அத்தியாயம் – 24
பில சொர்க்கங்கள்
பதம் 5.24.1
ஸ்ரீ ஸுக உவாச
அதஸ்தாத் ஸவிதுர் யோஜனாயுதே ஸ்வர்பானுர் நக்ஷத்ரவச் சரதீதி
ஏகே யோ ‘ஸௌ அமரத்வம் க்ரஹத்வம் சாலபத பகவத்- அனுகம்பயா ஸ்வயம்
அஸுராபஸத: ஸைம்ஹிகேயோ ஹி அதத்-அர்ஹத்-தஸ்ய தாத ஜன்ம
கர்மாணி சோபரிஷ்டாத் வக்ஷ்யாம:

ஸ்ரீ-ஸுக உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அதஸ்தாத்—கீழே; ஸவிது—சூரியகோளம்; யோஜன—எட்டு மைல்களுக்கு இணையான தூரம்; அயுதே—பத்தாயிரம்; ஸ்வர்பானு—இராகு என்னும் கிரஹம்; நக்ஷத்ர-வத்—நட்சத்திரங்களுள் ஒன்றுபோன்று; சரதி—சுற்றுகின்றது; இதி—இவ்வாறு; ஏகே—புராணங்களைக் கற்றவர்கள்: ய—இது; அஸௌ—அது; அமரத்வம்—தேவர்களின் ஆயுட்காலம் போன்று; க்ரஹத்வம்—முக்கிய கிரகங்களில் ஒன்றாக ஒரு நிலை; ச—மேலும்; அலபத—எய்துதல்; பகவத்-அனுகம்பயா—முழுமுதற் கடவுளின் அருளினால்; ஸ்வயம்—சுயமாக; அஸுர-அபஸத—அசுரர்களில் இழிந்தவர்கள்; ஸைம்ஹிகேய—சிம்ஹிகாவின் புதல்வன்; ஹி—உண்மையில்; அ-தத்-அர்ஹ—அந்நிலை எய்துவதற்குத் தகுதி பெறாது; தஸ்ய—அவரது; தாத—அன்பார்ந்த மன்னனே; ஜன்ம—பிறப்பு; கர்மாணி—செயல்கள்; ச—மேலும்; அபரிஷ்டாத்—பின்னர்; வக்ஷ்யாம—நான் விளங்குவேன்.

ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, புராணங்களைப் பற்றி சொற்பொழிவாற்றும் சில வரலாற்று வல்லுநர்கள் சூரியனுக்குக் கீழே 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) தூரத்தில் நட்சத்திரங்களுள் ஒன்றுபோல் இயங்கும் இராகு என்னும் கிரஹம் ஒன்று உள்ளதாகக் கூறுகின்றனர். இக்கிரஹத்தின் ஆதிபத்தியத் தேவதை சிம்ஹிகா என்பவனின் மைந்தனும், அசுரர்களில் அனைவரினும் மிகவும் வெறுக்கத்தக்க ஓர் அசுரன் ஆவான். அவன் தேவ நிலைக்கோ அல்லது ஒரு கிரஹத்தின் ஆதிபத்தியத் தேவதையாகவோ வருவதற்கு முற்றிலும் தகுதியற்றவனாக இருந்தபோதிலும், முழுமுதற் கடவுளின் அருளினால் அவன் அந்நிலை எய்தப் பெற்றான். அவனைப் பற்றி நான் பின்னர் விளக்கிக் கூறுவேன்.

பதம் 5.24.2
யத் அதஸ் தரணேர் மண்டலம் ப்ரதபதஸ் தத் விஸ்தரதோ யோஜ
னாயுதம் ஆசக்ஷதே-த்வாதஸ-ஸஹஸ்ரம் ஸோமஸ்ய த்ரயோதஸ-
ஸஹஸ்ரம் ராஹோர் ய: பர்வணி தத்-வ்யவதான-க்ருத் வைரானுபந்த:
ஸுர்யா-சந்தரமஸௌ அபிதாவதி

யத்—இது; அத—அந்த; தரணே:—சூரியனின்; மண்டலம்—கோளம்; ப்ரதபத—இது எப்போதும் வெம்மை அளித்துக் கொண்டிருக்கின்றது; தத்—அந்த; விஸ்தரத—அகலத்தில்; யோஜன—எட்டுமைல்கள்; ஆயுதம்—பத்தாயிரம்; ஆசக்ஷதே—அவர்கள் மதிப்பிடுகிறார்கள்; த்வாதஸ-ஸஹஸ்ரம்—20,000 யோஜனங்கள் (160,000 மைல்கள்); ஸோமஸ்ய—சந்திரனின்; த்ரயோதஸ—முப்பது; ஸஹஸ்ரம்—ஆயிரம்; ராஹோ—இராகு கிரஹம்; யா—இது; பர்வணி—ஒரு சந்தர்ப்பத்திலே; தத்-வ்யவதான-க்ருத்—அமிர்தத்தினை வழங்கும் போது சூரியனுக்கும், சந்திரனுக்கும் தடை ஏற்படுத்தியவன்; வைர-அனுபந்த—அவனது எண்ணங்கள் பகைமை நிறைந்தவையாகும்; ஸுர்யா—சூரியன்; சந்த்ரமஸௌ—சந்திரன்; அபிதாவதி—பௌர்ணமி இரவிலும், அமாவாசைப் பகலிலும் அவர்கள் பின் ஒடுகிறான்.

வெப்பத்திற்கு ஆதாரமாகத் திகழும் சூரிய கோளம் 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) வரை விரிந்திருக்கிறது. சந்திரன் 20,000 யோஜனங்கள் (160,000 மைல்கள்) வரை விரிந்திருக்கிறது. இராகு 30,000 யோஜனங்கள் (240,000 மைல்கள்) வரை விரிந்திருக்கிறது. அமிர்தம் பரிமாறப்பட்டபோது இராகு சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் புகுந்து அவர்கள் பெறாதவாறு தடுத்தான். இவர்கள் இருவரிடத்தும் இராகு பகைமை பாராட்டினான். அதனால் அவன் சூரியஒளி மற்றும் சந்திர ஒளியை அமாவாசை பகல் மற்றும் பௌர்ணமி இரவில் எப்போதும் தடுப்பதற்கு முயற்சி செய்கிறான்.

பதம் 5.24.3
தன் நிஸம்யோபயத்ராபி பகவதா ரக்ஷணாய ப்ரயுக்தம் ஸுதர்ஸனம்
நாம பாகவதம் தயிதம் அஸ்த்ரம் தத் தேஜஸா துர்விஷஹம் முஹு:
பரிவர்த்மானம் அப்ய வஸ்திதோ முஹுர்தம் உத்விஜமானஸ் சகித-
ஹ்ருதய ஆராத் ஏவ நிவர்ததே தத் உபராகம் இதி வதந்தி லோகா:

தத்—அச்சூழ்நிலையில்; நிஸம்ய—கேட்டு; உபயத்ர—சூரியன் மற்றும் சந்திரனைச் சுற்றி; அபி—உண்மையில்; பகவதா—முழுமுதற் கடவுளால்; ரக்ஷணாய—அவர்கள் பாதுகாப்பிற்காக; ப்ரயுக்தம்—ஈடுபடுதல்; ஸுதர்ஸனம்—கிருஷ்ணரின் சுதர்சனச் சக்கரம்; நாம—பெயரில்; பாகவதம்—மிகுந்த நம்பிக்கைக்குரிய பக்தன்; தயிதம்—மிகுந்த நேசிப்பிற்குரிய; அஸ்த்ரம்—ஆயுதம்; தத்—அது; தேஜஸா—அதன் பிரகாசத்தால்; துர்விஷஹம்—தாங்க முடியாத வெப்பம்; முஹு—தொடர்ந்து; பரிவர்தமானம்—சூரியன், சந்திரனைச் சுற்றிச் செல்லுதல்; அப்யவஸ்தித—இருந்து; முஹுர்தம்—ஒரு முகூர்த்தத்திற்கு; (நாற்பத்தெட்டு நிமிடங்கள்); உத்விஜமான:—அவனது மனம் முழுதும் கவலைவயப்பட்டிருந்தது; சகித—அஞ்சி; ஹ்ருதய—அவனது இதயத்தினுள்ளே; ஆராத்—தொலைவிலுள்ள இடத்திற்கு; ஏவ—உறுதியாக; நிவர்ததே—ஒடினான்; தத்—அந்தச் சூழ்நிலை; உபராகம்—கிரஹணம்; இதி—இவ்வாறு; வதந்தி—அவர்கள் கூறுகின்றனர்; லோகா—மக்கள்.

இராகுவின் தாக்குதல் பற்றி சூரியன் மற்றும் சந்திரதேவனிடம் கேட்டபின்னர் அவர்களைக் காப்பதற்காக முழுமுதற் கடவுள் விஷ்ணு தனது சுதர்சனச் சக்கரத்தை ஏவினார். சுதர்சனச் சக்கரம் என்பது பகவானின் மிகுந்த நேசிப்பிற்குரியவரும், நம்பிக்கைக்குரிய பக்தரும் ஆவார். அதிலிருந்து வெளிப்படும் தாங்கவொண்ணா வெப்பம் வைணவர்கள் அல்லாதாரை அழிப்பதற்குரியதாகும். அதனால் அவ்வெப்பத்தினைத் தாங்க முடியாத இராகு அச்சம் கொண்டு ஒடுகிறான். சூரிய, சந்திரர்களை இராகு இடையூறு செய்கின்ற காலமே மக்கள் பொதுவாக அறிந்திருக்கும் கிரஹணம் என்பதாகும்.

பதம் 5.24.4
ததோ ‘தஸ்தாத் ஸித்த-சாரண-வித்யா தராணாம் ஸதனானி தாவன்
மாத்ர ஏவ

தத—இராகு கிரஹம்; அதஸ்தாத்—கீழே; ஸித்த-சாரண—சித்தலோகம், சாரணலோகம் என்பவை; வித்யாதரணாம்—வித்யாதர லோகம்; ஸதனானி—உறைவிடங்கள்; தாவத்-மாத்ர—அந்த அளவு தூரம் மட்டும் எண்பதினாயிரம் மைல்கள்); ஏவ—உண்மையில்.

இராகுவிற்குக் கீழே 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) தூரத்தில் சித்த லோகம், சாரணலோகம் மற்றும் வித்யாதர லோகம் இருக்கின்றன.

பதம் 5.24.5
ததோ’ தஸ்தாத் யக்ஷ-ரக்ஷ:-பிஸாச-ப்ரதே-பூத-கணானாம் விஹா
ராஜிரம் அந்தரிக்ஷம் யாவத் வாயு: ப்ரவாதி யாவன் மேகா உபவப்யந்தே

தத:-அதஸ்தாத்—சித்த, சாரண, வித்யாதர லோகங்களின் அடியில்; யக்ஷ-ரக்ஷ-பிஸாச-ப்ரேத-பூத-கணானாம்—யட்சர்கள், இராட்சதர்கள், பிசாசுகள், பேய்கள் போன்றவை; விஹார-அஜிரம்—புலனுகர்ச்சிக்கான இடம்; அந்தரிக்ஷம்—வானம் அல்லது வெளி; யாவத்—அதுவரை; வாயு—காற்று; ப்ரவாதி—வீசுகிறது; யாவத்—அதுவரை; மேகா—மேகங்கள்; உபவப்யந்தே—காணப்படுகின்றன.

வித்யாதர, சாரண, சித்த லோகங்களுக்கு அடியில் வானில் உள்ள பகுதி அந்தரிக்ஷம் என்றழைக்கப்படுகின்றது. யட்சர்கள், இராட்சதர்கள், பிசாசுகள், பேய்கள் போன்ற பூதகணங்களுக்கு இவை இன்பத்திற்கான இடங்களாகும். அந்தரிக்ஷம் என்பது வானில் காற்று வீசுகின்ற தூரத்திற்கும் மேகங்கள் மிதக்கும் தூரம் வரையிலும் விரிந்திருக்கின்றது. இதற்கு மேல் காற்று என்பது கிடையாது.

பதம் 5.24.6
ததோ’ தஸ்டாச் சத-யோஜனாந்தர இயம் ப்ருதிவீ யாவத் தம்ஸ-
பாஸ-ஸ்யேன-ஸுபர்ணா தய: பதத்த்ரி-ப்ரவரா உத்பதந்திதி

தத: அதஸ்தாத்—அதற்கும் கீழே; ஸத-யோஜன—நூறு யோஜனங்களில்; அந்தரே—இடைவெளியில்; இயம்—இந்த; பருதிவீ—பூமிக்கோளம்; யாவத்—உயரத்தில்; ஹம்ஸ—அன்னங்கள்; பாஸ—கழுகுகள்; ஸ்யேன—இராட்சதக் கழுகுகள்; ஸுபர்ண-ஆதய—மற்றும் பிற பறவைகள்; பதத்த்ரி-ப்ரவரா:—பறவைகளின் தலைவர்கள்; உத்தந்தி—பறக்க கூடியவை; இதி—இவ்வாறு.

யட்சர்கள் மற்றும் இராட்சதர்களின் இருப்பிடங்களுக்குக் கீழே 100 யோஜனங்கள் (800 மைல்கள்) தூரத்தில் பூமிக்கோளம் இருக்கின்றது. இதன் மேற்பகுதி அன்னங்கள், கழுகுகள், பருந்துகள் போன்ற பெரிய பறவைகள் பறக்கக்கூடிய தூரம் வரை விரிந்திருக்கின்றது.

பதம் 5.24.7
உபவர்ணிதம் பூமேர் யதா-ஸன்னிவேஸாவஸ்தானம் அவனேர் அபி
அதஸ்தாத் ஸப்த பூ-விவரா ஏகைகஸோ யோஜனாயுதாந்ரேணாயாம்-
விஸ்தாரேணோ- பக்லுப்தா அதலம் விதலம் ஸுதலம் தலாதலம்
மஹாதலம் ரஸாதலம் பாதாளம் இதி

உபவர்ணிதம்—முன்னர் குறிப்பிட்டபடி; பூமே—பூமியின்; யதா-ஸன்னிவேஸ-அவஸ்தானம்—பல்வேறு இடங்களின் ஏற்பாட்டிற்கேற்ப; அவனே—பூமி; அபி—நிச்சயமாக; அதஸ்தாத்—கீழே; ஸப்த—ஏழு; பூ-விவரா—பிற கிரஹங்கள்; ஏக-ஏகஸ—அடுத்தடுத்து; பிரபஞ்சத்தின் மேல் எல்லைவரை; யோஜன-அயுத அந்தரேண—பத்தாயிரம் யோஜனங்கள் இடைவெளியில்; (எண்பதினாயிரம் மைல்கள்); ஆயாம-விஸதாரேண—அகல, நீளத்தினால்; உபக்லுப்தா—இருக்கின்றன; அதலம்—அதலம்; விதலம்—விதலம்; ஸுதலம்—சுதலம்; தலாதலம்—தலாதலம்; மஹாதலம்—மகாதலம்; ரஸாதலம்—இராஸதலம்; பாதாளம்—பாதாளம்; இதி—இவ்வாறு.

அன்பார்ந்த மன்னனே, இப்பூமிக்குக் கீழே அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், இரஸாதலம், பாதாளம் என்னும் ஏழு லோகங்கள் இருக்கின்றன. நான் ஏற்கனவே பூமண்டலத்தின் இருப்பினைப் பற்றி விளக்கியிருக்கிறேன். ஏழு கீழ் உலகங்களின் அகலமும், நீளமும் பூமியின் நீள, அகலத்திற்கு இணையானதாகும்.

பதம் 5.24.8
ஏதேஷு ஹி பில-ஸ்வர்கேஸு ஸ்வர்காத அபி அதிக-காம
போகஸ்வர்யாணந்த பூதி-விபூதிபி: ஸுஸம்-ருத்த- பவனோத்
யானக்ரீட- விஹாரேஷு தைத்ய-தானவ காத்ரவேயா நித்ய-
ப்ரமுதிதானுரக்த களத்ராபத்ய – பந்து ஸுஹ்ருத்-அனுசரா க்ருஹ பதய
ஈஸ்வராத் அபி அப்ரதிஹத-காமா மாயா-வினோத நிவஸந்தி

ஏதேஷு—இவற்றுள்; ஹி—உறுதியாக; பில-ஸ்வர்கஷ்—பில சொர்க்கலோகங்கள் எனப்படுபவை; ஸ்வர்காத்—தேவ சொர்க்கலோகங்களை விட; அபி—கூட; அதிக—அதிக அளவு; காம-போக—புலனின்பம்; ஐஸ்வர்ய-ஆனந்த—ஐஸ்வர்ய ஆனந்தம்; பூமி—செல்வாக்கு; விபூதிபி—அப்பொருட்கள் மற்றும் செல்வம்; ஸு-ஸம்ருத்த—முன்னேறி; பவன—இல்லங்கள்; உத்யான—நந்தவனங்கள்; ஆக்ரீட-விஹாரேஷு—பல்வேறு வகையான புலனுகர்ச்சிக்குரிய இடங்கள்; தைத்ய—அசுரர்கள்; தானவ—தானவர்கள்; காத்ரவேயா—பாம்புகள்; நித்ய—அவர்கள் எப்போதும்; ப்ரமுதித—அதிகமாக அனுபவித்து; அனுரக்த—பற்றின் காரணமாக; களத்ர—மனைவியிடம்; அபத்ய—குழந்தைகள்; பந்து—உறவினர்; ஸுஹ்ருத்—நண்பர்கள்; அனுசரா—பின்பற்றுவோர்; க்ருஹ-பதய—இல்லறவாழ்வின் தலைவர்கள்; ஈஸ்வராத்—தேவர்களைப் போன்று திறனுடையவர்களைக் காட்டிலும்; அபி—கூட; அப்ரதிஹத-காம—அவர்களது காம இச்சை தடையின்றி நிறைவேறுகிறது; மாயா—மாயை; வினோதா—மகிழ்ச்சியடைகின்றனர்; நிவஸந்தி—வாழ்கின்றனர்.

பில சொர்க்கங்கள் எனப்படும் இந்த ஏழு உலகங்களில் தேவ சொர்க்கங்களைக் காட்டிலும் அழகிய மாளிகை, நந்தவனங்கள், புலனின்பத்திற்கான இடங்கள் இருக்கின்றன. காரணம் அசுரர்களிடம் அதீத புலனின்பம், செல்வம் மற்றும் செல்வாக்கு இருக்கின்றன. தைத்யர்கள், தானவர்கள், நாகர்கள் என்பவர்களே இவ்வுலகங்களில் பெரும்பாலும் வசிக்கின்றனர். இவர்களது மனைவியர், மக்கள், நண்பர்கள் சமுதாயம் முழுவதும் மாயா பௌதீக இன்பத்தில் மூழ்கியுள்ளனர். தேவர்களின் புலனின்பத்திற்குக்கூட சிலசமயம் இடையூறு ஏற்படுகின்றது. ஆனால் அவ்வுலகவாசிகளோ எந்தவித இடையூறுமின்றி வாழ்க்கையினை அனுபவித்து மகிழ்கின்றர். இதிலிருந்து இவர்கள் மாயா இன்பத்தில் அதீதப் பற்றுடையோர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.

பதம் 5.24.9
யேஷு மஹாராஜா மயேன மாயாவினா விநிர்மிதா புரோ-நானா-
மணி – ப்ரவரப்ரவேக-விரசித-விசித்ர-பவன-ப்ராகார-கோபுர-
ஸபா-சைத்ய சத்வராயதனாதியிர் நாகாஸுர- மிதுன – பாராவத- ஸுக
ஸாரிகாகீர்ண க்ருத்ரிம-பூமிபிர் விவரேஸ்வர-க்ருஹோத்தமை: ஸமலங்க்
ருதாஸ் சகாஸதி

யேஷு—இக்கீழ் உலகங்களில்; மஹா-ராஜா—ஓ, என் அன்பிற்குரிய அரசனே; மயேன—மயன் என்னும் பெயருடைய அரசன்; மாயா-வினா—பெளதீக வசதிகளைக் கட்டுவதில் தேர்ந்த அறிவுடையவன்; விநிர்மிதா—கட்டப்பட்டன; புர—நகரங்கள்; நானா-மணி-ப்ரவர—மதிப்பு மிக்க இரத்தினங்கள்; ப்ரவேக—நேர்த்தியுடன்; விரசித—கட்டப்பட்டன; விசித்ர—விசித்திரமான; பவன—இல்லங்கள்; இபராகார—மதில்கள்; கோபுர—வாயில்கள்; ஸபா—அரங்குகள்; சைத்ய—ஆலயங்கள்; சத்வர—பள்ளிகள்; ஆயதன-ஆதிபி:—உணவு விடுதிகள் அல்லது கேளிக்கைக் கூடங்கள் போன்றவை; நாக—பாம்பு போன்ற உடலைப் பெற்றிருக்கும் உயிர்வாழிகள் நாகர்கள்; அஸுர—அசுரர்கள்; அல்லது தெய்வத்தன்மையற்றவர்கள்; மிதுன—இணைகளினால்; பாரவத—புறாக்கள்; ஸுக—கிளிகள்; ஸாரிகா—மைனாக்கள்; ஆகீர்ண—கூட்டங்கள்; க்ருத்ரிம—செயற்கையான; பூமிபி:—உடையப் பகுதிகள்; விவர-ஈஸ்வர—உலகங்களின் தலைவர்கள்; க்ருஹ-உத்தமை—முதல் தரமான இல்லங்கள்; ஸமலங்க்ருதா—அலங்கரிக்கப்பட்டு; சகாஸதி—நன்கு ஒளிர்கின்றன

அன்பார்ந்த மன்னனே, போலி சொர்க்கம் எனப்படும் பில சொர்க்கத்தில் மயதானவன் என்னும் பெரிய அசுரன் இருக்கின்றான். அவன் மிகச் சிறந்தக் கட்டிடக் கலைஞன் ஆவான். அவன் கண்ணைக் கவரும் வண்ணமுடைய பல நகரங்களை நிர்மாணித்திருக்கின்றான். அங்கே விந்தைமிகு மாளிகைகள், மதில்கள், வாயில்கள், அரங்கங்கள், ஆலயங்கள் முற்றங்கள், ஆலய பிரகாரங்கள், அதுபோல் அந்நிய நாட்டினர் தங்கும் உணவு விடுதிகள் போன்றவை இருக்கின்றன. இவ்வுலகங்களின் தலைவர்களின் மாளிகைகள் மதிப்புமிக்க இரத்தினங்களினால் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்கள் எப்போதும் நாகர்கள், அசுரர்கள், புறாக்கள், கிளிகள், அதுபோன்ற பல பறவைகள் கூட்டங்கள் என்றும் உயிர்வாழிகளால் சூழப்பட்டிருக்கின்றனர். மொத்தத்தில் போலி சொர்க்கத்தில் உள்ள நகரங்கள் எழில் மிக்கனவாகவும், கவர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்டும் இருக்கின்றன.

பதம் 5.24.10
உத்யானானி சாதிதராம் மன-இந்த்ரியானந்திபி: குஸும- பல-
ஸ்தபக-ஸுபக- கிஸலயாவதை-ருசிர-விடப-விடபினாம் லதாங்காலிங்
கிதானாம் ஸ்ரீபி: ஸமிதுனா-விவித-விஹங்கம-ஜலாஸயானாம் அமல-
ஜல- பூர்ணானாம் ஜஷகுலோல்லங்கன-க்ஷுபித-நீர-நீரஜ-குமுத-
குவலய – கஹ்வார – நீலோத் பலலோஹித-ஸதபத்ராதி-வனேஷு க்ருத-
நிகேதனானாம் ஏக-விஹாராகுல மதுர- விவித-ஸ்வனாதிபிர் இந்த்ரி
x யோத்ஸவைர் அமர லோக-ஸ்ரீயம் அதிஸயிதானி

உத்யானானி—நந்தவனங்கள்; பூங்காக்கள்; ச—மேலும்; அதிதராம்—சிறந்த; மன—மனத்திற்கு; இந்த்ரிய—புலன்களுக்கு; ஆனந்திபி—ஆனந்தமளிக்கின்றன; குஸும—மலர்கள்; பல—கனிகள்; ஸ்தபக—கொத்துக்கள்; ஸுபக—மிக அழகிய; கிஸலய—புத்திளந்தளிர்கள்; அவதை—மெலிதாக வளைந்து; ருசிர—கவர்ச்சிமிகு; விடப—கிளைகள் உடையவனவாக; விடபினாம்—மரங்களினால்; லதா-அங்க-ஆலிங்கிதானாம்—அவை கொடிகளினால் தழுவப்பட்டு; ஸ்ரீபி—எழிலினால்; ஸ-மிதுன—இணைகளில்; விவித—பல்வகை; விஹங்கம—பறவைகள் வந்து வந்து; ஜல-ஆஸயானாம்—நீர்த் தேக்கங்கள்; அமல-ஜல-பூர்ணானாம்—கண்ணாடி போன்று தெளிந்த நீர்; ஜஷ-குல-உல்லங்கன—பல்வகை மீன்கள் தாவுகின்றன; க்ஷுபித—கிளர்ச்சியடைந்த; நீர—நீரில்; நீரஜ—தாமரைமலர்கள்; குமுத—அல்லிமலர்கள்; குவலய—குவலயம் என்னும் மலர்கள்; கஹ்லார—கஹ்லார மலர்கள்; நீல-உத்பல—நீலோத்பல மலர்கள்; லோஹித—சிவந்த; ஸத-பத்ர-ஆதி—நூறு இதழ்களையுடைய தாமரைகள்; வனேஷு—வனங்களில்; க்ருத-நிகேதனானாம்—தங்கள் கூடுகளுடன் இருக்கும் பறவைகளின்; ஏக-விஹார-ஆகுல—இடையூறில்லாத இன்பம் நிறைந்து; மதுர—மதுரமான; விவித—பல்வகை வண்ணங்கள்; ஸ்வன-ஆதிபி—ஒலிகளினால்; இந்த்திரிய உத்ஸவை:—புலனின்பத்தைத் தூண்டி; அமர-லோக-ஸ்ரீயம்—தேவர்களின் மாளிகைகளின் வனப்பு; அதிஸயிதானி—வெல்லுகின்றது.

செயற்கைச் சொர்க்கலோகத்தில் உள்ள நந்தவனம் மற்றும் பூங்காக்களின் எழில், தேவலோகச் சொர்க்கங்களை வெல்லக்கூடியதாகும். கொடிகளால் தழுவப்பட்டிருக்கும் அந்த நந்தவனத்தில் உள்ள மரங்கள், மொட்டுக்கள், மலர்கள் மற்றும் கணிகளின் கொத்துக்களின் சுமைதாங்காது வளைந்து நிற்கின்றன. அதனால் அவை மேலும் அதிக எழிலுடன் காட்சியளிக்கின்றன. அந்த எழில் எவன் ஒருவனையும் மயக்கி அவனது மனதில் புலனுகர்ச்சி இன்பத்தை முற்றிலும் மலரச் செய்கின்றது. அங்குள்ள பல்வேறு குளங்கள், ஏரிகளில் நீர் பளிங்குபோல் தெளிவாக இருக்கும். அதில் குவலயங்கள், கஹ்லாரங்கள், நீலோத்பலங்கள் என்னும் மலர்கள் நிறைந்து அவற்றை அழகு செய்யும். சக்கரவாகம் போன்ற பறவைகளின் ஜோடிகள் மற்றும் பல்வேறு நீர்ப்பறவைகள், குளங்களில் வாழ்கின்றன. அவை எப்போதும் மகிழ்ச்சியான மன நிலையில் மிக இனிமையான, அமிர்தம் போன்ற ஒலியினை எழுப்புகின்றன. இவ்வொலி புலனின்பத்தை திருப்திப்படுத்துவதற்கு மிகவும் துணை செய்கின்றது.

பதம் 5.24.11
யத்ர ஹ வாவ ந பயம் அஹோ-ராத்ராதிபி: கால- விபாகைர்
உபலக்ஷ்யதே

யத்ர—இங்கே; ஹ வாவ—உறுதியாக; ந—இல்லை; பயம்—பயம்; அஹ-ராத்ர-ஆதிபி—பகல் மற்றும் இரவுகளின் காரணமாக; கால-விபாகை—காலப்பிரிவுகளின்; உபலக்ஷ்யதே—அனுபவிக்கப்படுகின்றது.

அங்கே பிற சொர்க்கங்களில் சூரிய ஒளி இல்லாமையினால் இரவு, பகல் என்று காலம் பிரிக்கப்படுவதில்லை, இதனைத் தொடர்ந்து காலத்தினால் வரும் அச்சம் அங்கே கிடையாது.

பதம் 5.24.12
யத்ர ஹி மஹாஹி–ப்ரவர-ஸிரோ-மணய:-ஸர்வம் தம: ப்ரபாதந்தே

யத்ர—இங்கே; ஹி—உண்மையில்; மஹா-அஹி—பெரிய பாம்புகள்; ப்ரவர—மிகச்சிறந்த; ஸிர-மணய:—தலையிலுள்ள இரத்தினங்கள் (நாகரத்தினம்); ஸர்வம்—எல்லாம்; தம—இருள்; ப்ரபாதந்தே—ஒட்டுகின்றது.

அங்கே வாழும் ஏராளமான பாம்புகளின் தலையில் நாகரத்தினக் கல் இருக்கின்றது. இக்கற்களில் இருந்து வரும் ஒளி எல்லாத் திசைகளிலும் உள்ள இருட்டினை விரட்டுகின்றன.

பதம் 5.24.13
ந வா ஏதேஷு வஸதாம் திவ்யௌஷதி-ரஸ-ரஸா-யனான்ன-
பான-ஸ்நானாதிபிர் ஆதயோ வ்யாதயோ வலீ- பலித-ஜராதயஸ ச
தேஹ-வைவர்ண்ய-தெளர்கந்த்ய-ஸ்வேத-க்லம-க்லானிர் இதி வயோ
‘வஸ்தாஸ் ச பவந்தி

ந—இல்லை; வா—அல்லது; ஏதேஷு—இவ்வுலகங்களில்; வஸதாம்—வாழ்பவர்களின்; திவ்ய—விந்தைமிகு; ஒளஷதி—மூலிகைகளின்; ரஸ—சாறு; ரஸாயன—மருந்துகள்; அன்ன—உண்பதினால்; பான—பருகுதல்; ஸ்நான-ஆதிபி—நீராடுதல் போன்றவை; ஆதய—மனத்துன்பங்கள்; வ்யாதய—பிணிகள்; வலீ—திரைகள்; பலித—நரைகள்; ஜரா—முதுமை; ஆதய—போன்றவை; ச—மேலும்; தேஹ-வைவர்ண்ய—உடல்ஒளி குறைதல்; தௌர்கந்த்ய—துர்நாற்றம்; ஸ்வேத—வியர்வை; க்லம—சோர்வு; க்லானி—சக்தியின்மை; இதி—இவ்வாறு; வய அவஸ்தா—வயது அதிகரிப்பதினால் வரும் துன்பநிலைகள்; ச—மேலும்; பவந்தி—இருக்கின்றன.

இவ்வுலகங்களில் உள்ளோர் அதிசிய மூலிகைகளின் சாறு மற்றும் மருந்தினை உண்டு அவற்றில் நீராடுவதினால் அவர்கள் கவலைகள் மற்றும் உடற்பிணிகளிலிருந்து விடுதலைபெறுகின்றனர். அவர்களிடம், நரை, திரை, போன்றவை தோன்றுவதில்லை. அவர்களது உடல் ஒளி ஒரு நாளும் குறைவதில்லை. அவர்களது வியர்வையிலிருந்து துர்நாற்றம் வீசுவதில்லை. அவர்கள் முதுமையின் காரணமாகத் தோன்றும் சோர்வு சக்தியின்மை, கவலை போன்றவற்றினால் துன்புறுவதில்லை.

பதம் 5.24.14
ந ஹி தேஷாம் கல்யாணானாம் ப்ரபவதி குதஸ்சன ம்ருத்யுர் விநா
பகவத்தேஜஸஸ் சக்ராபதேஸாத்

ந ஹி—இல்லை; தேஷாம்—அவர்களின்; கல்யாணானாம்—அவர் இயற்கையிலேயே மங்களமுடையவர்கள் ஆவார்; ப்ரபவதி—பாதிக்கப்படுவதற்குரியவர்கள்; குதஸ்சன—எங்கிருந்தும்; மருத்யு—மரணம்; விநா—தவிர; பகவத்-தேஜஸ—முழுமுதற்கடவுளின் சக்தி; சக்ரா-அபதேஸாத்—சுதர்சனச் சக்கரத்திடமிருந்து.

அவர்கள் மிகவும் மங்களமுடன் வாழ்கின்றனர். முழுமுதற் கடவுளின் சுதர்சனச் சக்கரத்தின் ஒளி என்னும் காலம் ஒன்றினைத் தவிர அவர்களுக்கு வேறு எதனிடத்தும் மரணபயம் என்பது கிஞ்சிற்றும் இல்லை.

பதம் 5.24.15
யஸ்மின் ப்ரவிஷ்டே ‘ஸுர-வதூனாம் ப்ராய: பும் ஸவனானி பயாத்
ஏவ ஸ்ரவந்தி பதந்தி ச

யஸ்மின்—இங்கே; ப்ரவிஷ்டே—புகும்பொழுது; அஸுர-வதூனம்—அசுரர்களின் மனைவியர்; ப்ராய—பெரும்பாலும், எப்பொழுதும்; பும்ஸவனானி—கருத்துக்கள்; பயாத்—அச்சத்தின் காரணமாக; ஏவ—நிச்சயமாக; ஸ்ரவந்தி—வெளியே நழுவி; பதந்தி—விழுகிறது; ச—மேலும்.

அப்பகுதிகளில் சுதர்சனச் சக்ரம் நுழையும் பொழுது அசுரர்களின் கர்ப்பமுற்றிருக்கும் மனைவியர் அனைவரும் அதன் ஒளியினால் ஏற்படும் பீதியின் காரணமாக கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர்.

பதம் 5.24.16
அதாதலே மய-புத்ரோ’ ஸுரோ பலோ நிவஸதி யேன ஹ வா
இஹ ஸ்ருஷடா: ஷண்ணவதிர் மாயா: காஸ்சனாத்யாபி மாயா
வினோ தாரயந்தி யஸ்ய ச ஜ்ரும்பமாணஸ்ய முகதஸ் த்ரய: ஸ்திரீ-
கணா உதபத்யந்த ஸ்வைரிண்ய: காமின்ய: பும்ஸ்சல்ய இதியா வை
பிலாயனம் ப்ரவிஷ்டம் புருஷம் ரஸேன ஹாட காக்யேன ஸாதயித்வா
ஸ்வ- விலாஸாவலோகனானுராக ஸ்மித ஸ்ம்லோபோப கூஹனாதிபி:
ஸ்வைரம் கில ரமயந்தி யஸ்மின்ன உபயுக்தே புருஷ ஈஸ்வரோ ‘ஹம்
ஸித்தோ ‘ஹம் இதி அயுத-மஹா-கஜ-பலம் ஆத்மானம் அபிமன்யமான:
கத்ததே மதாந்த இவ

அத—இப்பொழுது; அதலே—அதல என்னும் உலகம்; மய-புத்ர-அசுர—மயனின் மைந்தனான அசுரன்; பல—பலன் என்பவன்; நிவஸதி—வாழ்கிறான்; யேன—அவனால்; ஹ வா—உண்மையில்; இஹ—இதில்; ஸ்ருஷடா—உருவாக்கினான்; ஷட்ணவதி—தொன்னூற்றாறு; மாயா—மாயை வகைகள்; காஸ்சன—சில; அத்ய-அபி—இன்னும் கூட; மாயா-வின—மாயமந்திரங்களை அறிந்தவர்கள் (தங்கம் வரவழைப்பது போன்றவை); தாரயந்தி—பயன்படுத்தி; யஸ்ய—அவனது; ச—மேலும்; ஜ்ரும்பமானஸ்ய—வாய்திறக்கும் பொழுது; முகத—வாயிலிருந்து; த்ரய—மூன்று வகை; ஸ்த்ரீ-கணா—பெண் குலங்கள்; உதப-த்யந்த—வெளிவந்தனர்; ஸ்வைரிண்ய—ஸ்வைரிணீ (தனது இனத்தைச் சேர்ந்தவனையே இப்பெண்கள் திருமணம் செய்வர்); காமின்ய—காமினீ (காம இச்சையினால் எக்குலத்தைச் சேர்ந்த ஆண்களையும் மணமுடிக்கும் பெண்கள்); பும்சல்ய—பும்சலீ (ஒரு கணவனைப் பிரிந்து மற்றொரு ஆணிடம் செல்பவள்); இதி—இவ்வாறு; யா—இவர்; வை—நிச்சயமாக; பில-அயனம்—பில சொர்க்கம்; பிரவிஷ்டம்—புகுந்து; புருஷம்—ஓர் ஆண்; ரஸேன—ரஸத்தினால்; ஹாடக-ஆக்யேன—சணல்வகைச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் ஆடகம் என்னும் மது; ஸாதயித்வா—பாலியல் உறவிற்குத் தகுதியளிக்கிறது; ஸ்வ-விலாஸ—அவர்களது சுய புலனுகர்ச்சிக்காக; அவலோகன—பார்வையினால்; அனுராக—காமம் நிறைந்து; ஸ்மித—புன்னகையினால்; ஸ்ம்லாப—பேசுவதினால்; உபகூஹன-ஆதிபி—தழுவுவதினால்; ஸ்வைரம்—அவர்களது சுய விருப்பத்திற்கேற்ப; கில—உண்மையில்; ரமயந்தி—பாலியல் இன்பத்தை அனுபவிக்கின்றனர்; யஸ்மின்—இது; உபயுக்தே—பயன்படுத்தும்பொழுது; புருஷ—ஒர் ஆண்; ஈஸ்வர-அஹம்—நான் மிகவும் சக்திவாய்ந்தவன்; ஸித்த-அஹம்—நானே விடுதலை பெற்ற மேன்மைமிக்கவன்; இதி—இவ்வாறு; அயுத—பத்தாயிரம்; மஹா-கஜ—பெரியயானைகள்; பலம்—பலம்; ஆத்மானம்—அவனை; அபிமன்யமான—வீண்கர்வம் கொண்டு; கத்ததே—அவர்கள் கூறுகின்றனர்; மத அந்த—வீண் கர்வத்தினால் குருடாகி; இவ—போன்று.

அன்பார்ந்த மன்னனே, அதல லோகம் தொடங்கி ஒன்றன் பின் ஒன்றாக கீழ் உலகங்களைப் பற்றி இப்போது நான் உனக்கு விளக்குகிறேன். அதல லோகத்தில் மயன் என்னும் அசுரனின் மைந்தன் பலன் என்பவன் இருக்கிறான். அவன் தொன்னூற்றாறு வகை யோக சக்திகளைப் படைத்தவன். சில யோகிகளும் சுவாமிகளும் இந்த யோகசக்திகளில் சிலவற்றைப் பயன்படுத்தி இன்றும் கூட மக்களை ஏமாற்றுகின்றனர். தனது கொட்டாவியிலிருந்தே பலன் அசுரன் ஸ்வைரிணீ, காமினி, பும்ஸ்சலி என்னும் மூவகைப் பெண்களைப் படைத்தான். ஸ்வைரிணி இனப்பெண்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஆடவர்களையே திருமணம் செய்கின்றனர். காமினி இனப் பெண்கள் எக்குலத்தைச் சேர்ந்த ஆண்மகனையும் மணம் முடித்துக் கொள்வர், பும்ஸ்சலி இனப்பெண்களோ தங்கள் கணவர்களை மாற்றிக் கொண்டே இருப்பர். இந்த அதல லோகத்தினுள் யாரேனும் ஒர் ஆண் மகன் நுழைந்தானென்றால் இப்பெண்கள் உடனே அவனைப் பிடித்து ஆடகம் (சணல்வகைச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் மது) என்னும் மதுவினை அவன் குடிக்குமாறு வற்புறுத்துகின்றனர். இம்மது பெண்கள் விரும்பும் அளவிற்கு ஓர் ஆண் மகனுக்குப் பாலியல் சக்தியை அளிக்கின்றது. ஒரு பெண் அவனை கவர்ச்சி மிகுப்பார்வையினாலும், இனிமையான வார்த்தைகளினாலும், அன்புகலந்த இவ்வழியே அவள் அவனைத் தனக்கு முற்றிலும் திருப்தி ஏற்படும்வரைத் தன்னுடன் பாலியல் இன்பம் அனுபவிக்குமாறுத் தூண்டுகிறாள். அவனது அதீதமான பாலியல் சக்தியினால் அம்மனிதன் தன்னை ஆயிரம் யானைகளைவிடப் பலம் மிகுந்தவனாகவும், எல்லாம் நிறைந்தவனாகவும் கருதுகிறான். உண்மையில் வீண்கர்வத்தினால் மாயைக்கும், மது மயக்கத்திற்கும் ஆளானதினால். வெல்ல முடியாத மரணத்தை மறந்துத் தன்னைக் கடவுளாகவே கருதுகிறான்.

பதம் 5.24.17
ததோ ‘தஸ்தாத் விதலே ஹரோ பகவான் ஹாடகேஸ்- வர: ஸ்வ-
பார்ஷத-பூத கணாவ்ருத: ப்ரஜாபதி-ஸர்கோபப்ரிம் ஹணாய பவோ
பவான்ய ஸஹ மிதுனீ பூத ஆஸ்தே யத: ப்ரவ்ருத்தா ஸரித்- ப்ரவரோ
ஹாடகீ நாம பவயோர் வீர்யேண யத்ர சித்ரபானுடர் மாதரிஸ்வனா
ஸமித்யமான ஒஜஸாய் பிபதி தன் நிஷ்ட்யூதம் ஹாடகாஹ்யம் ஸ்வர்ணம்
பூஷணேனாஸுரேந்த்ராவரோ தேஷு புருஷா: ஸஹ புருஷுபிர் தாரயந்தி:

தத—அதல லோகம்; அதஸ்தாத்—கீழே; விதலே—உலகத்தில்; ஹர—சிவபெருமான்; பகவான்—மிகுந்த சக்திவாய்ந்தவர்; ஹாடகேஸ்வர—தங்கத்தின் தலைவர்; ஸ்வ-பார்ஷத—அவரது தனிப்பட்டத் துணைவர்கள்; பூதகண—பூதகணங்கள்; ஆவ்ருத—சூழந்திருக்க; ப்ரஜாபதி-ஸர்க—பிரம்ம தேவனின் படைப்பின்; உபப்ரும்ஹணாய—மக்கட்தொகை அதிகரிப்பதற்காக; பவ—சிவபெருமான்; பவான்யா-ஸஹ—அவர் மனைவி பவானியுடன்; மிதுனீ-பூத—பாலியல் உறவில் கலந்து; ஆஸ்தே—இருக்கின்றனர்; யத—இவ்வுலகிலிருந்து; (விதவ) ப்ரவ்ருத்தா—உருவாகின்றது; ஸரித்-ப்ரவரா—மகாநதி; ஹாடகீ—ஆடகீ; நாம—பெயரில்; பவயோ-வீர்யேண—சிவபெருமான் மற்றும் பவானியின் சுக்கிரம், அரத்தினால்; யத்ர—இங்கே; சித்ர-பானு—அக்கினிதேவன்; மாதரிஸ்வனான்—காற்றினால்; ஸமித்யமான—ஒளியுடன் எரிகின்றது; ஒஜஸா—மிகுந்த வலிமையுடன்; பிபதி—பருகுகிறான்; தத்—அது; நிஷ்ட்யூதம்—சீறும் ஒலியுடன் வெளியே உமிழ்ந்து; காடக-ஆக்யம்—ஆடகம் என்னும் பெயரில்; ஸுவர்ணம்—தங்கம்; பூஷணேன—பல்வகை ஆபரணங்களினால்; அஸுர-இந்த்ர—பெரிய அசுரர்களின்; அவரோதேஷு—இல்லங்களில்; புருஷா—ஆண்கள்; ஸஹ—உடன்; புருஷுபி—அவர்களின் மனைவியர் மற்றும் பெண்டிர்; தாரயந்தி—அணிகின்றனர்.

அதலலோகத்திற்கு அடுத்து இருப்பது விதலலோகம் ஆகும். அங்கே தங்கச் சுரங்கங்களின் தலைவர் என்றறியப்படும் சிவபெருமான் தனது துணைவர்களுடனும், பூதகணங்களுடனும் வாழ்கின்றார். பிரஜாபதியாக இருக்கும் சிவபெருமான் தன் மனைவி பவானியுடன் உயிர்வாழிகளைப் படைப்பதற்காக பாலியல் உறவுகொள்கிறார். அவர்கள் வீர்யத்தின் கலப்பு ஆடகீ என்னும் நதியாகப் பெருக்கெடுத்து ஒடுகிறது. காற்றினால் நெருப்பு கொழுந்துவிட்டு எரியும் பொழுது, இந்நதியைக் குடித்து சீறும் ஒலியுடன் அதனை மீண்டும் வெளியே உமிழ்கிறது. அப்போது அது ஆடகம் என்னும் தங்கத்தை உற்பத்தி செய்கின்றது. தங்கள் மனைவியருடன் அங்கு வாழும் அசுரர்கள் அந்தத் தங்கத்தினால் செய்த ஆபரணங்களைக் கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் அங்கே மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.

பதம் 5.24.18
ததோ ‘தஸ்தாத் ஸுதலே அதார-ஸ்ரவோ: புண்ய ஸ்லோகோ
விரோச னாத்மஜோ பலிர் பகவதா மஹேந்த்ரஸ்ய ப்ரியம் சிகீர்ஷ
மாணேனாதிதேர் லப்த- காயோ பூதவா வடு-வாமன-ரூபனே பராக்ஷிப்த –
லோக-த்ரயோ பகவத் அனுகம்பயைவ புன: பப்ரவேஸித இந்த்ரா
திஷ்வ அவித்யமானயா ஸுஸம்ருத்தயா ஸ்ரீயாபிஜுஷ்ட: ஸ்வ தர்மேணா
ராதயம்ஸ் தம் ஏவ பகவந்தம் ஆராதனீயம் அபகத—ஸாத்வஸ ஆஸ்தே
‘ துனாபி

தத: அதஸ்தாத்—விதலலோகத்திற்குக் கீழே; ஸுதலே—சுதலம் என்னும் உலகம்; உதார-ஸ்ரவா—மிகவும் சிறப்புடன் போற்றப்படும்; புண்யஸ்லோக—மிகுந்த புண்ணியமும், ஆன்மீக உணர்வில் முன்னேறியவர்களும் ஆவர்; விரோசன ஆத்மஜ—விரோசனரின் மைந்தன்; பலி—பலி மகாராஜா; பகவதா—முழுமுதற்கடவுளால்; மஹா-இந்த்ர்ஸ்ய—தேவலோகத்தின் அரசன் இந்திரன்; ப்ரியம்—நலன்; சிகீர்ஷமாணேன—செய்வதற்கு விருப்பங்கொண்டு; ஆதிதே—ஆதிதியிடமிருந்து; லப்த-காய—அவரது உடலைப்பெற்று; பூத்வா—தோன்றினார்; வடு—பிரம்மச்சாரியாக; வாமன-ரூபண—குள்ள மனிதன் வடிவத்தில்; பராக்ஷிப்த—எடுத்துக்கொண்டார்; லோக-த்ரய—மூவுலங்களையும்; பகவத் அனுகம்பயா—முழுமுதற் கடவுளின் அளவற்றக் கருணையினால்; ஏவ—உறுதியாக; புன—மீண்டும்; ப்ரவேஸித—புகுவதற்குக் காரணமாகி; இந்த்ர-ஆதிஷு—தேவேந்திரன் போன்ற தேவர்களுக்கு நடுவில்; அவிர்யமானயா—தோன்றாது; ஸுஸம்ருத்தயா—மேன்மை மிக்க அந்த வளத்தினால் மிகுந்த செல்வம் பெற்று; ஸ்ரீயா—நல்யோகத்தினால்; அபிஜுஷ்ட—ஆசீர்வதிக்கப்பட்டு; ஸ்வ-தர்மேண—பக்தித் தொண்டு செய்வதினால்; ஆராதயன்—வழிபடுகின்றார்; தம்—அவரது; ஏவ—உறுதியாக; பகவந்தம்—முழுமுதற் கடவுள்; ஆராதனீயம்—அவர் உயர் வணக்கத்திற்குரியவர்; அபகத-ஸாத்வஸ—அச்சமின்றி; ஆஸ்தே—இருக்கின்றார்; அதுனா அபி—இன்றும் கூட.

விதலலோகத்திற்குக் கீழே சுதலலோகம் இருக்கின்றது. அங்கே இன்றும் கூட விரோசன மகாராஜாவின் மைந்தரும், புண்ணியமிக்க அரசர் என்று போற்றப்படுபவருமான பலிமகாராஜா வாழ்கின்றார். இந்திரனின் நன்மைக்காக பகவான் விஷ்ணு ஆதிதியின் மைந்தனாக ஒரு குள்ளப்பிரம்மச்சாரியாகத் தோன்றினார். அவர் பலி மகாராஜாவிடம் மூன்றடி நிலம் கேட்டுத் தந்திரமாக மூவுலகங்களையும் ஆட்கொண்டார். பலிமகாராஜா தனது உடைமைகள் எல்லாவற்றையும் வழங்கிய செயல் கண்டு மனம் மகிழ்ந்த பகவான் அவரது இராஜ்ஜியத்தை அவருக்கேத் திருப்பிக்கொடுத்து தேவேந்திரனை விட பெரிய செல்வந்தராக்கினார். சுதலலோகத்தில் முழுமுதற் கடவுளை வணங்குவதின் மூலம் பலிமகாராஜா பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றார்.

பதம் 5.24.19
நோ ஏவைதத் ஸாக்ஷாத்காரோ பூமி-தானஸ்ய யத் தத் பகவதி
அஸேஷ-ஜீவ நிகாயானாம் ஜீவ-பூதாத்ம-பூதே பரமாத்மனி வாஸு
தேவே தீர்ததமே பாத்ர உபபன்னே பரயா ஸ்ரத்தயா பரமாதர ஸமாஹித-
மனஸா ஸம்ப்ரதிபாதிதஸ்ய ஸாக்ஷாத் அபவர்க-த்வாரஸ்ய யத் பில –
நிலயைஸ்வர்யம்

ந—இல்லை; ஏவ—உண்மையில்; ஏதத்—இந்த; ஸாக்ஷாத்கார—நேரடி பலன்; பூமி-தானஸ்ய—பூமி தானத்தின்; யத்—இது; தத்—அது; பகவதி—முழுமுதற்கடவுளுக்கு; அஸேஷ-ஜீவ-நிகாயானாம்—எண்ணிலடங்கா உயிர்வாழிகளினால்; ஜீவ-பூத-ஆத்ம-பூதே—அவரே உயிருக்கும் பரமாத்மாகவும் இருக்கின்றார்; பரம-ஆத்மனி—பரம ஒழுங்குபடுத்துபவன்; வாஸுதேவே—பகவான் வாசுதேவர் (கிருஷ்ணர்); தீர்த-தமே—புண்ணியச் சேத்திரங்கள் அனைத்திலும் அவரே சிறந்தவர்; பாத்ரே—மிகவும் தகுதி வாய்ந்த பெறுநர்; உபபன்னே—அணுகப்பட்டு; பரயா—மிகவுயர்ந்த; ஸ்ரத்தயா—நம்பிக்கையினால்; பரம-ஆதர—மிகுந்த மரியாதையுடன்; ஸமாஹித-மனஸா—ஒருமுகப்படுத்திய மனதுடன்; ஸம்ப்ரதிபாதி தஸ்ய—அது அளிக்கப்பட்டது; ஸாக்ஷாத்—நேரடியாக; அபவர்க-த்வாரஸ்ய—விடுதலைக்கான வாயில்; யத்—இது; பில-நிலய—பில சொர்க்கத்தின்; போலியான—சொர்க்கலோகம்; ஐஸ்வர்யம்—செல்வம்.

அன்பார்ந்த மன்னனே, பலி மகாராஜா தனது செல்வங்கள் அனைத்தையும் முழுமுதற் கடவுளான வாமனதேவருக்கும் தானமாக வழங்கினார். அதற்காக, அவர் தான் செய்த தானத்திற்கும் பிரதிபலனாக பில சொர்க்கத்தில் உலக வளங்கள் அனைத்தையும் பெற்றார் என்று ஒருவன் தவறான முடிவிற்கு வரக்கூடாது. அனைத்து உயிர் வாழிகளின் உயிருக்கு ஆதாரமாக விளங்கும் முழுமுதற் கடவுள் அனைவரின் இதயத்தினுள்ளும் நட்பு மிகுந்த பரமாத்மாவாக இருப்பதோடு, அவரது இயக்கத்தின் கீழேயே ஒர் உயிர்வாழி பௌதீக உலகில் இன்பமோ, துன்பமோ அனுபவிக்கிறான். முழுமுதற் கடவுளின் உன்னதக் குணங்களைப் போற்றிப் பாராட்டி பலி மகாராஜா எல்லாவற்றையும் அவரது தாமரைத் திருவடிகளுக்கு அர்ப்பணித்தார். ஆயினும் அவரது நோக்கம் எதையும் பௌதீகமாகப் பெறக் கூடாது மாறாக தூய பக்தனுக்கு விடுதலை வாயில் தானே திறக்கிறது. பலி மகாராஜாவிற்கு ஏராளமாகப் பெளதீக செல்வம் அவர் செய்த தானத்திற்காகவே வழங்கப்பட்டது என்று ஒருவன் கருதக்கூடாது. ஒருவன் அன்பு மிகுந்து தூய பக்தனாகும்பொழுது முழுமுதற் கடவுளின் விருப்பத்தின் பேரில் அவன் நல்ல பெளதீக நிலையுடனும் ஆசிர்வதிக்கப்படுகிறான். ஆயினும் அவனது பக்தித் தொண்டின் பலனே அவன் பெற்றிருக்கும் பெளதீக செல்வம் என்று ஒருவன் தவறாக எண்ணக் கூடாது. பக்தித் தொண்டின் உண்மையான பலன் என்பது முழுமுதற் கடவுள் மீதான தூய அன்பினை விழிப்புறச் செய்வதேயாகும். அவ்வன்பு எல்லாச் சூழ்நிலைகளிலும் தொடர்கிறது.

பதம் 5.24.20
யஸ்ய ஹவாவ க்ஷுத-பதன ப்ரஸ்கலனாதிஷு விவஸ: ஸக்ருன்
நாமாபிக்ருணன் புருஷ: கர்ம- பந்தனம் அஞ்ஜஸா விதுனோதி யஸ்ய
ஹைவ ப்ரதிபாதனம் முழுக்ஷவோ ‘ன்யாதைவோபலபந்தே

யஸ்ய—அவர்களின்; ஹ வாவ—உண்மையில்; க்ஷுத—பசியில் வாடும்பொழுது; பதன—கீழே விழுதல்; ப்ரஸ்கலன-ஆதிஷு—தடுமாற்றம் போன்றவை; விவஸ—உதவியின்றி; ஸக்ருத்—ஒருதடவை; நாம-அபிக்ருணன்—பகவானின் புனித நாமத்தை ஒதுதல்; புருஷ—ஒருவன்; கர்ம-பந்தனம்—பலன் தரும் செயலில் கட்டுண்டு; அஞ்ஜஸா—முற்றிலும்; விதுனோதி—நீக்குகிறது; யஸ்ய—இதன்; ஹ—உறுதியாக; ஏவ—இவ்வழியே; ப்ரதிபாதனம்—வெறுப்பு; முழுக்ஷவ—விடுதலை நாடுபவர்கள்; அன்யதா—மாறாக; ஏவ—உறுதியாக; உபலபந்தே—உணர்வதற்கு முயற்சிக்கின்றனர்.

ஒருவன் பசியால் தழுவப்பட்டலோ அல்லது தவறி கீழே வீழ்ந்தாலோ அல்லது தடுமாற்றமடைந்தாலோ, அவன் பகவானின் புனித நாமத்தை ஒரே ஒரு முறை விரும்பியோ, விரும்பாமலோ உச்சரித்தாலும் அவன் தனது முன்வினைப் பலன்களில் இருந்து உடனடியாக விடுதலை பெறுகிறான். பௌதீகச் செயல்களில் சிக்கிக் கொண்டிருக்கும் கர்மீக்கள் இவ்விடுதலை பெறுவதற்காக யோகஸித்தி பயிற்சியிலும் இது போன்ற பிறமுயற்சிகளிலும் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.

பதம் 5.24.21
தத் பக்தானாம் ஆத்மாவதாம் சர்வேஸம் ஆத்மனி ஆத்மதா
ஆத்மதாயய்வா

தத்—அந்த; பக்தானாம்—சிறந்த பக்தரர்களது; ஆத்மவதாம்—சனகந், சனாதனர் போன்ற தன்னை உணர்ந்த பெரியோர்களது; சர்வேஸம்—எல்லாம்; ஆத்மனி—ஆன்மாக இருக்கிற முழுமுதற் கடவுளட்க்கு; ஆத்மா-தே—தயக்கம் இன்றித் தன்னைக் கொடுப்பேன்; ஆத்மதாய—பரமாத்மா ஆனவர்; இவ—மிகவும் சிறந்த.

மேன்மை தங்கிய முழுமுதற் கடவுள் பரமாத்மாவாக ஒவ்வொருவர் இதயங்களிலும் இருக்கிறார். தனது தொண்டர்களுக்கு நாரதமுனி போன்று தன்னையே கொடுக்கின்றார். முழுநிறைவான அன்போடு தன்னை வணங்குவோருக்கு அளவு கடந்த அன்புடன் தன்னையே ஈந்து விடுகிறார். நான்கு குமாரர்களைப்போன்ற மிக உயர்ந்த தன்னை உணர்ந்த யோகியரும் தங்கள் இதயத்தின் உள்ளேயே பரமாத்மாவினை உணர்ந்தமையால், மனவாசகம் கடந்த மெய்யுணர்வை அவர்கள் பெறுகின்றனர்.

பதம் 5.24.22
ந வை பகவன் நூனாம் அமுஷ்யானுக்ராக யத் உதபுணர் ஆத்மானுஸ்
மிருதிமோஷனம் மாயாமய போகைஸ்வர்யம் இவாதனதேதி

ந—இல்லை; வை—மிகச்சிறந்த; பகவான்—முழுமுதற்கடவுள்; நூனாம்—நிச்சயமாக; அமுஷ்யா—பலி மகாராஜாவுக்கு; அனுக்ராக—அவரது அருளை ஈந்தார்; யத்—ஏனென்றால்; உத—நிச்சயமாக; புன—மறுபடியும்; ஆத்மானுஸ்மிருதி—முழுமுதற்கடவுளின் நினைவாக; மோஷனம்—ஒன்றைக் கவர்ந்து கொள்ளல்; மாயாமய—மாயையின் குணத்தோடு; போக ஐஸ்வர்யம்—உலகச் செல்வவளம்; இவா—நிச்சயமாக; ஆதனுதா—விரிவடைந்த; இதி—இவ்வாறு.

முழுமுதற் கடவுளான இறைவன் பலிமகாராஜாவிற்கு உலகியல் செல்வத்தையும் அளவிறந்த வளத்தையும் கொடுக்கவில்லை. ஏனெனில் பொருளும் செல்வமும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் உணர்வினை மறக்கச் செய்துவிடும். உலகியற் செல்வத்தின் விளைவு என்னவென்றால், அது முழுமுதற் கடவுளை மனதார வணங்கி வாழ்த்துவதைத் தவிர்த்து விடும்.

பதம் 5.24.23
யத் தத் பகவதானதிகதான்யோபாயேன யாச்ஞா-ச்சலேனா பஹ்ருத-
ஸ்வஸரீராவஸேஷித- லோக த்ரயோ வருண- பாஸைஸ் ச ஸம்ப்ரதி
முக்தோ கிரி தர்யாம் சாபவித்த இதி ஹோவாச

யத்—இது; தத்—அந்த; பகவதா—முழுமுதற்கடவுளினால்; அனதிகத-அன்ய- உபாயேன—வேறெவ்வழிகளாலும் உணர்த்தியவர்; யாச்ஞா-சலேன—இரப்பது போன்ற தந்திரத்தினால்; அபஹ்ருதே—எடுத்துக் கொண்டார்; ஸ்வ-ஸரீர-அவஸேஷித—அவரது உடல் ஒன்று மட்டுமே எஞ்சியிருந்து; லோக-த்ரய—மூவுலகங்கள்; வருண-பாஸை:—வருணனின் கயிற்றினால்; ச—மேலும்; ஸம்ப்ரதிமுக்த:—முற்றிலும் கட்டப்பட்டு கிரி-தர்யாம்—ஒரு மலைக் குகையினுள்; ச—மேலும்; உபவித்த—சிறை வைக்கப்பட்டார்; இதி—இவ்வாறு; ஹ—உண்மையில்; உவாச—கூறினார்.

முழுமுதற்கடவுள் பலி மகாராஜாவிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதற்கு எந்த வழியும் காணமுடியாதபொழுது அவர் இரப்பவர் போல் தந்திரம் செய்து அவரிடமிருந்து மூவுலகங்களையும் எடுத்துக் கொண்டார். இதன் பின் பலி மகாராஜாவிடம் எஞ்சியிருந்தது அவர் உடல் ஒன்று மட்டுமே. இருந்தும் பகவான் திருப்தியடையவில்லை. அவர் பலி மகாராஜாவைக் கைது செய்து, கயிற்றினால் கட்டி அவரை ஒரு மலைக் குகையினுள் எறிந்தார். தன்னுடைய செல்வங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தன்னை ஒரு மலைக் குகையினுள் எறிந்த பின்பும் கூடப் பலி மகாராஜா பின்வரும் வார்த்தைகளைக் கூறலுற்றார்.

பதம் 5.24.24
நூனம் பதாயம் பகவான் அர்தேஷு ந நிஷ்ணாதோ யோ ‘ஸாவ்
இந்த்ரோ யஸ்ய ஸசிவோ மந்த்ராய வ்ருத ஏகாந்ததோ ப்ரஹஸ்பதிஸ்
தம் அதிஹாய ஸ்வயம் உபேந்த்ரேணாத்மானம் அயாசதாத்மனஸ்
சாஸிஷோ நோ ஏவ தத் தாஸ்யம் அதிகம்பீர-வயஸ: காலஸ்ய மன்வந்தர
பரிவ்ருத்தம் கியல் லோக-த்ரயம் இதம்

நூனம்—உறுதியாக; பத—அந்தோ; அயம்—இந்த; பகவான்—மிகவும் கற்றறிந்த; அர்தேஷு—சுய நலத்தில்; ந—இல்லை; நிஷ்ணாத—மிகவும் அனுபவப்பட்டு; ய—யார்; அஸௌ—சொர்க்கத்தின் அரசன்; இந்த்ர—இந்திரன்; யஸ்ய—அவரது; ஸசிவ:—பிரதம மந்திரி; மந்த்ராய—உபதேசிப்பதற்காக; வ்ருத—தேர்ந்தெடுத்து; ஏகாந்தத—தனியே; ப்ருஹஸ்பதி—பிருகஸ்பதி; தம்—அவளுடைய; அதிஹாய—மறந்து: ஸ்வயம்—தனியே; உபேந்த்ரேண—உபேந்திரனின் வழியினால்; (பகவான் வாமனதேவன்); ஆத்மானம்—தனது; அயாசத—வேண்டி; ஆத்மன—அவரது; ச—மேலும்; ஆஸிஷ—ஆசிகள் (மூவுலங்கள்); ந—இல்லை; ஏவ—உறுதியாக; தத்-தாஸ்யம்—பகவானின் அன்புத் தொண்டு; அதி—மிகுந்த; கம்பீர-வயஸ:—கடப்பதற்குரிய காலம் உடையவராக; காலஸ்ய—காலம்; மன்வந்தர-பரிவ்ருத்தம்—மனுவின் ஆயுட்காலத்தின் இறுதியில் மாறுகிறது; கியத்—என்ன மதிப்பு; லோக-த்ரயம்—மூவுலங்கள்; இதம்—இவை.

சொர்க்கத்தின் தலைவனான இந்திரன் எத்துணை இரக்கத்திற்குரியவன், அவன் கற்றவனாக இருந்தும், சக்தியுடையவனாக இருந்தும், தனக்கு அறிவுரை கூறப்பிரகஸ்பதியை தலைமை அமைச்சராகக் கொண்டிருந்தும் ஆன்மீகத்தில் வளர்ச்சி பெறுவதில் அவன் முற்றிலும் அறியாமை உடையவனாக இருக்கின்றான். பிரகஸ்பதியுங்கூடப் புத்திமான் அல்லர் ஏனென்றால் அவர் தனது சீடன் இந்திரனுக்கு முறையாக போதிக்கவில்லை. பகவான் வாமனதேவர் இந்திரனின் வாயிலில் நின்று கொண்டிருந்தார் ஆனால் இந்திரனோ அவரிடம் உன்னத அன்புத்தொண்டிற்கான சந்தர்ப்பத்தை அவரிடம் இருந்து பெறுவதற்குப் பதிலாக அவனது புலனுகர்ச்சிக்காக என்னிடம் அவரை மூவுலகங்களையும் இரந்து பெறச்செய்வதில் ஈடுபடுத்தினான். மூவுலகத் தலைமை என்பது மிகவும் இழிந்ததாகும் ஏனெனில் என்னதான் மிகப்பெரிய பெளதீக வளங்கள் ஒருவனிடம் இருந்தாலும் அது ஒரு மனுவின் ஆயுட்காலம் வரை மட்டுமே இருக்கும். இக்காலமோ, முடிவற்றக் காலத்தில் ஒரு சிறு கூறேயாகும்.

பதம் 5.24.25
யஸ்யானுதாஸ்யம் ஏவாஸ்மத்-பிதாமஹ: கில வவ்ரே ந து ஸ்வ-
பித்ருயம் யத் உதாகுதோபயம் பதம் தீய-மானம் பகவத: பரம் இதி
பகவதோபரதே கலு-ஸ்வ-பிதரி

யஸ்ய—அவரது (முழுமுதற்கடவுள்); அனுதாஸ்யம்—தொண்டு; ஏவ—உறுதியாக; அஸ்மத்—எங்கள்; பிதா-மஹ:—பாட்டனார்; கில—உண்மையில்; வவ்ரே—ஏற்றுக்கொள்ள; ந—இல்லை; து—ஆனால்; ஸ்வ—தனது; பித்ருயம்—தந்தை வழிசொத்து; யத்—இது; உத—உறுதியாக; அகுத:—பயம் அச்சமற்றத்தன்மை; பதம்—நிலை; தீயமானம்—அருளப்பட்டும்; பகவத:—முழுமுதற்கடவுளைக் காட்டிலும்; பரம்—மற்றவை; இதி—இவ்வாறு; பகவதோ—பரம புருஷ பகவானால்; உபரதே—கொல்லப்படும் பொழுது; கலு—உண்மையில்; ஸ்வ-பிதரி—தனது சொந்தத் தந்தை.

பலிமகாராஜா கூறினார்: எனது தாத்தாவான பிரஹலாத மகாராஜா ஒருவர் மட்டுமே தனக்கு நன்மை பயப்பது எது என்பதை உண்மையில் அறிந்திருந்தார். பிரஹலாதனின் தந்தை இரண்யகசிபு இறந்த பிறகு பகவான் நரசிம்மதேவர் பிரஹலாதனுக்கு அவரது தந்தையின் இராஜ்ஜியத்தையும், பெளதீகப் பந்தத்திலிருந்து அவருக்கு விடுதலையும் அளிக்க விரும்பினார். ஆயினும் பிரஹலாதன் இவை இரண்டையும் மறுதலித்தார். விடுதலையும், பௌதீகச் செல்வமும் பக்தித் தொண்டிற்குத் தடைகள் என்று அவர் கருதினர் அதனால் முழுமுதற் கடவுளிடமிருந்து பெறும் இது போன்ற பரிசுகள் அவரது உண்மையான ஆசிகள் அல்ல என்றும் அவர் கருதினார். இதனைத் தொடர்ந்து கர்மம் மற்றும் ஞானத்தின் பலன்களை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக பிரஹலாத மகாராஜா பகவானிடம் அவருக்குத் தொண்டு செய்யும் தொண்டனாக இருக்கும் வரம் வேண்டினார்.

பதம் 5.24.26
தஸ்ய மஹானுபாவஸ்யானுபதம் அம்ருஜித-கஷாய: கோவாஸ்மத்-
வித: பரிஹீண- பகவத்-அனுக்ரஹ உபஜிகமிஷதீதி

தஸ்ய—பிரஹலாத மகாராஜாவின்; மஹா-அனுபவஸ்ய—மேன்மைமிக்கப் பக்தனாவார்; அனுபதம்—பாதை; அம்ருஜித-கஷாய:—பெளதீகத்தினால் மாசுடைய ஒருவன்; க:—என்ன; வா—அல்லது; அஸ்மத்-வித:—எம்மைப் போன்று; பரிஹீண-பகவத் அனுக்ரஹ:—முழுமுதற்கடவுளின் அனுக்கிரகமின்றி; உபஜிகமிஷதீதி—பின்பற்றுவதற்கு விரும்புகிறான்; இதி—இவ்வாறு.

பலிமகாராஜா கூறினார்: பெளதீக இன்பத்தில் பற்றுடைய, ஜட இயற்கையினால் முக்குணங்களினால் மாசுபடிந்த, முழுமுதற் கடவுளின் கருணையற்ற எம்போன்றவர்களினால் பகவானின் மிகச் சிறந்த பக்தரான பிரஹலாத மகாராஜாவின் பாதையினைப் பின்பற்ற முடியாது.

பதம் 5.24.27
தஸ்யானுசரிதம் உபரிஷ்டாத் விஸ்தரிஷ்யதே யஸ்ய பகவான் ஸ்வயம்
அகில ஜகத்-குருர் நாராயணோ த்வாரி கதா-பாணிர் அவதிஷ்டதே
நிஜ ஜனானுகம்பித-ஹ்ருயோ யேனாங்குஷ்டேன பதா தஸ-கந்தரோ
யோஜனாயுதாயுதம் திக்- விஜய உச்சடித:

தஸ்ய—பலிமகாராஜாவின்; அனுசரிதம்—சரிதம்; உபரிஷ்டாத்—பின்னர்; (எட்டாவது காண்டத்தில்); விஸ்தரிஷ்யதே—விளக்கப்படும்; யஸ்ய—அவரது; பகவான்—முழுமுதற்கடவுள்; ஸ்வயம்—தனிப்பட்ட முறையில்; அகில-ஜகத்-குரு—மூவுலகங்களின் குரு; நாராயண:—பரமபுருஷ பகவான் நாராயணர் தானே; த்வாரி—வாயிலில்; கதா-பாணி:—கதாயுதத்தினை ஏந்தியவராக; அவதிஷ்டதே—நிற்கிறார்; நிஜஜன-அனுகம்பித-ஹ்ருதய:—அவரது பக்தர்களுக்காக அவரது இதயத்தில் எப்போதும் கருணை நிரம்பியிருக்கின்றது; யேன—அவரால்; அங்குஷ்டேன—தமது பெரிய பாதத்தினால்; பதா—அவரது பாதம்; தஸ-கந்தர:—பத்துத்தலைகளை உடைய இராவணன்; யோஜன-அயுத-அயுதம்—என்பதினாயிரம் மைல்கள் தூரத்தில்; திக்-விஜயே—பலிமகாராஜாவை வெற்றி கொள்ளும் நோக்கத்திற்காக; உச்சாடித:—விரட்டினார்.

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே பலிமகாராஜாவின் குணத்தினை எவ்வாறு என்னால் புகழ முடியும்? மூவுலகங்களின் குருவும், தனது பக்தர்களிடம் மிகுந்த கருணையுடையவருமான முழுமுதற் கடவுள் தனது கரத்தில் கதாயுதத்தினை ஏந்தியவாறு பலி மகாராஜாவின் வாயிலில் நிற்கிறார். ஆற்றல் மிக்க அசுரன் இராவணன் பலிமகாராஜாவை வெற்றி கொள்ள வந்தபோது வாமனதேவர் தனது பெரிய பாதத்தினால் அவனை எண்பதினாயிரம் மைல்களுக்கு அப்பால் போய் விழும்படி உதைத்துத் தள்ளினார். பலிமகாராஜாவின் குணநலன்களையும், செயல்களையும் நான் பின்னர் விளக்குகிறேன் (ஸ்ரீமத் பாகவதம் எட்டாவது காண்டத்தில்).

பதம் 5.24.28
ததோ ‘தஸ்தாத் தலாதலே மயோ நாம தானவேந்த்ரஸ் த்ரி புராதிபதிர்
பகவதா புராரிணா த்ரி-லோகீ-ஸம் சிகீர்ஷுணா நிர்தக்த-ஸ்வ-புர-த்ரயஸ்
தத்-ப்ரஸாதால் லப்த- பதோ மாயாவிநாம் ஆசார்யோ மஹாதேவேன
பரிரக்ஷிதோ விகத–ஸுதர்ஸன-பயோ மஹீயதே

தத:—சுதலம் எனப்படும் உலகம்; அதஸ்தாத்—கீழே; தலாதலே—தலாதலம் என்னும் உலகம்; மய:—மயன்; நாம—பெயரில்; தானவ-இந்த்ர:—தாலை அசுரர்களின் அரசன்; த்ரி-புர-அதிபதி:—முப்புரங்களின் தலைவர்; பகவதா—மிகவும் சக்தி பெற்ற; புராரிணா—சிவபெருமான்; அவர் திரிபுராரி என்றும் அழைக்கப்படுகிறார்; த்ரி-லோகீ—மூவுலகங்களின்; ஸம்—நல்யோகம்; சிகீர்ஷுணா—அவர் விரும்பிக் கொண்டிருந்தார்; நிர்தக்த—எரித்தார்; ஸ்வ-புர-த்ரய:—அவனது மூன்று நகரங்களை; தத்-ப்ரஸாதாத்—சிவபெருமானின் கருணையினால்; லப்த—எய்தினான்; பத:—ஒரு இராஜ்ஜியம்; மாயா-விநாம்-ஆசார்ய:—மாயாவிகள் அனைவரின் ஆச்சாரியார் அல்லது எஜமானர்; மஹா-தேவேன—சிவபெருமானால்; பரிரக்ஷித:—பாதுகாக்கப்பட்டு; விகத-ஸுதர்ஸன-பய:—முழுமுதற்கடவுளுக்கோ அவரது சுதர்சனச் சக்கரத்திற்கோப் பயப்படுவது இல்லை; மஹீயதே—வழிபடப்படுகிறார்.

சுதல லோகத்திற்குக் கீழே தலாதலம் என்னும் உலகம் இருக்கிறது. இது தான் அசுரனான மயன் என்பவனால் ஆளப்படுகிறது. மயன் மாயாவின் அனைவரின் ஆச்சாரியர் ஆவான். மந்திர சக்திகளை அவன் வரவழைக்க கூடியவனாவான். மூவுலகங்களின் நன்மைக்காக திரிபுராரி என்றழைக்கப்படும் சிவபெருமான் ஒரு சமயம் மயனின் மூன்று நகரங்களை தீயினால் எரித்தார். பின்னர் அவன் மீது மகிழ்ச்சி கொண்டு அவர் இராஜ்ஜியத்தை அவனிடமே திருப்பி அளித்தார். அதிலிருந்து மயதானவன் சிவபெருமானால் காக்கப்படுகிறான். அதனால் அவன் முழுமுதற் கடவுளின் சுதர்சனச் சக்கரத்திற்குப் பயப்படத் தேவையில்லை என்று தவறாகக் கருதுகிறான்.

பதம் 5.24.29
ததோ’தஸ்டான் மஹாதலே காத்ரவேயாணாம் ஸர்பாணாம் நைக-
ஸிரஸாம் க்ரோதவஸோ நாம கண: குஹக-தக்ஷக-காலிய-ஸுஷேணாதி
ப்ரதானா மஹா-போகவந்த: பதத்த்ரி-ராஜாதிபதே: புருஷ- வாஹாத்
அனவரதம் உத்விஜமானா: ஸ்வகளத்ராபத்ய-ஸுஹ்ருத்-குடும்ப-ஸங்
கேன க்வசித் ப்ரமத்தா விஹரந்தி

தத—தலாதல லோகம்; அதஸ்தாத்—கீழே; மஹாதலே—மகாதலம் என்னும் உலகம்; காத்ர-வேயாணாம்—கத்ரூவின் சந்ததிகள்; ஸர்பாணாம்—பெரியநாகப் பாம்புகள்; ந ஏக-ஸிராஸாம்—அவற்றிற்குப் பல தலைகள் உண்டு; க்ரோத-வஸ—எப்போதும் கோபவயப்பட்டிருக்கும்; நாம—பெயரில்; கண—கூட்டம்; குஹக—குஹகன்; தக்ஷக—தக்ஷகன்; காலிய—காலியன்; ஸுஷெண—சுஷேணன்; ஆதி—போன்றோர்; எல்லாவிதமான பெளதீக இன்பங்களுக்கும் அடிமையாகி; ப்ரதானா—யார் முதன்மையானவர்கள்; மஹா-போகவந்த:—எல்லா வகையான பொருள் இன்பத்திற்கும் அடிமையானவர்; பதத்த்ரி-ராஜ-அதிபதே—பறவைகளின் அரசன் கருடன்; புருஷ-வாஹாத்—அவரே முழுமுதற் கடவுளின் வாகனமாவார்; அனவரதம்—தொடர்ந்து; உத்விஜமானா—அஞ்சி; ஸ்வ—அவர்களுக்குரிய; களத்ர-அபத்ய—மனைவி, மக்கள்; யஸுஹ்ருதத்—நண்பர்கள்; குடும்ப—குடும்பத்தினர்; ஸங்கேன—தொடர்பில்; க்வசித்—சிலசமயம்; ப்ரமத்தா:—சினமூட்டி; விஹரந்தி—அவை விளையாடும்.

தலாதல லோகத்தின் கீழே மகாதல லோகம் இருக்கிறது. இது கத்ரூவன் சந்ததியினரான, எப்போதும் சினங்கொண்டிருக்கும் ஏராளமான தலைகளையுடைய பாம்புகளின் இருப்பிடமாகும். இவற்றுள் முக்கியமானப் பாம்புகள் குஹகன், தக்ஷகன், காலியன், சுஷேணன் என்பவையாகும். மகாதல லோகத்தில் உள்ள பாம்புகள் எப்போதும் பகவான் விஷ்ணுவின் வாகனமாக கருடன்மீது கொண்ட அச்சத்தினால் துன்பத்திற்காளாகின்றன. ஆயினும் அவை கவலை கொண்டிருந்த போதிலும், அவற்றுள் சில தமது மனைவி, மக்கள், நண்பர்கள், உறவினர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்.

பதம் 5.24.30
ததோ ‘தஸ்தாத் ரஸாதலே தைதேயா தானவா: பணயோ நாம
நிவாத- கவசா: காலேயா ஹிரண்ய-புரவாஸின இதி விபுத-ப்ரத்யனீகா
உத்பத்தயா மஹெளஜஸோ மஹா-ஸாஹஸினோ பகவத: ஸகல-
லோகானுபாவஸ்ய ஹரேர் ஏவ தேஜஸா ப்ரதிஹத- பாலவலேபா
பிலேஸ்யா இவ வஸந்தி யே வை ஸரம-யேந்த்ர-தூத்யா வாக்பிர் மந்த்ர-
வர்ணாபிர் இந்த்ராத்பிப்யதி

தத அதஸ்தாத்—மகாதல லோகத்திற்குக் கீழே; ரஸாதலே—இரஸாதலம் என்னும் லோகம்; தைதேயா—திதியின் மைந்தர்கள்; தானவா—தனுவின் மைந்தர்கள்; பணய நாம—பணிஸ் என்னும் பெயரில்; நிவாத-கவசா—நிவாத கவசர்கள்; காலேயா—காலேயர்கள்; ஹிரண்ய-புரவாஸின—இரண்யபுரவாசிகள்; இதி—இவ்வாறு; விபுத-ப்ரத்யனீகா—தேவர்களின் பகைவர்கள்; உத்பத்த்யா—பிறப்பிலிருந்து; மஹா-ஒஜஸ—மிகவும் சக்தியுடையவர்கள்; மஹா-ஸாஹஸின—மகா சாகசமுடையோர்; பகவத—முழுமுதற் கடவுளின்; ஸகல-லோக-அனுபாவஸ்ய—எல்லா உலகங்களுக்கும் புண்ணிய மூர்த்தியாக விளங்குபவர்; ஹரே—முழுமுதற் கடவுளின்; ஏவ—உறுதியாக; தேஜஸா—சுதர்சனச் சக்கரத்தினால்; ப்ரதிஹத—தோற்கடிக்கப்பட்டு; பல—பலம்; அவலேபா—கர்வம் (உடல் வலிமை காரணமாக); பில இஸ்யா—பாம்புகள்; இவ—போன்று; வஸந்தி—அவர்கள் வாழ்கின்றனர்; யே—இவர்கள்; வை—உண்மையில்; ஸரமயா—சரமா; இந்த்ர-துத்யா—இந்திரனின் தூதன்; வாக்பி:—வார்த்தைகளினால்; மந்த்ரத்-வர்ணாபி—மந்திரத்தின் வடிவில்; இந்த்ராத்—இந்திரனிடமிருந்து; பிப்யதி—அஞ்சுகின்றனர்.

மகாதல லோகத்திற்குக் கீழே இரஸாதல லோகம் இருக்கின்றது. இது திதி மற்றும் தனுவிற்குப் பிறந்த அசுரர்களின் இருப்பிடமாகும். இவர்கள் பணிஸ், நிவாத கவசரகள், காலேயர்கள் மற்றும் இரண்யபுரவாசிகள் என்று அழைக்கப்படுகின்றனர் (இரண்யபுரத்தில் வாழ்பவர்கள்) இவர்கள் அனைவரும் தேவர்களின் பகைவர்களாவர். மேலும் இவர்கள் பாம்புகளைப் போல் பொந்துக்களில் வாழ்கின்றனர். பிறப்பிலிருந்தே இவர்கள் அதீத சக்தியும் கொடுமையும் வாய்ந்தவர்களாவர். மேலும் தேவர்கள் தமது பலத்தினை எண்ணிக் கர்வம் கொண்டிருந்த போதிலும், எல்லா உலகங்களையும் ஆளும் முழுமுதற் கடவுளின் சுதர்சனச் சக்கரத்தால் இவர்கள் எப்போதும் தோற்கடிக்கப்படுகின்றனர். இந்திரனின் பெண் தூதரான சரமா என்பவள் ஒரு குறிப்பிட்ட சாபத்தினை ஒதுகின்றபொழுது இரஸாதலத்தைச் சேர்ந்த நாகாசுரர்கள் இந்திரனை எண்ணி அதிக அச்சங் கொள்கின்றனர்.

பதம் 5.24.31
ததோ ‘தஸ்தாத் பாதாலே நாக- லோக – பதயோ வாசுகி-ப்ரமுகா:
ஸங்க குலிக-மஹாஸங்க-ஸ்வேத-தனஞ்ஜய-த்ருதராஷ்ட்ர – ஸங்கசூட-
கம்பலாஸ்வதர- தேவதத்தாதயோ மஹா-போகினோ மஹாமர்ஷா
நிவஸந்தி யஷோம் உ ஹ வை பஞ்ச- ஸப்த-தஸ-ஸத- ஸஹஸ்ர-ஸீர்
ஸாணாம் பணாஸு விரசிதா: மஹா-மணயே ரோசிஷ்ணவ: பாதால-
விவர- திமிர – நிகரம் ஸ்வ ரோசிஷா விதஹமந்தி

தத: அதஸ்தாத்—இரஸாதல லோகத்திற்குக் கீழ்; பாதாலே—பாதாள லோகம்; நாக-லோக-பதய—நாக லோகங்களின் தலைவர்கள்; வாஸுகி—வாசுகியினால்; ப்ரமுகா—தலைமைதாங்கப்பட்டு; ஸங்க—சங்கன்; குலிக—குலிகன்; மஹா-ஸங்க—மகாசங்கன்; ஸ்வேத—சுவேதன்; தனஞ்ஜய—தனஞ்சயன்; த்ருதராஷ்ட்ர—திருதராஷ்டிரன்; ஸங்க—சூடசங்கசூடன்; கம்பவ—கம்பவன்; அஸ்வதர—அஸ்வதர; தேவதத்தா—தேவதத்தா; ஆதய—போன்ற; மஹா-போகின—போகிகள்; மஹா-அமர்ஷா—இயற்கையிலேயே மிகுந்த துவேசமுடையோர்; நிவஸந்தி—வாழ்கின்றன; யேஷாம்—அனைத்தும்; உ ஹ—நிச்சயமாக; வை—உண்மையில்; பஞ்ச—ஐந்து; ஸப்த—ஏழு; தஸ—பத்து; ஸத—நூறு; ஸஹஸ்ர—ஆயிரம்; ஸுர்ஷாணாம்—தலைகள் உடையன; பணாஸு—அத்தலைவர்களின் மீது; விரசிதா:—பொருத்தப்பட்டுள்ள; மஹா-மணய—மதிப்புயர்ந்த இரத்தினக் கற்கள்; ரோசிஷ்ணவ—ஒளி நிறைந்தவை; பாதால-விவர-பாதால—லோகத்தின் குகைகள்; திமிர-நிகரம்—அடர்ந்த இருட்டில்; ஸ்வ-ரோசிஷா—அவற்றின் தலைவர்களின் ஒளியினால்; விதஹமந்தி—நீங்குகின்றது.

இராஸதல லோகத்திற்கு கீழே பாதாள லோகம் அல்லது நாகலோகம் இருக்கின்றது. அங்கே அசுரநாகங்களும், நாகலோகத்தின் தலைவர்களான சங்கன், குலிகன், மகாசங்கன், சுவேதன், தனஞ்சயன், திருதராஷ்டிரன், சங்கசூடன், கம்பவன், அஸ்தரன், தேவதத்தன் போன்றவைகளும் இருக்கின்றன. இவற்றின் தலைவனாக வாசுகிப் பாம்பே இருக்கிறது. இவையனைத்தும் அதீத துவேசமுடையன என்பதோடு சிலவற்றிற்கு ஐந்து தலை, சிலவற்றிற்கு ஏழு தலை, சிலவற்றிற்கு பத்துதலை, சிலவற்றிற்கு நூறு தலை, மேலும் சிலவற்றிற்கு ஆயிரம் தலை என்று ஏராளமான தலைகளை உடைய பாம்புகள் இருக்கின்றன. இவற்றின் தலைகளில் நாக இரத்தினங்கள் உள்ளன. இவை பில சொர்க்கம் முழுவதும் ஒளி செய்கின்றன.


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “பில சொர்க்கங்கள்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திநான்காம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare