அத்தியாயம் – 22
கோளங்களின் பாதைகள்
பதம் 5.22.1 : சுகதேவ கோஸ்வாமியிடம் பரீக்ஷித்து மன்னர் கேட்டார்: போற்றுதற்குரியப் பெருமானே, தாங்கள் ஏற்கனவே உயர்சக்தி வாய்ந்த சூரிய தேவன், அவருக்கு வலது புறத்தில் துருவ லோகம் மற்றும் சுமேருமலை இரண்டுடன், துருவ லோகத்தைச் சுற்றி பயணம் செய்கின்றார் என்றும் உண்மையினை உறுதி செய்திருக்கின்றீர்கள். ஆனால் அதே சமயம் சூரிய தேவனோ, இராசி மண்டலத்திலுள்ள இராசிகளை நோக்கிய வண்ணம் சுமேருமலை மற்றும் துருவ லோகத்தைத் தனது இடது புறத்தில் சுற்றிக்கொண்டிருக்கின்றார். அதனால் ஒரே சமயத்தில் இடது புறத்தில் கொண்டிருக்கின்றார். அதனால் ஒரே சமயத்தில் சூரிய தேவன் தனது இடது மற்றும் வலது புறத்தில் சுமேரு மற்றும் துருவலோகத்திற்குச் செல்லத் தொடங்குகிறது என்பதை எவ்வாறு எங்களால் ஏற்றுக் கொள்ள முடியும்?
பதம் 5.22.2 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி மிகத்தெளிவாகப் பதிலிறுத்தார்: குயவனின் சக்கரம் சுழலும்போது அதன் மீதிருக்கும் சிற்றெறும்புகளும் அதனோடு சேர்ந்து சுழல்கின்றன. அவற்றின் சுழற்சி சக்கரத்தின் சுழற்சியிலிருந்து ஒருவனுக்கு வேறுபட்டதாகத் தோன்றும் ஏனென்றால் அவை சிலசமயம் சக்கரத்தின் ஒரு பக்கத்திலும் சில சமயம் சக்கரத்தின் மறு பக்கத்திலும் தோன்றுகின்றன. அதுபோல் இராசிகளும், இராசி மண்டலங்களும் தமது வலது புறத்தில் சுமேரு மற்றும் துருவ லோகத்துடன் காலச் சக்கரத்தில் சுழல்கின்றன, அப்போது சிற்றெறும்பு போன்ற சூரியனும் பிற கிரஹங்களும் அவற்றுடன் சேர்ந்து சுழல்கின்றன. அதனால் சூரியனும் கிரஹங்களும் பல்வேறு காலங்களில் பல்வேறு இராசிகள் மற்றும் இராசி மண்டலங்களில் காணப்படுகின்றன. இது அவற்றின் இயக்கம் இராசி மண்டலத்திலிருந்தும் காலச் சக்கரத்திலிருந்தும் வேறுபாடுடையதாக இருக்கின்றது என்று குறிப்பிடுகின்றது.
பதம் 5.22.3 : பிரபஞ்சத் தோற்றத்திற்கு ஆதி காரணர் முழுமுதற் கடவுளான நாராயணரே ஆவார். வேத ஞானத்தில் முற்றும் தேர்ந்த மாமுனிவர்கள் பரமபுருஷ பகவானுக்குத் தமது பிரார்த்தனைகளை அர்ப்பணிக்கும் பொழுது அவர், எல்லா லோகங்களுக்கும் நன்மை செய்வதற்காகவும், பலன் தரும் செயல்களைத் தூய்மை செய்வதற்காகவும் பெளதீக உலகிற்கு சூரியன் வடிவத்தில் இறங்கிவிடுகின்றார். அவர் தன்னைப் பன்னிரெண்டு பிரிவுகளாகப் பிரித்து, வசந்த காலம் உள்ளிட்ட அனைத்துப் பருவகாலங்களையும் படைத்தார். இவ்வாறு அவர் குளிர், கோடை போன்ற பருவமாறுபாடுகளைப் படைத்தார்.
பதம் 5.22.4 : நான்கு வர்ணங்கள் மற்றும் நான்கு தர்மங்கள் முறைக்கேற்ப மக்கள் பொதுவாக முழுமுதற் கடவுளான நாராயணரை வழிபடுகின்றனர். அவர் சூரிய தேவனாக வீற்றிருக்கின்றார். இவர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் அக்னி ஹோத்திரம் போன்ற மூன்று வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சமயச் சடங்குகளுக்கேற்பவும், உயர்ந்த மற்றும் தாழ்ந்த பலன்தரும் செயல்களுக்கேற்பவும், யோக ஸித்திகளுக்கேற்பவும், முழுமுதற் கடவுளை, பரமாத்மாவாக வழிபடுகின்றனர். இவ்வாறு அவர்கள் மிகவும் எளிதாக வாழ்வின் உடல் இலட்சியத்தினை அடைகின்றனர்.
பதம் 5.22.5 : எல்லா உலகங்களுக்கும் ஆத்மாவாக விளங்கும் நாராயணர் அல்லது கிருஷ்ணர் என்னும் சூரிய தேவன் பிரபஞ்சத்தின் மேல் கீழ் பாகங்களுக்கு இடையில் விண்வெளியில் இருக்கின்றார். காலச்சக்கரத்தில் பன்னிரெண்டு மாதங்களைக் கடந்து சூரியன் இராசி மண்டலத்திலுள்ள பன்னிரெண்டு இராசிகளுடன் தொடர்பு கொண்டு, அந்த இராசிகளுக்கேற்ப பல்வேறு பெயர்களைப் பெறுகிறார். இப்பன்னிரெண்டு மாதங்கள் சேர்ந்து ஒரு சம்வத்ஸரம் அல்லது ஒரு வருடம் ஆகும். சந்திரனின் கணக்கின்படி இரண்டு இருவாரங்கள் வளர்பிறை, மற்றும் தேய்பிறை சேர்ந்து ஒரு மாதத்தினை உண்டாக்குகின்றன. இதே கால அளவு பித்ருலோகத்தில் ஒரு பகல் மற்றும் ஒர் இரவு ஆகும். நட்சத்திரக் கணக்கின்படி ஒருமாதம் என்பது இரண்டேகால் நட்சத்திரக் கூட்டத்திற்குச் சமமாகும். சூரியன் இரண்டு மாதங்கள் பயணம் செய்தால் ஒரு பருவகாலம் முடிகிறது. அதனால் பருவகால மாற்றங்கள் வருடம் என்னும் உடலின் பாகங்களாகக் கருதப்படுகின்றன.
பதம் 5.22.6 : இவ்வாறு சூரியன் விண்வெளியின் பாதியில் சுழல எடுக்கும் நேரத்தை அயனா அல்லது அதன் இயக்க காலம் [வடக்கில் அல்லது தெற்கில்] என்று அழைக்கப்படுகிறது.
பதம் 5.22.7 : சூரிய தேவனிடம் மூன்று வேகங்கள் உள்ளன. அவை மெதுவாக, வேகமாக, சமமாகச் செல்வதாகும். சூரியன் மேலுலகம், பூமி, விண்வெளி முழுவதையும் கடந்து செல்வதற்குப் பயன்படுத்தும் மூன்று வேகங்களும் கற்றறிந்த அறிஞர்களால் சம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடாவத்ஸரம், அனுவத்ஸரம், வத்ஸரம் என்னும் ஐந்து பெயர்களினால் குறிப்பிடப்படுகின்றன.
பதம் 5.22.8 : சூரிய ஒளிக்கதிர்களுக்கு மேலாக 100,000 யோஜனங்கள் தூரத்தில் (800,000 மைல்கள்) சந்திரன் இருக்கின்றது. அது சூரியன் செல்லும் வேகத்தைவிட அதிவேகத்தில் பயணம் செய்கின்றது. சந்திர பட்சங்கள் இரண்டில் (சுக்கில பட்சம், கிருஷ்ண பட்சம்) சந்திரன், சூரியனின் ஒரு சம்வத்ஸரத்திற்கு இணையாகப் பயணம் செய்கின்றது. இரண்டேகால் நாட்களில் அது சூரியனின் ஒரு மாதத்தைக் கடந்து செல்கிறது. ஒரு நாளில் அது சூரியனின் இரு வாரங்களைக் கடந்து செல்கின்றது.
பதம் 5.22.9 : சந்திரன் வளரும் பொழுது ஒளிர்கின்ற அதன் கலைகள் தினமும் வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இதன்மூலம் அது தேவர்களுக்குப் பகலையும், பிதாக்களுக்கு இரவையும் உண்டாக்குகின்றது. அதன் கலைகள் தேயும் பொழுது தேவர்களின் இரவுக்கும், பிதாக்களின் பகலுக்கும் அது காரணமாகின்றது. இவ்வாறு சந்திரனின் ஒவ்வொரு நட்சத்திரக் கூட்டங்களையும் முப்பது முகூர்த்தங்களில் கடந்து செல்கின்றது ஒரு நாள் முழுவதும். அமிர்தம் போன்ற குளிர்ந்த ஒளிக்குச் சந்திரனே ஆதாரமாகும். அதுவே உணவு தானியங்களின் வளர்ச்சிக்குப் பெரிதும் துணை புரிகின்றது. அதனால் சந்திரதேவன் அனைத்து உயிர்வாழிகளின் ஜீவனாகக் கருதப்படுகிறான். இதனைத் தொடர்ந்து அவர் உயிர்வாழிகளின் தலைவன் என்னும் பொருளில் ஜீவன் என்றழைக்கப்படுகின்றான்.
பதம் 5.22.10 : அனைத்துச் சக்திகளும் நிறைந்ததாக சந்திரன் இருக்கின்ற காரணத்தினால் அது முழுமுதற் கடவுளின் செல்வாக்கிற்குப் பிரநிதியாக விளங்குகின்றது. சந்திரனே அனைவரின் மனதிற்கும் ஆதிபத்தியத் தெய்வமாவார், அதனால் சந்திரதேவன் மனோமயன் என்றழைக்கப்படுகின்றார். அவர் அன்னமயன் என்றும் அழைக்கப்படுகின்றார் காரணம் அனைத்து மரம் செடிகளுக்கும் அவரே சக்தி அளிக்கின்றார். அவர் அமிர்தமயன் என்றும் அழைக்கப்படுகின்றார். ஏனென்றால் அவர் அனைத்து உயிர்வாழிகளின் உயிருக்கும் ஆதாரமாக விளங்குகின்றார். சந்திரன் தேவர்கள், பிதாக்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், ஊர்வன, மரம், செடி, கொடிகள் போன்ற எல்லா உயிர்வாழிகளுக்கும் மகிழ்ச்சியளிக்கிறார். சந்திர தரிசனத்தினால் அனைவரும் திருப்தியடைகின்றனர். அதனால் சந்திரன் சர்வமயன் (எங்கும் நிறைந்திருப்பவர்) என்றழைக்கப்படுகின்றார்.
பதம் 5.22.11 : ஏராளமான நட்சத்திரங்கள் சந்திரனுக்கு மேலே 200,000 யோஜனங்கள் (1,600,000 மைல்கள்) தூரத்தில் இருக்கின்றன. முழுமுதற் கடவுளின் பரம விருப்பத்தின் பேரில் அவை காலச்சக்கரத்துடன் பொருத்தப்பட்டிருக்கின்றன. இவ்வாறு அவை தமக்கு வலது புறத்தில் சுமேரு மலையுடன் சேர்ந்து சுழல்கின்றன. இவற்றின் அசைவு சூரியனிலிருந்து வேறுபாடுடையதாகும். அபிஜித் என்னும் நட்சத்திரத்தின் தலைமையின்கீழ் இருபத்தியெட்டு முக்கியமான நட்சத்திரங்கள் உள்ளன.
பதம் 5.22.12 : இந்நட்சத்திரக் கூட்டங்களுக்கு மேலே 1,600,000 மைல்கள் தூரத்தில் சுக்கிரன் என்னும் கிரஹம் உள்ளது இது பெரும்பாலும் அதே இடைவெளியில் சூரியனைப் போன்று வேகமாகவும், மெதுவாகவும், சமமாகவும் செல்கின்றது. சிலசமயம் சூரியனுக்குப் பின்புறம், சில சமயம் சூரியனுடன் சேர்ந்தும் செல்கின்றது. மழை பெய்வதற்குத் தடையாக இருக்கும் கிரஹங்களின் பாதிப்பினை சுக்கிரன் பயனற்றுப் போகச் செய்கின்றது. இதனைத் தொடர்ந்து அதன் வரவு மழைக்குக் காரணமாகிறது அதனால் அது இப்பிரபஞ்சத்திலுள்ள உயிர்வாழிகள் அனைத்திற்கும் மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகின்றது. இது கற்றறிந்த அறிஞர்களால் ஒத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றது.
பதம் 5.22.13 : புதனும் இங்கே சுக்கிரன் போலவே விளக்கப்படுகிறது. இக்கிரஹமும் சிலசமயம் சூரியனுக்குப் பின்புறமும், சில சமயம் சூரியனுக்கு முன்புறமும், சிலசமயம் சூரியனுடன் சேர்ந்தும் செல்கின்றது. இது 1,600,000 மைல்கள் சுக்கிரனுக்கு மேலே இருக்கின்றது. அல்லது 7,200,000 மைல்கள் பூமிக்கு மேலே இருக்கின்றது. சந்திரனின் புதல்வனான புதன் பெரும்பாலும் இப்பிரபஞ்சத்தில் உள்ளோர்க்கு எப்போதும் மங்களம் நிறைந்தவரே ஆவார். இது சூரியனுடன் சேர்ந்து செல்லாத காலங்களில் புயல், புழுதிக்காற்று, ஒழுங்கற்ற மழை, நீரில்லாத மேகம் போன்ற தீ நிமித்தங்களைக் காட்டும். இவ்வாறு இக்கிரஹம், தேவைக்குக் குறைவான, அல்லது அதிகமான மழையின் மூலம் அச்சந்தரும் சூழ்நிலையினை உருவாக்குகின்றது.
பதம் 5.22.14 : 1,600,000 மைல்கள் புதனுக்கு மேல் அல்லது 8,800,000 மைல்கள் பூமிக்கு மேலே செவ்வாய் கிரஹம் இருக்கின்றது. இக்கிரஹம் வளைந்த பாதையில் பயணம் செய்யவில்லையென்றால், இது இராசி மண்டலத்திலுள்ள ஒவ்வொரு இராசி வீட்டையும் மூன்று வாரங்களில் கடந்து செல்லும். இவ்வாறு இது பன்னிரெண்டு இராசி வீடுகளையும் ஒன்றன் பின் ஒன்றாகக் கடந்து செல்கின்றது. மழை மற்றும் பிற பாதிப்புகளினால் இது எப்போதும் பாதகமானச் சூழ்நிலைகளையே உருவாக்குகின்றது.
பதம் 5.22.15 : செவ்வாய்க்கு மேல் 1,600,000 மைல்கள் தூரத்தில் அல்லது பூமிக்கு மேல் 10,400,000 மைல்கள் தூரத்தில் வியாழ கிரஹம் இருக்கின்றது. இக்கிரஹம் ஒரு இராசி வீட்டை ஒரு பரிவத்ஸரக் காலத்தில் கடந்து செல்கிறது. இதன் பயணம் வளைவாக இல்லாத போது, இப்பிரபஞ்சத்திலுள்ள அந்தணர்களுக்கு வியாழன் மிகுந்த நன்மை செய்கிறது.
பதம் 5.22.16 : வியாழனுக்கு மேல் 1,600,000 மைல்கள் தூரத்தில் அல்லது பூமிக்கு மேல் 12,000,000 மைல்கள் தூரத்தில் சனி கிரஹம் இருக்கிறது. இது இராசிமண்டலத்திலுள்ள ஒரு இராசி வீட்டைக் கடப்பதற்கு முப்பது மாதங்கள் ஆகும். இராசி மண்டலம் முழுவதையும் முப்பது அனுவத்ஸங்களில் கடக்கின்றது. பிரபஞ்ச நிலைக்கு இக்கிரஹம் எப்போதும் மிக்க அமங்களமானதாகும்.
பதம் 5.22.17 : சனிக்கிரஹத்திற்கு 8,800,000 மைல்கள் மேலாக அல்லது 20,800,000 மைல்கள் மேலாக சப்தரிஷிகள் இருக்கின்றனர். அவர்கள் எப்போதும் பிரபஞ்சத்திலுள்ளவர்களின் நன்மை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பகவான் விஷ்ணுவின் பரமபதமான துருவலோகம் என்னும் வடமீனை எப்போதும் சுற்றிக் கொண்டிருக்கின்றனர்.