அத்தியாயம் – 23
சிசுமார கிரஹ மண்டலம்
பதம் 5.23.1
ஸ்ரீ-சுக உவாச
அத தஸ்மாத் பரதஸ் த்ரயோதஸ-லக்ஷ-யேஜனாந்தரதோ யத் தத்
விஷ்ணோ: பரமம் பதம் அபிவதந்தி யத்ர ஹ மஹா பாகவதோ த்ருவ
ஒத்தானபாதிர் அக்னினேந்ரேண ப்ரஜா பதினா கஸ்யபேன தர்மேண ச
ஸமகால-யுக்பி: ஸபஹு மானம் தக்ஷிணத: க்ரியமான இதானிம் அபி
கல்ப ஜீவினாம் அஜீவ்ய உபாஸ்தே தஸ்யேஹானுபாவ உபவர்ணித:

ஸ்ரீ-ஸுக: உவாச—ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்; அத—அதன்பின்னர்; தஸ்மாத்—சப்தரிஷி மண்டலம்; பரத:—அதற்கும்மேல்; த்ரயோதஸ-லக்ஷ-யோஜன-அந்தரதா—மற்றொரு 1,300,000 யோஜனங்கள்; யத்—இது; தத்—அந்த; விஷ்ணோ: பரம பதம்—பகவான் விஷ்ணுவின் பரமபதம் அல்லது தாமரைத் திருவடிகளாகும்; அபிவதந்தி—ரிக்வேத மந்திரங்கள் போற்றுகின்றன; யத்ர—இதன்மேல்; ஹ—உண்மையில்; மஹாபாகவத:—சிறந்தபக்தர்; த்ருவ:—மகாராஜா துருவன்; ஒத்தானாபாதி:—மகாராஜா உத்தானபாதரின் மைந்தன்; அக்னினா—அக்னிதேவன்; இந்த்ரேனா—தேவர்தலைவன் இந்திரன்; ப்ரஜாபதினா—பிராஜாபதி; கஸ்யபேன—காச்யபர்; தார்மேண—தர்மராஜன்; ச—மேலும்; ஸம-கால-யுக்பி:—இவர்கள் அச்சமயத்தில் ஈடுபடுகின்றனர்; ஸ-பஹு-மானம்—எப்போதும் மரியாதையுடன்; தக்ஷிணத—வலது புறத்தில்; க்ரியமாண:—சுற்றிவந்து; இதானீம்—இப்பொழுது; அபி—கூட; கல்ப-ஜீவினாம்—படைப்பின் இறுதியில் இருக்கக்கூடிய உயிர்வாழிகள்; ஆஜீவ்ய:—உயிரின் மூலம்; உபாஸ்தே—இருக்கிறார்; தஸ்ய—அவருடைய; இஹ—இங்கே; அனுபாவ:—பக்தித் தொண்டாற்றுவதில் சிறந்த; உபவர்ணித—ஏற்கனவே விளக்கப்பட்டிருக்கிறது (ஸ்ரீமத் பாகவதம் நான்காவது காண்டத்தில்).

சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்து கூறினார்: அன்பார்ந்த மன்னனே, சப்தரிஷி மண்டலத்திற்கு மேல் 1,300,000 யோஜனங்கள் (1,400,000 மைல்கள்) தூரத்தில் பகவான் விஷ்ணுவின் உறைவிடம் இருப்பதாகக் கற்றறிந்த அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். அங்கே மகாராஜா உத்தானபாதனின் மைந்தனின் சிறந்த பக்தருமான துருவமகாராஜா இருக்கின்றார். அவர் அனைத்து உயிர்வாழிகளின் உயிருக்கும் மூலாதாரமாக படைப்பின் இறுதிவரையில் இருக்கின்றார். அக்னி, இந்திரன், பிரஜாபதி, காச்யபர், தர்மர் போன்றவர்கள் அவருக்குத் தங்கள் மரியாதைக்குரிய மேன்மையான வந்தனங்களை அர்ப்பணிப்பதற்காக அங்கே கூடி இருக்கின்றனர். அவர்கள் துருவமகாராஜாவைத் தங்கள் வலதுபுறத்திலிருந்து சுற்றி வருகின்றனர். நான் ஏற்கனவே துருவ மகாராஜாவின் புகழ்மிக்கச் செயல்களை விளக்கியிருக்கிறேன். (ஸ்ரீமத் பாகவதம் நான்காம் காண்டத்தில்)

பதம் 5.23.2
ஸ ஹி ஸர்வேஷாம் ஜ்யோதிர்-கணானாம் க்ரஹ-நக்ஷத்ராதீனாம்
அநிமிஷேணாவ்யக்தரம்ஹஸா பகவதா காலேன ப்ராம்யமாணானாம்
ஸ்தானுர் இவாவஷ்டம்ப ஈஸ்வரேண விஹித: ஸஸ்வத் அவபாஸதே

ஸ:—துருவ மகாராஜாவின் அந்த கிரஹம்; ஹி—உண்மையில்; ஸர்வேஷாம்—அனைத்தின்; ஜ்யோதி:-கணானாம்—ஒளிக்கோளங்கள்; க்ரஹ-நக்ஷத்ர-ஆதினாம்—கோளங்கள் மற்றும் நட்சத்திரங்கள் போன்று; அநிமிஷேண—அது ஒய்வுகொள்வதில்லை; அவ்யக்த—உணரமுடியாத; ரம்ஹஸா—அதன் வேகம்; பகவதா—மிகச்சக்திவாய்ந்த; காலேன—காலத்தினால்; ப்ராம்யமாணானாம்—சுழல்வதற்குக் காரணமாகிறது; ஸ்தாணு:-இவ—ஒரு கம்பம் போல்; அவஷ்டம்ப:—அச்சு; ஈஸ்வரேண—முழுமுதற்கடவுளின் விருப்பத்தினால்; விஹித:—நிறுவப்பட்டது; ஸஸ்வத்—தொடர்ந்து; அவபாஸதே—ஒளிர்கிறது.

முழுமுதற்கடவுளின் பரம விருப்பத்தின் பேரில் நிறுவப்பட்டத் துருவ மகாராஜாவின் கிரஹமான வடமீன், எல்லாக் கிரஹங்கள் மற்றும் நட்சத்திரங்கள் அனைத்திற்கும் நடு அச்சாகத் திகழ்ந்து தொடர்ந்து ஒளிவீசிக் கொண்டிருக்கின்றது. கண் துஞ்சாது, கண்ணுக்குப் புலனாகாது இருக்கும் சக்திமிக்கக் காலம் என்பது இவ்வடமீனைச் சுற்றி எல்லா ஒளிக்கோளங்களும் எந்தவிதத் தடையுமின்றி தொடர்ந்து பயணம் செய்வதற்குக் காரணமாக இருக்கின்றது.

பதம் 5.23.3
யதா மேதீஸ்தம்ப ஆக்ரமண-பஸவ: ஸம்யோஜிதாஸ் த்ரிபிஸ் த்ரிபி:
ஸவனைர் யதா-ஸ்தானம் மண்டவானி சரந்தி ஏவம் பகணா க்ரஹாதய
ஏதஸ்மின்ன அந்தர்-பஹிர்-யோகேன கால-சக்ர ஆயோஜிதா த்ருவம்
ஏவாவலம்ப்ய வாயுனோதீர்யமானா ஆகல் பாந்தம் பரிசன் க்ரமந்தி நபஸி
யதா மேகா: ஸ்யேனாதயோ வாயு வஸா: கர்ம-ஸாரதய: பரிவரதந்தே ஏவம்
ஜ்யோதிர்கணா: ப்ரக்ருதி புருஷ ஸம்யோகானுக்ருஹீதா: கர்ம – நிர்மித-
கதயோ புவி ந பதந்தி

யதா—அதே போன்று; மேதீஸ்தம்பே—நடுக்கம்பம்; ஆக்ரமணபஸவ:—நெற்கதிர்களைச் சூட்டடிப்பதற்கான மாடுகள்; ஸம்யோஜிதா:—பூட்டப்பட்டிருக்கின்ற; த்ரிபி: த்ரிபி:—மூன்று மூன்றாக; ஸவனை:—செல்லுதல்; யதா-ஸ்தானம்—அவர்களுக்குரிய இடங்கள்; மண்டவானி—சுற்றுப்பாதை; சரந்தி—பயணம் செய்தல்; ஏவம்—அதே வழியில்; ப-கணா:—சூரியன், சந்திரன், சுக்கிரன், புதன், செவ்வாய், வியாழன் போன்ற கிரஹங்கள்; க்ரஹ-ஆதய:—பல்வேறு கிரஹங்கள்; ஏதஸ்மின்—இதில்; அந்தர்-பஹிர்-யோகேன—உள் அல்லது வெளிப்புற வட்டங்களுடன் இணைப்பதன் மூலம்; கால-சக்ர—நித்திய கால சக்கரத்தில்; ஆயோஜிதா:—ஆதரவினைப் பெற்று; த்ருவம்—துருவலோகம்; ஏவ—நிச்சயமாக; அவலம்ப்ய—ஆதரவை எடுத்து; வயுனா—காற்றினால்; உதீர்யமாணா—முன்னோக்கிச் செலுத்தப்பட்டு; ஆ-கல்ப-அந்தம்—படைப்பின் இறுதிவரை; பரிசன்க்ரமந்தி—எங்கும் சுற்றி; நபஸி—வானத்தில்; யதா—அதேபோன்று; மேகா:—அடர்த்தியான மேகங்கள்; ஸ்யேன-ஆதய:—பெரிய கழுகு போன்ற பறவைகள்; வாயு-வஸா:—காற்றினால் கட்டுப்படுத்தப்பட்டு; கர்ம-ஸாரதய:—அவரது இரதத்தை ஒட்டுபவர்கள் அவர்களது முன்வினைப் பயன்கள் ஆகும்; பரிவர்தந்தே—சுற்றிச்சென்று; ஏவம்—இவ்வழியே; ஜ்யோதி-கணா:—வானில் உள்ள கிரஹங்கள், நட்சத்திரங்கள் போன்றவை; ப்ரக்ருதி—ஜட இயற்கையின்; புருஷ—முழுமுதற் கடவுள் கிருஷ்ணர்; ஸம்யோக-அனுக்ருஹீத:—கூட்டுமுயற்சியினால் தாங்கப்பட்டு; கர்ம-நிர்மித—அவர்களது முன்னைக் கர்மவினைப்பலன் காரணமாக; கதய:—அவற்றின் இயக்கங்கள்; புவி—புவியின்மீது; ந—இல்லை; பதந்தி—கீழே விழுவது.

நெற்கதிர்களை சூட்டடிக்கும்பொழுது நடுவில் ஒரு கம்பத்தை நட்டு அதில் மாடுகளை வரிசையாகப் பூட்டியிருப்பர். ஒரு மாடு கம்பத்தின் அருகிலும், மற்றது அதிலிருந்து சற்றுத் தள்ளியும், அதற்கடுத்த மாடு அதிலிருந்து சற்றுத் தள்ளியும், பிணைக்கப்பட்டிருக்கும் நிலையில் சிறிதும் மாற்றமின்றி அம்மாடுகள் கம்பத்தைச் சுற்றி வைக்கோலின்மீது நடந்து வரும். அதுபோல் எல்லாக் கிரஹங்களும், நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் நட்சத்திரங்களும் துருவ மகாராஜாவின் கிரஹமான வடமீனைச் சுற்றி, சில மேலேயும், சில கீழேயும் இருந்தபோதிலும் தத்தமக்குரிய கோளப் பாதையிலிருந்து மாறாது அனைத்தும் பயணம் செய்கின்றன. அவற்றின் முன்வினைப் பயனுக்கேற்ப, முழுமுதற் கடவுளால் ஜட இயற்கையின் எந்திரத்தில் பிணைக்கப்பட்டிருக்கும் இக்கிரஹங்கள் வடமீனைச் சுற்றிக் காற்றினால் செலுத்தப்படுகின்றன என்பதோடு படைப்பின் இறுதிவரை, தொடர்ந்து இவ்வாறேச் சுற்றி வரும். மேகங்கள் நூற்றுக்கணக்கான டன் தண்ணீரைச் சுமந்து கொண்டு வானில் மிதந்து வருவதுபோல் அல்லது மிகப்பெரிய ஸ்யேனக் கழுகுகள் தமது முன்வினைப் பயன் காரணமாக, பூமியில் விழுவதற்குச் சிறிதும் சந்தர்ப்பம் இன்றி வானில் மிகுந்த உயரத்தில் பறப்பது போல் இக்கிரஹங்கள் பரந்து விரிந்த வானில் மிதந்து வருகின்றன.

பதம் 5.23.4
கேசனைதஜ் ஜ்யோதிர்-அனீகம் ஸிஸுமார ஸம்ஸ்தானேன் பகவதோ
வாஸுதேவஸ்ய யோக-தாரணாயம் அனுவர்ணயந்தி

கேசன—வானசாத்திரத்தில் தேர்ந்த யோகிகள் அல்லது அறிஞர்கள்; ஏதத்—இந்த; ஜ்யோதி:-அனீகம்—கிரஹங்கள் மற்றும் நட்சத்திரங்களின் பெரிய சக்ரம்; ஸிஸுமார-ஸம்ஸ்தானேன—ஒரு சிசுமாரமாக (அஹா மீனாக) இச்சக்கரத்தினைக் கற்பனை செய்து; பகவத:—முழுமுதற் கடவுளின்; வாஸுதேவஸ்ய—பகவான் வாசுதேவர் (வாசுதேவரின் புதல்வர்) கிருஷ்ணர்; யோக-தாரணாயாம்—வழிபாட்டில் அமிழ்ந்து; அனுவர்ணயந்தி—விளக்குகின்றனர்.

நட்சத்திரங்களையும், கிரகஹங்களையும் தன்னிடத்தேக் கொண்டிருக்கும் இப்பெரிய எந்திரம் நீரிலுள்ள சிசுமாரத்தின் (சுறா மீனின்) வடிவத்தை ஒத்திருக்கின்றது. இது சிலசமயம் கிருஷ்ண, வாசுதேவரின் அவதாரமாகவும் கருதப்படுகின்றது. மகாயோகிகள் வாசுதேவரை இந்த வடிவத்திலேயேத் தியானிக்கின்றனர். காரணம் இது கண்களுக்குப் புலனாகக் கூடியதாகும்.

பதம் 5.23.5
யஸ்ய புச்சாக்ரே ‘வாக்ஷிரஸ: குன்டலீ – பூத- தேஹஸ்ய த்ருவ
உபகல்பிதஸ் தஸ்ய வாங்கடலே ப்ரஜாபதிர் அக்னிர் இந்த்ரோ தர்ம இதி
புச்சமூல தாதா விதாதா ச கட்யாம் ஸப்தர்ஷய: தஸ்ய தக்ஷிணாவர்த
குண்டலீ பூத-ஸரீரஸ்ய யானி உதகயனானி தக்ஷிண- பார்ஸ்வே து
நக்ஷத்ராணி உபகல்பயந்தி தக்ஷிணயனானிது ஸவ்யே யதா
ஸிஸுமாரஸ்ய குண்டலா- போக-ஸன்னிவேஸஸ்ய பார்ஸ்வயோர்
உபயோர் அபி அவயவா: ஸமஸங்க்யா பவந்தி ப்ருஷ்ட த்வ அஜவீதி
ஆகாஸ- கங்கா சதரத:

யஸ்ய—இதன்; புச்ச-அக்ரே—வாலின் நுனியில்; அவாக்ஸிரஸ:—தலைகீழ் நோக்கிய வண்ணம் இருக்கிறது; குண்டலீ-பூத-தேஹஸ்ய—இதன் உடல் சுருளாகச் சுற்றுப்பட்டிருக்கிறது; த்ருவ:—வடமீன் என்னும் அவரது கிரஹத்தில் உள்ள துருவ மகாராஜா; உபகல்பித:—இருக்கின்றார்; தஸ்ய—இதன்; வாங்கடலே—வாலின்மீது; ப்ரஜாபதி:—ப்ரஜாபதி; பிரஜாபதி என்னும் பெயர்; அக்னி:—அக்னி; இந்த்ர:—இந்திரன்; தர்ம—தர்மன்; இதி—இவ்வாறு; புச்ச-மூலே—வாலின் அடிப்பகுதியில்; தாதா விதாதா—தாதா மற்றும் விதாதா என்னும் தேவர்கள்; ச—மேலும்; கட்யாம்—அரைப்பகுதியின் மேல் (இடுப்பு); ஸப்த-ருஷய:—சப்தரிஷிகள்; தஸ்ய—இதன்; தக்ஷிண-ஆவர்த-குண்டலீ-பூத- ஸரீரஸய—இதன் உடல் வலது புறமாகச் சுற்றப்பட்டிருக்கும் சுருள் போன்றது; யானி—இதன்; உதகயனானி—வட பகுதிகளைக் குறிக்கின்ற; தக்ஷிண-பார்ஸ்வே—வலது பக்கத்தில்; து—ஆனால்; நக்ஷத்ராணி—நட்சத்திரங்கள்; உபகல்பயந்தி—இருக்கின்றன; தக்ஷிண-ஆயனானி—வடபகுதிகளைக் குறிக்கின்ற புஷ்யா முதல் உத்தரஷாடாவரையுள்ள பதினான்கு நட்சத்திரங்கள்; து—ஆனால்; ஸவ்யே—இடது பக்கத்தில்; யதா—போன்று; ஸிஸுமாரஸ்ய—சுறாமீனின்; குண்டலா-போக- ஸன்னிவேஸஸ்ய—இதன் உடல் ஒரு சுருள் வடிவில் தோன்றுகிறது; பார்ஸ்வயோ:—பக்கங்களில்; உபயோ:—இரண்டும்; அபி—உறுதியாக; அவயவா:—அவயவங்கள்; ஸமஸங்க்யா:—சம எண்ணிக்கையில் (பதினான்கு); பவந்தி—இருக்கின்றன; ப்ருஷ்டே—பின்புறத்தில்; து—உண்மையில்; அஜவீதி—தென்திசைப் பாதையினைக் குறிக்கும் முதல் மூன்று நட்சத்திரங்கள் (மூலா, பூர்வஷாடா, உத்தரஷாடா) ஆகாஸ-கங்கா—ஆகாய கங்கை (பால்வழி); ச—மேலும்; உதரத—வயிற்றின்மீது.

சிசுமாரத்தின் இவ்வடிவம் தலைகீழ் நோக்கியவாறும் உடல் சுருளாகச் சுற்றப்பட்டும் இருக்கின்றது. இதன் வாலின் நுனியில் துருவ லோகம் இருக்கின்றது. வாலின் உடற்பகுதியில் பிரஜாபதி, அக்னி, இந்திரன், தர்மன், போன்ற தேவர்களின் கிரஹங்களும், வாலின் அடிப்பகுதியில் தாதா, விதாதா என்னும் தேவர்களின் கிரஹங்களும் இருக்கின்றன. சிசுமாரத்தில் தேவர்களின் கிரஹங்களும் இருக்கின்றன. சிசுமாரத்தின் இடைப் பகுதியில் வசிஷ்டர், அங்கிரர் போன்ற சப்தரிஷிகள் இருக்கின்றனர். சிசுமார சக்கரத்தின் சுருள்உடல் வலது பக்கத்தை நோக்கி இருக்கிறது. அதன் மீது அபிஜித்திலிருந்து புனர்வஸுவரையுள்ள பதினான்கு நட்சத்திரங்கள் இருக்கின்றன. இதன் இடதுபுறத்தில் புஷ்யா முதல் உத்தராஷாடாவரையுள்ள பதினான்கு நட்சத்திரங்கள் இருக்கின்றன. இவ்வாறு இதன் உடல் சமநிலையில் இருக்கின்றது. காரணம் இதன் இரு பக்கமும் சம எண்ணிக்கையில் உள்ள நட்சத்திரங்கள் இருக்கின்றன. சிசுமாரத்திக்கு பின்புறத்தில் அஜவீதி என்னும் நட்சத்திரக் கூட்டங்கள் இருக்கின்றன. இதன் வயிற்றுப் பகுதியில் வானிலிருந்து பெருகி வரும் ஆகாயகங்கையாக இருக்கின்றது (பால் வழி).

பதம் 5.23.6
புனர்வஸு- புஷ்யௌ தக்ஷிண- வாமயோ: ஸ்ரோண்யோபர
ஆர்த்ராஸ்லேஷே ச தக்ஷிண வாமயோ: பஸ்சிமயோ: பாதயோர் அபிஜித்-
உத்தராஷாடே தக்ஷிண-வாமயோர் நாஸிகயோர் யதா- ஸங்க்யம்
ஸ்ரவண- பூர்வாஷாடே தக்ஷிண- வாமயோர் லோசனயோர் தனிஷ்டா
மூலம் ச தக்ஷிண வாமயோ: கார்ணயோர் மகாதீனி அஷ்ட நக்ஷத்ராணி
தக்ஷிணயனானி வாம–பார்ஸ்வ- வங்க்ரிஷு யுஞ்ஜீத தனதவ ம்ருக-
ஸுரஷாதீனி உதகயனானி தக்ஷிண- பார்ஸ்வ வங்க்ரிஷு
ப்ராதிலோம்யேன ப்ரயுஞ்ஜீத ஸதபிஷா-ஜ்யேஷ்டே ஸ்கந்தயோர்
தக்ஷிண -வாமயோர் ந்யஸேத்

புனர்வஸு—புனர்வசு நட்சத்திரம்; புஷ்யெள—புஷ்ய நட்சத்திரம்; தக்ஷிண-வாமயோ:—வலது, இடதுபுறத்தில்; ஸ்ரோண்யோ:—இடுப்புப்பகுதி; ஆர்த்ரா—ஆர்த்ரா நட்சத்திரம்; அஸ்லேஸே—அஸ்லேஷா நட்சத்திரம்; ச—மேலும்; தக்ஷிண-வாமயோ:—வலது, இடது புறத்தில்; பஸ்சிமயோ:—பின்புறம்; பாதயோ:—பாதங்கள்; அபிஜித் உத்ராஷாடே—அபிஜித், உத்தராஷாடா நட்சத்திரங்கள்; தக்ஷிண-வாமயோ—வலது இடது புறத்தில்; நாஸிகயோ—நாசிப்பகுதியில்; யதா-ஸங்க்யம்—எண்ணிக்கைக்கேற்ப; ஸ்வரன பூர்வாஷாடே—ஸ்ரவணா மற்றும் பூர்வாஷாடா நட்சத்திரம்; தக்ஷிண-வாமயோ:—வலது, இடதுபுறத்தில்; லோசனயோ:—விழிகள்; தனிஷ்டாமூலம்: ச—தனிஷ்டா மற்றும் மூல நட்சத்திரங்கள்; தக்ஷிண-வாமயோ—வலது, இடது புறத்தில்; கர்ண்யோ—காதுகள்; மகா-ஆதீனி—மகா போன்ற நட்சத்திரங்கள்; அஷ்ட-நக்ஷத்ராணி—எட்டு நட்சத்திரங்கள்; தக்ஷிண-ஆயனானி—இதன் திசையினை இது குறிக்கின்றது; வாம-பார்ஸ்வ—இடது புறத்தில்; வங்க்ரிஷு—அங்கங்களில்; யுஞ்ஜீத—இடப்படலாம்; ததா-ஏவ—அதுபோல்; ம்ருக-ஸீர்ஷா-ஆதீனி—மிருகசீர்ஷம் போன்ற; உதகயனானி—வடதிசையினைக் குறிக்கின்ற; தக்ஷிண-பார்ஸ்வ-வங்க்ரிஷு—வலது புறத்தில்; ப்ராதிலோம்யேன—தலைகீழ் வரிசையில்; ப்ரயுஞ்ஜீத—இடப்படலாம்; ஸதபிஷா—ஸதபிஷா; ஜ்யேஷ்டே—ஜியேஷ்டா; ஸ்கந்தயோ:—இரு தோள்களிலும்; தக்ஷிண வாமயோ:—வலது மற்றும் இடது புறத்தில்; நயஸேத்—இடப்படவேண்டும்.

சிசுமாரச் சக்கரத்தின் இடுப்புப் பகுதியின் வலது மற்றும் இடது புறத்தில் புனர்வசு மற்றும் புஷ்ய நட்சத்திரங்கள் இருத்தல் வேண்டும். ஆர்த்ரா மற்றும் அஸ்லேஷா நட்சத்திரங்கள் இருத்தல் வேண்டும். ஆர்த்ரா மற்றும் அஸ்லேஷா நட்சத்திரங்கள் அதன் வலது மற்றும் இடது பாதங்களில் இருக்கின்றன. அபிஜித் மற்றும் உத்ராஷாடா நட்சத்திரங்கள் அதன் வலது, இடது நாசித்துவாரங்களில் இருக்கின்றன. சிரவணா மற்றும் பூர்வஷாடா நட்சத்திரங்கள் அதன் வலது, இடது விழிகளில் இருக்கின்றன. தனிஷ்டா மற்றும் மூல நட்சத்திரங்கள் அதன் வலது மற்றும் இடது செவிகளில் இருக்கின்றன. மகா முதல் அனுராதா வரை தென்திசையினைக் குறிக்கும் எட்டு நட்சத்திரங்கள் அதன் உடலின் இடது அங்கத்தில் இருக்கின்றன. மிருக சீர்ஷம் முதல் பூர்வ பாத்ரா வரை வட திசையினைக் குறிக்கும் எட்டு நட்சத்திரங்கள் வலது பக்க அங்கங்களின் மேல் இருக்கின்றன. சதபிஷா மற்றும் ஜியேஷ்டா நட்சத்திரங்கள் அதன் வலது, இடது தோள்களின் மேல் இருக்கின்றன.

பதம் 5.23.7
உத்தரா- ஹனௌ அகஸ்திர் அதரா-ஹனௌயமோ மூகேஷு சாங்காரக:
ஸனைஸ்சர உபஸ்தே ப்ரஹஸ்பதி: ககுடி வக்ஷஸி ஆதித்யோ
ஹ்றுதேயே நாராயணோ மனஸி சந்தரோ நாப்யாம் உஸனா ஸ்தனயோர்
அஸ்வினௌ புத: ப்ராணாபானயோ ரஹுர் கலே கேதவ: ஸர்வாங்கேஷு
ரோமஸு ஸர்வே தாரா கணா:

உத்தரா-ஹனௌ—மேல் தாடையில்; அகஸ்தி—அகஸ்தி என்னும் நட்சத்திரம்; அதரா-ஹனௌ—கீழ் தாடையில்; யம:—யமராஜன்; முகேஷு—வாயில்; ச—மேலும்; அங்காரக:—அங்காரகன் (செவ்வாய்); ஸனைஸ்சர—சனீ; உபஸ்தே—பிறப்பு உறுப்பில்; ப்ருஹஸ்பதி—வியாழன்; ககுடி—கழுத்தின் பின்புறம்; வக்ஷஸி—மார்பின் மீது; ஆதித்ய—சூரியன்; ஹ்ருதயே—இதயத்தினுள்; நாராயண:—பகவான் நாராயணன்; மனஸி—மனதில்; சந்த்ர—சந்திரன்; நாப்யாம்—நாபியில்; உஸனா—சுக்கிரன்; ஸ்தனயோ—இரண்டு முலைகளின் மீது; அஸ்வினௌ—அஸ்வின் என்னும் இரண்டு நட்சத்திரங்கள்; புதன்—புதன்; ப்ராணாபானயோ—உடலினுள் இயங்கும் பிராண, அபான வாயுக்கள்; ராஹு—இராகு கிரஹம்; கலே—கழுத்தில்; கேதவ—கேது; ஸர்வ-அங்கேஷு—உடல் எங்கும்; ரமஸு—உடலிலுள்ள ரோமங்களில்; ஸர்வே—எல்லா; தாராகணா—எண்ணிலடங்கா நட்சத்திரங்கள்.

சிசுமாரத்தின் மேல் தாடையில் அகஸ்தி இருக்கின்றது; கீழ்த்தாடையில் யமராஜன் இருக்கின்றார்; வாயில் செவ்வாயும்; பிறப்புறுப்பில் சனியும்; கழுத்தின் பின் பக்கத்தில் வியாழனும்; மார்பில் சூரியனும், இதயத்தினுள் நாராயணனும் இருக்கின்றார். அதன் மனதினுள் சந்திரனும் உந்திச் சுழியில் சுக்கிரனும்; முலைகளின்மீது அஸ்வினி குமாரர்களும் உள்ளனர். பிராணபானன் என்னும் அதன் மூச்சுக் காற்றில் புதனும்; அதன் கழுத்தில் இராகுவும் அதன் உடலெங்கும் கேது மற்றும் வால் நட்சத்திரங்களும், ரோமங்களில் எண்ணிலடங்கா நட்சத்திரங்களும் உள்ளன.

பதம் 5.23.8
ஏதத் உ ஹைவ பகவதோ விஷ்ணோ: ஸர்வ-தேவதா மயம் ரூபம்
அஹரஹ ஸந்த்யாயாம் ப்ரயதோ வாக்யதோ நிரீக்ஷமான உபதிஷ்டேத
நமோ ஜ்யோதிர் லோகாய காலாயனாயா நிமிஷாம் பதயே மஹா-புருஷா
யாபிதீ மஹிதி

ஏதத்—இந்த; உ ஹ—உண்மையில்; ஏவ—உறுதியாக; பகவத—முழுமுதற்கடவுளின்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணு; ஸர்வ-தேவதாமயம்—எல்லா தேவர்களையும் உடைய; ரூபம்—வடிவம்; அஹ-அஹ—எப்போதும்; ஸந்த்யாயாம்—அதிகாலை, மதியம், மாலை; ப்ரயத:—தியானித்து; வாக்யதே—வார்த்தைகளைக் கட்டுப்படுத்தி; நிரீக்ஷமாண—ஆழ்ந்து; உபதிஷ்டேத—ஒருவன் வழிபடவேண்டும்; நம—மரியாதைக்குரிய வந்தனங்கள்; ஜ்யோதி-லோகாய—அனைத்துக் கிரஹங்களும் இருக்கும் இடம்; காலயனாய—பரமகாலத்தின் வடிவில்; அநிமிஷாம்—தேவர்களின்; பதயே—தலைவருக்கு; மஹா-புருஷாய—பரமபுருஷருக்கு; அபிதீமஹி—நாம் தியானிப்போமாக; இதி—இவ்வாறு.

அன்பார்ந்த மன்னனே, இவ்வாறு விவரிக்கப்பட்ட சிசுமாரத்தின் உடலானது முழுமுதற் கடவுள் பகவான் விஷ்ணுவின் புறவடிவமாகக் கருதப்படவேண்டும். காலை, மதியம், மாலை வேளைகளில் ஒருவன் சிசுமாரச் சக்கரம் என்னும் பகவானின் வடிவத்தை அமைதியுடன் தியானித்து இம்மந்திரத்தினால் வழிபடவேண்டும். “ஒ. தேவர்களின் தலைவரே, ஒ, பரமபுருஷரே, நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணித்து உம்மைத் தியானிக்கின்றேன்”.

பதம் 5.23.9
க்ரஹர்க்ஷதாராமயம் ஆதிதைவிகம்
பாபாஹம் மந்த்ர-க்ருதாம் த்ரி காலம்
நமஸ்யதே: ஸ்மரதோ வா த்ரி-காலம்
நமஸ்யதே தத்-காலஜம் ஆஸு பாபம்

க்ரஹ-ருக்ஷ-தார-மயம்—எல்லா கிரஹங்கள் மற்றும் நட்சத்திரங்களையுடைய; ஆதிதைவிகம்—தேவர்கள் அனைவரின் தலைவர்; பாப-அபஹம்—பாவத்தின் பலன்களை நீக்குபவர்; மந்த்ர-க்ருதாம்—மேலே குறிப்பிட்ட மந்திரத்தை ஒதுபவர்களின்; த்ரி-காலம்—முக்காலமும்; நமஸ்யத—வந்தனங்களை அர்ப்பணித்து; ஸ்மரத—தியானித்து; வா—அல்லது; த்ரி-காலம்—முக்காலங்கள்; நமஸ்யதே—அழிக்கின்றார்; தத்-கால-ஜம்—அக்காலத்தில் பிறந்த; ஆஸு—மிக விரைவில்; பாபம்—எல்லா பாவ பலன்களையும்.

சிசுமாரச் சக்கரத்தினை உருவாக்கிய பரமபுருஷ பகவான் விஷ்ணுவின் உடல், அனைத்துத் தேவர்கள், கிரஹங்கள், நட்சத்திரங்கள் எல்லாவற்றிற்கும் உறைவிடமாகத் திகழ்கின்றது. ஒருவன் இம்மந்திரத்தினால் பரம புருஷ பகவானை காலை, மதியம், மாலை என்னும் மூன்று வேளைகளிலும் வழிபடுவானாயின், அவன் தனது பாவங்களிலிருந்து நிச்சயம் விடுதலை பெறுவான். ஒருவன் இவ்வடிவத்தை ஒரு நாளில் மூன்று வேளைகள் வழிபட்டாலோ, நினைத்தாலோ அவனது சமீபத்திய பாவங்கள் அனைத்தும் கூட நீங்கப் பெறுகிறான்.


ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “சிசுமார கிரஹ மண்டலம்” எனும் தலைப்பை கொண்ட இருபத்திமூன்றாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.

Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare