அத்தியாயம் – 25
பகவான் அனந்ததேவரின் பெருமைகள்
பதம் 5.25.1
ஸ்ரீ ஸுக-உவாச
தஸ்ய மூல-தேஸே த்ரிம்ஸாத்-யோஜன-ஸஹஸ்ராந்தர ஆஸ்தே யா
வை கலா பகவதஸ் தாமஸு ஸமாக்யாதானந்த இதி ஸத்வதீயா த்ரஷ்ட்ரு-
த்ருஸ்யயோ: ஸங்கர்ஷணம் அஹம் இதி அபிமான- லக்ஷணம் யம்
ஸங்கர்ஷணம் இதி ஆசக்ஷதே
ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; தஸ்ய—பாதால லோகத்தின்; மூல-தேஸே—அடித்தளத்திற்கும் கீழே உள்ள பிரதேசம்; த்ரிம்ஸத்—முப்பது; யோஜன—எட்டு மைல் அளவுடையது; ஸஹஸ்ர-அந்தரே—ஒராயிரம் இடைவெளியில்; ஆஸ்தே—இருக்கிறது; யா—இது; வை—உண்மையில்; கலா—ஒர் விரிவின் விரிவு; பகவத—முழுமுதற்கடவுளின்; தாமஸு:—இருள் தொடர்புடைய; ஸமாக்யாதா—அழைக்கப்படுகிறது; அனந்த—அனந்தன்; இதி—இவ்வாறு; ஸாத்வதீயா:—பக்தர்கள்; த்ரஷ்ட்ரு-த்ருஸ்யயோ:—ஜடம் மற்றும் ஆவி; ஸங்கர்ஷணம்—ஒருங்கிணைந்து இழுத்தல்; அஹம்—நான்; இதி—இவ்வாறு; அபிமான—தனது கருத்தினால்; லக்ஷணம்—அடையாளம் கொண்டு; யம்—இவரை; ஸங்கர்ஷணம்—சங்கர்ஷணர்; இதி—இவ்வாறு; ஆசக்ஷதே—கற்ற அறிஞர்கள் விளக்குகின்றனர்.
ஸ்ரீ சுகதேவகோஸ்வாமி பரீக்ஷித்து மகாராஜாவிடம் கூறினார் அன்பார்ந்த மன்னனே சற்றேறத்தாழ பாதால லோகத்திற்குக் கீழே 240,000 மைல்கள் தூரத்தில் முழுமுதற் கடவுளின் மற்றொரு அவதாரம் இருக்கின்றனர். அவர் பகவான் விஷ்ணுவின் அவதாரமான பகவான் அனந்தன் அல்லது பகவான் சங்கர்ஷணர் என்றழைக்கப்படுகின்றார். அவர் எப்போதும் உன்னத நிலையிலேயே இருக்கின்றார். அவர் தமோ குணத்தின் தெய்வமான சிவபெருமானால் வணங்கப்படுகின்ற காரணத்தினால் சிலசமயம் தாமஸு என்றழைக்கப்படுகின்றார். பகவான் அனந்தன் உயிர்வாழிகளின் வீண் ஆணவமாகவும் இருக்கின்றார். பந்தப்பட்ட உயிர்வாழி “நானே அனுபவிப்போன், இவ்வுலகம் என்னால் அனுபவிக்கப்படுவதற்கானது” என்று கருதும்பொழுது வாழ்வின் இக்கருத்து அவனுக்கு சங்கர்ஷணரால் போதிக்கப்படுகிறது. இவ்வாறு இகஉலகில் உள்ள பந்தப்பட்ட ஆத்மா தன்னைப் பரமபுருஷப் பகவானாகக் கருதுகிறான்.
பதம் 5.25.2
யஸ்யேதம் க்ஷிதி- மண்டலம் பகவதோ ‘னந்த-மூரத்தே: ஸஹஸ்ர-
ஸிரஸ ஏகஸ்மின்ன ஏவ ஸுர்ஷ்ணி த்ரிய மாணம் ஸித்தார்த இவ
லக்ஷ்யதே
யஸ்ய—அவரது; இதம்—இந்த; க்ஷிதி-மண்டலம்—பிரபஞ்சம்; பகவத—முழுமுதற்கடவுள்; அனந்த-மூர்தே—அனந்த தேவன் வடிவில்; ஸஹஸ்ர-ஸிரஸ:—ஆயிரக்கணக்கானத் தலைகளையுடையவர்; ஏகஸ்மின்—ஒன்றின் மேல்; ஏவ—மட்டும்; ஸுர்ஷ்ணி—தலை; த்ரியமாணம்—நிறுத்தப்பட்டிருக்கின்றது; ஸித்தார்த்-இவ—ஒரு வெள்ளைக் கடுகுவிதை போல்; லக்ஷியதே—அதே காணப்படுகின்றது.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இப்பெரிய பிரபஞ்சம் பகவான் அனந்ததேவனின் தலைகளுள் ஒன்றில் ஒரு சிறு வெள்ளைக் கடுகுவிதை போல் இருக்கின்றது. பகவான் அனந்தனின் ஒரு தலையுடன் ஒப்பிடும்பொழுது அது ஒரு தூசு போன்றதாகும்.
பதம் 5.25.3
யஸ்ய ஹ வா இதம் ஹாலேனோபஸஞ்ஜீஹிர்ஷதோ ‘மர்ஷ-
விரசித – ருசிர ப்ரமத்-ப்ருவோர் அந்தரேண ஸாங்கர்ஷணோ நாம ருத்ர
ஏகாதஸ- வ்யூஹஸ்த்ரி- அக்ஷஸ் த்ரி – ஸிகம் ஸுலமே உத்தம்பயன்ன
உததிஷ்டத்
யஸ்ய—அவரது; ஹ வா—உண்மையில்; இதம்—இந்த (பௌதீக உலகம்); காலேன—உரியகாலத்தில்; உபஸஞ்ஜீர்ஷத:—அழிப்பதற்கு விரும்புகின்ற; அமர்ஷ—சினத்தினால்; விரசித—உண்டான; ருசிர—மிக அழகிய; ப்ரமத்—அசைகின்ற; ப்ருவோ—இரு புருவங்கள்; அந்தரேண—இடையிலிருந்து; ஸாங்கர்ஷண நாம—சாங்கரஷணர் பெயரில்; ருத்ர—சிவபெருமானின் அவதாரம்; ஏகாதஸ-வ்யூஹ—அவருக்கு பதினோரு விரிவுகள்; த்ரி-அக்ஷ—மூன்று விழிகள்; த்ரி-ஸிகம்—மூன்று கூர்மையான முனைகளையுடைய; ஸுலம்—சூலம்; உத்தம்பயன்—உயர்த்திக் கொண்டு; உததிஷ்டத்—எழுந்தார்.
யுக அழிவுக் காலத்தில் பகவான் அனந்த தேவர் முழுப்படைப்பையும் அழிக்க வேண்டுமென்று விரும்பும்பொழுது புருவங்களுக்கு மத்தியிலிருந்து மூன்று விழிகளுடைய ருத்திரர் திரிசூலம் ஏந்தியபடித் தோன்றுகிறார். சங்கர்ஷணர் என்றறியப்படும் இந்த ருத்திரர் பதினோரு ருத்திரர்களின் உருவம் அல்லது சிவபெருமானின் அவதாரம் ஆவார். படைப்பு முழுவதையும் அழிப்பதற்காக அவர் தோன்றுகிறார்.
பதம் 5.25.4
யஸ்யாங்க்ரி-கமல-யுகலாருண-விஷத-நக-மணிஷண்ட-மண்ட
லேஷ்வ அஹி-பதய: ஸஹ ஸாத்வ-தர்ஷபைர் ஏகாந்த- பக்தி யோகேனா
வனமந்த: ஸ்வ- வதணானி பரிஸ்புரத்- குண்டல ப்ரபா மண்டித கண்ட
ஸ்தலானி அதி-மனோஹராணி ப்ரமுதித-மனஸ கலு விலோகயந்தி
யஸ்ய—அவரது; அங்க்ரி-கமல—தாமரை மலரின்; யுகல—இரண்டின்; அருண-விஷத—இளஞ்சிவப்பு நிறத்தில் ஒளிரும்; நக—நகங்கள்; மணி-ஷண்ட—இரத்தினங்கள் போல்; மண்டலேஷு—வட்டவடிவ மேற்பகுதிகளில்; அஹி-பதய—பாம்புகளின் தலைவர்கள்; ஸஹ—உடன்; ஸாத்வத-ருஷபை—சிறந்த பக்தர்கள்; ஏகாந்த-பக்தி யோகேன—மாறாத தூய பக்தியுடன்; அவனமந்த—வந்தனங்களை அர்ப்பணித்து; ஸ்வவதணானி—அவர்களது முகங்கள்; பரிஸ்புரத்—மின்னுகின்ற; குண்டல—செவிக்குண்டலங்கள்; ப்ரபா—ஒளியினால்; மண்டித—அலங்கரிக்கப்பட்டு; கண்ட-ஸ்தலானி—அவர்களது கன்னங்கள்; அதி-மனோஹராணி—மிக அழகிய; ப்ரமுதித-மனஸ:—அவர்களது மனங்கள் புத்துணர்ச்சி பெறுகின்றன; கலு—உண்மையில்; விலோகயந்தி—அவர்கள் காண்கின்றனர்.
பகவானின் தாமரைத் திருவடிகள் இரண்டிலும் உள்ள சிவந்த நகங்கள் கண்ணாடி போல் பட்டைத்தீட்டப்பட்ட மதிப்பு மிக்க இரத்தினங்கள் போன்றவையாகும். தூய பக்தர்களும், நாகங்களின் தலைவர்களும் பகவான் சங்கர்ஷணருக்குப் பக்தியுடன் தங்கள் வந்தனங்களை அர்ப்பணிக்கும் பொழுது அவர்கள் பகவானின் கால் நகங்களில் தெரியும் தமது முகங்களைக் கண்டு பேருவகை அடைகின்றனர். அவர்களது கன்னங்கள் செவிக்குண்டலங்களினால் அழகு செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களது முகத்தின் அழகு காண்பதற்கு மிகவும் இனிமையளிக்கின்றன.
பதம் 5.25.5
யஸ்யைவ ஹி நாக-ராஜ-குமார்ய ஆஸிஷ ஆஸாஸானாஸ் சார்வ- அங்க –
வலய விலஸித – விஸத –விபுல- தவல- ஸுபக-ருசிர-புஜ-ரஜத-
ஸ்தம்-பேஷு அகுரு-சந்தன-குங்கும பங்கானுலேபேனாவலிம்ப
மானாஸ் தத் அபிமர்ஸனோன்மதித-ஹ்ருதய-மகர-த்வஜாவேஸ-ருசிர-
லலித-ஸ்மிதாஸ் தத்-அனுராகமத-முதித-மத- விகூதர்ணிதாருண கரு
ணாவலோக நயன- வதனாரவிந்தம் ஸவ்ரீடம் கில விலோகயந்தி
யஸ்ய—அவரது; ஏவ—உறுதியாக; ஹி—உண்மையில்; நாக-ராஜ-குமார்ய—நாக ராஜாக்களின் மனமாகாத இளவரசிகள்; ஆஸிஷ—ஆசிக; ஆஸாஸானா—நம்பிக்கைக் கொண்டு; சாரு—அழகிய; அங்க-வலய—அங்க வலயத்தின் மேல்; விலஸித—மின்னுகின்ற; விஸத—குற்றமற்ற; விபுல—நெடிய; தவல—வெண்மை; ஸுபக—நல்யோகத்தினைக் குறிப்பிடுகின்றது; ருசிர—அழகிய; புஜ—கரங்களின் மீது; ரஜத-ஸ்தம்பேஷு—வெள்ளித் தூண்கள் போன்று; அகுரு—அகிலின்; சந்தன—சந்தனத்தின்; குங்கும—குங்குமம்; பங்க—பொடியிலிருந்து; அனுலேபேன—மையுடன்; அவலிம்பமானா—பூசுதல்; தத்-அபிமர்ஸன—அவரது அங்கங்களின் தொடர்பினால்; உன்மதித—கிளர்ச்சியடைந்து; ஹ்ருதய—அவர்கள் இதயங்களில்; மகர-த்வஜ—மன்மதனின்; ஆவேஸ—புகுந்தினால்; ருசிர—அழகிய; லலித—இனிய; ஸ்மிதா—அவரது புன்னகை; தத்—அவரது; அனுராக—பற்றின்; மத—போதையினால்; முதித—மகிழ்ச்சி கொண்டு; மத—அன்பு கொண்ட போதையினால்; விகூர்ணித—உருளுவது; அருண—சிவந்த; கருண-அவலோக—அன்புடன் நோக்கி; நயன—விழிகள்; வதன—முகம்; அரவிந்தம்—தாமரை மலர் போன்ற; ஸ-வ்ரீடம்—நாணத்துடன்; கில—உண்மையில்; விலோகயந்தி—அவர்கள் காண்கின்றனர்.
பகவான் அனந்தனின் கரங்கள் கவர்ச்சிகரமாக நீண்டும் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன. மேலும் அவை முற்றிலும் ஆன்மீகமானவையும் ஆகும். அவை வெண்ணிறமாக இருந்தமையினால் வெள்ளித் தூண்களைப் போல் விளங்கின. நாக ராஜாக்களின் எழில்மிக்க இளவரசிகள் பகவானின் மங்கள அருள் வேண்டி அகில, சந்தனம், குங்குமம் போன்றவற்றை அவர் கரங்களில் பூசுகின்றனர். அவரது அங்கத்தைத் தொடுவதினால் அவர்களுக்கும் காம இச்சை எழுகின்றது. அவர்களது மனநிலையைப் புரிந்து கொண்ட பகவான் இளவரசிகளை நோக்கிக் கருணையுடன் புன்னகை புரிகின்றார். தங்களது இச்சைகளை அவர் அறிந்து கொண்டதை எண்ணி அவர்கள் நாணமடைகின்றனர். பின்னர் அவர்கள் எழில்மிகு புன்னகைப் புரிந்த வண்ணம் பகவானின் செந்தாமரை முகத்தை நிமிர்ந்து நோக்குகின்றனர். அம்முகமோ போதையினால் சுழலும் சிவந்த விழிகளினால் அழகு செய்யப்பட்டிருப்பதோடு, தனது பக்தர்கள் மீது கொண்ட அன்பினால் பேருவகை பூத்திருக்கும்.
பதம் 5.25.6
ஸ ஏவ பகவான் அனந்தோ ‘னந்த-குணார்ணவ ஆதி-தேவ உபஸம்
ஹ்ருதா மர்ஷ-ரோஷ- வேகோ லோகானாம் ஸ்வஸ்தய ஆஸ்தே
ஸ—அந்த; ஏவ—உறுதியாக; பகவான்—முழுமுதற்கடவுள்; அனந்த—அனந்ததேவன்; அனந்த-குண-அர்ணவ—அளவற்ற உன்னதக் குணங்களின் கடல் ஆவார்; ஆதி-தேவ—ஆதி தேவன் அல்லது ஆதி முழுமுதற் கடவுளிடமிருந்து வேறுபாடில்லாதவன்; உபஸம்ஹ்ருத—கட்டுப்படுத்தி இருக்கின்றார்; அமர்ஹ—அவரது பொறுமை இன்மை; ரோஷ—சீற்றம்; வேக—வேகம்; லோகானாம்—எல்லா உலகில் உள்ளவர்களின்; ஸ்வஸ்தயே—நன்மைக்காக; ஆஸ்தே—இருக்கிறார்.
பகவான் சங்கர்ஷணர் அளவற்ற ஆன்மீகக் குணங்களின் கடல் ஆவார். அதனால் அவர் அனந்த தேவன் என்றழைக்கப்படுகின்றார். அவர் முழுமுதற் கடவுளிடமிருந்து வேறுபாடுடையவர் அல்லர். இப்பௌதீக உலகில் உள்ள உயிர்வாழிகள் அனைவரின் நன்மைக்காக அவர் தனது சினத்தையும், பொறுமையின்மையினையும் அடக்கிக் கொண்டு அவரது இருப்பிடத்தில் இருக்கின்றார்.
பதம் 5.25.7
த்யாயமான ஸுராஸுரோரக-ஸித்த-கந்தர்வ-வித்யாதர- முனிகணைர்
அனவரதோ-மத-முதித விக்ருத- விஹ்வல-லோசன: ஸுலலித முகரி
காம்ருதே னாப்யாயமான: ஸ்வ-பார்ஷத-விபுத-யூத-பதீன் அபரிம்
லான-ராஜ-நவ துளஸிகாமோத மத்வ ஆஸவேன மாத்யன் மதுகர-
வ்ராத-மதுர-கீத-ஸ்ரீயம் வைஜயந்தீம் ஸ்வாம் வனமாலாம் நீல வாஸா
ஏக-குண்டலோ ஹல-ககுடி க்ருத-ஸுபக-ஸுந்தர-புஜோ பகவான்
மஹேந்த்ரோ வாரணேந்த்ர இவ காஞ்சனீம் கக்ஷாம் உதார-லீலோ
பிபர்தி
த்யாயமான—தியானம் செய்து; ஸுர—தேவர்களின்; அஸுர—அசுரர்கள்; உரக—பாம்புகள்; ஸித்த—சித்த லோகத்தைச் சேர்ந்தவர்கள்; கந்தர்வ—கந்தர்வ லோகத்தைச் சேர்ந்தவர்கள்; வித்யாதர—வித்தியாதரர்கள்; முனி—முனிவர்கள்; கணை—கணங்களால்; அனவரத—தொடர்ந்து; மத-முதித—போதையினால் உவகை கொண்டு; விக்ருத—இங்குமங்கும் அசைகின்றன; விஹ்வல—சுழல்கின்றன; லோசன—அவரது விழிகள்; ஸு-லலித—நேர்த்தியாக தொடுக்கப்பெற்ற; முகரிக—பேச்சின்; அம்ருதேன—அமிர்தத்தினால்; ஆப்யாயமான—இனிமையுற்று; ஸ்வ-பார்ஷத—அவரது துணைவர்கள்; விபுத-யூத-பதின்—பல்வேறு தேவ கூட்டங்களின் தலைவர்கள்; அமரிம்லான—தேய்தல் இல்லாத; ராக—அவரது ஒளி; நவ—என்றும் புதியது; துளஸிகா—துளசி மலர்களின்; ஆமோத—நறுமணத்தினால்; மது-ஆஸவேன—மற்றும் தேன்; மாத்யன்:—போதையுற்று; மதுகர-வ்ராத—வண்டுகளின்; மதுர-கீத—இனிமையான பாடல்; ஸ்ரீயம்—அது மிக்க எழில் செய்கின்றது; வைஜயந்தீம்—வைஜயந்தீ என்னும் மாலை; ஸ்வாம்—அவனுடையது; வனமாலாம்—மாலை; நீல-வாஸா—நீல ஆடைகள் அணிந்து; ஏக-குண்டல—ஒரே ஒரு செவிக்குண்டலம் அணிந்து; ஹல-ககுடி—ஏர்க்கலப்பை; க்ருத—இட்டு; ஸுபக—மங்களகரமான; ஸுந்தர—அழகிய; புஜ—கரங்கள்; பகவான்—முழுமுதற்கடவுள்; மஹா-இந்தர:—தேவேந்திரன்; வாரண-இந்தர—யானை; இவ—போன்று; காஞ்சனீம்—தங்கம்; கக்ஷாம்—அரைக்கச்சு; உதார-லீல—உன்னத லீலைகளில் ஈடுபடுகின்றார்; பிபர்தி—அணிகிறார்.
சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தேவர்கள், அசுரர்கள், உரகர்கள் (நாக தேவர்கள்), சித்தர்கள், கந்தர்வர்கள், வித்தியாதரர்கள்; மாமுனிவர்கள் தொடர்ந்து பகவானுக்குத் தமது பிரார்த்தனைகளை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர் மதுவுண்ட போதையில் அவர் இருக்கின்ற காரணத்தினால் பகவான் குழப்பமுற்றவராகக் காணப்படுகின்றார். அவரது விழிகளோ அன்றலர்ந்த மலர்கள் போல் தோன்றி அங்குமிங்கும் அசைகின்றன. அவர் தமது வாயிலிருந்து வரும் இனிய ஒலியினால் தனது துணைவர்களை தேவர் தலைவர்களை இனிமைப்படுத்துகிறார். நீல நிற ஆடையும், காதில் ஒற்றைக் குண்டலமும் அணிந்திருக்கும் பகவான், தனது முதுகில் தனது அழகிய உறுதிமிக்கக் கரங்களில் ஏர்க்கலைப்பையினை வைத்திருக்கின்றார். அவர் ஒரு தங்க அரைக்கச்சினைத் தனது இடுப்பில் அணிந்திருக்கின்றார். மேலும் எப்போதும் புதிதாக இருக்கும் துளசி மலர்களினாலான வைஜயந்தி மாலையினைத் தனது கழுத்தில் அணிந்திருக்கின்றார். துளசி மலர்களின் தேன் போன்ற இனிய நறுமணத்தில் போதையுற்றிருக்கும் வண்டுகள் அம்மாலையினைச் சுற்றி இனிய ஓசை எழுப்புகின்றன. இதனால் அது மேலும் மேலும் எழில் பெறுகின்றது. இவ்வாறு பகவான் தனது மிகுந்த பெருந்தன்மைமிக்க லீலைகளை அனுபவித்து மகிழ்கின்றார்.
பதம் 5.25.8
ய ஏஷ ஏவம் அனுஸ்ருதோ த்யாயமானோ முமுக்ஷீணாம் அநாதி -கால-
கர்ம-வாஸன-க்ரதிதம் அவித்யாமயம் ஹ்ருதய-க்ரந்திம் ஸத்த்வ-ரஜஸ்
தமோமயம் அந்தர் ஹ்ருதயம் கத ஆஸு நிர்பிநத்தி தஸ்யானுபாவான்
பகவான் ஸ்வாயம்புவோ நாரத: ஸஹ தும்புருணா ஸபாயாம் ப்ரஹ்மண:
ஸம்ஸ்லோகயாம் ஆஸ
ய—இவர்; ஏஷ—இந்த; ஏவம்—இவ்வாறு; அனுஸ்ருத—உண்மையான குருவிடமிருந்து கேட்டு; த்யாயமான—தியானம் செய்து; முமுக்ஷீணாம்—பந்தப்பட்ட வாழ்க்கையிலிருந்து விடுதலை விரும்புவோர்; அநாதி—அநாதியான காலந்தொட்டு; கால—காலம்; கர்ம-வாஸனா—பெளதீகச் செயல்களுக்கான ஆசையினால்; க்ரதிதம்—இறுகக்கட்டப்பட்டு; அவித்யா-மயம்—மாயா சக்தியினால் ஆன; ஹ்ருதய-க்ரந்திம்—இதயத்தில் உள்ள முடிச்சு; ஸத்த்வ-ரஜ: தம-மயம்—ஜட இயற்கையின் முக்குணங்களினாலான; அந்த-ஹ்ருதயம்—இதயத்தினுள்ளே; கத—இருக்கின்றன; ஆஸு—விரைவில்; நிரிபிநத்தி—துண்டிக்கிறார்; தஸ்ய—சங்கர்ஷணரின்; அனுபாவான்—பெருமைகள்; பகவான்—மிகவும் சக்திவாய்ந்த; ஸ்வாயம்புவ—பிரம்மதேவனின் புதல்வர்; நாரத—மாமுனிவர் நாரதர்; ஸஹ—உடன்; தும்புருணா—தும்புரு என்னும் இசைக்கருவியினை மீட்டிக் கொண்டு; ஸபாயாம்—சபையில்; ப்ரஹ்மண—பிரம்ம தேவனின்; ஸம்ஸ்லோகயாம்-ஆஸ—சுலோகங்களில் வணங்கப்படுகின்றது.
பெளதீக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று தீவிரமாக நினைக்கும் மனிதர்கள் குரு பரம்பரையில் வந்த ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து அனந்த தேவரின் பெருமைகளைக் கேட்டார்கள் எனினும், சங்கர்ஷணரைப் பற்றி எப்போதும் தியானம் செய்தார்களேனினும் பகவான் அவர்களது இதயங்களிலே புகுந்து ஜட இயற்கைக் குணங்களின் மாசுக்கள் அனைத்தையும் முற்றிலும் நீக்கி பலன் தரும் செயல்களின் மூலம் ஜட இயற்கையினை ஆளவேண்டும் என்று ஆதிகாலந்தொட்டே அவர்களது இதயத்தில் மிக இறுக்கமாகப் போடப்பட்டிருக்கும் ஆசை முடிச்சினைத் தூள்தூளாகப் போடும் வண்ணம் துண்டிக்கவும் செய்கிறார். பிரம்மதேவனின் மைந்தரான நாரத முனிவர் எப்போதும் தனது தந்தையின் சபையில் பகவான் அனந்ததேவரின் புகழினைப் பாடிக் கொண்டே இருக்கின்றார். அங்கே அவர் தானே இயற்றிய ஆனந்தமயாமானப் பாடல்களை தும்புரு என்னும் யாழின் துணையோடு (அல்லது தும்புரு என்னும் தேவப்பாடகனின் துணையோடு) பாடுகின்றார்.
பதம் 5.25.9
உத்பத்தி-ஸ்திதி-லய-ஹேதவோ’ஸ் கல்பா:
ஸத்வாத்யா: ப்ரக்ருதி-குணா யத்-ஈக்ஷயாஸன்
யத் ரூபம் த்ருவம் அக்ருதம் யத் ஏகம் ஆத்மன்
நானாதாத் கதம் உ ஹ வேத தஸ்ய வர்த்ம
உத்பத்தி—படைப்பின்; ஸ்திதி—காத்தல்; லய—மற்றும் அழித்தல்; ஹேதவ—ஆதி காரணங்கள்; அஸ்ய—இப்பௌதீக உலகில்; கல்பா—செயல்படும்திறன்; ஸத்த்வ-ஆத்யா:—சத்துவ குணத்தினால் தலைமை தாங்கப்பட்ட; ப்ரக்ருதி-குணா—ஜட இயற்கையின் முறைகள்; யத்—அவரது; ஈக்ஷயா—பார்வையினால்; ஆஸன்—ஆனது; யத்-ரூபம்—அவரது வடிவம்; த்ருவம்—அளவிறந்தது; அக்ருதம்—படைக்கப்பட்டதன்று; யத்—இவர்; ஏகம்—ஒருவரே; ஆத்மன்—அவரிடத்தில்; நானா—பல்வேறாக; அதாத்—வெளிப்பட்டிருக்கின்றது; கதம்—எவ்வாறு; உ ஹ—உறுதியாக; வேத—புரிந்து கொள்ளக்கூடும்; தஸ்ய—அவருடைய; வர்த்ம—பாதை;
அவரது பார்வையினால் முழுமுதற் கடவுள் ஜட இயற்கையினை, பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல், என்பவற்றின் காரணமாகச் செயல்பட வைக்கின்றார். பரமாத்மா அளவற்றவர் மற்றும் ஆதியற்றவரும் ஆவார். அவர் ஒருவரே என்ற போதிலும் தன்னைப் பல்வேறு வடிவங்களாக வெளிப்படுத்தி இருக்கின்றார். பரம்பொருளின் பாதையினை மனித சமுதாயத்தால் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
பதம் 5.25.10
மூர்திம் ந: புரு-க்ருபயா பபார ஸத்த்வம்
ஸம்ஸுத்தம் ஸத்-அஸத் இதம் விபாதி தத்ர
யல் லீலாம் ம்ருக-பதிர் ஆததே ‘வைத்யாம்
ஆதாதும் ஸ்வஜன-மனாம்ஸி உதார-வீர்ய:
மூர்திம்—முழுமுதற்கடவுளின் பல்வேறு வடிவங்கள்; ந:—நமக்கு; புரு-க்ருபயா—அளவற்றக் கருணையின் காரணமாக; பபார—காட்சிப்படுத்தப்படுகிறது; ஸத்த்வம்—தோற்றம்; ஸம்ஸுத்தம்—முற்றிலும் உன்னதமான; ஸத்-அஸத்-இதம்—பௌதீகத் தோற்றத்தின் காரண, விளைவுகள்; விபாதி—ஒளிர்கிறது; தத்ர—அவரிடத்தில்; யத்-லீலம்—அவரது லீலைகள்; ம்ருக-பதி—சிங்கம் போன்றிருக்கும் அனைத்து உயிர்வாழிகளின் தலைவர் (எல்லா மிருகங்களின் எஜமானர்); ஆததே—கற்பித்தல்; அவைத்யாம்—பெளதீக மாசின்றி; ஆதாதும்—வெல்வதற்கு; ஸ்வ-ஜன-மனாம்ஸி—அவரது பக்தர்களின் மனங்கள்; உதார-வீர்ய—அவர் மிகுந்த பெருந்தன்மையும், சக்தியும் உடையவராவர்.
நுண்ணிய மற்றும் ஜட பூதங்களின் வெளிப்பாடு முழுமுதற் கடவுளிடத்திலேயே தோன்றுகின்றன. அவரது பக்தர்களின் மீது கொண்ட அளவற்ற கருணையினால் அவர்பால் வேறு வடிவங்களை வெளிப்படுத்துகின்றார், அவையனைத்தும் உன்னதமானவையே ஆகும். பரம புருஷ பகவான் பெருங்குணமிக்கவர் என்பதோடு யோகஸித்திகள் அனைத்தையும் தன்னிடத்தே வைத்திருக்கின்றார். தனது பக்தர்களின் மனங்களை வென்று அவர்களது இதயத்திற்கு மகிழ்ச்சியளிப்பதற்காக அவர் பல்வேறு அவதாரங்களில் தோன்றுகின்றார். மேலும் பல்வேறு லீலைகளை வெளிப்படுத்துகின்றார்.
பதம் 5.25.11
யன்-நாம ஸ்ருதம் அனுகீர்தயேத் அகஸ்மாத்
ஆர்தோ வா யாதி பதித: ப்ரவம்பனாத் வா
ஹந்தி அம்ஹ: ஸபதி ந்ருணாம் அஸேஷம் அன்யம்
கம் ஸேஷாத் பகவத ஆஸ்ரயேன் முமுக்ஷு:
யத்—அவரது; நாம—புனித நாமம்; ஸ்ருதம்—கேட்டல்; அனுகீர்தயேத்—ஓதினாலோ, ஜெபித்தாலோ; அகஸ்மாத்—விபத்தினால்; ஆர்த—துன்புற்ற ஒருவன்; வா—அல்லது; யதி—இவ்வாறாயின்; பதித:—வீழ்ந்துபட்ட ஒருவன்; ப்ரவம்பனாத்—வேடிக்கையாக; வா—அல்லது; ஹந்தி—அழிக்கின்றது; அம்ஹ—பாவம்; ஸபதி—அந்நிகழ்ச்சி; ந்ருணாம்—மனித சமுதாயத்தின்; அஸேஷம்—அளவற்ற; அன்யம்—பிற; கம்—என்ன; ஸேஷாத்—பகவான் சேஷனைவிட; பகவத—முழுமுதற்கடவுளின்; ஆஸ்ரஅயத்—அடைக்கலம் புக வேண்டும். முமுக்ஷு—விடுதலை விரும்பும் எவரும்.
இழிந்தவனாயினும், துன்புற்றவனாயினும், அவன் யாராக இருப்பினும் பகவானின் புனித நாமத்தினை ஒதினானென்றால், அதனை உண்மையான ஆன்மீக குருவிடம் இருந்து கேட்டானென்றால் அவன் உடனே தூய்மையடைகிறான். அதனால் பௌதீகப்பிடியிலிருந்து விடுதலை விரும்பும் ஒருவன் எவ்வாறு பகவான் சேஷனின் நாமத்தை ஒதாமல் தவிர்க்க முடியும்? வேறு யாரை அவன் சரண்புக முடியும்?
பதம் 5.25.12
மூர்தனி அர்பிதம் அணுவத் ஸஹஸ்ர-மூர்தனா
பூ-கோளம் ஸகிரி-ஸரித்-ஸமுத்ர-ஸத்த்வம்
ஆனந்த்யாத் அநிமித-விக்ரமஸ்ய பூம்ன:
கோ வீர்யாணி அதி கணயேத் ஸஹஸ்ர ஜிஹ்வ:
மூர்தனி—அவரது தலை அல்லது படத்தின் மீது; அர்பிதம்—பொருத்தப்பட்ட; அணு-வத்—அணுவைப் போன்று; ஸஹஸ்ர- மூர்தன:—ஆயிரக்கணக்கானத் தலைகளையுடைய அனந்தனின்; பூ-கோளம்—இப்பிரபஞ்சம்; ஸ-கிரி-ஸரித்-ஸமுத்ர-ஸத்த்வம்—ஏராளமான மலைகள், மரங்கள், கடல்கள், உயிர்வாழிகளுடன்; ஆனந்த்யாத்—அளவற்ற காரணத்தினால்; அநிமித-விக்ரமஸ்ய—அவரது சக்தி அளவிடற்கரியதாகும்; பூம்ன:—பரமபுருஷ பகவான்; க:—யார்; வீர்யாணி—சக்திகள்; அதி—உண்மையில்; கணயேத்—எண்ணுவதற்கு; ஸஹஸ்ர-ஜிஹ்வ—ஆயிரக்கணக்கான நாக்குகளைப் பெற்றிருப்பினும்.
பகவான் அளவிடற்கரியவர் ஆதலினால் அவரது சக்தியை யாராலும் அளவிட முடியாது. ஏராளமான மலைகள், நதிகள், கடல்கள், மரங்கள், உயிர்வாழிகளையுடைய இப்பிரபஞ்சம் முழுவதும் அவரது ஆயிரக்கணக்கானத் தலைகளுள் ஒன்றின் மீது ஒர் அணுவைப் போல் இருக்கின்றது. அதனால் யாரேனும் ஒருவன், அவன் ஆயிரம் நாக்குகளை உடையவனாக இருந்த போதிலும் பகவானின் பெருமைகளை அவனால் விளக்க முடியுமா?
பதம் 5.25.13
ஏவம்-ப்ரபாவோ பகவான் அனந்தோ
துரந்த–வீர்யாரு-குணானுபாவ:
மூலே ரஸாயா: ஸ்தித ஆத்ம-தந்த்ரோ
யோ லீலயா க்ஷமாம் ஸ்திதயே பிபர்தி
ஏவம்-ப்ரபாவ—அவர் மிகுந்த சக்தியுடையவர்; பகவான்—முழுமுதற்கடவுள்; அனந்த—அனந்தன்; துரந்த-வீர்ய—வெல்வதற்கரிய சக்தி; உரு—சிறந்த; குண-அனுபாவ—உன்னதக் குணங்கள் மற்றும் பெருமைகள் உடையவர்; மூலே—அடியில்; ரஸாயா:—கீழ் உலகம்; ஸ்தித—இருக்கும்; ஆத்ம-தந்த்ரோ—முற்றிலும் தன்னிறைவு; ய—இவர்; லீலயா—எளிதாக; க்ஷமாம்—பிரபஞ்சம்; ஸ்திதயே—அதன் பாதுகாப்பிற்காக; பிபர்தி—நிறுத்துகிறார்.
ஆற்றல்மிக்க அனந்ததேவரின் சிறந்த புகழ்மிக்கக் குணங்களுக்கு இறுதியே இல்லை. உண்மையில் அவரது சக்தி அளவற்றதாகும். அவர் சுய பூர்த்தியுடையவராக இருந்த போதிலும் அவர் எல்லாவற்றையும் தாங்குபவராக இருக்கின்றார். அவர் கீழ் உலகிற்கும் கீழே இருக்கின்றார். மிக எளிதில் இப்பிரபஞ்சம் முழுவதையும் தாங்கிக் கொண்டிருக்கின்றார்.
பதம் 5.25.14
ஏதோ ஹி ஏவேஹ ந்ருபிர் உபகந்தவ்யா கதயோ யதா-கர்ம-
விநிர்மிதா யதோபதேஸம் அனுவர்ணிதா: காமான் காமயமானை:
ஏதோ—இவையெல்லாம்; ஹி—உண்மையில்; ஏவ—உறுதியாக; இஹ—இப்பிரபஞ்சத்தில்; ந்ருபி—அனைத்து உயிர்வாழிகளால்; உபகந்தவ்யா—எய்தக்கூடிய; கதய—இலக்குகள்; யதா-கர்ம—ஒருவனது முன்வினைப் பயனுக்கேற்ப; விநிர்மிதா—படைக்கப்பட்டது; யதா:- உபதேஸம்—உபதேசித்தபடி; அனுவர்ணிதா:—அதற்கேற்ப விளக்கப்பட்டிருக்கிறது; காமான்—பெளதீக இன்பம்; காமயமானை—விரும்புகின்றவர்களினால்.
அன்பார்ந்த மன்னனே, எனது ஆன்மீக குருவினிடத்திலிருந்து நான் கேட்டபடி பந்தப்பட்ட ஆத்மாக்களின் ஆசைகள் மற்றும் பலன் தரும் செயல்களுக்கேற்ப, பெளதீக உலகின் படைப்புப் பற்றி உனக்கு நான் முற்றிலும் விளக்கியிருக்கின்றேன். முற்றிலும் பௌதீக ஆசைகள் நிரம்பிய அப்பந்தப்பட்ட ஆத்மாக்கள் பல்வேறு உலகங்களில் பல்வேறு நிலைகளை எய்துகின்றனர். இவ்வாறு அவர்கள் பௌதீகப் படைப்பில் வாழ்கின்றனர்.
பதம் 5.25.15
ஏதாவதீர் ஹி ராஜன் பும்ஸ: ப்ரவருத்தி-லக்ஷணஸ்ய தர்மஸ்ய விபாக-
கதயோ உச்சாவசா விஸத் ருஸா யதா-ப்ரஸ்னம் வ்யாசக்யே கிம் அன்யத்
கதயாம இதி
ஏதாவதீ—இவ்வகையில்; ஹி—உறுதியாக; ராஜன்—ஒ மன்னனே; பும்ஸ—மனித இனத்தின்; ப்ரவருத்தி-லக்ஷணஸ்ய—நாட்டத்தினால் அடையாளம் கொண்ட; தர்மஸ்ய—கடமைகளைச் செய்வதின்; விபாக-கதய—முடிவான இலக்குகள்; உச்ச-அவசா—மேல் மற்றும் கீழ்; விஸத்ருஸா:—வேறுபாடு; யதா-ப்ரஸ்னம்—நீ கேட்டபடி; வ்யாசக்யே—நான் விளக்கியிருக்கிறேன்; கிம்-அன்யத்—வேறு என்ன; கதயாம—நான் கூறுவேன்; இதி—இவ்வாறு.
அன்பார்ந்த மன்னனே, மக்கள் எவ்வாறு அவர்களது பல்வேறு ஆசைகளின்படி செயல்படுகிறார்கள் என்றும் அதன் விளைவாக அவர்கள் எவ்வாறு மேல், கீழ் உலகங்களில் பல்வேறு வகையான உடல்களைப் பெறுகின்றனர் என்பது பற்றியும் நான் இவ்வாறு விளக்கி இருக்கிறேன். நீ இவற்றைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தாய், நானோ அதிகாரம் பெற்றவர்களிடமிருந்து நான் கேட்டபடி உனக்கு விளக்கியிருக்கிறேன். இப்போது நான் வேறு என்ன சொல்வது?
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “பகவான் அனந்ததேவரின் பெருமைகள்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தைந்தாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.