அத்தியாயம் – 19
ஜம்புத்வீபம் பற்றிய ஓர் விளக்கம்
பதம் 5.19.1 : ஸ்ரீல சுகதேவ கோஸ்வாமி கூறினார் அன்பார்ந்த மன்னனே, கிம்புருஷ-வர்ஷத்தில் பரம பக்தரான அனுமன், அங்கு வாழும் மக்களுடன் சேர்ந்து எப்போதும் இலக்குவனின் மூத்த சகோதரரும், அன்னை சீதாதேவியின் அருமைக் கணவருமான பகவான் இராமச்சந்திர மூர்த்தியின் பக்தித் தொண்டில் எப்போதும் ஈடுபட்டிருக்கிறார்.
பதம் 5.19.2 : கந்தர்வர்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் எப்போதும் பகவான் இராமச்சந்திர மூர்த்தியின் பெருமைகளை ஒதிக் கொண்டிருப்பார். இவ்வாறு ஒதுவது எப்போதும் மங்களகரமானதாக இருக்கும். அனுமனும், கிம்புருஷ வர்ஷத்தின் தலைவரான ஆர்ஷ்டிசேனன் என்பவரும் தொடர்ந்து அப்பெருமைகளை மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டிருப்பர். அனுமன் பின்வரும் மந்திரங்களை ஒதுகிறார்.
பதம் 5.19.3 : ஓம்கார பீஜ மந்திரத்தை ஒதுவதினால் எந்தன் பகவானே, நான் உம்மை மகிழ்ச்சியடையச் செய்வேனாக. உயர்ந்த மகான்களுக்கிடையில் மிக உயர்ந்தவராக விளங்கும் முழுமுதற் கடவுளுக்கு எனது மகிழ்ச்சிக்குரிய வந்தனங்கள் உரியதாகும். மேலாண்மை மிக்கத் தாங்களே ஆரியர்களின் அதாவது நாகரீக வளர்ச்சி பெற்றவர்களின் நற்குணங்கள் அனைத்திற்கும் உறைவிடமாக விளங்குகின்றீர். உமது தன்மையும், நடத்தையும் எப்போதும் நிலையானவையாகும். மேலும் நீர் எப்போதும் மனம் மற்றும் புலன்களை அடக்கியவரும் ஆவீர். எவ்வாறு நடக்க வேண்டும் என்பதற்கு பிறருக்கு நீர் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றீர். தங்கத்தை உரசிப்பார்த்து அதன் தரத்தைச் சொல்வதற்கு ஒர் உரைகல் உண்டு ஆனால் நீரோ நற்குணங்கள் அனைத்தையும் உரசிப்பார்க்கும் உரைகல் ஆவீர். பக்தர்கள் அனைவரிலும் மிகச் சிறந்த அந்தணர்களால் நீர் வழிபடப்படுகின்றீர். பரமபுருஷரான நீர் ஒருவரே மன்னர்களுக்கெல்லாம் மன்னர் ஆவீர். அதனால் நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை உமக்கு அர்ப்பணிக்கின்றேன்
பதம் 5.19.4 : ஜட இயற்கைக் குணங்களினால் மாசுபெறாத பகவானின் தூய வடிவம் (சச்-சித்-ஆனந்த-விக்ரஹம்) தூய உணர்வின் மூலமே உணரக்கூடியதாகும். வேதாந்தத்தில் அவர் இரண்டற்ற ஒருவரே என்று குறிப்பிடப்படுகிறார், அவரது ஆன்மீகச் சக்தியின் காரணமாக ஜட இயற்கையின் மாசினால் அவர் தொடமுடியாதவராக இருக்கிறார். பௌதீகப் பார்வைக்கு அவர் ஆளாகாத காரணத்தினால் அவர் உன்னதமானவர் என்று அறியப்படுகிறார். அவருக்குப் பௌதீகச் செயல்களும் இல்லை. அதுபோல் பௌதீக உருவமும், நாமமும் அவருக்கு இல்லை. தூய உணர்வான கிருஷ்ண உணர்வினால் மட்டுமே பகவானின் உன்னத வடிவத்தை ஒருவனால் உணரமுடியும். பகவான் இராமச்சந்திர மூர்த்தியின் தாமரைத் திருவடிகளில் நாம் நிலைநிற்போமாக, மேலும் அவ்வுன்னதத் தாமரைத் திருவடிகளுக்கு நாம் நமது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிப்போமாக.
பதம் 5.19.5 : அரக்கர்களின் தலைவனான இராவணன், மனிதனைத் தவிர வேறு எவராலும் கொல்லப்பட முடியாதவன் என்று ஆணையிடப்பட்டிருந்தது. இக்காரணத்தினாலேயே முழுமுதற் கடவுளான பகவான் இராமச்சந்திர மூர்த்தி ஒரு மனிதனாக வடிவம் எடுத்து வந்தார். பகவான் இராமச்சந்திர மூர்த்தியின் வருகை இராவணனைக் கொல்வதற்காக மட்டுமன்று. அழிகின்ற உடலை உடைய மனிதர்களுக்குப் பாலியலை அடிப்படையாகக் கொண்ட பௌதீக இன்பம் அல்லது ஒருவனின் மனைவியை மையமாகக் கொண்ட பௌதீக இன்பம் பல துன்பங்களுக்குக் காரணமாகிறது என்று உபதேசிப்பதற்காகவும்தான். பகவான் இராமச்சந்திரமூர்த்தி சுய நிறைவுடைய முழுமுதற் கடவுள் ஆவார். அவருக்குத் துக்கமளிக்கக் கூடியது எதுவுமில்லை. ஆகையினால் அன்னை சீதையை அபகரித்துச் சென்றதற்காக அவர் ஏன் துன்பத்திற்கு ஆளாகப் போகிறார்?
பதம் 5.19.6 : பகவான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி முழுமுதற் கடவுளான வாசுதேவர் ஆனதினால் இப்பௌதீக உலகில் உள்ள எதன்மீதும் அவர் பற்றுடையவர் அல்லர். விடுதலை பெற்ற ஆத்மாக்கள் அனைவருக்கும் மிகவும் நேசிப்பிற்குரிய பரமாத்மா அவர். அவர்களின் சிறந்த நண்பரும் ஆவார். அவர் எல்லா வளங்களும் முற்றிலும் நிறைந்தவர். அதனால் தனது மனைவியைப் பிரிந்த காரணத்தினால் துன்பமடைந்திருக்கவும் முடியாது, அவர் மனைவி மற்றும் இளைய சகோதரன் இலக்குவன் இவர்களைத் துறப்பதும் அவரால் முயைாது. இவர்களில் ஒருவரைத் துறப்பது கூட நிச்சயம் சாத்தியமற்றதாகும்.
பதம் 5.19.7 : நற்குடிப்பிறப்பு, தனிப்பட்ட அழகு, நானலம் உடைமை, புத்திக் கூர்மை உயர்ந்த இனம் அல்லது தேசம் போன்ற பௌதீகத் தன்மைகளின் அடிப்படையில் ஒருவன் பரமபுருஷ பகவானான இராமச்சந்திர மூர்த்தியுடன் நட்பு வைத்துக் கொள்ள முடியாது. இத்தன்மைகளில் ஒன்று கூட பகவான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தியுடன் நட்புக் கொள்வதற்கான உண்மையான நிபந்தனையன்று, இல்லையேல், நாம் மேட்டுக்குடியினர் அல்லர், நாகரீகமற்றக் காட்டு வாசிகள்தான், நம்மிடம் உடல் அழகும் இல்லை, மேன்மை மிக்கவர்களைப் போல் நாம் பேசுபவர்களும் அல்லர் இருந்தும் பகவான் இராமச்சந்திர மூர்த்தி நமது நட்பினை ஏற்றுக் கொண்டிருக்கின்றாரே எப்படி இது சாத்தியமாயிற்று?
பதம் 5.19.8 : அதனால் ஒருவன் தேவனோ, அசுரனோ, மனிதனோ அல்லது மனிதல்லாத விலங்கு, பறவையோ யார் வேண்டுமென்றாலும் இப்பூவுலகில் மனிதனைப் போல் தோன்றிய முழுமுதற் கடவுளான பகவான் இராமச்சந்திரமூர்த்தியை வழிபட வேண்டும். பகவானை வழிபடுவதற்குப் பெரிய தவங்கள், விரதங்கள் போன்றவையெல்லாம் தேவையில்லை. அவர் தனது பக்தன் அர்ப்பணிக்கும் சிறிய தொண்டினைக் கூட ஏற்றுக் கொள்கிறார். இவ்வாறு அவர் திருப்தியடைகிறார். அவர் திருப்தியடைந்தவுடன் பக்தன் வெற்றியடைகிறான். உண்மையில் பகவான் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி அயோத்தியிலுள்ள அனைத்துப் பக்தர்களையும் வீடுபேறு பெற்று முழுமுதற் கடவுளை அடையச் செய்தார் (வைகுண்டத்திற்கு).
பதம் 5.19.9 : (சுகதேவ கோஸ்வாமி தொடர்ந்தார்:) முழுமுதற் கடவுளின் பெருமைகள் கற்பனைக் கெட்டாதவையாகும். அவர், தனது பக்தர்களுக்கு சமயதர்மம், ஞானம், துறவு, ஆன்மசக்தி, புலனடக்கம், தவறான ஆணவத்திலிருந்து விடுதலை போன்றவற்றைக் கற்றுக் கொடுப்பதின் மூலம் அவர்களுக்குத் தனது கருணையினைக் காட்டுவதற்காக பார்த வர்ஷத்தில் பத்திரிகாஸ்ரமம் என்னும் இடத்தில் நரநாராயணர் வடிவத்தில் தோன்றினார். அவர் ஆன்மீகச் செல்வங்களில் மிகுந்த வளர்ச்சி பெற்றிருந்தார். மேலும் அவர் இக்கல்பத்தின் இறுதிக்காலம் வரை தவம் செய்வதில் ஈடுபடுகின்றார். இதுவே தன்னுணர்வு பெறுவதற்கான வழிமுறையாகும்.
பதம் 5.19.10 : நாரத பாஞ்சராத்ரம் என்னும் அவரது சொந்த நூலில் பகவான் நாரதர் வாழ்வின் இறுதி லட்சியத்தினை—பக்தியை—ஞானம் மற்றும் யோக ஸித்தி முறையினால் எவ்வாறு எய்துவது பற்றி மிகத் தெளிவாக விளக்கி இருக்கிறார். அவர் முழுமுதற் கடவுளான, பகவானின் பெருமைகளையும் கூட விளக்கியிருக்கிறார். மாமுனிவர் நாரதர் இவ்வுன்னத இலக்கியத்தின் தத்துவங்களை, பகவானின் பக்தித் தொண்டினை எய்துவதற்காக வர்ணாஸ்ரம தர்மக் கொள்கைகளை கடுமையாகப் பின்பற்றும் பாரத-வர்ஷத்தில் வசிப்போர்க்குப் போதிப்பதற்காக, சாவர்ணீ மனுவிற்கு உபதேசித்தார். இவ்வாறு நாரதமுனிவர் பாரத வர்ஷத்தில் உள்ளவர்களுடன் சேர்ந்து நரநாரயணரின் தொண்டில் எப்போதும் ஈடுபடுகின்றார். அவர் பின்வருமாறு ஒதுகின்றார்.
பதம் 5.19.11 : தெய்வீக மகான்கள் அனைவரினும் மிகச்சிறந்தவரும், முழுமுதற் கடவுளுமான நர நாராயணருக்கு நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை அர்ப்பணிப்பேனாக. அவர் சுயக்கட்டுப்பாடு மற்றும் சுய உணர்வில் மிகச்சிறந்தவராவார். அவர் தவறான ஆணவத்திலிருந்து விடுதலை பெற்றவர் என்பதோடு, பௌதீக உடைமைகள் இல்லாதவர்களுக்கு அவரே சொத்தாகவும் இருக்கிறார். அவருடையத் தாமரைத் திருவடிகளுக்கு நான் மீண்டும் மீண்டும் எனது மரியாதைக்குரிய வந்தனங்கள் அர்ப்பணிப்பேனாக.
பதம் 5.19.12 : பின்வரும் மந்திரத்தை ஒதி மிகவும் சக்திபெற்ற நாரத மாமுனிவரும் நரநாராயணரை வழிபடுகின்றார். கண்ணுக்குப் புலனாகும் இப்பிரபஞ்சத் தோற்றத்தினைப் படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் மூன்றிற்கும் முழுமுதற் கடவுளே கர்த்தாவாக இருந்தபோதிலும் அவர் தவறான ஆணவத்திலிருந்து முற்றிலும் விடுதலை பெற்றவராவார். மூடர்களுக்கு அவர் நம்மைப்போல் பௌதீக உடலைப் பெற்றவராகத் தோன்றிய போதிலும் அவர் பசி, தாகம், சோர்வு போன்ற உடற்பிணிகளினால் பாதிக்கப்படுவதில்லை. அவர் எல்லாவற்றையும் பார்க்கும் சாட்சியாக இருந்தபோதிலும் அவர் பார்க்கும் பொருள்களினால் அவரது புலன்கள் மாசடைவதில்லை. நான் எனது மரியாதைக்குரிய வந்தனங்களை பற்றற்றவரும், உலகின் தூய சாட்சியாகவும் விளங்கும் பரமாத்மாவாக முழுமுதற் கடவுளுக்கு அர்ப்பணிக்கின்றேன்.
பதம் 5.19.13 : ஒ, யோகஸித்திகள் அனைத்தின் தலைவரான எந்தன் பகவானே, தன்னுணர்வு பெற்றப் பிரம்மதேவனால் (ஹிரண்யகர்ப) கூறப்பட்ட யோக முறை விளக்கமாகும் இது. உமது தாமரைத் திருவடிகளில் தமது மனங்களை வைப்பதின் மூலம் அனைத்து யோகிகளும் மரணவேளையில் தங்கள் பெளதீக உடல்களை முற்றிலும் பற்றறுத்துத் துறக்கின்றனர். இதுவே யோகத்தின் நிறைவாகும்.
பதம் 5.19.14 : லோகாயதவாதிகள் பொதுவாக அவர்களது இன்றைய உடல் வசதிகளிலும் அவர்கள் எதிர்பார்க்கும் எதிர்கால உடல் வசதிகளிலும் மிகுந்த பற்றுடையவர் ஆவர். இதனால் அவர்கள் எப்போதும் தமது மனைவி, மக்கள், செல்வம் போன்ற சிந்தனையில் மூழ்கி, மலமும், சிறுநீரும் நிரம்பிய தமது உடல்களைத் துறப்பதற்கு அஞ்சுகின்றனர். கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருப்பவன் கூடத் தனது உடலைத் துறப்பதற்கு அஞ்சினான் என்றால் சாத்திரங்களைக் கற்பதற்காக அவன் உழைத்த உழைப்பினால் என்ன பயன்? அது கால விரயமேயாகும்.
பதம் 5.19.15 : ஆகையினால் ஒ, எந்தன் பகவானே, ஒ, உன்னதமானவரே, பக்தி யோகத்தினைப் பயில்வதற்கானச் சக்தியைக் கொடுப்பதின் மூலம் எமக்கு அன்புடன் உதவுவீராக. இதன் மூலம் நாங்கள் எங்கள் மனங்களை அடக்கி உம்மீது நிலை நிறுத்த முடியும். உமது மாயா சக்தியினால் நாங்கள் அனைவரும் பீடிக்கப்பட்டிருக்கின்றோம் அதனால் நாங்கள் மலம், சிறுநீர் நிரம்பிய உடலோடும், அவ்வுடலுக்குத் தொடர்புடையனவற்றோடும் மிகுந்த பற்றுடையவர்களாக இருக்கின்றோம். பக்தித் தொண்டு ஒன்றைத்தவிர வேறெந்த வழியிலும் இப்பற்றைத் துறக்க முடியாது. ஆகையினால் அருள் கூர்ந்து இந்த வரத்தினை எமக்கு அருள்வீராக.
பதம் 5.19.16 : இலாவ்ருத்-வர்ஷத்தைப் போல் பாரத-வர்ஷம் என்றறியப்படும் நிலப்பகுதியிலும் ஏராளமான மலைகளும், நதிகளும் இருக்கின்றன. அவற்றின் சில மலைகள், மலயம், மங்கல-பிரஸ்தம், மைநாகம், திரி கூடம், ரிஷபம், கூடகம், கோல்லகம், சஹ்யம், தேவகிரி, ரிஷ்யரகம், ஸ்ரீ சைவம், வேங்கடம், மகேந்திரம், வாரிதாரம், விந்தியம், சுக்திமான், ரிக்ஷகிரி, பாரியாத்திரம், துரோணம், சித்திரக்கூடம், கோவர்தனம், ரைவதகம், ககுபம், நீலம், கோகாமுகம், இந்திரகீலம், காமகிரி போன்றவையாகும். இவை தவிர பல்வேறு மலைகள் இருக்கின்றன. அவற்றின் சரிவுகளில் இருந்து பல பெரிய, சிறிய நதிகள் பெருகி ஒடுகின்றன.
பதங்கள் 5.19.17 – 5.19.18 : பிரம்மபுத்திரா மற்றும் சோனா—என்னும் இரு நதிகளும் முக்கிய நதிகள் என்றழைக்கப்படுகின்றன. பின்வருவன எல்லாம் மிக முக்கியமான மகாநதிகளாகும் அவை சந்திரவஸா, தாமிரபரணி, அவடோதா, கிருதமாலாம், வைஹாயஸ, காவேரி, வேணி, பயஸ்வினி, சர்கராவர்தா, துங்கபத்திரை, கிருஷ்ணவேண்யா, பீமரதீ, கோதாவரி, நிர்விந்தியை, பயோஷ்ணி, தாபீ, ரேவா, சுரஸை, நர்மதை, சர்மண்வதி, மகாநதி, வேதஸ்மிருதி, ரிஷிகுல்யை, திரிசாமா, கௌசிகி, மந்தாகினி, யமுனை, சரஸ்வதி, திருஷத்வதி, கோமதி, சரயு, ரோதஸ்வதி, சப்தவதி, சுஷோமா, சதத்ரூ, சந்திரபாகை, மருத்விருதை, விதஸ்தை, அசிக்னீ, மற்றும் விஸ்வா. பாரத-வர்ஷத்தில் வசிப்பவர்கள் தூய்மையடைகின்றனர் காரணம் அவர் எப்போதும் இந்த நதிகளை நினைத்துக் கொண்டிருக்கின்றனர். சிலசமயம் அவர்கள் இந்த நதிகளின் பெயர்களை மந்திரம் போல் ஜெபிக்கின்றனர். சிலசமயம் அவர்கள் இந்த நதிகளிடம் சென்று அவற்றைத் தொட்டு, நீராடுகின்றனர். இவ்வாறு பாரத-வர்ஷத்தில் வாழ்பவர்கள் தூய்மையடைகின்றனர்.
பதம் 5.19.19 : இந்நிலப்பகுதியில் பிறப்பவர்கள், ஜட இயற்கைக் குணங்களின்- சத்துவகுணம், இரஜோகுணம், தமோகுணம்- அடிப்படையில் பிரிக்கப்படுகின்றனர். பாரத-வர்ஷத்தில் பிறப்பவன் அவனது முன்வினைக் கர்மாக்களுக்கேற்ப சிலர் மேன்மக்களாகவும், சிலர் சாதாரண மனிதர்களாகவும், சிலர் வெறுக்கத்தக்கவர்களாகவும் பிறக்கின்றனர். ஒருவனது நிலைமை ஒரு உண்மையான ஆன்மீக குருவினால் உறுதிப்படுத்தப்பட்டு அவன் நான்கு சமூகப் பிரிவுகளுக்கேற்பவும் (அந்தண, சத்திரிய, வைசிய, சூத்திரர்) நான்கு ஆன்மீகப் பிரிவுகளுக்கேற்பவும் பிரம்மச்சாரி, கிரஹஸ்தன், வானப்பிரஸ்தன், சந்நியாசி) பகவான் விஷ்ணுவின் தொண்டில் ஈடுபட முறையாக பயிற்சியளிக்கப்பட்டானென்றால் அவனது வாழ்க்கை நிறைவுபெறும்.
பதம் 5.19.20 : பல்வேறு பிறப்புகளுக்குப் பின்னர் ஒருவனது புண்ணியச் செயல்களின் பலன்கள் கனியும் பொழுது ஒருவன் தூய பக்தர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பினைப் பெறுகிறான். பிறகு அவனது பல்வேறு பலன்தரும் செயல்களினால் அவன் கட்டப்படுவதற்குக் காரணமான அறியாமைக் கட்டின் முடிச்சினை துண்டிக்கும் திறனை ஒருவன் பெறுகிறான். பக்தர்களுடன் கொள்ளும் தொடர்பின் விளைவாக ஒருவன் பகவான் வாசுதேவர் உன்னதமானவர், பௌதீக உலகின் பற்றிலிருந்து விடுதலைபெற்றவர், மனம், வாக்குகளுக்கு அப்பாற்பட்டவர், எல்லாவற்றிலும் சுதந்திரமானவரும் ஆவார். வாசுதேவருக்குச் செய்யும் பக்தித் தொண்டான பக்தி யோகமே விடுதலைக்கான உண்மையான வழியாகும்.
பதம் 5.19.21 : ஆன்மீக உணர்விற்கான மேதகு நிலை மானிட வடிவமாக இருப்பதினால் தேவலோகத்தில் உள்ள தேவர்கள் அனைவரும் பின்வருமாறு கூறலாயினர். இப்பாரத-வர்ஷத்தில் பிறந்த மனிதர்கள் எத்தனை பாக்கியசாலிகள். இவர்கள் முற்பிறவியில் விரதங்களின் புண்ணியச் செயல்களைச் செய்தவர்களாக இருத்தல் வேண்டும் அல்லது முழுமுதற் கடவுள் இவர்கள் மீது மகிழ்ச்சியடைத்திருக்க வேண்டும். இல்லையேல் இவர்களால் பல்வேறு வழிகளில் பக்தித் தொண்டில் எவ்வாறு முடியும்? பக்தித்தொண்டு செய்வதற்காகத் தேவர்களாகிய நாம் பாரத வர்ஷத்தில் மானிடப் பிறப்பு எய்த வேண்டும் என்று விரும்புகிறோம் ஆனால் இந்த மனிதர்களோ அங்கே ஏற்கனவே பக்தித் தொண்டில் ஈடுபட்டிருக்கின்றனர்.
பதம் 5.19.22 : தேவர்கள் தொடர்ந்து கூறினர் செய்வதற்கு மிகவும் கடினமான வேள்விகளைச் செய்து, தவங்கள் மேற்கொண்டு, விரதங்கள் இருந்து, தானங்கள் அளித்து சொர்க்கலோகவாசிகள் என்னும் இந்நிலையினை நாம் அடைந்திருக்கின்றோம். ஆனால் இதனை எய்தியதின் மதிப்பு என்ன? இங்கே நாம் பௌதீகப் புலனுகர்ச்சியில் அதிகமாக ஈடுபட்டு அதன் காரணமாக பகவான் நாராயணரின் திருவடித் தாமரைகளை மிகவும் அரிதாகவே நினைக்கின்றோம். உண்மையில் நமது அதீதப் புலனுகர்ச்சியினால் நாம் சற்றேறத்தாழப் பகவானின் தாமரைத் திருவடிகளை மறந்தே போய்விட்டோம்.
பதம் 5.19.23 : பிரம்மலோகத்தில் கோடானுகோடி ஆண்டுகள் பெறுவதைக் காட்லும் பாரத-வர்ஷத்தில் குறுகிய ஆயுள் பெறுவது ஆயுளைப் சிறந்ததாகும். ஏனென்றால் பிரம்ம லோகத்திற்கு உயர்த்தப்பட்டவனும் மீண்டும் மீண்டும் வரும் பிறப்பு, இறப்பிற்கு திரும்பி வர வேண்டியவனாகிறான். பாரத-வர்ஷம் போன்ற கீழ் உலகங்களில் ஆயுள் மிகவும் குறுகியதாக இருந்த போதிலும், அங்கே வாழ்பவன் தன்னை முற்றிலும் கிருஷ்ண உணர்விற்கு உயர்த்திக்கொண்டு இக்குறுகிய ஆயுள் காலத்திலேயே பகவானின் திருவடித் தாமரைகளை முற்றிலும் சரணடைவதின் மூலம் உயர்நிறைவு நிலையினை எய்துகிறான். இவ்வாறு ஒருவன் கவலையற்ற, பௌதீக உடலில் மீண்டும் பிறப்பதற்குத் தேவையற்ற வைகுண்டலோகத்தை அடைகிறான்.
பதம் 5.19.24 : தூய கங்கை நதியைப் போன்று முழுமுதற் கடவுளின் செயல்கள் பற்றிய விஷயங்கள் பெருகி ஒடாத இடத்திலும் கடவுள்பற்று என்னும் அந்நதியின் கரைகளில் பக்தர்கள் தொண்டில் ஈடுபடாதிருக்கும் இடமாக அது இருந்தாலும் அல்லது பகவானைத் திருப்திப்படுத்துவதற்கான சங்கீர்த்தன யக்ஞ விழாக்கள் கொண்டாடப்படாத இடமாக அது இருந்தாலும், அந்த இடம் தேவலோகத்தில் இருந்த போதிலும்கூட புத்திமான் அதனை விரும்பமாட்டான்.
பதம் 5.19.25 : பக்தித் தொண்டு செய்வதற்கும், ஞானம் மற்றும் கர்மத்தின் விளைவுகளிலிருந்து விடுதலை பெறுவதற்கு முறையான நிலம் மற்றும் சூழ்நிலைகளை பாரத-வர்ஷம் அளிக்கிறது. சங்கீர்த்தன யக்ஞத்தைத் தெளிவானப் புலனேந்திரியங்களுடன் செய்வதற்காக மானிட வடிவத்தைப் பாரத-வர்ஷத்தில் ஒருவன் பெற்றிருந்தும் அவன் பக்தித் தொண்டு செய்யாதிருந்தால் அவன் சுதந்திரமாகச் சுற்றித்திரியும் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவனாவான். இதன் மூலம் அவன் மீண்டும் வேடனின் வலையில் சிக்கிக் கொள்கிறான்.
பதம் 5.19.26 : இந்தியாவில் (பாரத-வர்ஷத்தில்) பல்வேறு காரியங்களுக்காகப் பரமபுருஷ பகவானால் நியமிக்கப்பட்டிருக்கும் இந்திரன், சந்திரன், சூரியன் போன்றவர்களைப் பலர் பல்வேறு வழிகளில் வழிபடுகின்றனர். பரமபுருஷ பகவான் என்னும் முழுப்பொருளின் பாகங்கள் என்று தேவர்களுக்கு, இவர்களை வழிபடுவோர் தங்கள் அவிர்பாகங்களை அர்ப்பணிக்கின்றனர். ஆகையினால் முழுமுதற் கடவுள் இந்த அர்ப்பணிப்புக்களை ஏற்றுக் கொண்டு இப்பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதின் மூலம் இவர்களைப் படிப்படியாக பக்தித் தொண்டின் உண்மைத் தரத்திற்கு உயர்த்துகிறார். பகவான் பூரணத்துவமுடையவர். ஆதலினால் அவர் தனது உன்னத உடலின் ஒரு பாகத்தினோடு வழிபடுவோர் விரும்பும் வரங்களைக் கூட அவர்களுக்கு அருள்கிறார்.
பதம் 5.19.27 : முழுமுதற் கடவுள் எக்காரணங்களுக்காக ஒரு பக்தன் தன்னை அணுகுகின்றானோ அவனது ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றுகிறார். ஆனால் அவர் அப்பக்தனுக்கு, அவன் மீண்டும் பல வரங்களை கேட்பதற்குக் காரணமாக எந்த வரத்தையும் அருள்வதில்லை என்ற போதிலும் பகவான் தானே விரும்பி அப்பக்தனுக்குத் தனது தாமரைத் திருவடிகளின் அடைக்கலத்தினை அளிக்கிறார். மேலும் அவரது அடைக்கலம் அவனது அனைத்து ஆசைகளையும் பூர்த்தி செய்கிறது இதுவே பரமபுருஷ பகவானின் தனிக் கருணையாகும்.
பதம் 5.19.28 : சமயச் சடங்குகள் செய்தல், புண்ணியச் செயல்கள் மற்றும் வேள்விகள் செய்தல், வேதங்களைக் கற்றல் போன்றவற்றின் விளைவாக ஐயத்திற்கிடமின்றி நாம் இப்போது சொர்க்கலோகத்தில் இருக்கின்றோம். எது எப்படியாயினும் ஒரு நாள் நமது வாழ்வு இங்கே முடிந்து விடும். அச்சமயம் நமது புண்ணியச் செயல்களில் ஏதேனும் மிச்சம் மீதி இருந்ததென்றால் நாம் மீண்டும் பகவானின் தாமரைத்திருவடிகளை நினைப்பதற்கு இயலும். மனிதர்களாகப் பாரத-வர்ஷத்தில் மீண்டும் பிறக்க வேண்டும் என்று பிரார்த்திக்கின்றோம். பகவான் தானே பாரத-வர்ஷத்திற்குத் தனிப்பட்ட முறையில் வந்து அங்குள்ள மக்களின் நல்லதிர்ஷ்டத்தினை மேலும் அதிகரிக்கச் செய்யும் அன்பின் கடலாவார்.
பதங்கள் 5.19.29 – 5.19.30 : ஸ்ரீ சுகதேவ கோஸ்வாமி கூறினார்: அன்பார்ந்த மன்னனே, கற்றறிந்த அறிஞர்களின் கருத்தின்படி ஜம்புத்வீபத்தைச் சுற்றி எட்டு சிறியத் தீவுகள் இருக்கின்றன. மகாராஜா சகரரின் மைந்தர்கள் தங்கள் தொலைந்துபோன குதிரையை இவ்வுலகமெங்கனும் தேடும்பொழுது அவர்கள் பூமியைத் தோண்டினர் அதன் மூலம் அருகருகே எட்டுத் தீவுகள் தோன்றின. இத்தீவுகளின் பெயர்கள் வருமாறு சுவர்ண பிரஸ்தம், சந்திரசுக்கிலம், ஆவர்தனம், ரமணகம், மந்தரஹரிணம், பாஞ்ச ஜன்யம், சிம்ஹலம், லங்கா.
பதம் 5.19.31 : அன்பார்ந்த பரீக்ஷித்து மன்னனே, ஒ, பரத குலத்திற்சிறந்தோனே, பாரத-வர்ஷத் தீவு மற்றும் அதனை ஒட்டியுள்ளத் தீவுகள் பற்றியும் எனக்கு உபதேசிக்கப்பட்டபடி உனக்கு நான் விளக்கியுள்ளேன். இத்தீவுகளே ஜம்புத்வீபத்தை உருவாக்குகின்றன.