பெயர்கள் பின்வருமாறு: தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், ரெளரவம், மகாரௌரவம், கும்பீபாகம், காலசூத்திரம், அசிபத்ரவனம், சூகரமுகம், அந்தகூபம், கிருமிபோஜனம், வைதரணீ, பூயோதம், பிராணரோதம், விசசனம், வாலாபக்ஷம், சாரமேயாதனம், அவீசி, அய: பானம், க்ஷாரகர்தமம்; ரக்ஷோகண போஜனம், சூலப்ரோதம், தந்தசூகம், அவடநிரோதனம், பர்யாவர்தனம், சூசீமுகம். இவ்வுலகங்கள் அனைத்தும் உயிர்வாழிகளைத் தண்டிப்பதற்குரியவையாகும்.
பதம் 5.26.8 : அன்பிற்குரிய அரசனே, ஒருவன் பிறனது சட்டபூர்வமான மனைவி, மக்கள், பொருள் முதலியவற்றை தனதாக்கிக் கொண்டால், அவனது மரணவேளையில் யமதூதர்களின் காலக்கயிற்றினால் அவன் பலாத்காரமாகக் கட்டப்பட்டு தாமிஸ்ரம் என்னும் நரக லோகத்தில் தூக்கி எறியப்படுகிறான். அந்த இருள் நரகத்தில் அப்பாவம் செய்தவன் யமதூதர்களால் அடித்து, மிரட்டி துன்புறுத்தப்படுகிறான். அவன் பசியால் வருந்துவான், ஆயினும் அவனுக்குக் குடிப்பதற்குக் கூட நீர் கொடுக்கப்படுவதில்லை. இவ்வாறு சீற்றம் கொண்ட யமதூதர்கள் அவனது கடுமையானத் துன்பத்திற்குக் காரணமாகின்றனர். சில சமயம் அவர்களது தண்டனையின் வேதனை தாங்காது அவன் மூர்ச்சையடைகிறான்.
பதம் 5.26.9 : அடுத்தவன் மனைவி மக்களை நயவஞ்சகமாக ஏமாற்றி அனுபவிப்பவன் அந்ததாமிஸ்ரம் என்னும் நரகினை அடைகிறான். அங்கே அவனது நிலை ஒருமரம் அடிவேருடன் வெட்டிச் சாய்க்கப்படுவது போன்றதாகும். அந்ததாமிஸ்ரத்தினை அவன் அடைவதற்கு முன்பே அவன் பல்வேறு கொடிய துன்பங்களுக்கு ஆளாகிறான். அவன் தனது பார்வை மற்றும் புத்தியினை இழக்கச் செய்யும் அளவிற்கு துன்பம் கொடுமை வாய்ந்ததாகும். இக்காரணத்தினாலேயே கற்றறிந்த முனிவர்கள் இதனை அந்ததாமிஸ்ரம் என்று அழைக்கின்றனர்.
பதம் 5.26.10 : ஒருவன் தனது உடலைத் தன் மனைவி, மக்கள் மற்றும் தனது உடல்களைக் காப்பதற்காக, அல்லும் பகலும் கடினமாக உழைப்பதற்காகவே தனது உடலை ஏற்றுக் கொள்கிறான். தன்னையும் தனது குடும்பத்தினரையும் காப்பதற்காக அவன் பிற உயிர்வாழிகளுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுகிறான். மரணவேளையில் இம்மனிதன் ரௌரவம் என்னும் நரகத்தில் அவன் தூக்கி எறியப்படுவதின் மூலம் அவன் பிற உயிரினங்களின் மீது கொண்ட துவேஷத்தின் பலன்களை பலவந்தமாகப் பிரிக்கப்படுகிறான்.
பதம் 5.26.11 : இப்பிறப்பில் துவேஷமுடைய ஒருவன் பல உயிர்வாழிகளுக்கெதிராக வன்முறையில் ஈடுபடுகிறான். அதனால் அவன் மரணத்திற்குப் பிறகு, யமராஜனால் நரகத்திற்கு எடுத்துச் செல்லப்படும்பொழுது, அவனால் காயப்படுத்தப்பட்ட உயிர்வாழிகள் அவனுக்குக் கடுமையான வேதனை அளிப்பதற்காக ருருக்கள் என்னும் மிருகங்களாகத் தோன்றுகின்றன. கற்றறிந்த அறிஞர்கள் இந்நரகத்தினை ரௌரவம் என்று அழைக்கின்றனர். பாம்பை விட துவேஷமுடைய இந்தருரு என்னும் மிருகம் பொதுவாக இவ்வுலகில் காணப்படுவதில்லை.
பதம் 5.26.12 : தன்னுடைய உடம்பினை ஒம்புவதற்காகப் பிறருக்குத் துன்பமிழைப்பவன் மகாரெளரவம் என்னும் நரகத்தில் கிரவ்யாதம் எனப்படும் ருரு மிருகங்கள் அவனைத் துன்புறுத்தி அவன் தசையினைத் தின்கின்றன.
பதம் 5.26.13 : தங்கள் உடலினை ஒம்புவதற்காகவும், நாவின் சுவைக்காகவும் கொடிய மனிதர்கள் விலங்குகளையும், பறவைகளையும் உயிரோடுப் பிடித்துக் கொல்கின்றனர். இம்மனிதர்கள் நர பட்சணிகளால் கூட நிந்திக்கப்படுகின்றனர். இவர்கள் தமது மறு பிறப்பில் கும்பீபாகம் என்னும் நரகத்திற்கு யமதூதர்களால் தூக்கிச் செல்லப்பட்டு அங்கே எண்ணெயில் போடப்படுகின்றனர்.
பதம் 5.26.14 : ஓர் அந்தணனைக் கொன்றவன் எண்பதினாயிரம் மைல்கள் சுற்றளவுடையதும் முற்றிலும் தாமிரத்தினால் ஆனதுமான காலசூத்திரம் என்னும் நரகத்தில் நடப்படுகிறான். கீழே நெருப்பினாலும், மேலே சுட்டெரிக்கும் சூரியனாலும் சூடுபடுத்தப்படுவதால் இந்நரகத்தின் மேற்பகுதி அதீத உஷ்ணமுடையதாக இருக்கிறது. இதி விடப்படுவதால் அந்தணனைக் கொன்றவன் அகத்திலும் புறத்திலும் உஷ்ணத்தால் துன்புறுகிறான். அகத்தினில் அவன் பசித்தாகத்தினால் எரிந்து கொண்டிருக்கின்றான். புறத்தினில் மேலே சுட்டெரிக்கும் சூரியனும், தாமிர சமதளத்திற்குக் கீழே நெருப்பினாலும் எரிந்து கொண்டிருக்கின்றான். அதனால் அவன் சிலசமயம் படுத்திருக்கிறான், சிலசமயம் அமர்ந்திருக்கிறான், சிலசமயம் இங்குமங்கும் ஒடிக் கொண்டிருக்கின்றான். அவ்வாறு அவன் ஒரு மிருகத்தின் உடலிலுள்ள ரோமங்கள் எத்துணை இருக்கின்றதோ அத்துணை ஆயிரம் வருடங்கள் அவன் அங்கே வருந்தவேண்டியதிருக்கின்றது.
பதம் 5.26.15 : அவசரநிலை அல்லாத சூழ்நிலையிலும் ஒருவன் வேதங்களின் பாதையிலிருந்து விலகிச் சென்றான் என்றால், யமராஜனின் தூதர்கள் அவனை அசிபத்ரவனம் என்னும் நரகத்தில் தள்ளுகின்றனர். அங்கே அவர்கள் அவனைச் சாட்டையினால் அடிக்கின்றனர். வேதனை தாளாது அவன் இங்கும் அங்கும் தப்பி ஒடும்பொழுது அவன் கத்தியைப்போல் கூர்மையான முனைகளையுடைய ஒலைகள் நிறைந்த பனைமரங்களினூடனே ஒடுகிறான். இவ்வாறு அவன் உடல் முழுவதும் காயம்பட்டு, அடிதோறும் மயங்கி வீழ்ந்து “ஒ, நான் இனி என்ன செய்வேன், எவ்வாறு காப்பாற்றப்படுவேன்” என்று கதறி அழுகிறான். ஏற்றுக்கொண்ட சமய நெறிகளிலிருந்து விலகி நடப்பவன் படும்பாடாகும் இது.
பதம் 5.26.16 : ஓர் அரசன் அல்லது அரசாங்க அதிகாரி குற்றம் செய்யாத ஒருவனைத் தண்டித்தாலோ அல்லது ஓர் அந்தணனுக்கு உடல் ரீதியாகத் தண்டனை வழங்கினாலோ அவனது மறுபிறப்பில் அவன் யம தூதர்களால் சூகரமுகம் என்னும் நரகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறான். அங்கே அவன் யமதூதர்களால், சாறு எடுப்பதற்காகக் கரும்பு பிழியப்படுவதுபோல் பிழியப்படுகிறான். பாவம் செய்த அந்த உயிர்வாழி தவறு செய்யாத ஒருவன் தண்டனை அனுபவிப்பது போல் மிகவும் இரங்கத்தக்க ஒலியிலே அழுது அரற்றி மூர்ச்சையடைகிறான் குற்றமற்ற ஒருவனைத் தண்டிப்பதன் விளைவு இதுவேயாகும்.
பதம் 5.26.17 : பரம புருஷ பகவானின் ஏற்பாட்டின் பேரிலேயே இழிந்த உயிர்களான மூட்டைப் பூச்சிகளும், கொசுக்களும் மனிதன் மற்றும் விலங்கின் இரத்தத்தினை உறிஞ்சி வாழ்கின்றன. இவ்விழிந்த பூச்சிகளுக்குத் தாம் மனிதனைக் கடிப்பதினால் அவன் வேதனை அடைகிறான் என்பது தெரியாது. ஆயினும் முதல்தர மனிதர்களான அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் அறிவு வளர்ச்சி பெற்றவர்கள் அதனால் கொல்லப்படுவது எத்துணை துன்பமானது என்பதை அவர்கள் நன்கறிவர். பகுத்தறிவுள்ள ஒரு மனிதன் எந்தவித பேதமுற்ற இழிந்த ஜந்துக்களைக் கொன்றாலோ அல்லது துன்புறுத்தினாலோ அவன் நிச்சயம் பாவம் செய்தவனேயாவான். பரமபுருஷ பகவான் அவனை அந்த கூபம் என்னும் நரகத்தில் தள்ளுவதின்மூலம் தண்டிக்கிறார். அங்கே அவன், அவனால் முன்பு துன்புறுத்தப்பட்ட பறவைகள், ஈக்கள் போன்றவற்றினால் தாக்கப்படுகிறான். அவை அவனை எல்லா பக்கங்களிலும் தாக்கி அவன் நித்திரை சுகத்தினைத் திருடிக்கொள்கின்றன. ஒய்வில்லாத காரணத்தினால் அவன் இருளில் தொடர்ந்து இங்குமங்கும் அலைந்து கொண்டிருக்கின்றான். இவ்வாறு அந்த கூபத்தில் அவன் அனுபவிக்கும் துன்பமானது இழிந்த பூச்சிகள் அனுபவிக்கும் துன்பம் போன்றதாகும்.
பதம் 5.26.18 : ஒரு மனிதன் தான் பெற்ற உணவினை விருந்தினர்களுக்கோ, முதியவர்களுக்கோ, குழந்தைகளுக்கோ பகிர்ந்து கொடுக்காமல் தான் மட்டும் உண்டானென்றாலும் அவன் அதனை ஐவகை வேள்விகளைச் செய்யாமல் உண்டானென்றாலும் அவன் ஒரு காக்கையினை விட சிறந்தவனாகிவிட மாட்டான். அவன் மரித்த பிறகு மிகவும் வெறுக்கத்தக்கக் கிருமி போஜனம் என்னும் நரகத்தில் இடப்படுகிறான். இந்நரகத்தில் 100,000 யோஜனங்கள் (800,000 மைல்கள்) அகலமுடைய கிருமிகள் நிறைந்த குளம் ஒன்று இருக்கின்றது. அவன் இக்குளத்தில் ஒரு கிருமியாகி பிற கிருமிகளை உண்ணச் செய்கிறான். பிற கிருமிகள் உண்ணக் கொடுப்பதையும் உண்கிறான். அவன் தனது செயலுக்குத் தன் மரணத்திற்கு முன்பு கழுவாய் தேடிக் கொள்ளவில்லையென்றால் அவன் கிருமி போஜன நரகத்தில் உள்ள குளத்தில், அது எத்துணை யோஜனம் அகலமுடையதாக இருக்கின்றதோ அத்துணை ஆண்டுகள் இருந்து துன்புறுவான்.
பதம் 5.26.19 : அன்பார்ந்த மன்னனே, நெருக்கடி நிலை இன்றி ஒருவன் ஒர் அந்தணனிடம் அல்லது பிறரிடம் அவனது இரத்தினங்கள், பொன் போன்றவற்றைத் திருடினான் என்றால் அவன் சந்தம்ஸம் என்னும் நரகத்தில் இடப்படுகிறான். அங்கே அவனது உடல்சதை தீயில் வாட்டப்பட்டு சூடேறிச் சிவந்திருக்கும் இரும்புக் குண்டுகள் மற்றும் பற்றுக்குறடினால் துண்டு துண்டாகக் கிழிக்கப்படுகிறது. இவ்வாறு அவனது உடல் முழுவதும் சிதைக்கப்படுகிறது.
பதம் 5.26.20 : ஓர் ஆண் அல்லது பெண் பொருந்தாத எதிர் பாலினரிடம் பாலியல் உறவு கொண்டால் அவர்கள் மரித்தப்பிறகு, யமதூதர்களால் தத்சூரமி என்னும் நரகத்தில் தள்ளப்படுகின்றனர். அங்கே அந்த ஆணும், பெண்ணும் சாட்டையினால் அடித்துத் துன்புறுத்தப்படுகின்றனர். அந்த ஆண் இரும்பினால் செய்த நெருப்பில் போட்டு சிவந்து சூடேறியிருக்கும் பெண் பொம்மையினைப் பலவந்தமாகத் தழுவச் செய்யப்படுகிறான், அதே போல் அப்பெண் ஒரு ஆண் பொம்மையினைப் பலவந்தமாகத் தழுவச் செய்யப்படுகிறாள். இதுதான் கூடாப்பாலுறவிற்குக் கொடுக்கப்படும் தண்டனையாகும்.
பதம் 5.26.21 : ஒருவன் எந்தவித வித்தியாசமுமின்றி உடலுறவு கொள்பவன் அது மிருகத்தோடாயினும் சரி அவன் மரணமடைந்த பின்னர் வஜ்ரகண்டக சால்மலீ என்னும் நரகத்தில் தள்ளப்படுகிறான். அந்நரகத்தில் வஜ்ராயுதங்களைப் போல் முட்கள் உடைய ஒர் இலவமரம் இருக்கின்றது. யமதூதர்கள் அவனைப் பலவந்தமாக அந்த மரத்தில் கழுவேற்றுகின்றனர். அப்போது அவன் உடல் அம்முட்களினால் சின்னாபின்னமாகக் கிழிக்கப்படுகிறது.
பதம் 5.26.22 : ஒரு பொறுப்புள்ள குடும்பத்தில் பிறந்தவன் சத்திரியன், அரசகுலம், அல்லது அரசுப் பணியாளன் அவனுக்குரிய சமய நெறிக்கேற்ப குறிப்பிடப்பட்டிருக்கும் கடமைகளைப் புறக்கணித்தான் என்றால் அவன் மிகவும் இழிந்தவனாகி மரண வேளையில் வைதரணீ என்னும் நரகத்திலுள்ள ஆற்றில் வீழ்கிறான். அகழியினால் சூழப்பட்டிருக்கும் இந்நரகமானது கொடிய நீர்வாழ் விலங்குகளை உடையதாகும். வைதரணீ ஆற்றில் ஒரு பாவி தூக்கி எறியப்பட்டான் என்றால் அதிலிருக்கும் நீர்வாழ்விலங்குகள் உடனே அவனை தின்னத் தொடங்கும். அவனது உடலைப் பிரிய முடியாது. அவன் தொடர்ந்து தனது பாவச் செயல்களை எண்ணிக் கொண்டு மலமும், மூத்திரமும், சீழும், உதிரமும், மயிரும், நகமும், எலும்பும், மஜ்ஜையும், கொழுப்பும் நிறைந்திருக்கும் அந்த ஆற்றில்கிடப்பான்.
பதம் 5.26.23 : இழிந்த சூத்திரக் குலத்தில் பிறந்த பெண்களின் கணவர்கள் மிருகங்களைப் போன்றே வாழ்கின்றனர். அதனால் அவர்களிடம், நன்னடத்தையோ, சுத்தமோ, அல்லது ஒழுங்குமுறை வாழ்க்கையோ இருப்பதில்லை. மரணத்திற்குப் பிறகு இம்மனிதர்கள் பூயோதம் என்னும் நரகத்தில் தூக்கி எறியப்படுகின்றனர். அங்கே இவர்கள், சீழும், மலமும், மூத்திரமும், சளியும் நிறைந்த கடலினுள் வைக்கப்படுகின்றனர். தம்மைத் திருத்திக்கொள்ளாத சூத்திரர்கள் அக்கடலினுள் தூக்கி எறியப்பட்டு, அருவருக்கத்தக்க இவற்றைப் பலவந்தமாக உண்ணச் செய்யப்படுகின்றனர்.
பதம் 5.26.24 : இப்பிறப்பில் உயர்குலத்தில் (அந்தண, சத்திரிய, வைசிய) பிறந்தவன், தனது நாய், கோவேறு கழுதை அல்லது கழுதை போன்றவற்றுடன் காட்டிற்குச் சென்று மிருகங்களை வேட்டையாடிக் கொன்றானென்றால் அவன் மரித்தபிறகு பிராணரோதம் என்னும் நரகத்தில் வைக்கப்படுகிறான். அங்கே அவனை யமதூதர்கள் தங்களது குறிக்கு இலக்காக்கி, தமது அம்புகளினால் கிழித்தெறிகின்றனர்.
பதம் 5.26.25 : இப்பிறப்பில் தனது உயர் நிலையினால் செருக்குற்று பெளதீகப் பெருமைக்காக தேவையின்றி விலங்குகளைப் பலியிடுபவன் அவனது மரணத்திற்குப் பிறகு விசசனம் என்னும் நரகத்தில் இடப்படுகிறான். அங்கே யமதூதர்கள் அவனைப் பயங்கரமாகத் துன்புறுத்திப் பின்னர் கொல்கின்றனர்.
பதம் 5.26.26 : இருபிறப்பினர் குலத்தில் (அந்தண, சத்திரிய, வைசியக்குலம்) பிறந்த ஒரு மூடமனிதன் தன் மனைவியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்காகத் தனது சுக்கிலத்தைப் பலவந்தமாக அவளைக் குடிக்கச் செய்தானென்றால், அவன் மரணமடைந்தபிறகு லாலாபக்ஷம் என்னும் நரகத்தினை அடைகிறான். அங்கே அவன் சுக்கில ஆற்றில் அதனைக் குடிப்பதற்காகப் பலவந்தமாக தூக்கி எறியப்படுகிறான்.
பதம் 5.26.27 : இவ்வுலகில் சில கொள்ளைக்காரர்கள் பிறர் வீடுகளுக்குத் தீ வைக்கின்றனர் அல்லது பிறருக்கு விஷம் வைக்கின்றனர். அரச குலத்தைச் சேர்ந்தோர் அல்லது அரசு அதிகாரிகள் சில சமயம் வியாபாரிகளிடமிருந்து வரிவசூலிப்பதற்காக அவர்களைப் பலவந்தப்படுத்துகின்றனர், வெவ்வேறான வழிமுறைகளையும் பயன்படுத்துகின்றனர். மரணத்திற்குப் பிறகு இந்த அரக்கர்கள் காரமேயாதனம் என்னும் நரகத்தில் வைக்கப்படுகின்றனர். இந்நரகத்தில் வஜ்ராயுதம் போன்ற கூர்மையானப் பற்களையுடைய 720 நாய்கள் இருக்கின்றன. யமதூதர்களின் கட்டளையின் பேரில் இந்நாய்கள் இப்பாவிகளை பெரும் பசியுடன் விழுங்குகின்றன.
பதம் 5.26.28 : ஒருவன் இப்பிறப்பில் பொய்சாட்சி கூறினாலோ அல்லது வியாபாரத்திலோ, தானம் வழங்குவதிலோ பொய் கூறினாலோ அவன் இறந்த பிறகு யமதூதர்களால் கடுமையாகத் தண்டிக்கப்படுகிறான். இம்மனிதன் எண்ணூறு மைல்கள் உயரமுடைய மலையின் உச்சிக்குத் தூக்கி செல்லப்பட்டு அவீசிமத் என்னும் நரகத்தில் தலைகீழாகப் போடப்படுகிறான். இந்நரகத்தில் தங்குமிடம் எல்லாம் கிடையாது. இது நீரில் உள்ள அலைகளைப் போல் தோற்றம் தரும் உறுதியான கல்லினால் ஆனதாகும். அங்கே தண்ணீர் என்பதே கிடையாது அதனால் இந்நரகம் அவீசமத் (தண்ணீரில்லாதது) என்று அழைக்கப்படுகின்றது. அம்மனிதன் மலை உச்சியிலிருந்து தூக்கி எறியப்பட்டு அவனது உடல் சுக்குநூறாகச் சிதறிய போதிலும் அவன் மரிப்பதில்லை மாறாகத் தொடர்ந்து தண்டனை அனுபவிக்கின்றான்.
பதம் 5.26.29 : எந்தவொரு அந்தணனோ அல்லது அவன் மனைவியோ மது அருந்தினால் அவர்கள் யமதூதர்களால் அய: பானம் என்னும் நரகத்திற்குத் தூக்கிச் செல்லப்படுகின்றனர். இந்நரகம் சத்திரியன், வைசியன் அல்லது விரதம் பூண்டவனாக இருந்து, அவன் சோமரஸம் பருகி மயங்கினான் என்றால் அவனுக்காகக் காத்திருக்கின்றது. அய: பானத்தில் யமதூதர்கள் அவர்களின் மார்பின் மீது கால்களினால் ஏறி மிதித்து அவர்கள் வாயில் காய்ச்சி உருக்கிய இரும்பினை ஊற்றுகின்றனர்.
பதம் 5.26.30 : இழி குலத்தில் பிறந்த அருவருக்கத்தக்க ஒருவன் இப்பிறப்பில் பொய்யானக் கர்வம் கொண்டு “நான் பெரியவன்” என்று கருதுகிறான். இதனால் அவன் தன்னை விட பிறப்பு, தவங்கள், கல்வி, நடத்தை, குலம் அல்லது ஆன்மீகப் பிரிவு போன்றவற்றில் உயர்ந்திருக்கும் ஒருவனுக்கு உரிய மரியாதை தர மறுக்கிறான். இப்படிப்பட்டவன் இப்பிறப்பிலேயே இறந்த பிணத்துக்குச் சமமானவனாக இருக்கிறான். இறந்த பிறகோ க்ஷாரகர்தமம் என்னும் நரகத்தில் தலைகீழாகத் தூக்கி எறியப்படுகிறான். அங்கே அவன் யமதூதர்களின் கரங்களில் பெருந்துன்பத்திற்கு ஆளாகிறான்.
பதம் 5.26.31 : இவ்வுலகில் உள்ள சிலர் பைரவருக்கோ அல்லது பத்திரகாளிக்கோ மனிதர்களைப் பலியிட்டு அவர்களது தசையினை உண்கின்றனர். இவ்வாறு வேள்வி செய்பவர்கள், இறந்தபிறகு யமராஜனின் இருப்பிடத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கே அவர்களால் கொல்லப்பட்டவர்கள் இராட்சதர்களாக மாறி கைகளில் உள்ள கூர்மையான வாளால் அவர்களைத் துண்டு துண்டாக வெட்டி எறிகின்றனர். இவ்வுலகில் நரமாமிசம் உண்போர் பலியிடப்பட்டவனின் உதிரத்தைக் குடித்துப் பாடி ஆடி மகிழ்வதுபோல் இப்போது அவர்களால் பலியிடப்பட்டவர்கள் அதே போல் அவர்களைக் கொன்று அவர்களது உதிரத்தைக் குடித்து மகிழ்கின்றனர்.
பதம் 5.26.32 : இப்பிறப்பில் ஒரு வனத்திலோ அல்லது கிராமத்திலோ தங்களிடம் பாதுகாப்பிற்காக வரும் விலங்குகள் அல்லது பறவைகளுக்கு அடைக்கலம் தருகின்றனர். அவற்றிற்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்னும் நம்பிக்கையினை ஊட்டி இம்மனிதர்கள் பின்பு சூலாயுதத்தினால் அவற்றைக் குத்தியும், நூல்களில் கட்டியும் அவற்றிற்கு பெரும் வேதனை அளிக்கின்றனர். இப்படிப்பட்ட மனிதர்கள் இறந்த பின்னர் யமதூதர்களால் சூலப்ரோதம் என்னும் நரகத்திற்குக் கொண்டு செல்லப்படுகின்றனர். அங்கே இவர்களது உடல் ஊசிபோன்ற ஈட்டிகளால் துளைக்கப்படுகின்றன. இவர்கள் பசி, தாகத்தினால் வருந்துகின்றனர். மேலும் கூர்மையான அலகுகளையுடைய கழுகுகள், பருந்துகள் போன்றவை எல்லாப் பக்கமும் இருந்து வந்து இவர்கள் உடல்களைக் குத்திக் கிழிக்கின்றன. வேதனை மற்றும் துன்பத்தினால் இவர்கள் தாம் கடந்த காலத்தில் செய்த பாவங்களை நினைத்துப் பார்க்கின்றனர்.
பதம் 5.26.33 : இப்பிறப்பில் துவேஷமுடைய பாம்புகள் போன்றவர்கள் எப்போதும் சினம் கொண்டு பிற உயிர்வாழிகளுக்குத் துன்பம் செய்கின்றனர். இவர்கள் இறந்த பின்னர் தந்த சூகம் என்னும் நரகத்தில் வீழ்கின்றனர். அன்பார்ந்த மன்னனே, இந்நரகத்தில் ஐந்து தலை மற்றும் ஏழுதலைப் பாம்புகள் உள்ளன. இப்பாம்புகள் சுண்டெலிகளை உண்பது போல் இப்பாவிகளை உண்கின்றன.
பதம் 5.26.34 : இப்பிறப்பில் பிற உயிர்வாழிகளைப் பாழுங்கிணறு, தானியக்கிடங்கு, மலைக்குகையினுள் வைப்பவர்கள் தாங்கள் இறந்தபிறகு அவட நிரோதனம் என்னும் நரகத்தில் இடப்படுகின்றனர். அங்கே இவர்களும் நச்சுக் காற்றும், நெருப்புப் புகையும் உள்ள பாழுங்கிணற்றினுள் வைக்கப்பட்டு அதனால் பெரும் துன்பமடைகின்றனர்.
பதம் 5.26.35 : விருந்தினர்களையும், தன்னை சந்திக்க வருபவர்களையும், எரிந்து சாம்பலாகப் போகுமாறு பார்க்கும் ஓர் இல்லறத்தான் பார்யாவர்தனம் என்னும் நரகத்தில் போடப்பட்டு அங்கே கழுகுகள், கொக்குகள், காக்கைகள் போன்ற பறவைகளாய் அவனும் அது போலவே பார்க்கப்பட்டுப் பின்னர் அப்பறவைகள் திடீரெனப் பாய்ந்து வந்து அவனது விழிகளை மிகுந்த பலத்துடன் பிடுங்கி வெளியே எடுக்கின்றன.
பதம் 5.26.36 : இவ்வுலகில் அல்லது இப்பிறப்பில் மிகுந்த செல்வமுடையவன் “நான் பெரிய பணக்காரன், எனக்கு இணையார்?” என்று நினைக்கிறான். அவனது பார்வை கோணலாகிறது, தனது செல்வத்தை எப்போதும், எவரேனும் கவர்ந்துவிடுவார்களோவென்று அஞ்சுகிறான். உண்மையில் அவன் தன்னைவிட உயர்ந்தவர்களைக் கூட சந்தேகப்படுகிறான். அவனது மனமும், முகமும், பணத்தை இழந்து விடுவோம் என்னும் நினைவில் வறண்டு போகிறது எனவே அவன் எப்போதும் ஒரு கொடிய பேய் போன்று காட்சியளிக்கிறான். எந்த வழியிலும் அவனால் உண்மை இன்பம் பெறமுடியாமல் போகிறது மேலும் கவலையிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பதையும் அவன் அறியாதவனாகிறான். செல்வத்தை ஈட்டுவது, அதிகரிப்பது, பாதுகாப்பது போன்றவற்றிற்காக அவன் பாவம் செய்கின்ற காரணத்தினால், அவன் இறந்தவுடன் சூசீமுகம் என்னும் நரகத்தில் போடப்படுகிறான் அங்கே அவன் யமராஜனின் தூதர்களால் உடலெங்கும் துணி நெய்வதற்காக நெசவாளர்கள் செய்வதுபோல் நூலினால் நெய்யப்பட்டுத் துன்பத்திற்காளாகிறான்.
பதம் 5.26.37 : அன்பிற்குரியப் பரீட்சித்து மன்னனே, யமராஜனின் ஆட்சியில் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான நரக லோகங்கள் இருக்கின்றன. நான் குறிப்பிட்டிருக்கும் பாவிகள் அல்லது நான் குறிப்பிடாத பாவிகள் அனைவரும் அவர்கள் செய்த பாவங்களின் தன்மைகளுக்கேற்ப பல்வேறு நரகங்களைக் கண்டிப்பாக அடைந்தே தீரவேண்டும். புண்ணியம் செய்தவர்கள் தேவலோகம் என்னும் பெயருடைய மேல் உலகங்களை அடைகின்றனர், இருந்தும் புண்ணியவாளர்கள் மற்றும் பாவிகள் இருசாரரும் தங்கள் தங்கள் பாவ, புண்ணியத்தின் பலன்கள் தீர்ந்தவுடன் மீண்டும் இப்பூமிக்கே திரும்பி வருகின்றனர்.
பதம் 5.26.38 : ஆரம்பத்தில் (ஸ்ரீமத் பாகவதம் இரண்டு மற்றும் மூன்றாவது காண்டங்கள்) எவ்வாறு ஒருவன் விடுதலைப் பாதையில் முன்னேற முடியும் என்பதை விளக்கியிருக்கிறேன். புராணங்களில் ஒரு முட்டையினைப் போன்றிருக்கும் பிரபஞ்சத் தோற்றமானது பதினான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது என்று விளக்கப்படுகின்றது. இப்பெரிய வடிவமே பகவானது சக்தி மற்றும் அவரது குணங்களால் உண்டாக்கப்பட்ட அவரது புற உடலாகக் கருதப்படுகின்றது. பொதுவாக இது விராட ரூபம் என்றழைக்கப்படுகின்றது. பகவானின் புறவடிவத்தினைப் பற்றி ஒருவன் மிகுந்த நம்பிக்கையுடன் பாகவத தர்மத்தினை அல்லது கிருஷ்ண உணர்வினைப் பரப்புவதற்காகப் படித்தாலும், கேட்டாலும் பிறருக்கு எடுத்துக் கூறினாலும் ஆன்மீக உணர்வில், கிருஷ்ண உணர்வில் அவன் கொண்ட நம்பிக்கையும், பக்தியும் படிப்படியாக வளர்ச்சியடைகின்றது. இவ்வுணர்வினை வளர்ப்பது கடினமாக இருந்தபோதிலும் இம்முறையினாலேயே ஒருவன் தன்னைத் தூய்மை செய்து கொள்ளவும், பரமமெய்ப்பொருள் பற்றிய உணர்விற்குப் படிப்படியாக வரவும் முடியும்.
பதம் 5.26.39 : பந்தப்பட்ட வாழ்க்கைப் பாதையில் பற்றின்றி விடுதலையில் பற்றுக்கொண்டு விடுதலைப் பாதையினை மேற்கொண்டவன் யதி அல்லது பக்தன் என்றழைக்கப்படுகிறான். இப்படிப்பட்டவன் முதலில் பகவானின் பிரபஞ்ச வடிவமான விராட ரூபத்தினைப் பற்றி சிந்திப்பதின் மூலம் முதலில் தனது மனதினைக் கட்டுப்படுத்த வேண்டும். பின்னர் படிப்படியாகப் பகவான் கிருஷ்ணரின் ஆன்மீக வடிவத்தினை (சச் சித் ஆனந்த விக்ரஹம்) நினைத்தல் வேண்டும். இவ்விரு வடிவங்களைப் பற்றியும் முதலில் நன்கு கேட்டு அறிந்த பின்பே இவ்வாறு சிந்தித்தல் வேண்டும். இதன்மூலம் ஒருவனது மனம் சமாதியில் நிலை பெறுகிறது. பக்தித் தொண்டினால் மட்டுமே, பக்தர்களின் இலக்கானப் பகவானின் ஆன்மீக வடிவத்தினை ஒருவனால் உணரமுடியும். இதனால் அவன் வாழ்க்கை வெற்றி பெறுகின்றது.
பதம் 5.26.40 : அன்புக்குரிய அரசனே, இப்போது நான் உனக்கு, இப்பூமி, பிற உலகங்கள், அவற்றிலுள்ள நிலப்பகுதிகள் (வர்ஷங்கள்) நதிகள், மலைகள், போன்றவற்றை விளக்கியிருக்கிறேன். மேலும், வானம், சமுத்திரங்கள் பாதால லோகங்கள், நரக லோகங்கள், நட்சத்திர மண்டலங்கள் பற்றியும் கூட விளக்கியிருக்கிறேன். இவையெல்லாம் சேர்ந்தே பகவானின் மிகப் பெரிய பௌதீக வடிவம் என்றும் விராட ரூபத்தினை உண்டாக்குகின்றன. அதன் மீதே எல்லா உயிர்வாழிகளும் இருக்கின்றன. இவ்வாறு நான் உனக்குப் பகவானது புறஉடலின் அற்புதவடிவினைப் பற்றி விளக்கியிருக்கின்றேன்