அத்தியாயம் – 20
பிரபஞ்சத்தின் கட்டமைப்புப் பற்றிய ஆய்வு
பதம் 5.20.1 : மாமுனிவர் சுகதேவ கோஸ்வாமி கூறினார்: இதன் பின்னர் நான் பிலக்ஷத்தீவு தொடங்கி உள்ள ஆறு தீவுகளின் முப்பரிமாணம் தன்மை மற்றும் வடிவங்களைப் பற்றி விளக்குவேன்.
பதம் 5.20.2 : சுமேரு மலை ஜம்புத்வீபத்தினால் சூழப்பட்டிருக்கிறது. ஜம்புத் தீபமோ உப்பு நீர்க்கடலினால் சூழப்பட்டிருக்கிறது. ஜம்புத் தீபத்தின் அகலம் 100,000 யோஜனங்கள் ஆகும். (800.000 மைல்கள்) உப்பு நீர்க்கடலின் அகலமும்கூட அதே அளவேயாகும். ஒரு கோட்டையின் மதிலைச் சுற்றியிருக்கும் அகழி சில சமயம் நந்தவனம் போன்ற காட்டினால் சூழப்பட்டிருப்பது போல் ஜம்புத்வீபத்தைச் சுற்றியிருக்கும் உப்பு நீர்க்கடல் பிலக்ஷத்வீபத்தினால் சூழப்பட்டிருக்கிறது. பிலக்ஷத்வீபத்தின் அகலம் உப்புநீர்க்கடலைப் போல் இருமடங்கு பெரியதாகும்— அதாவது 200,000 யோஜனங்களாகும் (1,600,000 மைல்கள்) பிலக்ஷத்வீபத்தில் ஒரு மரம் தங்கத்தைப் போன்று ஒளியுடையதாகவும் ஜம்புத்வீபத்திலுள்ள ஜம்பூ மரத்தைப் போல் உயரமுடையதாகவும் உள்ளது. அதன் வேர் ஏழு ஜீவாலைகளையுடைய அக்கினியாகும். இம்மரம் பிலக்ஷ மரம் ஆதலினால் இத்தீவு பிலக்ஷத்வீபம் என்றழைக்கப்படுகிறது. பிலக்ஷத்வீபத்திற்கு மகாராஜா பிரியவிரதனின் மைந்தர்களுள் ஒருவரான இத்மஜிஹ்வன் என்பவர் அதிபதியாவார். அவர் ஏழு தீவுகளுக்கும் தனது ஏழு மைந்தர்களின் பெயர்களையேச் சூட்டினார். பின்னர் அவர் பகவானின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதற்காக அன்றாட வாழ்விலிருந்து ஒய்வு பெற்றார்.
பதங்கள் 5.20.3 – 5.20.4 :அந்த எழு தீவுகளும் (வர்ஷங்கள்) அவர்தம் ஏழு மைந்தர்களின் பெயர்களைக் கொண்டிருந்தன சிவன், யவஸன், சுபத்திரன், சாந்தன், க்ஷேமன், அம்ருதன், அபயன், அந்த ஏழு நிலப்பகுதிகளிலும் ஏழ மலைகள் மற்றும் ஏழு நதிகள் இருக்கின்றன. அம்மலைகளின் பெயர்கள் மணி கூடம், வஜ்ரகூடம், இந்திர சேனம், ஜோதிஷ்மான், சுபர்ணம், இரண்யஷ்தீவம், மேகமாலம் ஆகும். அந்நதிகளின் பெயர்கள் அருணா, நிரும்ணா, ஆங்கிரஸீ, சாவித்திரி, சுப்தபாதா, ருதம்பரா, சத்யம்பரா ஆகும். அந்நதிகளின் நீரைத் தொட்டாலோ அல்லது நீராடினாலோ ஒருவன் உடனடியாக பௌதிக மாசுக்களில் இருந்து விடுதலை பெறுவான். மேலும் பிலக்ஷத்வீபத்தில் ஹம்ஸர்கள், பதங்கர்கள், ஊர்த்வாயனர்கள், சத்யாங்கர்கள் என்று நான்கு மக்கட் பிரிவுகள் உள்ளன. இவர்கள் இவ்வழியேத் தம்மைத் தூய்மை செய்து கொள்கின்றனர். பிலக்ஷத்வீப வாசிகள் ஓராயிரம் ஆண்டுகள் ஆயுளுடையவர் ஆவர். அவர்கள் தேவர்களைப் போன்று எழில் மிக்கவர்கள் ஆவர். ஆதலினால் அவர்கள் தேவர்களைப் போன்ற குழந்தைகளைப் பெற்றிருக்கின்றனர். வேதங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் சமயச் சடங்குகளைச் செய்வதினாலும் சூரிய தேவனால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் முழுமுதற் கடவுளை வழிபடுவதினாலும் அவர்கள் மேலுலகமான சூரிய லோகத்தை அடைகின்றனர்.
பதம் 5.20.5 : (பிலக்ஷத்வீபத்தைச் சேர்ந்தவர்கள் இம்மந்திரத்தினாலேயே பரமபுருஷ பகவானை வழிபடுகின்றனர்) எல்லோருக்கும் ஆதியானவரும், எங்கும் பரந்திருக்கும் முழுமுதற் கடவுளுமான பகவான் விஷ்ணுவின் பிரதிபிம்பமாகத் திகழும் சூரிய தேவனை நாம் சரணடைவோமாக வணங்கத்தக்கப் பகவான் விஷ்ணுவே ஆவார். வேதமும் அவரே, தர்மமும் அவரே. புண்ணிய மற்றும் பாவச் செயல்களின் பலன்கள் அனைத்திற்கும் அவரே ஆதாரமானவர்.
பதம் 5.20.6 : ஓ மன்னனே, நீண்ட ஆயுள், புலன்களின் ஆற்றல், புத்தி பலம், உடல் பலம், வீரதீரம், போன்ற அனைத்துத் தன்மைகளும் பிலக்ஷத்தீவு மற்றும் அதன் தலைமையின் கீழ் உள்ள அனைத்துத் தீவுகளில் வாழ்பவர்களிடமும் இயற்கையாகவும் சமமாகவும் அமையப்பெற்றிருந்தன.
பதம் 5.20.7 : பிலக்ஷத்வீபம் அதன் அகலத்திற்கு இணையான அளவுடைய கரும்புச் சாறுக் கடலினால் குழப்பட்டிருக்கிறது. அதுபோல் மற்றொரு தீவான சால்மலத்வீபம் பிலக்ஷத்விபத்தைப்போல் இரு மடங்கு (400,000 போஜனம் அல்லது 3,200,000 மைல்கள்) அகலமுடையதாகும். மேலும் இத்தீவு மதுவின் சுவையுடைய நீரினால் நிரம்பப்பெற்றிருக்கும் சுராசாகரம் என்னும் அகன்று விரிந்த கடலினால் சூழப்பட்டிருக்கிறது.
பதம் 5.20.8 : சால்மலீத்வீபத்தில் சால்மலீ என்றொரு மரம் இருக்கிறது. இம்மரத்தின் பெயரினாலேயே இத்தீவு அழைக்கப்படுகின்றது. இம்மரம் பிலக்ஷ மரத்தைப்போன்று அகலமும் உயரமும் உடையதாகும். அதாவது 100 யோஜனங்கள் (800 மைல்கள்) அகலமும் 1,100 யோஜனங்கள் (8,800 மைல்கள்) உயரமும் உடையதாகும். கற்றறிந்த அறிஞர்கள், இப்பெரிய மரத்தில் பகவான் விஷ்ணுவின் வாகனமும், பறவைகளின் அரசருமான கருடன் வசிப்பதாகக் கூறுகின்றனர். இம்மரத்தில் கருடன் பகவான் விஷ்ணுவை வேத மந்திரங்களினால் வழிபடுகிறார்.
பதம் 5.20.9 : சால்மலீத்வீபத்தின் தலைவரும், மகாராஜா பிரியவிரதனின் மைந்தனுமான யக்ஞபாகு என்பவர் இத்தீவை ஏழு பகுதிகளாகப் பிரித்து அவற்றைத் தமது ஏழு புதல்வர்களுக்கு அளித்தார். ஏழு மைந்தர்களின் பெயரைக் கொண்டே அவ்வேழு நிலப்பகுதிகளும் வழங்கப்பட்டன. அவை சுரோசனம், சௌமனஸ்யம், இரமணகம், தேவ வர்ஷம், பாரிபத்ரம், ஆப்யாயனம் மற்றும் அவிக்ஞாதம் ஆகும்.
பதம் 5.20.10 : அந்நிலப்பகுதிகளில் சுவர்ஸம், சதஸ்ருங்கம். வாமதேவம், குந்தம், முகுந்தம். புஷ்ப வர்ஷம், சகஸ்ரஸ்ரருதி என்று ஏழு மலைகள் இருக்கின்றன. மேலும் அங்கே அனுமதி சினீவாலீ, சரஸ்வதி, குஹு, ரஜனீ, நந்தா, ராகா என்று ஏழு நதிகளும் இருக்கின்றன. அவை இப்போதும் ஒடிக்கொண்டிருக்கின்றன.
பதம் 5.20.11 : அந்நிலப்பகுதிகளில் வாழும் ஸ்ருதிதரர்கள், வீர்யதரர்கள், வசுந்தரர்கள், இஷந்தாரர்கள் என்றறியப்படுவோர் வர்ணாஸ்ரம தர்மம் கோட்பாட்டினை மிகவும் கடுமையாகப் பின்பற்றி முழுமுதற் கடவுளின் அம்ச விரிவான சந்திரதேவன் சோமனை வழிபடுகின்றனர்.
பதம் 5.20.12 : (சாலமலீத் வீபத்தில் வாழ்பவர்கள் சந்திரதேவனைப் பின்வரும் வார்த்தைகளினால் வழிபடுகின்றனர்) அவரது சுய ஒளிக்கதிர்களினால் சந்திர தேவன் பிதாக்கள் மற்றும் தேவர்களுக்கு உணவு தானியங்களை வழங்குவதற்காக ஒரு மாதத்தினை இருவாரங்கள் சுக்கிலபட்சம் என்றும் இருவாரங்கள் கிருஷ்ணபட்சம் என்றும் பிரித்திருக்கின்றார். சந்திரதேவனே காலத்தைப் பிரிக்கின்றார். அவரே இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைவர்க்கும் அரசர் ஆவார். ஆகவே அவர் நம்மை ஆள்பவராகவும், நமக்கு வழிகாட்டியாகவும் இருக்க வேண்டுமென்று பிரார்த்தித்து, நமது மரியாதைக்குரிய வந்தனங்களை அவருக்கு அர்ப்பணிப்போமாக.
பதம் 5.20.13 : மதுக்கடலுக்கு வெளியே குசத்வீபம் என்று மற்றொரு தீவு இருக்கிறது. இத்தீவு 800,000 யோஜனங்கள் (6,400,000 மைல்கள்) அகலமுடையதாகும். இவ்வகலம் மதுக்கடலைப் போல் இருமடங்கு பெரிதாகும். சால்மலீத்வீபம் மதுக்கடலினால் சூழப்பட்டிருப்பது போல், குசத்வீபம், அதற்கு இணையான அகலமுடைய நெய்க்கடலினால் சூழப்பட்டிருக்கின்றன. இப்புற்களின் பெயரிலேயே இத்தீவு அழைக்கப்படுகின்றன. முழுமுதற் கடவுளின் விருப்பத்தின் பேரில் தேவர்களால் படைக்கப்பட்ட குசப்புற்கள் அக்கினியின் இரண்டாவது வடிவம்போல் தோன்றுகின்றது. ஆயினும் இவை மெல்லிய இனிமையான சுடர் ஒளியாகும் இதன் இளம் குருத்துக்கள் எல்லாத் திசைகளிலும் ஒளிவீசுகிறது.
பதம் 5.20.14 : ஒ, மன்னனே, மகாராஜா பிரியவிரதனின் மற்றொரு மைந்தனான இரண்யரேதான் என்பவன் இத்தீவின் அரசன் ஆவார். அவர் இத்தீவை ஏழு பாகங்களாகப் பிரித்து அவற்றைத் தமது மைந்தர்களின் மரபு உரிமைக்கேற்ப அவர்களுக்கு அளித்தார். அரசர் பின்னர் தவத்தில் ஈடுபடுவதற்காக இல்லற வாழ்விலிருந்து ஒய்வுபெற்றார். அவரது மைந்தர்களின் பெயர்கள் வசு, வசுதானன், திருடருசி, ஸ்துத்யவ்ரதன், நாபிகுப்தன், விவிக்தன், வாமதேவன் என்பவையாகும்.
பதம் 5.20.15 : அந்த எழு தீவுகளின் எல்லைகளாகச் சக்கரம், சது:ஸ்ருங்கம், கபிலம், சித்திரகூடம், தேவானீகம், ஊர்த்வரோமா மற்றும் திரவிணம் என்று ஏழு மலைகள் இருக்கின்றன. மேலும் இங்கு இரமகுல்யா, மதுகுல்யா, மித்ரவிந்தா, ஸ்ருதவிந்தா, தேவகர்பா, க்ருதச்யுதா, மந்திரமாலா என்று ஏழு நதிகள் ஒடுகின்றன.
பதம் 5.20.16 : குசத்வீபத்தில் வாழ்பவர்கள் குசலர்கள், கோவிந்தர்கள், அபியுக்தர்கள், குலகர்கள் என்று போற்றப்படுகின்றனர். அவர்கள் அந்தணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் ஆவார். அந்நதிகளில் நீராடுவதினால் அவர்கள் அனைவரும் தூய்மையடைகின்றனர். வேத சாத்திரங்களின் கட்டளைக்கேற்ப சமயச்சடங்குகளைச் செய்வதில் இவர்கள் தேர்ந்தவர்கள் ஆவார். அவ்வாறு அவர்கள் முழுமுதற் கடவுளை அக்கினிதேவன் வடிவில் வழிபடுகின்றனர்.
பதம் 5.20.17 : (இம்மந்திரங்களினாலேயே குசத்வீபத்தைச் சேர்ந்தவர்கள் அக்கினி தேவனை வழிபடுகின்றர்) ஒ, அக்கினி தேவனே, நீர் முழுமுதற் கடவுளான ஹரியின் அங்கத்தின் ஒருபாகமாவீர். மேலும் வேள்விகளில் அர்ப்பணிக்கப்படுபவற்றை நீரே முழுமுதற் கடவுளிடம் எடுத்துச் செல்லுகின்றீர். ஆகையினால் வேள்விகளில் தேவர்களுக்கு நாங்கள் அர்ப்பணிக்கும் பொருட்களை நீர் முழுமுதற் கடவுளிடம் எடுத்து செல்வீராக, ஏனெனில் பகவானே வேள்விகளின் பலன்களை உண்மையில் அனுபவிப்பவர் ஆவர்.
பதம் 5.20.18 : நெய்க்கடலுக்கு வெளியே கிரௌஞ்சத்வீபம் என்று மற்றொரு தீவு இருக்கிறது. இதன் அகலம் 1,600,000 யோஜனங்கள் (12,800,000 மைல்கள்) உடையதாகும் அதாவது நெய்க்கடலைப்போல் இருமடங்கு பெரிதாகும். குசத்வீபம் எவ்வாறு நெய்க்கடலினால் சூழப்பட்டிருக்கிறதோ அதுபோல் கிரௌஞ்சத்வீபம் அத்தீவின் பரப்பளவைப் போன்று பாற்கடலினால் சூழப்பட்டிருக்கின்றது. கிரௌஞ்சத்வீபத்தில் கிரௌஞ்சம் என்றொரு மலை இருக்கிறது. இமயமலையின் பெயரிலேயே அத்தீவு அழைக்கப்படுகின்றது.
பதம் 5.20.19 : கிரௌஞ்ச மலையில் இருந்த மரம், செடி, கொடிகள் அனைத்தும் கார்த்திகேயனின் ஆயுதங்களினால் அழிக்கப்பட்டபோதிலும்கூட அம்மலை அச்சமற்றிருந்தது காரணம் அம்மலை எப்போதும் பாற்கடலினால் சூழப்பட்டு வருணபகவானால் பாதுகாக்கப்படுகிறது.
பதம் 5.20.20 : இத்தீவின் அரசர் மகாராஜா பிரியவிரதனின் மற்றொரு மைந்தன் ஆவார். அவரது பெயர் கிருதப்பிருஷ்டன் என்பதாகும். அவர் கற்றறிந்த அறிஞர் ஆவார். அவர் தனக்குச் சொந்தமானத் தீவைத் தனது ஏழு மைந்தர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். இவ்வாறு அத்தீவை ஏழு பகுதிகளாகப் பிரித்து தனது மைந்தர்களின் பெயர்களை அப்பகுதிகளுக்கு இட்டப்பிறகு கிருதப்ருஷ்ட மகாராஜா இல்வாழ்க்கையிலிருந்து ஓய்வு பெற்று ஆத்மாக்கள் அனைத்திற்கும் ஆத்மாவாகவும், பரம கல்யாண குணங்களையுடையவருமானப் பகவானின் திருவடித்தாமரைகளைச் சரணடைத்தார். இவ்வாறு அவர் நிறைவுநிலை எய்தினார்.
பதம் 5.20.21 : மகாராஜா கிருதப்ருஷ்டனின் மைந்தர்கள் ஆமன், மதுருஹன் மேகப்ருஷ்டன், சுதாமா, பிரஜிஷ்டன், லோஹிதார்ணன், வனஸ்பதி என்போராவர். இவர்களின் தீவில் ஏழு மலைகள் எல்லைகளாக விளங்குகின்றன. மேலும் அங்கு ஏழு நதிகளும் இருக்கின்றன. அம்மலைகளின் பெயர்கள் சுக்கிலம், வர்தமானம், போஜனம், உபபர்ஹிணம், நந்தம், நந்தனம், சர்வதோபத்திரம் ஆகும். அங்கு பாயும் நதிகள் பெயர்கள் அபயா, அம்ருதௌகா, ஆர்யகா, தீர்த்தவதீ, ரூபவதி, பவித்ரவதீ மற்றும் சுக்லா ஆகும்.
பதம் 5.20.22 : கிரௌஞ்சத்வீபத்தில் வாழ்பவர்கள் புருஷர்கள், ரிஷபர்கள், திரவிணர்கள், தேவகர்கள் என்று நான்கு பிரிவினராக அழைக்கப்படுகின்றனர். அப்புனித நதிகளைப் பயன்படுத்தி அவர்கள் தங்கள் உள்ளங்கை நிறைய நீரை எடுத்து அதனை நீரின் வடிவமாக விளங்கும் வருண பகவானின் தாமரைத் திருவடிகளுக்கு அர்ப்பணிப்பதின் மூலம் முழுமுதற் கடவுளை வழிபடுகின்றனர்.
பதம் 5.20.23 : (கிரௌஞ்சத்வீபத்தைச் சேர்ந்தவர்கள் இம்மந்திரங்களைக் கூறி வழிபடுகின்றனர்) ஒ, நதிகளில் உள்ள நீரின் வடிவமாக விளங்குபவரே நீர் உமக்கான சக்தியை முழுமுதற் கடவுளிடமிருந்து பெறுகின்றீர். ஆகையினால் நீர் பூலோகம், புவர்லோகம், சுவர்லோகம் மூன்றினையும் தூய்மை செய்கின்றீர். உமது சட்டப்பூர்வமானத் தன்மையினால் நீர் பாவங்களை நீக்குகின்றீர். இதன் காரணமாகவே உம்மை நாங்கள் தொழுகின்றோம். அருள்கூர்ந்து எம்மைத் தூய்மை செய்வதைத் தொடர்வீராக.
பதம் 5.20.24 : பாற்கடலுக்கு வெளியே சாகத்வீபம் என்றொரு தீவு இருக்கிறது. இதன் அகலம் 3,200,000 யோஜனங்கள் (25,600,000 மைல்கள்) ஆகும். கிரௌஞ்சத்வீபம் அதன் பாற்கடலினால் சூழப்பட்டிருப்பது போல் சாகத்வீபம், அத்தீவின் பரப்பளவுள்ள தயிர்க்கடலினால் சூழப்பட்டிருக்கிறது. சாகத்வீபத்தில் ஒரு பெரிய சாகமரம் உள்ளது. இதன் பெயரிலேயே இத்தீவு அழைக்கப்படுகிறது. இம்மரம் மிகுந்த நறுமணம் உடையதாகும். உண்மையில் இம்மரம் தனது நறுமணத்தினை இத்தீவு முழுவதும் பரப்புகின்றது.
பதம் 5.20.25 : இத்தீவின் அரசர் பிரியவிரதனின் மைந்தர்களுள் ஒருவரான மேதாதிதி என்பவர் ஆவார். இவரும் கூட இத்தீவை ஏழு பகுதிகளாகப் பிரித்து அவற்றிற்குத் தன் மைந்தர்களின் பெயர்களை இட்டு, தனது மைந்தர்களையே அவற்றிற்கு அரசர்களாகவும் ஆக்கினார். அம்மைந்தர்களின் பெயர்கள் புரோஜவன், மனோஜவன், பவமானன், தூம்ரானீகன், சித்திரரேபன், பஹுரூபன், விஸ்வதாரன் என்பவையாகும். இத்தீவினைப் பிரித்துத் தனது மைந்தர்களை அவற்றிற்கு அரசர்களாக்கிய பின்னர் மேதாதிதி ஓய்வுபெற்று தனது மனதினை முழுமுதற் கடவுளின் திருவடித் தாமரைகளில் நிலை நிறுத்துவதற்காகத் தபோவனம் சென்றார்.
பதம் 5.20.26 : இத்தீவிலும் கூட எல்லைக்கோடுகளாக ஏழு மலைகளும் மற்றும் ஏழு நதிகளும் இருக்கின்றன. அம்மலைகள் ஈஸானம், உருஸ்ருங்கம், பலபத்ரம், சதகேஸரம், தேவபாலம், மஹானஸம் ஆகும். அந்நதிகள் அனகா, ஆயுர்தா, உபயஸ்ப்ருஷ்டி, அபராஜிதா, பஞ்சபதீஷ், சகஸ்ரஸ்ருதி மற்றும் நிஜத்ருதி போன்றவையாகும்.
பதம் 5.20.27 : இத்தீவுகளில் வாழ்பவர்கள் ரிதவிரதர்கள், சத்தியவிரதர்கள், தானவிரதர்கள், அனுவிரதர்கள் என்னும் நான்கு பிரிவினர் ஆவர். இப்பிரிவுகள் உண்மையில் அந்தண, சத்திரிய, வைசிய, சூத்திரப் பிரிவுகள் போன்றவையாகும். இவர்கள் பிராணாயாமம், யோகஸித்தி போன்றவைகளைப் பயிற்சி செய்கின்றனர். மேலும் அவர்கள் முழுமுதற் கடவுளை வாயுபகவான் வடிவில் சமாதி நிலையில் வழிபடுகின்றனர்.
பதம் 5.20.28 : (சாகத்வீபத்தைச் சேர்ந்தவர்கள் முழுமுதற் கடவுளை வாயுபகவான் வடிவில் பின்வரும் வார்த்தைகளினால் வழிபடுகின்றனர்) ஒ பரமாத்வாக உடலினுள் வீற்றிருக்கும் பரமபுருஷரே, பிராணன் போன்ற பல்வேறு காற்றுக்களை இயக்குவதின் மூலம் நீர் உயிர்வாழிகள் அனைவரையும் காக்கின்றீர்; ஒ பகவானே, ஒ, அனைவரிடத்தும் உள்ள பரமாத்மாவே, எல்லாவற்றையும் தன்னிடமிருந்து வெளிப்படுத்தும் பிரபஞ்சத் தோற்றத்தினைக் கட்டுப்படுத்துபவரே, எங்களை எல்லாவிதமான ஆபத்துக்களிலும் இருந்து காத்து அருள்புரிவீராக.
பதம் 5.20.29 : தயிர்க்கடலுக்கு வெளியே புஷ்கரத்வீபம் என்றொரு தீவு இருக்கின்றது. இத்தீவு 6,400,000 யோஜனங்கள் (51,200,000 மைல்கள்) அகலமுடையதாகும். அதாவது தயிர்கடலைப்போல் இரு மடங்கு பெரியதாகும். இத்தீவு, தனது அளவுடைய இனிமையான சுவை நீர்க்கடலினால் சூழப்பட்டிருக்கின்றது. புஷ்கரத்வீபத்தில் தீப்பிழம்புகளைப் போல் மின்னும் 100,000,000 தங்க இதழ்களையுடையத் தாமரை மலர் ஒன்று இருக்கின்றது. இம்மலர், சிறப்பிற்குரிய பிரம்ம தேவனின் இருப்பிடமாகக் கருதப்படுகின்றது. அவர் மிகச் சக்தி வாய்ந்த உயிர்வாழியாக விளங்கி அதனால் சிலசமயம் பகவான் என்றழைக்கப்படுகிறார்.
பதம் 5.20.30 : இத்தீவின் நடுவில் மானஸோத்தரம் என்று ஒரு பெரிய மலை இருக்கின்றது. இம்மலையே இத்தீவின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்திற்கு இடையே ஒரு எல்லைக்கோடாக விளங்குகிறது. இதன் அகலமும் உயரமும் 10,000 யோஜனங்கள் (80,000 மைல்கள்) ஆகும். இம்மலையின் உச்சியில் நான்கு திசைகளிலும் இந்திரன் போன்ற தேவர்களின் இருப்பிடங்கள் இருக்கின்றன. சூரியதேவன் தனது இரதத்தில் மலை உச்சியில் மேரு மலையினைச் சுற்றி வருவது சம்வத்ஸரம் என்றழைக்கப்படுகின்றது. சூரியன் செல்லும் வடதிசைப் பாதை உத்தராயணம் என்றும் தென்திசைப் பாதை தக்ஷிணாயனம் என்றும் அழைக்கப்படுகின்றது. ஒரு பகுதி தேவர்களின் பகலையும் மற்றொரு பகுதி தேவர்களின் இரவினையும் குறிப்பிடுவதாகும்.
பதம் 5.20.31 : இத்தீவின் மன்னரும், மகாராஜா பிரியவிரதனின் மைந்தனுமான வீதிஹோத்திரனுக்கு இரமணகன், தாதகி என்று இரு புதல்வர்கள் இருந்தனர். அவர் தனது இருபுதல்வர்களுக்கும் அத்தீவின் இருபகுதிகளையும் அளித்துவிட்டு தனது மூத்த சகோதரன் மேதாதிதியினைப் போல் முழுமுதற் கடவுளுக்குரிய செயல்களில் தன்னை முற்றிலும் ஈடுபடுத்திக் கொண்டார்.
பதம் 5.20.32 : பௌதீக ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக இத்தீவில் உள்ளவர்கள் முழுமுதற் கடவுளை பிரம்மதேவன் வடிவில் வழிபடுகின்றனர். அவர்கள் பகவானுக்குத் தங்கள் பிரார்த்தனைகளைப் பின்வருமாறு அர்ப்பணிக்கின்றனர்.
பதம் 5.20.33 : பிரம்மதேவன் “கர்ம மய” அதாவது சமயச்சடங்குகளின் வடிவம் என்று அறியப்படுகிறார். ஏனென்றால் சமயச் சடங்குகளை முறையாகச் செய்வதின்மூலம் ஒருவன் அவரது நிலையினை அடையலாம். மேலும் வேதமந்திரங்களும் அவரிடமிருந்தே வெளிப்பட்டன. அவர் எந்தவித மாறுபாடுமின்றி முழுமுதற் கடவுளிடம் பக்தி செலுத்துகின்றார். ஆகையினால் ஒரு வகையில் அவர் பகவானிடமிருந்து வேறுபாடில்லாதவர் ஆவார். அதனால் அவரை ஒரு பொருண்மைவாதிகள் போலன்றி இருமைவாதிகள் போல் வழிபடவேண்டும். பரம வணக்கத்திற்குரிய தெய்வமான பரமபுருஷ பகவானுக்கு ஒருவன் எப்போதும் தொண்டனாகவே இருத்தல் வேண்டும். ஆதலினால் நாங்கள் வேதஞானத்தின் வடிவமாக விளங்கும் பிரம்மதேவனுக்கு எங்களது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிக்கின்றோம்.
பதம் 5.20.34 : அதன்பிறகு இனிய நீர்க் கடலுக்கு மேலாக, அதனை முற்றிலும் சூழ்ந்து லோகாலோகம் என்று ஒரு மலை இருக்கின்றது, இம்மலை முற்றிலும் சூரிய ஒளி உள்ள நாடுகளையும், சூரிய ஒளியே இல்லாத நாடுகளையும் இரண்டாகப் பிரிக்கின்றது.
பதம் 5.20.35 : இனிய நீர்க்கடலின் வெளியே சுமேரு மலைக்கும், மானஸோத்தர மலையின் எல்லைப்பகுதிக்கும் இடையே இருக்கும் நிலப்பகுதியின் பரப்பளவுள்ள ஒர் நிலப்பகுதி இருக்கிறது. இந்நிலப்பகுதியில் பல உயிர்வாழிகள் இருக்கின்றனர். இதற்கு மேற்புறம் தங்கத்தினாலான மற்றொரு நிலப்பகுதி இருக்கிறது. இந்நிலத்தின் மேற்பகுதி பொன்னாலானது. ஆகையினால் அது கண்ணாடியைப்போல் ஒளியைப் பிரதிபலிக்கும். மேலும் ஏதேனும் ஒரு ஜடப்பொருள் அதன்மீது விழுந்ததென்றால் அது மீண்டும் காணப்படுவதில்லை. அதனால் அப்பொன் நிலத்தை உயிர்வாழிகள் அனைவரும் புறக்கணித்தனர்.
பதம் 5.20.36 : உயிர்வாழிகள் வாழும் நிலப்பகுதியையும், உயிர்வாழிகள் வாழாத நிலப்பகுதியினையும் ஒரு பெரிய மலை இரண்டாகப் பிரிக்கிறது. அதனால் அது லோகாலோகம் என்று போற்றப்படுகின்றது.
பதம் 5.20.37 : கிருஷ்ணரின் பரம விருப்பத்தின் பேரில் லோகாலோகம் என்னும் மலையானது, பிரபஞ்சம் முழுவதுமே சூரிய ஒளிக்கதிர்களைக் கட்டுப்படுத்துவதற்காக பூர்வலோகம், புவர்லோகம், சுவர்லோகம் என்னும் மூவுலகங்களின் வெளி எல்லையில் நிறுவப்பட்டது. சூரியன் தொடங்கி துருவலோம் வரை உள்ள அனைத்து ஒளிக்கோளங்களும், மூவுலகங்கள் முழுவதும் தங்கள் ஒளிக்கதிர்களை வழங்குகின்றன. ஆயினும் அவை அம்மலையினால் உண்டாக்கப்பட்ட எல்லைக்குள் மட்டுமே தங்கள் ஒளிக்கதிர்களை வழங்குகின்றன. இம்மலை துருவலோகத்தை விடவும் மிகவும் உயரமுடையதாகையினால், இது ஒளிக்கோளங்களின் கதிர்களை தடைசெய்கிறது. அதனால் ஒளிக்கதிர்கள் இம்மலையினைத் தாண்டிச் செல்வதில்லை.
பதம் 5.20.38 : தவறுகள், மயக்கங்கள் மற்றும் பிறரை ஏமாற்றும் எண்ணம் சிறிதும் இல்லாத கற்றறிந்த அறிஞர்கள் இவ்வாறு பல்வேறு உலகங்களைப் பற்றியும், அவற்றின் அடையாளங்கள், அளவுகள் இருப்பிடங்கள் பற்றியும் விளக்கியுள்ளனர். மிகவும் நுண்ணிய மலைக்கும் இடையே உள்ள தூரம் பிரபஞ்சத்தின் பரப்பளவில் நான்கில் ஒரு பாகம் அல்லது 125,000,000 யோஜனங்கள (100 கோடி மைல்கள்) என்னும் உண்மையினை நிறுவியிருக்கின்றனர்.
பதம் 5.20.39 : லோகா லோகா மலை உச்சியின் மேல் மிகச் சிறந்த யானைகளான நான்கு கஜபதிகள் உள்ளன. இவைகள் இப்பிரபஞ்சம் முழுவதற்கும் ஆன்மீகக்குருவான பிரம்ம தேவனால் நான்கு திசைகளில் நிறுத்தப்பட்டனவாகும். அந்த யானைகளின் பெயர்கள் ரிஷபம், புஷ்கரசூடம், வாமனம், அபராஜிதம் என்பவையாகும். இவையே இப்பிரபஞ்சத்திலுள்ள எல்லா உலகங்களையும் காக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
பதம் 5.20.40 : முழுமுதற் கடவுளே அனைத்து வகையான உன்னத வளங்களுக்கும், ஆன்மீக வானத்திற்கும் தலைவர் ஆவார். அவரே பரமபுருஷர், பகவான், அனைவரிடத்தும் உள்ள பரமாத்மா ஆவார். தேவலோகத்தின் தலைவனான இந்திரன், மற்றும் அவர் கீழுள்ள தேவர்கள் அனைவரிடத்தும் பௌதீக உலக விஷயங்களைக் கவனிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கின்றது. பல்வேறு உலகங்களிலுள்ள அனைத்து உயிர்வாழிகளின் நலனுக்காகவும், அந்த யானைகள் மற்றும் தேவர்களின் சக்தியை அதிகரிப்பதற்காகவும் பகவான் அம்மலையின் உச்சியில் ஜடஇயற்கைக் குணங்களினால் மாசுபடாத ஆன்மீக உடலுடன் தோன்றுகிறார். அவரது தனிப்பட்ட விரிவுகள் மற்றும் விஷ்வக்ஷேனன் போன்ற அவரது துணைவர்களால் சூழப்பட்டு, அவர் தர்மம், ஞானம், அனிமா, லகிமா, மஹிமா என்பதான யோக ஸித்திகள் போன்ற அவரது அனைத்து வளங்களையும் வெளிப்படுத்துகின்றார். அவர் மிகவும் எழிலுடன் அமர்ந்திருக்கிறார். அவரது நான்கு கரங்களும் பல்வேறு வகையான ஆயுதங்களினால் அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன.
பதம் 5.20.41 : நாராயணர், விஷ்ணு போன்ற முழுமுதற் கடவுளின் பல்வேறு வடிவங்கள் பல்வேறு வகையான ஆயுதங்களினால் மிகவும் எழிலாக அலங்கரிக்கப்பட்டிருக்கின்றன. பகவான் தனது தனிச் சக்தியான யோகமாயையினால் படைக்கப்பட்ட இப்பல்வேறு உலகங்களைக் காப்பதற்காக இவ்வடிவங்களை மேற்கொள்கிறார்.
பதம் 5.20.42 : அன்பிற்குரிய மன்னனே, லோகாலோக மலைக்கு வெளியே அலோக வர்ஷம் என்னும் ஒரு நிலப்பகுதி இருக்கின்றது. மலையின் அதே அகலத்திற்கு இந்நிலப்பகுதி விரிந்திருக்கிறது அதாவது 125,000,000 யோஜனங்கள் (நூறு கோடி மைல்கள்) என்று கூறலாம். அலோக வர்ஷத்திற்கு மேலாக பௌதீக உலகிலிருந்து விடுதலை பெறவிரும்புவோரின் இலக்கிடம் இருக்கிறது. இவ்விடம்ஜட இயற்கைக்குணங்களின் எல்லைப் பகுதிக்கு அப்பால் இருக்கின்றது. அதனால் அது முற்றிலும் தூய்மையானதாகும். அந்தணர்களின் மைந்தர்களை மீண்டும் கொண்டு வருவதற்காக பகவான் கிருஷ்ணர் அர்ஜுனனை இதன் வழியாகத்தான் அழைத்துச் சென்றார்.
பதம் 5.20.43 : சூரியன் (செங்குத்தாக) பிரபஞ்சத்தின் மத்தியில் பூர்வலோகம், புவர்லோகத்திற்கு இடையே “அந்தரீக்ஷம்” அதாவது வான்வெளியில் இருக்கின்றது. சூரியனுக்கும் பிரபஞ்சச் சுற்றளவிற்கும் இடையிலுள்ள தூரம் இருபத்தைந்து கோடி யோஜனங்கள் (இறுநூறு கோடி மைல்கள்) இருக்கின்றது.
பதம் 5.20.44 : சூரியதேவன், எல்லா உயிர்வாழிகளின் மொத்தப் பெளதீக உடல் ஆனவர் என்றும் பொருள் தரும் வைராஜன் என்றும் அறியப்படுகிறார். பிரபஞ்சத்தின் மந்த முட்டையினுள் படைப்புக்காலத்தில் அவர் புகுந்ததினால், மார்தாண்டம் என்றும் அவர் அழைக்கப்படுகின்றார். அவர் இரண்யகர்பம் என்றும் கூட அறியப்படுகின்றார் ஏனென்றால் அவர் தனது பௌதீக உடலினை இரண்யகர்பத்திடமிருந்து (பிரம்ம தேவன்) பெற்றவர் ஆவார்.
பதம் 5.20.45 : ஒ, மன்னனே, சூரிய தேவனும், சூரிய மண்டலமும் இப்பிரபஞ்சத்தின் அனைத்துத் திசைகளையும் பிரிக்கின்றன. சூரியன் இருக்கின்ற காரணத்தினாலேயே நம்மால் வானம் என்றால் என்னவென்றும் மேலுலகம், பூவுலகம், பாதாளலோகம் என்றால் என்னவென்றும் புரிந்து கொள்ள முடிகிறது. மேலும் சூரியன் காரணமாகவே நம்மால் பௌதீக இன்பத்திற்கான இடங்கள் எவையென்றும், விடுதலைக்கான இடங்கள் எவையென்றும், நரக லோகம் எவையென்றும் பாதாள லோகம் எவையென்றும் புரிந்து கொள்ள முடிகிறது.
பதம் 5.20.46 : தேவர்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் ஊர்வன, மரம், செடி, கொடிகள் உள்ளிட்ட அனைத்து உயிர்வாழிகளும் சூரிய மண்டலத்திலிருந்து, சூரிய தேவன் அளிக்கும் வெம்மை மற்றும் ஒளியையே சார்ந்திருக்கின்றன. மேலும் சூரியன் இருப்பதினாலேயே அனைத்து உயிர்வாழிகளாலும் பார்க்க முடிகின்றது அதனால்தான் அவர் ‘த்ருக் ஈஸ்வர’ அதாவது பாரவைக்கான முழுமுதற் கடவுள் என்று அழைக்கப்படுகின்றார்.