அத்தியாயம் – 22
கோளங்களின் பாதைகள்
பதம் 5.22.1
ராஜோ உவாச
யத் ஏதத் பகவத ஆதித்யஸ்ய மேரும் த்ருவம் ச ப்ரதக்ஷிணேன
பரிக்ராமதோ ராஸீனாம் அபிமுகம் ப்ரசலிதம் சாப்ரதக்ஷிணம் பகவ
தோபவர்ணிதம் அமுஷ்ய வயம் கதம் அனுமிமீமஹீதி
ராஜா உவாச—அரசர் (பரீக்ஷித்து மகாராஜா) கேட்டார்; யத்—இது; ஏதத்—இந்த; பகவத:—மிகவும் சக்தி வாய்ந்த; ஆதித்யஸ்ய—சூரியனின்; (சூரிய நாராயணரின்); மேரும்—சுமேரு எனப்படும் மலை; த்ருவம் ச—அதுபோல் துருவலோகம் எனப்படும் கிரஹம்; ப்ரதக்ஷிணேன—வலது பக்கத்தில் இட்டு; பரிக்ராமத:—அது சுற்றி வருகின்றது; ராஸினாம்—இராசி மண்டலத்தின் பல்வேறு இராசிகள்; அபிமுகம்—நோக்கி; ப்ரசலிதம்—சென்று; ச—மேலும்; அப்ரதக்ஷிணம்—இடது புறத்தில் இட்டு; பகவதா—மேன்மைக்குரிய தாங்கள்; உபவர்ணிதம்—விளக்கினீர்; அமுஷ்ய—அதன்; வயம்—நாங்கள் (கேட்பவர்கள்); கதம்—எவ்வாறு; அனுமிமீமஹி—விவாகத்தினாலும் அனுமானத்தினாலும் ஏற்றுக் கொள்ளக்கூடும்; இதி—இவ்வாறு.
சுகதேவ கோஸ்வாமியிடம் பரீக்ஷித்து மன்னர் கேட்டார்: போற்றுதற்குரியப் பெருமானே, தாங்கள் ஏற்கனவே உயர்சக்தி வாய்ந்த சூரிய தேவன், அவருக்கு வலது புறத்தில் துருவ லோகம் மற்றும் சுமேருமலை இரண்டுடன், துருவ லோகத்தைச் சுற்றி பயணம் செய்கின்றார் என்றும் உண்மையினை உறுதி செய்திருக்கின்றீர்கள். ஆனால் அதே சமயம் சூரிய தேவனோ, இராசி மண்டலத்திலுள்ள இராசிகளை நோக்கிய வண்ணம் சுமேருமலை மற்றும் துருவ லோகத்தைத் தனது இடது புறத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றார். அதனால் ஒரே சமயத்தில் இடது புறத்தில் கொண்டிருக்கின்றார். அதனால் ஒரே சமயத்தில் சூரிய தேவன் தனது இடது மற்றும் வலது புறத்தில் சுமேரு மற்றும் துருவலோகத்திற்குச் செல்லத் தொடங்குகிறது என்பதை எவ்வாறு எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?
பதம் 5.22.2
ஸ ஹோவாச
யதா குலால-சக்ரேண ப்ரமதா ஸஹ ப்ரமதாம் தத்-ஆஸ்ரயாணாம்
பிபீலிகராதினாம் கதிர் அன்யைவ ப்ரதேஸாந்த ரேஷ்வ அபி உபலப்ய-
மானத்வாத் ஏவம் நக்ஷத்ர-ராஸிபிர் உபலக்ஷிதேன கால- சக்ரேண
த்ருவம் மேரும் ச ப்ரதக்ஷிணேன பரிதாவதா ஸஹ பரிதாவமானானாம்
தத்–ஆஸ்ரயாணாம் ஸுர்யாதீனாம் க்ரஹாணாம் கதிர் அன்யைவ
நக்ஷத்ராந்தரே ராஸி-அந்தரே சோபலப்யமானத்வாத்
ஸ:—சுகதேவ கோஸ்வாமி; ஹ—மிகத் தெளிவாக; உவாச—விடையிறுத்தார்; யதா—அதுபோன்று; குலால-சக்ரேண—குயவனின் சக்கரம்; ப்ரமதா—சுழல்வது; ஸஹ—உடன்; ப்ரமதாம்—அவற்றைச் சுற்றிலுமுள்ள; தத் ஆஸ்ரயாணாம்—அதில் இருப்பவை (சக்கரத்தில்); பிபீலிக-ஆதீனாம்—சிற்றெறும்புகள்; கதி:—அசைவு; அன்யா—பிற; ஏவ—உறுதியாக; ப்ரதஸ-அந்தரேஷு—பல்வேறு இடங்களில்; அபி—கூட; உபலப்யமானத்வாத்—உணர்வது போல்; ஏவம்—அது போன்று; நக்ஷத்ர-ராஸிபி:—நட்சத்திரங்களும், இராசிகளும்; உபலக்ஷிதேன—காணப்படுகின்றன; கால-சக்ரேண—காலச்சக்கரம்; த்ருவம்—துருவ லோகம் எனப்படும் வடமீன்; மேரும்—சுமேரு எனப்படும் மலை; ச—மேலும்; ப்ரதக்ஷிணேன—வலது புறம்; பரிதாவதா—சுற்றுகின்றது; ஸஹ—உடன்; பரிதாவமானானாம்—சுற்றிச் செல்பவை; தத்-ஆஸ்ரயாணாம்—அவரது அடைக்கலம் காலச்சக்கரமாகும்; ஸுர்ய-ஆதீனாம்—சூரியனால் தலைமை தாங்கப்பட்ட; க்ரஹாணாம்—கிரஹங்களின்; கதி:—இயக்கம்; அன்யா—பிற; ஏவ—உறுதியாக; நக்ஷத்ர-அந்தரே—பல்வேறு நட்சத்திரங்கள்; ராஸி-அந்தரே—பல்வேறு இராசிகள்; ச—மேலும்; உபலப்யமானத்வாத்—கவனிக்கப்படுகின்றதினால்.
ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி மிகத்தெளிவாகப் பதிலிறுத்தார்: குயவனின் சக்கரம் சுழலும்போது அதன் மீதிருக்கும் சிற்றெறும்புகளும் அதனோடு சேர்ந்து சுழல்கின்றன. அவற்றின் சுழற்சி சக்கரத்தின் சுழற்சியிலிருந்து ஒருவனுக்கு வேறுபட்டதாகத் தோன்றும் ஏனென்றால் அவை சிலசமயம் சக்கரத்தின் ஒரு பக்கத்திலும் சில சமயம் சக்கரத்தின் மறு பக்கத்திலும் தோன்றுகின்றன. அதுபோல் இராசிகளும், இராசி மண்டலங்களும் தமது வலது புறத்தில் சுமேரு மற்றும் துருவ லோகத்துடன் காலச் சக்கரத்தில் சுழல்கின்றன, அப்போது சிற்றெறும்பு போன்ற சூரியனும் பிற கிரஹங்களும் அவற்றுடன் சேர்ந்து சுழல்கின்றன. அதனால் சூரியனும் கிரஹங்களும் பல்வேறு காலங்களில் பல்வேறு இராசிகள் மற்றும் இராசி மண்டலங்களில் காணப்படுகின்றன. இது அவற்றின் இயக்கம் இராசி மண்டலத்திலிருந்தும் காலச் சக்கரத்திலிருந்தும் வேறுபாடுடையதாக இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றது.
பதம் 5.22.3
ஸ ஏஷ பகவான் ஆதி-புருஷ ஏவ ஸாக்ஷான் நாராயணோ லோகானாம்
ஸ்வஸ்தய ஆத்மானம் த்ரயீமயம் கர்ம-விஸுத்தி-நிமித்தம் கவிபிர்
அபி ச வேதேன விஜிஜ்ஞாஸ்யமானோ த்வாதஸதா விபஜ்ய ஷட்ஸு
வஸந்தாதிஷ்வ் ருதுஷு யதோபஜோஷம் ருது-குணான் விதாதி
ஸ:—அந்த; ஏஷ:—இந்த; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த; ஆதி-புருஷ:—ஆதி புருஷர்; ஏவ—உறுதியாக; ஸாக்ஷாத்—நேரடியாக; நாராயண:—முழுமுதற் கடவுள் நாராயணர்; லோகானாம்—எல்லா லோகங்களின்; ஸ்வஸ்தயே—நன்மைக்காக; ஆத்மானம்—தன்னை; த்ரயீ-மயம்—மூன்று வேதங்களினாலான (சாம, யஜுர், ரிக்); கர்ம-விஸுத்தி—பலன்தரும் செயல்களின் தூய்மையின்; நிமித்தம்—காரணம்; கவிபி:—மாமுனிவர்களால்; அபி—கூட; ச—மேலும்; வேதேன—வேத ஞானத்தினால்; விஜிஜ்ஞாஸ்யமான:—அதுபற்றி வினவுகின்ற; த்வாதஸ-தா—பன்னிரு பிரிவுகள்; விபஜ்ய—பிரித்து; ஷட்ஸு—ஆஸிவ்; வஸந்த-ஆதிஷு—வசந்த காலம் முதல்; ருதுஷு—ருதுக்கள் (பருவகாலங்கள்); யதா-உபஜோஷம்—அவர்களது முன்வினைச் செயல்களின் அனுபவத்திற்கேற்ப; ருது-குணான்—பல்வேறு பருவ காலத்தன்மைகள்; விததாதி—அவர் ஏற்படுத்துகிறார்.
பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஆதி காரணர் முழுமுதற் கடவுளான நாராயணரே ஆவார். வேத ஞானத்தில் முற்றும் தேர்ந்த மாமுனிவர்கள் பரமபுருஷ பகவானுக்குத் தமது பிரார்த்தனைகளை அர்ப்பணிக்கும் பொழுது அவர், எல்லா லோகங்களுக்கும் நன்மை செய்வதற்காகவும், பலன் தரும் செயல்களைத் தூய்மை செய்வதற்காகவும் பெளதீக உலகிற்கு சூரியன் வடிவத்தில் இறங்கிவிடுகின்றார். அவர் தன்னைப் பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து, வசந்த காலம் உள்ளிட்ட அனைத்துப் பருவகாலங்களையும் படைத்தார். இவ்வாறு அவர் குளிர், கோடை போன்ற பருவமாறுபாடுகளைப் படைத்தார்.
பதம் 5.22.4
தத் ஏதம் இஹ புருஷாஸ் த்ரய்யா வித்யயா வர்ணாஸ்ரமாசாரானுபதா
உச் சாவசை: கர்மபிர் ஆம்னாதைர் யோக விதானைஸ் ச ஸ்ரத்தயா
யஜந்தோ ‘ஞ்ஜஸா ஸ்ரேய: ஸமதிகச்சந்தி
தம்—அவர் (முழுமுதற் கடவுள்); ஏதம்—இந்த; இஹ—நிலையற்ற இந்த உலகில்; புருஷா:—அனைத்து மக்களும்; த்ரய்யா—மூன்று பிரிவுகளைக் கொண்டு; வித்யயா—வேத ஞானத்தினால்; வர்ண-ஆஸ்ரம-ஆசார—வர்ணாஸ்ரம முறையின் பயிற்சிகள்; அனுபதா:—பின்பற்றி; உச்ச அவசை:-வர்ணாஸ்ரம—தர்ம பல்வேறு நிலைகளுக்கேற்ப உயர்வு அல்லது தாழ்வு; (அந்தண, சத்திரிய, வைஸ்ய, சூத்திர); கர்மபி:—அவர்களுக்குரிய கர்மத்தினால்; ஆம்னாதை:—கூறப்பட்ட; யோக-விதானை:—தியானம் மற்றும் பிற யோகமுறைகளினால்; ச—மேலும்; ஸ்ரத்தயா—மிகுந்த நம்பிக்கையுடன்; யஜந்த:—வழிபடுகின்ற; அஞ்ஜஸா—சிரமமின்றி; ஸ்ரேய:—வாழ்வின் உயர்ந்த நன்மை; ஸமதிகச்சந்தி—அவர்கள் அடைகின்றனர்.
நான்கு வர்ணங்கள் மற்றும் நான்கு தர்மங்கள் முறைக்கேற்ப மக்கள் பொதுவாக முழுமுதற் கடவுளான நாராயணரை வழிபடுகின்றனர். அவர் சூரிய தேவனாக வீற்றிருக்கின்றார். இவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அக்னி ஹோத்திரம் போன்ற மூன்று வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சமயச் சடங்குகளுக்கேற்பவும், உயர்ந்த மற்றும் தாழ்ந்த பலன்தரும் செயல்களுக்கேற்பவும், யோக ஸித்திகளுக்கேற்பவும், முழுமுதற் கடவுளை, பரமாத்மாவாக வழிபடுகின்றனர். இவ்வாறு அவர்கள் மிகவும் எளிதாக வாழ்வின் உடல் இலட்சியத்தினை அடைகின்றனர்.
பதம் 5.22.5
அத ஸ ஏஷ ஆத்மா லோகானாம் த்யாவ்-ஆப்ருதிவ்யோர் அந்தரேண
நபோ – வலயஸ்ய காலசக்ர -கதோ த்வாதஸ மாஸான் புங்க்தே ராஸி-
ஸம்ஜ்ஞான் ஸம்வத்ஸராவயவான் மாஸ: பக்ஷ-த்வயம் திவா நக்தம்
சேதி ஸபாதர்க்ஷ- த்வயம் உபதிஸந்தி யாவதா விஷ்டம் அம்ஸம் புஞ்ஜீத்
ஸ வை ருதுர் இதி உபதிஸ்யதே ஸம்வத்ஸராவயவ:
அத—அதனால்; ஸ:—அவர்; ஏஷ:—இந்த; ஆத்மா—மூலஉயிர்ச்சக்தி; லோகானாம்—மூன்று உலகங்களின்; த்யவ்-ஆ-ப்ருதிவ்யோ-அந்தரேண—பிரபஞ்சத்தின், மேல், கீழ்ப்பகுதிகள்; நப: வலயஸ்ய—விண்வெளி; கால-சக்ர-கத:—காலசக்கரத்தில் நிலைபெற்று; த்வாதஸ மாஸான்—பன்னிரெண்டு மாதங்கள்; புங்கதே—கடந்து செல்கிறது: ராஸி-ஸம்ஜ்ஞான்—இராசிகளின் பெயர்களில்; ஸம்வத்ஸர-அவயவான்—ஒரு முழு வருடத்தின் பாகங்கள்; பக்ஷ-த்வயம்—இரண்டு இருவாரங்கள் (பட்சங்கள்); திவா—ஒரு பகல்; நக்தம் ச—மேலும் ஓர் இரவு; இதி—இவ்வாறு; ஸபாத-ருக்ஷத்வயம்—நட்சத்திரக் கணக்கினால்; இரண்டேகால் நட்சத்திரக் கூட்டம்; உபதிஸந்தி—அவர்கள் உபதேசிக்கின்றனர்; யாவதா—அவ்வளவு காலத்தினால்; விஷ்டம் அம்ஸம்—அவரது ஆறில் ஒருபங்கு கோளப்பாதை; புஞ்ஜீத—கடந்து; ஸ:—அப்பகுதியினை; வை—உண்மையில்; ருது:—ஒரு பருவக்காலம்; இதி—இவ்வாறு; உபதிஸ்யதே—உபதேசிக்கப்படுகிறது; ஸம்வத்ஸரா-அவயவ:—ஒரு வருடத்தின் ஒரு பகுதி.
எல்லா உலகங்களுக்கும் ஆத்மாவாக விளங்கும் நாராயணர் அல்லது கிருஷ்ணர் என்னும் சூரிய தேவன் பிரபஞ்சத்தின் மேல் கீழ் பாகங்களுக்கு இடையில் விண்வெளியில் இருக்கின்றார். காலச்சக்கரத்தில் பன்னிரெண்டு மாதங்களைக் கடந்து சூரியன் இராசி மண்டலத்திலுள்ள பன்னிரெண்டு இராசிகளுடன் தொடர்பு கொண்டு, அந்த இராசிகளுக்கேற்ப பல்வேறு பெயர்களைப் பெறுகிறார். இப்பன்னிரெண்டு மாதங்கள் சேர்ந்து ஒரு சம்வத்ஸரம் அல்லது ஒரு வருடம் ஆகும். சந்திரனின் கணக்கின்படி இரண்டு இருவாரங்கள் வளர்பிறை, மற்றும் தேய்பிறை சேர்ந்து ஒரு மாதத்தினை உண்டாக்குகின்றன. இதே கால அளவு பித்ருலோகத்தில் ஒரு பகல் மற்றும் ஒர் இரவு ஆகும். நட்சத்திரக் கணக்கின்படி ஒருமாதம் என்பது இரண்டேகால் நட்சத்திரக் கூட்டத்திற்குச் சமமாகும். சூரியன் இரண்டு மாதங்கள் பயணம் செய்தால் ஒரு பருவகாலம் முடிகிறது. அதனால் பருவகால மாற்றங்கள் வருடம் என்னும் உடலின் பாகங்களாகக் கருதப்படுகின்றன.
பதம் 5.22.6
அத ச யாவதார்தேன நபோ- வீத்யாம் ப்ரசரதி தம் காலம் அயனம்
ஆசக்ஷதே
அத—இப்பொழுது; ச—மேலும்; யாவதா—அதுவரை; அர்தேன—பாதி; நப:-வீத்யாம்—விண்வெளியில்; ப்ரசரதி—சூரியன் இயங்குகின்றது; தம்—அது; காலம்—காலம்; அயனம்—அயனம்; ஆசக்ஷதே—கூறப்படுகிறது.
இவ்வாறு சூரியன் விண்வெளியின் பாதியில் சுழல எடுக்கும் நேரத்தை அயனா அல்லது அதன் இயக்க காலம் [வடக்கில் அல்லது தெற்கில்] என்று அழைக்கப்படுகிறது.
பதம் 5.22.7
அத ச யாவன் நபோ-மண்டலம் ஸஹ த்யாவ்-ஆப்ருதிவ்-யோர்
மண்டலாப்யாம் கார்த்ஸுன்யேன ஸ ஹ புஞ்ஜீத தம் காலம் ஸம்வத்ஸரம்
பரிவத்ஸரம் இடாவத்ஸரம் அனுவத்ஸரம் வத்ஸரம் இதி பானோர்
மந்த்ய-ஸைக்ருய-ஸம கதிபி: ஸமாமனந்தி
அத—இப்பொழுது; ச—மேலும்; யாவத்—அதுவரை; நப:-மண்டலம்—மேல் கீழ் உலகங்களுக்கு இடையேயுள்ள விண்வெளி; ஸஹ—உடன்; த்யாவ்—மேலுலகின்; ஆப்ருதிவ்யோ:—கீழ் உலகின்; மண்டலாப்யாம்—மண்டலங்கள்; கார்த்ஸுன்யேன—முழுவதும்; ஸ:—அவர்; ஹ—உண்மையில்; புஞ்ஜீத—கடந்து செல்லலாம்; தம்—அது; காலம்—காலம்; ஸம்வத்ஸரம்—சம்வத்ஸரம்; பரிவத்ஸரம்—பரிவத்ஸரம்; இடாவத்ஸரம்—இடாவத்ஸரம்; அனுவத்ஸரம்—அனுவத்ஸரம்; வத்ஸரம்—வத்ஸரம்; இதி—இவ்வாறு; பானோ:—சூரியனின்; மாந்த்ய—மெதுவாக; ஸைக்ருயே—வேகமாக; ஸம—சமமாக; கதிபி:—வேகங்களினால்; ஸமாமனந்தி—அனுபவமுடைய அறிஞர்கள் விளங்குகின்றனர்.
சூரிய தேவனிடம் மூன்று வேகங்கள் உள்ளன. அவை மெதுவாக, வேகமாக, சமமாகச் செல்வதாகும். சூரியன் மேலுலகம், பூமி, விண்வெளி முழுவதையும் கடந்து செல்வதற்குப் பயன்படுத்தும் மூன்று வேகங்களும் கற்றறிந்த அறிஞர்களால் சம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அனுவத்ஸரம், வத்ஸரம் என்னும் ஐந்து பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன.
பதம் 5.22.8
ஏவம் சந்த்ரமா அர்க கபஸ்திப்ய உபரிஷ்டால் லக்ஷயோஜனத
உபலப்யமானோ ‘ர்கஸ்ய ஸம்வத்ஸர-புக்திம் பக்ஷாப்யாம் மாஸ புக்திம்
ஸபாதர்க்ஷப்யாம் தினேனைவ பக்ஷ-புக்திம் அக்ரசாரீ த்ருததர-கமனோ
புங்க்தே
ஏவம்—இவ்வாறு; சந்த்ரமா—சந்திரன்; அர்க-கபஸ்திப—சூரிய ஒளிக்கதிர்களிலிருந்து; உபரிஷ்டாத்—மேலே; லக்ஷயோஜனத:—ஒரு லட்சம் யோஜனங்கள் அளவு; உபலப்யமான:—இருக்கின்றது; அர்கஸ்ய—சூரிய கோளத்தின்; ஸம்வத்ஸர-புக்திம்—ஒரு வருட காலத்தின் பாதை; பக்ஷாப்யாம்—இரண்டு இருவாரங்கள்; மாஸ-புக்திம்—ஒரு மாதப் பாதை; ஸபாத-ருக்ஷப்யாம்—இரண்டேகால் நாட்களினால்; தினேன—ஒரு நாளினால்; ஏவ—மட்டும்; பக்ஷ்-புக்திம்—இருவாரத்திற்கான பாதை; அக்ரசாரீ—வேகமாகச் சென்று; த்ருத-தர-கமன:—மிகவேகமாகக் கடந்து செல்கின்றது; புங்க்தே—கடக்கின்றது.
சூரிய ஒளிக்கதிர்களுக்கு மேலாக 100,000 யோஜனங்கள் தூரத்தில் (800,000 மைல்கள்) சந்திரன் இருக்கின்றது. அது சூரியன் செல்லும் வேகத்தைவிட அதிவேகத்தில் பயணம் செய்கின்றது. சந்திர பட்சங்கள் இரண்டில் (சுக்கில பட்சம், கிருஷ்ண பட்சம்) சந்திரன், சூரியனின் ஒரு சம்வத்ஸரத்திற்கு இணையாகப் பயணம் செய்கின்றது. இரண்டேகால் நாட்களில் அது சூரியனின் ஒரு மாதத்தைக் கடந்து செல்கிறது. ஒரு நாளில் அது சூரியனின் இரு வாரங்களைக் கடந்து செல்கின்றது.
பதம் 5.22.9
அத சாபூர்யமாணாபிஸ் ச கலாபிர் அமராணாம் க்ஷீயமாணாபிஸ் ச
கலாபி: பித்ரூணாம் அஹோ-ராத்ராணி பூர்வ- பக்ஷாபர-பக்ஷாப்யாம்
விதன்வான: ஸர்வ-ஜீவ-நிவ:- ப்ராணோ ஜிவஸ் சைகம் ஏகம் நக்ஷத்ரம்
த்ரிம்ஸதா முஹுர்தைர் புங்க்தே
அத—இவ்வாறு; ச—மேலும்; அபூர்யமாணாபி:—படிப்படியாக வளர்ந்து; ச—மேலும்; கலாபி:—சந்திரனின் பாகங்களினால்; அமராணாம்—தேவர்களின்; க்ஷீயமானாபி:—படிப்படியாகத் தேய்வதினால்; ச—மேலும்; கலாபி:—சந்திரனின் பாகங்களினால்; பித்ரூணாம்—பித்ருலோகத்தைச் சேர்ந்தவர்களின்; அஹ:-ராத்ராணி—பகற்பொழுதுகள் மற்றும் இரவுப்பொழுதுகள்; பூர்வ-பக்ஷ-அபர-பக்ஷாப்யாம்—வளர்பிறை, தேய்பிறை காலம்; விதன்வான:—வழங்குகின்றது; ஸர்வ-ஜீவ-நிவ:—மொத்த உயிர்வாழிகளின்; ப்ராண:—உயிர்; ஜீவ:—தலைவனான உயிர்வாழி; ச—மேலும்; ஏகம் ஏகம்—ஒன்றையடுத்து மற்றொன்று; நக்ஷத்ரம்—நட்சத்திரக் கூட்டம்; த்ரிம்ஸதா—முப்பதினால்; முஹுர்தை:—முகூர்த்தங்கள்; புங்க்தே—கடந்து செல்கிறது.
சந்திரன் வளரும் பொழுது ஒளிர்கின்ற அதன் கலைகள் தினமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன்மூலம் அது தேவர்களுக்குப் பகலையும், பிதாக்களுக்கு இரவையும் உண்டாக்குகின்றது. அதன் கலைகள் தேயும் பொழுது தேவர்களின் இரவுக்கும், பிதாக்களின் பகலுக்கும் அது காரணமாகின்றது. இவ்வாறு சந்திரனின் ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டங்களையும் முப்பது முகூர்த்தங்களில் கடந்து செல்கின்றது ஒரு நாள் முழுவதும். அமிர்தம் போன்ற குளிர்ந்த ஒளிக்குச் சந்திரனே ஆதாரமாகும். அதுவே உணவு தானியங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றது. அதனால் சந்திரதேவன் அனைத்து உயிர்வாழிகளின் ஜீவனாகக் கருதப்படுகிறான். இதனைத் தொடர்ந்து அவர் உயிர்வாழிகளின் தலைவன் என்னும் பொருளில் ஜீவன் என்றழைக்கப்படுகின்றான்.
பதம் 5.22.10
ய ஏஷஷோடஸ கல: புருஷோ பகவான் மனோமயோ ‘ன்னமயோ
ம்ருதமயோ தேவ-பித்ரு-மனுஷ்ய-பூத-பஸு-பக்ஷி-ஸரீஸ்ரூப வீருதாம்
ப்ராணாபி ஆயன-ஸீலத்வத் ஸர்வமய இதி வர்ணயந்தி
ய:—அது; ஏஷ:—இது; ஷோடஸ-கல:—அனைத்துப் பதினாறு பாகங்களையும் கொண்டு (பூரண நிலவு); புருஷ:—புருஷர்; பகவான்—முழுமுதற் கடவுளிடமிருந்து பெற்ற உயர்ந்த சக்தியுடையவர்; மன:-மய:—மனதின் ஆதிபத்தியத் தெய்வம்; அன்ன-மய:—உணவு தானியங்களின் ஆதார சக்தியாவார்; அம்ருத-மய:—உயிருக்கு மூலாதாரமாகத் திகழ்கிறார்; தேவ—அனைத்துத் தேவர்களின்; பித்ரூ—பித்ரு லோகத்தைச் சேர்ந்த அனைவரின்; மனுஷ்ய—மனிதர்கள் அனைவரின்; பூத—அனைத்து உயிர்வாழிகள்; பஸு—விலங்குகளின்; பக்ஷி—பறவைகளின்; ஸரீஸ்ருப—ஊர்வனவையின்; வீருதாம்—அனைத்து வகையான மரம், செடிகளின்; ப்ராண—உயிர்மூச்சு; அபி—நிச்சயமாக; ஆயன-ஸீலத்வாத்—புத்துணர்ச்சி அளிப்பதற்கு; ஸர்வ-மய:—எங்கும் வியாபித்திருக்கும்; இதி—இவ்வாறு; வர்ணயந்தி—கற்றறிந்த அறிஞர்கள் விளக்குகின்றனர்.
அனைத்துச் சக்திகளும் நிறைந்ததாக சந்திரன் இருக்கின்ற காரணத்தினால் அது முழுமுதற் கடவுளின் செல்வாக்கிற்குப் பிரநிதியாக விளங்குகின்றது. சந்திரனே அனைவரின் மனதிற்கும் ஆதிபத்தியத் தெய்வமாவார், அதனால் சந்திரதேவன் மனோமயன் என்றழைக்கப்படுகின்றார். அவர் அன்னமயன் என்றும் அழைக்கப்படுகின்றார் காரணம் அனைத்து மரம் செடிகளுக்கும் அவரே சக்தி அளிக்கின்றார். அவர் அமிர்தமயன் என்றும் அழைக்கப்படுகின்றார். ஏனென்றால் அவர் அனைத்து உயிர்வாழிகளின் உயிருக்கும் ஆதாரமாக விளங்குகின்றார். சந்திரன் தேவர்கள், பிதாக்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, மரம், செடி, கொடிகள் போன்ற எல்லா உயிர்வாழிகளுக்கும் மகிழ்ச்சியளிக்கிறார். சந்திர தரிசனத்தினால் அனைவரும் திருப்தியடைகின்றனர். அதனால் சந்திரன் சர்வமயன் (எங்கும் நிறைந்திருப்பவர்) என்றழைக்கப்படுகின்றார்.
பதம் 5.22.11
தத உபரிஷ்டாத் த்வி-லக்ஷ-யோஜனதோ நக்ஷத்ராணி மேரும் தக்ஷி-
ணேனவை காலாயன ஈஸ்வர-யோஜிதானி ஸஹாபிஜிதாஷ்டா-விம்ஸதி்:
தத:—சந்திர மண்டலத்திலிருந்து; உபரிஷ்டாத்—மேலே; த்வி-லக்ஷ-யோஜனத:—200,000 யோஜனங்கள்; நக்ஷத்ராணி—பல நட்சத்திரங்கள்; மேரும்—சுமேருமலை; தக்ஷிணேன-ஏவ—வலது பக்கத்தில்; கால-அயனே—காலச்சக்கரத்தில்; ஈஸ்வர-யோஜிதானி—முழுமுதற் கடவுளால் பொருத்தப்பட்ட; ஸஹ—உடன்; அபிஜிதா—அபிஜித் என்னும் நட்சத்திரம்; அஷ்டா-விம்ஸதி:—இருபத்தி எட்டு.
ஏராளமான நட்சத்திரங்கள் சந்திரனுக்கு மேலே 200,000 யோஜனங்கள் (1,600,000 மைல்கள்) தூரத்தில் இருக்கின்றன. முழுமுதற் கடவுளின் பரம விருப்பத்தின் பேரில் அவை காலச்சக்கரத்துடன் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அவை தமக்கு வலது புறத்தில் சுமேரு மலையுடன் சேர்ந்து சுழல்கின்றன. இவற்றின் அசைவு சூரியனிலிருந்து வேறுபாடுடையதாகும். அபிஜித் என்னும் நட்சத்திரத்தின் தலைமையின்கீழ் இருபத்தியெட்டு முக்கியமான நட்சத்திரங்கள் உள்ளன.
பதம் 5.22.12
தத உபரிஷ்டாத் உஸனா த்வி-லக்ஷ-யோஜதை உபலப்யதே புரத:
பஸ்சாத் ஸஹைவ வார்கஸ்ய ஸைக்ருய-மாந்த்ய-ஸாம்யாபிர் கதிபிர்
அர்கவச் சரதி லோகானாம் நித்யதானுகூல ஏவ ப்ராயேன வர்ஷயம்ஸ்
சாரேணானுமீயதே ஸ வ்ருஷ்டி – விஷ்டம்ப-க்ரஹோபஸமன:
தத:—இந்நட்சத்திரக் கூட்டங்களிலிருந்து; உபரிஷ்டாத்—மேலே; உஸனா—சுக்கிரன்; த்வி-லக்ஷ-யோஜ-தை—200,000 யோஜனங்கள் (1,600,000 யோஜனங்கள்); உபலப்யதே—உணரப்படுகின்றது; புரத:—முன்புறம்; பஸ்சாத்—பின்புறம்; ஸஹ—உடன்; ஏவ—உண்மையில்; வா—மேலும்; அர்கஸ்ய—சூரியனின்; ஸைக்ருய—வேகமான; மாந்த்ய—மெதுவாக; ஸாம்யாபி:—சமமாக; கதிபி:—இயக்கங்கள்; அர்கவத்—உண்மையில் சூரியனைப்போன்று; சரதி—சூழல்கிறது; லோகானாம்—இப்பிரபஞ்சத்திலுள்ள அனைத்து லோகங்களின்; நித்யதா—தொடர்ந்து; அனுகூல:—நன்னிலைமைகளை அளித்து; ஏவ—உண்மையில்; ப்ராயேண—பெரும்பாலும் எப்போதும்; வர்ஷயன்—மழைக்குக் காரணமாகி; சாரேண—மேகங்களைச் செழுமைப்படுத்துவதினால்; அனுமீயதே—உணரப்படுகிறது; ஸ:—அவர் (சுக்கிரன்); வ்ருஷ்டி-விஷ்டம்ப—மழைக்குத் தடையான; க்ரஹ-உபஸமன:—பயனற்றக் கிரஹங்கள்.
இந்நட்சத்திரக் கூட்டங்களுக்கு மேலே 1,600,000 மைல்கள் தூரத்தில் சுக்கிரன் என்னும் கிரஹம் உள்ளது இது பெரும்பாலும் அதே இடைவெளியில் சூரியனைப் போன்று வேகமாகவும், மெதுவாகவும், சமமாகவும் செல்கின்றது. சிலசமயம் சூரியனுக்குப் பின்புறம், சில சமயம் சூரியனுடன் சேர்ந்தும் செல்கின்றது. மழை பெய்வதற்குத் தடையாக இருக்கும் கிரஹங்களின் பாதிப்பினை சுக்கிரன் பயனற்றுப் போகச் செய்கின்றது. இதனைத் தொடர்ந்து அதன் வரவு மழைக்குக் காரணமாகிறது அதனால் அது இப்பிரபஞ்சத்திலுள்ள உயிர்வாழிகள் அனைத்திற்கும் மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகின்றது. இது கற்றறிந்த அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
பதம் 5.22.13
உஸனஸா புதோ வ்யாக்யாதஸ் தத உபரிஷ்டாத் த்வி-லக்ஷ-யோ
ஜனதோ புத: ஸோம-ஸுத உபலப்யமான: ப்ராயேண ஸுப-க்ருத் யதார்
காத் வ்யதிரிச்யேத ததாதிவாதாப்ர-ப்ராயானாவ்ருஷ்டி-ஆதி-பயம்
ஆஸம்ஸதே
உஸனஸா—சுக்கிரனுடன்; புத:—புதன்; வ்யாக்யாத:—விளக்கப்படுகிறது; தத:—அதிலிருந்து (சுக்கிரன்); உபரிஷ்டாத்—மேலே; த்வி-லக்ஷ-யோஜதை:—1,600,000 மைல்கள்; புத:—புதன்; ஸோம-ஸுத:—சந்திரனின் புதல்வன்; உபலப்யமான:—இருக்கின்றது; ப்ராயேண—பெரும்பாலும் எப்போதும்; ஸுப-க்ருத்—பிரபஞ்சத்திலுள்ள உயிர்வாழிகள் அனைவருக்கும் மிகவும் மங்களமானதாகும்; யதா—எப்பொழுது; அர்காத்—சூரியனிலிருந்து; வ்யதிரிச்யதே—பிரிக்கப்படுகிறது; ததா—அச்சமயம்; அதிவாத—புயற்காற்று போன்ற பிற பாதிக்கும் மோசமான விளைவுகள்; அப்ர—மேகங்கள்; ப்ராய—பெரும்பாலும்; எப்போதும்; அனாவ்ருஷ்டி-ஆதி—மழை பொய்த்துப் போவது போன்ற; பயம்—பயம்தருநிலைகள்; ஆஸம்ஸதே—விரிகிறது.
புதனும் இங்கே சுக்கிரன் போலவே விளக்கப்படுகிறது. இக்கிரஹமும் சிலசமயம் சூரியனுக்குப் பின்புறமும், சில சமயம் சூரியனுக்கு முன்புறமும், சிலசமயம் சூரியனுடன் சேர்ந்தும் செல்கின்றது. இது 1,600,000 மைல்கள் சுக்கிரனுக்கு மேலே இருக்கின்றது. அல்லது 7,200,000 மைல்கள் பூமிக்கு மேலே இருக்கின்றது. சந்திரனின் புதல்வனான புதன் பெரும்பாலும் இப்பிரபஞ்சத்தில் உள்ளோர்க்கு எப்போதும் மங்களம் நிறைந்தவரே ஆவார். இது சூரியனுடன் சேர்ந்து செல்லாத காலங்களில் புயல், புழுதிக்காற்று, ஒழுங்கற்ற மழை, நீரில்லாத மேகம் போன்ற தீ நிமித்தங்களைக் காட்டும். இவ்வாறு இக்கிரஹம், தேவைக்குக் குறைவான, அல்லது அதிகமான மழையின் மூலம் அச்சந்தரும் சூழ்நிலையினை உருவாக்குகின்றது.
பதம் 5.22.14
அத ஊர்த்வம் அங்காரகோ ‘பி யோஜன-லக்ஷ-த்விதய உபலப்யமானஸ்
த்ரிபிஸ் த்ரிபி: பக்ஷைர் ஏகைகஸோ ராஸீன் த்வாதஸானுபுங்க்தே யதி ந
வக்ரேணாபிவர்ததே ப்ராயேணாஸுப-க்ரஹோ ‘க-ஸம்ஸ:
அத:—இதிலிருந்து; ஊர்த்வம்—மேலே; அங்காரக:—அங்காரகன் (செவ்வாய்); அபி—மேலும்; யோஜன-லக்ஷ-த்விதயே—1,600,000 மைல்கள் தூரத்தில்; லப்யமான:—இருக்கின்றது; த்ரிபி: த்ரிபி:—ஒவ்வொரு மூன்று மற்றும் மூன்று; பக்ஷை:—பட்சங்கள் (இரு வாரங்கள்); ஏக-ஏகஸ:—ஒன்றன்பின் மற்றொன்று; ராஸீன்—இராசிகள்; த்வா தஸ—பன்னிரெண்டு; அனுபுங்க்தே—கடந்து செல்கிறது; யதி—இவ்வாறு; ந—இல்லை; வக்ரேண—வளைவுடன்; அபிவர்ததே—அணுகுகிறது; ப்ராயேண—பெரும்பாலும் எப்போதும்; அஸுப-க்ரஹ:—பாதகம் செய்யும்; அமங்களக்கிரஹம்; அக-ஸம்ஸ:—துன்பம் விளைவிக்கும்.
1,600,000 மைல்கள் புதனுக்கு மேல் அல்லது 8,800,000 மைல்கள் பூமிக்கு மேலே செவ்வாய் கிரஹம் இருக்கின்றது. இக்கிரஹம் வளைந்த பாதையில் பயணம் செய்யவில்லையென்றால், இது இராசி மண்டலத்திலுள்ள ஒவ்வொரு இராசி வீட்டையும் மூன்று வாரங்களில் கடந்து செல்லும். இவ்வாறு இது பன்னிரெண்டு இராசி வீடுகளையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கடந்து செல்கின்றது. மழை மற்றும் பிற பாதிப்புகளினால் இது எப்போதும் பாதகமானச் சூழ்நிலைகளையே உருவாக்குகின்றது.
பதம் 5.22.15
தத உபரிஷ்டாத் த்வி-லக்ஷ-யோஜனாந்தர-கதா பகவான் ப்ரஹஸ்பதிர்
ஏகைகஸ்மின் ராஸௌ பரிவத்ஸரம் பரிவத்ஸரம் சரதி யதி ந வக்ர:
ஸ்யாத் ப்ராயேணானு கூலோ ப்ராஹ்மண-குலஸ்ய
தத:—அது (செவ்வாய்); உபரிஷ்டாத்—மேலே; த்வி-லக்ஷ-யோஜன-அந்தர-கதா:—1,600,000 மைல்கள் தூரத்தில் இருக்கின்றது; பகவான்—மிகவும் சக்தி வாய்ந்த கிரஹம்; ப்ரஹஷ்பதி—வியாழன்; ஏக-ஏகஸ்மின்—ஒன்றன்பின் மற்றொன்று; ராஸௌ—இராசி; பரிவத்ஸரம் பரிவத்ஸரம்—பரிவத்ஸரக் காலம்; சரதி—செல்கிறது; யதி—இவ்வாறு இருந்தால்; ந—இல்லை; வக்ர:—வளைந்த; ஸ்யாத்—ஆகிறது; ப்ராயேண—பெரும்பாலும் எப்போதும்; அனுகூல:—மிகவும் சாதகமாக; ப்ராஹ்மண-குலஸ்ய—பிரபஞ்சத்திலுள்ள அந்தணர்களுக்கு.
செவ்வாய்க்கு மேல் 1,600,000 மைல்கள் தூரத்தில் அல்லது பூமிக்கு மேல் 10,400,000 மைல்கள் தூரத்தில் வியாழ கிரஹம் இருக்கின்றது. இக்கிரஹம் ஒரு இராசி வீட்டை ஒரு பரிவத்ஸரக் காலத்தில் கடந்து செல்கிறது. இதன் பயணம் வளைவாக இல்லாத போது, இப்பிரபஞ்சத்திலுள்ள அந்தணர்களுக்கு வியாழன் மிகுந்த நன்மை செய்கிறது.
பதம் 5.22.16
தத உபரிஷ்டாத் யோஜன-லக்ஷ த்வயாத் ப்ரதீயமான: ஸனைஸ்சர்
ஏகைகஸ்மின் ராஸௌ த்ரிம்ஸன் மாஸான் விலம்பமான: ஸர்வான்
ஏவானுபர்யேதி தாவத்பிர் அனுவத்ஸரை: ப்ராயேன ஹி ஸர்வேஷாம்
அஸாந்திகர:
தத:—அந்த (வியாழன்); உபரிஷ்டாத்—மேலே; யோஜன-லக்ஷ- த்வயாத்—1,600,000 மைல்கள் தூரத்தில்; ப்ரதீயமான:—இருக்கின்றது; ஸனைஸ்சர:—சனிக்கிரஹம்; ஏக-ஏகஸ்மின்—ஒன்றையடுத்து மற்றொன்று; ராஸௌ—இராசிகள்; த்ரிம்ஸத்-மாஸான்—ஒவ்வொன்றிலும் முப்பது மாதக் காலங்கள்; விலம்பமான:—மெதுவாக; ஸர்வான்—இராசி மண்டலத்திலுள்ள பன்னிரெண்டு இராசி வீடுகளிலும்; ஏவ—உறுதியாக; அனுபர்யேதி—கடந்து செல்கிறது; தாவத்பி:—பல; அனுவத்ஸரை:—அனுவத்ஸரங்கள்; ப்ராயேண—பெரும்பாலும் எப்போதும்; ஹி—உண்மையில்; ஸர்வேஷாம்—வசிப்பவர்கள் எல்லோர்க்கும்; அஸாந்திகர:—மிகுந்த துன்பம் செய்வதாகும்.
வியாழனுக்கு மேல் 1,600,000 மைல்கள் தூரத்தில் அல்லது பூமிக்கு மேல் 12,000,000 மைல்கள் தூரத்தில் சனி கிரஹம் இருக்கிறது. இது இராசிமண்டலத்திலுள்ள ஒரு இராசி வீட்டைக் கடப்பதற்கு முப்பது மாதங்கள் ஆகும். இராசி மண்டலம் முழுவதையும் முப்பது அனுவத்ஸங்களில் கடக்கின்றது. பிரபஞ்ச நிலைக்கு இக்கிரஹம் எப்போதும் மிக்க அமங்களமானதாகும்.
பதம் 5.22.17
தத உத்தரஸ்மாத் ருஷய ஏகாதஸ-லக்ஷ- யோஜனாந்தர உபலப்யந்தே
ய ஏவ லோகானாம் ஸம் அனுபாவயந்தோ பகவதோ விஷ்ணோர் யத்
பரமம் பதம் ப்ரதக்ஷினம் ப்ரக்ரமந்தி
தத:—சனிக்கிரஹம்; உத்தரஸ்மாத்—மேலே; ருஷய:—மாமுனிவர்கள்; ஏகாதஸ-லக்ஷ-யோஜன-அந்தரே—1,100,000 யோஜனங்கள் தூரத்தில்; உபலப்யந்தே—இருக்கின்றனர்; யே—அனைவரும்; ஏவ—உண்மையில்; லோகானாம்—பிரபஞ்சத்திலுள்ள அனைவருக்கும்; ஸம்—நல்யோகம்; அனுபாவயந்த:—எப்போதும் சிந்திக்கின்றனர்; பகவத:—முழுமுதற் கடவுளின்; விஷ்ணோ:—பகவான் விஷ்ணு; யத்—இது; பரமம்-பதம்—பரமபதம்; ப்ரதக்ஷிணம்—வலப்புறமாக இருந்து; ப்ரக்ரமந்தி—சுற்றுகின்றது.
சனிக்கிரஹத்திற்கு 8,800,000 மைல்கள் மேலாக அல்லது 20,800,000 மைல்கள் மேலாக சப்தரிஷிகள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் பிரபஞ்சத்திலுள்ளவர்களின் நன்மை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பகவான் விஷ்ணுவின் பரமபதமான துருவலோகம் என்னும் வடமீனை எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.
ஸ்ரீமத் பாகவதம், ஐந்தாம் காண்டத்தின் “கோளங்களின் பாதைகள்” எனும் தலைப்பை கொண்ட இருபத்தியிரண்டாம் அத்தியாயம் இவ்வாறு நிறைவு பெறுகின்றது.