அத்தியாயம் – 24
பில சொர்க்கங்கள்
பதம் 5.24.1 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, புராணங்களைப் பற்றி சொற்பொழிவாற்றும் சில வரலாற்று வல்லுநர்கள் சூரியனுக்குக் கீழே 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) தூரத்தில் நட்சத்திரங்களுள் ஒன்றுபோல் இயங்கும் இராகு என்னும் கிரஹம் ஒன்று உள்ளதாகக் கூறுகின்றனர். இக்கிரஹத்தின் ஆதிபத்தியத் தேவதை சிம்ஹிகா என்பவனின் மைந்தனும், அசுரர்களில் அனைவரினும் மிகவும் வெறுக்கத்தக்க ஓர் அசுரன் ஆவான். அவன் தேவ நிலைக்கோ அல்லது ஒரு கிரஹத்தின் ஆதிபத்தியத் தேவதையாகவோ வருவதற்கு முற்றிலும் தகுதியற்றவனாக இருந்தபோதிலும், முழுமுதற் கடவுளின் அருளினால் அவன் அந்நிலை எய்தப் பெற்றான். அவனைப் பற்றி நான் பின்னர் விளக்கிக் கூறுவேன்.
பதம் 5.24.2 : வெப்பத்திற்கு ஆதாரமாகத் திகழும் சூரிய கோளம் 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) வரை விரிந்திருக்கிறது. சந்திரன் 20,000 யோஜனங்கள் (160,000 மைல்கள்) வரை விரிந்திருக்கிறது. இராகு 30,000 யோஜனங்கள் (240,000 மைல்கள்) வரை விரிந்திருக்கிறது. அமிர்தம் பரிமாறப்பட்டபோது இராகு சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் புகுந்து அவர்கள் பெறாதவாறு தடுத்தான். இவர்கள் இருவரிடத்தும் இராகு பகைமை பாராட்டினான். அதனால் அவன் சூரியஒளி மற்றும் சந்திர ஒளியை அமாவாசை பகல் மற்றும் பௌர்ணமி இரவில் எப்போதும் தடுப்பதற்கு முயற்சி செய்கிறான்.
பதம் 5.24.3 : இராகுவின் தாக்குதல் பற்றி சூரியன் மற்றும் சந்திரதேவனிடம் கேட்டபின்னர் அவர்களைக் காப்பதற்காக முழுமுதற் கடவுள் விஷ்ணு தனது சுதர்சனச் சக்கரத்தை ஏவினார். சுதர்சனச் சக்கரம் என்பது பகவானின் மிகுந்த நேசிப்பிற்குரியவரும், நம்பிக்கைக்குரிய பக்தரும் ஆவார். அதிலிருந்து வெளிப்படும் தாங்கவொண்ணா வெப்பம் வைணவர்கள் அல்லாதாரை அழிப்பதற்குரியதாகும். அதனால் அவ்வெப்பத்தினைத் தாங்க முடியாத இராகு அச்சம் கொண்டு ஒடுகிறான். சூரிய, சந்திரர்களை இராகு இடையூறு செய்கின்ற காலமே மக்கள் பொதுவாக அறிந்திருக்கும் கிரஹணம் என்பதாகும்.
பதம் 5.24.4 : இராகுவிற்குக் கீழே 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) தூரத்தில் சித்த லோகம், சாரணலோகம் மற்றும் வித்யாதர லோகம் இருக்கின்றன.
பதம் 5.24.5 : வித்யாதர, சாரண, சித்த லோகங்களுக்கு அடியில் வானில் உள்ள பகுதி அந்தரிக்ஷம் என்றழைக்கப்படுகின்றது. யட்சர்கள், இராட்சதர்கள், பிசாசுகள், பேய்கள் போன்ற பூதகணங்களுக்கு இவை இன்பத்திற்கான இடங்களாகும். அந்தரிக்ஷம் என்பது வானில் காற்று வீசுகின்ற தூரத்திற்கும் மேகங்கள் மிதக்கும் தூரம் வரையிலும் விரிந்திருக்கின்றது. இதற்கு மேல் காற்று என்பது கிடையாது.
பதம் 5.24.6 : யட்சர்கள் மற்றும் இராட்சதர்களின் இருப்பிடங்களுக்குக் கீழே 100 யோஜனங்கள் (800 மைல்கள்) தூரத்தில் பூமிக்கோளம் இருக்கின்றது. இதன் மேற்பகுதி அன்னங்கள், கழுகுகள், பருந்துகள் போன்ற பெரிய பறவைகள் பறக்கக்கூடிய தூரம் வரை விரிந்திருக்கின்றது.
பதம் 5.24.7 : அன்பார்ந்த மன்னனே, இப்பூமிக்குக் கீழே அதலம், விதலம், சுதலம், தலாதலம், மகாதலம், இரஸாதலம், பாதாளம் என்னும் ஏழு லோகங்கள் இருக்கின்றன. நான் ஏற்கனவே பூமண்டலத்தின் இருப்பினைப் பற்றி விளக்கியிருக்கிறேன். ஏழு கீழ் உலகங்களின் அகலமும், நீளமும் பூமியின் நீள, அகலத்திற்கு இணையானதாகும்.
பதம் 5.24.8 : பில சொர்க்கங்கள் எனப்படும் இந்த ஏழு உலகங்களில் தேவ சொர்க்கங்களைக் காட்டிலும் அழகிய மாளிகை, நந்தவனங்கள், புலனின்பத்திற்கான இடங்கள் இருக்கின்றன. காரணம் அசுரர்களிடம் அதீத புலனின்பம், செல்வம் மற்றும் செல்வாக்கு இருக்கின்றன. தைத்யர்கள், தானவர்கள், நாகர்கள் என்பவர்களே இவ்வுலகங்களில் பெரும்பாலும் வசிக்கின்றனர். இவர்களது மனைவியர், மக்கள், நண்பர்கள் சமுதாயம் முழுவதும் மாயா பௌதீக இன்பத்தில் மூழ்கியுள்ளனர். தேவர்களின் புலனின்பத்திற்குக்கூட சிலசமயம் இடையூறு ஏற்படுகின்றது. ஆனால் அவ்வுலகவாசிகளோ எந்தவித இடையூறுமின்றி வாழ்க்கையினை அனுபவித்து மகிழ்கின்றர். இதிலிருந்து இவர்கள் மாயா இன்பத்தில் அதீதப் பற்றுடையோர் என்று அறிந்து கொள்ள முடிகிறது.
பதம் 5.24.9 : அன்பார்ந்த மன்னனே, போலி சொர்க்கம் எனப்படும் பில சொர்க்கத்தில் மயதானவன் என்னும் பெரிய அசுரன் இருக்கின்றான். அவன் மிகச் சிறந்தக் கட்டிடக் கலைஞன் ஆவான். அவன் கண்ணைக் கவரும் வண்ணமுடைய பல நகரங்களை நிர்மாணித்திருக்கின்றான். அங்கே விந்தைமிகு மாளிகைகள், மதில்கள், வாயில்கள், அரங்கங்கள், ஆலயங்கள் முற்றங்கள், ஆலய பிரகாரங்கள், அதுபோல் அந்நிய நாட்டினர் தங்கும் உணவு விடுதிகள் போன்றவை இருக்கின்றன. இவ்வுலகங்களின் தலைவர்களின் மாளிகைகள் மதிப்புமிக்க இரத்தினங்களினால் கட்டப்பட்டிருக்கின்றன. அவர்கள் எப்போதும் நாகர்கள், அசுரர்கள், புறாக்கள், கிளிகள், அதுபோன்ற பல பறவைகள் கூட்டங்கள் என்றும் உயிர்வாழிகளால் சூழப்பட்டிருக்கின்றனர். மொத்தத்தில் போலி சொர்க்கத்தில் உள்ள நகரங்கள் எழில் மிக்கனவாகவும், கவர்ச்சிகரமாக அலங்கரிக்கப்பட்டும் இருக்கின்றன.
பதம் 5.24.10 : செயற்கைச் சொர்க்கலோகத்தில் உள்ள நந்தவனம் மற்றும் பூங்காக்களின் எழில், தேவலோகச் சொர்க்கங்களை வெல்லக்கூடியதாகும். கொடிகளால் தழுவப்பட்டிருக்கும் அந்த நந்தவனத்தில் உள்ள மரங்கள், மொட்டுக்கள், மலர்கள் மற்றும் கணிகளின் கொத்துக்களின் சுமைதாங்காது வளைந்து நிற்கின்றன. அதனால் அவை மேலும் அதிக எழிலுடன் காட்சியளிக்கின்றன. அந்த எழில் எவன் ஒருவனையும் மயக்கி அவனது மனதில் புலனுகர்ச்சி இன்பத்தை முற்றிலும் மலரச் செய்கின்றது. அங்குள்ள பல்வேறு குளங்கள், ஏரிகளில் நீர் பளிங்குபோல் தெளிவாக இருக்கும். அதில் குவலயங்கள், கஹ்லாரங்கள், நீலோத்பலங்கள் என்னும் மலர்கள் நிறைந்து அவற்றை அழகு செய்யும். சக்கரவாகம் போன்ற பறவைகளின் ஜோடிகள் மற்றும் பல்வேறு நீர்ப்பறவைகள், குளங்களில் வாழ்கின்றன. அவை எப்போதும் மகிழ்ச்சியான மன நிலையில் மிக இனிமையான, அமிர்தம் போன்ற ஒலியினை எழுப்புகின்றன. இவ்வொலி புலனின்பத்தை திருப்திப்படுத்துவதற்கு மிகவும் துணை செய்கின்றது.
பதம் 5.24.11 : அங்கே பிற சொர்க்கங்களில் சூரிய ஒளி இல்லாமையினால் இரவு, பகல் என்று காலம் பிரிக்கப்படுவதில்லை, இதனைத் தொடர்ந்து காலத்தினால் வரும் அச்சம் அங்கே கிடையாது.
பதம் 5.24.12 : அங்கே வாழும் ஏராளமான பாம்புகளின் தலையில் நாகரத்தினக் கல் இருக்கின்றது. இக்கற்களில் இருந்து வரும் ஒளி எல்லாத் திசைகளிலும் உள்ள இருட்டினை விரட்டுகின்றன.
பதம் 5.24.13 : இவ்வுலகங்களில் உள்ளோர் அதிசிய மூலிகைகளின் சாறு மற்றும் மருந்தினை உண்டு அவற்றில் நீராடுவதினால் அவர்கள் கவலைகள் மற்றும் உடற்பிணிகளிலிருந்து விடுதலைபெறுகின்றனர். அவர்களிடம், நரை, திரை, போன்றவை தோன்றுவதில்லை. அவர்களது உடல் ஒளி ஒரு நாளும் குறைவதில்லை. அவர்களது வியர்வையிலிருந்து துர்நாற்றம் வீசுவதில்லை. அவர்கள் முதுமையின் காரணமாகத் தோன்றும் சோர்வு சக்தியின்மை, கவலை போன்றவற்றினால் துன்புறுவதில்லை.
பதம் 5.24.14 : அவர்கள் மிகவும் மங்களமுடன் வாழ்கின்றனர். முழுமுதற் கடவுளின் சுதர்சனச் சக்கரத்தின் ஒளி என்னும் காலம் ஒன்றினைத் தவிர அவர்களுக்கு வேறு எதனிடத்தும் மரணபயம் என்பது கிஞ்சிற்றும் இல்லை.
பதம் 5.24.15 : அப்பகுதிகளில் சுதர்சனச் சக்ரம் நுழையும் பொழுது அசுரர்களின் கர்ப்பமுற்றிருக்கும் மனைவியர் அனைவரும் அதன் ஒளியினால் ஏற்படும் பீதியின் காரணமாக கருச்சிதைவுக்கு ஆளாகின்றனர்.
பதம் 5.24.16 : அன்பார்ந்த மன்னனே, அதல லோகம் தொடங்கி ஒன்றன் பின் ஒன்றாக கீழ் உலகங்களைப் பற்றி இப்போது நான் உனக்கு விளக்குகிறேன். அதல லோகத்தில் மயன் என்னும் அசுரனின் மைந்தன் பலன் என்பவன் இருக்கிறான். அவன் தொன்னூற்றாறு வகை யோக சக்திகளைப் படைத்தவன். சில யோகிகளும் சுவாமிகளும் இந்த யோகசக்திகளில் சிலவற்றைப் பயன்படுத்தி இன்றும் கூட மக்களை ஏமாற்றுகின்றனர். தனது கொட்டாவியிலிருந்தே பலன் அசுரன் ஸ்வைரிணீ, காமினி, பும்ஸ்சலி என்னும் மூவகைப் பெண்களைப் படைத்தான். ஸ்வைரிணி இனப்பெண்கள் தங்கள் இனத்தைச் சேர்ந்த ஆடவர்களையே திருமணம் செய்கின்றனர். காமினி இனப் பெண்கள் எக்குலத்தைச் சேர்ந்த ஆண்மகனையும் மணம் முடித்துக் கொள்வர், பும்ஸ்சலி இனப்பெண்களோ தங்கள் கணவர்களை மாற்றிக் கொண்டே இருப்பர். இந்த அதல லோகத்தினுள் யாரேனும் ஒர் ஆண் மகன் நுழைந்தானென்றால் இப்பெண்கள் உடனே அவனைப் பிடித்து ஆடகம் (சணல்வகைச் செடியிலிருந்து தயாரிக்கப்படும் மது) என்னும் மதுவினை அவன் குடிக்குமாறு வற்புறுத்துகின்றனர். இம்மது பெண்கள் விரும்பும் அளவிற்கு ஓர் ஆண் மகனுக்குப் பாலியல் சக்தியை அளிக்கின்றது. ஒரு பெண் அவனை கவர்ச்சி மிகுப்பார்வையினாலும், இனிமையான வார்த்தைகளினாலும், அன்புகலந்த இவ்வழியே அவள் அவனைத் தனக்கு முற்றிலும் திருப்தி ஏற்படும்வரைத் தன்னுடன் பாலியல் இன்பம் அனுபவிக்குமாறுத் தூண்டுகிறாள். அவனது அதீதமான பாலியல் சக்தியினால் அம்மனிதன் தன்னை ஆயிரம் யானைகளைவிடப் பலம் மிகுந்தவனாகவும், எல்லாம் நிறைந்தவனாகவும் கருதுகிறான். உண்மையில் வீண்கர்வத்தினால் மாயைக்கும், மது மயக்கத்திற்கும் ஆளானதினால். வெல்ல முடியாத மரணத்தை மறந்துத் தன்னைக் கடவுளாகவே கருதுகிறான்.
பதம் 5.24.17 : அதலலோகத்திற்கு அடுத்து இருப்பது விதலலோகம் ஆகும். அங்கே தங்கச் சுரங்கங்களின் தலைவர் என்றறியப்படும் சிவபெருமான் தனது துணைவர்களுடனும், பூதகணங்களுடனும் வாழ்கின்றார். பிரஜாபதியாக இருக்கும் சிவபெருமான் தன் மனைவி பவானியுடன் உயிர்வாழிகளைப் படைப்பதற்காக பாலியல் உறவுகொள்கிறார். அவர்கள் வீர்யத்தின் கலப்பு ஆடகீ என்னும் நதியாகப் பெருக்கெடுத்து ஒடுகிறது. காற்றினால் நெருப்பு கொழுந்துவிட்டு எரியும் பொழுது, இந்நதியைக் குடித்து சீறும் ஒலியுடன் அதனை மீண்டும் வெளியே உமிழ்கிறது. அப்போது அது ஆடகம் என்னும் தங்கத்தை உற்பத்தி செய்கின்றது. தங்கள் மனைவியருடன் அங்கு வாழும் அசுரர்கள் அந்தத் தங்கத்தினால் செய்த ஆபரணங்களைக் கொண்டு தங்களை அலங்கரித்துக் கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் அங்கே மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர்.
பதம் 5.24.18 : விதலலோகத்திற்குக் கீழே சுதலலோகம் இருக்கின்றது. அங்கே இன்றும் கூட விரோசன மகாராஜாவின் மைந்தரும், புண்ணியமிக்க அரசர் என்று போற்றப்படுபவருமான பலிமகாராஜா வாழ்கின்றார். இந்திரனின் நன்மைக்காக பகவான் விஷ்ணு ஆதிதியின் மைந்தனாக ஒரு குள்ளப்பிரம்மச்சாரியாகத் தோன்றினார். அவர் பலி மகாராஜாவிடம் மூன்றடி நிலம் கேட்டுத் தந்திரமாக மூவுலகங்களையும் ஆட்கொண்டார். பலிமகாராஜா தனது உடைமைகள் எல்லாவற்றையும் வழங்கிய செயல் கண்டு மனம் மகிழ்ந்த பகவான் அவரது இராஜ்ஜியத்தை அவருக்கேத் திருப்பிக்கொடுத்து தேவேந்திரனை விட பெரிய செல்வந்தராக்கினார். சுதலலோகத்தில் முழுமுதற் கடவுளை வணங்குவதின் மூலம் பலிமகாராஜா பக்தித் தொண்டில் ஈடுபடுகின்றார்.
பதம் 5.24.19 : அன்பார்ந்த மன்னனே, பலி மகாராஜா தனது செல்வங்கள் அனைத்தையும் முழுமுதற் கடவுளான வாமனதேவருக்கும் தானமாக வழங்கினார். அதற்காக, அவர் தான் செய்த தானத்திற்கும் பிரதிபலனாக பில சொர்க்கத்தில் உலக வளங்கள் அனைத்தையும் பெற்றார் என்று ஒருவன் தவறான முடிவிற்கு வரக்கூடாது. அனைத்து உயிர் வாழிகளின் உயிருக்கு ஆதாரமாக விளங்கும் முழுமுதற் கடவுள் அனைவரின் இதயத்தினுள்ளும் நட்பு மிகுந்த பரமாத்மாவாக இருப்பதோடு, அவரது இயக்கத்தின் கீழேயே ஒர் உயிர்வாழி பௌதீக உலகில் இன்பமோ, துன்பமோ அனுபவிக்கிறான். முழுமுதற் கடவுளின் உன்னதக் குணங்களைப் போற்றிப் பாராட்டி பலி மகாராஜா எல்லாவற்றையும் அவரது தாமரைத் திருவடிகளுக்கு அர்ப்பணித்தார். ஆயினும் அவரது நோக்கம் எதையும் பௌதீகமாகப் பெறக் கூடாது மாறாக தூய பக்தனுக்கு விடுதலை வாயில் தானே திறக்கிறது. பலி மகாராஜாவிற்கு ஏராளமாகப் பெளதீக செல்வம் அவர் செய்த தானத்திற்காகவே வழங்கப்பட்டது என்று ஒருவன் கருதக்கூடாது. ஒருவன் அன்பு மிகுந்து தூய பக்தனாகும்பொழுது முழுமுதற் கடவுளின் விருப்பத்தின் பேரில் அவன் நல்ல பெளதீக நிலையுடனும் ஆசிர்வதிக்கப்படுகிறான். ஆயினும் அவனது பக்தித் தொண்டின் பலனே அவன் பெற்றிருக்கும் பெளதீக செல்வம் என்று ஒருவன் தவறாக எண்ணக் கூடாது. பக்தித் தொண்டின் உண்மையான பலன் என்பது முழுமுதற் கடவுள் மீதான தூய அன்பினை விழிப்புறச் செய்வதேயாகும். அவ்வன்பு எல்லாச் சூழ்நிலைகளிலும் தொடர்கிறது.
பதம் 5.24.20 : ஒருவன் பசியால் தழுவப்பட்டலோ அல்லது தவறி கீழே வீழ்ந்தாலோ அல்லது தடுமாற்றமடைந்தாலோ, அவன் பகவானின் புனித நாமத்தை ஒரே ஒரு முறை விரும்பியோ, விரும்பாமலோ உச்சரித்தாலும் அவன் தனது முன்வினைப் பலன்களில் இருந்து உடனடியாக விடுதலை பெறுகிறான். பௌதீகச் செயல்களில் சிக்கிக் கொண்டிருக்கும் கர்மீக்கள் இவ்விடுதலை பெறுவதற்காக யோகஸித்தி பயிற்சியிலும் இது போன்ற பிறமுயற்சிகளிலும் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர்.
பதம் 5.24.21 : மேன்மை தங்கிய முழுமுதற் கடவுள் பரமாத்மாவாக ஒவ்வொருவர் இதயங்களிலும் இருக்கிறார். தனது தொண்டர்களுக்கு நாரதமுனி போன்று தன்னையே கொடுக்கின்றார். முழுநிறைவான அன்போடு தன்னை வணங்குவோருக்கு அளவு கடந்த அன்புடன் தன்னையே ஈந்து விடுகிறார். நான்கு குமாரர்களைப்போன்ற மிக உயர்ந்த தன்னை உணர்ந்த யோகியரும் தங்கள் இதயத்தின் உள்ளேயே பரமாத்மாவினை உணர்ந்தமையால், மனவாசகம் கடந்த மெய்யுணர்வை அவர்கள் பெறுகின்றனர்.
பதம் 5.24.22 : முழுமுதற் கடவுளான இறைவன் பலிமகாராஜாவிற்கு உலகியல் செல்வத்தையும் அளவிறந்த வளத்தையும் கொடுக்கவில்லை. ஏனெனில் பொருளும் செல்வமும் இறைவனுக்குத் தொண்டு செய்யும் உணர்வினை மறக்கச் செய்துவிடும். உலகியற் செல்வத்தின் விளைவு என்னவென்றால், அது முழுமுதற் கடவுளை மனதார வணங்கி வாழ்த்துவதைத் தவிர்த்து விடும்.
பதம் 5.24.23 : முழுமுதற்கடவுள் பலி மகாராஜாவிடமிருந்து எல்லாவற்றையும் எடுத்துக் கொள்வதற்கு எந்த வழியும் காணமுடியாதபொழுது அவர் இரப்பவர் போல் தந்திரம் செய்து அவரிடமிருந்து மூவுலகங்களையும் எடுத்துக் கொண்டார். இதன் பின் பலி மகாராஜாவிடம் எஞ்சியிருந்தது அவர் உடல் ஒன்று மட்டுமே. இருந்தும் பகவான் திருப்தியடையவில்லை. அவர் பலி மகாராஜாவைக் கைது செய்து, கயிற்றினால் கட்டி அவரை ஒரு மலைக் குகையினுள் எறிந்தார். தன்னுடைய செல்வங்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு தன்னை ஒரு மலைக் குகையினுள் எறிந்த பின்பும் கூடப் பலி மகாராஜா பின்வரும் வார்த்தைகளைக் கூறலுற்றார்.
பதம் 5.24.24 : சொர்க்கத்தின் தலைவனான இந்திரன் எத்துணை இரக்கத்திற்குரியவன், அவன் கற்றவனாக இருந்தும், சக்தியுடையவனாக இருந்தும், தனக்கு அறிவுரை கூறப்பிரகஸ்பதியை தலைமை அமைச்சராகக் கொண்டிருந்தும் ஆன்மீகத்தில் வளர்ச்சி பெறுவதில் அவன் முற்றிலும் அறியாமை உடையவனாக இருக்கின்றான். பிரகஸ்பதியுங்கூடப் புத்திமான் அல்லர் ஏனென்றால் அவர் தனது சீடன் இந்திரனுக்கு முறையாக போதிக்கவில்லை. பகவான் வாமனதேவர் இந்திரனின் வாயிலில் நின்று கொண்டிருந்தார் ஆனால் இந்திரனோ அவரிடம் உன்னத அன்புத்தொண்டிற்கான சந்தர்ப்பத்தை அவரிடம் இருந்து பெறுவதற்குப் பதிலாக அவனது புலனுகர்ச்சிக்காக என்னிடம் அவரை மூவுலகங்களையும் இரந்து பெறச்செய்வதில் ஈடுபடுத்தினான். மூவுலகத் தலைமை என்பது மிகவும் இழிந்ததாகும் ஏனெனில் என்னதான் மிகப்பெரிய பெளதீக வளங்கள் ஒருவனிடம் இருந்தாலும் அது ஒரு மனுவின் ஆயுட்காலம் வரை மட்டுமே இருக்கும். இக்காலமோ, முடிவற்றக் காலத்தில் ஒரு சிறு கூறேயாகும்.
பதம் 5.24.25 : பலிமகாராஜா கூறினார்: எனது தாத்தாவான பிரஹலாத மகாராஜா ஒருவர் மட்டுமே தனக்கு நன்மை பயப்பது எது என்பதை உண்மையில் அறிந்திருந்தார். பிரஹலாதனின் தந்தை இரண்யகசிபு இறந்த பிறகு பகவான் நரசிம்மதேவர் பிரஹலாதனுக்கு அவரது தந்தையின் இராஜ்ஜியத்தையும், பெளதீகப் பந்தத்திலிருந்து அவருக்கு விடுதலையும் அளிக்க விரும்பினார். ஆயினும் பிரஹலாதன் இவை இரண்டையும் மறுதலித்தார். விடுதலையும், பௌதீகச் செல்வமும் பக்தித் தொண்டிற்குத் தடைகள் என்று அவர் கருதினர் அதனால் முழுமுதற் கடவுளிடமிருந்து பெறும் இது போன்ற பரிசுகள் அவரது உண்மையான ஆசிகள் அல்ல என்றும் அவர் கருதினார். இதனைத் தொடர்ந்து கர்மம் மற்றும் ஞானத்தின் பலன்களை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக பிரஹலாத மகாராஜா பகவானிடம் அவருக்குத் தொண்டு செய்யும் தொண்டனாக இருக்கும் வரம் வேண்டினார்.
பதம் 5.24.26 : பலிமகாராஜா கூறினார்: பெளதீக இன்பத்தில் பற்றுடைய, ஜட இயற்கையினால் முக்குணங்களினால் மாசுபடிந்த, முழுமுதற் கடவுளின் கருணையற்ற எம்போன்றவர்களினால் பகவானின் மிகச் சிறந்த பக்தரான பிரஹலாத மகாராஜாவின் பாதையினைப் பின்பற்ற முடியாது.
பதம் 5.24.27 : சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே பலிமகாராஜாவின் குணத்தினை எவ்வாறு என்னால் புகழ முடியும்? மூவுலகங்களின் குருவும், தனது பக்தர்களிடம் மிகுந்த கருணையுடையவருமான முழுமுதற் கடவுள் தனது கரத்தில் கதாயுதத்தினை ஏந்தியவாறு பலி மகாராஜாவின் வாயிலில் நிற்கிறார். ஆற்றல் மிக்க அசுரன் இராவணன் பலிமகாராஜாவை வெற்றி கொள்ள வந்தபோது வாமனதேவர் தனது பெரிய பாதத்தினால் அவனை எண்பதினாயிரம் மைல்களுக்கு அப்பால் போய் விழும்படி உதைத்துத் தள்ளினார். பலிமகாராஜாவின் குணநலன்களையும், செயல்களையும் நான் பின்னர் விளக்குகிறேன் (ஸ்ரீமத் பாகவதம் எட்டாவது காண்டத்தில்).
பதம் 5.24.28 : சுதல லோகத்திற்குக் கீழே தலாதலம் என்னும் உலகம் இருக்கிறது. இது தான் அசுரனான மயன் என்பவனால் ஆளப்படுகிறது. மயன் மாயாவின் அனைவரின் ஆச்சாரியர் ஆவான். மந்திர சக்திகளை அவன் வரவழைக்க கூடியவனாவான். மூவுலகங்களின் நன்மைக்காக திரிபுராரி என்றழைக்கப்படும் சிவபெருமான் ஒரு சமயம் மயனின் மூன்று நகரங்களை தீயினால் எரித்தார். பின்னர் அவன் மீது மகிழ்ச்சி கொண்டு அவர் இராஜ்ஜியத்தை அவனிடமே திருப்பி அளித்தார். அதிலிருந்து மயதானவன் சிவபெருமானால் காக்கப்படுகிறான். அதனால் அவன் முழுமுதற் கடவுளின் சுதர்சனச் சக்கரத்திற்குப் பயப்படத் தேவையில்லை என்று தவறாகக் கருதுகிறான்.
பதம் 5.24.29 : தலாதல லோகத்தின் கீழே மகாதல லோகம் இருக்கிறது. இது கத்ரூவன் சந்ததியினரான, எப்போதும் சினங்கொண்டிருக்கும் ஏராளமான தலைகளையுடைய பாம்புகளின் இருப்பிடமாகும். இவற்றுள் முக்கியமானப் பாம்புகள் குஹகன், தக்ஷகன், காலியன், சுஷேணன் என்பவையாகும். மகாதல லோகத்தில் உள்ள பாம்புகள் எப்போதும் பகவான் விஷ்ணுவின் வாகனமாக கருடன்மீது கொண்ட அச்சத்தினால் துன்பத்திற்காளாகின்றன. ஆயினும் அவை கவலை கொண்டிருந்த போதிலும், அவற்றுள் சில தமது மனைவி, மக்கள், நண்பர்கள், உறவினர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும்.
பதம் 5.24.30 : மகாதல லோகத்திற்குக் கீழே இரஸாதல லோகம் இருக்கின்றது. இது திதி மற்றும் தனுவிற்குப் பிறந்த அசுரர்களின் இருப்பிடமாகும். இவர்கள் பணிஸ், நிவாத கவசரகள், காலேயர்கள் மற்றும் இரண்யபுரவாசிகள் என்று அழைக்கப்படுகின்றனர் (இரண்யபுரத்தில் வாழ்பவர்கள்) இவர்கள் அனைவரும் தேவர்களின் பகைவர்களாவர். மேலும் இவர்கள் பாம்புகளைப் போல் பொந்துக்களில் வாழ்கின்றனர். பிறப்பிலிருந்தே இவர்கள் அதீத சக்தியும் கொடுமையும் வாய்ந்தவர்களாவர். மேலும் தேவர்கள் தமது பலத்தினை எண்ணிக் கர்வம் கொண்டிருந்த போதிலும், எல்லா உலகங்களையும் ஆளும் முழுமுதற் கடவுளின் சுதர்சனச் சக்கரத்தால் இவர்கள் எப்போதும் தோற்கடிக்கப்படுகின்றனர். இந்திரனின் பெண் தூதரான சரமா என்பவள் ஒரு குறிப்பிட்ட சாபத்தினை ஒதுகின்றபொழுது இரஸாதலத்தைச் சேர்ந்த நாகாசுரர்கள் இந்திரனை எண்ணி அதிக அச்சங் கொள்கின்றனர்.
பதம் 5.24.31 : இராஸதல லோகத்திற்கு கீழே பாதாள லோகம் அல்லது நாகலோகம் இருக்கின்றது. அங்கே அசுரநாகங்களும், நாகலோகத்தின் தலைவர்களான சங்கன், குலிகன், மகாசங்கன், சுவேதன், தனஞ்சயன், திருதராஷ்டிரன், சங்கசூடன், கம்பவன், அஸ்தரன், தேவதத்தன் போன்றவைகளும் இருக்கின்றன. இவற்றின் தலைவனாக வாசுகிப் பாம்பே இருக்கிறது. இவையனைத்தும் அதீத துவேசமுடையன என்பதோடு சிலவற்றிற்கு ஐந்து தலை, சிலவற்றிற்கு ஏழு தலை, சிலவற்றிற்கு பத்துதலை, சிலவற்றிற்கு நூறு தலை, மேலும் சிலவற்றிற்கு ஆயிரம் தலை என்று ஏராளமான தலைகளை உடைய பாம்புகள் இருக்கின்றன. இவற்றின் தலைகளில் நாக இரத்தினங்கள் உள்ளன. இவை பில சொர்க்கம் முழுவதும் ஒளி செய்கின்றன.