அத்தியாயம் – 25
பகவான் அனந்ததேவரின் பெருமைகள்
பதம் 5.25.1 : ஸ்ரீ சுகதேவகோஸ்வாமி பரீக்ஷித்து மகாராஜாவிடம் கூறினார் அன்பார்ந்த மன்னனே சற்றேறத்தாழ பாதால லோகத்திற்குக் கீழே 240,000 மைல்கள் தூரத்தில் முழுமுதற் கடவுளின் மற்றொரு அவதாரம் இருக்கின்றனர். அவர் பகவான் விஷ்ணுவின் அவதாரமான பகவான் அனந்தன் அல்லது பகவான் சங்கர்ஷணர் என்றழைக்கப்படுகின்றார். அவர் எப்போதும் உன்னத நிலையிலேயே இருக்கின்றார். அவர் தமோ குணத்தின் தெய்வமான சிவபெருமானால் வணங்கப்படுகின்ற காரணத்தினால் சிலசமயம் தாமஸு என்றழைக்கப்படுகின்றார். பகவான் அனந்தன் உயிர்வாழிகளின் வீண் ஆணவமாகவும் இருக்கின்றார். பந்தப்பட்ட உயிர்வாழி “நானே அனுபவிப்போன், இவ்வுலகம் என்னால் அனுபவிக்கப்படுவதற்கானது” என்று கருதும்பொழுது வாழ்வின் இக்கருத்து அவனுக்கு சங்கர்ஷணரால் போதிக்கப்படுகிறது. இவ்வாறு இகஉலகில் உள்ள பந்தப்பட்ட ஆத்மா தன்னைப் பரமபுருஷப் பகவானாகக் கருதுகிறான்.
பதம் 5.25.2 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: இப்பெரிய பிரபஞ்சம் பகவான் அனந்ததேவனின் தலைகளுள் ஒன்றில் ஒரு சிறு வெள்ளைக் கடுகுவிதை போல் இருக்கின்றது. பகவான் அனந்தனின் ஒரு தலையுடன் ஒப்பிடும்பொழுது அது ஒரு தூசு போன்றதாகும்.
பதம் 5.25.3 : யுக அழிவுக் காலத்தில் பகவான் அனந்த தேவர் முழுப்படைப்பையும் அழிக்க வேண்டுமென்று விரும்பும்பொழுது புருவங்களுக்கு மத்தியிலிருந்து மூன்று விழிகளுடைய ருத்திரர் திரிசூலம் ஏந்தியபடித் தோன்றுகிறார். சங்கர்ஷணர் என்றறியப்படும் இந்த ருத்திரர் பதினோரு ருத்திரர்களின் உருவம் அல்லது சிவபெருமானின் அவதாரம் ஆவார். படைப்பு முழுவதையும் அழிப்பதற்காக அவர் தோன்றுகிறார்.
பதம் 5.25.4 : பகவானின் தாமரைத் திருவடிகள் இரண்டிலும் உள்ள சிவந்த நகங்கள் கண்ணாடி போல் பட்டைத்தீட்டப்பட்ட மதிப்பு மிக்க இரத்தினங்கள் போன்றவையாகும். தூய பக்தர்களும், நாகங்களின் தலைவர்களும் பகவான் சங்கர்ஷணருக்குப் பக்தியுடன் தங்கள் வந்தனங்களை அர்ப்பணிக்கும் பொழுது அவர்கள் பகவானின் கால் நகங்களில் தெரியும் தமது முகங்களைக் கண்டு பேருவகை அடைகின்றனர். அவர்களது கன்னங்கள் செவிக்குண்டலங்களினால் அழகு செய்யப்பட்டிருக்கின்றன. அவர்களது முகத்தின் அழகு காண்பதற்கு மிகவும் இனிமையளிக்கின்றன.
பதம் 5.25.5 : பகவான் அனந்தனின் கரங்கள் கவர்ச்சிகரமாக நீண்டும் வளையங்களால் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன. மேலும் அவை முற்றிலும் ஆன்மீகமானவையும் ஆகும். அவை வெண்ணிறமாக இருந்தமையினால் வெள்ளித் தூண்களைப் போல் விளங்கின. நாக ராஜாக்களின் எழில்மிக்க இளவரசிகள் பகவானின் மங்கள அருள் வேண்டி அகில, சந்தனம், குங்குமம் போன்றவற்றை அவர் கரங்களில் பூசுகின்றனர். அவரது அங்கத்தைத் தொடுவதினால் அவர்களுக்கும் காம இச்சை எழுகின்றது. அவர்களது மனநிலையைப் புரிந்து கொண்ட பகவான் இளவரசிகளை நோக்கிக் கருணையுடன் புன்னகை புரிகின்றார். தங்களது இச்சைகளை அவர் அறிந்து கொண்டதை எண்ணி அவர்கள் நாணமடைகின்றனர். பின்னர் அவர்கள் எழில்மிகு புன்னகைப் புரிந்த வண்ணம் பகவானின் செந்தாமரை முகத்தை நிமிர்ந்து நோக்குகின்றனர். அம்முகமோ போதையினால் சுழலும் சிவந்த விழிகளினால் அழகு செய்யப்பட்டிருப்பதோடு, தனது பக்தர்கள் மீது கொண்ட அன்பினால் பேருவகை பூத்திருக்கும்.
பதம் 5.25.6 : பகவான் சங்கர்ஷணர் அளவற்ற ஆன்மீகக் குணங்களின் கடல் ஆவார். அதனால் அவர் அனந்த தேவன் என்றழைக்கப்படுகின்றார். அவர் முழுமுதற் கடவுளிடமிருந்து வேறுபாடுடையவர் அல்லர். இப்பௌதீக உலகில் உள்ள உயிர்வாழிகள் அனைவரின் நன்மைக்காக அவர் தனது சினத்தையும், பொறுமையின்மையினையும் அடக்கிக் கொண்டு அவரது இருப்பிடத்தில் இருக்கின்றார்.
பதம் 5.25.7 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: தேவர்கள், அசுரர்கள், உரகர்கள் (நாக தேவர்கள்), சித்தர்கள், கந்தர்வர்கள், வித்தியாதரர்கள்; மாமுனிவர்கள் தொடர்ந்து பகவானுக்குத் தமது பிரார்த்தனைகளை அர்ப்பணித்துக் கொண்டிருக்கின்றனர் மதுவுண்ட போதையில் அவர் இருக்கின்ற காரணத்தினால் பகவான் குழப்பமுற்றவராகக் காணப்படுகின்றார். அவரது விழிகளோ அன்றலர்ந்த மலர்கள் போல் தோன்றி அங்குமிங்கும் அசைகின்றன. அவர் தமது வாயிலிருந்து வரும் இனிய ஒலியினால் தனது துணைவர்களை தேவர் தலைவர்களை இனிமைப்படுத்துகிறார். நீல நிற ஆடையும், காதில் ஒற்றைக் குண்டலமும் அணிந்திருக்கும் பகவான், தனது முதுகில் தனது அழகிய உறுதிமிக்கக் கரங்களில் ஏர்க்கலைப்பையினை வைத்திருக்கின்றார். அவர் ஒரு தங்க அரைக்கச்சினைத் தனது இடுப்பில் அணிந்திருக்கின்றார். மேலும் எப்போதும் புதிதாக இருக்கும் துளசி மலர்களினாலான வைஜயந்தி மாலையினைத் தனது கழுத்தில் அணிந்திருக்கின்றார். துளசி மலர்களின் தேன் போன்ற இனிய நறுமணத்தில் போதையுற்றிருக்கும் வண்டுகள் அம்மாலையினைச் சுற்றி இனிய ஓசை எழுப்புகின்றன. இதனால் அது மேலும் மேலும் எழில் பெறுகின்றது. இவ்வாறு பகவான் தனது மிகுந்த பெருந்தன்மைமிக்க லீலைகளை அனுபவித்து மகிழ்கின்றார்.
பதம் 5.25.8 : பெளதீக வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்று தீவிரமாக நினைக்கும் மனிதர்கள் குரு பரம்பரையில் வந்த ஒரு ஆன்மீக குருவிடம் இருந்து அனந்த தேவரின் பெருமைகளைக் கேட்டார்கள் எனினும், சங்கர்ஷணரைப் பற்றி எப்போதும் தியானம் செய்தார்களேனினும் பகவான் அவர்களது இதயங்களிலே புகுந்து ஜட இயற்கைக் குணங்களின் மாசுக்கள் அனைத்தையும் முற்றிலும் நீக்கி பலன் தரும் செயல்களின் மூலம் ஜட இயற்கையினை ஆளவேண்டும் என்று ஆதிகாலந்தொட்டே அவர்களது இதயத்தில் மிக இறுக்கமாகப் போடப்பட்டிருக்கும் ஆசை முடிச்சினைத் தூள்தூளாகப் போடும் வண்ணம் துண்டிக்கவும் செய்கிறார். பிரம்மதேவனின் மைந்தரான நாரத முனிவர் எப்போதும் தனது தந்தையின் சபையில் பகவான் அனந்ததேவரின் புகழினைப் பாடிக் கொண்டே இருக்கின்றார். அங்கே அவர் தானே இயற்றிய ஆனந்தமயாமானப் பாடல்களை தும்புரு என்னும் யாழின் துணையோடு (அல்லது தும்புரு என்னும் தேவப்பாடகனின் துணையோடு) பாடுகின்றார்.
பதம் 5.25.9 : அவரது பார்வையினால் முழுமுதற் கடவுள் ஜட இயற்கையினை, பிரபஞ்சத்தின் படைத்தல், காத்தல், அழித்தல், என்பவற்றின் காரணமாகச் செயல்பட வைக்கின்றார். பரமாத்மா அளவற்றவர் மற்றும் ஆதியற்றவரும் ஆவார். அவர் ஒருவரே என்ற போதிலும் தன்னைப் பல்வேறு வடிவங்களாக வெளிப்படுத்தி இருக்கின்றார். பரம்பொருளின் பாதையினை மனித சமுதாயத்தால் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும்?
பதம் 5.25.10 : நுண்ணிய மற்றும் ஜட பூதங்களின் வெளிப்பாடு முழுமுதற் கடவுளிடத்திலேயே தோன்றுகின்றன. அவரது பக்தர்களின் மீது கொண்ட அளவற்ற கருணையினால் அவர்பால் வேறு வடிவங்களை வெளிப்படுத்துகின்றார், அவையனைத்தும் உன்னதமானவையே ஆகும். பரம புருஷ பகவான் பெருங்குணமிக்கவர் என்பதோடு யோகஸித்திகள் அனைத்தையும் தன்னிடத்தே வைத்திருக்கின்றார். தனது பக்தர்களின் மனங்களை வென்று அவர்களது இதயத்திற்கு மகிழ்ச்சியளிப்பதற்காக அவர் பல்வேறு அவதாரங்களில் தோன்றுகின்றார். மேலும் பல்வேறு லீலைகளை வெளிப்படுத்துகின்றார்.
பதம் 5.25.11 : இழிந்தவனாயினும், துன்புற்றவனாயினும், அவன் யாராக இருப்பினும் பகவானின் புனித நாமத்தினை ஒதினானென்றால், அதனை உண்மையான ஆன்மீக குருவிடம் இருந்து கேட்டானென்றால் அவன் உடனே தூய்மையடைகிறான். அதனால் பௌதீகப்பிடியிலிருந்து விடுதலை விரும்பும் ஒருவன் எவ்வாறு பகவான் சேஷனின் நாமத்தை ஒதாமல் தவிர்க்க முடியும்? வேறு யாரை அவன் சரண்புக முடியும்?
பதம் 5.25.12 : பகவான் அளவிடற்கரியவர் ஆதலினால் அவரது சக்தியை யாராலும் அளவிட முடியாது. ஏராளமான மலைகள், நதிகள், கடல்கள், மரங்கள், உயிர்வாழிகளையுடைய இப்பிரபஞ்சம் முழுவதும் அவரது ஆயிரக்கணக்கானத் தலைகளுள் ஒன்றின் மீது ஒர் அணுவைப் போல் இருக்கின்றது. அதனால் யாரேனும் ஒருவன், அவன் ஆயிரம் நாக்குகளை உடையவனாக இருந்த போதிலும் பகவானின் பெருமைகளை அவனால் விளக்க முடியுமா?
பதம் 5.25.13 : ஆற்றல்மிக்க அனந்ததேவரின் சிறந்த புகழ்மிக்கக் குணங்களுக்கு இறுதியே இல்லை. உண்மையில் அவரது சக்தி அளவற்றதாகும். அவர் சுய பூர்த்தியுடையவராக இருந்த போதிலும் அவர் எல்லாவற்றையும் தாங்குபவராக இருக்கின்றார். அவர் கீழ் உலகிற்கும் கீழே இருக்கின்றார். மிக எளிதில் இப்பிரபஞ்சம் முழுவதையும் தாங்கிக் கொண்டிருக்கின்றார்.
பதம் 5.25.14 : அன்பார்ந்த மன்னனே, எனது ஆன்மீக குருவினிடத்திலிருந்து நான் கேட்டபடி பந்தப்பட்ட ஆத்மாக்களின் ஆசைகள் மற்றும் பலன் தரும் செயல்களுக்கேற்ப, பெளதீக உலகின் படைப்புப் பற்றி உனக்கு நான் முற்றிலும் விளக்கியிருக்கின்றேன். முற்றிலும் பௌதீக ஆசைகள் நிரம்பிய அப்பந்தப்பட்ட ஆத்மாக்கள் பல்வேறு உலகங்களில் பல்வேறு நிலைகளை எய்துகின்றனர். இவ்வாறு அவர்கள் பௌதீகப் படைப்பில் வாழ்கின்றனர்.
பதம் 5.25.15 : அன்பார்ந்த மன்னனே, மக்கள் எவ்வாறு அவர்களது பல்வேறு ஆசைகளின்படி செயல்படுகிறார்கள் என்றும் அதன் விளைவாக அவர்கள் எவ்வாறு மேல், கீழ் உலகங்களில் பல்வேறு வகையான உடல்களைப் பெறுகின்றனர் என்பது பற்றியும் நான் இவ்வாறு விளக்கி இருக்கிறேன். நீ இவற்றைப் பற்றி என்னிடம் கேட்டிருந்தாய், நானோ அதிகாரம் பெற்றவர்களிடமிருந்து நான் கேட்டபடி உனக்கு விளக்கியிருக்கிறேன். இப்போது நான் வேறு என்ன சொல்வது?